அதைக் காலம்பரயே பார்த்தேன். பேயார் வந்துட்டார் போலனு ஓடிட்டேன். இப்போப் பார்த்தால் பேயா"ள்" என்கிறீர்கள். பக்கத்தில் உள்ள மின் கம்பம் ஆடுவது இதற்கு ஒத்து ஊதுகிறாப்போல் இருக்கு.
அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனா பாதிப்பு அதிகம் ஆகிக் கொண்டிருக்கிறது/அல்லது அரசு உண்மையான தகவலைத் தருகிறது. எதுவாக இருந்தாலும் போதும் போதும் என ஆகிவிட்டது. இங்கே முழு ஊரடங்கு 21 நாட்களுக்குக் கொண்டு வரப் போவதாகப் பேச்சு. மாவட்ட ஆட்சியர் இல்லை என மறுத்திருக்கிறார். என்னனு இனிமேல் தான் தெரியும். இனியானும் நோயின் கடுமை குறைந்து மக்கள் சராசரியான வாழ்க்கைக்குத் திரும்பப் பிரார்த்திப்போம். இன்று மாலை அனைவரும் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் பண்ணுவோம்.
ஆகஸ்ட் 12க்கு மாமனார் ஸ்ராத்தம். ஆண்டார் தெருவில் ஒருத்தர் வீட்டில் எடுத்துச் செய்து தருகிறார்கள் எனக் கேள்விப் பட்டு அங்கே ஏற்பாடு செய்திருக்கோம். புரோகிதர் எங்கள் குடும்பப் புரோகிதர் தான். இது ஏன் என்றால் மார்க்கெட்/சந்தைக்குப் போய்க் காய்கள், பழங்கள், இலைக்கட்டு எனத் தூக்கி வர வேண்டும். அதுக்கு மாமா தான் போகவேண்டி இருக்கு. அதோடு வீட்டில் பெட்டியைத் திறந்து பித்தளை, ஈயம் பூசின பாத்திரங்களை எல்லாம் எடுத்துத் தேய்க்கப் போட்டு வாங்கி வைக்கணும். இல்லைனா நான் தேய்க்கணும். சமையல் மாமியால் வரமுடியலைனா நான் சமைக்கணும். உடம்பு இடம் கொடுக்குமானு தெரியலை. இது அத்தனையையும் தவிர்க்கத் தான் வெளியே ஏற்பாடு செய்திருக்கோம். நாங்க எங்க வீட்டுச் சமையல் முறையை எழுதிக் கொடுத்தால் போதும். பண்ணிக் கொடுத்துவிடுவார்களாம். நாங்க மட்டும் 12 ஆம் தேதி அன்று காலை ஏழு மணிக்குக் கிளம்பிப் போனால் போதும். அங்கேயே துணி உலர்த்திக் கொண்டு குளித்து மடி பண்ணிக்கொள்ளவும் வசதி இருக்குனு சொன்னார். ஸ்ராத்தம் முடிந்து மத்தியானம் திரும்பி வந்துடலாம். இப்போ 21 நாள் ஊரடங்கு எனில் நாங்க இப்படிப் போவதில் பிரச்னைகள் இருக்கு! என்ன செய்யப் போகிறோமோ, என்ன நடக்குமோ தெரியலை. இது வரை பொதுச் சந்தைக்குப் போகவில்லை. கிடைக்கும் காய்கள், பழங்களோடு பொழுதை ஓட்டுகிறோம். ஸ்ராத்தத்தில் அப்படி முடியாது. அதான் கவலை!
கீசா மேடம்... இத்தனை வருடங்கள் நடந்ததுபோல சிறப்பாக நடந்துவிடும். கவலைப்பட வேண்டாம். என் அப்பா ச்ராத்தமும் செப்டம்பரில் வருகிறது. நன்றாகவே இங்கு நடந்துவிடும் என்றே நம்புகிறேன் (இருந்தாலும் மனதில் கவலை இருக்கிறது. கண்டெயின்மெண்ட் ஸோன் ஆகிடக்கூடாதே என்று). மற்றபடி காய், பழங்கள் போன்றவற்றிர்க்குக் கவலை இல்லை. ஆனால் மனைவிதான் தளிகை என்று திட்டமிட்டிருக்கிறோம் (ஒரு தடவை அப்படிச் செய்திருக்கிறாள்)
திருவரங்கத்தில் இந்தப் பிரச்சனைலாம் இருக்காது என்றே நினைத்துக்கொண்டிருந்தேன்.
எங்க வீட்டிலும் மாமியார் காரியங்களுக்கு எல்லாம் நானே தான் பண்ணிக் கொண்டிருந்தேன். ஆப்தீகம் போது தான் ஆட்கள் அதிகம் என்று மாமியைக் கூப்பிட்டேன். ஆனால் இந்த "அக்கி" வந்தப்புறமாச் சமையலில் கிளறுவது, சேனைக்கிழங்கு போன்றவை நறுக்குவது, பாத்திரங்கள் தேய்ப்பது எல்லாம் கஷ்டமான வேலையாகிவிட்டது. இப்போத் தானே வேலை ஆளே 2018 ஆம் ஆண்டில் இருந்து போட்டிருக்கேன். அதுவும் மாதம் பத்து நாட்கள் விடுமுறை எடுக்கும் ரகம்.
கூர்க் சில்க்கும், மைசூர் சில்க்கும் ஒரே மாதிரியா இருக்குமா? நம்ம ஊரில் ஆரணிக்கும் காஞ்சீபுரத்துக்கும் வேறுபாடு உண்டு. அது போலவா? மைசூர் சில்க் ஒரிஜினல் நம்ம கோ ஆப்டெக்ஸிலேயே முன்னெல்லாம் விற்றார்கள். ஒரு புடைவை பெண்ணுக்கு வாங்கியது இன்னமும் இருக்கு. நன்றாக இருக்கும். நானும் 2,3 கட்டிக் கொண்டிருக்கேன். மைசூர் க்ரேப் இல்லை. சில்க்! அதாவது சிலுக்கு!
எல்லாப் படங்களும் குறிப்பாய் மழைப்படங்கள் அருமை. நன்றாக இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விளக்கம் சொல்லாதது தான் ஒரு குறை. மாறுதலுக்கு இப்படி இருக்கட்டும்னு விட்டுட்டீங்க போல!
மழைப்படங்களுக்குக் கீழே இருக்கும் படங்கள், கடையில் என்ன புடைவை வாங்கறாங்களா? அதெல்லாம் இன்னும் நன்றாக வந்திருக்கின்றன. யாரையுமே காணோமேனு நினைச்சால் எல்லோருமே சில்க் கடையில் போய் ஐக்கியமாகி இருக்காங்க.
ஹா.ஹா.ஹா. கைப்பேசியில் அடக்கி வைத்திருக்கிறேன்.ப்ரிஜில் வைக்கமுடியுமா? சுவை மாறுபட்டு விடுமே.. அடுத்து ஃப்ரிஜ்ல் வைக்க அது என்ன கதம்பமா? வாடாமல் வதங்காமல் பல வியாழன்களுக்கு பயன்படுத்திக் கொள்ள.. ஹா.ஹா.ஹா.
ஆஹா ஏட்டுக் கொழுக்கட்டையா?!!!ஹா ஹா. ஹா. ஹா.உங்கள் பதிலை மிகவும் ரசித்தேன்.
ஆனால் ஒரு எட்டு கொழுக் கட்டைகளுக்கான இனிப்புப் பூரணத்தை அது சுதந்திரமாக உலவும் பொழுதில், கைப்பேசியில் ஏட்டு பாணியில் இல்லாமல் (அவர் பணியில் இல்லாத போது) ப்ரிஜ் எனும் வீட்டுச்சிறையில் அதட்டி வைத்திருக்கிறேன். ஹா.ஹா.ஹா நன்றி.
ஏட்டுக்குத் தெரியாமல் எட்டுக் கொழுக்கட்டையா? மறுபடியம் அவர் பணியில் இல்லாதபோது கணினியில் ஏற்றி விடுங்கள். மௌஸை தள்ளி வையுங்கள். சாப்பிட்டு விடப் போகிறது!
ஹா ஹா ஹா. மெளஸ்தான் இப்போது கணினியுடன் இணைந்தே இல்லையே.. இரண்டாவதாக அது ப்ரிஜஜுக்கு பக்கத்தில்தான் சுற்றிக் கொண்டிருக்கும். இதன் பிரதிபலிப்பு கொழுக்கட்டை ஜோக்ஸ் இந்த வார கதம்பத்தில் இடம் பெறுமா? ரசிக்க காத்திருக்கிறேன்.
ஞாயிறு படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. அதன் பொருத்தமான வாசகங்கள் இல்லாமல் "மழையினால் வெறிச்சோடிய சாலை" போல் இந்த வாரம் வித்தியாசமாக இருக்கிறது.
நாங்கள்தான் வாசகங்களை உருவாக்க வேண்டுமென நீங்கள் வெறும் படங்களை மட்டும் ரசிக்கத் தந்தாலும், எப்போதும் நீங்கள் எடுத்து தரும் வாசகங்கள்தான் எங்கள் திறனையும் சற்று வளர்த்து தரும். மற்றபடி நாங்களாக யோசிப்பது சிரமந்தான். ("தலை இருக்க வால் ஆடலாமோ" இல்லை, "குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் இருக்க முடியுமோ" என்னும் வாசகம் மட்டுந்தான் எனக்குத் தோன்றுகிறது. ஹா.ஹா.)
முதல் படத்தில் பனைமர சிலுக்குடன் அருகில் சிலுப்பிக் கொண்டு ஆடும் தந்திக்கம்பத்தின் கைகள் நீட்டி,ஒற்றை கால் மடக்கி ஆடும் ஆட்டம் இன்னமும் சிறப்பாக இருப்பதாக (எனக்கு மட்டுமா?) தெரிகிறது. தலைப்பை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
கீழிருந்து மூன்றாவது படம் டக்குனு பார்க்க அந்த மதிலில் அழகான டிசைன் ஃபெர்ன் உருவாகியிருப்பது செதுக்கியது போல இருக்க. அத்ன் மேலே டக்குனு பார்க்க நிறைய வாத்துகளின் முகம் அலகுடன் தெரிவது போல இருக்கு!!! ஆனால் இருசக்கர வண்டிகளின் பின்பக்கம்...
நெல்லை நான் கீதாக்காவின் இந்தக் கமெண்டுக்கு ஓ போடுவேன்!! பின்ன கீதாக்கா கஷ்டப்பட்டு எடுத்து காவிரி படம் திங்க படம், கொல்ஹாபூர் படங்கள் அதுவும் வேகமா நடந்து கொண்டே எடுத்த படங்கள் எல்லாம் போடும் போது போய் இது சரியில்லை அது சரியில்லைனு சொல்லுவீங்கல்ல!! !!! ஹெ ஹெ ஹெ!!
நான் பின்னூட்டம் போட்ட பிறகு மத்தவங்க சிலரின் பின்னூட்டங்கள் பார்த்தேன். ஒரு வேளை என் ரீடிங் கிளாஸ்ல ப்ராப்ளமான்னு சந்தேகம் வந்துடுச்சு. பின்னூட்டங்கள்ல, படங்கள் 'குளுமை', 'அழகா இருக்கு', 'நல்லாருக்கு' என்றெல்லாம் பார்த்து வியந்தேன் (அல்லது என் கண் பார்வையை எண்ணி குறைப்பட்டுக்கிட்டேன். ஹா ஹா ஹா)
ஹா ஹா ஹா ஹா நெல்லை அண்ட் கீதாக்கா!!! ரசித்தேன் தேன் தேன்!!
நெல்லை ஹா ஹா ஹா இன்று நான் சொல்ல வந்ததை மாற்றிப் போட்டேன். ஹிஹிஹி... அதாவது நான் முதலில் சொன்ன கருத்தைச் சொல்கிறேன்...நான் முன்னமே படங்களுக்குச் சொன்னதுதான் சொல்லிவிட்டேன் என்பதால் மீண்டும் அதையே சொல்ல வேண்டாமே என்று ஹிஹிஹிஹி அது வேறு ஒன்னுமில்ல....எடுத்திருக்கும் படங்களில் செலக்ட்டிவான படங்கள், அதாவது நல்லா வந்திருக்கும் படங்கள், அந்த இடங்களின் சிறப்பு சொல்லும் படங்கள் அந்த இடத்தைப் பற்றிய ஓரிரு குறிப்புகள் என்று. காஃபி தோட்டம் காஃபி கொட்டை எல்லாம் வந்ததே சில பூக்கள் படங்கள் என்று அது அம்சம்!!! அப்படி செலக்டிவா போட்டா இன்னும் நல்லாருக்கும்தான். இதே ம்ழைத்துளிகள் கார் முன் ஜன்னலில் விழும் படம் ஒன்று முன்பு வந்திருந்தது அது நல்லாருந்துச்சுதான்.
நான், பஞ்சத்வாரகா யாத்திரையில், 30 ரூபாய்க்கே பெரிய ஜால்ரா கிடைக்கிறதே என்று, அதன் மீதான வியப்பில், மதுரா, விருந்தாவன்ல எல்லாம் 4-5 ஜால்ராக்கள் வாங்கினேன். அதில் ஒன்றை கீசா மேடத்துக்கு பார்சல் பண்ண வேண்டியதுதான்.
ஸ்ரீராம்... இன்னைக்கு நான் உங்களுக்கு டிக்ஷனரி ஆறதுன்னு முடிவு செஞ்சுட்டேன். டிக்ஷனரி தலைப்பு, கீசா மேடத்தின் சுருக்கல்கள். க கை நா - கணிணி கை நாட்டு கா கை நா - காமெரா கை நாட்டு கி கை நா - கிசுகிசு கை நாட்டு (அதாவது கிசுகிசுல்லாம் புரியாது, 1970களுக்கு அப்புறம் இருந்தால்). இப்படி நிறைய எழுதிக்கிட்டே போகலாம். ஹா ஹா
அனைவருக்கும் மதிய வணக்கங்கள். படங்கள் ஒவ்வொன்றும் அருமை. அதுவும் மழையைப் பார்த்ததும் மனதிற்குள் கண்டிப்பாக ஒரு மத்தாப்பு சுடர் விடுகிறது. கீதா, என் மாமனார், என் தந்தை இருவருடைய ஸ்ரார்தங்களும் அடுத்த மாதத்தில் வருகின்றன. உங்களைப் போல் நாங்களும் எங்கள் வாத்தியார் வீட்டில் பின் கட்டில் இதற்காகவே அறைகள் கட்டியிருக்கிறார். அங்கே ஸ்ரார்த்தம் செய்து விடலாமென்று முடிவு செய்துள்ளோம். எங்கள் வீட்டு வழக்கப் படி அண்கள்தான் சமைக்க வேண்டும். மாமியார் 80தை கடந்தவர். யாரையும் வீட்டினுள்ளே விட அச்சமாக இருப்பதால் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். என் அண்ணன் என்ன முடிவு செய்கிறானோ தெரியவில்லை. எல்லாமே குழப்பமாக இருக்கின்றது. வேகமாக விடியட்டும்.
//எங்கள் வீட்டு வழக்கப் படி அண்கள்தான் சமைக்க வேண்டும்.// ஆச்சர்யமா இருக்கு. பொதுவா ச்ராத்தம் செய்பவரின் மனைவி, சமையல் செய்யலாம். கர்த்தாக்களின் மனைவிகள் உதவலாம். வேறு பெண்கள் சமைக்கக்கூடாது (பொதுவா. அதாவது சொந்தக்காரப் பெண், பக்கத்துவீட்டு மாமி போன்று). வெளியிலிருந்து சமையலுக்கு ஏற்பாடு செய்தால், அவங்க ஆண்களாத்தான் இருப்பாங்க.
எனக்குத் தெரிந்தவரையில் ரமா சரியாகத் தான் சொல்கிறார். பல வைணவக் குடும்பங்களிலும் ஸ்ராத்த சமையல் ஆண்கள் தான் செய்வார்கள், பார்த்திருக்கேன். கர்த்தாவின் மனைவி உதவலாமே தவிர ஸ்ராத்த சமையல் செய்ய மாட்டார்கள். அதுக்குச் சங்குச், சக்கர முத்திரை வைத்துக் கொண்டிருக்கணும் என்பார்கள். அதோடு வைணவர்கள் பித்ரு சேஷம் எனப்பார்க்க மாட்டார்கள் என்றும் கேள்வி. எங்களுக்குப்பித்ரு சேஷம் உண்டு என்பதோடு கர்த்தாவின் மனைவி தவிர்த்த பிற பெண்களும் சமைக்கலாம், மடியாகவும் ஆசாரமாகவும் இருக்கும் பட்சத்தில். இதில் அநேகமாக எல்லார் வீடுகளிலும் வழக்கமாக வரும் ஒரே மாமி தான் வருவார் சமையலுக்கு.
ஸ்ராத்தம் செய்கிறவர்/செய்கிறவர்கள் (அண்ணன், தம்பிகளாக இருந்தால்) கர்த்தா எனப்படுவார்கள். ஆனாலும் வீட்டுக்கு மூத்த பிள்ளை இருந்தால் அவர் தான் முக்கிய கர்த்தா! அவர் தான் மனைவியுடன் எல்லாமும் செய்ய வேண்டும். மற்ற சகோதரர்கள் புல்லைப் பிடித்துக் கொண்டு அண்ணன் அருகே நிற்க வேண்டும். முக்கியமான தர்ப்பணம், பிண்டப் பிரதானம் போன்றவற்றில் அவர்களுக்குச் சிறிய பங்கு இருக்கும்.
நானும் உங்கள் கட்சிதான் நெல்லை. படங்கள் அத்தனை தெளிவில்லை என்று தோன்றியது. சிலுக்கு சொசைட்டி என்று தலைப்பை பார்த்ததும் ஞாயிறு விஷயம் மாறி விட்டதோ என்று நினைத்தேன்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று..
பதிலளிநீக்குநலம் வாழ்க...
நலமே விளைக...
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குஇன்று என்ன -
பதிலளிநீக்குபடம் பார்த்து கதை அறிக.. பகுதியா!...
சொந்த டயலாக் தினம்!
நீக்குஇருந்தாலும்
பதிலளிநீக்குபோனால் போகிறது என்று
ஒரே ஒரு சிலுக்கு படம் போட்டிருக்கலாம்!..
ஹிஹிஹிஹி...
நீக்குமுதல் படத்தில் உள்ள மர உருவத்தை உற்று கவனிங்க. சிலுக்கு ஆடும் நாட்டியம் தெரியும். மினிஸ்கர்ட் சிலுக்கு ஒற்றைக்கால் நாட்டியம்.
நீக்குஆஹா... கண்டேன் சிலுக்கை! துரை செல்வராஜூ ஸார்... வாங்க... வாங்க... பாருங்க...
நீக்குஅதைக் காலம்பரயே பார்த்தேன். பேயார் வந்துட்டார் போலனு ஓடிட்டேன். இப்போப் பார்த்தால் பேயா"ள்" என்கிறீர்கள். பக்கத்தில் உள்ள மின் கம்பம் ஆடுவது இதற்கு ஒத்து ஊதுகிறாப்போல் இருக்கு.
நீக்குஅந்தப் படத்தையும் இங்க இணைத்தால், மற்றவர்களும் கண்டு களிக்கலாமே (ஜிலுக்கை..ஹா ஹா)
நீக்குஅன்பு ஸ்ரீராம், அன்பு துரை
பதிலளிநீக்குஇன்னும் வருபவர்கள் அனைவருக்கும்
இனிய ஞாயிறு காலை வணக்கம்.
எல்லோரும் ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்தனைகள்.
நன்றி அம்மா.. வாங்க. வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனா பாதிப்பு அதிகம் ஆகிக் கொண்டிருக்கிறது/அல்லது அரசு உண்மையான தகவலைத் தருகிறது. எதுவாக இருந்தாலும் போதும் போதும் என ஆகிவிட்டது. இங்கே முழு ஊரடங்கு 21 நாட்களுக்குக் கொண்டு வரப் போவதாகப் பேச்சு. மாவட்ட ஆட்சியர் இல்லை என மறுத்திருக்கிறார். என்னனு இனிமேல் தான் தெரியும். இனியானும் நோயின் கடுமை குறைந்து மக்கள் சராசரியான வாழ்க்கைக்குத் திரும்பப் பிரார்த்திப்போம். இன்று மாலை அனைவரும் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் பண்ணுவோம்.
பதிலளிநீக்குமாவட்ட ஆட்சியர் இல்லை என்று மறுத்திருக்கிறார் என்றால் கொண்டு வரப்போகிறார்கள் என்று அர்த்தம்! ஏதோ டிசம்பரில் குறையும் என்கிறார்கள் பார்ப்போம்.
நீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம்.
ஆகஸ்ட் 12க்கு மாமனார் ஸ்ராத்தம். ஆண்டார் தெருவில் ஒருத்தர் வீட்டில் எடுத்துச் செய்து தருகிறார்கள் எனக் கேள்விப் பட்டு அங்கே ஏற்பாடு செய்திருக்கோம். புரோகிதர் எங்கள் குடும்பப் புரோகிதர் தான். இது ஏன் என்றால் மார்க்கெட்/சந்தைக்குப் போய்க் காய்கள், பழங்கள், இலைக்கட்டு எனத் தூக்கி வர வேண்டும். அதுக்கு மாமா தான் போகவேண்டி இருக்கு. அதோடு வீட்டில் பெட்டியைத் திறந்து பித்தளை, ஈயம் பூசின பாத்திரங்களை எல்லாம் எடுத்துத் தேய்க்கப் போட்டு வாங்கி வைக்கணும். இல்லைனா நான் தேய்க்கணும். சமையல் மாமியால் வரமுடியலைனா நான் சமைக்கணும். உடம்பு இடம் கொடுக்குமானு தெரியலை. இது அத்தனையையும் தவிர்க்கத் தான் வெளியே ஏற்பாடு செய்திருக்கோம். நாங்க எங்க வீட்டுச் சமையல் முறையை எழுதிக் கொடுத்தால் போதும். பண்ணிக் கொடுத்துவிடுவார்களாம். நாங்க மட்டும் 12 ஆம் தேதி அன்று காலை ஏழு மணிக்குக் கிளம்பிப் போனால் போதும். அங்கேயே துணி உலர்த்திக் கொண்டு குளித்து மடி பண்ணிக்கொள்ளவும் வசதி இருக்குனு சொன்னார். ஸ்ராத்தம் முடிந்து மத்தியானம் திரும்பி வந்துடலாம். இப்போ 21 நாள் ஊரடங்கு எனில் நாங்க இப்படிப் போவதில் பிரச்னைகள் இருக்கு! என்ன செய்யப் போகிறோமோ, என்ன நடக்குமோ தெரியலை. இது வரை பொதுச் சந்தைக்குப் போகவில்லை. கிடைக்கும் காய்கள், பழங்களோடு பொழுதை ஓட்டுகிறோம். ஸ்ராத்தத்தில் அப்படி முடியாது. அதான் கவலை!
நீக்குஓ... சோதனைதான்.
நீக்குநல்லபடி நடக்கப் பிரார்த்திப்போம் அக்கா.
கீசா மேடம்... இத்தனை வருடங்கள் நடந்ததுபோல சிறப்பாக நடந்துவிடும். கவலைப்பட வேண்டாம். என் அப்பா ச்ராத்தமும் செப்டம்பரில் வருகிறது. நன்றாகவே இங்கு நடந்துவிடும் என்றே நம்புகிறேன் (இருந்தாலும் மனதில் கவலை இருக்கிறது. கண்டெயின்மெண்ட் ஸோன் ஆகிடக்கூடாதே என்று). மற்றபடி காய், பழங்கள் போன்றவற்றிர்க்குக் கவலை இல்லை. ஆனால் மனைவிதான் தளிகை என்று திட்டமிட்டிருக்கிறோம் (ஒரு தடவை அப்படிச் செய்திருக்கிறாள்)
நீக்குதிருவரங்கத்தில் இந்தப் பிரச்சனைலாம் இருக்காது என்றே நினைத்துக்கொண்டிருந்தேன்.
எங்க வீட்டிலும் மாமியார் காரியங்களுக்கு எல்லாம் நானே தான் பண்ணிக் கொண்டிருந்தேன். ஆப்தீகம் போது தான் ஆட்கள் அதிகம் என்று மாமியைக் கூப்பிட்டேன். ஆனால் இந்த "அக்கி" வந்தப்புறமாச் சமையலில் கிளறுவது, சேனைக்கிழங்கு போன்றவை நறுக்குவது, பாத்திரங்கள் தேய்ப்பது எல்லாம் கஷ்டமான வேலையாகிவிட்டது. இப்போத் தானே வேலை ஆளே 2018 ஆம் ஆண்டில் இருந்து போட்டிருக்கேன். அதுவும் மாதம் பத்து நாட்கள் விடுமுறை எடுக்கும் ரகம்.
நீக்குகூர்க் சில்க்கும், மைசூர் சில்க்கும் ஒரே மாதிரியா இருக்குமா? நம்ம ஊரில் ஆரணிக்கும் காஞ்சீபுரத்துக்கும் வேறுபாடு உண்டு. அது போலவா? மைசூர் சில்க் ஒரிஜினல் நம்ம கோ ஆப்டெக்ஸிலேயே முன்னெல்லாம் விற்றார்கள். ஒரு புடைவை பெண்ணுக்கு வாங்கியது இன்னமும் இருக்கு. நன்றாக இருக்கும். நானும் 2,3 கட்டிக் கொண்டிருக்கேன். மைசூர் க்ரேப் இல்லை. சில்க்! அதாவது சிலுக்கு!
பதிலளிநீக்குஹிஹி... நீங்கள் முதலில் கேட்டிருக்கும் விவரம் எல்லாம் எனக்குத் தெரியாது. கடைசி மட்டும் தெரியும். ஹிஹிஹி...
நீக்குgrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
நீக்குஸ்ரீராம் பாவம் எத்தனை தடவை இங்க எழுதியிருக்கார், அவர் பாஸ், பிளாக் பக்கம் மழைக்குக்கூட (போரடிக்கும்போது கூட) ஒதுங்க மாட்டார்னு. அப்புறம் ஸ்ரீராம்ட போய், கூர்க் சில்க், ஆரணி சில்க், காசிப்பட்டு, காஞ்சீபுரம் பட்டு, சின்னாளப்பட்டுன்னுலாம் சொன்னீங்கன்னா அவ்ளோதான்.
நீக்குஹாஹாஹா, நான் சொல்ல நினைச்சேன், நீங்க சொல்லிட்டீங்க! :)
நீக்குஎல்லாப் படங்களும் குறிப்பாய் மழைப்படங்கள் அருமை. நன்றாக இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விளக்கம் சொல்லாதது தான் ஒரு குறை. மாறுதலுக்கு இப்படி இருக்கட்டும்னு விட்டுட்டீங்க போல!
பதிலளிநீக்குஆமாம்... உங்கள் மனதின் கற்பனை ஊற்றைத் திறந்து விடும் முகத்தான் அபப்டியே விட்டாச்.....!
நீக்குமழைப்படங்களுக்குக் கீழே இருக்கும் படங்கள், கடையில் என்ன புடைவை வாங்கறாங்களா? அதெல்லாம் இன்னும் நன்றாக வந்திருக்கின்றன. யாரையுமே காணோமேனு நினைச்சால் எல்லோருமே சில்க் கடையில் போய் ஐக்கியமாகி இருக்காங்க.
நீக்குகுடகு என்றால் மழையும் ,பசுமையும் என்று அர்த்தம்.
பதிலளிநீக்குகௌதமன் ஜி மாதிரி எழூத வராதே.
படம்கள் வழக்கம் போல, இன்னும் கொஞ்சம் மழையோட வந்திருக்கு.
குழந்தைகளைக் காணோம்.
குழந்தைகள் மழையில் நனையக் கூடாதே... அதுதான்!
நீக்குசண்டே போஸ்ட்ல கௌதமன் ஜி இதுவரை ஒன்றும் எழுதியதாகத் தெரியவில்லை! எல்லாம் கே ஜீ அல்லது ஸ்ரீ ஜி கைவண்ணம்தான்!
நீக்குஶ்ரீராம் தான் அநேகமா எழுதுவார். இப்போல்லாம் கேஜியும் எழுதிக் கொண்டிருந்தார். இந்த வாரம் இருவரும் லீவ் எடுத்துட்டாங்க.
நீக்குஓஹோ கடைசிப் படத்தில் இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஅம்மாவுக்கு சில்க் வாங்கித்தரப் போகிறார்களோ.:)
இருக்குமோ... அம்மா சிலுக்கு புடவை கட்டுவாரா என்று கேட்டுக்கொண்டுதான் வாங்கி இருப்பார்கள்!
நீக்குபடங்கள் குளுமை.
பதிலளிநீக்குசிலுக்கு படம் வேண்டுமா? :) நல்ல ஆசை தான்!
ஹா.. ஹா... ஹா... நன்றி வெங்கட்.
நீக்குசித்தர்கள் இன்னும் உலவுகிறார்களோ என்னமோ.. தெரியாது.
பதிலளிநீக்குஆனால்.. சிலுக்கு உலவுவதை நிறுத்தவில்லை!
அஹ்ஹ்.... ஹ்... இப்போ ஏதோ சீரியல் வேற வருதாமே... பேஸ்புக்ல பார்த்தேன்.
