திங்கள், 6 டிசம்பர், 2021

'திங்க'க்கிழமை :  மோமோஸ் - ராதா சுரேஷ் ரெஸிப்பி 

 

சுவையான வெஜிடபுள் மோமோஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். 

வெ மோமோஸ் செய்வதில், படிப்படியாக நான்கு நிலைகள் உண்டு. 

1) மோமோஸ் செய்ய மாவு தயாரித்தல். 

2) உள்ளே அடைக்க காய்கறி கலவை செய்வது. 

3) மோமோஸ் உருவாக்குதல். 

4) வெ மோமோஸ் - வேகவைத்தல். 

= = = =

1) மோமோஸ் மாவு தயாரித்தல். 

தேவையான பொருட்கள் :

ஒரு கப் (ஆல் பர்ப்பஸ்) மைதா மாவு அல்லது கோதுமை மாவு. 

1/4 டீ ஸ்பூன் உப்பு. 

1/2 டீ ஸ்பூன் நல்லெண்ணை. 

மேற்கண்ட எல்லாவற்றையும் ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு, நன்றாகக் கலந்து, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.  

எச்சரிக்கை : மிகவும் இளகிய நிலையில் மாவு இருக்கக்கூடாது. அந்த மாவில் மோமோஸ் வடிவம் எடுப்பது கடினம். 

இப்படி பிசையப்பட்ட மாவின் மீது எண்ணெய் தடவி, மாவை அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.

= = = 

2) காய்கறி கலவை தயார் செய்தல்: 

அவசியம் வேண்டியவை :

சிறிய வெங்காயம். இஞ்சி, பச்சைமிளகாய் 

வதக்குவதற்கு எண்ணெய். 

பெரும்பாலும் உபயோகப்படுத்துவது :

முட்டைகோஸ் (சைனா முட்டைகோஸ் எனப்படும் சிறிய வகை மு கோ கிடைத்தால் நல்லது )

கேரட் 

                                             

                                             

சோயா சாஸ் : 1 தேக்கரண்டி 

சில்லி சாஸ் : 1 தேக்கரண்டி. 

மிளகு. 1/2 தேக்கரண்டி 

உப்பு : தேவையான அளவு (ருசிக்கக்கேற்ப) 

வேண்டுமானால் -- --

பூண்டு 

பீன்ஸ் 

குடைமிளகாய். 

காளான் 

செய்முறை : 

வெங்காயத்தை உரித்து, சிறு துண்டுகளாக வெட்டி (finely chopped) தனியே வைத்துக்கொள்ளவும். 

பச்சைமிளகாய் நறுக்கி தனியே வைத்துக்கொள்ளவும். 

மற்ற காய்களை, அதே போன்று fine chopping (சிறு துண்டுகள்) செய்து தனியே வைத்துக்கொள்ளவும். 

                                      

                                      

(நறுக்கப்பட்ட காய்கறிகள் எல்லாம் சேர்ந்து 2 கப் அளவு இருக்கலாம்) 

முதலில், இரும்புச் சட்டியில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும், நறுக்கப்பட்ட இஞ்சி பச்சை மிளகாயை எண்ணெயில் இட்டு வதக்கவும். (பூண்டு சேர்ப்பவர்கள், இந்த கட்டத்தில், நறுக்கப்பட்ட பூண்டு சேர்க்கலாம்.) உடனே நறுக்கப்பட்ட வெங்காயத்தை அதிலிட்டு பொன்னிறமாக வதக்கவும். 

அதன் பிறகு, மற்ற காய்கறி கலவையையும் வெங்காயத்துடன் சேர்த்து நன்கு வதக்கவும். 

காய்கறிகள் வதங்க இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் ஆகலாம். 

சோயா சாஸ், சில்லி சாஸ் இரண்டையும் இந்தக் கலவையுடன் சேர்த்துக் கிளறவும். 

மிளகு & உப்பு சேர்த்து கலக்கவும்.  

வெங்காயத்தழை / கொத்தமல்லித் தழை சேர்த்து கலக்கவும். 

பிறகு இந்தக் காய்கறி கலவையை அடுப்பிலிருந்து இறக்கி, ஆற விடவும். 

= = = =

 3) மோமோஸ் உருவாக்கல் :

பிசையப்பட்ட சப்பாத்தி மாவை, மூன்று அங்குல விட்டமுள்ள சப்பாத்திகளாக இடவும். 

சப்பாத்தியின் நடுவில் ஆறிய காய்கறி கலவையை கொஞ்சம் வைத்து, கொழுக்கட்டை மடிப்பதைப்போல மடிக்கவும். 

இப்படி செய்யப்பட்ட கொழுக்கட்டைகளை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக வைத்துக்கொள்ளவும். குக்கரில் இவற்றை வேக வைக்கும் வரையிலும், ஈரத்துணியால் மூடி வைப்பது நல்லது. 

                                     

= = = =

4) மோமோஸ் வேக வைத்தல்.

மோமோஸ் எல்லாவற்றையும், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் எண்ணெய் தடவப்பட்ட இட்லி குக்கர் தட்டுகளில் அடுக்கி, இட்லி போல வேக வைத்து எடுக்கவும். மோமோஸ் வேகும் நேரம், அதன் அளவு மற்றும் சப்பாத்தி எவ்வளவு தடிமனாக செய்யப்பட்டது என்பதைப் பொருத்தது. 

                                         

சரியாக வெந்த மோமோஸ் பார்த்தால், கண்ணாடி போல உள்ளே இருக்கும் காய்கறி தெரியும். தொட்டால் மேல் மாவு கைகளில் ஒட்டாது. 

