ஏஞ்சல் :
1,அமாவாசை வந்ததும் பவுர்ணமி எங்கே போகிறது ?????
(இது மாதிரியான கேள்வியையே என்னைத்தவிர யாரும் உங்களை கேட்ட்டிருக்க மாட்டாங்க இனியும் கேட்கமாட்டாங்க :)))))))))))))))))))))))
பதில் : அமா வரும்போது பௌ அங்கு இருந்தாலல்லவா போவதற்கு ?
அமாவாசை இருந்த இடத்துக்கு!
2, உங்கள் வாழ்வின் மாபெரும் இலட்சியம் என்ன ? அதை எட்டி பிடிக்க என்ன முயற்சி எடுத்தீர்கள் அல்லது எடுக்கப்போகின்றீர்கள் ?
பதில் : இலட்சியம் எதுவும் தேவையில்லா நிலையே என் லட்சியம்.
வாழ்க்கை போகும் பாதையில்...
3, மனிதன் அழிப்பதில் அல்லது உருவாக்குவதில் இவ்விரண்டில் எதில் சிறந்தவன் ?
பதில் : பொதுவாக மனிதன் இப்படி எனச் சொல்ல இயலாது. ஆக்கத்திலும் அழிவிலும் திறமைசாலிகள் உண்டல்லவா ?
ஆவதும் மனிதனாலே ; அழிவதும் மனிதனாலே!
4, அரசாங்கம் ஒரு கடும் சட்டம் போடணும்னா என்ன விஷயத்துக்கு போட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?
பதில் : மகளிருக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுக்க சட்டம் என சொல்லத் தோன்றினாலும், இது சட்டம் சாதிக்க முடியாத விஷயம்.
5, அன்றாடம் நடக்கும் அல்லது நடைபெறும் ஒரு அதிசயம் ??
பதில் : என் மூச்சு.
அஃதே!
6, சமீபத்தைய டெக்னாலஜி வளர்ச்சியின் கண்டுபிடிப்புகளில் உங்களை அதிகம் மகிழ்விப்பது எது ?? அதிகம் எரிச்சலையே தருவது எது ?
பதில் : தொலைத்தொடர்பு தொலைக்காட்சி..
7,உங்கள் வாழ்க்கையில் அதிகம் சந்தோஷத்தை கொடுக்கும் நபர் ???
ஒருவரை மட்டும் சொல்லணும் :)))))))))))
பதில் : அந்த அழகான அறிவான குழந்தை.
பாஸ்!
8,நம்மை சந்தோஷப்படுத்தும் ஒரு விஷயம் எல்லோரையும் சந்தோசம் ஆக்க மாட்டேங்குதே ஏன் ?
பதில் : நம்மகிட்டதான் ஏதோ சரியில்லை.
9,நல்லது எது கெட்டது என்று எப்படி தீர்மானிப்பீர்கள் ??
(எதுக்கு கேட்டேன்னா நான் கெட்டதுன்னு நினைக்கிறது சிலருக்கு நல்லதாக படுகிறதே )
பதில் : நல்லது அல்லாதது தீர்மானத்தின் பாற்பட்டதல்ல.
10, திடீர்னு உங்களை கமிஷனர் ஆக்கிட்டா நீங்கள் முதலில் அரெஸ்ட் செய்யும் நபர் யாராக இருக்கும் ? என்ன காரணத்துக்கு ?
பதில் : அரெஸ்டு செய்வது கமிஷனர் வேலையல்லவே.
துளசிதரன் :
பதில் : திரையுலகில் மகளிர் பற்றி விவாதிக்க நம்மிடம் தகவல் போதுமானதாக இல்லை.
கீதா ரெங்கன் :
1. கடவுளை நம்பினாலும் ஏன் ஜோஸ்யம்? அப்போ கடவுளிடம் நம்பிக்கை குறைகிறதா? ஜோஸ்யத்தில் நம்பிக்கை கூடுகிறதா? இல்லை என்றால் இறைவனை எப்படித் தொழுவது என்ற குழப்பத்தில் இறைவனிடம் மன்றாடினால் பதில் நேரடியாகக் கிடைப்பதில்லை என்பதால், ஜோஸ்யம் சொல்லும் வழிகளில் இறைவனை வழிபட எளிது என்று நினைத்து, விடை தெரிய முற்படும் மனிதனின் பரபரப்பான அவசர குணம் ஜோஸ்யத்தை நாட வைக்கிறதா?
2. இல்லை மனிதனின் இயல்பான க்யூரியாசிட்டியா எதிர்காலத்தில்/அடுத்து என்ன நடக்கும் என்ற அறிய முற்படும் இன்செக்யூர்ட் ஃபீலிங்கா?
(எங்கள்) பதில் : ஜோஸ்யம் ஆற்றாமையால் தூண்டப் படுவது. கடவுள்பால் நம் நம்பிக்கை கூட மேலோட்டமானதுதான். இடர் வந்தபோது எல்லாவற்றையும் முயன்று பார்க்கத் தூண்டப் படுகிறோம்.இரண்டிலும் நம்பிக்கை ஸோ ஸோ தான். மற்ற மூவரும் பின்னூட்டத்தில் பதிலளிப்பார்கள் என்று நம்புகிறோம்.
கீதா சாம்பசிவம் :
அந்தத் தயிர்சாதம், நாரத்தங்காய் சாப்பிட்டிருப்பது தான் தமன்னாக்காவா?
பதில் : நெல்லையைக் கேட்டால் தெரியும்.
பதில் : நெல்லையைக் கேட்டால் தெரியும்.
தயிர் சாதம் சாப்பிட்டால் ஏழைனு அர்த்தமா நீலவண்ணக் கண்ணரே? பதில் சொல்லுங்க!
பதில் : நான் அப்படிச் சொல்லவில்லையே..
பதில் : நான் அப்படிச் சொல்லவில்லையே..
இப்போக் கொஞ்சம் சீரியஸான கேள்வி! பெண் குழந்தைகளை இப்படிப் பாடாய்ப்படுத்தறாங்களே! அதை எப்படி நிறுத்தறது? அரசு சட்டங்கள் போட்டாலும் யாரும் பயப்படறதே இல்லையே! என்ன செய்தால் திருந்துவார்கள்?
பதில் : பண்பாட்டுக்கு முக்கியத்துவம் உணரப் படாதவரை வெறும் சட்டம் தீர்க்க முடியாத பிரச்சினை இது.
பதில் : பண்பாட்டுக்கு முக்கியத்துவம் உணரப் படாதவரை வெறும் சட்டம் தீர்க்க முடியாத பிரச்சினை இது.
உங்க திருமணம் ஜாதகப் பொருத்தம் பார்த்து நடந்ததா?
பதில் : இல்லை.
உங்க வீட்டில் மற்றத் திருமணங்கள்?
பதில் : ஜாதகப்பொருத்தம் பார்த்தும் நடந்தது.
ஜாதகப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்வது நல்லதா? அல்லது மனப்பொருத்தம் மட்டும் போதுமா?
பதில் : ம பொ இருந்தால் ஜா போ வேண்டாம் என ஜோ களே சொல்வர்.
உங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டா?
எந்த ஜோசியர் சொன்னதாவது உங்க வாழ்க்கையில் நடந்திருக்கா?
பதில் : இல்லை.
பதில் : இல்லை.
உங்க வீட்டில் மற்றத் திருமணங்கள்?
பதில் : ஜாதகப்பொருத்தம் பார்த்தும் நடந்தது.
ஜாதகப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்வது நல்லதா? அல்லது மனப்பொருத்தம் மட்டும் போதுமா?
பதில் : ம பொ இருந்தால் ஜா போ வேண்டாம் என ஜோ களே சொல்வர்.
உங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டா?
பதில் : நம்பிக்கை இல்லை.எந்த ஜோசியர் சொன்னதாவது உங்க வாழ்க்கையில் நடந்திருக்கா?
பதில் : இல்லை.
பானுமதி வெங்கடேஸ்வரன் :
அட! அடுத்த வாரம் நீல வண்ண கண்ணன் பதில்களா? அப்போ அழகான அனுஷ்காவின் படங்களை எதிர்பார்க்கலாமா?
பதில் : லாமே..!
பதில் : லாமே..!
பிரவேசிக்கும் பொழுதே புரட்டிப் போடும்படியானா செயல்களை அல்லது சாதனைகளை புரிபவர்களுக்கு புயல் என்னும் பட்டம் தரப்படுகிறது. உ.ம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், வைகைப்புயல் வடிவேலு. இது ஒரு புறம் இருக்கட்டும், இன்னொரு புறம் நிஜமான புயல்களுக்கு பெரும்பாலும் பெண்களின் பெயர்களைத்தான் வைக்கிறார்கள். இது இரண்டையும் எப்படி இணைப்பீர்கள்? பின் குறிப்பு: அதற்கு போட்டோ ஷாப்பின் உதவியை நாடக்கூடாது சொல்லிப்புட்டேன்.
பதில் :
வேகத்துக்கு உதாரணமாக வந்தால் புயலுக்கு மதிப்பு.
பெண்பெயர் வைத்தாலாவது கடுமை குறையுமா என்று பார்க்கிறார்களோ ?
ஏகாந்தன் :
கீதாவின் கேள்வி நம்பர் 1-ஐப் படித்ததும், என் கண்கள் மேலும் கீழும் துழாவின. இது கீதாவின் கேள்விதானா? அதிராவின் வாடை தூக்கலாக இருக்கிறதே.. ஒரு கேள்வி ஒரு பாரா முழுதும் வியாபித்தால் அது அதிராவல்லவா?
பதில் : அல்ல.
ஒருவேளை, அதிராவும் கீதாவும் ஒற்றர்தானா -ஐ மீன் - ஒருத்தர்தானா? ம்ஹ்ம்.. எவ்வளவு தெளிவாக இருந்தது, ஒருகாலத்தில் எபி?
பதில் : கலக்கறோம்னு சொல்றீங்களா!
பதில் : அல்ல.
ஒருவேளை, அதிராவும் கீதாவும் ஒற்றர்தானா -ஐ மீன் - ஒருத்தர்தானா? ம்ஹ்ம்.. எவ்வளவு தெளிவாக இருந்தது, ஒருகாலத்தில் எபி?
பதில் : கலக்கறோம்னு சொல்றீங்களா!
அதிரா :
1. அழகிய மிதிலை நகரினிலே.. ஆருக்கு யானகி காத்திருந்தா:)???
பதில் : பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள்...
2. குண்டக்க மண்டக்க என்றால் என்ன?:).
பதில் : பார்த்திபன் வடிவேலுவைக் கேட்டால் தெரியும்!
3. பாரி காலத்தில் ஏழைகளே இல்லையோ?:), அப்படி ஏழைகள் இருப்பின் எதுக்காக ஒரு முல்லைக்கொடிக்கு தன் தேரை முட்டாகக் கொடுத்தார்? அவருக்கு என்ன பிரச்சனை?:)..
பதில் : முல்லைக்குத் தேர் ஒரு கற்பனை என்பது என் நம்பிக்கை.
பதில் : பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள்...
2. குண்டக்க மண்டக்க என்றால் என்ன?:).
பதில் : பார்த்திபன் வடிவேலுவைக் கேட்டால் தெரியும்!
3. பாரி காலத்தில் ஏழைகளே இல்லையோ?:), அப்படி ஏழைகள் இருப்பின் எதுக்காக ஒரு முல்லைக்கொடிக்கு தன் தேரை முட்டாகக் கொடுத்தார்? அவருக்கு என்ன பிரச்சனை?:)..
பதில் : முல்லைக்குத் தேர் ஒரு கற்பனை என்பது என் நம்பிக்கை.
4. உங்களுக்கு அனுக்காவைப் பிடிச்சிருப்பதன் ரகசியம் என்னவோ? ஏனெனில் படத்தில மட்டுமே பார்த்துத்தான் பிடிச்சிருக்கும்.. நேரில் பாகவில்லை, குணம் நடை உடை தெரிந்திருக்க ஞாயமில்லை எனவே அவவி படத்தில மட்டும் பார்த்து பிடித்ததன் காரணம் என்ன?
பதில் : சிலரைப் பார்த்த உடனே பிடிக்கும். சிலரைப் பார்க்கப்பார்க்கப் பிடிக்கும். அனுஷ்ஷை பார்த்த உடனேயும் பிடித்தது. பார்க்கப் பார்க்கவும் பிடித்தது! ஜோக்கைத் தவிர்த்து உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கொஞ்ச நாட்களுக்கு முன் கோவை ஆவி நஸ்ரியா ரசிகராக இருந்து ஒரு கவிதைப்புத்தகமே வெளியிட்டார். அப்போது சும்மா போட்டிக்காக, விளையாட்டாய் அனுஷ் படம் வெளியிட்டு முகநூலில் பதிவிடத் தொடங்கினேன். அப்படியே தொடர்ந்து விட்டது.
பதில் : சிலரைப் பார்த்த உடனே பிடிக்கும். சிலரைப் பார்க்கப்பார்க்கப் பிடிக்கும். அனுஷ்ஷை பார்த்த உடனேயும் பிடித்தது. பார்க்கப் பார்க்கவும் பிடித்தது! ஜோக்கைத் தவிர்த்து உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கொஞ்ச நாட்களுக்கு முன் கோவை ஆவி நஸ்ரியா ரசிகராக இருந்து ஒரு கவிதைப்புத்தகமே வெளியிட்டார். அப்போது சும்மா போட்டிக்காக, விளையாட்டாய் அனுஷ் படம் வெளியிட்டு முகநூலில் பதிவிடத் தொடங்கினேன். அப்படியே தொடர்ந்து விட்டது.
5.உங்களுக்கு மனதில் பதிந்து விட்ட சில பாடல் வரிகள்.. பாடல்கள் அல்ல... அவை பாட்டின் நடுப்பாகத்தில் கூட இருக்கலாம்.. ஆனா அடிக்கடி மனதில் ஓடுபவை அப்படி ஏதும் இருக்கோ?:)..
பதில் : இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்.. இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்..
பதில் : "சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை.." வரிகளை எண்ணுவதுண்டு.
பதில் : இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்.. இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்..
பதில் : "சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை.." வரிகளை எண்ணுவதுண்டு.
கமலா ஹரிஹரன் :
இத்தனை பேர் அற்புதமாக கேள்வி கேட்கிறார்கள். எனனிடம் மட்டும் ஒரு கேள்வியும் ஏன் மாட்ட மாட்டேனென்று அடம் பிடிக்கிறது?
பதில் : இதோ கேள்வி பிறந்து விட்டதே..
பதில் : இதோ கேள்வி பிறந்து விட்டதே..
நெல்லைத்தமிழன் :
படிக்கறவங்கள்ல யார் யார் யாருடைய ரசிகர்னு தெரிஞ்சுக்க பல நடிகைகளின் படங்கள் போட்டிருக்கீங்க. இது ஆணாதிக்க மனோபாவமா இல்லை பெண்கள் யாருடைய ரசிகைகளும்அல்ல, அப்படி இருந்தால் வடிவேலுவின் ரசிகையாக மட்டும்தான் இருக்க முடியும்னு நினைக்கறீங்களா?
பதில் : ரசனை அழகின் பாற்பட்டது.
பதில் : ரசனை அழகின் பாற்பட்டது.
பிளாக்கில் ஆர்வத்துடன் கலந்துகொள்வதற்கும் ஒரு ரிடைர்மென்ட் ஏஜ் உண்டா? கோபு சார், கந்தசாமி சார், தமிழ் இளங்கோ சார், சமீபமா ஜீவி சார் இன்னும் பலர் இடுகைகளைக் குறைக்கிறாங்க இல்லைனா எழுதறதே இல்லையே? என்ன காரணம்?
பதில் : எழுதாத காரணம் அவர்கள் தான் சொல்லவேண்டும். எனினும் சலிப்பு மனித இயல்பு.
இப்போ பயணத்தில் குரும்பூர் என்ற ஊரையும் ரயில்வே ஸ்டேஷனையும் பார்த்தேன். யாருக்காவது குரும்பூர் குப்புசாமி ஞாபகம் இருக்கா?
பதில்.. ஓ... இருக்கே...
பதில் : கு கு. நினைவிலிருந்தாலும் பெரிய இம்ப்ரெஷன் இல்லை. நேரில் அவர் என் அலுவலகத்துக்கு சொந்த வேலை காரணமாக வந்தபோது நான் "சிலிர்த்து" எழாதது அவரை வியக்க வைத்தது.
எனக்கு சில சமயம் எக்சாம் நாளை இருக்கு இன்னும் நிறையப் படிக்கவேண்டுமேன்னு கனவில் பயந்து, எழுந்தவுடன், அப்பாடா.. இப்போ வேலைனா பார்க்கிறோம்னு மனசு ரிலாக்ஸ் ஆயிருக்கு. உங்களுக்கு குறிப்பிடும்படியான, வெளியில் சொல்லக்கூடிய கனவுகள் (தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்துக்கும்படியான) என்ன வந்திருக்கு?
பதில் : யானை துரத்துவது போல...
பலர் பதிலளித்து குழப்பாம ஒரு பதிலை மட்டும், ரசனையான ஒன்றை, வெளியிடுவது ரசனையைக் கூட்டுமா?
பதில் : பலர் பதிலளிப்பது வேறுபட்ட கோணத்தைக் காட்டுவதாகப் பார்க்க வேண்டும். பதிலளிப்பவர் எவருமே ஸ்பெஷலிஸ்ட் அல்லர்.
பதில் : யானை துரத்துவது போல...
பதில் : 58 ஆன பின்னும் ஆபீஸ்வேலையில் தொடர்வதான கனவு பலமுறை வருகிறதுபலர் பதிலளித்து குழப்பாம ஒரு பதிலை மட்டும், ரசனையான ஒன்றை, வெளியிடுவது ரசனையைக் கூட்டுமா?
பதில் : பலர் பதிலளிப்பது வேறுபட்ட கோணத்தைக் காட்டுவதாகப் பார்க்க வேண்டும். பதிலளிப்பவர் எவருமே ஸ்பெஷலிஸ்ட் அல்லர்.
பத்திரிகைகளுக்கு எழுதியதுண்டா? அந்த அனுபவம் சொல்லுங்க
பதில் : இல்லை. மெயிலில் அனுப்பிய கவிதை கல்கியில் வந்தது. அது கூட ஒரு நண்பர் உதவியினால்..!
திருடியது உண்டா? அந்த அனுபவமும் அதை எப்படி கடந்து வந்தீங்க என்பதும்.
