வெள்ளி, 10 ஜூலை, 2020

வெள்ளி வீடியோ : நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்

சென்ற வாரம் விட்டுப்போன (கொஞ்சம் தாமதமாக எங்களுக்கு அனுப்பப்பட்ட) 'ஹாப்பி பர்த்டே எங்கள் ப்ளாக்' வீடியோ முதலில் ...



   (திரு துளசிதரன் அவர்கள் )

இந்த வார, இன்றைய பிறந்தநாள் வாழ்த்து வீடியோ அடுத்தது! 



  
============== X  ==============

சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக இந்த வாரமும் தேன் நிலவு பாடல்கள்.


சுசீலாம்மாவுடன் ஏ எம் ராஜா பாடி இருக்கும் பாடல்.  மிகவும் உற்சாகமாக ஆரம்பிக்கும் இசையுடன் பாடல் துவங்குகிறது.  அதிலேயே இளமையின் துள்ளல் இருப்பது போல தோன்றும்.  கொஞ்சும் குரலில் ஏ எம் ராஜாவும், இனிய குரலில் சுசீலாம்மாவும்...

ஜெமினிக்கு மிகவும் பொருத்தமான குரலாக அறியப்பட்டவர் ஏ எம் ராஜா.  பின்னர் பி பி ஸ்ரீனிவாஸ் குரலும் ஜெமினிக்குப் பொருந்தியது.

இன்று பகிர்ந்திருக்கும் இரண்டு பாடல்களுமே என் மாமா ஒருவருக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.  அவர் அடிக்கடி பாடிக்கொண்டே இருக்கும் பாடல்கள்.  



சின்னச்சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் 
அங்குமிங்கும் யார் வரவைத் தேடுது - துணை 
இங்கிருக்க யாரை எண்ணிப் பாடுது?

அல்லித்தண்டு போலவே  
துள்ளி ஆடும் மேனியை 
வெள்ளி நிலா 
அள்ளிக்கொண்டதோ...அதில் 
புள்ளி மயில் பள்ளிக்கொண்டதோ

புள்ளி போடும் தோகையை  
வெள்ளி வண்ண பாவையை 
அள்ளிக்கொண்டு போகலாகுமோ..நீயும் 
கள்வனாக மாறலாகுமா


பின்னி வைத்த கூந்தலில்  
முல்லை பூவை சூடினால் 
கன்னி நடை பின்னல் போடுமா....சிறு 
மின்னலிடை பூவை தாங்குமா

கன்னி உந்தன் கையிலே 
அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன்....அதில் 
அந்தி பகல் பள்ளிக்கொள்ளுவேன்



ஸ்ரீதர் தான் படமெடுக்கும்போது ஏ எம் ராஜாவுக்கு வாய்ப்பளிப்பதாய் சொல்லி இருந்தார்.  கல்யாணப் பரிசு படத்தில் அந்த வாக்கை நிறைவேற்றவும் செய்தார்.  பின்னர் விடிவெள்ளியில் இணைந்து பணியாற்றினாலும், இந்தப் படத்தில் இருவருக்குள்ளும் பிளவு/பிரிவு ஏற்பட்டது.  பின்னணி இசை சேர்க்காமல் கொஞ்சகாலம் முரண்டு பிடித்தாராம் ராஜா.   அப்புறம் ஒரு சிறு பிரிவுக்குப் பின் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இசை அமைக்க மீண்டும் ராஜாவை ஸ்ரீதர் அழைத்தும் அவர் வர மறுத்து விட்டாராம்.  மெல்லிசை மன்னர்கள் அந்தப் அப்படத்துக்கு இசை அமைத்தார்கள்.

மிகவும் திறமை பெற்றிருந்த ஏ எம் ராஜா தனது குண நலன்களால் அதிகப் படங்களுக்கு இசை அமைக்க முடியாமல் போனது ரசிகர்களுக்கு நிச்சயம் இழப்புதான்.

படகு துழா/ளாவும் ஓசையுடன் இசை ஆரம்பிக்கிறது.  பாடல் முழுவதும் அது தொடர்கிறது.  முடியும்போதும்...!  

படகில் போய்க்கொண்டே பாடும் பாடல்கள்தான் எத்தனை பார்த்திருக்கிறோம்?  கிட்டத்தட்ட அத்தனையுமே ஹிட் பாடல்கள்.  



இந்தப் பாடலில் சுசீலாம்மாவின் குரல் சிறு பிள்ளையின் குரல் போல கொஞ்சுகிறது.   பல்லவி, சரண முடிவுகளில் ஒரு இணைக்கும் இசை!


நிலவும் மலரும் பாடுது 
என் நினைவில் தென்றல் வீசுது 
கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது


சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா 
தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா 
மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை 
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்


முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா 
கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா மலர்முடிப்போம் மணம் பெறுவோம் மாலை சூடுவோம்
  நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம் 




120 கருத்துகள்:

  1. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்...    வணக்கம்.

      நீக்கு
    2. அதி இனிமை நிறைந்த வெள்ளிக்கிழமையில் பிறந்த நாள் காணும் அன்பு ஸ்ரீராமுக்கு
      மனம் நிறை நல்லாசிகள்.

      எங்கள் எல்லோருடைய ஆசிகளும் உங்களைச் சேர்கின்றனமா.
      மிகப் பிடித்த தேன் நிலவுப் பாடல்களை வழங்கி
      மனதைத் துள்ள வைத்துவிட்டீர்கள்.

      எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத இனிமை.
      ஏ எம் ராஜாவின் இசைப் பாதியில் தொலைந்தது
      நஷ்டம் என்றாலும்
      கொடுத்தவை நினைவில்.

      என்றும் வாழ்க வளமுடன். ஸ்ரீராம் .

      நீக்கு
    3. இனிய வணக்கம் வல்லிம்மா...  வாங்க...    மறுபடியும் வாழ்த்தா?   எவ்வளவு இடத்தில்!   நன்றி அம்மா.

      நீக்கு
  3. சின்னச் சின்ன கண்ணிலே
    வண்ண வண்ண ஓவியம்..
    அங்குமிங்கும் யார் வரவைத் தேடுது - துணை இங்கிருக்க யாரை எண்ணிப் பாடுது!..

    அழகு.. அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அந்த ஆரம்ப இசையே துள்ளலை ஆரம்பிக்கும்!   நன்றி துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
  4. நமது பிளாக்கில் நாமே புதிதாகப் படிப்பது, கேட்பது புதிய அனுபவம்.  வெள்ளி வீடியோவில் மற்றவர்கள் கமெண்ட் செய்வதிருக்க, நான் புதிதாக வீடியோ பார்த்து, ஆடியோ கேட்டு உங்கள் அன்பில் நனைந்து நன்றி சொல்கிறேன்.  இனிய ஆச்சர்யம்.  யாருடைய ஏற்பாடு என்று சரியாய் யூகிக்க முடியவில்லை.  நல்ல ஒருங்கிணைப்பு. 

    கீதா அக்கா பேசுவது மட்டும் மற்றவர்கள் பேசுவதில் கரைந்து போய்விட்டது.  உங்கள் அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்...  நன்றி.  நன்றி.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் ஸ்ரீ கௌதமன் ஜியின் ஏற்பாடு ஸ்ரீராம்.
      அன்பான மாமா.

      நீக்கு
    2. கௌதமன் சாரின் ஏற்பாடு தான். நானும் பானுமதியும் பேசும்போது ரமாவின் குரல் ஓவர்லாப் ஆகிவிட்டது. எங்கள் இருவரின் வாழ்த்துகளும் சரியாகக் கேட்கவில்லை. ரஞ்சனியின் குரலும் கரைந்து விட்டது.

      நீக்கு
    3. இது பரவாயில்லை. நான் முதலில் அனுப்பி இருந்த வீடியோ வந்திருந்தால் எல்லோரும் பயந்து போயிருப்பீங்க! கௌதமன் சார் அதைப் பார்த்த அதிர்ச்சியில் என்ன செய்வதுனே புரியாமல் தவிச்சார். அப்புறமா நான் வேறே அனுப்பி அவரைக் காப்பாற்றினேன்.

      நீக்கு
    4. //கௌதமன் சார் அதைப் பார்த்த அதிர்ச்சியில் என்ன செய்வதுனே புரியாமல் தவிச்சார்.//

      ஹா...  ஹா...  ஹா...   அதையும் வெளியிட்டிருக்கலாமோ!

      நீக்கு
    5. வீடியோவை ரிப்பேர் செய்து, பரிவையையும் சேர்த்து இப்போ போட்டிருக்கேன். சரியா வருதா என்று பார்த்துச் சொல்லவும்.