செய்யப்பட்ட மோமோஸ் - தக்காளி + மிளகாய் சாஸ் அல்லது மிளகாய் சாஸ் இவற்றுடனோ அல்லது மிளகாய் பூண்டு சட்னியுடனோ சாப்பிடலாம். = = = = = =
பி கு 1 :
திருமதி ராதா சுரேஷ் ஆங்கிலத்தில் கூறிய செய்முறையை கஷ்டப்பட்டு முழி (மொழி) பெயர்த்துள்ளவர் : கௌதமன். 
மோமோஸ் என்பதை மொழி பெயர்த்து, காய்கறிக் கொழுக்கட்டை என்று போடலாமா என்று யோசித்தேன். ஆனால் மோமோஸ் என்ற பெயரே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன் !! 

பி கு 2: 
மேலே காணப்படுவது மோமோஸ் இனிப்பு கொழுக்கட்டை உருவம். 
மோமோஸ் கீழ்க்கண்ட வடிவிலும் இருக்கலாம். (காரக் கொழுக்கட்டை வடிவம்.) எந்த வடிவம் உங்களுக்கு சுலபமாக வருமோ அதைப் பின்பற்றலாம். = = = = =
 

115 கருத்துகள்:

 1. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்..

  வாழ்க குறள் நெறி.

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 3. இன்றைய் பதிவினைத் தந்த
  ராதா சுரேஷ் அவர்களுக்கு நல்வரவு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரவேற்போம்.  ஏகப்பட்ட டிஷ்கள் விதம் விதமாக செய்வார்.  அடிக்கடி போட்டோ, விவரம் கேட்பேன்.  விட்டுப்போய்விடும்.

   நீக்கு
  2. மொழி பெயர்ப்புதான் கடினமான விஷயம்!

   நீக்கு
 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எல்லோரும் என்றும் ஆரோக்கியம்,அமைதியுடனும் இருக்க இறைவன் அருளட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா.. வணக்கம். நீங்களும் உங்கள் கண்களும் நலம்தானா?

   நீக்கு
  2. நானும் கண்களும் நலமே அன்பு ஸ்ரீராம்.

   மிக மிக நன்றி மா.
   கேஜி எஸ் அவர்களின் மகளா .
   நல் வாழ்த்துகள்.

   நீக்கு
 5. திருமதி ராதா சுரேஷ் ஆங்கிலத்தில் கூறிய செய்முறையை கஷ்டப்பட்டு முழி பெயர்த்துள்ள -

  !...

  பதிலளிநீக்கு
 6. மோமோஸ் இனிமையான உணவு.
  எல்லா இடங்களிலும் கிடைக்கும் எளிய உணவு.
  ஒருவரே 6 மோமோஸ் சாப்பிடலாம்.
  அருமையாக மொழி பெயர்த்துப் போட்டிருக்கும் கௌதமன் ஜிக்கும்,
  ஸ்ரீராமுக்கும் நன்றி.
  இந்த மோமோஸ் ஐ,
  ஜகார்த்தாவில் வரிசையாக வைத்துக் கொடுக்கும் அழகே தனி.

  சுலபமாக ஜீரணம் ஆகும்.
  படங்களும், செய்முறை விளக்கங்களும்
  மிக சிறப்பு.

  செய்முறையில் குறிப்பிட்டிருப்பதைப் போல
  டிரான்ஸ்பேரண்ட்டாக இருந்தால் தான் நன்றாக
  இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சாப்பிட்டதில்லை இதுவரை. ஒருமுறை முயற்சிக்க வேண்டும்.

   நீக்கு
  2. நானும் சாப்பிட்டதில்லை !!

   நீக்கு
 7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.
  ராதா சுரேஷ் எ.பி.க்கு புது வரவா? மொமோஸ் செய்முறை விளக்கமும்,படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானு அக்கா.. வணக்கம்.


   ராதா சுரேஷ் கே ஜி எஸ்ஸின் பெண்.

   நீக்கு
 8. மோமோஸ் செய்முறை மிகவும் நன்று. நான் இதுவரை சாப்பிட்டதில்லை.

  எண்ணெயில் பொரிக்கும் வகை கிடையாது. ஆரோக்கியம்தான்.

  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லை. நானும் சாப்பிட்டதில்லை. அதன் புகைப்படத்தை பார்த்தால் "என் நாக்கு பறக்குதே... என் ஆசை பெருகுதே..." என்று பாடத் தோன்றுகிறது!

   நீக்கு
  2. ரிஸ் எடுத்து ரஸ்க்! கிச்சன் களத்தில் குதித்திடுங்க ஸ்ரீராம்!

   நல்லாருக்கும். ஆனால் எல்லோருக்கும் பிடிக்குமா என்று தெரியவில்லை. உங்கள் வீட்டிலும்.

   கீதா

   நீக்கு
  3. நெல்லை! இந்த காளான் கீளான் சமாச்சாரமெல்லாம் எங்கள் வீட்டு சமையலறை பக்கமே வரக்கூடாரது
   அதை தவிர்த்து விட்டால் பாதகமில்லை தானே?

   கிட்டத்தட்ட காரடையான் நோன்புக்கு செய்கிற சமச்சாரம். இதுக்குப் ர்ருபோய் மோமோஸ்ன்லாம் பெயர் கொடுத்து மிரட்டினால் எப்படி?

   நீக்கு
  4. எங்க சமையல்ல காளானா? இன்னும் ஏகப்பட்ட காய்கறிகள் வரக்கூடாது.

   பிட்சாலதான் காளான்லாம் போடறான். அதுவும் சிலருக்கு அலர்ஜிக்குக் காரணம்னு டாக்டர்கள் சொல்றாங்க

   நீக்கு
  5. நாங்க காரடையான் நோன்புக்கு அரிசி+வெல்லம் சேர்த்துத் தேங்காய் போட்டு ஏலக்காய் சேர்த்து அடை மாதிரித் தட்டி ஆவியில் வேக வைப்போம். உப்புக் கொழுக்கட்டைக்குப் பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், பெருங்காயம், உப்புச் சேர்த்துத் தாளிதத்தில் கொட்டிக் கிளறிவிட்டு அதை அடை மாதிரித் தட்டுவோம். இந்த மாதிரி மோமோஸ் மாதிரி எல்லாம் பண்ணினதே இல்லை. நாங்க காளான் இருந்தால் அந்த உணவைத் தொடவே மாட்டோம். சோயா டோஃபூ எப்போவானும் மருமகள் வாங்குவாள். ஆனால் அதுவும் அவ்வளவு பிடித்தம் இல்லை.

   நீக்கு
 9. இந்த காய் விக்கிற விலையில் மோமோஸ் செய்து சாப்பிடமுடியுமா!

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருவேளை இன்னும் கொஞ்சநாள் போனா அப்பவே வாங்கி இருக்கலாமேன்னு தோன்றலாம்!

   நீக்கு
 10. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொற்றுப் பரவாமல் மக்களை எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றும்படிப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 11. உறவினர் ஒருவர் வீட்டுக் கல்யாண நிச்சயதார்த்தத்தில் காலை ஆகாரத்துக்கு இந்த மோமோஸ், கடலை மிட்டாய், சின்னதாகக் கட்லெட், கேழ்வரகுப் புட்டு(தித்திப்பு) எனக் கொடுத்தார்கள். அது சுமார் 3,4 வருடங்கள் முன்னர். வித்தியாசமான ஆகார வகை என்பதால் இன்னமும் நினைவில் இருக்கு. ஆனால் மோமோஸின் மேல் எனக்கு என்னமோ அவ்வளவு ஈர்ப்பு இல்லை. தொட்டுக்கொள்ளக் கெட்சப் கொடுத்திருந்த நினைவு. ஒரு நாள் செய்து பார்க்கணும், இங்கே போணி ஆகுதானு. ஆனால் மேலே சொன்ன சாஸ் வகையறாக்கள் இல்லை. இப்போதெல்லாம் ஜாம், கெட்சப் போன்றவை வாங்கியே பல வருடங்கள் ஆகிவிட்டன. குழந்தைகள் வந்தால் கொண்டு வருவாங்க. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சே..  நான் போன எந்தக் கல்யாணத்திலும் இதை கொடுக்கவே இல்லை..  'என்ன கல்யாணமடி கல்யாணம்..  உங்க கல்யாணமடி கல்யாணம்' என்று பாடிவிட்டு வேண்டியதுதான்!

   நீக்கு
  2. கீசா மேடம் போன கல்யாணம் புரட்சி கல்யாணமா இருக்கும் போலிருக்கே

   ஆனால் மோமோஸ் போன்றவை கொடுத்தால் இளைய தலைமுறை விரும்பும். எனக்குலாம் கேஜிஒய் சதாபஷேகத்தில் கொடுத்த டிபனே சூப்பர். அதோட காசி அல்வா ஒரு கரண்டி (இப்போ உள்ளவங்க பண்ணற மாதிரி ஒரு டீஸ்பூன் இல்லை) கொடுத்தால் ஆஹா ஓஹோதான்.

   ஶ்ரீராம் வீட்டுக் கல்யாணத்தில் (விரைவில் நடக்கட்டும்) இந்த மெனுவை நினைவில் கொள்ளட்டும் ஹாஹா

   நீக்கு
  3. நெல்லை இனி நீங்க கல்யாணம் அட்டெண்ட் செய்யும் போது உங்க மகள் பின்னலேயே ஸ்கேலுடன் நிற்கும் காட்சி எனக்கு இப்ப வருதே!!! இது வேணுமா!!?

   கீதா

   நீக்கு
  4. //ஶ்ரீராம் வீட்டுக் கல்யாணத்தில் (விரைவில் நடக்கட்டும்) இந்த மெனுவை நினைவில் கொள்ளட்டும் ஹாஹா//

   நன்றி.  நாமே செய்து சாப்பிட்டுக் கொண்டால்தான் உண்டு என்கிறீர்கள்.  ஓகே!

   நீக்கு
  5. சென்னை/தென் சென்னையின் பிரபலமான காடரிங் காரர் தான் அவர். விளம்பரங்களும் வரும். ஆனால் எனக்கு இப்போப் பெயர் மறந்து விட்டது.

   நீக்கு
  6. சில கல்யாணங்களில் ரிசப்ஷன் பஃபே சாப்பாட்டுக்கு முன்னர் நாம் உட்கார்ந்திருக்கையில் தட்டில் கொண்டு வரும் தின்பண்டங்களில் ஒன்றாகவும் கொடுக்கிறாங்க. அப்படித் தான் ஒரு முறை பனீர்/கொத்துமல்லி ஃப்ரை கொடுத்தாங்க. நன்றாக இருந்தது. குச்சியோடு கொடுப்பதால் பார்த்துச் சாப்பிடணும்.

   நீக்கு
  7. குச்சியோடு கொடுப்பதால் பார்த்துச் சாப்பிடணும்./குச்சியையா சாப்பிடணும்?

   நீக்கு
  8. ஹிஹிஹி, கௌதமன் சார்! அப்படியே லாலிபாப் மாதிரி வரிசையாக அடுக்கி க்ரில்லிங்க் செய்ததைக் கொடுப்பாங்க இல்ல! அதைச் சொன்னேன். :)))))))

   நீக்கு
 12. ஆஹாமோமோஸ்!! மிக நன்றாக வந்திருக்கிறது. அருமையான விளக்கமும் கூட! ராதா சுரேஷ் அவர்களுக்குப் பாராட்டுகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மொழி பெயர்த்த கௌதம் அண்ணாவுக்கு டபுள் பாராட்டுகள்!!! அழகாகச் செய்திருக்கிறார்.

   அந்தக் கஷ்டம் நன்றாகத் தெரியும். அனுபவம் மீக்கு!

   கீதா

   நீக்கு
  2. ​வாங்க கீதா... வாங்கி வெளியிட்டது நான்தான். எனக்கு பாராட்டு இல்லையா... "வாழ்க்கையே வேஷம்" என்று பாடிக்கொண்டே அப்பால் செல்கிறேன்!

   நீக்கு
  3. ஆ ஆ ஆ தெரியும் தெரியும் அது நீங்கதான் வெளியிட்டது என்று தெரியும் அதை டைப் செய்து போடுவதற்குள் உங்க கமென்ட்!!!! ஹாஹா

   உங்களுக்கு ட்ரிபிள் பாராட்டுகள்!! ஏனென்றால் வாங்கிப் போடுவது என்பது இன்னும் கஷ்டம் தெரியுமா!! அந்த அனுபவமும் உண்டே!!!

   கீதா

   நீக்கு
  4. உங்களுக்கு ட்ரிபிள் பாராட்டுகள்!!

   மிரட்டி மிரட்டி வாங்கவேண்டியதாயிருக்கிறது!

   நீக்கு
  5. நல்ல காலம் கௌ அண்ணா, ஓ மை ன்னு சொல்லத் தொடங்கி காட் ? அல்லது க்ரானா ந்னு குழப்பம் வராம இப்ப எங்க பார்த்தாலும் எதைக் கேட்டாலும் எப்பவும் ஓமிக்ரான்னு சொல்லி சொல்லிக் கேட்டு கேட்டு குழம்பாம தமிழ்ல சொல்லிட்டீங்க! கண்ணுக்குத் தெரியாமல் எங்கும் நிறைந்திருக்கும் ஓ மை!!!

   அது சரி micron என்பதை மைக்ரான்னுதானே சொல்கிறோம் அப்புறம் ஏன் omicron என்பதை மட்டும் ஓமைக்ரான் என்று சொல்லாமல் ஓமிக்ரான்னு சொல்கிறோம்?

   கீதா

   நீக்கு
  6. சந்தேக கீதா ரங்கன்(க்காவுக்கு) - put க்கும் but க்கும் ஏன் உச்சரிப்பு வித்தியாசம், நீங்க சொல்ற மாதிரி O வை ஓ என்று உச்சரித்தால் அப்புறம் ஏன் Oh என்று சொல்றோம்..... ஹா ஹா - புதனுக்கு நிறைய கேள்வி உங்கள்ட இருக்கிறது.

   நீக்கு
 13. புதிய அறிமுகம் ஆன ராதா சுரேஷிடமிருந்து இன்னும் பல்வேறு வகையான உணவுக்குறிப்புக்களை எதிர்பார்க்கிறேன். மோமோஸ் செய்முறை விளக்கத்துக்கு மிக்க நன்றி. வெறும் உ.கி. மட்டும் வைச்சுச் செய்தால் என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ அது உ கி கொழுக்கட்டை ஆகிவிடும்.

   நீக்கு
  2. அது நம்ம இஷ்டம்தானே..  கொஞ்சம் மிளகாய்ப்பொடி கூட வைத்துச் செய்யலாம்..  அதுவும் இல்லாமல் செய்தால் சாப்பிடும்போது உடைத்துப் பார்த்து விட்டு "வெறும் காத்துதாங்க வருது" என்று சொல்லி விடுவார்கள்!

   நீக்கு
  3. உ கி போட்டால் அது மோமோஸ் இல்லை!!!!! ஆங்கிலக் காய்கறிகள் தான் இதற்கு ஒத்துப் போகும் ஏனென்றால் இது சைனாவின் இறக்குமதி! அங்கு இது Wonton.

   கீதா

   நீக்கு
  4. ஆங்கிலக் காய்கள் என்றால் இந்த ஸ்டார்ச் அதிகம் உள்ளவை இதற்கு தோது ஆகாது...உ கி யும் ஆங்கிலக் காய்தானே!! இல்லையா?!!

   கீதா

   நீக்கு
  5. //இது சைனாவின் இறக்குமதி!//

   சைனாவின் இறக்குமதியா?  ஒமிக்ரான்   ச்ச்சே....ஓ மைகாட்

   அதுதான் அது "சீனத்துப் பட்டுமேனி இளம் சிட்டுமேனி.." என்று போட்டோவில் போஸ் கொடுக்கிறதோ!

   நீக்கு
  6. அடுத்து கீசா மேடத்தின் திப்பிசம்தான். அவர் எழுதணுமா என்ன? நானே எழுதிடறேன்.

   ரொம்ப நாளாச்சே உருளை கறி பருப்பு ரசம் செய்வோம்னு செய்தேன். சாப்பிட உட்காரும் சமயத்தில் மாமா (எப்போதும்போல), எனக்கு வயிறு சரியில்லை. சுட்ட அப்பளாம் போதும்னுட்டார். நான் உருளை கறி சாப்பிட்டாலும் மிஞ்சினதை என்ன செய்வது? சாயந்திரம் கொஞ்சம் கோதுமை மாவு பிசைந்தி, கேரட் மிக்க் குறைவா திருவி அரை வெங்காயம் போட்டு, உருளைக் கறியையும் சேர்த்து வதக்கி மோமோஸ் செய்தேன். மைதா மாவும் சேர்த்திருந்தால் இன்னும் சாஃப்டா வந்திருக்கும். எனக்குப் பிடித்திருந்தது. மாமா, இன்னும் வயிறு சரியாகவில்லை.. கஞ்சி போதும்னுட்டார்.

   மிஞ்சின மூணு மோமோஸை என்னமாதிரி திப்பிசம் செய்வது என யோசிக்கிறேன். பேசாம வீட்டு உதவி செய்பவரிடம் கொடுக்கலாம்னா அவரையும் காணோம். ஹாஹா

   நீக்கு
  7. ஹாஹாஹாஹா ஆமாம் ஸ்ரீராம்!!!! அது பட்டு போலத்தான் பள பள என்று காட்சி கொடுக்கும்!!!

   ஹெட் ரிலீஃப் போல! செம ஃபார்மில் ஸ்ரீராம். அப்ப சிக்சர் பௌன்ட்றீஸ் தான்!!! அடிச்சு ஆடுங்க!

   கீதா

   நீக்கு
  8. நெல்லை!!!!!!!!!!!!!! மீ விவிசி

   கீதா

   நீக்கு
  9. நெல்லை சூப்பர்...  பினிஷிங் டச்சை விட்டுட்டீங்க...  நான் தொடர்கிறேன்.

   முதல்நாள் மிஞ்சின மோமோஸை  மறுநாள் பிரிஜ்ஜிலிருந்து எடுத்து வைத்துக் கொன்டேன்.  அது பிரீஸ்ல இருக்கும்போதே நாலு துண்டங்களாய் நறுக்கி வைத்துக் கொண்டேன்.  ரெண்டு வெங்காயம், ரெண்டு தக்காளி நறுக்கிக் கொண்டேன்.  தேவைப்பட்டால் பூண்டு போட்டுக் கொள்ளலாம்.  இங்கே போணி ஆகாது என்பதால் நான் போடவில்லை.  கொஞ்சம் கொண்டிக்கடலையும் ஊற வைத்து சேர்த்துக் கொள்ளலாம்.  ரெண்டு கரண்டி பருப்பை ஊற வைத்து வேகவைத்து மசிச்சு எடுத்துண்டேன்.  வாணலியில் முதலில் வெங்காயம், தக்காளி எல்லாம் போட்டு வதக்கி உப்பு, பெருங்காயம் காரப்பொடி சேர்த்து கடைசியாக மோமோஸையும் போட்டு ஒரு புரட்டு புரட்டி எடுத்து விட்டேன்.  சிம்பிள்!

   நீக்கு
  10. செய்யும்போது படம் எடுக்காததால் படம் சேர்க்கவில்லை.  நடுவில் மசிச்ச பருப்பையும் சேர்த்துக் கொள்ளுங்க..   பதிவில் எழுத மறந்துட்டேன்!

   நீக்கு
  11. ஆ ! எல்லோரும் சிக்சர் அடிச்சு ஆடுறீங்களே !! நல்லா இருக்கு!!

   நீக்கு
  12. ஸ்ரீராம்.........!!!!!!! இன்னிக்கு கீதாக்கா அகப்பட்டுக்கிட்டாங்களா!!

   விவிசி!!!!

   கீதா

   நீக்கு
  13. எல்லோருக்கும் சேர்த்து ஒரு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)

   நீக்கு
  14. நெல்லை, மாமா அப்பளப் பிரியர் இல்லை. நான் தான் அப்பளமாகக் கொடுத்தாலே போதும் சாப்பிட்டுக் கொண்டிருக்கேன் என்னும் ஆள்.

   நீக்கு
  15. //வெறும் உ.கி. மட்டும் வைச்சுச் செய்தால் என்ன?// - அப்படிப் பண்ணாதீங்க. பேசாம தேங்காய் வெல்லப் பூரணம், உளுத்தம்பருப்பு பூரணம் வைத்து தனித் தனியாகச் செய்து, தமிழக மோமோஸ் என்று சொல்லிடுங்க.

   நீக்கு
  16. நெல்லை, இந்த மைதாமாவு, ரவை சேர்த்துப் பால் விட்டுக் கொஞ்சமாய் நெய் சேர்த்துப் பிசைந்து தேங்காய்/வெல்லப் பூரணம் வைத்து நெய்யில் அல்லது நெய் கலந்த எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொண்டு எங்க ஊருக்குப் போகும்போது அங்கே பொய்யாப்பிள்ளையாருக்கு நிவேதனம் பண்ண எடுத்துட்டுப் போவேன். இங்கேயும் வீட்டில் சில சமயங்கள் சங்கடசதுர்த்திக்கு இந்த நெய்க்கொழுக்கட்டை பண்ணி விடுவேன். நேரத்தைப் பொறுத்து.

   நீக்கு
 14. சிம்லா மணாலி பல வருடங்களுக்கு முன் சென்றிருந்த போது மணாலியில் ஆப்பிள் ஃபெஸ்டிவல் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் சிம்லா ஆப்பிள் வைத்து எக்சிபிஷன் வைத்திருந்தார்கள். நம்மூர் கொழுக்கட்டை போலத்தானே! ஒரே ஒரு வித்தியாசம் அரிசி மாவைக் கிளறி செய்வோ இது அப்படியே பிசைந்து வேக வைப்பது....

  பல வருடங்களுக்கு முன் சிம்லா மணாலி போயிருந்த போது மணாலியில் ஆப்பிள் ஃபெஸ்டிவல் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். சிம்லா ஆப்பிள் வகைகளுக்கு ப்ரொமோவாக ஒரு எக்சிபஷனும் வைத்து அதில் ஆப்பிளை வைத்து வித விதமான உணவுவகைகள் செய்து சுவை பார்க்கவும் கொடுத்தார்கள்.

  அங்கு ஆப்பிள் மோமோஸ் சாப்பிட்டு (இனிப்பு வகையும் கார வகையும்) நிறைய தெரிந்து கொண்டு அப்போதே வீட்டிற்கு வந்ததும் செய்தும் பார்த்துவிட்டேன். எல்லோருக்கும் பிடித்துவிட்டதால் மகனும் விரும்பிச் சாப்பிட்டதால் கோதுமை மாவிலும் செய்ததுண்டு. அதுவும் நன்றாக வருகிறது. சில மாதங்களுக்கு முன் வீட்டில் செய்ததை ஃபோட்டோஸ் எடுத்தும் வைத்திருந்தேன் திங்க வுக்கு அனுப்ப. ஆனால் அது ரிப்பேர் ஆன ஹார்ட் டிஸ்கில் மாட்டிக் கொண்டுவிட்டது. அதனால் அனுப்ப முடியாமல் போனது.

  இப்போது செய்முறை வந்துவிட்டது!! நல்லதாகிவிட்டது

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆப்பிள் வைத்து மோமோஸா...  ஐயே..  என்னங்க இது..  'குலுவாலிலே மோமோஸ் வந்தல்லோ' என்று பாடுகிறீர்களே என்று பார்த்தால் இப்படிச் சொல்லி விட்டீர்கள்!

   நீக்கு
  2. ஹாஹாஹாஹா பாட்டு பறக்குது!!!

   ஸ்ரீராம் அது சிம்லா புளிப்பு ஆப்பிள்!

   கீதா

   நீக்கு
 15. மைதா கோதுமை மாவிற்குப் பதிலாக பார்லி மாவிலும் செய்யலாம். திபெத் பூட்டான் பகுதிகளில் பார்லி மாவிலும் செய்வதுண்டு. அதுவும் இங்கு பார்லி மாவு கிடைத்ததால் அதில்தான் செய்து படங்களும் எடுத்திருந்தேன்..போயே போச்...எப்போது அந்த ஹார்ட் டிஸ்க் டேட்டா எடுக்கப்படுமோ தெரியவில்லை.

  பார்லி மாவில் மீண்டும் செய்தால் படம் எடுத்து அனுப்ப முயற்சி செய்கிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்லி மாவு காணோமா..   பார்லிமென்ட் வரை புகார் செய்யுங்கள்.  ஆமாம், பார்லி மாவில் செய்தால் பாத்ரூமுக்கு அடிக்கடி ஓட வேண்டியதிருக்குமோ...

   நீக்கு
  2. இந்த கீதா பெயர் வைத்துக்கொண்டுருப்பவர்கள் ரவுசு தாங்கலை.

   பேசாம கடலைமாவு உபயோகித்து பொரித்துவிடுங்கள்.

   நீக்கு
  3. ஹையோ நெல்லை!!! மீண்டும் விவிசி!!

   பொரித்தல்// காட்சி காட்சி!! பின்னாடி திரும்பிப் பாருங்க...உங்க பொண்ணு அங்க நிக்கறா பாருங்க!...ச்சே சிரோட்டி செய்து கொடுக்கலாம்னா உங்க பொண்ணு உருட்டி மிரட்டறது கண்ணுல வருதே!!!

   கீதா

   நீக்கு
  4. ஸ்ரீராம் நோ நோ பார்லி மாவும் ரொம்ப நல்லதுதான். அது உடம்புக்குக் கேடு செய்யாது. யூரினரி ப்ரச்சனை இருக்கறவங்களுக்கு பார்லித் தண்ணீர் கொடுக்க சொல்வதுண்டே!

   கீதா

   நீக்கு
  5. //பேசாம கடலைமாவு உபயோகித்து பொரித்துவிடுங்கள்.//

   கோலமாவு போட்டு பொரிக்காம இருந்தா சரி!

   நீக்கு
  6. பார்லி மாவு காணோமா.. பார்லிமென்ட் வரை புகார் செய்யுங்கள்.//

   ஹாஹாஹா செஞ்சதைத்தான் காணும்!!

   கோலமாவு//

   ஹாஹாஹா கோலமாவு கோகிலா செஞ்சு எபிக்கு அனுப்பினாலும் அனுப்பிடப் போறாங்க!!! ஆனா அவங்க கிச்சன் பக்கம் எல்லாம் போவாங்களா!!? போனாலும் அனுப்பமாட்டாங்க இங்க. இது அனுஷ், தமன், கீ.சு களம்னு தெரிஞ்சுச்சுனா!!!

   கீதா

   நீக்கு
  7. பார்லியில் நான் தோசை பண்ணுவேன். இப்படி மாசம் ஒரு தரமாவது! :) ஆனால் மாவெல்லாம் இல்லை. முழு பார்லியை ஊற வைச்சு அரைச்சுத் தான்.

   நீக்கு

 16. எ பி யில் உருளைக்கிழங்கு அல்வா செய்திருக்கிறார்களா?
  ​​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லையே... அதுவும் பச்சை மிளகாய்ப் பாயசமும் ட்யூ.

   நீக்கு
  2. ஜெகே அண்ணா நீங்க செஞ்சிருக்கீங்களா!!! அனுப்பிடுங்க!

   ஸ்‌ரீராம் உங்களுக்கு ஒரு தகவல்! ஜெகே அண்ணாவும் சமையல் எல்லாம் நல்லா செய்வார்! பிடிங்க அவரை!

   கீதா

   நீக்கு
  3. நிஜம்மாவே உகி அல்வா நல்லாருக்கும்!!

   கீதா

   நீக்கு
  4. உருளைக்கிழங்கு அல்வா சரியான பதத்தில் வந்தால் கிட்டத்தட்ட பாதாம் அல்வாவை ஒத்திருக்கும். அதோடு இல்லாமல் உருளைக்கிழங்கில் குலாப்ஜாமூன் நான் நிறையப் பண்ணி இருக்கேன். உருளைக்கிழங்கை வேக வைத்துச் சேர்த்துக் கடலைமாவுடன் உப்பு, காரம், ஓமம் சேர்த்து புஜியா எனப்படும் சின்ன மெலிதான் ஓமப்பொடி மாதிரி அடிக்கடி பண்ணூவேன். உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து மசித்துக் கொண்டு அதனுள் இதே மாதிரிக் காய்கறிக்கலவையை வைத்து நன்கு மூடி ப்ரெட் தூளில் பிரட்டி விட்டுக் கட்லெட் மாதிரி வேக விட்டு எடுத்துப் புளிச்சட்னி, பச்சைச் சட்னியுடன் சாப்பிடலாம். உருளைக்கிழங்கில் அப்பளமும் பண்ணலாம். முன்னர் ஒரு முறை கோமதி அரசு வாழைக்காயில் அப்பளம் போட்டிருந்தார். அதே போல் உருளைக்கிழங்கிலும் அப்பளம் பண்ணலாம். மசித்த உருளைக்கிழங்கை வடையாகவும் தட்டலாம்.

   நீக்கு
  5. ஆமாம். இந்த பச்சை மிளகாய் பாயாசத்திற்கு வெல்லம் போட வேண்டுமா? இல்லை,ஜீனி சேர்த்தா?:) நாங்கள் வருடப்பிறப்பிற்கு மாங்காய் பச்சடி என்ற பெயரில், மாங்காய் வெல்லத்துடன் சேர்த்து,இந்த ப.மி.பா வைப்பதோடு சரி. தனி ப.மி.பா இது வரை செய்ததில்லை. செய்தவர்கள் விபரமாக சொன்னால் நன்றாக இருக்கும்.:)

   நீக்கு
  6. கீதாக்கா இப்படி என் பழசெல்லாம் நினைவு படுத்திவிட்டீங்களே புஜியா, உகி குலாப்ஜாமூன்னு, உகி ப்ரெட் பஜ்ஜி, போண்டா, கட்லெட் நு...இந்த உகி வைச்சு நிறைய விளையாடியாகிவிட்டது. உகி பப்படும் செமையா இருக்கும்.மகன் கேட்டிருக்கிறான் உகி பப்பட்...

   வெய்யில் தான் இல்லை. ஃபெப்ருவரி வரை காத்திருந்து செய்ய வேண்டும்.

   கீதா

   நீக்கு
  7. கமலாக்கா மா ப வில் ப மி போடுவதுண்டே...

   அக்கா, சீரியஸ்லி ப மி தொக்கு/சட்னி நு வெல்லம் நிறைய போட்டுச் செய்வதுண்டு. சில்லி சாஸ்னும் சொல்லிக்கலாம் விடுங்க ஏதோ ஒரு பெயர்!!!! ஸ்ரீராம் விளையாட்டாகச் சொன்னாலும், நிஜமாகவே உகி வடை செய்து இந்த சாஸ் செய்து வைத்திருந்ததால் உறவினர்கள் இந்த சாஸ் தொட்டுக் கொண்டுச் சாப்பிட அவர்கள் குழந்தை தனக்கும் வேண்டும் என்று சொல்லி வாயில் வைத்துக் கொண்டது. அதற்கு அதுகாரம் தானே அழுகை வந்தாலும் மீண்டும் அதைச் சாப்பிட முயற்சி செய்த போது நான் டக்கென்று வீட்டில் கேக் செய்து மீதம் கொஞ்சமாக இருந்த மித்தாயிமேட் (அமுல்) அதை கொஞ்சமே கொஞ்சம் சாசில் கலந்து கொடுததும் குழந்தை சப்புக் கொட்டிச் சாப்பிட, உறவினர் அட இது கூட நல்லாருக்கே பமி பாயாசம் என்று சொல்லிடலாம் என்று சொல்ல...ஹாஹாஹா அன்று ரகளை. பால் சேர்த்தால் திரிந்துவிடும் எனவே பாதுகாப்பாக மில்க் மெய்ட் அல்லது மித்தாயிமெட் சேர்த்து..பமி குறைவாகப் போட்டு பமி பாயாசம்....ஹிஹிஹி

   மீ எஸ்கேப். ஓடி விடுகிறேன். நெல்லை வந்து இந்த கீதா ரெங்கன்(கா) வோட ரவுசு தாங்கலைனு லெக் புல்லிங்க் செய்வார்...நான் விழுந்துட்டா அடிபட்டா யாரு பாத்துக்குவாங்க என்னை!!!! இனி இங்க எட்டிப் பார்க்க மாட்டேனாக்கும்!

   கீதா

   நீக்கு
  8. //உருளைக்கிழங்கு அல்வா சரியான பதத்தில் வந்தால் கிட்டத்தட்ட பாதாம் அ...// வெயிட் பண்ணுங்க. அவர் செய்து எபிக்கு அனுப்பி, எபி மனச் வச்சு வெளியிட்டு, அப்புறம் உங்க வேரியேஷன்ஸ்லாம் எழுதலாம்

   படம் ஆரம்பிக்கும்போதே 'சுபம்' போட எவ்வளவு அவசரம் இந்த கீசா மேடத்துக்கு

   நீக்கு
  9. உருளைக்கிழங்கு (ச.வ.கி அல்ல) அல்வா, பஹ்ரைன் சங்கீதாவில் சாப்பிட்டிருக்கிறேன். சூப்பரோ சூப்பர். எப்போ அவங்க அது போட்டாலும் போயிடுவேன் (அந்த ஊர்ல எல்லாம் ஒரு எட்டு வைத்தால் ஏகப்பட்ட ரெஸ்ட்ராரண்ட்). செய்வது சுலபம்தான்.

   நீக்கு
  10. வணக்கம் சகோதரி

   /பால் சேர்த்தால் திரிந்துவிடும் எனவே பாதுகாப்பாக மில்க் மெய்ட் அல்லது மித்தாயிமெட் சேர்த்து..பமி குறைவாகப் போட்டு பமி பாயாசம்/

   ஆகா.. இப்படி கூட செய்யலாமே.. ப.மி.பா. நல்ல ஐடியா.. அதற்கு முன். உ. கி. வடை ரெடி பண்ணிக்கணும். அதை சாப்பிட ஒரு உறவினர் வீட்டுக்கு வர வேண்டும். அதுவு‌ம் அவர்கள் ஒரு குழந்தையோடு வர வேண்டும். ஹா.ஹா.ஹா. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  11. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து உப்புக்காரம், கரம் மசாலா, கொ.ம. சேர்த்துக் கொண்டு ப்ரெடை நீரில் நனைத்து அதனுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொண்டு தேவையானால் லேசாக உப்புச் சேர்த்து ரஸ்க் தூளில் பிரட்டிவிட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கலாம். ப்ரெடில் சான்ட்விச் மாதிரி இரண்டு ஸ்லைஸ்களுக்கு நடுவில் வைத்துக் கொண்டு சான்ட்விச் பண்ணிவிட்டுப் பின்னர் கடலை மாவு பஜ்ஜி மாவு போல் கரைத்துக் கொண்டு அதில் இந்த சான்ட்விச்சை முக்கிப் பொரித்து ப்ரெட் பகோடா எனப் பண்ணலாம். இது வடமாநிலங்களில் காலை ஆகாரத்துக்குக் கொடுப்பாங்க. வீட்டில் பண்ணினால் செலவு குறைவு. அதுவே கடைகளில் போய்ச் சாப்பிட்டால் சாதாரணமான கடையிலேயே இது ஒரு ஸ்லைசில் ஒரு பாதி அப்போவே 20 ரூக்கு விற்றது.

   நீக்கு
  12. மாங்காய்ப் பச்சடிக்கு நான் பச்சை மிளகாய் போடுவதில்லை. விளாம்பழப் பச்சடிக்கு மட்டும் போடுவேன்.

   நீக்கு
  13. நானும் உருளைகிழங்கு அல்வா செய்து இருக்கிறேன்.
   முதன் முதலில் என் அக்காவும், அம்மாவும் செய்து கொடுத்தார்கள் நான் செய்யும் வாழைக்காய் அப்பளம் பற்றி பேசியதற்கு நன்றி கீதா.

   நீக்கு
 17. வித்தியாசமான காய்கறிக் கொழுக்கட்டை... அருமை...

  பதிலளிநீக்கு
 18. மோமோஸ் செய்யும் விதம் perfect procedure ஆக எழுதப்பட்டு, மிக அழகாக மொழி பெயர்க்கப்பட்டு, சிறப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது! திருமதி. ராதா சுரேஷ், திரு.கெளதமன், திரு.ஸ்ரீராம் அனைவருக்கும் இனிய பாராட்டுக்கள்! கூடவே தொடர்ந்த திப்பிசங்களும் அருமை!

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோதரரே

  இன்றைய பதிவில் மோமோஸ் செய்முறை படங்கள் அழகாக உள்ளது. திருமதி.ராதா சுரேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். அடுத்தபடியாக சுத்தமான தமிழ் மொழிப் பெயர்ப்புக்கு சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

  இங்கு முன்பு நிறைய தடவை வெளியில் செல்லும் போது இந்த உணவகங்களையும் இந்த உணவையும் பார்த்திருக்கிறேன். ஆனால், சாப்பிட்டதில்லை. இந்த கோதுமை காய்கறி கொழுக்கட்டையை ஒரு தடவை செய்து பார்க்க வேண்டும்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 20. பதில்கள்
  1. மிகவும் நன்றாக இருக்கிறது இதே செய்முறையில் நான்கைந்து வருடங்களுக்கு முன் என்னுடைய ப்ளாகில் படங்களுடன் நானும் எழுதி இருக்கிறேன் கீதா இரண்டு பேரும் பதிலும் போட்டிருந்தனர் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் செய்முறை அழகாக இருக்கிறது அன்புடன்

   நீக்கு
  2. ஆமாம் காமாட்சி அம்மா நினைவிருக்கிறது.

   உங்களை மீண்டும் பார்ப்பதில் சந்தோஷமாக இருக்கிறது.

   கீதா

   நீக்கு
  3. ஆமாம் காமாட்சி அம்மா. எனக்கும் நினைவில் இருக்கு. ஆனால் என்ன கருத்துச் சொன்னேன் என்பது தான் நினைவில் இல்லை. :))))

   நீக்கு
  4. இதுவரை செய்ததில்லை அரிசிமாவில் செய்து பார்க்கிறேன் என்று எழுதியிருந்தீர்கள் கூடவே தக்காளி சேர்த்து தொட்டுக்கொள்ள ஒன்றும் எழுதியிருந்தேன் அன்புடன்

   நீக்கு
  5. இவ்விடம் நாலரை மணி நேர வித்தியாசம் இருப்பதால் எழுந்திருக்கும்போது மணி ஆகிவிடுகிறது பனிப்பொழிவு வேறு முடியாமல் வேறு கம்ப்யூட்டர் படுத்துவிட்டது வேறு வாங்க வேண்டும் இப்படியாகத்தானே அன்புடன்

   நீக்கு
  6. நல்ல நினைவாற்றல் உங்களுக்குக் காமாட்சி அம்மா. இப்போத் தான் உங்க பதிவையும் போய்ப் பார்த்துப் படித்துவிட்டுப் பின்னூட்டங்களையும் படிச்சுட்டு வந்தேன்.

   நீக்கு
 21. செய்ய நினைத்த ஒன்று. குறிப்பு அருமை. முயன்றிடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 22. மோமோஸ் படங்களும், செய்முறையும் அருமை.
  மொழி பெயர்த்து கொடுத்த கெளதமன் சாருக்கும் நன்றி.
  இங்கு மாலகளில் விறகிறார்கள். சுட சுட செய்து தருவார்கள். ரேடிமேடாகவும் கிடைக்கிறது, வாங்கி வேக வைக்க வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்பேரிக்காவில் நான் மோமோஸ் பார்க்கவில்லை. முதல் முதல் இதைப் பற்றி வெங்கட்டின் பயணப்பதிவு (வடகிழக்கே இது தான் சாப்பிடும்படி இருக்கும் என்றிருந்தார்)ஒன்றில் படிச்சிருக்கேன். அவர் எழுதின ஏழு சகோதரிகளோ?

   நீக்கு
 23. மோமோஸ்க்கு வந்து இருக்கும் பின்னூட்டங்கள் அருமை.
  ஸ்ரீராம், நெல்லைத்தமிழன்கீதாசாம்பசிவத்தை இப்படி கலாட்டா செய்து இருக்கிறீர்களே!

  அவர்கள் வீட்டுக்கு போகும் போது கவனம் தேவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா, என்ன திப்பிசம் செய்து அவங்களைத் தண்டிக்கலாம்னு இப்போவே யோசிக்கணும். டிசம்பரில் பத்து தேதிக்கு மேல் வருவதாக நெல்லை சொல்லி இருக்கார். சென்னை மழைத் தண்ணீரில் எழுதி வைச்சிருக்கேன்.

   நீக்கு
 24. கீதாரெங்கன் பலவித நாட்டு சமையல் செய்பவர் அவரையும் விட்டு வைக்கவில்லை நீங்கள் இருவரும்.

  நேற்று நன்றாக பொழுது போய் இருக்கும் எல்லோருக்கும் வாய் விட்டு சிரித்து.நான் இன்று ரசித்து சிரித்தேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!