பதில் : உண்டு. பின்னர் நினைத்து பலநாட்கள் வெட்கியதுண்டு.
மன்னிப்பு கேட்டிருக்கீங்களா, குறிப்பா இணை/துணையிடம்? அப்போ அவங்க ரியாக்ஷன் எப்படி?
பதில் : ம்ம்ம்... சௌஜன்யம், சகஜம்...
பதில் : இல்லை. மெயிலில் அனுப்பிய கவிதை கல்கியில் வந்தது. அது கூட ஒரு நண்பர் உதவியினால்..!
பதில் : பத்திரிகைகளுக்கு எழுதியதில்லை.திருடியது உண்டா? அந்த அனுபவமும் அதை எப்படி கடந்து வந்தீங்க என்பதும்.
பதில் : உண்டு. பின்னர் நினைத்து பலநாட்கள் வெட்கியதுண்டு.
பதில் : இளம்பருவத்தில் அற்ப சமாசாரங்களைத் திருடியதுண்டு. அதைக் கடப்பது இயல்பாக முயற்சியின்றி சாத்தியமாயிருந்தது.மன்னிப்பு கேட்டிருக்கீங்களா, குறிப்பா இணை/துணையிடம்? அப்போ அவங்க ரியாக்ஷன் எப்படி?
பதில் : ம்ம்ம்... சௌஜன்யம், சகஜம்...
பதில் : மன்னிப்பு கேட்க சந்தர்ப்பம் வரவில்லை.
ரொம்ப கடவுள், நேர்மை, பக்தி என்றெல்லாம் சொல்றவங்க, நல்லவங்களா இல்லாத்தை கவனிச்சிருக்கீங்களா? அப்போ இறை நம்பிக்கையைப் பத்தி, அதை பிரீச் பண்றவங்களைப் பற்றி என்ன தோணும்?
பதில் : 'உங்களுக்காவது புரியுதா? நீங்களாவது நல்லா இருங்க'ன்னு நினைத்து ப்ரீச் பண்றங்களோ!
இன்னொரு வீட்டில் சாப்பிடும்போது இன்னும் கொஞ்சம்னு (சில அருமையான உணவையோ, உண்மைப் பசி சமயத்திலோ) சொல்ல வெட்கப் பட்டுக்கொண்டு அப்புறம் ஏன் அப்படிச் செய்தோம்னு தோணியிருக்கா?
பதில் : உண்டு. ஆனால் ஏன் அப்படிச் செய்தோம் என்று தோன்றியதில்லை!
பதில் : 'உங்களுக்காவது புரியுதா? நீங்களாவது நல்லா இருங்க'ன்னு நினைத்து ப்ரீச் பண்றங்களோ!
பதில் : எல்லாரையும் ஒருசேர வகைப் படுத்துவது சரியல்ல.இன்னொரு வீட்டில் சாப்பிடும்போது இன்னும் கொஞ்சம்னு (சில அருமையான உணவையோ, உண்மைப் பசி சமயத்திலோ) சொல்ல வெட்கப் பட்டுக்கொண்டு அப்புறம் ஏன் அப்படிச் செய்தோம்னு தோணியிருக்கா?
பதில் : உண்டு. ஆனால் ஏன் அப்படிச் செய்தோம் என்று தோன்றியதில்லை!
பதில் : நான் கேட்டு சாப்பிட கூச்சப் படுவதில்லை.
நாயை அடிப்பானேன் ... சுமப்பானேன் என்ற பழமொழி, எதுக்கு அதீத கலோரி உணவைச் சாப்பிடுவானேன், பொழுது போகாமல் (யாருக்கும் உபயோகம் இல்லாமல்) நடப்பானேன் என்பதை ஞாபகப்படுத்துதா?
பதில் : எனக்கு மாம்பழ உதாரணம் நினைவுக்கு வருகிறது!
பதில் : எனக்கு மாம்பழ உதாரணம் நினைவுக்கு வருகிறது!
பதில் : ருசியின்பால் உள்ள பிணைப்பால் அதிகம் சாப்பிடுகிறோம். வாக்கிங் அதை சரிக்கட்ட மட்டும் இல்லையே.
தமிழ் மண ரேங்க் காலத்தில், ஆஜர் கடமைக்காக பின்னூட்டம் போடுவது இடுகைக்கு பெருமை சேர்க்குதா? பின்னூட்டம் இடுவதன் பர்பஸ் என்ன?
பதில் : பின்னூட்டம் இட்டால்தான் நாம் படித்தோம் என்று எழுதியவருக்குத் தெரியும். என்னிடம் இருக்கும் எதிர்பார்ப்புகள் பிறரிடமும் இருக்கும் அல்லவா?
பதில் : பின்னூட்டம் இட்டால்தான் நாம் படித்தோம் என்று எழுதியவருக்குத் தெரியும். என்னிடம் இருக்கும் எதிர்பார்ப்புகள் பிறரிடமும் இருக்கும் அல்லவா?
பதில் :
உந்துதல் இல்லாமல் சம்பிரதாயமான இடுகை காஸ்மெடிக்.
சொல்ல ஏதோ இருந்து எழுத முன்வருவது மட்டுமே பயன்தரவல்லது.
வாழ்க...
பதிலளிநீக்குஅன்பின் மர்மயோகிகள், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குஅன்பின் திரு. KGG அவர்களுக்கு வணக்கம்...
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்... இனிய காலை வணக்கம்.
நீக்குஅன்றாட அதிசயம் - மூச்சு...
பதிலளிநீக்குஅருமை... அருமை...
அனுஷ்காவின் கணவருக்கு துரோகம் செய்வதாக மனசு உறுத்தவில்லையா ?
பதிலளிநீக்குவாங்க கில்லர்ஜி..
நீக்குஅனுஷ்க்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை! (எனக்குத்தெரிந்தவரை!)
ஐயோ கில்லர்ஜி... நடிகைகள் விஷயத்தில் சென்டிமென்ட் பிட் போட்டு என்னைக் கலவரப்படுத்தறீங்களே
நீக்குஅனுஷ் ???
நீக்கும்...ம்...
உங்களுக்கு கலவரமா ?
நீக்குஉங்கள் இருவராலும் அனுஷ்காவுக்குதான் கலவரம் வரணும்.
haaaaahaaaa :))))))))))
நீக்குமுல்லைக்கு தேர் கொடுத்தது ஒரு கற்பனை என்பதே உண்மை.
பதிலளிநீக்குகில்லர்ஜி.... ... இதுநாள்வரை முல்லை என்பது அழகிய இளம் பெண் என்றல்லவா நினைத்திருந்தேன்
நீக்குமுல்லை பெண் என்றால் தேர் என்ன... கார் கொடுக்கலாம் தமிழரே...
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகேள்வி, பதில்களை ரசித்து படித்தேன்.
காலை வணக்கம் கோமதி அக்கா. நன்றி.
நீக்குஒவ்வோரிடமும் கேள்விகள் அனுப்பி பதில்கள் பெறப்படுகிறதா...? அல்லது கற்பனையா...?
பதிலளிநீக்குதலைப்பை வாசித்தவுடன் இந்த சந்தேகம் வந்தது...
ரசனையான கேள்விகளும் பதில்களும்...
என்ன தனபாலன் இப்படிக் கேட்டுட்டீங்க..!!! கேள்விகளை நீங்களே இங்கேயே படித்திருக்கலாமே! கேள்விகள் இதே தளத்தில் அந்தந்த வாரம் கேட்கப்படுபவற்றைத் தொகுத்து அடுத்த(டுத்த) வாரங்களில் பதில் அளிக்கிறோம்!
நீக்குநேற்றிலிருந்து தானே எங்கள்Blog ஜோதியில் ஐக்கியமாகியுள்ளேன்... அதான்...
நீக்குஹா... ஹா... ஹா...
நீக்குஇந்த வாரத்தின் முதல் கேள்வி கீழே வந்து விட்டது பாருங்கள்!
கீழே அடியேனும் ஒரு கேள்வி கேட்டுவிட்டேன்... நீங்கள் மட்டும் தெரிந்தாலும் சொல்லக்கூடாது... எனது அன்புக்கட்டளை...
நீக்குபுரிந்தது.
நீக்கு:))
சாதாரணமாக ஆறு ஓடுகிறது என்றுதான் கூறுவது வழக்கம், ஆனால் இளங்கோவடிகள் "நடந்தாய் வாழி காவேரி" என்றிருக்கிறாரே?
பதிலளிநீக்குமருங்கு வண்டு சிறந்தார்ப்ப
நீக்குமணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்க யற்கண் விழித்தொல்கி
நடந்தாய் வாழி காவேரி...!
கருங்க யற்கண் விழித்தொல்கி
நடந்தவெல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி
திரைப்படம் : கரும்பு
பாடல் : இளங்கோ அடிகள்
இசை : சலீல் சௌத்ரி
அழகிய குரலில் : சுசீலா அவர்கள் :-
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி...!
புலவாய் வாழி காவேரி...!
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய்...!
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி...!
மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அது ஓச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி...!
புலவாய் வாழி காவேரி...!
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய்...!
மன்னும் மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி...!
உழவர் ஓதை மதகோதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி...!
நடந்தாய் வாழி காவேரி...!
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்ததெல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன்
வளனே வாழி காவேரி...!
அழகிய பாட்டு, வாழி காவேரி.. என்பது மட்டும் மனதில் நிக்குது... கேட்ட நினைவாக..