      நீக்கு
    6. இப்போது சரியாய் இருக்கிறது.

      நீக்கு
    7. இப்போ நான் பேசினது, பானுமதி பேசினது எல்லாம் சரியா வந்திருக்கு. ரஞ்சனி பேசியது தான் என் வரை சரியாப் புரியலை. குரல் எல்லாம் கேட்கிறது. ஆனால் என்ன பேசுகிறார் என்பது தெளிவாய்ப் புரியலை. ரமாவும், வல்லியும் பேசியது மிக அருமையாக் கேட்டது. அதே போல் கீதா ரங்கன் பாடலும். கில்லர்ஜி, 21 என்றுதான் சொன்னார். பரிவை மிக மெதுவாகப் பேசி இருக்கார். நெல்லைத்தமிழன் ஏதோ முணுமுணுத்துட்டுப் போயிட்டார். துளசிதரன் தெளிவாய்ப் பேசி இருக்கார்.

      நீக்கு
    8. எங்கள் ப்ளாக் மற்ற ஆ"சிரி"யர்கள் பேசினது சரி, மற்ற வாசகர்களும் எப்படிப் பாடினாங்க? யாரெல்லாம் பாடினாங்க?

      நீக்கு
    9. மானசீகமாகப் பாடினார்கள்!

      நீக்கு
    10. அற்புதமான பதிவு!கௌதமன் ஜி. மனம் நிறை வாழ்த்துகள். உறசாகத்துடன் மற்ற முயற்சிகளையும தொடரவும் வாழ்த்துகள்.!!

      நீக்கு
  5. பாடல் பாடி வாழ்த்திய கீதா ரெங்கனுக்கும்,  இனிய ஆச்சர்யமாக வாழ்த்தில் இணைந்த மாலா மாதவனுக்கும், நண்பர் அரவிந்தனுக்கும், குரலை முழுமையாகக் கேட்க முடியாமல் போனாலும் கீதா அக்காவுக்கும், முதல்முறை குரல் கொடுத்திருக்கும் நெல்லைத்தமிழனுக்கும், ரமா ஸ்ரீனிவாசனுக்கும், துளஸிஜிக்கும், அன்பு நண்பர் கில்லர்ஜிக்கும், ரஞ்சனி அக்காவுக்கும்,  குரலிலேயே ஒரு டன் அன்பு வைத்திருக்கும் வல்லிம்மாவுக்கும்.   பாச நண்பர் பரிவை குமாருக்கும் எனது நன்றி.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானு அக்கா பெயர் விட்டுப்போய் விட்டது...  நன்றி.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான பிரார்த்தனைகளுக்கு நன்றி கமலா அக்கா...   வாங்க...

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்று பிறந்த நாள் காணும் உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் வாழ்வில் பல நன்மைகளை இனிதே பெற்று சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    முதலில் எ. பியின் வாழ்த்துகள் வீடியோவை பார்த்தேன். அதிலிருந்து உங்களுக்கு இன்று பிறந்த நாள் என்ற செய்தியை ஊகித்து கொண்டேன். அனைவரும் தூங்கி கொண்டிருப்பதால், ஒலியுடன் கேட்க முடியவில்லை. பிறகு கேட்கிறேன். சகோதரி வல்லி சிம்ஹனும் இன்றைய கருத்தில் அவரின் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.அவர் மூலமும் தெரிந்து கொண்டேன்.அவருக்கும் என நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. பதிவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..எதுகை ன்.ண் கொண்ட பெரும்பாலான பாடல்களும் இயைபுத் தொடை நச்சென அமைந்த பெரும்பாலான பாடல்கள் ஜெயித்திருக்கின்றன.இந்தப் பாடல்ளைப் போலவே...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய தேன் நிலவு படபாடல்களும் தேன் போன்றவை தான். இனிமையான குரலில் ஏ.எம்.ராஜாவும். பி.சுசிலா அவர்களும் இணைந்து பாடிய இந்த பாடல்கள் பல முறை கேட்டு ரசித்தவை. எப்போது கேட்டாலும் கேட்க கேட்க திகட்டாதவை. இன்றும் மீண்டும் பிறகு கேட்டு ரசிக்கிறேன்.

