தேவையான பொருள்கள்:
பெரிய தக்காளி - 4
மீடியம் சைஸ் உருளைக் கிழங்கு - 1
வெங்காயம் - 1
பூண்டு(தேவையென்றால்) - 4 பல்
மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு - 1 டீ ஸ்பூன்.
தக்காளி மற்றும் உருளைக் கிழங்கை கழுவி குக்கரில் வைத்து இரண்டு விசில் விடவும். பத்து நிமிடங்கள் கழித்து, குக்கரை திறந்து உருளைக் கிழங்கை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியின் மேல் தோல் உரிந்து வந்திருக்கும். அதை உரித்து விட்டு, தக்காளி, உ.கி இரண்டையும் மிக்சியில் இட்டு அரைத்துக் கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, இன்னும் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து, உப்பு போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி அதன் மேல் மிளகு தூளை போட்டு சூடாக சாப்பிடலாம். சதுரமாக கட் பண்ணப்பட்ட ப்ரெட்டை நெய்யில் வறுத்து போடுவது, க்ரீம் சேர்ப்பது போன்றவை சூப்பின் சுவையைக் கூட்டும்.
உருளைக்கிழங்கு போடுவதால் சூப்பிற்கு கெட்டித்தன்மை கிடைக்கும். இதற்குப் பதிலாக சோள மாவு அல்லது மைதா மாவு சேர்க்கலாம். ஆனால் உ.கி.யின் சுவை தனி.
சூப்பின் சுவையை கூட்டுவதில் உ.கி. உத்தமம், சோள மாவு மத்திமம், மைதா மாவு அதமம்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம். ரதசப்தமி ஸ்பெஷல் எதுவும் உண்டா?
நீக்குஹாஹாஹாஹா, காடரிங் சாப்பாடு. ஆனால் சாத்வீகமாய்த் தான்.அண்ணா, தம்பி குடும்பத்துடன் வராங்க. நான் தான் சமைப்பேன் எனப் பிடிவாதம் பிடித்தேன். இரண்டு பேரும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க! இஃஃகி,இஃகி,இஃகி! அம்புட்டு பயம் போல! ஆனால் காடரரும் மதுரை தான். சுற்றி வளைச்சுத் தெரிஞ்சவங்க. மதுரையில் காக்காத்தோப்புத் தெருவாசியாய் இருந்தவங்க. முதல் முதலாய் வாங்கறோம். எப்படினு பார்க்கலாம்!
நீக்குஇங்க, ரதசப்தமிக்கு, 108 சூர்யநமஸ்காரம், அதைத் தொடர்ந்து 1007 அக்னிஹோத்திர ஹோம்ம் என்று யோகா கிளாஸில், அழைத்தார்கள். 36 சூர்யநமஸ்காரத்துக்கே நாக்கு தள்ளிடுச்சு... நாங்க வரலைனு சொல்லிட்டோம் அதற்கு இரண்டுநாள் கழித்து முழு நாள் டிரெக்கிங் போன்றவைக்கும் கூப்பிட்டாங்க. (மெயின் காரணம் கொரோனா சமயத்துல எதுக்கு வம்பு என்பதுதான்)
நீக்குஆ... காக்கா தோப்புத் தெரு.. அப்பா, அம்மா, அண்ணன் அண்ணி வசித்த இடம்!
நீக்குசூரிய நமஸ்காரங்களின் செய்முறைகளை தினம் ஒரு மணி நேரம் செய்தாலே போதும். 108 என்பதெல்லாம் ரொம்பவே அதிகம். எந்த யோகா வகுப்பு? ஆர்ட் ஆஃப் லிவிங்க்?அப்படின்னா சீக்கிரம் வெளியே வாங்க!
நீக்குஸ்ரீராம், நீங்க? காக்காத்தோப்புத் தெருவில் வசித்ததே இல்லையா? எனக்கு உறவுகள் இருந்திருக்காங்க.
நீக்குஅவ்வப்போது சென்று வந்ததோடு சரி. சென்னையில்தான் பணி.
நீக்கு//காடரரும் மதுரை தான்.// சமையல் நன்றாக இருப்பதாகத்தான் தோன்றும்.
நீக்குஆர்ட் ஆஃப் லிவிங்க்?அப்படின்னா சீக்கிரம் வெளியே வாங்க!Wy? Why? Why?
நீக்கு//சூரிய நமஸ்காரங்களின் செய்முறைகளை தினம் ஒரு மணி நேரம் செய்தாலே போதும்.// - என்னாது... ஒரு மணி நேரமா? ஹையோ ஹையோ...
நீக்குசூரிய நமஸ்காரம் ஒரு செட், அதாவது 6 X 2 கொண்ட 12 சூரிய நமஸ்காரத்துக்கு 7 நிமிஷம் ஆகும். அப்போ 9 தடவை செய்ய 1 மணி நேரம் ஆகும். கணக்கு சரியா வந்துடுச்சே...
எங்க வளாகத்துலயே பதஞ்சலி யோக மையத்துலேர்ந்து வந்து கிளாஸ் எடுக்கறாங்க. 7-8 மணி தினமும்.
நீக்குநான் AOL சுதர்சன க்ரியா செய்யறேன் ஆனால் வாரத்துல ரெண்டு நாள் விட்டுப்போயிடுது. முன்ன மாதிரி ரொம்ப சின்சியரா தினமும் செய்யறதில்லை. சாதாரணமா 42 நிமிஷம், வாரத்துல ஓரிரு நாட்கள் 73 நிமிஷம்.
தக்காளி சூப் என்றால் தக்காளியை மட்டும் சாறு எடுத்து உப்பு, மிளகுபொடி சேர்த்துக் கொஞ்சம் வெண்ணெய் போட்டுக் குடிக்கலாம். உ.கி. சேர்த்தால் அது தக்காளிக் கூட்டு மாதிரி ஆயிடுமோ? தெரியலை. நான் முன்னெல்லாம் வெள்ளை சாஸ் பண்ணி வைச்சிருப்பேன். இப்போக் குழந்தைகள் இல்லாததால் எங்க இருவருக்குனு முருங்கைக்கீரை சூப் பண்ணும்போது கூட எல்லாவற்றையும் சேர்த்துக் கொதிக்கவைத்து அப்படியே வடிகட்டி மிளகு பொடி, வெண்ணெய் சேர்த்துக் கொடுத்துடுவேன். சூப்பில் உ.கி./வெள்ளை சாஸ் சேர்ப்பது சுவைக்கு மட்டும் இல்லை. கொஞ்சம் கெட்டித்தன்மைக்காகவும் தான். என்றாலும் உ.கி சேர்த்தால் எப்படி இருக்குமோ என்று சந்தேகமாவும் இருக்கு.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய திங்கப் பதிவில் தாங்கள் செய்த தக்காளி சூப் படங்கள், செய்முறை விளக்கத்துடன் மிகவும் நன்றாக உள்ளது. அருமையாக செய்து காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
மேலும் தக்காளியின் ஜாதக பலா பலன்களையும் அறிந்து கொண்டேன்.
தக்காளியின் தன்னிலை உணர அதற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு விவரமும் தெரிந்து கொண்டேன்.
தக்காளியின் மற்ற சிறப்புகள் நன்று. தினமும் ஏதாவது ஒரு வகையில் அது சமையலுக்கு பயன்படுகிறது.
அது முகஎழிலுக்கு பயன்படுவதால்தான் தக்காளியை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து அடித்து மேல்நாட்டில் அதை ஒரு வைபவமாக தக்காளி திருவிழாவாக கொண்டாடுகின்றனர் போலும். (எந்த நாடு என நினைவிலில்லை. இப்போது எல்லாவிடத்திலும் அந்த திருவிழாக்கள் வந்து விட்டதோ என்னமோ..) பகிர்வினுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா!
நீக்குபானுமதி சமையலில் நிறையப் புதுமைகளைப் புகுத்துகிறார். இம்முறையில் தக்காளி சூப் பண்ணிக் குடிச்சுட்டு எப்படி இருக்குனு யாரானும் சொல்லுங்கப்பா! :)))))) நாராயணா! நாராயணா!
பதிலளிநீக்குதக்காளி சாறு மட்டும் எடுத்து செய்யும் பொழுது சற்று நீர்க்க இருக்கும். அதற்காகத்தான் உ.கி. கொஞ்சமாகத்தானே சேர்க்கிறோம், வெங்காயம், தக்காளியோடு ஜெல் ஆகி மிக நன்றாக இருக்கும். கூட்டு போல ஆகாது.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் இறைவன் அருளோடு சிறந்து இருக்கப் பிரார்த்தனைகள்.
தக்காளி, உ.கி சூப் என்கிற பெயர்தான் சரி பானுமா.
உ கி கோவித்துக்கொள்ளும்
பெயர் சொல்லாவிட்டால்.
ஆமாம்ம்ம்ம்ம்ம்ம்ம்.வெங்காயம் எப்போ போடணும்.?
தக்காளி சூப் செய்யும் போது
அதில் பொடியாக நறுக்கிய உ.கியையும் வறுத்துப் போடலாம்
என்பது அடியேனின் தாழ்மையான
விருப்பம்.
தில்லிக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தீர்களா. இணையம் உண்டா.
எல்லாவற்றுக்கும் பதில்.
ப்ளெயின் தக்காளி சூப்பும் பண்ணலாமே! நானும் வெங்காயம் கொஞ்சம் சேர்ப்பேன் தான். நாளைப் பொறுத்து! சி.வெ. நறுக்கி நெய்யில் வதக்கிக் கொண்டு கூடவே தக்காளியையும் நறுக்கிச் சேர்த்து வதக்கிக் கொண்டு விடுவேன். பின்னர் வடிகட்டிக் குடிக்கணும். தாளிப்பில் ஜீரகம், சோம்பு, முழு மிளகு, லவங்கம், லவங்கப்பட்டை, ஏலக்காய் போட்டுச் சர்க்கரை கொஞ்சம் சேர்த்து மல்லிப் பொடி போட்டு வதக்கிக் கொண்டு உப்புச் சேர்த்துக் குக்கரில் வைத்துவிட்டால் பின்னர் வடிகட்டிக் குடிக்கையில் மிளகு பொடி சேர்ப்பேன்.
நீக்குஹிஹிஹி... நான் ஒரு பல் பூண்டும் சேர்ப்பேன்!
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குதில்லிக்கு போகும் பதிவர் யாரென தெரிந்து கொண்டேன். நேற்றிலிருந்து தலை காய்ந்தது.:) நன்றி.
பூண்டு ஒத்துக்கறதே இல்லை ஶ்ரீராம்! :(
நீக்குதக்காளி, உ.கி.யோடு வெங்காயத்தையும்,சேர்த்துதான் குக்கரில் வேக வைக்க வேண்டும். படத்தில் காட்டியிருக்கிறேன், குறிப்பிட மறந்து விட்டேன்.
நீக்குசெளகரியமாக டில்லி வந்து சேர்ந்தோம். அவ்வளவாக குளிர் இல்லை. பெங்களூர் அளவுதான்.
நீக்கு//தில்லிக்கு போகும் பதிவர் யாரென தெரிந்து கொண்டேன்.// ஹாஹா! ஶ்ரீராம் செய்த வேலை.
நீக்குதக்காளி சூப்பில் உருளைக்கிழங்கா? கூட்டு மாதிரி இருக்குமோ? இங்க தக்காளி விலை இரண்டு மாதங்களாக 15-18 ரூபாயிலேயே இருக்கு. நானே தக்காளி ஜூஸ் தினமும் சாப்பிடலாமான்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். ஜீனி போட்டாத்தான் பிடிக்கும் என்பதால் எதுக்கு வம்புன்னு இன்னும் ஆரம்பிக்கலை.
பதிலளிநீக்குசரி..சரி.. இப்போ தக்காளி வாங்கக் கிளம்பறேன்... அது சரி.. நாட்டுத் தக்காளியா இல்லை பெங்களூர் தக்காளியா?
நான் பெங்களூரு தக்காளிக்கே வாக்களிப்பேன்!
நீக்குஆனால்.. நாட்டுத்தக்காளி சில சமயம் புளிப்பு தூக்கலாக இருக்கும். பெங்களூரு என்றால் ஜீனி கம்மியாக சேர்க்கலாம்.
நீக்குஎன்னோட ஓட் நாட்டுத்தக்காளிக்கே. சுவை, மணம், உடல் நலம் எல்லாவற்றிற்கும் அதுவே நல்லது. பெண்களூர்த் தக்காளியின் அடிப்படையே உ.கி.+தக்காளியின் மரபணுக்களைச் சேர்த்து உருவாக்கியது தானே! தனியா உ.கி. எதுக்குச் சேர்க்கணும். சாறே இருக்காது.
நீக்குநெல்லை, எந்தப் பழச்சாறு சாப்பிட்டாலும் காய்கறிச்சாறு சாப்பிட்டாலும் சிறிதளவு மிளகு பொடி மட்டும் சேர்க்கலாம். பழச்சாறுகளை சர்க்கரையோ வேறே ஏதேனும் இனிப்புக்களோ இல்லாமல் அப்படியே தான் சாப்பிடணும். சர்க்கரை கூடவே கூடாது. பழச்சாறின் சுவையை மட்டுமில்லாமல் ஆரோக்கியக் கேடும் கூட.
நீக்குநாட்டுத்தக்காளியில் கூட்டு/தக்காளிக்காயில் பிட்லை, தக்காளி பழுத்ததில் தக்காளிச் சட்னி என்று செய்து பாருங்கள். பின்னர் விட மாட்டீங்க!
நீக்குநாட்டுத்தக்காளியில் புளிப்பு தூக்கலாக இருக்கும். தக்காளி தொக்கு, தக்காளி சட்னிக்கு சரியாக இருக்கும். சூப்பிற்கு பெங்களூர் தக்காளிதான் சரி.
நீக்குகீசா மேடம்... கடையில் சாப்பிடும் தக்காளிக் கூட்டு (பாசிப்பருப்பு இருக்கும், வெங்காயம் இருக்கும்) செய்முறை எழுதுங்க ப்ளீஸ்.. நாளைக்கு அதுதான் செய்யச் சொல்லப்போறேண்
நீக்குதக்காளியின் சிறப்புகளை அலசியது அருமை.
பதிலளிநீக்குநல்லதொரு பதிவு பானுமா.
ஆமா இல்ல! தக்காளி பற்றிய தகவல்கள் சிறப்பு. தக்காளி விற்றுக் கோடீஸ்வரர் ஆனவர் பற்றிச் சொல்லி இருக்கலாமோ!
நீக்கு//நல்லதொரு பதிவு பானுமா.// நன்றி வல்லி அக்கா.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். இன்றைக்கு என்னுடைய மண்டகப்படியா?
பதிலளிநீக்குசெய்முறை சொல்லிய விதம் நன்று
பதிலளிநீக்குபழச்சாறுகளில் இனிப்பு மட்டுமல்ல, பால் சேர்த்து மில்க் ஷேக் என்று குடிப்பதும் தவறு மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட.
பதிலளிநீக்குகடைசியில் பத்து நிமிடங்கள் என்பதற்கு பதில் பாத்து நிமிடங்கள் என்று அடித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஇப்போ சரி செய்துவிட்டேன்.
நீக்குநன்றி
நீக்குஅடுத்த தடவை வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் உருளைக்கிழங்கு போட்டு சூப் தயாரித்து கொடுக்கப் போகிறேன் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் நானே கிரெடிட் எடுத்து கொள்வேன் இல்லையென்றால் பானுமதி மேடத்தை நோக்கி கையை காட்டிவிட வேண்டியதுதான்
பதிலளிநீக்குகவலையே இல்லை, நன்றாகத்தான் வரும். ஆர்வக்கோளாறில் உ.கி.யை அதிகம் போட்டு விடாதீர்கள்.
நீக்குசுவையான குறிப்பு. இங்கே பல நிகழ்வுகளில் ஸ்டார்ட்டர் சூப் தான்.
பதிலளிநீக்குஆம், சூப்பில் தொடங்கி, டெஸர்ட்டில்(இனிப்பு) முடாப்பதுதானே மரபு.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குநலம் வாழ்க எங்கெங்கும்...
அன்பின் வணக்கம்.
நீக்குநல்ல குறிப்பு..
பதிலளிநீக்குவிடியற் காலையிலேயே படித்தாயிற்று...
கருத்துரைக்குத் தாமதம் - கடுங்குளிர்...
அமெரிக்க ஹூஸ்டனில் பனிப் புயல்...
இங்கும் கை நடுக்கும் குளிர்.. சாரல்..
ஓ !
நீக்குOMG! குளிருக்கு இதமாகத்தான் இருக்கும் இந்த சூப்!
நீக்குஉருளைக்கிழங்கு சேர்ப்பது புதுமுறையாக இருக்கிறது... உத்தமம் என்பதால் சேர்த்து - சுவைத்து - செரித்து - பார்த்து விட வேண்டியது தான்...!
பதிலளிநீக்குபார்த்து விட்டு சொல்லுங்கள்.
பதிலளிநீக்கு❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
பதிலளிநீக்குநான் கூட உருளைக்கிழங்கு போடுவது இல்லை தனித் தக்காளி சூப்பை நன்றாக இருக்கும் என்ற ஒரு எண்ணம் நன்றாக இருக்கிறது அன்புடன்
பதிலளிநீக்குதக்காளி சூப் செய்முறையும், படங்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதக்காளி பற்றிய குறிப்பும் பயன்களும் மிக அருமை.
அருமை
பதிலளிநீக்கு