என்ன இது?
தளிர் மிக அழகு
கம்பியா, காய்ந்த கொ டியா?
இவ்வளவு பச்சைக்கு நடுவே ஒரு மஞ்சள் கொத்து
இருண்ட வானத்தின் கீழ் செம்பருத்தியின் இலை, மொட்டு, பூ எல்லாம் ஒரே நிறம்
பச்சைக்கு நடுவே இப்போது சிவப்பு!
மீண்டும் கொஞ்சம் தளிர்
இந்தக் காய் பெயர் தெரியவில்லை . நிறைய இருந்தது
பருத்தி என்றால், வேட்டியை விட புடவை தான் நினைவுக்கு வருகிறது
பசுமை... இளமை...
இது என்ன காய்/பழம் ?
உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்ட சிறுவன்!
பசும் புதர்!
பூர்வ ஜென்மத்தில் யாராலோ "உன் தலையில் இடி விழ !"
என்று சாபம் பெற்ற மரம் போல .
பட்டாம் பூச்சி தெரிகிறதா?
இப்போ தெரிந்திருக்குமே? பாவம் குழந்தைப்பூச்சி, மழையில் ரொம்பத்தான் நனைகிறது
தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்..
பதிலளிநீக்குநலம் வாழ்க...
வாழ்க நலம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குபசுமையின் கோலமாக இன்றைய பதிவு...
பதிலளிநீக்குஅழகான படங்கள்...
நன்றி.
நீக்குஅன்பு ஸ்ரீராம், அன்பு துரை இன்னும் வரப்போகிறவர்கள் அனைவருக்கும் இனிய நாளுக்கான வாழ்த்துகள் பிரார்த்தனைகள்.
நீக்குபசுமைப் படங்களும்,
கூடவேதொடரும் வாசகங்களும் இனிமை.
பட்டாம்பூச்சியின் குழந்தை அழகு.
விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
அதற்கு இருக்கும் உறுதி நமக்கும் இருந்தால்
வாழ்வு சுலபம்.
இனிய காலை வணக்கம். வாங்க வல்லிம்மா....
நீக்குஇருக்கும் பேரங்களுடன் ,இன்னோரு பையனும் சேர்ந்து கொண்டது.
பதிலளிநீக்குகுடும்பமாகச் சேர்ந்து படம் எடுத்துக் கொண்டது அருமை.
நன்றி...
நீக்குபச்சை இலைகளுக்கு நடுவே சிவப்புப் பழங்களும்,
பதிலளிநீக்குமஞ்சள் பூவும்,
இடி விழுந்த மரமும் கூட அழகு..
நன்றி...
நீக்குபருத்தி என்றால், வேட்டியை விட புடவை தான் நினைவுக்கு வருகிற///////////பருத்தி புடவையாய் மட்டும் தான் காய்க்குமா. வேட்டி நெய்வதில்லையோ:)
பதிலளிநீக்கு
நீக்குகம்பியா, காய்ந்த கொ டியா? ////////இரண்டும் இல்லை. குடும்ப உறுப்பினரின் பெப்பர் அண்ட் சால்ட் முடி:)
அட????? ஆமா இல்ல? சரியாய்க் கவனிக்கலை, ரேவதி சொல்வது தான் சரி!
நீக்குஆமாவா இல்லையா? சரியா சொல்லுங்க!
நீக்கு👴🧓👩🦰👩👨🧑👧👦🧒👳♀️
நீக்குபடங்கள் அழகு. கோகோ வும் அழகு. சாக்கிலெட் தயாரிப்பாளர்கள், கோகோ உற்பத்தியை அதிகரிக்க, நில உரிமையாளர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிடுகிறார்கள், செடிகளும் தந்துவிடுகிறார்கள்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை... தகவலுக்கு நன்றி.
நீக்குஒருவார பயணமா இல்லை ஒரு வருட பயணமா என்னும்படியான படங்கள் அணிவகுப்பு
பதிலளிநீக்குஅஹ்ஹ்.....
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... பிரார்த்தனைகள் பலிக்கட்டும். வணக்கம். நன்றி.
நீக்குமரத்தில் இருக்கும் காய் ஜாதிக்காய் போன்று உள்ளது. முற்றும்போது பிளந்து உள்ளே உள்ள ஜாதிபத்ரியும் பின்னர் ஜாதிக்காய் எனப்படும் கொட்டையையும் தெரியும். பறித்து வைக்கப்பட்ட மஞ்சள் காய் கொக்கோ காய்.
