ஒரு படத்துக்கு மூன்று அல்லது நான்கு பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதி இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். படத்தில் சுமார் ஐந்து அல்லது ஆறு பாடல்கள் இருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம். அந்த அந்தப் பாடலை யார் யார் எழுதியது என்று எப்படி அறிந்துகொள்வது? முன்னாலாவது பாட்டுப் புத்தகம் வாங்கும் பழக்கம் இருந்தது. அதில் விவரம் இருக்கும். அது சரியானதுதானா என்றும் தெரியாது என்று வைத்துக் கொள்வோம்.
இப்போதும் பாடல்கள் பற்றிய விவரங்களை அதற்கான 'யூ டியூப்' இணைப்பில் தருகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை. கொடுத்தாலும் சரிதானா என்று சரிபார்க்க முடியாது.
வெற்றிப்பட இயக்குனர் என்று அறியப்பட்ட R சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1982 இல் வந்த படம் 'அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை..'
அறிமுக நடிகர் கபில்தேவ் என்ற நடிகரும், சுலக்ஷணாவும் இணைந்து நடித்த படம். கிராமத்துப் படங்கள் வரிசையில் ஓடிவந்த மற்றொரு படம்.
இதோ இவர்கள்தான் பாடல்களை எழுதியவர்கள்! இங்கு பகிர்ந்திருக்கும் பாடல்களை எழுதி இருப்பவர் என்று நான் கொடுத்திருக்கும் விவரம் சரிதானா என்று பார்த்துக் கொள்ளுங்கள்!
திரை இசைத்திலகம் கே வி மகாதேவன் இசை அமைத்துள்ள இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் கேட்கலாம். அதில் "சுமைதாங்கி ஏன் இன்று விழுகின்றது?" பாடல் மகா சோகம். எனவே அதை விட்டு விட்டு மற்ற இரண்டு எனக்குப் பிடித்த கசடுகளை இங்கு பகிர்கிறேன்!
இரண்டுமே எஸ் பி பி பாடிய பாடல்கள். ஒன்றில் தனித்தும், இன்னொன்றில் ஜானகியம்மாவுடனும் பாடியுள்ள பாடல்கள்.
முதல் பாடல் எஸ் பி பி தனித்துப் பாடிய 'எதிர்பார்த்தேன்...' பாடல். காதலிக்காக காத்திருந்து விரக்தியுற்று பாடும் பாடல்கள் எவ்வளவு அறிவீர்கள்? தீர்த்தக்கரையினிலே, காத்திருந்து காத்திருந்து, வாடிக்கை மறந்ததும் ஏனோ... அந்த வரிசையில் இந்தப் பாடலும்... இதில் ஸ்பெஷல் எஸ் பி பி.
பாடல் வரிகளைத் தேடியபோது ஒரு தளம் இந்தப் பாடலை எழுதியது புலமைப்பித்தன் என்கிறது! 'தாகத்தோடு நானிருக்க தண்ணீர்க்குடமாய் நீயிருக்க வரிகள்', 'ஆமாம்.. இருக்கலாம்' என்கின்றன! ஆண்களுக்கு இருக்கும் அந்த ஏக்கம் - அவசரம் என்றும் சொல்லலாமோ!- பெண்களுக்கு இருக்காது போலும். இவன் ஏங்கிப் பாட, அவள் அதை ரசிக்கும் புன்னகையுடன் காணப்படுகிறாள்! அப்புறம் கண்ணீர் சிந்துகிறாள்! 'மாது' என்று எஸ் பி பி உச்சரிப்பது சரியில்லை என்று நினைத்துக் கொள்வேன். அப்போது அதைத் திருத்த பாடலாசிரிய அருகில் இல்லை போலும்! இரவு நேரத்தில் நீர்நிலையில் அருகே படுத்துக்க கிடக்கிறானே காதலன்.. பூச்சி பொட்டு இருக்காதோ... பூச்சி சரி, அதென்ன பொட்டு?!! சரி.. வாருங்கள் பாடலைக் கேட்போம்!
எதிர்பார்த்தேன் இளங்கிளியே காணலியே... இளங்காற்றே
ஏன் வரலே தெரியலியே...
வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது
தொடத்தொட தள்ளித் தள்ளிப் போனா - நெஞ்சம்
துடிக்குது தூண்டில் பட்ட மீனா
தாகத்தோட நானிருக்க -தண்ணீர்க்
குடமாய் நீயிருக்க
தேடி வந்தா ஒதுங்குவதேன் -தென்றல்
போல ஓடுவதேன்
தேன்தான் சிந்தும் செந்தாமரையே -இது
ஏன்தான் சொல்லு என் பூங்கொடியே
வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை - கேட்டால்
விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை
ஊருக்குள்ள தீப்பிடிச்சா ஓடையும் உண்டு
தீயணைக்க
உள்ளத்திலே நெருப்பெரிஞ்சா உடனே வரணும்
நீயணைக்க
ஏன்தான் இல்ல என் ஞாபகமே -அடி
வா வா கொஞ்ச என் தேன்குடமே
அடுத்த பாடல் காதல் பாடல். எஸ் பி பி யும் ஜானகியம்மாவும் இணைந்து பாடி இருக்கும் இனிமையான பாடல். வாலியின் பாடல். சாதாரணமாக இரண்டு சரணங்கள் என்றால் முதல் சரணத்தில் ஆண்குரல் தொடங்கி, பெண்குரல் தொடர்ந்தால், இரண்டாவது சரணத்தில் பெண்குரல் தொடங்கி ஆண்குரல் முடிக்கும். இங்கு இரண்டு சரணங்களும் ஒரே மாதிரி ஆண்குரல் முதலிலும், பெண்குரல் தொடர்ந்தும்.
படம் பற்றி வழக்கம்போல யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் இந்த இரண்டு பாடல்கள் சிலோன் ரேடியோ தயவிலும் கே வி மகாதேவன் தயவிலும் ரசிகர்கள் நினைவில் என்றும் இருக்கும். எஸ் பி பி யின் குரலில் ஆரம்பமே ஜோர் என்றால் பல்லவியில் முதல்முறை "நான் பார்க்கிறேன்" என்று அவர் பரவசப்படுவது... இந்தப் பாடலில் எஸ் பி பி யை ஒரு இணுக்கில் ஜானகியம்மா முந்தி விடுகிறாரோ என்றும் தோன்றும்.. குறிப்பாக சரணங்களில்.
என்னவோ இயக்குனர்களுக்கு ஒரு ஆசை, கிராமத்துக்கு காட்சிப் பாடல்களில் நாயகி பரதம் ஆடுவதும், நாயகன் வெள்ளைப் பைஜாமா ஜிப்பாவில் வருவதும்...!
மணியோசையும் கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமி எங்கும் நான் பார்க்கிறேன்.
ரவிவர்மனை அழைத்து வரச்சொல்லவோ -அடி
ரதிதேவி உனை எழுதித் தரச்சொல்லவோ
கவிவர்மன் நீயொருவன் போதாதோ -என்
கலைவண்ணம் நீ வரைந்தால் ஆகாதோ
பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ -ஸ்ருதி
பிசகாமல் அதுகூடக் தமிழ்பாடுமோ
சிலைகூட நீ அழைத்தால் வாராதோ -அது
தினந்தோறும் உன் நினைவில் பாடாதோ
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குபாடலைப் பிறகு கேட்டுப்பார்க்கிறேன்... இதுவரை கேட்ட மாதிரி நினைவுக்கு வரலை
வணக்கம். வாங்க நெல்லை... கேட்டால் ஏற்கெனவே கேட்டிருப்பது நினைவுக்கு வரலாம்!
நீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஎன்றும் இறை அருளோடு தொற்றிலிருந்து
அனைவரும் காப்பாற்றப் பட வேண்டும்.
அதற்காக ஏல்லோரும் இணைந்து பிரார்த்திப்போம் அம்மா... வாங்க.. வணக்கம்.
நீக்குஇரண்டுமே இனிய பாடல்கள்.
பதிலளிநீக்குமுதல் பாடல் நான் கேட்டிருக்கிறேன்.
எஸ்பி பி குரலில் இளமையும் உற்சாகமும்
சேர்ந்து கேட்கிறது.
இதே போல் ஒலித்த பார்த்த காட்சிகளும்
நினைவில்.
இரண்டாவது பாடல் எப்படி கேட்காமல்
இருந்தேன் என்று தெரியவில்லை.
ஆமாம் நீங்கள் சொல்வது போல்
ஒரு அசடு வழியும் பரதம் என்ற பெயரில்
நடனம். கற்பனை அவ்வளவுதான்.
முதல் பாடல் சரியான ஒலி அளவில் கேட்கிறதா? என் மூத்த சகோதரி கொஞ்ச நேரம் முன்பு அலைபேசி முதல் பாடல் சரியாய் காதில் விழவில்லை என்றார்.
நீக்குஇரண்டு பாடல்களுமே நான் மிகவும் விரும்பிக் கேட்கும் பாடல்கள் அம்மா.
நன்றாகக் கேட்கிறதே அம்மா.
நீக்குதேனான குரலை ஏன் தான் கடவுள் அழைத்துக் கொண்டாரோ.:(
நன்றி அம்மா. அக்காவிடம் சொல்லி விடுகிறேன்.
நீக்குசமீபத்தில் நான் கேட்ட திரைப்பாடல்களின் ஆசிரியர்களைக்
பதிலளிநீக்குகண்டு பிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை.
யூடியூபில் இசை அமைப்பாளர்களைப் போடுகிறார்களே ஒழிய
பாடல் எழுதியவர்களை இணையத்தில் துருவித் தேட வேண்டி இருக்கிறது.
புலமைப் பித்தன், நா.முத்துக்குமரன்,நா,காமராசன்
இவர்கள் பாடல் எல்லாம் முத்திரைப் பாடல்கள்.
இன்று பதிவிட்டிருக்கும் இரண்டுமே
சிறப்பாக இருக்கின்றன.
நன்றி அம்மா.
நீக்குபாடலாசிரியர்கள் என்று அவர்கள் கொடுக்கும் பெயர்கள் மட்டுமில்லை, சில சமயம் தேவா, இளையராஜா என்று அவர்கள் வி எஸ் நரசிம்மன் பாடல்களை எல்லாம் கொடுப்பார்கள். அதையும் முழுதாக நம்ப முடியாது!
ஓ. நிஜமாகவா. ஆமாம் நல்ல இசை அமைப்பாளர் வி எஸ் நரசிம்மன்.
நீக்குஇருட்டடிப்பு செய்து விட்டார்கள்.
வி எஸ் நரசிம்மன் என்று குறிப்பக இல்லை, இவர்கள் நினைப்பவர்கள்தான் இசை அமைப்பாளர்கள் என்று போட்டு விடுவார்கள். உதாரணமாக வேதம் புதிது பாடல்களை, ஆயிரம் பூக்கள் மலரட்டும் பாடல்களை எல்லாம் இளையராஜாவில் சேர்த்து விடுவார்கள்!சந்திரபோஸ் பாடல்களையும் அப்படியே!
நீக்கு//நல்ல இசை அமைப்பாளர் வி எஸ் நரசிம்மன்.
நீக்குஇருட்டடிப்பு செய்து விட்டார்கள்.// வி. எஸ். நரசிம்மன் இசையில் கல்யாண அகதிகள் படத்திலிருந்து "வரவேண்டும் பெண்ணே வரவேண்டும்" என்ற பாடலை கேட்டிருந்தேன் ஸ்ரீராம்,ஞாபகம் இருக்கிறதா?
ஓ... சுத்தமாக மறந்து விட்டது!
நீக்குமணியோசையும் கை வளையோசையும்
பதிலளிநீக்குஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் /////பாடல் வரிகள் அலங்காரம் பெறுவது இசைப்பவரின்
குரல் அழகால் தான்.
ஆம். அம்மா. அந்தக் குரல் என்னை மயக்குகிறது.
நீக்குபூச்சி என்றால் பூச்சி பெரியது. பொட்டு என்றால்
பதிலளிநீக்குசிறியது BUG என்று வைத்துக் கொள்ளலாமா?
லாமே... நீங்கள் சொன்னால் சரிதான்!
நீக்கு:))
லாம் லாம்;0)
பதிலளிநீக்கு:>))
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். பாடல்களை கேட்டுவிட்டு சொல்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் பானு அக்கா.. வாங்க... கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்.
நீக்குரேடியோவில் பாடல் ஒலிபரப்பும் பொழுது பாடலை பாடியவர்கள், எழுதியவர், இசையமைப்பாளர் போன்ற எல்லோருடைய பெயர்களையும் அறிவிப்பார்கள். தொலைகாட்சியில் எதுவும் கிடையாது. அதுமட்டுமல்ல, முன்பெல்லாம் திரைப்படங்களில் டைட்டில் கார்டு ஆரம்பத்தில் போடுவாரகள். இப்போது படம் முடிந்துதான் டைட்டில் கார்டு வருகிறது. எல்லோரும் அரங்கை விட்டு வெளியேறுவது, நான் மட்டும் பெயர்களை படித்துக் கொண்டு நிற்பேன்.
பதிலளிநீக்குஆம். கடைசியில் டைட்டில் கார்ட் போடுவது வீண்வேலை!
நீக்குதொலைக்காட்சிகளில் பாடல்காட்சிகள் மட்டும் தனியாகக் காட்டும்போது (உதாரணமாக ரங்கோலி போன்ற நிகழ்ச்சிகளில்) ஒரு ஓரத்தில் பாடலாசிரியர், இசை அமைத்தவர், பாடியவர்கள் பெயரை இன்னமும் போட்டுக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாய்ப் பொதிகை/மக்கள் இன்னும் ஒரு சில தொலைக்காட்சி சானல்களில் மட்டும்.
நீக்குஈத் பெருநாள் வாழ்த்துகள்! அட்சய திருதியை வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅதே.. அதே...
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க...
நீக்குஇரண்டு பாடல்களும் கேட்ட நினைவு இல்லை. இப்போதுதான் கேட்டேன்.
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது.
நன்றி.
நீக்குஇனிய பாடல்கள்... பாடல் பற்றிய விவரங்களை தேடிப் பார்த்து பதிவு செய்வது, பதிவு எழுதுவதை விட நேரமாகும்...
பதிலளிநீக்குஉண்மைதான். அதுவும் விவரங்கள் சரியாய்க் கிடைக்கவில்லை என்றால் சிரமம்தான்.
நீக்குசிறப்பான பாடல்கள் ஜி
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் எங்கெங்கும் சூழ்க...
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன் மேடம். வாங்க...
நீக்குமுதல் பாடல் கேட்டிருக்கிறேன். இரண்டாவது பாடலை இப்போது தான் கேட்கிறேன். குரல் எஸ்.பி.பி போலவே இல்லை.
பதிலளிநீக்குஅவரே... அவரே...
நீக்குவழக்கம் போல இரண்டாவது பாடல் இனிமை..
பதிலளிநீக்குநன்றி துரை செல்வராஜூ ஸார்.
நீக்குபாடல்கள் கேட்டிருக்கிறேன் அதிகம் இல்லை என்றாலும்...இரண்டாவது பாடல் அழகான பாடல்...எஸ்பிபி வாய்ஸ் வாவ்!
பதிலளிநீக்குகீதா
முதல் பாடலும் அருமை ஸ்ரீராம்..இரண்டுமே நல்ல பாடல்கள்.. கேட்டிருக்கிறேன் !!!
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குஇரு பாடல்களுமே இலங்கை வானொலியில் கேட்டு ரசித்திருக்கிறேன் ஸ்ரீராம்ஜி.
பதிலளிநீக்குஅருமையான பாடல்கள்
துளசிதரன்
நன்றி துளஸிஜி.
நீக்குபாடல்களை இனிமேல்தான் கேட்கணும். மற்றபடி படமே புதிது தான். பாடல்கள் வானொலி தயவிலோ/தொலைக்காட்சி தயவிலோ கேட்டிருந்தால் உண்டு.
பதிலளிநீக்குகேட்டிருப்பீர்கள். நன்றி கீதா அக்கா.
நீக்குஇரண்டு பாடல்களும் கேட்ட நினைவில் இல்லை. கொஞ்சம் கேட்டேன் - கேட்ட நினைவே இல்லை! கேட்கவில்லை என்றே தோன்றுகிறது.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஸ்ரீராம்,என் விருப்ப பாடல் 'ஒரு தரம் ஒரே தரம்.. ' போடுங்களேன். பாட்டின் பெயர் சொல்லுங்கள் என்கிறீர்களா? பாட்டின் பெயரே அதுதான், சுமதி என் சுந்தரி படத்தில் 'ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம்?..'பாடல்.
பதிலளிநீக்குஓகே...
நீக்குஇந்த இரண்டு பாடல்களையும் இப்போதுதான் முதன்முதலில் கேட்கின்றேன். பாடல் ஆசிரியர்களுக்கான உரிய அங்கீகாரமும் அடையாளப்படுத்துதலும் குறைவே. பாடல் வரிகளில் கவித்துவம் சிறப்பு.பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்குபாடல்களைக் கேட்ட மாதிரித் தெரியவில்லை..இப்போதுதான் கேட்கிறேன்..இசைக்காக வார்த்தைகளைக் கோர்த்தது மாதிரிப் படுது..
பதிலளிநீக்குஇனிய பாடல்கள்
பதிலளிநீக்கு5 1/2 ஆகியும் சனிக்கிழமை பதிவு வரலையே
பதிலளிநீக்குI gave publish command last night itself. The post is not found in scheduled area and also draft area. I do not know what happened.
நீக்குஉங்களுடைய மெயில் செக் பண்ணுங்க. Content Policy Violation என தகவல் வந்திருக்கலாம். என்னுடைய இன்றைய பதிவிற்கும் இப்படி ஒரு செய்தி வந்ததோடு பதிவு நீக்கப்பட்டு இருந்தது. மீண்டும் பதிவு செய்திருக்கிறேன்.
நீக்குCheck your spam folder of mail too!
ஆம் வெங்கட். உங்கள் பின்னூட்டத்தைத் தொடர்ந்து இப்போதுதான் இரண்டு மெயில்கள் வந்துள்ளன. ஒன்று இன்றைய பதிவு அழிக்கப்பட்டது என்று. இன்னொன்று "பயம் எதற்கு? தைரியமா இருங்க.. கொரோனா குறித்த அச்சம் தவிர்ப்போம்" என்கிற பதிவு அழிக்கப்பட்டது என்று...
நீக்குபிளாக்கரிடமிருந்து அந்த இரண்டு பதிவுகளும் "has beeb reinstated" என்று இப்போது மெயில் வந்திருக்கிறது!
நீக்குsome error in blogger. Please bear with us.
பதிலளிநீக்குரேவதிக்கும் அவங்க ப்ளாகிற்குப் போக முடியலை என்றார். ஆகவே ப்ளாகரில் தான் பிரச்னை. என்னோட ப்ளாகைத் திறக்க வருது. கருத்துகளுக்கு பதில் சொல்லிப் பார்க்கணும். பின்னர் வரேன், இன்றைய பதிவு வெளி வந்ததும்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு