வியாழன், 18 பிப்ரவரி, 2021

ஆமாம், யார் மேல் தப்பு?

 சென்னையின் போக்குவரத்து நெரிசலை அனுபவித்திருக்கிறீர்களா?  நான் தினம் தினம் அனுபவிக்கிறேன்.  பெங்களுருவில் இன்னும் மோசம் என்று முன்பு பெங்களூருவாசிகள் சொல்வதுண்டு.  அதுவும் கொரோனா காலத்தில் காலியான சாலைகளை பார்த்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டே வந்த நெரிசலை பார்த்து, அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.  இப்போது பழையபடி முழு நெரிசல்.


எல்லோருக்கும் அவசரம்.  காலையில் ஆறரை மணிக்குப் பணிக்குச் செல்லும்போது ஓரளவுக்கு குறைவான நெரிசல் சற்றே நிம்மதியைத் தரும்.  மாலை ஆறரை மணி ஏழுமணி நெரிசல் இருக்கிறது பாருங்கள்...    ஒன்பதரை பத்துமணி வரை குறையாது.  அதுவும் வார இறுதியாக இருந்தால் கேட்கவே வேண்டாம்!

ஒருநாள் மதியம் சாலையில் ஒரு காட்சி.  சிக்னலில் எங்கள் வண்டி நின்றிருக்க, எங்களைத் தாண்டிச் சென்று இடுக்கில் நுழைந்து நின்றது ஒரு இருசக்கர வாகனம்.  வண்டியின் பின்னால் இணைந்து இருக்கும் பெட்டியிலிருந்து அவர் பீட்ஸா விநியோகர் என்று தெரிந்தது. 

பீட்ஸா விநியோகர்களுக்கு முன்னர் இருந்த கண்டிஷன் இன்னமும் இருக்கிறதா என்று தெரியவில்லை.  அதாவது டெலிவரி செய்யப்பட்ட பீட்ஸாவில் சூடு இல்லை என்று கஸ்டமர் புகார் தெரிவித்தால் காசு வாபஸ்!  அப்படி யாரும் காசு வாபஸ் வாங்கி இருக்கிறார்களா என்று நான் அறியேன்!  

சாதாரணமாகவே எல்லோரும் மண்டை தெறிக்கும் அவசரத்தில்தான் சாலையில் பறப்பார்கள்.  அதிலும் இந்த ஸ்விக்கி, ஜொமாட்டோ காரர்களையே கேட்க வேண்டாம் என்றால் பீட்ஸ்ஸா காரர்களைக் கேட்க வேண்டுமா!

எங்களுக்கு அருகில் வந்து நின்ற ஆட்டோக்காரர் கைநீட்டி அந்த இளைஞனை திட்டினார்.  உடனே அந்த அர்ச்சனையில் ஆட்டோவில் இருந்த பெண் பயணிகளும் சேர்ந்து கொண்டார்கள்.  அவரைத் தாண்டி வந்து நின்ற இன்னொரு பைக்கரும் அர்ச்சனையில் கலந்தார்.  முதலில் லேஸாகத் திரும்பிப் பார்த்த பீட்ஸா இளைஞர் பின்னர் பேசாமல் போக்குவரத்தில் கவனமானார்.  பச்சை விழுந்தால் ஓடத் தயாராய் இருக்க, இப்போது இடதுபுறம் வந்து நின்ற பைக்கும் அவரைக் கைநீட்டித் திட்ட, இந்த இடது பைக்கில் நடுத்தர வயதைக் கடந்த இருவர் இருந்தனர்.   பீட்ஸா இளைஞனின் அலட்சியம் இவர்களை ஆத்திரம் கொள்ள வைத்தது.  எனக்கு அது அலட்சியமாகப் படாமல், 'இதெல்லாம் சகஜம், எனக்கு என் அவசரம், சீக்கிரம் போகணும்' என்கிற தவிப்பாய்த்தான் தெரிந்தது.

பச்சை சற்றே விழும் முன்னரே அவன் பறந்து விட, நாங்கள் சற்று தாமதமாக சென்றோம்.  அடுத்த சிக்னலின் முன் நான் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது.  பீட்சா இளைஞனின் பைக்கை இந்த நடுத்தர வயது இருவர் பைக் தாண்டிச் சென்று குறுக்கே வழிமறிக்க, அவன் தடுமாறி, பைக் சரிய, அவன் கீழே  விழாமல் நிற்க சமாளிக்க முயன்றவனை இறங்குவதற்கு முன்னரே தாக்கினார் ஒருவர்.  இன்னொருவர் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கி ஓட அதற்குள் அங்கு நின்றிருந்த போலீஸ்காரர் நெருங்கி வரவும் இருவரும் கிளம்பிப் பறந்து விட்டனர். 

மல்லாந்து விழுந்திருந்த இளைஞன் எழுந்துவந்து நாங்கள் தாண்டிச்சென்றபோது சாலை சுவற்றில் சரிந்திருந்த பைக்கை நிமிர்த்தினான்.

அந்த இளைஞன் முன்னர் என்ன செய்தான் என்று தெரியாது.  ஆனால் என் அனுதாபம் அவன்மேல்தான் விழுந்தது.  திரைப் படங்களில் வில்லன் மேல் இரக்கம் வருவது போல காட்சி அமைப்பதுபோல இந்தக் காட்சி இப்படி அமைந்து விட்டது.  இன்றைய ஊடகங்களும் தாங்கள் சொல்ல நினைப்பதை காட்சியாக அமைப்பபார்களே அதுவும் நினைவுக்கு வந்தது.

ஆமாம், யார் மேல் தப்பு?  

==================================================================================================

பேருந்துகள் ஓடாத கொரோனா காலத்தில் நான் கண்ட காட்சி இது.  காலை ஆறரை மன்னிக்குத் தாண்டிச் சென்றபோது...    அப்போதே எடுத்த புகைபபடம்!  இப்போது வெளியிட நேரம் வந்ததது.  என்ன குற்றம் செய்தார் என்று தெரியவில்லை.  ஆர்வம் தாங்க முடியாமல் மறுநாள் அங்கிருந்த ஒரு கடைக்காரரைக் கேட்டபோது அவர் சொன்ன விவரம் நம்பமுடியாமல் இருந்தது.  




பஸ்ஸ்டாண்டில் நின்றிருந்த பஸ்ஸை ஒட்டிக்கொண்டு வந்து விட்டார் என்றார்கள்.  'அப்படி எடுக்கக் கூடிய வகையிலான பஸ்ஸை அங்கு வைத்திருப்பார்கள்?" என்று கேட்டேன்.  ரொம்ப நாள் ஓடாமல் இருந்தால் கோளாறாகிவிடும் என்று அவ்வப்போது எடுத்து பஸ்ஸ்டான்ட் பிளாட்பார்மை ஒரு சுற்று சுற்றி ஒட்டிவிட்டு நிறுத்தி வைப்பார்கள்..  அப்படி நிறுத்தி வைத்திருந்த பஸ்ஸை ஓட்டி வந்து விட்டான்..  பைத்தியம் என்று சொல்கிறார்கள்.." என்றார்.   உண்மையோ, பொய்யோ....

மக்களின் உடனடி தீர்ப்பும் தண்டனையும் அது!  அப்புறம் அந்த நபர் என்ன ஆனாரோ...

====================================================================================================

பட்டிமன்றங்களில் .சுவையாகப் பேச தனித்திறமை வேண்டும்.  எனக்கு ராஜா, பாரதிபாஸ்கர் போன்றோரின் பேச்சுகள் கேட்கப் பிடிக்கும்.  அப்புறம் வாட்ஸாப்பில் அடிக்கடி இந்தப்பெண்மணியின் பேச்சுகள் வர ஆரம்பித்தன.  அவர் யார் என்று பார்த்தபோது அவர் பெயர் பர்வீன் சுல்தானா என்று தெரிந்தது.  அந்தப் பெயரில் ஒரு வடமொழிப் பாடகியைத்தான் கேள்விப்பட்டிருந்தேன்.  இவர் பேச்சுகளும் சுவாரஸ்யமாக இருந்தன.  சமீபத்தில் ஏதோ ஒரு பத்திரிகையில் அவர் பற்றி வந்திருந்ததை தினமலரில் 'சொல்கிறார்கள்' பகுதியில் எடுத்துப் போட்டிருந்தார்கள்.  எங்கிருந்து எடுத்தோம் என்று போடமாட்டார்கள்!


​"எனக்கென 'ரோல் மாடல்' யாரும் இல்லை!" 

மேடை பேச்சால் ஏராளமானோரை ஈர்த்து உள்ளது பற்றி, பர்வீன் சுல்தானா: "சென்னையில் தான் படித்தேன். குறிப்பாக, ராயப்பேட்டை மீர்சாகிப்பேட்டை மாநகராட்சி பள்ளி, செயின்ட் ஜான்ஸ் கிறிஸ்துவ பள்ளி, லேடி வெலிங்டன் பள்ளிகள் தான், என்னை பட்டை தீட்டின. என் பேச்சுக்கு, அங்கிருந்த ஆசிரியர்கள் ஆதரவு அளித்தனர். அதனால் நல்ல ஆளுமை திறனுடன் வளர்ந்தேன். பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, சமூக சேவை இயக்கத்தில் இருந்தேன். பல ஊர்களுக்கும் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அதுவும் என் ஆளுமைத் திறனை வளர்த்தது. 

சென்னை, நந்தனம் அருகே உள்ள, எஸ்.ஐ.டி., கல்லுாரியில், பி.எஸ்சி., ரசாயனம் படிக்க சேர்ந்தேன். எனினும் அந்தப் படிப்பில் நாட்டம் இல்லாததால், அண்ணாசாலையில் உள்ள, காயிதேமில்லத் கல்லுாரியில் சேர்ந்து விட்டேன்.

கல்லுாரி காலத்தில் பல பேச்சு போட்டிகள், கவிதை போட்டியில் பங்கேற்றேன். கம்பன் கழகம், என் பேச்சாற்றலுக்கான கதவை திறந்தது. பாண்டிச்சேரி கம்பன் கழகத்தின் அருணகிரி அய்யாவை பார்த்து, யாரையும் கண்ணியமாக கையாள வேண்டும்; எடுத்தெறிந்து பேசக் கூடாது என்பதை கற்றுக் கொண்டேன்.

வளர்ந்து வந்த சமயங்களில், சாலமன் பாப்பையா, சுகி சிவம், வலம்புரி ஜான், குன்றக்குடி அடிகளார் போன்ற பலரின் தலைமையில் பேச்சு மன்றங்கள், பட்டிமன்றங்களில் பேசியுள்ளேன். எனினும், எனக்கென, 'ரோல் மாடல்' என, யாரையும் நான் வைத்துக் கொண்டது கிடையாது. எல்லாரிடமும் உள்ள நல்ல குணங்களை அலசி, ஆராய்ந்து அவற்றை பின்பற்றுகிறேன். 

குதிரை ஓட்ட பழக வேண்டும் என்றால், நாமாகத் தான் ஓட்ட வேண்டும்; யார் பின்னாலும் அமர்ந்து கொண்டிருந்தால், நம்மால் குதிரை ஓட்ட முடியாது. அதனால் எனக்கென தனிப்பாணியை உருவாக்கி, பேச்சு மன்றங்களில் கலக்கி வருகிறேன். 

என்னுடன் பிறந்தது அண்ணா, அக்கா, தம்பி, தங்கை. எனக்கு ஒரே மகன் இருக்கிறான். ஹாரிஸ் பார்க்கர் என பெயர். பி.ஏ., முடித்து, எல்.எல்.பி., படித்து வருகிறான். 

ஒரு நாள் இரவு, பேச்சு முடித்து வீட்டுக்கு வருகிறேன்; பயங்கர பசி. அம்மா எதுவும் செய்யவில்லை; நானாக சமையல் செய்ய முனைகிறேன். அப்போது கதவு தட்டப்படுகிறது. கமகமக்கும் பிரியாணியுடன் பக்கத்து வீட்டு பெண் வந்து, கொடுத்து சென்றார். ருசிக்க ருசிக்க சாப்பிட்டேன்.அப்போது அம்மா சொன்னார். 'உன்னை இறைவனுக்கு பிடிக்கிறது. அவனை நேசிப்பவர்களுக்கு உணவு, மரணத்தை போல தேடி வரும். அதை யாராலும் தடுக்க முடியாது' என்றார். எவ்வளவு நிச்சயமான வார்த்தை... அது போல அம்மா சொல்லும், 'பொறுமையாக இரு; அமைதியாக இரு; கடவுளிடம் பேசு' என்பதையும் பின்பற்றுகிறேன்!

================================================================================================







==============================================================================================================

என்ன தோன்றுகிறது?  குறைந்தபட்சம் இரண்டு வரிகள்.  அதிகபட்சம் நான்கு வரிகள்!  உங்கள் கற்பனைக்குதிரையைத் காளையைத் தட்டி விடுங்கள்!


"மாஸ்க்கை ஒழுங்காய் போடறியா இல்லையா?"


==================================================================================================

சென்ற வாரம் கடந்த காதலர்தினத்துக்காக...!



=======================================================================================================


அப்பனே...   முதலில் நீ ஒழுங்கா?



"பின்னே என்ன?  மனிதனைத் தடுத்து நிறுத்த மின்சாரவேலியா போடமுடியும்?  இப்படி சொல்லிதான் ஆறுதல் அடையணும்!"


எனக்கெல்லாம் புதுசா இருக்கலாம்..   DD அனைத்தும் அறிவார்.


123 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. அட? நான் தான் போணியா? படிச்சுட்டு வரேன். எப்போவும் படிச்சுடுவேன். அப்புறமாக் கருத்துச் சொல்லுவேன். இன்னிக்கு என்னமோ முதலில் கருத்துக்குப் போயிட்டேன். சிம்பான்ஸியின் சிரிப்பு அழகு. ஸ்ரீராம் கவிதை அழகு. பையர் அப்பாவைக்கேட்கும் கேள்வி ஏற்கெனவே மதன் நகைச்சுவைத் துணுக்கிலும் வந்திருக்குனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதன் இல்லை.  பழைய ஸ்ரீதரோ, கோபுலுவோ என்று  நினைவு!  அல்லது வாணி!

      பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. ம்ம்ம்ம்ம்ம்? ரெட்டைவால் ரங்குடுவில் இல்லையோ வந்த நினைவு?

      நீக்கு
    3. இனிய காலை வணக்கம் அனவருக்கும்.
      என்றும் நலமுடன் இருக்க இறைவனிடம்
      பிரார்த்தனைகள்.

      நீக்கு
    4. // ரெட்டைவால் ரங்குடுவில் இல்லையோ வந்த நினைவு?//

      தெரியவில்லை.  இங்கேயே வாணியோ யாரோ வரைந்த ஜோக் போட்ட நினைவு... "நான் என்னிக்காவது உங்க ஆபீஸ் ப்ரமோஷன் பத்தி கேட்டிருக்கேனா?" என்பது போல...

      நீக்கு
  3. பிட்சா இளைஞனைத் தாக்கியதும் சரி, இன்னொருவரை (அவர் பைத்தியமாக இருந்தார்னு வேறே சொல்றீங்க) தாக்கியதும் சரி அநியாயம். வர வரத் தமிழ்நாட்டில் எதுக்குனு தெரியாமலேயே தாக்கத் தொடங்கி விட்டார்களோ என நினைக்கிறேன். பர்வீன் சுல்தானாவின் பட்டிமன்ற நிகழ்வுகளை நான் நிறையக் கேட்டிருக்கேன். இவருடைய திறமைக்கும், பேச்சாற்றலுக்கும் முன்னால் இப்போதுள்ளவர்கள் ஒண்ணுமே இல்லை. அருமையான பேச்சாளர். இப்போதுள்ள கத்துக்குட்டிகளுக்கு முன்னால் இவர் எடுபடவில்லை என்பது வருத்தமான ஒன்று. ஆனால் இப்போதெல்லாம் ஆக்கபூர்வமான பட்டிமன்றங்கள்னு எங்கே நடக்கின்றன? ஆண் சமையல் நல்லா இருக்குமா/பெண் சமையல் நல்லா இருக்குமானு தான் பட்டிமன்றம் வைக்கலை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பைத்தியம்னு நான் நான் நினைச்சேன்.  எது உண்மைன்னு யாருக்குத் தெரியும்?

      பட்டிமன்றங்கள் பொழுதுபோக்குக்குன்னு ஆகிவிட்டன...

      நீக்கு
  4. இப்போ ஹூஸ்டனின் பனிமழைக்கும் இங்கே காதலர்கள்(?) பனியில் ஓடுவதற்கும் பொருத்தமாக உள்ளது. திருக்குறள் பற்றிய செய்திகள் அறிந்தவையே. இன்று ஒரு தகவலும் கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே உள்ள பனி அவர்களைத் துன்புறுத்துகிறது போல...

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. பீட்ஸா விநியோகர் சரியான நேரத்தில் கேட்டவர்களுக்கு கொண்டு கொடுத்தால்தான் வேலை நிலைக்கும் என்றால் அவர் என்ன செய்வார்.

    மனநிலை சரியில்லதவரை இத்தனை பேர் அடித்தால் ! இதை எல்லாம் பார்த்தால் மனம் பதை பதைக்கும்.

    பர்வீன் சுல்தானா பேச்சு எனக்கு பிடிக்கும்.நிறைய கேட்டு இருக்கிறேன் அவர் பேசுவதை. அவர் அம்மா சொன்னது அருமை.
    பொறுமை, அமைதி இரண்டும் நமக்கு மிக மிக தேவை, இறைவனிடம் பேசி கொண்டு இருப்பேன். அவர் கேட்பார் என்ற நம்பிக்கையில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பீட்சா இளைஞர் அவசரமாக வரும்போது அவர்களை ஏதோ சிரமபப்டுத்தி இருக்கவேண்டும்.  ஆனால் அதற்கு தண்டனை இது அல்ல இல்லையா!

      பர்வீன் சுல்தானா நான் முதலில் அசுவாரஸ்யமாகக் கேட்டேன்.  பின்னர் அவரது பேச்சும், பாணியும் பிடித்துப் போனது.

      நீக்கு
  8. சென்னை சாலைகளில் இவ்வளவு நடக்கிறதா.
    பாவம் அந்த பீட்சா பையன். அப்படி ஒரு கோபம் வரவேண்டுமானால்
    எல்லோருக்குள்ளும் மனஅழுத்தம் அதிகமாக
    இருக்கிறது என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. இன்று ஒரு தகவல் அருமை.
    திருக்குறளின் அதிசயங்கள் பகிர்வும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. பர்வீன் சுல்தானா நல்ல பேச்சாளர்.
    முன்பு நிறையக் கேட்டிருக்கிறேன். அழுத்தம் திருத்தமான
    தமிழ். கணீர் என்று தன் கருத்தை சொல்வார்.
    அவர் பற்றிய தகவல்கள் அருமை. நன்றி மா ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  11. மழைக் காதலர் கவிதை அருமை.

    ''ஒரே குடையின் கீழ் உன்னுடன் சென்றால்
    மழையும் சாரலும் நமக்குச் சூடான போர்வை.''

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...    அருமை அம்மா...   நான் வேறு மாதிரி எழுதி இருந்தேன் முன்பு... "ஒற்றைக் குடையுடன் காத்திருக்கிறேன்...   உனக்காகவும், மழைக்காகவும்" என்று!

      நீக்கு
  12. வழிகாட்டும் சிம்பன்சி மிக அழகாகச் சிரிக்கிறது.
    கடவுள் படைப்பில் இந்த சிம்பன்சி ஒரு அற்புதம்.
    வெகு எளிதில் பழகி அன்பு செலுத்தும்,மனிதரை
    விட அருமையான ஆத்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை அம்மா...    நேற்று ஐதேச்சியாக மீள்பார்வையாக காங் - ஸ்கல் ஐலண்ட் படம் பார்த்தேன்!

      நீக்கு
  13. காவலர் காக்க, காளை தாக்க
    நடக்கப் போவது என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லாயிருக்கு அம்மா...  மிரட்டலோடு விட்டிருக்கும் காளை!

      நீக்கு
  14. ஏழு நாட்களில் பதிய வேண்டிய செய்திகளை
    ஒரே நாளில் பதிந்து அப்ளாஸ் வாங்கி விடுகிறீர்கள் ஸ்ரீராம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா.   கொஞ்சம் அதிகமோ!  குறைச்சுக்கப் பார்க்கிறேன்!

      நீக்கு
    2. அதிகம் இல்லை ஸ்ரீராம்.
      அனைத்தும் சுவாரஸ்யமானவை.
      படித்து ரசிக்க கவனம் தேவை என்றேன்.

      நீக்கு
  15. அப்பாவைத் தட்டிக் கேட்கும் பிள்ளை. தகப்பன் சாமி.

    திருக்குறள் செய்திகள் நான் அறியாதது.
    அருமை.

    பதிலளிநீக்கு
  16. இன்று ஒரு தகவல் அருமை.. பர்வின் சுல்த்தானா பேச்சை கேட்டு இருக்கிறேன் ஆரம்பத்தில் பிடித்து இருந்தது இப்போது பல இடங்களில் சொன்ன செய்தியை ரீபீட் பண்ணுவது போல இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?  நான் முன்பு கேட்டதுதான்.  பாடகர்களுக்கு கற்பனா ஸ்வரம் இருப்பதுபோல எப்சப்போவது ஒரே விஷயம் ஆயினும் அவ்வப்போதைய டிரெண்டிகுக்கு ஏற்ற மாதிரி மாற்றி பேசினால் சுவை கூடும்.

      நீக்கு
  17. பர்வீன் சுல்தானா அருமையாக சப்ஜெக்டை ஒட்டிப் பேசுவார். நல்ல தமிழ். அவர்களின் பேச்சின் ரசிகன் நான். ராஜா போன்றோரெல்லாம் நகைச்சுவையாகப் பேசலாம். சப்ஜெக்டையொட்டிப் பேசுவது பர்வீன், இன்னொரு வக்கீல் பெண்மணி, பாரதி பாஸ்கர் போன்றோர். எனக்கு தாக்கு சுப்ரமணியம் பேச்சும் பிடிக்கும்.

    பர்வீனின் சகோதர்ர் திமுக பேச்சாளர், உயிர்மை பதிப்பக ஓனர் என நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனுஷ்யபுத்திரனையா சொல்கிறீர்கள்?  இல்லை.  இவர் சென்னை பெரம்பூரில் பிறந்து வளர்ந்தவர்.  பன்முகத் திறமையாளர்.

      https://www.youtube.com/watch?v=3qgKRiTJRK8

      நீக்கு
    2. //இன்னொரு வக்கீல் பெண்மணி,//

      சுமதி.  சோ வின் உறவினர்.

      நீக்கு
    3. சுமதி வக்கீல், அண்ணா நகரில் இருக்கார். ஆனால் சோவின் உறவெல்லாம் இல்லை. அவரிடம் ஜூனியராக இருந்தார்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    4. சுமதி வழக்கறிஞர், துக்ளக்கின் ஆரம்ப நாட்களில், துக்ளக்கில் சில சட்ட சம்பந்தமான / சமூக நிலை குறித்த கட்டுரைகள் எழுதினார். சோ வின் உறவினர் இல்லை.

      நீக்கு
  18. நம் மன அழுத்தம், கையாலாகாத்தனம் போன்றவைதான் எளியவர்கள் செய்யும் தவறுக்கு நம்மை நாட்டாமையாக மாற்றி தண்டனை கொடுக்க வைக்கிறது. அதே வண்டியை திமுக அரசியல்வாதி ஓட்டினானா மத்தவங்க வாயைத் திறக்க முடியுமா?

    சட்டத்தைத் தன் கையில் எடுப்பவர்கள் தங்கள் யோக்கியதையை முதலில் சரி பார்த்துக்கொள்ளணும். அதேசமயம் நல்ல தனமாக தவறைச் சுட்டிக் காட்டுவது தவறல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திமுக என்று இல்லை.  வாட்டசாட்டமாக இருந்திருந்தாலோ, அவர்கள் ஓரிருவராக இருந்திருந்தாலோ கூட போதும்.  கைவைத்திருக்க மாட்டார்கள்.

      நீக்கு
  19. இன்று ஒரு தகவல் அருமை.

    சிம்பன்சி படம், பொங்கல் மின்னூலில் நாக்கை வெளியே நீட்டியபடி இருந்த நடிகை படத்தை நினைவுபடுத்தியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா...   அவ்வளவு அழகா அந்த நடிக்கை?!

      இன்று ஒரு தகவல் போன்ற செய்திகள் முன்பு எஸ் எம் எஸ் காலத்தில் வலம் வந்தவை!

      நீக்கு
  20. ஜல்லிக்கட்டுக் காளைக்குத் தெரியுமா, அவர் போலீஸ், கொஞ்சம் அடக்கி வாசிக்கணும் என்று?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லவனுக்கு வல்லவன்!  காவலரின் அதிகாரம் காளையிடம் செல்லுபடியாகாது!

      நீக்கு
  21. மனநலம் குன்றியவர் என்று அறிந்தும் அடிப்பவர்கள் பைத்தியக்கார மனிதர்களாகத்தான் இருக்க முடியும்.

    பர்வீன் சுல்தானா நல்ல பேச்சாளர் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    மாடு மாடசாமி:
    போலீஸ்னா... நீ பெரிய பருப்பா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  யார் மனநலம் குன்றியவர்கள் என்று சந்தேகம் வரும்!

      நீக்கு
  22. நாமெல்லாம் சும்மா. அரைத்த மாவையே அரைக்கிறோம். எவ்வவவு புதுமையாக புதுக்கோணத்தில் திருக்குறளைப் பார்த்திருக்கிறார் அவர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  அவர் பார்த்ததில் உள்ள திருத்தங்களை மற்றவர்கள் / அறிந்தவர்கள் சொல்வார்கள்!

      நீக்கு
  23. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க எங்கெங்கும்

    பதிலளிநீக்கு
  24. மனநலம் குன்றியவர் என்று அறிந்தும் அடிப்பவர்கைளை என்னென்று சொல்வது?.

    பதிலளிநீக்கு
  25. அனைவருக்கும் வணக்கம். நலமே விளையட்டும்.

    பதிவின் வழி சொன்ன விஷயங்கள் அனைத்தும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  26. சின்னச் சின்னத் தவறு, குற்றம் செய்து பிடிபட்டுவிட்டால், அங்கேயே அடி, உதை.. மக்கள் தீர்ப்பு..instance justice! பெரிய்ய குற்றங்கள், பஞ்சமாபாதகங்களை அரங்கேற்றினால் அதே மக்களிடமிருந்து மாலை, மரியாதை, மண்டகப்படி...

    உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
    என்னைச் சொல்லிக் குற்றமில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பார்கள்..

      தண்டல் என்றால் என்ன என்று இன்றைய சமுதாயத்திற்குத் தெரியுமா!..

      நீக்கு
    2. சரியாகச் சொன்னீர்கள் ஏகாந்தன் ஸார்...   எதைச் சொல்கிறீர்கள் என்றும் தெரிகிறது.  இன்றைய யதார்த்தம்.  கலிகாலம்.  ம்.....

      நீக்கு
  27. பர்வீன் சுல்தானா தமிழ் ப்ரியர், அழகான பேச்சாளர், அருமையான மனுஷி. யூ-ட்யூபில் இசைக்கவி ரமணனோடு ஒரு நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வாட்ஸாப்பில் வரும் அவரின் பேச்சுத் துணுக்குகளைதான் பார்த்திருக்கிறேன் / கேட்டிருக்கிறேன்.

      நீக்கு
  28. இந்தத் திருக்குறள் ஆராய்ச்சி அட்டவணையைச் சில வருடங்களுக்கு முன்பே பார்த்திருக்கிறேன்...

    தாமரையினாள் - என்று சொல்லியிருக்கின்றாரே (குறள் 617)..

    தாமரையில் வீற்றிருப்பவள் - என, அதற்குப் பொருள் கொள்ளக் கூடாது என்பதனால்
    தாமரை ப் பூவைக் கணக்கில் சேர்த்துக் கொள்ளவில்லை போலும்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
      தாள்உளாள் தாமரையி னாள்.

      //தாமரையில் வீற்றிருப்பவள் - என, அதற்குப் பொருள் கொள்ளக் கூடாது என்பதனால்
      தாமரை ப் பூவைக் கணக்கில் சேர்த்துக் கொள்ளவில்லை போலும்!...//

      ஓ...    அப்படி வேறு அரசியல் இருக்கா இதில்?!

      நீக்கு
  29. ஒரே பழம் நெருஞ்சி .. ஒரே விதை குன்றிமணி - என்றால் குன்றிமணி பழம் இல்லையா!?...

    என்ன இது அநியாயம்?..

    அ வே ஆராய்ச்சி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரைவேக்காட்டு / அவசரவேலை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்!  ஹா..  ஹா..  ஹா...

      நீக்கு
  30. தினையும் சொல்லப்பட்டிருக்கிறதே...

    தினை இந்தப் பட்டியலில் இல்லாமல் போனதே!..

    என்னே அறிவு!...

    அண்ணா ஜீவி அவர்களும்
    இதனைப் புதிய கோணம் என்று சொல்ல நேர்ந்ததே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்குறளில் இந்த 'ஔ' எழுத்து பற்றி DD ஒரு பதிவு போட்டிருந்தார் அவர் தளத்தில்.  அதுபற்றி அவர் வந்து சொல்லக்கூடும்.  

      நீக்கு
    2. என்னளவில் அந்தக் குறிப்புகள் புதுமையானவையாய் இருந்ததினால் அப்படிச் சொன்னேன் துரை தம்பி.
      ஸ்ரீராமிற்கும் அப்படித் தான் இருந்திருக்கும் என்று அவர் குறிப்பிலிருந்தும் தெரிகிறது. நான் - ஸ்ரீராம் இரண்டு பேர் வெளிப்படையாகத் தெரிகிறது. எங்கள் மாதிரி இன்னும் எத்தனை பேரோ?..

      நீக்கு
    3. எல்லாம் அறிந்தவனல்லன் நான்...

      இந்த அட்டவணையைப் பார்த்ததுமே மனதில் பட்டதை ஒரு முறை திருக்குறள் தளத்தில் உறுதி செய்து கொண்டு இங்கே சொன்னேன்...

      இது நவீன ஊடகங்களின் காலம்.. பொய்யும் புளுகும் பரிவட்டம் கட்டிக் கொண்டு திரிகின்றன...

      மேலை நாட்டினர் வந்த பிறகு தான் இங்கே கல்வியறிவு உண்டானதாக பலர் ஊளையிடுகின்றார்கள்...

      சுடச் சுடரும் பொன் போல்.. என்பது வள்ளுவம்..

      பொன்னை உருக்குவதற்கு எத்தனை அறிவும் அனுபவமும் வேண்டும்!?..
      இதை உணர்ந்து கொள்ளாமல் வெட்டிப் பேச்சு பேசுகின்றார்கள்..

      பொன்னை விடுங்கள்..
      புணை எனத் தெப்பத்தைக் குறித்தவர் நாவாய் என கப்பலைக் குறிக்கின்றார்...

      பெருந்தேரைக் குறிக்கின்றவர் - அச்சாணியைச் சொல்கின்றார்...

      அந்நியர் வந்த பிறகே இங்கு அறிவு உண்டாயிற்று என்பது மாற்றானுக்கு மல்லிகை தூவும் மடமை!..

      உயர் தொழில் நுட்பத்தின் எளிய அடையாளமாகிய பனையோலையை அறியாத பதர்கள்..

      இன்னும் சொல்லலாம்.. இங்கு எனக்குள்ள சிறு பிரச்னையால் மேலும் தொடர முடியவில்லை..

      நீக்கு
    4. //ஸ்ரீராமிற்கும் அப்படித் தான் இருந்திருக்கும் என்று அவர் குறிப்பிலிருந்தும் தெரிகிறது.//

      அஃதே...    அஃதே...!

      நீக்கு
    5. தம்பீ, என் தளத்திற்கு வாருங்கள்.
      மொழி பற்றிய உரையாடல் நடக்கிறது
      அங்கு. வந்து நீங்களும் கல்ந்து கொள்ளுங்கள்.

      நீக்கு
    6. ஆம், நானும் வரவேற்கிறேன்.

      நீக்கு
    7. தங்களன்பின் அழைப்பிற்கு நன்றி அண்ணா..

      நீக்கு
    8. பர்வீன் சுல்தானா மட்டுமல்ல; பாரதி பாஸ்கரும் முன்பு பேசியதை பல இடங்களில் 'ரிபீட்' செய்கிறார். அது தவிர்க்க முடியாதது.

      நீக்கு
    9. பேசுபொருள், தலைப்பு ஒன்றாக இருக்கலாம்.  ஆனால் அதில் உள்ளடக்கத்தில் விவரித்து பேசும்போது வித்தியாசம் காட்டலாம்.  நாம் சொல்லி விடலாம்.  பேசுபவர்களுக்கு அல்லவா தெரியும் சிரமம்!

      நீக்கு
  31. அருமையான பதிவு! இப்போதெல்லாம் மனிதர்கள் எப்பொழுது, எதை செய்வார்கள் என்று நினைக்க வியப்பாய் உள்ளது...மனிதர்கள் குரங்காயும், சிம்பன்சி குரங்குகள் மனிதனை போலவும் இருப்பது காலத்தின் கோலம். அந்த குரங்குகளுக்கும் stress வரவைக்காமல் இருந்தால் சரி.
    பர்வீனின் பேச்சு எனக்கும் மிகவும் பிடிக்கும். பாரதி பாஸ்கரின் பேச்சையும் ரசித்துக் கேட்பேன்!
    வள்ளுவன் தன்னை உலகினுக்கு தந்து வான் புகழ் கொண்ட தமிழ்!
    நல்ல நகைச்சுவை துணுக்கு. இப்பொழுதெல்லாம் குழந்தைகளிடம் பார்த்து பேச வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வாங்க வானம்பாடி..   அனைத்தையும் ரசித்திருப்பதற்கு நன்றி.

      //அந்த குரங்குகளுக்கும் stress வரவைக்காமல் இருந்தால் சரி.//

      ஹா..  ஹா...  ஹா...   உண்மை.  உண்மை.

      அது சரி...   இந்த பதில் எல்லாம் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் ஒரு வேண்டுகோள்.  திங்கள் ரெசிப்பிக்கு உங்களிடமிருந்து சமையல் குறிப்புகள், செவ்வாய் கதைக்கு கதை என்று  படைப்புகள் எதிர்பார்க்கிறேன்.  sri.esi89@gmail.com என்கிற ஐடிக்கு அனுப்பலாம்.

      நீக்கு
    2. Sriram ji, thank you for inviting me to write recipies and story.As kids are in home and classes going for them, most of my time is engaged with them. Will try to write.
      After a long time, now only getting time to read blogs.During my leisure, i started visiting geethamma's posts. then started resding from your blog.Reading all your blogs here give me immense pleasure and it drives away stress too.

      நீக்கு
    3. நன்றி வானம்பாடி.   கட்டாயமில்லை.  அவசரமுமில்லை.  உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது ,முயற்சிக்கலாம்.  உங்கள் பங்கையும் இதில் காண ஆவலாக இருக்கிறோம்.  பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  32. தெய்வம் என்று சொல்லிய வள்ளுவப் பெருமான் அலகை (பேய்) என்றும் குறித்திருக்கின்றார்..

    ஆனால் அப்படியெல்லாம் பொருள் கொள்ளக் கூடாது என்பது இன்றைய டமிளர்களின் வாதம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதி என்றால் ஆதியல்ல.. ’அது’ நிச்சயம் அல்ல. பகவன் என்றால் பகவான் அல்ல. தெய்வம் என்றால் ’அது’ தெய்வமா? அல்லவே அல்ல..!

      ஐயோ.. ஐயோ ! மலர்மிசை ஏகியவனே, தமக்குவமை இல்லாதவனே ! தாங்கமுடியல்லே, தமிள்க்காரங்க படுத்தறபாடு..

      நீக்கு
  33. சாலையில் பறக்கும் பீட்ஸா, ஸ்விக்கிகாரர்களை பார்க்கும் பொழுது பாவமாக இருக்கும்,உயிரை பணயம் வைத்து பயணிக்கிறார்களே என்று, இதில் அவர்களை அடிக்க வேறு செய்கிறார்களா?

    முன்பு நடிகைகள் பிடித்த இடம் இப்போது சிம்பன்ஸிகளுக்கா? தகவல் சுவாரஸ்யம்.

    பர்வீன் சுல்தானாவின் பேச்சை இப்போதுதான் கேட்கிறீர்களா? நான் வேலை செய்யும் பொழுது, சுகி சிவம், பர்வீன் சுல்தானா, இவர்கள் பேசுவதை கேட்பேன், அல்லது பாரதி பாஸ்கர் கதை படிப்பார், அல்லது சாய் வித் சித்ரா, அல்லது சவுக்கு சங்கர்(இதைக் கேட்பது என் மகனுக்கு பிடிக்காது என்பதால் ஹெட் ஃபோன் போட்டுக் கொள்வேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ஒரு நேரத்தில் சுகி சிவம் பேச்சு விரும்பிக் கேட்டதுண்டு.  பின்னர் நின்று போனது.  இன்றும் என் அக்கா சுகி சிவத்தின் ரசிகை.  இதோ இந்த கமெண்ட்டை அவரும் படிப்பார்.  விடாமல் எங்கள் பிளாக் படிப்பவர் அவர்.

      நன்றி பானு அக்கா.

      நீக்கு
  34. திருக்குறள் தகவல்கள் வாட்ஸாப்பில் வந்தது.

    பதிலளிநீக்கு
  35. காளைக்கு அடங்குமா காளை?
    இரண்டு காளைகள்..., கைக்கு முன்னாடி இருந்த காங்கிரஸ் சின்னம் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  36. பர்வீன் சுல்தானா பற்றி இத்தனை வருடங்கள் இங்கு பதிவு செய்தாமைக்கு நீங்கள் மட்டும் காரணம் அல்ல ஸ்ரீராம் ஐயா (ஜி...?) கருத்துரை இடும் சிலர் பலர், உங்களின் குழுமத்தை சேர்ந்தவர்களும்... அதோடு நல்லவற்றை சொல்பவரை முழுக்கவே அறியாத அறிவார்ந்த மக்கள் இருப்பது தான் இங்கு வேதனையே...

    வாழ்க நலம்... புரிந்தாலும் நலம்... நன்றி...

    காதல் சாரல் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க நலம்..

      புரிந்தாலும் நலம்..
      புரியாவிட்டாலும் நலம்..

      நல்லது!..

      நீக்கு
    2. DD

      //பதிவு செய்தாமைக்கு//

      செய்தமையா?  செய்யாமையா?  குழப்பம்!   அது இருக்கட்டும்.  இந்தச் செய்தி சமீபத்தில் செய்தித்தாளில் படித்ததால் பகிர்ந்தேனே  தவிர வேறெதுவும் காரணம் எனக்குத் தெரியவில்லை!

      நீக்கு
  37. எங்கள் ப்ளாக் வியாழன் பதிவு பிடிக்கும் ஸ்ரீராம் கவ்ன மாக இருக்கிறார் குறள் சில ப்டித்திருக்கிறேன் ஆராய்ச்சி எல்லாம் செய்தது இல்லை

    பதிலளிநீக்கு
  38. சாலை விதிகளை மீற வைக்கும் பணி அழுத்தம்.. யார் மீது குற்றம் சொல்ல..! பர்வீன் சுல்தானா பற்றிய பகிர்வு நன்று. தந்தையைக் கேள்வி கேட்கும் தனயன் ‘ரெட்டைவால் ரெங்குடு’வை நினைவூட்டுகிறான்:). சிம்பன்ஸியின் திறமை ஆச்சரியப்படுத்துகிறது. கவிதை அருமை. நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  39. கடவுள் வாழ்த்து - முதல் அதிகார பெயரில் மட்டும்... அதைப் பற்றி கணக்கியல் - அதிகாரம் பதிவுகளில்...

    தெய்வம், இறை, இறைவன் - இவற்றின் கணக்கியல் - குறள்கள் பதிவுகளில்...

    ஔ - எழுத்தை ஐயன் பயன்படுத்தவே இல்லை என்று எங்கும் காணலாம்... ஆனால் கௌவை பயன்படுத்தி உள்ளார்...! எப்படி...? எழுத்துக்களின் கணக்கியலில் இவை எனக்கு சரியாக வரவில்லை... ஔவித்து | ஔவிய | கௌவை - கவ்வை | தௌவை - தவ்வை | என்பதால், கணக்கியலுக்கு யாப்பு இலக்கணமும் ஓசை நயமும் முக்கியம் தராது... என்ன செய்வது...?

    3,4 7(அதிமுக்கியத்துவம்) 9, 10 - இந்த எண்ணிற்கு திருக்குறளில் முக்கியத்துவம் உண்டு... இதைப்பற்றி எந்தவொரு கணக்கியலும் எனக்கு கிடைக்கவில்லை, ஆனாலும் வேறொரு கணக்கியல் செய்து உள்ளேன்... அதை எப்படி எழுத்துக்களால் எழுதி பகிர்வது என்பதில் தான் குழப்பம்... பார்ப்போம்...

    கணக்கியலில் வரும் மொத்தம் | கூட்டுத்தொகை | மூல எண் அனைத்தும் பகா எண்களாக வருவது மட்டுமே, இதுவரையிலும் ஆய்வு செய்த ஒரு குறிப்பு... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி DD.  அந்த கௌ பதிவு உங்கள் பக்கத்தில் படித்த நினைவு இருக்கிறது.

      நீக்கு
  40. அவரவர் நியாயம் அவருக்கு ஆனாலும் அந்த பீட்ஸா டெலிவரிக்காரர் மேல் பரிதாபம் ஏற்படுவதை தடுக்க முடியலை .
    வில்லன் அவரில்லை என்பது நிச்சயம் .
    பஸ் ஓட்டி வந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் நிலை பரிதாபத்துக்குரியது . .ஒருத்தருக்கு எவ்ளோ சுலபமா  தடியெடுத்த தண்டல்காரனாய் தண்டனை கொடுக்கிறாங்க இந்த வீரர்கள் .பட்டிமன்ற பேச்சாளரில் இவர் எனக்கு மிகவும் பிடிக்கும் .இன்னொருவர் இருக்கார் பெயர் தெரியாது ஏனோ உருகி நொறுங்கி ஓவர் எக்ஸ்பிரஷனையெல்லாம் ஜோதிகா மாதிரி கொட்டுவார் அவரை அவ்ளோ பிடிக்காது அதனாலோ என்னமோ வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசும்  இவரை ரொம்ப பிடிக்கும் இனிய தமிழுக்கும் இவரது அஞ்சா பேச்சுக்கும் நான் சரண்டர் .
    சிம்பன்சி மனுஷருக்கு வழிகாட்டுறதில் ஆச்சர்யமில்லை :) அவுக வம்சம்தானே 
    திருக்குறள் பற்றி இன்றைய பதிவில் பார்த்ததும் இனிய ஆச்சர்யம் ..என்னன்னு நேத்துதான் யோசிச்சிட்டிருந்தேன் வேலைக்கு பஸ்ஸில் போகும்போது .டபில்டெக்கர்  பஸ்ஸில் நான்  மட்டும் பயணி அப்போ தோணியது பிற மொழியிலும் பிற ஸ்டேட்ஸிலும் திருக்குறள் மாதிரி பொதுமறை  ஏதாச்சும் இருக்குமான்னு ?எவ்ளோ பெருமைக்குரிய பொக்கிஷம் நமது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்...  எனக்கு சந்தேகம் என்னன்னா மனநிலை பாதிக்கபப்ட்டவர் இருநூறு முன்னூறு மீட்டர் பஸ்ஸை லாவகமாக ஒட்டி வந்திருப்பரா என்பதும்!  உருகி உருகி பேசுபவர் யார் என்று எனக்கும் புரிகிறது.  ஆனால் பெயர் எனக்கும் நினைவில்லை.  எனக்கும் பிடிக்காது!  நன்றி.

      நீக்கு
  41. 1. மொத்த எழுத்துக்கள் 42194
    2. 37 எழுத்துக்கள் பயன்படுத்தவில்லை...
    3. பயன்படுத்தாத எழுத்து : ஔ
    4. அதிக முறை : னி
    5. பயன்படுத்தாதவை : ளீ ங

    பல காலமாக எங்கும் எதிலும் பகிரும் தகவல்கள்... ஆனால்...

    பேசுவோம்...

    பதிலளிநீக்கு
  42. //ஆமாம், யார் மேல் தப்பு?//

    அதுதானே ஆர்மேல் தப்பூஊஊ?:)..

    ..............
    ..............
    காலம் செய்த கோலம்
    கடவுள் செய்த குற்றம்..:).

    கொழும்பில் இருந்த காலத்தில் நானும் நெரிசலை அனுபவித்திருக்கிறேன்.. ஆனால் இங்கு வந்ததிலிருந்து, நெரிசல் என்றாலே என்னவெனத் தெரியாது... சனக்கூட்டம் அதிகம் எனினும் கியூவில் நிற்பார்கள் அதனால நெரிசல் இடிபாடு எதுவும் இல்லை.

    பஸ் ஓட்டி வந்தவருக்கு இவ்வளவு தண்டனை வேண்டாம் எனத் தோணுது...

    பர்வீன் சுல்தானா என் ஃபேவரிட் பேச்சாளர்களில் ஒருவர்.. நான் கம்பராமாயணம், மகாபாரதம் எல்லாம் இவவுடைய பேச்சைக் கேட்பேன், நன்கு பிடிக்கும்.

    இன்று ஒரு தகவல் படித்திருக்கிறேன்.. அருமை.

    இங்கு வந்ததும் முதலில் என் கண்ணில் பட்டவர் என் கிரேட் குருத்தான்:)) ஆப்பியோ ஆப்பி எனக்கு:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அதிரா...   உங்கள் ஊரில் நெரிசல் இல்லாதது கொஞ்சம் போர் அடிக்கவில்லை?!!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!