புதன், 15 ஜூலை, 2020

சிந்தனையாளர்களும் படிப்பும் ...

கில்லர்ஜி: 

வாசிப்பு என்பது விரிவான சிந்தனையாளனுக்கு இருக்க வேண்டிய சிறப்பு அம்சம். சிலர் சிலரது இடங்களில் வாசிக்காதது அவர்கள் தாம் உயர்ந்தவர்கள் என்ற குறுகிய எண்ணப்பாடுகளுடன் வாழ்பவர்களா ?

# வெறும் வாசிப்பு மட்டுமே சிறந்த சிந்தனைகளை உருவாக்க இயலாது.  எதைப் படிக்கிறோம் என்பது முக்கியம்.  ஒருவர் நல்ல படைப்பை எப்படி அடையாளம் காண இயலும் ? படைப்பாளியின் பெயர் பிரபலமாக இருந்தால் படிக்க உந்துதல் இருக்கும்.  இல்லையானால் நண்பர்கள் சிபாரிசு நல்ல எழுத்துக்கு அறிமுகம் தரும். 


படிக்க ஏ...ராளமாகக் கிடைப்பதால் வாசகர் தன் அவகாசத்தைப் பங்கீடு செய்ய வேண்டி வருகிறது. எனவே படிக்க ஒதுக்கப் படும் கால அளவு  மிக தாராளமாக இருப்பதோ , கிடைப்பது அனைத்தும் படிக்கப் படுவதோ அசாத்தியம்.



நல்ல சிந்தனையாளருக்கு படிக்கத் தேவை தனக்கு தெரிந்த மொழி, நல்ல படைப்பு மட்டுமா ? இல்லை தனக்கு பிடித்தவர்களா ?



# தனக்குத் தெரியாத மொழியில் படிப்பது எப்படி ? நல்ல படைப்பைக் கண்டு கொள்வது எங்ஙனம் ?  பிரபலங்கள், தெரிந்தவர்கள் என்று ஆனால், தேடல் தேவையில்லை.


நெல்லைத்தமிழன்: 

இருவருக்கு இடையே போட்டி வரும்போது (அது கிரிக்கெட்டோ, இல்லை யுத்தமோ அல்லது எதுவோ) பொதுவாக நம் மனது யார் பலகீனமானவரோ அவர் வெற்றி பெறணும் என நினைப்பதும், பலகீனர் வெற்றி பெற்றால் சந்தோஷப்படுவதும் ஏன்?

$ பலகீனமானவரைத் தேர்ந்தெடுத்து அதி தேவதையாக்கும் முயற்சி?

# யார் வெற்றி பெற வேண்டும் என்று நாம் விரும்புவது நம் மனப்போக்கைச் சார்ந்தது. எல்லாரும் பலவீனர் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பதில்லை. தமது அபிமான நபர் வெற்றி அடைய வேண்டும் என்று சிலர் நினைப்பர். மீண்டும் மீண்டும் ஒருவரே வெற்றி அடையாமல் புதிதாக வருபவர் வெற்றி அடைய வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள்.  அதுபோக வயதில் இளையவர்கள்,  அழகில் மிக்கவர்கள் , என்று சில தகுதி படைத்தவர்கள் வெற்றி அடைய வேண்டும் என்று நேயர்கள் விரும்புவதும் இயற்கை. பார்க்கிறவர்கள் அனுதாபம் யார் பக்கம் எதனால் இருக்கிறது என்பதைப் பொறுத்து இது அமையும்.

ஆடம்பரத் திருமணங்களால் (இப்போ எல்லாத் திருமணமுமே, விசேஷமுமே  இந்த ரகம்தான்) யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

$ ஆடம்பரம் என்பது நம் reaction. திருமணம் செய்து கொள்பவருக்கும், செய்விப்பவருக்கும், ஒரு முக்கியமான நாள். பெங்களூரு மாப்பிள்ளையும் திருநெல்வேலி மணப்பெண்ணும் அப்படி நினைத்ததாய் தெரியவில்லை. (The reference is to Naraayanamurthy's son and Sivasailam's granddaughter when all the musical world turned out for the wedding concert)

# நிச்சயமாக கேட்டரிங் காண்ட்ராக்டர்களுக்கு லாபம். மெல்லிசைக் குழுக்களுக்கு லாபம். 


பெரிய இடத்து திருமணம் ஆயிற்றே என்று மிகவும் செலவு செய்து பரிசுப் பொருள்களை எடுத்துக் கொண்டு நன்றாக  உடுத்திக் கொண்டு கல்யாணத்திற்குப் போகிறவர்களுக்கு நேரம் , காசு நஷ்டம்.

=================

நிலா உலா 

சென்ற வாரம் நெட் தடங்கல் ஏற்பட்டதால், மின்நிலாவை முழு உருவம் கொடுத்து வைத்திருந்தபோதிலும், திங்கள் பதிவில் உரிய நேரத்தில் இணைக்க இயலவில்லை. 


பொருளடக்கத்தில் உள்ள தலைப்பின் மீது சுட்டினால், அந்தப் பக்கத்திற்கு சென்று படிக்கும் வகையில் புத்தகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பாதியை படித்து முடித்ததும், கீழே காணப்படும் 'பொருளடக்கம்' என்னும் வார்த்தை மீது சுட்டினால், திரும்ப பொருளடக்கம் பகுதிக்கு செல்லலாம். 

மீண்டும் நினைவுறுத்துகிறோம் - 

அ ) அருண், அங்கிதா அண்ட் அறிவுஜீவி  பகுதி 
ஆ) சுவாரஸ்ய மனிதர்கள்
இ)  புத்தக / கதை விமரிசனம் 
ஈ) வாசகர் அனுப்பிய மின்நிலா விமரிசனம் 
உ) வாசகர் விளம்பரங்கள் 
ஊ) வலைப்பதிவர் சுய அறிமுகம் 
எ) எழுதுபொருள் 
ஏ) பதிவுகளுக்கிடையே உள்ள இயற்கையழகு படங்கள், 
ஐ) அட்டைப்படம் - சிறப்புப் படங்கள் 

போன்ற பல வித்தியாசமான அம்சங்களும், எங்கள் ப்ளாக் ல் அந்தந்த வார திங்கள் முதல் சனிக்கிழமைப் பதிவுகள் வரையிலும் எல்லாவற்றையும் சேர்த்து மின்நிலாவில் வெளியிடுகிறோம். 

மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டி மூலமாக தளத்திற்கு சென்று அங்கேயே படிக்கலாம். நேரம் இல்லை என்றால், அந்த தளத்திலிருந்து மின்நிலாவை பதிவிறக்கம் செய்துகொண்டு, பிறகு நேரம் கிடைக்கும்போது படிக்கலாம். 

மேலும் அந்தந்த வார மின்நிலாவை 'நம்ம ஏரியா' வலைப்பூவிலும் 
(blog address : https://engal6.blogspot.com    ) embed செய்கிறோம். 

வாசகர்கள், மின்நிலா புத்தகத்தை access செய்வதில் / படிப்பதில் தடங்கல்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை குறிப்பிட்டால், அதை சரி செய்கிறோம். 

நன்றி 

=====================

புதன் 'புதுசு' 

அடுத்த புதன் பதிவில் ஒரு வித்தியாசமான முயற்சி செய்யலாம் என்று ஒரு யோசனை. 

அது என்ன? 

இதோ : 

உங்களுக்குத் தெரிந்த ஒரு தமிழ்ப் பழமொழி அல்லது தமிழ் சினிமா பெயர் - இதை dumb charades முறையில் - அதாவது வாய் பேசாமல் அபிநயம் மட்டும் பிடித்து, அதை சிறு வீடியோவாக எங்களுக்கு அனுப்புங்க. 

அந்த வீடியோ சைலண்ட் வீடியோவாக மட்டுமே இருக்கவேண்டும். 

விடையை எங்களுக்கும் சொல்லவேண்டாம். 

வீடியோவைப் பார்க்கும் வாசகர்கள், அவர்களுடைய பதிலை கருத்துரையில் பதிவு செய்யும்போது, சம்பந்தப்பட்ட பதிவாளர் - பதில் சரியா இல்லையா என்று கருத்து சொல்லலாம். 

