பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் பஞ்சாமிர்த பிரசாதத்தை, தபால் மூலம் பக்தர்களின் வீடுகளுக்கே கொண்டுபோய் சேர்க்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. டின்னில் அடைக்கப்பட்ட அரை கிலோ பஞ்சாமிர்தம், தண்டாயுதபாணி சுவாமியின் ராஜ அலங்கார லேமினேட்டட் புகைப்படம் ஒன்று மற்றும் கோயிலில் இயற்கையாக தயார் செய்யப்படும் விபூதி 10 கிராம் ஆகியவை பிரசாத பார்சலில் வரும். பிரசாத கட்டணம் 70, தபால் செலவு 180. மொத்தம் 250 ரூபாயை, தபால் துறையின் மூலம் இ-பேமண்ட் வழியாக செலுத்தினால் போதும். பிரசாதம் வீட்டுக்கே வந்துசேரும்.
****
( amazon மூலம் Palani Panchamritham என்று தேடினால் - ராமநாதன் ஸ்டோர்ஸ் தயாரிப்பு, 480 கிராம் பஞ்சாமிர்தம் in stainless steel container - அச்சிடப்பட்டுள்ள விலை : நூறு ரூபாய் - நூற்று ஐம்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஆனால் இதோடு வேறு பொருட்கள் - விபூதி, முருகன் படம் கிடைக்காது. - kgg )
= = = =
உத்தரகண்ட் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காணாமல் போனவர்களை மீட்கும் பணிக்காக, சென்னை டெஸ்ட் போட்டிக்கான சம்பளத்தை தருவதாக, இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார்.
= = = =
ராமர் கோவிலுக்கு முஸ்லிம்கள் நன்கொடை .
''ராமர் ஹிஸ்துஸ்தானுக்கு சொந்தம்; நாங்களும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். ஹிந்துக்கள் எங்களுடைய சகோதரர்கள். கோவில் கட்டுவதற்கு தொடர்ந்து நன்கொடை வழங்குவோம்,'' என, அயோத்தி முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் உறுப்பினர் ஹாஜி சயீது அகமது கூறியுள்ளார்.
''நம் நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமை நிலவுவதை உலக நாடுகளுக்கு மீண்டும் உறுதி செய்துள்ளோம். ''ராமர் கோவிலுக்கு முஸ்லிம் சகோதரர்கள் நன்கொடை அளித்துள்ளதை வரவேற்கிறோம்,'' என, பைசாபாதின் ராம் பவனின் தலைவர் சக்தி சிங் கூறியுள்ளார்.
= = = =
ரூ.10க்கு மருத்துவம் டாக்டருக்கு பாராட்டு.
கிருஷ்ணகிரி : பத்து ரூபாயில், மருத்துவம் பார்க்கும் டாக்டரை, பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடையை சேர்ந்தவர் லோகேஷ், 33. இவர், எம்.பி.பி.எஸ்., முடித்துவிட்டு, எட்டு ஆண்டுகளாக அரசு மருத்துவராக பணிபுரிகிறார். வேப்பனஹள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் இவர், மற்ற நேரங்களில் தனியாக கிளினிக் வைத்து, நான்கு ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வருகிறார்.
கடந்த ஒரு மாதமாக, இவர் நோயாளிகளிடம் கட்டணமாக, 10 ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்க்கிறார். இதனால் இவரை பார்க்க, வேப்பனஹள்ளியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலம் பெங்களூரு, ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதி மக்களும் வந்து செல்கின்றனர்.
டாக்டர் லோகேஷ் கூறியதாவது: நான் கல்லுாரியில் படிக்கும்போது, தலையில் அடிபட்டு ரத்தம் வந்தது. மருத்துவம் பார்க்க பணம் இல்லாமல், குடும்பத்தினர் சிரமப்பட்டனர். நான் படித்து டாக்டராகும் போது, குறைந்த செலவில் வைத்தியம் பார்க்க வேண்டும் என, அப்போதே முடிவெடுத்தேன். தற்போது, எனக்கு பணத்தேவை குறைவு.
அதனால் கடந்த ஒரு மாதமாக, 10 ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்க்கிறேன். இது குறித்து, மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளேன். 24 மணி நேரமும் மருத்துவம் பார்க்கும் வகையில், இரவில் கூடுதலாக ஒரு மருத்துவரையும் ஏற்பாடு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
= = = =
இன்றைக்கு, முதல் கருத்துரையை கீசா மேடம் வழங்குவார்.
பதிலளிநீக்குஹி ஹி !! :)))))
நீக்குஇனிய காலை வணக்கம் அன்பு முரளிமா,
பதிலளிநீக்குஇன்னும் வரப்போகிறவர்களுக்கும் தான். அனைவரும் என்றும்
நல்ல ஆரோக்கியத்தோடு
இருக்க இறைவன் அருள வேண்டும்.
இறைவன் அருள் வேண்டுவோம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஏன் லேட்டு?? ஏறுங்க பெஞ்சு மேல !!
நீக்குஅதான் சொல்லி இருக்கேனே! குட்டிக் குஞ்சுலு காலம்பர நாங்க காஃபி சாப்பிடப்பாலை வைத்தப்போவே வந்துடுத்து. துள்ளிக் கொண்டுஇருந்தது. அதைப் பார்க்க வேண்டிப் பையர் அழைத்திருந்தார். அது முடிஞ்சு மற்றச் சில வேலைகளை முடிச்சுட்டுக் கணினியில் இணையத்தை மேயலாமா வேண்டாமானு சீட்டுப் போட்டுப் பார்த்துட்டு வரச்சே ஆறு நாற்பது/நாற்பத்தைந்து ஆகி விட்டது.
நீக்குகாலம்பர கணினியில் வேலை செய்ய உட்காராமல் வேறே வேலை செய்ய நினைச்சிருந்தேன் . கு.கு. காலம்பர ஆறு மணிக்கே வந்து விட்டது. அதோடு பொழுது கழிந்த பின்னர் வேறே வேலை செய்ய ஆர்வம் இல்லை. கணினியிலாவது இணையத்தை மேயலாம்னு வந்தேன். எல்லாச் செய்திகளும் அருமை. அறியாதவை.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநெல்லை சொன்னாப்போல் முதல் கருத்தை வழங்கிவிட்டேன். அது என்னமோ கணினியில் வேலை செய்ய ஆரம்பிக்கும்போதே கூகிள் எரர் காட்டுது. அல்லது மெயிலை இணைக்க முடியலை cannot sync என்று சொல்கிறது. தினம் தினம் ஒரு 2,3 தரம் முயன்ற பின்னரே ஜிமெயிலில் இணைய முடிகிறது. எல்லோரிடமும் கேட்டுப் பார்த்தாச்சு! அப்படி எல்லாம் வராதே என்கிறார்கள்.
பதிலளிநீக்குஅப்படி எல்லாம் வராதே!
நீக்குநீங்க வேறே கௌதமன் சார்! எனக்கு மட்ட்ட்ட்ட்ட்ட்ட்டும் அப்படி எல்லாம் தான் வரும். இப்போத் தான் அந்தத் தொந்திரவை முடித்துக்கொண்டு நான்காம் முயற்சியில் கூகிள் மெயிலை ஒப்புக்கொள்ள வந்திருக்கேன். அது மட்டுமா? கிண்டிலில் இருந்து எதையும் (நீங்க இலவசமாக் கொடுத்தாக் கூட) தரவிறக்க முடியலை. தலைகீழா நின்னு பார்த்தாச்சு. வெங்கட்டும் அவர் தரப்பில் முயன்றார். அவர் சொன்ன எல்லாவற்றையும் செய்ததில் டெஸ்க் டாப்பில் கூட ஒரு ஐகான்! அம்புடுதேன்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்..
பதிலளிநீக்குஎங்கெங்கும் நலம் வாழ்க...
அன்பின் வணக்கம்.
நீக்குஇன்றைய தொகுப்பு அருமை..
பதிலளிநீக்குநல்ல செயல்கள் நாடெங்கும் ஓங்குக...
நன்றி.
நீக்குமருத்துவரை வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குவாழ்த்துவோம்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். பழனி பஞ்சாமிர்தம் போல இனிமியான செய்திகள். ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கு நன்றி. என் சிறு வயதில் நாங்கள் வசித்த பகுதியில் ராம நவமி சிறப்பாக கொண்டாடப்படும். அதற்கு முதல் நன்கொடை எங்கள் வீட்டிற்கு பின்னால் இருந்த ஒரு முஸ்லிம் பாய்தான் வழங்குவார். அதில் அவருக்கு ரொம்பவும் பெருமையும் உண்டு. அவருடைய மகன் கர்னாடக இசை கற்றுக்கொண்டார்.
பதிலளிநீக்குபத்து ரூபாய் டாக்டரின் சேவை தொடரட்டும்.
சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி.
நீக்கு*இனிமையான
பதிலளிநீக்குபுரிந்துகொண்டோம்.
நீக்குகாதலர் தின வாழ்துக்களை முந்தித் தருவது பானுமதி வெங்கடேஸ்வரன்.
பதிலளிநீக்குஆ !! நம்ம வாசகர்கள் எல்லோரும் பெரும்பாலும் கி கா !!
நீக்கு:))))))))))
நீக்குமுஸ்லிம் சகோதரர்களுக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவாழ்த்துவோம்.
நீக்கு//http://www.srikandavilas.com/details/panchamirtham-800gm.html// இது பெட்டரா இல்லை ராமனாதன் பஞ்சாம்ருதம் பெட்டரான்னு யோசிக்கிறேன்.
பதிலளிநீக்குநான் ராமனாதன் ஸ்டோர்ஸ் தயாரிப்பு வாங்கி, தினமும் ஒரு ஸ்பூன் 5அம்ருதம் சுவைத்து வருகிறேன். சுவை நன்றாக உள்ளது.
நீக்குஉங்களை மாதிரி "தினமும் ஒரு ஸ்பூன்" என்ற ஒழுங்கு என்னிடம் கிடையாது. சில நாட்கள் சாப்பிடாமல் இருப்பேன், சாப்பிட ஆரம்பித்தால் சட்னு காலியாயிடும். அதுனால கொஞ்சம் யோசிக்கிறேன்.
நீக்கு:))))
நீக்குஎதிர்த்த குடியிருப்பில் 2 மாதங்கள் முன்னர் தான் பேரனுக்குப் பழனியில் மொட்டை அடிச்சுட்டுப் பஞ்சாமிர்தம் வாங்கி வந்து தந்தாங்க. முன்னத்தனை சுவை இல்லைனாலும், (இப்போத் தான் சிறுமலையில் மலைப்பழமே அத்துப் போயிடுத்தே!) நன்றாகவே தேன், நெய் மணக்க இருந்தது.
பதிலளிநீக்குகொஞ்சம் விபூதி வாசனையும் வருமே..... நான் பஹ்ரைனில் இருந்தபோது வரவழைச்சுச் சாப்பிட்டேன். ரொம்ப வெயிட் போட்டது.
நீக்குஇப்போ ஆன்லைன்ல வாங்கலாம்னு நினைத்திருக்கேன். பெர்மிஷன் கிடைப்பது கடினம்.
அதெல்லாம் எந்த வாசனையும் வரலை. நன்றாகவே இருந்தது.
நீக்குராமனாதன் ஸ்டோர்ஸ் தயாரிப்பில் விபூதி வாசனை வரவில்லை. ஏலக்காய் மணம் வீசுகிறது.
நீக்குபால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே.
பதிலளிநீக்குபஞ்சாமிர்த செய்தியைப் போலவே அனைத்து செய்திகளும் இனிமை.
முக்கியமாக பத்து ரூபாய் வைத்தியம்
செய்யும் டாக்டர். மிக மிகத் தேவை.
மற்ற செய்திகளும் உற்சாகம் கொடுக்கின்றன.
எல்லோரும் இணைந்தால் நன்மை பெருகும்.
மிக மிக நன்றி ஜி.
மிக மிக நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. பஞ்சாமிர்தம் செய்தி இனிப்பாக இருந்தது.
நீங்கள் அறிமுகப்படுத்திய பத்து ரூபாய் பீஸ்ஸில் இப்போதும் வைத்தியம் பார்க்கும் மருத்துவர் நன்றாக இருக்க வேண்டும்.
நாங்கள் சென்னையில், லஸ்ஸிலிருந்த போது வீட்டருகில் இருந்த ஒரு மருத்துவர் நிறைய வருடங்கள் 5 ரூபாய்தான் பீஸ் வாங்குவார். கைராசியான டாக்டர் என அனைவராலும் புகழப்பட்டவர். அவரும் வெளிநாடெல்லாம் சென்று மேற்ப்படிப்பு படித்து வந்தவர். அவர் நினைவு இன்று வந்தது. அப்போதே அருகிலிருக்கும் பிற டாக்டர்கள் ஐம்பது, நூறு என வாங்க ஆரம்பித்து விட்டனர்.
மத ஒற்றுமை மகிழ்ச்சியை தருகிறது. இன்றைய நல்ல செய்திகளுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி.
நீக்குஅனைத்து தகவல்களும் சிறப்பு.
பதிலளிநீக்குசமீபத்தில் தில்லி நண்பர் ஒருவர் பழனி சென்று வந்து பஞ்சாமிர்தம் தந்தார் எங்கள் நட்பில் இருக்கும் அனைவருக்கும்! நீண்ட வருடங்களுக்குப் பின் சாப்பிட்டபோது அப்படி ஒரு மகிழ்ச்சி!
10 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் டாக்டருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
போற்றுதலுக்கு உரிய மருத்துவர்
பதிலளிநீக்குநல்ல செய்திகள் தொகுப்பு அருமை.
பதிலளிநீக்குடாக்டர் லோகேஷ் அவர்கள் செயல் பாராட்டவேண்ட வேண்டும். அவரை வாழ்த்துவோம் வாழ்க வளமுடன்.