புதன், 29 ஜூலை, 2020

வில்லன் to காமெடியன் - கவர்ந்தவர் யார்?


பானுமதி வெங்கடேஸ்வரன் : 


1) ஒருவரை ஒருவர் தாக்கி, கட்டிப்புரண்டு, ரத்தம் வழிய சண்டை போட்டதை நேரில் பார்த்திருக்கிறீர்களா?



# ஓரிரு முறை பார்க்க நேரிட்டது உண்டு.



& வேலையில் சேர்ந்த சில வாரங்களிலேயே அப்படிப் பார்க்கவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. தொழிற்சங்க தகராறு பெரிய அளவில் தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட காலகட்டம் (1972). ஒரு யூனியனைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவரை போட்டி யூனியன் ஆள் தாக்கிய சம்பவம். இப்பொழுது நினைத்தாலும் பயங்கரமாக இருக்கிறது. 



2) சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றவர்கள் கொலையுண்ட தினங்களில் ஏதாவது பாதிப்புக்கு உள்ளானீர்களா?


# இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் எல்லாப் பரிமாணங்களையும் கண்டதும் கேட்டதும் உண்டு. நண்பரின் உறவினரான போலீஸ் ஆபிசர் மாணவர்களுக்கு உதவ எண்ணிப் போய் வாயில் பெட்ரோல் ஊற்றப் பட்டு தீவைத்து மாண்ட அதிர்ச்சி இன்றும் வலிக்கிறது.

இந்திரா சென்னையில்  "தாக்கப்" பட்டதாக வதந்தி பரவி பஸ் ரயில் இல்லாமல் பத்து கிமீ நடந்ததுண்டு. 

ராஜீவ் மரணத்தன்று பிள்ளைகள் நகரில் திண்டாடி மறுநாள் வீடு வந்தனர். போலீஸ் தகவல் மூலம் அவர்கள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப் பட்டது பெரிய ஆறுதல்.



இந்தி எதிர்ப்பில், திருப்பூர் ஆய்வாளர் கொளுத்தப்பட்ட சோகம் போகுமுன், நாகையிலிருந்து சென்னை போய்க்கொண்டிருந்தேன்.

மதியம் வீட்டிலிருந்து கொண்டு வந்த இட்லியை சாப்பிட்டுவிட்டு, இலை, பேப்பர் இவற்றைக் குப்பையில் போடப்போகும் போது, ஒரு போலீஸ்காரர் வந்து, தம்பி எங்கே போறீங்க என்று கேட்டு, நான் மாணவனில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின், ஸ்டேஷனை விட்டு வெளியேறிவிடுங்கள். சென்னை போகும் ரயிலை கலகக்காரர்கள் கொளுத்தப்போகிறார்கள் என்றார். நான் சமர்த்தாக ஸ்டேஷன் விட்டு வெளியே வந்தால், ..
வெகு நீளமாகப் போகிறதே, ஆர்பாட்டங்களும் நானும் என்றொரு பதிவே எழுதிவிடலாமோ?


& இந்திரா காந்தி மரணத்தன்று நான் அலுவலகத்தில் இருந்தேன். விவரம் தெரிய வந்தவுடன் அலுவலக போக்குவரத்துப் பேருந்துகளை பாதுகாப்பு கருதி ரத்து செய்துவிட்டார்கள். காரில் சென்ற சில பெரிய அதிகாரிகள் பாதி வழியிலேயே கார்கள் நிறுத்தப்பட்டு எங்கும் செல்ல இயலாமல் தேங்கினர். ஒரு கூட்டமாக என் நண்பர்களுடன் மாலை ஐந்தரை மணிக்கு கத்திவாக்கம் ஸ்டேஷனுக்கு சென்று காத்திருந்தோம். ஏழரை மணி சுமாருக்கு ஒரு லோகல் ட்ரைன் வந்தது. அது பீச் ஸ்டேஷன் சென்று அடையும்போது இரவு மணி பத்து. அங்கிருந்து பத்தரை மணிக்குக் கிளம்பிய மின்வண்டித் தொடர் குரோம்பேட்டை சென்றடைய இரவு மணி பன்னிரண்டு ஆகியது. 



நல்ல வேளை - ராஜீவ் மரணம் விவரம் எனக்கு அதிகாலையிலேயே என் தம்பி மூலம் தெரியவந்தது. அதனால் வெளியில் எங்கும் செல்லவில்லை. எம்ஜியார் மரணம் குறித்த செய்தியும் காலையில் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் தெரிய வந்தவுடன் வீடு திரும்பிவிட்டேன்.  



3) முகநூலில் தங்கள் அன்னியோன்யத்தை பறைசாற்றிக் கொள்ளும்தம்பதிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?



# பிறர் சரசத்தை ஒளிந்திருந்து பார்ப்பது ஒரு வக்ரம் (வாயரிசம்) என்றால் இது ஒரு விபரீத வக்ரம், ரிவர்ஸ் வாயரிசம்.



4) 


# கண்பார்வை மூலம் பெறப்படும் தகவல் அடிப்படையில் நம் மூளை பாலன்ஸ் செய்யத் தேவையான சமாளிப்புகளை நிர்வகிக்கிறது. அது இல்லாமல் போவதால் தடுமாறுகிறோம்.

5)  வில்லனாக இருந்து காமெடியன்களாக மாறியவர்களில்(பாலையா, அசோகன், ஆனந்தராஜ்) உங்களைக் கவர்ந்தவர் யார்?


# கவர்ந்தவர் பாலையா. மற்றவர்கள் சற்று எரிச்சல் தரும் வகை.

================


மின்நிலா இப்போதான் கொஞ்சம் வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கு. வாரம்தோறும் அதிக அளவில் படிக்கப்படுகிறது என்பது doctroid தள விவரங்களிலிருந்து தெரிய வருகிறது. 


உங்கள் நண்பர்களுக்கும் மின்நிலா சுட்டி https://docdro.id/hHsETm5 அனுப்பி வைத்து அவர்களை மின்நிலாவுக்கு அறிமுகப்படுத்துங்கள். 

மின்நிலா பற்றிய விவரங்கள் அதிகம் விளம்பரப்படுத்தப்பட்டால், அதன் மூலம் பிரபலம் ஆவது, எங்கள் ப்ளாக் ல எழுதும் எல்லோருமே. 

மின்நிலாவின் ஒளியில் எல்லோரும் limelight அடைய வாழ்த்துகள். 

==========

இரு வாரங்களுக்கு முன்பு புதன் பதிவில் Dumb charades முறையில் தமிழ் சினிமா பெயர் / தமிழ்ப் பழமொழி எதையாவது உணர்த்தும் காணொளி காட்சிகள் உங்களைக் கேட்டிருந்தேன். 

அது போட்டி இல்லை. ஒரு சிறு யோசனை. ஒரு வாரத்தோடு முடிகின்ற சமாச்சாரம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் எங்களுக்கு அனுப்பலாம். 

பதினைந்து வினாடிகளுக்குள் இருக்கும் காணொளி காட்சிகள் engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். அல்லது உங்கள் அலைபேசியிலிருந்து 9902281582 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். 

இது என்ன தமிழ்ப் படம்? 


நன்றி. 
மீண்டும் சந்திப்போம்! 

 -_-_-_-_







118 கருத்துகள்:

  1. 15 நொடியில். என்ன சொல்ல முடியும்னு யோசிக்கிறேன்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கௌதமன் ஜி ,
      சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கலை
      கை வரவில்லை. நீண்ட சொற்பொழிவு தான் பழக்கமாகிவிட்டது.:)

      நீக்கு
    2. // சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கலை// இங்கே dumb charades ல எதுவுமே சொல்லக் கூடாது! சுருங்கக் கூட!

      நீக்கு
    3. இங்கே dumb charades ல எதுவுமே சொல்லக் கூடாது! சுருங்கக் கூட!// hahaha!

      நீக்கு
  2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம் நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனா நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது, விரைவில் தடுப்பு மருந்து/ஊசி கண்டுபிடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரப் பிரார்த்திப்போம். இன்று காலையிலிருந்து சிறு தூற்றல். பெருமழையாகவும் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீசா மேடம். இரவு ஒரு மணியிலிருந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக இங்கு மழை. வானம் ரொம்பவே மந்தாரமா இருக்கு. நடைப்பயிற்சிக்குக் கிளம்ப வேண்டியதுதான்.

      கொரோனா பயத்துல அடுத்து இருக்கும் டவருக்கு (மாமனார் வீடு) செல்லவே தயக்கமா இருக்கு. அங்கு வேறொரு தளத்தில் சிலர் கொரோனா வந்தவர்கள்.

      நீக்கு
  3. ரொம்ப நாட்கள் கழிச்சுக் காலையில் வந்திருக்கேன். இங்கே பார்த்தால் ரேவதியைத் தவிர யாரையும் காணோம். துரைக்கு வரமுடியலை போல. கமலா, நெல்லை ஆகியோருக்கு வேலை மும்முரமோ? நெல்லை சமையலில் இறங்கிட்டாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கீதாமா, இந்திய நேரம் 5.30க்கு துரை வந்துவிடுவார். பின்னோட ஸ்ரீராம். அப்புறம் நான்.
      இன்னிக்கு நீங்கள். இனிய காலை வணக்கம் மா.
      எல்லோருக்கும் ஆரோக்கியத்துக்கும் ,நலவாழ்வுக்கும் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    2. காலை வணக்கம் சகோதரி

      இப்போதுதான் நான் வந்து கொண்டேயிருக்கிறேன். என்னைத்தேடிய உங்களுக்கும், சகோதரி வல்லிசிம்ஹன் அவர்களுக்கும், இனிதான காலை வணக்கங்கள். காலையில் வரும் துரை செல்வராஜ் சகோவிற்கும், நெல்லைத் தமிழர் சகோதரருக்கும், அனைவருக்கும் சிறப்பாக பதில் தந்தபடி வருகை தரும் ஸ்ரீராம், திரு. கெளதமன் சகோதரர்களுக்கும் அன்பான காலை வணக்கங்கள். சில நாட்கள் நம்மையறியாமல் சில சந்தர்ப்பங்கள் மாறி விடுகின்றன. அனைத்தும் எப்போதும் போல் நலமாக நடக்க பிரார்த்திப்போம். நன்றி.

      நீக்கு
    3. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
    4. இந்தப் பசங்க டயட்டுன்னு ரொம்பவே மெதுவாக சாப்பிட வர்றாங்க. நான் சாதம் சாப்பிடுவதை ரொம்பவே அபூர்வமாகத்தான் வைத்துக்கொண்டுள்ளேன். அதனால அரக்கப் பரக்க இங்கு சமையல் ஒருசில வாரங்களா இல்லை.

      நான் சமையலில் இறங்குவது மாத்த்தில் சில நாட்கள்தாம். உங்க பின்னூட்டம் படித்ததனால் இன்று கலந்த சாதம் ஒன்று பண்ணிடவேண்டியதுதான்

      நீக்கு
    5. கமலா ஹரிஹரன் மேடம்... ஒரு சமையல் குறிப்பு தி பதிவுல எழுதுங்களேன்

      நீக்கு
    6. காலை வணக்கம் சகோதரரே

      /கமலா ஹரிஹரன் மேடம்... ஒரு சமையல் குறிப்பு தி பதிவுல எழுதுங்களேன்/

      கண்டிப்பாக.. நேரம் கிடைக்கும் போது எழுதி அனுப்புகிறேன். என்னுடைய ஆசையும் அதுதான்.. நானும் எழுதி அனுப்ப வேண்டுமென அவ்வப்போது சமையல் படங்கள் எடுத்து வைக்கிறேன்.அதை கோர்வையாக எழுத சந்தர்ப்பங்கள் அமைய மாட்டேன் என்கிறது. ஆனால் என்னுடையது பழைய பஞ்சாங்கமாக இருக்கும். சரியா? ஹா ஹா.

      நீக்கு
    7. உங்களுக்காக ஒரு தெக்கினிக்கு கமலா ஹரிஹரன் மேடம். உதாரணமா பருப்புக் குழம்பு செய்முறைனு வச்சுக்கோங்க. தலைப்பு, பருப்புக் குழம்புனு வச்சீங்கன்னா, இது என்ன. எப்போதும் செய்யறதுதானேன்னு படிக்கறவங்க நினைச்சுடுவாங்க. நம்ம கீசா மேடம், பருப்புக் குழம்பு வேரியேஷன்ஸ் என்று ஒரு நாலைந்து வகை செய்முறைகளை பின்னூட்டத்தில் எழுதிடுவாங்க. அதுனால கசூரி மேத்தி குழம்புனு தலைப்பு வச்சுடுங்க. இது என்னடா "புதுமையா இருக்கு"/"நமக்கு வந்த சோதனை" (இரண்டில் ஒன்றை நினைத்துக் கொள்வார்கள்) என்று படிப்பாங்க. நீங்க அதே பருப்பு குழம்பு செய்முறையைத்தான் எழுதணும். கடைசில, ஒரு ஸ்பூன் கசூரி மேத்தி சேர்த்து 30 செகண்ட்ஸ் குழம்பு கொதிக்கணும். உங்களுக்குப் பிடித்திருந்தால் குழம்புக்கு ரெகுலராக போடும் பூசனி, வெண்டை, கேரட் போன்ற தான்கள் சேர்க்கலாம்னு எழுதிட்டீங்கன்னா, உங்க செய்முறையையும் எழுதியாச்சு, புதுமையையும் புகுத்தியாச்சு. அப்புறம் செய்துபார்க்கிறவங்க பாடு.

      இதுக்கு, 'இந்த செய்முறையையும் குறித்துக்கொண்டேன்க்கா' என்று ஒருவர் பின்னூட்டம் எழுதுவார்.

      அப்புறம் ஒண்ணு. எங்கிட்ட வாட்சப்ல, 'இந்த மாதிரி யார் யார் செய்முறைகளை தி.பதிவுல எழுதறாங்க'ன்னு கேட்டு என் வாயைப் பிடுங்கக்கூடாது. சொல்லிட்டேன். ஹா ஹா.

      என்ன சொல்றீங்க? இந்த ஆலோசனை இலவசம்தான். ஏதாவது 'குருதட்சிணை' கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா, ஸ்ரீராமுக்கு மூன்று வகையான கொழுக்கட்டை செய்யும்போது அதே அளவு எனக்கும் எடுத்து வச்சிடுங்க.

      நீக்கு
    8. நெல்லை! நைஸ் புட்டிங் + கட்டிங்

      நீக்கு
    9. வாட்ஸாப்பில் போய்க் கேட்பானேன்? இங்கேயே நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்னு தெளிவாத் தெரியும்போது.்்்்!!!

      நீக்கு
    10. //வாட்ஸாப்பில் போய்க் கேட்பானேன்? இங்கேயே நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்னு தெளிவாத் தெரியும்போது// //வாட்ஸாப்பில் போய்க் கேட்பானேன்? இங்கேயே நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்னு தெளிவாத் தெரியும்போது// அதானே..! இவர்தான் இன்றைய 'மெல்லத்திறந்தது கதவு' புதிர் போட்டாரோ? 

      நீக்கு
    11. இதுக்கு, 'இந்த செய்முறையையும் குறித்துக்கொண்டேன்க்கா' என்று ஒருவர் பின்னூட்டம் எழுதுவார்.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      ஹா ஹா ஹா ஹா தப்பித்தேனே வகைகள் நு கீதாக்காவ சொல்லிட்டீங்க...இல்லேனா கீ ர சொல்லுறது போல னு சொல்லலை ஹா ஹா ஹா ஹா

      ஒன்னு தெரியுமா நிஜமாவே வெந்தயக்கீரை பருப்புக் குழம்பு உண்டு!!! என் மாமியார் செய்வாங்களே!!!!!!! ஹெ ஹெ ஹெ இப்ப என்ன சொல்லுவீங்க நெல்லை

      நீங்க நிறைய வெரைட்டி சாப்பிட்டு ருசித்ததில்லைனு தெரியுது!!! ஹா ஹா ஹா ஹா. இதுக்குத்தான் பெண்கள் னா பிறந்த வீட்டு, புகுந்த வீடு, நாத்தனார் , அவங்க மாமியார் வீட்டு சமையல், கோ சிஸ்டர்ஸ் அவங்க பிறந்த வீட்டு சமையல்னு நிறைய கத்துக் கொண்டு செய்ய முடியும்!!!!!!!!

      கீதா

      நீக்கு
    12. நெல்லை நேரடியாகவே கீ ர நு சொல்லியிருக்கலாமே!!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    13. //இந்த மாதிரி செய்முறை எழுதறவங்க// - இதை நகைச்சுவைக்காகத்தான் போட்டேன். அதுனால guess work பண்ணறேன்னுட்டு யுத்தம் ஆரம்பித்து வச்சுடாதீங்க. ஹா ஹா ஹா.

      நீக்கு
    14. கீதா ரங்கன்க்கா - வெந்தயக் கீரை வேறு கசூரி மேத்தீ வேறு ஹா ஹா ஹா. கசூரி மேத்தீன்னா கௌரவமா இருக்கு. வெந்தயக் கீரைனா பழம் பஞ்சாங்கமா இருக்கு

      நீக்கு
    15. இதை நகைச்சுவைக்காகத்தான் போட்டேன். அதுனால guess work பண்ணறேன்னுட்டு யுத்தம் ஆரம்பித்து வச்சுடாதீங்க. ஹா ஹா ஹா.//

      ஹா ஹா ஹா நெல்லை நாங்கல்லாம் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமும் இன்றி கட்சியாக்கும்!!!!

      கீதா

      நீக்கு
    16. நீங்க என்னைத்தான் கலாய்க்கறீங்கன்னு தெரியும்....ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    17. ஆகா... இப்போதுதான் நேரடியாக பார்க்கிறேன் பாரத யுத்தத்தை.ஹா. ஹா. ஹா. இதற்கு மற்றொரு பெயர் கலாய்த்தலா?

      நீக்கு
  4. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பள்ளியில் மாட்டிக்கொண்டு வீட்டுக்கு வர வழியில்லாமல் தவித்தப்போ எங்க தெருவிலேயே இருந்த எங்க சொந்தக்காரரும் எங்க ஆசிரியருமானவர் தன் பொறுப்பில் என்னைப் போல் நகருக்குள் வரும் 2,3 மாணவிகளை அழைத்து வந்து வீட்டில் சேர்ப்பித்தார். வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்தில் வீட்டு வாசலில் ஒரே அமர்க்களம். என் அப்பாவை அந்த நிமிஷமே வெட்டணும், குத்தணும் என்று கைகளில் அரிவாள், வெட்டுக்கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களுடன் சேதுபதி பள்ளி மாணவர்கள் கூட்டம். கொல்லை வழியா எல்லாம் தப்பிக்க முடியாது. கூடத்து அறைக்குள் அப்பாவைத் தள்ளிக் கதவைப் பூட்டினார் கூடக் குடியிருந்த ஒரு மாமா. அங்கே தெருவில் இருந்த ரிக்ஷாக்காரர்கள் (அனைவரும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்) இன்னும் சிலர் வந்து மாணவர்களிடம் பேசிக் கலைந்து போகச் சொன்னார்கள். அரை மனதாகக் கலைந்து போன மாணவர்கள் மறுநாள் வந்து பழி தீர்த்துக்கொள்வதாகச் சொல்ல, பயம் பிடித்தது. அப்புறமா ராணுவம் மதுரைக்கு வரும்வரை ஒவ்வொரு நாளும் கழிவது ஒரு யுகம் போல் இருக்கும். நல்லவேளையாகப் பள்ளிகள் விடுமுறை விடக் கொஞ்ச நாட்கள் தப்பித்தோம். பின்னர் மெல்ல மெல்லக் கலவரம் அடங்கியது. வேடிக்கை என்னவென்றால் அந்த மாணவர்களிலேயே ஒன்றிரண்டு பேர் பின்னால் ஹிந்தி கற்றுக்கொள்ள அப்பவிடம் வந்தார்கள். :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க அப்போ லீவு கிடைக்கும் என்பதால் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் ஊர்வலம் போய் இரண்டு வாரம் லீவு பெற்றோம்.

      நீக்கு
    2. கழகப் போராட்டம்னாலே கலகம்தான் போல.. கொலைவெறி... அம்மாடி...

      நீக்கு
    3. ஐயோ கீதா அக்கா கேட்கவே பயங்கரமாக இருக்கிறதே? என்னமாதிரி ஒரு  கூட்டம். இப்படி எல்லோரையும் ஹிந்தி படிக்க விடாமல் தடுத்து விட்டு தங்கள் குடுமபத் தினர்களை ஹிந்தி படிக்க வைத்தனர்.  தயாநிதி மாறன்  மத்திய அமைச்சரான பொழுது," தயாநிதி ஹிந்தி படித்திருக்கிறார், எனவே டில்லியில் செயலாற்றுவது அவருக்கு சுலபமாக இருக்கும் என்றார் தி.மு.க. தலைவர். ஸ்டாலின் மகள் நடத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளியில் ஹிந்தி கற்பிக்காமலா இருப்பார்? மக்களை முட்டாளடிக்கும் கும்பல்.  

      நீக்கு
    4. மிரட்டல் கடிதமெல்லாம் வரும் வீட்டுக்கு அநாமதேயமாக! சுமார் 2 மாதங்கள் அப்பாவைக் கூட வேலை பார்க்கும் ஒரு ஆசிரியர் (அவர் அங்கே தச்சு ஆசிரியர்.) வீட்டுக்கு வந்து கூடவே அழைத்துச் சென்று மறுபடி கொண்டு வீட்டில் விட்டுப் போவார். ஒரே அமர்க்களம். நான் தெருவில் போனாலே பள்ளி மாணவர்கள்/தமிழ் ஆர்வலர்கள் துரத்துவாங்க! அதுக்காகவே பள்ளிக்குச் செல்ல என்னைப் பள்ளிப் பேருந்தில் அனுப்பினார் அப்பா.

      நீக்கு
    5. கீதாக்கா இப்படியுமா? அப்போ நீங்க மதுரையிலதானே இல்லையா? மதுரையில்தான் கொஞ்சம் அதிகமா இருந்தது இல்லையா? உங்க எல்லாருக்குமே ரொம்பவே திக் திக் நாட்கள் தான்...நாங்கள் கடைக்கோடியில் இருந்ததாலோ என்னவோ என் வீட்டில் மாமாக்கள் இது பற்றி சொல்லிக் கேட்கவே இல்லை. அதாவது போராட்டம் பற்றி சொல்லியிருக்காங்க ஆனால் பாதிப்பு என்று சொன்னதில்லை.

      கீதா

      நீக்கு
    6. மதுரையில் தான் மேலாவணி மூலவீதியில் தான் இருந்தோம். எதிரே கொஞ்சம் தள்ளிப் பெரியப்பாவும் இருந்தார். ஆனாலும் வெறி கொண்ட கூட்டத்தின் முன் யார்தான் என்ன செய்ய முடியும்?

      நீக்கு
    7. //அப்போ நீங்க மதுரையிலதானே இல்லையா?// சேதுபதி உயர்நிலைப்பள்ளி மதுரையில் தானே இருந்தது. அப்போவே இன்னும் சொல்லப் போனால் அந்த ஹிந்தி எதிர்ப்புக்கு முன்னரேயே அந்தப் பள்ளியில் தச்சு வேலை, நெசவு வேலை, சிற்ப வேலைனு கற்றுக் கொடுப்பார்கள். நெசவுக்கு ஆசிரியர்கள் இருவருமே பிராமணர்கள், அதில் ஒருவர் தூரத்துச் சொந்தம். இப்போதைய புதிய பாடத்திட்டத்தைப் பார்த்து எல்லோரும் கத்தறாங்களே! முன்னரே கிட்டத்தட்ட எழுபதுகள் வரை இந்தத் தொழில் கல்விகள் எல்லாம் உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் விரும்பியவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். எங்க பள்ளியிலும் கைவேலைகள், தையல் கலை, சமையற்கலை, வீட்டு அலங்காரக் கலை (இப்போதைய இன்டீரியர் டெகரேஷன்) என்று சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். நான் படிக்கையில் ஹோம் சைன்ஸ் என்னும் பெயரில் சமையலும், தையலும் மட்டும் கற்றுக் கொடுத்தார்கள். நான் செக்ரடேரியல் கோர்ஸ் தான் எடுக்கணும்னு அப்பாவோட பிடிவாதம். ஆகவே அதான் படிச்சேன்

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. இந்திரா காந்தி இறந்த விபரமே தெரியாது. காலை பதினோரு மணி அளவில் சாப்பிட்டுக் கை கழுவிக் கொண்டிருக்கையில் குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பி வந்தார்கள். திடுக்கிட்டுப் போக அவர்கள் தான் செய்தி சொன்னார்கள். அப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தாலும் இம்மாதிரி 24 மணி நேர ஒளிபரப்பெல்லாம் கிடையாது. பள்ளியிலிருந்து வர ரயில் இல்லாமல், கிடைத்த பேருந்துகளில் வந்து பேருந்து நிறுத்திய ஸ்டெட்ஃபோர்ட் மருத்துவமனையிலிருந்து நாங்க இருந்த பகுதிக்குச் சுமையைத் தூக்கிக் கொண்டு நடந்தே வந்திருக்கின்றனர். அதுக்கப்புறமா நம்மவர் யாரோ கொடுத்த சைகிளில் ஆவடியிலிருந்து அம்பத்தூர் வந்து சேர்ந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். கடையடைப்பு ஆர்ப்பாட்டம் எல்லாம் இறந்த தலைவர்களுக்கு என்னவிதமான அஞ்சலியோ தெரியவில்லை. இந்திராகாந்தி சுடப்பட்ட நாளில் எங்கள் அலுவலகத்திற்கு ஒரு சீக்கியரும் அவர் மகனும் ஏதோ சப்ளை குறித்து பேச வந்திருந்தார்கள். தலைநகரில் நடக்கும் கலவரங்கள் குறித்து எங்கள் டெல்லி மார்க்கெட்டிங் அலுவலகத்திலிருந்து தகவல்கள் உடனடியாக தொலைபேசி மூலமும் டெலக்ஸ் மூலமும் வந்துவிட்டதால் அந்த சீக்கியர்களை பத்திரமாக பாதுகாத்து உணவு வழங்கி பாதுகாப்பாக மாலை அவரின் இருப்பிடத்திற்கு செல்ல வசதி செய்து கொடுத்தோம்.

      நீக்கு
  7. ராஜிவ் காந்தி இறந்த விபரம் மறுநாள் அதிகாலையில் தெரிந்தது. அன்றிரவு நாங்கள் அஹமதாபாத் போய் மறுநாள் சென்னை செல்லும் நவஜீவன் விரைவு ரயிலில் செல்ல முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அஹமதாபாதுக்குப் போய்ப் பார்க்கலாம் என அன்றிரவு கிளம்பினால் பேருந்தில் கூட வந்தவர்கள் அனைவரும் எங்களைக் கேட்ட கேள்வி, "ஏன் ராஜிவைக் கொன்றீர்கள்?" என்பதே. அதன் பின்னரே முழு விபரமும் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க கேள்வி கேட்டவங்களிடம், "என்னைப் பாத்தி ஏண்டா அந்தக் கேள்வியைக் கேட்ட?" என்று கரகாட்டக்காரன் படத்தில் வருவது போல கேட்கவேண்டியதுதானே

      நீக்கு
    2. பொதுவாக இம்மாதிரிக் கேள்விகளுக்கு பதிலை நாங்கள் தவிர்த்துவிடுவோம். அப்போவும் சிரித்துவிட்டு, "நாங்க கொல்லலை!" என்று சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்தோம். ராணுவத்தைத் தமிழ்நாட்டில் மதிக்கவில்லை என்பதை அங்கே ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்ட்ராவில் கேலியாகச் சொல்லுவார்கள். அதிலும் ராஜஸ்தான், பஞ்சாபில் அதிகமாகச் சொல்லுவார்கள். வடமாநிலம் அந்நிய ஆக்கிரமிப்பினால் பட்ட கஷ்டங்கள் தென்னாடு, குறிப்பாய்த் தமிழகம் படவில்லை என்பார்கள். நான் எடுத்துச் சொல்லுவேன், மதுரை வரை அந்நியர் வந்து கோயில்களை நாசமாக்கியதையும் நடராஜர், அரங்கன், மீனாக்ஷி ஆகியோர் ஒளிந்திருந்து வாழ்ந்ததையும். எனினும் இவை சரித்திரப் பாடங்களில் இடம் பெற வில்லை ஆகையால் அவர்கள் அதைக் கதை போலக் கேட்டுக் கொள்வார்கள். வருடம், மாதம், தேதி எல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் விஜயநகர சாம்ராஜ்யம் பற்றியே அதிகம் தெரியாது. அப்படியா என்று கேட்டுக் கொள்வார்கள். பொதுவாகவே நம் நாட்டின் உண்மையான சரித்திரம் யாராலும் எழுதப்பட்டு நமக்கோ, நம் முன்னோர்களுக்கோ, நம் பின்னோர்களுக்கோ, வரும் தலைமுறைக்கோ கற்பிக்கப்படவில்லை. பள்ளியில் படித்ததை விட நான் சரித்திரப் புத்தகங்கள், நாவல்கள், தென்னாட்டுச் சரித்திரம் பற்றி சதாசிவ பண்டாரத்தார் எழுதியவை, பின்னாட்களில் நாகசாமி அவர்கள், உ.வே.சா.எனப் படித்துத் தெரிந்து கொண்டது அதிகம்.

      நீக்கு
    3. ஆம், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சரித்திரப் புத்தகம் என்றாலே, கண்களை மூடிக்கொண்டு, பாபர், ஹுமாயுன், அக்பர், ஜகாங்கீர் என்றெல்லாம் வரிசையாக நெட்டுரு போட்டதுதான் ஞாபகம் வருகிறது. பொன்னியின் செல்வன் படித்த பிறகுதான் சோழர் பரம்பரை பற்றி தெரிந்தது. நம் பாட புத்தகங்களை பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கியவர்களின் நோக்கிலிருந்து அதிகம் மாற்றாமல் விட்டுவிட்டது சுதந்திர இந்தியாவின் அரசியல் தலைவர்களின் மாபெரும் தவறு.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    கேள்வி பதில்கள் பழைய நினைவுகளை உண்டாக்குகிறது. அரசியல் பிரபலங்களின் மறைவுகள் நம்முள்ளும் படபடப்பை தந்தது உண்மைதான். பள்ளிச் சென்றிருக்கும் குழந்தைகள், அலுவலகம் சென்றிருக்கும் கணவர் எப்படி இன்னல்களின்றி நலமுடன் வீட்டிற்கு வரப்போகிறார்கள் என்ற சுயநல பச்சாதாபங்களும் சேர்ந்து இன்னமும் கொஞ்சம் அதிகமாகவே படபடப்பை அதிகமாக்கி தந்ததென்னவோ உண்மைதான். பிரதமர் இந்திரா காந்தி தீடிர் மரணத்தை கேள்விப்பட்டதும் நான் சுமார் ஒரு கி. மீட்டர் தொலைவில் படித்துக் கொண்டிருக்கும் என் இரு சிறு குழந்தைகளை அச்சத்துடன் அன்று (தினமுமே பள்ளிக்கு நடந்துதான் செல்ல வேண்டும்.) சென்று அழைத்து வந்தது நினைவுக்கு வருகிறது.அப்போது எங்கள வீட்டில் தொலைக்காட்சியும் இல்லை. அக்கம் பக்கம் பரபரப்பை பார்த்து விபமறிந்து செல்ல வேண்டியதாய் போயிற்று. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் கணவரிடம் தொடர்பேதும் கொள்ளும் வசதியும் இல்லை. (தொ. கா. இல்லாத போது இப்போது போல் தொ. பேசிக்கு எங்கே போவது..! ஹா ஹா.) பிரார்த்தனை ஒன்றுதான். கடினமான காலகட்டங்கள். காலையிலேயே மலர்ந்த நினைவுகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். உண்மைதான். சில சமூக விரோதிகள் இந்த வகை சூழ்நிலைகளைப் பயன்படுத்தி குழப்பம் விளைவிப்பது நம் நாட்டில் மட்டுமே நிகழும் கேவலம்.

      நீக்கு
  9. பல விதமான அனுபவங்கள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்திரா கொலையுண்டபோது மதுரையில் இருந்தேன். பெரிய கலவரம் ஏதும் இல்லை. ராஜீவ் கொலையுண்டபோது பணிக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டு பின் சென்றேன்.

      நீக்கு
    2. இந்திராகாந்தி கொலையுண்ட சமயம் எங்கல் மூத்த சகோதரி திருச்சியில் காமகோடி வித்யாலயாவில் பணியாற்றி வந்தார். அங்கு படித்துக் கொண்டிருந்த ஒரு சீக்கிய மாணவனை தெரிந்த ஒரு ஆட்டோவில் இன்னும் சில மாணவர்களோடு சேர்த்து அனுப்பி வைத்தார்களாம். 
      நான் அப்போது பம்பாய் செம்பூர் மார்க்கெட்டில் இருந்தேன். அங்கு எந்த கலவரமும் இல்லை. 
      ராஜீவ் காந்தியின் கொலை பற்றிய செய்தி அன்று இரவே  மஸ்கெட்டில் இருந்த எங்களுக்கு தெரிந்து விட்டது. எங்கள் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்த பேபி சிட்டர் தொலைபேசியில் தெரிவித்தார். உள்ளுக்குள்ஒரு நடுக்கம் வந்து உறங்க முடியாமல் போனது. மறுநாள் அலுவலகம் சென்ற பொழுது ஒரு பாகிஸ்தானி,"உங்க ப்ரைம் மினிஸ்டரை கொலை செய்து விட்டார்களாமே?" என்று வெகு சாதாரணமாக கேட்டார். 

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    காணோளி ஏதோ பேய் படம் மாதிரி உள்ளது. நேற்று சகோதரர் வெங்கட் நாகராஜன் அவர்கள் பதிவில் அமானுஷ்ய பதிவை படித்து லேசான மன கலக்கம் (அதை பயம் என சொல்லாமல் சமாளித்து வருகிறேன். ஹா ஹா.) இன்னமும் இருக்கிறது.

    மழை மேகங்கள் வேறு இன்னமும் அப்போதே கண் விழித்த பகலவனை தன் போர்வை பிடியிலிருந்து விடுவிக்காத இந்த இருண்டிருக்கும் நேரத்தில், இப்போது இதைப் பார்த்து கருத்தை டைப் பண்ணும் போது, பின்னாடியிலிருந்து யாரோ எட்டிப் பார்ப்பது போல் வேறு உணர்கிறேன். ஹா.ஹா.ஹா. (ஆனால் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர்.) மாலைக்குள் அந்த கதவு ஆடும் மர்ம படத்தை நம் ரசிகர்கள் கண்டு பிடித்து விடுவார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் ஏற்கெனவே பதில் சரியாகச் சொல்லிவிட்டார்.

      நீக்கு
  11. இந்தி எதிர்ப்புப் போராட்டம் ,எங்கள் கல்லூரிப் பரீட்சைகளை ஒத்திவைத்தது. தெருவெங்கும் உடைந்த சோடா
    பாட்டில்கள் பார்த்த நினைவு.
    பக்கத்துக் கல்லூர் மாணவர்கள் நாங்கள் பஸ் ஏறும்போது
    சீன் போடுவார்கள்.:)

    திண்டுக்கல் சென்றுவிட்டு திரும்பி வந்த பரீட்சை எழுதினேன்.

    இந்திரா காந்தி மறைந்த செய்தி தொலைக்காட்சியில்
    பார்த்து தெரிந்து கொண்டோம்.
    பயங்கர அதிர்ச்சி.
    பெரியவன் கல்லூரியிலிருந்து திரும்பி வந்துவிட்டான்.
    பெண் பள்ளியிலிருந்து நடந்து வந்து விட்டாள்.
    சின்னவனை அப்பா போய் அழைத்துக்
    கொண்டு தன் வீட்டில் வைத்துக் கொண்டார்.
    வீட்டில் வேலையில் இருந்த பணியாளர்களுக்கு உணவிட்டு வீட்டிலேயே
    தூங்கச் சொல்லிவிட்டோம்.
    ராஜீவ் காந்தி சமயம் பெரிய தம்பி கொடைக்கானலில்
    குடும்பத்தோடு மாட்டிக் கொண்டு இரண்டு நாட்கள் கழித்து வந்தான்.
    எல்லாம் கதைபோலத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  12. அன்பு கமலா, இனிய காலை வணக்கம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் சகோதரி.

      கெளதமன் சகோ நீங்கள் காணொளிக்கு பதில் சொல்லி விட்டதாய் குறிப்பிட்டிருந்தார். புதிருக்கு உங்கள் பதிலை கண்டு பிடிக்க திரும்பவும் கருத்துகள் எனும் ஏணியில் ஏறிச் சென்று பரணில் கண்டு கொண்டேன். அழகான விடை. பாராட்டுக்கள். அதை முதலிலேயே படித்தேன். எ. பி எனும் அழகான கதவுகளுக்கானதோ அந்த அர்த்தம் என்ற நோக்கில், நானும் கதவை முழுமையாக திறந்து உட்ப்புகுந்து விட்டேன். இதுதான் என்னுடைய ஞான சூன்யம் என்பதோ..! ஹா ஹா. நன்றி சகோதரி.

      நீக்கு
  13. ரா.கா. இறந்தபோது ஒரு கிராமத்தில் மாட்டிக்கொண்டேன் போஸ்ட் மரத்திலிருந்து கீழே சறுக்கி விழுந்து கால் சுழுக்கிய வேதனையோடு நடந்து வீட்டுக்கு வந்த அனுபவம் நினைவில் வந்தது.

    எம்ஜார் இறந்த அன்று சங்கரபதிக்கோட்டை போய் பொழுதை போக்கியது (வீரபாண்டிய கட்டபொம்மன் ஒழிந்திருந்த கோட்டை)

    பதிலளிநீக்கு
  14. சஞ்சய்காந்தி இறந்ததை ஹாஸ்டலில் மதிய உணவின்போது ஹால் ரேடியோ மூலம் தெரிந்துகொண்டோம். டி எஸ் பாலசுப்ரமணியம் (என்னுடன் படித்தவன், திருவண்ணாதபுரத்தில் இருந்தவன்) அழுதுவிட்டான். கோடம்பாக்கம் இரயில் நிலையத்தில் தாம்பரம் செல்ல வந்தபோது (அப்போல்லாம் கூட்டம் கருதி, மாம்பலத்திலிருந்து மின்சார ரயிலில் கோடம்பாக்கம் சென்று அங்கிருந்து இரயில் ஏறுவேன்) சிவராசன் இறந்த செய்தி மாலை மலர் பேப்பரில் வந்ததைப் பார்த்து வாங்கினேன். இந்திராகாந்தி இறப்பின்போது மதுரை ஹாஸ்டல். இம்பேக்ட் இல்லை. ராஜீவ் இறந்ததை அதிகாலையில் என்னை எழுப்பி என் அம்மா சொன்னார் (எனக்குத்தான் செய்திகளில் ஆர்வம் என்பதால்). உடனே மெயின் ரோட்டுக்கு போனால் அப்போதுதான் ஜீப்புகளில் பல காங்கிரஸ் தமிழக தலைவர்கள் தாம்பரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சஞ்சய்காந்தி கொலையுண்டபோது, மன்னிக்கவும், சஞ்சய் மரணத்துன்போது பெரிய வருத்தம், கலவரம் என்று எதையும் நான் பார்க்கவில்லை.

      நீக்கு
    2. அரசியல்ல wrong direction ல போறவங்களுக்கு தனி விமானம், ஹெலிகாப்டர் பயணங்கள் dangerஆ அமைந்துவிடும்

      நீக்கு
    3. சஞ்சய் மரணம் பற்றி நாங்க ராஜஸ்தானில் இருந்தப்போ தெரிந்து கொண்டோம். உண்மைக்காரணம் அந்தக் காலத்து ப்ளிட்ஸ் பத்திரிகையில் கராஞ்சியா அவர்கள் பிட்டுப்பிட்டு வைத்திருந்தார். பின்னாலும் படித்தேன். இப்போ சமீபத்திலும் படித்தேன். பெரிய அளவில் அவர் மரணம் பாதிக்கவில்லை என்றே சொல்லணும்.

      நீக்கு
  15. விருக்‌ஷாஸனத்தில் கண்ணைத் திறந்துகொண்டால் பேலன்ஸ் கிடைக்காது. ஒரு இடத்தையே பார்க்கணும். கண்ணை மூடினாலும் மனக்கண்ணால் ஒரு இடத்தைப் பார்த்தால் பேலன்ஸ் கிடைக்கும்னு தோணுது. செய்துவிட்டுச் சொல்கிறேன்.

    பசங்கள்ட யார் ரொம்ப நேரம் விருக்‌ஷாஸனத்தில் நிற்கிறார்கள் பார்ப்போம், யார் கண் சிமிட்டாமல் இருக்கிறார்கள், யார் முதலில் ஆங்கில வார்த்தையை பேச்சில் உபயோகிக்கிறார்கள் பார்ப்போம் என்றெல்லாம் விளையாடுவேன். என் பெண் என்னை தோற்கடிப்பது ஆச்சர்யமாவும் சந்தோஷமாவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயனுள்ள பொழுதுபோக்கு விளையாட்டுகள். என் சகோதரர்களும் இப்படி விளையாட்டுகள் + பொழுதுபோக்கு செய்த அனுபவம் உண்டு.

      நீக்கு
    2. நெல்லை எங்கள் வீட்டிலும் எங்கள் வீட்டுக் குழந்தைகள் சேரும் போது இப்படித்தான் விளையாடுவோம். அப்புறம் ஸ்காரபிள் பெரியவர்களும் சேர்ந்து விளையாடுவோம். என் மாமனாரும் சேர்ந்து கொள்வார்.

      நான் என் மகனுடன் நிறைய விளையாடியதுண்டு. அந்தாக்ஷரி, ராகம் சொல்லும் விளையாட்டு என்று. அவன் வீணையில் ஸ்வரங்கள் வாசிப்பான் நான் ராகம் சொல்ல வேண்டும் இப்படியும் விளையாடியதுண்டு.

      மகனின் ஃப்ரென்ட்ஸ் வந்து கூடும் போது பேப்பரில் ஏதெனும் மிமிக்ரி, டம்ஷரஸ், ஆங்கிலம் கலக்காமல் பேசுவது, இப்படிப் பல விளையாட்டுகள் நட்பு வட்டத்திலும் சரி குடும்பத்துக் குழந்தைகள் எல்லோரும் சம்மரில் சேரும் போதும் சரி. நல்ல நினைவுகளை மீட்டிவிட்டீங்க நெல்லை. நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    3. கீதா ரங்கன்- பசங்க வளர்ந்ததெல்லாம் பஹ்ரைன்ல. அதுனால தமிழ் மட்டும்தான் பேசணும்னு சொன்னா, இலக்கியத் தமிழ்தான் பேச முயற்சிப்பாங்க. என் பெண் என்னைவிட அதிக நேரம் தாக்குப்பிடிப்பது ஆச்சர்யமா இருக்கும். பேசாம இருக்கக் கூடாது. தொடர்ந்து conversation ல பங்கெடுத்துக்கணும் ஹா ஹா.

      நீக்கு
    4. நாங்க ஏகபாத ஆசனம் எனப் படித்ததை, (சிலர் நடராஜா மாதிரி) என்றும் சொல்வார்கள். நீங்க விருக்ஷாசனம் என்கிறீர்கள் போல! கண்களைத் திறந்து கொண்டு தான் ஆசனம் செய்வோம். எதிரே ஒரு குறியீடு அல்லது மனதுக்குள் "ஓம்" என்று நினைத்துக் கொண்டு அதை மனதால் நினைத்து நிலை நிறுத்திச் செய்வோம். வலக்காலில் 2 நிமிஷம், இடக்காலில் 2 நிமிஷம். மூச்சு வாங்கி விட ஒரு நிமிஷம். மொத்தம் ஐந்து நிமிஷங்கள் செய்வோம்.

      நீக்கு
  16. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  17. தூற்றல் விட்டும் தூவானம் விடவில்லை என்பதாக அறைக்குள் சில பிரச்னைகள்...

    இங்கு அதிகாலை 3 மணிக்கு விழிக்கும் நான் திரும்பவும் 3:30 க்கு சற்று உறங்கி விடியலில் 5:30 க்கு எழுந்து குளித்து விட்டு 8 மணிக்கு பஸ்ஸைப் பிடித்தால் அறைக்குத் திரும்பும் நேரம் மாலை 3:30...

    வியாழக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இரவு 9 மணிக்கு உறங்கி விடுவது வழக்கம்..

    மாலை 4 மணியளவில் சற்று உறங்கி எழுந்தால் கொஞ்சம் அசதி தீரும்..

    ஆனால் அதற்கு பெருத்த இடைஞ்சலாக வேலையை விட்டு நிறுத்தப்பட்ட ஒருவன் பகல் முழுதும் இரவு 12 மணி வரையும் யூடியூப்பில் வரும் குப்பைகளை வாரித் தலையில் போட்டுக் கொண்டிருக்கிறான்...

    புருசனைக் களவாடிய தகராறில் யார் யார் விளக்குமாற்றால் அடித்துக் கொண்டார்கள் ... என்பது மாதிரியான கழிவுகள் தான் அவனுக்கு இஷ்டமானவை...

    ஆனால் அவை எனக்குக் கஷ்டமானவை...

    ஆகஸ்ட் முதல் வாரத்தில் அவனை நாட்டுக்கு அனுப்பி விடுவார்கள்...

    அதுவரைக்கும் சற்று இடைஞ்சல் ...
    இன்று தாமதம் ஆனதும் அதனால் தான்..

    இத்தனைக்கும் நான் வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு இருந்தபோது ஒருவேளை கஞ்சி கிடைத்தது - இந்த ஆளால்!...

    பழக்க வழக்கம் சரியில்லை என்றாலும்
    எதிர்பாராமல் செய்த உதவிக்கு நன்றி கொண்டு இருந்தேன்...

    ஆயினும் விதி வலியது ..
    அன்றைக்கு ஏதும் கேளாமல் உதவி செய்த ஆளைப் பற்றி குறை சொல்வது என்பது ஏற்புடையது அல்ல..

    இருப்பினும் வேறு வழியில்லை..
    மனதில் இருந்த பாரம் இறங்கி இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இக்கட்டான நிலைமைதான்!

      நீக்கு
    2. உதவி பாதி, உபத்திரம் பாதியா!

      நீக்கு
    3. ஓ துரை அண்ணா ஆமாம் நாம் சின்ன உதவியைக் கூட மறக்க மாட்டோமே. சீக்கிரம் எல்லாம் நல்லது நடக்கட்டும். ஒரு வாசகம் உண்டு வலது கொடுக்கும் இடது கை அடிக்கும் என்று...அந்த நபரிடம் குப்பையைக் காதில் ஹெட் ஃபோன் போட்டுக் கேட்கச் சொல்லுங்கள் அண்ணா.

      கீதா

      நீக்கு
    4. விரைவில் அனைத்தும் சரியாகட்டும்.

      நீக்கு
    5. அதெல்லாம் சொன்னால் கேட்காத வகையறாக்கள்..

      இன்னும் சில நாட்கள் தான்...நாட்டுக்குப் போய் விடுவான்... அதுவரைக்கும் கலங்காதிரு மனமே.. என்று இருக்கிறேன்..

      நீக்கு
  18. 'அன்பே வா' அசோகன் நினைவிற்கு வருகிறார்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பே வா ஞாபகம் இருக்கிறது. ஆனால் எம்ஜியார், ச தேவி, நாகேஷ், மனோரமா, டி ஆர் ராமச்சந்திரன்தான் நினைவில் வருகிறார்கள்.

      நீக்கு
    2. ஏன், உயர்ந்த மனிதன் அசோகன்?

      எனினும் அசோகன் எப்பவுமே ரொம்பவே செயற்கை!

      நீக்கு
    3. அன்பே வா, தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். ஆனால் அசோகன் இருப்பது நினைவில் இல்லை. அதே உயர்ந்த மனிதன் அசோகன்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் படமே ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நினைவில் இருக்கு! போதும்டா சாமி! :))))))

      நீக்கு
    4. //படமே ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நினைவில் இருக்கு!// ஜிவாஜியை பிடிக்காதவர்களாலேயே மறக்க முடியாத படம்! அடுத்த மின் நிலாவில் 'உயர்ந்த மனிதன் படம் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நினைவில் இருக்கு - கீதா சாம்பசிவம் என்று விளம்பரப் படுத்துங்கள். இன்னும் அதிகம் பேர் படிப்பார்கள். ஹாஹா!

      நீக்கு
    5. // 'உயர்ந்த மனிதன் படம் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நினைவில் இருக்கு - கீதா சாம்பசிவம் என்று விளம்பரப் படுத்துங்கள். இன்னும் அதிகம் பேர் படிப்பார்கள். ஹாஹா!// நல்ல யோசனை!

      நீக்கு
    6. படம் பார்த்தது/பார்க்க வைக்கப்பட்டது ஒரு தண்டனை போதாதுனு இது வேறேயா? வேணாம் சாமி! _/\_

      நீக்கு
  19. மணி எட்டு .. அலுவலகப் பேருந்து காத்திருக்கிறது...

    தாத்தாவின் பெட்டியைத் திறந்த மாதிரி இருக்கிறது இன்றைய பதிவு..

    மாலை 3:30 க்கு மேல் வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  20. பானுக்காவின் முதல் கேள்வியே டெரரா இருக்கே ஹா ஹா ஹா ஹா ஹா

    கத்தியின்று யுத்தமின்றி ரத்தமின்றினு மனசுடைய எனக்கு இந்த மாதிரி பார்க்க நேரிட்டதுண்டு. அதிர்ந்து போயிருக்கிறேன். இதையும் விட.

    என்னைப் பார்த்து யாரேனும் கோபத்தில் கத்தினாலே என் உடம்பு நடுங்கத் தொடங்கிவிடும் வயிறு கலங்கிடத் தொடங்கும். அப்படியிருந்த எனக்கு அப்புறம் கொஞ்சம் குரல் உயர்த்திப் பேசும் தைரியம் எல்லாம் வந்தது!!! ஹா ஹா ஹா..

    கீதா

    பதிலளிநீக்கு
  21. இந்திராகாந்தி// அச்சமயம் நான் கல்லூரியில் ஸோ விஷயம் அறிந்ததும் ஆஆஆ என்று முதலில் அதிர்ச்சி அப்புறம் ஹாலிடே நு ஜாலி!!! ஹா ஹா ஹா

    ரா கா கொலை செய்ய பட்ட போது திருவனந்தபுரத்தில். கடைகள் மூடப்பட்டன. வேறு சில நிகழ்வுகளும் நடந்த அரசியல் ரீதியாக அதை இங்கு சொல்ல முடியாது. ஏனென்றால் நாங்கள் இருந்த இடம் அப்படியான வல்னரபிள் இடமாக இருந்தது அப்போது. இப்போது மாறிவிட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. இந்தி எதிப்புப் போராட்டம் எனக்கு அத்தனை நினைவில்லை. துளசி வந்தால் சொல்லக் கூடும். அவருக்கு அதில் நிறைய பாதிப்பு அனுபவம் உண்டு. ஹாஸ்டலில் இருந்ததால்

    கீதா

    பதிலளிநீக்கு
  23. விருக்ஷாசனம் ஆம் பானுக்கா கண்களைத் திறந்து வைத்துக்கொண்டாலும் ஒரே இடத்தை அதுவும் கரெக்டாக நேராக கொஞ்ச, பார்வையைத் தாழ்த்தி பார்வை பதித்தால் பேலன்ஸ் கிடைக்கும் என் யோகா குரு பாயின் விளிம்பைப் பார்த்து ஒருமுகப்படுத்தச் சொல்வார். கண்ணை மூடினால் பேலன்ஸ் போகும் என்றுதான் அவரும் சொல்லியிருக்கிறார். நான் முயற்சி செய்து விழப் போனேன். அப்போது அவர் சொன்னது அது. பேலன்ஸ் போவதற்குக் காரணம் உண்டு டக்குனு எனக்கு அதை விளக்கிச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் சொல்கிறேன் சரியாகக் கோர்வையாக விளக்கம் மனதில் வந்ததும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. பதில்கள்
    1. முதல் கமெண்டிலேயே திறந்துடுச்சே!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா கௌ அண்ணா டைமிங்க்!!! செம.

      இப்பத்தான் மேலேறி வந்து கொண்டிருக்கிறேன்!!!

      கீதா

      நீக்கு
  25. மின்நிலா வாசித்துக் கொண்டிருக்கிறேன் கௌ அண்ணா.

    அதில் அ அ அ ஜீ சூப்பரா நல்ல தகவல் களஞ்சியமாகப் போகிறது. மற்ற இரு பகுதிகளும் வாசிக்கிறேன். நேற்று மின் அஞ்சலில் கருத்து கொடுக்கத் தொடங்கிய போது, நெட். கரன்ட் போயிந்தி! அப்புறம் விட்டுப் போச்சு.

    படங்கள் எல்லாம் ரொம்ப நன்றாக இருக்கின்றன. பல படங்கள் கண்ணையும் மனதையும் கவர்கின்றன. அதை எடுத்தவருக்கு நல்ல புகைப்படத் திறமை ரசனையும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ அ ஜீ ல மூளைக்குத் தகவல் தருவதோடு வயிற்றுக்கும் சிறிது வெர்ச்சுவலா!!! ஈயப்படுவது ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. மின்நிலா பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  26. அனைவருக்குதிய மதிய வணக்கங்கள்.
    இந்திரா காந்தி மறைந்தபோது நான் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். பட படவென கற்கள் டபறந்தன. கடைகளும் வீடுகளும் ரவுடிகளால் பூந்து அடிக்கப் பட்டன. எல்லா அலுவலகங்களும் அவசர அவசரமாக மூடப் பட்டன. என்னுடைய அலுவலகம் ராதாக்கிருஷ்ணன் சாலையில் இருந்தது. என் வீடோ செயின்ட் தாமஸ் மவுன்ட் அருகில் ஆதம்பாக்கத்தில் இருந்தது. பேருந்துகள், ஆட்டோக்கள் யாவையும் நிறுத்தப் பட்ட நிலையில் தனியாக வீடு செல்லவும் பயம்.
    எனவே, என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆண்டுரூஸ் என்னும் பையனுடன் ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவைப் பிடித்துக் கொண்டு 1984லேயே ரூ.200/- கொடுத்து 11 மணிக்கு கிளம்பியவர்கள் இரவு 8 மணி சுமாருக்கு வீட்டை அடைந்தோம். வழி முழுக்க ஒரே அடி தடிதான். ரிக்க்ஷா ஓட்டுனரும் ஆண்டுரூஸும் சேர்ந்து என்னை பத்திரமாக வீடு சேர்த்தனர்.
    என் தந்தை இருவரையும் வீட்டிற்குள் அழைத்து, சிறிது டிஃபன் மற்றும் காப்பி கொடுத்து ஆண்டுரூஸிற்கு ரூ.200/- கொடுத்து கை கூப்பி வழியனுப்பினார். அப்போது எனக்கு விவரம் புரியாத வயது. பெற்றோர் ஏன் இப்படி பயந்து போயிருக்கிறார்கள் என்று வியந்து போனேன். ஆனால், இப்போது என் பெண்கள் இரவு நேரம் சிறிது கால தாமதம் ஆனாலும் கந்தர் ஷஷ்டி கவசம் என்ன, ஆஞ்சினேய ஸ்தோத்திரம் என்ன என்று மாத்தி மாத்தி இறைவனே கதியென்ற சூழ்நிலை உருவாகும்போதுதான் என் பெற்றோரின் மனநிலை புரிந்தது.

    பதிலளிநீக்கு
  27. இந்திராகாந்தி இரநத அன்று என் அக்காவுடன் பணிபுரிந்த, கர்ப்பவதி, டீச்சரை மிதி மண்டியில் அமர வைத்து சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரை பாதுகாப்பாக அழைத்து சென்று அவரது வீட்டில் சேர்த்து நினைவிற்கு வருகிறது. ராஜீவ் இறந்த செய்தி இந்தியாவில் இருந்த எனக்கு பி பி சி செய்தியை பிரான்சிலிருந்த நண்பர்மூலம் அறிந்து அதிர்ந்துபோனேன்.

    "மெல்ல திறந்தது(பாத்ரூம்??) கதவு".

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ! அது பாத்ரூம் கதவு இல்லை; அந்தப் பக்கம் பெரிய கண்ணாடி ஜன்னல் அல்லவா இருக்கிறது!

      நீக்கு
  28. ஹிந்தி எதிர்ப்பின் போது பெரிய அளவில் நடந்த போது அது அத்தனை நினைவில்லை. என் அனுபவம் அது எத்தனாவது தடவையான எதிர்ப்பு என்றெல்லாம் தெரியவில்லை. நான் சிறுவனாக இருந்த போதும் அதன் பின்னும் கூட நடந்த நினைவு. சிறுவனாக இருந்த போது ஒரு பாலத்தில், மாணவர்கள் என்ன கொக்கா சுடுவதற்கு என்று எழுதியிருந்ததை எழுத்துக் கூட்டி வாசிக்க முயன்று ஒருவரிடம் அது என்னது என்று கேட்க அவரோ என்னை சத்தமா சொல்லாதே ஓடிடு நீ அதெல்லாம் கேக்கக் கூடாது என்று துரத்திவிட்டார். இதை எல்லாம் விட நான் ஹாஸ்டலில் இருந்த போது கிட்டத்தட்ட கலவரம் போல நடந்தது. அது இரு வகைப் பிரச்சனைகளுக்காக நடந்தது. பதிவு எழுதியிருக்கிறேன் எங்கள் தளத்தில்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  29. சமீபத்தில் தான் யோகா கற்றுக் கொண்டு செய்து வருகிறேன். இந்த ஆசனம் செய்வதுண்டு. கண்ணைத் திறந்து கொண்டுதான் செய்யச் சொல்லிக் கொடுத்தார் யோகா மாஸ்டர். அதனால் கண்ணை மூடிக் கொண்டு செய்வதில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  30. ஹிந்தி எதிப்பு எனக்கு அவ்வளவாக நினைவில் இல்லை. ஆனால் அந்த சமயத்தில் பார்த்த தார் பூசப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் பெயர் பலகைகள் லேசாக நினைவில்  இருக்கின்றன. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்டேஷன்களில் ஊர் பெயர்களில் தார் பூசுவது அப்போது ஆரம்பித்து அடிக்கடி நிகழ்ந்து வருவது!

      நீக்கு
  31. காலையில் வந்து இருந்தால் இது என்ன தமிழ்ப் படம்? என்ற கேள்விக்கு பதில் சொல்லி இருக்கலாம்.


    பதிலளிநீக்கு
  32. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நினைவில் இருக்கிறது... தஞ்சை மயிலாடுதுறை ரயில் வழித் தடத்தில் ஜங்ஷனை அடுத்து வடவாறு என்று ஒரு ஸ்டேஷன் இருந்தது.. பாசஞ்சர் ரயில்கள் நிற்கும்.. அங்கே இறங்கினால் அப்படியே நடந்து புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று விடலாம்...

    அந்த ஸ்டேஷனில் நிறுத்தப் பட்டிருந்த சரக்கு வேகன்களுக்கு தீவைக்கப்பட்டததாக பரபரப்பு..

    கீழவாசலில் இருந்த இரண்டு அஞ்சலகங்களும் அடித்து நொறுக்கப்பட்டு பெயர்ப் பலகைகள் உடைத்துப் போடப்பட்டிருந்தன...

    பதிலளிநீக்கு
  33. சஞ்சய் விபத்தில் சிக்கியபோது தஞ்சையில் கலெக்டர் அலுவலகத்தின் அருகே இருந்தேன்..

    இந்திரா காந்தி படுகொலையின் போது சிங்கப்பூரில் இருந்தேன்..கப்பல் தளத்தின் மேல் நண்பர்களுடன் அரட்டையில் இருந்தபோது கிரேன் டிரைவர் சத்தம் போட்டுச் சொன்னார்... செய்தியை நம்பாமல் சிரித்தோம்..

    அடுத்த சில விநாடிகளில் பாக்கெட் ரேடியோவை இயக்கியதும் அதிர்ச்சி.. யாரும் ஓவர்டைம் வேலை பார்க்காமல் திரும்பினோம்..

    சிங்கப்பூர் ஒளிவழியில் இறுதி மரியாதை நிகழ்வுகள்... அதைக் கண்டு கதறி அழுதது நெஞ்சில் இன்னும்...

    பதிலளிநீக்கு
  34. விடியற்காலையில் சிறப்புச் செய்தி அறிக்கையில் ராஜீவ் மரணம் சொல்லப்பட்டது.. அன்று முழுதும் வீட்டில் சமையல் இல்லை...

    மறுநாள் மாலையில் பக்கத்து கிராமத்தில் நண்பருடைய வீட்டில் கறுப்பு வெள்ளை டிவியில் இறுதிச் சடங்குகளைப் பார்த்தோம்..

    கிராமத்து ஜனங்கள் ஓ என்று அழுது தீர்த்தார்கள்...

    மறு நாள் ஜூனியர் விகடன் ராஜீவ் அவர்களது கடைசி நிமிட வண்ணப் படங்களுடன் புத்தகம் வெளியிட்டது...

    அந்த ஜூவி இன்னும் பத்திரமாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரிரண்டு நாட்கள் மனம் மிகவும் பதட்டமாக இருந்தது.

      நீக்கு
  35. இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது கலவரங்கள் நிகழ்ந்ததே நினைவில்

    பதிலளிநீக்கு
  36. ராஜீவ் காந்தி இறந்த போது நான் தில்லி வந்து சரியாக ஒரு மாதம் ஆகியிருந்தது. மொழி தெரியாமல் திண்டாடிய நாட்கள் அவை. இரண்டு நாட்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தோம். உணவுக்காக வெளியே செல்லும்போதும் ஒரு வித பயத்துடனே சென்றோம். ஆனால் இறந்த செய்தி கிடைத்தவுடனேயே ராணுவம் ரோந்துப் பணியில் இருந்ததால் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுக்கப்பட்டது. சில மாதங்கள் வரை தமிழர்கள் தான் எங்கள் தலைவரைக் கொன்று விட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த வட இந்தியர்களைக் கண்டதுண்டு. இப்போதும் சிலர் அப்படியே சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!