வீடியோவில் நடிப்பவர் யார் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நீங்களோ அல்லது உங்கள் உற்றார் / உறவினர் / நண்பர் யார் வேண்டுமானாலும் நடித்து எடுக்கப்பட்டிருக்கலாம். 

வீடியோ கிளிப் - கௌதமன் / ஸ்ரீராம் வாட்ஸ் ஆப் எண்ணுக்கோ அல்லது engalblog@gmail.com மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கலாம். 
சந்தேகம் எதுவும் இருப்பவர்கள் இந்தப் பதிவில் பின்னூட்டம் பதிவு செய்யவும். 

நன்றி. 

====================== 

80 கருத்துகள்:

  1. பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்..    வாங்க...   அழகான, அருமையான பதிவொன்றை இன்று உங்கள் தளத்தில் இட்டு தமிழ்நாட்டின் தங்கத்தலைவனை நினைவு கூர்ந்துள்ளீர்கள்.

      நீக்கு
    2. அப்படியா - இதோ நானும் படிக்கிறேன்.

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    அனைவரும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னைவிட கிடைக்கும் நேரம் குறைவு என்பதோடு மட்டும் அல்லாமல்,
      வாட்ஸாப் நேரம் அதிகமாகிவிடுகிறது.
      உறவினர்,நட்புகள்,குழுக்கள் என்று பதில் எழுதவே
      ஒரு மணி நேரம் ஆகிறது.
      நேரிடையாக ஒவ்வொருவருடன் உரையாடுவதில்
      அதிக மகிழ்ச்சி.
      அடுத்தது நம் வலைப்பதிவு. அதைப் புதிப்பித்து
      பின்னூட்டம் இட்டவர்களுக்குப்
      பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது.

      பிறகு நம் நட்புகளின் வலைப்பூக்கள்.
      எண்ணி நான்கு பதிவுகளுக்குப்
      போனாலும் நன்றாகப் படித்துப் பின்னூட்டம்
      இட்டால் தான் மரியாதை.
      ஏனோ தானோ என்று பதில் சொல்வதில்
      அர்த்தமோ ,மரியாதையோ கிடையாது.

      நீக்கு
    2. சரியாகச் சொன்னீர்கள்!

      நீக்கு
    3. நன்றாக சொன்னீர்கள் அக்கா

      நீக்கு
  4. //வாசிப்பு என்பது... சில இடங்களை வாசிக்காத்து // கேள்வி தெளிவாகல்லை. கில்லர்ஜி, பலர், பல இடுகைகளை வாசிக்காமலேயே இருப்பதைக் குறிப்பிடுகிறாரா என்பது தெளிவாகப் புரியலை. அப்படி நினைத்திருந்தால் அது தவறு.

    மார்க்கெட்ல எத்தனையோ ஆடைகள் இருக்கு. நாம வாங்காத அல்லது ரசிக்காத ஆடைகள் வேஸ்ட் என்று சொல்லமுடியுமா? இலக்கியப் புத்தகங்கள், ரசனையான தலைப்புகள் லட்சக் கணக்கில் இருந்தாலும், நாம் படிக்கவில்லை என்பதால் அதற்கு மதிப்பு குறைவுபடுமா?

    படிக்கும் வாசகனின் கடமை எல்லாவற்றையும் படிக்கவேண்டும், கருத்திட வேண்டும் என நினைத்தால் அது தவறு.

    குவாலிட்டி ரீடிங் எனப்படுவது, நம் படிக்கும் நேரத்தை எஸ்.ரா, ஜெமோ இன்னும் நிறைய இலக்கியவாதிகளின் ஆக்கங்களைப் படிப்பதில் செலவழிப்பது. இணைய பிளாக்குகள் அனேகமாக பொழுதுபோக்கு வகையான எழுத்து. அந்த அந்த தளத்திற்குச் செல்வதற்கும், படிப்பதற்கும், பின்னூட்டமிடுவதற்கும் பல காரணிகள் உண்டு. எந்தக் காரணிகள் மற்றவர்களை தங்கள் தளத்திற்கு வரச் செய்கிறது, தடுக்கிறது என்பதை அந்த அந்த பிளாக்கர்கள்தாம் சிந்திக்கணும்.

