புதன், 5 மே, 2021

பொ.செ.வில் திரிஷாதான் குந்தவையாம். ஒல்லியான குந்தவையை கற்பனை பண்ண முடிகிறதா?

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

யாருக்காவது(குறிப்பாக வாழ்க்கை துணைக்கு) சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்ததுண்டா? அவர் ரியாக்ஷன் எப்படி இருந்தது?

$ I left a cheque for 50k in the kitchen where she is likely to see it.

Finding no mention of it in a matter of two or three weeks, started investigating and found it as a book mark in meenakshi ammal's cookbook.

She conveniently used it without looking at the obverse!

# கொடுத்ததுண்டு அதுபற்றிய விவரங்களை மறந்ததும் உண்டு.

& டிசம்பரில் திருமணம். ஜனவரியில் திருமதிக்கு பிறந்தநாள். அலுவலக நண்பர்கள் குழுவில் ஆயுத பூஜை தங்கக்காசு சேமிப்பு திட்டம் ஒன்றில் சேர்ந்து வாங்கி, பத்திரமாக வைத்திருந்த 5 கிராம் தங்கக்காசை பிறந்தநாள் காலையில் பரிசளித்தேன். மிக மிக சந்தோஷம் அடைந்தார். 

மணிரத்னம் எடுக்கும் பொ.செ.வில் திரிஷாதான் குந்தவையாம். ஒல்லியான குந்தவையை கற்பனை பண்ண முடிகிறதா?

# குந்தவை பிராட்டியார் குண்டு எனக் குறிப்பு எதுவும் இல்லை. த்ரிஷா என் அபிமான நடிகை.



$ : Ponniyin selvan staged drama had a shorty fat for kundavai. ) 

& அப்போ நமீதாவை குந்தவை வேடத்தில் நடிக்க வைத்தால் உங்களுக்கு ஓகேயா ? 

ஒரு படைப்பு எப்போது இலக்கிய அந்தஸ்து அடைகிறது? சொல்லப்படும் விஷயத்தின் கனத்தினாலா? அல்லது சொல்லப்படும் விதத்தாலா?

# இரண்டும்தான். அவற்றுடன் எத்தனை ஆண்டுகளுக்கு விரும்பி வாசிக்கப் படுகிற முறையில் நிலைத்து நிற்கிறது என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். சாண்டில்யன் தேவன் திஜ.ர போன்றவர்களது படைப்புகளே கூட புழக்கத்தில் இல்லையே.

$ இன்னும் 50 வருட patent முடிந்திருக்காது. 

& என் கணக்குப்படி ஐந்து பக்கங்கள் படிப்பதற்குள் மூன்று கொட்டாவிகள் விட நேர்ந்தால் அதுதான் இலக்கியப் படைப்பு. 

கீதா சாம்பசிவம் : 

1. நம் குழந்தைகள், நண்பர்களை வீட்டுக்கு அழைத்துவரும்போது இருவருக்கும் சாப்பாடு கொடுக்கையில் வித்தியாசம் பாராட்டும் அம்மாக்கள் செய்வது சரியா? உதாரணமாக தோசை வார்த்தால் சூடான தோசைகளை சொந்தப் பிள்ளைக்கும் ஆறின தோசைகளைக் கூடச் சாப்பிடும் நண்பருக்கும்! இம்மாதிரிக் கொடுப்பது தப்பில்லையோ?

$ அப்படி செய்பவர்கள் என் கண்ணில் பட்டதில்லை

#  இதையெல்லாம் நாம் தான் கவனிக்கிறோம் பிள்ளைகள் அல்ல.  அற்பத்தனம் பொதுச் சொத்து.  நம் அற்பத்தனங்களை நாம் அடையாளம் காண்பதில்லை.

& // " .. தோசை வார்த்தால் சூடான தோசைகளை சொந்தப் பிள்ளைக்கும் ஆறின தோசைகளைக் கூடச் சாப்பிடும் நண்பருக்கும்! இம்மாதிரிக் கொடுப்பது தப்பில்லையோ?" - // தப்பே இல்லை. சூடான தோசை சாப்பிட்டு சொந்தப் பிள்ளை வாய் பாதிக்கப்பட்டால் கூட பரவாயில்லை - ஆனால், வீட்டிற்கு வந்த விருந்தினர் / நண்பர் சூடான தோசை சாப்பிட்டு வாய் வெந்துவிடக்கூடாது என்னும் நல்லெண்ணமே காரணம். 

2. அந்த மாதிரி அனுபவம் உங்களுக்கு நேரிட்டது உண்டா? எனக்கு நிறையவே ஏற்பட்டிருக்கு. அந்த அனுபவங்களின் நினைவுகளால் தான் இந்தக் கேள்வியே!

$ குழந்தைகள் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடும் போது ருசி இரண்டாம் பட்சம். 

# நான் பார்க்க சிலசமயம் நேர்ந்திருக்கலாம். நினைவில்லை.

& எனக்கு நேரிட்டது உண்டு. ஆனால் நான் இதை எல்லாம் பொருட்படுத்துவதில்லை. 

நெல்லைத்தமிழன்: 

 1. கடவுள் நம்மை காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் செல்லும் வரம் தந்தால், எந்தக் காலத்திற்குச் சென்று எதனைச் செய்வீர்கள்?  (உதாரணமா, நான், என் பெண் சிறுகுழந்தையாக இருந்த காலத்திற்குச் சென்று அவளுக்கு நிறைய நேரம் கொடுத்திருப்பேன்..அந்தச் சமயத்தில் குட்டிப்பையனிடம் மிக அதிக நேரம் செலவழித்தேன்.  அப்புறம் அவங்க செலவுக்கு என்ன கேட்டாலும் இன்னும் நிறைய தாராளமாக இருந்திருப்பேன்)    

 $ ரொம்ப தூரமில்லை. 1965_ல் வேண்டாம் என்று சொன்ன TERLS வேலையோ அல்லது 1963_ல் போகவேண்டாம் என்று நினைத்த HAL வேலையில் சேர்ந்துவிடுவேனோ!

# பள்ளிநாட்களுக்குச் சென்று என் நன்றிக்கடன் சிலவற்றைத் தீர்க்க முயற்சி செய்வேன்.

& கல்யாணத்திற்காகப் பெண் பார்க்கப் போன நாட்களுக்குப் போய் - - வேறொரு நல்ல பெண்ணாக --- ஆ - பின்னாலிருந்து யாரோ என் மண்டையில் - - -  என்ன சொல்லவந்தேன் என்பதே மறந்துவிட்டதே! 

2.  எந்த ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடணும் என்று உங்களுக்கு ஆசை இருக்கிறது?

$ ஹோட்டல் சமையல் வீட்டு சமையலை விட நன்றாக இருக்குமா என்ன?

# கடலூர் போஸ்டாபீஸை அடுத்து ஒரு வயோதிக அந்தணர் "காபி கிளப்" வைத்திருந்தார். அங்கு போய் தோசை (ஸ்பெஷல், நெய் எல்லாம் கிடையாது.. தோசை அவ்வளவே) மசால்வடை, காபி சாப்பிட்டு ஒரு நூறு ரூபாய் (பில் ஐந்து அணா அல்லது 32 பைசா) கொடுக்க முடிந்தால் பரமானந்தம். ($ : தேவி விலாஸ்)

& கர்நாடகாவிற்கு வந்த பிறகு - ஹோட்டல் ஆசை எல்லாமே அவுட். 

 3.   பயணம் எதுவும் மேற்கொள்ள முடியாமல் கையைக் கட்டிப்போட்டதுபோல கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக இருக்கிறதே.. உங்களுக்கு அதில் வருத்தம் உண்டா? எந்தப் பயணத்தை மிஸ் செய்கிறீர்கள்?

$ ஆன்மீகத்தை வெளியில் தேடாதீர்..உங்களுக்குள்ளேயே தேடுங்கள் என்பார் எங்கள் குரு. உள்ளூரிலேயே நாம் பார்க்கவேண்டியது நிறைய இருக்கிறது என்கிறது கரோனா.

# வருத்தம் இல்லை ஏக்கம் சற்றே உண்டு. உறவினர்கள் வாழும் சென்னை, கடவுளர் காட்சி தரும் திருத்தலங்கள் பற்பல.

& சென்னை இசை விழா நாட்களில் பெங்களூரிலிருந்து தவறாமல் ஒவ்வொரு வருடமும் சென்னை சென்று ஓசி கச்சேரிகள், காசுக் கச்சேரிகள் என்று ஓடி ஓடி பாட்டுக் கேட்ட அனுபவங்களை மிஸ் செய்கிறேன். 

4. நேர பேசிக்கொண்டிருக்கும்போது சாதாரணமாகப் பேசுபவர்கள், மேடையில் பேச ஆரம்பித்ததும் குரல், பேசும் முறை எல்லாமே மாறி நாடக மேடையாக்கிவிடுகிறார்களே.. அது ஏன்?    

