குழந்தைகளின் கால் கை வாய் இவற்றை ரோஜா மலருக்கு ஒப்பிடாத மனிதர்களே இல்லை எனலாம் ..
மலர் செடியில் வாடியதும் அதன் கீழ் இருக்கும் 3 இலைகள் வரை கத்தரியால் வெட்டிவிட்டால் அடுத்த துளிர், இலை, மொட்டு என்று வருகிறது
ரோஜா என்றதும் வழக்கமான பிங்க் ரோஸுடன் நம் மனது திருப்தி அடைவதில்லை . இன்னும் வேறு நிறங்கள் கிடைக்கும் என்று தேடித்தேடி கொண்டு வருகிறோம் .
மொட்டிலிருந்து பூ மலர்ந்து அது உதிரும் வரை மாலையில் ரோஜா சீரியல் மாதிரி தினசரி காலை ரோஜாவைப் படம் பிடித்தல் ஒரு அருமையான பொழுதுபோக்கு/அனுபவம் !
மொட்டும் -- மலரும் !
காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்கு1. Bone meal, Epsom salt onlineலதான் வாங்கணுமா இல்லை குறிப்பிட்ட கடைகளிலா?
2. என் ஒரே ரோஜாச் செடி அனேகமா இறந்துவிட்டது என நினைத்தது துளிர்த்திருக்கிறது. மண் சக்தியை இழந்துவிட்டதோ என எண்ணம். மண்ணைச் செறிவூட்ட என்ன செய்யலாம்?
Online இல் தான் வாங்கினோம்.
நீக்குஅனௌவருக்கும் இனிய காலை வணக்கம். நோய்த் தொற்று நம்மை விட்டு விலகியே இருக்க இறைவன் அருள வேண்டும்.
பதிலளிநீக்குஅருள் வேண்டுவோம்.
நீக்குஅன்பு முரளிமா,
பதிலளிநீக்குசிங்கம் நிறைய ரோஸ் மிக்ஸ் உடன்
ஆர்கானிக் உரம் வாங்கிப் போடுவார்.
தகவலுக்கு நன்றி.
நீக்குஅழகு மலராட
பதிலளிநீக்குரோஜாவைத் தாலாட்டும் தென்றல்.
இவ்வளவு அழகான ரோஜாச் செடிகள்
நம் வாழ்வில் முதலில் இடம் பிடிப்பது.
ஒரு இலை,இரண்டு இலை ஒரு மொட்டு அது விரிந்து என்று நம் வாழ்வை தினம் ஒரு ஆனந்தமாக மாற்றிய நாட்கள்.
ரோஜாக்களின் ஊர்வலம் மிக அருமை. என்ன வண்ணமாஜ இருந்தால் என்ன. நம் இளம்
ரோஸ் ரோஜாவுக்குத் தனி மணம் தான்.
மனம் நிறைந்த
பாராட்டுகள்.
நன்றி.
நீக்குஇத்தனை அழகுடன் ரோஜாவைப் படைத்த
பதிலளிநீக்குஇறைவனுக்கு நன்றி. ரோஜாவைத் தொடரும் வாசகங்களும்
அதன் பச்சை இலைகளும் மொட்டுகளும்
கவிதைக் களஞ்சியம்.!!!
நன்றி, நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடர்ந்து கொண்டிருக்கும் ஊரடங்கு முற்றிலும் விலகி அனைவரும் அச்சம்/கவலை இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குதலைப்பைப் பார்த்ததும் நெடுந்தொடர் "ரோஜா" மட்டுமில்லை. "ரோஜாக்கூட்டங்கள்" என்றொரு திரைப்படமும் வந்ததாக நினைவில் இருக்கிறது. கதாநாயகி யாரோ பூமிகாவோ என்னவோ, இப்போல்லாம் அகர்பத்தி விளம்பரங்களில் வருகிறார். அழகான ரோஜாப் படங்கள். ரோஜா எந்த நிறத்தில் இருந்தால் என்ன? அதன் அழகை வர்ணிக்க முடியாது.
பதிலளிநீக்குஆம், பூமிகா சாவ்லா என்றுதான் ஞாபகம். ரோஜாவின் அழகை எப்பொழுதுமே ரசிக்கலாம்.
நீக்குKGG sir... நீங்க "ரோஜா" என்று பூவைச் சொல்றீங்களா இல்லை....
நீக்குஅதானே!...
நீக்குநாக்பூர் ரோஜாக்கள் பிரபலம் எனச் சொல்வார்கள் என்பதால் நாங்க நாக்பூரில் இருந்து கொடி ரோஜா கொண்டு வைத்து வைத்திருந்தோம். எங்க படுக்கையறை ஜன்னலுக்கு வெளியே! ஜன்னலில் கொடி படர்ந்து ரோஜாக்கள் பூக்கும். பல நிறங்களில் வண்ணமயமான ரோஜாக்கள். சாணி எருத்தான் போட்டுக் கொண்டிருந்தோம். பின்னர் வந்த நாட்களில் நாங்க மாற்றலில் சென்றுவிட எல்லாம் என்ன ஆனது என்பதே தெரியாமல் போய்விட்டன.
பதிலளிநீக்குஉங்களைக் காணாமல் ரோஜாக்கள் வாடிப்போயிருக்கும்.
நீக்குஒரு விதத்தில் உண்மை தான். செடிகளும் சொந்தக்காரங்க இருந்தால் தான் தளதள என்று காணப்படும். அதாவது செடி, கொடிகளை நேசிப்பவர்கள். இதை எங்க வீட்டுச் செடி, கொடிகளின் வளர்ப்பில் கண்டிருக்கேன். குடி இருந்தவங்க எப்படிப் பார்த்துக்கொண்டாங்களோ! யாருக்குத் தெரியும்! :(
நீக்குரோஜாப்பூக்கள் அழகா, மென்மையா, குட்டிப்பாப்பாக்கள் அழகா, மென்மையா எனக் கேட்டால் இரண்டும் தான்! ஒன்றோடு ஒன்று போட்டி போடும்.
பதிலளிநீக்குஆம், உண்மை!
நீக்குஇப்போதெல்லாம் பட்டன் ரோஸ் எனப்படும் சின்னச் சின்ன ரோஜாக்கள் பல வண்ணங்களில் அழுத்தமானதாக வந்து அவற்றைத் தான் பூக்கடைகளில் கொடுக்கிறார்கள். வண்ணத்தைத் தவிர்த்து வாசனையே அற்ற அந்தப் பூக்களை அடுக்கு நந்தியாவட்டையோடு வைத்துக் கட்டி மல்லிகைச் சரம் என்ற பெயரில் விற்பனையும் செய்கின்றனர்.எப்படித் தான் ஏமாற்ற மனசு வருதோ! நம்மவரும் ஒரு தரம் வாங்கி ஏமாந்துட்டார். :(
பதிலளிநீக்குவாடாமல்லியா?
நீக்குஅட? பட்டன் ரோஸ் பார்த்ததே இல்லையா? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! ரோஜா தான். ஆனால் வாசனை எல்லாம் சொல்லிக்கும்படி இருக்காது. அநேகமாக எல்லா நிறங்களிலும் கிடைக்கின்றன. இப்போதெல்லாம் கல்யாண மாலைகளில் அநேகமாக இந்த ரோஜாவகைகள் தான் இடம் பெறுகின்றன. சின்னவை அலங்காரத்துக்கும் பெரியவை மாலைகளிலும் இடம் பெறுகின்றன.
நீக்குவாடாமல்லி முற்றிலும் வேறே! அந்தப் பூவை மண்ணில்/தொட்டியில் உதிர்த்துப் போட்டாலே போதும். செடிகள் வந்துடும்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
அன்பின் வணக்கம்!
நீக்குசரோஜாவின் தங்கையல்லவா..
பதிலளிநீக்குரோஜாவை யாருக்குத் தான் பிடிக்காது!..
நான் பூக்களைச் சொன்னேன்...
பூக்களையா? சொல்லுங்க, (சரோஜா யார்? அதையும் சொல்லிடுங்க! )
நீக்குசரோஜம் என்றால் தாமரை!..
பதிலளிநீக்குதாமரைக்கும் தமிழுக்கும் நிறையவே அழகு உண்டு!...
ஓ ! அப்படியா!!
நீக்குஎன்ன இப்படிக் கேட்கறீங்க கேஜிஜி சார்.... சரோஜ தள நேத்ர - எம்.எஸ்.எஸ் பாடல் நினைவுக்கு வரலையா?
நீக்குதனியாக இருந்தால் என்ன? கூட்டமாக இருந்தால் என்ன? ராஜாக்கள் அழகுதான்.
பதிலளிநீக்குஎந்த ராஜாவை சொல்கிறீர்கள்?
நீக்குமுதல் படத்தில் இருப்பவை தாமரை இதழ்கள்தானே?
பதிலளிநீக்குஇல்லை.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்.
நீக்குமுதல் படம் தாமரை மலர்களின் இதழ்கள் போல இருக்கே!'மற்ற ரோஜாக்கள் அழகு.
பதிலளிநீக்குசின்ன தூறலுக்கு பின் எடுத்த மலர்களின் படங்கள் அழகு. பனித்துளி போல அழகாய் இருக்கிறது.
நன்றி.
நீக்குமொட்டும் மலரும் அழகு.(பஞ்சு மிட்டாய் கலர்)
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமுதல் படம் தாமரை மொக்கைப் போல் தோன்றியது எனக்கு மட்டும் தானா?
பதிலளிநீக்குஇல்லை. பலருக்கும் அப்படித் தோன்றியுள்ளது. தாமரை இதழ்களை, 'கை'களால் அவ்வளவு சுலபமாக பிய்த்துப் போட இயலுமா!!
நீக்குஅடுக்கு அடுக்காய் இதழ்கள் இருப்பதிலிருந்தே தெரியுமே தாமரை இல்லைனு! தாமரை இதழ் கொஞ்சம் நீளமாகவும் நுனியில் குவிந்தும் காணப்படும்.செந்தாமரை நிறம் இன்னமும் ஆழ்ந்ததாக இருக்கும்.
நீக்குமுதல் படம் தாமரைப் பூ போல இருக்கிறதே!
பதிலளிநீக்குஎல்லா ரோஜாக்களும் அழகு அவை தாங்கி நிற்கும் வரிகளும் சிறப்பு.
ஒற்றை தனிக்காட்டு ராஜாவாக ரோஜா வானாலும் அழகுதான் தானா சேரும் கூட்டமாக ரோஜா கூட்டமும் அழகுதான்!
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅழகான கலர் ரோஸ் கலரும் சரி, அந்த ஒரு விதமான ஆரஞ்சு கலரும் சரி..அழகு!
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குஎல்லா ரோஜா படங்களும் அழகாக இருக்கின்றன. எங்கள் வீட்டிலிருந்து உதகை 3 மணி நேரப் பயணம் தான். மலர்க்கண்காட்சி வரும் போது பெரும்பாலும் செல்வதுண்டு. வித விதமான மலர்கள், வித விதமான ரோஜாக்கள் பார்ப்பதுண்டு...
பதிலளிநீக்குதுளசிதரன்
ஊட்டி தோட்டக்கலை அலுவலகத்தில்தான் என் சிறிய அண்ணன் K G விசுவேஸ்வரன் பல வருடங்கள் வேலை பார்த்தார். ஊட்டி மலர்க் கண்காட்சி சமயங்களில் அண்ணன் மிகவும் மும்முரமாக, முனைப்போடு அங்கே வேலை செய்வார். சென்ற வருடம் கரோனாவுக்கு பலியான அவருக்கு - அடுத்த ஞாயிறு எழுபத்து மூன்றாவது பிறந்தநாள்.
நீக்குஅழகு...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபூக்கள் பார்க்க அழகோ அழகு! காலை எழுந்ததும் பூக்களை பார்ப்பது புத்துணர்ச்சியை கொடுக்கும். எங்கள் வீட்டில் பவளமல்லியும், கனகாம்பரமும் உண்டு. முன்பு ரோஜா செடிகளை வைத்திருந்தேன். இப்பொழுது இல்லை.
பதிலளிநீக்குஅப்படியா!
நீக்குபூக்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் - அதிலும் ரோஜாக்கள்!
பதிலளிநீக்குஅழகான படங்கள்.
நன்றி.
நீக்குபடங்களும் பகிர்வும் அருமை
பதிலளிநீக்கு