பிங்க் படத்தில் அமிதாப் ஒரு கருத்தை வலியுறுத்திச் சொல்வார்.
வேண்டாம் என்பதற்கு வேண்டாம் என்றுதான் அர்த்தம்! அவர் படத்தில் சொல்லும் காரணம் வேறு என்றாலும். வேண்டாம் என்னும் வார்த்தைக்கு வேண்டாம் என்றுதான் அர்த்தம். போதும் என்றால் போதும்தான்! ஹிஹிஹி... புரியவில்லையா?
ஆனால் பரிமாறுபவர்கள் என்ன நினைக்கிறார்கள்? போதும் என்று சொன்னபிறகு இன்னும் கொஞ்சம் பரிமாறுவதுதான் மரியாதை, அன்பு என்று நினைத்துக்கொண்டு தடுக்கத்தடுக்க இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம்.. இன்னும் கொஞ்சம் போடுவார்கள்.
எல்லோரும் அன்பு என்று நினைப்பார்களோ என்னவோ, சிலருக்கு, குறிப்பாக எனக்கு அது முகத்தில் அடிப்பது போல போடுகிறார்களே, எப்படி இவ்வளவு சாப்பிடுவது என்று தோன்றும். என் பாட்டி ஒருவர் இரவு எதுவும் மிஞ்சக் கூடாது என்று நினைத்து விட்டால், போதும் என்கிற வார்த்தையை காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டார்.. பிடிக்குமாவது.. பிடிக்காதாவது! சாப்பிடவே தோன்றாத அளவில் தட்டில் விழுந்து விடும்.
ரொம்பச் சிலர் இன்னும் கொஞ்சம் போடமாட்டார்களா என்று நினைக்குமளவு பரிமாறுவார்கள். ஆனால் நினைத்துப் பார்த்தால் இது பரவாயில்லை என்றே தோன்றும்.
முன்னரே சொல்லி இருக்கிறேன். விருந்துகளில் சாப்பிடும்போது பெரும்பாலும் எதையும் வீண் செய்ய மாட்டேன். சாப்பிடும் பண்டங்களை மட்டும்தான் பரிமாற அனுமதிப்பேன். பிடித்த விஷயங்களை இறுதியாகச் சாப்பிட்டு, மற்றவற்றை முதலில் முடிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. முடிக்க முடிக்க சில சமயங்களில் அவை மீண்டும் மீண்டும் பரிமாறப்படும். தடுத்து விடுவேன்.
நான் பரிமாறும் நேரங்களில் போதும் என்றால் நாகரீகமாக ஓரிரு முறை வலியுறுத்திப் பார்ப்பேன். அவர்கள் முகக்குறிப்பிலிருந்து போடுவதா வேண்டாமா என்று புரிந்து விடும்.
என்னவோ போங்க.. ஏதோ சொல்லணும்னு தோணிச்சு...!
=================================================================================================
=======================================================================================================
என் பாஸின் அத்தையின் பேரன்கள் இருவர் மாநில அளவில் சதுரங்க சேம்பியன்கள். இரண்டு மூன்று பேர்களுடன் விளையாடுவார்கள். திரும்பி உட்கார்ந்துகொண்டு விளையாடுவார்கள். இணையத்தில் ஒருவருடன் ஆடிக்கொண்டே இங்கு என் மகன்களுடன் விளையாடுவார்கள்.
தான் ஒரு ராஜாவை மட்டும் வைத்துக்கொண்டு என் மகனிடம் ராஜா, ராணியை வைத்து, எத்தனை மூவ்களில் மேட் செய்கிறாய் என்று பார்ப்போம் என்று பயிற்சி கொடுப்பார்கள்.
எப்பொழுது கேட்டாலும் என் இளைய மகன் கருப்பு காய்தான் தேர்வு செய்வான். "ஏண்டா வெள்ளை செலெக்ட் செய்ய மாட்டேங்கிறே?" என்பான் அவன்.
"நான் முடிவு எடுக்க வேண்டாம் பாரு.. நீ மூவ் செய்வதை ஒட்டி நான் மூவ் செய்தால் போதும்" என்பான் என் மகன்.
விளையாட்டுதான் என்றாலும் மனோதத்துவரீதியாக இது கொஞ்சம் அவன் கேரக்டரைச் சொல்கிறதோ...! தலைமைப்பண்பு குறைவு என்று சொல்லலாமா? அல்லது ஜாக்கிரதையானவன் என்று சொல்லலாமா?
====================================================================================================
ஓரிரு பாடல்களை ஒரு தளத்தில் நான் தேடி எடுக்கக் கேட்டுக்கொண்டிருந்ததை அதிரா சென்ற வாரம் லிங்க் கொடுத்திருந்தார்.
நான் ரொம்ப நாட்களாய் தேடிக்கொண்டிருந்தேன் என்பதற்கு இன்னொரு சான்று! (அதுக்கு இப்போ என்னங்கறீங்களா?)
இதில் சில பாடல்கள் அப்புறம் கிடைத்தன.
========================================================================================================
2014 இல் முகநூலில் பகிர்ந்தது... 2020 இல் சென்னையில் நிலத்தடி நீரே இருக்காது என்று செய்தி படித்தேன். அப்படி ஆனால் அதற்கு நாமேதான் காரணம்.
நம் முன்னோர்களிடம் ஒரு வழக்கம் இருந்து வந்தது. அவர்கள் தினமும் குளத்தில் குளிக்கும் போதும் குளித்து முடித்த பின்னும், ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து கரைக்கு வெளியே போட்டு விடுவார்கள்.
இப்படி செய்வது, குளத்தினை தினமும் தூர்வாருவதற்கு சமம். குளிக்கும் ஒவ்வொருவரும் தினமும் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி வெளியேற்றும் போது, குளம் எப்போதும் ஆழமாகவே இருக்கும். நீர் எப்போதும் நிறைந்திருக்கும். அந்தளவிற்கு அப்போது பொறுப்பான சமூகம் இருந்தது.
அதேபோல் ஆற்றிலோ, குளத்திலோ சிறுநீர் கழிப்பதோ, மலம் கழிப்பதோ, மலம் கழித்து விட்டு சுத்தம் செய்வது போன்ற செயல்களையும் செய்ய மாட்டார்கள். அது குடிநீர், குளிக்கும் நீர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
நீர் நிலைகளை தெய்வமாக மதித்து அருகில் கோயில் கட்டினார்கள். 'மரங்களுக்கு சந்தனம் பூசி, ஆடை கட்டி அதனை வழிபட்டு, அது தெய்வம், வெட்டாதே,' என அறிவுறுத்தினார்கள். எல்லாவற்றையும் நாம் தவறாக புரிந்து கொண்டோம். இன்று ஆறுகள், குளங்கள் எல்லாமே கழிவுகளின் சங்கமம் ஆகி விட்டன. பிளாஸ்டிக் குப்பை அடைத்து பூமித்தாய் பிளாஸ்டிக் போர்வையால் போர்த்தப்பட்டு விட்டாள். ஒரு சொட்டு தண்ணீர் கூட பூமிக்குள் இறங்காதோ என்ற நிலைதான் இன்றைய சூழ்நிலை. ஆற்றிலோ, வாய்க்காலிலோ, குளத்திலோ தண்ணீர் தேங்க முடியாத அளவிற்கு நாம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி விட்டோம்.
இப்படி ஒரு பொறுப்பற்ற சமூகத்திலும், பொறுப்பான சிலர் வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டுதான் உள்ளனர். தேனி அருகே மதுராபுரியில் ஏ.சி.வி., மில்ஸ் நடத்தி வருபவர் சந்திரசேகர். இவர் 2004ம் ஆண்டே தனது மில்லில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கி விட்டார்.
இவரது மில்லின் பரப்பளவு இரண்டே முக்கால் ஏக்கர். இவ்வளவு நிலத்திலும் விழும் ஒரு சொட்டு நீர் கூட வீணாக வெளியேறாது. 9,200 சதுர மீட்டர் பரப்புள்ள இந்த மில்லில், கட்டடம் மட்டும் 5,200 சதுர மீட்டர். அதேபோல் மற்றொரு இடத்திலும் மில் வைத்துள்ளார். இதன் பரப்பளவு 40 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ளது.
எல்லா இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைத்துள்ளார். கட்டடத்தின் மேல்தளத்தில் விழும் மழைநீர் வெளியேற மேலேயே கான்கிரீட் வடிகால் அமைத்துள்ளார். இந்த கான்கிரீட் வடிகாலில் இருந்து வரும் நீர் கான்கிரீட் வாய்க்கால் வழியாகவே செல்கிறது. தரைதளம் முழுவதும் பேவர் பிளாக் அமைத்து, இதில் விழும் மழைநீரும், கான்கிரீட் வாய்க்கால் வழியாகவே சென்று மிகப்பெரிய கிணற்றில் விழுவது போல் அமைத்துள்ளார்.
இந்த கிணறு மட்டும் 25 லட்சம் லிட்டருக்கும் மேல் கொள்ளவு கொண்டது. ஆண்டுக்கு இவரது மில்லில் மட்டும் சராசரியாக 2 கோடி லிட்டர் தண்ணீர் சேகரிக்க முடியும். அந்த அளவிற்கு மழைநீர் சேகரிப்பை வலுவாக அமைத்துள்ளார்.
இவரது மில்லில் 200 பேர் வேலை பார்க்கின்றனர். தினமும் இவர்களது தேவை மட்டும் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர். இந்த கணக்குப்படி இவர் ஒவ்வொரு ஆண்டும் சேகரிக்கும் மழைநீர், இரண்டு ஆண்டிற்கும் மேல் போதுமானதாக உள்ளது. மழைநீர் சேகரிப்பு அமைத்தது முதல் தற்போது வரை, மில்லில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதே இல்லை.
இதனால் மில்லிலேயே பால்பண்ணை அமைத்துள்ளார். சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகிறார்.
சந்திரசேகர் கூறியதாவது:
"என்னை மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்குமாறு யாரும் அறிவுறுத்தவில்லை. மாறாக நான் அமைத்த போது, எதற்கு வீண் வேலை செய்கிறாய் என கிண்டல் செய்தனர்.
நான் அதைப் பற்றி கவலைப்படாமல் மில் வளாகம் முழுவதும் சேரும் தண்ணீரை கடந்த 10 ஆண்டுகளாக சேகரித்து வருகிறேன். இதனால் இப்பகுதி முழுவதுமே நிலத்தடி நீர் வளம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்றாண்டுகளாக மழையே இல்லாத நிலையிலம், எங்கள் மில் வளாகத்தில் உள்ள ஆழ்குழாய்களில் தண்ணீர் நன்றாக கிடைக்கிறது. நான் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தாலும், அடிப்படையில் விவசாயக்குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால், எனக்கு நிலத்தடி நீரின் முக்கியத்துவமும், விவசாயத்தின் மகத்துவமும் முழுமையாக தெரியும்.
இயற்கையை மதிக்கத் தெரியும். எனவே இயற்கைக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் இயற்கை வளங்களை முழுமையாக பாதுகாத்து வருகிறேன். ஆரம்பத்திலேயே கான்கிரீட்டால் வலுவான முறையில் அமைத்து விட்டதால், ஒவ்வொரு முறையும் பராமரிப்பிற்காக நான் சிரமப்பட வேண்டிய அவசியம் ஏதும் ஏற்படவில்லை."
இவ்வாறு கூறினார்.
மழைநீர் சேகரிப்பு தொழில்நுட்பம் அறிய 98422 71975 ஹலோ சொல்லுங்க.
- தினமலர் -
=================================================================================================
நான் பயங்கர குறட்டை மன்னன். என் வீட்டார் என் இந்த குறட்டை சத்தத்துக்குப் பழகி விட்டனர். இப்போது அவர்கள் என் குறட்டைச்சத்தம் இல்லாவிட்டால்தான் தூக்கம் இன்றி கஷ்டப்படுவார்கள்!!! நான் வெளியூர் சென்றாலோ, அல்லது உறவினர் எங்கள் வீட்டுக்கு வந்தாலோ... என்னுடன் ஒரே அறையில் படுபவர்கள் தொலைந்தார்கள்! தூங்க முடியாது. அவர்களைச் சொன்னேன். ஆனால் பெரும்பாலும் அவர்களும் என்னுடன் குறட்டையில் போட்டி போடுபவர்களாகவே இருப்பார்கள். இது மாதிரி தருணங்களில் யார் முதலில் தூக்கத்தில் ஆழ்கிறார்களோ அவர்கள் பாக்கியவான்கள்! நான் எப்போதும் முந்திக்கொண்டு விடுவேன்!!
முன்னர் தினகரனில் வந்த குறட்டைக் கட்டுரையை முகநூலில் பகிர்ந்திருந்தேன். அது...
குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள் : [தினகரன் நாளிதழிலிருந்து...]
இன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இத்தகைய குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகிறது. இதனால் நம்முடன் படுப்பவர்கள் பல நாட்கள் தூக்கத்தை தொலைத்துவிடுகின்றனர். பொதுவாக குறட்டை என்பது ஒரு கோளாறு.
இது குரல் வளையில் காற்றானது அளவுக்கு அதிகமாக செல்லும் போது, அதிகப்படியான ஒலியை உண்டாக்குகிறது. அதிலும் காற்றானது வாய் மற்றும் மூக்கின் வழியாக இடையூறுடன் செல்லும் போது அது பலத்த ஒலியை உண்டாக்குகிறது. குறிப்பாக சளி அல்லது மூக்கடைப்பின் போது இந்த மாதிரியான சப்தம் ஒலிக்கப்படும். மேலும் குறட்டையானது வயது, சைனஸ், அதிகப்படியான உடல் எடை மற்றும் புகைப்பிடித்தல் ஆகிறவற்றின் காரணமாகவும் ஏற்படும். இப்படி குறட்டை விட்டால், அது உடல் நலத்தைப் பாதிப்பதோடு, உறவுகளில் தொல்லையை உண்டாக்கும். ஆகவே அந்த குறட்டையை நிறுத்துவதற்கு ஒருசில எளிய வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
· * தலையணை படுக்கும் போது தலையணை பயன்படுத்தாமல் சாதாரணமாக படுப்பதற்கு பதிலாக, சற்று அதிக அளவில் தலையணையைப் பயன்படுத்தி தூங்கினால், குறட்டையை தவிர்க்கலாம்.
· * பக்கவாட்டில் தூங்கவும் இப்படி இரவு முழுவதும் படுப்பது சாத்தியம் இல்லை தான். இருப்பினும் இப்படி பக்கவாட்டில் படுத்தால், அது குறட்டையை தடுக்கும்.
· * நீராவிப் பிடிப்பது ஆவிப் பிடித்தாலும், குறட்டை வருவதை தவிர்க்கலாம். ஏனெனில் இது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்.
* புகைப்பிடிப்பதை தவிர்ப்பது புகைப்பிடித்தால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று தான் குறட்டை விடுவது. ஏனெனில் புகைப்பிடிக்கும் போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குவதால், அது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.
* மது அருந்துதலை நிறுத்துவது மது அருந்துவது, தூக்க மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றை நிறுத்தினால், அது தசைகளை தளர்வடையச் செய்து, காற்றை எளிதாக செல்ல உதவும்.
* சளிக்கு நிவாரணம் அளித்தல் சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு உடனே சரியாக சிகிச்சை அளித்து வந்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.
· * தூங்கும் நேரம் ஸ்நாக்ஸ் வேண்டாம் இரவில் தூங்கும் போது பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அது சளியின் உற்பத்தியை அதிகரித்து, குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே கொழுப்புச்சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது.
- தினகரன் நாளிதழிலிருந்து... மே 30 2014
=========================================================================================================
ஓகே... அடுத்த வாரம் பார்ப்போமா?
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்!
பதிலளிநீக்குஎதுவும் இல்லாத போது சமாளிக்கும் திறமையும், எல்லாம் இருக்கும் போது நாம் நடந்து கொள்ளும் முறையும் வெற்றியைத் தீர்மானிக்கிறது
கீதா
வாழ்க....
பதிலளிநீக்குஅட! இன்று அனுஷ் க்கு பதில் சிம் ஆ!!!!
பதிலளிநீக்குகீதா
அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் வழக்கம் போல வணக்கம்...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். நல்ல மெஸேஜ்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜு ஸார்.
பதிலளிநீக்கு''வழக்கம்போல வணக்கம்"
ஹா.. ஹா.. ஹா.. வித்தியாசமாய் இருக்கே...
தலைப்பு ஈர்ப்பு!! ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஏன்னா பெரும்பாலானோர் அவதிப்படுவது இதனால்...வெளிநாட்டுல கணவன் குறட்டை விடுறார்னு மனைவிமார்கள் டைவேர்ஸ் எல்லாம் அப்ளை பண்ணியதுண்டு என்று செய்திகளில் வாசித்ததுண்டு...
வரேன் எல்லாம் வாசித்து பதில் போட இன்று என்னவோ கண்ணழகி இப்பவே ரொம்ப டிமான்ட் பண்ணுறா...
கீதா
அனைவருக்கும்....
பதிலளிநீக்குஅழகு🍓🍓🍓..
காலை வணக்கம்....😎😎😎😎
//அட! இன்று அனுஷ் க்கு பதில் சிம் ஆ!!!!/
பதிலளிநீக்குஆமாம் கீதா... ச்ச்ச்ச்சும்மா... ஒரு சேஞ்சுக்கு...!!
குறட்டை பற்றிய சிறு ஜோக் இன்று அதிரா தளத்திலும் இருக்கிறது கீதா...
வாங்க அனுராதா பிரேம்குமார்... காலைவணக்கம்.
பதிலளிநீக்கு// ஓகே.. அடுத்த வாரம் பார்ப்போமா..//
பதிலளிநீக்குஅடுத்த வாரம் வேறயா!?..
( இரண்டு அர்த்தம்..)
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்கு// அடுத்த வாரம் வேறயா!?..
பதிலளிநீக்கு( இரண்டு அர்த்தம்..) //
புரிந்தது..... முயற்சிக்கிறேன். தேடணும்!!
காலை வணக்கம் பானு அக்கா.
பதிலளிநீக்குநல்ல பதிவு. அதுவும் இந்தப் பரிமாறும் விஷயம்! இன்றளவும் இதில் நான் புக்ககத்தில் வாங்கிய மதிப்பெண்கள் 0 தான்! :))) ஏனெனில் அங்கே எல்லாம் வேண்டாம் என்றால் மேலும் மேலும் இலையில் கொட்டுவார்கள். அதே போல் வேண்டாம் எனச் சொன்னவர்கள் வேண்டாம்னு சொல்லிக் கொண்டே சாப்பிடவும் செய்வார்கள். நானெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டா அப்புறமாக் கேட்டாலும் சந்தேகத்துக்கு வேணுமானு சொல்லிக் கேட்பேன். இந்த விஷயத்தில் எனக்கும் ரங்க்ஸுக்கும் எப்போவும் தகராறு தான்! வேண்டாம்னு சொன்னாலும் விடாதே, கொடு என்பார்.
பதிலளிநீக்குகீதாக்கா... சாப்பிடுபவர்கள் மேலும் சிறு குறை இதில் இருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு மிகவும் வேண்டிய ஒரு வயதான பெண்மணி.. எது கேட்டாலும் (ஸ்நாக்ஸ் உட்பட) வேண்டாம் என்றுதான் சொல்வார். ஆனால் வாங்கிக்கொள்ள கை நீளும்!!
பதிலளிநீக்குஎங்க வீட்டிலேயோ நேர் எதிர். கேட்டால் தான் போடணும்! இல்லைனா போடக் கூடாது! பந்திகளிலும் அப்படித் தான் கேட்டுத் தான் போடுவாங்க! இது என் கல்யாணத்தின் போதே பெரிய பிரச்னையாக வெடித்தது. பரிமாறுபவர்கள் கேட்டுக் கேட்டுத் தான் பரிமாறுகிறார்கள், போடத் தெரியலைனு சொன்னாங்க! கேட்காமல் போட்டு வீணடிக்க முடியுமானு அவங்க கேள்வி! என்றாலும் பின்னர் வந்த நாட்களில் சும்மா உபசாரம் செய்து செய்து போடணும்னு என்பதைப் புரிந்து கொண்டேன். அதுவும் வேண்டாம்னு சொல்பவர்களுக்கே முதலில் போடணும்னும் புரிந்து கொண்டேன். சாதாரணமா என் மாமனாருக்கும் மாமியாருக்கும் நான் பரிமாறினால் கூட உபசாரம் செய்து தான் போடணும்! கைவர ரொம்பவே கஷ்டமா இருந்தது. இப்போல்லாம் இதை வேடிக்கை பார்க்கக் கத்துக் கொண்டு விட்டேன். அவங்களும் இது வேணும், அது வேணும்னு சொல்ல மாட்டாங்க! நாமாகப் புரிந்து கொண்டு பரிமாறணும்.
பதிலளிநீக்குஇது கிட்டத்தட்டப் புதுசாய் வரும் மருமகளுக்கு அவங்க வைக்கும் தேர்வு போன்றது என்பார்கள். மாமியார், மாமனாரை நல்லாக் கவனிப்பாளா, மாட்டாளா என்பதை இதன் மூலம் முடிவு செய்வார்கள் போல! :)))) நான் எல்லாம் வேண்டாம் என்றால் வேண்டாம் தான் அதுக்குப் பொருள்! அப்படி மீறிப் போட்டுட்டால் அதைச் சாப்பிட்டுவிட்டுக் கஷ்டப்பட மாட்டேன். சிரமப்படப் போவது நானும் என் வயிறும் இல்லையோ! ஆனால் இப்போல்லாம் கல்யாணங்களில் பார்த்தால் வயித்தெரிச்சல்! கொடுமை!
பதிலளிநீக்கு@கீசா மேடம் - பார்த்தால் வயத்தெரிச்சல் - இது புரியலையே. நான் பார்த்த வரையில் கேட்டுக் கேட்டு கல்யாணங்களில் பரிமாறுவதுல்லை. எது வேணுமோ அதைப் பரிமாற ஆட்கள் இருக்காது. ஸ்பூன்ல கறிவகைகள் பரிமாறுவார்கள்.
நீக்குநம்ம வீட்டிலும் குறட்டைக்குப் பெயர் போனவங்க இருக்காங்க. நான் குறட்டை விடுகிறேனா இல்லையா என்பதை ரங்க்ஸோ இல்லைனா குழந்தைகளோ அல்லது மற்ற யாருமோ தான் சொல்லணும்! எனக்கு எப்படித் தெரியும்! ஆனால் வீசிங் வந்தால் சப்தம் எனக்கே கேட்கும்! தலையைக் கீழே வைக்க முடியாது!
பதிலளிநீக்குசில திருமணங்களில் துணை ஐட்டங்கள் தீரத்தீர போட்டுக்கொண்டே இருப்பார்கள். சில திருமணங்களில் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இரண்டும் பார்த்திருக்கிறேன்!
பதிலளிநீக்கு@ஶ்ரீராம் - எனக்குத் தெரிந்து தீரத் தீர யாரும் போடுவதில்லை. என் அபிப்ராயம், காசு மிச்சம் பிடிக்குறாங்க என்பது
நீக்குகிட்டத்தட்ட எல்லா விழாக்களிலும் நிறைய வீணாகும் ஒரு விஷயம் தயிர்ப்பச்சடி. 200 அல்லது முன்னூறு பேர்களுக்கு தலா இரண்டு ஸ்பூன் பரிமாறப் போகிறார்கள். அதை எவ்வளவு தயார் செய்து வைப்பது! அடுத்து பருப்பு, அப்புறம் உசிலி!
பதிலளிநீக்குஅனுக்காவிலிருந்து சிம்ரனுக்கு மாறிட்டீங்களா? சிம்ரன் நடிப்பு எனக்குப் பிடிக்கும். யாரோ குரல் கொடுத்தாலும் முகத்தில் பாவங்களை நன்கு வெளிப்படுத்துவார்.
பதிலளிநீக்குஸ்ரீராம் அதிரா பதிவு பார்த்தேன்....இப்பத்தான்...ப்ளாகர் ரீடிங்க் லிஸ்ட் ஓபன் பண்ணாம, எங்க தளமும் ஓபன் பண்ணாம டைரக்ட்டா தளங்கள் போறதுனால பல பதிவுகள் மிஸ் ஆகிடுது...இனி ஒயிங்கா பளாகர் டேஷ் போர்ட் ரீடிங்க் லிஸ்ட் பார்க்கணும்...
பதிலளிநீக்குதானாடாவில்.....தசை....இது இப்ப சற்று முன் கேட்ட குரலா கீது. எங்கிருந்துனு புரிந்தது....ஹா ஹா ஹா ஹா ஹா ..
கீதா
தானாடா.....என்பது தேம்ஸில் ஒலித்து தில்லியில் எதிரொலித்து...ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
//எது கேட்டாலும் (ஸ்நாக்ஸ் உட்பட) வேண்டாம் என்றுதான் சொல்வார். ஆனால் வாங்கிக்கொள்ள கை நீளும்!!// இதை பூதஞ்சி என்பார்கள். அநேகமா எல்லோருமே இப்படித் தான். ஒரு சிலர் தான் வேண்டாம்னா வேண்டாம் என்பவர்கள். மத்தபடி எல்லோருமே ஒரு பக்கம் வேண்டாம் என்றாலும் இன்னொரு பக்கம் கை நீட்டுவார்கள்.
பதிலளிநீக்கு@கீசா மேடம்- அவங்களுக்கு வேண்டாமாயிருக்கும். இரண்டு தடவை வற்புறுத்தினால் உங்க மனசு நோகப்போகுதுன்னு தாட்சண்யத்துக்கு வாங்கிப்பாங்களாயிருக்கும். உங்களுக்காக வாங்கிட்டு அவர்களுக்கு கெட்ட பெயர் ஹா ஹா ஹா
நீக்குஎன் பிறந்த வீட்டில் நடக்கும் விசேஷங்களில் என்னைப் பரிமாறச் சொல்லுவார்கள். அதுவும் மாமா வீட்டில் எனக்கு ரொம்பவே பாராட்டுகள் கிடைக்கும். அதே புகுந்த வீட்டில் அவளைப் பரிமாறச் சொல்லாதே! என்பார்கள்! ஏனெனில் இங்கே வேண்டாம்னா போட்டே ஆகணும்! நானெல்லாம் உள்ளதை உள்ளபடி அர்த்தம் எடுத்துக் கொண்டு செய்வதால் இங்கே பரிமாறத் தெரியலை என்பார்கள்.
பதிலளிநீக்குஎங்க பையரும் நல்லா செஸ்ஸும், பாட்மின்டனும் விளையாடுவார். ஆனால் அதை முன்னேற்றிக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கலை! எனக்கு அதில் வருத்தம் தான்! உங்க பையர்களுக்கு இப்போவே ஊக்கம் அளித்து வாங்க! மழைநீர் சேகரிப்புப் பத்தி முகநூலில் படிச்சேனோ? ஆனால் இது பாசிடிவ் செய்திகளில் இடம் பெற்றிருக்கணுமோ! மற்றபடி சினிமா பாடல்களை நீங்களே தேடிக்கோங்க! :))))
பதிலளிநீக்குஸ்ரீராம் அங்கு அதிராவுக்குச் சின்ன திரி கொளுத்திப் போட்டாச்சு ஹா ஹா ஹாஹ் ஹா ஹா
பதிலளிநீக்குஇங்க வந்து வெடிக்குமா(கலாய்த்து) தெரியலை...மீ வெயிட்டிங்க் இப்ப நீங்க துரத்த வருவீங்க ஸோ ஆன் த ரன்வே...
கீதா
@ கீதா, @ஸ்ரீராம்: //அட! இன்று அனுஷ்க்கு பதில் சிம் ஆ!!!!//
பதிலளிநீக்குசிம் 1-ஆ இல்லை, சிம் 2-ஆ? எனிவே, எதுலயும் சிக்னல் ஒழுங்காப் போகப்போறதில்லே.. எதுவா இருந்தாத்தான் என்ன!
ஸ்ரீராம், கார்த்திக் சுப்புராஜ் உங்க வீட்டுக்குப் பக்கத்துவீட்டுக்காரரா?
கீதாக்கா ஹைஃபைவ்! நானும் வேண்டாம் என்றால் பரிமாற மாட்டேன். இன்னொரு வாட்டி கேட்டுவிட்டு வேண்டாமா ஷ்யூர்? லாக்ஹோ ஜாயேகா நு கேட்டுட்டு விட்டுருவேன். ஆனால் எங்க வீட்டுல சிலர் வேண்டம்னுதான் சொல்லுவாங்க நீதான் போடணும் என்பார்கள்...அதுதான் உபசரிப்பு அப்படிம்பாங்க ஆனா அது சில சமயம் இலையில் வேஸ்ட் ஆகும் மனசு வேதனையா இருக்கும். அப்படிப் போடப்படும் உணவு வேஸ்ட் ஆகுதேனு....அதனால என்னை யாரும் பரிமாறக் கூப்பிட மாட்டார்கள். நானும் ஒதுங்கியே இருப்பேன். அது போல நான் அவர்களிடம் சொல்லிவிடுவேன் எனக்கு நானே போட்டுக் கொள்கிறேன் என்று. அவர்கள் எடுக்கும் அளவைப் பார்த்தால் பயமா இருக்கும் குறிப்பா சாதம்....அப்போ தோணும் பஃபே பெட்டரோனு....
பதிலளிநீக்குகீதா
சில திருமணங்களில் துணை ஐட்டங்கள் தீரத்தீர போட்டுக்கொண்டே இருப்பார்கள். சில திருமணங்களில் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இரண்டும் பார்த்திருக்கிறேன்!/
பதிலளிநீக்குயெஸு ஸ்ரீராம்....நாம் சில சமயம் கேட்டு வாங்கணுமோ என்று தோன்றும் அப்புறம் வேண்டாம் என்று விட்டுவிடுதலும் உண்டு...
கீதா
எல்லோரும் அன்பு என்று நினைப்பார்களோ என்னவோ, சிலருக்கு, குறிப்பாக எனக்கு அது முகத்தில் அடிப்பது போல போடுகிறார்களே, எப்படி இவ்வளவு சாப்பிடுவது என்று தோன்றும். என் பாட்டி ஒருவர் இரவு எதுவும் மிஞ்சக் கூடாது என்று நினைத்து விட்டால், போதும் என்கிற வார்த்தையை காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டார்.. பிடிக்குமாவது.. பிடிக்காதாவது! சாப்பிடவே தோன்றாத அளவில் தட்டில் விழுந்து விடும்//
பதிலளிநீக்குஹையோ அதை ஏன் கேட்கறீங்க ஸ்ரீராம்....எங்கள்ள் வீட்டிலும் இது நடக்கும்...மீறுகிறது என்று வயிற்றில் அடைத்துக் கொள்வது என்பது எத்தனை சிரமம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. எங்கள் வீட்டில் சிலர் இத்துனூண்டு தானே மீறுது அதை ஏன் மீத்தணும் என்றும் போட்டுக் கொண்டுவிடுவார்கள்..(அந்த இத்துனூண்டு என்பது எவ்வளவு இத்துனூண்டு என்பது ஹா ஹா ஹா ...நிறையவே இருக்கும்..)
எனக்குத் திணித்தால் மூச்சு வாங்கும்.
கீதா
இன்று பதிவு செமையா நிறைய கருத்துகள் சொல்ல இருக்கு...வரேன் கடமை முடித்துவிட்டு வரேன்
பதிலளிநீக்குகீதா
என் புகுந்த வீட்டிலேயும் நானும் யாரையும் சாப்பாடு போட விட்டதில்லை. நானே பரிமாறிப்பேன். அதே என் பிறந்த வீடுன்னா மன்னியோ, தம்பி மனைவியோ போடுவாங்க! கரெக்டா இருக்கும். :) சமயத்தில் ரங்க்ஸுக்கே கோபம் வரும்! சாம்பாரோ, குழம்போ நானே விட்டுக்க வேண்டி இருக்கு, நீ சாம்பார், குழம்புன்னா சாப்பிடவே மாட்டேங்கறே, பண்ணாதே என்பார்! ஆகவே இப்போப் பண்ணறது இல்லை. பொடி வகைகள், கலந்த சாதம், துவையல் வகைகள், ரசம்னு பண்ணிடறேன், என்னிக்காவது இட்லிக்கோ, அடைக்கோ சாம்பார் தேவைன்னாப் பண்ணுவேன். அன்னியோட தீரும்படி!
பதிலளிநீக்குசெஸ் முன்னேற்றத்துக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபாடல்கள் நினைவுக்கு வரவில்லை.
தண்ணீர் சேமித்தவருக்கு வாழ்த்துகள். குளத்திலிருந்து
மண் எடுத்து வைப்பதைப் பற்றி பாட்டி சொல்லி இருக்கிறார்.
எத்தனை உயர்ந்த உள்ளங்கள் என்று தோன்றுகிறது.
திருமண வேஸ்ட் பார்த்திருக்கிறேன். போடாதவர்களையும் பார்த்திருக்கிறேன்.
எங்கள் வீட்டில் கச்சிதம்தான். சொன்னது சொன்னபடி.
மாப்பிள்ளைகளுக்கு வேற ட்ரீட்மெண்ட்.
மழைநீர் சேகரிப்பை முதலில் முட்டாள்தனம் என்று சொன்னவர்கள் பத்து வருடங்களுக்குப் பிறகு திரு. சந்திரசேகரை அறிவாளி என்கிறது.
பதிலளிநீக்குவிமானம் கண்டுபிடிக்கும் முன்பு ரைட் சகோதரர்களையும் இப்படித்தான் சொன்னார்கள். இதுதான் உலகம்.
குறட்டையால் விவாகரத்து பெற்றவர்களும் உண்டு.
கடைசி படத்தில் இருக்கும் அம்மை-யார் ?
குறட்டை நல்லதில்லை. சிங்கம் குறட்டை விட்டால் தட்டி எழுப்பி சைடில் படுத்துக் கொள்ளச் சொல்லுவேன். பத்து நிமிஷத்தில் அதே சப்தம். ரயில் ஓடுகிற மாதிரி. வாத்து கத்தற மாதிரி.
பதிலளிநீக்குசலித்துப் போய்ப் பக்கத்து அறையில் படுத்துக் கொள்வேன். நீ ரொம்ப சம்த்து இல்லை. நீய்யும் குறட்டை விடறே என்று சொல்லிவிட்டுப் போவார்,
குறட்டை லேசாக விடக்கூடாது.
காலை வணக்கம் 🙏
பதிலளிநீக்குநல்லதொரு கதம்பம்.
மழை நீர் சேகரிப்பு - நல்ல விஷயம்.
முன்னரே சொல்லி இருக்கிறேன். விருந்துகளில் சாப்பிடும்போது பெரும்பாலும் எதையும் வீண் செய்ய மாட்டேன். சாப்பிடும் பண்டங்களை மட்டும்தான் பரிமாற அனுமதிப்பேன். பிடித்த விஷயங்களை இறுதியாகச் சாப்பிட்டு, மற்றவற்றை முதலில் முடிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. முடிக்க முடிக்க சில சமயங்களில் அவை மீண்டும் மீண்டும் பரிமாறப்படும். தடுத்து விடுவேன். //
பதிலளிநீக்குநானும் அதே ஸ்ரீராம் வேண்டுவதை மட்டுமே போடச் சொல்லுவேன். வேஸ்ட் ஆக்கவும் மாட்டேன். இப்போதெல்லாம் பல இடங்களில் முன்னரேயே பரிமாறி வேறு வைக்கிறாங்க. எனக்குப் பிடிக்காது என்பது எதுவும் இல்லை என்றாலும்...ஸ்வீட் கொஞ்சம் பயமுறுத்தும்...ஹா ஹா ஹா
//நான் பரிமாறும் நேரங்களில் போதும் என்றால் நாகரீகமாக ஓரிரு முறை வலியுறுத்திப் பார்ப்பேன். அவர்கள் முகக்குறிப்பிலிருந்து போடுவதா வேண்டாமா என்று புரிந்து விடும்.//
ஆமாம் ஸ்ரீராம் நானும் இந்த தக்னிக்கைக் கற்றுக் கொண்டுவிட்டேன் ஹிஹ்ஹிஹிஹி...
கீதா
@ Killergee//..குறட்டையால் விவாகரத்து பெற்றவர்களும் உண்டு.//
பதிலளிநீக்குபடித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..
என்கிற பாடல் நினைவுக்கு வருகிறது !
பரிமாறுவது ஒரு கலைதான். எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பரிமாறுவதைப் பற்றி பரிமாறிவிடலாமோ என்று தோன்றுகிறது. நன்றி.
பதிலளிநீக்குஇன்னிக்கு என்ன எனக்கும் கீதா அக்காவுக்கும் ரொம்பவே ஒத்துப் போகிறது? நான் சொல்ல விரும்பிய பல விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார்.
