கீதா சாம்பசிவம் :
1.கல்யாண மண்டபங்களின் அருகில் குடி இருந்த அனுபவம் உண்டா?
# உண்டு. இடது பக்கம் மயானம், வலது பக்கம் கல்யாண மண்டபம்.
& நல்ல வேளை - இல்லை!
2.கல்யாணங்களில் செண்டை மேளத்தை வரவேற்கிறீர்களா?ஆதரிக்கிறீர்களா?
# செண்டை மேளம் எனக்குப் பிடிக்காதுதான். என்ன செய்ய ? அது தற்போதைய ஃபாஷன்.
$ செண்டையோ, மத்தளமோ, நாதஸ்வரமோ, ஷெனாயோ - எதுவாயினும் கூடியிருப்போரின் கவனத்தைத் திருப்புவதுதான் நோக்கம். அந்த வகையில் செண்டைக்கு இரட்டை வரவேற்பு.
& ஆதரிக்கவில்லை.
3.பாரம்பரியம் முற்றிலும் ஒழிந்து/மறைந்து வருவது நன்மை பயக்கும் விஷயமா?
# நன்மையா இல்லையா என்பது பாரம்பரியத்தின் எந்த அம்சம் என்பதைப் பொறுத்தது. விதவைகள் கொடுமை , பால்ய விவாகம் போன்றவை மறைந்தது நல்லதுதானே.
$ பாரம்பரியங்கள் அழிவது கண்டு நம் மனது அழுதால் போதாது. காப்பாற்ற மேடைப் பேச்சு தவிர வேறு எதுவும் நம்மாலாகுமோ? நாதஸ்வரம் என்று பெயர் கொண்டவர் கூட பியானோ வாசிப்பதைக் காண்கிறோம்.
& காலத்திற்கேற்ப சில மாறுதல்கள் வரவேற்கப்பட வேண்டியவைதான்.
4.திருமணங்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதும், ஆடல், பாடல்களும் தேவையா?
# ஆடல் பாடல் எல்லாம் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. வெடிகள் வாண வேடிக்கை கூட அப்படித்தான். ஆனால் காற்று மண்டலம் மாசு படுவதால் பட்டாசு வேண்டாம் என்று தோன்றுகிறது.
$ ஊருடன் கூடி வாழ் என்று உபதேசம் செய்வோர் ஊருக்குப் பிடித்ததை ஏன் செய்யக் கூடாது?
& கூட்டங்கள் - குறிப்பாக சிறுவர், சிறுமியர் உள்ள இடங்களில் - பட்டாசு போன்ற நெருப்பு சம்பந்தப்பட்ட கேளிக்கைகள் இல்லாமல் இருப்பது நல்லது; எதிர்பாராத விபத்துகளைத் தவிர்க்கலாம்.
நெல்லைத்தமிழன் :
1. எல்லோருக்கும் பழைய காலம், பழைய உரல், திருவை, கும்முட்டி அடுப்பு பிடிக்குதுன்னு சொல்றாங்க. கிராமம் பிடிக்குதுங்கறாங்க. அப்புறம் ஏன் அந்த வாழ்க்கைக்குப் போக மாட்டேன் என்கிறார்கள்?
# பிடிக்கிறது என்று சொல்வோர் உணர்ந்து சொல்வதில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இந்த மாதிரி சமாசாரங்களில் ஏதோ ஓரிரு அம்சங்களை மட்டும் எண்ணிப் பார்த்து "ஆகா இதுவல்லவோ வாழ்க்கை" என பதிவுகள் இடுவதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள இயலாது.
2. பிறரிடம் தாம் பெற்றுக் கொள்ளும் எல்லாமே கடன், எப்படியும் திருப்பிக் கொடுத்தாக வேண்டும் என்பது சரியா?
# "கடன்" என்று பெற்றதைத் திருப்பித் தர வேண்டும், ஆனால் பெறுவதெல்லாம் கடனல்ல. தருபவர் திருப்பப் பட வேண்டும் என எண்ணினால் அதை மதிப்பதுதான் முறை.
3. இப்போதும் அபார்ட்மென்ட்களில் பாரம்பர்யமாக எல்லோரும் கோலம் போடுகிறார்களா?
# எங்கோ சிலர் விடாப்பிடியாக கோலம் இடுவதைப் பார்க்க முடியும்.
& பல அபார்ட்மெண்ட்களில் ஓணம் பண்டிகை சமயங்களில் club house பகுதியில் கோலம் + அலங்காரங்கள் பார்த்தது உண்டு.
4. பொதுவா 'சிறந்த' எழுத்தாளர்கள் ஏன் ஏழ்மை நிலைல இருக்காங்க (இருந்தாங்க)? நான் இப்போ இருக்கிற விளம்பர இலக்கியவாதிகளைப் பற்றிக் கேட்கலை. அவங்க காசு சம்பாதிப்பதற்காக இலக்கியத்துக்குள் நுழைந்தமாதிரி பாவ்லா காட்டுகிறார்கள்.
# எல்லாக் காலத்திலும் ஏழை எழுத்தாளர்கள் பணக்கார எழுத்தாளர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். லட்சியவாதிகளாக இருந்த எழுத்தாளர்கள் தம் எழுத்தையும் திறனையும் காசாக்குவதில் கவனம் செலுத்தவில்லை, அல்லது குடி போன்ற பழக்கங்களுக்கு ஆளாகி இருந்தார்கள்.
$ ஒரு பருக்கையை வைத்து ஒரு பானையை எடை போடுவது சரியில்லை அல்லவா?
5. வாழும்போது உதவாத மக்கள், ஒருவன் செத்த பிறகு ஆஹா ஓஹோ என்று பாராட்டும் மடைமை எப்படி வருகிறது? பாரதிக்கு ஒரு வாய் சோற்றுக்குக் காசு கொடுக்காதவர்கள் அவர் செத்த பிறகு, நூற்றாண்டு விழா கொண்டாடி ஆஹா ஓஹோ என்று பாராட்டி, அவர் உயிரோடு இருந்தபோது ஒரு காசு கொடுக்காத உறவினர்களுக்கு, செத்த பிறகு அரசின் சார்பா லட்சக்கணக்கான பணம் கொடுத்தார்கள்.
$ ஜான் கென்னெடிக்கு புலிட்சர் பரிசு கொடுத்த போது பணக்காரர் என்பதால் என்று வாதிட்டவர்களும் - ஜவஹர்லால் நேருவுக்கு நோபல் பரிசு ....
# பாரதியார் விஷயம் வேறு மாதிரி. அவருடைய மேன்மையை ஒரு சிலர் மட்டுமே அறிந்திருந்தனர். இப்போது போல அக்காலத்தில் படைப்புகள் மக்களைச் சென்று அடைவது எளிதாக இல்லை.
பாரதியாரது பெருமையை மக்களுக்கு மிகுந்த பிரயாசையுடன் எடுத்துச் சென்ற பெரியவர்களும் உண்டு. இல்லையேல் பாரதியார் நமக்கும் அறிமுகமாகி இருக்க மாட்டார்.
& பாரதியார் காலத்தில் பொதுத் தேர்தல்கள் நடந்ததில்லை. இப்போது தேர்தல்கள் நடக்கும் யுகமாக உள்ளதால் - விழா + பாராட்டு + கொண்டாட்டங்கள் + பணமுடிப்பு எல்லாம் தூள் பறக்குது !
== = = =
கரடிக் கோலம் - அனுப்பியவர் : கோமதி அரசு.
நான் வரைந்த கரடிக்கோலம் மார்கழி மாதம்
= = = = =
Flying Machine
நான் சென்ற வாரம் சொல்லியிருந்த பறக்கும் எந்திரம் செய்வதற்கு உங்களுக்குத் தேவை :
ஒரே ஒரு A4 size காகிதம்.
வெட்டுவதற்கு கத்தரிக்கோல்.
ஒட்டுவதற்கு பசை அல்லது இணைக்க ஒரு stapler.
படங்களையும், விளக்கங்களையும் பார்த்து பயப்படவேண்டாம். நான் இந்த flying machine செய்ய எடுத்துக்கொண்ட நேரம் மொத்தம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே.
எப்படி செய்வது என்ற இரண்டு நிமிட காணொளி கீழே கடைசியில் உள்ளது.
= = = =
வீட்டில் எவ்வளவோ பழைய, உதவாத xerox நகல்கள் இருக்கும். அதில் சுருக்கங்கள் இல்லாத ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்.
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளத் தனையது உயர்வு..
பதிலளிநீக்குவாழ்க தமிழ்..
உள்ளம் உயராவிடில் வாழ்வு பள்ளம் நோக்கிப் பாய்வதைத் தடுக்க முடியாது!
நீக்குவாழ்க தமிழ்!
தமிழ் வாழ்க!
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குநலம் வாழ்க எங்கெங்கும்...
வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குஅன்பின் வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் நாட்கள் மகிழ்வாகவும் அமைதியாகவும் கழியப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா, வணக்கமும், பிரார்த்தனைகளும்.
நீக்குவணக்கமும், பிரார்த்தனைகளும்.
நீக்குஇஃகி,இஃகி,இஃகி, பள்ளிக்கூடத்திலே அந்தக் காலங்களில் வாத்தியார் மேலே ராக்கெட் பண்ணி விடுவாங்க. அதை நினைவூட்டியது உங்க ராக்கெட்/பிளேன்/பறக்கும் மிஷின் செய்முறை.
பதிலளிநீக்குஇது நூறு சதவிகிதம் நன்றாகப் பறக்கும் பிளேன். முயற்சி செய்து பாருங்கள்.
நீக்குகீசா மேடம் ராக்கெட் பண்ணணும். அப்புறம் மொட்டை மாடிக்குப் போகணும். அங்கிருந்து ராக்கெட்டை விடணும். அது யார் தலைமீதாவது இறங்கக்கூடாதுன்னு ப்ரார்த்திச்சுக்கணும்.
நீக்குஇதெல்லாம் தேவையா?
ஹாஹாஹா, நம்ம கு.கு.வும் அவ அம்மாவும் வீட்டுக்குள்ளேயே ராக்கெட் செய்து பறக்க விட்டு விளையாடுவாங்க. கு.கு.வுக்குப் பிடித்த விளையாட்டுக்களிலே இதுவும் ஒண்ணு. மூன்று நாட்களாய்க் கு.குவைப் பார்க்கலை! :(
நீக்குகேள்விகளுக்கு அளித்திருக்கும் பதில்கள் சுவாரசியம். கரடிக்கோலம் அழகு. கோமதி அரசுவின் பேரன் வரைந்திருப்பாரோ?
பதிலளிநீக்குஅவர் வரைந்தது என்று நினைக்கிறேன்.
நீக்குகீதா, கரடிக் கோலம் நான் வரைந்தது தான். மாயவரம் வீட்டில் மார்கழி மாதம் தரையில் வரைந்து கலர் கொடுத்தது. பக்கத்து வீட்டு குழந்தையின் சட்டையில் இருந்தது இந்த கரடி அதை பார்த்து வரைந்த கோலம். . பக்கத்து வீட்டுக் குழந்தைகள் மார்கழி மாதம் ஏதாவது படங்களை வரைய சொல்லி கேட்பார்கள், அவர்கள் தரும் படங்களை பார்த்து வரைவேன் கோலமாக. முன்பு என் வலைத்தளத்தில் பகிர்ந்த படம் தான். "மார்கழி கோலங்கள்" ஏன்று போட்டு இருக்கிறேன்.
நீக்குஆஹா! கோமதி நீங்க வரைந்ததா? உங்களுடைய அந்தப் பதிவைப் பார்க்காமல் விட்டிருப்பேனோ அல்லது நினைவில் வரலையோ! தெரியலை. நீங்கள் இருவருமே அழகாய் வரைவதால் பேரனுக்கும் அது வாய்த்திருக்கிறது. தொடர்ந்து வரையுங்கள். மனதுக்கும் நிம்மதியும், ஆறுதலும் தரும்.
நீக்கு// தொடர்ந்து வரையுங்கள். மனதுக்கும் நிம்மதியும், ஆறுதலும் தரும்.// ஆம், அதே, அதே!
நீக்குஎங்க குடியிருப்பில் இன்னமும் அழகழகான கோலங்கள் போடுகின்றனர். குடியிருப்பின் வெளித்தாழ்வாரம் அகலமாகவும் ஒரு வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் இடையே இருக்கும் தாராளமான இடைவெளியும் தான் கோலம் போடத் தேவையானது. அது இங்கே தாராளமாகவே இருக்கும் என்பதால் மார்கழி மாதக் கோலங்கள் கூடச் சிறப்பாகக் காணக்கிடைக்கும். பொதுவாகச் சென்னையின் குடியிருப்புக்களில் பக்கத்துப் பக்கத்துக் குடியிருப்புகளுக்கிடையே இடைவெளி என்பதே இருக்காது. மாடிப்படிகள் ஏறியதுமே இடக்கைப்பக்கமோ, வலக்கைப் பக்கமோ ஒரு வீட்டின் வாசல், எதிரே ஒரு வீட்டின் வாசல், அடுத்து ஒன்று எனக் குறுகிய இடைவெளிகளே இருக்கின்றன. கோலமும் சின்னதாகப் போய்விடும்.
பதிலளிநீக்குவீட்டு வாசல் கோலங்கள் அழகானவைதான்.
நீக்குஎழுத்தாளர்களில் ஏழை எழுத்தாளர்கள் எழுத்தை நம்பியே பிழைப்பவர்கள்/பிழைத்தவர்கள் அந்தக் காலங்களில் ஓரிருவர் இருந்திருக்கலாம். சிலர் ஏழை என்று சொல்லுவதே கூட அதீதமாகவும் இருக்கலாம். சித்தப்பாவைச் சொன்ன மாதிரி! ஆனால் ஏழை எழுத்தாளர்கள்/பத்திரிகையாளர்கள் சமீப காலங்களில் கூட உண்டு.
பதிலளிநீக்குஅப்படியா!!
நீக்குகேஜிஜி சார் - ஏழை என்றால் என்ன? எப்படி அதை வரையறுப்பீங்க? (புதன் கேள்வி)
நீக்குபதில் அளிப்போம்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் என்னாளும் நலமாக இருக்கப்
பதிலளிநீக்குபிரார்த்தனைகள்.
வாங்க வல்லிம்மா... வணக்கமும் இணைந்த பிரார்த்தனைகளும்.
நீக்குநன்றி.
நீக்குஎனக்கென்னமோ கல்யாணங்களில் அதுவும் தமிழ்நாட்டுக் கல்யாணங்களில் செண்டை மேளம் வைப்பது பிடிக்கவும் இல்லை. அதன் தாத்பரியமும் புரியவே இல்லை. நாதஸ்வரம் வைப்பதே கல்யாணத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் குறிப்பிட்ட பாடல்கள் பாடப்பட வேண்டும் என்னும் நியதியை ஒட்டியே. அது மாறுவதோ/மாற்றப்படுவதையோ ரசிக்க முடியலை. :(
பதிலளிநீக்குநாலுபேரை திரும்பிப் பார்க்க வைக்கும் நிகழ்ச்சி என்பது தவிர வேறொன்றுமில்லை.
நீக்குமங்களகரமான நிகழ்ச்சிகள் கல்யாண மேடையில் நடக்கும்போது, குழந்தை அழும் சத்தம், தும்மும் சத்தம், யாரையாவது யாராவது தீட்டும் சொற்கள், விளையாட்டில் கீழே விழுந்த சிறுவர் 'ஐயோ' என்று எழுப்பும் அமங்கல ஒலி இவை யாவும் கேட்கக்கூடாது என்பதற்காகத்தான் கெட்டிமேளம், மேல் ஸ்தாயி நாதஸ்வர இசை எல்லாம். செண்டை சத்தத்தில் இவை எல்லாம் அடக்கப்படுமா?
நீக்குசெண்டையை அடக்குவதெப்படி?
நீக்கு//தமிழ்நாட்டுக் கல்யாணங்களில் செண்டை மேளம் வைப்பது பிடிக்கவும் இல்லை// - நாம, நம் இடங்களில் உள்ள பாரம்பர்ய கலைஞர்களை ஆதரிக்கணும். அதுதான் கான்சப்ட். செண்டை மேளம் வைப்பதால், நாதஸ்வரக் கலைஞர்கள் அருகிவிடுவார்கள். பெங்களூர்ல சில வருடங்களுக்கு முன் நடந்த திருமணத்தில் தமிழகத்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த நாதஸ்வரம் வைத்திருந்தார்கள். ரொம்ப ரசிக்கும்படி இருந்தது. (அதே சமயம், நம்ம ஊர் கோவில்கள்ல நாதஸ்வரம் நன்றாக வாசிப்பதில்லை. இரண்டு வர்ணம் கற்றுக்கொண்ட உடனேயே திருவிழா, கோவில்களில் வாசிக்க ஆரம்பிச்சுடறாங்கன்னு நினைக்கிறேன்)
நீக்குஶ்ரீராம் துரைக்கு மட்டும் பதில் சொல்லிட்டுக் கிளம்பிட்டார் போல!
பதிலளிநீக்குஹிஹிஹி... கடமை அழைக்கிறது!
நீக்கு:))))
நீக்குகீதாமா ,கேட்டிருக்கும் கேள்விகள்
பதிலளிநீக்குஎனக்கும் உண்டு. ஏதோ கோவிலில் பாண்ட் வாத்தியாம்,
நாதஸ்வர நாதத்தை அடக்கிவிட்டதைப்
பார்த்தேன். வருத்தமாக இருந்தது.
ஆடம்பரம் இல்லாமல் திருமணம் நடத்தலாமே.
திருமண மண்டபம் அருகே குடி இருப்பது கடினமே.
தி.நகரில் பெற்றோர் முதலில் குடியிருந்த இடத்தில்
ஒரு மண்டபம் இருந்தது.
திடீர் திடீர் என்று கொட்டு முழக்கம்.
தந்தை கண்ணயரும் நேரம் தடால் தடால்
என்று மெல்லிசைக் கச்சேரிகள். கொஞ்சம் சிரமம்தான்.
வாங்க வல்லி, இந்தச் செண்டை மேளத்தின் சப்தம் மெல்லிசைக்கச்சேரிகளையும் பாண்ட் வாத்தியத்தின் சப்தத்தையும் ஒண்ணும் இல்லைனு செய்து விடுகிறது. அன்னிக்கு ஒரு நாள் ஏதோ செய்யக் கத்தியையும், காயையும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்தால் திடீர்னு முழங்கிய செண்டைமேள சப்தத்தில் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எல்லாவற்றையும் கீழே போட்டேன். இரவு ஒன்பது மணிக்குப் பின்னரும் முழங்கும் சப்தம்!
நீக்குகல்யாண இம்சைகள் !!
நீக்குகத்தி கையில் இருக்கும்போது செண்டை மேளம் கேட்காதீர்கள்.. மென்மையாக எதையும் செய்யத்தெரியாதவர்கள், வாசிக்கத்தெரியாதவர்கள் கண்டுபிடித்தது இது!
நீக்குஅப்படிச் சொல்லமுடியாது ஏகாந்தன் சார்.. செண்டை மேளமும் ஒருவித தாளம்தான். நீங்க நம்ம தவில் கேட்டிருக்கீங்களா? நாச்சியார் கோவில்ல, கல்கருட சேவை நடந்த அன்று வாசிச்சாங்க. அதிலும் அங்க ஒரு தவில் வித்வான் இருக்கார். நான் இரண்டு மூன்று முறை கேட்டுவிட்டேன் (அந்தக் கோவில் விழாக்களுக்குச் சென்றிருக்கிறேன்). என்னா ஒரு தவில் அடி. பக்கத்துல நின்னு கேட்டால், சாப்பிட்டதுலாம் உடனே செரித்துவிடுவதைப் போல. முடிந்தால், அடுத்த வாரம் இங்கு பதிவிடுகிறேன்.
நீக்குஅந்த திருச்சூர் கோவில் ஆடிப்பூரமா!!! அந்த யானைகளுக்கு நடுவில் அவர்கள் அடிக்கும் ஓசை
நீக்குஅந்த யானைகளைத் துன்புறுத்துமோ என்று பயமாக
இருக்கும்.
அவைகள் ஏதோ சத்யத்துக்குக் கட்டுப்பட்டு அங்கே நிற்கின்றன.
நம்மூர் நாதஸ்வரமும் ,தவில்,மேளம் எல்லாமே அற்புதம்.
முரளிமா,
அதைப் பக்கத்தில் நின்று கேட்கக் கூடாது.
:)))
நீக்குஅன்பு கோமதியின் கரடிக் கோலம் மிக அருமை. அதுவும் கோலோடு கரடி:)நல்ல வண்ணங்கள்.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎழுத்தாளர்கள் சிரமப்பட்டது அந்தக் காலம் என்று நினைக்கிறேன். அதுவும்
பதிலளிநீக்குதங்கள் வாழ்க்கையில் வெற்றி பேரும் வழியைக் கண்டு
கொள்ளாமல் மறைந்தவர்களை நினைத்தால் வருத்தம் தான்.
ராக்கெட் மெஷின் சுவாரஸ்யம். எனக்குத் தான் பொறுமை இல்லை.
பதிலளிநீக்குகாணொளி பார்த்து, இரண்டே நிமிடங்களில் செய்ய இயலும்.
நீக்குஉண்மை.
பதிலளிநீக்குகேள்வி பதில்கள் எல்லாமே ரசிக்க வைத்தன...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்கு//நன்மையா இல்லையா என்பது// - பாரம்பர்யத்தைப் பற்றிய கேள்விக்கான பதில் உண்மையாக இருந்தது. எதுவுமே காலமாற்றங்களுக்கு உட்பட்டதுதான். அதனால் பாரம்பர்யம் என்று சொல்வதில் அர்த்தமில்லை.
பதிலளிநீக்குஆம்.
நீக்கு//எதுவுமே காலமாற்றங்களுக்கு உட்பட்டதுதான். அதனால் பாரம்பர்யம் என்று சொல்வதில் அர்த்தமில்லை.//@நெல்லைத் தமிழன்: புதன் கிழமைகளில் தடாலடியாக பேசுவது என்று வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது.
நீக்குஹி ஹி - அவர் ஓடிப்போயிட்டார் !! :))))
நீக்குஒவ்வொரு தடவை சிந்திக்கும்போதும் சில கருத்துக்கள் தோன்றும்.
நீக்குஅது சரி..எது பாரம்பர்யம் என்று நீங்கதான் சொல்லுங்களேன்... ஒரு காலத்துல ஓலைச்சுவடிகளை போகி சமயத்தில் ஆற்றில் விடுவது, எரிப்பது பாரம்பர்யம்னு சொன்னாங்க. அதுக்காக நாம இப்போ பசங்களோட (பழைய) புத்தகங்களை ஆற்றிலோ குளத்திலோ விடுகிறோமா? முப்பது வருடங்களுக்கு முன்னால், மெஷின் வச்சு மணியும் முரசும் அடிக்கற மாதிரி கருவி வந்தது. உடனே பாரம்பர்யத்தை விட்டுவிட்டு, திருப்பதில, துவாரபாலகருக்கு இடது புறத்தில் (நாம் சன்னிதியைப் பார்க்கும்போது நமக்கு இடது புறத்தில்) பெரியதாக முரசு, மணி போன்றவற்றுடன் கூடிய அந்தக் கருவியை வாங்கிவச்சாங்க (அப்புறம் ஒரு வருடத்திலேயே அது வேலை செய்யவில்லை. அப்படியே இருந்தது. பிறகு எடுத்துட்டாங்க). திருப்பதில லட்டு பிரசாதம்தான் பாரம்பர்யம் என்று இப்போ சொல்லும் நாம், இருநூறு வருடங்களுக்கு முன்பு அந்தப் பழக்கம் கிடையாது என்பதை மறந்துவிடுகிறோம். தமிழக பாரம்பர்யம் என்பது சீலை, ஆண்கள் வேட்டி துண்டு அணிவது. அந்த வழக்கமும் இப்போ கிடையாது. அதனால பாரம்பர்யம் என்று ஒன்று கிடையாது.
