நெல்லைத்தமிழன் :
நீ ஒரு மிருகம் என்றால் கோப்ப்படும் நாம், நீ ஆம்பளைச் சிங்கம்னா ஏன் சந்தோஷப்படறோம்?
# மிருகத்தின் எந்த குணத்தைக் குறித்து சொல்லப்பட்டது என்பதைப் பொருத்து, நம் உணர்ச்சி மாறுபடுகிறது. கட்டிளங்காளைனா ஒருமாதிரி, கோயில்காளை என்றால் வேறுமாதிரி - - -
$ ஆம்பிளை சிங்கம் இரை தேடிப்போகாமல் இருக்குமிடத்துக்கே உணவு வரும் என்பதை உணர்த்துகிறார்கள்.
தீவிரவாதிக்கும் போராளிக்கும் என்ன வித்தியாசம்? நமக்குப் பிடித்தவன் போராளி, பிடிக்காதவன் தீவிரவாதின்னு எல்லாரும் பஜனை பாடறாங்களே.
# உண்மையான பிரச்சினைகளுக்கு தீவிரமாக நேரடியாகப் போராடுபவர் போராளி. தன் பக்கம் நியாயம் இருக்கிறதா என யோசிக்காமல் வன்முறை-பயங்கர வாதம் செய்பவர் தீவிரவாதி. ஒருவரை தீவிரவாதியாக அடையாளம் காட்டுவது எளிய அரசியல் ஆயுதம்.
= = = =
டெட்டி கரடி.
டெட்டி கரடிக்கு அந்தப் பெயர் வரக் காரணம் என்ன, எப்பொழுது அந்தப் பெயர் பிரபலமாயிற்று என்று தெரியுமா?
சென்ற நூற்றாண்டின் ஆரம்ப காலம் - ஆண்டு 1902. நவம்பர் மாதம். அப்பொழுதைய அமெரிக்க ஜனாதிபதியை, மிசிசிபி கவர்னர் மற்ற சில வேட்டையாளர்களுடன் கரடி வேட்டைக்கு அழைக்கிறார். அன்றைய ஜனாதிபதியும் அந்த அழைப்பை ஏற்று, மற்ற வேட்டைக்காரர்களுடன், அந்த கரடி வேட்டை நிகழ்வில் பங்கேற்றார்.
ஆனால் - என்ன ஆயிற்று என்றால், மற்ற போட்டியாளர்கள் எல்லோருமே ஆளுக்கு ஒரு கரடியை வேட்டையாடிவிட்டனர். ஜனாதிபதிக்கு கரடி எதுவும் சிக்கவில்லை. அதனால், ஜனாதிபதியின் உதவியாளர்கள் சிலர், கஷ்டப்பட்டு தேடி, ஒரு கரடியை கண்டுபிடித்து, அதை அடித்து உதைத்து, கொண்டுவந்து ஒரு வில்லோ மரத்தில் கட்டினர்.
பிறகு ஜனாதிபதியை அழைத்து, " ஐயா - நீங்க இப்போ இந்தக் கரடியை துப்பாக்கியால் சுட்டு, போட்டியில் நீங்களும் ஒரு கரடியை வேட்டையாடியதாக கணக்குக் காட்டிவிடுங்கள் " என்றனர்.
அதற்கு அந்த ஜனாதிபதி, " நான் நிச்சயம் இதற்கு உடன்படவில்லை. வேட்டையாடும் போட்டியில் பங்கேற்றவர்கள் இப்படி செய்வது, வேட்டை விளையாட்டின் சரியான முறை அல்ல. நீங்கள் யாராவது இந்தக் கரடியை சுட்டு, அதற்கு துன்பத்திலிருந்து விடுதலை கொடுங்கள்" என்று சொல்லிவிட்டார்.
அப்பொழுது அமெரிக்கப் பத்திரிக்கை ஒன்றில் வெளியான கேலிச் சித்திரம் இது :
(நன்றி : விக்கிபீடியா )விரிவாக " Theodore Roosevelt "
Theodore என்ற பெயரை சுருக்கி அமெரிக்க மக்கள் teddy என்று குறிப்பிடுவது வழக்கம்.
இப்படித்தான் teddy bear என்னும் பெயர் பிரபலமாயிற்று.
ஆனால், அந்தப் பெயரில் பஞ்சு அடைத்த பொம்மைகள் தயாரிக்கப்பட்டது 1930 சமயத்தில்தான்.
டெட்டி கரடி பொம்மைகள் பெரிய அளவில் வியாபார பொருள் ஆனது 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான்.
சரி. இப்போது நான் உங்களுக்கு, 'டெட்டி கரடி' படம் வரைய சொல்லித் தருகிறேன்.
எல்லோரும் பேப்பர் & பென்சில் அல்லது பேனா எடுத்துக்குங்க.
கீழ்க்கண்ட வரிசையில், டெட்டி கரடி படம் போடுங்க. நீங்க போட்ட படத்தை எங்களுக்கு அனுப்புங்க.
நீங்கள் வரைந்த படங்களை அடுத்த வாரம் வெளியிடுகிறேன்.
ரெடியா?
இதோ ஆரம்பம் :
படம்
வரைய சொல்லிக்கொடுக்கிறேன் –
நீங்க பார்த்து வரைந்து, எங்களுக்கு அனுப்புங்க!
பார்த்து
படம் வரைங்க –
O
எட்டின் தலையில் பெரிய O
வரைந்த படம் எப்படி இருந்தாலும் – கீழே உங்கள் பெயரை எழுதி –
போட்டோ எடுத்து, எங்களுக்கு அனுப்புங்க.
வர்ணம் தீட்ட முடிந்தால் தீட்டலாம். இல்லையேல் வெறும் லைன்
ஸ்கெட்ச் போதும்.
அனுப்பவேண்டிய
மின்னஞ்சல் முகவரி : engalblog@gmail.com
Or send it to
whatsapp number 9902281582.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
= = = =
கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது..
பதிலளிநீக்குதமிழ் வாழ்க...
பால்: பொருட்பால்
நீக்குஅதிகாரம்/Chapter: படைச்செருக்கு / Military Spirit
குறள் 772:
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
மு.வரதராசன் விளக்கம்:
காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.
வாழ்க தமிழ் !
அனைவருக்கும் அன்பின் வணக்கம்..
பதிலளிநீக்குஎங்கெங்கும் நலம் வாழ்க...
வாழ்க நலம்.
நீக்குஇன்றைய கேள்விகள் நறுக்!...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபாவம்.. அன்றைய கரடிகள்...
பதிலளிநீக்குஎன்ன செய்வது !! காலத்தின் கோலம் !!
நீக்குகரடிக்கு வந்த சோதனை பயங்கரம்...
பதிலளிநீக்குபிழைத்துப் போகட்டும். விட்டு விடுவோம்!..
அதிலிருந்து உருவானதுதான் அன்பே உருவான சாதுவான டெட்டி கரடி!
நீக்குபிழைத்துப் போகட்டும்..
பதிலளிநீக்குவிட்டு விடுங்கள்!...
தொலைந்து போகட்டும்..
சுட்டு விடுங்கள்!...
இரு வேறுலகம் இது அல்லவா!..
ஏற்கெனவே அடித்துத் துவைத்து, குற்றுயிரும் குறையுயிருமாய் இருந்த கரடியை அப்படியே விட்டாலும் அது கரடிக்கு இம்சை என்பதால் டெட்டி - கரடிக்கு கருணைக் கொலை சிபாரிசு செய்தார்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அருமை. கேள்விகளுக்கேற்ற பதிவுக்கதையும் அருமை. டெட்டி (பியர்) கரடி கதை பற்றி அறிந்து கொண்டேன். பாவம் அந்த கரடி.. அதை அப்படியே விடக்கூடாதா? யாரையாவது சுட்டு விட சொல்ல அந்த ஜனாதிபதிக்கு எப்படி மனம் வந்தது?
படம் வரையும் முறைகள் நன்றாக உள்ளது. கலந்து கொள்ளும் ஆசை வருகிறது. எனக்கு நேற்று தடை செய்த இணையத் தொடர்பு இன்று வருகிறது. அதனால் இன்று காலை விஜயம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படம் வரைந்து அனுப்புங்க. நன்றி.
நீக்கு// பாவம் அந்த கரடி.. அதை அப்படியே விடக்கூடாதா? யாரையாவது சுட்டு விட சொல்ல அந்த ஜனாதிபதிக்கு எப்படி மனம் வந்தது?//
நீக்குஏற்கெனவே அடித்துத் துவைத்து, குற்றுயிரும் குறையுயிருமாய் இருந்த கரடியை அப்படியே விட்டாலும் அது கரடிக்கு இம்சை என்பதால் டெட்டி - கரடிக்கு கருணைக் கொலை சிபாரிசு செய்தார்.
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் பிரச்னைகள் நீங்கி மன அமைதியுடன் வாழப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குவரேன் அப்புறமாய்க் கேள்விகளோடு.
பதிலளிநீக்குவாங்க.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும்
பதிலளிநீக்குஎன்றும் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன்
அருள வேண்டும்.
வேண்டுவோம்.
நீக்குகேள்விகளும் அதற்குச் சொன்ன பதில்களும்
பதிலளிநீக்குமிக அருமை. ஆம்பிளை சிங்கம் இப்போது அதே போல இருக்கா
அதுவும் மாறிவிட்டதா என்றூ
தெரிய வேண்டும்:)
:))
நீக்குடெட்டி ரூஸ்வெல்ட் . மிகவும் மதிக்கப் படும்
பதிலளிநீக்குஜனாதிபதி. இப்படி எல்லோரும் வேட்டையாடி
அழித்திருக்க வேண்டாம்.
54 வருடங்கள் முன்பே நாங்கள் பெரியவனுக்கு
டெட்டி பேர் வாங்கினோம்.
அது இல்லாமல் அவன் எங்கேயும் நகர மாட்டான்.
அப்போது ஃபாண்டா யானையும் பிரபலம்.
கரடி வரைய எடுக்கப் பட்டிருக்கும்
வகுப்பு மிக சிறப்பு.
நன்றி. படம் வரைந்து அனுப்புங்க.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் , வாழ்க வளமுடன்.
நீக்குகீழே நானும் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறேன்:)1, கவலை, Anxiety, Depession வித்தியாசம் என்ன?
பதிலளிநீக்கு2, எல்லாமே டிஎன் ஏ யோடு வருவதா?
3, கவலைப் படுவதால் பிரச்சினைகள் தீருவதில்லை.
இருந்தும் அந்த உணர்ச்சியைப் போக்க முடிவதில்லை ஏன்?
4, தொடர்ந்து ரோலர் கோஸ்டர் போல
இந்த உணர்ச்சிகளில் மனம் செல்லும்போது
பாதிக்கப் படும் உடல் உறுப்புகள் எவை.
முன்பாகவே நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நன்றி .
நீக்குபதில் அளிப்போம்.
நீக்குகேள்வியும் பதிலும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குடெட்டி கரடிக்கு அந்தப் பெயர் வரக் காரணம் தெரிந்து கொண்டேன் என்று பேரனிடம் சொல்கிறேன் அவன் சொல்ல ஆரம்பிக்கும் முன்னே மீதி கதையை சொல்கிறான்,
அவனிடம் பெரிய டெட்டிபேர் இருக்கிறது.
நீங்கள் வரைந்த படம் நன்றாக இருக்கிறது.
பேரன் அவன் ஒன்று வரைந்து தந்தான் என்னிடம்.
படம் கிடைத்தது. நன்றி. அடுத்த வாரம் புதன் பதிவில் வெளியிடுகிறோம்.
நீக்குஅனைவருக்கும் கால வணக்கம். அதென்ன புதன் கிழமைகளில் மட்டும் நிறைய பேர்கள் விரைவாக வந்து விடுகிறார்கள்? தங்கள் பெயரை பார்க்கும் ஆசையா?
பதிலளிநீக்குடெடி பேர் - பெயர் விளக்கம் சுவை!
டி.ஆருக்கும், கரடிக்கும் என்ன தொடர்பு? என்னும் தலைப்பு வேறு எதையோ யோசிக்க வைத்தது.
டெடி பேர் படம் வரையும் குறிப்பு சுலபமாக இருக்கிறது. பார்க்கலாம். எவ்வளவோ பண்ணிட்டோம், இதைப் பண்ண மாட்டோமா?
// டி.ஆருக்கும், கரடிக்கும் என்ன தொடர்பு? என்னும் தலைப்பு வேறு எதையோ யோசிக்க வைத்தது. // :))))
நீக்கு// டெடி பேர் படம் வரையும் குறிப்பு சுலபமாக இருக்கிறது. பார்க்கலாம். எவ்வளவோ பண்ணிட்டோம், இதைப் பண்ண மாட்டோமா? // அனுப்புங்க.
நீக்குநிறைய கேள்விகள் வரவில்லையா அல்லது எப்போதும்போல் மறந்துவிட்டீர்களா?
பதிலளிநீக்குகேள்விகள் வரவில்லை.
நீக்குகேள்வி பதில் இரண்டும் சுவாரஸ்யம். நானும் பானுவைப் போல நம்மூர் டிஆர் பற்றி நினைத்தேன். அவர் நினைவு தான் பானுவுக்கும் வந்ததா என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குகரடி போல தாடி... இதை எழுதும் போது இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. மஹாட்ரியா என்று ஒரு பேச்சாளர். அவரது யூட்யூப் விடீயோவில் ஒரு பெண் கரடி போல இருக்கிறீர்கள். முதலில் ஷேவ் பண்ணிக்கொண்டு வாருங்கள் என்று காமெண்ட் போட்டிருந்தார்.
மனிதன் ஒரு சமூக விலங்கு என்று சமூகவியல் படிப்பின் முதல் வகுப்பில் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. அவனால் தனியாக வாழ முடியாது. கூட்டமாக வாழ்வது அவன் இயல்பு என்பதை விளக்க அப்படிச் சொல்லுகிறார்கள் என்பது புரிந்தபோது ஆச்சரியம் விலகியது.
கணக்கில புலி, ஆடு போல தலையாட்டினான், பாம்புச் செவி, கழுகுப் பார்வை போன்ற வார்த்தையாடல்கள் நமக்கும் விலங்குகளுக்கும் இருக்கும் ஒற்றுமையை சொல்லுகின்றன இல்லையா?
டெட்டி பேர் பெயர்க்கும் காரணம் தெரிந்தது. என் பேத்தியிடமும் வேறு வேறு அளவுகளில் இந்த பொம்மைகள் உள்ளன. அவளைப் படம் வரையச் சொல்லுகிறேன். அவள் வரைந்தால் அனுப்புகிறேன்.
// கணக்கில புலி, ஆடு போல தலையாட்டினான், பாம்புச் செவி, கழுகுப் பார்வை போன்ற வார்த்தையாடல்கள் நமக்கும் விலங்குகளுக்கும் இருக்கும் ஒற்றுமையை சொல்லுகின்றன இல்லையா?// ஆம்!
நீக்கு// டெட்டி பேர் பெயர்க்கும் காரணம் தெரிந்தது. என் பேத்தியிடமும் வேறு வேறு அளவுகளில் இந்த பொம்மைகள் உள்ளன. அவளைப் படம் வரையச் சொல்லுகிறேன். அவள் வரைந்தால் அனுப்புகிறேன்.// வரையச் சொல்லி, வாங்கி அனுப்புங்க.
நீக்குமுதலில் இப்படி ஒரு முட்டை போடுங்க.
பதிலளிநீக்குஇரண்டு தவறுகள்,
1. வட்டத்தை முட்டை என்று கூறியது.
2. நாங்கள் முட்டை போட மாட்டோம். முட்டை வாங்கத்தான் செய்வோம்.
சும்மா ஜாலிக்குத்தான் சொன்னேன்! கணக்கு வாத்தியார் போடும் முட்டை இது. சயின்ஸ் வாத்தியார் போடச் சொல்லும் முட்டை வேறு !!
நீக்குகரடியின் கதையும், படமும் அருமை
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபயிற்சி வகுப்பு நன்று...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குசிலபடங்களை வரையபல எளிய முறைகள் அவற்றில் இதுவுமொன்று
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி.
நீக்குகரடி பொம்மை பெயர் காரணம் அறிந்தேன்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குதாடி வச்ச டி ராஜேந்தர் பத்தின பதிவுனு நினைச்சேன்.
பதிலளிநீக்குநானும் அப்படித்தான் நினைத்தேன்!
நீக்கு"கல்யாணம் பண்ணிப்பார்! வீட்டைக் கட்டிப்பார்!" என்பார்கள். இரண்டையும் செய்பவர்கள் பலர் இருக்காங்க! ஆனாலும் இது ஒரு கஷ்டமான வேலை என்பது போல் சொல்வதன் காரணம் என்ன?
பதிலளிநீக்கு2. வீடு கட்டும்போது உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் ஏதானும் உண்டா?
3. பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணுவது எளிதா? பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணுவது எளிதா?
4. நாம் பெற்ற குழந்தைகளுக்கு நாம் கொடுக்காத சலுகைகளைப் பேரக்குழந்தைகளுக்குக் கொடுப்பதன் உளவியல் காரணம் என்ன?
5. உறவுமுறைகளின் பெயர்கள் மறைந்து வருவது நல்லதா? உதாரணம்: "மன்னி" இப்போல்லாம் ஒரு பெண்/ஒரு பையர் என இருப்பதால் "மன்னி" என்பதே காண முடியவில்லை. அதே போல் சித்தி, பெரியம்மா, பெரியப்பா, அக்கா, தங்கை என்பதும் நாளடைவில் மறைந்து ஒழிந்து விடுமோ?
பதில்கள் அளிப்போம். நன்றி.
நீக்குஇந்த வாரம் இரண்டே இரண்டு கேள்விகள் மட்டுமே! என்னாச்சு கேள்வியின் நாயகர்களுக்கும், நாயகிகளுக்கும்! ஹாஹா....
பதிலளிநீக்குகேள்விகள் இல்லாததால் கரடி விட்டு - ஹாஹா கரடி கதையை விட்டு விட்டீர்கள் போலும்!
:)))) ஆம், அதே!
நீக்கு