தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
காரப்பொடி - 2 டேபிள் ஸ்பூன்
தனியா பொடி - 2 டேபிள் ஸ்பூன்
கசூரி மேத்தி - சிறிதளவு
செய்முறை:
முதலில் கோதுமை சாதாரணமாக சப்பாத்தி செய்வதற்கு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். அரை மணி நேரம் கழிந்ததும், சற்று பெரிய சப்பாத்தியாக பரத்தி அதன் மீது காரப் பொடி, தனியா பொடி, கசூரி மேத்தி இவைகளோடு கொஞ்சம் உப்பு பொடியையும் சீராகத் தூவி, அந்த சப்பாத்தியை அங்கவஸ்திரத்தை விசிறி மடிப்பாக மடிப்பது போல் மடிக்க வேண்டும்.
அதாவது முதலில் ஒரு ஓரத்தை சற்று பெரிதாக உள் புறமாக மடித்து விட்டு பின்னர் அதையே பின்புறமாக மடிக்க வேண்டும். இப்போது இரண்டு மடிப்புகள் வந்து விடும். பின்னர் அந்த இரண்டு மடிப்புகள் கொண்டதை நீளமாக உள்புறம் மடித்து, அதில் பாதியை பின்புறமாக மடிக்க வேண்டும். இப்படி மடித்தால் இறுதியில் ஒரு நீள கயிறு போல வரும் அதை சுருட்டி, பின்னர் அப்படி சுருட்டப்பட்டதை சப்பாத்தியாக பரத்தி தவாவில் இரண்டு புறமும் நெய் விட்டு வாட்டி எடுத்தால் லேயர் லேயர் இருக்கும் லச்சா பராத்தா கிடைக்கும். இம்லி சட்னி (புளி சட்னி)அல்லது தயிரோடு சாப்பிடலாம்.
====================================
(தாமதத்திற்கு மன்னிக்கவும்)
=====================================
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற..
பதிலளிநீக்குநலம் வாழ்க..
நலமே விளைக
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குகோதுமை மாவில் செய்யப்படுவதால் ஓகே...
பதிலளிநீக்குபராத்தா வாழ்க....
அதானே... மைதான்னாதான் தப்பு!
நீக்குஅன்பின் ஸ்ரீராம், அன்பின் துரை
பதிலளிநீக்குஇன்னும் வரப் போகிறவர்கள் அனைவருக்கும் இந்த நாளும் இனி வரும் நாட்களும் நன்மையாக அமைய வாழ்த்துகள்.
நன்றி வல்லிம்மா... வாங்க வணக்கம்.
நீக்குபானுமாவின் பராத்தா நன்றாக இருக்கிறது.
நீக்குநிறைய எண்ணெய் சேருமோ.
பளபளா என்று மின்னுகிறது.
சுவையாகத்தான் இருக்கும்.
உப்பு ,காரம் எல்லாம் சேர்த்திருப்பது
நல்ல சுவை.
மேத்தியும் சேர்த்தால் இன்னும்
சுவையாக இருக்கும்.
பெயரே புதிதாக இருக்கிறது.
இன்று இங்கும் பராத்தா. உ.கிழங்கு, கொத்த மல்லி,மெந்தியக் கீரை
சேர்த்து செய்து,
ஆரஞ்சுத் தோல் தொகையல்
செய்தோம்.
கோதுமை மாவு அவ்வளவு நன்றாக இருக்கிறது
இங்கே.
மைதா பக்கமே போவதில்லை.
மிக நன்றி பானுமா.
காணொளி ஓடவில்லை என்று நினைக்கிறேன். பானு அக்காவை கேட்டு மீண்டும் வாங்கி சரி செய்ய முடிகிறதா என்று பின்னர் பார்க்கவேண்டும்.
பதிலளிநீக்குYes, Video unavailable.
நீக்குதிங்கள் தானே மின்நிலா பவனி வரும்?
நீக்குமின்நிலா இணைக்கப்பட்டது. காணொளி இப்பொழுது சரி செய்துவிட்டேன்.
நீக்குஇப்போக் காணொளியையும் பார்க்க முடிகிறது. தாமதமாக வந்த நிலாவை இனிமேல் தான் பார்க்கணும்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கிராமப்புறங்களிலும் பரவ ஆரம்பித்திருக்கும் தொற்றை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்தணும். அரசும் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களும் அதற்கேற்றவாறு நடவடிக்கைகள் எடுக்கணும். விரைவில் இந்தக் கொடிய அசுரனின் பிடியிலிருந்து விடுபடப் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குவெந்தயக்கீரை போட்டுப் பராத்தா, தேப்லா அடிக்கடி பண்ணுகிறேன். ஆனால் லாச்சா பராத்தா எனில் இப்படிப் பண்ணணும் என்பதை இன்றே, இப்போதே அறிந்தேன். நாங்களும் இந்த மாதிரி கோதுமை மாவில் காரம், உப்பு, பெருங்காயத் தூள், ஓமம், தேவையானால் கரம் மசாலா சேர்த்துக்கொண்டு கசூரி மேதியும் போட்டுப் பண்ணினாலும் அதை மாவு பிசையும்போதே சேர்த்துவிட்டுப் பின்னர் ஊற வைத்துக் கொண்டு பராத்தாவாகவோ, தேப்லாவாகவோ பண்ணுவோம். பெரும்பாலும் வெளி ஊர்ப் பயணத்தில் இதுவும் ஊறுகாய் அல்லது தக்காளித்தொக்கு இருந்தால் போதும். பராத்தா எனில் கோதுமை மாவில் தான். நோ மைதா மாவு. நான் இப்போதெல்லாம் ரவா தோசைக்குக் கூட மைதா மாவு சேர்ப்பதில்லை. உளுத்தமாவு கைவசம் இருக்கும். அதைச் சேர்த்துவிட்டு அரைக்கரண்டி கோதுமை மாவே சேர்த்துக் கரைத்து விடுவேன். தோசை நன்றாகவே வருகிறது.
பதிலளிநீக்குசும்மா பத்துநாள் வடநாட்டில் வேலைபார்த்தா, தமிழக பாரம்பர்யமான வழக்கங்கள் சிலருக்கு மறந்துடுது.
நீக்குவெளியூர் பயணம்னாலே, மிளகாய்ப்பொடி தடவின இட்லி, தயிர்சாதம் தேங்காய் துவையல், இல்லைனா புளியோதரை.... இதெல்லாம் மறந்துபோயிட்டு பராத்தா, தேப்லான்னு சப்ளாக் கட்டையைத் தூக்கிக்கிட்டு வட இந்திய உணவுக்கு வாக்களிக்கச் செல்றாங்களே
ஹாஹாஹா,இட்லி, மிளகாய்ப் பொடி இப்போதெல்லாம் குலதெய்வம் கோயிலுக்குப் போற அன்னிக்குத் தான்! அதுவும் புளியஞ்சாதம், தயிர்சாதமும் எடுத்துட்டுப் போனால் அபிஷேஹம் முடிஞ்சு மாவிளக்குப் போட்டுப் பின்னர் சாப்பிட்டுக் கிளம்பச்சரியா இருக்கும்.
நீக்கு//சும்மா பத்துநாள் வடநாட்டில் வேலைபார்த்தா,// பத்து வருஷத்துக்கும் மேல்! :))))))
நீக்குதேப்லாவா?
நீக்குஆமாம், கோதுமை மாவிலேயே கொஞ்சம் கடலைமாவும் சேர்த்துக்கொண்டு காரப்பொடி, தனியாப்பொடி, பெருங்காயப்பொடி, கரம் மசாலா எல்லாமும் சேர்த்துக் கொண்டு ஜீரகம், சோம்பு, ஓமம் ஆகியவற்றையும் போட்டுக் கொண்டு தயிர் சேர்த்து மாவு பிசைந்து சப்பாத்தியாய் இட்டுத் தோசைக்கல்லில்/சப்பாத்திக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கணும். வெந்தயக்கீரையில் செய்தால் நன்றாக இருக்கும்.
நீக்குஆமாம் மா. அவர்கள் பதிந்திருந்தது
பதிலளிநீக்குவரவில்லை.
பானுமதி சொல்கிறாப்போல் சப்பாத்தியின் உள்ளே காரத்தைத் தடவிட்டு மடித்துப் போட்டுப் பின்னர் அதை வெட்டிச் சின்னச் சின்னதாக அப்பளங்களாக இட்டுப் பொரித்து எடுத்து வைத்துக் கொள்வோம். மாலைத் தேநீருடன் சாப்பிட நன்றாக இருக்கும். வெளி ஊர்ப் பயணங்களுக்கும் எடுத்துச் செல்லலாம். எண்ணெய் அல்லது வெண்ணெய் அல்லது நெய்யில் எல்லாப் பொடிகளையும் போட்டுக் குழைத்துக் கொண்டும் தடவுவோம். அநேகமாகக் குழைத்துத் தடவினால் தான் பின்னர் பொரிக்கும்போது பிஸ்கட் மாதிரி வரும்.
பதிலளிநீக்குமடித்து மடித்து இடுவது அழகாக வந்திருக்கும்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரசித்தேன், ருசித்தேன்.
பதிலளிநீக்குகோதுமையில் செய்வது நல்லதே...
பதிலளிநீக்குகாணொளி இயக்கமில்லை.
அனைவருக்கும் காலை வணக்கம். இன்று என்னுடைய படைப்பா? நான் அடுத்த வாரம், அல்லது அடுத்த மாதம் வரும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். வீடியோ வரவில்லையே..??:((
பதிலளிநீக்குவீடியோவை அல்லது அதன் link என்னுடைய வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பிவைக்கவும். நான் அதை பதிவில் இணைக்கிறேன்.
நீக்குஸ்ரீராம் அனுப்பிய வீடியோவை, இப்போது இணைத்துவிட்டேன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்களில் சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் செய்முறையில் கோதுமை லாச்சா பராத்தா வித்தியாசமான பெயருடன் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். நான் வெறும் கோதுமை மாவில் உப்பு மட்டும் சேர்த்து இது போல் செய்வேன். இல்லை காரம், உப்பு சேர்த்து பிசைந்து விட்டு கார பாராத்தாவாக இடுவேன். இந்த முறை வித்தியாசமாக உள்ளது. இது போல் செய்து பார்க்க வேண்டும். எப்படியும் இதற்கு தொட்டுக் கொள்ள ஏதாவது வீட்டில் கேட்பார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குதலைப்பைப் பார்த்த உடன், அட அநியாயமேன்னு தோணிச்சு.
பதிலளிநீக்குஇங்க பசங்களுக்கு லாக்டவுன்ல, ந்ந்தினில packed பராத்தா வாங்குவேன். அதை வச்சி என்ன என்னவோ பண்ணிச் சாப்பிடுவாங்க. ஒரு நாள் இது என்ன ராக்கெட் சயன்சா என நினைத்து நானே வீட்டில் செய்தேன் (சைட் டிஷ் என் செலெக்ஷன், ஆனால் மனைவி செய்தாள்). எபிக்கு, அழகிய பரோட்டா (அழகிய... நோட் த பாய்ன்ட்) செய்முறை இன்னும் அனுப்பாமயே இருக்கேன். அதுக்குள்ள, இது என்ன பரோட்டா எனத் திகைத்தேன்.
லாச்சா பரோட்டா - பெயர் என்னவோ கவர்ச்சியாத்தான் இருக்கு.
பதிலளிநீக்குசெய்முறையும் அழகு. படங்கள் நல்லா கொலாஜ் செய்திருக்காங்க. பாராட்டுகள்.
ஆனா பாருங்க.... எனக்கு இதெல்லாம் பிடிக்காது.
நான்லாம் பரோட்டா குருமா. ஜாதி... ஹா ஹா ஹா
நீக்குநெல்லைத்தமிழனும் மதுரைத்தமிழனும் இந்த வகையில் ஒரே ஜாதி
78-81 காலகட்டத்தில் உலகின் மிகச் சுவையான பரோட்டா சாப்ஸ் இரண்டே இடங்களில் கிடைத்தன.
நீக்குமுதலாவது (தரத்திலும்) சென்னை சத்யம் தியேட்டர் அருகில் பீடர்ஸ் ரோட் (?) முனையில் இருந்தது. இரண்டாவது திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே இரவு நேரத் தெருக்கடை ஒன்று. இரண்டு இடங்களிலும் நூற்றுக்கணக்கில் பரோட்டா சாப்ஸ் உள்ளே தள்ளியிருக்கிறேன். ம்ம்ம்ம்..
நான் மதுரையில் படித்தபோது காலேஜ் ஹவுசில் பட்டர் நான், கற்பகம்ல ரவா தோசை, மசாலா பால், பஸ் ஸ்டான்ட் மினி மீனால பரோட்டா குருமா சாப்பிடுவேன். இதெல்லாம் எனக்கு அவ்வளவு பிடிக்கும். 5-6 வருடங்களுக்கு முன் மனைவியோடு மதுரை வழியா நெல்லை சென்றேன். மதுரைல இறங்கினேன். இந்த இடங்களைப் பற்றியா இவ்வளவு பில்டப் கொடுத்தோம் என்று தோன்றியது. அங்கெல்லாம் சாப்பிடலை
நீக்குலாச்சா பராத்தா ..பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு ..
பதிலளிநீக்குஇது போல எப்பாவது செய்வது உண்டு .....
ரெஸிப்பியின் பெயரின் ’உச்சரிப்பில்’ சின்ன கரெக்ஷன்:
பதிலளிநீக்குஅது ‘லாச்சா பராத்தா’ அல்ல! அந்த வார்த்தைகளை ‘லச்சா பராட்டா’ என்றுதான் வடஇந்தியாவில் சொல்வதுபோல், சரியாகச் சொல்லவேண்டும்.
‘லச்சா’ (சுருள், சுருளாக, வட்ட, வட்டமாக என்பதற்கு ஹிந்தி). பராட்டா - ஆங்கிலத்தில் அந்த வார்த்தையை 'PARATHA' என Recipe book / Menu -க்களில் எழுதியிருப்பார்கள். அதில் வரும் கடைசி மூன்று எழுத்துக்களின் (THA) உச்சரிப்பு 'த்+ஆ' - 'தா' அல்ல. அது, ஹிந்தியில் வரும் 'ட்+ஹா' = (ட்)டா (t + ha) என்கிற உச்சரிப்பு. ஆதலால், ’பராட்டா’ எனவே உச்சரிக்கவேண்டும் - ஆங்கிலத்தில் 'PARAATTA' - என்று எழுதினால் எப்படி உச்சரிப்போமோ, அப்படி.
ஏகாந்தன் சாரின் பராட்டா பற்றிய விளக்கம் அதன் உச்சரிப்பு பற்றிய தெளிவைத் தந்தது.
நீக்குபரோட்டா என்று சொல்வதும் இந்த பராட்டாவும் ஒன்றா என்பது அடுத்த சந்தேகம்.
பராத்தா பரோட்டா இரண்டும் வேறு
நீக்குதமிழ்நாட்டில் கொடுப்பது BHUபுரோட்டா இல்லையோ? பார்த்தாலே சாப்பிடப் பயமா இருக்கும். எங்களுக்குப் பிடித்தது ஆலு பராந்தா, மூலி பராந்தா, மேதி பராந்தா ஆகியவையே! பராந்தா/ ஹரியானா/பஞ்சாப் உச்சரிப்பில்.
நீக்குகீசா மேடம்... நீங்க சொல்ற வெரைட்டிலாம் ஜெரிப்பதில்லை என்பது என் எண்ணம். வடநாட்டுல கோதுமை பிரதான உணவா இருக்கறதுனால ஆலு, மூலி, மேத்தி என வெரைட்டி சேர்க்கறாங்க, நாம ஊத்தாப்பம், இரட்டை விளிம்பு, மசால் தோசைனு கலந்து கட்டற மாதிரி.
நீக்குநீங்க அங்கேயே considerable வருஷம் இருந்ததால பழகிடுத்தோ என்னவோ
நாங்க வீட்டிலேயே ஆலு பராட்டா, மூலி பராட்டா, மேதி பராட்டா எல்லாமே பண்ணுவோம். நாலு நாள் முன்னர் தான் மேதி பராட்டா பண்ணினேன். ஆனால் அதுக்கெல்லாம் தொட்டுக்கத் தயிர், ஊறுகாய் அல்லது தக்காளித் தொக்கு, கொத்துமல்லித் தொக்குத்தான்.
நீக்குஏகாந்தன் ஜி, நல்ல விளக்கம். எங்க மருமகள் தில்லிக்காரி.
நீக்குஅவளும் கேட்பாள். ஏம்மா எல்லாப் பெர்யரையும் தப்பா உச்சரிக்கிறார்களே என்று.
எங்களுக்கு எல்லாமே ஒன்று போல இருக்கு, ரோட்டி வேற ,சப்பாத்தி வேறன்னு தெரியாது என்பேன்:)
புரோட்டாவைப் பாத்தா பயமா?
நீக்குபடங்கள் பிரமாதாம்
பதிலளிநீக்குசெய்து பார்ப்போம்... நன்றி...
பதிலளிநீக்குகாணொளி இப்போது பார்த்தோம்...
நீக்குஇதை ஒரு நாள் செஞ்சுடலாம்
பதிலளிநீக்குவாசகர்கள் மன்னிக்கவும். என்னுடைய நெட் இணைப்பு ஐம்பது மணி நேரங்களாக வேலை செய்யாமல் இருந்து இப்போதான் மீண்டும் திரும்ப வந்தது. மின்நிலா சுட்டி இணைத்துவிட்டேன். காணொளி விவரங்கள் பதிவாசிரியரை எனக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறேன். கிடைத்தால், அதையும் சரி செய்கிறேன். நன்றி.
பதிலளிநீக்குகாணொளி காணும்படி செய்யப்பட்டது.
நீக்குI appreciate your sincerity KGG sir.
நீக்குநன்றி கௌதமன் ஜி.
நீக்குகாணொளி அழகாக வந்திருக்கு.
விசிலும் அருமையா இருக்கிறது:)
பராட்டாவுக்கு நல்ல உழைப்பு தேவை என்பது புரிகிறது.
பானுமாவுக்கு வாழ்த்துகள்.
மின் நிலா அப்பம் அரட்டை சுவாரஸ்யம்.ஊட்டி படங்களும் குளிர்ச்சி தருகிறது
மிக மிக நன்றி.
// I appreciate your sincerity KGG sir.// வாசகர் திருப்தியே எங்கள் சந்தோஷம்.
நீக்குபுதிய ஐயிட்டமாக உள்ளது...நாளை ரிஸ்க் எடுக்க உள்ளோம்...பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குகாணொளி வேலை செய்யுது. இப்போதான் எப்படிப் பண்ணியிருக்காங்கன்னு தெரியுது. ஒவ்வொரு பராட்டா செய்யும்போதும் விசிலடிக்கணுமா?
பதிலளிநீக்குஅப்புறம், இந்த லச்சா பராட்டாவுக்கும் எனக்குப் பிடித்தமான பராட்டாவுக்கும் குறைந்த பட்சம் 70 வித்தியாசங்கள் இருக்கும் போலிருக்கு.
கராமா, துபாய் நம்ம வீடு வசந்தபவன் பரோட்டா மற்றும் அவங்க பண்ணற எல்லா குருமாவுமே எனக்கு ரொம்பவும் பிடித்தமானது
ஒரு தரத்துக்கு நாலு தரமாய்ப் பார்த்தேன். எனக்கு ஒண்ணும் விசில் சப்தமெல்லாம் கேட்கலையே! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குபார்த்தா எப்படிக் கேட்கும் கீசா மேடம்? 2:14-2:17 கேட்டுப் பாருங்க
நீக்கும்ம்ம்ம், கேட்டது இப்போ. ஆனால் நான் அது நம்ம ரங்க்ஸோட ஐபாடில் இருந்து வருவதாக நினைத்தேன். :))))))
நீக்குI have a feeling it might be a clock.
நீக்குவல்லிம்மா... க்ளாக்தான். ஆனால் கலாய்க்க வாய்ப்பு கிடைக்கும்போது விடலாமா?
நீக்குKoodaathu koodaathu Murali ma.:)
நீக்குலாச்சா பராத்தா படங்களும், காணொளியும் செய்முறை சொன்னதும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமின் நிலா பார்த்துவிட்டேன். அருண் ஜவர்லாலின் திறமை ஆச்சரியப்பட வைக்கிறது. கேஜியின் படங்களும் நன்றாக உள்ளன. ஊட்டிப் படங்களும்! அருண், அங்கிதாவை வைத்துக்கொண்டு சமையல் குறிப்பெல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க போல. அரிசிப் பொரியில் இம்மாதிரி நாங்களும் பண்ணிச் சாப்பிட்டிருக்கோம், பூண்டு இல்லாமல்! :)))) குகு அங்கேயும் தலை காட்டிட்டாரே!
பதிலளிநீக்குபாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குஅநேகமாய் நான் பண்ணும் ப்ளெயின் பராந்தாவும் இந்த வகைதான். அதுவும் லச்சா பராந்தா என்றே சொல்லலாம் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குமின் நிலா நன்றாக இருக்கிறது. இடையில் சேர்க்கப்பட்ட படங்கள் அழகாய் இருக்கிறது.
பதிலளிநீக்குகடைசியில் கெளதமன் சார் எடுத்த படமும் நன்றாக இருக்கிறது.
நன்றி.
நீக்குபடங்கள் நன்று. குறிப்பும் நன்று.
பதிலளிநீக்குஒரே ஒரு திருத்தம் - லாச்சா அல்ல - லச்சா! சுருள் சுருளாக வரும் இந்த பராட்டாவின் பெயர் லச்சா பராட்டா.
அதென்னமோ பரோட்டான்னா மைதாவில் எண்ணெய் கொட்டி அடித்து பிசைந்து, வீசி உருட்டி, சுட்டு, லேயர் லேயரா வர்ற மாதிரி செஞ்சாதான் மனசு ஏத்துக்குது.
பதிலளிநீக்கு