சனி, 8 மே, 2021

அப்போது எனக்கு, 33 வயது....

 மத்திய பிரதேசத்தில், கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல, ஆம்புலன்ஸ் சேவை எளிதில் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும், அதிக பணம் கேட்கப்படுவதால், ஏழை மக்களால், அதை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவர்களது நலனை கருத்தில் வைத்து, போபாலைச் சேர்ந்த ஆட்டோ டிவைரர் ஜாவித் கான், தன் ஆட்டோவை ஆம்புலன்ஸ் வாகனம் போல் மாற்றியமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை வழங்கி வருகிறார்.  அந்த ஆட்டோவில், நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டரும் பொருத்தப் பட்டு உள்ளது.  ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஜாவித், தன் மனைவியின் நகையை விற்று, இந்த ஆட்டோவை மாற்றியமைத்துள்ளார்.

===============================================================================================


சென்னை அயப்பாக்கம் சுற்று வட்டாரத்தில் உள்ள சின்ன சின்ன நிழல்களில் சிலர் முடங்கிக்கிடக்கின்றனர்.  அவர்களில் பலர் வயதானவர்கள்,மாற்றுத்திறனாளிகள்.  அனைவரது முகத்திலும் வெயிலின் தாக்கமும் சாப்பாட்டிற்கான ஏக்கமும் தென்படுகிறது.யாரையோ எதிர்பார்த்து எட்டி எட்டிப் பார்க்கின்றனர்.  அவர்கள் எதிர்பார்த்தவரும் மோட்டார் பைக்கில் வருகிறார் அவர்கள் அருகே வந்து தனது பையில் இருந்து எடுத்த உணவு பொட்டலத்தை கொடுக்கிறார் கூடுதலாக நாலு வார்த்தை அன்பொழுக பேசுகிறார் பிறகு அவர்களிடம் விடைபெற்று அடுத்த இடத்தை நோக்கி பைக்கில் விரைகிறார்.  யார் இவர்?===============================================================================================

திருப்பூர்:திருப்பூரில் இயங்கி வரும், 'அக்ஷய பாத்திரம்' அறக்கட்டளை 2019ல் துவங்கி, ஏழைகளின் பசியை போக்கிவருகிறது.



நகரை, 10 பகுதிகளாக பிரித்து, ஆதரவற்ற ஏழைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர், மாற்றுத்திறனாளிகளுக்கு, தினமும் காலை, மதியம் உணவு வழங்கப்படுகிறது.ஊரடங்கின் போது, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழைகளுக்கு, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. வெளிமாநில தொழிலாளர் சொந்த ஊர் திரும்பிய போதும், உணவு பார்சல் வழங்கி சேவையாற்றியது.    முழு ஊரடங்கான நேற்றும், 'அக்ஷய பாத்திரம்' அறக்கட்டளையினர், பொதுமக்களுக்கும், ஆதரவற்றவருக்கும், இலவச உணவு பொட்டலம் வழங்கினர்.  அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார் கூறுகையில், 'உணவு இல்லாமல் யாரும் கஷ்டப்படக்கூடாது என்ற நோக்கில், 70 தன்னார்வலர்கள் இணைந்து, பசி போக்கும் சேவையாற்றி வருகிறோம்.இன்றுடன் (25.04.2021) (நேற்று), 548வது நாளாக, தினமும், 350 முதல், 400 நபர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கிஉள்ளோம்.   போலீஸ், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, மாத்திரை வழங்கியுள்ளோம். மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், தினமும் உணவு வழங்கும் சேவையை செய்து கொண்டிருக்கிறோம்' என்றார்.

=========================================================================================

சாதாரண ஸ்கூட்டர்களை ஓட்டவே, பெண்கள் பலர் அஞ்சும் நிலையில், 10 சக்கர லாரியை ஓட்டி, வாழ்க்கை நடத்தி வருவது பற்றி யோகிதா ரகுவன்சி:

 "சொந்த ஊர், மத்திய பிரதேச மாநிலம், போபால். பி.காம்., - எல்.எல்.பி., முடித்து உள்ளேன். எனக்கு மகன், மகள் உள்ளனர். மகள், இன்ஜினியரிங் முடித்து, பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்; மகன், கல்லுாரி இறுதியாண்டு முடித்து உள்ளார்.என் கணவரும், பட்டதாரி தான். லாரிகள் வைத்து தொழில் செய்து வந்தார்; லாரியும் ஓட்டுவார். கடந்த, 2003ல் நடந்த சாலை விபத்தில், அவர் இறந்துவிட்டார். அப்போது எனக்கு, 33 வயது. பெண்ணுக்கு, 7 வயது; பையனுக்கு, 4 வயது.அவரை மட்டுமே நம்பி இருந்த எங்கள் குடும்பம், நடுத்தெருவுக்கு வந்து விட்டது.எங்களுக்காக அவர் விட்டுச் சென்றிருந்தது, இந்த லாரி மட்டும் தான். இந்த லாரி ஓடினால் தான் வாழ்க்கை என்ற நிலையில், வாடகைக்கு ஒரு டிரைவரை அமர்த்தி, லாரி ஓட்டினோம். அந்த டிரைவர், வண்டியை விபத்துக்கு உள்ளாக்கி விட்டு, ஓடி விட்டார். அதன்பின், லாரி நீண்ட காலமாக சும்மா தான் கிடந்தது. அதை ஏன் நாம் ஓட்டக்கூடாது என நினைத்து, லாரியை நகர்த்தப் பழகினேன். படிப்படியாக லாரியை நன்கு ஓட்டத் துவங்கி விட்டேன். அந்த தைரியத்தில், வாடகைக்கு பல நகரங்களுக்கு பொருட்களை ஏற்றிச் செல்ல துவங்கினேன்.துவக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். நான் ஏற்கனவே ரொம்ப ஒல்லியாக இருப்பேன்; மென்மையாக பேசுவேன். எனக்கு இந்தத் தொழில் சரிப்பட்டு வராது என, என் குடும்பத்தினர் தடுத்தனர். எனினும், பிறரிடம் கையேந்தி வாழ்க்கை நடத்துவதை விட, சிரமமான தொழிலை செய்வதே சிறந்தது என நினைத்து, இந்த தொழிலை செய்கிறேன்.பெண்களுக்கே உள்ள மாதவிடாய் பிரச்னை எனக்கும் உண்டு. அந்த காலங்களில், சுங்கச் சாவடிகளை ஒட்டியுள்ள கழிப்பறைகளை பயன்படுத்திக் கொள்வேன். நீண்ட துார பயணங்களின் போது, சாலையோரங்களில் நானே சமையல் செய்து சாப்பிடுவேன்; அதை ஆச்சர்யமாக பலரும் பார்ப்பர்.  பத்தாண்டுகளுக்கும் மேலாக, லாரி டிரைவராக உள்ளேன். பெரிய அளவில் எந்த பிரச்னை களையும் சந்தித்ததில்லை. நள்ளிரவில் திடீரென லாரி நின்று விடும்; இறங்கி, 'ரிப்பேர்' பார்ப்பேன். சில நேரங்களில் தண்ணீர் இன்றி, 'கார்பரேட்டர்' சூடாகி, லாரி நின்று விடும். சாலையோரம் உள்ள வீடுகளை தேடிச் சென்று, தண்ணீர் வாங்கி வந்து ஊற்றி, வண்டியை ஓட்டிச் சென்றுஉள்ளேன். அந்த நேரங்களில் எல்லாரும், என்னுடன் அன்பாகவே பழகிஉள்ளனர். இப்போது, பபிதா என்ற என்னைப் போன்ற, இன்னொரு பெண்ணுக்கும், லாரி ஓட்ட சொல்லிக் கொடுத்து, அவரும் லாரி ஓட்டி வருகிறார். துணிச்சல் தான், இந்த தொழிலுக்கு அவசியம்; அது, என்னிடம் அதிகமாகவே இருக்கிறது!

=================================================================================================

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வசித்து வரும், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, 85. இவர், 55 ஆண்டுகளுக்கும் மேலாக, நோயாளிகளிடம் இருந்து வெறும், 5 ரூபாய் மட்டுமே பெற்று சிகிச்சை அளித்து வந்தார்.  இந்த சேவையை பாராட்டி, மத்திய அரசு, இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

இந்த கொரோனா நெருக்கடி காலத்திலும், இவர், தன் பணியை நிறுத்தவில்லை. தன் உடல்நலப் பிரச்னைகளை பொருட்படுத்தாமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது, மருந்து விலை உயர்வு போன்ற பிரச்னைகளால், கட்டணத்தை, 50 ரூபாயாக உயர்த்தி உள்ளார். எனினும், ஏழை நோயாளிகளுக்கு, இலவசமாகவே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

==============================================================================================

47 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. காலை வணக்கம் ஸ்ரீராம், கமலா அக்கா மற்றும் எல்லாருக்கும்.

    ஆட்டோ ஆம்புலன்ஸ் நல்ல சேவை ஆட்டோ ஓட்டுநர் ஜாவித் கான் வாழ்க அவர் சேவைக்கு வாழ்த்துகள், பாராட்டுகள். ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் நல்ல மனதோடு உதவுவது பெரிய விஷயம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  4. தேடிச் சோறுநிதந்தரும் ஜெயக்குமார் வியக்க வைக்கிறார். என்ன ஒரு திறமை அவரிடம்! கூடவே அவரது சேவையும். என்ன ஒரு எளிமையான மனிதர்! மனமார்ந்த வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    நற்செய்திகளே நம்மை என்றும்
    வந்து சேர இறைவன் அருளட்டும்.
    செய்திகளைப் படித்துவிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா...    இணைந்தே பிரார்த்திப்போம்.

      நீக்கு
  6. டாக்டர் பிரசாதின் சேவை மிக வியக்க வைக்கிறது.
    என்ன ஒரு உத்தம மனமும் உழைப்பும்!! அதுவும் 85 வயதில்.
    அறியக் கொடுத்ததற்கு மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
  7. ஆட்டோ ஓட்டுனர் ஜாவீத். இது போலெல்லாம் யோசிக்கும்
    தயாள மனம் இறைவன் கொடுத்திருக்கிறார்
    மனோதிடமும், உயிர்களை ரட்சிக்க வேண்டும் என்ற மனோபாவமும்
    மிக மிக பாராட்டப் பட வேண்டியவை. மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  8. தேடிச் சோறு கொடுக்கும் கவிஞர் ஜெயக்குமாரின்
    எழுத்து வன்மையைப் பாராட்டுவதா.
    வள்ளல் தன்மையைப் பாராட்டுவதா என்று தெரியவில்லை.
    போதும் அளவு செல்வம் அவருக்குக் கிடைக்க வேண்டும்.
    இறைவன் காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. திருப்பூர் அக்ஷய பாத்திரம் அறக்கட்டளை
    இன்னும் வளம் பெற வேண்டும். மனம் நிறை
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. யோகிதா ரகுவன்சி,
    மிக மிகச் சிறப்பான தைரியமான பெண்மணி. சிங்கம்
    இருந்திருந்தால் தொலைபேசி வாழ்த்தி இருப்பார்.

    இப்படி ஒரு உழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இரவு நேரத்தில் வெறும் வண்டி ஓட்டுவதே கடினம்.
    லாரி ஓட்டுகிறார், எல்லாக் கஷ்டங்களையும் சமாளிக்கிறார் என்றால்
    அதிசயமும் ஆச்சரியமும் நிறைகிறது.அவருக்கும் அவர் குழந்தைகளுக்கும்
    சிறந்த எதிர்காலம் அமைய வேண்டும்.
    அன்னையர் தினத்துக்கான வாழ்த்துகளை
    அவருக்குத் தான் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. //பிரச்னைஇந்த சேவையை பாராட்டி,// பிரசாத்தின் இந்த சேவையை பாராட்டி என்று வந்திருக்க வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கும்.  காபி பேஸ்ட்தான்! பிரச்னையை நீக்கி விட்டேன். 

      நீக்கு
  12. மனைவியின் நகைகளை விற்று குடிப்பவரகளைப்பற்றி கேள்வி பட்டிருக்கிறோம். மனைவியின் நகைகளை விற்று ஆட்டோவை ஆம்புலன்ஸாக்கியிருக்கும் ஆட்டோ டிரைவர் ஜாவித் கான் நெகிழ்ச்சியூட்டுகிறார். வறுமையில் செம்மை! வாழ்க நீ எம்மான் என்று வாழ்த்த தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  13. இரும்புக்குதிரையை(லாரி) ஓட்டும் இரும்பு பெண்மணி யோகிதா ரகுவன்ஸியின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

    தேடி சோறு கொடுக்கும் பொறியாளர்,கவிஞர் ஜெயகுமார் ஆச்சர்யமூட்டுகிறார்.

    முதிய வயதிலும் இலவசமாக வைத்தியம் பார்க்கும் மருத்துவர் பிரசாத் முகர்ஜி வணக்கத்திற்குரியவர்.

    பதிலளிநீக்கு
  14. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  15. சேவை செய்பவர்கள் அனைவ்ரும் போற்றுதலுக்கு உரியவர்களே

    பதிலளிநீக்கு
  16. இன்றைய சூழலில் சிலரின் சேவை மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது...

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. தன் மனைவியின் நகையை உபயோகமாக பயன்படுத்தி ஏழை மக்களுக்கு இந்த காலகட்டத்தில் உதவியாக இருக்குமாறு ஆட்டோ ஓட்டும் ஓட்டுனரை உண்மையிலேயே தெய்வத்திற்கு ஒப்பிடலாம். அவரை மனதாற போற்றி வாழ்த்துவோம்.

    தன் கஸ்டமான நிலையிலும் லாரி ஓட்டி வாழ்நாளை வெல்லும் பெண்மணி யோகிதா ரகுவன்ஸியின் துணிச்சலும், தன்னம்பிக்கையும் பிரமிக்க வைக்கிறது. அவரும், அவர் குழந்தைகளும் நன்றாக வாழ வேண்டும் என மனதாற பாராட்டி வாழ்த்துவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. யோகிதா ரகுவன்சி//

    ஹேட்ஸ் ஆஃப்! வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை. அவரும் அவர் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும். உழைப்பாளி!

    வயதான மருத்துவர் ஷ்யாமா பிரசாத்திற்கும் மனமார்ந்த பாராட்டுகள் இப்படியான நல்ல உள்ளங்கள் இருப்பதுதான் கொஞ்சமேனும் நல்லது நடக்கிறதோ!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. //சில நேரங்களில் தண்ணீர் இன்றி, 'கார்பரேட்டர்' சூடாகி, லாரி நின்று விடும். // ரேடியேட்டர் தான் சூடாகும் என்பது லேலண்ட் காரருக்கு தெரியாதா? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள் ! தொற்று நீங்கி, அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் .

    வியக்க வைக்கும் பாசிட்டிவ் மனிதர்கள். இவர்களே சோர்ந்து போன நம் மனங்களுக்கு ஆக்ஸிஜன் கொடுப்பவர்கள்!

    பதிலளிநீக்கு
  21. எல்லா மனிதர்களும் வியக்க வைக்கின்றனர். தன்னம்பிக்கை உள்ளவர்கள் எப்படியும் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு ரகுவன்ஷியும், கவிஞர் ஜெயகுமாரும் எடுத்துக்காட்டாக இருக்கின்றனர். இம்மாதிரி மருத்துவ சேவைகள் செய்யும் மருத்துவர்கள் பாராட்டுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்கள். அக்ஷய பாத்திரம் பற்றி அடிக்கடி படிக்கிறேன். ஆம்புலன்ஸ் ஆன ஆட்டோவின் சேவையும் பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  22. நல்ல உள்ளம் இருக்க, பிறருக்கு உதவ, மதமும் தேவையில்லை, பணக்காரராக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று காண்பிக்கும் இந்த நல்ல உள்ளங்கள் வாழ்க. அவர்கள் மற்றவர்களுக்கும் உதாரண புருஷர்களாக (புருஷி?ஹாஹா) இருக்கின்றனர்.

    தட்டச்சுப் பிழைதான் கொஞ்சம் கண்ணை உறுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் தட்டச்சு நான் எதுவும் செய்யவில்லை!!!!    ஜஸ்ட் காபி பேஸ்ட்!  கண்ணில் பட்டதை  திருத்தி உள்ளேன்.  நன்றி நெல்லை. 

      நீக்கு
  23. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு

  24. இவர்களை போல பல மனிதர்கள் இன்னும் இருப்பதால்தான் மனித நேயம் இன்ண்டு தழைத்து தலை நிமிர்ந்து இருக்கிறது

    பதிலளிநீக்கு
  25. ஜாவித்கான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ஒரேழுத்து கவிஞர் திரு. ஜெயக்குமார் அவர்கள் வியக்க வைக்கிறார் பசித்தவர் முகம் பார்த்து இருக்கும் இடம் தேடி கொடுப்பதற்கு வாழ்த்துக்கள். அவர் ஆசை விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்.
    தினமும் உணவு வழங்கும் சேவையை செய்து கொண்டு இருக்கும்.'அக்ஷய பாத்திரம்' அறக்கட்டளையினர்களுக்கு வாழ்த்துக்கள்.
    யோகிதா ரகுவன்சி அவர்களின் மனபலத்திற்கும் துணிச்சலுக்கும் வாழ்த்துக்கள்.


    ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வசித்து வரும், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி அவர்களுக்கு வணக்கங்கள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    அனைத்தும் நல்ல செய்திகளையும் தொகுத்து கொடுத்த உங்களுக்கு நன்றிகள்.


    பதிலளிநீக்கு
  26. செய்திகள் அனைத்தும் சிறப்பு. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள். பகிர்ந்து கொண்ட உங்களுக்கும்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!