    என்னிடம் நேரடியாக்க் கேட்டால் பட் பட் என என் கருத்தைச் சொல்லுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னிடம் கேட்டாலும் நான் நேரடியாக சொல்வேன். பட் பட் !

      நீக்கு
  5. நல்ல படைப்பா இல்லை தனக்குப் பிடித்தவர்களா? - இணைய வாசிப்பு பொழுதுபோக்கு அம்சம். இதில் தனக்குப் பிடித்தவர்கள், தாங்கள் படித்து கருத்திட்டால் அதை மதித்து மறுமொழி தருபவர்கள், ஒருசார்பற்ற வெறுப்புப் பேச்சுகளற்ற, யாரையும் வம்புக்கிழுக்காத இடுகை என பல காரணிகள் உண்டு.

    நல்ல படைப்பு என கில்லர்ஜி நம்பினால் அவர் மகாபாரதம், இராமாயணம், நீதிபோதனைக் கதைகள் இருக்கும் இணையதளங்களிலேயே இருந்துவிட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே...
      எவ்வளவோ பதிவர்கள் சிறப்பாக எழுதி இருக்கிறார்கள். நான் உள்ளே போய் பார்த்து படித்து கருத்துரை இட்டு வந்து இருக்கிறேன், இப்பொழுதும்கூட...

      இங்கு ஏன் யாரும் வருவதில்லை என்று ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். அப்பதிவர்களும் வேறு எங்கும் செல்வதில்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

      ஏன் தொடர்ந்து சென்று வந்தும் எனது தளமே வருதில்லை.


      நான் மதவாதம் பேச வரவில்லை ஆனால் சொல்ல வேண்டிய சூழல். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அப்பொழுது தமிழ்மணம் ஓட்டும் இருந்தது.

      அவர் இஸ்லாமியர் நான் தொடர்ந்து சென்று படித்து, கருத்துரையும் ஓட்டும் போட்டு வருவேன்.

      ஆனாலும் அவர் எனது தளம் வர மாட்டார்.இனிதான் விசயத்துக்கு வருகிறேன். அதாவது பதிவு போட்டு ஐந்து மணி நேரத்துக்குள் சுமார் 40 தமிழ்மண ஓட்டுகள் விழுந்து விடும். ஆனால் கருத்துரை எழுதுவது கடைசிவரை நான் மட்டுமே...

      இவர்கள் நிச்சயமாக படித்து இருக்கவே மாட்டார்கள் காரணம் எழுதுவது நல்ல விசயங்களாகவே இருக்கும். ஆத்மார்த்தமாய் படிப்பவன் கருத்து எழுதியே தீருவான். தமிழ்மணம் ஓட்டுப்போட ஐடி உள்ளவன் கருத்து எழுத முடியாதா ?

      ஓட்டுப் போட்டது யாரென்று உள்ளே சென்று பார்த்தால் அனைவரும் இஸ்லாமியரே...

      இவர்கள் வந்தது நல்ல படைப்புக்காக அல்ல! வேறு நோக்கம்.

      நீக்கு
    2. கில்லர் ஜி அவர்களின் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது...

      நீக்கு
    3. //இங்கு ஏன் யாரும் வருவதில்லை என்று ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். அப்பதிவர்களும் வேறு எங்கும் செல்வதில்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.// குழு மனப்பான்மை என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது. இருக்கும். அதைப் பற்றியெல்லாம் அதிகம் யோசிக்காமல் தொடர்ந்து நம் வேலையைப் பார்க்க வேண்டும்.

      நீக்கு
    4. மத்யமரில்கூட ஒரு பெண்,"பதிவு போட்ட அடுத்த நொடியே லைக் வருகிறதே எப்படி?" என்று கேட்டிருந்தார்.