நீக்குஆகா!!
பதிலளிநீக்கு// மினி ஸ்கர்ட் சிலுக்கு நாட்டியம்..//..
இன்று சஷ்டியும் அதுவுமாக..
முருகா..முருகா!...
திவ்ய தரிசனம்! ஆனால் ஞானக்கண்களுக்குத்தான் தெரியும்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம். என் பங்கு கொழுக்கட்டை எடுத்து ஃப்ரிஜ்ல வச்சாச்சா?
நீக்குசிலுக்குவார்பட்டி படங்கள் நன்று.
நீக்குஹா.ஹா.ஹா. கைப்பேசியில் அடக்கி வைத்திருக்கிறேன்.ப்ரிஜில் வைக்கமுடியுமா? சுவை மாறுபட்டு விடுமே.. அடுத்து ஃப்ரிஜ்ல் வைக்க அது என்ன கதம்பமா? வாடாமல் வதங்காமல் பல வியாழன்களுக்கு பயன்படுத்திக் கொள்ள.. ஹா.ஹா.ஹா.
நீக்கு//சிலுக்குவார்பட்டி படங்கள் நன்று.//
நீக்குநன்றி ஜி.
//கைப்பேசியில் அடக்கி வைத்திருக்கிறேன்.ப்ரிஜில் வைக்கமுடியுமா?//
நீக்குஆஹா ஏட்டுக் கொழுக்கட்டையா?!!!
ஆஹா ஏட்டுக் கொழுக்கட்டையா?!!!ஹா ஹா. ஹா. ஹா.உங்கள் பதிலை மிகவும் ரசித்தேன்.
நீக்குஆனால் ஒரு எட்டு கொழுக் கட்டைகளுக்கான இனிப்புப் பூரணத்தை அது சுதந்திரமாக உலவும் பொழுதில், கைப்பேசியில் ஏட்டு பாணியில் இல்லாமல் (அவர் பணியில் இல்லாத போது) ப்ரிஜ் எனும் வீட்டுச்சிறையில் அதட்டி வைத்திருக்கிறேன். ஹா.ஹா.ஹா நன்றி.
ஏட்டுக்குத் தெரியாமல் எட்டுக் கொழுக்கட்டையா? மறுபடியம் அவர் பணியில் இல்லாதபோது கணினியில் ஏற்றி விடுங்கள். மௌஸை தள்ளி வையுங்கள். சாப்பிட்டு விடப் போகிறது!
நீக்குஹா ஹா ஹா. மெளஸ்தான் இப்போது கணினியுடன் இணைந்தே இல்லையே.. இரண்டாவதாக அது ப்ரிஜஜுக்கு பக்கத்தில்தான் சுற்றிக் கொண்டிருக்கும். இதன் பிரதிபலிப்பு கொழுக்கட்டை ஜோக்ஸ் இந்த வார கதம்பத்தில் இடம் பெறுமா? ரசிக்க காத்திருக்கிறேன்.
நீக்குகொழுக்கட்டை ஜோக்ஸா? எங்கே போவேன்?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஞாயிறு படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. அதன் பொருத்தமான வாசகங்கள் இல்லாமல் "மழையினால் வெறிச்சோடிய சாலை" போல் இந்த வாரம் வித்தியாசமாக இருக்கிறது.
நாங்கள்தான் வாசகங்களை உருவாக்க வேண்டுமென நீங்கள் வெறும் படங்களை மட்டும் ரசிக்கத் தந்தாலும், எப்போதும் நீங்கள் எடுத்து தரும் வாசகங்கள்தான் எங்கள் திறனையும் சற்று வளர்த்து தரும். மற்றபடி நாங்களாக யோசிப்பது சிரமந்தான். ("தலை இருக்க வால் ஆடலாமோ" இல்லை, "குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் இருக்க முடியுமோ" என்னும் வாசகம் மட்டுந்தான் எனக்குத் தோன்றுகிறது. ஹா.ஹா.)
முதல் படத்தில் பனைமர சிலுக்குடன் அருகில் சிலுப்பிக் கொண்டு ஆடும் தந்திக்கம்பத்தின் கைகள் நீட்டி,ஒற்றை கால் மடக்கி ஆடும் ஆட்டம் இன்னமும் சிறப்பாக இருப்பதாக (எனக்கு மட்டுமா?) தெரிகிறது. தலைப்பை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மழையினால் வெறிச்சோடிய சாலையா? ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய சாலையா?!!
நீக்குஆஹா... உங்களுக்கு ஞானக்கண் இருக்கிறது போலிருக்கே!
ஹா. ஹா. ஞானக்கண்ணா? அது இருந்தால் சிலுக்கு டான்ஸில் ஈர்ப்பு வருமோ?
நீக்குதலைப்பு ஹா ஹா ஹா ஹா சில்க் சிலுக்காகியது!!!
பதிலளிநீக்குஏன் படங்களுக்கு கேப்ஷன்ஸ் இல்லையோ?
எல்லா படங்களுமே நல்லாருக்கு. மழை படங்கள் நல்லாருக்கு.
கீதா
Silk ஐ பேச்சு வழக்கில் சிலுக்கு என்றுதானே சொல்லுவோம்? அப்புறம் என்ன வழக்கு!!!!
நீக்குகேப்ஷன் இருந்தது. மழை பெய்ததில் க(அ)லைந்து விட்டது!
ஹாஹாஹாஹா இரண்டிற்கும்!!!!!!
நீக்குகீதா
கீழிருந்து மூன்றாவது படம் டக்குனு பார்க்க அந்த மதிலில் அழகான டிசைன் ஃபெர்ன் உருவாகியிருப்பது செதுக்கியது போல இருக்க. அத்ன் மேலே டக்குனு பார்க்க நிறைய வாத்துகளின் முகம் அலகுடன் தெரிவது போல இருக்கு!!! ஆனால் இருசக்கர வண்டிகளின் பின்பக்கம்...