உடனே, 'நெல்லைத் தமிழனின் பாரம்பர்யம் தடாலடி கருத்துக்கள் தெரிவிப்பதுதான்' என்று சொல்லிடாதீங்க.
கரடிக்கோலம் - அழகு
பதிலளிநீக்குபறக்கும் இயந்திரம் - ஒருவேளை நல்ல கார்ப்பெட்டில் செய்தால், 28வது மாடியிலிருந்து அதில் உட்கார்ந்துகொண்டு குதித்தால், அடுத்த பில்டிங் செல்லமுடியுமா?
ஹா ஹா !! சின்ன வயதில் எனக்கும் அப்படி எல்லாம் ஆசை இருந்தது. பறக்கும் கம்பளம், மந்திரக்கோல் இதெல்லாம் எந்தக் கடையில் விற்பார்கள் என்று அறியும் ஆவல்!
நீக்குகோவில்களில் மட்டும் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்த செண்டை மேளத்தை நம்மூர் கல்யாணங்களுக்கு அழைத்து வந்த புண்ணியவான் யார் என்று தெரியவில்லை. சில திருமணங்களில் நாதஸ்வரம், செண்டை மேளம், பேண்ட் வாத்தியம் என்று எல்லாவற்றையும் ஒலிக்கச் செய்கிறார்கள். கஷ்டம்தான்.
பதிலளிநீக்குகொட்டி முழக்குகிறார்கள்! செண்டை மேளம் கேரளா origin என்று நினைக்கிறேன்.
நீக்குகொட்டுவதுதானே பாரம்பர்யம்...ஹாஹா (செண்டை மேளம் கேரளா)
நீக்குகொட்டியது மேளம்....
குவிந்தது கோடி மலர்...
கட்டினான் மாங்கல்யம்...
மனை வாழ்க துணை வாழ்க...
குலம் வாழ்க...
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸ்வாரஸ்யம்.
பதிலளிநீக்குகரடிக் கோலம் - நன்று.
பறக்கும் காகித எந்திரம் - சிறப்பு.
நன்றி.
நீக்குகேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபறக்கும் இயந்திரம் காணொளி பார்த்தேன், நன்றாக செய்து காட்டினீர்கள்.
பிள்ளைகள் செய்து வீட்டில் பறக்க விடுவார்கள்.
நன்றி.
நீக்குபாரம்பரியம் பற்றிய கேள்விக்கு # அவர்களின் பதில் சிறப்பு.
பதிலளிநீக்கு# சார்பில் நன்றி.
நீக்குகரடி படம் அழகு! திருத்தமாகவும், நுட்பமாகவும் வரையப் பட்டிருக்கிறது.
பதிலளிநீக்குஆம், உண்மை.
நீக்கு//சந்தேகங்கள் ஏதாவது இருந்தால், பின்னூட்டத்தில் கேளுங்கள். //
பதிலளிநீக்கு1. நீங்கள் ராக்கெட் செய்வதை யார் படம் எடுத்தது?
2. நீங்கள் ஏன் மொட்டைமாடிக்குச் சென்று அங்கிருந்து இதனைப் பறக்கவிடவில்லை?
3. இந்தச் சந்தேகம் இப்போது இங்கு கேட்கவில்லை. வாட்சப்பில் கேட்டுக்கொள்கிறேன்
1) நான் ராக்கெட் எதுவும் செய்யவில்லை.
நீக்கு2) மொட்டைமாடிக்கு செல்லும் வழி எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் மூடப்பட்டுள்ளது. சிறுவர் சிறுமியர் அங்கே சென்று விளையாடுவது ஆபத்து என்பதால்.
3) ஆம். அதுதான் சௌகரியமாக உள்ளது.
எழுத்தாளர்களில் பலர் சுய சந்தோஷத்திற்காகத்தான் எழுதுகிறோம். இப்போது ரெககனிஷன் ஊடகங்களில் கிடைத்து விடுகிறது. அதனால் வேலைக்கு சென்றபடி,மனதுக்கு பிடித்ததையும் செய்ய முடிகிறது. அதனால் வறுமையில் வாட வேண்டிய அவசியம் இல்லை.
