வெள்ளி, 1 அக்டோபர், 2021

வெள்ளி வீடியோ : காவிரி ஆற்றங்கரையினிலே காற்றினில் ஆடும் பூங்கொடியே

 மலையோரம்......   மலையோரம்...

1988 ல் வெளியான ஒருவர் வாழும் ஆலயம் இளையராஜா இசையில் ஒரு இசைமழை.  நீ பௌர்ணமி (சிம்மேந்திரமத்திமம்),  வானின் தேவி வருக (அமிர்தவர்ஷினி), பல்லவியே சரணம் (கமாஸ்) என்று எல்லாப் பாடல்களும் சிறப்புற அமைந்த படம்.

ஷண்முகப்ரியன் இயக்கத்தில் கவிஞர் பொன்னடியான் பாடல்கள் எழுதி இருக்கிறார்.

சிவகுமார், பிரபு, ரெஹ்மான், ராது, அம்பிகா நடித்துள்ள இந்தப் படத்தில்தான் ஆனந்தராஜ் முதலில் அறிமுகமானாராம்.

இந்தப் படத்திலிருந்து மலையோரம் மயிலே என்னும் மலேசியா வாசுதேவன், சித்ரா பாடிய பாடல் இன்று முதலாவது மலையோரம் பாடல்!  இந்தப் பாடல் கல்யாணி ராகம் என்கிறார் ரசிகர் ஒருவர்.

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்ட சொல்லித் தந்ததாரு
விளையாட்ட சொல்லித் தந்ததாரு

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்ட சொல்லித் தந்ததாரு
ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

பூமரக் காத்து சாமரந்தான் வீசுது இங்கே வாசன தான்
பூமரக் காத்து சாமரந்தான் வீசுது இங்கே வாசன தான்
மானிறப் பூவே யோசனை ஏனோ மாமனைத் தானே சேரணும் நீயே


காவிரி ஆற்றங்கரையினிலே காற்றினில் ஆடும் பூங்கொடியே
காவிரி ஆற்றங்கரையினிலே காற்றினில் ஆடும் பூங்கொடியே
ஆடிடும் பூவும் ஆசையைத் தானே கூறுது இங்கே மாமலைத் தேனே
ஆ ஆ ஆ ஆ ....


- ஆர் செல்வராஜின் கதையை கே ரெங்கராஜ் இயக்க, மோகன் நதியா நடித்து 1987 இல் வெளியான படம் 'பாடு நிலாவே'.  பாடல்களை வாலி எழுத, இசை இளையராஜா.

பாடுங்கள் பாட்டு பாடுங்கள், வா வெளியே இளம் பூங்குயிலே போன்ற பாடல்கள் சுமார் ரகம்.  சித்திரை மாதத்து நிலவு பாடலில் சரணங்கள் கேட்கக்கூடியதாய் இருக்கும். 

படத்தில் ஸ்பெஷல் பாடல் மலையோரம் வீசும் காத்து...  இன்றைய இரண்டாவது மலையோரம் பாடல்!

மெலிதான சோகத்தைக் காட்டும் பாடலின் சுப்ஹசல், வேறென்ன எஸ் பி பி தான்.

மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு 
கேட்குதா கேட்குதா   
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா 
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா 
என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா  
மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு 
கேட்குதா கேட்குதா  

வான் பறந்த தேன்சிட்டு நான் புடிக்க வாராதா 
கள்ளிருக்கும் ரோசாப்பூ கைகலக்க கூடாதா 
ராபொழுது ஆனா உன் ராகங்கள் தானா 
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா  
உள் மூச்சு வாங்கினேனே முள்மீது தூங்கினேனே 
இல்லாத பாரம் எல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே 
நிலாவ நாளும் தேடும் வானம் நான்

குத்தாலத்து தேனருவி சித்தாடதான் கட்டாதா 
சித்தாடைய கட்டியே கையில் வந்து கிட்டாதா  
ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட 
ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட 
இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க 
எங்கேயோ நீ இருந்து என் மீது போர் தொடுக்க 
கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்

40 கருத்துகள்:

  1. இனிய வெள்ளி காலை வணக்கம் ஸ்ரீராம்.
    அனைவரும் என்றும் நலமுடன் இருக்க இறைவன் துணை.

    பதிலளிநீக்கு
  2. மலைகள் பாட்டுகள் இரண்டுமே
    மிகப் பிரபலம். தொலைக்காட்சியிலும், வானொலியிலும் அடிக்கடி
    பார்த்த கேட்ட பாடல்கள்.

    சித்ராவும் வாசுதேவனும் இழைய இழையப்
    பாடி இருப்பார்கள். மலையோரம் மயிலேயில் தாளக்கட்டும்
    மிகச் சிறப்பு..
    சித்ராவின் குரல் குழைவும் மலேசியாவின் கம்பீரமும்
    பிரபுவின் பழக்கப் பட்ட நடன அசைவுகளும்
    நிறையப்
    படங்களில் பார்த்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா... அப்போதெல்லாம் அடிக்கடி கேட்ட பாடல்கள் இவை இரண்டுமே!

      நீக்கு
  3. மீண்டும் இந்த மலையோரம் பாடலைக் கேட்டதில் மகிழ்ச்சி.
    நதியா மோகன் ஜோடி நல்ல பொருத்தம்.
    வாலியின் கவிதை வரிகள் பிரமாதம்.
    எப்படித்தான் இவர்கள் எல்லாம் வார்த்தைகளைக் கோர்த்தார்களோ!!!

    இது போல
    மென் சோகப்பாடல்கள் மோகனுக்கும், பாலு சாருக்கும் எவ்வளவு
    அமைந்தன என்று யோசித்தால்
    நிறைய நினைவுக்கு வருகின்றன.

    மௌனராகம் படப் பாடலும் ஒன்று.
    அந்த மனிதரின் குரலுக்கு ஈடு இணை இல்லை.
    குரல் நடிக்கும் என்றால் அவர் குரல் தான்.
    மிக நன்றி ஸ்ரீராம். நல்ல பாடல்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா..  இந்தப் பாடலில் ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் பல்லவி தொடங்கும் முன்னர் ஒரு தாளம் ஒலிக்கும்.  அதை ரசிப்பேன்..

      நீக்கு
    2. தலையை ஆட்டி ரசிப்பது என்ற வகையைச் சேர்ந்த
      தாளம் நிறைந்த பாடல்.:)

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலவி ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. பாடல்கள் இரண்டுமே அருமை. ஶ்ரீராமே முதல் படத்தின் பாடல்களை ராகப்படி வரிசைப்படுத்தி விட்டார். இன்னைக்கு தி/கீதா வரமாட்டாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் படுத்தலை.  விக்கியிலேயே படுத்தி இருந்தது!!!    தி. கீதாவும் வந்து விட்டார்.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  8. அருமையான பாடல்கள்...

    இரண்டாவது பாடல் - ஆகா...!
    (விவரிப்புக்கு "கே.வா. போ.க." அனுப்பணும்...!)

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய இரு பாடல்களுமே அடிக்கடி கேட்டு ரசித்த பாடல். எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களும் கூட. பாடல்களையும், ராகங்களையும், அதைப்பற்றிய விபரமான செய்திகளையும் பகிர்ந்தது அருமை. மீண்டும் ஒருமுறை பிறகு மதியத்தில் நிதானமாக பாடல்களை கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. ஸ்‌ரீராம் அருமையான பாடல்கள் ஸ்ரீராம். நிறைய கேட்டிருக்கிறேன்.

    மலேஷியாவின் வாய்ஸ் ஃப்ரெஷ் ஆக இருக்கு இதில். என்ன வாய்ஸ் அவருக்கு...

    முதல் பாடல் கல்யாணி என்பது நன்றாகவே தெரிகிறது ஸ்ரீராம். சித்ரா கமகம் கொடுத்துப் பாடும் சொல்லித் தந்ததாரு....இந்த வரியில் நன்றாகத் தெரிகிறது. இன்டெர்லூடிலும் கல்யாணி நன்றாகத் தெரிகிறது...

    ராஜாவின் கல்யாணியை எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக...

    சரணத்திலும் நன்றாகத் தெரியும் பாருங்க...

    அந்த அருவி என்ன அழகு!!!

    பல வருஷமாச்சு கேட்டு இன்றுதான் மீண்டும் கேட்பது. படம் தெரியாது.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. நீ பௌர்ணமி (சிம்மேந்திரமத்திமம்), வானின் தேவி வருக (அமிர்தவர்ஷினி), பல்லவியே சரணம் (கமாஸ்) //

    இவையும் கேட்டிருக்கிறேன் நல்ல பாடல்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. மலையோரம் வீசும் காற்று எஸ்பிபி செம...தலைவர் வாய்ஸில் கடவுள் எல்லா உணர்வுகளையும் குழைத்து அப்பிவிட்டார் பிறக்கும் போதே. அப்பப்ப சிச்சுவேஷனுக்கு ஏத்தாப்ல பாடும் நிலா அதை எடுத்து பூசுவார்...அவர் பேசறதே கூட மேக்னட்டிக் வாய்ஸ். சில பாட்டு ப்ரோக்ராம் ல வந்திருக்காரே ஜட்ஜா...அவருக்காகவே அந்த வாய்ஸ்காவே யுட்யூபில் அதைப் பார்ப்பதுண்டு.

    செம பாட்டு...

    இந்தப் பாட்டு கீரவாணி ராகம்.

    நீ பௌர்ணமி சிம்மேந்திரமத்யமம்....ரெண்டும் ம வை எடுத்தால் ஒரே போன்று இருக்கும் ம ஷிஃப்ட் தான் இந்த இரு ராகங்களையும் வேறுபடுத்துவது.

    ரெண்டு பாட்டையும் மிகவும் ரசித்தேன், ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  13. சக்கை வரிவடிவங்களாக இருப்பவை இசை ஞானியின் இசையால் தானஉயிர் பெறுகின்றன என்பதற்கு இவையே சாட்சி..

    பதிலளிநீக்கு
  14. முதல் பாடல் அதிகம் கேட்டதில்லை. இரண்டாவது பாடல் நிறைய கேட்டிருக்கிறேன். திருச்சி டவுன் பஸ்ஸில் போவது போன்ற ஃபீலிங்க். முன்பெல்லாம் திருச்சி டவுன் பஸ்களில் சினிமா பாடல்கள் அலற விடுவார்கள். இப்போதும் அந்த அவஸ்தை இருக்கிறதா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் மதுரை பஸ்களில் அழகான, தரமான ஸ்பீக்கர் இருக்கும். அழகாக உறுத்தாமல் கேட்கும்.

      நீக்கு
  15. இன்றைய பதிவின் பாடல்கள் இரண்டுமே மிகவும் பிடித்தமானவை..

    பதிலளிநீக்கு
  16. இப்போது கேட்ட போது இரு பாடல்களுமே கேட்ட நினைவுள்ளது. இனிமையான பாடல்கள். அதுவும் இரண்டாவது பாட்டு அருமை. தமிழ்நாட்டில் இருந்தவரை சிலோன் ரேடியோ உதவியது படங்களும் நிறைய பார்த்திருக்கிறேன். கேரளம் சென்றபின் தமிழ்ப்பாடல்கள், தமிழ்சினிமா பார்க்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  17. இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்டவை. இங்கு வந்த பின் அதிகம் கேட்கவில்லை.
    இப்போது கேட்டு விட்டேன்.

    மலேசியா வாசுதேவன் பாடல்களில் எனக்கு பிடித்தபாடல்கள் நிறைய இருக்கிறது அதில் இது ஒன்று.

    மெல்லிய சோகத்தோடு இழைந்து வரும் எஸ்பிபி பாடிய இந்த பாடலும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  18. ரெண்டாவது நல்லாருக்கு. வாலியின் கடைசி வரிகள் தவிதவிக்க, எஸ்பிபி இழைந்து இழைந்து செல்கிறார்..

    பதிலளிநீக்கு
  19. இரண்டு மலையோரம் பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. கேட்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  20. 'மலையோரம் மயிலே ...' கேட்டதில்லை.

    எஸ்பிபி கேட்டிருக்கிறேன் சூப்பர்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!