வியாழன், 25 பிப்ரவரி, 2021

எளிமையாக ஒரு சின்ன வீடு 

 சகோதரியின் சஷ்டியப்தபூர்த்தி.  கொரோனா காலமாயிருந்தாலும் மெல்ல மெல்ல ஆட்கள் சேர்ந்து சொல்லத் தகுந்த அளவு கூட்டம்.  சகோதரி என்பதால் எனக்கு கொஞ்சம் மேடையில் முக்கிய பங்கு!  நடுவில் ப்ரோஹிதர் கேட்கிறார்...   "மாமா...    அவிசும் சர்க்கரைப் பொங்கலும் கொண்டாங்கோ..." 

சகோதரி விழிக்கிறார்.  மறந்துவிட்டார்.  சாதாரணமாக சத்திரத்துக்கு கிளம்பும் முன் வீட்டிலேயே ஒரு டம்ளர் அரிசி வைத்து அவிசும், கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலும் செய்து எடுத்துவ வந்திருக்க வேண்டும்.  யாரிடமாவது சொல்லி இருந்தாலும் அவர்கள் / நாங்களாவது கொண்டு போயிருக்கலாம்.  

சகோதரி என்னிடம் "பக்கத்துலதான் வீடு..   யார்கிட்டயாவது சொல்லி உடனே வச்சு எடுத்து வரச்சொல்லேன்..."

சாஸ்திரிகளிடம் எவ்வளவு நேரத்தில் வேண்டுமென்று கேட்டேன்.  முக்கால் மணி நேரம் இருக்கிறது என்றார்.

மேடையை விட்டு கீழே இறங்கி அவள் வீட்டு மனிதர்களிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட எபி ஆசிரிய மாமா ஒருவர், தன் பெண் வீட்டை விட்டு இங்கு வருவதற்கு கிளம்பிக் கொண்டிருப்பதாகவும் அவரிடம் சொல்லி எடுத்து வரச் சொல்லலாமா என்றும் கேட்க,  நல்லதாப்போச்சு..  ஓகே என்று சொல்லியாச்சு.  சாஸ்திரிகளிடமும், சகோதரியிடமும் இதைச் சொன்னதும் சாஸ்திரிகள் என்னை ஓவராகப் பாராட்டி 'சூப்பர்...  சூப்பர்' என்று புகழ்ந்து தள்ளினார்!  அப்புறம் அதைப்பற்றி மறந்தும் போயாச்சு. 

இந்த எபி ஆசிரிய மாமாவிடம்தான் நான் அவரது புத்தகம் ஒன்றைத் திருப்பிக் கொடுத்திருந்தேன்.  சுஜாதாவின் நாடகங்கள் முழுது தொகுதி  என்கிற குண்டு புத்தகம். உயிர்மைப் பதிப்பகம்  வெளியீடு.  தவறுதலாக என் கைக்கு வந்து விட்ட அவரது புத்தகம்.   'கொண்டு வரவா' என்றும் அவரிடம் கேட்டு கொண்டுசென்று, அவரிடம் சேர்த்து விட்டிருந்தேன்.  அவர் என்ன செய்தார், கண்பார்வையில் இருக்கட்டும் என்று மேடையின் ஓரத்தில் சாஸ்திரிகள் வைத்திருந்த பைகளுக்கு அருகே வைத்து விட்டார்.

நான் அதைப் பார்த்து அவரிடம், யாராவது பார்த்தால் தூக்கிக் கொண்டு போய்விடுவார்களே என்றதற்கு, 'போகாது..  யாரும் எடுக்க மாட்டார்கள்.  அப்படிப் போனாலும் பரவாயில்லை' என்று சொல்லி இருந்தார்.

அவிஸ், சர்க்கரைப்பொங்கல் விஷ்யங்கள் மறந்துபோன வேளையில் மாமாவின் மகனும், மகளும் வந்திருக்க, மாமாவிடம் சென்று அந்தப் புத்தகத்தை எடுத்து மகனிடம் சேர்த்து விடுங்களேன் என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே மகன் என்னிடம்  'அப்பா ஸ்ரீராம்...   அவிஸ் கொண்டுவந்தாச்சு...   ஆனா ஸாரி..   சர்க்கரைப்பொங்கல் வேணுமாம்..  நீ சொல்லலை, கொண்டுவரலை'  எனவும்,  அடடா...   நான் ரெண்டும் சேர்த்ததுதானே சொன்னேன் என்று சொல்லி, பரவாயில்லை அவிஸ் வநதத அதுவே பெரிசு என்று சொன்னபோதே மூளையில் குறுக்குவழி ஒன்று உதித்து விட்டது!

உடனே வெளியில் சென்று அருகிலிருந்த மளிகைக்கடையை அணுகி வெல்லம் கொஞ்சம் வாங்கிக்கொண்டேன்.  அதை வாங்கி கொண்டு மண்டபத்துக்குள் நுழைந்தால் அங்கு மண்டப வாசலில் நின்றிருந்த பசு ஒன்று அதை என்னிடமிருந்து வாங்கி கொள்ள ஆவலாகத் துரத்த, அதனிடமிருந்து தப்பி, ஓரமாகச் சென்று சுத்தமான பெரிய கருங்கல் ஒன்றை எடுத்து வெல்லத்தைப் பொடி செய்தேன்.

என்ன என்றே தெரியாமல் எனக்கு இதில் உதவிய சஷ்டியப்த பூர்த்தி மாப்பிள்ளையின் அண்ணா, அது எதற்கு என்று தெரிந்ததும் கொதித்தெழுந்தார்.  நான் என் மனதில் வைத்திருந்த திட்டம், அவிசை இரண்டு பாகமாக்கி, ஒன்றில் இந்த வெல்லத்தை கலந்து விடுவது!

'இது சரிகிடையாது' என்றார் அவர்.  'இப்போது வேறு வழியில்லை' என்றேன் நான்!

சாஸ்திரியிடம் சென்று அவர் முறையிட, அவரும் நான் செய்து வைத்திருந்த முறையையே யோசனையாகச் சொல்ல, நான் வெல்லத்தை அவர் கண்முன்னே காட்டினேன்.  'சூப்பர் சூப்பர் ' என்று மறுபடியும் மகிழ்ந்துபோன சாஸ்திரிகள், என்னிடம் மெதுவாக 'அண்ணா..   இதை மேடைமேல் வைத்து விடுங்கள்.  இதற்குமேல் நேரம் இல்லை.  அவர் ஏதோ சொல்லிக்கொண்டே இருக்கிறார்...   நீங்க வாங்க' என்று அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.  அண்ணனுக்கு சம்மதமில்லை, திருப்தி இல்லை என்றாலும், அந்நிலையில் வேறு வழி இல்லாமல் பிரச்னையை முடித்தாயிற்று.

ஆச்சா...    அடுத்த  பிரச்னை..   மேடையில் பார்த்தால் சுஜாதா புத்தகத்தைக் காணோம்.  மாமாவைக் கேட்டால் அவரும் தேடுகிறார்.  எங்கே போச்சுன்னே தெரியாமல் பெரிய அவஸ்தையானது.  அந்த அவஸ்தை தீர இரண்டு நாட்களானது.

அவர் மகன் அதை எடுத்துக் கொண்டு காரில் வைத்து வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டிருந்தது பின்னர் தெரிய வந்தது.

=================================================================================================

எளிமை என்றால் என்ன?  எளிமை என்றால் உடனே உங்களுக்கு ஞாபகம் வருவது எது?   ஹிஹிஹி...   அதேதான்.  ஆனால் இது அது பற்றி அல்ல.  கெஜ்ரிவால் முதல்முறை பதவிக்கு வந்ததும் அதிகாரிகள் அவருக்காக ஒரு 'சின்ன வீட்டை'த் தேடுவதாக செய்தித்தாளில் செய்தி வந்திருந்தது.  அதை வைத்துக் கிண்டல் அடித்து பேஸ்புக்கில் போட்டிருந்தேன். அதன் இன்ஸ்பிரேஷனில் KGJ எழுதியது கீழ்க்கண்டது..




அதற்கு வந்த ஒரு பதிலும், KGJ யின் பதிலும்!




====================================================================================================

சென்ற வாரம் காலம் சென்ற நடிகர் குமரி முத்துவின் சிறு காணொளி ஒன்று வாட்ஸாப்பில் வந்தது.  சற்றே ஆச்சர்யப்படுத்தியது.  நான் உட்பட பெரும்பான்மை மக்களால் பகபகவென்று சிரிக்கும் நகைச்சுவை நடிகராக மட்டுமே அறியப்பட்ட அவரின் பல்வேறு திறமைகள் வியக்க வைத்தன.  எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த அவர் நுண்ணிய அறிவு பற்றிச்  சொல்கிறார். அதன் காரணமாக தமிழ் மீது ஆர்வம் கொண்டு கற்றுத் தெரிந்திருக்கிறார்.

கீழ்க்காணும் தொலைகாட்சி பேட்டியில் அவரை அவரது ட்ரேட் மார்க் சிரிப்பை சிரிக்கச் சொல்லி நிகழ்ச்சி நடத்துனர்கள் கேட்டதுமே வர பதில்..



அதன் முழு நிகழ்ச்சியைப் பார்க்க இங்கே சுட்டலாம்.

கீழே உள்ள பேட்டி அவரது முழு பரிமாணத்தை அறிய உதவும்.  முழு பேட்டியும் பார்த்து ரசிக்கலாம்.  ஆனாலும் அதில் 7:12 விநாடியிலிருந்து வரும் விவரங்களை கேட்டுப்பாருங்கள்.


===========================================================================================================

சமீபத்தில் மறைந்த மனிதருள் புனிதர் மருத்துவர் சாந்தா பற்றி சமீபத்தில் தினமலர் 'சொல்கிறார்கள்' பகுதியில் வெளியானது இது....


சம்பளம் வாங்காமல் பணியாற்றினார்! 

சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைமை டாக்டராக இருந்து, சமீபத்தில் மறைந்த, சாந்தாவின் தங்கை சுசீலா: 

"அக்கா எப்போதும் படித்துக் கொண்டே தான் இருப்பார்; அளவோடு தான் பேசுவார். சென்னை, கஸ்துாரிபா மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியில் சேர்ந்த அவர், முதல் சம்பளத்தில் எனக்கும், எங்கள் சகோதரி விமலாவுக்கும் பாவாடை, சட்டை வாங்கிக் கொடுத்தது, இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி துவக்கிய அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், பணியில் சேர்ந்த அவர், 1954 முதல், இங்கேயே தங்கி விட்டார். எப்போதாவது வீட்டுக்கு வருவார். எனினும், தினமும் என்னிடம் போனில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

வீட்டு வேலைகளை செய்ய வலியுறுத்தாத எங்கள் பெற்றோர், நன்றாக படித்து, வெளியுலகில் திறம்பட செயல்படவே எங்களை ஊக்கப்படுத்தினர். அக்காவுடன் இணைந்து, புற்றுநோய் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பதே எனக்கு பெரும் கனவாக இருந்தது. 

ஆனால் அக்கா தான், 'தனியாக வேலை பார்த்தால் தான், உன்னை நீ கவனித்துக் கொள்ள முடியும்' எனக்கூறி என்னை, வெளியே வேலை பார்க்கச் செய்தார். பெரிய நிறுவனம் ஒன்றில், தலைமை பொறுப்பில் இருந்த நான், சில ஆண்டுகளுக்கு முன் தான் பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். 

2000ம் ஆண்டு முதல், இந்நிறுவனத்தின் நிதிக்குழு செயலக உறுப்பினராக எனக்கு பொறுப்பு கிடைத்தது.கடந்த, 1995 முதல், கடைசி காலம் வரை, இந்த புற்றுநோய் மருத்துவமனையில் ஊதியம் எதையும் வாங்காமல் வேலை பார்த்து வந்தார். அக்காவிடம் கற்ற அனுபவங்கள் தான், அவ்வை இல்லத்தின் தலைவராகவும் என்னை சிறப்பாக பணியாற்ற உதவுகிறது.

புற்றுநோய் மருத்துவமனை கேன்டீனில் தயாராகும் உணவு தான், அக்காவுக்கும். எனினும், அதை கூட இலவசமாக பெற்றுக் கொள்ள மாட்டார்; பணத்தை கொடுத்து விடுவார். பழுப்பு நிற காட்டன் புடவை தான் எப்போதும் உடுத்துவார். அவர் எப்போதெல்லாம் புடவை வாங்குகிறாரோ, அப்போதெல்லாம் அது போன்ற புடவையை எனக்கும் சேர்த்து வாங்கி விடுவார். 

அவருக்கு பிடித்தது ஜவ்வரிசி கூழ்; அதை அடிக்கடி நானே செய்து அவருக்கு கொடுப்பேன். இந்த வயதிலும் நானே தான் கார் ஓட்டுகிறேன். அது குறித்து அக்கா கவலைப்படுவார். டிரைவர் வைத்துக் கொள் என்பார்.

என் மீது அவருக்கு மிகுந்த அக்கறை.அவர் போன் செய்யும் போது, நான் ஏதாவது ஒரு காரணத்தால் எடுக்காமல் இருந்தால், உடனே அவர் என்னை தேடி வந்து விடுவார். அவர் இறப்பதற்கு முதல் நாள், 'நாம் கொஞ்சம் பர்சனல் விஷயம் பேசுவோம் வா' என்றார். நிறைய பேசினோம். அன்று இரவே உடல் நிலை மோசமாகி, அதிகாலையில் அக்கா இறந்து விட்டார். எனினும், இதுவரை அதை என் மனம் ஏற்க மறுக்கிறது!

==========================================================================================================

'க்ரீன் டீ' குடித்தால் இப்படி இளைக்கலாம்,  அப்படி ஆரோக்யமாகலாம் என்று சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில் வந்த ஒரு மீம்ஸ் (என்று சொல்லலாமா?)




=====================================================================================================

"சம்பவம்" நடந்த நேரத்தின் அப்போதைய தொலைக்காட்சிசெய்தி!  


97 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    நலமே வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  3. அனைத்தையும் படித்தேன். கடைசிச் செய்தி சிரிப்பை வரவழைத்தது.

    பதிலளிநீக்கு
  4. Doctor சாந்தா.... கோயமுத்தூரில் மக்களுக்கு உணவளித்த கோடீஸ்வர்ர்..... எல்லோராலும் தெய்வங்களாக முடிவதில்லை. இவர்களைப்போன்ற சிலர்தான்.

    ஆனாலும் மக்கள் மனதில் நிற்பதற்கு, இவற்றைவிட கிம்மிக்ஸ் தேவையாக இருக்கிறது என்ற நிலைமை சோகம்தான்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    தங்கள் சகோதரியின் சஷ்டியப்தபூர்த்தி சிறப்பாக நடைபெற்றது குறித்து மிகவும் சந்தோஷம். அங்கு பிரச்சனைகள் வந்த விதமும், அதை நீங்கள் சமாளித்த விதமும் சுவாரஸ்யமாக இருந்தது. சர்க்கரை பொங்கல் தயார் செய்த விதம் அருமையாக உள்ளது. அக்னி பகவான் எப்படியும் அது எப்படி உள்ளதென கூறமாட்டார் என்ற தைரியந்தான்... ஹா. ஹா. ஹா.

    பார்த்துக் கொண்டேயிருக்கும் ஒரு பொருள்(புத்தகம்) காணவில்லையென்றால், மனதே சரியில்லாமல்தான் போகும். கடைசியில் அது சேர வேண்டிய இடத்திற்கே சத்தமில்லாமல் போய் விட்டது போலும்..! இப்படியெல்லாம் சில சுவாரஸ்யமான நினைவுகள் நம்முடன் தங்கி விட்டால்தான் அந்தந்த விழாக்கள் என்றுமே சுவையுடையதாய் இருக்கும்.

    சின்ன வீடு பற்றிய தகவல்களும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு வார்த்தை பல பொருளை தருவது வியப்புதான். அதற்கு உதாரணமாக சாப்பாட்டு விஷயமும் நகைச்சுவையாக இருந்தது. அந்த தோழி எவ்வளவு நல்லவர். வந்த விருந்தாளியின் அபிலாஷைகளை அப்படியே பூர்த்தி செய்திருக்கிறார். அவரை பாராட்டவும் வேண்டும்.
    அதற்கு வந்த கருத்துரை,மற்றும் பதிலும் நகைக்க வைத்தது.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு விஷயத்தையும் படித்து ரசித்து, தனித்தனியாய் கருத்து சொல்லி இருப்பதற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலைக்கான நல் வணக்கம்.
    எல்லோரும் எப்போதும் நலமாக இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  7. குமரி முத்துவின் சிரிப்பு அட்டகாசம். அவரைப் பற்றி
    நீங்கள் பதிவிட்டது தான் மிக அருமை.
    இரண்டு வீடியோக்களும் மிக சிறப்பு.
    எத்தனை நல்ல அறிவாளி.இவ்வளவு தெளிவான

    சிந்தனை உடையவர் என்று தெரியாது.
    நிறை நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா..   அவருடைய அந்த ஞானம் சந்தோஷப்பட வைத்தது.

      நீக்கு
  8. திரு கலாம் பற்றிய செய்தி, வேதனை+வேடிக்கை.என்னப்பா இது!!!
    ஊடகமென்னும் விந்தை அசடு.

    பதிலளிநீக்கு
  9. மினியனின் க்ரீன் டீ சூப்பர். நடந்தால் இளைப்போமா
    என்பது தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  10. காண்பதற்கும், பழகுவதற்கும் மிக எளிமையான
    டாக்டர் ஷாந்தா அவர்களைப் பற்றி
    அவரின் தங்கை சொல்லி இருப்பது மிக மிக
    நெகிழ்வு.
    அவரும் நல்ல சமூக சேவகி. அவ்வை நிலையம்
    எத்தனை பேரை ஆதரித்து வந்திருக்கிறது!!
    குழந்தைகள் கவனிப்பு, முதியோர் கவனிப்பு

    எல்லாமே அங்கே சிறப்பு.
    எங்களால் முடிந்த அளவு

    ஆடைகளைச் சேகரித்து அங்கே கொடுப்போம்.

    டாக்டர் சாந்தா அவர்கள் ,ஆஸ்பத்திரிக்கு வந்து சேரும் ஒவ்வொரு
    நோயாளியிடமும் பேசும் பேச்சும் ,
    கொடுக்கும் தன்னம்பிக்கையும் அதிசயிக்க வைக்கும்.
    நல்ல மானிடப் பிறவி,. நல்ல நேரங்களில் நினைவு கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் அவர்களை நேரில் பார்த்திருக்கிறீர்களா அம்மா...   வணங்கத்தகுந்தவர்.

      நீக்கு
    2. பார்த்திருக்கிறேன் ஸ்ரீராம். கணவரின் சகோதரிக்கு மிகப் பரிச்சயம்.
      மாமனாரின் இரண்டு அறுவை சிகித்சைக்கும்
      அவர்தான்.
      மாமனார் இறைவனடி எய்த போது வந்து வந்திருந்தார். வைத்தியராக அல்ல.
      குடும்ப
      நண்பராக. எத்தனை எளிமை.

      நீக்கு
  11. திரு.ஜவர்லால் அவர்களின் நகைச்சுவை
    மிக அரசிக்கும்படி இருந்தது.

    உங்கள் சகோதரியின் ஷஷ்டி அப்த பூர்த்தி
    இத்தனை அமர்க்களத்தோடு சிறப்பாக
    நடந்தேறியது மிகச் சுவையாக சொல்லி இருக்கிறீர்கள்.
    ஹவிஸ் இரண்டு பாகமாகச் செய்த சாமர்த்தியத்தை மிகப்
    பாராட்டும்படி இருக்கிறது.
    முக்கால் மணி நேரத்தில்
    நல்ல வேலை செய்து பூரணமாக்கி இருக்கிறீர்கள்.
    சமயோசிதமான நடவடிக்கை.
    அக்கா இதற்கே உங்களுக்கு இரண்டு சம்பாவனை செய்திருக்க வேண்டும்.:))))


    வீட்டில் நடந்திருந்தால் இதெல்லாம் கொஞ்சம் சுலபம்.
    சத்திரம் என்று வரும்போது பல விஷயங்களை
    மறந்து தான் போகும்.
    என்னதான் லிஸ்ட் போட்டுக் கொண்டு செய்தாலும்
    மிகக் கவனம் தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரியிடம் சொல்கிறேன்...  இன்னொரு சம்பாவனை பாக்கி இருக்கிறது என...!   ஹா...  ஹா...  ஹா...   ரொம்ப சாஸ்திரம் - அதுவும் அந்த நேரத்தில் பார்த்தால் யாராவது ஏதாவது சொல்வார்களே என்று யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை!

      ஜவர்லாலின் நகைச்சுவையை அப்போதே நானும் ரசித்தேன்.  அது அவர் இயல்பு.

      நீக்கு
  12. உடனே வெளியில் சென்று அருகிலிருந்த மளிகைக்கடையை அணுகி வெல்லம் கொஞ்சம் வாங்கிக்கொண்டேன். அதை வாங்கி கொண்டு மண்டபத்துக்குள் நுழைந்தால் அங்கு மண்டப வாசலில் நின்றிருந்த பசு ஒன்று அதை என்னிடமிருந்து வாங்கி கொள்ள ஆவலாகத் துரத்த, அதனிடமிருந்து தப்பி, ஓரமாகச் சென்று சுத்தமான பெரிய கருங்கல் ஒன்றை எடுத்து வெல்லத்தைப் பொடி செய்தேன்.//////////!!!!!!!!!!! AdEngappaa.!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிளாஸ்டிக் பாக்கெட்டுக்குள் வெல்லம் இருந்ததால் கருங்கல்லால் பொடி செய்வது எளிதாக இருந்தது.

      நீக்கு
  13. சப்பாத்தி குருமா இருக்குங்க!!! இதுதான் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  14. ..சம்பவம் நடந்த நேரத்தின் அப்போதைய தொலைக்காட்சிசெய்தி! //

    ’கலாம் என்றால் கலகம்’ என்று சொன்ன மேதையின் சேனல் இப்படிச் செய்தி வெளியிட்டது ஆச்சரியப்படத்தக்கதல்ல - ’ஆவி’யைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்..அப்போதே!

    பதிலளிநீக்கு
  15. அவிசு, சர்க்கரைப் பொங்கல், சுஜாதாவின் நாடகம்..
    நல்ல நாடகம் !

    பதிலளிநீக்கு
  16. உழைப்பில் சிரித்த உயர்ந்த மனிதன் குமாரி முத்து அவர்களின் பேட்டி சிறப்பு...

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் கணினி இன்னமும் சரியாகவில்லையோ? அவரும், அவர் கணினியும்,அல்லல்கள் அகன்று பூரண குணமடைந்து நலமுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   கணினி இன்னும் சரியாகவில்லையோ....   இருக்கலாம் கமலா அக்கா.

      நீக்கு
    2. நினைவு கூர்ந்தமைக்கு நன்றி கமலா ஹரிஹரன். இரண்டு மடிக்கணினி இருப்பதால் வருவதற்குப் பிரச்னை இல்லை. நேரப் பிரச்னையாக இருந்ததால் வரலை. :)

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    தங்களின் முதல் பகுதி கட்டுரை மீண்டும், மீண்டும் படிக்க வைத்தது. அவ்வளவு பரபரப்பான நேரத்திலும் மளிகை கடைச் சென்று வெல்லத்தை வாங்கி வந்து, எனக்கும் வேண்டுமென்று, வேண்டுமென்றே துரத்திய பசுவையும், சஷ்டியப்தபூர்த்தி மாப்பிள்ளையின் அண்ணாவையும், (நானும் உங்களைப் போலவே உறவை மூக்கைச்சுற்றி தொடுகிறேன். ஹா.ஹா.ஹா ) சமாளித்து/சமாதானமாக்கி, அந்த சமயத்தில் நீங்கள் உங்கள் அக்காவுக்கு செய்த உதவி மிக அருமையாக உள்ளது. இந்த சமயோசித ஐடியா உங்களுக்கு அந்த நேரத்தில் வந்ததற்கு மீண்டும் பாராட்டுக்கள்.

    நல்ல அன்பான மருத்துவர் சாந்தா அவர்களைப் பற்றி அவர் தங்கை கூறியதனைத்தும் படித்ததும் கண்கள் கலங்கின. எவ்வளவு நல்ல மனங்கள்.. இவர்களைப் போன்றோர் கடவுளின் மறு வடிவங்கள். என்றும் வணங்க வேண்டிய ஆத்மாக்கள்.

    கடைசி தொலைக்காட்சி செய்தி என்ன சொல்வது? நாட்டு மக்களுக்கு சென்று சேரும் செய்திகளில் வார்த்தைப் பிழைகள் வராதிருக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. கவனக்குறைவுகள் நகைப்பிற்கிடமாக வந்து விட கூடாதல்லவா..

    இன்று கவிதைகள், மற்றும் ஜோக்ஸ் ஏதும் இடம் பெற வில்லையே? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மீண்டும் மீண்டும் படிக்க வைத்தது..//

      நன்றி கமலா அக்கா.  மறுபடியும் ஒரு சுற்று அலைச்சலுக்கு மிகவும் நன்றி.

      இதுவே அதிகம் ஆகி விட்டதால் ஜோக்ஸ் பகிரவில்லை.  கவிதை கைவசம் ஸ்டாக் இல்லை!

      நீக்கு
  19. குமரிமுத்துவின் மறு பக்கத்தைப் பார்க்க வாய்ப்பளித்ததுக்கு நன்றி. இல்லாவிடில் இதனைக் கேட்டிருக்கவே வாய்ப்பு இருந்திருக்காது. நன்றாக தன்னை, தன் அறிவை டெவலப் பண்ணிக்கொண்டுள்ளார். நல்ல பேட்டி இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  நானே இந்த வாட்ஸாப் எனக்கு வந்ததும் ஆச்சர்யப்பட்டேன்.  எனக்கு இதை அனுப்பியது என் அண்ணன்.

      நீக்கு
  20. அனைவருக்கும் காலை வணக்கம். இன்றைய கதம்பம் சுவாரஸ்யம்!
    திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் ஏதாவது முக்கியமான ஒன்றை மறப்பதும், சமாளிப்பதும் இல்லையென்றால் அது நிறைவு பெறாது. என் மகனின் திருமணத்தில் காசி யாத்திரைக்கான செருப்பு வாங்க மறந்து விட்டோம். டி.நகரில் மண்டபம் இருந்ததால் என் மாமா பையர் ஓடிப்போய்,அப்போதுதான் திறந்து கொண்டிருந்த ஒரு கடையிலிருந்து செருப்பு வாங்கி வந்தார்.
    டாக்டர் சாந்தாவைப் பற்றி செய்தி நெகிழ்ச்சி!
    குமரி முத்து பற்றிய தகவல் இதுவரை அறியாதது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  சின்ன சின்னப் பிரச்னைகள், சண்டைகள் விசேஷங்களின் சுவாரஸ்யங்கள்.  நன்றி பானு அக்கா.

      நீக்கு
  21. சமையல் கலை சட்டென்று கை கொடுத்தது எது கலந்தால் எது என்னவாகும் என்று ஞானம் பாராட்டத்தக்கது மிகவும் அழகான சம்பவங்கள் அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா.  இதற்கு பெரிய சமையல் ஞானம் தேவை இல்லையே அம்மா.  ஏதோ சமாளிப்பு!

      நீக்கு
  22. யார் யாரையோ எப்படி எப்படியோ புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கையில் -

    டாக்டர் சாந்தா அம்மையார் அவகளே மனிதருள் மாணிக்கம்.. மனிதருள் புனிதர்..

    வாழ்க அவரது புகழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தத் வரிகளை டைப்பும்போது எனக்குள்ளும் அதே எண்ணம்!

      நீக்கு
  23. இப்போதுதான் கவனித்தேன் குமரிமுத்து காலமாகிவிட்டாரா?? அடடா!

    பதிலளிநீக்கு
  24. KGJயின் எளிய விருப்பம் நிறைவேறுவதில் எத்தனை சங்கடம்? இதைப் படித்ததும் காந்தியை எங்கள் நண்பர் ஒருவர் He was Prince among beggers. என்று கூறியது நினைவுக்கு வந்தது. எளிமையாக இருக்கிறேன் என்று உடன் இருப்பவர்களை படுத்துவார் என்பார். காந்தியைப் பற்றி சொல்லி விட்டேன், கீதா அக்கா வந்து விடுவார் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவு கூர்ந்ததுக்கு நன்றி பானுமதி! காந்தியின் அன்றாட உணவுப் பட்டியலை நீங்க Freedom at Midnight புத்தகத்தில் தேடிப் பிடித்துப் படியுங்கள். அவருடைய எளிமையான உணவு குறித்த உண்மை புரியவரும். கூடவே காரியதரிசி, அவருக்கு உண்ண, உறங்க இடம், மனைவி, அவருக்குத் தனி சமையலுக்கு இடம், உறங்க இடம் (ஆனால் மனைவிக்கு உடம்பு சரியில்லைனா நோ மருத்துவம்) இவருக்கு உடம்பு சரியில்லைனா ஊரிலுள்ள/உலகிலுள்ள சிறப்பு மருத்துவர்கள் எல்லாம் வரவழைக்கப்படுவார்கள். சுயநலக்கார மனிதர்!

      நீக்கு
    2. ஜவர்லாலின் முகநூல் பதிவுகளும் அட்டகாசம். அவரின் "இதயம் பேத்துகிறது!" வலைப்பக்கமும் அநாயாசமாகப் பேத்தும். இப்போத் தான் குறைச்சுட்டார்.

      நீக்கு
    3. // எளிமை என்றால் உடனே உங்களுக்கு ஞாபகம் வருவது எது? ஹிஹிஹி... அதேதான். //

      பதிவில் நான் சொல்லி இருப்பது அதேதான்!

      நீக்கு
  25. இந்த வாரத்தின் தகவல்கள் நன்று.

    குமரிமுத்து காணொளி - பார்த்த நினைவு.

    கடைசி படம் - தொலைக்காட்சிகளில் வரும் தவறுகள் - வேதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சானலில் உண்மையான செய்திகள் வந்தால் தான் ஆச்சரியம்!

      நீக்கு
    2. நன்றி வெங்கட்.

      நன்றி கீதா அக்கா.

      நீக்கு
  26. @ஸ்ரீராம், தங்கையின் கணவருக்கு அறுபது பூர்த்தியா? தங்கைக்கா? தங்கைக்கு எனில் உங்களுக்கும் அறுபதுக்கு மேல் இருக்கணுமே! இந்தத் தங்கைக்குத் தானே நீங்க ஓட்டலில் டிஃபன் வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்தீங்க? ஆனால் அக்காவுக்குக் கொடுக்கலை போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  டிபன் வாங்கி கொடுத்தது தங்கைக்குதான்!

      நீக்கு
  27. தங்கை கணவரின் சஷ்டி அப்தபூர்த்தி என்று திருத்துங்க ஸ்ரீராம்! :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு ஜாக்கிரதையாக சொல்லிக்கொண்டு வருகிறேன்...!!!

      நீக்கு
  28. என் கணவரின் பெரியம்மா பெண்ணுக்கு மருத்துவர் சாந்தா தான் வெற்றிகரமாகப் புற்று நோய் அறுவை சிகிச்சை அடையாறில் செய்தார். அவருடைய கனிவான குணம் பற்றி அப்போதும் பேசிக் கொண்டார்கள்.

    பதிலளிநீக்கு
  29. என்னதான் பட்டியல் போட்டுப் பட்டியல் படி எடுத்து வைத்துக்கொண்டாலும் சில சமயங்களில் இப்படி மறக்கும். சத்திரத்தில் சமையல் நடந்த்தா இல்லையா? நடந்தது எனில் அவர்களிடமே ஒரு பாத்திரத்தை வாங்கி அவிசும், சர்க்கரைப் பொங்கலும் யாரானும் போய்ப் பண்ணிக்கொண்டு வந்திருக்கலாம். எங்க வீட்டில் ஒரு விசேஷத்தின் போது இப்படித்தான் மறந்து போய் சமையல்காரர்களிடம் கேட்டுக்கொண்டு அவங்க பாத்திரத்தில் செய்து பின்னர் நம்ம பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு போய்க் கொடுத்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியில் சமைத்து ரெடியாக அங்கு கொண்டுவரப்பட்டதால் அதைச் செயல்படுத்த முடியவில்லை.  முதலில் அங்கே போய்தான் கேட்டேன்.  அதைச் சொல்ல மறந்து விட்டேன்!  அந்த நேரத்துக்கு டிஃபன் வகையறாக்கள் மற்றும் காஃபி  மட்டுமே வந்திருந்தன!

      நீக்கு
  30. அவிசு என்னன்னு கூகிள் செஞ்சு கண்டுபிடிச்சேன் :)) நெய்யில் வேகவைத்த சாதம் பிரசாதம் .
    கொஞ்சம் வெல்லத்தை அந்த செல்லத்துக்கு கொடுத்திருக்கலாம் :)
    எனக்கு மிகவும் பிடிச்சது அந்த சூப்பர் சூப்பர் சாஸ்திரிகளின் குணம் .its ok  not  to be okay என்பது எதையும் பாஸிட்டிவா எடுப்பது .அவருக்கு பாராட்டுக்கள் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்.   அவிஸ் - ஆமாம்.  சாஸ்திரிகள் சிரித்த முகமாய் உற்சாகக் குன்று.

      நீக்கு
  31. சுஜாதா புக் சேரவேண்டிய இடத்துக்கு பயணித்ததா :))
    கெஜ்ரிவால் ..என்ன சொல்ல வரீங்க ? இருப்பதை வைத்து அட்ஜஸ்ட் செய்யணும்ன்னா ? :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கெஜ்ரிவால் - சின்ன வீடு என்பதை வைத்து ஜோக் செய்திருந்தேன் பேஸ்புக்கில்.  அதற்கு பதில் அவர் எளிமை என்பதற்கு ஒரு உதாரணத்தோடு வேறு பதிவிட்டார்.

      நீக்கு
    2. ங்கேஜே :) நல்ல நாளிலேயே விளங்கா மண்டை .நேத்து வீடு க்ளீனிங்கின்போது தற்செயலா ப்ளீச் சுவாசிச்சிட்டேன் அது தூக்கமா இருக்கு .ரெண்டு நாளில் ஜோக் புரியும்னு நினைக்கிறன் :))))))))

      நீக்கு
  32. மறைந்த மருத்துவர் சாந்தா அவர்கள் பற்றிய பகிர்வு அருமை .அவரை என் தங்கை சந்தித்திருக்கா .மிகவும் அன்பானவர் .அருமையா கவுன்சலிங் கொடுத்தார்னு சொல்வா.

    பதிலளிநீக்கு
  33. குமரிமுத்து ....இவரை நான் அப்பா அம்மாவுடன் பிரின்ஸ் ஜிவெல்லரிக்கு போகும் வழியில் பார்த்தோம் .அப்போ கட்சிக்கு வாக்கு சேகரிச்சிட்டிருந்தார் தி நகரில் எங்கள் முன்னே சென்ற ஆட்டோவிலிருந்து சடாரெனெ வெளிப்பக்கம்  திரும்பி எங்களை பார்த்து அவர் ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தார் ..இப்பவும் நினைவிருக்கு 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...  பயந்து போகாமல் இருந்தீர்களா?!!

      நீக்கு
    2. பயப்படல்லை .எங்கப்பா பக்கத்தில் இருக்குபோது என்ன பயம் :))

      நீக்கு
    3. ஹா..  ஹா..  ஹா..   சும்மா ஜோக்குக்குதான் கேட்டேன்.

      நீக்கு
  34. அந்த தொலைக்காட்சி பிளாஷ் செய்தி படு கேவலத்தின்  உச்சம் .க்ரீன் டீ உண்மைதான். இப்போ விதவிதமா வருது இதில் என்ன ருக்குன்னே தெரிலா 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை..   நான் இதெல்லாம் முயற்சிப்பதே இல்லை!

      நீக்கு
  35. இரண்டு வாரங்களாக கேள்விகள் கேட்கவில்லை. இதோ கேள்வி 1. எளிமை என்பதை எளிமையாக விளக்கவும்.
    2. சுஜாதா எளிமையாக எழுதியதால்தான் அதிகம் விமரிசிக்கப் பட்டாரா?

    பதிலளிநீக்கு
  36. குமரிமுத்து சிறப்பு
    கலாம் செய்தி வேதனை

    பதிலளிநீக்கு
  37. சஷ்டியப்த பூர்த்தியில் நடந்த அனுபவங்கள் அதை சமாளித்தவிதம் எல்லாம் அருமை.
    எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் இப்படி ஏதாவது மறந்து விடும்தான்.

    KGJ எழுதியது மாதிரி நாம் கஷ்டபடவேண்டாம் என்று சொல்லுவதே சிலரை கஷ்டபடுத்தி விடும்தான் நல்ல சிரிப்பு.

    குமரி முத்து அவர்கள் பேச்சு கேட்டு இருக்கிறேன் . நீங்கள் பகிர்ந்த காணொளிகள் அருமை.
    அவர் ஆசை படுவது போல நல்லது நடந்தால் மகிழ்ச்சி. எல்லோரையும் மகிழ வைப்பது பெரிய கலை. அழ வைக்க வேண்டாம்.


    // மறைந்த மனிதருள் புனிதர் மருத்துவர் சாந்தா பற்றி சமீபத்தில் தினமலர் 'சொல்கிறார்கள்' //

    அவர்கள் பற்றி நிறைய படித்து இருக்கிறேன். உயர்ந்த நல்ல உள்ளம் படைத்தவர் அவரை வணங்க வேண்டும். அவரை போன்றவர்களை காண்பது அரிது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கை இதைப் படித்துவிட்டு 'தான் மறக்கவில்லை, அதை தன் கணவர் பொறுப்பில் வித்திருந்ததாகவும் அவர் மறந்து விட்டார் என்றும் சொன்னார்.  கணவர் பொறுப்பு என்றாலும் இவர்தான் தயார் செய்திருக்க வேண்டும்.  நான் கேட்கவில்லை!

      நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  38. வேகமாக படிக்கும் போது எளிமையாக ஒரு சின்ன வீடு என்பதை எளிதாக சின்னவீடு என்று படித்து இந்த பதிவை படித்து ஏமாந்து போனேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ட்றுத், கீழே கொமெண்ட் போட வந்தேன், ஆனா உங்கட கொமெண்ட் பார்த்ததும் இதிலேயே போட்டிடலாம் என இங்கு வந்திட்டேன்:))..

      //எளிமையாக ஒரு சின்ன வீடு ///
      வரவர ஸ்ரீராம் டபிள் மீனிங்கில தலைப்பு வைக்கிறார் ஹா ஹா ஹா.. ட்றுத் போன்றோரை ஏமாத்தத்தானே?:))) ஹா ஹா ஹா

      நீக்கு
    2. Aaaaaaaaaa..idhu antha small house aaaaaa

      😂😂😂😂😂😂😂

      நீக்கு
    3. ஹா ஹா ஹா மதுரை...   வெற்றி...  வெற்றி..  வெற்றி...!

      நீக்கு
    4. அப்போதைய என்னுடைய பேஸ்புக் பதிவு இந்தவகையில் ஆனால் வேறு உள்ளடக்கமாக இருந்தது அதிரா...

      நீக்கு
  39. இந்த அதீஸ் பிரச்சனை.. சே..சே.. ஆரம்பமே டங்கு ஸ்லிப்பாகுதே:)) .. இந்த அவிஸ் பிரச்சனை பெரிய பிரச்சனையாக இருக்கும்போல இருக்குதே, இருப்பினும் நீங்க அங்கிருந்தபடியால ஈசியாக பிரச்சனையைச் சமாளிச்சிட்டீங்கள்..

    இப்படி பல பிரச்சனைகள் சமாளிக்கப்படுகிறது நமக்குத் தெரியாமலேயே.. முன்பெல்லாம் வெளிநாட்டில் தேங்காய் வாங்க முடியாது, தேடி வாங்கினால் முடியுள்ள தேங்காய் கிடைக்காது, இப்பவும் வேறு நாட்டுத்தேங்காய் எனில் முடி இல்லாமல் நன்கு பொலித்தீன் பக் பண்ணித்தான் கிடைக்கும்..

    அதனால அப்போ மக்கள் தாம்பூலம், கும்பம், தட்டம் இவற்றுக்கு முடியுள்ள தேங்காயெல்லோ வேணும், அதனால கார்ட்போர்ட்டை முடிபோல செய்து வைப்பினம் விசேசங்களுக்கு.. அது போட்டோவுக்கு வித்தியாசம் தெரியாது.. அதுபோல ஒருதடவை, அங்கிள் ஒருவர் அவசரமாக கேக்குக்குப் பதில் கறுப்புப் பெட்டி வைத்து என்னமோ எல்லாம் பண்ணிப் பிள்ளையை அருகில் வைத்து கேக் கட் பண்ணுவதுபோல படம் எடுத்தார் பேர்த்டேய்க்கு, படத்தில பார்த்தால் சூப்பரான சொக்கலேட் கேக்:))..

    புத்தகம் பத்திரமாக இருப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதீஸ் என்றதும் நினைவுக்கு வருகிறது.  உங்கள் யு டியூப் சேனல் சாப்ஸ்க்ரைப் செய்தும், அந்த பெல் ஐகானை க்ளிக் செய்தும் எனக்கு நோட்டிபிகேஷன் வரமாட்டேன் என்கிறது.  அதுபோலவேதான் திருமதி ஆதிவெங்கட், திருமதி எல்கே ஆகியோரின் யு டியூப் சேனல்களும்!

      அங்கு இருக்கும் தேங்காய்ப் பிரச்னை கவுண்ட்டமணி கிளப்பிய தேங்காய்ப்பிரச்னையை விட பெரிதாக இருக்கும் போல!!!

      நீக்கு
    2. உங்கள் பதிலை அஞ்சு பக்கமும் பார்த்தேன் ஶ்ரீராம்...
      அது போனில் யூரிப் எப்பவும் சைன் இன் பண்ணி இருக்கோணும்... மாறி சைன் அவுட் ஆனாலும் காட்டாதெல்லோ...
      இன்றைய ஸ்பெசல்...
      athees palace il

      https://youtu.be/dBVWxLedCDA

      நீக்கு
    3. சென்று பார்த்து விட்டேன்.  நன்றி அதிரா.     எனக்கு மஷ்ரூம் பிடிக்கும்.  இப்போது அன்சப்ஸ்க்ரைப் செய்து விட்டு மறுபடி முதலிலிருந்து சப்ஸ்க்ரைபும் பெல் ஐகான் கிழிக்கும் செய்திருக்கிறேன்.  பார்ப்போம்.

      நீக்கு
    4. Corrction : சென்று பார்த்து விட்டேன்.  நன்றி அதிரா.     எனக்கு மஷ்ரூம் பிடிக்கும்.  இப்போது உங்கள் பக்கத்தை அன்சப்ஸ்க்ரைப் செய்து விட்டு மறுபடி முதலிலிருந்து சப்ஸ்க்ரைபும், பெல் ஐகான் கிளிக்கும் செய்திருக்கிறேன்.  பார்ப்போம்.

      நீக்கு
  40. //கொரோனா காலமாயிருந்தாலும் மெல்ல மெல்ல ஆட்கள் சேர்ந்து சொல்லத் தகுந்த அளவு கூட்டம். //

    இதுபற்றி என்னிடமும் ஸ்ரோறி இருக்குது, முடிஞ்சால் பின்பு போஸ்ட் போடுறேன்.

    ஒருவாய் மோர் சாதம்.. சூப்பர்:))

    குமரிமுத்து அங்கிளைப் பிடிப்பதில்லை எனக்கு:)).

    டொக்டர் சாந்தா அவர்களைப் பற்றி நானும் அறிஞ்சிருக்கிறேன்..

    கிரீன் ரீ.. ஹா ஹா ஹா.

    அப்படி இல்லை, கிரின் ரீயை மட்டும் குடிச்சால் மெலியலாம்:)) மூன்று வேளையும் நேரம் தவறாமல் தொண்டை வரை தள்ளிப்போட்டுக் கிரீன் ரீ குடிச்சால்... என்ன ஆவுறது:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரோனா காலத்து உங்க போஸ்ட்டையும் போடுங்க...

      இந்த பேட்டி பார்க்கும்வரை எனக்கும் குமரிமுத்து அவர்களைப் பிடிக்காது!

      நன்றி அதிரா.

      நீக்கு
  41. சஷ்டியப்த பூர்த்தி தம்பதியருக்கு நல்வாழ்த்துகள்! தங்கள் சமயோசிதம் பாராட்டுக்குரியது:). டாக்டர் சாந்தாவின் தங்கை மூலம் அவரைப் பற்றி மேலும் அறிய முடிந்தது. காணொளி பார்க்கிறேன். செய்தியில்.. இப்படியுமா கவனக்குறைவாக இருப்பார்கள் :(?!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!