பதிலளிநீக்குநல்ல கருத்து.
நீக்குபா.வெ. மேடம்... உங்கள் கருத்து எனக்கு உடன்பாடல்ல. எழுதறவங்க எல்லாரும் எழுத்தாளர்னு சொல்லமுடியுமா? எழுத்தையே பெரும்பகுதி தொழிலாக வைத்திருப்பவர்கள் மட்டும்தான் எழுத்தாளர்கள். அதுல அவங்களுக்கு என்ன கிடைக்கும்? சந்தோஷம் மட்டும்தான் (அதுவாவது மிஞ்சுமா? சக விமர்சகர்கள் நிம்மதியா இருக்க விட மாட்டாங்களே..திகசி போல)
நீக்குநல்ல கேள்வி பதில்கள்...
பதிலளிநீக்குகரடிக்கோலம் அழகு...
காகித விமானம் - ஏறிய கூடாது விளக்கம் உட்பட, படங்களுடன் விளக்கமும் காணொளிகளும் அருமை... அந்த உற்காசமான ஈடுபாடுடைய விளக்கமாக பதிவு செய்தது மகிழ்ச்சி... வாழ்த்துகள்...
நன்றி, நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. ரசித்தேன்.
கரடி கோலம் நன்றாக உள்ளது. பார்த்தவுடன் அருமையான கோலமாக பொறுமையுடன் வரைந்த சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு பாராட்டுக்கள்.அதை எங்களுக்கு பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்.
நீங்கள் செய்து காட்டிய பறக்கும் காகித விமானம் அழகாகவும், எளிதாகவும் உள்ளது. குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் நன்கு ஈடுபாட்டுடன் விளையாடுவார்கள். செய்கிறேன். அனைத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி. கொஞ்சம் வேலை பளு காரணமாக தாமதமாகி விட்டது. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி. காகித விமானம் செய்து, பறக்க விட்டு, அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நீக்குஎல்லோருக்கும் பழைய காலம், பழைய உரல், திருவை, கும்முட்டி அடுப்பு பிடிக்குதுன்னு சொல்றாங்க. கிராமம் பிடிக்குதுங்கறாங்க. அப்புறம் ஏன் அந்த வாழ்க்கைக்குப் போக மாட்டேன் என்கிறார்கள்?
பதிலளிநீக்கு@நெல்லைத்தமிழன் எல்லோருக்கும் பிடிக்கத்தான் செய்கிறது ஆனால் வேலை வாய்ப்பு எல்லாம் நகர்புறத்தில்தானே இருக்கிறது அதைவிட்டுவிட்டு பிடிப்பதற்காக கிராமப புறத்தில் வசிக்க முடியுமா? வேஷ்டி சேலை கட்ட எல்லோருக்கும் பிடிக்த்தான் செய்கிறது அதற்காக அதை பிடித்து இருக்கிறது என்பதற்காக ஐடி ஆபிஸிற்கு போக முடியுமா அல்லது அதற்காக வேலையை விட்டுவிட்டு சேலை கட்டிக் கொண்டு வீட்டில்தான் இருக்க முடியுமா?
ஸ்ரீராம்விற்கு அனுஷ்கா தமன்னா புடிக்கலாம் அதற்காக கட்டிய மனைவியை விட்டுவிட்டு அவர்கள் கூட குடித்தனம் நடத்த முடியுமா?
அவ்வ் !!!
நீக்குபிறரிடம் தாம் பெற்றுக் கொள்ளும் எல்லாமே கடன், எப்படியும் திருப்பிக் கொடுத்தாக வேண்டும் என்பது சரியா?
பதிலளிநீக்கு@நெல்லைத்தமிழன் சரி என்று சொல்லத்தான் ஆசை.. அப்பத்தான் மனைவியிடம் இருந்து பெறும் பூரிக்கட்டை அடியை அவருக்கு திருப்பி தர முடியும் ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
:))))))
நீக்குரசித்தேன்
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு