ஞாயிறு, 29 ஜூலை, 2018

ஞாயிறு 180729 : கலைஞர் படித்த போர்ட் ஹைஸ்கூல்..





ஃபிப்ரவரி மாதம் பஸ் ஏற்பாடு செய்து கொண்டு கல்யாணமாகாதேவி கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்துக்குச் சென்றபோது வழியில் பஸ்ஸிலிருந்தே எடுத்த க்ளிக்...   தூரகாளி!



பு.முட்லூர், ஆனையாங்குப்பம்.  (மறந்துபோவதற்குள் ஊர் பெயரை எழுதி விடுகிறேன்.  குழம்பிப்போய் மு. புட்லூர் என்று எழுதி வைத்திருந்தேன்.  அப்புறம் போர்ட் பார்த்துத் திருத்திக் கொண்டேன்!).  வழியில் பார்த்த ஊர்.  எங்காவது நிறுத்தி சாப்பிட வேண்டும் என்றதும் எங்கள் ஒட்டுநர் முன்னரே யோசித்து இந்த இடத்தில் நிறுத்தினார்.  கோவிலுக்கு முன்னால் நல்ல பெரிய கொட்டகை இருக்க, கோவில் வாசலில் அடிகுழாய் இருக்க, அங்கே மதிய உணவாய் எடுத்துச் சென்றிருந்த புளியோதரை, தயிர் சாதத்தைக் காலி செய்தோம்!  அழகிய ஆஞ்சநேயர்.



பிரார்த்தனைகளை அல்லது ஸ்ரீராமஜெயம் எழுதி இங்கு கொடுப்பதைக் கட்டி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  கேட்க அங்கு யாரும் பொறுப்பான ஆள் இல்லை!


அங்கிருந்து கிளம்பிச் செல்லும் வழியில் ஏதோ ஒரு ஆறு!  பெயர் தெரியவில்லை.  இவ்வளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது ஆனந்தம் ப்ளஸ் ஆச்சர்யம்!  உடனே ஒரு க்ளிக்!  இதெல்லாம் இப்போது அதிசயக் காட்சி ஆகிவிட்டது இல்லையா! (இன்றைய காவிரிக் காட்சியை மறந்து விடுங்கள்)




மாலை நான்கரை மணியளவில் திருவாரூரைச் சென்றடைந்தோம்.  அங்கு ஏற்கெனவே சொல்லி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த லாட்ஜில் பெட்டியைப் போட்டு விட்டு, துண்டு, மாற்று உடையுடன் கமலாலயத்துக்குக் கிளம்பி விட்டார்கள் மக்கள்.  அங்கு நீராட ஐடியா!  நானும் கூடக் கிளம்பினேன் - அவர்களை புகைப்படம் எடுக்கும் ஐடியா!!   திருவாரூர் தியாகராஜர் கோவில்.  தமிழகத்தின் பெரிய கோவில்களில் ஒன்று.  கோவிலுக்குள் 108 லிங்கங்கள் இருக்கிறது என்பது ஒரு சிறப்பு.  கோவில் 30 ஏக்கர்,  கமலாலயக் குளம் 30 ஏக்கர்.  மன்னார்குடி ஹரித்ரா நதி அல்லது கோபாலசமுத்ரம் இதைவிட சற்றே பெரிது என்று சொல்வார்கள்.




கோவில் சுவரில்...



இவர்கள் நீராடிக் கொண்டிருக்க, நேரம் நழுவிக் கொண்டிருந்தது.  கொஞ்சம் கொஞ்சமாக மாலை ம(ய)ங்கி இருள் சூழும் நேரம்.  கமலாலயக் கோவில் மாறும் காட்சிகளில் வர்ணஜாலம் காட்டிக் கொண்டிருந்தது......  இந்தக் கோவில் குளத்தில் ஒரு படகில் அமர்ந்து என் அப்பாவும், அம்மாவும் அவர்களின் இளமையில் எடுத்துக் கொண்ட க/வெ புகைப்படம் எங்கள் வீட்டில் இருக்கிறது.  இருவருமே இப்போது உயிரோடு இல்லாத நிலையில் அந்தப் புகைப்படத்தை இங்கு பகிர தேடிப் பார்த்தேன்.  எதையாவது தேடும்போது உடனே கிடைத்து விட்டால் அப்புறம் என்ன இருக்கிறது!  காணோம்!



முதல் படத்தில் தெரிந்த சூரியன் மறைந்து, அடுத்த காட்சியில் அதே இடம்!  இந்தக் குளத்தின் தென்கரையில் கிழக்குக் கோடியில் கருணாநிதியின் எம் எல் ஏ அலுவலகம் உள்ளது.  அதற்கு இடது பக்கம் இருக்கும் போர்ட் ஹைஸ்கூலில்தான் மாமாக்கள் படித்தார்கள்.  அங்குதான் கலைஞரும் படித்தாராம்.



எவ்வளவு படங்கள் எடுத்தாலும் திருப்தி கிடைக்காத, மேலும் மேலும் புகைப்படங்கள் எடுக்கத்தூண்டும் அழகு...  கண்கள் காணும் காட்சியின் அழகைக் கேமிராவிலோ, வார்த்தைகளிலோ முழுதும் கொண்டு வர முடியாது...  ஏற்கெனவே சொல்லியாச்சு!!  குளத்தின் நடுவில் இருக்கும் கோவில் கமலாம்பாள் உறையும் நடுவளாங் கோவில்.  இந்தக் கோவிலின் காரணமாகத்தான் இந்தக் குளத்துக்கு கமலாலயம் ன்று பெயர். 





கல்யாணமாகாதேவி என்பது திருவாரூர் -மன்னார்குடி சாலையில் ஒருபுறமாய்ப் பிரியும் சிறிய சாலையின் வழியே சென்றால் வரும் சிற்றூர்.  சிற்றூர் என்பதை நல்லா அழுத்தியே படிக்கலாம்.  அவ்வளவு சின்ன ஊர்தான்.  ஊருக்குள் சாலைகள் கூட இன்னும் அமையாத ஊர்.  கேஜி குடும்பத்தின் K இனிஷியலுக்குக் காரணமான ஊர்.  இந்த ஊரில்தான் எங்கள் அம்மாவின் அப்பா மற்றும் அவரது சகோதரர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தனர்..  சின்னப்பண்ணை, பெரிய பண்ணைகளாய்..    அதெல்லாம் பழைய கதை.  இதே ஊரில் இருந்த சௌந்தர்ராராஜ அய்யங்கார் என்பவர் மிகவும் வசதி படைத்த நிலையில் திரும்பி வந்தவர் தன் ஊரில் 2009 - 2010 களில் இங்கு பாழடைந்து இருந்த இந்த வரதராஜப் பெருமாள் கோவிலைப் பார்த்து மனம் வருந்தி, புதுப்பித்துக் கொடுத்தார்.  


அப்போது இந்தக் கோவில்... (2014)

இந்த நல்ல காரியத்துக்கு அவருக்கு உடனே பலனும் கிடைத்தது.  அவர் மகளுக்கு நல்ல இடத்தில திருமணம் நடந்தது.  கல்யாண வரதராஜப் பெருமாள் ஆச்சே...   2013 இல் கும்பாபிஷேகம் நடந்து, அதன் ஒரு வருடப் பூர்த்திக்கு நாங்களும் 2014 இல் சென்று வந்தோம்.  மாமாக்கள் 2013 இல் கும்பாபிஷேகத்துக்கும் சென்று வந்திருந்தார்கள்.  அவர்கள் ஊராச்சே..  மலரும் நினைவுகளோடு மறுபடி மறுபடி விசிட் செய்து கொண்டிருக்கிறார்கள்.  என் அம்மாவும் இளமையில் இந்த ஊரில்தான் இருந்திருப்பார் என்ற நினைவுகளோடு நானும் அவர்களோடு இணைந்து சென்று வந்தேன்.....  அதே கோவில் இந்த வருடம் (2018)



அந்தப் பெருமாள் கோவிலில் காணப்பட்ட ஒரு அறிவிப்புப் பலகை..




இப்போது நாங்கள் சென்றது இந்த சிவன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு.. கல்யாண சுந்தரேஸ்வரர்.  ஊர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இதையும் அதே சௌந்தர்ராராஜ அய்யங்கார்தான் பொறுப்பெடுத்துக் கட்டிக் கொடுத்திருக்கிறார்.  இந்தக் கல்யாண சுந்தரேஸ்வரரிட(மு)ம்  வேண்டிக்கொண்டால் திருமணம் தடைப்படுபவர்களுக்கு உடனே திருமணம் நடக்கும் என்று நம்பிக்கை.   2014 இல் சென்றபோது இந்த இடம் ஒரு கூரைக் கொட்டாயாய் இருந்தது.


முன்னர் அதாவது 2014 இல் இந்தக் கோவில் இப்படிதான் இருந்தது...  சிதைந்து கிடந்த சிலைகளை எடுத்து சிறிதாய் கூரை அமைத்து உள்ளே வைத்து, சிறிய பூஜைகள் செய்யத் தொடங்கி ஆரம்பித்திருந்தார்கள்.    இதுதான் இப்போது மேலே உள்ளபடி கட்டப்பட்டிருக்கிறது.





கோவில் அருகே உள்ள பாசிக்குளம்!!  அன்றும் இன்றும் ஒரே மாதிரி.  இது இந்த வருடம் எடுக்கப்பட்ட படம்.




இன்னும் ஸ்வாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பபடா நிலையில் கோவிலின் தோற்றம்.




முன்னர் இதோ இந்த இடம் இப்படி மரங்களுடன் இருந்தது.  இருபுறமும் மரங்கள், புதர்கள், மூங்கில் காடு...  இடது புறம் புதர், மரங்களின் பின்னால் அந்தப் பாண்டவ ஆறு ஓடுகிறது..  ஆறு என்று பெயர்தான்.  கால்வாய் போல இருக்கிறது.



குறுகிய மண்பாதை..   ஆங்காங்கே முட்கள்...  இவை இரண்டும் பழைய 2014 படங்கள்.



இதோ..  கீழே உள்ள அடுத்த இந்த இரண்டு படங்களும் இப்போது 2018 இல் எடுக்கப்பட்டவை.  கோவில் கட்டும்போது இங்கிருந்த மரங்களை அகற்றி விட்டார்கள் போலும்.  பார்க்க மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது...  கோவிலைத் தாண்டி சற்றே மேடேறினால் இந்தப் பாண்டவ ஆறு..



பாதை ஏற்பட்டிருக்கிறதுதான்..   சாலையைச் சீர் செய்திருக்கிறார்கள்தான்...  ஆனால் அந்தப் பசுமை எங்கே?




இந்த நண்பர் 2014 இல் என்னைப் பார்த்ததுமே வாலாட்டி Friend request  கொடுத்து நானும் மகிழ்ச்சியுடன் அக்செப்ட் செய்ய, நட்பானார்.  இப்போதும் எங்களை பார்த்ததும் கூடவே எல்லா இடங்களுக்கும் கடமையாய் வந்தார்!



நண்பர் நட்பான புதிதில்..  அதாவது 2014 இல்...

121 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/கீதா மற்றும் அனைத்து விடியற்காலைப் பூக்களுக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

      விடியற்காலைப் பூக்கள் ,,, ஆஹா...

      நீக்கு
  2. குளத்தில் மஞ்சள் நீராடலாம்...
    குளமே மஞ்சள் நீராடினால்!....

    ஆகா.... அழகு.. அழகு!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.

      எனக்கு இன்று இணையம் 90 வயத்துக்கிழவர் போல ஸ்லோ!!!!

      நீக்கு
  3. எல்லாப் படங்களும் அருமை. நண்பர் நல்லாவே போஸ் கொடுத்திருக்கார். மறுபடி வரேன்.

    பதிலளிநீக்கு
  4. பொதுவாகவே..
    தஞ்சை மாவட்டத்து வயிரவர்கள்
    சாந்த சொரூபம்....

    சமயத்தில் மிரட்டுவார்களே தவிர
    பரம சாதுக்கள்...

    பதிவின் படத்திலுள்ள
    சாம்பல் நிறத்தார் அதை உண்மையென நிரூபிக்கின்றார்...

    அதுசரி - சாம்பலீஷ்க்கு பிஸ்கட் வாங்கிக் கொடுத்தீர்களோ!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் தஞ்சை மாவட்டம்தானே... என் வயிரவ அன்பு தொடங்கியதே அங்குதானே? அந்த ஊரில் கடை அப்போது இல்லை என்பதால் முதலிலேயே நினைவாய் வாங்கிச் சென்று கொடுத்து, புகைப்படமும் எடுக்கச் சொல்லி வைத்திருக்கிறேன்!

      திருவிழா அன்று ஊரில் கடைகள் மொலு மொலு வென்று முளைத்துவிட்டன....

      சாம்பலீஷ் - ஹா... ஹா... ஹா.. நல்ல பெயர்!

      நீக்கு
  5. அழகான படங்கள் நண்பரே...கோவிலின்
    பின்புறம் சூரியன் மறைவது அருமை நண்பரே,
    அந்தப்படங்களை நான் சுட்டுட்டேன்.😄😄😄

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அஜய் சுனில்கர்... நன்றி..


      // அந்தப்படங்களை நான் சுட்டுட்டேன்.😄😄😄 //

      அப்போ அதற்கு சீக்கிரம் கவிதை எதிர்பார்க்கலாம்னு சொல்லுங்க....!

      நீக்கு
    2. அற்புதமான படங்கள். ஆறும் கோவிலும் அழகு. கொஞ்சமாவது பணி செய்திருப்பார்கள்.
      கமலாலயம் அழகோ அழகு. தில்லானா கேட்டதா அங்கே.

      வரதராஜப் பெருமாளும் கல்யாண சுந்தரேஸ்வரரும் வேண்டும்
      அருளை வழங்குவார்கள். மிக மிக நன்றி. என் கதைக்காரர்களும் கோவில் தேடித்தான் கிளம்புகிறார்கள்.

      நீக்கு
    3. //..தில்லானா கேட்டதா அங்கே.. //

      கேட்டிருக்கும்... ஆனால்,

      தம்தம ன்னா... பிரியர்களின் காதில் விழுந்திருக்குமோ.. என்னவோ!..

      இருந்தாலும்
      அடுத்த வெள்ளி வீடியோவில்
      தில்லானா ஒலி கேட்க வேண்டும்..

      இங்ஙனம்,
      அகில உலக மோகனா ரசிகர் பேரவை..

      நீக்கு
    4. // அந்தப்படங்களை நான் சுட்டுட்டேன்.😄😄😄 //

      அப்போ அதற்கு சீக்கிரம் கவிதை எதிர்பார்க்கலாம்னு சொல்லுங்க....!

      முயற்சி செய்கிறேன் நண்பரே...

      நீக்கு
    5. நன்றி வல்லிம்மா... தில்லானா கேட்கவில்லை! கோவிலின் அழகில் மெய் மறந்தோம்!

      நீக்கு
    6. நாங்கதான் அரம ஆச்சே...! துரை ஸார்.. அடுத்த வெள்ளி பாலமுரளியின் தில்லானா போட்டு விடவா?!!

      நீக்கு
    7. //முயற்சி செய்கிறேன் நண்பரே.../

      நன்றி அஜய் சுனில்கர்,

      நீக்கு
  6. படங்கள் அனைத்தும் அழகு. கோவில் குளமும் மறையும் சூரியனும் வாவ்..... பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ... புகைப்பட நிபுணர் வாயால் பாராட்டு.. நன்றி வெங்கட்.

      நீக்கு
  7. வளர்ச்சி என்ற பெயரில் மரங்களை வெட்டுவது சோகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்.. வெட்டிய கையோடு மறுபடி மரங்கள் வைத்திருக்கலாம்.

      நீக்கு
  8. படங்கள் அழகு
    கலைஞர் படித்த உயர்நிலைப் பள்ளியையும் ஒரு படம் எடுத்து வெளியிட்டிருக்கலாம் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார். நாங்கள் கமலாலயத்தில் இந்தப் பக்கம் தங்கியிருந்ததால் அந்தப் பக்கம் போகும் வாய்ப்பே வரவில்லை. பின்னர் பஸ்ஸில் திரும்பி வரும்போதுதான் பேச்சின் நடுவே இந்த விவரம் வெளிப்பட்டது. தெரிந்திருந்தால் நடந்துபோய் அதையும் படம் பிடித்திருப்பேன்.

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    //கொஞ்சம் கொஞ்சமாக மாலை ம(ய)ங்கி இருள் சூழும் நேரம். கமலாலயக் கோவில் மாறும் காட்சிகளில் வர்ணஜாலம் காட்டிக் கொண்டிருந்தது//

    மிக மிக அழகு. நாங்களும் படகில் பயணம் செய்து நடுவில் இருக்கும் கோவில் போய் இருக்கிறோம். உறவினர்கள் மாயவரம் வரும்போதெல்லாம் அழைத்து செல்லும் கோவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா.. ஆமாம்.. நீங்கள் அடிக்கடி விசிட் செய்திருக்கக் கூடிய கோவில்.

      நீக்கு
  10. பழைய படமும், புது படமும் எல்லாம் அழகாய் இருக்கிறது.
    குளமும் படித்துறையும் பார்க்க அழகு.

    பதிலளிநீக்கு
  11. சாலையை சீர் செய்யும் போது பசுமையை எதிர்ப்பார்க்க முடியாது.
    மரங்களை அகற்றாமல் சாலை சீர் அமைப்பு செய்தால் நல்லது.

    செல்ல நண்பர் தங்கள் ஊருக்கு வந்த நண்பரை பத்திரமாய் பார்த்துக் கொள்கிறது போல! அதுதான் கூடவே வந்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாலையைச் சீர் செய்பவர்கள் கையோடு அடுத்த செட் மரங்களை பட்டிருக்கலாம். ஏதோ பாலைவனத்தைப் பார்ப்பது போலிருந்தது அந்த இடம்!

      நண்பருக்கு ஞாபக சக்தி அதிகம் போலும்! கூடவே வந்து அமர்ந்து விட்டார்!

      நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  12. பாண்டவ ஆறை குளம் என்று சொல்லி விட்டேன் , பாண்டவ ஆறும் படித்துறையும் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  13. படங்கள் அற்புதம் ஸ்ரீராம்!
    // கண்கள் காணும் காட்சியின் அழகைக் கேமிராவிலோ, வார்த்தைகளிலோ முழுதும் கொண்டு வர முடியாது... //
    சில சமயங்களில் இதற்கு நேர் எதிராகவும் சில சமயம் நடக்கும். உ.ம். அ., த. க்கள் ;)
    'தமிழே தமிழ் படித்த இடம்' என்ற கேப்ஷனோடு கலைஞர் படித்த பள்ளியை புகைப்படம் எடுத்து போட்டிருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தமிழே தமிழ் படித்த இடம்...//

      அழகு.. அழகு..

      நீக்கு
    2. டூ டூ மச் இல்லையோ நீங்க சொல்றது (apart from sentiments)

      நீக்கு
    3. அன்பின் நெ.த.,

      இது அதிகம் தான்...
      கருத்தை வெளியிட்டதும் தான் சிந்தையில் பட்டது...

      யாராவது சொல்வார்கள் என நினைத்தேன்...

      நீங்கள் சொல்லி விட்டீர்கள்...

      நீக்கு
    4. //படங்கள் அற்புதம் ஸ்ரீராம்!//

      நன்றி பானு அக்கா.

      //சில சமயங்களில் இதற்கு நேர் எதிராகவும் சில சமயம் நடக்கும். உ.ம். அ., த. க்கள் ;)//

      ஹா,,, ஹா,,, ஹா,, உண்மை!


      //'தமிழே தமிழ் படித்த இடம்' என்ற கேப்ஷனோடு கலைஞர் படித்த பள்ளியை புகைப்படம் எடுத்து போட்டிருக்கலாம்//


      லாம்!!

      நீக்கு
  14. திவ்ய தரிசனம் படங்கள் வாயிலாக தரிசித்தேன் நன்றி

    பதிலளிநீக்கு
  15. //சென்றபோது வழியில் பஸ்ஸிலிருந்தே எடுத்த க்ளிக்... தூரகாளி!//

    ஆஹா ஸ்ரீராம் என்ன அழகாகப் படம் எடுத்திருக்கிறீங்க. பொதுவா ஓடும் காரிலிருந்து படமெடுக்க முடிவதில்லை, இங்கத்தைய ஸ்பீட்டுக்கு எடுத்தால் படம் கலங்கித்தான் வருது, இது பஸ் ஸ்பீட் குறைவாக இருக்கும் என்பதால கலங்காமல் அழகா வந்திருக்கு.

    அது காளி அம்மன் சிலையோ.. என்ன ஒரு அழகு.. இப்படி சிலைகளை தூர இருந்து பார்க்கும்போது மெய் சிலிர்க்கும்.

    டக்கெனப் பார்க்க சிவன்அங்கிளைப் போல தெரியுதே:).. என்ன ஒரு பச்சைப் பசேல்ல்ல்... ரோட்டோரம் எரிக்கலம்[எரிக்கலை?:)] செடிகளும் இருக்குதே பூவோடு:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஆஹா ஸ்ரீராம் என்ன அழகாகப் படம் எடுத்திருக்கிறீங்க. //

      நன்றி அதிரா..

      ஆம், ஓடும் பஸ்ஸிலிருந்து எடுத்தும் கூட, இங்கு பகிரும் அளவு படம் வந்திருப்பது எனக்கும் மகிழ்ச்சியைத் தந்தது!

      புதருக்கு நடுவில் எருக்கம் செடியும் தெரிகிறது!

      நீக்கு
  16. //அங்கே மதிய உணவாய் எடுத்துச் சென்றிருந்த புளியோதரை, தயிர் சாதத்தைக் காலி செய்தோம்//

    எங்கு போனாலும் பாரம்பரியத்தை விடுவதில்லைப்போலும்:).. கீசாக்காவைப்போல கியூவில நிண்டு பிட்ஷா வாங்கிச் சாப்பிடோணும்:) ஹையோ இதைப் பார்த்தாவீ மீ ஜாலி:)) சே..சே இல்ல இல்ல டங்கு ஸ்லிப்பாகுதே காலி:)..

    ஆஞ்சநேயர் அழகாக எழும்பி நிக்கிறார், என்னாப் பெரிய காது:) ஒட்டுக்கேட்பாரோ:)).. இந்த மாதம் என்னை ஆஞ்சநேயரைக் கும்பிடட்டாம்.. நினைச்சதெல்லாம் பலிக்குமாம் எனச் சொல்லியிருக்கினம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எங்கு போனாலும் பாரம்பரியத்தை விடுவதில்லைப்போலும்:)..//

      அதுதான் எடுத்துச் செல்ல எளிது. எல்லோரும் விரும்பும் பொருளும் கூட! அப்புறம் எண்ணெயால் குளிப்பாட்டப்பட்ட மிளகாய்ப்பொடி இட்லி!!

      என் மகன்களையும் ஆஞ்சியை வெண்டைச் சொல்லி சோசியர் சொல்லி இருக்கிறார்!!!

      நீக்கு
    2. // வெண்டைச் //

      சே... வேண்டச் சொல்லி..

      நீக்கு
    3. //கீசாக்காவைப்போல கியூவில நிண்டு பிட்ஷா வாங்கிச் சாப்பிடோணும்:) // அதிரடி, நாங்களும் கையில் எடுத்துப் போயிடுவோமாக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பிட்சாவா, பிட்சா? அதுவும் க்யூவில் நின்னு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))))

      நீக்கு
  17. //பிரார்த்தனைகளை அல்லது ஸ்ரீராமஜெயம் எழுதி இங்கு கொடுப்பதைக் கட்டி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கேட்க அங்கு யாரும் பொறுப்பான ஆள் இல்லை!//

    ஓ என்ன அழகாக நீட்டாகக் கட்டி வச்சிருக்கினம் மியூசியம்போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வேறெதாவதோ என்னவோ என்கிற சந்தேகமும் உண்டு எனக்கு!

      நீக்கு
  18. //அங்கிருந்து கிளம்பிச் செல்லும் வழியில் ஏதோ ஒரு ஆறு! பெயர் தெரியவில்லை. ///

    “அதிரடி ஆறு”:)) பெயர் தெரியாட்டில் தெரிஞ்ச பெயரைச் சூட்டி விட்டிடோணும் டக்குப் பக்கென ஹா ஹா ஹா.. அடுத்தமுறை போகும்போது ஈசியாக இருக்கும் இதுபற்றிப் பேச:))..

    ஆறென்றாலே அழகுதான்..

    அழகிய கோயில் சொந்த ஊருக்குப் போகும்போது அதுவும் பஸ், ரெயின் எனில்.. நம் பழைய நினைவுகளும் நம்மோடு கூடவே ட்ரவல் பண்ணும்... எப்ப்போ போவோம் எப்போ பார்ப்போம் என இருக்கும்.. கூடவே கவலையும் ஒட்டிக் கொள்ளும் அம்மா அப்பா உலாவிய இடம்.. இப்போ அவர்கள் இலையே என எண்ணும்போது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதிரடி ஆறு”:)) பெயர் தெரியாட்டில் தெரிஞ்ச பெயரைச் சூட்டி விட்டிடோணும்//

      ஹா.. ஹா... ஹா... அதிராறு!

      எனக்கு அங்கு பழைய நினைவுகள் எதுவும் இல்லாததால் இந்த இடத்துக்குச் சம்பந்தம் இல்லாத என் பழைய நினைவுகளில் ஆழ்ந்து பயணித்தேன் நான்!

      நீக்கு
    2. திருவாரூரில் எனில் ஓடம்போக்கி ஆறு என ரங்க்ஸ் சொல்றார். வழியில் என்றால் குடமுருட்டி ஆறாக இருக்கலாம். கோமதி பாண்டவ ஆறுனு சொல்றாங்க போல! போய்ப் பார்த்தால் தான் புரியும்.

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிராவின் பெயரை ஆறுக்கு வச்சதைக் கீசாக்காவுக்குப் பொறுக்கலே :)) ஹையோ எனக்கு என் வாய் தேன் எடிரி:)) கீசாக்காவால இப்போ ஓடிக் கலைக்க முடியாது என்னை:))

      நீக்கு
    4. தப்பாய்ப் புரிஞ்சுண்டு இருக்கேன். முட்லூர் அருகே ஓடும் ஆற்றை ச்ரீராம் கேட்டிருக்கார். :)

      நீக்கு
  19. ///கோவில் குளத்தில் ஒரு படகில் அமர்ந்து என் அப்பாவும், அம்மாவும் அவர்களின் இளமையில் எடுத்துக் கொண்ட க/வெ புகைப்படம் எங்கள் வீட்டில் இருக்கிறது. இருவருமே இப்போது உயிரோடு இல்லாத நிலையில் அந்தப் புகைப்படத்தை இங்கு பகிர தேடிப் பார்த்தேன். காணோம்!///

    ஹா ஹா ஹா நம் நிலைமையும் அப்படித்தான், ஆனால் ஒரு கெட்டித்தனம் பண்ணியிருக்கிறோம், கையோடு கொண்டு வந்த படங்களை[எல்லாம் அல்ல சிலதைத்தானே காவி வர முடிஞ்சுது] ஸ்கான் பண்ணி, சகோதரங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் அனுப்பி வைத்திருக்கிறோம், அதனால கேட்டு வாங்கிடவும் வசதி, இனி கண்ணில் பட்டாம் நீங்களும் ஸ்கான் பண்ணி உங்கள் மெயிலுக்கு அனுப்பி சேவ் பண்ணிடுங்கோ.

    //எதையாவது தேடும்போது உடனே கிடைத்து விட்டால் அப்புறம் என்ன இருக்கிறது///

    ஹா ஹா ஹா கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க பஞ்:)..

    “தேடும்பொருள் உடனே கிடைத்துவிட்டால் அதன் அருமை தெரியாமல் போய் விடுமாம்” ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அதிரா.. அந்தப் படத்தையும் ஸ்கின் செய்து கணினியில் வைத்திருந்தேன். இப்போ காணோம்! என்னுடைய ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் இ TB சமீபத்தில் வீணாய்ப்போனது. திறக்க வரவில்லை. அதில் நான் இழந்தது ஏராளம்.

      நீக்கு
    2. //ஸ்கின் //

      ஹா ஹா ஹா இப்போதெல்லாம் ஸ்ரீராமுக்கு அடிக்கடி டங்கு ஸ்லிப்பாகுதூஊஊஊஉ:))..

      முக்கிய படங்களை உங்கள் ஈமெயிலுக்கே அனுப்பி சேவ் பண்ணி வையுங்கோ அது எப்பவும் இருக்குமெல்லோ.. ஆனா கடவுளே பாஸ்வேர்ட்டை மறந்திடாதீங்கோ ஹா ஹா ஹா:).

      நீக்கு
    3. அச்சச்சோ..... ஸ்கேன்.... ஸ்கேன்.... ஸ்கேன்... ஓகேயா?

      நீக்கு
  20. //இந்தக் கோவிலின் காரணமாகத்தான் இந்தக் குளத்துக்கு கமலாலயம் ன்று பெயர்.//

    இதன் கீழ் இருக்கும்படம் கொள்ளை அழகு... ரொம்ப நல்லா எடுத்திருக்கிறீங்க, பிரிண்ட் எடுத்து சுவரில கொழுவி விடுங்கோ.. அந்த சிவசிவ என்ன அழகா புறிம்பா.. என்னைப்பார் என் அழகைப்பார் என ஜொலிக்குது. ஆறில் தெரியும் பிரதிபலிப்பு சூப்பர்.

    இங்கும் இரவில் பயணம் செய்யும்போது ஆறில் இப்படி லைட்ஸ் விழும்.. சொல்ல முடியாத அழகாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  21. மிக அழகாகக் கட்டப்பட்டு வருகிறது கோயில், அந்தப் பாதையைப் பார்க்கத்தான் பயமாக இருக்கு.. காட்டு விலங்குகள் இருக்கும்போல இருக்கே... ஆனா இப்பாதையால பயணம் செய்யும்போது மனதுக்கு இதமாக இருக்கும்.

    பாண்டவ ஆறு.. இப்போதுதான் கேள்விப்படுறேன் அழகிய பெயர்... படிகளைப் பார்க்கவே இறங்கப் பயமாக இருக்கு. எனக்கு பொதுவா தண்ணி எண்டாலே பயம், என் பயத்தினால் ஆரையும் இறங்கவும் விடமாட்டேன் இப்படி இடங்களில் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டில் உலாவும் விலங்குகளை விட காட்டு மிருகங்கள் மோசம் இல்லை என்றாலும்,இங்கு காட்டு மிருகங்கள் இல்லை அதிரா...

      நீக்கு
    2. // எனக்கு பொதுவா தண்ணி எண்டாலே பயம், என் பயத்தினால் ஆரையும் இறங்கவும் விடமாட்டேன் இப்படி இடங்களில் ஹா ஹா ஹா. //
      அப்புறமா எப்படி ஜேம்ஸிலே, சேச்சே தேம்ஸிலே குதிப்பீங்க? :)))))

      நீக்கு
    3. //அப்புறமா எப்படி ஜேம்ஸிலே, சேச்சே தேம்ஸிலே குதிப்பீங்க? :)))))//

      ஹா ஹா ஹா இப்பூடிச் சொன்னால்தானே உங்கள் எல்லோரிடமும் இருந்து தப்பிச்சு ஓடலாம்:)) பாவம் பிள்ள குதிக்கப்போறன் என அடம்பிடிக்குது:)) இதுக்கு மேல அடிக்காமல் விட்டிடலாம் என நினைப்பீங்க:))

      நீக்கு
  22. //பாதை ஏற்பட்டிருக்கிறதுதான்.. சாலையைச் சீர் செய்திருக்கிறார்கள்தான்... ஆனால் அந்தப் பசுமை எங்கே?//

    சிலவற்றை இழந்தால்தானே சிலதைப் பெற முடியும், பறவாயில்லை, இப்போ நன்றாகவே இருக்கு பாதை மொடேன் ஆக இருக்கு முன்பை விட.. பசுமையும் தெரிகிறது தூரத்தில்... இப்பாதை அருகிலும் அழகிய மரங்கள் நட்டு விட்டாஅல் வருங்கால சந்ததிக்கு இன்னும் அழகூட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லி இருக்கிறார்கள். சீக்கிரம் மரங்கள் அடர்ந்த சாலையைப் பார்க்க ஆவல்!

      நீக்கு
  23. // என்னைப் பார்த்ததுமே வாலாட்டி Friend request கொடுத்து நானும் மகிழ்ச்சியுடன் அக்செப்ட் செய்ய, நட்பானார். //

    ஓ அவர்தான் உங்களுக்கு ரிகுவெஸ்ட் விட்டாரோ முதலில்:)) ஹா ஹா ஹா..

    உங்கள் நண்பர் மிக அழகானவர்.. அமிதியாகவும் தெரிகிறார்ர்.. அன்ஃபிரெண்ட் பண்ணிடாதீங்கோ ஹா ஹா ஹா.

    இந்த 3 நாட்களும் மீ கொஞ்சம் பிஸி, நம் ஹொலிடே முடிய இன்னும் ஒரு மாதம் இருக்கே.. அதுவரை அடிக்கடி லீவெடுப்பேன். பொதுவாக பிஸி எனில் புளொக் ஓபின் பண்ணுவதில்லை.. பண்ணினால் கொமெண்ட் போடாமல் போக மாட்டேன்... ஆனாலும் ஏதோ ஒரு உந்துதலில் ஓபின் பண்ணினென்.. கண்ணில் பட்டது களம் இறங்கிட்டேன்ன்... இனி முடியும்போது வருகிறேன்.. பாய் பாய்.. ஹையோ இது வேற பாய்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எப்போதுமே அன்பிரென்ட் செய்வதே இல்லை! ஹா... ஹா... ஹா...! ஹாலிடே என்றால் ப்ளாக் பக்கம் வரக்கூடாதா என்ன? ஏன்? ஆயினும் வருகைக்கும் தொடர்ந்த கருத்துக்களுக்கும் நன்றி அதிரா.

      நீக்கு
    2. இல்ல ச் ரீராம்ம்ம்ம்:)) நான் சொல்ல வந்தது இம்முறை லோங் ட்ரிப் ஏதும் இல்லை, ஆனா இடைக்கிடை குட்டிக் குட்டி ட்ரிப் அப்பப்ப எங்காவது ஒரு சுற்று போய் வருவோம்.. அதனாலதான் புளொக் பக்கம் வர முடிவதில்லை, மற்றும்படி பிசி என்றாலும் வந்திட்டுத்தானே போவேன்ன்ன்:)).. எனக்கு அகராதியில் பிடிக்காத ஒரு சொல்.. நான் பிசி:) என்பது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏதோ அடுத்தவங்க ச்ச்சும்மா இருப்பதைப்போலவும், நான் மட்டும் பிசிபோலவும் பில்டப்பூக் காட்டுவது :) ஹா ஹா ஹா. நான் என்னைத்தான் ஜொன்னேன்ன்:).

      நீக்கு
    3. ஓகே... ஓகே... எமோஷன் ஆபாதீங்க...!!!

      நீக்கு
  24. நமது வேண்டுதலுக்காக எழுதும் ஸ்ரீராமஜெயத்தை மாலை கட்டி போடக்கூடாதாம். உங்க படத்தில் இருக்கும் மாதிரி மூட்டைக்கட்டி கோவிலில் சேர்ப்பிச்சுடனும் அவங்க 48 நாளுக்கு ஒருமுறை இப்படி சேரும் மூட்டைகளை நீர்நிலைகளில் கரைச்சுடனுமாம். இரு நாட்களுக்கு முந்தி டிவில சொன்னாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... இது எனக்குப் புதிய தகவல் சகோதரி ராஜி. நன்றி.

      நீக்கு
  25. படங்கள் எடுத்தவிதம் அனைத்துமே அழகு

    பதிலளிநீக்கு
  26. படங்களும் விளக்கமும் எப்போதும்போல் அருமை. கட்டுச்சாதமா? பலே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லைத்தமிழன்... கட்டுசாதம்தானே வசதி!

      நீக்கு
    2. இட்லி மிளகாய்ப்பொடியை விடவா? என்று பதில் எழுதினேன் (வெளியிடும்போது பப்ளிஷ் ஆகலை). அப்புறம்தான் எண்ணெயில் குளிப்பாட்டிய மறுமொழியைப் பார்த்தேன்.

      இரண்டு நாட்கள் முன்பு, செண்ட்ரல் இரயில் நிலையத்தில், கடையில், காலையில் மிளகாய்ப்பொடி இட்லி விற்பதைப் பார்த்து ஒன்றுக்கு இரண்டாக பாக்கெட் வாங்கி காலி செய்தேன் (ஒரு பாக்கெட்-5 இட்லி). பார்த்த உடனேயே என் மனைவி சொன்னாள், காரமாயிருக்கும் வேண்டாம் என்று. காரம் தாள முடியவில்லை. (விலை ஒரு பாக்கெட் 40-50 ரூ). ஒருவேளை எனக்கு வயதாகிவிட்டதா இல்லை ஆந்திரர்களுக்கு மட்டும்தான் விற்கிறார்களா என்று தெரியவில்லை.

      நீக்கு
    3. அதையா காரம் என்கிறீர்கள்? கடையில் விற்கும் பொடிகளில் காரமே இருக்காது. பூண்டு வேறு போட்டிருப்பார்கள்.

      ஆனால் என்னாலேயே முன்னாற்போல் காரம் சாப்பிட முடியவில்லை.

      நீக்கு
    4. நெ.த: //பார்த்த உடனேயே என் மனைவி சொன்னாள், // ஆஆஆ ஹஸ்பண்ட்டை அடியோட மறந்திட்டார்ர்ர்ர்:))
      //ஒருவேளை எனக்கு வயதாகிவிட்டதா// இதில சந்தேகம் வேறு:) ஹையோ ஹையோ:))

      ச்ச் ரீராம்ம்:
      //ஆனால் என்னாலேயே முன்னாற்போல் காரம் சாப்பிட முடியவில்லை.//

      இரண்டூஊஊஊஊ வயோதிபர்கள் பேசிக்கொள்வதைப்போலவேஏஏஏஏஏஏ இருக்கு:)) ஹையோ நான் ஒண்ணுமே ஜொள்ளள்லே:) அப்பப்ப என் மைண்ட் வொயிஸ் முன்னால சத்தமாக் கேட்ட்டு என்னை அதுவே தேம்ஸ்ல தள்ள வழிவகுத்துக் கொடுக்குதே:)) ஹா ஹா ஹா மீ எசுக்கேப்பூஊஊஊஊ..

      நீக்கு
  27. திருவாரூர் தேர் புகழ் பெற்றது அதற்கு அச்சும் ப்ரேக்கும் செய்து ஓடவிட்டு மகிழ்ந்ததுஎங்கள் பி எச் ஈ எல் திருச்சி நிறுவனம் நாங்கள் திருவாரூர் போயிருந்தபோது அந்ததேர்முற்றிலும் பிரிக்கப்பட்டு ஆதரவு இல்லாமல் இருந்தது முன்பு ஒரு முறை துரை செல்வராஜு வின் பதிவிலும் அதுபற்றிக்கேட்ட நினைவு இப்போது எப்படி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவாரூர் தேர் பக்கம் நாங்கள் செல்லவில்லை ஜி எம் பி ஸார்...

      நீக்கு
  28. திருவாரூர் தேரோட்டம் உண்டா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் சென்றபோது இல்லை!

      நீக்கு
    2. சித்திரை மாசம் அல்லது பங்குனி மாதத்தில் எப்போனு நினைவில் இல்லை. திருவாரூர்த் தேரோட்டம் பொதிகைத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆழித்தேர் அசைந்து அசைந்து வந்தது அழகாய் இருந்தது.

      நீக்கு
  29. உங்களுடன் நானும் சுற்றிவந்துவிட்டேன். அருமை.

    பதிலளிநீக்கு
  30. கமலாலயம் குளத்தைப் பார்த்துவிட்டு, 'குளிக்கவில்லை, போட்டோ எடுக்கச் சென்றேன்' என்று சொல்ல, வெக்கையில் எரியும் சென்னைவாசியான உங்களுக்கு எப்படி மனது வந்தது? திருக்குறுங்குடி சென்றபோது, ஆனமட்டும் என் பையன், நம்பியாற்றில் குளிக்கணும்னு சொன்னான், நான் feasibility study செய்து, வாய்ப்பு இல்லை என்று சொல்லிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நெல்லை... மக் எடுக்காமல் சென்று விட்டேன். அதனால் குளிக்கவில்லை!

      நீக்கு
    2. ///மக் எடுக்காமல் சென்று விட்டேன். அதனால் குளிக்கவில்லை!//

      ஹையோ ஆண்டவா:) எனக்கு கண்ட நிண்ட பயமொயி எல்லாம் நினைவுக்கு வந்து துலைக்குதே:) ஆனாலும் ஜொள்ளவே மாட்டேன்ன்:))...

      குளத்தில இறங்கியும் மக் கால அள்ளித்தான் குளிப்பேன் என்றால் என்ன பண்ணலாம் சொல்லுங்கோ:)).. ஹா ஹா ஹா எனக்கு இண்டைக்கு என்னமோ ஆச்சூ:)) ஹையோ இனி இதை ஆரும் படிக்க மாட்டினம்:)) மீயும் எஸ்கேப்ப்ப்ப்:))

      நீக்கு
    3. தெரியும்.. ஆத்து நிறைய தண்ணி.. தானே...!!!

      நீக்கு
    4. ஆற்றில் குளத்தில் இறங்கிக் குளிக்க "மக்" ???? ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நானே பரவாயில்லை போல! என் மாமியார் பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் நீச்சல் அடித்த காட்சி இன்னமும் கண்ணெதிரே! அங்கேயே நான் இறங்கித் தான் குளிச்சேன் மாமாவோடு. நடு ஆறு! கீழ்ழேஎஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ எங்கோ ஆழத்தில் தரை இருக்கும். :))))))

      நீக்கு
  31. முதலில் டக்கென்று ஈர்த்தவை ஃப்ரென்ட் ரிக்வெஸ்ட் கொடுத்த நம்ம நண்பரும், அந்த ஆறும்….
    நண்பர் வெகு அழகு!!! சமர்த்துப் பையன் போல இருக்காரே……ஃப்ரென்ட் ரிக்வெஸ்ட் அப்போ கொடுத்து பாருங்க இப்பவும் உங்க கூடவே துணையா வந்திருக்கார்….!! சமர்த்துல?!!!

    முட்லூர் – அப்படி என்றால் அந்த ஆறு வெள்ளாறு ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  32. இதோ வந்தாச்சு...எல்லா படங்களும் ரொம்ப அழகு...ஒவ்வொன்றாகப் பார்த்து உங்கள் விளக்கமும் வாசித்து கமென்ட் எல்லாம் சேர்த்துட்டு இதோ வரேன் ... போடுறேன் ஸ்ரீராம்....

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... பொசுக்கென்று ஆற்றின் பெயர் சொல்லிட்டீங்க.... ஊர் பெயர் வைத்து கூகிள் பண்ணினீங்களோ!!! நமக்கெல்லாம் நாலு கால் செல்லங்கள்தான் முதலில் கண்ணில் படுவார்கள்.

      நீக்கு
    2. கூகுள் போய்ப் பார்க்கலை ஸ்ரீராம் நான் பாண்டிச்சேரியில் இருந்தப்ப தஞ்சாவூர் இந்த வழிதான் சென்றேன். கும்பகோணம்....அப்போது தெரிந்து வைத்துக் கொண்டதுதான். கெடிலம் ஆறும் வரும் கடலூர் அருகில். அப்புறம் தென்பெண்ணை ஆறும் வரும்...கெடிலம் தென்பெண்ணை ஆற்றுடன் கலந்து வங்கக்கடலில் கலக்கிறது. திருக்கோவிலூர் போயிருக்கிறேன் பாண்டியில் இருந்தப்ப. அங்கிருந்துதான் இந்தக் கெடிலம் தொடங்கும்...ஆனால் இந்த ஆற்றில் பாறைகள் தான் அதிகம் இருக்கும் தண்ணீர் இருக்காது. மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் இருக்கும்.

      கீதா

      நீக்கு
  33. பசங்க குளிச்சாங்களா ஸ்ரீராம்….கமலாயலத்தில். செம பெரிய குளம்…..நீங்களும் ஒரு முங்கு போட்டிருக்கலாமே! இதெல்லாம் ஒரு ஃப்ரெஷ், தனி அனுபவம் ஸ்ரீராம். அடுத்த முறை எங்கேனும் நல்ல நீர் நிலை கண்டால் ஒரு முங்கு முங்கிட்டு வாங்க. நான் அப்படித்தான் எப்போதும் என் கையில் ஒரு எக்ஸ்ட்ரா ட்ரெஸ் இருக்கும்…நல்ல நீர் என்றால் குதித்துவிடுவேன் ஹா ஹா ஹா ஆனால் உடன் வரும் நபரைப் பொருத்துதான் ஹிஹிஹிஹி..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்..... // எங்கேனும் நல்ல நீர் நிலை கண்டால் //

      அதுதான்... அதேதான்!

      நீக்கு
  34. அந்த தூரத்தில் தெரியும் காளி ஆஹா செம செம…ஸ்ரீராம் ஓடும் பஸ்ஸிலிருந்து எடுத்தது அருமை!!! ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க ஸ்ரீராம். சிலை ரொம்ப ரொம்ப அழகு. நல்ல க்ளியரா வந்திருக்கே ஸ்ரீராம் எப்படி எடுத்தீங்க செம……கொஞ்சம் சிவன் போலவும் தெரிகிறார் காளி பார்வதியின் அம்சம் இல்லையா அதான் அர்த்த நாரீஸ்வரர் போல இருக்குமோ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அர்த்த நாரீஸ்வரர் போல இருக்குமோ...//

      அதிராவுக்கு நானும் அதேதான் சொல்ல நினைத்தேன் கீதா!

      நீக்கு
    2. //அதிராவுக்கு நானும் அதேதான் சொல்ல நினைத்தேன் கீதா!//

      அப்போ ஏன் சொல்லாமல் விட்டீங்க?:)

      https://i.ytimg.com/vi/yarIN_xi_08/hqdefault.jpg

      நீக்கு
    3. அதுதான் எனக்கும் புரியவில்லை!!!

      நீக்கு
  35. பைரவரும் முகநூலில் இருக்காரோ! ஃப்ரென்ட் ரிக்வெஸ்ட் எல்லாம் கொடுக்கறாரே!!! மீ நாட் இன் முகநூல் அதான் எனக்கு அனுப்பலையோ ஹா ஹாஹ ஹா ஹா ஹ்
    கீதா

    பதிலளிநீக்கு
  36. பிரயாணம் என்றாலே புளியோதரை, தயிர்சாதம், மிளகாய்ப்பொடி எண்ணையில் எண்ணை குளியல் போடும் இட்லிகள் ஆஹா ஆஹா அதைப் போல ஒரு ஆனந்தம்? ஊறின புளியோதரை தயிர்சாதம் இட்லி இதனை சாப்பிட்டு அனுபவிப்பதும் பயணத்தின் ஒரு பகுதி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  37. திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆமாம் மிகப் பெரிய கோயில். ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன். அப்போது பணிகள் நடந்து கொண்டிருந்தது. மிகப் பெரிய லிங்கம் உண்டே.!

    ஆமாம் ஸ்ரீராம் ஒரு காட்சியை எடுத்துக் கொண்டிருக்கும் போதே கூட காட்சி மாறிவிடும். அழகான படங்கள் ஸ்ரீராம். ஒவ்வொரு நிமிடக்காட்சியும் ரொம்ப அழகா இருக்கும். கலர் மாறுபடும். வானம் வசப்பட்டு தன் நிறத்தையும் மாற்றிக் கொள்ளும்…….”உனை நேரில் பார்க்கையில் கவிதை முட்டுது…அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது!! என் கேமரா முழி பிதுங்கி நிக்குது!!” நு பாடிடலாம்!!! ஹ ஹா ஹா ஹா

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ”உனை நேரில் பார்க்கையில் கவிதை முட்டுது…அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது!! என் கேமரா முழி பிதுங்கி நிக்குது!!” நு பாடிடலாம்!!! /

      ..ஹா. ஹா... ஹா.. அது காட்சிக்குப் புரியாதே!!!

      நீக்கு
  38. ஆஞ்சு வெகு அழகு. மை ஃபேவரிட் டூ. ஆஞ்சு அண்ட் முருகன்!! ஆமாம் ஸ்ரீராம் உங்கள் மக்கள் இருவருக்கும் திருவோணம் என்று சொல்லிருந்தீங்களே…ஏழு புள்ளி அஞ்சு!!! (எங்கள் வீட்டு ஜோசியர் (ஹா ஹா ஹா) என் கஸின் சொன்னது வைத்து சொல்றேன்!!!) அவரும் நல்லவரே! ஆஞ்சு அவருக்கு ஹல்வா கொடுத்தவர் ஆயிற்றே! அதனால கொஞ்சம் அல்வா கொடுத்துட்டா போச்சு!! ஹா ஹா ஹா….

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஆமாம் ஸ்ரீராம் உங்கள் மக்கள் இருவருக்கும் திருவோணம் என்று சொல்லிருந்தீங்களே…//

      ஆனால் இந்த ட்ரிப்பில் நான் மட்டும்தான்... பசங்க வரலை கீதா.

      நீக்கு
    2. ஓ ஒகே புரிந்தது!! இந்த ட்ரிப்..கும்பாபிஷேகம்...நீங்கள் பஸ்ஸில் சென்ற அதே நாளில்தான் நான் பாண்டிச்சேரிக்குப் போய்க் கொண்டிருந்தேன்.

      கீதா

      நீக்கு
  39. ஊருக்குச் செல்வது என்றாலே சுகானுபவம் தான் நீங்களும் வெகுவாகவே உங்கள் அம்மாவை நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.
    அட அந்தக் குளத்தில் போட் எல்லாம் இருந்ததா ஆஹா….செம இல்லை? இப்படித்தான் ஸ்ரீராம் நாம் தேடும் பொருள் வேறு ஏதேனும் தேடும் போது கிடைக்கும்…கிடைத்ததும் உடனே பொக்கிஷப்படுத்திவிடுங்கள்!!! பத்திரமாக பெயர் போட்டு ஃபோல்டர் போட்டு….. தேடும்படி இல்லாமல்…

    நான் இப்போது ஃபோட்டோக்களை தலைப்பிட்டு ஃபோல்டர் போட்டு சேவ் செய்து வருகிறேன் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது…

    கீதா

    பதிலளிநீக்கு
  40. பாண்டவ ஆறு செம ஸ்ரீராம் பார்த்ததும் படிகள் வேறு இருக்கா குளிக்க வேண்டும் போல் இருந்தது. மக்கள் இங்கு குளித்தார்களா? அழகா இருக்கே ஆறு. வழிதான் ம்ம்ம்ம் முதலில் மரங்களுக்குடையில் பசுமைக்கிடையில் தெரிந்த ஆறு இப்போதைய படத்தில் அப்படியே அதனுடேயே நடப்பது போல..ஓகே ஆனால் மரங்களை வெட்டாமல் பார்த்து ஒழுங்கு பண்ணி பசுமையை விடாமல் பாதையை அமைத்திருக்கலாம் அது இன்னும் ஆற்றிற்கு அழகு சேர்த்திருக்கும்…ஹூம் நம்மைப் போன்ற ஆர்க்கிடெக்ட் எல்லாம் இருப்பது யாருக்கும் தெரியலை பாருங்க ஹா ஹா ஹ ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாண்டவர்கள் அங்கு வந்து குளித்ததாகக் கதை உண்டு கீதா! அதுதான் பாண்டவ ஆறு.

      நீக்கு
    2. நினைத்தேன் பாண்டவர்கள் இங்கு வந்திருப்பாங்க போல அதான் பாண்டவ ஆறு நு பேர் உங்களிடம் கேட்கணும் என்று நினைத்து விட்டது....நீங்களே சொல்லிட்டீங்க...

      கீதா

      நீக்கு
  41. போட்டோக்கள் தொகுத்துத் தந்த விதம் ,சூப்பர். இது ஒரு ஃ பார்மாலிட்டி ஆகச் சொல்லவில்லை. இத்தனை போட்டோவையும் ஒரு லாஜிக்கான வரிசையில் தொகுப்பது என்னைப் பொறுத்த வரை சிரமம் . நல்ல நண்பர் உங்களுக்கு ,வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  42. அனைத்துப் படங்களும் அருமை.

    கரைபுரண்டு ஓடும் பெயர் தெரியா நதியும் அஸ்தமன வானின் பிரதிபலிப்போடு கமலாயக் குளமும் அழகு.

    சுவராஸ்யமான காட்சிகளின் தொகுப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. போட்டோக்களை நீங்கள் பார்த்துப் பாராட்டினால் ஒரு மகிழ்ச்சி. அதுதான்....!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!