செவ்வாய், 25 மே, 2021

சிறுகதை -  அத்தை - ரேவதி நரசிம்மன் 

 1980 களில் ஒரு சம்பவம்.

''அக்கா, !!

"என்ன மாலா?"

"அந்த அத்தை நம் வீட்டுக்கு வருகிறாளாம்..."

"எதுக்கு அண்ணா நகரிலிருந்து இங்க மைலாப்பூர் வரணும்.  அப்பாவுக்கு மாமா பெண் என்றால் அந்தக் காலத்தோடு போச்சு. இங்க வந்து நம் நேரமும் வீணாக்கி, நம் மீது அதீத அன்பைக் கொட்டணும்னு  என்ன அவசியம்?''

"பெற்ற பிள்ளைகள் எல்லாம் திருமணம் ஆகி வெளியூர் போயாச்சு. பொழுது போக இங்கே வர வேணுமா?'' கோபத்துடன் பொரிந்த  தங்கையை அன்புடன் கண்டித்தாள் பெரிய அக்கா லக்ஷ்மி.

"அப்படியெல்லாம் சொல்லாதேம்மா.  அவர்கள் எல்லாம் கசின்ஸ் ஆக இருந்தாலும் நல்ல பாசத்தோடு இருந்தவர்கள்.  நம் அம்மா திடீரென்று இப்படி காலமானது அவர்களுக்கு அதிர்ச்சி.  அதுதான் வந்து நம்மைப் பார்த்து விட்டுப் போகிறார்."

''கசின்ஸ்..நா, அந்தக் காலத்தோட போச்சு. நம் வாழ்க்கையில் இப்போ வந்து குறுக்கிட என்ன அவசியம்?  சரியான busybody"  என்று கரித்துக் கொட்டின தங்கையைப் பார்த்து வியந்தாள் அக்கா.

அவர்கள் மூவரும் பதின்ம வயதுப் பெண்கள்.  இரண்டு மூன்று மாதங்கள் முன் தான் அவர்களின் தாயார், தீராத வியாதிக்குப் பலியானார்.

அப்போது ஆரம்பித்த பாசம், ,கவனிப்பு இந்த அத்தையோடது.  தன் வியாபாரத்தில் மும்முரமாக இருக்கும் பெரியப்பா மகன், அவன் பெற்ற  பெண் குழந்தைகள் மீது கவலை கொண்டு , கிடைத்த பலகாரங்களைப் பையில் அடைத்துக் கொண்டு வந்து தந்து சில மணி நேரம் இருந்து பேசிச் செல்வாள் சுந்தரி அத்தை.

சின்ன லீலா, கடைசிப் பெண்ணுக்கு சுந்தரி அத்தையைப் பிடித்திருந்தது.

14 வயதே ஆகி இருந்தது அந்தப் பெண்ணுக்கு. அம்மாவை இழந்த துக்கத்திலிருந்து மீள முடியாத சூழ்நிலையில் இந்த அத்தை வருவது அந்தக் குழந்தைக்கு மிக இதமாக இருந்தது.

ஐந்து வருடங்களுக்கு முன் தான் சென்னை வந்தார்கள். அதுவும் அவர்கள் அம்மாவின் உடல் நலம்  சரியில்லாமல் போனதும் வைத்தியத்துகாகச் சென்னைக்கு வந்தனர்.

இந்த ஐந்து வருடங்களும் அம்மாவின் நோயோடு போராடிக் களைத்து விட்டனர் கணபதியும் குழந்தைகளும்.

சுந்தரி அவர்கள் சென்னை வந்த நாளிலிருந்து தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தாள்.

பெரிய மகள் அந்த வருடம் கல்லூரியில் சேர்ந்திருந்தாள். நடுவில் பிறந்த மாலா பள்ளி இறுதி வகுப்பை எட்டி இருந்தாள்.  கடைக்குட்டி லீலா, ஒன்பதாம் வகுப்பு.  இவர்களுக்கு உதவியாகக் கூடவே இருக்கும் பங்காரு சொந்த ஊரிலிருந்து இங்கே வந்திருந்தாள்.

நூற்பாலை சம்பந்தமான இயந்திரங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் வியாபாரத்தில் இருந்த கணபதிக்கு கடந்த வருடங்களில் சரியாகக் கவனம் செலுத்த முடியாமல் போனது.

பாண்டிச்சேரிக்கும் சென்னைக்கும் அலைய வேண்டிய தொழில்.

சுந்தரி அடிக்கடி வந்து போவது அவனுக்கு  நிம்மதி.  தனியாக இருக்கும் பெண்குழந்தைகளைப் ​ பற்றி அவனுக்கு எப்பொழுதுமே கவலை.

முதல் பெண் லக்ஷ்மிக்கு, கணபதியின் மனைவி தன் சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து வைத்திருந்தாள்.

அவனும் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்தான்.

எல்லாமே சற்று ஏறுக்கு மாறாக நடந்தாலும் கணபதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  அவன் பாண்டிச்சேரிக்குப் போயிருந்த ஒரு மாலை, சுந்தரி அத்தைக்குப் பங்காரு ஃபோன் செய்திருந்தாள்.

தனக்கு மாலாவின் போக்கு பிடிபடவில்லை என்றும். பள்ளிக்குச் செல்லும் போது இன்னோரு வாலிபனுடன் தெரு முனையில் நின்று பேசி வருவதாகவும், அவர்கள் இருவரும் சினிமாவுக்குக் கூடச் சென்று வந்ததாகத் தன் கணவன் சொல்கிறான் என்றும் செய்தி சொன்னாள்.  பங்காருவின் கணவன் அந்த வீட்டுக்கு வாட்ச்மேன்.

இந்த செய்தி வந்ததிலிருந்து சுந்தரிக்கு அந்தப் பெண்களைத் தனியே விடுவதில் விருப்பம் இல்லை.   கணபதிக்கும் அவளுக்கும் கிட்டத்தட்ட 6 வயது வித்தியாசம். அவனைச் சிறுவனாகவே பார்த்து, தம்பியாகவே 
பழகி வந்திருக்கிறாள்.

இப்பொழுது மனைவியும் இல்லாத வேளையில் அந்தக் குடும்பம் சீரழிவதில் அவளுக்கு வேதனை. அதனாலயே  ஏதாவது ஒரு காரணம் காட்டி மைலாப்பூருக்கு வர ஆரம்பித்தாள்.
​​
இது நீடித்தால் கணபதியுடன் பேச வேண்டிய தேவை வரும் என்று யோசனை வந்தது.  இந்த நேரத்தில் தான் நம் கதை ஆரம்பித்தது.

சுந்தரி தன் மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு மயிலை வந்தடைந்தாள்.  மந்தைவெளியில் இறங்கி சிறிது நடந்தால் அந்தத் தனி வீடு வரும்.

அவள் தொலைவில் வருவதைப் பார்த்த பங்காரு,  அவசரமாக வெளியே வந்தாள்.

''சுந்தரி அம்மா, அந்தப் பையன் வீட்டுக்கே வந்து விட்டான்"

"ஐயா இன்னும் வரவில்லை. லக்ஷ்மிப் பொண்ணும் வரப் போகிற மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிருக்கு. சின்னப் பாப்பா டென்னிஸ் விளையாடப் போயிருக்கு" என்று படபடத்தாள்.

சுந்தரி சற்றே நிதானித்தாள்.  அவளுக்கு மாலாவின்  கோப குணம் தெரியும்.  இருந்தாலும் இப்போது அதை எல்லாம் பார்க்கும் நிலைமை இல்லை. என்னதான் 80கள் என்றாலும்  பண்பாடு மீறி நடப்பது எப்பொழுதும் சரியில்லையே.!!

பங்காருவை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நிதானமாக நுழைந்தாள்.

வாசல் கதவு சாத்தியிருந்தது.  உள்ளே வானொலி சத்தமும் சிரிப்பும் கேட்டன.

காலிங் பெல் அடித்ததும் சத்தம் நின்றதும் கொஞ்ச நேரத்தில் வாசல் கதவு திறந்து மாலாவின் முகம் தெரிந்தது.  கதவைத் திறந்து விட்டு உள்ளே தன் அறைக்குள் போய்விட்டாள்.

''என்னம்மா.லக்ஷ்மி எங்கே? ''  என்று சுந்தரியும் விடாமல் கேட்டாள்.

"வெளில போயிருக்கா. சாயந்திரம் ஆகும்"  என்றபடி அறைக்கதவை
மூடிக்கொண்டாள்.

மனதில் எழுந்த சங்கடத்தை அடக்கிக் கொண்டு வெளியே வந்த சுந்தரி அத்தை என்ன செய்வது என்று தெரியாமல் வாசல் நாற்காலியில் உட்கார, வண்டி வரும் சத்தம் கேட்டது.

''ஐயா வராருங்க'' என்ற படி வாசல் கேட்டைத் திறந்தான் கோபாலு.

ஏதோ பயம் தோன்ற வரும்  தம்பியைப் பார்த்தாள் சுந்தரி.

''என்னக்கா வெளியில உட்கார்ந்திருக்கே?"  என்று வினவியபடி வந்தவன் முகத்தில் களைப்பு.

''ஏதாவது சாப்பிடுடா. பிறகு பேசலாம்.  ஏன் இந்த நேரத்தில் திரும்பி விட்டாய்.? ஆனாலும் மிக அலைச்சல் உனக்கு"  என்றபடி இருவரும் உள்ளே நுழைந்தனர். 

இந்த சத்தத்தில் மெதுவாகக் கதவைத் திறந்து கொண்டு மாலாவும் அவள் தோழனும் வெளியே வந்தார்கள்.

கணபதி முகத்தில் ஒன்றும் உணர்ச்சி தெரியவில்லை.

"யாரும்மா உன் ஃப்ரண்டா.?" என்றபடி,  "அக்கா இதோ வரேன் '' என்றபடி
உள்ளே குளிக்கச் சென்று விட்டான்.

இன்னதென்று தெரியாத குழப்பம் சுந்தரி மனதில்.

மாலாவின் பரிகாசமான புன்னகையை வாங்கிக் கொள்ள சக்தி இல்லை.

சட்டென்று எழுந்தவள், பங்காருவை அழைத்து அவளிடம் தான் வாங்கி வந்த பலகாரங்களைக் கொடுத்துவிட்டு, "ஐயாவை எனக்கு ஃபோன் பண்ணச் சொல்லு. பிறகு பார்க்கலாம்"  என்றபடி திரும்பியவள் கண்ணில் கணபதியின் மனைவியின் படம் பட்டது. 'நீயே உன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்' என்று வேண்டியபடி வெளியே இறங்கி நடந்து விட்டாள்.

பஸ் டெர்மினசில் 41 ஆம் நம்பர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் தான் தன் கண்கள் நீர் வடிப்பதை உணர முடிந்தது.  எதற்காக இந்தப் பாசம்? யார் வாழ்க்கைக்கு யார் பொறுப்பு?  கணபதிக்கு 47 வயதில் இந்த சோகம் வேண்டாம் தான்.   அதற்காக அவன் தாயில்லாத குழந்தைகளை விட்டுக் கொடுப்பானா?  ஏதோ சமாளிப்பான்.  இந்தக் காலம் எல்லோரும் எல்லாவற்றையும் புரிந்தே  செய்கிறார்கள்.  தான் ஒரு பழங்காலப் பெண்மணி. இனி கணபதி ,தொலைபேசினால் பார்த்துக் கொள்ளலாம்..

கைப்பையைத் திறந்து கந்த சஷ்டி கவசத்தைப் படிக்க ஆரம்பித்தாள்.

வீட்டுக்கு வந்து ,கணவரிடமும் ,மாமியாரிடமும் சொல்லி அரற்றினாள்.

''இனிமே காலம் இப்படித்தான். நீ மனசைத் தேற்றிக் கொள்'\..  யாருக்கு யார் பொறுப்பு " என்று தேற்றினார் மாமியார்.

கணவர் அதிகம் சொல்லவில்லை.  

இரண்டு நாட்களில் கணபதியிடம் இருந்து ஃபோன் வந்தது. ''அக்கா, பெரியவளுக்குத் திருமணம் நடக்கப் போகிறது. எதிராஜ மண்டபத்தில் நீயும் அத்திம்பேரும் வந்து நடத்திக் கொடுக்கணும்"

அடுத்த இரண்டு மாதங்களில் மாலாவுக்கும் அர்ஜுனுக்கும் அவர்கள் வீட்டு முறைப்படி திருமணம்.

"படிப்பு முடியாத நேரத்தில் ஏன் இவ்வளவு அவசரம் என்று கேட்காதே.
புரிந்து கொள்வாய்னு  நினைக்கிறேன்.  நம் காலம் இல்லை இது.
எனக்கு சக்தி இல்லை.   என் மாமனார் மாமியார் வந்திருந்து  நடத்தப் போகிறார்கள்.''  என்று சொன்னவன் குரலில் மகிழ்ச்சியை விட விரக்தி தான் தெரிந்தது.

சுந்தரிக்குத் தன் பாசங்களை இந்த நாளில் நினைத்து நடத்த முடியாது என்று புரிந்தது.  20 வருடங்களுக்கு முன் காலம் சென்ற அத்தைக்காக இந்த நாளில் இத்தனை பாடு பட்டிருக்க வேண்டாம்.

அன்பு கூடத்   தேவையானால் தான்  கொடுக்கலாம் .

அனாவசியமாக   நம்  பாசத்தை  வேண்டாதவர்களிடம்  காண்பிக்க  வேண்டாம்.

இனி நாம் எச்சரிக்கையுடன் இருக்கலாம் என்று மனதில் தெளிவுடன் இருக்க ஆரம்பித்தாள்.  சம்பவம் நடந்த காலம், நகரம் எல்லாம் வேறு..  நடந்தது உண்மை.

திருமணங்களுக்கு அவர்கள் சென்று வந்தார்கள்.  மாலாவின் திருமணத்துக்கு ஏன் அவசரம் என்பது  பிறகே தெரிந்தது.

அவள் கருவுற்றதால், சீக்கிரத் திருமணம். 

இன்னும் அவர்கள் வாழ்க்கையில் ஸ்திரமாகத்தான் இருக்கிறார்கள்.

லீலா குட்டி மத்திரம் இன்னும் மெயில் தொடர்பில்.அமெரிக்க கலிஃபோர்னியாவில் கல்லூரி ப்ரொஃபெசராக வேலை. 56 வயதில் நல்ல குடும்பப் பெண்ணாகவும் இருக்கிறாள்.

கணபதிதான்  பாவம். டிமென்ஷியா வந்து 17 வருடங்களுக்கு முன் இறைவனடி அடைந்தான். 

கதை  தெளிவாகச் சொல்லி இருக்கிறேன் என்று நம்புகிறேன்.

= = = = 

81 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம். வல்லி அக்காவின் கதையா? படித்துவிட்டு சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் இறை அருளால் என்றும் நலமுடன்
    இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கம்மா...  வணக்கம்.  இறைவன் எங்கேயோ லீவில் சென்றிருக்கிறார் போல...    இணைந்து அழைப்போம்.

      நீக்கு
    2. எங்கும் போகலை மா. வருந்தாதீர்கள்.

      நீக்கு
    3. ஸ்ரீராம் நானும் என் மகனிடம் நேற்று சொல்லிக் கொண்டிருந்தேன் கடவுள் ஏதோ லாங்க் லீவு போட்டிருக்கார் போல இல்லேனா டெப்யூட்டேஷன்ல வேற லோலத்துக்குப் போய் அங்க ட்யூட்டி போலன்னு!!!!

      வல்லிம்மா பின்னே என்னம்மா இங்க நடப்பதைப் பார்க்கறப்போ ரொம்ப வேதனையாக இருக்கிறது

      நேற்று என் தங்கையின் மகளின் தோழி சின்னப் பெண் 30 வயதுதான் ஆகிறது. முதல் குழந்தை கருவுற்று 55 நாள்தான் ஆகிறது..காதல் திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது... நல்ல சந்தோஷமாக இருந்தார்கள்... அவள் கணவன் இந்த மாயாவி அரக்கனிடம் சிறைப்பட்டு மீண்டு நன்றாக வீட்டிற்கு வந்த மறுநாள் ஏதோ செய்கிறது என்று மருத்துவமனை சென்ற 3 மணி நேரத்தில் இல்லை.....

      எனக்கு நல்ல பழக்கம் மனம் என்னவோ போல் ஆகிவிட்டது

      கீதா

      நீக்கு
    4. அன்பின் சின்ன கீதாமா,

      தொற்றினால் வரும் செய்திகள் காது கொடுத்துக் கேட்கும்படி இல்லை.
      தங்கள் தோழியின் மகளின் ஃப்ரண்டுக்கு ஏற்பட்ட சோகம்
      அதுவும் 30 வயதில்:(
      மிக மிக வருத்தம் மா. எங்கிருந்து இந்த அரக்கன் வருகிறான்,எப்படிப் பிடிக்கிறான் என்றே
      தெரியவில்லை.
      பிரார்த்திப்போம்.

      நீக்கு
    5. Thiru Pushpavanam..... I do not understand your query.
      Ganapathi , Sundari's paternal cousin.

      நீக்கு
  3. நம்ம கதையா. கொஞ்சம் வள வளன்னு இருக்கோ.
    என்னிக்கோ நடந்ததைப் பட்டும் படாமலும் சொல்ல

    ஒரு திறமை வேண்டும்.
    படிப்பவர்களுக்கு நன்றி. கருத்து சொல்பவர்களுக்கு இன்னும்
    நன்றி:)

    படம் சரியாக வரைந்திருக்கும் கௌதமன் ஜி அவர்களுக்கும்,
    ஜோராகப் பதிவிட்ட ஸ்ரீராமுக்கும்
    நிறைய நிறைய நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. பாவம், அந்த அத்தை. நல்லது நினைப்பவர்களுக்கும்/செய்பவர்களுக்கும் நேரிடும் அவமானம் தான் என்றாலும் கடைசியில் மாலாவுக்கும் நல்லபடி கல்யாணம் முடிந்ததே! ஏமாற்றாமல் கல்யாணமும் பண்ணிக் கொண்டானே! அதுவரை கடவுளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கீதாமா, இனிய காலை வணக்கம்.

      கேள்விப்பட்ட போது ஒத்துக் கொள்ள முடியவில்லை.
      நடந்தது என்னவோ ....நல்லபடியாக முடிந்தது.

      கணபதி
      கடமைகளைப் பூர்த்தி செய்தே இறைவனடி சேர்ந்தான்.
      வேறு விதமாக நடந்திருந்தால் அவதிப் பட்டிருப்பான்.

      நன்றி மா.சுந்தரிக்கு இன்றைய நாகரீகங்கள் புரிபடவில்லை.
      நாங்களும் திருமணத்துக்குப் போயிருந்தோம்.

      ஏதோ சினிமா பார்ப்பது போல இருந்தது.

      நீக்கு
    2. //அன்பு கூடத் தேவையானால் தான் கொடுக்கலாம் .
      அனாவசியமாக நம் பாசத்தை வேண்டாதவர்களிடம் காண்பிக்க வேண்டாம்.//
      இதற்கு என்னோட கருத்து/அனுபவம் எழுத நினைச்சுப் பின்னர் காலங்கார்த்தாலே விவாதப் பொருளாகிவிடுமோனு விட்டுட்டேன். இதைச் சரியாப் புரிஞ்சுக்கணும். நீங்க சொல்லி இருக்கும் பொருள் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

      நீக்கு
    3. அன்பு கீதா,
      சொல்லுங்கள் அம்மா.

      நான் அந்தக் கருத்தை சரியாக எழுதவில்லை என்று தோன்றுகிறது.

      அன்பு வைப்பதில் தப்பில்லை.
      அதை அதீதமாகக் காண்பிப்பதில் தான் தவறு .நம் அன்பு நம் மட்டோடு.
      திருத்திக் கொள்கிறேன்.
      நீங்களும் சொன்னால் தான் சரியாக இருக்கும்.

      நீக்கு
  6. கௌதமன் சாரின் படங்கள் அருமையாக வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  8. நாளும் நலம் பெருக வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

    பதிலளிநீக்கு
  9. இரவாகி விட்டது. இருளோடு உறங்கி
    அதிகாலையில் எழ வேண்டும்.
    எங்கள் சிங்கப் பெருமான் அவதார நாள்.
    எல்லோரும் அவன் கருணையில்
    அமைதியும் ஆரோக்கியமும் பெற வேண்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. எல்லாருக்கும் லாலை வணக்கம்..

    கீதா

    பதிலளிநீக்கு
  11. வல்லிம்மா கதை சூப்பர், நன்றாகத்தான் சொல்லிருக்கீங்க.

    1980 களில் நான் படித்த கல்லூரியிலும் ஹாஸ்டலில் தங்கியிருந்த பெண்களில் ஒரு சிலர் இப்படி நடந்து ஆஸ்பத்திரிக்குச் சென்றதும் உண்டு...

    இது நல்ல வேளை கல்யாணத்தில் முடிந்ததே...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. அத்தை மிக நல்லவர். பாவம் அவர். அந்த வயது பெரியவர்கள் சொல்வதைக் கேட்காமல் தான் தோன்றித்தனமாகப் போகும். ஒரு சிலர் அப்படிப் போனாலும் கொஞ்சம் அலெர்ட்டாக இருந்துத் தப்பித்துவிடுவதும் உண்டு...

    ஏதோ நல்லபடியாக கல்யாணத்தில் முடிந்தது...பாவம் அவர்கள் அப்பா டெமென்ஷியா ரொம்ப மோசமான நோய்..யார் பார்த்துக் கொண்டார்களோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சின்னகீதா மா,
      மூத்த மகள் தான் பார்த்துக் கொண்டார்.
      இரண்டு வேளையும் நர்ஸ்கள் வந்து பராமரித்தார்கள்.
      சுந்தரி வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும்
      மைலாப்பூர் வரத் தெரியவில்லையாம்.
      ரொம்பப் பாவம் மா.

      நீக்கு
  13. கௌ அண்ணா படம் நன்றாக இருக்கிறது! சுந்தரி அத்தை நன்றாக இளமையாகவே இருக்கிறார்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!!

    பதிலளிநீக்கு
  15. // அன்பு கூடத் தேவையானால் தான் கொடுக்கலாம் .
    அனாவசியமாக நம் பாசத்தை வேண்டாதவர்களிடம் காண்பிக்க வேண்டாம்.//
    இந்த் கதையில் க்ற்றுக்கொண்ட பாடம் இது தான்! நன்றாக எழுதியிருக்கிறீர்கள்! கெளதமன் அவர்களின் ஓவியமும் அழகாக வந்திருக்கிறது! இனிய பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  16. அன்பை தேவையில்லாமல் கொடுத்து விட்டு பின்னால் அவதிப்படும் நிலையே வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு தேவ கோட்டைஜி,
      நன்றி மா.
      வறண்ட நிலம் என்று நாம் நினைக்கும் இடம்
      வளப்பமாக இருந்து விட்டால்
      தண்ணீருக்கு ஏது பயன்.?

      விழலுக்கு இறைத்த கதையாகும்.
      அதைத்தான் வேண்டாத இடம் என்று குறிப்பிட்டேன்.
      கண்மூடித்தனமான பாசம், சுந்தரியின் மன வேதனைக்குக் காரணம் அப்பா.

      நிறையப் பேர் இது போல அவதிப் படுகிறோம்.

      நீக்கு
  17. // அன்பு கூட தேவையான இடத்தில் தான்.. //

    நன்றாக எழுதியிருக்கின்றார்கள் வல்லியம்மா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துரை,

      மிக நன்றி மா. என் தந்தை நினைவுக்கு வருகிறார்.
      அவர் செலுத்திய அன்புக்கு நாங்கள் எத்தனையோ கடமைப் பட்டிருக்கிறோம்.
      அதை மீண்டும் அவரிடம் செலுத்தினோமா என்று யோசிக்க வைக்கிறது

      பாவம் அவர்கள் எல்லோரும். மக்கள் மேலே
      பாசம். எதுவுமே நிதானமாகத் தான் இருக்க வேண்டும். இது புரிய
      வருடங்கள் ஆகின்றன.
      எல்லோர் வாழ்வும் வளமாக இருப்பதே
      பெற்றோரின் எதிர்பார்ப்பு.
      பெரியவர்களிடம் அந்தப் பாசத்தை சிறியவர்களும்
      காண்பிக்க வேண்டும்.

      இது கூட அதீதமான எதிர்பார்ப்புதான்.
      படித்துக் கருத்தும் சொன்னதற்கு அன்பு நன்றிகள் மா.

      நீக்கு
  18. அன்பு கூடத் தேவையானால் தான் கொடுக்கலாம் .
    அனாவசியமாக நம் பாசத்தை வேண்டாதவர்களிடம் காண்பிக்க வேண்டாம்.//

    உண்மை
    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜெயக்குமார்,
      அது சுந்தரியின் அப்போதைய கருத்து.

      தான் மதிக்கப் படவில்லை,தன் அன்பு பயன் படவில்லை
      என்று தோன்றியதால் சொன்ன வார்த்தைகள்.

      இப்பொழுது இருந்திருந்தால் எப்படியோ நன்றாக
      இருந்தால் சரி என்று விலகிக் கொண்டிருப்பாள்.

      அன்பு செலுத்துவதில் தப்பில்லை.
      அதற்குப் பலனை எதிர்பார்ப்பதில்தான் தவறு.
      அதைத்தான் காண்பிக்க வேண்டாம்.மனதோடு
      இருத்திக் கொள்ள வேண்டும் என்று எழுதி இருக்க வேண்டும்.

      தங்கள் புரிதலுக்கும் பாராட்டுக்கும் நன்றிமா.

      நீக்கு
  19. அன்பு காட்டுவது குறித்த கருத்து சிறப்பு.

    வல்லிம்மா எழுதிய கதை - நன்று.

    கதைக்கான ஓவியம் - சிறப்பு. வரைந்த கேஜிஜி அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நன்றி வெங்கட்.

      படங்கள் கதையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
      திரு கௌதமன் ஜி க்கு நன்றி.

      உங்கள் பின்னூட்டத்துக்கும் நன்றி மா.

      நீக்கு
  20. அன்பு வேறு... பாசம் வேறு... சரி, இது ஒரு புறம் இருக்கட்டும்...

    // அன்பு கூடத் தேவையானால் தான் கொடுக்கலாம் ... அனாவசியமாக நம் பாசத்தை வேண்டாதவர்களிடம் காண்பிக்க வேண்டாம்... //

    பலரின் வாழ்வில் - பல நேரங்களில் - ஒரு வெறுப்பில் - இது போல் எண்ணங்கள் தோன்றுவதும் உண்மை... காரணம் நாம் செலுத்திய அன்பு புரிந்து கொள்ளாமையால் என்பதை விட அதை நம் மனம் எதிர்பார்த்துக் காத்திருப்பதால்...! ஆனால் அவை சில நாட்களில் நீர்த்துப் போய் விடும்... காரணம் உண்மையான அன்பு இருக்கும் பட்சத்தில்...!

    சரி, அன்பு உள்ளம் இருந்தால் தான் அறமே என்கிறார் தாத்தா... அதே சமயம் அறத்திற்கு மட்டும் அன்பு துணையில்லை... வீடாக இருந்தாலும் சரி, சமூகம் குறித்ததாக இருந்தாலும் சரி, பொங்கி எழும் போராட்டத்திற்கும் வீரத்திற்கும் அன்பே துணை எனவும் சொல்கிறார்...!

    அன்புடைமை அதிகாரத்தைக் குறளின் குரலாக எப்போதோ எழுதி வைத்து விட்டேன்... வெளியிடவில்லை, காரணத்தைப் பதிவில் சொல்கிறேன்... அனைத்து குறள்களுக்கும் குறளுக்கேற்ப பாடலை இணைத்துக் கொண்டிருக்கும் வேளையில், சென்ற வாரம் ஒரு குறளுக்கு வித்தியாசமான விளக்கமும் பாடலும் கிடைத்தது... அதையும் எழுதுகிறேன்... இப்போதைக்கு :

    தேவையான போது அன்பு வருவதோ, கொடுப்பதோ அன்பு அல்ல... வேண்டியவர்களோ, வேண்டாதவர்களோ, என அன்பு 'காண்பிக்க' என்பது அன்பும் அல்ல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரின் வாழ்வில் - பல நேரங்களில் - ஒரு வெறுப்பில் - இது போல் எண்ணங்கள் தோன்றுவதும் உண்மை... காரணம் நாம் செலுத்திய அன்பு புரிந்து கொள்ளாமையால் என்பதை விட அதை நம் மனம் எதிர்பார்த்துக் காத்திருப்பதால்...! ஆனால் அவை சில நாட்களில் நீர்த்துப் போய் விடும்... காரணம் உண்மையான அன்பு இருக்கும் பட்சத்தில்...!//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////இதுதான் உண்மை அன்பு தனபாலன்.

      கீழ் நோக்கிப் பாயும் வெள்ளம் மேல் நோக்கி வரும் என்று நினைப்பதை விட
      வேறு கசப்பான நியாயம் கிடையாது. நீங்கள் சொல்லும் கருத்துகளை
      அப்படியே ஏற்கிறேன்.

      கண்மூடித்தனமான பாசத்துக்குப் பயன் கிடையாது.
      அறிவுரையையோ அன்பையோ

      அனாவசியமாகக் காண்பிக்க, சொல்ல வேண்டாம்
      என்றே எழுதி இருக்க வேண்டும்.
      மனதில் அன்பிருக்கலாம். அதைக் ''காண்பித்து''
      என்ன செய்யப் போகிறொம்.?
      அதைவிட ''அவர்கள் நலனுக்காக விலகி இருக்கலாம் வாழ்த்தலாம்.''
      இப்படி வந்திருக்க வேண்டிய சொற்கள்
      மாறி வந்துவிட்டன.
      வள்ளுவர் வழியில் நீங்கள் சொல்லி இருக்கும்
      உண்மை அன்பு எதையும் எதிர்பார்க்காது.

      அன்று சுந்தரி உணர்ந்தது வெறும் பாசம்.
      தன் தம்பி என்று அளவுக்கு மேலான பாசம்.
      அவர்கள் கேட்கவில்லையே என்ற கோபம்.

      இது நியாயமா,சரியா என்று எனக்கும் யோசிக்க அப்போது
      தெரியவில்லை. முதிர்ந்த எண்ணங்களுக்கு
      மனம் நிறை நன்றி மா.
      என்னை விட பத்து வயது பெரியவள் சுந்தரி.
      இப்போது அவளும் இல்லை.


      நீக்கு
    2. தவறாக எடுத்துக் கொள்வீர்களோ என்று நினைத்தேன் அம்மா... நன்றி...

      இந்தக் கதை, எனது 3 மூத்த சகோதரிகளின் வாழ்விலோ, நெருங்கிய உறவினர்கள் இடத்திலோ அல்லது சொற்பமாக சில நண்பர்களிடத்திலோ, வேறு விதமாக அன்பு "செயல்" படுத்தியிருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில், தனிமைப்பட்ட வாழ்வில்... அதாவது...

      20 வருட காலம் சென்னை வாழ்விற்குப் பின், இங்கு திண்டுக்கல் வந்தபின் பெற்றுக்கொண்ட அடிகள் அப்படி...! ம்... என்ன சொல்வது... நடப்பதெல்லாம் நன்மைக்கே ம்ஹிம்... நடப்பதெல்லாம் நம் மனதாலே...

      நீக்கு
    3. அன்பின் தனபாலன்,
      உங்களை நான் தப்பாக நினைக்க மாட்டேன்.

      உண்மையான அன்பு தவறாக இருக்காது.
      நான் சொன்னவை நடந்த காலத்தில் எனக்கோ
      என் தோழிக்கோ முதிர்ச்சி இல்லை.

      நியாயம் பேசுவதில் கவனம் செலுத்தினோம்.
      அந்தப் பெண் தப்பாக நடந்தால்
      கவனிக்க அப்பா இருந்தான். அவர்களுடைய
      பாட்டி தாத்தா இருந்தார்கள்.
      குடும்பத்துக்கு கெட்ட பெயர் வந்து விடுமே
      என்ற கவலை அவளுக்கு.
      திருமணத்துக்கு வந்த கும்பல் எதையும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

      நீக்கு
    4. நீங்கள் உணர்ந்த வேதனைகளுக்கு
      வருந்துகிறேன். உறவுகள் இப்படியும் மாறுவதுண்டு.
      நாங்களும் வெளியூரில் இருந்து விட்டு
      கூட்டுக் குடும்பத்துக்கு வந்த போது சில உரசல்கள்
      இருந்தன.

      பொறுமைதான் வென்றது. உங்களுக்கும் காலம்
      ஒத்துழைத்து மக்களுடன் நல் வாழ்வு பெற வேண்டும்.

      நீக்கு
  21. கதை நன்றாக வந்திருக்கிறது வல்லிம்மா...

    எதுவுமே, அது அது நடக்கவேண்டிய விதத்தில் நடந்தால்தான் நல்லது, பாதுகாப்பு. என்னவோ... மாலாவின் வாழ்க்கை நன்றாகவே போனதோ தப்பித்ததோ.. இல்லையென்றால் யாருடைய உதவி கிடைத்திருக்கும்?

    தவறு நடக்கும் இடத்தில், உறவுகளை விரும்புவதில்லை. கண்டுபிடித்துவிடுவார்கள், கண்டிப்பார்கள் என்பதால்.

    தாயில்லாப் பிள்ளைகளை வளர்ப்பது சுலபமல்ல.

    கதைக்கான படம் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் முரளிமா,

      சுந்தரியின் சகோதரன் வாழ்வில் நிறைய கஷ்டப்பட்டான். ஆனால்
      தீர்க்கமாக யோசித்தே செயல் பட்டான்.

      குழந்தைகள் மேல் கண்மூடிப் பாசம். அத்தோடு
      அவர்கள் வாழ்க்கை சரியாக
      இருக்க வேண்டும் என்பதில் தீவிர முயற்சியும் எடுத்துக் கொண்டான்.
      ஆமாம்....மாலாவின் வாழ்க்கை முன்னோர் செய்த
      புண்ணியத்தால் சரியாகச் சென்றது.

      இன்னும் சரியாகவே இருக்கிறது என்பதுதான் விசேஷம்.
      நல்ல தைரியசாலிகள் அந்தப் பெண்கள்.
      காலமும் அவர்களுக்கு உதவியதுதான் நன்மையில் முடிந்தது.

      மிக நன்றி மா. ஒரு தாயில்லாமல் குழந்தைகளை
      வளர்ப்பது மிகக் கடினம். அதுவும் பெண் குழந்தைகளுக்கு அன்னையின் கண்டிப்பும் கருணையும் தேவை.

      நல்ல பின்னூட்டத்துக்கு நன்றி மா.

      நீக்கு
  22. அன்புள்ள வால்லிம்மா,
    "அன்பு கூடத் தேவையானால் தான் கொடுக்கலாம் .

    அனாவசியமாக நம் பாசத்தை வேண்டாதவர்களிடம் காண்பிக்க வேண்டாம்".
    பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள்.அந்த காலம், இந்த காலம் என்றில்லை.எல்லா காலங்களிலும் இப்படி உண்டு...சுந்தரி மாமி போல இப்பொழுதும் உண்டு. நல்ல கதைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் காயத்ரி மா,
      அன்பு செலுத்துவதில் தப்பில்லை.
      நாம் சொல்வதை அவர்கள் ஏற்கவேண்டும் என்று
      எதிர்பார்த்திருக்கக் கூடாது.
      அதை இன்னும் தெளிவாக நான் எழுதி இருக்க வேண்டும்.

      என்ன இருந்தாலும் அந்தப் பெண்களின் இளமை
      வேகத்தில் நம் அறிவுரைகளோ,சொற்களோ
      எடுபட வில்லை என்றால் ,விலகியதோடு இல்லாமல்
      வருத்தப் படாமல் இருக்கவும் கற்க வேண்டும்.

      இதோ இப்போது தோன்றும் விவேகம்
      அப்போது இல்லை.
      கதை/சம்பவத்தை உள் வாங்கிக் கருத்தும்
      அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்
      நன்றி மா.

      நீக்கு
  23. தொற்று நீங்கி இவ்வுலகம் நன்மை பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. /'கசின்ஸ்..நா, அந்தக் காலத்தோட போச்சு. //உண்மைதான் வல்லிம்மா .ஒரு காலத்தில் எங்க குடும்பத்தில் எல்லா  கஸின்ஸும் ஒன்றுகூடி பார்ட்டிஸ் எல்லாம் வைப்போம் .இப்போ ஆளுக்கொரு மூலையில் கூடவே சிலபல வேண்டா பிரச்சினைகள் ஹ்ம்ம் அந்த காலம் வராதது இனி .
    உறவுகளை வெறுப்பாய் தான் இப்பவும் பலர் வரவேற்கிறாங்க . எங்கே தன் விஷயத்தில் மூக்கை நுழைப்பார்களோ என்பதே பலரின் நோக்கம் .அதோட இப்போதை சந்ததிகளுக்கு உறவுகளின் அருமை கொஞ்சம் தெரியவுமில்லை .மாலாவின் வாழ்க்கை எப்படியோ சரியாய் வழிநடத்தப்பட்டதே அதுவே மகிழ்ச்சி .ஆனால் அந்த தகப்பன் மனம் எதையும் வெளிக்காட்டாமல் கஷ்டப்பட்டே டிமென்ஷியாவில் சென்றிருக்கும்னு தோணுது .வலிகளை தேக்கி வைத்தால் இப்படி மொத்தமாய் மனிதரை அமிழ்த்திவிடும் ./அன்பு கூடத்   தேவையானால் தான்  கொடுக்கலாம் .
    அனாவசியமாக   நம்  பாசத்தை  வேண்டாதவர்களிடம்  காண்பிக்க  வேண்டாம்.//

    உண்மைதான் ஆனால் இந்த உண்மை நமக்கெல்லாம் புரிய பலவருஷமாகிடுது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஏஞ்சல்.
      அறிவுரை சொல்ல ,நல்ல வழி நடத்த உறவுகள்
      இருந்தனர்.
      நாங்களும் யார் நல்லவை சொன்னாலும் கேட்போம்.

      எங்களுக்கு அடுத்த தலைமுறை உங்களைப் போல்
      இருப்பவர்களுக்கும் அது பிடித்தது.
      பிறகு வந்தவர்கள் தனி யூனிட்டாக இயங்கும் போது
      மற்றவர்கள் அல்லாதவர்களாகப் போகிறார்கள்.
      அப்போதே ஆரம்பித்து விட்டது.
      இனிக்கப் பேசினால் பிடித்திருக்கும்.
      உரைக்கப் பேசினால் கசந்து போகும்.

      கண்ணால் கண்டு உணர்ந்தது தான் கதை.
      டெமென்ஷியா வந்தபிறகு மூத்தமகள்
      யாரையும் அவரைப் பார்க்க அனுமதிக்க வில்லை.
      நீங்கள் சொன்னது போல ,உள் அழுத்தம் அவனை உருக்கி விட்டது.
      நல்ல புரிதலுக்கு மிக நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  25. அன்பான சுந்தரி அத்தையை கண்முன்னே கொண்டு வந்துட்டிங்க வல்லிம்மா .எனக்கும் ஆசையா இருக்கு இப்படி ஒரு சுந்தரி அத்தை பலகாரம்லாம் செஞ்சு எடுத்துவந்து  என்னை பார்க்க வரமாட்டாரான்னு :) 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏஞ்சல்,
      நன்றி கண்ணா. இப்போதிருந்து 'அத்தை பார்சல் சர்வீஸ்'
      ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன்.
      தொற்று முடியட்டும்:)

      நீக்கு
    2. ஆஆஆஆ என் செக்:) உம் இங்கினமேயா:))...

      ///எனக்கும் ஆசையா இருக்கு இப்படி ஒரு சுந்தரி அத்தை பலகாரம்லாம் செஞ்சு எடுத்துவந்து என்னை பார்க்க வரமாட்டாரான்னு :) //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எப்பவும் சிம்பதி கலக்ட் பண்ணுவதே தொழிலாப்போச்ச்ச்ச்ச்ச்ச்:)).. உங்களுக்கே பாட்டி வயசாகுது:).. இதில அத்தை வரோணுமாம்.. அதுவும் பலகாரத்தோடு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... நான் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன் இண்டைக்கே நீங்க பத்துப் பிள்ளைக?ளுக்கு அத்தையாக மாறி, பலகாரம் எடுத்துப் போய்க் குடுக்கோணும்... எப்பவும் தன்னைப்பற்றியே நினைப்பு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))..
      ஊசிக்குறிப்பு:
      எனக்கும் பலகாரம் எடுத்து வரோணும்.. அஞ்சு அத்தையாக:)).. ஹா ஹா ஹா..

      வல்லிம்மா... இந்த அஞ்சுவோட ஃபீலிங்ஸுகளுக்கெல்லாம் இடம் கொடுத்து கொரியர் சேர்வீஸ் எல்லாம் ஆரம்பிச்சிடாதீங்க:).. நீங்க பத்திரமாக இருங்கோ...

      சே..சே..... ச்ச்சும்மா இருந்த என்னைப் பொயிங்க வச்சிட்டாவே அஞ்சு:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))

      நீக்கு
    3. //அஞ்சு அத்தையாக:))// ஆமா me உங்க  குழந்தைகளுக்கு அத்தைதான் :)))))))))))) உங்களுக்கு போர்ர்றாமை :) வல்லிம்மா எனக்கு மட்டும் சீடை முறுக்கு அதிரசம் பார்சல்  போறாங்கன்னு :)) 

      நீக்கு
    4. ///வல்லிம்மா எனக்கு மட்டும் சீடை முறுக்கு அதிரசம் பார்சல் போறாங்கன்னு :)) ///

      அச்சச்சோ வல்லிம்மா நான் சொல்றதைக் கேளுங்கோ.. உங்களை கம்பி எண்ண வைக்கச் சதி நடக்குதூஊஊஊஊஊஊஉ:)). இதெல்லாம் நீங்க அனுப்பினால்... ஏற்கனவே ஆடிக்கொண்டிருக்கிற அஞ்சுட பல் செட் கழண்டு விழும்.. உடனே சுங்களைச் சூஊஊஊஊஊஊஊஉ பண்ணிடப்போறா:))).. ஆண்டவா இப்போ நான் எப்பூடி வல்லிம்மாவைக் காப்பாத்துவேன்ன்ன்ன்ன்:)))

      நீக்கு
    5. அன்பின் ஏஞ்சல்,
      அன்பின் அதிரா,
      எத்தனை அழகா இருக்கு உங்க உரையாடல். உங்களுக்கெல்லாம் அத்தையாக
      அன்பு பார்சல் அனுப்பறேன்.

      ஹூம் அந்த நாட்களும் வந்திடாதோ. சென்னையிலிருந்து அனுப்பிய க்ராண்ட்
      ஸ்னாக்ஸ்க்குக் கணக்கே இல்லை.
      பிள்ளைகள் வெளியூரில் இருக்கும் போது
      நமக்கு மட்டும் சாப்பிடப் பிடிக்குமா?
      அப்பாவும் நானும் போட்டி போட்டுக் கொண்டு லண்டனுக்கும், ஸ்விஸ்ஸுக்கும்,
      இந்த ஊருக்கும் அனுப்புவோம்.

      ஒரு காக்கா குருவியைக் கூட விடமாட்டோம்.
      இப்ப அந்தந்த ஊரிலயே வந்தாச்சு. நாமும் அனுப்பற நிலையில்
      இல்லை.

      நீக்கு
    6. நேற்று தம்பி மகளிடம் பேசும்போது,
      அத்தை நீ இங்க வந்து வெறும் உப்புமா
      செய்து கொடுக்க மாட்டியான்னு இருக்கு என்கிறாள்.
      பிள்ளையோட மல்லுக்கட்டவே நேரம் போதவில்லையாம்.

      எங்கள் அத்தையும் நீங்க சொல்லும் அத்தைகளைப்
      போலத்தான், தில்லி அத்தை பிஸ்கட் செய்து கொண்டு வருவார்.
      மைலாப்பூர் அத்தை அழைத்து சென்று
      புது உடைகள் வாங்கித் தருவார்.

      எல்லாம் கனாவாகக் கற்பனையாக
      நினைவில் இனிக்கிறது.
      நீங்கள் இருவருமாவது சந்தித்துப் பேசும் காலம்
      வருமோ என்றிருக்கிறது.

      நீக்கு
  26. அன்பின் அனைவருக்கும் நன்றி. வந்து படித்து
    அதைப் பிடித்தவர்களுக்கும் தனிச் சிறப்பு நன்றி.

    அன்பு தான் செல்லும் இடத்தை வளமை செய்யும்.
    நமக்குத் திரும்பி வரவேண்டும் என்று எதிர்பார்த்தது
    சுந்தரியின் தவறான கணிப்பு.

    நான் காண்பிக்க வேண்டாம் என்று சொன்னது
    வெளிப்படையாக என்று பொருளில் சொன்னேன்.
    நம் அன்பு நம் வரையில். பிழை செய்தவர்களிடம்
    அலட்சியம் செய்பவர்களிடம் நாம் மனதில் அன்பைக் கொண்டாலும்
    அவர்களிடம் சொல்லி அவமானப் பட்ட நேரத்தில் சுந்தரி
    மனதில் தோன்றிய எண்ணம்.
    அதை நல்ல தமிழில் அழகாகச் சொல்லி இருக்க வேண்டும்.

    அன்புக்கு ஏது கட்டுப்பாடு? அதைச் சொல்லி ,
    மறுப்பவர்களிடம் நாம் இடிபட வேண்டாம்
    என்பதைக் ''காண்பிக்க வேண்டாம்" என்று எழுதி இருக்கிறேன்.
    மொத்த கருத்தே மாறி விடுகிறது.
    அன்பு செய்வோம் பலன் எதிர்பாராமல் என்று
    இந்த வயதில் உதிக்கும் எண்ணம்.

    பதிலளிநீக்கு
  27. கதை நன்றாக இருக்கிறது வல்லிம்மா. அதுவும் உண்மைக் கதை. இரண்டாவது பெண் நல்ல காலம் தப்பினாள் அதாவது அவள் பழகிய பையனுடன் திருமணம். இல்லை என்றால் என்னாகி இருக்கும் இல்லையா? அந்தத் தந்தை பாவம்.

    அத்தையின் அன்பு நல்ல அன்பு. ஆனால் சில சமயங்களில் நம் அக்கறை மதிக்கப்படாத போது ஒரு விரக்தி வரத்தான் செய்யும். அன்பு குறைந்துவ்டியாது. ஆனால் நாம் சற்று ஒதுங்கி இருக்க நினைப்போம் இல்லை என்றால் மீண்டும் அப்படியான ஒரு தருணத்தை நம் மனம் எதிர்கொள்ளும் சக்தி இல்லாததாக இருக்கும். ஐடியலாகப் பேசலாம் அன் கண்டிஷனல் லவ் என்று ஆனால் நாமும் மனிதர்கள்தானே.

    வாழ்த்துகள் வல்லிம்மா

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்,
      வருகைக்கு நன்றி மா.
      ஆமாம் இது நடந்த சம்பவம்.
      எங்களை அதிர வைத்த நிகழ்ச்சி. சுந்தரி எதிர் வீட்டில் இருந்தாள்.
      ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத நாட்களே
      இல்லை.
      மிக வெகுளி. குடும்பத்தின் மேல் பாசம் அதிகம்.
      அன்பு மறுக்கப் பட்டதும் மிக விரக்தி வந்து விட்டது.

      நீங்கள் சொல்வதே உண்மை. எதிர்பார்க்காத அன்பு
      அவ்வளவு சுலபத்தில் வாய்க்காது.
      வாழ்க்கை தரும் பாடங்கள் நம்மைத் திருத்தினாலும் மீண்டும்
      அதே போல இன்னொருவர், அது தம்பியாகவே இருந்தாலும்
      வரவேற்கப் படவில்லை என்றால்
      விலகச் சாதுர்யம் வேண்டும்.
      மிகச் சரியாகக் கணித்து சொல்லி இருக்கிறீர்கள்.
      என்றும் நலமுடன் இருங்கள்.

      நீக்கு
  28. வணக்கம் வல்லி அக்கா. கதையை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.

    முன்பு ஒன்று விட்ட இரண்டு விட்ட பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள் எல்லாம் ஒரே குடும்பம் என்று மகிழ்ச்சியாக அறிவுரைகளை கேட்டு நடந்த காலம்.
    இப்போது அவர் அவர்களுக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை, தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கிறது அதை பெரியவர்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் காலமாக இருக்கிறது.

    நம்மிடம் ஆலோசனை கேட்டால் மட்டும் நமக்கு மனதில் பட்டதை(சரி என்று பட்டதை )
    சொல்ல வேண்டும்.

    //அன்பு கூடத் தேவையானால் தான் கொடுக்கலாம் .

    அனாவசியமாக நம் பாசத்தை வேண்டாதவர்களிடம் காண்பிக்க வேண்டாம்//

    அன்பாக நாம் இருக்கலாம் அவர்கள் நலத்துக்கு பிரார்த்தனை செய்து கொண்டு. அது மட்டுமே நம்மால் முடியும் இப்போது.

    கதை நன்றாக இருக்கிறது அக்கா, நிறைய எழுதுங்கள்.
    படம் பொருத்தமாக வரைந்து இருக்கிறார் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பாக நாம் இருக்கலாம் அவர்கள் நலத்துக்கு பிரார்த்தனை செய்து கொண்டு. அது மட்டுமே நம்மால் முடியும் இப்போது./////////அன்பின் கோமதி, வாழ்க வளமுடன்.
      கதை நடந்த காலத்தில்
      எல்லோரும் எல்லோருக்கும் புத்தி சொல்லிக் கொண்டே
      தான் இருப்பார்கள். நீங்கள் சொல்வது போல
      பெரியப்பா, சித்தப்பா, அத்தை மாமா என்று

      அட்வைஸ் வந்த வண்ணம் இருக்கும்.:)))
      அப்போதே இது நடந்ததால் சுந்தரிக்கு தாங்கவில்லை.
      இப்போது போல இருந்தால் நடப்பதே வேறு!!!

      நேற்றுப் பிறந்தது கூட நாம் சொல்வதைக் கேட்குமா
      தெரியாது.

      நீக்கு
  29. என் கணவரின் அத்தை தன் தம்பி வீட்டுக்கு வரும் போது நிறைய தம்பி மகன்களுக்கு பிடித்தவைகளை மூட்டைகட்டி எடுத்து வருவார்கள் .இவர்கள் எல்லாம் விடுமுறை விட்டால் அத்தை வீட்டு போய் விடுவார்கள் , அவர்கள் வித விதமாய் சமைத்து தருவார்கள். சினிமவுக்கு அழைத்து செல்வார்கள், உறவுகள் வீட்டுக்கு அழைத்து செல்வார்கள். குற்றலாம் அழைத்து சென்று குழந்தைகளுக்கு ஈடு கொடுத்து மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று அத்தையின் பாசத்தை, அன்பை சொல்லி கொண்டே இருப்பார் என் கணவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கணவரின் அத்தை தன் தம்பி வீட்டுக்கு வரும் போது நிறைய தம்பி மகன்களுக்கு பிடித்தவைகளை மூட்டைகட்டி எடுத்து வருவார்கள் .இவர்கள் எல்லாம் விடுமுறை விட்டால் அத்தை வீட்டு போய் விடுவார்கள் , அவர்கள் வித விதமாய் சமைத்து தருவார்கள்.///////////////எத்தனை மகிழ்ச்சியான குடும்பம்.!!!!
      எனக்கும் இது போல அத்தைகள் இருந்தார்கள்.
      அப்போதெல்லாம் வெளியில் வாங்குவதை விட வீட்டில் பலகாரம்
      செய்வதே வழக்கம் இல்லையா அம்மா.!!!
      யாராவது வீட்டிற்கு வருகிறார்கள் என்றால்

      விருந்து காத்திருக்கிறது என்று அர்த்தம்.!
      எவ்வளவு நாட்களும் வைத்திருந்து உண்ணலாம்.
      தெங்காசி அத்தை.....சொல்லவே நன்றாக இருக்கிறது.
      இந்தப் பாசம் நம்மிடமும் இருப்பதற்குக் காரணம்
      இந்தப் பெரியவர்கள் தான்.

      நம் குடும்பம், அண்ணன்,தம்பி தங்கைகள் குடும்பம்
      எல்லோரும் நன்மைகள் கூடி இருக்க இறைவன் அருள வேண்டூம்.
      அக்கறையாகப் படித்து கருத்து சொன்னதற்கு
      மிக நன்றி மா.

      நீக்கு
  30. தென்காசி அத்தை என்று அழைப்போம் .
    முன்பு ஒரு பதிவில் என் கணவர் தன் அத்தை வீட்டை வரைந்த படத்தை போட்டு இருக்கிறேன். எங்களிடமும் பிரியமாக இருப்பார்கள்.
    உங்கள் அத்தை கதை அவர்களை நினைவு படுத்தி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “தென்காசி அத்தை”.. சொல்லும்போதே ஆசையாக இருக்குது கோமதி அக்கா..

      எங்களுக்கும் இப்படிச் சில செல்ல உறவுகள் உண்டு:)..

      “மாம்பழ மாமா”
      “கொழும்பு மாமா”
      “பையன் சித்தப்பா”:)

      நீக்கு
    2. என் கணவருக்கு மூன்று அத்தைகள் அதனால் அவர்களை குறுமலை அத்தை, தென்காசி அத்தை, வாகைகுளஅத்தை என்று ஊர் பேர் வைத்து சொல்வார்கள்.
      தென்காசி அத்தைதான் அடிக்கடி வருவார்கள் அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது, தம்பி குழந்தைகளை தன் குழந்தைகள் போல் பார்த்தார்கள்.
      என் அத்தையும் நாத்தனாரிடம் மிகவும் பிரியமாக இருப்பார்கள். தம்பி வீட்டிலேயே தன் இறுதி மூச்சையும் விட்டார்கள்.

      என் கணவரிடம் தென்காசி அத்தை நினைவுகள் நிறைய இருந்தது சொல்லி கொண்டே இருப்பார்கள். அத்தையின் சிரிப்பு என்று மனதில் ஒரு விஷயத்தை சொல்லும் போது சிரித்து விட்டுதான் சொல்வார்கள். அந்த விஷயத்தை கேட்டு எங்கள் வீட்டில் மற்றவர்கள் சிரிக்கும் சிரிப்பு வீட்டை நிறைக்கும்.

      நீக்கு
  31. அத்தை என்று எழுத்தாளர் லட்சுமி ஒரு கதை எழுதினார். உங்கள் கதையும் நன்றாகவே இருக்கிறது. உங்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை சொல்லியிருப்பது போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் பானுமா,
      கருத்துக்கு நன்றி. பொதுவாகவே அத்தைகளை எனக்கு மிகவும் பிடிக்கும்.
      அத்தைகளுக்கு நம் அப்பாவைப் பிடித்தது போலவே நம்மிடமும்
      அன்பாக இருப்பார்கள்.
      இப்போது கொஞ்சம் மாறினாலும்,
      மாமாக்கள் அத்தைகள் ,பாட்டிகளின்
      சாம்ராஜ்யம் தனி.
      இது நடந்த சம்பவம் தான். நாற்பது வருடங்களுக்கு முந்தையது.

      நீக்கு
  32. வல்லிம்மாவின் உண்மைக்கதை நன்றாக இருக்கிறது. அது என்னமோ உண்மைக்கதைகள் எப்பவும் அழகுதான்.

    அவசரத் திருமணத்தின் பின்னணி புரிஞ்சு கொண்டேன்.. இருப்பினும் நல்ல மாப்பிள்ளை, நல்ல் அப்பா.. எல்லாப் பெண்களுக்கும் இப்படி அமைவதில்லை, இப்படியான, அம்மாவும் இல்லாச் சூழலில் இருக்கும் சில பெண்களை, ஈசியாக யூஸ் பண்ணி விட்டுக் கையைவிட்டுப் போவோரும் உண்டுதானே... இது அந்தப் பெண்ணின் விதி நல்ல விதி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அதிரா.
      பெயர்களையும் ஊரையும் மாற்றினதைத் தவிர , இது நடந்த சம்பவமே.

      பாவம் அந்த சுந்தரியும், அவளது கசினும்.
      நல்லதாகவே முடிந்தாலும், அந்த காலத்துக்கு இது
      அதீதம் தான்.
      இர்ந்தாலும் நாம் யார், அவர்கள் வாழ்க்கையில்
      நீதி சொல்ல என்ற எண்ணம் இப்போது தோன்றியது.

      நிலமையை சமாளிக்கும் திறன் அவர்களுக்கு இருந்ததே.
      அவர்கள் குழந்தைகளுக்கே திருமணம் முடிந்து
      பேரன் பேத்தி இருக்கலாம்.
      நன்றி அதிராமா.

      நீக்கு
  33. எங்களுக்கு ஒரு ஒன்றுவிட்ட அப்பம்மா இருந்தா, அவவுக்கு எங்கட அப்பாவை நன்கு பிடிக்கும்.. அதனால எங்களையும் பிடிக்கும். நாம் சின்னவர்களாக இருந்தபோது, அவ எப்போதாவது வீட்டுக்கு வருவா, வரும்போது, ஒரு குட்டி பாக்கில்... பல பல குட்டிக் குட்டிச் சரைகள் கட்டி எடுத்து வந்து தருவா..
    அந்தக் குட்டிச் சரைகளைப் பிரிப்பதே ஒரு பேரானந்தம்.. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வித இனிப்பு இருக்கும்... தும்பி மிட்டாய், கச்சான் அல்வா, தோடம்பழ இனிப்பு.., புளூட்டோ.. இப்படிப் பலவிதம்.

    ஊருக்குப் போனால், பக்கத்து வீட்டில் ஒரு அம்மம்மா, அவவிடம் டெய்லி விசிட் பண்ணுவோம்.. ஏனெனில் நம்மைக் கண்டதும், ஒரு குட்டி பாக் இல் கற்கண்டு போட்டுத் தருவா.. அதுக்காகவே போவோம்.. ஹா ஹா ஹா மலரும் நினைவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பக்கத்து வீட்டில் ஒரு அம்மம்மா, அவவிடம் டெய்லி விசிட் பண்ணுவோம்.. ஏனெனில் நம்மைக் கண்டதும், ஒரு குட்டி பாக் இல் கற்கண்டு போட்டுத் தருவா.. அதுக்காகவே போவோம்//
      அதானே பார்த்தேன் அப்போ அன்பால் போகல்லை கற்கண்டுக்காக அம்மம்மாவை பார்க்க போயிருக்கு பூனை :) 
      உங்களுக்கு பார்சல் சர்வீஸ் கேன்சல்ட் வல்லிம்மா கிட்டே  சொல்லிடறேன் 

      நீக்கு
    2. @ https://preview.redd.it/r78ytk8h9so11.jpg?width=960&crop=smart&auto=webp&s=7c6219e474664c31f8cc3982c52ba51058198e09

      நீக்கு
  34. முதல் படத்தில இருக்கிற அந்தக் குண்டு ஆன்ரிக்குப் பக்கத்தில கிலோகிராம் என மட்டும்தானே போட்டிருக்கு:)) எத்தனை கிலோகிராம்ஸ் எனப் போடவே இல்லையே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையீயீயீ. அதிரா. கௌதமன் ஜி தூங்கி இருப்பார். இல்லாவிட்டால்
      பதில் வந்திருக்கும். ஹாஹ்ஹா. கொஞ்சம் வெயிட்டி
      பார்ட்டி தான் சுந்தரி. இன்னோரு நாள் அவர் படம் என் பதிவுல போடறேன்.
      வெல்கம் பேக்.

      நீக்கு
    2. ஏனெனில் நம்மைக் கண்டதும், ஒரு குட்டி பாக் இல் கற்கண்டு போட்டுத் தருவா.. அதுக்காகவே போவோம்//
      அதானே பார்த்தேன் அப்போ அன்பால் போகல்லை கற்கண்டுக்காக அம்மம்மாவை பார்க்க போயிருக்கு பூனை :)
      உங்களுக்கு பார்சல் சர்வீஸ் கேன்சல்ட் வல்லிம்மா கிட்டே சொல்லிடறேன் /////கேட்டேன் பார்த்தேன் ரசித்தேன் மா. அதிரா,ஏஞ்சல்.
      என்றும் வாழ்க வளமுடன்.
      /

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!