      நீக்கு
    5. கில்லர்ஜி.... உங்க பாயின்ட் புரியுது. இடுகை என்பது வேறு. பின்னூட்டம் என்பது வேறு. தமிழ்மண வாக்கு என்பது வேறு. நிறையபேர் தமிழ்மண வாக்கு பைத்தியமாத் திரிஞ்சாங்க, அப்போ இடுகையின் குவாலிட்டி பற்றி அக்கறை இல்லை. அந்த சமயத்துல, நீ என் பதிவுக்கு வந்தால் நான் உன் பதிவுக்கு வருவேன் என்ற ஒப்பந்தம் இருந்தது. இப்போதும் அந்த எண்ணம் அனேகமா பலருக்கு இருக்கு என்பது உங்களுக்குத் தெரியும்.

      தமிழ்மணம் போன்ற திரட்டி இல்லாத்தால் நானும் நல்ல பதிவுகள் பலவற்றை மிஸ் செய்திருக்கலாம்.

      நீக்கு

  6. பெரிய இடத்து திருமணம் ஆயிற்றே என்று மிகவும் செலவு செய்து பரிசுப் பொருள்களை எடுத்துக் கொண்டு நன்றாக உடுத்திக் கொண்டு கல்யாணத்திற்குப் போகிறவர்களுக்கு நேரம் , காசு நஷ்டம்.//////பெரிய இடத்துக் கல்யாணங்களுக்குச் சென்று
    அலுத்தது நினைவுக்கு வருகிறது.
    சில இடங்களில் பிரமாத ஏற்பாடுடன் சீருடை
    அணிந்து நம்மை வரவேற்பவர்களோடு
    சீராட மனம் இல்லை.

    மாமியாருக்காக சில இடங்கள் போக வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது.
    இப்போது அந்தக் கவலை இல்லை.
    அந்த அழைப்பிதழ்களைப் பார்த்தாலே மலைப்பாக
    இருக்கும்.
    அழைக்க வரும்போது மிக உயர்ந்த பரிசு,தாம்பூலமாகக்
    கொடுத்து விட்டுப் போவார்கள்.

    மிக மிக நல்ல மனிதர்கள் தான்.
    அந்த சமுத்திரத்தில் சிறு துரும்பாவதற்கு,
    அவர்கள் அழைப்பைக் கொடுக்க வரும்போதே
    நம் அன்பளிப்பையும் கொடுத்துவிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசியில் சொல்லப்பட்டது நல்ல யோசனை!

      நீக்கு
    2. ஆகா!...

      திருமண அழைப்பு என்ற பேரில் வசூல் வேட்டைக்கு நல்ல ஆலோசனை...

      கல்யாணம் என்னும் தற்கால நாடகத்துக்கு முன்னாலேயே கல்லா கட்டுவதால் இன்னும் கூடுதலாக செலவழித்து காசைக் கரியாக்கலாம்...

      நீக்கு
    3. வல்லிம்மா.... இது என்ன யோசனை? நம்ம வீட்டுக்கு வந்து கூப்பிடறவங்களுக்கு ஆட்டோ சார்ஜ் கொடுப்பது போலனா அது ஆகிடும்.

      ஒருவேளை, சிலர், நீதான் அன்பளிப்பு கொடுத்தாச்சே, விசேஷத்துக்கு வரத் தேவையில்லைனு சொல்லிடுவாங்களோ?

      நீக்கு
    4. " மொய் தவிர்க்கவும்; Your presence is only the present we expect. please avoid presents" என்றெல்லாம் அச்சடிக்கப்பட்ட பத்திரிக்கைகளை கொண்டுவந்து கொடுப்பவர்களுக்கு என்ன செய்வது? (அவர்களிடம் நாம் ஏதேனும் பைசா வாங்கிகொள்ளலாமா !)

      நீக்கு
    5. இந்த ஒரு கேள்விக்காகத்
      தனிப் பதிவே எழுதலாம்..

      இந்த்க் கேள்வியைப் பிரித்து மேய்ந்தால் அவ்வளவு விஷயங்கள் கிடைக்கின்றன...

      நீக்கு
  7. மின் நிலா மிளிர்கிறது.