மழை நீர் சேமிப்பு இன்றைக்கு மிகவும் அவசியமான ஒன்று. இன்று நீச்சல் குளம் இருக்கிறது, ஜிம் இருக்கிறது, சூப்பர் மார்க்கெட் இருக்கிறது என்றெல்லாம் விளம்பரப்படுத்தும் அடுக்குமாடி குடியிருப்பு விளம்பரங்கள் மழை நீர் சேமிப்பு இருக்கிறது, திடக் கழிவு மேலாண்மை இருக்கிறது என்று கூறுவதில்லை. மக்களுக்கும் அதைப் பற்றிய அக்கறை இல்லை. தண்ணீர் இல்லை என்றால் காசு கொடுத்து லாரித் தண்ணீர் வாங்கி கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
பதிலளிநீக்குஇன்று நகரில் முளைக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் மழை நீரை முறையாக சேமித்தால் தண்ணீர் பற்றாக்குறை வராது.
உங்கள் மகன் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர் என்று தெரிகிறது. இந்த வாரம் சிம்ரன், அடுத்த வாரம் ஸ்ரீதேவியா? ஜெயப்ரதாவா?
பதிலளிநீக்குநானும் குறட்டை விடுவேனாம். பலர் சொல்லியிருக்கிறார்கள்.
//இன்னிக்கு என்ன எனக்கும் கீதா அக்காவுக்கும் ரொம்பவே ஒத்துப் போகிறது? நான் சொல்ல விரும்பிய பல விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார். // @பானுமதி, என்ன இருந்தாலும் நம்ம ரெண்டு பேரும் ஒரே ராசி இல்லையா? (காதோடு ஒரு ரகசியம்! அதிரா கேட்டால் என்ன ராசினு சொல்லிடாதீங்க! அதுவும் உங்க ராசியை! )
பதிலளிநீக்கு//இந்த வாரம் சிம்ரன், அடுத்த வாரம் ஸ்ரீதேவியா? ஜெயப்ரதாவா?// இல்லை,வைஜயந்தி மாலா இல்லைனா அவங்க அம்மா வசுந்தரா தேவி இல்லைனா காஞ்சனமாலா! :))))))
பதிலளிநீக்குபரிமாறுவது ஒரு கலை என்பது மறுக்க முடியாத உண்மை.
பதிலளிநீக்குபக்கத்தில் அமர்ந்து பார்த்து, பார்த்து பரிமாறுவது ஒரு கலை . பாத்திரங்களை கரண்டிகளை போட்டு விட்டு வேண்டும் என்கிறதை போட்டு சாப்பிடுங்கள் என்போரும் உண்டு.
வேண்டாம் என்றால் சரி என்று விட்டு விடக் கூடாது இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்கள் என்று உபசரிக்க வேண்டும் என்று சொல்வது உண்டு.
இலையில் எல்லாம் பரிமாறி அவர்கள் எதை விருப்பாமாய் சாப்பிடுகிறார்கள் என்று பார்த்து பரிமாறவேண்டும் என்று சொன்னதற்கு ஒரு சாது ஒரு வீட்டுக்கு விருந்து உண்ண போது அவர் வீட்டில் மாம்பழங்களை வெட்டி துண்டங்களையும், கொட்டையையும் சேர்த்து இலையில் பரிமாறினார்கள். சாது அதையும் இலையில் மிச்சம் வைக்க கூடாது என்று சாப்பிட்டுவிட அந்த அம்மா அவருக்கு கொட்டை பிடித்து இருக்கிறது என்று மீண்டும் கொண்டு வந்து போட இப்படியே தொடர்ந்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து சாது ஓட ஆரம்பித்து விட்டாராம்.
இந்த 'மாங்கொட்டை சாமியார்" கதை என்று எங்கள் வீடுகளில் குடும்பத்தினர்கள் எல்லாம் சாப்பிடும் நேரம் சொல்லி சிரிக்கும் கதை.
ஜோக் ஹா ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குசிரித்தேன் ஆனால் கூடவே என் மகனின் நினைவும் வந்தது
கீதா
ஸ்ரீராம் உங்க மகன் இருவருக்கும் பயிற்சி எடுத்துக்கச் சொல்லுங்க. கண்டிப்பா அது நல்லதாக இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் போது அதை விட்டுவிடக் கூடாது. குடும்பத்திற்குள்ளேயே சாம்பியன்கள் இருக்கும் போது அதுவும் அவர்கள் இவர்களுடன் தொடர்பில் இப்படி விளையாடும் போது...அந்த சான்ஸை விட்டுவிட வேண்டாமே...ஆர்வம் இருந்தால் இருவருமே கற்று தேர்ச்சி பெறலாம் ஸ்ரீராம். கற்பதற்கு வயது தடைய்யே இல்லை...
பதிலளிநீக்குஸ்ரீராம் நீங்கள் உங்கள் ரெண்டாமவர் பற்றிச் சொன்னது.......தலைமப் பண்பு என்பதை விட வெரி காஷியஸ்...ரொம்ப ஜாக்கிரதை உணர்வு உள்ளவர் போலத் தோன்றுது. தோன்றுகிறது. நீங்கள் விளையாட்டை வைத்துச் சொன்னதால் இந்தக் கணிப்பு. மற்றபடி கீழே உள்ளது பொதுவான கருத்து.
தலைமைப் பண்பு என்பது ஓவர் கமாண்டிங்காகக் கூடப் போகும். ஆனால் எதிரில் இருப்பவரின் மூவ் அறிந்து அல்லது டிஸ்கஸ் செய்து அவரது போக்கை அறிந்து முடிவு எடுப்பதும் சாதாரண விஷயம் அல்ல. எத்ரியாளியின் போக்கை ஆராயவும் மூளை வேண்டுமே....இதுவும் ஒரு டாக்டிஸ் தான்...இதை பாசிட்டிவாகவும் செய்யலாம்..
பெஸ்ட் எக்ஸாம்பிள் சகுனி..சகுனி நெகட்டிவ் காரெக்டராக இருக்கலாம் ஆனால் அதையும் நாம் பாஸிட்டிவாக ஆக்கலாமே.. ..(சகுனி படத்திலும் கூட கிட்டத்தட்ட இதைப் போன்றதுதான்...ஆனால் அதில் நல்லதாகச் சொல்லப்படும்....)
கீதா
நீர் சேமிப்பு செம. இதை முன்னரே வாசித்த நினைவு இருக்கு…இங்கு பாசிட்டிவ் செய்தியில் வந்ததோ.. இல்லை வேறு எங்கோ சட்டென்று நினைவுக்கு வரலை….ஆனால் மிக மிக நல்ல விஷயம். இப்போதேனும் மக்கள் விழித்துக் கொண்டு முன்னெடுத்தால் நல்லது.
பதிலளிநீக்குசினிமா பாடல்கள் தேடணுமா ஸ்ரீராம் இதெல்லாம்.....ஒரு சில கிடைத்துவிட்டதாகச் சொல்லியிருக்கீங்க…..
கீதா
குறட்டை பற்றிய செய்தித்தாள் தகவல்கள் செமை...முன்பே கூட இதைப் பற்றியும் எங்கேனும் குறிப்பிட்டிருக்கீங்களோ?!!!
பதிலளிநீக்குகீதா
பாடல்கள் கிடைத்தது.
பதிலளிநீக்குதேடினால் கிடைக்கும் எல்லாம்.
பள்ளி சிரிப்பு நன்றாக இருக்கிறது.
மழைநீர் சேமிப்பு இப்படி எல்லோரும் கடைபிடித்தால் நல்லது.
//"நான் முடிவு எடுக்க வேண்டாம் பாரு.. நீ மூவ் செய்வதை ஒட்டி நான் மூவ் செய்தால் போதும்" என்பான் என் மகன்.
பதிலளிநீக்குவிளையாட்டுதான் என்றாலும் மனோதத்துவரீதியாக இது கொஞ்சம் அவன் கேரக்டரைச் சொல்கிறதோ...! தலைமைப்பண்பு குறைவு என்று சொல்லலாமா? அல்லது ஜாக்கிரதையானவன் என்று சொல்லலாமா?//
விளையாட்டில் அது அவர் விருப்பம், அதை வைத்துக் கொண்டு நீங்கள் அவர் குணநலன்களை ஆய்வு செய்ய கூடாது.
விளையாட்டில் திறமை இருந்தால் ஊக்கப்படுத்துங்கள்.
சும்மா உபசாரம் செய்து செய்து போடணும்னு என்பதைப் புரிந்து கொண்டேன். அதுவும் வேண்டாம்னு சொல்பவர்களுக்கே முதலில் போடணும்னும் புரிந்து கொண்டேன். //
பதிலளிநீக்குஹையோ கீதாக்கா...உங்க வீட்டுக்கு வரும் போது நான் வேண்டாம்னு சொன்னா எனக்கு முதல்ல போட்டுடக் கூடாது இப்பவே சொல்லிப்புட்டேன். ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...நான் எல்லாம் சாப்பிடுவதில் கூச்சம் எல்லாம் பார்க்க மாட்டேன் அதுவும் இங்கு இப்படி நன்றாகப் பழகிய தோழமைகள் என்பதால் நோ கூச்சம்...
ஸ்ரீராம் வீட்டுலயும் சரி பானுக்காவீட்டுலயும் சரி ரொம்பச் சமர்த்து...
கீதாக்கா நான் சொல்ல நினைத்தவை எல்லாமே நீங்க சொல்லிட்டீங்க சாப்பாடு பரிமாறல் பத்தி...
கீதா
குறட்டை செய்து அருமை.
பதிலளிநீக்குகுளத்திலிருந்து மண் எடுத்து போட்டு விட்டு இறைவனை கும்பிடும் கோவில் பற்றி முக நூலில் பகிர்ந்து இருந்தேன். ஒரு கைபிடி மண் போட்டு மண்மலை உருவானதை. (வெள்ளிரிபட்டி கிட்ட கோவில் போய் இருந்தோம் அங்கு நடக்கும் வழிபாட்டு முறை.)
குறட்டைச் செய்தி என்று வாசிக்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்கு///வேண்டாம் என்பதற்கு வேண்டாம் என்றுதான் அர்த்தம்! அவர் படத்தில் சொல்லும் காரணம் வேறு என்றாலும். வேண்டாம் என்னும் வார்த்தைக்கு வேண்டாம் என்றுதான் அர்த்தம். போதும் என்றால் போதும்தான்! ஹிஹிஹி... புரியவில்லையா?///
பதிலளிநீக்குஹா ஹா ஹா எப்படித்தான் சொன்னாலும் சிலர் சொல்கிறார்கள் வேண்டாம் எனில் வேணும் என அர்த்தமாம் ஹா ஹா ஹா... அதாவது நாணத்தாலதான் வேண்டாம் என்பார்களாம் ஆனா கை நீளுமாம் வேணும் என...
இதில நிறைய சொல்ல வருகிறது ஸ்ரீராம். சிலர் உண்மையில தேவை எனினும் வெட்கப்பட்டு வேண்டாம் என்பினம் அவர்களுக்கு போஸ் பண்ணிக் குடுக்கோணும்.. அதுபொல சிலர் உண்மையிலயே வேண்டாம் என்பினம் அவர்களைப் போஸ் பண்ணக்கூடா..
இதில இருந்து என்ன தெரியுது? பரிமாறுவதிலும் ஒரு தெக்கினிக்கி இருக்கூஊஊஊஊ:)..
அதாவது ஒருவரின் வாய் வார்த்தையை மட்டும் நம்பக்கூடாது, பொடி லங்கேஜ் என ஒன்று இருக்குதெல்லோ அதைக் கண்டு பிடிச்சே பரிமாறோணும்.
ஆனா இங்கு வந்தபின் இப்போ பரிமாறுவதே நின்று விட்டது, வீட்டுக்கு ஒருவர் வந்தால்கூட, பரிமாறுவதில்லை, மேசையில் வைத்துப்போட்டு அவரவரும் போட்டுச் சாப்பிடுவதே வழக்கமாகிவிட்டது, அதேபொல வெளிநாட்டில் சாப்பாட்டு விசயத்தில் ஆரும் கூச்சப்படுவதில்லை, போதுமானவரை போட்டுச் சாப்பிடுவினம், அதுபோல சமைப்பதும் பொருத்தி சமைப்பதில்லை, தாராளமாக சமைத்து வைப்போம்,
சில வீடுகளில் விருந்துக்கு 10 பேரை கூப்பிடுவினம், ஆனா கறி என்னவோ பார்க்க 5 பேருக்குத்தான் போதும்போல இருக்கும், அப்போ போட்டுச் சாப்பிடவே மனம் வராது... இப்படியான பழக்கத்தோடும் நம்மவர்கள் இருக்கிறார்கள்.