நீக்குஇளங்கோவடிகள் 'நடந்தாய் வாழி காவேரி'ன்னு சொன்னாரா? யாரு.... கரும்பு படத்துக்காக பாடல் எழுதினவரா? சுசீலா கூட பாடியிருக்கிறாரே....
நீக்குதிங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி !
புலவாய் வாழி காவேரி !
எனக்குத் தெரிந்தவரையில் கண்ணதாசன் வரிகளில் சீர்காழி பாடிய பாடல்தான் நினைவிலிருக்கு.
செம பாட்டு டிடி....இப்பத்தான் முழு வரிகளும் பார்க்கிறேன்...மிக்க நன்றி டிடி
நீக்குகீதா
திரைப்படம் : அகத்தியர்
நீக்குகணீர் குரல் மன்னன் : சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்
இணைப்பு : https://www.youtube.com/watch?v=1RGZSokw_nI
நடந்தாய் வாழி காவேரி
நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க
நன்மையெல்லாம் சிறக்க
அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய்
அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய் இந்த
அழகுத் தமிழ் நிலத்தை அலங்கரித்தாய்
அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய் இந்த
அழகுத் தமிழ் நிலத்தை அலங்கரித்தாய்
நடந்த உன் வழியெல்லாம் நலமளித்தாய்
நடந்த உன் வழியெல்லாம் நலமளித்தாய்
நங்கையர் உனை வணங்கவும் மலர்கள்
கொஞ்சும் சோலைகள் நெருங்கவும்
நங்கையர் உனை வணங்கவும் மலர்கள்
கொஞ்சும் சோலைகள் நெருங்கவும்
இன்ப யாழிசை முழங்கவும் செவியில்
செந்தமிழ்த் தேன் வழங்கவும்
இன்ப யாழிசை முழங்கவும் செவியில்
செந்தமிழ்த் தேன் வழங்கவும்
அசைந்து வளைந்து நெளிந்து தொடர்ந்து
அலைகடலெனுமொரு மணமகன் துணை பெறவே
நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நடந்தாய் வாழி காவேரி
நடந்தாய் வாழி காவேரி நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நடந்தாய் வாழி காவேரி
உணவளிக்கும் உழவர்க்கெல்லாம் கண்ணாக பண்பு
உயர்ந்த தமிழ் நாட்டின் செல்லப் பெண்ணாக
உணவளிக்கும் உழவர்க்கெல்லாம் கண்ணாக பண்பு
உயர்ந்த தமிழ் நாட்டின் செல்லப் பெண்ணாக
புலவரெல்லாம் பாராட்டும் பொன்னாக
புலவரெல்லாம் பாராட்டும் பொன்னாக அன்பு
பொங்கிவரும் காவிரியே வாழியாவே
பொங்கிவரும் காவிரியே வாழியாவே
நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நடந்தாய் வாழி காவேரி
படம் ?அகத்தியர் தானே தனபாலன்...
நீக்குஆம் அம்மா... மேலே (YouTube) இனணப்பும் கொடுத்துள்ளேன்...
நீக்கு"வஞ்சப்புகழ்ச்சி அணி" -க்கு எடுத்துக்காட்டாக படித்ததாக ஞாபகம்...
பதிலளிநீக்குபாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே...
புறநானூற்றுப் பாடல் 107
கபிலர் பாடியது
புலவர்கள் பலரும் பாரி வள்ளலை புகழ்ந்து கொண்டே வந்தனர்...
அடுத்து பெரும் புலவர் கபிலர் :- புலவர்களிடம் பொது நோக்கு இருக்க வேண்டாமா...? வள்ளல் பாரி மட்டும் தான், பயன் கருதாமல் வாரி வழங்கும் வள்ளலா...? இன்னொருவரும் இருக்கிறார்...? அவரை ஏன் மறந்தீர்கள்...? அவரைப் பற்றி யாரும் அவரைப் புகழவில்லையே ஏன்...?
அறிந்தவர்கள் யார் என்று கூறலாம்... கேள்வியிலேயே பதிலும் உள்ளது...
சின்ன க்ளூ : 12 அல்லது
thara local song என்று google-ல் தேடினாலும் கிடைக்கும்... பதில் தெரிந்தால் ஆடக்கூடாது... ஹா... ஹா...
வஞ்சப்புகழ்ச்சி அணி க்கு எடுக்காட்டாய் படித்தது.உங்கள் நினைவாற்றல் அருமை தனபாலன்.
நீக்குகபிலர் சொன்னது.
இன்னொருவர் மாரி
நீக்குஆம் அம்மா... குறள் எண் 12 போல...
நீக்குதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
நீக்குதுப்பாய தூஉம் மழை.
மாரி மழை பெய்யாதோ?:)..
நீக்குபதிலை எல்லோரும் சொல்லிட்டாங்க "மாரி"னு
நீக்குஓ டிடி பதில் இங்கே சொல்லலாம் இல்லையா...ஆஹா அப்ப காலையிலேயே சொல்லிட்டு முந்தியிருந்திருக்கணும்...விட்டுப்போட்டேன்
நீக்குசொல்லிட்டாங்க 'மாரி' னு ஹா ஹா ஹா ஹா
கீதா
ஹையோ எனக்கு பதில் தெரியாது.. கோமதி அக்காவைப் பார்த்து, மாரி எனும் பெயர் கண்டதும்... ஒரு கிராமியப் பாடல் வரி நினைவுக்கு வந்து சொன்னேன் அவ்ளோதேன்ன்ன்:))
நீக்குஜோதிடம் குறித்த துளசிதரனின் கேள்விக்கு என் பதில்: ஜோதிடம் பார்ப்பதால் கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று பொருள் கிடையாது. நகரின் மிகச்சிறந்த குழந்தை மருத்தவரிடம் நம் குழந்தையை காண்பித்து கொண்டிருக்கலாம்,அதற்காக தடுப்பூசி போடாமல் இருக்கலாமா? அதைப்போலத்தான் இதுவும்.
பதிலளிநீக்குஎன் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு விட்டேன் ஆனாலும் ஜலதோஷம் பிடிக்கிறதே, காய்ச்சல் வருகிறதே என்றெல்லாம் கூறுவோமா?
ஜோதிடம் என்பது ஒரு வகையான திட்டமிடல். நம்முடைய பலம், பலவீனம் இவற்றை கணிக்கவும், எப்போது ரிஸ்க் எடுக்கலாம், எப்போது அடக்கி வாசிக்க வேண்டும் போன்றவைகளை தெரிந்து கொண்டு செயல்பட்டால் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
பதிலளிநீக்குஇதன் விளக்கத்தையும் அறிந்து கொள்ளுங்களேன் :-
நீக்குநிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்
நாலடியார் 6-ஆம் அதிகாரம் - துறவு
அறத்துப்பால்: துறவறவியல் பாடல்: 52 (நிலையாமை)
ஆனால் திண்டுக்கல் தனபாலன், நாலடியார், ஜோதிட சாத்திரத்தை நாடிச் செல்பவர்களை பித்தர்கள் என்று சொன்னாலும், சாத்திரத்தில் குறை இல்லையே. ஜோதிடம் காலத்தைக் காட்டும் கண்ணாடி. அதனால் எதனையும் நிவர்த்திக்க முடியாது.
நீக்குஇருந்தாலும், உங்கள் எடுத்துக்காட்டு ரசிக்க வைக்கிறது.
நல்ல பதில். டிடி, கலக்கறார்.
நீக்குடிடி பாடலைப் பார்த்தேன்!! ச்சே எப்படிப்பா இப்படி டக் டக்குனு நினைவு வைச்சு அள்ளி எடுத்து விடறீங்க!!! அபாரம்...பாடல் அருமை அர்த்தமும் தெரிந்து கொண்டேன் டிடி. செம பாடல்...ரசித்தேன்
நீக்குகீதா
திண்டுக்கல் தனபாலன் - மனம் நிறை பாராட்டுகள். பொருத்தமான தமிழ் இலக்கிய மேற்கோளைப் பாராட்டறேன். முதல் இரண்டு வரிகளைப் பார்த்து எந்தக் குறள் என யோசிக்க வைத்துவிட்டீர்கள்
பதிலளிநீக்கு27க்கு மூன்று படங்களும் 38க்கு ஆறு படங்களும் வெளியிட்டுள்ளது இடை (இடம்) கருதியா எடை கருதியா?
பதிலளிநீக்குஅதானே...? கூட்டுங்கள் பஞ்சாயத்தை...!
நீக்குஇதற்காக உங்கள் முடிவான கேள்வியில் த.ம.ன்னா பற்றி சூசகமாக "பின்னூட்டம் இடுவதன் பர்பஸ் என்ன" என்று கேட்டும், மூன்று படங்கள் தானா..?
தகுந்த பதில் வரவில்லை என்றால் சும்மா விடக்கூடாது... ஹா..ஹா...
ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் பொயிங்காதீங்கோ.. பிக்பொஸ்ஸ்ஸ் சே..சே.. என்ன இது மறுமடியும் டங்கு... ஸ்லிப்பாகுது.. பிக்கோஸ்... இன்று அனுக்காவை விட தமனாக்கா படங்கள்தான் அழகாப் போட்டிருக்கிறார் அனுஸ் ரசிகர்:))
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரா நோ அனுக்கா! அனுஷ்!!! தமனாக்கா ஓகே!!! (எனக்கு தமனாக்காவை அந்த ஒரு படம் வந்ததே ஹையோ பெயர் மறந்து போச்சே...தமனாக்காவும் பரத் (சரிதானே!!) அந்தப் படத்தில் தமனாக்காவைப் பிடித்தது! ஹிஹிஹி)
நீக்குகீதா
நெத கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....உங்களுக்குப் பொறாமை!! ஹா ஹா ஹா ஹா
நீக்குடிடி !! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா பஞ்சாயத்து கூட்டினாலும் இங்கு அரம உண்டு!! ஹா ஹா ஹா ஹா
கீதா
// இதற்காக உங்கள் முடிவான கேள்வியில் த.ம.ன்னா பற்றி சூசகமாக "பின்னூட்டம் இடுவதன் பர்பஸ் என்ன" என்று கேட்டும், மூன்று படங்கள் தானா..?//
நீக்குநெல்லை இடை எடை கருதி இருந்திருந்தால் எண்ணிக்கை இடம் மாறி இருக்கும்!!
டிடி.. ஆறு படம் போட்டு அழகு என்று காட்டுவது ஒன்றுக்கு.. மூன்றே படத்தில் நிரூபணமானது இன்னொன்று எது பெட்டர்?!!!
ஜோசியத்தைப் பற்றியும் கடவுள் நம்பிக்கை பற்றியும் பிறகு எழுதறேன்
பதிலளிநீக்குகீசா மேடம், நீங்களுமா கொடி இடை தமன்னாவை ‘அக்கா’ என்று விளிப்பது? இது அடுக்குமா? அதனால்தான் வந்தால் வெள்ளம், வரலைனா வெறும் மணல்னு காவிரிப் படுகை போயிடுச்சு
பதிலளிநீக்குஹாஹா, எனக்கு முதல்லே அனு அக்கா யாரு, தமன்னா அக்கா யாருனு கண்டுபிடிக்கவே தெரியாது. சும்ம்ம்ம்மாக் கேள்வி கேட்டு வைச்சேன்.இன்னிக்குப் பார்த்தீங்களே காவிரியில் வெள்ளம்னு! :)))))
நீக்குநெல்லை கீதாக்கா குயந்தை! ஹா ஹா ஹா ஹ
நீக்குகீதா
வணக்கம் வைச்சுப்புட்டேன்....எல்லாருக்கும் இன்னும் முழுவதும் வாசிக்கவில்லை....அப்பால வாரேன்...
பதிலளிநீக்குடிடி செம பாடல்....உங்க பதிவுக்கு ஏற்ற ஒன்று...இப்போதையதுக்கு எனக்கு விடை தெரியும் சொல்லலாமா? சரி உங்கள் பதிவிற்கான விடைக்கும் எனக்கு நிறைய கேள்விகள் இருக்கிறது....நீங்க பதிவு போட்டதும் வாசித்துவிட்டு கேள்விகள் போடறேன்...ஹா ஹா ஹா ஹா
பானுக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜோசியம் பற்றிய கேள்வி மீ ஆக்கும் கேட்டது நாட் துளசி.....அங்க கீதானு தலைப்புலதான் வாந்துருக்கு பாருங்க...ஹா ஹா அஹா ஹா ஹா
ஓகே மீ இப்போ போறேன் போய் மத்ததுக்கும் வணக்கம் வைச்சுட்டு அப்பால வருவேன்....(தண்ணி லாரி வரலை அதான் இடைல கொஞ்சம் கேப் கிடைச்சுது...)
கீதா
235-குறள் விளக்கத்திற்கு இது பொருந்தும்... ஆனால் "தோன்றிற் _____?_____ தோன்றுக" பதிவுகள் என்றைக்கு முடிப்பேனோ என்று தெரியவில்லை... கிடைக்கும் நேரத்தில் சிறுசிறுக பதிவுகளை செதுக்கி கொண்டு இருக்கிறேன்...
நீக்குஇன்றைக்கு ஒரு பதிவு வெளியிடலாம் என்றிருந்தேன்... ஆனால் பதிவு எனக்கே திருப்தியில்லை...
விரைவில் சிந்தனைகளை தொடருவோம்... நன்றி...
முடியுங்க டிடி!! எனக்கு நிறைய கேள்விகள் இருக்கே!! சிந்துபைரவி ஜனகராஜ் மாதிரி மண்டை குடைஞ்சு இழுக்குது.....ஹா ஹா ஹா ஹா ஹா.சீக்கிரம் போடுங்க......
நீக்குகீதா
நல்ல உத்தி. தொகுத்து, சேர்த்துப் பதிவிடும் முறை அருமை.
பதிலளிநீக்குஅப்போ பாரி, முல்லைக்கு தேரை முட்டுக் கொடுத்தார் என்பது கற்பனையோ.. நான் நிஜமென நம்பியிருந்தேன்ன்.. எல்லோரும் என்னை ஏமாத்திப் போட்டினம் கர்ர்ர்ர்ர்:)..
பதிலளிநீக்கு//பழகிடும் ராமன்//
இது அழகிய ராமன் என வரும் எனத்தான் நினைச்சிருந்தேன்... பழகிடும் என்றா வருது.. பொட்ருந்தவில்லையே வரிக்கு.. வாலி அங்கிளைத்தான் கேட்கோணுமாக்கும்:)).. நினைவா வச்சு சொர்க்கம் போனதும் அவரை சந்திச்சு முதல் வேலையா இக்கிளவியை.. சே..சே என்ன இது காலங்காத்தாலே.... டங்கு ஸ்லிப்பாகுது.. கேள்வியாக் கேட்கோணும்:)..
//பழகிடும் என்றா வருது.. பொட்ருந்தவில்லையே வரிக்கு..// - சும்மா கவிஞர் என்று போட்டுக்கவேண்டியது, தமிழ்ல டி என்று சொல்லவேண்டியது. பெரிய கவிஞர்களை கண்ணதாசன், வாலி போன்றவர்களை வம்புக்கு இழுக்கவேண்டியது. தாங்கலைடா சாமி.
நீக்குஅழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாளோ
பழகிய ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள்
இதில், 'அழகிய' என்பதற்கு அடுத்த வரி, 'பழகிய' என்று வருகிறது. இதில் என்ன பிரச்சனை? திரும்பவும் 'அழகிய ராமன்' என்று வருவது நல்லா இருக்காது. பாடகர்கள், 'பழகிடும்' என்று பாடியிருக்கலாம். அதிலும் அவ்வளவு தவறு கிடையாது. 'பழகிய' என்பது மிகவும் பொருந்தும்.
//இதில், 'அழகிய' என்பதற்கு அடுத்த வரி, 'பழகிய' என்று வருகிறது. இதில் என்ன பிரச்சனை?..............//
நீக்குநல்ல கற்பனை.. சிந்தனை நெல்லை..
ஆவ்வ்வ்வ்வ் “பழகிய” என்றால் மிகச் சரி[பழகிய ராமன் திரும்ப வருவாரோ என எதிர்ப்பார்த்திருப்பது], ஆனா “பழகிடும்” என்றால் அர்த்தமாக இல்லையே... கருத்து இல்லையே எப்பூடி மீ கரீட்டாக் கண்டுபிடிச்சேன்.. நேக்கு டமில்ல டி என்பதால, ஜிந்திக்காமலே ஜந்தேகம் வந்திடும் கரெக்ட்டா ஹா ஹா ஹா..
நீக்குஹையோ ஆண்டவா ஊஞ்சலில் ஆடும் பிள்ளையாரே இந்த சுவீட் 16 ஐக் காப்பாத்துங்கோ:))
//பெரிய கவிஞர்களை கண்ணதாசன், வாலி போன்றவர்களை வம்புக்கு இழுக்கவேண்டியது. தாங்கலைடா சாமி.//
நீக்குபவர்ஸ்டார் அங்கிள்:)).., ரஜனி அங்கிளைப் போட்டிக்கு இழுத்தா மட்டும் காக்கா போயிடுறீங்க:)).. நான் [கவிமாமணிப்பட்டம் வாங்கிய ஒரு கவிஞர்:)] இன்னொரு கவிஞரை அதுவும் எனக்கு மிகப் பிடிச்ச கவிஞரை வம்புக்கு இழுத்தால்:)) அடிக்க வாறீங்க:)).. நேக்கு நீடி வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)))... வாலி அங்கிளைக் கூப்பிடுங்கோஓஓஓஒ:))
பலரதுகருத்துகளும் கேள்விகளும் பதில்களும் வாசிப்பது சுவையாயிருக்கிறது
பதிலளிநீக்குஇங்கே மஞ்சள் பதில்கள் கெள அண்ணனுடையதோ?.. இல்ல 2 வது ஆசிரியருடையதோ?..
பதிலளிநீக்குஎனக்கு தீராத ஆசை ஒன்று உண்டு.. அதாவது கண்ணதாசன் அங்கிளைப் பார்க்க/சந்திக்க முடியாமல் போச்சே என்பது. அவரைப்போல வேறு ஆரையாவது சந்திக்கோணுமெனும் ஆர்வம் இன்றுவரை வந்ததேயில்லை.. அப்படி உங்களுக்கு ஆரையாவது சந்திக்கோணும் பேசோணும் எனும் ஆசை இருக்கோ? பிரபல்யங்கள்தான் என்றில்லை ஆரையாவது?