    இன்னும் விரிவாகப் படிக்க வேண்டும்.
    ஓஹோ. அடுத்த வாரம் அபிநய வாரமா.:)
    செய்யூன்னு சொல்கிறேன் நம் எதிர் நீச்சல் நாயர்
    மாதிரி.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் , நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொடிய அரக்கனின் பிடியிலிருந்து உலக மக்கள் அனைவரையும் சத்ரு சம்ஹார வேல் காத்து ரக்ஷிக்கப் பிரார்த்தனைகள். வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா!

    பதிலளிநீக்கு
  9. வரவரக் கேள்விகள் குறைந்து கொண்டே வருகின்றனவே! மக்களுக்கு சந்தேகங்கள் எல்லாம் தெளிவாகி விட்டனவா? சரி, சரி, இன்னிக்கு ஏதேனும் கேட்டு மாட்டி விட முடியுதானு பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. எங்கள் குடியிருப்பின் பின்புறம் புதுசாக் கட்டி இருக்கும் கல்யாண மண்டபத்தில் ஞாயிறன்று திருமணம் நடந்தது. வெள்ளிக்கிழமை இரவு காடரிங்காரர்கள் வந்தனர். சனி, ஞாயிறு,திங்கள் திருமணம் முடிந்து கல்யாண வீட்டுக்காரர்கள் எல்லாம் போய்விட்டாங்கனு நினைச்சாலும் அங்கே இன்னமும் யார், யாரோ இருந்தனர். ஒரே சத்தம். ஒருவழியா நேற்றுத் தான் சத்திரம் காலியானது. ஐந்து நாள் கல்யாணமோ என்று பேசிக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சரியமா இருக்கு! இந்த நாட்களில் அஞ்சு நாள் கல்யாணமா!

      நீக்கு
    2. ஆமாம், அதான் ஆச்சரியம். நேற்றுத் தான் எல்லோரும் கிளம்பினார்கள் ஒரு வழியா! ஆனால் கல்யாணத்தில் நாதஸ்வரம் அபாரம், அமர்க்களம். இந்தக் கால வழக்கப்படி செண்டை மேளம் வைக்கலை. நல்ல நல்ல கீர்த்தனைகளாக வாசித்தார்கள்.

      நீக்கு
  11. மின்நிலாவை நானும் தாமதமாகத் தான் பார்த்தேன். எல்லாமே நன்றாக இருந்தன. அடுத்தவாரம் எல்லோரும் நாட்டியம் ஆடிக்காட்டணுமா! இப்போப் பார்த்து ஒரு பழமொழியும் நினைவிலேயே இல்லை. :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழமொழி எதுவும் ஞாபகம் வரலியா! அதிசயம்தான்!

      நீக்கு
    2. ஆமாம், "அத்தி பூத்தாப்போல்" தான் நினைவுக்கு வரும் போல! :))) இந்தப் பழமொழிகளுக்கும் வழக்குச் சொற்களுக்கும் தடுமாற்றம் ஏற்படும். :))))

      நீக்கு
    3. கூகிளாண்டவர் உதவுவார் - சரியான பழமொழிகள் அறிய.

      நீக்கு
    4. https://tinyurl.com/y8afeabc

      இந்தப் பதிவில் எங்கேயோ உங்கள் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட யுஆரெல் பார்த்தேன், டினி உரல் பயன்படுத்தினால் இம்மாதிரிச் சின்னதாய்க் கொடுக்கலாம். நீங்கள் போன அதே பக்கம் தான் இங்கே கொடுத்திருக்கேன்.

      நீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. எதைப்படிக்கிறோம் என்பது முக்கியம். உண்மை.

    பதிலளிநீக்கு
  14. புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி எல் கே - உங்கள் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

      நீக்கு
  15. தமிழ்ப் பழமொழி / தமிழ் சினிமா பெயர் காணொளி - வித்தியாசமான முயற்சி... வெற்றி பெற வாழ்த்துகள்...

    திரைப்படங்களிலிருந்து ஆடியோவை நீக்கிய வீடியோவும் அனுப்பலாம் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாமா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல யோசனை. ஆனால் எம்ஜியார் படங்களைக் கண்டுபிடிப்பது சிரமம். பாடல் காட்சிகள் எல்லாவற்றிலும் கையைத் தூக்குவாரே !

