வியாழன், 23 ஜூலை, 2020

கதை போல ஒரு நிஜம்

முன்னர் சின்னவன் பிறந்த சமயம் நள்ளிரவு நேரத்தில் ஆட்டோவுக்கு அலைந்தபோது உதவியாய் இருந்த சில நல்லவர்கள் பற்றி எழுதி இருந்தேன்.  அப்போதே பெரியவன் விஷயத்தில் நடந்த ஆட்டோ அனுபவம் ஒன்றை எழுதுவதாய்ச் சொல்லி இருந்தேன்.  அது இந்த வியாழனுக்கு கைகொடுக்கிறது!


நான் உட்பட எல்லா சமயங்களிலும் எல்லோரும் நல்லவராய் இருந்து விடுவதில்லை.  சமயங்களில் உள்ளுக்குள்ளிருக்கும் பிசாசு ஆட்டி வைத்து விடும்.  அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் எனக்கு பெரியவன் சின்னக் குழந்தையாய் இருக்கும்போது வாய்த்தது.

அவன் பிறந்த நான்கே மாதங்களில் அவனுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நீர்ச்சத்துக் குறைந்து ஆபத்தான கட்டத்துக்குப் போக, அது தெரியாமல் அவன் தூளியில் தூங்குவதாய் நினைத்துக் கொண்டிருந்த நேரம்.  எதேச்சையாய் வீட்டுக்கு வந்த சகோதரி அவன் கையைக் கிள்ளிப் பார்த்து தோலின் தன்மையை ஆராய்ந்து சொல்ல, உடனே அவனை சென்னையின் அப்போதைய பெரிய மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றோம்.  உடனே உள்ளே சேர்த்து சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்கள்.

குழந்தையுடன் ஒருவர் மட்டுமே இருக்க முடியும் என்கிற நிலையில் நாங்கள் அப்போது பட்ட அவஸ்தை தனி.  அப்பா அம்மா சென்னையில் என்னுடன் இருந்தாலும், தங்கைக்கும் அதே சமயம் குழந்தை பிறந்திருந்ததால் வேறு சில சிரமங்களும் ஏற்பட்டன.  நானும் பாஸும் மட்டுமே சமாளித்த நேரங்கள் அது.

மருத்துவர் விசிட் வரும் நேரங்களில் ஒருவர் உலாவப்போவது போல சென்று மறைந்து கொள்வது, பாத்ரூமில் ஒளிந்து கொள்வது, அங்கேயே மற்ற படுக்கையில் ஆளில்லா படுக்கைக்கு அருகில் நின்று சமாளிப்பது என்று போக்குக் காட்டி சமாளிப்போம்.  அவன் கைக்குழந்தை என்பதால் அம்மா அருகே இருப்பது அவசியம்.  அவளால் தனியாய்ச் சமாளிக்க முடியாது என்பதால் நான் அங்கே இருக்க வேண்டியதும் அவசியம்.

இந்நேரத்தில் நடந்த சில மனவேதனை சம்பவங்களை சொல்லாமல் ஸ்கிப் செய்து விடுகிறேன்.  ஏற்கெனவே சொல்லி இருப்பது போல நானாக இருந்தாலும் அப்படிதான் செய்திருப்பேனோ என்னவோ!  இதில் நான்கு மாதங்களிலேயே அவள் அம்மா வீட்டிலிருந்து மனைவியை குழந்தையுடன் அழைத்துக்கொண்டது நான் செய்த தவறுகளில் ஒன்று.

இரண்டு நாட்கள் அங்கிருந்தபின், சரியாகி விட்டது என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பினார்கள்.  சில முக்கியமான முன் எச்சரிக்கைகளை சொல்லாமல் போனார்கள். அதாவது அவனுக்கு கொஞ்ச நாட்களுக்காவது சர்க்கரை சேர்க்கக்கூடாது.  

எனவே சில நாட்களிலேயே மறுபடியும் குழந்தைக்கு அதே பிரச்னை தலைதூக்கியது.  முக்கிய காரணம் எங்கள் அனுபவமின்மையும், அஜாக்கிரதையும் கூட என்று சொல்லலாம்.  மறுபடியும் மருத்துவமனை செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்.

இப்போது அந்தப் புகழ்பெற்ற மருத்துவமனைக்குச் செல்ல ஏனோ விருப்பமில்லை.நுங்கம்பாக்கத்தில் இருந்த புகழ்பெற்ற அந்தக் குழந்தைகள் மருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுத்தோம்.  நாங்கள் இருந்த இடத்திலிருந்து அது சற்றே தூரம்.  மணியோ இரவு பதினொன்று.  நமக்கு வாய்க்கும் நேரம் எல்லாம் இப்படிதான் அமைகின்றன.

மரத்தடியில் நின்று பணத்தை எண்ணிக்கொண்டிருந்த ஆட்டோக்காரர் நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கிளம்பிச் சென்று விட்டார்.  சற்றுத் தள்ளி நீண்டிருந்த இன்னொரு ஆட்டோக்காரர் நான் அருகில் வருவதைப் பார்த்ததுமே ஆட்டோவைக் கிளப்பிக்கொண்டு சென்று விட்டார்.  அந்த நேரத்தில் சாலையில் ஆட்டோக்கள் கண்ணில் படுவதே அபூர்வமாய் இருந்தது. வந்த ஒன்றிரண்டு ஆட்டோக்களும் நிற்காமல் சென்றன./

அப்போது அங்கு டீக்கடையை மூடிக்கொண்டிருந்த கடைக்காரர் எதிரிலிருந்த தெருவைக் காட்டி அங்கு சில ஆட்டோக்காரர்கள் வீடு இருக்கிறது என்றும் அங்கு சென்றும் பார்க்கச் சொன்னார்.

நான் சென்ற முதல் தெருவிலேயே வாசல் இரும்புக்கதவை மூடி சிலர் சீட்டாடிக் கொண்டிருந்தனர்.  அருகில் மூன்று ஆட்டோக்கள் நின்றிருந்தன.  எனக்கு நம்பிக்கை பிறந்தது.

அவர்களை அணுகினேன்.  அழைத்தால் திரும்பிப் பார்க்கவே இல்லை ஒருவரும்.  சரி, திரும்பிப் பார்க்கவில்லை என்றாலும் விஷயத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம் என்று சொல்லி முயற்சித்தேன்.

ஆடிக்கொண்டிருந்த ஒருவர் அவர்களிடையேயே சொன்னார் "அதுக்குதான் லைட்டை அணைச்சிட்டுப் படுங்கடான்னு அப்போவே பிடிச்சு சொல்லிக்கிட்டிருக்கேன்..."  லைட்டை அணைத்தார்கள்.  படுத்து விட்டார்கள்.  நான் ஒருவன் நின்றிருப்பதாகவோ, பேசியத்தையோ துளிக்கூட லட்சியம் செய்யவில்லை.  நான் சந்தித்த மிகப்பெரிய அதிர்ச்சி அது.  நான் என்னவோ ஆட்டோவை அழைத்தால் வந்து விடுவார்கள் என்றே நினைத்திருந்தேன்.  வீட்டில் வேறு பாஸ் குழந்தையை அழைத்துச் செல்லத் தயாராய்க் காத்திருந்த்தார்.

பிரமை பிடித்தது போல நின்றிருந்த என்னைத் தாண்டிச் சென்ற அதே டீக்கடைக்காரர் என்னை அழைத்து கொண்டு அருகில் இருந்த இன்னொரு தெருவுக்கு அழைத்துப் போய் அங்கிருந்த ஆட்டோவைக்காட்டி கதைவைத் தட்டிப் பார்க்கச் சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

முற்றிலும் நம்பிக்கை இழந்த நிலையில், இங்கு வேறு கதவைத்தட்டி திட்டு வாங்க வேண்டுமா என்று தோன்றியது.  மற்றவர்களாவது சாலையில் இருந்தார்கள், இவர்கள் விழித்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள்.  இந்த வீடோ விளக்கணைத்து, கதவு தாழிடப்பட்டிருந்தது.  தயக்கம்தான்.  என்ன செய்ய...   மகன் முகம் மனதில் நிழலாட கதவை நெருங்கினேன்.

மிகச்சிறிய வீடு.  ஒரு ஹாலும், ஒரு கிச்சனும் பாத்ரூம் லெட்ரினும் மட்டுமே இருக்கும் வகை வீடு அது என்று பார்க்கும்போதே தெரிந்தது.  காம்பவுண்டு சுவர் எல்லாம் இல்லாமல் அணுக சுலபமாக இருந்தது.

கதவைத்தட்டினேன்.  சத்தமே இல்லை.  

மீண்டும் தயக்கத்துடன் சற்று பலமாகத் தட்டினேன்.  பதில் இல்லை.  தயக்கம் அதிகமாக இன்னும் பலமாகத்தட்டி "ஸார்..." என்று குரல் கொடுத்தேன்.

விளக்கு போடப்படுவது தெரிந்தது.   மெதுவாக, மிக மெதுவாக கதவு திறக்கப்பட்டது.



[கதை போல எழுதி வந்தாலும், இது கதையல்ல நிஜம்!  'முழுவதும் ஒரே மூச்சில் எழுதி விட்டால் மற்ற பகுதிகளுக்கு இடமில்லாது போகும்' என்று சாக்கு சொல்லி மிச்சத்தை வழக்கம்போல அடுத்த வாரம் தொடர்கிறேன்!]
=====================================================================================

பொக்கிஷம் பகுதியில் கலைமகள் பத்திரிகையிலிருந்து சில பகுதிகள்..  நெடுங்கதை, குறுநாவல் என்று அப்போது போட்டுக்கொண்டிருந்தார்கள்.  அதை எழுதிய கதாசிரியர் பற்றிய அறிமுகங்களை இதழாசிரியர் கொடுப்பது வழக்கமாய் இருந்திருக்கிறது.  அவற்றில் சில...


கிருத்திகா...  இப்படி ஒரு கதாசிரியர் நான் கேள்விப்பட்டதில்லை.  திரும்பவும் வாழ நேர்ந்தால் என்கிற கதை.


பரிசு பத்து நூறு என்கிற கதை..


அருளின் ஒளி என்கிற கதை 


மங்கை பி ஏ என்கிற கதை...  "குமாரி" ஆர். சூடாமணி!


என்ன கதை என்று குறிப்பிலேயே இருக்கிறது!


அந்தக் கால பாணியில் 'இப்படி' எழுதுவது புதுமையாய் இருந்திருக்கிறது என்று குறிப்பில் தெரிகிறது!


ஜீவி ஸாரின் நண்பர் எழுதிய கதையும் இத்தொகுப்பில் இருக்கிறது என்பதைச் சொல்ல...!


=================================================================================

ரஞ்சனி நாராயணன் அக்காவுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு அனுபவத்தைச் சொன்னார்.  அதை எழுதி அனுப்புங்களேன் என்று கேட்டதும் எழுதி அனுப்பி இருக்கிறார்.




கதை நிஜமானது! - ரஞ்சனி நாராயணன் 

பொதுவாகவே ஓர் கதை என்பது பாதி கற்பனை மீதி நிஜம் என்று இருக்கும். எழுதுபவர்கள் தங்கள் அனுபவங்களை சற்று கற்பனை கலந்து எழுதுவார்கள். சிலசமயம் கதை என்று எழுத சில வருடங்கள் கழித்து அது நிஜமாகவும் ஆகலாம். The Negotiator என்று ஓர் கதை Frederick Forsyth எழுதியது. 

ராஜீவ் காந்தி கொலை நடந்த பிறகு பலர் அவரை இந்தக் கொலையில் சம்மந்தப்படுத்தி பேசினார்கள். காரணம் அவரது கதையில் வரும் கொலைகாரன் தனது இடுப்புப் பட்டையில் குண்டுகளை கட்டிக் கொண்டு வந்து கொலை செய்வான். ராஜீவின் கொலையாளியும் அதே உத்தியை கடைபிடித்தாள். 

இப்போது இதை நான் சொல்லக் காரணம் 20 வருடங்களுக்கு முன் நான் எழுதிய கதை சமீபத்தில் நிஜமாயிற்று. ஸ்டாப்! ஸ்டாப்! 

யாரை உங்கள் கதையில் கொன்றீர்கள்? நிஜத்தில் யார் யாரைக் கொன்றார்கள்? என்றெல்லாம் உங்கள் கற்பனைக் கேள்விக் கணைகள் வந்து என்மேல் பாயும் முன் சஸ்பென்ஸை உடைத்து விடுகிறேன். பத்து நாட்களுக்கு முன் என் மருமகள் ராகி முத்தை செய்திருந்தாள். அதை சாப்பிடும் போதுதான் என் மூளையில் ஒரு மின்னல் வெட்டு. ஆஹா! 20 வருடங்களுக்கு முன்னால் இந்த ராகி முத்தையை வைத்து நான் ஒரு கதை - எனது முதல் கதை – எழுதினேன். அதில் என் பிள்ளை கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு நான் அவர்கள் வீட்டிற்குப் போகும் போது என் மருமகள் எனக்கு ராகி முத்தை செய்து போட்டு அதை சாப்பிடத் தெரியாமல் நானும் என் கணவரும் விழிப்பது போல எழுதியிருந்தேன். அது நினைவிற்கு வந்தவுடன் என் மருமகளைக் கூப்பிட்டு  என் கதையை நீ இன்று நிஜமாக்கி விட்டாய் என்று சொன்னேன். ஆனால் இந்த தடவை நன்றாகச்  சாப்பிட்டோம்! அது ஒன்று தான் கதையிலிருந்து மாறுபட்டது. 

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். இந்தக் கதையை நான் எழுதிய போது என் பிள்ளை ரொம்பவும் சின்னவன். பிறகு அவனுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆனவுடன் என் அம்மா கேட்டாள்: ‘என்னடி பெண்ணின் பெயர் வேறு என்னவோ சொல்லுகிறாயே? ஷீதல் எங்கே?’ என்று. என் கதையில் கதையின் நாயகி ஷீதல்! முதல் கதை முதல் நாயகி எப்படி மறக்க முடியும்?

ஆங்கிலக் கட்டுரையாளர் JB Priestly அன்று மிகவும் உற்சாகத்துடன் டிராம் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரது முதல் கட்டுரை லண்டனின் பிரபல இதழ் ஒன்றில் அன்று பிரசுரம் ஆகியிருந்தது. அதுமட்டுமல்ல அவரது உற்சாகத்திற்குக் காரணம். அங்கு அவருடன் கூட பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்மணியின் கையில் அவரது கட்டுரை வந்த அதே இதழ்! ‘அந்தப் பெண்ணுக்குத் தெரியுமா அந்த இதழில் எழுதிய பல அறிஞர்களில் ஒருவர் தனக்கு மிகச் சமீபத்தில் உட்கார்ந்திருக்கிறார் என்று?’ என்று அவர் நினைத்துக் கொண்டாராம்! 

எனது முதல் கதை வெளிவந்த போது நான் கூட இப்படித்தான் நினைத்துக் கொண்டேன்: உலகமே மங்கையர் மலர் புத்தகத்தை வாங்கி என் கதையைத் தான் படித்துக் கொண்டிருக்கிறது என்று! 

ஒரு கதை வெளிவந்துவிட்டால் எல்லா எழுத்தாளர்களுமே தொடர்ந்து எழுதத் தொடங்கி விடுவார்கள். நானும் அப்படித்தான். ஆனால் Franz Kafka என்கிற ஐரோப்பிய இலக்கிய கர்த்தா அதிகம் எழுதவில்லை. மூன்று நாவல்கள், சில சிறுகதைகள் சில கடிதங்கள் அவ்வளவுதான் அவரது படைப்புகள். தனது இறப்பிற்குப் பின் தனது படைப்புகளும் மறைந்துவிட வேண்டும் என்று நினைத்து தனது நண்பர் Max Brod என்பவரிடம் தனது படைப்புகளைத் தீக்கிரையாக்கும்படி கேட்டுக் கொண்டாராம். ஆனால் அவரது நனபர் அப்படிச் செய்யவில்லை. 

சமீபத்தில் டெக்கன் ஹெரால்ட் செய்தித்தாளில் ‘Right in the middle’ பகுதியில் திரு சி.வி. சுகுமாரன் என்பவர் தனது முதல் படைப்பைப் பற்றி எழுதும் போது மேற்கண்ட இரு கட்டுரையாளர்களை குறிப்பிட்டு எழுதியிருந்தார். சுவாரஸ்யமாக இருந்ததால் நீங்களும் படிக்க அதை எழுதினேன். 

இப்படியாக எனது முதல் கதை வெளிவந்த 20வது வருடத்தை ராகி முத்தை செய்து சாப்பிட்டுக் கொண்டாடிவிட்டேன்.

==================================================================================================

ரசிப்பதற்கு ஒரு பழைய படம்!



==============================================================================



ச்சும்மா...   பேஸ்புக்கில் ஒரு கலாய் பதிவிட்டபோது!



அதற்கு வந்த இரண்டு கமெண்ட்ஸ்...

159 கருத்துகள்:

  1. குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் பதிவுக்குப் பொருத்தமான குறள்தான்!!!

      வாழ்க நலம்.

      நீக்கு
    2. வந்ததும் பதிவைப் படிக்காமல்
      குறளைப் பதிவு செய்து வணக்கம் சொல்லி விட்டு அப்புறம் தான் பதிவுக்கு வருவது...

      வாழ்க திருக்குறள்..
      வளர்க செந்தமிழ்!..

      நீக்கு
    3. தெரியும் துரை செல்வராஜு ஸார்.. அதற்காகத்தானே குறிப்பிட்டேன்.

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. கதை போல நிஜம்...
    திகில் படம் பார்ப்பது போல இருக்கிறது...

    அப்புறமாக வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜூ ஸார்..   அப்புறமா வாங்க...

      நீக்கு
  4. அன்பு ஸ்ரீராம், அன்பு துரை, இன்னும் வரப்போகிறவர்களுக்கு இனிய காலை வணக்கம்.
    என்றும் ஆரோக்கியம் ,அமைத் நிலைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி.  வாங்க வல்லிம்மா...   வணக்கம்.

      நீக்கு
  5. ஸ்ரீராம், இதென்ன சஸ்பென்ஸ் கதையா. இப்படிப்
    பாதியில் நிறுத்தலாமா:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பவே பதிவு கொஞ்சம் நீளம்னு யாராவது ஒருத்தராவது சொல்வாங்க...!  என்னம்மா செய்ய!

      நீக்கு
    2. யார் சொல்றது அப்படி!!!
      இனிமேல் இப்படி செய்யக் கூடாது.
      ஸ்ரீராம். எல்லோருக்கும் படிக்க ஆசை. வியாழனை வேண்டுமானால்
      இரண்டு பகுதியாகப் பதிவிடவும். உரிமை எடுத்து சொல்லி விட்டேன்.

      நீக்கு
    3. ஹா...   ஹா...  ஹா...   ஒரே நாளிலேயே இரண்டு பகுதிகளா?

      நீக்கு
    4. ஆமாம். அப்படி செய்யுங்கள் :)முடிந்த போது பதில் எழுதவும்.

      நீக்கு
    5. ஓகேம்மா... ஆனால் இரண்டு வாரம் ஓட்ட எனக்குக் கிடைக்கும் வாய்ப்பல்லவா அது!!!

      நீக்கு
    6. அந்தக்காலச் சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் இப்படித்தான் இருந்தார்கள், அப்போதெல்லாம் ஆட்டோவில் போவதற்கே பயமாக இருக்கும். சைகிள் ரிக்ஷா எண்பதுகளில் கூடக் கிடைத்ததால் அதிகம் அதில் தான். இப்போல்லாம் ஆட்டோவிலேயே ஏற முடியலை! :)))) ஸ்ரீராம் கதவைத் தட்டிய அந்த ஆட்டோக்காரர் ஒருவாறு சம்மதித்துக் கூட்டிச் சென்றிருப்பார் என நினைக்கிறேன். எங்கள் பெண்ணிற்கு இதே போல் டயரியா வந்தப்போ நாங்க எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்குத் தான் அழைத்துச் சென்றோம். அப்போவே சிறப்பான கவனிப்பு. ஆனாலும் ஒரு வாரம் ட்ரிப்ஸ் ஏற்றும்படி இருந்தது.

      நீக்கு
    7. அப்போ எல்லாம் ஆட்டோ பெரிய லக்ஸரி!  நிறைய ஆட்டோக்களும் இருக்காது!  எனவே கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கும்.

      நீக்கு
  6. இதே குட்டி பத்மினி யூ டியூபில் கலக்குகிறார்.
    நல்ல நடிகை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவரைப் பார்த்து நாளாச்சும்மா...   யு டியூப் எல்லாம் பார்பபதே இல்லை!

      நீக்கு
  7. இந்த வாரம் முழுவதும் கொஞ்சமென்ன...   நிறையவே நெருக்கடியான பணிகள்...    நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு முடிந்தவரை வந்து பதில் அளிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. கலைமகள் பொக்கிஷம் அருமை.
    கிருத்திகா, லட்சுமி சுப்ரமணியம், சூடாமணி,
    எஸ்.ரங்க நாயகி எல்லோரையும் படித்திருக்கிறேன்.
    நம் ஜீவி சார் ,வையவனா?? ஆச்சர்யமாக இருக்கே.
    வையவன் கதை ஒன்று கூட படிக்க விட்டதில்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நம் ஜீவி சார் ,வையவனா?? //

      அப்படீன்னா?  இரண்டு பெரும் ஒருவர் என்ற அர்த்தத்தில் வருகிறதோ?  ஜீவி சாரின் நண்பர் வைத்தவன்.  சமீபத்தில் கூட அவரை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார் ஜீவி ஸார்.

      நீக்கு
    2. கிருத்திகா எழுதிய கதைகள், நாவல்கள் படித்திருக்கிறேன். வாசகர் வட்டம் வெளியீடாக வந்துள்ளது. அவருடைய வாசவேஸ்வரம் என்னும் நாவல் பிரபலமானது, புதுமையான கருத்தைக் கொண்டது. இவர் மகள் மீனா என்பவர் தான் விவசாயப் புரட்சி செய்த திரு எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவி. கிருத்திகாவின் பூர்விகம் நாரோயில் தான், திருப்பதி சாரம் எனப் படித்த நினைவு.அல்லது அவர் புக்ககம் திருப்பதி சாரம். நீண்டநாட்கள் உயிர்வாழ்ந்திருந்தார் சமீபத்தில் தான் இறந்ததாகச் செய்தி படித்தேன். இவர் கணவர் தான் பிலாய் உருக்காலை நிர்மாணத்தின் முக்கியமான பொறுப்பில் இருந்தவர். கணவர் பெயர் நினைவில் இல்லை. ஆனால் கிருத்திகா தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் வடக்கே அதிகம் இருந்ததால் ஹிந்தியிலும் புலமை வாய்ந்தவர்.

      நீக்கு
    3. கடவுளே...   கிருத்திகா பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்களே...   எனக்கு கொஞ்சம் கூடத் தெரியாது.

      நீக்கு
    4. அறுபதுகளின் கணையாழி இதழ் கிருத்திகாவுக்கெல்லாம் போகும். அதோடு வாசகர் வட்டம் ராஜகோபால் அடிக்கடி சித்தப்பாவைப் பார்க்க வருவார். புத்தகம் வெளியீடு ஆனதும் சித்தப்பாவுக்கு ஒரு காப்பி வந்தது. உடனே படித்துவிட்டேன். பல எழுத்தாளர்களின் பல கதைகளையும் அச்சுக்குப் போவதற்கு முன்னால் படித்தது உண்டு. சில சமயங்களில் சித்தப்பாவின் கதைகளைப் பிரதி எடுத்துத் தருவது நான் தான்.

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான பிரார்த்தனைகளுடன் வந்திருக்கும் கமலா அக்காவுக்கு வந்தனம், வரவேற்பு, நமோஷ்கார்...!

      நீக்கு
  10. ரஞ்சனியின் அனுபவம் மெய் சிலிர்க்கிறது.
    ஆனால் உண்மை.
    நினைவுகள் நடப்பதுண்டு. ராகி முத்தை
    அப்படி என்கிற பதார்த்த ரெசிப்பி
    அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    ஃப்ரெடெரிக் ஃபோர்சைத் எழுதிய
    டே ஆஃப் த ஜாக்கால்,
    ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படியாக எழுதப் பட்டது.

    பதிலளிநீக்கு
  11. வியாழன் பகுதி சிறப்பு.

    கதையல்ல நிஜம்.... பாதி சொல்வோம் மீதி என்ன. என்ற ரேடியோ நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறது. நிச்சயம் அந்த ஆட்டோக்கார்ர் வந்திருப்பார்.

    75ல் நெல்லை ஜங்ஷனில் என் பாட்டி உடம்பு முடியாமல் இருந்தபோது நாலு தெரு தள்ளி அவரை எப்போதும் பார்க்கும் மருத்துவர் வீட்டிற்கு, அவரிடம் விஷயத்தைச் சொல்லி கூட்டிவர இரவு 9-9:30க்குச் சென்றோம். அவர் இதைப்போல் சாக்குச் சொல்லி வரவில்லை. பிற்காலத்தில் நினைத்துக் கொண்டேன். அவர்களும் மனிதர்கள்தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... வியாழன் பதிவுகள் பற்றி உங்கள் கருத்து என்ன என்று காத்திருக்கும் வழக்கம் உண்டு. இதே போல மருத்துவர் அனுபவம் ஒன்று எனக்கும் அப்பா விஷயத்தில் உண்டு. அப்பாடி... இன்னொரு வியாழனுக்கு விஷயம் கிடைத்தது!!!

      நீக்கு
    2. எங்க வீட்டில் எனக்கு ஏழு, எட்டு வயசில் ஜன்னி கண்டு ஆச்சு, போச்சுனு ஆனப்போத் தெருவில் இருந்த நண்பர் ஒருத்தர் மேலாவணி மூலவீதியில் இருந்த (நாங்க அப்போ வடுகக்காவல் கூடத்தெருவில் இருந்தோம்) பெரியப்பா வீட்டில் போய்ச் சொல்லி அங்கிருந்து அண்ணா ஓடி வந்து அவங்க மருத்துவர் அப்போச் சொக்கிக்குளத்தில் இருந்தவரை அங்கும் இங்கும் அலைந்து ஓர் மருந்துக்கடை மூலம் தொலைபேசியில் அழைத்துச் சொல்லி வரவழைத்தார். அந்த மருத்துவர் தெரிந்தவர் என்றாலும் அன்று வரை எனக்கு ஆங்கில மருத்துவம் பார்த்ததில்லை. ஆயுர்வேத மருத்துவம் தான். மேலமாசி வீதியில் இருந்த வாரியர் வைத்தியசாலை மலையாளி மருத்துவர் வந்து பார்த்துட்டு நாடி இறங்கிவிட்டதுனு சொல்லிச் சில மணி நேரம் கெடு வைத்துவிட்டுப் போயிட்டாராம். அதன் பின்னர் இந்த மருத்துவர் வந்து எனக்கு இரவு முழுவதும் வீட்டிலேயே உட்கார்ந்திருந்து மணிக்கு ஒரு ஊசி போட்டுக் காப்பாற்றினார் என்பார்கள். கண் திறக்க மறுநாள் காலை எட்டு மணிக்கும் மேல் ஆகிவிட்டதாம்.அரைகுறை நினைவு இருக்கு. எங்க பெரியப்பா பெண் என்னைப் பார்க்கக் காலையில் விஷயம் தெரிந்து ஓடோடி வந்தாள். அது மட்டும் நினைவில் இருக்கு. அவள் இப்போது இல்லை.

      நீக்கு
    3. சொக்கிக்குளம் என்றால் வடமலையான் மருத்துவரா?  மேலமாசி வீதியில் வாரியர் க்ளினிக் இருந்ததா?  

      நீக்கு
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போதெல்லாம் "வடமலையான்" "தென் மலையான்" என்றெல்லாம் ஆஸ்பத்திரிகள் இல்லை. யாரானாலும் பெரியாஸ்பத்திரிக்குத் தான் போகணும். மேல, வடக்குச் சித்திரை வீதி முக்கில் கோபு ஐயங்காருக்குக் கொஞ்சம் முன்னால் "பத்மா க்ளினிக்" என்ற ஒன்று இருந்தது, ரொம்பப் பணக்காரர்கள் தான் அங்கே வைத்தியம் பார்த்துக்கொள்வார்கள். பொதுவாக எல்லோரும் நம்பியது பெரியாஸ்பத்திரியைத் தான். என் அம்மாவை நாய் கடித்தப்போக் கூடப் பெரியாஸ்பத்திரிக்கு வந்து தான் ஊசி போட்டுக்கொண்டார்கள்.

      நீக்கு
    5. சொக்கிகுளத்தில் அப்போதெல்லாம் பெரிய மருத்துவர்கள், வக்கீல்கள், அதிகாரிகள் தனி வீடு கட்டிக் கொண்டு வசித்தனர். அவர்களில் எங்க மருத்துவரும் ஒருவர். "வாரியர் மருத்துவமனை" மேலமாசி வீதியில் சென்ட்ரல் தியேட்டர் வழியாகச் சென்று இடப்பக்கம் திரும்பினால் (பெருமாள் கோயிலுக்குப் போகும் வழி) உடனே வரும். பக்கத்தில் ஓர் சீனாக்காரரின் பல் மருத்துவமனையும் இருந்தது. மதுரையில் இருந்த ஒரே சீனாக்காரர் அவர். இந்திய - சீன யுத்தத்தின் போது 1963 ஆம் ஆண்டில் அவர் வீட்டுக்கு எதிரே சூ என் லாயின் கொடும்பாவியை எல்லாம் எரித்து ஒரே அமர்க்களம். அவங்க வீட்டுக்குக் காவல்துறை பாதுகாப்புக் கொடுத்தது.

      நீக்கு
  12. ரஞ்சனி நாராயணன் அவர்களின் அனுபவமும் ஆச்சர்யம்தான்.

    இதுவரை ராகி முத்தேவைச் சுவைத்ததில்லை. தொட்டகாஜனூரில் கன்னட நடிகர் ராஜ்குமார், அவர் மனைவி வந்திருந்தபோது ராகி முத்தே செய்துகொண்டிருந்தார்கள். (அப்போல்லாம் வீட்டிற்குள் கிச்சன் என்றெல்லாம் இருந்தாலும், அந்தப் பண்ணை வீட்டில் வெளியில்தான் தயார் செய்தார்கள் (பண்ணையில் வேலைபார்ப்பவர்களுக்கும் சேர்த்து). அது 77ல். பத்து வருடங்களுக்கு முன் பெங்களூர் ரெஸ்ட்டாரென்டில் மெனுவில் ராகி முத்தே பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்!

      நீக்கு
    2. ஸ்ரீராம்... நான் உணவு விஷயத்தில் (அநாவசிய) பிடிவாதம் உள்ளவன். நான் சுவைத்திராத புதிய உணவை என்னைச் சுவைக்க வைப்பது மிகக் கடினம். நாகரீகத்துக்காக சிறிது எடுத்துக்கொண்டு, ஏண்டா என்னை கஷ்டப்படுத்துகிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன். அதே சமயம், எனக்குப் பிடித்த உணவை சாப்பிட சங்கோஜப்படுவது குறைவ. இதனால் நான் இழந்ததுதான் அதிகம்.

      நீக்கு
    3. நான் சுவைத்துப் பார்க்கத் தயங்க மாட்டேன்.  இப்போது கூட மேகியில் மீல் மேக்கர் போட்டு இளையவன் செய்து கொடுத்தத்தைச் சாப்பிடத்தொடங்கி விட்டு நைஸாய் கொட்டிவிட்டேன்!!!

      நீக்கு
  13. எத்தனையோ கதாசிரியர்கள், இலக்கியவாதிகள். காலவெள்ளத்தில் பெரும்பாலானவர்கள் அடித்துச் செல்லப்பட்டு விடுகிறார்கள்.

    குட்டி பத்மினி படம் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன். நேருவுடன் காலை உணவு சாப்பிட்டவர், ராஜீவ் காந்தி கொல்லப்படுவதற்கு ஓரிரு மணி நேரம் முன்னால் சென்னை விமான நிலையத்தில் அவரைச் சந்தித்துப் பேசிய ஜெயசித்ரா.... இவையெல்லாமே சரித்திர நினைவுகள்தாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'அந்த' விசாரணையில் இவர்களையும் ஏதும் கேள்வி கேட்டார்களா?!!

      நீக்கு
    2. விட்டுவைத்திருப்பார்களா என்ன? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். "சார்... நீங்க அந்த அத்துவான இடத்துக்கு ஏன் பேசப்போறீங்க... சென்னை, மதுரை மாதிரியான நகரத்தில் பெரிய கூட்டம் போட்டிருந்தால் ரொம்பப் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்குமே' என்று அவர் சொல்லியிருந்தால், விசாரணை வளையம் எவ்வளவு தூரம் அவரை இறுக்கியிருக்கும்? இல்லை, ராஜீவ் அவர்களே, கூட்டத்துக்கு நீங்க வாங்க, மேடையில் ஏறலாம் என்று அவரிடம் சொல்லியிருந்தால்?

      கென்னடி சுடப்பட்டது, இந்திரா, ராஜீவ்... என்று பலவித சம்பவங்களில், 'இது மட்டும் நடந்திருந்தால்' என்று எண்ணத்தக்க வகையில் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்திரா, ராஜீவ் இருவரின் இறுதி அத்தியாயங்களிலும் சம்பவம் நடைபெறாமல் போக, முன்னெச்சரிக்கைகளும் நிகழ்ந்திருக்கின்றன. ஆனாலும் விதி வலியதாக அமைந்துவிடுகிறது.

      நீக்கு
    3. ஆம்...    உளவுத்தகவல்களை அலட்சியப்படுத்தி விட்டார்கள் போல...

      நீக்கு
    4. ராஜிவ்காந்திக்கே தனிப்பட்ட முறையில் எச்சரிக்கைகள் வந்தும் அலட்சியப்படுத்தினார் என்பார்கள்.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இரவு நேரம் நமககோ, இல்லை வீட்டிலிருப்பவருக்கோ உடல் நிலை சரியில்லாமல் போவது ஒரு கொடுமை. அந்த நேரத்தில் இயல்பான பயத்துடன் ஒரு பதட்டமும் சேர்ந்து கொள்ளும். இதை நான் என் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.

    உங்கள் பதட்டமும் எப்படி இருந்திருக்கும் என என்னால் உணர முடிகிறது. ஆட்டோ கிடைப்பது கூட நமது நேரத்துடன் ஒத்துப் போகிறது. கடைசியில் அந்த ஆட்டோ வைத்திருப்பவர் மனித நேயத்தோடு வர நமது நேரமும் ஒத்து வந்ததா? (வந்திருக்கும் எனவும் நம்புகிறேன்.) நல்ல சமயத்தில் தொடரும் போட்டு விட்டீர்கள்.

    பொதுவாக அனுபவங்கள் சில சமயம் மறக்க இயலாத கதை மாதிரி மனதில் தங்கி விடுகிறது. பகிரும் போது அதன் வேதனைகள், அல்லது இன்பங்கள் "நமக்கா இப்படி?" என்ற முறையே பச்சாதாப, புளகாங்கித உணர்வினை கண்டிப்பாக தரும் வல்லமை உடையவை.

    ஆட்டோ கிடைத்து நல்லபடியாக மருத்துவம் பார்த்து தங்கள் மகன் அந்த இக்கட்டிலிருந்து மீண்டிருப்பார். அதையும் இந்த வாரத்திலேயே எழுதி முடித்திருக்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைக்கு உடம்பு முடியாத நிலை என்பதால் என்ன நடந்ததோ என்கிற தவிப்பு உங்களுக்கும், வல்லிம்மாவுக்கும் அதிகம் வந்ததோ...

      நானே அப்போ(வும்) குழந்தை... எனக்கு பயத்துக்கும் பதட்டத்துக்கும் கேட்கணுமா? நீங்கள் சொல்வதுபோல இரவு நேரம் என்பது இன்னும் பயத்தைக் கூட்டி விடுகிறது.

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. இந்த மாதிரி அனுபவம் எங்க பையர் 45 நாள் குழந்தையாய் இருக்கையில் எனக்கும் ஏற்பட்டிருக்கு. அப்போ மதுரையில் தான் இருந்தேன். குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓட்டமாக ஓடிப் பக்கத்தில் இருந்த குழந்தைகள் மருத்துவரிடம் காட்டி அவரிடம் அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு மதுரை பெரியாஸ்பத்திரிக்கு சம்பந்த மூர்த்தித் தெருவில் இருந்து ஓட்டமாக ஓட ஆரம்பித்தேன். வீட்டில் இருந்து வீட்டுக்கார மாமாவும் அவர் அண்ணா பிள்ளையும் கூடவே சைகிளில் ஓடி வந்து எனக்கு ஓர் ரிக்ஷா பிடித்துக்கொடுத்து ஆஸ்பத்திரி வரை கூடவே வந்தார்கள். அப்போ அப்பாவுக்குக் கடுமையான டயரியா! அண்ணா, தம்பி இருவரும் சென்னையில். என் மாமியார் அப்போது தான் குழந்தையைப் பார்க்கக் கிராமத்தில் இருந்து கிளம்பி வந்திருந்தார். நடு இரவு பதினொன்றரை மணிக்குப் பெரியாஸ்பத்திரி போய்க் குழந்தையை அங்கே உள் நோயாளியாக அனுமதித்து ஆக்சிஜன் வைத்து! ஏற்கெனவே வயிற்றில் இருக்கும்போதே மஞ்சள் காமாலை. பிறக்கும்போதே காமாலையுடன் தான் பிறந்தான். அது சரியாகி அம்மைப்பால் வைத்துக் கஷ்டப்பட்டுக் குணமாகி உடனே இது.டபுள் நிமோனியா! மீ 24 வயசுக்குழந்தை! ம்ஹூம், அதெல்லாம் ஓர் காலம்.

      நீக்கு
    3. //ஓட்டமாக ஓட ஆரம்பித்தேன். வீட்டில் இருந்து வீட்டுக்கார மாமாவும் அவர் அண்ணா பிள்ளையும் கூடவே சைகிளில் ஓடி வந்து //

      காட்சி கண்முன்னே வருகிறது.  பதட்டம்.   ரிக் ஷா கூட வந்தும் ஓடி இருக்கக்கூடிய உங்கள் பதட்டம் தெரிகிறது.

      நீக்கு
  15. ஆட்டோ கிடைத்து நல்லபடியாக மருத்துவம் பார்த்து தங்கள் மகன் அந்த இக்கட்டிலிருந்து மீண்டிருப்பார். அதையும் இந்த வாரத்திலேயே எழுதி முடித்திருக்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.///அதுதான் நமக்கு வேண்டும். அன்பு கமலா
    இடம் இருந்தால் சொல்லி இருப்பாராய்
    இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா... இடம் கம்மி! ஏற்கெனவே சேர்த்திருந்த கதம்பத்தில் ஒரு முழத்தை நேற்று வெட்டி எடுத்து ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டேன்!

      நீக்கு
  16. மௌனராகம் சந்திரமௌலி சிறப்பு.

    பதிலளிநீக்கு
  17. இந்த வியாழனில், படிக்க விஷயம் இருக்கிறது!

    கலைமகள் கொடுத்த ‘ஆசிரியர்’ அறிமுகங்கள் அருமை. கதாசிரியர்களைப்பற்றி ஒருவரிகூட ஏதும் சொல்லாமல், அவர்களுக்கு சன்மானமாக சரிவரக் காசும் கொடுக்காமல், சும்மா கதையை வெளியிட்டு தான் காசு பார்க்கும் இந்தக்கால ’வணிக’ப் பத்திரிக்கைகளோடு ஒப்பிடுகையில், அந்தக்கால கலைமகள் அபாரம்.

    ஆனால், ‘கலைமகள்’ இப்படி ஒரு தராதரத்தை இன்னமும் வைத்திருக்கிறதா எனத் தெரியவில்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்...

      // இந்த வியாழனில், படிக்க விஷயம் இருக்கிறது! //

      அப்போ.. மற்ற வியாழன்களில்?!!!

      கல்கி தன் அச்சுப் புத்தகத்தை நிறுத்தி விட்டது. கலைமகளும் நின்று விட்டதா, தெரியவில்லை.

      நீக்கு
    2. கலைமகளும், அமுதசுரபியும் தங்கள் தரத்தைக் கொஞ்சமும் குறைக்காமல் அதே தரத்துடன் வெளிவருகின்றன. அமுதசுரபிக்குத் திருப்பூர் கிருஷ்ணனும் கலைமகளுக்குக் கீழாம்பூரும் ஆசிரியர்கள்.

      நீக்கு
    3. கல்கி தன் அச்சுப் பிரதியை நிறுத்திவிட்டதா! அதிர்ச்சி. என்னதான் ஆன்-லைனில் ஓட்டலாம் என்றாலும், அச்சுப்பிரதிக்கு என்று ஒரு மரியாதை உண்டே!

      நீக்கு
    4. //..அப்போ.. மற்ற வியாழன்களில்?!!!//

      கொஞ்சம் கொரிப்பதற்குக் கிடைப்பதுண்டு!

      நீக்கு
    5. கல்கி இன்னும் மூண்டபிஉ இதழ்கள் அச்சுப்பிரதி வரும் என்றும் அதன் பின் ஆன்லைன் பிரதி மட்டும்தான் என்று காலச்சக்கரம் நரசிம்மா இன்று பேஸ்புக்கில் எழுதி இருக்கிறார்.  அவர் தொடர்கதை ஒன்று இந்த நேரம் பார்த்து கல்கியில் தொடங்குகிறது.

      நீக்கு
  18. கலைமகள் அமுதசுரபி இரண்டு மே இரண்டுமே இன்றும் தரமானவையாகத்தான் இருக்கின்றன என்பது எனது கருத்து.

    பதிலளிநீக்கு
  19. ஆசிரியருக்குச் சொல்லாமலேயே கதைகளைப் போடும் பத்திரிகை ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ என்னையே எடுத்துக்கோங்கறேன்... உங்க ராகி முத்தை....!!!

      :))

      நீக்கு
  20. எனது பதிவை வெளியிட்டதற்கு நன்றி ஸ்ரீராம். நன்றி வல்லிம்மா. ராகி முத்தை செய்யும் விதம் hebbarkitchen.com இல் இருக்கிறது.
    @நெல்லைத் தமிழன் எங்கள் அகத்திற்கு வந்தால் கிடைக்கும். வாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரஞ்சனி நாராயணன் அவர்கள். நான் நாலாவது படித்துக்கொண்டிருந்தபோது ராகி களிக்குப் பதில் ராகியை வைத்து ஜீனி போட்டுக் கிளறி அல்வா மாதிரி என் அம்மா தருவார். ராகி முத்தே, சாம்பார் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்குமா? இல்லை, from health point of viewலதான் நல்லா இருக்குமா?

      நீக்கு
    2. ரஞ்சனியோட இந்த ராகி முத்தே கட்டுரை வெளிவந்த "மங்கையர் மலர்" என்னிடம் இன்னமும் இருக்குனு நினைக்கிறேன். வேறே எதுக்கோ எடுத்து வைச்சதுனு நினைக்கிறேன். ஆனால் சில முறை படித்திருக்கிறேன். சிரிப்பு வெகு எளிதாக வரும். அதிலும் ராகிக்களியை வாயில் வைத்துக் கொண்டு பே"ஷு"வது! இஃகி,இஃகிஃ,இஃகி, இஃகி

      நீக்கு
    3. எங்க அம்மா முதல் நாளே ராகிக் களியைக் கிளறி அதைத் தண்ணீரில் போட்டு வைத்திருப்பார். மறுநாள் காலை அதில் மோர் விட்டு உப்புப் போட்டுச் சின்னவெங்காயம், பச்சைமிளகாய் பொடியாக நறுக்கிப் போட்டுக் குடிக்கும்படி பண்ணிக் கொடுப்பார். ஜில்லென்று தொண்டைக்குழியில் இறங்கும்.

      நீக்கு
  21. எனக்கு வேறுவிதமான ஆட்டோ அனுபவங்கள். முடிந்தால் எழுதி அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுப்புங்கள்... அனுப்புங்கள்...

      நீக்கு
    2. எனக்கும் இருக்கு! ஒன்றை ஏற்கெனவே எழுதிட்டேன்.

      நீக்கு
  22. கடந்த 18 மணி நேரங்களுக்கும் மேலாக கீசா மேடத்தை இணையத்தில் காணவில்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடிப்பூர முஸ்தீபுகள்!

      நீக்கு
    2. அதெல்லாம் இல்லை. அதோடு இந்த வருஷம் பண்டிகைகள் இல்லை! :( சும்மா ஏதேனும் நிவேதனம் பண்ணுவேன் வழக்கம் போல்!

      நீக்கு
    3. ஓஹோ...   ஆமாம்...   ஆனாலும் ஏதாவது நிவேதனம் செய்வீர்கள் இல்லையா?

      நீக்கு
  23. ரஞ்சனி அம்மாவின் கதை நிஜமான அனுபவம் வியப்பு...

    உங்களின் அனுபவம், அப்போது மனதில் உண்டான பதட்டத்தை இப்போதும் உணர முடிகிறது...

    பதிலளிநீக்கு
  24. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  25. குழந்தைக்கு உடம்பு சரியில்லாத சமயத்தில் இப்படி ஆட்டோ கிடைக்கவில்லை என்றால் பதட்டம், வருத்தம் கோபம் எல்லாம் எழும் தான்.

    சென்னையில் இப்படியும் மனிதர்கள் இருந்து இருக்கிறார்களா? அந்தக்காலத்தில்!

    இரண்டாவதாக தட்டிய வீட்டில் உங்களுக்கு உதவி கிடைத்து இருக்கும் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் நிலைமை புரியாமல் காத்திருந்தவர்கள் பாடும் கஷ்டம். பொறுப்பில்லை என்று என்னைத் திட்டிக் கொண்டிருந்திருப்பார்கள்...

      நீக்கு
  26. ஹை ஹை எல்லோருக்கும் வணக்கம். !! வந்தாச்சு!

    ஸ்ரீராம் முன்பு நீங்க எழுதினது நினைவில் இருக்கிறது நடுஇரவு ஆட்டோ....

    கதை போலவேதான் எழுதியிருக்கீங்க ராகுல் சம்பவத்தையும். இப்படியும் ஆட்டோக்கார மனிதர்களா? ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுக்கும் குடும்பம் என்று ஒன்று இருக்குதானே? குழந்தைகள் இருப்பார்கள்தானே...அவர்களுக்கும் இப்படியான அனுபவம் ஏற்பட்டிருக்கும் தானே? ஈவு இரக்கமற்ற மனிதர்கள். மிக மிக பதட்டமான நேரம்தான். எப்படி அல்லாடியிருப்பீங்க

    கடைசியில் நீங்கள் தட்டிய வீட்டின் ஆட்டோக்காரர் வந்திருபபர் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... நீண்ட இடைவெளிக்குப்பின் வருகை... சுஸ்வாகதம்.. நடந்ததை அறிய ஏழு ஏழு நாட்கள் காத்திருக்கணும்!

      நீக்கு
  27. பொக்கிஷ பகிர்வுகள் அனைத்தும் அருமை.

    ரஞ்சனி நாரயணன் அவர்கள் அனுபவம் வியப்பை தருகிறது.
    அவரின் அனுபவ பகிர்வும், மற்றைய செய்திகளும் மிக அருமை.

    குட்டி பத்மினி நடித்த" குழந்தையும் தெய்வமும் "படத்திற்கு பரிசு வாங்கும் போது எடுத்த படம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூப்பிட்டு பாராட்டினார்கள் போல...

      நன்றி கோமநி அக்கா...

      நீக்கு
  28. ச்சும்மா... பேஸ்புக்கில் ஒரு கலாய் பதிவிட்டபோது!//

    நல்ல கலாய்ப்பு

    பதிலளிநீக்கு
  29. எல்லா மனிதருக்குள்ளும் ஓர் இருட்டு மனிதன் வாழ்கிறான் ஜி

    ரஞ்சனி அம்மாவின் கதை போல் பலரது வாழ்விலும் இப்படி நடந்து இருக்கிறது. அந்த அனுபவம் உணர்ந்தவர்களுக்கே புரியும்.

    பதிலளிநீக்கு
  30. ஆமாம் ஸ்ரீராம் எல்லாருக்குள்ளும் ஒரு அப்படியான நெகட்டிவ் எப்போதாவது வெளிப்படும் மறுபக்கம் இருக்கிறதுதான். மனிதன் பாதி டெவில் பாதி கலந்த கலவை!!!! எல்லாருக்கும் எல்லா சமயத்திலும் நல்லவராக இருக்க முடியாதுதான் மிகவும் சரியே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் பாதி.. மிருகம் பாதி..்்!

      நீக்கு
    2. //கடவுள் பாதி.. மிருகம் பாதி// - உடனே உலக்கை பற்றி எழுதிடுவீங்களே.

      கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், 'கடவுள்' முழுவதும் கருணையானவரா என்பதிலேயே சந்தேகம் வந்துவிடும். அப்படி இல்லை, நூறு கசையடி கொடுக்க வேண்டிய இடத்தில் அவர் 5 கசையடிகள்தாம் கொடுப்பார், கழுத்தைச் சீவுவதற்குப் பதிலாக, காத்திருந்து கால்களைத்தான் கழற்றிவிடுவார், அதனால் கருணை மிக்கவர், என்று கீசா மேடம் போல பலர், என்னிடம் சண்டைக்கு வருவார்களோ?

      நீக்கு
    3. கர்மவினை காரணம் என்று சொல்வார்கள்.

      நீக்கு
  31. கலைமகள், அமுதசுரபி என் பாட்டி - அப்பாவின் அம்மா ரெகுலராக வாசிப்பது வீட்டிற்கு வந்துவிடும். அவர் சேகரித்து வைத்திருந்த கதைகள் பைண்டிங்க் எல்லாம் என்ன ஆச்சு என்று தெரியவில்லை. அப்பாவிடம் கேட்டிருந்தேன். இருந்தது என்று அப்பா சொன்னார் ஆனால் அவற்றைக் காணவில்லையாம். யார் தூக்கிப் போட்டார்கள் என்று தெரியவில்லை. பாட்டி இருக்கும் போதே ஊரிலிருந்து எடுத்து வர வேண்டும் என்று நினைத்தது நடக்காமல் போய்விட அவை என்னாச்சு என்று தெரியாமல் போய்விட்டன.

    கிருத்திகா என்பதைப் பார்த்ததும் அதுவும் அதிகாரியின் மனைவி என்று பார்த்ததும் உடன் நினைவுக்கு வந்தவர் நம்ம செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் அவர் மனைவி. அவரும் ஊடகங்களில் இருப்பவர்.

    ஆனால் இங்கு சொல்லப்பட்டிருக்கும் கதாசிரியர் ரொம்ப வருடங்களுக்கு முன்..மற்றவர்கள் பெயர் அறிந்திருக்கிறேன். இந்த ஆர் சூடாமணி அவர்கள்தானே புகழ்பெற்ற எழுத்தாளர் இல்லையா?

    வையவன் பற்றி ஜீவி அண்ணா அவர் பகுதியில் குறிப்பிரிந்ததை வாசித்த நினைவு வந்தது. சமீபத்தில் அவருடன் தான் பேசியயது பற்றி சொல்லியிருந்தது.

    என்ன அழகா கலைமகள் எழுதும் ஆசிரியர்கள் பற்றிய குறிப்பும் அவர்கள் எழுதிய கதை பற்றி நாலு வரி என்று அழகான அறிமுகம் இல்லையா? எழுத்தாளருக்குக் கொடுக்கும் அங்கீகாரம். நல்ல விஷயம். இப்போதெல்லாம் இப்படி இருக்கிறதோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பைண்டிங் காணாமல் போனால் வருத்நம் தாங்காது. ராகி குடும்பமே மாயாவியால் பாதிக்கப் பட்டிருக்காம். அப்போ கலைமகள் ஆசிரியர் கி வா ஜவோ?

      நீக்கு
    2. அப்போ கலைமகள் ஆசிரியர் கிவாஜ இல்லைனு நினைக்கிறேன். அந்தக் காலக் கலைமகள் பைன்டிங் எல்லாமும் அநேகமாப் படிச்சிருக்கேன். இப்போக் கீழாம்பூர் சங்கரநாராயணன் கலைமகள் ஆசிரியர். திருப்பூர்க் கிருஷ்ணன் அமுதசுரபி ஆசிரியர். என்னிடம் 2,3 முறை சுய அறிமுகத்தோடு எழுதித் தரும்படி சொல்லிப் பார்த்தார் திருப்பூரார். நான் அசைந்து கொடுக்கவில்லை. அதோடு அவங்க சொல்லும் அளவுக்கு ஏற்ப எழுதிக் கொடுக்கத் தெரியலை. அதையும் திருப்பூரார் சொன்னார். செங்கோட்டை ஸ்ரீராமும் சொன்னார். ரொம்பவே பெரிதாக இருக்கு. சுருக்க முடியலை என. கீழாம்பூர் இப்போத் தான் நண்பர் ஆகி இருக்கார். அண்ணா பெண் கல்கி ஆன்லைனுக்கு எழுதி அனுப்பச் சொல்லி வாட்சப் மூலம் செய்தி அனுப்பினாள். முன்னரே கூடக் கேட்டாள். இப்படி ஓர் நிர்ப்பந்தத்தில் வலுவில் போய்ச் சிக்க மனம் வரவில்லை. தளை போட்டாற்போல் இருக்கும்.

      நீக்கு
    3. கீதா அக்கா...   நல்ல வாய்ப்பாடு நழுவ விட்டிருக்கிறீர்களே...    அனுப்பி இருக்கலாமே...  இப்பவாவது அனுப்பலாமே...

      நீக்கு
    4. //நல்ல வாய்ப்பாடு //

      * வாய்ப்பை 

      நீக்கு
    5. அவ்வளவுக்குத் தகுதியும் சரிக்கட்டிக்கொண்டு போகும் பொறுமையும் இருக்கணும் இல்லையா?? சரிக்கட்டிக்கொண்டு போகத் தெரிந்தாலும் தகுதி முக்கியமானது.

      நீக்கு
  32. கதையின் கதை என்று கதை எழுதும் உத்தி பற்றி எழுதியிருப்பதில் நாடக அம்சம் என்பது உரையாடல்களால் கதையை நகர்த்துவதா அல்லது நாடகத்தனமையுடன் கதை இருக்கு என்று சொல்லுவோமே அப்படியா?

    க்ளைமாக்ஸ் எதுவும் இல்லாமல் அப்படியே இயல்பாகப் போகும் கதை..ஸ்ரீராம் நீங்கள் சொல்லியிருப்பது போல் அப்போது அது புதுமை போலும். அந்தக் குறுநாவலை வாசித்துப் பார்க்க வேண்டும் என்று ஆர்வம் வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீள நீளமான கதைகள் கீதா... புத்தகங்கள், பக்கத்தைத் திருப்பினாலே மாவாகிவிடும்!

      நீக்கு
  33. 20 வருடம் முன் ரஞ்சனி அக்கா எழுதிய கதை இப்ப நடந்து இப்போதைய அனுபவமும் அவங்க சொல்லிய விதமும் கூடவே அதில் இருக்கும் தகவல்களும் அருமை. ரஞ்சனி அக்கா இப்படி இங்கு அப்பப்ப எழுதுங்க உங்க தளத்துலயும் எழுதுங்க எழுத நேரம் கிடைக்கும் போது.

    இதே போன்று என் அம்மா பல வருடங்களுக்கு முன் சொன்னது இப்போது நடந்திருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குச் சில சமயங்களில் உள்ளுணர்வு சொல்வது அப்படியே நடந்துவிடும். கொஞ்சம் பயம்மாகவே இருக்கும். ரஞ்சனி சொன்ன மாதிரி சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். அவ்வளவு ஏன்? நடந்திருக்கின்றன. அனுபவித்துப் பார்த்தவர்களுக்கே புரியும்.

      நீக்கு
  34. ஸ்ரீராம், தலைப்பு கதை போல் நிஜம் பொருத்தம் உங்கள் பதிவிற்கும் அக்காவின் பதிவிற்கும்..!!!

    ரசிப்பதற்குப் பழைய பட்ம் அந்தக் குட்டிக் குழந்தை பதிமினி டக்கென்று ரஞ்சனி அக்காவின் பேத்தி போன்று இருக்கிறது..

    அகோகி பத்தி நீங்க சொல்லியிருப்பதை வாசித்ததும் நான் கேட்க நினைத்ததை அப்படியே பாலகணேஷ் கேட்டிருக்கிறார்!!!!!!!!!!!!

    எல்லாம் ரசித்தேன் ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், தலைப்பு இரண்டு விஷயங்களுக்குமே பொருந்துகிறது இல்லை?

      நீக்கு
  35. கதைபோல் நிஜம் வியப்பாகஇருக்கின்றது. பொதுவாக ஆட்டோ காரர்களின் அணுகுமுறையும் உதவும் எண்ணங்களும் சிறப்பாக பேசப்படுவதை அறிந்திருக்கிறேன் ஆனால் இதுபோன்றும் சிலர் இருப்பது அவலம்.

    நானும் உங்களைப்போல் ஆஸ்பிடலில் வெண்டிங் மெஷின் பின்னால் மறைந்து பதுங்கி இரவை கழித்திருக்கின்றேன்.

    ராகி முத்தை என்றால் அது என்ன உணவு ?
    ரசிக்கக்கொடுத்த புகைப்படம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோ... எல்லோரும் எல்லா சமயமும் நல்லவர்களாக இருப்பதில்லையே... அதுவும் ஒரு அனுபவம்.

      நீக்கு
    2. ராகி களியைத் தான் கன்னடத்தில் ராகி முத்தே என்பார்கள். இதனுடன் தொட்டுக்கப் பாகற்காய் கொஜ்ஜு (கர்நாடகபாணியில் பண்ணினது) நன்றாக இருக்கும். ஒரே ஒரு முறை குஜராத்தில் இருந்தப்போ புஜ்ஜில் போனப்போ கர்நாடக நண்பர் வீட்டில் செய்து கொடுத்தார்கள். பின்னர் அந்த அம்மா பிரம்மகுமாரிகள் அமைப்பில் சேர்ந்து விட்டார்கள். எதுவுமே கிடைக்கலை! :))))))

      நீக்கு
  36. ஸ்ரீராம் எழுத்துக்களின் மனம் ஒன்றிய வாசகன் நான் என்று சொல்லிக் கொள்வதில் என்றைக்குமே ஒரு அலாதியான சந்தோஷம் எனக்குண்டு. அவர் எழுதுவதின் உள்ளார்ந்த உள்ளுக்குச் சென்று அதன் ஜீவனைத் தொட்டு விடும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொழுது அதற்கான ரசனை தனித்தன்மை கொண்டதாக இருக்கும்.

    //நான் உட்பட எல்லா சமயங்களிலும் எல்லோரும் நல்லவராய் இருந்து விடுவதில்லை. சமயங்களில் உள்ளுக்குள்ளிருக்கும் பிசாசு ஆட்டி வைத்து விடும். அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் எனக்கு பெரியவன் சின்னக் குழந்தையாய் இருக்கும்போது வாய்த்தது.//

    தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை விவரிப்பது போன்ற ஒரு கட்டுரைக்கான செய்தியின் ஆரம்பம் இது என்பது தான் முக்கியம்.. நுழைவாயிலுக்குள் நுழைகிற நிலை. உள்ளே புகுமுன் வரக்கூடிய செய்திகளுக்கு வாசிப்பவரை தயார்ப்படுத்தும்
    நிலையை ரொம்ப இயல்பாக ஏற்படுத்துகிறார்.. தொடர்ந்த எழுதும் பொழுது ஒரு கட்டுரைச் செய்தியை கதை போலச் சொல்லும் ரசவாதம் இங்கு நிகழ்கிறது.

    எதை வாசிக்கும் பொழுதும் 'என்ன சொல்லியிருக்கிறார்' என்று நம் புரிதலுக்கு ஏற்ப புரிந்து கொள்ளும் விஷயத்திற்கு நேரடியாகப் போய் விடுகிறோம். இது சாதாரண வாசிப்பு முறை. தான் சொல்ல நினைப்பதை 'எப்படிச் சொல்லியிருக்கிறார்' என்று அணுகி ஓர்ந்து உணர்ந்து கொண்டு ரசிப்பது எழுத ஆசைப்படுவோரின் வாசிப்பு ரசனையாக மாற வேண்டும். அதற்கு ஸ்ரீராமின் எழுத்து ஒரு பயிற்சிக் களமாக அமைவதை பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். அந்த அனுபவத்தை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் சொல்லியிருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி ஸார்...    உங்கள் அன்புக்கு நன்றி.  உங்கள் பாராட்டு என்னை சங்கடபப்டுத்தினாலும், சந்தோஷப்படுத்துகிறது.  இந்தப் பெயர் நிலைக்க வேண்டுமே என்கிற கவலை!  அடுத்த தடவையே அதைக் கெடுத்துக்கொண்டு விடுவேன்!  உங்கள் பின்னூட்டத்தை என் மகன்களுக்கும், மனைவிக்கும் படித்துக் காண்பித்தேன்.

      நீக்கு
    2. ஓ! அப்படியா? :))

      நல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம் !!

      நீக்கு
  37. //அவன் பிறந்த நான்கே மாதங்களில் அவனுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நீர்ச்சத்துக் குறைந்து ஆபத்தான கட்டத்துக்குப் போக, அது தெரியாமல் அவன் தூளியில் தூங்குவதாய் நினைத்துக் கொண்டிருந்த நேரம். //  படிக்கும் பொழுது பகீரென்கிறது. நல்ல வேளை உங்கள் சகோதரியை கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார். 

    ஆட்டோ அனுபவத்தை சஸ்பென்ஸ் தந்து முடித்திருப்பதாக நினைத்தால் ஏமாந்து விட்டீர்கள். எல்லோரும் யூகித்து விட்டார்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும்(நாங்களும்)  குழந்தைதானே?  எனக்கு என்ன தெரியும்?  ஆனால் கடவுள் கூடவே இருந்து காத்தருளி இருக்கிறார்!

      நீக்கு
  38. சென்ற தலைமுறை எழுத்தாளர்களை நினைவில் கொண்டது நிரம்ப மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களைப் பற்றியெல்லாம் நினைவில் பதிந்த செய்திகள் மனசில் முட்டி மோதியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மாதிரி எழுத்தாளர்களை பற்றிய ஒரு சிறு அறிமுகம், கதை பற்றிய துளி விமர்சனம் என்று நான் பார்த்தது எனக்கு(ம்) ஆச்சர்யத்தைத் தந்தது.  எனவேதான் பகிர்ந்தேன்!

      நீக்கு
  39. கிருத்திகா என்றால் அவரது வாஸவேஸ்வரம் மறக்க முடியாத படைப்பு.
    எஸ். ரங்கநாயகி விகடனிலும் கல்கியிலும் எழுதியது நிறைய.
    ஆர். சூடாமணி மனவியல் கதைகளைப் படைப்பதில் வல்லுனர். இவர் சகோதரி தான் ருக்மணி பார்த்தசாரதி. இன்னொரு சகோதரி பத்மாஸினி மொழியாக்கத்தில் வல்லுனர். பாட்டி ரங்கநாயகியும் எழுத்தார்வம் மிக்கவர். குடும்பமே எழுத்துத்துறைக்கு சேவை செய்த குடும்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   கீதா அக்காவும் சொல்லி இருக்கிறார்.  எனக்குதான் அவரைப்பற்றித் தெரியவில்லை.

      நீக்கு
  40. //சில முக்கியமான முன் எச்சரிக்கைகளை சொல்லாமல் போனார்கள். அதாவது அவனுக்கு கொஞ்ச நாட்களுக்காவது சர்க்கரை சேர்க்கக்கூடாது. // நாங்க எங்க அம்மா வீட்டில் முக்கியமாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலில்/அல்லது அமுல், லாக்டோஜென் போன்ற உணவுகளில் சர்க்கரை சேர்ப்பதே இல்லை. சர்க்கரை சேர்த்துக் கொடுக்கவே மாட்டோம். குறைந்தது 2 வயது வரை சர்க்கரை சேர்ப்பதில்லை. பின்னரும் குழந்தைகளுக்குப் பிடித்தம் இருந்தால் தான் சர்க்கரை சேர்த்துக் கொடுப்போம். இப்போவும் பாலைச் சர்க்கரை இல்லாமலேயே குடிப்பார்கள். காஃபி, தேநீருக்கு எல்லாம் அரைச் சர்க்கரை தான். நான் எங்க பையருக்குப் பசும்பால் தான் முழுக்க முழுக்கக் கொடுத்து வந்தேன். லாக்டோஜென் கைவசம் இருக்கும். ஆனால் அவசரத்திற்கு மட்டும். எது கொடுத்தாலும் சர்க்கரை சேர்த்ததே இல்லை. இந்த விஷயத்தில் மாமியார் வீட்டில் அனைவரும் எனக்கு நேர் எதிரே! குழந்தைக்குச் சரியாக ஆகாரம் கொடுக்கிறதில்லைனே சொல்லுவாங்க. இன்னும் சொல்லப்போனால் காலைக் காஃபியே கொடுக்கணும்னு என் மாமியாருக்குப் பிடிவாதம். பாட்டிலில் விட்டுக் கொடுத்தால் குழந்தை குடிப்பான் என்பார்கள். அந்த நேரங்களில் குழந்தையைக் கீழேயே விட மாட்டேன். தம்பளர் காஃபியில் விரலால் தொட்டுத் தொட்டுக் குழந்தை நாக்கில் வைப்பார்கள். ஆகவே என்னிடமே பிடிவாதமாய் வைத்துக் கொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில வீடுகளில் குழந்தை பிறந்த உடன் குழந்தை வாயில் சர்க்கரைத்தண்ணீர்தான் ஆளாளுக்கு ஊற்றுவார்கள்!  அதுவே பல குழந்தைகளுக்கு கெடுதல்!  நாங்கள் பார்த்த மருத்துவர் ஏதேதோ குழந்தை உணவெல்லாம்  இலவசமாகக் கொடுப்பார்.

      நீக்கு
  41. சமீபத்தில் தான் திருப்பூர் கிருஷ்ணன் முகநூலில் ஆர். சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், அனுத்தமா ஆகிய சில அந்தக்காலப் பிரபலப் பெண் எழுத்தாளர்களுடன் ஆன தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார். ஆர். சூடாமணி தன் சொத்தை எல்லாம் (சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானது) மாற்றுத்திறனாளிகள் காப்பகத்திற்கு எழுதி வைத்துவிட்டார். அவர், அனுத்தமா, ராஜம் கிருஷ்ணன் ஆகியோர் அடுத்தடுத்துக் காலமானார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூடாமணி எழுதி வைத்த சொத்துகளை திலகவதியும் அருணா என்கிற எழுத்தாளர் பாரதியும் நிர்வகித்து வருகின்றனர்.    ராஜம் கிருஷ்ணனும் மருத்துவமனையில் தங்கியிருந்துதான் காலமானார் என்று நினைவு.  முகநூலில் பகிர்ந்த நினைவு.

      நீக்கு
  42. எங்க வீட்டுக் குழந்தைகளுக்குச் சர்க்கரை சேர்க்காதது போல் பவுடரும் போட்டுவிட மாட்டோம். எந்தவிதமான வாசனாதி திரவியங்களும் இல்லை. பேபி லோஷன் போட்டு விடுவதோடு சரி. முகத்தில் பவுடரோ, குழந்தைக்கு மேக்கப்போ போடுவது இல்லை. இயல்பான அதன் மிருதுவான சருமத்திலேயே விட்டு விடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் அலங்காரங்களில் எல்லாம் இந்தக் குறையும் வைத்ததில்லை!  கட்டுப்பாடில்லாமல் எல்லாம் வைத்திருக்கிறோம்.  அதற்காக அதைச் சரி என்று சொல்லவில்லை.

      நீக்கு
  43. கதையல்ல நிஜம் - வலி...
    கதை நிஜமானது - ஆச்சர்யம்...
    மற்றவை அருமை...

    பதிலளிநீக்கு
  44. ஜெகசிற்பியனின் சிறப்பு சரித்திரக்கதைகள், சமூகக் கதைகள் என்று ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்த எழுத்துச்சிற்பி. தனது சமூகக் கதைகளில் ஏழை, எளியவர்களை கதாபாத்திரங்களாக்கி அவர்களின் குரலை முழக்கியவர்.

    நண்பர் வையவன் முகநூலில் தொடர்ந்து எழுதி வருகிறார். இக்காலத்து தலைமுறைக்கு அவர் அனுபவங்கள் பாடமாகும். வையவன் என்றாலே விகடனில் பிரசுரமான அவரது நாவல் ஜமுனா நினைவுக்கு வரும்.
    வையவனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் பி.ச.குப்புசாமி என்ற என் அருமை நண்பர். இவர் சந்திரமெளலி என்ற பெயரில் எழுதுவார். ஜே.கே.க்கு மிகவும் நெருக்கமான நண்பராகத் திகழ்ந்தார். வையவனும் இவரும் திருப்பத்தூர் பக்க ஏலகிரி மலைத்தொடர் சார்ந்த போக்குவரத்து கூட சரியில்லாத ஒரு குக்கிராமத்தில் ஆசிரியப் பணியை மேற்கொண்டவர்கள். பி.ச.குப்புசாமி அவர்கள் ஜெயகாந்தன் காலமான சமயத்தில் 'தி.ஹிந்து' தமிழ்ப் பதிப்பில் ஜே.கே. பற்றி தொடர் கட்டுரைகள் எழுதினார். வட ஆற்காடு மாவட்ட திருப்பத்தூரில் நாங்கள் பேசிக் களித்த அந்தாட்களின் நினைவுகள் மறக்க முடியாதவை. ஸ்ரீராமின் இன்றைய பதிவு அந்நினைவுகளை மீண்டும் மனசில் முகிழ்க்கச் செய்தது. மிக்க நன்றி, ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு வையவன் சென்ற வாரம்தான் எனக்கு பேஸ்புக்கில் நண்பரானார்.  பெயரைப் பார்த்ததும் இவர்தானா என்று சென்று பார்த்தால் எழுத்தாளர் என்று இருந்தது.  உடனே கன்பார்ம் செய்தேன்!

      நிறைய சுவாரஸ்யமான மேலதிக விவரங்கள் கொடுத்திருக்கிறீர்கள்.

      நீக்கு
  45. சகோதரி ரஞ்சனி நாராயணன் குங்குமம் பத்திரிகை சார்ந்த 'தோழி' இதழில் (இந்த பத்திரிகை எனக்குப் பிடித்த மகளிர் இதழ்) தொடர்ந்து எழுதினார். எங்கள் பிளாக்கில் அவர் எழுத்துக்களைப் பார்க்க ஆசை. நேரம் இருப்பின் எழுதுங்கள், சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே வா போ வுக்கு அவரை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.  அவரது நேரமின்மை அவரை எழுத விடவில்லை.  மட்டுமல்லாது அவர் இப்போது ஆன்மீகப் பாதையில் அதிகம் இருக்கிறார்.

      நீக்கு
  46. வழக்கமாக செவ்வாய் தான் சிறுகதைத் திருநாள். அந்த செவ்வாய், வியாழன் அன்றே வாய்த்து விட்ட உணர்வை இந்த பகுதி தந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..   பாராட்டா?  அலுப்பா?!!!   மேலும் இப்பவே இப்படிச் சொன்னால்....!!!!

      நீக்கு
  47. இந்த மாதிரி செய்திகள் நீங்கள் தொடர்ந்து சொல்ல வேண்டும்
    ஜீவி சார்.

    பதிலளிநீக்கு
  48. ரஞ்சனி அக்காவின் அனுபவத்தை விட, அதை அவர் எழுதியிருக்கும் விதம் சூப்பர்! ராகி முத்தேயை சாப்பிட்டதில்லை. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் சாப்பிட்டதில்லை.  ஒருமுறை நான் ஹோசூர் சென்றிருந்தேன்.  அங்கு இருக்கும் தினமலர் வாரமலர் வாங்கிப் பார்த்தல் இவரின் கதை!   படித்தால் மிக அருமையாக இருந்தது.  உடனே போன் போட்டு பாராட்டினேன்.

      நீக்கு
    2. பானுக்கா ராகி முத்தே வேண்டுமா வாங்க வீட்டுக்கு இல்லை நான் செய்து படங்கள் பாதிதான் இருக்கு இன்னும் முழுசா எடுக்க சான்ஸ் கிடைக்கறப்ப எடுத்து திங்கவுக்கு அனுப்பறேன். ஈசிதான் பானுக்கா. மோர்க்களி கிளறுவது போலத்தான். ப்ளெயினாக இல்லைனா தாளித்து

      கீதா

      நீக்கு
  49. பொக்கிஷம் அருமை! கலைமகள், அமுதசுரபி இவைகளை கண்ணால் கண்டே எத்தனையோ வருடங்களாகி விட்டன. அமுதசுரபிக்கு இப்போது திருப்பூர் கிருஷ்ணன் ஆசிரியராக இருந்து நன்றாக நடத்துவதாக கேள்விப்பட்டேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  திருப்பூர் கிருஷ்ணன் பேஸ்புக்கில் மிக ஆக்டிவாக இருக்கிறார்.

      நீக்கு
  50. வணக்கம் சகோதரரே

    பொக்கிஷம் பகுதியில் சிறப்பான கதாசிரியர்களை நினைவுக்கு கொண்டு வந்து தந்தது குறித்து மகிழ்ச்சி மிகுந்த நன்றிகள்.

    சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களின் அனுபவங்கள் குறித்த பதிவு நன்றாக உள்ளது. முதல் கதைக்கு அவரின் சிறப்பான நினைவுகள் அருமையாக உள்ளது. நானும் இங்கு ராகி முத்தேயை பற்றி கேள்விபட்டுள்ளேன். இன்னமும் இதுவரை சாப்பிட்டதில்லை.

    குட்டி பத்மினியின் புகைப்படம் அழகாக உள்ளது.

    அம்மன் கோவில் கிழக்காலே படக்கதை அவ்வளவாக நினைவில்லை.(தொ. காவில் பார்த்திருக்கிறேன்) . ஒரு வேளை மீண்டும் பார்த்தால் நினைவுக்கு வரலாம். ஆனால் சந்திரமெளலி கமெண்ட் சிரிப்பை வரவழைத்தது. அது மறக்க முடியாத படம். இன்றைய கதம்பம் நன்றாக உள்ளது.அடுத்த வாரம் ப்ரிஜில் வாடாமல் வைத்திருக்கும் ஒரு முழத்தை இணைக்க மறந்து விடாதீர்கள். ஹா.ஹா.ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அடுத்த வாரம் ப்ரிஜில் வாடாமல் வைத்திருக்கும் ஒரு முழத்தை இணைக்க மறந்து விடாதீர்கள்.//

      ஹா..  ஹா...  ஹா...    அது உடனே முடியுமா என்று தெரியவில்லை!  ஐட்டங்கள் அதிகம் இருந்தால் என்ன செய்வது?  ஒரு ஆந்திர தேசத்து மாமியார் தனது மருமகனுக்காக சமைத்து வைத்திருக்கும் பண்டங்களை ஒரு பெரிய மெகா வாழை இலையில் வைத்து விளக்கம் கொடுப்பார்...  வாட்ஸாப்பில் வந்தது.  பார்த்திருப்பீர்கள்!   அதுபோல!

      நீக்கு
    2. ஹா.ஹா.ஹா இது வரை எனக்கு அந்த வாட்சப் செய்தி வரவில்லை. எனவே என் போன்றவர்களுக்காக அடுத்தடுத்த கதம்பத்தில் ஒரு இணுக்காக அதையும் கோர்த்து விடுங்கள். படித்து ரசிக்கலாம்.

      நீக்கு
    3. //தனது மருமகனுக்காக சமைத்து வைத்திருக்கும் பண்டங்களை ஒரு பெரிய மெகா வாழை இலையில்// - இதைப்பற்றி நான் முன்பே சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை. எனக்கு, தாட்ட இலை என்று சொல்லப்படும் பெரிய வாழை இலையில் விருந்து சாப்பிடணும் (சுடச் சுட... நல்ல விருந்து. ஸ்டாண்டர்ட் கல்யாண விருந்து இல்லை) என்று ஆசை. இதை பலமுறை வீட்டில் சொல்லியிருக்கிறேன். சென்ற பிறந்த நாளுக்கு சில நாட்கள் முன்பு வரை பெங்களூரில் வீடு வேலையாக இருந்தேன். பிறந்த நாளுக்கு சென்னை சென்றேன். பெண், வெளில எங்கயும் சாப்பிட்டுவிட்டு வரக்கூடாது என்றாள் (பேருந்தில் காலையில் புறப்பட்டால், மதியம் 4 மணிக்குத்தான் வீட்டுக்குப் போக முடியும்). காரணம் புரியலை, ஆனால் ஹெவியாக எங்குமே சாப்பிடவில்லை. எனக்கு, அவள் முயற்சியில் 50 வகை உணவு, ஆறடி நீள இலையில் போட்டாள். அதில் 10 வகையாவது ரெடிமேடாக உள்ளது-பழம், ஏதோ சிப்ஸ் போன்று. எல்லாவற்றையும் போட்டுவிட்டு என்னை சாப்பிடக் கூப்பிட்டாள். அன்றுதான் எனக்குப் புரிந்தது, மனதில் உள்ள ஆசை வேறு, நமக்கு சாப்பிடும் கெப்பாசிட்டி என்பது வேறு என்று. இதுவரை பகிரவில்லை என்றால், அந்தப் படத்தை ஒருநாள் பகிர்கிறேன்.

      நீக்கு
  51. இன்றைய பதிவு பொக்கிஷம்...
    சென்ற தலைமுறை எழுத்தாளர்களைப் பற்றி நிறைந்த செய்திகள்..

    கார்முகிலாய் கற்பகமாய்
    எபியின் தமிழ்ப்பணி-
    வாழ்க.. வளர்க...

    பதிலளிநீக்கு
  52. சுவையான கதம்பம்.

    ஆட்டோ அனுபவம் - மேலும் தெரிந்து கொள்ள அடுத்த வியாழன் வரை காத்திருக்க வேண்டும்! வேறு வழியில்லை.

    பதிலளிநீக்கு
  53. இதே அனுபவம் எனக்கும் உண்டு
    என் மகன் ஒரு நாள் நடு இரவில், உடல் நலம் குன்றியபோது, தேடிச் சென்று ஒரு ஆட்டோ பிடித்து வந்தேன். என் மகனால் படுக்கையில் இருந்து உடனே, எழுந்து ஆட்டோவிற்கு வர இயலவில்லை. அந்த அளவிற்கு உடல் சோர்வு. சிறிது பொறுங்கள் எழுகிறேன் என்று சொன்னார் என் மகன். மகன் ஓரளவு சோர்வு நீங்கி எழுந்து வருவதற்குள், பொறுக்க முடியாத, ஆட்டோகாரர் ஆட்டோவினை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்று விட்டார்.
    பிறகு மீண்டும் அலைந்து ஆட்டோ பிடிக்க வேண்டிய சூழல்.
    இப்படியும் பலர் இருக்கிறார்கள், உதவிக்காக ஓடோடி வருபவர்களும் இருக்கிறார்கள்.
    எல்லோரும் கலந்ததுதான் உலகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு பொறுமை இல்லாத ஆட்டோக்காரரா?   அப்படி ஓடி, என்ன சாதித்து விடப்போகிறார் அவர்?  இதனாலேயே சமயங்களில் ஒரு ஆஸ்தான ஆட்டோக்காரர் தேவையாய் இருக்கிறது!   

      நன்றி நண்பரே...

      நீக்கு
  54. ஆட்டோக்காரர் ஏன் இப்படி மனித நேயம் இல்லாமல் இருந்திருக்கிறார்? பொதுவாகவே ஆட்டோ என்றாலே கசப்பான அனுபவங்கள்தான் இருக்கும் போல.உங்களுக்கு அன்று மிகவும் பதற்றமாக இருந்திருக்கும். ஆட்டோ அனுபவங்கள் உண்டு.

    சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களின் கதையும் அனுபவமும் எனக்கு நேர்ந்த சில நிகழ்வுகளை நினைவூட்டியது.

    கதாசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிகைகள் அக்காலத்தில் இருந்தன என்று தெரிகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  55. நிறைய பேர்கள் ராகி முத்தை சாப்பிட்டதில்லை என்று தெரிகிறது. தயவு செய்து எல்லோருமாக எங்கள் வீட்டிற்கு வாருங்கள். கீ சா சொன்னது போல பாகற்காய் கொஜ்ஜுவுடன் ராகி முத்தை செய்து கொடுக்கிறேன்.
    படித்து ரசித்த எல்லோருக்கும் எனது நன்றி.

    பதிலளிநீக்கு
  56. அனைவருக்கும் மதிய வணக்கங்கள். ஸ்ரீராமின் வாழ்க்கை கதை மிகவும் சிந்திக்க வைக்கும் ஒன்றாக இருக்கின்றது. பார்த்தீர்களா ஸ்ரீராம், இது போல் நல்லவர்கள் அன்று இருந்ததாலும் இன்றும் இருப்பதாலும்தான் இன்னும் நமக்கு நல்லவை நடக்கின்றன, மழை பெய்கிறது, தாமதித்தாலும் நியாயம் கிடைக்கின்றது.
    இம்மாதிரி நல் உள்ளங்கள் மேலும் மேலும் பெருகி வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  57. ஒரு சிறிய திருத்தம் நான் எழுதிய இந்தக் கட்டுரையில். நான் குறிப்பிட்ட The Negotiator நாவலில் அமெரிக்க ஜனாதிபதியின் மகன் கடத்தப்படுவான். பேச்சு வார்த்தை மூலம் அவனைத் திரும்ப அழைத்துக் கொண்டு வரும்போது குண்டு வெடிக்க இறந்து விடுவான். அவனது இடுப்புப் பட்டையில் குண்டுகள் கட்டப்பட்டிருப்பது தெரியவரும்.

    படித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டபடியால் சற்று மாற்றி எழுதி விட்டேன். வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!