$ என் நண்பர்கள்,, உங்கள் குரல் பேச்சு முறை எல்லாம் இப்படி மாறி விடுகிறதே எப்படி என்று கேட்பார்கள். எனக்கு உள்ளே இருக்கும் உதறல் நான் மட்டுமே அறிந்தது.

# பிரபல பேச்சாளர்கள் தந்த  பாரம்பரியம்.

& கம்யூனிக்கேஷன் வகுப்புகளில் - 'Dramatize your speech' என்று ஒரு பாயிண்ட் சொல்வார்கள். ஒருவேளை அதை மேடைப் பேச்சாளர்கள் வேறுவிதமாகப் புரிந்துகொண்டுவிட்டார்களோ? 

5.  இப்போ உள்ள அரசியல்வாதிகளில் உங்களைக் கவர்ந்தவர்னு (காரணம் தேவையில்லை) சொல்லணும்னா யாரைச் சொல்லுவீங்க?

$ ரா கா தான். என்ன ஒரு குருட்டு அதிர்ஷ்டம்!

# சீமான் கமல்ஹாசன். பாவம் அப்பாவிகள்.

& திருமதி சோனியா காந்தி - எங்கும் அதிகம் பேசுவது இல்லை என்பதால். 

6. யார் எவ்வளவு சாப்பிடுவாங்க என்று சரியா கணித்து சமையல் செய்வது சாத்தியமா?

$ மிஞ்சியே போகாமல் சமைக்கும் சிலரைக் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் வெகு நாட்கள் கழித்து உறைத்தது.. நம் கதாநாயகிகள் பாதி நாட்கள் வெறும் வயிற்றுடன் தூங்கப் போனார்கள் என்றறிந்த போது. .. ..

# இல்லாமை காரணமோ என்னவோ என் தாயார் சமைத்து மீந்தது அநேகமாக இல்லை.

 & சாத்தியம் இல்லை. 

= = = = = 

166 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    கேள்வி பதில்கள் நன்று.

    ஆட்கள் இருக்கும்போது வராமல், யாரும் இல்லாதபோது வந்து பயப்பட்டுப் புலம்புவதே ஒருவரின் வேலையாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  வணக்கம்...

      அந்த ஒருவரை வம்புக்கிழுப்பதே உங்கள் வேலையாகிறது!!!

      நீக்கு
    2. ஹா ஹா ! அப்புறம் வந்து இன்று புதன் கிழமை என்பதே மறந்து போச்சு என்பார்!

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்படி ஒரு பச்சைக் குழந்தைய ஒட்டுவது உங்களுக்கே நல்லாருக்கா நெல்லை!!!!! நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!!!!!! பாவம் குழந்தை!

      கீதா

      நீக்கு
    4. என்னைத் தேடினவங்களுக்கு நன்னி, நன்னி, நன்னியோ நன்னி! வீட்டு வேலைகளில் உதவும் பெண்மணியை நிறுத்தி இருக்கோம் தாற்காலிகமாக! பெண்ணும் பிள்ளையும் பிடுங்கி எடுத்துவிட்டார்கள் அவங்களை நிறுத்தச் சொல்லி! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதனால் காலை எழுந்ததும் அடுத்தடுத்து அடுத்தடுத்து வேலைகள். பதினொன்றரை வரை சரியா இருக்கு! அப்புறமாக் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டே தினசரியை ஒரு புரட்டு/சில நாட்கள் அதுவும் இருக்காது/மொபைலில் யாரிடமிருந்தாவது செய்தி வந்திருக்கானு பார்த்துட்டுச் சாப்பிட உட்காரும்போது பனிரண்டரை ஆகிவிடும். நம்மவர் உம்மாச்சியை நேரிலே பார்த்துப் பேசிவிட்டு வர நேரம் எடுக்குமே! அதான் பனிரண்டரை! அப்புறமாத்தான் சமையலறை வேலைகளை முடிச்சுட்டுக் கணினிக்கு வர முடியும். அங்கே வேலையை முடிக்கலைனா கணினியில் உட்கார்ந்தாலும் மனசு பதியாது! சில நாட்கள் நடுவில் கணினியை மூடிட்டுப் போய் வேலைகளை முடிச்சுட்டு வருவேன். இப்போ எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வந்திருக்கேன். ஒரு மணி நேரமாவது இருப்பேன் என நினைக்கிறேன்.

      நீக்கு
    5. வாங்க...  வாங்க...   டைட் ஷெட்யூல் போலிருக்கு...  வேலைகளில் உதவும் பெண்மணியை இப்போதைக்கு நிறுத்தியது நல்ல செயல்தான்.  நாங்கள்தான் இன்னமும் செய்யாமல் இருக்கிறோம்.

      நீக்கு
  2. கடைசி கேள்வியின் உள்ளர்த்தம்... குடும்பத் தலைவி பல நேரங்களில் நல்லதை நிறைவாக சாப்பிட முடியாத்தும், பசங்களுக்கு வேணும் என்று வைத்துவிட்டு கடைசியில் மிஞ்சினால் அடுத்த வேளையில் சிலசமயம் சாப்பிடுவதை எண்ணியும் இந்தக் கேள்வி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் காலத்தில் 'பசங்க' வீட்டில் செய்யும் எதையும் சரியாய்ச் சாப்பிடுவதில்லை.  அதையே கடையில் வாங்கினால் வெளுத்து வாங்குகிறார்கள்!!  சொந்த அனுபவம்தான்!

      நீக்கு
    2. நான் அப்படித்தான் எனக்கு என்று வைத்து இருப்பதில் கொஞ்சம் எடுத்து தனியாக வைத்து இருப்பேன். என் மகன் "அம்மா நல்லா இருந்தது இன்னும் இருக்கா?" என்று வந்து எட்டி பார்ப்பான் பாத்திரத்தை. அப்போது கொடுப்பேன்.

      என் அம்மாவும் அப்படித்தான். அவர்களுக்கு என்று யாராவது பலகாரங்கள், பழங்கள் வாங்கி வந்து கொடுத்தால் அதை பத்திர படுத்தி வைத்து இருப்பார். என் தம்பி, தங்ககைகள் வந்தால் அவர்களுக்கு கொடுப்பார்கள்.

      நீக்கு
    3. இந்த மாதிரி தியாகத்தின் அர்த்தம்தான் என்ன? தாயும் சேயும் என்றாலும் வாயும் வயிறும் வேறல்லவா?

      காலையில் முதலில் நான் சாப்பிட்டுடுவேன். (பசங்க..ஆறி அவலானப்பறம் மெதுவா சாப்பிட வருவாங்க. கேட்கும் எல்லார் வீட்டிலயும் அப்படித்தான் என்பதில் ஒரு ஆறுதல்). சில சமயன், சிலவற்றை பசங்க கேட்பாங்க என்பதற்காக கொஞ்சமா போட்டுக்கொள்ளவேண்டியிருக்கும். அப்புறம் சாயந்திரம் பார்த்தால் மிஞ்சியிருக்கும், வேஸ்ட் ஆகிடும்.

      நீக்கு
    4. //'பசங்க' வீட்டில் செய்யும் எதையும் சரியாய்ச் சாப்பிடுவதில்லை. அதையே கடையில் வாங்கினால் // உங்களுக்கு மட்டும் அந்த அனுபவம் இல்லை. எனக்கும்தான். ஆரம்பத்துல ஹோட்டல்ல (பசங்க சின்னவங்களா இருந்தபோது) மதிய உணவுன்னா அவங்க வரமாட்டாங்க. சரி.. உங்களுக்கு நார்த் இண்டியன் உணவு என்றால் வருவாங்க. அப்புறம் அவங்களுக்கு இஷ்டமானதை வாங்கலாம் என்றால்தான் வருவாங்க.

      இந்த ப்ரெட் கண்டுபிடித்தவனை நாலு போடு போடணும். (நூடுல்ஸ், பாஸ்தா போன்றவற்றையும்தான்). உடலுக்கு கெடுதல்னு தெரியுது. ஆனா பசங்களுக்கு அதுதான் பிடிக்குது. (ஒருவேளை நாம மேற்கத்தைய நாடுகள்ல ஹோட்டல் ஆரம்பித்தா, அந்த ஊர் பசங்க, இட்லி பொங்கலுக்கு ஆசைப்படுவாங்களோ?)

      நீக்கு
    5. எங்க வீட்டில் யாரும் இப்படித் தியாகம் செய்ததாக நினைவில் இல்லை. எப்போவுமே குழந்தைகள் முதலில் சாப்பிடுவோம்/சாப்பிடுவார்கள்/சாப்பிடுகிறார்கள். ஆகவே கடைசியில் நான் சாப்பிடுகையில் சரியாக இருக்கும். இருப்பதைப் போட்டுக்கொண்டு தீர்க்க வேண்டுமே எனச் சில சமயங்கள் போட்டுக்கொள்கிறாப்போல் இருந்தால் எடுத்துத் தனியா வைச்சுடுவேன். அதுவும் காய்கள் எதுவும் மிஞ்சாது. குழம்போ, ரசமோ இருக்கும். ராத்திரிக்குச் செலவாகும் என்றால் வைப்பேன். இல்லைனா யாரையானும் கூப்பிட்டுக் கொடுத்துடுவேன்.

      நீக்கு
    6. பொதுவாகவே இப்போது ஓட்டல்களுக்குப் போய்ச் சாப்பிடும் வழக்கம் அதிகரித்து இருக்கிறது. அதிலும் இந்த ஸ்விகியும், ஜொமோட்டோவும் வந்ததும் இன்னும் அதிகம். இன்று வரை நாங்க ஸ்விகி மூலமோ ஜொமோட்டோ மூலமோ எதுவும் வாங்கினது இல்லை. சொல்லப் போனால் அவங்களை எப்படி அழைக்கணும்னே தெரியாது! வெளியில் வாங்குவது எனில் இப்போதெல்லாம் காடரர் சாப்பாடு முடியாத நாட்களில் வாங்கறோமே அதான்! அதுவும் இப்போ இங்கே சில காடரர்கள் சமையலறையைக் கொரோனா காரணத்தால் மூடிட்டாங்க. திறப்பது குறித்து மே பத்து தேதிக்குப் பின்னரே தெரியும்.

      நீக்கு
    7. ஸ்விக்கி, ஜோமேட்டோ மூலமோ உணவுவ அரவழைக்க மொபைலில் அந்த ஆப் பை நிறுவிக்கொள்ள  வேண்டும்.  என்னிடமும் இதெல்லாம் கிடையாது!  மகன்கள்தான்.  உபேர் கூட என் மொபைலில் கிடையாது.  மகன், பாஸ்தான்!

      நீக்கு
  3. பொ செ.. திருஷா... என்ன மாதிரியெல்லாம் கவலை இந்த பாவெ க்கு.

    கிரீடம், நகை, கச்சை எல்லாம் போட்டால் குண்டாகத் தெரிந்துவிட மாட்டாரா என்ன?

    அது சரி.. மணிரத்னம் குறைந்த விலைக்குக் கிடைக்கும் நடிக நடிகையரைத்தான் பிடித்து தன் படங்களில் போடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருண்மொழி வர்மனிடம் த்ரிஷா கிசுகிசுப்பாக சொல்வார்...  "வரணும்...    நீ மன்னனா வரணும்"

      அருண்மொழிவர்மன் (சற்றே சிறிய குரலில்) ..."அது கஷ்டம்...   அண்ணன் ஆதித்த கரிகாலன்..."

      த்ரிஷா :  பார்த்துக்கறேன்..  நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்..."

      நீக்கு
    2. சூப்பர் டயலாக் ஸ்ரீராம்.

      நீக்கு
    3. ஒரு டயலாக்கிலேயே திரிஷாவை நந்தினி ரேஞ்சுக்குக் கொண்டுபோயிட்டாரே இந்த ஸ்ரீராம்... இவரை இராமாயணத்துக்கு கதை வசனம் எழுதச் சொன்னால்,

      பிரம்மன் - இந்த இராவணனால் ரொம்ப கஷ்டமா இருக்கு. அவனை வதம் பண்ணணும் என்று உங்கள் கணவர் பிறவி எடுத்தாலும் ரொம்ப சாந்தமா இருக்கிறார். எப்படி இராவணனோடு கோபம் வந்து..சண்டை வந்து..

      சீதா - நோ ப்ராப்ளம். நான் பார்த்துக்கறேன். நானே இலங்கைக்கு ஓடிப்போயிடறேன்

      நீக்கு
    4. //நானே இலங்கைக்கு ஓடிப்போயிடறேன்//

      ஹா...   ஹா..  ஹா...   சீதாவை எந்த ரேஞ்சில் வைத்திருக்கிறீர்கள்?!!

      நீக்கு
    5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    6. ஹா..  ஹா..  ஹா...   நெனச்சேன் நீங்க கர்ருவீங்கன்னு!   இன்னும் ரெண்டு எதிர்ப்பை எதிர்பார்த்தேன்!

      நீக்கு
    7. போனால் போகட்டும்னு கண்டுக்கலை! :)))))

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    எங்கெங்கும் நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    நோய்த்தொற்று முழுவதும் விலக இறைவன்
    அருள் செய்ய வேண்டும். ஒரு சில நாளாவது

    நல்லவை அல்லாத செய்தி இல்லாமல்
    நிம்மதியாக இருக்க அவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. கேள்விகளைக் கேட்ட அருமையும் பதில்கள் வந்த
    அருமையும் சுவாரஸ்யம்.
    பாவே, கீதாமா, நெல்லைத்தமிழன் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    த்ரிஷா...குந்தவை? அடக் கஷ்ட காலமே.
    ஓ ஹோ ...முதிர்கன்னி. ...சரிதான்.
    பதில் சூப்பர். நரசிம்மா வந்து சொன்னாரோ?

    பதிலளிநீக்கு
  8. வெகு நாட்கள் கழித்து உறைத்தது.. நம் கதாநாயகிகள் பாதி நாட்கள் வெறும் வயிற்றுடன் தூங்கப் போனார்கள் என்றறிந்த போது.//////////////////////////////////////////////////////////////////////////////////////// AHAAAAA............SUPERB.

    பதிலளிநீக்கு
  9. கடவுள் காலச்சக்கரத்தைப்
    பின்னோக்கிப் போக வைத்தால்,

    குழந்தைகளுக்கு இன்னும் நிறைய செய்து கொடுத்திருப்பேன்.
    5 வருடங்களில் மூன்று குழந்தைகள்...
    தானாக வளர்ந்தார்களோ என்று சில சமயம் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  10. தன் குழந்தைகள் பிற குழந்தைகள் என்று
    பார்ப்பார்களா?
    என் வரையில் செய்ததில்லை.
    எனக்கும் அதுபோல அனுபவம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கிறாங்க வல்லி! நான் நிறைய அனுபவிச்சிருக்கேன். எனக்குமே நடந்திருக்கு! என் குழந்தைகளுக்கும் நடந்திருக்கு! கண்டுக்கறதில்லை. ஆனால் இப்போ சமீபத்தில் ஒரு நிகழ்வைப் பார்த்த/கேட்டப்போ இது மனசில் தோன்றியது. கேள்வியாய்க் கேட்டேன். பதிலளித்த ஆசிரியர்கள் யாருக்கும் இது ரசிக்கலை என்பதும் புரிந்தது. இஃகி,இஃகி,இஃகி. இதைப் பற்றி சுகி சிவம் கூடத் தன் ஒரு சொற்பொழிவில் சுட்டிக் காட்டி இருப்பார்.

      நீக்கு
    2. அதான் மேலே கேள்வியாக் கேட்டுட்டு எல்லோருமே அப்படி எல்லாம் நடக்காதுனு சொல்லிட்டாங்களே! # கூட அற்பத்தனங்களைக் கண்டுக்கறதில்லைனு சொல்லி இருக்கார். :))) & மட்டும் ஒத்துண்டிருக்கார். ஆனால் நானும் எனக்கு நேர்ந்தப்போ கண்டுக்காமலே இருந்திருக்கேன்.

      நீக்கு
    3. //இதைப் பற்றி சுகி சிவம் கூடத் தன் ஒரு சொற்பொழிவில் சுட்டிக் காட்டி இருப்பார்.//

      என்னன்னு?

      நீக்கு
  11. ஹோட்டல் என்றால் சொல்ல்த் தெரியவில்லை.
    திருச்சி சென்னை பாதையில் பெரம்பலோரில் ஒரு ஐய்யர் கடை என்று
    பெயர் தாங்கிய கீத்துக் கொட்டகையில் பயணங்களின் போது காலைக்
    காப்பியும் ,இட்லி வடையும் சாப்பிடுவது வழக்கமாக இருந்தது.

    அதே போல நெய்வேலி சென்ற போது ஒரு உணவு விடுதி.
    சாப்பிட முடியாத அளவு உணவு கொடுத்தார்கள்.
    எல்லாமே 1970 வாக்கில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவில் வைத்திருக்க நிறைய ஹோட்டல்கள்..   கீதா அக்கா வந்து கோபு அய்யங்கார் கடையைச் சொல்லக்கூடும்!

      நீக்கு
    2. நெய்வேலி என்றதும் நினைவில் வருது. நாங்க கல்யாணம் ஆன புதுசிலே அவர் நண்பர் கல்யாணத்துக்காக நெய்வேலி போனோம். அப்போ அங்கே பேருந்து நிலையத்துக்கு அருகே (?) சரியாய் நினைவில் இல்லை, ஓர் உணவு விடுதி! நெய்வேலி லிக்னைட் காரங்க நடத்தினதோ? அதுவும் தெரியலை. சாப்பாடு போட்டாங்க. நாங்களும் நன்றாகவே சாப்பிட்டோம். கடைசியில் மோர் சாதம் சாப்பிடும்போது ஊற்றிய தயிர்! அதுமாதிரித் தயிர் இன்னிவரை சாப்பிடலை! தொட்டுக்க எலுமிச்சை ஊறுகாய்! சாப்பாடு குறைந்தது பதினைந்து ரூபாயாவது இருக்குமோனு நினைச்சோம். ஆனால் ஐந்து ரூபாய்க்குள் முடிந்து விட்டது. தொழிலாளர்களுக்குக் குறைந்த விலையில் போட்டதால் எங்களுக்கும் அப்படியே போட்டாங்களோ என எங்களுக்கு ஒரு சந்தேகம் உண்டு.

      நீக்கு
    3. அதே கல்யாணம் ஆன வருஷம், ஜனவரி மாதம் என்னோடு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிநேகிதியின் கல்யாணத்துக்காக ஶ்ரீபெரும்புதூர் போனோம். அங்கே கல்யாணம் முடிந்து சாப்பாடு சாப்பிட்டுப் பின்னர் காஞ்சிபுரம் போனோம். பரமாசாரியார் அப்போது தேனம்பாக்கத்தில் இருப்பதாய்க் கேள்விப் பட்டு அங்கேயும் போனோம். நல்ல தரிசனம். பஜனைப்பாடல்கள் எல்லோரும் பாடவே கூடவே உற்சாகமாய்ப் பாடி முடிந்ததும் அங்கிருந்த ஓர் மரத்தடியில் நாங்க ரெண்டு பேரும் போய் உட்கார்ந்து கொண்டிருந்தோம். அரை மணி நேரம் ஆச்சு! மறுபடியும் பெரியவா தரிசனம் கொடுக்கப் போவதாக யாரோ சொல்லவே அவசரம் அவசரமாக எழுந்தோம். வரும்போது அங்கே ஓர் கூடத்தில் எல்லோரும் சாப்பிடுவதையும் பார்த்தோம். எங்களுக்கு என்ன, ஏது என்றெல்லாம் கேட்கத் தெரியலை. ஆனால் ஒரு பெரியவர் எங்களிடம் வந்து நீங்க ரெண்டு பேரும் ஏன் வரலைனு கேட்டார். எங்களுக்குச் சாப்பாடு உண்டுனு தெரியாது;அதான் வரலைனு சொன்னோம். இருங்கனு சொல்லிட்டு உள்ளே போய்ப் பார்த்தார். அநேகமாய் எல்லாம் காலி போல! சாதம் இருந்திருக்கு. அதில் தயிரை விட்டுப் பிசைந்துக் கடுகு, மோர்மிளகாய் தாளித்துக் கொண்டு ஓர் தாமரை இலையில் வைத்து எங்களிடம் கொடுத்தார். அந்த நேரம் அது தேவாமிர்தத்தை விட உயர்த்தியாய் ருசித்தது. இப்போவும் அதைப் பற்றி நினைவு கூர்வோம். அதுக்கப்புறமா நிறையத் தரம் காஞ்சி மடத்திலேயே விருந்து போலச் சாப்பிட்டாலும் முதல் முதல் சாப்பிட்ட அந்தத் தயிர் சாதத்துக்கு ஈடு, இணை இல்லை.

      நீக்கு
    4. என்னைப்பொறுத்தவரை இங்கே இங்கே போகணும் என்பதைவிட சில ஹோட்டல்களுக்குப் போகக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கேன்.  ஒப்பிலியப்பன் கோவிலில் எதிர்த்தாற்போல இருக்கும் சிறுகடையும் அதில் அடக்கம்!

      நீக்கு
    5. கோபு ஐயங்கார் கடையைப் பத்திச் சொல்லி இருக்கீங்க. மதுரையிலே இருந்தவரைக்கும், அதுக்கப்புறமும் கூடப் பல வருடங்கள் அந்த ஓட்டலுக்குப் போய் உட்கார்ந்து சாப்பிட்டதில்லை. வாங்கி வந்தே சாப்பிட்டிருக்கோம். அதுவும் அந்த ஓட்டலுக்கு நேர் பின்னாம் மேலாவணி மூலவீதியில் எங்க வீட்டு மொட்டை மாடி வரும். ஏறிக் குதிச்சுப் போகலாம்! :)))) தம்பி வடக்காவணி மூலவீதியில் பொன்னு ஐயங்கார் பள்ளிக்கு எதிரிலுள்ள சந்து வழியாகப் போய் வாங்கிண்டு வருவான். மத்தியானம் 2 மணியிலிருந்து ஆரம்பித்தால் சரியாக நான்கு மணிக்கு எதுவும் கிடைக்காது! எல்லாம் விற்றுத் தீர்ந்துவிடும்.

      நீக்கு
    6. நான் அங்கேயே போய்ச் சாப்பிட்டிருக்கிறேன்.  அந்த சீவல் தோசை, வெள்ளை அப்பம், தவலை வடை...  ஆஹா...

      நீக்கு
    7. இப்போச் சில வருடங்களாக மதுரை போகும்போது அங்கேயே போய்ச் சாப்பிடுகிறோம்.

      நீக்கு
  12. பயணம் செய்யாத வருடம் மிகப் பழகி விட்டது.
    சென்னையைப் பார்க்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் தடைகள் நீங்கட்டும்.

      நீக்கு
    2. சென்னையைத்தான் சிசி டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே!

      நீக்கு
    3. ஹாஹா, இப்போக் காய்கள் வாங்கக் கூட நம்மவர் போறதில்லையா! வீட்டிலேயே பேஸ்து அடிச்சாப்போல் இருக்குனு புலம்பல்! நாளைக்குப் போகவா? நாளன்னிக்குப் போகலாமானு சின்னக் குழந்தை மாதிரி கேட்டுட்டு இருக்கார். பெண்ணும், பிள்ளையும் எங்கேயும் போகக் கூடாதுனு கட்டளை! காலை பால்காரர் வந்துட்டுப் போனதும் வாசல் கதவைப் பூட்டினால் திரும்ப சாயங்காலம் பால் வரும்போது திறப்பேன். பின்னர் இரவு ஏழு மணி வரை திறந்து வைத்துட்டுப் பின்னர் மறுபடி பூட்டிடுவேன்.

      நீக்கு
    4. ஆனால் எங்கேயுமே போகாமல் இருப்பதோ/இருந்ததோ தெரியலை. நான் கும்பகோணம் பயணம் போயிட்டு வந்தப்புறமா 2,3 நாட்கள் ரொம்ப முடியாமல் நடக்கிறதே ஓர் கஷ்டமாய் உணர்ந்தேன். :(

      நீக்கு
    5. எனக்கு வெளியில் சென்று வந்து அலுத்து விட்டது.  வீட்டுக்குள்ளே இருக்க ஆவல்.  அரசு அதைத் தள்ளிப்போட்டிருக்கிறது!

      நீக்கு
    6. விரைவில் ஓய்வு கிடைச்சுக் கொஞ்சம் நிம்மதியாக வீட்டில் இருக்கப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. கேள்விகளும் பதில்களும் அருமை.
    இரண்டு பேர் மட்டும் என்றால் யார் எவ்வளவு சாப்பிடுவார்கள் என்று தெரியும் அளவாக சமைக்கலாம். நிறைய பேர் வீட்டில் இருக்கும் போது சில நேரம் மிஞ்சும் , சில நேரம் பற்றாமல் போகும். ஆண்கள், குழந்தைகள் முதலில் சாப்பிட்ட பின் பெண்களுக்கு அப்புறம் மறுபடியும் குக்கர் வைத்த அனுபவம் என் மாமியார் வீட்டில் பல தடவை நடந்து இருக்கிறது.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். சரியாக சொன்னீர்கள்‌ நன்றி

      நீக்கு
    2. அன்றன்றைய ருசியை வைத்து, பதார்த்தத்தை வைத்து சீக்கிரம் காலியாகிவிடுவதும், மிஞ்சுவதும்!

      நீக்கு
    3. எங்க வீட்டு அனுபவமே வேறே! குழந்தைகள் பள்ளிக்கும்/நம்மவர் அலுவலகமும் சென்ற பின்னர் மாமனார்/மாமியார்/நான் சாப்பிட இரண்டாம் முறை சாதம் வைப்பேன். நாங்க சாப்பிட்டு முடிந்ததும் எல்லாவற்றையும் ஒழித்துப் போட்டுவிட்டு மிஞ்சும் குழம்பைச் சின்னக் கிண்ணத்தில் வைச்சுட்டு வேலைகளை முடித்துக் கொண்டு வருவோம். வாசலில் மாமனார் யாரையானும் சாப்பிடக் கூப்பிட்டிருப்பார். தெருவோடு போகிற பஜனைக்காரங்க, ஸ்லோகம் சொல்லிக் கொண்டு வருபவர்கள், சில சமயம் ஜோசியக்காரர்கள்னு யாரானும் இருப்பாங்க! அவங்களை உள்ளே கூப்பிட்டுச் சாப்பாடு போடச் சொல்லுவார். "அடியைப் பிடிடா! பாரத பட்டா!" என்கிறாப்போல் மறுபடி குக்கரைத் தேய்த்து எடுத்து வந்து சாதம், பருப்புப் போட்டுக் குழம்பு, ரசம் வைத்துக் காய் பண்ணி, அப்பளம் பொரித்துச் சாப்பாடு போட்டது உண்டு. இதில் சில சமயங்கள் மறுநாளைக்காக வாங்கி வைத்திருக்கும் காய் சமைக்கப்பட்டால் மறுநாள் காய் என்ன பண்ணுவது என யோசிச்சு அதைச் சமன் செய்வதற்குள் என்பாடு உன்பாடாகிடும். ஏனெனில் அப்போதைய பொருளாதார நிலை அப்படி. அதோடு இல்லாமல் சிலர் வந்த உடனே பசியோடு வருவாங்க, காத்திருக்க முடியாதுனு தெரிஞ்சால் பக்கத்துப் போர்ஷன் மாமி வீட்டுச் சாதம்/குழம்பு/ரசம் அல்லது பக்கத்து வீட்டுக் குக்கரில் வைத்திருக்கும் சாதம்னு எடுத்து வந்துடுவேன். கொல்லைப்பக்கம் ஒரு வாசல் என்பதால் கூடத்தில் இருக்கும் விருந்தினருக்குத் தெரியாமலேயே எடுத்து வந்துடலாம். ஒரு தரம் ரசத்தைப் பக்கத்துப் போர்ஷன் மாமியின் ஈயச் செம்போடு எடுத்து வந்துட்டேன். இது நாங்க எண்பதுகளின் முடிவு வரை அம்பத்தூரில் இருக்கும்போது அடிக்கடி நடந்த/நடக்கும் ஒரு விஷயம்! சரினு கொஞ்சம் அதிகம் பண்ணி வைச்சிருந்தால் அன்னிக்கு யாருமே வரமாட்டாங்க.

      நீக்கு
    4. என்ன அனுபவங்கள்...!    உங்களுக்கு கோடி புண்ணியம்...   அதுசரி... "அடியைப் பிடிடா! பாரத பட்டா!"  அப்படின்னு அடிக்கடி சொல்றாங்களே..   அப்படீன்னா என்ன?

      நீக்கு
    5. ஏற்கெனவே செய்த/செய்து கொண்டிருந்த ஒரு விஷயத்தை மறுபடி ஆரம்பத்திலிருந்து செய்வதற்கு இதைச் சொல்லுவார்கள். பாரதக்கதையை ஒட்டிய பழமொழி! ஆனால் முழு விபரங்களும் இப்போது நினைவுக்கு வரவில்லை. வரும்போது சொல்கிறேன்.

      நீக்கு
    6. அர்த்தம் புரிகிறது.  பாரதக் கதைதான் தெரியவில்லை.

      நீக்கு
    7. மஹாபாரதத்தில் பல கிளைக் கதைகள் உண்டு. கோயில் திருவிழாக்களில் (முக்கியமாக திரௌபதி அம்மன் கோயில் விழா) பாரதக் கதை சொல்வது விடிய விடிய நடக்கும். அப்போது கதை சொல்பவர் கிளைக் கதை அதனுடைய கிளைக் கதை என்று சென்று நாட்டு நடப்புகளுக்கும் சென்று விடுவார். கதை கேட்பவர்கள் அப்போது மூலக்கதையை எங்கே விட்டாரோ அங்கே தொடங்க சொல்லுவார்கள்.அதுதான்.

       Jayakumar

      நீக்கு
    8. இருக்கலாம். எனக்கு நினைவில் வரலை. ஆனால் கிட்டத்தட்டக் கதாகாலட்சேபம் சொல்பவர்கள் இப்படித் தான் சொல்வார்கள். ஆகவே இப்படியும் இருக்கலாம்.

      நீக்கு
  15. & அப்போ நமீதாவை குந்தவை வேடத்தில் நடிக்க வைத்தால் உங்களுக்கு ஓகேயா ? //

    ஹா ஹ ஹா ஹா அது!!!! பானுக்கா பாருங்க! கௌ அண்ணாவின் லொள்ளு!

    அது சரி அப்ப இவங்க வந்தியதேவனை "ஹை மச்சான்" என்று கூப்பிடுவாங்களோ படத்தில்?!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அது!

      நீக்கு
    2. நமீதா நடித்தால், குந்தவையை குந்த வைப்பது ரொம்ப கஷ்டமாச்சே

      நீக்கு
    3. //& அப்போ நமீதாவை குந்தவை வேடத்தில் நடிக்க வைத்தால் உங்களுக்கு ஓகேயா ? //
      ஹாஹாஹா!உங்க ஜோக்கை நமீதா ரசிக்குது மச்சான்ஸ்!

      நீக்கு
  16. இந்தக் கேள்வி முன்னாடியே வந்துவிட்டதா என்று தெரியவில்லை வந்திருந்தா விட்டுருங்க...

    போற போக்கைப் பார்த்தா வீட்டிற்கு விருந்தினர் யாரேனும் வரேன்னு சொன்னா, 72 மணி நேரத்துக்குள்ள கோவிட் நெகட்டிவ் சர்டிஃபிக்கேட் கொண்டு வரணும் அதுவும் ஆர் டி - பி சி ஆர் மட்டும் போதாது சி டி ஸ்கான் ரிப்போர்ட்டும் வேணும்னு ரொம்ப முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள், ஃபோபியா மக்கள் இனி சொல்லத் தொடங்கிடுவாங்களோ?(ஹிஹிஹி)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னாடி வந்ததாகத் தெரியவில்லை. பதில் அளிப்போம். மேலும் வந்த கேள்வியாகவே இருந்தாலும், காலத்திற்கேற்ப பதில்கள் மாறும்.

      நீக்கு

    2. விட்டா விருந்தினர் வரும் போது வீட்டுகாரர்களுக்கு பரிசு பொருளாக ஆக்ஸிசன் சிலிண்டர் கொண்டு வரணும் என்று கண்டிசன் போடுவிங்க போல இருக்கே

      நீக்கு
    3. ஹா ஹா ஹா அட! மதுரை போன நவராத்திரி ஜோக்குகளில் மாஸ்க் சானிட்டைஸர் எல்லாம் வந்துச்சு இந்த வருஷம் உங்க இந்தக் கருத்து ஜோக் ஆயிடும் காப்பி ரைட் வாங்க்கிக்கோங்க!!!

      கீதா

      நீக்கு
    4. நானா இருந்தால் (நான் திருநெவேலி என்பதை நினைவில் வச்சுக்கோங்க),

      "நீங்க நேர்லதான் வரணுமா? ஸூம், ஸ்கைப்பில் வந்தாலே நேர்ல வந்தது போலனா. உங்களைப் பார்ப்பதே மகிழ்ச்சி. சிரமப்பட்டுக்கொண்டு வரவேண்டாம்" (நீங்க வந்துட்டுப் போனப்பறம், ஒவ்வொருத்தருக்கும் 1200 ரூ கட்டி கோவிட் இருக்கான்னு செக் பண்ணும் செலவு, ரிசல்ட் வரும்வரை மனம் முழுவதும் திக் திக்... அப்புறம் நீங்க எங்கெங்கெல்லாமோ போய்விட்டு, அப்புறம் கோவிட் வந்தால், இவங்களாலத்தான் வந்திருக்குமோ என்று எங்களைத் தவறா நினைப்பீங்க.. இதெல்லாம் தேவையா?)

      நீக்கு
    5. சுத்தம்! எங்க குடியிருப்பு வளாகத்தில் சில நாட்களுக்கு வெளியாட்கள் நுழைவதையே தடுத்துட்டாங்க. சொந்தக்காரங்க வந்தால் கூடக் கீழே போய்ப் பெரிய கதவுக்கு வெளியேயே அவங்களை நிற்க வைச்சுப் பேசிட்டு அனுப்பணும். வீட்டுக்குள் வரக் கூடாது. வேலை செய்யும் பெண்கள் தினமும் சானிடைசர், மாஸ்க் போடாமல் வரக்கூடாது! ஜூரம் இல்லைனு உறுதி செய்யணும். இதை எல்லாம் வைச்சே நாங்க தாற்காலிகமாய் நிறுத்தி இருக்கோம். ப்ளம்பர், எலக்ட்ரீஷியன்னு கூப்பிட்டால் முன் அனுமதி வாங்கிக்கணும்.

      நீக்கு
    6. //சொந்தக்காரங்க வந்தால் கூடக் கீழே போய்ப் பெரிய கதவுக்கு வெளியேயே அவங்களை நிற்க வைச்சுப் பேசிட்டு அனுப்பணும். வீட்டுக்குள் வரக் கூடாது/

      இது ரொம்ப ஓவரா இருக்கே...   ஆனாலும் நல்லதுதான்.

      நீக்கு
    7. எல்லாம் ஓர் முன் ஜாக்கிரதைக்குத் தான். இங்கே எங்களைப் போன்ற தனியே இருக்கும் வயதான தம்பதியர் அதிகம்! அதனாலும் கூட!

      நீக்கு
    8. இன்றைய நிலைக்கு கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டிய ஒரு விஷயம்தான்.  இப்போதைய இரண்டாம் அலை கொரோனா இளைஞர்களை அதிகம் தாக்குகிறதாம்.

      நீக்கு
    9. அடுத்த 3 ஆவது அலை அக்டோபரில் வரப்போவதாகும் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆபத்து எனவும் செய்திகள் சொல்கின்றன.

      நீக்கு
    10. ஐயோ..     மூன்றாவது அலையா?   அதைப்பற்றி நான் ஒன்றும் இதுவரை படிக்கவில்லை.  சீனா ஒரு அலையும் இல்லாமல் நிம்மதியாய் இருக்கிறதே....

      நீக்கு
    11. இன்னிக்குக் கூடத் தொலைக்காட்சிச் செய்திகளில் சொன்னாங்களே! போன வருஷம் முழு ஊரடங்கிற்குத் திட்டிய கோர்ட்டுகள்/எதிர்க்கட்சிகள் இந்த வருஷம் ஊரடங்கைக் கொண்டு வரலைனு திட்டிட்டும் இருக்காங்களே! என்ன போங்க! ஒரு செய்தியை ஒழுங்காப் படிக்கிறதில்லையா? :)))))))

      நீக்கு
  17. யார் எவ்வளவு சாப்பிடுவாங்க என்று சரியா கணித்து சமையல் செய்வது சாத்தியமா?

    என்ன சமைக்கிறோம் எப்படி சமைக்கிறோம் என்பதை பொருத்தது என்பதால் சாத்தியமில்லை. ருசியாக சமைத்தால் பசி இல்லை என்றாலும் ருசிக்காக அதிகம் சாப்பிட்டுவிடுவார்கள்.. அதே சமயத்தில் நொருக்கு தீணிகள் திங்காமல் இருந்தாலும் அதிக பசியுடன் வரும் போது நாம் கணித்து சமைத்து இருந்தால் அது தப்பாகிவிடும்


    நான் எப்போதும் அளவிற்கு அதிகமாகவே சமைப்பேன் காரணம் திடிரென்று வீட்டிற்கு அதுவும் சாப்பிடும் நேரத்தில் வந்தால் என்பதால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. //அதுவும் சாப்பிடும் நேரத்தில் வந்தால்// - தப்பிச்சேண்டா சாமி..என்று நினைத்து நீங்கள் சாப்பிடாமல் இருந்துவிடலாமே மதுரைத் தமிழன் துரை.

      நீக்கு
    3. முன்னர் எங்களிடமும் இந்த அதிகமாய் சமைக்கும் வழக்கம் இருந்தது.  கொரோனா காலத்தில் குறைந்து விட்டது!

      நீக்கு
    4. உண்மை. வீட்டு வேலை செய்யும் பெண் வந்து கொண்டிருந்தபோது குழம்போ, ரசமோ மிஞ்சினால் கொடுத்துடலாம். இப்போது அந்தப் பெண்மணி வருவதில்லை என்பதால் குழம்போ, சாம்பாரோ வைக்கிறது எனில் யோசித்துத் தான் வைக்கிறேன். மிஞ்சினால் அப்புறம் கொட்டும்படி ஆகும்.

      நீக்கு
    5. அநேகமாய்க் கலந்த சாதம், துவையல், மைசூர் ரசம்னு பண்ணிண்டு இருக்கேன். குழம்பு வைத்தால் செலவாயிடும். சாம்பார் வைப்பதுனால் யோசிக்கணும். இட்லி பண்ணினால் அன்னிக்கு சாம்பார் வைக்கலாம்.

      நீக்கு
    6. அடிக்கிற வெயிலுக்கு மோர் சாதம் தவிர வேறெதுவும் உள்ளே இறங்காது போல...   குழம்பு என்றால் சாப்பிடவே தோணலை!

      நீக்கு
  18. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. //த்ரிஷா என் அபிமான நடிகை//

    க்கும்....

    நமீதா - குந்தவை
    அவரது ஆன்மா மன்னிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ நமீதாவுக்கு என்ன கேரக்டர் கொடுக்கலாம்?!!

      நீக்கு
    2. ஓடக்காரப் பெண் கமலி வேஷம் கொடுக்கலாம்னா, ஓடம் தண்ணிக்குள்ள மூழ்கிடும். பேசாம சுந்தரச் சோழர் வேஷம் கொடுத்துடலாமா?

      நீக்கு
    3. செம்பியன் மாதேவி பாத்திரத்தை  யார் ஏற்கிறார்கள் என்று தெரியவில்லையே? இப்போது இருப்பவர்களை வைத்துப் பார்த்தல் அநேகமாக லட்சுமியாக இருக்குமோ?

      நீக்கு
    4. அது யாரு ஓடக்காரப் பெண் கமலி? புதுசா இருக்கே? எனக்குத் தெரிஞ்சு பூங்குழலி தான் பொன்னியின் செல்வனில் ஓடக்காரப் பெண். நெல்லை புதுசா ஏதோ படிச்சுட்டு வந்திருக்கார்/அல்லது பொன்னியின் செல்வனைத் தொட்டே பார்த்தது இல்லை. இரண்டாவது தான் நிஜம்னு நினைக்கிறேன். :))))))

      நீக்கு
    5. //ஓடக்காரப் பெண் கமலி? புதுசா இருக்கே? எனக்குத் தெரிஞ்சு பூங்குழலி// - புத்தகத்தை சரியாப் படிக்கலையா? பூங்குழலிக்குத்தானே கமலி என்றும் பெயர்.

      நீக்கு
    6. நம்ம கீசா மேடம், பொன்னியின் செல்வனை மனப்பாடம் பண்ணியதுபோல பாடப் புத்தகங்களை மனப்பாடம் பண்ணியிருந்தார்னா, எத்தனை எத்தனை மாஸ்டர்ஸ் டிகிரி வாங்கியிருக்கலாம்னு நான் யோசிக்கிறேன். பாராட்டுகிறேன்.

      ஏன் கமலி என்ற பெயர் என் நினைவில் வந்தது என்று தெரியவில்லை. என்னிடம் ஒரு இயல்பு உண்டு. மனப்பாடம் பண்ணும் அளவு எதையுமே படிக்கமாட்டேன் பார்க்கமாட்டேன். என் பெண், ஒரு flashல screenல பார்ப்பதை, இந்தப் படம் என்று விலாவாரியாக (நாங்கள் சேற்ந்து பார்த்திருக்கும் படங்களிலிருந்து) சொல்வாள். நானோ, ஒரே படத்தை ஐந்து முறையும் ஆர்வமாகப் பார்ப்பேன். காரணம், முதல் முறையிலேயே கவனம் முழுமையாக இருந்திருக்காது.

      நீக்கு
    7. கமலி என்னும் ஒரு கதாபாத்திரமே பொன்னியின் செல்வனில் இல்லை. மறுபடி எட்டுத்தரமாவது ஆழ்ந்து படிக்கவும். இதான் உங்களுக்குக் கொடுக்கும் தண்டனை. நான் பள்ளிப் பாடமும் ஒரு தரம் கேட்பது/படிப்பது தான்! இந்தக் கணக்குனு ஒண்ணு இருக்கே! அதான் காலை வாரும். 75% க்கு மேல் வராது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மற்றபடி எப்போவும் முதல் 3 இடங்களுக்குள் தான் பள்ளி நாட்களில். பின்னால் செக்ரடேரியல் கோர்ஸ் படிக்கும்போதும் அக்கவுன்டன்சி, புக் கீப்பிங் எல்லாம் ஒரே முறையில் பாஸ் செய்திருக்கேன்.

      நீக்கு

  20. இப்போ உள்ள அரசியல்வாதிகளில் உங்களைக் கவர்ந்தவர்னு (காரணம் தேவையில்லை) சொல்லணும்னா யாரைச் சொல்லுவீங்க

    சாய் பல்லவியும் நயன் தாராவும் அரசியலுக்கு வாராத வரையில் என்னை கவர்ந்தவர் யாரும் இல்லை.

    கவர்ந்தவர் என்பதற்கு பதிலாக கவராதவர் என்று கேட்டால் இப்போது உள்ள அனைவரையும் யோசித்து பார்க்காமல் கை நீட்டுவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ! நல்லா சொன்னீங்க.

      நீக்கு
    2. மதுரை அட சரியான போட்டி, சாய்பல்லவி, நயன், தமன்னா, அனுஷ்கா, த்ரிஷா கீர்த்தி சுரேஷ் ஓட்டுப் பெட்டி தயார் பண்ணுங்கப்பா...

      கீதா

      நீக்கு
    3. //சாய் பல்லவியும் நயன் தாராவும்// - இந்த மதுரைத் தமிழனை நம்ப முடியாது. அவங்க ஆடி ஓஞ்சு அரசியலுக்கு வரும்போது, மதுரைத்தமிழன், அனுத்தமா, அஹானா அரசியலுக்கு வராத வரையில் என்னைக் கவர்ந்தவர் யாரும் இல்லை என்று பின்னூட்டம் போடுவாரோ?

      நீக்கு
    4. சாய் பல்லவியா?    புதுத் தேர்வா இருக்கே?  டான்ஸுக்காகவா?

      நீக்கு
    5. சாய் பல்லவி தவிர்த்த மற்றப் பெயர்களைக் கேட்கவானும் செய்திருக்கேன். இதிலே நயன் தாரா, த்ரிஷாவை அடையாளம் கண்டு பிடிக்க முடியும்! :))))

      நீக்கு
  21. 6. யார் எவ்வளவு சாப்பிடுவாங்க என்று சரியா கணித்து சமையல் செய்வது சாத்தியமா?//

    கஷ்டம் தான் ஆனால் கொஞ்சம் கஷ்டப்படும் குடும்பங்களில் பெரும்பாலும் அம்மாக்கள், பாட்டிகள் தங்களின் பங்கை விட்டுக் கொடுத்து விடுவதால் அதாவது சாப்பிடுபவர்கள் விரும்பிச் சாப்பிடுவதைத் தனியாக வைத்துப் பரிமாறுவார்கள்.

    மற்றொன்று, இதில் பெரும்பாலும் தன் பங்கை விட்டுக் கொடுப்பதும், அல்லது மீந்ததை பெரும்பாலும் ராத்திரி தன் வயிற்றில் குப்பைத் தொட்டி போல அதுவும் கடைசி ரச மண்டியாக, அடைத்துக்கொள்வதும் நடப்பதுண்டு.

    நான் அறிந்த பெண்கள் பலர் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டில் மாமியார் ஆண்களுக்குக் காய்கள் எல்லாம் நிறைய போட்டு தானும் மருமகள்களும் சாப்பிடும் போது ஒரே ஒரு துண்டு காய் அல்லது அதுவும் இல்லாமல் சாப்பிடச் சொல்லி இப்படித்தான் குடும்பம் நடத்தும் விதம் என்று சொல்லி ஆண்களை ஏற்றி வைப்பதும் நடக்கும்.

    //நம் கதாநாயகிகள் பாதி நாட்கள் வெறும் வயிற்றுடன் தூங்கப் போனார்கள் என்றறிந்த போது.//

    இந்த பதிலை டிட்டோ செய்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நீங்கள் சொல்வது சரிதான் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. சில குடும்பத்தலைவிகள் எப்போதும் முதல் நாள் சமைத்ததையே ப்ரிஜ்ஜி வைத்து சாப்பிடுவது உண்டு!

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. ரசித்தேன். திறமையுடன் கேள்வி கேட்டவர்களுக்கும், அதற்கு திறமையாக பதில் சொன்னவர்களுக்கும் பாராட்டுக்கள்.

    குந்தவை பாத்திரத்திற்கு நயன் தாராவை போ(கே)ட்டு இருக்கலாம்.

    குழந்தைகளின் நண்பர்கள் வீட்டிற்கு வரும் போதும் சரி, உறவினர்களின் குழந்தைகள் வரும் போதும் சரி அவர்களுக்குத்தான் முதலில் முன்னுரிமை தந்திருக்கிறேன்.

    கடவுள் காலச்சக்கரத்தை பின்னோக்கிச் செல்ல தந்து விட்டால், இறைவனை மனம் முழுக்க முழுவதுமாக வழிபடாத காலங்களை திருத்தி அமைத்துக் கொள்ள வசதியாய் இருக்குமென நினைக்கிறேன்.

    சமையல் செய்வதே ஒரு கலை. அதில் மிஞ்சாமல் செய்வது மற்றுமொரு கலை. இரண்டாவது கலை எனக்கு இன்னமும் வராததால், வீட்டில் அடிக்கடி திட்டு வாங்குகிறேன்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  24. கேள்வி பதில் சுவாரஸ்யமாக இருந்தது.
    குந்தவைக்கு கம்பீரமான ஒருவர் வேண்டும். அழகு மட்டுமே அவளின் அடையாளம் இல்லையே. நமீதா காமெடி பீஸ்.

    ராகா வை பார்த்து நான் வியக்கக் காரணம் குடும்ப ஜீன் ஒன்று கூட வராமல் ஒரு பிறவி
    யா என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்கு பெங்களூரில் மழை பெய்தால் ஆச்சர்யம் இல்லை. ரஞ்சனி நாராயணன் மேடம் வந்திருக்காங்களே

      நீக்கு
    2. அவரே தான். இருக்கலாம் என்பதெல்லாம் இல்லை. பத்திரிகைகள், தொலைக்காட்சி சானல்கள் எல்லாமும் அவரை ரா.கா. என்றே குறிப்பிடுகின்றன.

      நீக்கு
    3. Ra.Ga. english channels are referring like this.

      நீக்கு
    4. //இன்றைக்கு பெங்களூரில் மழை பெய்தால் ஆச்சர்யம் இல்லை. ரஞ்சனி நாராயணன் மேடம் வந்திருக்காங்களே//அவரை இழுத்து சாரி அழைத்து வந்த பெருமையை நான் எடுத்துக் கொள்கிறேன்.  

      நீக்கு
  25. இன்றைய கேள்வி-பதில்கள் ரசித்தேன்.
    குந்தவை பாத்திரம் சற்று கம்பீரமும் சிக்கலும் நிறைந்ததே.
    எனினும் மனிரத்தினம் அவர்கள், ரசிக்கும்படி இனி இதை எடுப்பாரா என்பது சந்தேகமே.
    நம் கதாநாயகிகள் பாதி நாட்கள் வெறும் வயிற்றுடன் தூங்கப் போனார்கள் என்றறிந்த போது.//
    எப்போதும் சரியாக திட்டமிட்டு சமைப்பது சாத்தியமற்றதே.
    உணவை தியாகம் செய்வது மட்டுமல்ல, அதை புத்திசாலித்தனமாகவும் செய்வதைக் கண்டு வியந்திருக்கிறேன்.
    சாப்பாடு பற்றாக்குறையாக இருப்பதைக் காட்டிக்கொள்ளாமலேயே வேண்டுமா என மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிட வைத்து அவர்கள் பட்டினி இருப்பதுண்டு.
    அதை சமாளித்து அவர்களைச் சாப்பிடவைக்க, எனக்கு போதும்/நெஞ்செரிச்சல்/வேலை/சாப்பாட்டில் எதாவது குறை என்றெல்லாம் சொல்லி எழுந்து அவர்களை சாப்பிடவைக்க முயன்றிருக்கிறேன்.
    ஆனால் எள்லாவற்றிர்க்கும் அவர்கள் செண்டிமெண்ட்டாகவும், புத்திசாலித்தனமாகவும், பதில் வைத்திருப்பார்கள்/ எப்படியும் சாப்பிடவைத்து பட்டினி இருந்தே விடுவார்கள்.
    அவர்களின் புத்திக்கூர்மையை பாராட்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. RTPCR நேரவிரயம். ஆன்டிஜேன் இந்த பிளட் அரைமணி நேரத்தில் result. விரைவில் குணம் ஆகிற வழி என்கிறார்கள்

      நீக்கு
    3. தாய்க்குத் தெரியாதா, தனயன் என்ன செய்ய முயல்கிறான் என்று...!

      நீக்கு
    4. //RTPCR நேரவிரயம். ஆன்டிஜேன் இந்த பிளட் அரைமணி நேரத்தில் result. விரைவில் குணம் ஆகிற வழி என்கிறார்கள்.//???????????????????????????????????????????????????

      நீக்கு
  26. காலச்சக்கரத்தில் பின்னோக்கி செல்ல முடியும் என்றால் என் பாட்டியின் கடைசி நாட்களுக்குச் செல்வேன். பரீட்சை நெருங்கி கொண்டிருந்ததால் படிக்க வேண்டும் என்பதற்காக,"என்னை விட்டுட்டு போகாதடி" என்று கெஞ்சிய பாட்டியை விட்டு விட்டு ஊர் திரும்பாமல் அவளோடு அவளின் அந்த கடைசி ஒரு வாரத்தை  கழித்திருப்பேன்.  என்னை என்னாலேயே மன்னிக்க முடியாத அந்த குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டு விடுவேன். 

    பதிலளிநீக்கு
  27. 1. பள்ளி நாட்களில் நெருங்கிய நட்பாகப் பழகியவர்கள் இப்போதும் தொடர்பில் உள்ளனரா? அதே பழைய நட்புத் தொடருமா? அல்லது தயக்கம்/விலகல் இருக்குமா?

    2.பலரும் முகநூல் மூலம் பழைய நட்பைக் கண்டு பிடிப்பதாகச் சொல்கிறார்கள். உங்களுக்கும் அப்படிக் கிடைச்சிருக்காங்களா?
    3. முகநூலின் மத்யமர் குழுமத்தின் மூலம் நான் சில மதுரைக்காரங்களையும் ஒரு சில தூரத்து உறவுகளையும் கண்டு பிடிச்சேன். உங்களுக்கு அப்படி நேர்ந்தது உண்டா? அவர்களுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறீர்களா?
    4. படிக்கும் நாட்களில் ஆசிரியர்/ஆசிரியைக்குப் பிடித்த மாணவராக/மாணவியாக இருந்தது உண்டா? எனில் எந்த ஆசிரியர்?
    5. எந்த ஆசிரியரைக் கண்டால் பயம்? வகுப்பில் முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பீர்களா?
    6. நேற்று முகநூலில் ஏடிஎம்மின் பதிவில் ஒருவர் தான் கேரளா எனவும் அங்கே இருந்தாலும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியும் என்று சொன்னதோடு ஹிந்தி மொழி கற்றலும் அங்கே கட்டாயம் என்றும் சொன்னார். அவருக்குத் தெலுங்கும் தெரியுமாம். அதை விடுங்க. இங்கேயும் ஹிந்தி கற்பிப்பது பள்ளிகளில் பாடத்திட்டத்தில் வருமா?
    7. எந்த மொழி கற்பதற்கு எளிது?

    பதிலளிநீக்கு
  28. எனக்கும் அலுவலகத்தில் ஆயுத பூஜை சிட்ஃபன்டில் 6 கிராம் தங்கக் காசு தான் கிடைத்தது. அதை பத்திரமாக வைத்திருந்து தம்பிக்கு முதல் பிள்ளை பிறந்தப்போ அத்தைக்காப்புக்குக் கொடுத்தேன்.
    காலச்சக்கரத்தில் பின்னோக்கிப் போக நேர்ந்தால் கேஜி சொல்லி இருக்கிறாப்போல் எனக்குக் கிடைக்க இருந்த இரு வேலைகளில் ஏதேனும் ஒன்றை ஒத்துக் கொண்டிருப்பேன். பாங்க் ஆஃப் இந்தியாவின் நேரடிப் பேட்டி அன்று கல்யாணம்! ஆகவே அதில் கலந்து கொள்ள முடியாமல் போனது. வேலையும் கிடைக்கலை! அது இன்றளவும் வருத்தம் தான்!

    பதிலளிநீக்கு
  29. //சாண்டில்யன் தேவன் திஜ.ர போன்றவர்களது படைப்புகளே கூட..//

    தி.ஜ.ர.வின் நாவல்களில் உங்களைக் கவர்ந்தது எது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி ஜா ரா - என்பது தவறாக தி ஜ ர என்று குறிப்பிடப்பட்டுவிட்டது என்கிறார் #

      நீக்கு
    2. தி. ஜானகிராமனை திஜா என்றே குறிப்பிடுவதே வழக்கம்.

      மஞ்சரி ஆசிரியர் தான் தி.ஜ.ர. பெயர் தி.ஜ.ரங்கநாதன். இவர் லா.ச.ரா.வுக்கு குரு போல.

      நீக்கு
    3. லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம். = லா.ச.ரா.

      நீக்கு
    4. கீதா சாம்பசிவமாக இருந்தால், தப்பு இருந்தால் விட்டுடமாட்டோனல்ம்லே, திருத்துவோம்லே என்பார். நான் அப்படியெல்லாம் சொல்வதில்லை. தெரியறத்துக்காகத் தான சொல்வது.

      நீக்கு
    5. ** விட்டுட மாட்டோம்லே

      நீக்கு
    6. @ஜீவி ஐயா, அது விளையாட்டுக்காகச் சொல்லுவது என்பது அநேகமாய் அனைவருக்கும் தெரிந்திருக்கும், உங்களைத் தவிர்த்து! யாரும் தப்பாய் எடுத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை. அதே போல் உங்களை மாதிரிச் சொல்லவோ/எழுதவோ என்னால் முடியாது. என்னை மாதிரிச் சொல்லவோ/எழுதவோ உங்களாலும் முடியாது. இது அவரவர் தனித்தன்மை! உங்களைப் பார்த்து நான் ஏன் காப்பி அடிக்கணும்? நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன்.விரும்புகிறார்கள். விரும்புவார்கள். :)))))))))

      நீக்கு
  30. எபியில் கொஞ்ச நாள் இல்லாமல் இருந்தது, இந்த நடிகையர் பற்றிய அசட்டுத்தன ஆவலாதிகள். மறுபடியும் ஆரம்பத்து விட்டதா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழன் (நேயர்) விருப்பம். அதோடு என்னுடைய கைவண்ணத்தைக் காட்டவும் ஒரு சந்தர்ப்பம். இந்தப் பதிவில் நமீதாவுக்கு திரிஷா போட்டிருப்பது போலவே ஒரு உடை + காதணி அணிவித்துள்ளேன்.

      நீக்கு
  31. ///7. எந்த மொழி கற்பதற்கு எளிது?//

    எளிது என்பதைவிட கேட்பதற்கு இனிது எங்க தமிழ் மொழின்னு ஒரு கிரீஸ் நாட்டுக்காரர் சொல்றார் :)சும்மா கொஞ்சம் தமிழ் சொல்லி கொடுத்தேன் பேசியும் காட்டினேன் .அவர் சொன்னது தமிழ் அவ்ளோ இனிமையா இருக்குன்னு :)

    பதிலளிநீக்கு
  32. //போற போக்கைப் பார்த்தா வீட்டிற்கு விருந்தினர் யாரேனும் வரேன்னு சொன்னா, 72 மணி நேரத்துக்குள்ள கோவிட் நெகட்டிவ் //
    Contact Tracing அங்கு வரலியா ??

    பதிலளிநீக்கு
  33. /// சீமான் கமல்ஹாசன். பாவம் அப்பாவிகள்.//
    ஹ்ம்ம் அதுவும் கமல் அங்கிள் நடந்து வரதை பார்த்தேன் எனக்கு கண்ணில் ரத்தம் வந்துடுச்சி .ரொம்ப feel பண்ணேன் தெரியுமோ .அதென்னமோ தெர்ல கொஞ்சம் வயதானவங்க கஷ்டப்பட்டாலும் தோற்றாலும் எனக்கு கஷ்டமாகுது !!! 

    பதிலளிநீக்கு
  34. //and found it as a book mark in meenakshi ammal's cookbook.//இதனால் அறியப்படுவது யாதெனில் .பெண்களுக்கு பண ஆசை இல்லை இல்லல்லலை 

    பதிலளிநீக்கு
  35. //. கடவுள் நம்மை காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் செல்லும் வரம் தந்தால், எந்தக் காலத்திற்குச் சென்று எதனைச் செய்வீர்கள்?//
    அப்படி ஒரு வரம்   கிடைச்சா எங்கப்பா அம்மாவுக்கு என் கையால் சமைச்சு தருவேன் .அதுவும் 2007 2008 க்கு போகணும் காலச்சக்கரம் .அதுக்கப்புறம் வேண்டாம் காரணம் அதுக்கப்புறம் ரெண்டு பேருக்குமே சாப்பிட முடியல 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புறம் இன்னொன்னும் இருக்கு எங்கப்பா சமைச்சு தரும் உணவை சாப்பிடணும் அதுவும் அந்த இனிப்பு சப்பாத்தி தேங்காய் சேர்த்தது .அப்புறம் எனக்கு  பிடிக்கலைனாலும் அவர் செய்யும் ஒரு அசைவம் .இன்னமும் அவர் எனக்கு சமைத்ததை சாப்பிடலை என்ற குற்ற உணர்வு இன்னும் எனக்கு இருக்கு 

      நீக்கு
    2. நானெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே ஒன்பதாம் வகுப்புப் படிக்கையிலேயே சமைக்க ஆரம்பிச்சுட்டதாலே அம்மா/அப்பா நிறையவே என் சமையலைச் சாப்பிட்டிருக்காங்க.

      நீக்கு
    3. நல்ல சமையல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!