      நீக்கு
    2. கேஜிஜி சார்... 91-96ஆ இருந்தால் உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பியிருக்கலாம். ஹா ஹா

      நீக்கு
    3. எம்ஜியார், சிவாஜி பாடல் காட்சி வந்தாலே பாட்டு ஞாபகம் வந்து விடும்... அதிலுள்ள திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிப்பது பலருக்கும் எளிது தான்... எடுத்துக்காட்டாக சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் படத்தில், ஒரு பாடலில் சிவாஜி என்று பாட ஆரம்பித்தாலே, யாரடி நீ மோகினி என்று படத்தின் பெயரை எளிதாக சொல்லி விடுவார்கள்...

      ஆனால் இன்றைய திரைப்படங்களை விட அன்றைய திரைப்படங்களில் (பாடல்களில்) க்ளோசப் காட்சிகள் அதிகம்... நேரம் இருப்பின் ஒரு பாடல் காட்சியை தயார் செய்து அனுப்புகிறேன்...

      நீக்கு
    4. பாடல் காட்சி கிடைக்கப்பெற்றோம். நன்றி. அடுத்த புதன்கிழமையன்று அதை வெளியிடுகிறோம்.

      நீக்கு
  16. எனது கேள்விகளுக்கு பதில் தந்தமைக்கு நன்றி ஜி

    தெரியாத மொழியில் எப்படி படிக்க முடியும் ? நமக்கு தெரிந்த மொழி என்றே சொல்கிறேன்.

    புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. மின் நிலா ஒளிர்கின்றது...
    பொன் நிலா என மிளிர்கின்றது..

    அன்பின் வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் காலை வணக்கம். நெல்லை சாரின் இரண்டாவது கேள்வி இப்போது உலகம் இருக்கும் சூழலில் மிக கருத்தான கேள்வி. நஷ்டம் என்று பார்த்தால், இரு குடும்பத்திற்கும் திருமணத்திற்கு வந்தவர்களுக்கும் கண்டிப்பாக நஷ்டம்தான். ஒத்துக் கொள்கிறேன்.
      இதே இரு குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து இல்லாதவர்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை மற்றும் பண உதவி செய்திருந்தார்களேயானால், செய்தவர்களை உதவி ஏற்ற உள்ளங்கள் வாழ்த்தும். இது இரு குடும்பத்திறுகும் லாபம். இதை செய்யாதததால் அந்த இல்லாத அடி நிலை மக்களுக்கு நஷ்டம். இதை தவிற இந்த ஒரு நாள் கூத்தை பற்றி மிஞ்சிப் போனால் ஒரு மாதம் யாவரும் உரையாடுவார்கள். அதற்குப் பிறகு அவ்விஷயம் பின் தள்ள படும். அப்படி பார்த்தால் அந்த ஒரு நாள் கூத்துக்காக கோடி கணக்கில் செலவழித்த அவர்களுக்கு நஷ்டம்தானே. தங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு அப்பணத்தை சேமிப்பாக வைத்திருக்கலாமே. இன்றைய சூழல் யாருடைய வாழ்க்கை செழுமையும் வறுமையும் நிலையானதல்ல என்பதை வெளிச்சம் போட்டு காண்பித்து விட்டது. எனவே யாவரும் சிந்தித்து செயல் படுதல் நன்று.

      நீக்கு
  18. முழுதும் படிக்காது நான் இதுவரை பதில் எழுதியதில்லை...அதன் காரணமாகவோ என்னவோ அதிகம் படிக்க இயலுவதில்லை.கூடுதலாய் படிக்க..முயற்சிக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  19. புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.

    ஆடம்பர திருமணங்கள் தங்கள் தகுதியை காட்டுவதற்காக எடுக்கப்படும் கூத்துதான் மொத்தத்தில் விரயம்.

    பதிலளிநீக்கு
  20. புதிய புதிய முயற்சிகள் - நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    மின் நிலா - வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. //ஆடம்பரத் திருமணங்களால் (இப்போ எல்லாத் திருமணமுமே, விசேஷமுமே இந்த ரகம்தான்) யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?// எதில்தான் லாப,நஷ்டம் பார்ப்பது என்று விவஸ்தை கிடையாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லாப நஷ்டம் இல்லாத செயல் ஒன்றுமே கிடையாது. காரணமன்றி காரியம் எதுவும் கிடையாது. யோசித்தால் புரிந்துவிடும்.

      நீக்கு
  22. கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
    புதிய முயற்சிகள் நன்றாக இருக்கிறது அடுத்த புதன் தனபாலன் அனுப்பிய பாடல் காட்சி பார்க்க ஆவல்.
    மின் நிலவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
  23. எல்லாரும் நலமா இருக்கீங்களா :) நான் நலம் .வந்ததுக்கு ரெண்டு கேள்வி கேட்டுட்டு செல்கின்றேன் :)
    1, மூக்குமேல் கோபம் என்றால் என்ன ? 2, ஒருவருக்கு ஞானம் கிடைக்க எத்தனை வருஷம் அல்லது மாதங்கள் ஆகும் ? 
    3,ஒரு ஞானி இன்னொரு ஞானியை எப்படி அடையாளம் காண்பார் ?4, எனக்கு வீட்டில் கழுதைக்குட்டி பண்ணிக்குட்டி இதெல்லாம் வளர்க்கணும்னு சமீபகாலமா ஆவல் அதிகரிக்குது இதன் காரணம் என்னவா இருக்கும் ?5, உலகமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கு ஏழை பணக்காரர்னு மிச்சம் வைக்கலை இப்படிப்பட்ட சூழலில் big b குடும்பத்தினருக்கு கொரோனா குணமாக யாகம் வளர்க்கும் சிலர் எவ்வகையில் சார்ந்தோர் ? இதை படிச்சு கோபம் வருவது நியாயம் தானே ? 8.5 லட்சம்  பேர் பாதிக்கப்பட்டபோ யாகம் செய்யாதவங்க இவங்களுக்கு செய்வது எதை நோக்கி செல்கிறது சமூகம் ?  ஸ்ஸ்ஸ்ஸ் கொளுத்திப்போட்டாச்சு கில்லர்ஜீ நோட் திஸ் பாயிண்ட் :) 
    ரெண்டுனு சொல்லிட்டு 4 கேள்வி கேட்டுட்டேன்னு நெல்லைத்தமிழன் கண்டிப்பா சுட்டி காட்டுவார் :) ஹெஹெ நானா எப்பவுமே 4 னு சொல்லி 5 விரல் காட்டுவேன் :)) பழக்க தோஷமாக்கும் :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக, வருக! ரொம்ப நாளாச்சு ! சௌக்கியமா? உங்கள் கேள்விகளை வரவேற்கிறோம்; பதில்கள் சொல்வோம்.

      நீக்கு
    2. நாலஞ்சு தடவை பார்த்தேன் மொத்தம் 'அஞ்சு' கேள்விகள் அல்லவா இருக்கின்றன!

      நீக்கு
    3. //கொரோனா குணமாக யாகம் வளர்க்கும் சிலர்// - குஷ்பூ, நக்மாவுக்கு கோவில் கட்டினவங்கள்ல இன்னும் பாக்கி இருப்பவர்கள், யாககுண்டம் எதுக்கு வீணாகணும்னு யாகம் வளர்ப்பாங்களா இருக்கும்.

      நீக்கு
    4. அது :) ஸ்கூல் படிக்கும் போது 2 னு சொல்ல 4 காட்டுவேன் இப்போ வேலைக்குபோறேனில்லையா :) அதான் 2 க்கு 5 வந்துடுச்சி :)  great இம்ப்ரூவ்மென்ட் 

      நீக்கு
    5. அவ்வ்வ் :))  அந்த யாககுண்டங்கள் அப்போ ஆல் ஓவர் இந்திய முழுக்க சுத்துதுபோல :))

      நீக்கு
    6. ஏஞ்சல் நலம் என்று அறிந்தேன், மகிழ்ச்சி.
      நாங்கள் நலம்.

      நீக்கு
  24. புதிய முயற்சிகள்...
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!