புதன், 22 ஜூலை, 2020

ஒரு ஞானி இன்னொரு ஞானியை எப்படி அடையாளம் காண்பார் ?



ஏஞ்சல் : 



1, மூக்குமேல் கோபம் என்றால் என்ன ? 





# ஆதி மனிதர்கள் ஆற்றைக்கடக்கும்போது நீர்மட்டம் மூக்குக்கு மேல் போனால் ஆபத்து எனக் கருதியதால் மூக்குக்கு மேல் கோபம் ஒரு அளவீடு ஆனது.



& மனித உடலில் மூக்குக்கு மேலேதான் கண்கள், மூளை எல்லாம் நிறுவப்பட்டிருக்கின்றன. கோபம் வந்தால் கண்கள் சிவக்கும், மூளை பழிவாங்கத் துடிக்கும். அதனால்தான் மூக்குக்கு மேலே கோபம் என்று சொல்கிறார்கள் போலிருக்கு. (மூக்குக்குக் கீழே கோபம் வந்தால் ஒரே கடியா கடிச்சுடுவாங்களோ!) 



2, ஒருவருக்கு ஞானம் கிடைக்க எத்தனை வருஷம் அல்லது மாதங்கள் ஆகும் ? 



$ புத்தருடைய சீடர்களில் ஒரு சிலருக்கு சீக்கிரமே ஞானம் லபித்தது என்கிறார்கள். திருஞான சம்பந்தருக்கு 5 இல் கிட்டியது பலருக்கு 60 இல் கூட...? 



# சுமார் இரண்டொரு நாட்கள் ஆகலாம் !!



& ஞானம் கிடைக்கவேண்டும் என்று இருந்தால் எந்த வயதிலும் சில வினாடிகளில் கிடைக்கும். 



3, ஒரு ஞானி இன்னொரு ஞானியை எப்படி அடையாளம் காண்பார் ?



$ ஏஞ்சல் அதிராவை எப்படி அடையாளம் கண்டார்?


# பாம்பின் கால் பாம்பறியும்.  இயல்பான திறன்.


& யோசித்துப் பார்த்தால், எந்த ஞானியும் மற்றவர்களை 'அடையாளம் காண' நேரத்தை வீணடிப்பதில்லை. ஞானிக்குத் தெரியும் மற்றவர்களை அடையாளம் கண்டுகொள்வதால் தனக்கோ மற்றவர்களுக்கோ எந்தப் பயனும் இல்லை என்று. 


4, எனக்கு வீட்டில் கழுதைக்குட்டி பன்னிக்குட்டி இதெல்லாம் வளர்க்கணும்னு சமீபகாலமா ஆவல் அதிகரிக்குது இதன் காரணம் என்னவா இருக்கும் ?


$ வீட்டில் துள்ளி விளையாடும் குழந்தைகள் இல்லை போல் ... !


# எதிர்த்துப் பேசாத ஜீவன்களோடு சிலகாலம் வாழ ஆசையாக இருக்கலாம்.

& அதோடு நிறுத்திக் கொள்ளக்கூடாது. பாம்புக் குட்டி, புலிக்குட்டி, சிங்கக்குட்டி என்று ஆசையை விரிவுபடுத்திக் கொள்ளலாம். முடிந்தால், ஏதேனும் மிருகக் காட்சிசாலையில்  ஓய்வு நேர பணியாற்றலாம். 

5, உலகமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கு ஏழை பணக்காரர்னு மிச்சம் வைக்கலை இப்படிப்பட்ட சூழலில் big b குடும்பத்தினருக்கு கொரோனா குணமாக யாகம் வளர்க்கும் சிலர் எவ்வகையைச் சார்ந்தோர் ? இதை படிச்சு கோபம் வருவது நியாயம் தானே ? 8.5 லட்சம்  பேர் பாதிக்கப்பட்டப்போ யாகம் செய்யாதவங்க இவங்களுக்கு செய்வது எதை நோக்கி செல்கிறது சமூகம் ?


 $ இனிப்போ பலகாரமோ விளையாட்டுப் பொருள்களோ
ஊரிலிருக்கும் எல்லாக்குழந்தைகளுக்குமா வாங்குகிறீர்கள்?  அது போல் அவருக்கு பிடித்தமானவர்க்கு அவர் அருள் கேட்டுப் பிரார்த்திக்கின்றனர்.


# பிரபலங்களால் கவனிக்கப்பட வேண்டும் என்ற உந்துதல் காரணமாக இந்த மாதிரி நடக்கிறது. இதைக் கண்டு நகைப்பு வரவேண்டுமே தவிர கோபப்பட்டுப்  பயனில்லை.  சமூகம் எதை நோக்கியும் செல்லவில்லை,  இது ஒரு ஃப்ரீக் செயல்பாடு.



& நான், கூடுவாஞ்சேரி குப்பன் அவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமாக யாகம் செய்கிறேன் என்று சொன்னால் யாருக்கும் குப்பனையும் தெரியாது; என்னையும் தெரியாது. விளம்பரம் கிடைக்காது. ஆனால் நான் அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா குணமாகவேண்டும்  என்று சொல்லி கற்பூரம் ஏற்றினால் கூட என் பெயர் பிரபலமாகிவிடும்! 


நெல்லைத்தமிழன் : 


1. கோவில்ல சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கோவில் வருமானத்துக்கு வழிவகை செய்துகொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?



& அப்படி வருகின்ற 'கோவில் வருமானம்' யாருக்குப் போய் சேர்கிறது என்பதுதான் கேள்வி. 


2. டைம் மெஷினில் கடந்த காலத்துக்குச் செல்ல முடிந்தால், எந்த குணத்தை, செயலைத் திருத்திக்கொள்வீர்கள்?


# டைம் மெஷினில் கடந்த காலத்துக்குச் செல்லலாமே தவிர, குண விசேஷங்களை மாற்ற இயலாது.  அப்படி முடியுமானால்  பொறுமையின்மை, முன் யோசனைக்குறைபாடு,  அடங்காத ஆசைகள்  என நீக்க  நினைப்பது  நிறையவே இருக்கிறது.


& டைம் மெஷினில் கடந்தகாலத்திற்கு சென்றால், படிக்கவேண்டும் என்று நினைத்து எடுத்து வைத்த புத்தகங்களை அப்பப்படியே அப்போவே படிக்கவேண்டும். இப்போ எல்லாம் அந்தப் புத்தகங்கள் எங்கே போயின என்று தெரியவில்லை! 

3. பயணத்துக்குத் தோதுப்படும் உணவு எது? (உள்ளூர் வெளியூர்னு தரம் பிரிக்காதீங்க)



# மிளாகாய்ப் பொடியில் புரட்டிய இட்லி, புளியோதரை, தயிர் சாதம்.



& சிலசமயங்களில் மியூசிக் அகடெமிக்கு காலையில் கச்சேரி கேட்கப் போகும்போது, நாள் முழுவதும் பல கச்சேரிகள் கேட்க திட்டம் போட்டிருந்த சமயத்தில், நான்கைந்து சப்பாத்திகள் செய்து எடுத்துக்கொண்டு, தொட்டுக்கொள்ள சிறிது மிளகாய்ப்பொடி அல்லது கொஞ்சம் சர்க்கரை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவேன். கச்சேரிக்கு இடையில் நேரம் கிடைக்கும்போது ஒரு சுருள் சப்பாத்தி கடிச்சு மென்றுவிடுவேன். பயணங்களின்போது தயிர் சாதம் ஊறுகாய் பெஸ்ட். 
  
கில்லர்ஜி: 
  

மரணத்தை நமது விதி என்று நம்பி வாழ்ந்து வந்தோம்.

ஆனால் தற்போது கொரோனா என்ற தீநுண்மியால் மரணங்கள் வருகிறதே இதுவும் விதியா ?


# கொரோனாவில் மரண விகிதம் மிகச் சொற்பம்.  மேலிடத்து வார்னிங் என்று கொள்ளலாமோ ? 


இதுவரை எந்த ஜோதிடரும் இப்படியொரு மரணம் வருவதாக சொல்லவே இல்லையே ஏன் ?

# ஜாதகம் பார்த்து வரும்பொருள் உரைப்பவர் ஜோசியர். கிரகத்துக்கே கிரகணம் பிடித்தால், அதன் ஜாதகமும் கிடைக்காத போது அவர் என்ன செய்ய முடியும் ?


(திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் கேட்ட நான்கு கேள்விகளும் அவற்றுக்கு எங்கள் பதில்களும் அடுத்த வாரம் இடம் பெறும். )
===============

புதன் புதுசு : சென்ற வாரம் நாங்க கேட்டிருந்த dumb charades வழிமுறையில் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எங்களுக்கு அனுப்பிய நான்கு கேள்விகள் இங்கே இடம் பெறுகின்றன. 

காணொளி  / படம் பார்த்து படத்தின் பெயரை கண்டுபிடிங்க. 

கவனிக்கவும் : இது எந்தப் படப் பாடல் என்பது கேள்வி இல்லை. படத்தில் வருபவர்கள் எந்தப் படத்தின் பெயரை உச்சரிக்கிறார்கள்? 

1)  

2)  


3) 


4) 

=============

ரொம்ப சுலபமா நாங்களும் ஒரு கேள்வி கேட்டுடறோம் :

கீழே வரும் பாடலில் சொல்லப்படும் திரைப்படத்தின் பெயர் என்ன? 





 ===== 

a) மின்நிலா 009 (சுட்டி) எல்லோரும் படிச்சாச்சா ? 

b) அந்தப் புத்தகத்தில் உங்களுக்குப் பிடித்தது என்ன? ( 'பைத்தியம்' என்றெல்லாம் சொல்லக்கூடாது!) 

c) பிடிக்காதது என்ன? 

d) ஃபோனில் அல்லது கணினியில் சுலபமாகப் படிக்க முடிகிறதா? 
என்ன தடங்கல்கள் வருகின்றன? 

e) பொருளடக்கம் பகுதியிலிருந்து நினைத்த பகுதிக்கு 'க்ளிக்' செய்து செல்ல இயல்கிறதா? 

f) இன்னும் எப்படி வடிவமைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? 

நன்றி. மீண்டும் சந்திப்போம். 

================

91 கருத்துகள்:

  1. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...  வாங்க...

    பதிலளிநீக்கு

  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    இந்த நாள் இனிய நல்ல நாளாகட்டும்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அச்சமூட்டும் நிலையிலிருந்து இயல்பான நிலைக்குத் திரும்பப் பிரார்த்திப்போம். திரும்பத் திரும்பப் பிரார்த்திப்போம். உலகே தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த நிலை மாறவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமேல் கவலை வேண்டாம். எல்லாம் சரியாகின்ற காலம் நெருங்கிவிட்டது. பொறுத்திருந்து பாருங்கள்.

      நீக்கு
  6. டம்ப் ஷராட். பிரமாதம்
    முதல் பாடல் சொல்லும் படம் உள்ளம் கொள்ளை போதே.:0)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. DD வந்து சரியா தவறா என்று சொல்வார்.

      நீக்கு
    2. சரி தான் அம்மா... நீங்கள் பழைய பாடல்கள் என்றால் உடனே கண்டு பிடித்து விடுவீர்கள்... அருமை...

      நீக்கு
  7. கடைசிப்பாடலில் எம் ஜிஆர் சொல்லும் படம் நான் ஆணையிட்டால்

    பதிலளிநீக்கு
  8. 4,விஜயகுமாரி சொல்லும் படம் துள்ளாத மனமும் துள்ளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா DD - வாங்க ! தீர்ப்பு சொல்லுங்க!

      நீக்கு
    2. முதல் பாடலுக்கு க்கு :- முத்துராமன் மகன் கார்த்திக் மற்றும் பிரபுதேவா என்று சொல்லியிருந்தேன்...

      இங்கு 2) என்று உள்ளதில் சொல்லப்பட்டவை 4) கீழே வர வேண்டும்... அந்த சப்தம் இல்லாத காணொளி பாடலுக்காக சொல்லப்பட்டது...

      நீங்கள் இப்போது பாடலை பாடிப் பார்த்தால், மற்ற இரண்டு திரைப்படங்களையும் சொல்லி விடுவீர்கள் அம்மா... ஏன்னென்றால் தூரத்தில் நின்று பாடுவதை (வாயசைப்பதை) சரியாக சொல்லி விட்டீர்களே...

      நீக்கு
    3. என்னைவிட ரொம்பப் பரவாயில்லை!  நான் இது கூட சொல்லவில்லை!

      நீக்கு
    4. அன்பு தனபாலன்,
      இதயம், துணைவன்.
      சரிதான்.
      மருதமலை முருகன் படம்.
      வெகு சுவாரஸ்யம். நல்லபடியாக சிந்திக்க வைத்தீர்கள்.
      இங்கே அடிக்கடி விளையாடும் விளையாட்டு. மீண்டும் புதுப்பிக்கப்
      பார்க்கிறேன். மிக நன்றி மா.

      நீக்கு
  9. //இதுவரை எந்த ஜோதிடரும் இப்படியொரு மரணம் வருவதாக சொல்லவே இல்லையே ஏன் ?//
    ஆற்காடுப் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதைக் கட்டம் கட்டி முகநூல், வாட்சப் போன்றவற்றில் அனுப்பினார்கள். ஆனால் இந்த அளவுக்கு உலகில் உயிரிழப்பும், பாதிப்பும் இருக்கும் என்றெல்லாம் போடவில்லை.

    பதிலளிநீக்கு
  10. எனக்கு இந்த மாதிரி வீடியோவைப் பார்த்தெல்லாம் படங்களைக் கண்டு பிடிக்கும் அறிவுத்திறன் கம்மி. என்றாலும் முயன்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. டிடி கொடுத்த க்ளூ புரியவில்லை.
    நதியாவா"

    மாணவனாக நடித்தவர் ஜெய்ஷங்கர்

    மூன்றாவது படம் முருகன் துணை.

    பதிலளிநீக்கு
  12. எந்த வீடியோவிலுமே ஒலி வரவே இல்லை. இங்கே வால்யூம் 100% வைத்திருக்கேன். அதோடு வீடியோவிலும் வால்யூம் சப்தம் முழுசாகக் கொடுத்தும் சப்தமே இல்லை. கடைசிப்படம் மட்டும் எம்ஜிஆரின் இந்தப் பாடல் காட்சி பார்த்திருப்பதால் "நான் ஆணையிட்டால்!" அது நடந்துவிட்டால்!" என்பது தெரிகிறது. அந்தக் காட்சி இடம் பெறும் படம் "எங்க வீட்டுப் பிள்ளை!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்சி இடம் பெறும் படம் எது என்பது அல்ல கேள்வி. அவர் சொல்லும் சினிமாப் பெயர் என்ன என்பதே கேள்வி. நீங்கள் சொல்லியிருக்கும் பதிலில் அது explicit ஆக சொல்லப்படாததால், மார்க் கிடையாது!

      நீக்கு
  13. ரேவதிக்குச் சரியா வந்திருக்கிறதாலே எனக்கு மட்டும் தான் வீடியோக்களில் சப்தமே இல்லாமல் வருது போல! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த வீடியோவிலும் சத்தம் வராது. அவை யாவுமே மௌனப் படங்கள். dumb charades என்பதின் அர்த்தமே - ஒலி இல்லாத சலனங்களைக் கண்டு, அதை செய்பவர், என்ன சொல்கிறார் என்று கண்டுபிடிப்பதுதான்.

      நீக்கு
    2. Oh! OK. I didnot notice or aware of "dumb charades" Now I understand.

      நீக்கு
  14. மின் நிலா படிக்க சுலபமாக இருக்கிறது.
    புது இணைப்புகளுக்கு செல்வது சுலபம்.

    ஒரே ஒரு விருப்பம், தயவு செய்து பானுமதி வெ .
    வைத்து கைரேகை சொல்லிக் கொடுக்க முடியுமா??

    எந்த விதமான பதிவுகளை எதிர்பார்க்கிறீர்கள் .
    முயற்சி செய்யலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலோசனைக்கு நன்றி. பா வெ மேடம் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

      நீக்கு
    2. //ஒரே ஒரு விருப்பம், தயவு செய்து பானுமதி வெ .
      வைத்து கைரேகை சொல்லிக் கொடுக்க முடியுமா??// கடவுளே! கை ரேகை சாத்திரம் நான் சொல்லி கொடுப்பதா? இங்கே ஒரு விஷயம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நானும், என் அக்காவும் ஒன்றாக கை ரேகை படிக்க ஆரம்பித்தோம். ஒரு முறை நான், என் அக்கா இரண்டு பேரும் ஒரே சமயத்தில் என் தோழி ஒருத்தியின் கையைப் பார்த்தோம். என் அக்கா அவளிடம்,"உங்கள் வீட்டில் யாரோ கோவில் கட்டியிருப்பார்களே?" என்றார். உடனே என் தோழி,"ஆமாம், என் அம்மா ஒரு சிறிய பிள்ளையார் கோவில் கட்டியிருப்பதோடு, அதை பராமரித்தும் வருகிறார்" என்றாள். நான், என் சகோதரி இருவரும் கை ரேகை படித்தாலும், என்னால் சொல்ல முடியாததை என் அக்கா சொன்னதும், படிப்பறிவைத் தாண்டி, வேறு ஏதோ ஒன்று அதை இண்டியூஷன் எனலாமா? அவசியம் என்று புரிந்ததால் கை ரேகை பற்றி படிப்பதை அன்றோடு நிறுத்தி விட்டேன்.

      நீக்கு
    3. நன்றி பானுமா. ஏதோ கிறுக்கு இந்தக் கைரேகை மேல்:)

      நீக்கு
  15. க்ளூ ஒன்று சிம்"ரன்" நடிச்சதா? மற்றவை கண்டு பிடிக்கக் கஷ்டமா இருக்கு. பானுமதியோ, கமலாவோ வந்தால் சொல்லிவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  17. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இந்த வாரம் வழக்கமான கேள்வி பதில்களுடன் சில வித்தியாசமான முறைகளுமாக புதன் கலக்குகிறதே... பொன்னான புதனுக்கு வாழ்த்துகள். இன்னமும் முழுதாக படிக்கவில்லை.இன்று காலை கண் விழித்ததே சற்று தாமதம். அனைத்தும் படித்தபின் வருகிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. சும்மா தான் ஸ்ரீராம் சாருக்கு அனுப்பி வைத்தேன்... அதை பதிவு செய்ததற்கு நன்றி... ஊரடங்கு ஆரம்பத்தில் குடும்ப புலன குழுமத்தில் செய்த விளையாட்டுகளில் இதுவும் ஒன்று...

    ஏஞ்சல் அவர்களின் (3வது கேள்வி) பதில்கள் அருமை... கேள்வி நான்கிற்கான பதில்கள், "இனி அவர் கேள்விகள் கேட்பாரா...?" என சந்தேகம் வருகிறது...

    பதிலளிநீக்கு
  20. கௌதமன் ஐயா, // இந்தப் படங்கள் எந்தப் பாடலை பாடுகிறது...? // என்பதற்கு க்ளு கொடுக்கலாமா...?

    மற்றவைகளுக்கு 90% விடைகள் வந்து விட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில்களுக்கு நன்றி.
      ரசனையான கே & ப.அனைத்தும் அருமை.

      கடைசி காணொளி கண்டு பிடிப்பது கஷ்டம்தான்.

      நீக்கு
    2. அந்த காணொளிக்கு விடையான, "துள்ளாத மனமும் துள்ளும்" என்று சிம்ரன் நடித்த ஒரு திரைப்படத்தை கண்டுபிடித்து விட்டார்கள் ஜி... அதே பாடலின் பாடல் வரிகள் தெரிந்தால், மற்ற இரு திரைப்படங்களின் பெயர்கள் தெரியும்... இதற்கு எல்லாம் youtube சென்று தேடி பாடலை கேட்கக் கூடாது ஆமா, சொல்லிட்டேன்...

      நீக்கு
  21. 3) இந்தப் படங்கள் எந்தப் பாடலை பாடுகிறது...?

    க்ளு :- படத்தில் முதல் படம் என்ன சொல்கிறது...? பாடலின் முதல் சொல்... இப்படியே யோசிப்பதை விட எளிதாக :-

    ஸ்ரீராம் சாருக்கு அனுப்பும் போது, "நீங்கள் உடனே சொல்லி விடுவீர்கள்" என்று சொல்லி இருக்கிறேன் என்றால்... அவரின் பேவரைட் தோழியை வர்ணித்து, "ஜோ"வின் கணவர் பாடும் பாடல்...! இதை கண்டுபிடித்து விட்டால், பாடலை கண்டுபிடித்து விடலாம்... இல்லையெனில் அடுத்த க்ளு தொடரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுஷ்காவை வர்ணித்து சூர்யா பாடுவது எந்தப் படத்தில்? புரியலை.

      நீக்கு
    2. சிங்கம் (1) என்று (ஸ்ரீராம் அவர்கள் இவ்வளவு நேரமாக சொல்வதாக) நினைக்கிறேன்...!

      நீக்கு
  22. மூக்கு மேல் கோபம்...
    பிடித்திருக்கிறது...

    பதிலளிநீக்கு
  23. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  24. கேள்விகளும் பதில்களும் அருமை.

    //ஆதி மனிதர்கள் ஆற்றைக்கடக்கும்போது நீர்மட்டம் மூக்குக்கு மேல் போனால் ஆபத்து எனக் கருதியதால் மூக்குக்கு மேல் கோபம் ஒரு அளவீடு ஆனது.//

    நல்ல பதில் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

    //மிளாகாய்ப் பொடியில் புரட்டிய இட்லி, புளியோதரை, தயிர் சாதம்.//

    நெல்லைத் தமிழனுக்கு பிடித்த பதில்

    பதிலளிநீக்கு
  25. விஜயகுமாரி பாடும் பட பாடலில் வரும் படம் "துள்ளாத மனமும் துள்ளும்"

    கீழே வரும் பாடலில் சொல்லப்படும் திரைப்படத்தின் பெயர் என்ன?

    சுலபமாக எல்லோரும் சொல்லி விட்டார்கள் "நான் ஆணையிட்டால் "

    அதுவும் அவர் நடித்த படம் தான்.

    பதிலளிநீக்கு

  26. தமிழுக்கும் அமுதென்று பேர், தெள்ளு தமிழ் தெம்மாங்கு பாடுகிறது/

    பதிலளிநீக்கு
  27. கேள்விகள் யார் பதில் யார் சரியா புரியலையே. இந்த இடுகைகளுக்கு நான் புதுசோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு புதன் பதிவிலும், வாசகர்கள் கேள்வி கேட்பார்கள். ஆசிரியர்கள் அவைகளுக்கு அடுத்த் புதன் பதிவில் பதில் அளிப்பார்கள். சிலர் வாட்ஸ் அப் மூலமாவும் கேள்விகள் அனுப்புவார்கள். மின்னஞ்சல் மூலமாக கேள்வி கேட்பவர்களும் உண்டு. இரண்டு வருடங்களாக புதன் கிழமைகளில் கேள்வி பதில்கள் இடம்பெற்று வருகின்றன

      நீக்கு
    2. ஆமாம், தேனம்மை, நீங்க புத்தம்புதுசு! :)))))

      நீக்கு
  28. நல்ல பொழுது போக்கு! தொடரட்டும் உங்கள் விளையாட்டு! :)

    பதிலளிநீக்கு
  29. //# ஜாதகம் பார்த்து வரும்பொருள் உரைப்பவர் ஜோசியர். கிரகத்துக்கே கிரகணம் பிடித்தால், அதன் ஜாதகமும் கிடைக்காத போது அவர் என்ன செய்ய முடியும் ?//
    அனைவருக்கும் காலை வணக்கம். அருமையான பதில் அட்மின் அவர்களே. இன்று பூலோகத்திற்கும், சரித்திரத்திற்கும் ஏன் கணிதத்திற்குமே கிரகணம் பிடித்திருக்கின்றது. என்னத்தைப் பற்றி, யாரைப் பற்றி யார் என்ன சொல்வது? எல்லாம் சிவ மயம் என்றிருப்போம்.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. சகோதரி ஏஞ்சலின் அனைத்து அர்த்தமுள்ள கேள்விகளுக்கும் பதில்கள் நன்றாக இருக்கின்றன.

    மூக்கு மேல் கோபம் பதில்கள் சுவாரஸ்யமானவை. அதன் அளவீடு பற்றி குறிப்பிட்டது பொருத்தமாக இருக்கிறது இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

    "மூக்குக்கு கீழ் கோபம் வந்தால் கடித்து விடுவார்களோ" என்ற பதிலுக்கு சிரித்து விட்டேன். கோபம் எனப்படுவது ஒரு வகையான வெறிதானே..!உண்மையிலேயே கடிக்காவிடினும், ஒருவரின் கோபமான வார்த்தைகள் எதிராளியின் மனதை கடித்து துன்புறுத்ததானே செய்யும்.

    ஞானியர்களின் கேள்வி பதில்களும் சுவாரஸ்யமாக இருந்தது.

    "எங்களை வச்சு காமெடியா" என கேட்கும் வாயில்லா அப்பாவி ஜீவன்கள் பாவந்தான்..! ஆனாலும், அவைகள் எதிர்த்து பேச முடியாவிட்டாலும் அதன் இயல்பு குணத்தை காட்டி விடும் பக்குவமுடையது. அதை தாங்கும் சக்தி நமக்கில்லை என்றுதான் நினைக்கிறேன். ஹா.ஹா.ஹா.

    5வது கேள்விக்கான பதில்கள் அருமையாக (உண்மையாகவும்) உள்ளது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  31. பதில்கள்
    1. ஆகா...! சிறப்பு...!

      இன்னும் ஒரே ஒரு திரைப்படம் அந்தப் பாடலில் ஒளிந்திருக்கிறது...!

      நீக்கு
  32. க்ளூ 2 நடிகர் முரளி? அவர் தான் கடைசி வரை கல்லூரி மாணவனாகவே நடித்து வந்தார். படம் "புது வசந்தம்!"?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், முரளி என்பதும் சரி...ஆனால் திரைப்படம்...? இதோ பாடல்வரிகள் :-

      இப்போது 4) விஜயகுமாரி அவர்களின் காணொளியை play செய்து, கீழுள்ள வரிகளை பாடலாம்...!

      மங்கை ???? நல்ல துணைவன்
      வரவு கண்டே மகிழ்ந்திடும்,
      உறவு கொண்டால் இணைந்திடும் - அதில்
      உண்மை இன்பம் விளைந்திடும்

      துள்ளாத மனமும் துள்ளும்
      சொல்லாத கதைகள் சொல்லும்

      இப்போது சொல்லி விடுவீர்கள்...

      நீக்கு
    2. ஆனாலும் இவ்வளவு சுலபமாகக் கொடுத்திருக்க வேண்டாமோ? அதனால் தான் கண்டுபிடிக்க முடிந்தது, என் பதில் சரி எனில்!

      நீக்கு
    3. அந்தக் காணொளியை வெட்டி எடுக்கும் போது, முதலில் " துள்ளாத மனமும் துள்ளும், சொல்லாத கதைகள் சொல்லும்" என்று மட்டும் தான் அனுப்பலாம் என்று இருந்தேன்... அதற்கு முன் உள்ள வரிகள் ஞாபகம் வர, "அட அதில் மேலும் இரண்டு திரைப்படங்கள் பெயர்கள் இருக்கிறதே" என்று நினைத்து அதையும் வெட்டி, இரண்டையும் இணைத்து அனுப்பி விட்டேன்... அது தான் கண்டுபிடிப்பது சற்றே சிரமம்...!

      நீக்கு
  33. முகவரினு ஒரு படம் வந்திருக்கோ?

    பதிலளிநீக்கு
  34. மங்கை இதயம்? இதயம்னு படம் வந்திருக்கா? தெரியாது. அதுவாகத் தான் இருக்கணும். பாடிப் பார்த்ததில் மங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டே மகிழ்ந்திடும்னு வரும்னு தோணுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர்...!

      // இந்த படத்தின் பெயரை தனக்கு முன் போடுமளவுக்கு // என்று இதற்கு தான் சொன்னேன்...

      முரளி என்றால் சிலருக்கு தெரியாது... இதயம் முரளி என்றால் உடனே அறிவார்கள்...!

      நீக்கு
    2. சிரமம் இல்லை. நான் "இதயம்" முரளி என்பது தெரியாமல் "புது வசந்தம்" மட்டும் கணக்கு எடுத்துக் கொண்டேன். அதான் உடனே புரியவில்லை. இதயம்னு படம் வந்திருக்குனு இப்போத் தான் தெரியும். பாடலில் மங்கை இதயம்னு வருதே! அதனால் அதுவாகத் தான் இருக்கணும்னு ஓர் எண்ணம்.

      நீக்கு
    3. ஓ... அந்தப் படத்தின் பாடல்களும் எங்கள் காலத்தில் மிகவும் பிரபலம்... எனது நண்பர்கள் அனைவரும் (நானில்லை நானில்லை...) சோகமே உருவெடுத்து பாடிக் கொண்டிருப்பார்கள்...

      நீக்கு
  35. படங்கள் சொல்லும் பாடல் 1. ஒரு விரல் புரட்சியே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா...?! ஒவ்வொரு படத்திற்கும் அல்ல... எல்லாம் சேர்த்து ஒரு பாடலின் ஆரம்ப வரிகள்...

      "ஒரு" எனும் பாடலின் முதல் சொல் சரி...

      அப்பறம் மற்றவைகளை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று சொல்ல வேண்டும்...!

      நீக்கு
  36. அனுஷ்காவை வர்ணித்து சூர்யா பாடும் பாடல் என்றால் சிங்கம் படத்திலா இதற்கெல்லாம் பாடல் தெரியணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கமா? இப்போத் தான் சன் தொலைக்காட்சியிலோ எதிலோ போட்டாங்க போல! இது தெரிஞ்சிருந்தால் பாடலைக் கேட்டு வைச்சிருக்கலாமே! ஆனால் படம் ராத்திரின்னா சூரியன் மேற்கே உதிச்சாலும் உட்கார்ந்து பார்த்திருக்கப் போவதில்லை.

      நீக்கு
    2. ராத்திரி என்றால், எந்த ஊரிலும் சூரியன் மேற்கே உதிக்காது!

      நீக்கு
    3. 👩‍🦯👨‍🦼👨‍🦼👨‍🦼👨‍🦼👨‍🦼👨‍🦼👨‍🦼👨‍🦼👨‍🦼(❁´◡`❁)hahhaahhaahahaahah. Thank you for a scintilating
      Wednesday. Thank you DD. பழைய பாடல்கள் எல்லாம் அத்துப்படி மா.
      அதுவும் நீலமலைத்திருடன்
      ரசித்துப் பார்த்த வீர தீர சாகசப்படம்.:)
      ஜிக்கியின் குரலில் உள்ளம் கொள்ளை போகுதே
      அப்போது பிரபலம். நன்றி ராஜா.

      நீக்கு
  37. வணக்கம் சகோதரரே

    சகோதரர் நெல்லைத் தமிழரின் கேள்விகளும் அதற்கான உங்கள் பதில்களும் அருமை.

    சகோதரர் கில்லர்ஜியின் கேள்விகளையும் அதற்குரிய பதில்களையும் ரசித்தேன்.

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் போட்டி பாடல்கள் நன்றாக உள்ளது. அவரின் பாடல் அனுபவத்திற்கு கேட்கவா வேண்டும்...? அனைத்திற்கும் அனைவருமே விடை கண்டு பிடித்து விட்டனர். விடைகளை கண்டு படுத்த அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். (கடைசியில் இதற்கு வருவது ஒரு சௌகரியம். மூளையை குழப்பிக் கொள்ளாமல் விடை தெரிந்து கொண்டு விடலாம். அது இருந்தால்தானே..! என மனசாட்சி வேறு சமயத்தில் இடிக்கிறது.. ஹா.ஹா.ஹா.) ஆனால், நானும் கண்டு பிடிப்பேன் என என் மேல் நம்பிக்கை வைத்த சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். அனைவருக்கும், மின்நிலாவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!