பதிலளிநீக்குகீதா
பார்த்தீங்களா... கேப்ஷன் இருந்தால் அது என்ன சொல்லுதோ அதை மட்டும்தான் உங்கள் மனம் கவனிக்கும். இப்போ பாருங்க.. புதுசு புதுசா கற்பனை விரியுது!
நீக்குஆமாம், நானும் கவனித்தேன். தி/கீதா சொல்வதை!
நீக்குபார்த்தீங்களா... கேப்ஷன் இருந்தால் அது என்ன சொல்லுதோ அதை மட்டும்தான் உங்கள் மனம் கவனிக்கும். இப்போ பாருங்க.. புதுசு புதுசா கற்பனை விரியுது!//
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர் சம்ம்மாளிப்பு!!! ஹா ஹா ஹா ஹா பரவால்ல பரவால்ல!!
அட! படம் கொடுத்து எங்களைத் தலைப்பு கொடுக்கச் சொல்லலாமோ?!!
நீங்க கேப்ஷன் கொடுத்த போதும் கூட நாங்கல்லாம் எங்களுக்குத் தோணியதைச் சொல்லுவோமாக்கும்!!!
கீதா
முருகா... முருகா...
பதிலளிநீக்குசரவணா... கதிர்வேலா...
நீக்குபடங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன. தலைப்பு ஈர்க்கிறது!
பதிலளிநீக்குதுளசிதரன்
நன்றி துளசி ஜி.
நீக்குSorry. இன்று எந்தப் படமுமே நல்லா இல்லை. எல்லா படங்களுமே அவுட் ஆஃப் போகஸ் அல்லது தெளிவில்லை.
பதிலளிநீக்குஅதானே! நீங்க நல்லா இருக்குனு சொன்னால் தான் மழை நின்னுடுமே! :)
நீக்குநெல்லை நான் கீதாக்காவின் இந்தக் கமெண்டுக்கு ஓ போடுவேன்!! பின்ன கீதாக்கா கஷ்டப்பட்டு எடுத்து காவிரி படம் திங்க படம், கொல்ஹாபூர் படங்கள் அதுவும் வேகமா நடந்து கொண்டே எடுத்த படங்கள் எல்லாம் போடும் போது போய் இது சரியில்லை அது சரியில்லைனு சொல்லுவீங்கல்ல!! !!! ஹெ ஹெ ஹெ!!
நீக்குகீதா
கீதா ரங்கன் - ஓஹோ அதுதான் விஷயமா? இப்போ புரிந்துவிட்டது. நீங்க என் படத்தை ஆஹா ஓஹோன்னு பாராட்டுங்க, நான் நீங்க போடற படத்தை பாராட்டிடறேன் என்பதுதான் நம்ம கீசா மேடத்தின் பாலிசியா?
நீக்கு//மழை நின்னுடுமே!// - கொஞ்ச நேரம் முன்னால புளிக்காய்ச்சல் இடுகைக்குச் சென்றிருந்தேன். திருவரங்கத்தில் மழை நின்றுவிட்டதா?
மழை போக்குக் காட்டிட்டு இருக்கு இங்கே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குசபாஷ்... சரியான போட்டி..! நான் வெய்யில் மழையைச் சொல்கிறேன்!
நீக்குநான் பின்னூட்டம் போட்ட பிறகு மத்தவங்க சிலரின் பின்னூட்டங்கள் பார்த்தேன். ஒரு வேளை என் ரீடிங் கிளாஸ்ல ப்ராப்ளமான்னு சந்தேகம் வந்துடுச்சு. பின்னூட்டங்கள்ல, படங்கள் 'குளுமை', 'அழகா இருக்கு', 'நல்லாருக்கு' என்றெல்லாம் பார்த்து வியந்தேன் (அல்லது என் கண் பார்வையை எண்ணி குறைப்பட்டுக்கிட்டேன். ஹா ஹா ஹா)
பதிலளிநீக்குகண்ணாடியைத் துடைச்சுட்டுப் போடுங்க, இல்லைனா பவர் மாறி இருக்கும். கண்ணாடியை மாத்துங்க முதல்லே!
நீக்குஹா ஹா ஹா ஹா நெல்லை அண்ட் கீதாக்கா!!! ரசித்தேன் தேன் தேன்!!
நீக்குநெல்லை ஹா ஹா ஹா இன்று நான் சொல்ல வந்ததை மாற்றிப் போட்டேன். ஹிஹிஹி... அதாவது நான் முதலில் சொன்ன கருத்தைச் சொல்கிறேன்...நான் முன்னமே படங்களுக்குச் சொன்னதுதான் சொல்லிவிட்டேன் என்பதால் மீண்டும் அதையே சொல்ல வேண்டாமே என்று ஹிஹிஹிஹி அது வேறு ஒன்னுமில்ல....எடுத்திருக்கும் படங்களில் செலக்ட்டிவான படங்கள், அதாவது நல்லா வந்திருக்கும் படங்கள், அந்த இடங்களின் சிறப்பு சொல்லும் படங்கள் அந்த இடத்தைப் பற்றிய ஓரிரு குறிப்புகள் என்று. காஃபி தோட்டம் காஃபி கொட்டை எல்லாம் வந்ததே சில பூக்கள் படங்கள் என்று அது அம்சம்!!! அப்படி செலக்டிவா போட்டா இன்னும் நல்லாருக்கும்தான். இதே ம்ழைத்துளிகள் கார் முன் ஜன்னலில் விழும் படம் ஒன்று முன்பு வந்திருந்தது அது நல்லாருந்துச்சுதான்.
கீதா
நான், பஞ்சத்வாரகா யாத்திரையில், 30 ரூபாய்க்கே பெரிய ஜால்ரா கிடைக்கிறதே என்று, அதன் மீதான வியப்பில், மதுரா, விருந்தாவன்ல எல்லாம் 4-5 ஜால்ராக்கள் வாங்கினேன். அதில் ஒன்றை கீசா மேடத்துக்கு பார்சல் பண்ண வேண்டியதுதான்.
நீக்குஇப்போ கேஜிஜி சாருக்கு, கீசா மேடம், பாராட்டறாங்களா இல்லை கலாய்க்கறாங்களான்னு சந்தேகம் வந்திருக்கும். ஹா ஹா.
கேஜிஜி-கேஜிஎஸ் என்று படிக்கவும்.
நீக்குஎன்னை மாதிரிக் கா.கை.நா.வுக்கு எல்லாமே நல்லாத்தான் இருக்கும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரசிக்கவே தெரியலை!
நீக்குகா கை நா வா? மண்டை காயுதே..்்!
நீக்குஸ்ரீராம்... இன்னைக்கு நான் உங்களுக்கு டிக்ஷனரி ஆறதுன்னு முடிவு செஞ்சுட்டேன். டிக்ஷனரி தலைப்பு, கீசா மேடத்தின் சுருக்கல்கள்.
நீக்குக கை நா - கணிணி கை நாட்டு
கா கை நா - காமெரா கை நாட்டு
கி கை நா - கிசுகிசு கை நாட்டு (அதாவது கிசுகிசுல்லாம் புரியாது, 1970களுக்கு அப்புறம் இருந்தால்).
இப்படி நிறைய எழுதிக்கிட்டே போகலாம். ஹா ஹா
கண்டு பிடிங்க, கண்டு பிடிங்க! கௌதமன் சார் வந்து சொல்லிடுவார் பாருங்க!அவர் நாளைக்கு மின் நிலாவில் வேலை மும்முரமாக இருப்பார். அதான் வரலை.
நீக்குதேறிட்டீங்க நெல்லை, தேறிட்டீங்க! ஹாஹாஹாஹா! அது!!!!!!!!!!!!!
நீக்குஅனைவருக்கும் மதிய வணக்கங்கள். படங்கள் ஒவ்வொன்றும் அருமை. அதுவும் மழையைப் பார்த்ததும் மனதிற்குள் கண்டிப்பாக ஒரு மத்தாப்பு சுடர் விடுகிறது.
பதிலளிநீக்குகீதா, என் மாமனார், என் தந்தை இருவருடைய ஸ்ரார்தங்களும் அடுத்த மாதத்தில் வருகின்றன. உங்களைப் போல் நாங்களும் எங்கள் வாத்தியார் வீட்டில் பின் கட்டில் இதற்காகவே அறைகள் கட்டியிருக்கிறார். அங்கே ஸ்ரார்த்தம் செய்து விடலாமென்று முடிவு செய்துள்ளோம். எங்கள் வீட்டு வழக்கப் படி அண்கள்தான் சமைக்க வேண்டும். மாமியார் 80தை கடந்தவர். யாரையும் வீட்டினுள்ளே விட அச்சமாக இருப்பதால் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். என் அண்ணன் என்ன முடிவு செய்கிறானோ தெரியவில்லை. எல்லாமே குழப்பமாக இருக்கின்றது. வேகமாக விடியட்டும்.
நல்லபடி நடக்கப் பிரார்த்திப்போம் ரமா!
நீக்கு//எங்கள் வீட்டு வழக்கப் படி அண்கள்தான் சமைக்க வேண்டும்.// ஆச்சர்யமா இருக்கு. பொதுவா ச்ராத்தம் செய்பவரின் மனைவி, சமையல் செய்யலாம். கர்த்தாக்களின் மனைவிகள் உதவலாம். வேறு பெண்கள் சமைக்கக்கூடாது (பொதுவா. அதாவது சொந்தக்காரப் பெண், பக்கத்துவீட்டு மாமி போன்று). வெளியிலிருந்து சமையலுக்கு ஏற்பாடு செய்தால், அவங்க ஆண்களாத்தான் இருப்பாங்க.
நீக்குஎனக்குத் தெரிந்தவரையில் ரமா சரியாகத் தான் சொல்கிறார். பல வைணவக் குடும்பங்களிலும் ஸ்ராத்த சமையல் ஆண்கள் தான் செய்வார்கள், பார்த்திருக்கேன். கர்த்தாவின் மனைவி உதவலாமே தவிர ஸ்ராத்த சமையல் செய்ய மாட்டார்கள். அதுக்குச் சங்குச், சக்கர முத்திரை வைத்துக் கொண்டிருக்கணும் என்பார்கள். அதோடு வைணவர்கள் பித்ரு சேஷம் எனப்பார்க்க மாட்டார்கள் என்றும் கேள்வி. எங்களுக்குப்பித்ரு சேஷம் உண்டு என்பதோடு கர்த்தாவின் மனைவி தவிர்த்த பிற பெண்களும் சமைக்கலாம், மடியாகவும் ஆசாரமாகவும் இருக்கும் பட்சத்தில். இதில் அநேகமாக எல்லார் வீடுகளிலும் வழக்கமாக வரும் ஒரே மாமி தான் வருவார் சமையலுக்கு.
நீக்குஸ்ராத்தம் செய்கிறவர்/செய்கிறவர்கள் (அண்ணன், தம்பிகளாக இருந்தால்) கர்த்தா எனப்படுவார்கள். ஆனாலும் வீட்டுக்கு மூத்த பிள்ளை இருந்தால் அவர் தான் முக்கிய கர்த்தா! அவர் தான் மனைவியுடன் எல்லாமும் செய்ய வேண்டும். மற்ற சகோதரர்கள் புல்லைப் பிடித்துக் கொண்டு அண்ணன் அருகே நிற்க வேண்டும். முக்கியமான தர்ப்பணம், பிண்டப் பிரதானம் போன்றவற்றில் அவர்களுக்குச் சிறிய பங்கு இருக்கும்.
நீக்குநானும் உங்கள் கட்சிதான் நெல்லை. படங்கள் அத்தனை தெளிவில்லை என்று தோன்றியது. சிலுக்கு சொசைட்டி என்று தலைப்பை பார்த்ததும் ஞாயிறு விஷயம் மாறி விட்டதோ என்று நினைத்தேன்.
பதிலளிநீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குமழை படங்கள், சுவரில் வளர்ந்து இருக்கும் செடி அழகு.
பதிலளிநீக்கு