வெள்ளி, 3 ஜூலை, 2020

வெள்ளி வீடியோ : பாலில் விழுந்த பழங்களை போலே பருவம் உருவம் நிறைந்தவள் நீயே

சென்ற வாரம் பிறந்த நாள் கொண்டாடிய எங்கள் பிளாக் தளத்துக்கு ஆடியோவிலோ, விடீயோவிலோ வாழ்த்துச் சொல்லலாமே என்று பானு அக்கா நண்பர்களை அழைத்திருந்தார்.  அதன்பேரில் நம் தளத்துக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கும் நண்பர்களின் காணொளி முதலில்...

இங்கும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.  யோசனை சொன்ன பானு அக்காவுக்கும் நன்றி.



நேயர் விருப்பம் :

சில சர்ச்சைகளில் சிக்கிய படம் 1980 இல் வெளியான ஒரு தலை ராகம்.  ராஜேந்தர் இயக்கி இருந்தாலும், தயாரிப்புக்கு உதவியதால், இப்ராஹிம் பெயர்தான் போடப்பட்டது.  தயாரிப்பாளரின் நிபந்தனை அது!  இசையிலும் அப்படியே குழப்பம் நிலவினாலும் AA ராஜ் அப்புறம் காணாமல் போனார்.

பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.  இதில் 'அந்த அறப்'பாடலைப் பாடியபின் தான் டி எம் எஸ் தனது மார்க்கெட்டை இழந்தார் என்று சொல்பவர் உண்டு.  இந்த நெகட்டிவ் வார்த்தைப் பிரயோகங்களை பற்றி முன்னரே நிறைய எழுதி, வாசித்திருக்கிறோம்.  டி ஆர் ஆர், TMS க்கு கிட்டத்தட்ட இது போன்ற பாடல்களையே பின்னரும் பாடக்கொடுத்தார்!


நெல்லைத்தமிழனின் விருப்பத்தில் இன்று வாசமில்லா மலரிது பாடல்.  எஸ் பி பி குரலில் ராஜேந்தர் எழுதி இசை அமைத்த பாடல்.  கிடார் இல்லாமலேயே சங்கர் பாடுகிறார் வாயசைக்கிறார் பாருங்கள்!



===================================================================================

இனி என் விருப்பம்!

வெளிவந்த ஆண்டு 1961.  முதன்முதலில் கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது அதை எடுத்து படத்தில் இணைத்தது, முதன்முதலில் ஜம்மு காஷ்மீரில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படம்.  சித்ராலயாவின் முதல் படம்.   இப்படிப் பல சிறப்புகள் தேன் நிலவு படத்துக்கு.


கண்ணதாசன் பாடல்களுக்கு ஏ எம் ராஜா இசை.   அத்தனை பாடல்களும் தேன் போன்ற பாடல்கள்.  படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.



இந்தப் படத்தின் பாடல் காட்சி ஒன்றில் (நிலவும் மலரும் ஆடுது) வைஜயந்திமாலா கிட்டத்தட்ட ஏரியில் மூழ்கி விட்டாராம்.  கேமிராமேன் காப்பாற்றி இருக்கிறார்.

சின்னச் சின்ன கண்ணிலே, காலையும் நீயே மாலையும் நீயே, நிலவும் மலரும் ஆடுது, பாட்டுப் பாட வா, மலரே மலரே தெரியாதா போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த படம்.



கதாநாயகியை நாயகனுக்குப் பிடித்து விட்டது.  ரசிகர்களுக்குத் தெரியும் இவர்கள் மோதலில் ஆரம்பித்து காதலிக்கப் போகிறார்கள் என்பது...  காட்சியை எப்படி வைபபது?  ஸ்ரீதருக்கா தெரியாது?  இளமை துள்ளத்துள்ள காட்சி வைக்க ரொம்ப மெனக்கெட்டிருக்க மாட்டார்.  காதல் மன்னன் இருக்க கவலை எதற்கு?  கீரவாணி ராகத்தில் ஏ எம் ராஜா இசை அமைத்து, பாடி அசத்தி விட்டார்.

பாட்டு பாடவா பார்த்து பேசவா 
பாடம் சொல்லவா பறந்து செல்லவா 
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா 
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா


மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே 
மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே 
மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே 
மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே 
பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா 
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா 
பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா 
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா 
மாலை அல்லவா நல்ல நேரம் அல்லவா 
இன்னும் வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா


அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே 
நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே 
அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே 
நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே 
கண்ணிறைந்த காதலனை காணவில்லையா 
இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா 
கண்ணிறைந்த காதலனை காணவில்லையா 
இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா 
காதல் தோன்றுமா இன்னும் காலம் போகுமா 
இல்லை காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா



ஹம்சானந்தி ராகத்தில் அமைந்த ஒரு பாடல்.  இனிமையான காதல் பாடல்.   ஏ எம் ராஜாவுடன் இணைவது இந்த முறை எஸ் ஜானகி. 

காலையும் நீயே மாலையும் நீயே 
காற்றும் நீயே கடலும் நீயே

ஆலய மணி வாய் ஓசையையும் நீயே 
அருள் வடிவாகும் தெய்வமும் நீயே

பாலில் விழுந்த பழங்களை போலே 
பருவம் உருவம் நிறைந்தவள் நீயே 
மனதில் மேடை அமைத்தவள் நீயே
மங்கல நாடகம் ஆட வந்தாயே



இந்தப் படத்தின் இன்னும் இரு பாடல்கள் அடுத்த வாரம் வெள்ளியில்....!  இதுவரை பதிவுகள்தான் தொடரும் போட்டு வந்தன.  இப்போது முதல் முறையாக வெள்ளி வீடியோவும் தொடர்கிறது!!

131 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. WOW!!!! WHAT A co incidence:)இனிய காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம், அன்பு துரை, அன்பு கௌதமன் ஜி.
    வீடியோப் பதிவு கணீரென்று இருக்கிறது. பாவம் இந்த வல்லிம்மா
    இரண்டு குரல்களில் பேசி இருக்க வேண்டாம்.ஹாஹ்ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   உங்கள் அன்பு உங்கள் குரலில் வழக்கம் போல...   வாங்க வல்லிம்மா...   வணக்கம்.

      நீக்கு
    2. வல்லிம்மா... நான், பேசியது வேறு யாராகவாவது இருந்திருந்தால், என்ன பின்னணில யாரோ ப்ராம்ப்ட் பண்ணிப் பேசற மாதிரி இருக்கேன்னு கேட்டிருப்பேன்.

      நல்லா பேசியிருக்கீங்க. மத்தவங்களும்தான். காணொளியோட நம் எ.பி. வாசகர்களைப் பார்க்கும்போது/கேட்கும்போது, நாளை அவர்களைச் சந்திக்க நேர்ந்தால், புதிதாக ஒருவரைப் பார்த்துப் பேசுகிறோம் என்று தெரியாது.

      நீக்கு
    3. அரசு சார் வாழ்த்தியது சிறப்பாகத் தோன்றியது. அவங்க இருவரும் வாழ்க வளமுடன்.

      நீக்கு
    4. பல குரல் பாட்டி. முரளி மா.

      நீக்கு
  3. இனிய காலௌ வணக்கம். வாழ்த்துகள் காணொளியாக.... நன்று. எனது வாழ்த்துகளும்.....

    பதிலளிநீக்கு
  4. பானுமா நல்ல தீர்க்கம்.
    ரமாஸ்ரீ செந்தமிழில் வெளுத்துக் கட்டி இருக்கிறார்.
    கீதா ரங்கன் குரல்தான் எத்தனை இனிமை.
    திரு அரசு சாரும், கோமதிமா இனிமையாக வாழ்த்துகள் சொல்ல
    மங்கலமாக ஆரம்பித்திருக்கிறது
    வாழ்த்துகள்.
    இன்னும் பலர் பங்கேற்கணும்.
    பானுமாவின் முன் முயற்சி பாராட்டத்தக்கது.
    ஸ்பெஷல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க குட்டிக்குஞ்சுலுவின் காது குத்துக்கு வந்தப்போப் பாடினாங்க தி/கீதா. ஆனால் யாரும் கேட்கவில்லை! :( ஆனாலும் நான் கொஞ்சம் கொஞ்சம் கேட்டுக் கொண்டேன்.

      நீக்கு
    2. எங்க வீட்டுக்கு வந்தப்போப் பாடமாட்டேன்னுட்டாங்க! :(

      நீக்கு
    3. எங்க வீட்டில் பாடினாங்களே....!

      நீக்கு
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  5. தேன் நிலவு படத்தைப் பார்த்து ரசித்து நாச்சியாரில் ஒரு பாடலைப் பதிந்துவிட்டு இங்கு வந்தால்
    இங்கும் இன்னும் விவரமான அருமையான தேன் நிலவுப்பாடல்கள்.
    நல்ல SYNC:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே மாதிரி நினைக்கிறார்கள் ரசிகர்கள்!  நீங்களும் நானும் ஒரே ரசனை உடையவர்கள் போல அம்மா.

      நீக்கு
  6. தேன் நிலவு பார்த்துவிட்டு,
    காஷ்மீர் பயணம் சென்றவர்களை எனக்கு நினைவில்
    வந்தது:)
    எல் டி சி கிடைக்கும். அதில் பயணித்தவர்கள் அனேகம்.
    அங்கு போய், அந்த ஊர் உடைகள் போட்டுக் கொண்டு
    படம் எடுத்துக் கொள்வார்கள்.

    சின்னைச் சின்ன கண்ணிலே காட்சிகள் மிக அருமையாக இருக்கும்.
    வாய்ஜயந்தி மாதிரி அழகும், நடனமும்
    வாய்த்தது அதிர்ஷ்டம் தான்.
    இதற்கப்புறம் வடக்கே சென்று விட்டார் என்று நினைவு.
    பாட்டுப் பாடவா பாடல் அந்தக் கால இளைஞர்களுக்கு லட்டு போலக் கிடைத்தது.
    அடுத்தவாரத்துக்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...   ரொம்ப இளமை கொஞ்சும் படம் என்று நினைக்கிறேன்.   சோகமுடிவா?  நல்ல முடிவா தெரியவில்லை.

      நீக்கு
    2. ஆனால் நடுவில் கண்ணைக் கசக்க வைத்து விடுவார்களோ?

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    எங்கள் ப்ளாக்கின் பிறந்த நாள் வாழ்த்துகளை காணொளியில் அழகாக தொகுத்திருக்கிறீர்கள். கெளதமன் சகோதர ருக்கு பாராட்டுக்கள்.

    அதில் பேசி அன்புடனே பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த சகோதரிகள் வல்லி சிம்ஹன், பானுமதி வெங்கடேஷ்வரன். கோமதி அரசு, ரமா ஸ்ரீநினிவாசன், கீதா ரெங்கன் அனைவருக்கும் என் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். எ. பிக்கு எந்நாளும் என் வாழ்த்துகளும், நன்றியும்.

    இன்றைய வெள்ளி பாடல்கள் பற்றிய தகவல்கள் அருமை. இந்த வாரம் கேட்டது, பிடித்தது ஆகிய இரண்டுமே நல்ல இனிமையான பாடல்கள். அதிலும் தேன் நிலவு திரைப்பட பாடல்கள் என்றுமே மறக்க இயலாதது. இன்று பகிர்ந்த பாடல்களை பிறகு (மதியம்) கேட்கிறேன். வரும் வெள்ளியும் தேனும், தேயாத நிலவுமாக அந்தப்படத்தின் பாடல்கள் தொடர்வதற்கு மகிழ்ச்சி. இந்தப் புதுமையான அறிவிப்பும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   பாடல்களை ரசித்ததற்கு நன்றி.  வாழ்த்து சொன்னவர்கள் வீடியோ ரசித்ததற்கு நன்றி.  பெருமை பானு அக்காவுக்கு.

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் ஊரடங்கு விரைவில் முடிந்து அனைத்தும் நலமாகப் பிரார்த்தனைகள் தொடர்கின்றன. நேற்றுத் தான் ஏதோ ஓர் மேல்நாட்டில் கொரோனாவுக்குப் பிரியாவிடை கொடுத்த செய்தியைக் காணொளியாகப் பார்த்தேன். அது போல் இங்கேயும் விரைவில் நடைபெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   வணக்கம்.  எப்பவோ சீனாவில்தான் நீங்கள் சொல்வது போல காட்டினார்கள் என்று நினைவு.  அதையா சொல்கிறீர்கள்?  அப்புறம் விமானத்திலிருந்து மஞ்சள் தண்ணீர் எல்லாம் தெளித்தது போல வேறு காட்டியதாய் நினைவு.

      நீக்கு
    2. இல்லை. துபாயில் ஒண்ணும், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றும். ஐரோப்பிய நாட்டின் பெயர் மனதில் இருக்கு. வெளியே வரலை.

      நீக்கு
    3. நியூசிலாந்திலும் காட்டினார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள் விடைபெறுவதாய்! ஆனால் நான் சொல்வது இதெல்லாம் இல்லை.

      நீக்கு
    4. நியூசிலாந்து வீடியோ அடிக்கடி பார்த்திருக்கேன்.  மீண்டும் சமீபத்தில் நம் எபி க்ரூப்பில் கூட வந்தது இல்லையா?

      நீக்கு
  9. தலைப்பைப் பார்த்ததுமே "தேன் நிலவு" படப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பது புரிந்தது. தங்கவேலு காமெடி ஒண்ணு போதுமே! இதை முதலில் மதுரை சந்திரா/பழனி திரை அரங்கில் தான் காலைக்காட்சியாகப் பழைய படங்கள் போடும்போது பார்த்திருக்கேன். (நேரு பிள்ளையார் கோயிலுக்குக் கொஞ்சம் தள்ளி, மேலமாசி வீதியில்) அங்கேப் பல படங்கள் பழையவை பார்க்க நேர்ந்திருக்கின்றன. அதன் பின்னர் சென்னைத் தொலைக்காட்சியிலும் போட்டார்கள். ரசித்துப் பார்த்த படம். பாடல்கள் அனைத்தும் அருமை, அற்புதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...  தேன் நிலவு நீங்கள் ரசித்த படங்களில் ஒன்றா?  பாடல்கள் தேன்தான்.  

      நீக்கு
  10. முதல் காணொளியைக் கொஞ்சம் போல் பார்த்தேன், நேரம் எடுக்கும்போல் இருப்பதால் மத்தியானமாக மறுபடி பார்க்கிறேன். பானுமதி என்னையும் அனுப்பச் சொன்னார்கள். எனக்குச் சரியாக வராது என்பதால் நான் அனுப்பவில்லை மற்றபடி எங்கள் ப்ளாகுக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகளும், பாராட்டுகளும் எப்போதும் உண்டு.

    பதிலளிநீக்கு
  11. பதில்கள்
    1. அசத்தல் காணொளி. அதிலும் தி.கீதா அமர்க்களப்படுத்திட்டாங்க. ஒரு பாடலையே/கவிதையையே எழுதிப் பாடி இருக்கலாம். இரண்டே வரிகளில் அவர் எத்தனை நல்ல சுத்தமான சங்கீதம் தெரிந்த பாடகி என்பதைக் காட்டி விட்டார். ரேவதி பேசினதை உன்னிப்பாய்க் கேட்க வேண்டி இருந்தது. பானுமதி எப்போவும் போல் கணீர்! பளிச்! ரமாவும் நன்றாகத் தமிழில் விளையாடி இருக்கார். அனைவருக்கும் வாழ்த்துகள். இதைத் தொகுத்த ஸ்ரீகௌதமன் சாருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள். எங்கள் ப்ளாக் மேன்மேலும் மெருகேறிப் பிரகாசிக்க மீண்டும் வாழ்த்துகள்.

      நீக்கு
    2. ஆமாம்...   வல்லிம்மா எப்பவுமே கொஞ்சம் ஸன்னமாதான் பேசுவாங்க.  கோமதி அக்கா வாழ்த்து சந்தோஷம் என்றால் அரசு ஸார் இனிய ஆஸாஹர்யம்.  பானு அக்கா காணொளியில் எல்லாம் கில்லாடி.  ரமா ரசனை!  கீதா ரெங்கன் பாட்டு சொல்லவே வேண்டாம்...  பாட்டின் பின்னணியில் வாழ்த்து ஓவர்லேப் ஆற மாதிரி அசத்திட்டாங்க...

      நீக்கு
    3. திருத்தம்  :

      ஆமாம்...   வல்லிம்மா எப்பவுமே கொஞ்சம் ஸன்னமாதான் பேசுவாங்க.  கோமதி அக்கா வாழ்த்து சந்தோஷம் என்றால் அரசு ஸார் இனிய ஆச்சர்யம்.  பானு அக்கா காணொளியில் எல்லாம் கில்லாடி.  ரமா ரசனை!  கீதா ரெங்கன் பாட்டு சொல்லவே வேண்டாம்...  பாட்டின் பின்னணியில் வாழ்த்து ஓவர்லேப் ஆற மாதிரி அசத்திட்டாங்க...

      நீக்கு
  12. வாழ்த்தொலிகளின் தொகுப்பு இனிமை...

    பதிலளிநீக்கு
  13. காலையும் நீயே.. மாலையும் நீயே!..

    இந்தப் பாடல் பின்னாளில் இளையராஜாவின் கைவண்ணத்தில் மருவி வந்தது என்றார்கள்..

    அந்தப் பாடல் சட்டென நினைவுக்கு வரவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவுக்கு வந்ததா இல்லையா?  எனக்கு பல்லிடுக்கில் பாக்கு!

      நீக்கு
  14. வெங்கட் ஜி தளத்திற்கு போனா கணினி ஞாபகம்... இங்கு வந்தா கன்னி ஞாபகம்... (தேன்நிலவு பாடல்களை சொல்லவில்லை !)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "கன்னி வேண்டுமா?  கணினி வேண்டுமா"  என்று பி பி எஸ் குரலில் பாடிடலாமா DD ?

      நீக்கு
  15. ஒருதலைராகம் பாடலை யாருக்குத்தான் பிடிக்காது தேன்நிலவு பாடல்களும் அருமை

    வாழ்த்துக் காணொளி ஸூப்பர் எமது வாழ்த்துகளும் கூடி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே!  ஒரு தலை ராகம் பாடல் எல்லாமே சூப்பர்ஹிட்.  நன்றி ஜி.

      நீக்கு
  16. வணக்கம் எல்லோருக்கும்!

    அட! இங்கு போட்டாச்சா வாழ்த்து வீடியோ!

    மிக்க நன்றி ஆசிரியர்களுக்கு. முன்னெடுத்தது பானுக்கா. அக்காவுக்கும் மிக்க நன்றி. அக்காதான் இந்த ஐடியா பற்றி என்னிடம் சொன்னார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா...   வெள்ளி வீடியோவில் போட்டுடலாம் என்றுதானே பானு அக்கா சொன்னார்கள்?

      நீக்கு
  17. வல்லிம்மா, பானுக்கா, கோமதிக்கா அண்ட் மாமா, ஆல் சூப்பர். ரமா ஆஹா!!! கலக்கிட்டீங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இரண்டு இனிய பாடல்கள்.
    ஒரு தலை ராகம் திருச்சியில் பேலஸ் தியேட்டரில் வெளியானது என்று ஞாபகம். முதல் ஒரு வாரம் காற்று வாங்கியது. பத்திரிகைகளில் நல்ல விமர்சனம் வந்த பிறகுதான் பிக் அப் ஆனது.
    இந்த படத்தில் முதலில் ரவீந்தரனைத்தான் கதாநாயகனாக போடுவதாக இருந்தார்களாம். ரவீந்தரனா? சங்கரா? என்று மூன்று முறை திருவுளச்சீட்டு போட்டு பார்தார்களாம். மூன்று முறையும் சங்கர் பெயரே வர, அவரை கதாநாயகனாக்கினார்களாம்.
    இந்தப் படத்தில் உஷா(சிம்புவின் அம்மா) அற்புதமாக நடித்திருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேடம் நீங்கள் சொன்னது அப்படியே உண்மை ஆனால் ஒரேயொரு மாற்றம் அது ரவீந்தர் அல்ல ஸ்ரீநாத், ரவீந்தர் இரண்டாவது நாயகனே....

      பின்னாலில் ஸ்ரீநாத் ரயில் பயணங்களில் நாயகனானார் டி.ராஜேந்தரால்.

      நீக்கு
    2. ஶ்ரீநாத்..? முகத்தை நினைவு கூற மூயற்சிக்கிறேன். தகவலுக்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    3. ஸ்ரீநாத்?  ரயில் பயணங்களில் படத்தில் ராஜீவ் இல்லையோ?

      நீக்கு
    4. வாங்க பானு அக்கா...   சங்கரும் பின்னால் ரொம்ப சோபிக்கவில்லை.  ரவீந்தர் இந்தப் படத்துக்கு கதாநாயகனாக எடுபட்டிருக்க மாட்டார்!

      நீக்கு
    5. ஸ்ரீநாத் உம் இல்லை ரவீந்தனும் இல்லை, விஜயன் எனச் சொல்லிச்சினமே ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) தேடினால் போச்சு:))

      நீக்கு
    6. //
      ஸ்ரீராம்.3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 3:42
      ஸ்ரீநாத்? ரயில் பயணங்களில் படத்தில் ராஜீவ் இல்லையோ?//
      ரயில் பயணங்களில் காதலன் ஸ்ரீநாத்.. நூலும் இல்லை வாலும் இல்லை பாடுவார்ர்.. கணவனாக வருபவர் கெட்ட ராஜீவ் கர்:) சிகரெட்டால சுடுவார் ஹையோ ஆண்டவா:))

      நீக்கு
    7. ஓ...   விரல் நுனியில் விவரம்?  ஆனால் பாருங்கள் கீதா டி எம் எஸ் க்கு நெகட்டிவ் பாட்டாவே கொடுத்திருக்கார் டி ஆர் ஆர்!

      நீக்கு
  19. தேன் நிலவு படத்தை தொலைகாட்சியில்தான் பார்த்தேன். காஷ்மீர், ஜெமினி, வைஜெயந்தி மாலா என்று எல்லாமே பார்க்க கண்ணுக்கு குளுமை. மாடர்ன் ட்ரெஸ்ஸில் வைஜயந்தி மாலா வெகு க்யூட்டாக இருப்பார்.
    இரண்டாம் கல்யாணம்,செய்து கொண்ட தங்கவேலு,மனைவியோடு,தேனிலவுக்கு புறப்பட, கல்லூரி மாணவியான வைஜயந்தி தானும் வருவேன் என்று பிடிவாதம் பிடிப்பார். "உனக்கு பரீட்சை இருக்கேமா?" என்று தங்கவேலு கூற,"பரீட்சையை அடுத்த வருடம் எழுதிக்கலாம்பா" என்பார் வைஜயந்தி.
    என் மகனின் திருமணத்தன்று ஒன்றாம் வகுப்பு படித்த என் அக்கா பேரனுக்கு ஏதோ மிட் டர்ம் டெஸ்ட் இருந்ததால் மதியம்தான் வர முடியும் என்று என் அக்காவின் மருமகள் கூறிய பொழுது, எனக்கு இந்த ஜோக்தான் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்துக் கொண்டேன்.  நான் படம் பார்க்காததால் எனக்கு கதை தெரியவில்லை!

      நீக்கு
  20. வாழ்த்துக்களை நன்றாக தொகுத்திருக்கிறார் கெளதமன் சார். அதற்கும் ஒரு வாழ்த்து. கோமதி அரசு தம்பதி சமேதர்களாய் வாழ்த்தியது சிறப்பு!
    கீதா ரங்கன் இனிய குரலில் பாட்டாகவே பாடி விட்டார்.

    பதிலளிநீக்கு
  21. வாசமில்லா மலரிது பாடல் எஸ்பிபி வாய்ஸ் செம அதுவும் அந்தச் சிரிப்பு!!
    நல்ல மெட்டு

    கீதா

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீராம் பாட்டுப்பாட வா அப்புறம் ஓஹோ எந்தன் பேபி இரண்டுமே ஒரே ராகம் தான்.

    அப்புறம் காலையும் நீயே மாலையும் நீயே ஹம்ஸானந்தின்னு சொன்னாலும் கொஞ்சம் தான் சில இடங்கள் மட்டும்தான் ஆனால் அது ஹிந்துஸ்தானி பேஸ்ட் என்பதால் பசந்த் ராகம். தேசுலாவும் பாட்டு கேட்டுருப்பீங்களே ஆரம்பம் இதே ராகம்....

    நீங்க அடுத்த வாரம் பகிர நினைச்சிருப்பீங்க நிலவும் மலரும் பாடல் அதுதான் மோகனம். தெரியாம மாத்தி வந்திருக்குன்னு நினைக்கிறேன் ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  23. தேன்நிலவு படத்துல எல்லா பாட்டுமே செமையா இருக்கும். மிகவும் பிடிக்கும். இந்தப்பாடல்கள் எல்லாம் இந்தப் படம் என்பதும் இப்பத்தான் தெரிந்து கொண்டேன். நிலவும் மலரும் பாட்டையும் ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜெகமே பாட்டையும் குழப்பிக் கொள்வதுண்டு. இரண்டுமே மோகனம். ஆஹா இன்ப வந்து மாயாபஜார்னு நினைக்கிறேன். கண்டசாலா குரல்...

    முதல்ல இங்க உள்ள பாட்டை மாயாபஜார்னு குழப்பிப்பேன் இரண்டுமே போட்டில் போவது வரும் இல்லையா...அதான்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்க உள்ள பாட்டை//

      இந்தப் படத்துல வரும் பாட்டைன்னு சொல்ல வந்தேன்...

      கீதா

      நீக்கு
  24. பாடல்கள் அருமை
    காணொலி மூலம் வாழ்த்து அருமை

    பதிலளிநீக்கு
  25. சொல்ல விட்டுப் போச்சு, வாழ்த்து வீடியோ ரொம்ப அழகா மூவியாகப் பொட்டிருக்கீங்க கௌ அண்ணா. சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  26. ஒருதலை ராகம் படம் பார்த்திருக்கிறேன். அப்போது அந்தக் காலகட்டத்தில் பிடித்திருந்தது. அதைவிட பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும் இங்கு பகிர்ந்திருக்கும் பாடல் உட்பட.

    தேனிலவு படம் பார்த்த நினைவு இருக்கிறது. இப்படத்திலும் பாடல்கள் எல்லாமே மிக மிக நன்றாக இருக்கும். பகிர்ந்திருக்கும் பாடலும் அருமையான பாடல்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தலை ராகம் படம் பார்க்கப்போய் ஆஃப்வ்விடம் வாங்கிக்கட்டிக் கொண்டது நினைவில் இருக்கிறது.  அவர்களது திருமண நாளுக்கு ஒரு படம் பார்க்கலாம் என்று சொன்னார்கள்.  அவர்கள் சங்கராபரணம் தெரிவு செய்ய, நான் ஊர் முழுக்க இந்தப் படம் நல்லாயிருக்காம் என்று சொன்னேன்.  பார்த்து விட்டு என்னைத் தேடினார்.  நான் கையில் சிக்கவில்லை!

      நன்றி துளஸிஜி.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா. ஸ்ரீராம்.... நல்லாருக்கு உங்க அனுபவம். என் அண்ணன், மூன்றாம் பிறை படத்தைப் பார்த்துவிட்டு, எங்க அப்பா அம்மாவுக்கு, படம் சூப்பரா இருக்கு, பார்க்க விட்டுடாதீங்கன்னு கடிதம் எழுதவும், எங்க அப்பா, அம்மாவைக் கூட்டிக்கொண்டு படத்தைப் பார்த்தாராம் (பாரு...அசிங்கமான படமா இருக்கு. இதையெல்லாம் ரெக்கமெண்ட் செஞ்சானே என்றாராம், சிலுக்கு போர்ஷன் வந்தபோது). எங்க அப்பா, திருவண்ணாமலையின் என்னை சங்கராபரணம் படத்திற்குக் கூட்டிச்சென்றார்.

      நீக்கு
    3. ஆஹா...    அதை ஞாபகப்படுத்திட்டீங்களே...   "ச்சீனு...     முள்ளு...  குத்துது!" 
      இங்கே காதைக் கொண்டு வாங்க நெல்லை...   எனக்கு "பொன்மேனி உருகுதே பாடலும் டான்ஸும் பிடிக்கும்!  இளையராஜா...   தொடர்ந்து ஒரு தாளம் வந்துகொண்டே இருக்கும்.  ஜானகி குரலும் நன்றாயிருக்கும்!

      நீக்கு
  27. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  28. வாழ்த்துக்கான ஆடியோ, விடியோ ஏற்பாடுகள் அட்டகாசம். ரசிக்கும்படியாக இருந்தது. நானும் ரசித்தேன்.

    சகோ கீதா ரெங்கனின் குரல் வளம் இவ்வளவு நேர்த்தியாக இருக்கும் என்று தெரியாதிருந்தது. இன்று தான் தெரிந்து கொண்டேன். அவர் தளத்தில் அவர் அப்பப்போ இப்படி பாடல் ஒலிப்பதிவு செய்து வெளியிட்டால் மனதுக்கு இதமாக இருக்கும். மஹாகவி பாரதியார் பாடல்கள், கோபால கிருஷ்ண பாரதி பாடல்கள் ('எப்போ வருவாரோ' இப்போவே நினைவில் நிற்கிறது) அவர் குரலில் மிக எடுப்பாக இருக்கும் என்பது என் அபிப்ராயம். கோரிக்கை வைத்திருக்கிறேன். அவர் செளகரியம் முக்கியம். முடிந்தால் செய்யலாம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்ல இருந்ததை ஜீவி அண்ணா அவர்கள் சொல்லி விட்டார்கள்...

      நன்றி...

      இந்தப் பாடல் அந்த ராகம்...
      அந்தப் பாடல் இந்த ராகம் - பகுத்துச் சொல்லியபோதே நினைத்துக்கொண்டேன்.
      அது உண்மையாயிற்று..

      நீக்கு
    2. கீதா ரெங்கன் ஜீவி ஸாரின் ஞர் விருப்பப்த்தைப் பூர்த்தி செய்வார் என்று நினைக்கிறேன்.  

      நீக்கு
    3. //ஞர் விருப்பப்த்தைப் //

      திருத்தம்  :  நேயர் விருப்பத்தை 

      நீக்கு
  29. 'காலையும் நீயும் மாலையும் நீயே' -- பாடலின் அழகு ஒருபக்கம் என்றால் பாடும் குரலின் இனிமை சொக்க வைக்கிறது. ஜெமினி வேறையா?.. இழைந்து போவதில் குறையே வைக்க மாட்டார். இன்று நல்ல நல்ல பழம் பாடல்களைத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...   நீங்கள் ஜெமினி ரசிகர் ஆச்சே...    அதை மறந்துட்டேன் பார்த்தீர்களா ஜீவி ஸார்?!!

      நீக்கு
  30. //மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே
    மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே .. //

    எழுதும் வரிகளை இலக்கியமாக்குவது எத்தனை கவிஞ்ர்களுக்கு சாத்தியமாகிறது?
    கவியரசருக்கே கைவந்த கலை அது.

    அந்த ரசவாதம் தெரியாத யாரேனும் ஆபாசம் என்று கூடச் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகு மிகுந்த ராஜகுமாரி
      மேகமாகப் போகிறாள்..
      ஜரிகை நெளியும் சேலை கொண்டு
      மலையை மூடப் பார்க்கிறாள்...

      - கவியரசர்!..

      மினுமினுக்கும் நதியை - பூமகளின் சேலை என்று வர்ணிக்கின்றார் கவியரசர்...

      நீக்கு
    2. ஆமாம் ரசனை!

      // அந்த ரசவாதம் தெரியாத யாரேனும் ஆபாசம் என்று கூடச் சொல்லலாம். //

      யார் சொல்வார்கள் என்று என் காதில் மட்டும் சொல்லுங்க!!

      நீக்கு
  31. திரு. A.M.ராஜா அவர்கள் இசைக் கல்லூரியில் பயின்றவர் என்று ஒரு செய்தி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னர் ஒரு ஏ எம் ராஜா பாடலில் அவர் பற்றி நிறைய பகிர்ந்திருந்தேனே துரை செல்வராஜூ ஸார்...

      நீக்கு
  32. பாட்டுப் பாடவா!..

    இந்தப் பாடலை சில வருடங்களுக்கு முன் கோலி சோடா என்ற படத்தில் போட்டு தாளித்து இருந்தார்கள்..

    பதிலளிநீக்கு
  33. வாசமில்லா மலரிது பாடல் ரொம்ப பிடிக்கும். பழைய பாடல்களில் விரும்பி கேட்கும் சில பாடல்களில் காலையும், நீயே மாலையும் நீயே பாடல் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  34. வல்லி அக்காவின் அன்பான வாழ்த்து அருமை , கீதா ரெங்கனின் வாழ்த்தும் பாட்டும் அருமை குரல் இனிமை. பானுமதி , ராமா இருவரும் மிக அருமையாக பேசினார்கள்.

    பதிலளிநீக்கு
  35. பாடல்கள் கேட்டேன் பிடித்த பாடல்கள். பாட்டு பாடவா பாடலை பேரன் பாடுகிறான் அவனுக்கும் பிடித்து இருக்கிறது.

    வெள்ளி வீடியோ தொடர்வது மகிழ்ச்சி. தேன்நிலவு படத்தில் பாடல்கள் எல்லாம் இனிமை.

    பதிலளிநீக்கு
  36. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் நிலவு ஒரு பெண்ணாகி வாழ்த்துகின்ற அழகோ... எங்கள் புளொக் நாணத்திலே நாணிக்கோணி நிற்கிறதோ... ஹா ஹா ஹா அருமை அழகான வாழ்த்துக்கள்... வாழ்த்துக்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    எனக்கொரு டவுட்டூஊஊஊஉ எங்கள் புளொக்குக்கு போன வருடமும் பிறந்தநாள் வந்தது, அதற்கு முந்தியும் வந்தன ஆனா அவையெல்லாம் பெரிதாக இருக்கவில்லை.. இம்முறை 12 ஆவது அகவை மட்டும் இப்படி எல்லோரும் வாழ்த்துவதைப் பார்க்க.. எங்கள் புளொக் பூப்பெய்தி விட்டதூஊஊஊஊஊஊ ஆஆஆஆஆஆஆஆ வயசுக்கு வந்துவிட்டதூஊஊஊஊஊ.. எல்லோரும் வாழ்த்துவதோடு நிற்காமல் மொய்யும் வைக்கோணும் சொல்லிட்டேன்ன்ன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா அழகு அழகு... தினமும் கூட ஒருவரை ஒருவர்கூட வாழ்த்தச் சொல்லித்தான் சொல்கிறார்கள் அப்போது இன்னும் பொலிவு பெறுமாம்... மீண்டும் எங்கள் புளொக்குக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...    உங்களிடமிருந்து ஒரு காணொளி எதிர்பார்க்கலாமா?!!!!!

      // எனக்கொரு டவுட்டூஊஊஊஉ //

      அது வேறொன்றுமில்லை..    அடுத்த வருடம் பதின்ம வயதுக்குள் நுழைகிறது இல்லையா?  அதுதான்!

      நீக்கு
    2. //ஸ்ரீராம்.3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 3:54
      வாங்க அதிரா... உங்களிடமிருந்து ஒரு காணொளி எதிர்பார்க்கலாமா?!!!!!//
      எதைப்பற்றி ஸ்ரீராம்? ஹா ஹா ஹா இதுக்கு கீதா.. என் செக் மூலம்:)) தூது அனுப்பியிருந்தா.. அந்நேரம் ரொம்ப ஷை ஆஆஆஆஆ இருந்தேனா அதனால நாணிக்கோணி விட்டுவிட்டேனாக்கும் ஹா ஹா ஹா:))

      நீக்கு
    3. இதோ.... உங்கள் செக் மூலம் அப்ளிகேஷன் அனுப்பறேன்!

      நீக்கு
    4. ஹா ஹா ஹா செக் மூலமோ ஹா ஹா ஹா இதைப் பார்த்தாலே அவவுக்கு வன் மந்த் க்கு குலைப்பன் காச்சல் வந்திடும் ஹையோ ஹையோ ஹா ஹா ஹா:)).. அனுப்புங்கோ பார்ப்போம்:))

      நீக்கு
    5. அப்படியே நீங்களே பார்வேர்ட் பண்ணிடுங்களேன்!!!

      நீக்கு
  37. இதிலே ஒரு ஆண்குரல் கூட இல்லையாக்கும்:)) இதில இருந்து என்ன தெரியுதூஊஊஊஊஊ? பெண்கள்தான் தாராள மனம் படைத்தவர்கள்:))... ஹா ஹா ஹா..

    ஆஆஆஆஆஆ கீதாவின் பாடல் குரல் அழகோ அழகு... ஒரு சினிமா வாழ்த்துப் பாடலை எடுத்து முழுமையாகப் பாடியிருக்கலாம் கீதா சூப்பராகப் பாடுறீங்கள்... ஆனா எனக்கு தமிழ்ல டி எல்லோ.. கீதாவின் தமிழில் தப்பிருக்கிறது ஹா ஹா ஹா.. வாழ்த்துகள் இல்லை வாழ்த்துக்கள் என வரோணுமாக்கும் கரீட்டுத்தானே நெல்லைத்தமிழன் ஹா ஹா ஹா ஹையோ என் வாய்தான் நேக்கு எடிரி.. மீ ரொம்ப நல்ல பொண்ணு.. சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்ஸ்:)) :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதிலே ஒரு ஆண்குரல் கூட இல்லையாக்கும்:)) //


      கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...    கோமதி அக்கா ஆத்துக்காரர் உங்க கண்ணில் படவில்லையா?  வீடியோ முழுசா பார்க்கோணும்!

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஹையோ அவர் புளொக்குக்கு வராதவர் என்பதால அவரைக் கணக்கில எடுக்கவில்லை நான்... வீடியோ முழுவதும் பார்த்தேனாக்கும்.. இங்கு வந்து நம்மோடு போட்டியிட்டுச் சண்டையிடும் ஆண்கள் பற்றிப்பேசினேனாக்கும்.. ஹா ஹா ஹா கோமதி அக்காவின் மாமா அவர் ஒரு அப்பாவி....

      நீக்கு
    3. //இங்கு வந்து நம்மோடு போட்டியிட்டுச் சண்டையிடும் ஆண்கள் //

      ஓஹோ...    புரிந்து விட்டது...  நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று புரிந்தே விட்டது!

      நீக்கு
    4. ஹையோ நானில்ல நானில்ல:)) நான் ஆரையும் சொல்லல்லே மீ ஒரு அப்பாவி ஹா ஹா ஹா:))

      நீக்கு
    5. அதிரடி, தமிழில் "டி"எல்லோ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வாழ்த்துகள் தான் சரியானது இலக்கணப்படி. வாழ்த்து"க்"கள் தப்பு. அங்கே "க்" வராது.

      நீக்கு
  38. இன்னைக்கு நான் ரொம்ப லேட்டாத்தான் வந்திருக்கேன்.

    வெள்ளி ஸ்ரீராம் கொடுத்திருக்கும் இரண்டு பாடல்களும் சூப்பர் என்று சொல்றதுல அர்த்தமில்லை. அவைகள் பாடல்களில் லெஜெண்ட். இந்த இரண்டு பாடல்களையும் கேட்கக் கொடுத்துவைக்காதவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் என்ன காணோமேன்னு பார்த்தேன்.  வாங்க நெல்லை...

      நீக்கு
  39. ஆஆஆஆஆஅ நேயர் விருப்பப் பாடல் எனக்கும் ரொம்ப ரொம்பப் பிடிச்ச பாடல்.. படமும் 3 தடவைகள் பார்த்துவிட்டேன்ன்ன்...

    இன்று ஸ்ரீராமின் பாட்டில் பாட்டுப் பாடவா பாடல்.. முன்பு போட்ட நினைவாக எனக்கு வருகிறதே? இருக்காது என்ன?.. அழகிய பாட்டு.. மற்றைய பாட்டு ஓகே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பாடலை ஒருவாட்டிதான் கேட்பீர்களா அதிரா?  (சமாளிக்கிறேனாம்)

      நீக்கு
  40. பிளஸ் டூவில் ஹாஸ்டல் டே பாட்டுப்போட்டியில் நான் இரண்டாவது பரிசு பெறுவதற்குக் காரணமாக இருந்த பாடல் இது (ஹா ஹா). இந்தப் பாடலைப் பாடி முதல் பரிசு வாங்கிய என் நண்பன், பாடுவான் என்பதே எனக்குத் தெரியாது. அப்போ எனக்குத் தோன்றியது, எனக்கு எந்தப் பாடலை செலெக்ட் பண்ணிப் பாடணும் என்றெல்லாம் சொல்லிக்கொடுக்கவும், தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் சரியானவர் அமையவில்லையே, என் அப்பா அந்த என் திறமையை வளர்க்க (அது மட்டும் இல்லை, டிராயிங்கும்தான்) நினைக்கலையே என்று தோன்றும் (அவர், நான் நல்லா படிக்கணும் என்றே-என்று மட்டுமே விரும்புவார் ஹா ஹா). நான் பாடியது, கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ என்ற பாடல். (புது டிரெண்ட் பாடல்தான் பாடணும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமையான நினைவுகள்.   அது சரி...   மேடையில் பாடுவீர்களா?  அப்போ ஒரு பாடல் பாடி அனுப்புங்களேன்...  போடலாம்.  அட்லீஸ்ட் எனக்கு மட்டும் வாட்ஸாப்பில்?

      நீக்கு
  41. கீதா ரங்கன்... எனக்கு சங்கீதம் தெரியாது (ராகம்லாம்). கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது - இந்த பாடலின் ராகத்தில்தானே நீங்க பாடியிருக்கீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியாது தெரியாதுன்னே எல்லாவற்றையும் சொல்லி விடுவார் நெல்லை!

      நீக்கு
    2. கலியுக வரதன் பாடல் பிருந்தாவன சாரங்கா. (பெண்ணொன்று கண்டேன் பாடலும் அதே ராகம்)

      நீக்கு
  42. அனைவருக்கும் மதிய வணக்கங்கள். என் கட்டை குரலை வைத்துக் கொண்டே தைரியமாக வாழ்த்துக்கள் காணொலி அனுப்பியுள்ளேன் என்றால் அது என் தைரியத்தை காமிக்கின்றது. அதுவும் இல்லாமல் என் குரலைக் கேட்டு நான் மிரளப் போவதில்லை. நீங்கள்தான் என்ற உணர்ச்சியும் கூட சேர்ந்துக் கொண்டது.
    நல்ல யோசனை கூறிய பானுவிற்கும் அதை செவ்வெனே முடித்துக் காட்டிய அட்மின் நபர்களுக்கும் சபாஷ், பேஷ், பேஷ். ஆயின் அடுத்த முறை மற்றவரும் கலந்து பிரம்மாண்டமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
    ஒரு தலை ராகம் படத்தை நான் கல்லூரி நட்களில் பார்த்தது. இது ஒரு வித்தியாசமான விதத்தில் இருந்ததால், நல்ல வரவேற்பு வேரு. ஒவ்வொரு பாட்டும் ஒரு புதையல். பாடிய விதமும் அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரமா...   வீடியோ பார்த்த யாரும் நான் கண்டு பிடித்ததை கண்டு பிடிக்கலை பாருங்க!

      நீக்கு
    2. முன்னால் எழுதி வைத்துக்கொண்டு படிப்பதுபோல, அவர் கைகள் ஒரு நோட்/அல்லது பத்திரிகையை வைத்துக்கொண்டிருக்கிறது(கணிணி முன்பு). ஆனால் இதை அவர்தான் உறுதிப்படுத்த வேண்டும். (கீசா மேடம்... யூடியூப் காணொளியை திரை முழுவதும் வருமாறு செய்து அவ்வப்போது pause செய்து, ரமா ஸ்ரீநிவாசன் அவர்களின் கண்ணாடியைப் பார்க்கணும். நீங்கதான் ஜூம் பண்ணறதுல பெஜலிஜ்ட் ஆச்சே

      நீக்கு
  43. கீதா ரங்கனை பல முறை சந்தித்து இருக்கிறேன் அவர்கள்பாடுவார்கள் என்று தெரியாது தெரிந்திருந்தால்பாடச் சொல்லி கேட்டிருக்கலாம்அண்மையில் தேன் நிலவு படம்பார்த்தேன்அருமையான படம் + பாடல்கள்

    பதிலளிநீக்கு
  44. பழைய வல்லிம்மாதான் என் கண்ணுக்குள் இருந்தா, இப்போதைய வல்லிம்மாவின் முகம் பார்க்க ஏதோ சோர்வாக கவலையாக இருப்பதைப்போல இருக்கிறா... உற்சாகமாகுங்கோ வல்லிம்மா....

    பதிலளிநீக்கு
  45. ஆமாம் ஏகாந்தன் ஸார் எங்கே கொஞ்ச நாளாய் ஆளைக்காணோம்?

    பதிலளிநீக்கு
  46. ஜெயக்குமார் சந்திரசேகர் ஸாரும் ஏனோ இப்போதெல்லாம் இங்கு வருவதில்லை!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!