விவசாயத்தில் சாதிக்க வழி இருக்கு: பொறியியல் பட்டதாரி சொல்வதை கேளுங்க.
பல்லடம் அடுத்த கே.என்.புரத்தை சேர்ந்த, பொறியியல் பட்டதாரி மாணவர் மைக்கேல் சாமிமுத்து, 24, வருமானத்தை பெருக்கும் நோக்கில், விளைபொருள் நேரடி விற்பனை மையத்தை துவக்கி உள்ளார்.
மைக்கேல் சாமிமுத்து கூறியதாவது:'என் அப்பா, 20 ஆண்டாக குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து வருகிறார். நான் கோவை தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தேன். விவசாயம் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக இரண்டு ஆண்டாக அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறேன். தக்காளி, வெங்காயம், புடலை, பாகல், வெண்டை உள்ளிட்ட அனைத்து வகை காய்கறிகளையும் உற்பத்தி செய்து விற்பனைக்கு திருப்பூர் வியாபாரிகளிடம் கொடுத்து வருகிறேன்.
இதுதவிர, கே.என்.புரம் பகுதியில் தோட்டத்தின் அருகிலேயே நேரடி விற்பனை மையம் ஒன்றையும் அமைத்துள்ளேன். இங்கு, உற்பத்தி செய்யும் காய்கறிகளை நேரடியாக விற்று வருகிறேன். இதன் மூலம், ஒவ்வொரு காய்கறிக்கும் மூட்டை ஒன்றுக்கு 200 -- 300 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. மேலும், மார்க்கெட் செல்வதால் ஏற்படும் வண்டி வாடகை, ஆள் கூலி உள்ளிட்ட கூடுதல் செலவுகள் குறைவதுடன், நேரடியாக விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் காய்கறிகளை தர முடிகிறது.
வேலைக்கு சென்று சம்பாதிப்பதை விட, விவசாய தொழில் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம் என்பது எனது கருத்து. விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை என கவலைப்படும் விவசாயிகள், இது போன்று நேரடி விற்பனை ஆரம்பிக்கலாம், என்று சொன்ன அவரை வாழ்த்தி விடைபெற்றோம்.
= = = =
சென்னையில் தெருவுக்கு ஒரு டீ கடை இருப்பதை பார்க்க முடிகிறது. பல வசதிகள் அடங்கிய நவீன டீ கடைகளும் ஆங்காங்கே முளைத்து வருகிறது. இவ்வளவு இருந்தாலும் சென்னை அட ையாறு காமராஜர் அவென்யூவில் உள்ள சிக்காகோ டீ கடைக்கு தினம் ஆயிரத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். டீ , உணவு எல்லாம் வழக்கமான சுவையில் தான் இருக்கும் என்றாலும் கடையில் வேலை செய்யும் தொழிலாளர்களை ஓனர் கவனிக்கும் விதம் பலரை ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சிக்காகோவில் வேலை நேரத்தை குறைக்க வேண்டி தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய வரலாற்று நிகழ்வின் நினைவாக சிக்காகோ என்ற பெயரையே தன் கடைக்கு வைத்தார் ஓனர் சுகுமாரன் . கேரளாவை சேர்ந்த இவர் ,33 வருடமாக சென்னையில் டீ கடை நடத்தி வருகிறார்.
= = = =
20% தள்ளுபடியில் ஆன்லைன் டிக்கெட் சென்னை மெட்ரோ.
சென்னையின் இரண்டு வழித்தடங்களில் 54 கிமீ தொலைக்கு மெட்ரோ ரயில் சேவை செயல்படுகிறது.
இந்த ரயில் பயணத்தை மேலும் எளிதாக்க சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் மொபைல் ஆப் உதவியாக இருக்கிறது. இந்த ஆப் மூலம் புக் செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் சி.எம்.ஆர்.எல் ஆப்பை (cmrl mobile app) டவுன்லோட் செய்து, பெயர், முகவரி, கைப்பேசி எண் முதலியவற்றை பதிவு செய்து லாகின் (Log in) செய்ய வேண்டும். டிராவல் கார்ட் ரிசார்ஜ் என்ற பகுதியில் மெட்ரோ டிராவல் கார்டை ரிசார்ஜ் செய்துகொள்ள முடியும்.
இதனால் வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும். ஆப்பில் டிக்கெட் பதிவு செய்ய QR டிக்கெட் என்ற பகுதியை தேர்வு செய்து, புறப்படும் நிலையம், சென்று சேரும் நிலையத்தை தேர்தெடுக்கவேண்டும், பின் பணத்தை செலுத்தி டிக்கெட் எடுக்கலாம். ஒரு முறையில் ஆறு நபர்களுக்கு டிக்கெட் எடுக்கலாம், ரிடன் டிக்கெட் முன்பதிவும் செய்யமுடியும்.
இந்த பகுதியில் மாதாந்திர பாஸ் எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் இயங்கும் வழித்தடம், அருகில் இருக்கும் மெட்ரோ நிலையங்கள், மெட்ரோ நிலையத்தின் அருகில் இருக்கும் சுற்றுலா தலங்கள், ரயில்கள் இயக்கப்படும் நேரம் ஆகியவற்றை இந்த ஆப் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
பயண அட்டை பயன்படுத்தும் பயணிகளுக்கு 10% கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது. மெட்ரோ மொபைல் ஆப் முதல் பதிவு செய்யப்படும் க்யூஆர் டிக்கெட்டிக்கு 20% தள்ளுபடி. மற்றும் அரசு விடுமுறை, ஞாயிற்றுகிழமைகளில் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
= = = =
சிறப்புக் குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக் கொடுக்கும் மாற்றுத்திறனாளி ஓவியர்.
சென்னை மகாலிங்கபுரம் பகுதியைச் சார்ந்தவர் ஓவியர் அந்தோணி ராஜ்,மாற்றுத்திறனாளி.
எளிமையான குடும்பத்தில் பிறந்த இவரது கவனம் பள்ளிப்படிப்பை தாண்டியதும் ஓவியத்தின் மீது விழுந்தது.
கிண்டி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி மையங்களில் சேர்ந்து தனது ஒவிய திறனை வளர்த்துக் கொண்டார். தற்போது புரசைவாக்கத்தில் உள்ள ‛ஆப்பர்சூனிட்டி சிறப்பு மாணவர்களுக்கான பயிற்சி பள்ளியில்' ஓவிய ஆசிரியராக உள்ளார்.
சிறப்பு பள்ளியில் படிக்கும் மாணர்கள் வயதால் பதினைந்தாக இருந்தாலும் மனதால் ஐந்து வயது பையனாகத்தான் இருப்பர்.இவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்கும், அவர்களாக தங்களை முன்னேற்றிக் கொள்வதற்கும் ஓவியக்கலை பெரிதும் பயன்படுகிறது.
மெதுவாக செய்வார்கள் ஆனால் சரியாக சுத்தமாக செய்வார்கள் ஓவியக்கலையில் இவர்களை ஆர்வம் கொள்ளவைத்துவிட்டால் பின்னாளில் அவர்கள் அவர்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்வர்,குடும்பத்தாருக்கு உதவியாகவும் இருப்பர்.
பள்ளி வேலை நேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் வீட்டில் வைத்து நிறைய ஓவியங்கள் வரைவேன் எனது ஓவியங்களுக்காக அகில இந்திய அளவில் ‛கலாகவுரவ்',‛காலமித்ரா' ஆகிய விருதுகளை பெற்றுள்ளேன்.நான் வரையும் ஓவியங்களை விற்றுவரும் பணத்தில் எனது குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு ஓவிய போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி மகிழ்விப்பேன்.
= = = =
மின் வாகன தயாரிப்பில் புதுமை!.
ஒரு மின் வாகனத்திற்கு வேண்டிய அடிப்படை பாகங்களை வைத்து 'சேஸி'சை மட்டும் நாங்கள் தயாரித்துத் தருகிறோம். நீங்கள் அதன் மேல், கார், வேன் என்று எந்த வண்டியையும் கட்டுவித்து விற்றுக்கொள்ளுங்கள். இப்படிச் சொல்லி அசத்துகிறது 'இஸ்ரேலின் மின் வாகன நிறுவனமான 'ஆர்.ஈ.ஈ., ஆட்டோமோட்டிவ்'.உலக மின் வாகன சந்தையில் இடம்பிடிக்கத் துடிக்கும் ஜப்பானின் டொயோட்டோவும், இந்தியாவின் மகிந்திரா குழுமமும் முந்திக்கொண்டு ஆர்.ஈ.ஈ., சேசிஸ்களை ஆர்டர் செய்துள்ளன.
பல கி.மீ., தொலைவு பயணிக்க உதவும் நவீன மின்கலன்கள், சக்கரத்தில் நேரடியாகப் பொருத்தப்பட்ட மோட்டார்கள், பிரேக்குகள், சஸ்பென்சன், டிரான்ஸ்மிசன் என்று சகல பாகங்களிலும், வாகன தயாரிப்பாளர்கள் கேட்கும் வகையில் தயாரித்துத் தருவதாக ஆர்.ஈ.ஈ., ஆட்டோமோட்டிவ் சொல்கிறது.
அடிப்படை பாகங்களை, பொருத்தி, ஒரு 'ஸ்கேட் போர்டு' வடிவில் தந்தாலும், மின் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் ஆர்.ஈ.ஈ., கவனம் செலுத்தவுள்ளது.இதற்கென பிரிட்டனில், பொறியியல் ஆராய்ச்சி மையத்தை ஆர்.ஈ.ஈ., ஆட்டோமோட்டிவ், ரூ.670.5 கோடி செலவில் தொடங்கியுள்ளது.
இதனால் மின் வாகன தயாரிப்பு முறையில் புதுமை பிறக்கும் என்பதோடு, மின்சார வாகன உயர் தொழில்நுட்பங்கள் ஜனநாயக மயப்படுத்தப்பட்டு விரைவில் பரவும் எனவும் வல்லுனர்கள் பாராட்டியுள்ளனர்.
= = = =
போனாப் போகுதுன்னு கீசா மேடத்திற்காக இவ்வளவு நேரம் காத்திருந்தேன். இனி நேரமில்லை.
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
கீதா அக்கா மெதுவாக வரட்டும். வார இறுதி... சற்றே ஓய்வெடுத்து வருவார். வாங்க நெல்லை, வணக்கம்.
நீக்குவரலாமா வேண்டாமானு யோசனையில் இருந்தேன். இஃகி,இஃகி,இஃகி! எனக்கு தினமும் வார இறுதி தானே ஶ்ரீராம்! :) நாலரைக்கெல்லாம் முழிச்சுண்டாச்சு!
நீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம். மாற்றிச் சொல்கிறீர்கள். வாரம் முழுவதுமே வேலை நாட்கள்தானே!
நீக்குஎனக்கு எல்லா நாட்களுமே வேலை நாட்கள் தானே ஶ்ரீராம்! வார இறுதினு தனியாய்க் கிடையாது எப்போவும். அலுவலகம் போகும்போதும் கூட சனி, ஞாயிறுகளில் வழக்கத்தை விடக் கூடுதல் வேலைகள் இருந்தன.
நீக்குஅதைத்தான் நானும் சொல்லி இருக்கிறேன்!
நீக்குஓவியங்கள் அருமை. ஓவியர் அந்தோணிராஜ் மனதைக் கவர்கிறார்.
பதிலளிநீக்குஆம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கேரளத்திலும் மஹாராஷ்ட்ராவிலும் கொரோனா தொற்று முழுவதும் குறைந்து சாதாரணமான நிலைமைக்கு மாறப் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குஇணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஇன்னும் முழுசும் படிக்கலை. நெல்லையாரின் கருத்தைப் பார்த்ததும் இங்கே வந்துட்டேன். மாற்றுத் திறனாளிகளுக்கு ஓவியம் கற்றுக்கொடுக்கும் ஓவியரின் ஓவியங்கள் எல்லாமே அற்புதம். அருமை. கொஞ்சம் வண்ணத்தைக் குறைத்திருக்கலாமோ எனத் தோன்றினாலும் நல்ல ஓவியங்கள்.
பதிலளிநீக்குஓவியங்களை புகைப்படம் எடுத்தவர் குறைவான வெளிச்சத்தில் எடுத்து விட்டாரோ என்னவோ...
நீக்குமன்னிக்கணும். மாற்றுத் திறனாளி ஓவியர் என்பதற்குப் பதிலாக மாற்றுத் திறனாளிகளுக்கான ஓவியர் எனத் தப்பாய்ப் பொருள் வரும்படி எழுதிட்டேன். :(
பதிலளிநீக்குok
நீக்குரயில்வே விஷயம் அரைகுறையாய் அறிந்தது. மோதிரம் கொடுக்கும் டீக்கடைக்காரர் வாழ்க பல்லாண்டு. பொறி இயல் படிச்ச விவசாயி பற்றியும் படிச்சேன். ஏற்கெனவே சிலர் இப்படிச் செய்து வருவதாகவும் படிச்சிருக்கேன்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா.. வாங்க... இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்..
பதிலளிநீக்குஎல்லோரும் எப்பொழுதும் நலமாக இருக்க
நாம் அனைவருமே பிரார்த்திப்போம்.
நன்றி.
நீக்குஅனைத்து செய்திகளும் மகிழ்ச்சி அளிக்கின்றன.
பதிலளிநீக்குமுக்கியமாக மாற்றுத் திறனாளி அந்தோனி ராஜின் ஓவியங்களும்,
அவர் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதும்
மிக மிக உயர்வான செய்தி
ஆம்.
நீக்குவிவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்க நேரிடையாக விற்க ஆரம்பித்திருப்பது
பதிலளிநீக்குமிக நன்மை. அவர்களின் உழைப்புக்கு நல்ல
வருமானம் கிடைக்கட்டும்.நல்ல செய்தி.
அதே, அதே.
நீக்குசிக்காகோ டீக்கடையை முன்பே பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதங்க மோதிரம் தரும் செய்தியும்
அப்பொழுது தெரிய வந்தது. மீண்டும் படிப்பதில் மகிழ்ச்சி.
திரு சுகுமாரனுக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துவோம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குவாழ்க நலம் எங்கெங்கும்...
அன்பின் வணக்கம்.
நீக்குமெட்ரோ தரும் வசதிகள் கேட்கவே சிறப்பாக இருக்கின்றன.
பதிலளிநீக்குநம் சென்னை இவ்வளவு முன்னேறி வருவது
மிக மிக சந்தோஷம். விரல் நுனியில் உலகம்!!!
ஆம், ஆச்சரியமா இருக்கு.
நீக்குஓவியர் அந்தோணி ராஜ் அவர்களது கை வண்ணம் மனதைக் கவர்கின்றது...
பதிலளிநீக்குஆம், சிறப்பான ஓவியங்கள்.
நீக்குசாஸி' ரெடியாகி விட்டால் , மற்றவற்றை நம் விருப்பப் படி
பதிலளிநீக்குபொருத்திக் கொள்வது
எத்தனை ஆதாயம்!!! மஹீந்த்ரா எப்பொழுதும் தரமான
சேவைகளை வழங்குவதில் சளைக்காதவர்கள்.
இந்தத் தொழிற்சாலையும் வந்து விட்டால்
இன்னும் பல தொடர்பு தொழில்கள் வளரும்.
நல்ல செய்தி. சிங்கம் மிக மகிழ்ந்திருப்பார்.
அனைத்து நற்செய்திகளுக்கும் மிக நன்றி மா.
ஆம். மின்கல வண்டி - வண்டியின் frame work தயார் என்றால், மீதி பகுதியை வாடிக்கையாளர் கட்டுமானம் செய்துகொள்ளலாம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. விவசாய வளம் பெருகவும், விவசாயிகள் நல்ல பலனடையவும் விவசாய நேரடி விற்பனை மையம் வைத்து சிறப்பாக செயலாற்றி வரும் இளைஞரை பாராட்டுவோம்.
ஓவியர் அந்தோணி ராஜ் அவர்களின் திறமைக்கு மனமுவந்த பாராட்டுக்கள். அனைத்து ஓவியங்களும் அற்புதமாக உள்ளன. அவர் மற்றவர்களுக்கு கற்றுத் தரும் சேவைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
டீக்கடை உரிமையாளரின் செய்தியும் மகிழ்வைத் தருகிறது. தொழிலாளிகளை அவர் அன்புடன் நடத்தி வரும் பாங்கிற்கும் வாழ்த்துகள். இன்றைய அனைத்து நல்ல செய்திகளை திரட்டி தந்த தங்களுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றிக்கு நன்றி!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். மாற்றுத் திறனாளி குழந்தைகளை பயிற்றுவிக்கும் ஓவியரும் அவர் வரைந்த ஓவியங்களும் பாராட்டுக்குரியவை.
பதிலளிநீக்குமெட்ரோ ரயில் தகவல்கள் உபயோகமானவை.
இனி வரும் காலங்களில் மின்னூர்திகள்தான் இயங்கும். எனவே ஆர்.ஈ.ஈ.யின்,தயாரிப்புகள் வரவேற்கப்பட வேண்டியவை.
ஆம், நிச்சயமாக !
நீக்குவிவசாயிகளின் வாழ்க்கை போராட்டமானதுதான், இருந்தாலும் பொருளும் ஈட்ட முடியும். எங்கள் மாமா பையன் சென்னையில் பார்த்துக் கொண்டிருந்த வேலையே விட்டு விட்டு கிராமத்திற்கு சென்று விவசாயம் பார்க்கிறார், செளகரியமாகத்தான் இருக்கிறார். ஆரம்பத்தில் அவருடைய மனைவிக்கு கொஞ்சம் சுணக்கமாக இருந்தது. இப்போது பழகி விட்டார். எங்கள் ஊரில் விவசாயம் பார்க்கும் சிலர் கார்கூட வைத்திருக்கிறார்கள். அரசாங்கத்தோடு ஒத்துழைக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள்தான் போராடுகிறார்கள். கோவை இளைஞர் போன்று தெளிவானவர்களுக்கு கஷ்டம் இல்லை. மைக்கேல் சாமி முத்து ஒரு நல்ல முன்னுதாரணம். வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடித்த மக்கள் விவசாயத்தில் ஊக்கம் கொள்வது நல்ல விஷயம்தான்.
நீக்குஎன் தம்பி (பெரியம்மா பிள்ளை) சென்னை அண்ணாநகரில் செய்து வந்த வியாபாரத்தை ஏறக்கட்டிவிட்டுச் சொந்த ஊரான குன்னியூருக்குப் போய் அங்கே விவசாயம் (சொந்தப் பண்ணை) செய்து வருகிறார். அவருக்கும் அவரைப் போன்ற அந்த ஊரில் விவசாயம் செய்பவர்களுக்கும் இப்போதுள்ள விவசாயச் சட்டங்கள் நன்மை தருபவை என்றே சொல்கின்றனர்.
நீக்குஇன்றைய விவசாயச் சட்டங்களின் வழிமுறைகள் சோழர் காலங்களிலேயே கடைப்பிடிக்கப்பட்டதாகத் தொல்லியல் வல்லுநர் திரு நாகசாமி அவர்கள் இன்றைய தினமலர் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு ஆதாரமாக ஆங்கிலேயர் காலத்து கெசட்டியர்களைச் சுட்டிக் காட்டுகிறார்.
நீக்குஅசத்தலான ஓவியங்கள்... மற்ற செய்திகளும் அருமை...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎன் கருத்தை வெளியிட ‘கவர்’ கேட்கிறதா Blogger? வெளியிட்டதாகச் சொன்னது. ஆனால் ..காணோமே!
பதிலளிநீக்குஇளைய தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபாடு காட்டுவது பாராட்டுக்குறியது.
பதிலளிநீக்குபதிவின் வழி பகிர்ந்து கொண்ட அனைத்து விஷயங்களும் சிறப்பு. ஓவியங்கள் அசத்துகின்றன.
பதிலளிநீக்குதில்லி மெட்ரோ ஆரம்பித்ததிலிருந்தே முன்பணம் கட்டிய அட்டை பயன்படுத்துபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி தந்து வருகிறது.
தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள்.
//ஓவியங்களை விற்றுவரும் பணத்தில் எனது குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு ஓவிய போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி மகிழ்விப்பேன்.//
பதிலளிநீக்குநல்ல செயல்.
ஓவியர் அந்தோணி ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஓவியங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.
மற்ற அனைத்து செய்திகளும் நல்ல செய்திகள் அருமை.