இன்னொருவகையினர் இருக்கினம், தம் வீட்டில் மூக்கு முட்டச் சாப்பிடுவார்கள், ஆனா வெளி வீட்டுக்குப் போனால் ஒரு கரண்டி சோற்றுடன்.., போதும் போதும் போதும் நான் அதிகம் சாப்பிட மாட்டேன் என ஸ்டைல் பண்ணி சாப்பிடாமலே போய் விடுவார்கள்.
இந்த விசயத்தில் என் கணவர் எப்பவும் சொல்லுவார், நாம் ஒருவரை விருந்துக்கு கூப்பிட்டாலோ, இல்லை இன்னொருவர் வீட்டுக்குப் போனாலோ, தாராளமாக சாப்பிடோணும், நமக்காகத்தானே மினக்கெட்டு சமைத்து வைக்கிறார்கள்.. அப்போ சாப்பிடாமல் ஸ்டைல் பண்ணிவிட்டு வந்தால் அவர்களுக்கு கஸ்டமாக இருக்குமெல்லோ என.
அதுபோல நம் வீட்டுக்கு கூப்பிடும்போதும், ஏதும் சாப்பிட்டிடாமல் வாங்கோ எனச் சொல்லியே அழைப்போம், ஏனெனில் சில லூஸ் சனம் என்ன பண்ணுவார்கள் எனில், நாங்க மினக்கெட்டு விருந்துக்கு அழைத்து நிறைய ஐட்டம் பண்ணி வைத்துவிட்டுக் காத்திருக்க..
லேட்டாகவே வெளிக்கிட்டு வரும் வழியில பசித்தது ஒரு பிட்சா வாங்கி சாப்பிட்டு விட்டு வந்தோம் இப்போ பெரிசா சாப்பிட முடியல்ல என்போரும் இருக்கினம்.. எவ்ளோ கோபம் வரும் சொல்லுங்கோ...
வணக்கம் அதிரா சகோதரி. நீங்கள் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. நமக்காக கஸ்டபட்டு எல்லாம் தயார் செய்து வைக்கிறார்களே என நம்மை விருந்துக்கு அழைக்கும் வீட்டிற்கு நாம் பல்லில் சிறிது தண்ணீர் கூட காட்டாது (அதற்காக பல் தேய்க்காமலே செல்வீர்களா என்று யாரும் இடக்கு மடக்காக கேட்டு விடாதீர்கள். நான் சொல்வது உணவு கட்டுப்பாட்டை..) செல்வோம். ஆனால் யாரேனும் (சில பேர்) நம் வீட்டுக்கு விருந்தோம்ப வரும் போது, வரும் வழியில் அதை தின்றேன். இதை சாப்பிட்டேன்..நீங்கள் முதலில் சாப்பிடுங்களேன் என்று நமக்கே உபசாரம் செய்து அவர்களின் பிகுவை காண்பித்து கொள்வார்கள். நாம் அந்த சமயத்திலும் ஐயோ.. பாவம் அவர்கள் வந்த பின் சேர்ந்து சாப்பிடலாமென இப்போதும் நம் பல்லுக்கு தண்ணீர் காட்டாமல் இருப்போமோ... உள்ளுக்குள் எழும் கோபத்தில் பற்கள் கடிக்க கூட மறுத்து விடும். அவஸ்தைதான். ஏன்னா நாம் அவ்வளவு நல்லவர்கள்... ஹா ஹா ஹா ஹா நீங்கள் நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி
நீக்குநன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹா ஹா ஹா ரொம்ப வெயிக்கமா வருது என் கொமெண்ட் பார்த்து:) இருப்பினும் பூஸோ கொக்கோ விடமாட்டேன்ன் “அடாது திட்டு வாங்கினாலும் விடாது கொமெண்ட்ஸ் போடுவேன்”:).
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=L4je2f4neNs - எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=he8VvGQr2ZE காவிரியே காவிரியே – படம் அரச்சனைப் பூக்கள். எஸ்பிபி அண்ட் ஜானகி. ம்யூஸிக் இளையராஜா. லிரிக்ஸ் கங்கை அமரன்
இந்த ரெண்டும் உங்களுக்கும் கிடைச்சுருக்கும்னு நினைக்கிறேன் ஸ்ரீராம்....
கீதா
எங்கள் மாமி இருக்கிறா[கணவரின் அம்மா] அவவிடம் ஆருமே தப்ப முடியாது எப்படித்தான் வேண்டாம் என மறுத்தாலும் பிளீசடா பிளீசடா கொஞ்சமா சாப்பிடுங்கோ எனப் போடுவா, நம் இருவரிலும் ஒரு குணம் ஆராவது இப்படி கெஞ்சினால் மறுப்பு சொல்லாமலும், போட்டதைக் கொட்டிடாமலும் மிகவும் கஸ்டப்பட்டு சாப்பிட்டு முடிப்போம் அந்த அன்புக்காகவே.. இதே குணம் எங்கள் மூத்தவரில் இருக்கு, ஆனா சின்னன் வெள்ளையர்கள்போல நோ எண்டால் நோத்தான்.. ஹா ஹா ஹா கர்:).
பதிலளிநீக்குஆனா இங்கு வந்தபின் இப்போ பரிமாறுவதே நின்று விட்டது, வீட்டுக்கு ஒருவர் வந்தால்கூட, பரிமாறுவதில்லை, மேசையில் வைத்துப்போட்டு அவரவரும் போட்டுச் சாப்பிடுவதே வழக்கமாகிவிட்டது, அதேபொல வெளிநாட்டில் சாப்பாட்டு விசயத்தில் ஆரும் கூச்சப்படுவதில்லை, போதுமானவரை போட்டுச் சாப்பிடுவினம், அதுபோல சமைப்பதும் பொருத்தி சமைப்பதில்லை, தாராளமாக சமைத்து வைப்போம், //
பதிலளிநீக்குயெஸ் யெஸ் அதிரா. அவங்க எல்லாம் செல்ஃப் செர்விங்க் தான் ப்ரியப்படுவார்கள்...
நாமே போட்டுச் சாப்பிடுவது கூட நல்லாருக்கும்னு தோனும் எனக்கு...இப்பவும் எங்க வீட்டுல ரொம்பப் பெரியவர்களுக்கு மட்டும் தான் செர்விங்க். மத்தவங்க எல்லாம் செல்ஃப் செர்விங்க் தான்.
சில வீடுகளில் விருந்துக்கு 10 பேரை கூப்பிடுவினம், ஆனா கறி என்னவோ பார்க்க 5 பேருக்குத்தான் போதும்போல இருக்கும், அப்போ போட்டுச் சாப்பிடவே மனம் வராது... இப்படியான பழக்கத்தோடும் நம்மவர்கள் இருக்கிறார்கள்.//
அதே அதே...நமக்கு ரொம்பவே கஷ்டமாகிவிடும்....வெயிட் செய்து வெயிட் செய்து சாப்பிடனும் எல்லோரும் சாப்பிடணுமே என்று...
கீதா
//என்னவோ போங்க.. ஏதோ சொல்லணும்னு தோணிச்சு...! //
பதிலளிநீக்குஹா ஹா ஹா எனக்கும் இப்படித்தான் நிறைய சொல்லோணும்போல மனதில் தோன்றும் ஆனா என்ன சொன்னோம் என்ன சொல்கிறோம் எனப் புரியாமல் பாதியில் முழிப்பேன் ஹா ஹா ஹா..
ரீச்சர்: ஏண்டா லேட்ட்டு?
மாணவன்: சைக்கிள் பஞ்சர் சார்
ரீ: அப்போ பஸ்ல வர வேண்டியதுதானே?
மா: பஸ் வாங்குமளவுக்கு வீட்டில வசதி இல்ல சார்:)
ஹா ஹா ஹா.
அதுபோல நம் வீட்டுக்கு கூப்பிடும்போதும், ஏதும் சாப்பிட்டிடாமல் வாங்கோ எனச் சொல்லியே அழைப்போம், ஏனெனில் சில லூஸ் சனம் என்ன பண்ணுவார்கள் எனில், நாங்க மினக்கெட்டு விருந்துக்கு அழைத்து நிறைய ஐட்டம் பண்ணி வைத்துவிட்டுக் காத்திருக்க..
பதிலளிநீக்குலேட்டாகவே வெளிக்கிட்டு வரும் வழியில பசித்தது ஒரு பிட்சா வாங்கி சாப்பிட்டு விட்டு வந்தோம் இப்போ பெரிசா சாப்பிட முடியல்ல என்போரும் இருக்கினம்.. எவ்ளோ கோபம் வரும் சொல்லுங்கோ...//
அதிரா எனக்கும் இந்த அனுபவம் உண்டு. என்ன செய்ய முடியும். எல்லாம் ஃப்ரிட்ஜுக்குள் போகும் மறுநாள் சமைக்காமல் அதே தான் மெனு...எல்லாவற்றையும் கொட்டவா முடியும்?
கீதா
//என் பாஸின் அத்தையின் பேரன்கள் இருவர் மாநில அளவில் சதுரங்க சேம்பியன்கள். //
பதிலளிநீக்குஓ வாவ்வ்வ்வ்வ் எனக்கு இந்த கை விளையாட்டுக்கள் நிறைய விளையாடுவேன் ஆனா இந்த கிங் குயின் விளையாட்ட்ர்[செஸ்] மட்டும் வரவே வராதாம் கர்ர்:)).
///"நான் முடிவு எடுக்க வேண்டாம் பாரு.. நீ மூவ் செய்வதை ஒட்டி நான் மூவ் செய்தால் போதும்" என்பான் என் மகன்.
விளையாட்டுதான் என்றாலும் மனோதத்துவரீதியாக இது கொஞ்சம் அவன் கேரக்டரைச் சொல்கிறதோ...! தலைமைப்பண்பு குறைவு என்று சொல்லலாமா? அல்லது ஜாக்கிரதையானவன் என்று சொல்லலாமா?///
என்னைப்பொறுத்து பிள்ளைகளில் ஒரு குணம் இருக்கு, தம் மனதில் ஒவ்வொரு விசயத்துக்கும் ஒவ்வொருவரை ரோல் மொடலாக்கி வைத்திருப்பர் மனதில், அப்போ அவர்களைப்பொறுத்து அந்த ரோல்மொடல் என்ன செய்தாலும் சரியாகவே இருக்கும் எனும் ஒரு நம்பிக்கை.. அந்த நம்பிக்கையாலேயே அந்த அத்தையின் மகன் எது செஞ்சாலும் தப்பாகிடாது என நம்புகிறார் அவ்வளவே.
சில பிள்ளைகள் மதுவுக்கு.. ரக்ஸ் க்கு அடிமையாவதும் இப்படி சில ரோல்மொடல்களை நம்பி, அவர்கள் செய்வது சரியென தானும் அதனை செய்ய முற்படுவதாலதானே..
//இதில் சில பாடல்கள் அப்புறம் கிடைத்தன..//
பதிலளிநீக்குஇந்த லிஸ்ட்டில் கிடைக்காத பாடல்கள் ஏதும் இருப்பின் சொல்லுங்கோ... நாங்கள் வெள்ளெலிகள்.. ஓடி ஓடித்தேடிக் கண்டு பிடிச்சிடுவோம்:)) இப்போ கீதா ஆரம்பிச்சுட்டா:) ஹா ஹா ஹா..
//2014 இல் முகநூலில் பகிர்ந்தது... 2020 இல் சென்னையில் நிலத்தடி நீரே இருக்காது என்று செய்தி படித்தேன். அப்படி ஆனால் அதற்கு நாமேதான் காரணம்.//
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சனிக்கிழமை போட வேண்டியதை இன்று அசைவத்தில் இணைச்சிட்டார்:))
கோயம்புத்தூரோ/தஞ்சாவுரோ எங்கயோ ஒரு திருமணத்துக்கு 2 வருடமாக மழைநீர் சேகரித்து அதிலயே சமையல், குடித்தல் என நடத்தி முடித்தார்களாம்.
ஹா ஹா ஹா என் படத்தை தூகி வந்து இங்கு போட்டு “அதிரா உபயம்” எனப் போட்டிருக்கலாமே குறட்டைக்கு, இங்கு போட்டால் அது இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் .. மிகுதிக்கு பின்பு வருகிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல பயனுள்ள கதம்பம். ஒவ்வொரு செய்திகளும் சுவையாய் இருந்தன.
சிலர் போதும், போதும் என சொல்லச் சொல்ல வறுப்புறுத்தி சாப்பாடு பறிமாறு வார்கள். ஹி ஹி நானும் கொஞ்சம் அந்த ரகம்தான். அன்புத் தொல்லை தாங்க முடியலயே என கூறிக்கொண்டே சாப்பிடுவார்கள். எனக்கென்ன்னா, அவர்கள் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்வது போல் பூதஞ்சி (நாங்களும் அப்படித்தான் குறிப்பிடுவோம்.) ரகமாக இருந்து விட்டால், பிறகு "உங்கள் வீட்டுக்கு வந்தால் அளவாகத்தான் கிடைக்கிறது" என்று சொல்லி விட்டால் என்ன செய்வது எனற பயந்தான். பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா.. நானும் சின்ன வயதிலெல்லாம் கேட்டு வாங்கி சாப்பிட கூச்சப்படுகிற சுபாவம். இப்போது பரவாயில்லை. கொடுத்ததை வேஸ்ட் பண்ணாமல் சாப்பிட்டு விடுவேன்.
பிறகு வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலா சொல்லுவதைப் பார்த்தால் என்னோட ஓர் உறவினர் செய்வது நினைவில் வருது! அவர் கிட்டே நீங்க உண்மையாகவே ஏதேனும் குறிப்பிட்ட உணவு பிடிச்சுக்கொடுங்கனு கேட்டால் உடனே கொடுத்துட மாட்டார். போதுமோ போதாதோ என்கிறாப்போல் அரை மனசாக் கொடுப்பார்! அதே நம்ம பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு உண்மையாவே வேண்டாம்னு சொல்றவருக்கு உபசாரம் பண்ணிப் பண்ணிப் போடுவார்! எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது! நாம வேணும்னு சொன்னால் இவங்க கிட்டே எதுவும் கிடைக்காதுனு! அதுக்கப்புறமா வேண்டாம்னே சொல்லிடுவேன். உபசாரம் தாங்காது! :)))))))
பதிலளிநீக்குமழை நீர் சேகரிப்பு நன்று பாராட்டுகள்
பதிலளிநீக்குவாங்க கில்லர்ஜி.. அந்த அம்மை யார் என்று தெரியவில்லையா ஜி?!!
பதிலளிநீக்குகீதாக்கா.. எனக்குமே கேட்டால் மட்டும் போட்டால் போதும் என்றுதான் சொல்லி இருக்கிறேன்! சில திருமணங்களில் இதனால் நீங்கள் சொன்னது போல பிரச்னையும் வந்திருக்கிறது.
பதிலளிநீக்குஆனால் புளிக்கப் புளிக்கப் பரிமாறுவது... எனக்கு என்னவோ அது ஒத்துவராது!
கீதாக்கா.. நான் குறட்டை விடுகிறேன் என்று எனக்கே தெரியும். சிலசமயங்களில் முதல் குறட்டையை எனக்கே விழிப்பு வந்துவிடும்!!!
கீதா அக்கா..
பதிலளிநீக்கு//இதை பூதஞ்சி என்பார்கள். அநேகமா எல்லோருமே இப்படித் தான்//
புதிய சொற்ப்ரயோகம்!
கீதாக்கா.. இனிமேல் இவர்கள் செஸ்ஸும் கிரிக்கெட்டும் இன்னொன்றும் விளையாடக் கற்றுக்கொண்டு சேம்பியன் ஆகப்போகிறார்களாக்கும்! ம்ம்ம்...
பதிலளிநீக்குசிம்ரனுக்கு மாறலை. அனுஷ் ப்பவுமே அனுஷ்தான்! முன்பெல்லாம் வடிவேலு, எம் ஜி ஆர், நாகேஷ் என்று எல்லோருமே இடம் பெற்றிருக்கிறார்களே.. அது போலதான்!
/மழைநீர் சேகரிப்புப் பத்தி முகநூலில் படிச்சேனோ? //
பதிலளிநீக்குஆமாம். முன்னாடி முகநூலில் பகிர்ந்ததுதான். நீங்களும் கருத்து சொல்லி இருந்தீங்க...
சினிமாப் பாட்டு ஒன்றிரண்டைத் தவிர மீதி எல்லாமே கிடைத்து விட்டது கீதாக்கா!
வாங்க ஏகாந்தன் ஸார்..
பதிலளிநீக்கு//ஸ்ரீராம், கார்த்திக் சுப்புராஜ் உங்க வீட்டுக்குப் பக்கத்துவீட்டுக்காரரா?/
இந்தக் கேள்வி புரியவில்லை!
கீதா..
பதிலளிநீக்கு//அவர்கள் எடுக்கும் அளவைப் பார்த்தால் பயமா இருக்கும் குறிப்பா சாதம்....அப்போ தோணும் பஃபே பெட்டரோனு..../
நோ.. நோ.. அதெல்லாம் பார்த்து கண் வைக்கக் கூடாது! ஹா... ஹா... ஹா...
//நாம் சில சமயம் கேட்டு வாங்கணுமோ என்று தோன்றும் அப்புறம் வேண்டாம் என்று விட்டுவிடுதலும் உண்டு...//
பதிலளிநீக்குஅப்புறம் மெயின் அயிட்டம் சாப்பிட முடியாமல் போகும்!!
//இன்று பதிவு செமையா நிறைய கருத்துகள் சொல்ல இருக்கு..//
நன்றி கீதா.
வாங்க வல்லிம்மா.. உங்க ஜிமெயிலை மீட்டெடுத்தும் பழைய பெயரில் வரவில்லையே.. சிங்கமும் குறட்டையா? ஆனால் ன் பாஸ் என்னை இதற்கெல்லாம் கோபித்துக் கொண்டதில்லையாக்கும்!
பதிலளிநீக்குவாங்க வெங்கட்.. மாலை வணக்கம். வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குகீதா..
பதிலளிநீக்கு//ஸ்வீட் கொஞ்சம் பயமுறுத்தும்...ஹா ஹா ஹா //
நான் விடுவதில்லையாக்கும்!
ஏகாந்தன் ஸார்.. பாடல்களிலேயே இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா.. பரிமாறுவதைப் பற்றி 'விளம்பி' விடலாமே!
பதிலளிநீக்கு//இன்னிக்கு என்ன எனக்கும் கீதா அக்காவுக்கும் ரொம்பவே ஒத்துப் போகிறது?//
இந்த நாள் நல்ல நாளோ... ஹரிகேசநல்லூர் என்ன சொன்னார் என்று கேட்டீர்களா?!!
//இன்று நகரில் முளைக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் மழை நீரை முறையாக சேமித்தால் தண்ணீர் பற்றாக்குறை வராது.//
ஆயிரக்கணக்கில் இருக்கும் அமர்ப்பிரகாஷ் போன்ற அபார்ட்மெண்ட்களைப் பார்க்கும்போது எனக்கும் தோன்றும். இவர்களுக்கெல்லாம் எப்படி த்ண்ணீர்க் கஷ்டம் இல்லாமல் சமாளிக்கிறார்கள் என்று... மநீ சே செய்கிறார்களா என்று தெரியவில்லை.
பானு அக்கா...
பதிலளிநீக்கு//அடுத்த வாரம் ஸ்ரீதேவியா? ஜெயப்ரதாவா?//
இது நேயர் விருப்பமா?!!
//இல்லை,வைஜயந்தி மாலா இல்லைனா அவங்க அம்மா வசுந்தரா தேவி இல்லைனா காஞ்சனமாலா!//
பதிலளிநீக்குஇது உங்கள் விருப்பமா கீதா அக்கா?
வாங்க கோமதி அக்கா...
பதிலளிநீக்குபரிமாறுவதை பற்றி வேறொரு கோணத்தில் இன்னொரு தனிப் பதிவே போடலாம் போல...
'மாங்கொட்டை சாமியார்" கதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்குப் பிடிக்காததை முதலில் காலி செய்து மறுபடி மறுபடி பரிமாறப்பட்டபோது இதுதான் எனக்கும் நினைவுக்குவ வந்தது.
கீதா.. மகன் இனிமேல் எங்கு பயிற்சி எடுக்க எல்லாம் போகப்போகிறான்? அவர்களை பாட்டு க்ளாஸ் அனுப்பவேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தது. நிறைவேறவில்லை.
பதிலளிநீக்கு//நீர் சேமிப்பு செம. இதை முன்னரே வாசித்த நினைவு இருக்கு…இங்கு பாசிட்டிவ் செய்தியில் வந்ததோ..//
நான்கு வருடங்களுக்கு முன் முக நூலில் பகிர்ந்து. பாசிட்டிவில் பகிர்ந்திருக்க வாய்ப்பிருக்கு.
//குறட்டை.. முன்பே கூட இதைப் பற்றியும் எங்கேனும் குறிப்பிட்டிருக்கீங்களோ?!!! //
பதிலளிநீக்குஇல்லை கீதா... இதுவும் முக நூலில்தான்!
பாடல்கள் கிடைத்தது. தேடினால் கிடைக்கும் எல்லாம். நன்றி கோமதி அக்கா. விளையாட்டு பற்றியும் மகன் பற்றியும் நீங்கள் சொல்லி இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
பதிலளிநீக்கு//ஒரு கைபிடி மண் போட்டு மண்மலை உருவானதை. (வெள்ளிரிபட்டி கிட்ட கோவில் போய் இருந்தோம் அங்கு நடக்கும் வழிபாட்டு முறை.)//
அறிந்து கொண்டேன்.
கீதா...
பதிலளிநீக்கு//ஸ்ரீராம் வீட்டுலயும் சரி பானுக்காவீட்டுலயும் சரி ரொம்பச் சமர்த்து...//
தன்யர்களானானோம்!!
வாங்க அதிரா...
பதிலளிநீக்குஉங்கள் அனுபவங்களை சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் ஆத்துக்காரருக்கும் உங்களைப்போலவே நல்ல மனசு என்று தெரிகிறது. ஆனாலும் வேண்டாம் வேண்டாம் என்பவர்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும். நிறுத்தி விடுவதுதான் நமக்கும் நல்லது!
கீதா.. இந்தப் பாடல்கள் எல்லாம் கிடைத்து விட்டதுவே...!
பதிலளிநீக்குஅதிரா.. உங்க மாமி அன்பான குணம் பற்றி படித்ததும் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாய் எழுதத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குமேசையில் எடுத்துக் போட்டு சாப்பிடுவது நிறைய இடங்களில் வழக்கமாகி விட்டது. ஆனாலும் இப்பவும் எங்கள் வீட்டில் நாங்கள் சேர்ந்தமர்ந்து, பாஸ் பரிமாற, நாங்கள் சாப்பிடுவதே வழக்கமாக இருக்கிறது.
சொந்த பஸ் வாங்குவது ஜோக் போல வேறொன்று சொல்வோம் நாங்கள்...
பதிலளிநீக்கு"உங்க சொந்த ஊர் எது?"
சொந்தமாக ஊர் வாங்குமளவு வசதி இல்லை ஸார்.."
பிள்ளைகள் கிரிக்கெட்டில், கால் பந்து விளையாட்டில் நிறைய ரசிப்பார்கள். ஆனால் ரோல்மாடல் என்று வைத்துக்கொள்வதில்லை - எங்க வீட்டில்.
அதிரா..
பதிலளிநீக்கு//இந்த லிஸ்ட்டில் கிடைக்காத பாடல்கள் ஏதும் இருப்பின் சொல்லுங்கோ... நாங்கள் வெள்ளெலிகள்.. //
அந்த "மேகங்களே... பாடுங்களே.. பாடலைத் தேடி எடுத்துக் கொடுங்கள். அப்படியே 'அம்ப லலிதே' பாடல்.. அப்புறம் அந்த அருளே மானிட வடிவாகி பாடல்.
//ஹா ஹா ஹா என் படத்தை தூகி வந்து இங்கு போட்டு “அதிரா உபயம்” எனப் போட்டிருக்கலாமே //
அதிரா..
பதிலளிநீக்கு//இந்த லிஸ்ட்டில் கிடைக்காத பாடல்கள் ஏதும் இருப்பின் சொல்லுங்கோ... நாங்கள் வெள்ளெலிகள்.. //
அந்த "மேகங்களே... பாடுங்களே.. பாடலைத் தேடி எடுத்துக் கொடுங்கள். அப்படியே 'அம்ப லலிதே' பாடல்.. அப்புறம் அந்த அருளே மானிட வடிவாகி பாடல்.
//ஹா ஹா ஹா என் படத்தை தூகி வந்து இங்கு போட்டு “அதிரா உபயம்” எனப் போட்டிருக்கலாமே //
லாமோ?!!
வாங்க கமலா ஹரிஹரன்.. நீங்கள் அப்படித்தானா? ஹா.. ஹா.. ஹா.. உங்க வீட்டுக்கு வந்தால் ஜாக்கிரதையா இருக்கணும் போல.. ஆரம்பிக்கும் முன்னரே போதும்னு சொல்லிட்டா அளவா கிடைக்கும் போல!!
பதிலளிநீக்குநன்றி அசோகன் குப்புசாமி ஸார்.
பதிலளிநீக்குகீதாக்கா..
பதிலளிநீக்கு// எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது! நாம வேணும்னு சொன்னால் இவங்க கிட்டே எதுவும் கிடைக்காதுனு! அதுக்கப்புறமா வேண்டாம்னே சொல்லிடுவேன். உபசாரம் தாங்காது! :))))))) //
ஹா... ஹா.. ஹா.. தக்கினிக்கி புரிந்து விட்டது உங்களுக்கு!
என்னவோ போங்க.. ஏதோ சொல்லணும்னு தோணிச்சு...! //
பதிலளிநீக்குசேம் feelings :)
ஒருமுறை உறவினர் வீட்டில் போனதும் கேக் வகையறாக்கள் வரிசையா வந்தது நானா ஒவ்வொன்றா தவிர்க்க :)
இதையாவது சாப்டணும்னு சொல்லி ஒரு கிண்ணத்தில் வறுத்த கடலை peas ரெண்டு டீ ஸ்பூன்தான் சாப்பிட்டேன் :(
ஒருவாரம் அவதி .நிறையபேர் நாம் வேண்டாம் என்பதையே புரிஞ்சிக்கலை போதும் என்பதையா புரிஞ்சிக்குவாங்க :)
// ஆனால் யாரேனும் (சில பேர்) நம் வீட்டுக்கு விருந்தோம்ப வரும் போது, வரும் வழியில் அதை தின்றேன். இதை சாப்பிட்டேன்..நீங்கள் முதலில் சாப்பிடுங்களேன் என்று நமக்கே உபசாரம் செய்து//
பதிலளிநீக்குஎங்களுக்கு இந்த அனுபவம் இருந்திருக்கிறது கமலா சிஸ்டர்...
வாங்க ஏஞ்சல்.. கேக் என்றதும் நினைவுக்கு வருகிறது. பிறந்த நாளுக்கு கேக் வெட்டும் வழக்கம் எல்லாம் எங்களுக்கு மிகச் சமீபத்தில் வந்த பழக்கம். அது மாதிரி இடங்களுக்குச் செல்லும்போது நிறைய கேக் கொடுத்து சாப்பிட வைத்து விடுவார்கள். (எனக்கு கேக் வேற பிடிக்காது!) அப்புறம் காத்திருக்கும் ஐட்டங்களை எல்லாம் அப்பறம் எப்படிச் சாப்பிடுவது?!!!
பதிலளிநீக்குமழை நீர் சேகரிப்பு அத்யாவசியமானது ஏற்கனவே முகப்புத்தகத்தில் வாசித்த நினைவு ஆனாலும் மீண்டும் படிப்பதில் தவறில்லை :)
பதிலளிநீக்குஇங்கே ப்ரிட்டிஷ்காரங்க இந்த மழைநீரை சேமித்து அதில் குளிப்பாங்க அது மிகவும் சுத்தமான நீர் என்பதால்
குறட்டை தான் இன்றைய தலைப்புச்செய்தி :)
பதிலளிநீக்குமது சிகரெட்டலாம் இல்லாத எங்கப்பாவும் அவர் மருமகனும் குறட்டைக்கே பேடண்ட் வாங்கினவங்க :) அதிலும் கணவர் நம்பவே மாட்டார் எங்க மகள் வீடியோ எடுத்து காட்டுவா :)
https://www.youtube.com/watch?v=LWWPzIu_5Rc
பதிலளிநீக்குபாட்டெல்லாம் கண்டுபிடிச்சாச்சா :) இந்தாங்க சுஹாசினி மா தெலுகு தல்லிகி
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார் பரிமாறும் முன்பே போதும் என்பார் ஆனால் நன்கு உபசரிது பரிமாறினால் நிறையவே உண்பார் குறட்டை பற்றிநான் எழுதி இருக்கிறேன் மற்றவர்களுக்கு தொந்தரவு தரும் குறட்டை ஒலியை முற்றிலும் நீக்க முடியும் என்மச்சினன் ஒரு கருவி வாங்கி இருக்கிறான் தூங்கப் போகும் போதுஅணிந்தால் நோ ப்ராப்லம் யாருக்கு ம் ஆனால் என்ன கிஞ்சம் செலவு அதிகமென்று தோன்றுகிறது
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநான் சொல்ல வந்தது அப்படியல்ல.. போதும்.. வயிறு ரொம்ப விட்டது என்பவர்களையும் நான் வறுப்புறுத்தி சாப்பிட வைப்பேன். ஒரு ஐந்து பேர் அன்றைய தினத்தில் சாப்பாட்டுக்கு வருகிறார்கள் என்றால், நான் பத்து பேருக்கு சமைத்து விடுவேன். என் கை பெரியது என எங்கள் வீட்டில் மாமியார் மச்சினர் அனைவரும் கூறுவார்கள் என் கணவர் வருகிறவர்களுக்கு கொஞ்சமாக பரிமாறாதே.. நிறைய செய்து தாராளமாக பரிமாறு என்று சொல்லிக்கொண்டே இருப்பார். உணவு பஞ்சமே இருக்காது. அதுபோல் தினசரியே நான் செய்யும் உணவு (காலையோ, இரவோ) ஏதேனும் ஒன்று மிகுந்து விடும். அளவாக பண்ணத் தெரியாது. அதனால் அளவாக பரிமாறவும் கை வராது என்றேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்கள் மகன் செஸ் விளையாட்டில் பிரபலமாக வர வாழ்த்துக்கள். அவர்களுக்கு எது விருப்பமோ அதில் முனைப்பாக ஈடுபடும் போது சிறப்பான முறையில் வர சந்தர்பம் கிடைக்கும்.
மழை நீர் சேகரிப்பு மிகவும் அவசியம் என்றவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. நம் முன்னோர்கள் நம் நல்லவைக்காக எத்தனையோ நல்ல விஷயங்களை கூறியுள்ளார்கள். ஆனால் நாம்தான் அதை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்து விட்டோம். நிலத்தடி நீர் எவ்வளவு முக்கியமானது என இப்போதுதான் உணர ஆரம்பித் திருக்கிறோம்.
பாடல்கள் தங்களுக்கு அகப்படாமல் ஓடி ஒழிய முடியுமா? பாடல்கள் தேடி தேர்வு செய்வதில் தாங்கள் வல்லவராயிற்றே..
குறட்டை சங்கீதம் இல்லாமல் எனக்கு உறக்கமே வராது என என் உறவுகள் சில பேர் சொல்லியுள்ளார்கள். நாமும் சில சமயங்களில் குறட்டை விடுகிறோம் என பிறர் சொல்லும் போது சற்று வெட்கமாக மறுத்தாலும், நல்ல தூக்கத்தில் சில சமயம் அவைகளே நம்மை எழுப்பி ஊர்ஜிதபடுத்தும்.
அதை நிறுத்த பயனுள்ள வழிமுறைகள் சொல்லியிருப்பது மிக அருமை.
கதம்பம் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//..இந்தக் கேள்வி புரியவில்லை!//
பதிலளிநீக்குஅவர்தானே இப்போது ஸிம்மைத் தன் புது ப்ராஜெக்ட்டிற்காக வளைத்துப்போட்டிருக்கிறார்..!
ஸ்ரீராம் இந்த லிஸ்ட்ல அந்த முதல் பாடலும், அந்த தெலுங்கு பாடலும் கிடைக்கலையோ...நான் தேடிய போது இந்த இரண்டும் கிடைக்கலை சரியா...தெலுங்கு கிடைச்சுது ஆனா வால்யூம் செம லோ....
பதிலளிநீக்குசிலது வேற என்னவெல்லாமோ டவுன்லோட் பண்ணச் சொல்லுது...
கீதா
ஏஞ்சல் நீங்க கொடுத்திருக்கும் அதே லிங்க் தான் வால்யூம் ரொம்பக் கம்மியா இருக்குதே...அதான் நான் சொல்லலை ஒரு வேளை உங்களுக்கு அங்க நல்லாருக்கா வால்யூம்?
பதிலளிநீக்குகீதா
@ கீதா ..எனக்கு வால்யூம் நல்லா கேக்குதே .யூ ட்யூப் லிங்கிலும் சவுண்ட் இன்க்ரீஸ் பண்ணுங்க
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு.
பதிலளிநீக்குபரிமாறும் போது அளவோடு முகமறிந்து வைப்பதே சிறப்பு.
மழைநீர் சேகரிப்பு அத்தியாவசிமாகி வருகிறது.
உணவு பரிமாறும் பழக்கம் பற்றி நல்ல பதிவு. எனக்குப் பொதுவாகவே கூச்சம் கிடையாது. ரொம்பவும் வற்புறுத்தினால் அன்புடன் வற்புறுத்தும் போது தவிர்க்க முடியாமல் சாப்பிட்டுவிடுவேன். எங்கள் வீட்டில் என் அக்காதான் பெரும்பாலும் எல்லோருக்கும் தட்டில் அவரவர்க்கு சாப்பாடு வைத்துக் கொடுத்துவிடுவார்கள். அதன் பின் ஏதேனும் வேண்டும் என்றால் சென்றால் அக்கா பரிமாறுவார்.
பதிலளிநீக்குநீர் சேகரிப்பு இப்போது கேரளத்திலும் சொலல்த் தொடங்கிவிட்டார்கள் சேவ் வாட்டர் என்று. திருவனந்தபுரத்தில் ஃப்ளாஷ் போர்ட் இருக்கிறது சில சிக்னல்களில் குறிப்பாக ஜூ இருக்கும் இட சிக்னலில். நீர்வளம் இருந்தாலும் மிகவும் தேவையான ஒன்று.
உங்கள் மனைவியின் அத்தையின் பேரன்கள் செஸ் விளையாட்டில் திறன்படைத்தவர்களாக இருப்பதற்கு வாழ்த்துகள்! (கீதா: நான் இதைக் காலையில் சொல்ல விட்டு போய்விட்டது ஸ்ரீராம். நான் உங்க மகன்கள் ப்ராக்டிஸ் செய்யலாம் என்ற கருத்தில் போய்விட்டேன். அவர்களுக்கு என் வாழ்த்துகளும்! செம திறமை. மூளை இல்லைஅய...)
குறட்டை நானும் விடுவதுண்டு என்று வீட்டில் சொல்லப்படுவதுண்டு ஆனால் எப்போதேனும். எல்லா சமயங்களிலும் இல்லை. இருந்தாலும் வீட்டில் இதுவரை கம்ப்ளெயின்ட் இல்லை. யாரும் எதுவும் சொன்னதில்லை. குறட்டை பற்றிய செய்திகள் எல்லாம் மிகவும் பயனுள்ளவை. நன்றி ஸ்ரீராம்ஜி.
ஜோக் ரசித்தேன்
இந்த வாரம் அனைத்தும் அருமையாக இருந்தது ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
@ கீதா ..எனக்கு வால்யூம் நல்லா கேக்குதே .யூ ட்யூப் லிங்கிலும் சவுண்ட் இன்க்ரீஸ் பண்ணுங்க//
பதிலளிநீக்குஏஞ்சல் எஸ் ஆமா யுட்யூப் லிங்கிலும் சவுன்ட் இன்க்ரீஸ் பண்ணிப் பார்த்தாச்சு. கம்ப்யூட்டரிலும் 100% வால்யும்ம் இருக்கு. ஒரு வேளை எனக்குத்தான் கேட்கலையோ என்று என் கசினுக்கும் லிங்க் வாட்சப்பில் அனுப்பி அவளைக் கேட்கச் சொன்னேன். வால்யூம் பற்றி எதுவும் சொல்லாமல். அவள் உடனே மெஸெஜ் கொடுத்தாள் வால்யூம் ரொம்ப கம்மியா இருக்கு கேட்பது சிரமமா இருக்கு என்று....
https://www.youtube.com/watch?v=tmykY7v5h4c இந்த லிங்க் அதை விட பெட்டரா இருக்கற மாதிரி தோணிச்சு இங்கு...
கீதா
ok geetha :)
பதிலளிநீக்குஏஞ்சல்..
பதிலளிநீக்குஇங்கு வரும் பின்னூட்டங்களிலிருந்து ஒரே ஒரு ஆறுதல். எல்லோருக்கும் குறட்டைப் பிரச்னை இருக்கிறது. நான் மட்டும் தனி இல்லை! ஹா... ஹா... ஹா...!
சுஹாசினி யூ டியூப் விடியோவுக்கு நன்றி.
எங்கே என் "மேகங்களே பாடுங்களே.." பாடல்?!!!
:)))
வாங்க ஜி எம் பி ஸார்.. நீங்கள் எழுதி இருந்த குறட்டை மெஷின் பதிவு படித்த நினைவு இருக்கிறது.
பதிலளிநீக்குவாங்க கமலா சிஸ்டர்... எனக்கு ஒன்று விட்ட சகோதரர் ஒருவர் உண்டு. சுகுமார் என்று பெயர். அவர் கையும் ரொம்ப தாராளம். காலையே அவர் நினைவு வந்தது. அவரைப்பற்றி முன்னர் இந்த தளத்தில் எழுதி இருந்தேன்.
பதிலளிநீக்குமகன் செஸ் விளையாடுவான். அவ்வளவுதான். பிரபலம் ஆக எல்லாம் வாய்ப்பில்லை! அவ்வளவு பாடல்கள் தேடுவதால்தான் சில குறிப்பிட்ட பாடல்கள் கிடைக்காதபோது ஏமாற்றமாகிறது.
குறட்டை சங்கீதம்... ஹா... ஹா... ஹா...
ஏகாந்தன் ஸார்... கா சு சிம்ரனை மீண்டும் அழைத்திருப்பது நான் அறியாத தகவல்!
பதிலளிநீக்குகீதா... நான் வாட்ஸாப்பில் சொல்லி இருக்கும் பாடல் கிடைக்கிறதா பாருங்கள்!!!
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குவாங்க துளஸிஜி..
பதிலளிநீக்குஇருக்கும் உணவை வீட்டிலுள்ள டிக்கெட்டுகளுக்குத் தக்கவாறு பிரித்து வைத்தல் சௌகரியமான ஒன்று. பங்கு அதிகமாகாது! கத்தரிக்காய் எனக்கு மட்டும்தான் பிடிக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள். செய்வது (நான் மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டபிறகு) எல்லாம் என் தட்டிலேயே விழும்!
தண்ணீர் இந்திய அளவிலேயே காப்பாற்றப்பட வேண்டிய அளவில்தான் இருக்கிறது.
// இந்த வாரம் அனைத்தும் அருமையாக இருந்தது ஸ்ரீராம்ஜி//
நன்றி ஜி.
குறட்டை பற்றி எழுதி இருக்கிறேன் குறட்டை மெஷின் பற்றி எழுத வில்லையே
பதிலளிநீக்குஇன்றைய பதிவை மிகவும் ரசித்தேன். கண்டிப்பா பின்னூட்டமிடுவேன் , இப்போது முடியாவிட்டாலும்
பதிலளிநீக்குநம்ம வீட்டில் தட்டு நிறைய சாப்பாடு தருவாங்க
பதிலளிநீக்குபெசஞ்சு சாப்ட முடியாத அளவு...
விருந்தினர் வந்தால் அவங்களே பாரிமாறி சாப்பிடட்டும் என்று வெறும் தட்டு கொடுப்பாங்க
அப்புறம்தான் சாப்பாடு வைப்பாங்க...
அருமையான பல்சுவைப் பதிவு
பதிலளிநீக்குபயனுள்ள கருத்துகள் உள்ளத்தில் இருத்துகிறேன்
தொடருவோம்!
ஜி எம் பி ஸார்..
பதிலளிநீக்கு//குறட்டை பற்றி எழுதி இருக்கிறேன் குறட்டை மெஷின் பற்றி எழுத வில்லையே//
சரி, குறட்டை பற்றி... ஓகே?!!
:)))
வாங்க அஜய் சுனில்கர்.. ரசித்ததற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி யாழ்பாவாணன் ஸார்.
பதிலளிநீக்குவாங்க நெல்லைத்தமிழன்..
பதிலளிநீக்கு//ஸ்பூன்ல கறிவகைகள் பரிமாறுவார்கள்.//
பின்னே? கட்டுப்படியாக வேண்டாமா?!!
நெ.த...
பதிலளிநீக்கு//எனக்குத் தெரிந்து தீரத் தீர யாரும் போடுவதில்லை. என் அபிப்ராயம், காசு மிச்சம் பிடிக்குறாங்க என்பது//
கல்யாணச் சாப்பாட்டில் சொல்கிறீர்களா? அவர்கள்தான் முதலிலேயே கான்டராக்ட் போல கொடுத்த்து முன்னரே ஏற்பாடு செய்து விடுகிறார்களே...!
ஶ்ரீராம்.கல்யாணம் பண்றவங்ககிட்ட கான்டிராக்டர் இலைக்கு ஒருவேளைக்கு 200-250 ரூன்னு வாங்கிட்டு ஏற்கனவே வர்ற 50% லாபத்துக்கும் மேல சம்பாதிக்க, இரண்டு இலைக்கான உணவை நாலு இலைக்குப் போட்டு காசு பார்க்கிறார்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன்
பதிலளிநீக்கு1. உபசரிப்பு ஒரு விதத்தில் தொந்தரவுதான். நான் முன்பெல்லாம் (ஏன் இப்போதும்) எளிதில் சாப்பிடமாட்டேன். ரொம்ப வற்புறுத்தினால், அப்புறம் என் மனதுக்குப் பட்டால், அப்போதுதான் சாப்பிடுவேன். சில சமயம், சாப்பிட்டிருக்கலாமே என்றும் சில சமயம் சாப்பிட்டிருக்கவேண்டாமே என்றும் தோன்றும். குஜராத்தியர் (?) களிடையே உள்ள பழக்கம், சாப்பிடுபவர் தன் வயிற்றைத் தடவினால் இன்னும் கொஞ்சம் போடவும் என்று அர்த்தமாம் (சத்தம் போட்டுக் கேட்பதற்குப் பதில்). அவங்க ஹோட்டல்ல, தட்டுக்குக் குறுக்கே நம்ம கையை வைக்கலைனா (அதாவது தடுக்கலைனா), சப்பாத்தியோ சாப்பாடோ இன்னும் போட்டுடுவாங்க.
பதிலளிநீக்குநான் முன்பு சத் சங்கம் போய்க்கொண்டிருந்தபோது, அதை நடத்துபவர், உணவு பரிமாறும் சமயத்தில் மிக மிக வற்புறுத்தலாக நிறைய வைத்துவிடுவார். வேண்டாம் என்றாலும், இன்னும் சாப்பிடுங்கோ என்று இனிப்பு போன்றவற்றை வைத்துவிடுவார். அதுக்காகவே நான் சத் சங்கம் போவதையே நிறுத்திவிட்டேன் (ரொம்ப வெயிட் போடுதுன்னு).
2. கைப்பிடி மண்ணை கரைக்கு வெளியே போடுவார்கள் - இதைக் கேள்விப்பட்டதில்லை, பார்த்ததில்லை. அதுபோல 'முன்னோர்' என்று சும்மா ஏதேனும் சொல்லிடறாங்க. முன்பு, தேவைகள் குறைவு, அமைதியான வாழ்க்கை. அங்கு நீர் நிலையை மாசுபடுத்துவதற்கு என்ன வாய்ப்பு இருந்தது? (இருந்தது... எருமைகளை ஆற்றில் குளிப்பாட்டுவார்கள், அது 1, 2 எல்லாம் ஆற்றுத் தண்ணீரில் போகும்). நாங்க சின்ன வயசுல, ஆற்றில் உள்ள பாறையைச் சுத்தப்படுத்தி அதில் தயிர் சாதம் போட்டுச் சாப்பிட்டிருக்கிறோம். வளர்ச்சி வரும்போது சுயநலம் பெருகி, எல்லோரும் ஆற்றுத் தண்ணீரை மாசுபடுத்திவிட்டோம்.
3. குறட்டையினால் ஒரு சாதகம் இருக்கு. தூங்குவதுபோல் ஏய்ப்பவரை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் (இவர் தூங்கினா குறட்டை விடுவாரே என்று)
பாஸ் கன்'ட்ரோல் குறைந்துவிட்டதா? ஸ்ரீராம் வர வர நிறைய முதிர் கன்னிகள் படமாப் போடுகிறார். ஹா ஹா ஹா
1. உபசரிப்பு என்பதை சிலர் ரொம்பவே எதிர்பார்ப்பார்கள் என்றாலும் எனக்கும் அது தொந்தரவாகவே படும். தினமும் சந்திக்கும் ஒருவரை பார்ப்பது போல ட்ரீட் செய்தால் சௌகரியமாக உணர முடியும் என்று தோன்றும். உபசரிப்பு ஒரு கட்டத்தில் செயற்கைத் தன்மையை அடையும் என்பது என் எண்ணம்! வயிற்றைத் தடவி சைகை காட்டுவது புதிய தகவல். இன்னும் காபி வேண்டும், தண்ணீர் வேண்டும் என்றால் என்ன சைகை செய்வார்கள்!!! சும்மா...
பதிலளிநீக்கு2. வீட்டுக்கும் குடிநீராக அங்கிருந்து நீர் எடுக்கும் பட்சத்தில் அங்கெல்லாம் அசுத்தம் செய்ய மாட்டார்கள், அதற்க்கு குளம் போன்ற தனி நீர் நிலையை வைத்திருப்பார்கள் என்று........... யாரோ சொன்னாங்க...!
3. பொய்க்குறட்டை விடாய் பழகியவர்களும் இருக்கிறார்கள்!
சின்னப்பொண்ணு நடிகைகளில் யாருமே நல்லா இல்லை நெல்லை.. அதுதான்...
// வீட்டுக்கும் குடிநீராக அங்கிருந்து நீர் எடுக்கும் பட்சத்தில் அங்கெல்லாம் அசுத்தம் செய்ய மாட்டார்கள், அதற்க்கு குளம் போன்ற தனி நீர் நிலையை வைத்திருப்பார்கள் என்று........... யாரோ சொன்னாங்க...!/முன்ன்ன்ன்ன்ன்னர் ஒரு பாசிடிவ் செய்தியிலே நான் தான் சொன்ன நினைவு, எங்க ரங்க்ஸும் சொன்னார். ஆடு, மாடுகள், வண்டிகள் போன்றவற்ற்றிகுத் தனிக் குளம் எனவும், குளிக்கும், நீர் பிடிக்கும் குளத்தில் அசுத்தம் செய்யக் கூடாது எனவும், சோப்புப் போன்ற பொருட்கள் போட்டுத்துணிகள் துவைக்க விட மாட்டார்கள் எனவும். அங்கே காவலுக்கு எனத் தனி ஆள் ஊர்க்கட்டுப்பாட்டில் நியமித்திருப்பார்கள் எனவும் சொல்லி இருக்கார். எனக்குத் தெரிந்தும் மதுரைப்பக்க கிராமங்களில் பார்த்திருக்கேன். ஆடு, மாடுகள் குளிக்க, குடிக்கத் தனியாகவே இருக்கும். ஆற்றங்கரையில் துணி துவைக்க அனுமதிக்க மாட்டார்கள். எனக்குத் தெரிந்து மதுரையில் குடிநீர்க் குழாய்கள் நகரசபையால் அமைக்கப்பட்ட இடங்களில் துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல், குளித்தல் போன்றவை செய்தால் அபராதம் விதிப்பார்கள். அதற்கெனத் தனியான அலுவல் ஊழியர் இருப்பார். இன்னாருக்கு இந்தத் தெருக்கள் என இருக்கும். அங்கே பகல் பொழுதுகளில் பனிரண்டு மணி வரை சைகிளில் சுற்றி வருவார்கள். பனிரண்டு மணிக்கப்புறமாத் தண்ணீர் நின்று விடும். ஆடு, மாடுகள், குதிரைகள் போன்றவற்றிற்குத் தனித் தண்ணீர்த்தொட்டிகள் இருந்தன. முக்கியமாய் தானப்பமுதலித் தெரு ஈயப்பாத்திரக் கடை எதிரேயும், வடக்கு மாசி வீதி டி.எம்.ஆர் பள்ளிக்கு எதிரேயும் பல வருடங்கள் தண்ணீர்த் தொட்டி இருந்தன. சிம்மக்கல்லிலும், யானைக்கல்லிலும் கூட இருந்திருக்கு.
பதிலளிநீக்கு//கைப்பிடி மண்ணை கரைக்கு வெளியே போடுவார்கள் -// இது கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் தூர்வாரும் நோக்கம் என்பது தெரியாது!
பதிலளிநீக்கு