பதிலளிநீக்குJayakumar
இருக்கலாம். சரியாய் இருக்கலாம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், நெல்லை தொடர்ந்து கேலி செய்தாலும் விடாத பிரார்த்தனைகள். நேற்று நிலவரம் கலவரமூட்டுவதாய் இருந்தது. என்னிக்கு விடிவுனு தெரியலையே! :( நம்பிக்கையுடன் காத்திருப்போம். ஆண்டவன் வழி காட்டுவார்.
பதிலளிநீக்குஇங்கயுமே பயத்தில் வெளியில் (காம்பவுண்ட்) செல்வதை நான் நிறுத்தி பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. மளிகை, மற்றவை ஆன்லைனில்தான் (பாருங்க... வாழைப்பூ, தண்டு, வாழைப்பழம், திராட்சை, காலிஃப்ளவர்லாம் ஆன்லைன்ல ஜம்முனு புத்தம் புதிதா வந்துடுது. போதாக்குறைக்கு ரோஜா பூக்கள்கூட ஆன்லைன் ஆர்டர்தான்.
நீக்குதினமும் எழுதும் ப்ரார்த்தனையை நேற்று மறந்துட்டீங்களேன்னு நினைவுபடுத்தினால் கோபிக்கலாமோ?
பிரார்த்தனைகள் பலிக்கட்டும் கீதா அக்கா... இன்றைய சென்னை கவுண்ட் 1200 ப்ளஸ்!
நீக்குநெல்லை.... ஆன்லைன்ல காய்கறி வாங்கும்போது முருங்கைக்காய் கொடுமைக்காயாய் இருக்கிறது. முள்ளங்கி வலிமையுடன் இருக்கிறியாது. கொத்துமல்லி கன்றாவியாய் இருக்கிறது. சில கடைகளில் ஒழுங்காயத் தருகிறார்கள்.
நீக்குநான்/நாங்க இதுவரை ஆன்லைனில் எதுவுமே வாங்கினது இல்லை. அதோடு கீழே வண்டிக்காரர்கள், ஆட்டோ ஓட்டுநர், கீழே இருக்கும் 2,3 கடைகளில் எனப் புத்தம்புதிய காய்கள் கிடைப்பதால் ஆனாவது லைனாவது. கொத்துமல்லிக் கட்டுப் பத்து ரூபாய்க்குப் பெரியதாக இருக்கும்.கருகப்பிலைக்குக் காசே இல்லை.
நீக்குஸ்ரீராம் -ஆன்லைன் காய்கறிகளைப் பத்தி நானும் இப்படித்தான் நினைத்தேன். என் கையால் பொறுக்கி, பார்த்து வாங்குவதைத்தான் நான் நம்பிக்கொண்டிருந்தேன். பிக்பாஸ்கெட்டில் ஆர்டர் செய்ய ஆரம்பித்த பிறகு, அவங்க ஒழுங்கா காய்களை அனுப்புவதைக் கவனிக்கிறேன். செளசெள நல்லா இருந்தாலும், நான் பார்த்துப் பொறுக்கி வாங்குவதைப்போல இல்லை. ஆனாலும் நல்லாவே இருக்கு. அநியாயத்துக்கு காய் விலை கம்மியா இருக்கு ஆன்லைன்ல. ஒரு வாழைப்பூ 15 ரூ, காலிஃப்ளவர் 15 ரூபாய் என்று ரொம்பவே கம்மி விலை. ஆனா பாருங்க... சேனை இல்லை (அவங்க திருத்தித்தான் தருவாங்களாம்.). எங்க வளாகத்துக்கு இரு வியாபாரிகள், வாரத்தில் 4 நாட்களுக்கு காய்கறி கொண்டுவர்றாங்க. ரொம்பவே உபயோகமா இருக்கு.
நீக்குபிக் பாஸ்கெட் இதுவரை முயற்சித்தது இல்லை. பொதுவாக பல ஆப்ஷன்கள் வருகின்றன. அதில் அருகில் இருப்பதாய், எல்லாம் ஒரே கடையில் போடக்கூடியதாய்... ஒருமுறை உயீடோ இரண்டு ஐட்டங்களை ஆர்டர் செய்ததும் வந்து கொடுத்தவர் "ஸார்... இதை இங்கு அருகில் இருக்கும் கடையில் ஆர்டர் செய்திருக்கக் கூடாதா?" என்று நொந்துக்கொண்டு போனார்! சுண்டைக்காய் கால் பணம்...
நீக்கு//நான்/நாங்க இதுவரை ஆன்லைனில் எதுவுமே வாங்கினது இல்லை. அதோடு கீழே வண்டிக்காரர்கள், ஆட்டோ ஓட்டுநர், //
நீக்குஆமாம் கீதா அக்கா... நாங்களும் மிக சமீப காலம் வரை அப்படிதான். இப்போது சமீபமாகத்தான் காய்கறி, மளிகை கூட ஆன்லைன் ஆர்டர்!
//ஒருமுறை உயீடோ இரண்டு ஐட்டங்களை ஆர்டர் செய்ததும் வந்து கொடுத்தவர் "//
நீக்குஅது என்ன உயீடோ? எப்படி இருக்கும்? சாப்பிடக் கூடியதா?
என் டைப்படிக்க நினைச்சேனோ? இவ்வளவு லேட்டாய்க் கேட்டால்?!!!
நீக்குபடங்கள் எல்லாமே அழகு. செம்பருத்திச் செடிப்படங்கள் ஒரே செடியின் படங்களா? வெவ்வேறா? முதல் படம் ஒரு மரத்தின் தண்டு போல் உள்ளது. சுற்றிச்சுற்றி வைத்திருப்பது கம்பிச்சுருள் போலத் தான் தெரிகிறது. காய்ந்த செடியின்/கொடியின் மெல்லிய தண்டுகளைப் போல் தெரியவில்லை.
கேள்வி எல்லாம் கேட்கப்படாது! ஞாயிறுகளில் பதில் வராது என்று தெரியுமில்லையா? தெரியாது என்றால் எங்கள் பழைய அஞ்சு கேள்விகள் பதிவை அஞ்சு தடவை படிங்க....
நீக்குஎன்னோட கவலை எல்லாம் அந்தச் சிறுவன் பெரியவங்க 3 பேரில் யாரை அல்லது சிறியவங்க இருவரில் யாரை "அங்கிள்" என்று கூப்பிட்டிருப்பான்? மண்டை காயுதே!
பதிலளிநீக்குஹா.ஹா.ஹா. சுவாரஸ்யமான நல்ல கவலை.. ஆனால் கவலையும் சிரிப்பை வரவழைக்கிறது.
நீக்குசந்தேகமில்லாமல் வலது ஓரம் அமர்ந்திருப்பவரைதான்! இது கூடவா தெரியலை...
நீக்குஎன்னைப் பொருத்த வரைல, வலது ஓரம் உட்கார்ந்திருப்பவர்தான் மத்தவங்களை அங்கிள்னு கூப்பிடும்படியாக இளமையாக இருக்கார் (வாய்ப்பு கிடைத்தால் முடிந்த அளவு ஐஸ் வைப்பது நல்லதுதானே)
நீக்குஅஹ்ஹ்,,,, ஹ்....
நீக்குகுழந்தைப்பூச்சி இன்னமும் கூடு கட்ட ஆரம்பிக்கலையா? இல்லாட்டி இடம் தேடுகிறதா?
பதிலளிநீக்குகேள்வியெல்லாம் கேட்கப்படாது... அதுவும் ஞாயிறுகளில்... இலலாட்டா எங்கள் பழைய அஞ்சுகேள்விகள் பதிவை பத்து வாட்டி படிங்க!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய ஞாயறு படங்கள் அனைத்தும் மிக அழகு. பசுமை கண்ணுக்கு குளிர்ச்சி என்பது போல், கண்களுக்கு நிறைவான படங்கள். இங்கு இப்போதிருக்கும் ஞாயறில்லாத ஜில் கிளைமேட்டில் படங்களை பார்க்கும் போது இலைகளின் அந்த ஈரப்பதம் கண்களுக்கு இன்னமும் குளிர்ச்சியை தருகிறது.
முதல்படம் அவ்வளவு அழகு. "காய்ந்த மரத்தின் ஒரு துளி கண்ணீர்" என தலைப்பிடலாம்.
மஞ்சள் பூக்களும், சிகப்பு பூக்களும் கழுவி விட்ட இலைகளுக்கு நடுவில் உல்லாசமான முகத்துடன் பிரகாசிக்கின்றன.
மழை மேகம் சூழ்ந்த இருண்ட நிறத்திற்கு தோதாக தன் கரும் பச்சை நிறத்தை பச்சோந்தியாய் மாற்றிக் கொண்ட செம்பருத்தி மிக அழகு.
படங்கள் எடுக்கும் போதே ஒவ்வொன்றையும் ரசித்து எடுக்கப்பட்ட போட்டோகிராப்பரின் ரசிகமனம் தெரிகிறது. பாராட்டுக்கள்.
குழந்தை பட்டாம்பூச்சி மிக அழகாக.. இளந்தளிர்கள் படங்களுக்கு இணையாக.. இருக்கிறது. அத்தனையையும் நானும் மிக மிக ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி .
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் கருத்தை அருமையான கவிதையாக வடித்திருக்கிறீர்கள் கமலா. மிக அழகான அருமையான கற்பனை வளம். ரசனை அபாரம். வாழ்த்துகள், பாராட்டுகள்.
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குஉங்களின் வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிகள். அதிகமான நீண்ட கருத்துரைகள் வளவளவென்று ஒவ்வொரு பதிவுகளுக்கும் தருகிறேனோ என நான் ஒவ்வொரு கருத்துக்களை பதிந்த பின் நினைப்பதுண்டு. ஆனால் உங்களின் இப்போதைய பாராட்டுகள் மகிழ்ச்சியை தருகிறது. சரி.. இப்படி நாமே பாராட்டிக் கொண்டிருக்கிறோமே ..! பதிவாசியர், பதிவை பதிந்த ஆசிரியர் எவருமே இன்னமும் காணோமே..! திருத்தப்படாத விடை தாள்களாய் இங்கு காத்திருக்கிறோம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீராம் வீடு மாற்றினதில் இருந்தே அவ்வப்போது எட்டித்தான் பார்க்கிறார். அதிகம் வர முடியலை போல. கௌதமன் சார் ஏதேனும் புத்தக வெளியீட்டில் பிசியாக இருப்பார். அதான் யாரும் இன்னமும் வரலை. காலை ஆறேகாலுக்குப் பின்னர் ஸ்ரீராமுக்கு நேரம் கிடைக்கலை. அல்லது இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறப்பான சமையல் செய்யறாரோ? நாளை வெளிவரும்னு நம்பறேன். :)))))
நீக்குகாய்ந்த மரத்தின் ஒரு துளி கண்ணீர்... ஆஹா.. கமலா அக்கா... இந்த வரி முன்னர் எனக்குத் தோன்றி இருந்தால் அதைத் தலைப்பாக்கி இருப்பேன்! உங்களுக்கு வார்த்தைகள் வரிசையில் வருகின்றன - அதுவும் ரசனையாய்!
நீக்கு//பதிவாசியர், பதிவை பதிந்த ஆசிரியர் எவருமே இன்னமும் காணோமே..!//
நீக்குவந்துட்டேன்... வந்துட்டேன்... இரண்டாம் ஆள் வந்துட்டேன்
// ஸ்ரீராம் வீடு மாற்றினதில் இருந்தே அவ்வப்போது எட்டித்தான் பார்க்கிறார். அதிகம் வர முடியலை போல.//
நீக்குஆமாம். சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. அதில் பணிக்கு வேறு சென்று வரவேண்டிய நிலை!
//அல்லது இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறப்பான சமையல் செய்யறாரோ? //
ஹிஹிஹி... கொஞ்சம் அதுவும்தான்! பாஸ் பனீர் பிரியாணி செய்தார். நன்றாய் இருந்தது. நான் அதற்கு உருளைக்கிழங்கு ஃபிரை செய்து கொடுத்தேன். வெங்காயம் தக்காளி கிரேவி செய்து அதைத்தனியாகப் பரிமாறி பிரியாணிக்கும் தொட்டுக்கொள்ளலாம், உ கி பிரையையும் அதில் முக்கி சாப்பிடலாம் என்று செய்து கொடுத்தேன். நேற்று உருளைக்கிழங்கு stuffed செய்தேன்!
சனி மற்றும் ஞாயிறு என்றால், என்னுடைய கவனம் முழுவதும் திங்கட்கிழமை வெளியிடப்படவேண்டிய மின்நிலா வார இதழ் தயாரிப்பில்தான் இருக்கும். அதை செய்து முடிக்கின்றவரை வேறு எதிலும் அதிக கவனம் செலுத்தமாட்டேன். மின்நிலா 009 தயார். நாளைய திங்க பதிவின் கடைசியில் இணைத்துவிட்டதால், இப்போதான் இங்கே எட்டிப்பார்க்கிறேன்.
நீக்குவிரைவில் பனீர் பிரியாணி செய்முறையும் உருளைக்கிழங்கு ஸ்டஃப் செய்முறையும் போடுங்க. வெங்காயம் தக்காளி க்ரேவி வேண்டாம். அலுத்துவிட்டது. :)
நீக்குமுயற்சிக்கிறேன். அதற்கு படமே எடுக்கவில்லையே...
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஏதோ எழுதுகிறேன். எப்போதுமே நீண்ட நீண்ட கருத்துரையாக எல்லோர் பதிவிலும் எழுதுகிறோனோ என ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. ஆனாலும் என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை. எனினும் நீங்கள் பாராட்டியது சந்தோஷம் அளிக்கிறது. உங்களுடைய பாராட்டுதலுக்கு நன்றி சகோதரரே.
தாமதமான பதில் தருகிறேன். நீங்கள் பார்க்கும் சந்தர்ப்பம் வருமோ இல்லையோ தெரியவில்லை.
சகோதரி கீதா சாம்பசிவம் சொல்கிற மாதிரி உங்கள் சமையல் தயாரிப்புகளையும் திங்களில் வெளியிடலாம். ஏற்கனவே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். காத்திருக்கிறோம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// எப்போதுமே நீண்ட நீண்ட கருத்துரையாக எல்லோர் பதிவிலும் எழுதுகிறோனோ என ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது.// இதில் தாழ்வு மனப்பான்மை ஏற்படவேண்டிய அவசியமே இல்லை. எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு பதிவுகளில், எந்தக் கருத்தையும், மற்றவர்கள் மனம் புண்படாத கருத்துகளை, அரசியல், மத சம்பந்த எதிர்மறை கருத்துகளைத் தவிர்த்து, பகிர்வதற்கு என்றுமே தடை இல்லை. மனதில் ஓடும் எண்ணங்களை மனதிலேயே பூட்டி வைக்காமல், இங்கே பகிர்வது தவறே இல்லை.
நீக்குHow about Monday and Tuesday? Comments are restricted? grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
நீக்குதிங்கள் பதிவும், செவ்வாய் பதிவும் எங்கள் ஆசிரியர் குழு அதிகம் தலையிடாமல், நம்முடைய மன்ற உறுப்பினர்கள் எழுதுபவை. அவற்றில், பதிவாசிரியரைப் பொருத்து, கருத்துரைப்பவர்கள் கருத்துரைக்கலாம். சென்ற செவ்வாய்ப் பதிவில், ஜீவி சார் எழுதிய மறுமொழி ஒன்றை நீங்கள் பார்க்கவில்லையா? // பா.வெ! பாதை மாறி வந்து விட்டீர்களே! இந்தப் பாதை 'லச்சா' ஊருக்குப் போகாதே!/// also // எபியில் பதிவுகளின் பின்னூட்டங்கள் மூன்று நாட்கள் வரை கூட நீண்டு கொண்டிருக்கின்றன. அந்த செளகரியத்தை பா.வெ.வும், நெல்லையும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கலாமே!//
நீக்குபடங்கள் தொடர்ந்து வரட்டும் பசுமை அழகு.
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குதளிரும், மஞ்சள் கொத்தும் மிகவும் அழகு...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்கு
பதிலளிநீக்குபச்சைபசேல் என்று படங்கள் எல்லாம் அழகு.
குழந்தைகளுக்கு மழையில் நனைய தானே பிடிக்கும்! ( குழந்தைப்பூச்சி)
சிறுவனின் ஆசையை பூர்த்தி செய்த உங்கள் குடும்பத்தினர் அன்பு வாழ்க!
நன்றி கோமதி அக்கா.
நீக்குபசுமை காட்சிகள் அழகு.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்குபசுமை மற்றும் பச்சையான மழையுடன் கூடிய இயற்கையழகை அழகாகப் படம் பிடித்து நம் பிளாகில் போட்டமைக்கு மிக்க நன்றி. யாவரும் சோர்ந்திருக்கும் வேளையில் தளிர் இலைகளும் கலை பழங்களும் எங்கள் மனதைக் கொஞ்சம் லேசாக்கி மகிழ்ச்சியூட்டுகின்றன.
பதிலளிநீக்குநன்றி ரமா ஸ்ரீநிவாசன்.
நீக்குகண்ணுக்கினிய காட்சிகள். பசுமை எங்கும் நிறைந்திருக்கிறது. அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குநன்றி வெங்கட். குறும்படம் பார்க்க அடுத்து உங்கள் தளத்துக்குதான் வருகிறேன்!
நீக்கு