அதிரா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...இப்படி பெரிய கேள்வியா அதாவது ஏகாந்தன் அண்ணனின் சொற்படி பாரா )PARA) கேள்வி ஹா அஹ ஹா நானும் இப்படித்தான் உங்களைப் போலக் கேட்டேன் என்று சொல்லி நாம் இருவரும் ஒருவரானு....அதையும் இங்கு சேர்த்திட்டாங்க ஹா ஹா ஹா ஹா பதில் நம்ம நீலவண்ணக்கண்ணன் கொடுத்திருக்கார்...
நீக்குகீதா
அது கீதா, ஒரு பதில் என்பது கேள்வியின் குவாலிட்டியிலதான் இருக்காம்:)).. கேள்வி தெளிவா விளக்கமாக இருந்தால்தானே பதிலும் அயகா:) வரும்:)) ஹா ஹா ஹா...
நீக்குகீதா ரங்கன் - //கடவுளை நம்பினாலும் ஏன் ஜோஸ்யம்? அப்போ கடவுளிடம் நம்பிக்கை குறைகிறதா? // - ஜோதிடம் வேறு, கடவுள் நம்பிக்கை வேறு. கடவுள் நம்பிக்கை இல்லாதவங்கதான் மருத்துவரிடம் போகிறார்கள், மருந்து மாத்திரை எடுத்துக்கொள்கிறார்கள், டயட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா? (தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் மருத்துவர்களை நாடுவதில்லை, மருந்துகளை எடுத்துக்கொள்வதில்லை, பெந்தகொஸ்தே போல்)
பதிலளிநீக்கு//அடுத்து என்ன நடக்கும் என்ற அறிய முற்படும் இன்செக்யூர்ட் ஃபீலிங்கா?// - ஒவ்வொன்றும் எப்போது நடக்கலாம் என்று தெரிந்துகொள்ள முற்படுவது. இது க்யூரியாசிட்டியில்தான் வரும். இன்னொன்று, 'இந்த தசை சரியில்லை' என்றால் அதற்கு என்னவித பரிகாரம் செய்யலாம் என்று அறிய முற்படுவது (இதைப் பற்றியும் என் எண்ணவோட்டம் வேறு. கர்மாவை அழிக்க இயலாது. பரிகாரம் மூலம் ஒத்திப்போடலாம் இல்லை மன்னிப்பு வேண்டலாம். அது கர்மாவை அனுபவிக்கும் பளுச்சுமையைக் குறைக்கும். முற்றிலுமாக நீக்கிவிடாது, அப்படிச் செய்தால் 'நீதி' என்பதற்கு அர்த்தம் இருக்காது)
ஜோதிடம் உண்மையானதுதான். சொல்லுபவர்கள் சரியாகச் சொல்லணும். எனக்கு ஜோதிடர் சொல்லியது, ஓரளவு சரியாக (அவர் சொன்ன தேதிக்கு 1-2 நாட்கள் முன்பு) நடந்தது. அவர் சொன்னதை (அதாவது அக்டோபர் 20ல் நடக்கும் என்று சொன்னதை) நான் என் பாஸிடம் (இது ஆபீஸ் பாஸ்) ஏப்ரலிலேயே சொன்னேன். அந்த அபூர்வ நிகழ்வு, சரியாக நடந்ததில் அவருக்கும் எனக்குமே மிகுந்த வியப்பு. அதே சமயம் எப்போதும் ஜோதிடக் கூற்றுகள் நடப்பதில்லை. அதன் காரணம், அவ்வளவு நேரம் செலவழித்து கோள்களை கணிப்பதில்லை.
ஜோதிடம் இறைவனை எவ்வாறு வழிபடவேண்டும் என்று சொல்வதில்லை. ஒரு பிரச்சனைக்கு எந்த மாதிரியான தீர்வு உண்டு என்பதைக் கோடி காண்பிப்பது. நான் நிறையபேரை கன்சல்ட் செய்வேன். அதில் ஒருவர், நான் என்ன பிரச்சனை என்று சொல்லும் முன்னரே, 'இத்தனாம் வருஷம் நீ இறப்பாய்', 'இந்தப் பிரச்சனை கடவுள் கொடுத்தது என்று நடந்துகொள், அவர்களைத் தொந்தரவு செய்யாதே' என்றெல்லாம் சொன்னார். ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு ரகம். ஹா ஹா ஹா.
//தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் மருத்துவர்களை நாடுவதில்லை, மருந்துகளை எடுத்துக்கொள்வதில்லை, பெந்தகொஸ்தே போல்)// காந்தியை விட்டுட்டீங்களே! அவர் மனைவி வைத்தியம் செய்யாமல் தானே இறந்தார்!
நீக்குநான் ஜோசியம் பத்தி எழுதின பதிவைப் படிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன். எனக்கு எங்க அப்பா வீட்டு ஜோசியரைத் தவிர என் சிநேகிதன் சிவா என்னும் நண்பனும், லக்ஷ்மி என்னும் என்னுடன் வேலை பார்த்த பெண்ணும் சொன்னது மிகச் சரியாக இருந்தது! இருக்கிறது. அவங்க இரண்டு பேருமே கைரேகை பார்த்துத் தான் சொன்னார்கள். அப்படியே நடந்தது.
நீக்குநெத உங்கள் கருத்தை வாசித்தேன்...நன்றி
நீக்குகீதா
என்னுடைய கருத்து, தெய்வத்தையும் கும்பிடோணும், டொக்டரிடமும் போய்க் காட்டோணும் என்பதே.. இரண்டும் சேரும்போதுதான் நல்லது நடக்கும்.
நீக்குஜோசியத்தில் எங்களுக்கும் நம்பிக்கை இருக்கு.. அதுக்காக அவர்கள் சொல்லும் எல்லாம் சரியாக வரும் என்றும் இல்லை.. ஆனா அதே நேரம் நம் ஜாதகமும் சரியாகவெல்லோ நாடியில கூட சரியான கணக்கு இருக்கோணும்... அப்படி எனில்தானே ஜாதகப்படி பார்த்துச் சொல்வது சரியா நடக்கும்.
எங்கள் 2 வது மகன் பிறந்தபோது, எனக்கு சிசேரியன், கணவர் அருகில் இருந்தார், அப்போ நான் கணவரிடம் சொல்லியிருந்தேன், தலையை எடுக்கும்போது வெளியே ரைம் பாருங்கோ என....
ஆனா கவனிச்சேன், குழந்தையைக் கையில் எடுத்து துடைத்துக் கொண்டே நேஸ் அண்ணாந்து மணிக்கூட்டில் நேரம் பார்த்து அந்த நேரத்தை எழுதினா, நாம் கவனமாக இருந்தமையால், நம் நேரப்படியே ஜாதகம் எழுதியிருக்கிறோம், அதுவும் எவ்வளவு தூரம் சரியெனத் தெரியவில்லை.
இப்படி நிலைமை இருக்கும்போது, ஜாதகம் பார்த்துச் சொல்லும் சாஸ்திரகாரர்களைக் குறை சொல்ல முடியாதென நான் நினைப்பதுண்டு. ஆதி காலத்தில் எல்லாம் குழந்தை பிறந்ததும் ஓடிச்சென்று, வெயிலை நிலவை பார்த்தே நேரம் கணிப்பினமாம்..
//நேரில் அவர் என் அலுவலகத்துக்கு சொந்த வேலை காரணமாக// - இதைப்பற்றியே ஒரு இடுகை போடலாமே. சுவாரசியமாக இருக்கலாம் (இது கேஜிஒய் எழுதினதோ?). நான் குரும்பூர் குப்புசாமி என்று ஒருத்தர் நிஜமாகவே இருந்திருக்கிறாரா என்று சந்தேகப்பட்டேன்.
பதிலளிநீக்கு//ஆருக்கு யானகி காத்திருந்தா:)???// - இதை நாம் (தமிழ்நாட்டுத் தமிழர்கள்) கவனிக்கவேண்டும். ஜா என்ற எழுத்துக்கு தமிழ் 'யா'. சில இடங்களில் 'ச'வும் வரலாம் . ஷ் என்பதற்கு 'ட்'. இலங்கையில் 'ஜானகி' என்பதற்கு சர்வ சாதாரணமாக 'யானகி' என்று பயன்படுத்துவது மகிழ்வைத் தருகிறது.
பதிலளிநீக்குஎன்னை வச்சு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எடுத்திடாதீங்கோ நெ.தமிழன் ஹ ஹா ஹா இலங்கையர்கள் என்னை அடிக்க வந்தாலும் வரலாம்:)), ஆனா ஜானை என வராது யானை.. இதில ஒலி வித்தியாசம் கண்டுபிடிப்பது கஸ்டமெல்லோ.. பாடமாக்கித்தான் பழகி எடுக்கோணும் ஹா ஹா ஹா:))...
நீக்குநெ.த. மற்றும் DD-யின் அபாரமான கருத்தோட்டங்கள்.
பதிலளிநீக்குஜோஸ்யம் ஒரு சாஸ்திரம். அதில் மேதமை உள்ளவர்களே சரியாகக் கணிப்பார்கள். அவர்களிடமே செல்ல வேண்டும்.
என் விஷயத்தில் சில கணிப்புகள் மிகச் சரியாக வந்திருக்கின்றன. இதில் சிலர் நம்பிக்கையிழக்கக் காரணம் போலிகளும், அரைகுறை நிபுணர்களும்தான். மேலும், ஜோஸ்யம் பார்ப்பவர் தன்னைப்பற்றிய சரியான தகவல்களை அவரிடம் தரவேண்டும். தவறான நாள், நேரத்தை உளறிவிட்டு ஜோஸ்யர் சரியில்லை என்பது தப்பு.
ஒரு நண்பருக்காக (அவர் மனைவி புற்றுநோயால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார், இரண்டாவது முறை அது அவரைத் தாக்கியது) நான் ஜோதிடரிடம் சென்றேன் (எனக்குத் தெரிந்த ஜோதிடர்). அவரிடம் சரியான நாள், நேரம், இடம் சொல்லமுடியவில்லை. அவர், ப்ரசன்ன ஜோதிடம் மூலம் உங்கள் பிரச்சனைக்கு பதில் சொல்றேன் என்றார். பிரச்சனையைச் சொன்னேன். அவர் சொன்னது, நண்பரின் மனைவி இறந்துவிடுவார், நண்பருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும் என்றார். ஒரு மாதத்துக்குள் மனைவி மறைந்தார், ஆனால் நண்பர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதையெல்லாம் வெறும்ன, 'காக்கை உட்காரப் பனம்பழம்' என்று கடந்துபோய்விட முடியாது.
நீக்குஉண்மை ஏகாந்தன். இதை நானும் உணர்ந்திருக்கேன்.
நீக்கு/
பதிலளிநீக்குபதில் : அரெஸ்டு செய்வது கமிஷனர் வேலையல்லவே.//
இதுக்குதான் சிவாஜி அங்கிள் /கேப்டன் அங்கிள் படங்களை அரைகுறையா பார்த்திருக்க கூடாதது :) நான்
1, இக்காலத்து பிள்ளைகள் பெரியவர்களுக்கு மரியாதை தருவதில்லையென்ற feeling உங்களுக்கு வருவதுண்டா ?
பதிலளிநீக்கு2, அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஒரு கடைசியில் கமல் நடக்கும்போது கூட நடக்கும் புலியின் வால் ஆடிட்டே போகும் ஒருவர் அதைப்பார்த்து அரண்ட மாதிரி உங்களை அதிர வச்ச சீன்ஸ் நிஜ வாழ்க்கையில் ?
அதாவது உங்கள் கண் உங்களை ஏமாற்றிய நிகழ்வு ?
//1, இக்காலத்து பிள்ளைகள் பெரியவர்களுக்கு மரியாதை தருவதில்லையென்ற feeling உங்களுக்கு வருவதுண்டா ?//
நீக்குபிக்குபொஸ்ஸு பார்த்த எபெக்ட்ட் போல இருக்கே:)) ஹா ஹா ஹா
இல்லை மியாவ் இங்கே என்னை சுற்றி உள்ள பிள்ளைகளையும் பார்த்து எபெக்ட் ஆனா pig பாஸ் அதை உசுப்பு விட்டது
நீக்குமரியாதையின்மை என்பதை விட அநாகரீகமே pig பாஸ் வீட்டில் அதிகம்
நீக்குமீதி கேள்விகள் பிறகு வரும் :)
பதிலளிநீக்குகேள்விகள் எல்லாம் பின்னர் வரும்.இப்போதைக்குப் படிச்சு வைச்சேன். இன்னும் இரண்டு நாளைக்குக் கொஞ்சம் பிசி! :))))
பதிலளிநீக்குஅப்பாடா! தொல்லை விட்டதுனு அங்கே யாருங்க ஓடறது? கேஜிஜி? கேஜிஎஸ்? கேஜிஒய்? ஶ்ரீராம், காசு?
பதிலளிநீக்குகாந்தி பத்தி உங்க கருத்து என்ன? (ஹையா, மாட்டிக்கொண்டாரே, மாட்டிக் கொண்டாரே)
பதிலளிநீக்குஇப்போ முதல் கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு கேள்வி! பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா (பாரம்பரியமாகத் தென்னிந்திய உணவில் முக்கியமாய்த் தமிழகத்தில் செய்வது ) பிடிக்குமா? இல்லாட்டி சனா மசாலா இப்போல்லாம் பிரபலமா இருக்கே அது பிடிக்குமா?
இந்த காடரிங்காரங்க பந்தி பரிமாறுகையில் குழம்பு சாதம் சாப்பிடும்போதே அடுத்தடுத்து எடுத்து வராங்களே! அதை எப்படி நிறுத்தறது?
நாங்களும் பல காடரிங் நடத்துபவர்களிடம் சொல்லிப் பார்த்துட்டோம். ஆனால் யாரும் அதைக் கேட்பதாக இல்லை. அவசரம் அவசரமாகச் சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமாய் இதுக்காகவே நான் கல்யாணச் சாப்பாடைத் தவிர்ப்பேன். :)))
பாயசம், அக்கார அடிசில், சர்க்கரைப்பொங்கல், பால் பாயசம், சேமியா பாயசம், ஜவ்வரிசிப் பாயசம், கோதுமைப்பாயசம், பாதாம் கீர், அடைப் பிரதமன், சக்கப் பிரதமன், கடலைமாவுப் பாயசம்,பாதாம், முந்திரி, பிஸ்தா அரைத்துவிட்டுச் செய்யும் பாயசம் இவற்றில் உங்கள் விருப்பம் எது? எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்? இவற்றைச் செய்யும் விதம் குறித்துத் தெரியுமா?
இந்த காடரிங்காரங்க பந்தி பரிமாறுகையில் குழம்பு சாதம் சாப்பிடும்போதே அடுத்தடுத்து எடுத்து வராங்களே! அதை எப்படி நிறுத்தறது?//
நீக்குஆ ஆ ஆ ஆ! கீதாக்கா அதே ரொம்பவே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...நாம ரசித்து சாப்பிடவே முடியாமல் அரக்க பரக்க கொண்டு போட்டு அதிலும் சிலர் நமக்கு ரெண்டு பக்கமும் இருக்கறவங்க சீக்கிரம் சாப்பிடுபவர்களா இருந்தாங்கனா அவங்களுக்குப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க....அப்புறம் நமக்கு வேண்டும்னா கூப்பிடனூம்....அதுக்குள்ள எதிர்த்தாப்புல, பேப்பரை சுருட்ட ஆரம்பிச்சிருப்பாங்க....நாமளும் எழுந்துட வேண்டியதா இருக்கும்....ஹூம்....
அஞ்சு நாட்டுப் பெண் கதை கேட்டிருப்பீங்களே கீதாக்கா அந்தக் கதைதான்!! ஹா ஹா ஹாஹ் ஆ
கீதா
எல்லா விடைகளும் சூப்பர்.
பதிலளிநீக்குஎனது கேள்விக்கான விடை அருமை. ரசித்தேன். எனக்கும் சோதிடத்தில் நம்பிக்கை இல்லை. இவ்வுலகை ஆளும் பெரிய சக்தி இருக்க அதைப் பிடித்துக் கொள்வது மேலன்றோ எனும் நம்பிக்கை. எல்லாக் கோள்களும் நல்லவையே. வேயுறுதோளிபங்கன்....பாடல்தான்...
பொதுவாக செவன் பாயின்ட் ஃபைவ், அல்லது பாம்புகள் பிடித்தால் மோசம் என்று. ஆனால் என்னுடைய தனிப்பட்டக் கருத்து சனியும் சரி பாம்புகளும் சரி நல்லவரே. எல்லோருக்கும் வாழ்வில் கடுமையான காலக்கட்டம் வரும். சிலருக்கு வந்தது கூடத் தெரியாமல் அகலும். சிலருக்குப் பெரிய பாதிப்பையே உருவாக்கும். எதுவாக இருந்தாலும் சரி கஷ்டமான காலகட்டமோ நல்ல காலகட்டமோ, எப்போதும் நாம் நாவை அடக்கி, யாரையும் துச்சமாக நினைக்காமல், மனதில் நல்லதை நினைத்து பிறர் மனதை நோகடிக்காமல், நம்பிக்கையுடன் அந்த மாபெரும் சக்தியை நினைத்து இருந்தாலே எந்தக் கஷ்டத்தையும் எளிதாகக் கடந்து விடும் மன பலம் கிடைக்கும் கடந்தும் விடலாம்...அதுவும் குறிப்பாகக் கடினமான காலகட்டத்தில் இது மிக மிக முக்கியம் அத்துடன் பொறுமை..... என்பது என் தனிப்பட்டக் கருத்து.
கீதா
செவன் பாயின்ட் ஃபைவ் நு சொன்னதுக்கு அதிராவுக்கு ராயல்டி எதுவும் கிடையாது சொல்லிப்புட்டேன்!! ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
ஏ அண்ணன் ஓடிக்கமோன் நோட் பண்ணுங்கோ கீதா ஹாஃப் இண்டியன் காஃப் சிறீலங்கனாக்கும்:)).. அதனாலதான் என்னைப்போலவும் கதைக்கிறா ஹா ஹா ஹா:).
நீக்குஹிஹிஹி, எங்கே தி/கீதா, இல்லாட்டி வேறே யாரானும் இந்தக் கேள்விங்களைக் கேட்டுடப் போறாங்களேனு திடீர்னு ஒரு நினைப்பு வந்தது! அதான் உடனே கேட்டுட்டேன்.
பதிலளிநீக்குநான் சாதாரணமாப் பாயசம் சாப்பிடறதா இருந்தா மோர் சாதத்துக்கு அப்புறமாத் தான் சாப்பிடுவேன். சிலர் இதைப் புரிஞ்சுக்காமல் முன்னாடியே உபசாரம் பண்ணிக் கொடுத்துடறாங்க! அப்போ மோர் சாதம் சாப்பிட மாட்டேன். ஆனால் அவங்க அதைப் புரிஞ்சுக்காமல் ஏன் மோர்சாதம் வேணாம்னே அப்படினு கேட்பாங்க! உங்களுக்குப் புரியுதா?
நீங்க பாயசம் எப்போச் சாப்பிடுவீங்க? பாயசத்தில் வாழைப்பழம் போட்டுச் சிலர் சாப்பிடுவாங்க! சர்க்கரைப் பொங்கலில் தேன்மாரி பொழிந்தும் சாப்பிடுவாங்க! உங்க விருப்பம் என்ன?
எங்க பெரியம்மா ஒரு முறை வெங்கடாசலபதி சமாராதனையின் போது சர்க்கரைப்பொங்கல் பரிமாறிட்டுப் பெரியப்பா தேன் ஊற்றச் சொன்னதும் தவறுதலா விளக்கெண்ணையை எடுத்து வந்து ஊத்திட்டாங்க! நேரில் பார்த்து அனுபவிச்சிருக்கோம். அந்த வாத்தியார் பாவம்! சர்க்கரைப் பொங்கலை வாயில் ஒரு கவளம் போட்டுட்டு விழித்தார். பெரியப்பாவோ ஏகத்து உபசாரம்! அப்படி இக்கட்டான நிலைமையில் நீங்க மாட்டிட்டு இருக்கீங்களா? என்ன செய்வீங்க? அல்லது செய்தீங்க?
ஹிஹிஹி, இதுக்காகவே நான் சர்க்கரைப்பொங்கலை ஏதும் கலக்காமல் அப்படியே சாப்பிடுவேன். :))))இப்போதைக்கு இம்புட்டுத் தான்! சீரியஸ் கேள்விகளுக்குப் பின்னர் வரணும்!
ஹிஹிஹி, எங்கே தி/கீதா, இல்லாட்டி //
நீக்குகீதாக்கூ வந்துட்டேன்.....ஹையோ ஹையோ எனக்கும் மோர்சாதத்திற்குப் பிறகு பாயாசம் சாப்பிடுவது பிடிக்கும்.. உங்கள் கேள்வி எனக்குப் புரியுதேதேதேதேதே தேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ!!!!! ஹா ஹா ஹா ஹா....
ஏகாந்தன் அண்ணாவுக்கு, அதிரா, கீதா, கீதாக்கா மூணுபேரும் இப்ப ஒருவரா??!!!!!!! அப்படினு மண்டை குடையப் போகுது!!! ஹலோ எங்க இருக்கீங்க ஏகாந்தன் அண்ணா!!!!
கீதா
இல்ல இதில கீசாக்கா கொயந்தை:) அதனால அவவி ஆட்டத்தில் சேர்க்க முடியாது இன்னும் வளரோணும்:)).. கீத்ஸ் க்கு வயசாகிட்டுது பிக்கோஸ் நெ.தமிழனுக்கே அக்காவாம்:)).. ச்சோஓஓ பருவ வாசலில் நிற்பது அடிராவேதேன்ன்ன்:)) சுவீட் 16:))..
நீக்குபாவாடைத்தாவணியில் பார்த்த உருவமா... ஹையோ பிபிசில சிட்டுவேஷன் சோங் போடீனமே இந்த நேரம் பார்த்து ஹா ஹா ஹா:)).. இதைப் படிச்சால் ஏ அண்ணன் நாளைக்கு வோக் போக மாட்டார்ர் பிக்கோஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அவருக்கு ஹெட் சுத்தும் ஹா ஹா ஹா:).
ஹையோ கீசாக்காவின் கொஸ்ஸன்:) எல்லாம் எப்ப பார்த்தாலும் சாப்பாட்டுக் கொஸ்ஸ்ஸ்ஸனேதேன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா ஆவ்வ்வ்வ்வ்வ் கீசாக்கா கலைக்கிறா.. நான் காவிரியில நீந்தப்போறேன்ன் அவவுக்கு நீச்சல் தெரியாதே:)
நீக்கு//ச்சோஓஓ பருவ வாசலில் ...கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக // நிற்பது அடிராவேதேன்ன்ன்:)) சுவீட் 16:)).ப்ளஸ் 50 =66.
நீக்குகிரிக்கெட்ல டாப் பேட்ஸ்மன்கள் சில சமயங்களில் சேர்ந்து நொறுக்குவதைப்போல், நீங்கள் எபியில் சேர்ந்து விளாசும்போது அப்படித்தான் தோன்றுகிறது!
நீக்கு//கிரிக்கெட்ல டாப் பேட்ஸ்மன்கள்../
நீக்குஇது கீதாவுக்கான பதில்!
@அதிரா //..கீதா ஹாஃப் இனண்டியன்..அதனாலேதான் என்னைபோலவெ..//
& @ கீதா:
அப்ப நான் சொன்னது சரியேதான்..!
hahhaa :)
நீக்கு*இண்டியன்
நீக்குஒரே நேரம் கமெண்ட் போட்டா இபப்டி ஆகுது ..நானா சிரிச்சது மியாவ் நீந்தறமாதிரி நினைச்சி பின்னாடி நீந்தறதா கற்பனை பண்ணி சிரிச்சேன்
நீக்குஹலோ மிஸ்டர் பின்னாடி ஆரு நீந்துறது ?:) கீசாக்காவோ நோ ஜான்ஸ்ஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா.. அவ ஆத்தில காலை வச்சாலே ஸ்ரெயிட்டா கீழே போயிடுவாவக்கும் ஹையோ ஆண்டவா நல்லவேளை இனி நாளைக்கு காலையில சூரியன் கண்ணில பட்டபின்புதானே கீசாக்கா இதைப் படிப்பா:) அதனால மீ சேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))
நீக்குillai miyaaw neenga reverse il swim panni geethaakkaa kitta maatikira mathiri :)
நீக்குகேள்வி பதில்கள் அனைத்தும் நல்ல சுவாரஸ்யம். நல்ல கருத்துகளும் நிறைய அறிய முடிந்தது.
பதிலளிநீக்குஎனது கேள்விக்கும் நல்ல பதில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
துளசிதரன்
சு டோ கு : உனக்கும் எனக்கும் இனிமேல் என்ன குறை.. - ரேவதி நரசிம்மன் - Theme Story இப்போது வெளியாகி இருக்கிறது!
பதிலளிநீக்குhttps://engalcreations.blogspot.com/2018/07/blog-post_25.html
இதோ வரேன் :))))
நீக்குஅட தலைப்பு பலே பேஷ். ரொம்ப ஜோர். ஸ்ரீராம் ,
நீக்குஎனக்கும் உனக்கும் தான் பொருத்தம்ம்ம்ம்ம்ம்ம்
இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது.
படித்தவர்களுக்கும் ,படிக்கப் போகிறவர்களுக்கும் மிக நன்றி.
சு டோகு மிகப் பொருத்தமான தலைப்பு.
மிக மிக நன்றி மா. உங்கள் கட்டமைப்பிலிருந்து மீறி எழுதிவிட்டேனா என்று சந்தேகம்.
மனதில் தோன்றிய காட்சியை எழுதினேன்.
உங்கள் அனுமதியுடன் என் வலைப்பதிவில் நாளை வெளியிடுகிறேன்
// அட தலைப்பு பலே பேஷ். ரொம்ப ஜோர். ஸ்ரீராம் ,
நீக்குஎனக்கும் உனக்கும் தான் பொருத்தம்ம்ம்ம்ம்ம்ம்
இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது.//
இதுவும் ஒரு திரைப்பாடல்தான் அம்மா.
சுவாரஸ்யமான கேள்வி பதில்கள் பாராட்டுகள்
பதிலளிநீக்குஹ ஹா கேள்விகளும், பதில்களும் தொடரட்டும்...
பதிலளிநீக்குஜோதிடம் பலிப்பதற்கு ஜோதிடரின் வாக் பலித சக்தி, கேள்வி கேட்கும் நேரத்தில் கோள்களின் சாரம் போன்ற விஷயங்களும் உண்டு.
பதிலளிநீக்குகேள்விகள் பதிலகள் ஆரோக்கியமாக இருந்தன. அனுஷ்காவைப் போல.
பதிலளிநீக்குஉற்சாகமான சந்திப்புகள் நிகழ்ந்தால் மனம் பூரிக்கிறது .உங்கள் புதன்
பதிவுகளும் அதே போல. டிடியும் சேர்ந்துவிட்டால் பிறகுத் தமிழுக்குக் கொண்டாட்டம் தான்.
மனம் நிறை வாழ்த்துகள்.
கேள்வி எழும்போது நானும் சேர்ந்து கொள்கிறேன்.
.
காலை வணக்கம்
பதிலளிநீக்குஇப்போது தான் படிக்க முடிந்தது. ஸ்வாரஸ்யாமான கேள்விகள் பதில்கள்.....
இன்ட்ரஸ்டிங் பதில்களூம் கேள்விகளும் கருத்துக்களும்!
பதிலளிநீக்குஇந்த முறையும் முன்னமே வர இயலவில்லை! என் கேள்விகள் வெயிட்டிங் லிஸ்டில்!