இது எங்கள் பாட்டி எங்களுக்கு அன்பாக செய்து தரும் ரெசிபி. இன்று எங்கள் வீட்டில் செய்தோம். செய்முறையை இங்கே பகிர்கின்றேன்.
தேவையான பொருட்கள்:
பிஞ்சு கத்திரிக்காய் - 1/2 kg.
தேங்காய் துருவல் - 1/2 தேங்காய்.
பூண்டு பல் -7
சோம்பு -2 டீ ஸ்பூன்.
செய்முறை:
பிஞ்சு கத்திரிக்காய்களை நறுக்கி பாத்திரத்தில் தண்ணீரில் போடவும்.
தேங்காய், பூண்டு மற்றும் சோம்பு சேர்த்து ஒன்றாக மை போல அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் 10 டீ ஸ்பூன் எண்ணெய் ( தாராளமாக) விட்டு நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.சிறிது நேரம் மூடி வைத்து காய் முக்கால்வாசி வெந்த பின் மீண்டும் மூடி வைக்கவும்.
"கத்திரிக்காய் நன்கு வெந்ததும் அரைத்த விழுதை அதில் ஊற்றி , நன்கு கிளறி மூடி வைக்கவும்.15 நிமிடங்களுக்கு பின், எண்ணை நன்கு வெளிவந்ததும் இறக்கி பரிமாறலாம்".
இந்த ரெசிபியில் , பூண்டு பற்கள் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
சாப்பாட்டிற்கும் பிசைந்து சாப்பிடலாம். சப்பத்திக்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.
( இது எங்கள் பாட்டியின் எண்ணெய் கத்திரிக்காய் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவர் செய்யும் ரெசிபியில் , கத்திரிக்காய் எண்ணெயில் மிதக்கும். அதிகம் எண்ணெய் சேர்க்காமல் செய்துள்ளேன்.சிலர் இதே ரெசிபியில் spices நிறைய சேர்ப்பதுண்டு. எங்களுக்கும் பிள்ளைகளுக்கும் மசாலா பிடிக்காது என்பதால் இவ்விதம் செய்து தருவார்.)
= = = =
காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குசெய்முறை முழுமையாக இல்லையே.... படத்தைச் சீக்கிரம் முடிக்கணும் என்பதற்காக டக் என்று கிளைமாக்ஸை நோக்கிச் சென்ற மாதிரி இருக்கிறதே..
கத்தரி கட் பண்ணி வைத்துள்ளது மிக அழகாக இருக்கிறது.
வாங்க நெல்லை. காலை வணக்கம். நீங்கள் சொன்னதும் மனானும் போய் அவர் அனுப்பிய மெயில் பார்த்தேன். இவ்வளவுதான் இருந்தது. வானம்பாடி வந்துதான் விளக்க வேண்டும்!
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.. வாங்க..
நீக்குஎண்ணெய் கத்தரிக்காய் கறி இப்படியும் செய்யலாமா? செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநோய் இல்லாத கிருமி இல்லாத
எதிர்காலம் வந்து விட இறைவன் அருளட்டும்.
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவருக்கும் நல்ல செய்திகளே கிடைத்து மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்கப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குஎண்ணெய்க் கத்திரிக்காய்னா கத்திரிக்காய் ஸ்டஃப் என நினைச்சிருந்தேன். இதுவுமா? ஆனால் இதில் அரைத்த விழுதைச் சேர்த்தது பற்றிக் குறிப்பிடலை. கத்திரிக்காய் நறுக்கினவற்றிற்கு விழுது அதிகமோ? நேற்று இரண்டு வேளையும் கத்திரிக்காய் தான். காலைக் கத்திரிக்காய்ப் பாரம்பரியக் கூட்டு+மோர்க்குழம்பு+ரசம். மாலை கத்திரி+உ.கி. சேர்த்துச் சப்பாத்திக்குக் கறி. இன்னமும் கத்திரிக்காய் 3 இருக்கு.
பதிலளிநீக்குஅன்பு கீதாமா,
நீக்குஇந்தக் கத்திரிக்காய் சாப்பிடவாவது
ஸ்ரீரங்கத்தில் வீடு வாங்கிக் கொண்டு வரப்போகிறேன்.:)
என் புக்ககத்தில் கத்திரிக்காய் பண்ணுவாங்க. ஆனால் ஸ்டஃப் கறி மட்டும். கத்திரிக்காய்ப் பிரியர்கள் இல்லை. இப்போ நம்ம ரங்க்ஸைக் கத்திரிக்காய்க் காதலராக மாற்றிய பெருமை எனக்கே எனக்கு! ஹிஹிஹி! முருங்கைக்காய்க் குழம்பு, கத்திரிக்காய் வதக்கல் நம்ம வீட்டிலே ரொம்பவே பிரபலம். வாங்க சீக்கிரமாய்! :)))))
நீக்கு😄😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
நீக்குமாமா மொத்தமாவே ஐந்து கத்தரிக்காய்தான் வாங்கினார் போலிருக்கே.
நீக்குகத்தரி உருளை சேர்த்தா? நல்லா இருக்குமா?
முருங்கை சாம்பார்... ம்ம்ம். எங்க வீட்டில் முருங்கைக்குத் தடா
//முருங்கை சாம்பார்... ம்ம்ம். எங்க வீட்டில் முருங்கைக்குத் தடா// முந்தானை முடிச்சா? ஹி ஹி
நீக்குJayakumar
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை, அரைக்கிலோ கத்திரிக்காய் கேட்டதுக்கு பழமுதிர்ச் சோலையில் கிட்டத்தட்ட எண்ணூறு கிராம் கொடுத்துட்டாங்க. நானும் யோசிச்சு யோசிச்சு ஒரு நாள் கத்திரி+வெங்காயம் போட்டுச் சப்பாத்திக்குக் கறி/கூட்டுனு பண்ணிட்டு, ஒரு நாள் கத்திரிக்காய் சாதம் பண்ணிட்டு (இதுக்கு 2 கத்திரிக்காயே அதிகம்) பின்னர் மிச்சம் இருந்ததை பர்த்தா பண்ணினால் தீர்ந்துடும்னு சொன்னால் நம்மவர் வேண்டாம்னுட்டார்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதான் க.கூ+மோ.கு. பண்ணிட்டு மிச்சத்தை உருளைக்கிழங்கோடு ராத்திரிச் சப்பாத்திக்குப் பண்ணினேன். என் அம்மா நாங்கல்லாம் குழந்தைங்களாய் இருக்கையிலேயே கத்திரி+உருளை+வெங்காயம் (அப்போல்லாம் சின்ன வெங்காயம்தான்) போட்டுக் கறி பண்ணுவார். அன்னிக்கு வத்தல் குழம்பு அல்லது கத்திரிக்காயே போட்டும் குழம்பு இருக்கும். கொட்டு ரசம்! எங்களுக்குப் பிடித்த காம்பினேஷன் இது. கத்திரியில் வெங்காயம் சேர்த்துப் பண்ணுவதை புக்ககத்தில் நான் தான் அறிமுகம் செய்தேன். மாமியாரெல்லாம் சிரிப்பாங்க சாப்பிட மாட்டாங்க. எல்லோரையும் சாப்பிட வேண்டாம்னும் சொல்லுவாங்க. ஆனால் யாரும் கேட்க மாட்டாங்க! மாமனார் ரசிச்சுச் சாப்பிடுவார்.
நீக்குநெல்லை! கத்திரி+உருளை நல்ல சேர்க்கை. எங்க பெண்ணும் பையரும் கொத்தவரை, அவரை, சாட்டைப்பயறு என்னும் பயத்தங்காய் இதிலெல்லாம் உ.கி. சேர்ப்பாங்க. இன்னும் ஒரு படி மேலே போய் பெண் வெண்டைக்காயோடு உ.கி. சேர்த்துப் பண்ணுவாள். நான் வெண்டைக்காயோடு, குடமிளகாய், தக்காளி சேர்த்துக் கறி சப்பாத்திக்குப் பண்ணுவேன். சாப்பிடலாம் வாங்க வலைப்பக்கம் செய்முறையும் பார்க்கலாம்.
அப்படித் தான் தக்காளியும். தக்காளிச் சாதம், தக்காளித் துவையல், கூட்டு, தொக்கு, ஊறுகாய்னு நான் பண்ணுவேன். அவங்களுக்குத் தெரியாது. தொடக்கூட யோசிப்பாங்க! தக்காளி புளிக்கும் என்பார்கள். பின்னாட்களில் அவங்களே பண்ணவும் ஆரம்பிச்சுட்டாங்க. கருவிலியில் கிராமத்தில் காய்கறி போட்டிருக்கும் வயலில் கூடை கூடையாய்த் தக்காளி காய்க்குமாம். கடைக்குப் போடுவார்கள் தான். என்றாலும் கொட்டவும் கொட்டி இருக்கோம். மாட்டுக்கு வைப்போம் என்பார்கள். தக்காளிப் பயன்பாடு அவ்வளவாத் தெரியாது.
நீக்குநன்றி..கத்தரில இவ்வளவு பண்ணலாமா... இங்கல்லாம் 10 ரூபாய்க்கு தக்காளி கிடைக்குது 2 மாசமா. அதுக்கு ஒரு மாதம் முன்பு கிலோ 60 ரூபாய்க்கும் போனது. நாங்க தக்காளி சாதம், தொக்கு, பச்சிடி (தக்காளியை வாணலில வதக்கி) என்றெல்லாம் சாப்பிடுவோம்.
நீக்குநீங்க சொல்லியிருப்பதுபோல கத்திரிக்காயையும் உருளையையும் சேர்த்துப் பார்க்கிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் வரிக்கத்தரிக்காய் வாங்கினேன். இன்று சமைத்தால் ஒரே கசப்பு!!!
நீக்குகத்தரிக்காய்ப் பொரிச்ச கூட்டையும், கத்தரிக்காய்ப் பொரிச்ச குழம்பையும் விட்டுட்டேனே நெல்லை! :)))))
நீக்கு@ஸ்ரீராம், வரிக்கத்தரிக்காய் சில சமயம் கசக்கத்தான் செய்யும். :(
கத்தரிக்காய் வற்றல் போட்டும் வைச்சுக்கலாம், சுட்டுத் துவையல், வதக்கித் துவையல் அரைக்கலாம். பஜ்ஜி போடலாம். மறந்துட்டேனே! இந்தக் கத்திரிக்காய் நிறைய இருந்ததில் ஒரு நாள் பஜ்ஜி போட்டு விநியோகமும் பண்ணினேன். :)))) கத்திரிக்காய்க்கு ஜே!
நீக்குகத்தரிக்காய் புளி கொத்சு, கத்திரி+வெங்காயம் போட்டு கொத்சு, சிதம்பரம் கொத்சு என எத்தனையோ இருக்கு நெல்லை.ஒவ்வொண்ணா நினைவில் வருது. :)
நீக்குஎல்லோரும் சொல்லியாச்சு.
பதிலளிநீக்குசெய்முறையிலயும் பாதி நிற்கிறது.
படமும் பாதியில்.
எல்லோருக்கும் பாண்டமிக் பதட்டம் மனத்தை ஆக்கிரமிக்கிறது.
அதுதான்.
வானம்பாடி வந்து பதில் சொல்வார்.
நல்ல செய்முறைதான்.
படங்கள் மிக அழகு. பூண்டு தான் என் அளவுக்கு
மீறி இருக்கிறது.
கத்திரிக்காய் நறுக்கிய விதம் அழகு.
பூண்டு வேண்டுமானால் போட்டுக்கலாம். நாங்க போடுவதில்லை. பொடி தூவிய கறி எனில் அதில் தேங்காய் கூட இருக்காது. மி.வ+கொ.வி+க.ப+பெருங்காயம் வறுத்துப் பொடி பண்ணிக் கடைசியில் மேலே தூவிட்டுக் கீழே இறக்குவோம்.சில கத்திரிக்காய்களுக்குக் கொஞ்சமானும் புளி ஜலம் தேவைப்படும்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்...
அன்பின் வணக்கம்.
நீக்குஸூப்பர் ரெஸிப்பி.
பதிலளிநீக்குவிரைவாக ஒரு எளிய செய்முறை...