    படத்தை பற்றிய சில விபரங்களையும் தெரிந்து கொண்டேன். நன்றி. ஆமாம். நீங்கள் சொல்வது சரியே..! இதுவரை படகில் செல்லும் பல பாடல்கள் பெரிதளவில் வரவேற்பை பெற்றிருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.  இந்தப் படத்தில் எல்லாமே இனிமையான பாடல்கள் .

      நீக்கு
  10. அனைவருக்கும் நல்வரவும், வாழ்த்துகளும், வணக்கமும். தொடர்ந்து அனைவரும் பிரார்த்தனைகள் செய்து இந்தக் கொடிய அசுரனின் பிடியிலிருந்து வெளியேற எல்லாம் வல்ல அம்பிகையைப் பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம். பதிவில் வாழ்த்து வீடியோக்களை மட்டும் பார்த்தேன். மற்றவை இனி படிக்கணும். படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   வணக்கம்.   கொரோனா சென்னையை விட்டு வெளியூரெல்லாம் செல்ல ஆரம்பித்திருக்கிறது போல...   பிரார்த்திப்போம்.  ஏதோ மகரத்திலிருந்து தனுசு போவதால் பாதிப்பு குறையும் என்றொரு செய்தி பார்த்தேன்.   ஏதேதோ நம்பிக்கைகள், ஆறுதல்கள்...!

      நீக்கு
    2. எதுவுமே தனுசு பக்கம் வரவேண்டாம் என்று சொல்லத்தான் ஆசை. அது இங்க போகுதுங்கறாங்க, இல்லை அந்த ராசிக்குப் போகுதுங்கறாங்க...முன்னேற்றம்தான் கண்டபாடில்லை.

      நீக்கு
    3. என்னவோ போங்க நெல்லை...    டல்லடிச்சு போகுது.

      நீக்கு
    4. மகரத்துலந்து தனுசுக்கு போனலும் அடி தள்ளி நிக்குதா?

      நீக்கு
  11. தேன் நிலவு படத்தில் அனைத்துமே பிடித்த சமாசாரங்கள். இயக்குநர் ரொம்பவே பிடிக்கும். பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் என மறக்க முடியாத ஒரு படம். பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  12. இன்றைய இரு பாடல்களும் மிக அருமை. கண்ணை மூடிக்கிட்டு எந்த ஏ எம் ராஜா, ராகவன் பாடலைப் போட்டாலும் ரசிக்கலாம்.

    சின்ன என்ற வார்த்தையோடு ஆரம்பிக்கும் அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆவதன் ரகசியம் என்ன? (சின்னச் சின்ன கண்ணனுக்கு, சின்னஞ்சிறு கிளியே, சின்னமணிக்குயிலே)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னஞ்சிறு வயதில், சின்னக்கனே சித்திரக்கண்ணே கேளம்மா...    நீங்கள் சொல்வது போல இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றனதான்!

      நீக்கு
  13. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம். மென்மேலும் இறைவன் ஆசிர்வர்த்திக்க எங்கள் பிரார்த்தனை என்றும் உண்டு.

    பதிலளிநீக்கு
  14. இரண்டு பாடல்களும் அருமை ஜி.
    ஸ்ரீராம்ஜி அவர்களுக்கு எமது இனிய 21-வது பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  நன்றி கில்லர் ஜி...   வீடியோவில் 23 என்று சொல்லி இருந்தீர்களோ?   சொல்லி இருக்கிறீர்கள்!

      நீக்கு
    2. அன்பின் கில்லர் ஜி!..
      21/23 இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி இல்லையோ!...

      இளமை ததும்பும் பதினாறு!..
      இதுவே இனிமை.. என்றும் பதினாறு!...

      நீக்கு
    3. சேச்சே...   எல்லாவற்றிலும் ஒரு நியாயம் இருக்கணும்..   23 ஓகே துரை செல்வராஜூ ஸார்..   அதையே வச்சுக்கறேன்!

      நீக்கு
    4. ஸ்ரீராம்ஜி காணொளியில் நன்றாக கேளுங்கள் 21-தான் சொன்னேன். நான் வாக்கு மாறுவதில்லை.

      நீக்கு
    5. வணக்கம் சகோதரரே

      ஹா.ஹா.ஹா. கருத்து உரையாடல்கள் (கலாய்த்தல்கள்) அருமையாக உள்ளது
      21 ஐ மாற்றிப் போட்டால் தாங்கள் பதிவில் விவரித்த உங்களின் பிரபு போன்ற பால்ய நண்பர்கள் எங்கிருந்தாலும் "ஆராய்ச்சி மணி" அடித்துக் கொண்டு வந்து விடுவார்கள். சரியென.. 23 ஐ மாற்றிப் போட்டு யோசித்தாலும், 3 ன் அடுத்த எண்கள் வந்து அதை"இடிக்கும்." ஹா.ஹா.ஹா

      பொதுவாக பிறந்தநாளன்று வயதை சொல்லக் கூடாது என சொல்வார்கள். அதனால் எங்கள் குழப்பம் தீர நீங்கள் பதிவில் (நான் தந்ததை போன்று) எப்பவாவது சிறு க்ளு கொடுத்து விடுங்கள்.

      நானும் சும்மா கலாய்த்தேன்.தவறாக நினைக்க வேண்டாம். இரண்டு நாட்களாய் வைரஸ மிக அருகிலே (எங்கள் அப்பார்ட்மெண்ட் அருகில்) வந்து பயமுறுத்துவதால், இந்த வம்பு பேசுவது மனதுக்கு கொஞ்சம் உற்சாகமளிக்கிறது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    6. அதானே...    (கில்லர்) ஜியா சும்மாவா?   கமெண்ட்டை போட்ட பிறகு நானும் உடனே சந்தேகப்பட்டு கேட்டு தெளிந்தேன்...

      நீக்கு
    7. கமலா அக்கா...   நானும் க்ளூ கொடுக்கணுமா?  காதைக் கொண்டாங்க...   கில்லர் ஜி சொல்லி இருக்கும் எண்ணோடு பத்தைக் கூட்டி, ஒன்றை மைனஸ் பண்ணி, ஐந்தால் வகுத்து, வரும் விடையை மூன்றால் பெருக்கி, ஐந்தைக் கூட்டுங்கள்.

      நீக்கு
    8. பத்தைக் கூட்டி.... வகுத்து....

      ஆகா...
      இதுக்கு சும்மாவே இருக்கலாம்!..

      நீக்கு
    9. இல்லை...   அவர்தான் க்ளூ கொடுக்கச் சொன்னார்...

      நீக்கு
    10. ஹா ஹா ஹா அதானே.. கூட்டி, வகுத்து கழித்து.. தலை சுத்துது. "இதற்கு நீ க்ளு ஐடியா தராமலே இருந்திருக்கலாம்" என சுத்தும் போது இதயத்திற்கு நேராக வரும் ஒரு என் முகம் சொல்லி நகர்கிறது. ஹா.ஹா.

      நீக்கு
    11. //சுத்தும் போது இதயத்திற்கு நேராக வரும் ஒரு என் முகம் //

      ஹா...  ஹா...  ஹா...  நல்ல கற்பனை.

      நீக்கு
    12. //இரண்டு நாட்களாய் வைரஸ மிக அருகிலே// - எனக்கு என்னவோ அரசு மக்களை டார்ச்சர் செய்வதுதான் அதிகம் என்று தோன்றுகிறது. எனக்கு ஏற்படும் மன உளைச்சல்களை எழுதமுடிவதில்லை. அப்படி இருக்கிறது. இந்த டாக்டர்களும் (பல) இதனை வாய்ப்பாக வைத்து நோயாளிகளை பலிகடாவாக்குகிறார்களோ? இதைப்பற்றியே மற்றவர்கள் அனுபவமாக எழுதலாம்.

      நீக்கு
    13. ஒவ்வொரு டாக்டரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள்.  ஹோமியோபதி, சீதா மருந்துகள் பற்றியும் அந்தந்த துறை மருத்துவர்கள் அந்த மருந்துகளை சாப்பிடும் முறை பற்றிச் சொல்வதும் மாற்றி மாற்றி இருக்கிறது.   யாருக்கும் ஒன்றும் ஐடியா இல்லை என்று தோன்றுகிறது!

      நீக்கு
  15. நிலவும் மலரும்...மனதிற்கு இதமான பாடல்.

    பதிலளிநீக்கு
  16. யாரோ சொல்றாங்க!..
    பதினாறு என்பதெல்லாம் பெண் பிள்ளைகளுக்காம்...

    அந்தக் கால மார்க்கண்டேயர் கணக்கு
    இதுக்கு ஒத்து வராதாம்!..

    அரனால் என்ன?..
    என்றென்றும் பதினெட்டு!...

    இது தான் சரி...

    பதினெட்டு..ங்கிறதே பெருக்கம் தான்..
    பெருகிப் பெருகி இருந்தாலும் பதினெட்டு -
    ஆடிப் பதினெட்டு தான்!...
    ஆடிப் பெருக்கு தான்!...

    ஆக..
    ஆடிப் பெருக்கினாலும்
    பாடிப் பெருக்கினாலும்
    கூடிப் பெருக்குவதே -

    குணக் குன்றுகளுடன்
    கூடிப் பெருக்குவதே
    நட்பைத்
    தேடிப் பெருக்குவதே
    எங்கள் பிளாக் - ஸ்ரீராம்!..
    என்றென்றும் வாழ்க பதினெட்டாக..
    என்றென்றும் வாழ்க தமிழ் முத்தாக!..

    அன்புடன்,
    துரை செல்வரஜூ..

    பதிலளிநீக்கு
  17. ஸ்ரீராம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    இரு காணொளிகளும் அருமை...

    என்றைக்கு கேட்டாலும் திகட்டாத பாடல்கள்...

    பதிலளிநீக்கு
  18. தேன் சொட்டும் பாடல்கள். ஆனந்த வெள்ளி.
    ஸ்ரீராமுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நல்கீதமாகக் கடக்கட்டும் காலம்!

    பதிலளிநீக்கு
  19. என்னை மறந்ததேன்..
    தென்றலே.. தென்றலே!..

    - இப்படிக்கு
    மின்னஞ்சல்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்ன மின்னஞ்சல்? எனக்கும் அனுப்புங்களேன்!

      நீக்கு
    2. துரை செல்வராஜு ஸார்.. உடனே பதிலும் தேதியும் அனுப்பி விட்டேன். முன்னரும் அப்படியே. என் மெயில்கள் உங்களுக்கு வருவதில்லையா?

      நீக்கு
  20. தேன் நிலவு பாடல்கள் என்றும் ரசிக்க்கூடியவை

    பதிலளிநீக்கு
  21. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்ரீராம் சார்..

    பதிலளிநீக்கு
  22. இரண்டு பாடல்களுமே இனிமையான பாடல்கள். கேட்டு ரசித்தேன்.

    மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஸ்ரீராம். கேஜிஜி அசத்துகிறார் - புதிய புதிய முயற்சிகளால்! பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. KGG இப்போ LKG யிலிருந்து UKG போகலாமா? கற்றுக்கொள்ளும் நேரத்தில் பொழுது போவதே தெரியவில்லை! நல்ல பொழுதுபோக்கு. WORD, MOVIE MAKER, KDP எல்லாமாக சேர்ந்து சுவாரஸ்யமாக பொழுது போகிறது.

      நீக்கு
  23. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம், வாழ்க வளமுடன் .

    அனைவர் வாழ்த்தும் மிக அருமை.

    பாடல்கள் கேட்டேன்.
    இனிமையான பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  24. //படகில் போய்க்கொண்டே பாடும் பாடல்கள்தான் எத்தனை பார்த்திருக்கிறோம்? கிட்டத்தட்ட அத்தனையுமே ஹிட் பாடல்கள்.//

    ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.படகில் பாடி கொண்டு போகும் பாடல்கள் அத்தனையுமே ஹிட் பாடல்கள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். உடனே வரிசையாக நிறைய பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.

      நீக்கு
  25. Hi sriram 🥳🥳🥳🥳

    🎂🍰🍭🍬

    Wishing you a beautiful day with good health and happiness forever. Happy birthday.

    Angel.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட? ஏஞ்சல் வந்திருக்காங்க. தேவதையைப் போலவே கண்ணுக்குத் தெரியாமல் வந்திருக்காங்க!

      நீக்கு
    2. ///
      Geetha Sambasivam10 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 12:52
      அட? ஏஞ்சல் வந்திருக்காங்க. தேவதையைப் போலவே கண்ணுக்குத் தெரியாமல் வந்திருக்காங்க!///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீசாக்கா:) கண்ணுக்கு தெரியும் தேவதையை விட்டுப்போட்டு:)[என்னைச் சொன்னேன்:)] கண்ணுக்குத் தெரியாத தேவதையைத் தேடிக்கொண்டிருக்கிறீங்க.. ஹையோ இத நான் ஜொள்ளல்லே ஒரு அசரீரி ஒலிக்குது:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. வாங்க ஏஞ்சல்...   வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
    4. அதிரா...  உங்களையும் ஏஞ்சலையும் பார்த்தால்தான் கீதா அக்கா உட்பட எல்லோருக்கும் உற்சாகம் அதிகமாகிறது.  அதுதான் ஏஞ்சலைப் பார்த்ததும் உடனடி வெளிப்பாடு.

      நீக்கு
  26. ஸ்ரீராமை அவர் பிறந்த நாளில் வாழ்த்துவதில் மற்றவர்களுடன் சேர்ந்து நானும் கலந்து கொள்கிறேன். உங்கள் எழுத்து வன்மை மேலும் சிறக்க வாழ்த்துக்கள், ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  27. ஜெமினியின் துள்ளலும், அந்த இழைதலும் அடுத்த நாள் பகுதிக்கும் தொடர்ந்ததில் மகிழ்ச்சி.

    தேன் நிலவு படத்தில் வரும் 'ஓஹோ எந்தன் பேபி' பாடல் காட்சி ஸ்ரீநகர் டால் லேக்கில் எடுக்கப் பட்டதாம். தனக்கு டூப் போட வேண்டாம் என்று தீர்மானமாகச் சொல்லி அந்தப் பாடல் காட்சி முழுவதும் அவரே பங்கு கொண்டதாகச் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு எதற்கு டூப் போடவேண்டும்? பாடல் காட்சிதானே?

      நீக்கு
    2. ஶ்ரீராம், அலைசவாரின்னால் சுலபமாப்பா! ஜெமினி சூப்பர் ஃபிட்.

      நீக்கு
    3. ஸ்ரீராமுக்கு இன்னும் புரியல
      வல்லிம்மா.
      அபுரி வேலை செய்யுது. :))

      நீக்கு
    4. ஓ...    இந்தக் காட்சிக்கு வைஜயந்தியின் அம்மாதான் தடை சொன்னதாகவும், இந்தப் படத்திலோ, முந்தைய பாடத்திலோ ஏற்பட்ட ஒரு சிறு விபத்தினால் அவர் பயந்திருந்ததாகவும், பின்னர் அவரை ஏமாற்றி, வைஜயந்தியை வைத்து அந்தக் காட்சியை எடுத்ததாகவும் படித்திருக்கிறேன்.

      நீக்கு
    5. @Sriram, It is not Vaijayanthi's mother. Patti Yadhugiri who opposed it. Since Vaijayanthi was minor girl and the divorce case was running between her parents Vaijayanthi was with her grandmother Yadhugiri, who was appointed by the court,I think.

      நீக்கு
    6. //It is not Vaijayanthi's mother. Patti Yadhugiri //

      ஆம், ஆம்...    ஞாபகத்திலிருந்துதான் எழுதினேன்.  சமீபத்தில் காலச்சக்கரம் நரசிம்மா கூட இந்த சம்பவம் பற்றி பேஸ்புக்கில் எழுதி இருந்தார்.

      நீக்கு
  28. பிறந்தநாள்.. இன்று பிறந்தநாள்... பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்ல்லாம் மறந்தநாள்...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்...

    ஆஆஆஆஆஆஆ ஒருமாதிரி இன்று பிறந்தநாளை வெளியே கொண்டு வந்திட்டார் கெள அண்ணன்:)).. இப்பூடித்தான் ஒருநாள் படமும் வருமாக்கும் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  29. எங்கள் புளொக் பிரித்தானியாக் கிளை சார்பாக இந்தப் பரிசை, ஸ்ரீராமுக்கு, பிறந்தநாள்ப் பரிசாக அளிப்பதில் ரொம்ம்ம்ம்ம்பப் பெருமை அடைகிறோம்ம்...:)

    https://img.dinamalar.com/business/news/9695050.jpg

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நன்றி...  

      அந்தக் காரும் எனக்குதானா?!!

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).... அல்லோஓ கார் மட்டும்தேன் உங்களுக்காக்கும்:)...

      நீக்கு
  30. ஆஆஆஆஆஆஆஆஆ நான் கீசாக்காவைப் பார்த்திட்டேன்ன் கீசாக்காவைப் பார்த்திட்டேன்ன் நீண்ட நாட்களின் பின்பு பார்த்திட்டேன்ன்ன்ன்ன்.. ஹா ஹா ஹா..

    கில்லர்ஜி தேவகோட்டையிலயா இருக்கிறார்?:))...

    ஆஆஆஆஆஆஆ நெல்லைத்தமிழன் எங்கயோ வெளியில நிண்டு ரெக்கோர்ட் பண்ணியிருக்கிறார் ஹா ஹா ஹா

    அனைவரது வீடியோ ஓடியோ வாழ்த்துக்களும் அழகு.. எங்களோட பரிசும் அழகு எனச் சொல்லி அமர்கிறேன்:))

    பதிலளிநீக்கு
  31. இரு பாடல்களுமே அழகு... அதிகம் இலங்கை ரேடியோவில் ஒலிச்சு ஒலிச்சே மனதில் பாடமாகிப் போன பாடல்கள்...

    அதுசெரி.. பிறந்தநாள் எனில் பிறந்தநாள்ப் பாட்டுக்கள் போடாமல் தேனிலவுப் பாட்டுக்கள் போடலாமோ?:)) ஹையோ என் வாய்தேன் நேக்கு எடிரி... மீ ஓடிடுறேன்ன்ன்ன்ன்ன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எல்லாம் பிறந்த நாள் பாட்டுப் போட்டால் போர் அடித்துப் போகும் அதிரா!  இப்படி பிறந்த நாளுக்கு வாழ்த்து வரப்போகிறது என்றே எனக்குத் தெரியாது!

      நீக்கு
  32. அன்பின் ஸ்ரீராம்...

    அந்த மின்னஞ்சல் தங்களுக்கு கிடைக்க வில்லை போல இருக்கிறது...

    மீண்டும் அங்கே தொடர்கிறேன்...
    சிரமத்திற்கு வருந்துகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அனுப்பும் மின்னஞ்சல்களுக்கும், உங்களுக்கு பதிலாய் அனுப்பும் மின்னஞ்சல்களுக்கும் உங்களிடமிருந்து பெற்றுக்கொண்டதற்கான பதில் இல்லை.  என் ஸ்பாம் பகுதியிலும் உங்கள் மெயில் எதுவும் இல்லை.  

      நீக்கு
  33. விடியோ வாழ்த்து நன்றாக இருக்கிறது
    அந்த கேக்!

    பதிலளிநீக்கு
  34. கீதா மாமி எப்போதும் "என் போட்டோ எங்கேயும் போடவில்லை" என்று பெருமை அடிப்பார். தற்போது விடியோவே  வந்து விட்டது. பெர்மிஷன் வாங்கிவிட்டீர்களா?  நெல்லை தப்பி விட்டார்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னோட வலைப்பக்கத்திலேயே போட்டிருக்கேனே! நான் பெருமை எல்லாம் அடிச்சுண்டதில்லை. பழைய, புதிய படங்கள் முகநூலிலும், வைகோ சார், துளசி ஆகியோர் பதிவுகளிலும் நிறையவே வந்திருக்கின்றன. நான் அனுப்பாமலா அவர் வீடியோ போடுவார்? :)))))))) நானாக என் படத்தைப் போட்டுக்கொண்டதில்லை. பழைய படங்களைத் தவிர்த்து!எங்க கல்யாண ஃபோட்டோ கூடப் போட்டிருக்கேன்.

      நீக்கு
  35. இப்போது தான் வலைத்தளம் வந்தேன்.
    வந்ததும் தான் தெரிந்தது இங்கே பிறந்து நாள் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்திருப்பது!
    இனிய பாடல்களுடன் பிறந்த நாளைக்கொண்டாடியிருக்கும் சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! அனைத்து செல்வங்களும் இன்று மட்டுமல்ல, என்றும் நிறைந்து உங்களை மகிழ்வித்துக்கொண்டிருக்க அன்புடன் வாழ்த்துகிறேன்!!

    பதிலளிநீக்கு
  36. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்ரீராம். வாழ்க வளமுடன், நலமுடன் :)!

    பதிலளிநீக்கு
  37. பிறந்த நாள் வாழ்த்து காணொலிகளை ரசித்தேன்
    அருமை
    வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  38. Sorry sri ramji. Many more happy returns of the day. May God bless you with good health nd happiness.

    Enjoyed listening the songs too.

    Gowtham sir, Thank you very much for the video here.

    Thulasidharan

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!