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம். வாழ்க வளமுடன்!
நீக்குஎண்ணெய் கத்திரிக்காய் கறி நன்றாக இருக்கிறது. செய்முறை குறிப்பில்
பதிலளிநீக்குதேங்காய் கலவை போடுவது மட்டும் இடம்பெறவில்லை. ஆனால் படம் இருக்கே கடைசியில்.
இது எண்ணெய் கத்தரிக்காயும் அல்ல baingan bhartaவும் அல்ல கத்தரிக்காயில் ஏதோ ஒரு வகையான பாதார்த்தம் செய்து அதற்கு எண்ணெய் கத்தரிகாய் என்று பெயறை வைத்துவிட்டார் போல
பதிலளிநீக்குவானம் பாடி நல்ல ரெசிப்பி. ஆனால் இதை எண்ணைக் கத்தரிக்காய்?
பதிலளிநீக்குபாண்டிச்சேரியில் இருந்தப்ப தோழி நான் எங்கள் வீட்டில் செய்யும் முறையில் எண்ணைக்கத்தரிக்காய் செய்தப்ப நாங்க கத்தரிக்காய்யை இப்படிச் செய்வோம் என்று இரு முறையில் செய்தார். கொஞ்சம் கத்தரிக்காயை இந்த அரைப்பதில் காரம் மஞ்சள் பொடியும் சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்காமல் கத்தரிக்காய்க்குள் ஸ்டஃப் செய்து வதக்கி, எண்ணை தெரியும்... மற்றொன்று இப்பொது நீங்கள் செய்திருப்பது போல். அவர் செய்திருந்தது இன்னும் கொஞ்சம் ட்ரையாக எண்னையுடன் இருந்தது. அவரிடம் தெரிந்து கொண்டேன்.
ஒரு வேளை நீங்கள் அவசரத்தில் சிலதை விட்டுவிட்டீங்கன்னு நினைக்கிறேன். எனக்கும் திங்க பதிவு எழுதும் போது நேர்வதுண்டு.
பதிவில் விடு பட்டிருந்தாலும் புரிந்து கொள்ள முடிந்தது.
கீதா
அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள் ! தொற்று குறைந்து மக்கள் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குஅன்று ரெசிபி எழுதி அனுப்பும் பொழுது சில வரிகள் copy - paste செய்யாமல் விட்டுள்ளேன். தவறுக்கு மன்னிக்கவும்.பொறுமையாய் படித்து சொன்ன நண்பர்களுக்கும் , தோழிகளுக்கும், நன்றி. "கத்திரிக்காய் நன்கு வெந்ததும் அரைத்த விதை அதில் ஊற்றி , நன்கு கிளறி மூடி வைக்கவும்.15 நிமிடங்களுக்கு பின், என்னை நன்கு வெளிவந்ததும் இறக்கி பரிமாறலாம்".
தங்கள் அனைவரையும் சிரமப்படுத்தியதற்கு வருந்துகிறேன். இந்த ரெசிபியில் , பூண்டு பற்கள் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
விவரங்களை பதிவில் சேர்த்துவிட்டேன்.
நீக்குவானம்பாடி/காயத்ரி இப்ப ஓகே..கரெக்டா வந்துருக்கு. பாட்டி வாவ்! கடைசிக் குறிப்பு ப்ராக்கெட்டில் இருப்பது.
நீக்குகாலையிலேயே புரிந்துவிட்டது. இங்கு நட்புகள் எழுத்தின் மூலம் உங்களைத் தெரிந்தவர்கள், பலரும் அடுக்களைக் கில்லாடிகள் என்பதால் புரிந்து கொள்வார்கள். ஆனால் அமைதியாக வாசித்துச் செல்பவர்கள், அடுக்களையில் முதல் அடி எடுத்து வைப்பவர்களுக்குப் புரிய வேண்டுமே அதனாலதான்.
எனக்கும் எழுதும் போது நிறைய விடுபடும், சில சமயம் அவசரத்தில் நேரமின்மையால் வாசிக்காமல் அனுப்பிவிடுவேன் அப்புறம் அடடா முக்கியமானது சொல்ல விட்டுப் போச்சே என்று அதுவும் இப்ப கொலாஜ் பெட்டியில் எழுதுவதால் அதில் இடையில் எடிட் செய்து அடிக்க முடியாது. அது மீண்டும் முதலிலிருந்து செய்ய வேண்டும் என்பதால் விடுபட்டதைப் பெட்டிக்கு வெளியே பதிவில் சேர்த்து எபி க்கு மீண்டும் அனுப்பியய்துண்டு...
நன்றி வானம்பாடி காயத்ரி
கீதா
"எண்ணெய்" type- mistake
பதிலளிநீக்குNow-a-days, getting more typing mistakes. My key board not co-operating with me.sorry friends.
பதிலளிநீக்குஇது எங்கள் பாட்டியின் எண்ணெய் கத்திரிக்காய் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவர் செய்யும் ரெசிபியில் , கத்திரிக்காய் எண்ணெயில் மிதக்கும். அதிகம் எண்ணெய் சேர்க்காமல் செய்துள்ளேன்.சிலர் இதே ரெசிபியில் spices நிறைய சேர்ப்பதுண்டு. எங்களுக்கும் பிள்ளைகளுக்கும் மசாலா பிடிக்காது என்பதால் இவ்விதம் செய்து தருவார்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஎன் பாட்டியின் நினைவாக ஒரு கவிதையும் இணைத்துள்ளேன்.
https://gayathrichandrashekar.blogspot.com/2006/01/saraswathi.html
படித்து நெகிழ்ந்தேன்.
நீக்குகாயத்ரி உங்க கவிதை ஆஹா ரொம்ப ரசித்தேன், மனம் நெகிழ்ந்துவிட்டது ஏனென்றால் நானும் பாட்டியும் இப்படித்தான் என் பாட்டியின் நினைவு வந்தது. என் இரு பாட்டிகளிடமும் ஒவ்வொரு விதமான வாழ்க்கைப்பாடம் கற்றுக் கொண்டேன். அருமை கவிதை!
நீக்குகீதா
மிக அருமையான உருக்கமான கவிதை. எனக்கும் எங்க அம்மாவோட அம்மா நினைவில் வந்தார். அப்பாவின் அம்மாவைப் பார்க்கவோ/பழகவோ கொடுத்து வைக்கலை. பாட்டிக்கு நல்லதொரு அஞ்சலி.
நீக்குநீங்க சொன்ன மாதிரி பண்ணினேன். எல்லாம் முடித்தவுடன் ஏதோ குறைவது போல இருந்தது. அப்புறம் பார்த்தால் அரைத்த விழுது அப்படியே இருக்கிறது! எப்போ போடவேண்டும்னு சொல்லவே இல்லையே!
பதிலளிநீக்குஅடடே... வாங்க bandhu ஸார்...
நீக்குஇது கொஞ்சம் புதுசு .நான் சோம்பு சேர்ப்பதில்லை ஆனால் இது கூட வெங்காயம் சேர்ப்பேன் .
பதிலளிநீக்குசோம்பு சேர்த்து செய்து பார்க்கிறேன் .
காரத்துக்கு ஒன்றும் வேண்டாமா!...
பதிலளிநீக்குஓ.. இது புதுவிதம்...
ஆனால் சோம்பு தவிர்த்து விட்டு பச்சை மிளகாயும் சாம்பார் மசாலாவும் கொஞ்சம் தயிரும் சேர்த்துக் கிளறி தாளிதம் செய்வேன்..
உப்பும், மிளகாய்த்தூளும் தேவையான அளவு.
நீக்குஅருமை
பதிலளிநீக்குசோம்பு, பூண்டு, தேங்காய் விழுது சேர்த்து கத்திரிக்காய் எண்ணெய் கறி - வித்தியாசமாக இருக்கிறது. செய்து பார்க்கிறேன் - தில்லி சென்ற பிறகு! :)
பதிலளிநீக்குஅனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள் ! தொற்று குறைந்து மக்கள் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். ரெசிபியில் நிறைய பிழை இருப்பினும், மன்னித்து, படித்து கருத்து கூறியமைக்கு அனைவருக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு