வியாழன், 27 மே, 2021

பழுதா? பாம்பா"

 "நம்ம யோசனையை எல்லாம் யார் கேட்கறாங்க... "


இதற்கு என்ன அர்த்தம்?

உங்களிடம் ஏராளமான அல்லது அப்போதைய பிரச்னைக்குத் தீர்வு இருக்கிறது.  ஒரு யோசனை சொல்ல முடியும்.  ஆனால் சம்பந்தப்ட்டவர் உங்களிடம் அதைக் கேட்பதில்லை.  சரிதானே?

நாமாகப் போய்ச் சொன்னாலும் அது மதிக்கப்படாது என்கிற எண்ணமும் இருக்கும்.  

சமீபத்தில் அலுவலகத்தில் எனக்கொரு அனுபவம்.  என் அதிகாரி, என் துறை சம்பந்தப்பட்ட பிரச்னையை, சம்பந்தமில்லாத அடிப்படை ஊழியரிடம் விவாதித்துக் கொண்டிருந்தது.  அதுவும் என் எதிரிலேயே..  இதை வெறுப்பேற்றும் செயல் என்று சொல்லலாமா?  அல்லது தெரியாமல் செய்வது என்று சொல்லலாமா?

இன்னொரு வகை அனுபவம்.  இது வீட்டில்!

பாஸ் அடிக்கடி வந்து ஏதாவது யோசனை கேட்பார்.  அடிக்கடி என்ன,  இந்த ஜன்னலை சாத்தட்டுமா, அந்தக் கதவை திறக்கட்டுமா என்று எடுத்ததற்கெல்லாம் யோசனை கேட்பார்.   நான் சும்மா இருந்தாலும் விடமாட்டார்.  "இதென்ன ஒவ்வொன்றும் என்னைக் கேட்டுக்கொண்டுதான் செய்வாயா?"  என்றால் "சொன்னால் உங்களுக்கு என்ன குறைந்துவிடும்?" என்பார்.  நாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அந்தச் செயலை என்னவோ அவர் செய்யத்தான் போகிறார்.  டிபன் செய்வது பற்றி வந்த ஒரு வாட்ஸாப் பார்வேர்ட் நினைவுக்கு வருகிறது இல்லை?  

"இன்று ரசம் மட்டும் வைத்தால் போதுமா?  இல்லை சாம்பாரும் வைத்துவிடவா?  அலுப்பாக இருக்கிறது" என்பார்.

"ரசம் மட்டும் போதும்"

"இல்லை, பெரியவன் பாவம்... சாம்பாரும் வச்சிடறேன்..."  

"சரி"

"சின்னவன் நேற்றே  கறி எதுவும் பண்ணலையான்னு கேட்டான்.  ஒரு கறியும் பண்ணிடறேன்...  என்ன நினைக்கறீங்க?"

"சரி.."

"என்ன சரி சரிங்கறீங்க...   என்னால் செய்ய முடியலைன்னு அலுப்பா இருக்குன்னுதானே உங்களை யோசனை கேட்கிறேன்.  சரியாகச் சொல்லுங்களேன்..."

"சாதம் மட்டும் போதும்மா...   மோர் சாதமா சாப்பிட்டுடலாம்...  மாவடு இருக்கு...  மாங்காய்த் தொக்கு இருக்கு...  நார்த்தைஇலைப் பொடி இருக்கு.."

"வேண்டாம்.. ரசம் வச்சிடறேன்."

"சரி.."

"என்னால முடியலைன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்...   அப்பா கேட்கலை.."  அப்புறம் இது மகன்களிடம்!

இன்னொரு நாள்-

"மாமா எஸ் எம் எஸ் பண்ணியிருக்கார்...  ஏதேதோ .கேட்கறார்.  மாற்றி மாற்றிப் பேசறார்...  என்ன பதில் அனுப்பட்டும்?'   பாஸின் இந்த எண்பத்தைந்து வயது மாமா பற்றி ஒரு பெரிய மனோதத்துவ கட்டுரையே எழுதலாம். 

"உனக்கு என்ன தோணுதோ அதை அனுப்பு"   

"நீங்க சொல்லுங்க...  என்னென்னமோ எழுதறீங்க..  நான் கேட்டா பதில் சொல்ல மாட்டீங்களா?"

"நான் என் இஷ்டத்துக்கு எழுதறேன்.  உங்க மாமா கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் அனுப்பன்னு நான் எப்படி சொல்ல முடியும்?  என்னைக் கேட்கச் சொல்..  நான் பதில் சொல்றேன்..."

"இப்ப நடக்கற காரியமா பேசுங்க..   இதற்கு ஒரு பதில் சொல்லுங்க..."

தவிர்க்க முடியாமல் ஏதாவது பதில் சொன்னேன் என்றால் நான் காலி!  சொல்லாவிட்டாலும்தான்!

கொஞ்சநாட்கள் கழித்து அதற்கு வரும் எதிர்வினைகளுக்கு நானே முழுப் பொறுப்பாளி ஆக்கப்பட்டு விடுவேன்.

எதிர்வினையாக இருந்தால் "அப்பா சொன்னதை நம்பி.." என்று வசனம் வரும்!

அல்லது அடுத்த கட்ட மெசேஜ் வந்திருந்தால் அதற்கு தானே பதிலளித்தோ, அல்லது அதற்கும் என்னைக் கேட்டோ மறுபடி பிரச்னை வரும்.  இதற்கு பதில் சொன்னால், "முதலில் அப்படிச் சொன்னீர்கள் என்றுதான் அப்படி பதில் அளித்தேன்.  இப்போ இபப்டி பதில் அனுப்பினால் எப்படி?"  என்று கேள்வி வரும்.  அப்புறம் நான் ஏன் யோசனை எல்லாம் சொல்லப் போகிறேன்?  தலையை தலையை ஆட்டுவதோடு சரி!  

"இப்படி சொல்லவா?"  

சரி...

இல்லை, மாற்றி அப்படிக் சொல்லவா?"

சரி...

"பேசாமல் விட்டு விடவா?"

சரி....!

இன்னொன்று.  பெரும்பாலான சமயங்களில் நாம் சொல்லும் யோசனைக்கு நேர்மாறாகத்தான் நடவடிக்கை இருக்கும்!  "அப்போ ஏன் என்னைக் கேட்டே?" என்றால், "நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று பார்த்தேன்" என்று பதில் வரும்.

இப்போது முதல் வரியை மறுபடி வாசித்துப் பாருங்கள்!

============================================================================================================


மூச்சை மறை
பேச்சைக் குறை
முகத்தை மூடு
தள்ளி நில்லு
கூடி வாழாதே
தொட்டுக் கொள்ளாதே

தனி மனிதத் தீவுகள்
நரகமான வாழ்க்கை

=========================================================================================================================


குமும் 
(2)
ஜீவி 


நாட்டுக்கு சுதந்தரம் கிடைத்த ஆண்டில் தான்  நமக்கும் குமுதம்  கிடைத்தது..  '47-லே எனக்கு நாலு வயசு.  அதுனாலே அதெல்லாம் இன்னொருத்தர் சொல்லித் தான் தெரிஞ்சது.  குமுதத்தைப் பற்றி யார் எது சொன்னாலும் தெரியாத தகவல்ன்னா ரொம்ப ஆர்வத்தோடக் கேட்டுப்போம்.   

சேலத்லே எம்.என்.ஆர். என்று ஒரு நியூஸ் ஏஜெண்ட்.  பெரியவர்.  எங்களுக்கு ரொம்பவும் பழக்கமானவர்.  அவர் தான் எங்களுக்குப் பத்திரிகைகள் எல்லாம் பற்றி சுவாரஸ்ய விஷயங்கள் பலதைச் சொன்னவர்.  குமுதத்தின் முதல் இதழ் விற்பனைக்கு வராம எல்லா மாவட்டங்களிலும் இலவசமாகவே  சப்ளை செய்யப்பட்டதாம்.  எம்.என்.ஆர். சொன்னது தான்.  இந்த மாதிரி நிறைய.  அவர் சொல்லச் சொல்ல, 'அட, அப்படியா?' என்று ஆர்வதோடக் கேட்டுப்போம்.

குமுதம்  நாலணா   விலையில்   மாதத்திற்கு மூன்று இதழ்களாகத்தான் இருந்தது.  1,10,20 தேதிகள் என்று இருந்தாலும் ஓரிரண்டு நாட்கள் முன்னாடியே கடைக்கு வந்திடும்.  இதெல்லாம்  எனக்கே தெரியும்.  அட்டைலே குமுதம் பெயர் போட்ட இடத்துக்குக் கீழே, 'கெளரவ ஆசிரியர் -- ஆர்.எம். அழகப்ப செட்டியார்' என்று போட்டிருக்கும்.  வள்ளல்  அழகப்ப செட்டியார் தான்.

வழவழன்னு அட்டையில்  வர்ணம் வரைந்த அந்நாளைய குடும்பப்  பாங்கான பெண் சித்திரங்கள் இருக்கும்.  பெரும்பாலும் உள்ளடக்க விஷயம் எதையாவது தொட்ட சித்திரமாக அது இருக்கும்.   ஓவியர் வர்ணத்தின் இயற்பெயர் பஞ்சவர்ணம்.

குமுதத்தைப்   பிரித்ததும் முதலில் தலையங்கப் பகுதி.  இந்தத் தலையங்கப் பகுதிக்கு மேலே  நிலவு -- அல்லி மலர் தாங்கிய குமுதம் இலச்சனை குமுதம் பெயருடன் பதிந்திருக்கும்.  ஆரம்ப காலத்திலிருந்தே ஒரே பக்கத்தில் பொறுக்கி எடுத்த வார்த்தைகளோடு நறுக்குத் தெரித்தாற் போல வரிகளாய் தலையங்கப் பகுதி நீண்டிருக்கும்.  மொத்த தலையங்க விஷயத்தின்   எஃபெக்ட்டையும் கொண்டு வருகிற மாதிரி அந்தப் பகுதியின் கடைசி வரி அமைந்திருக்கும். ரொம்பவும் குழப்பமில்லாத  எளிமையான விஷயங்களே தலையங்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் அதுவும்  மிகத்  தெளிவாக இருக்கும்.   தலையங்கம் எழுதும் பொறுப்பு முற்றிலும்  ஆசிரியரின் வசம் இருந்தது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  

தலையங்கம் மாதிரியே சினிமா விமரிசனப் பகுதியும்.  பொதுவா பத்திரிகைக்காரர்களுக்கு பாஸ் வழங்குவது அக்காலத்து திரையுலக வழக்கமாக இருந்தது.  ஆனால் நம்ம குமுதம் மூன்றெழுத்துகாரருக்கோ இதெல்லாம் கட்டோடப் பிடிக்காது. டிக்கெட் எடுத்து சினிமா பார்த்து கறாராக விமர்சனம் எழுதுவதற்குப் பழக்கப்பட்டவர் அவர் என்று அறிந்திருக்கிறேன்.

திரைப்படங்களுக்கு விமரிசனம் எழுதுவதில்  குமுதம் பெற்ற க்யாதி இருக்கே,  சினிமா உலகமே 'குமுதத்திலே ஏதாவது கோணல் மாணலா எழுதிடப் போறாங்கய்யா'ன்னு கவனம் கொள்ளும்.

சினிமா விமர்சனத்திலே கட்டக் கடைசியா பஞ்ச் போல ஒரு வரி இருக்கும்.
எப்படியோ,  படமெடுத்தவர்களுக்கு  குட்டு போலவும் ஷொட்டு போலவும்
அது அமைந்து விடும்..   இப்படி குமுதம் திரைப்பட விமர்சனத்தோட கடைசி வரிக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள்.    'வெட்கக்கேடு'ன்னு ஒரு படத்திற்கு எழுதிவிட்டு  தமிழ்த் திரைப்பட உலகே அல்லோகலப்பட்டது.    

'கலைஞரின் வசனத்தால் சிவாஜி கணேசனின் நடிப்பு சிறப்புப் பெறுகிறதா, இல்லை சிவாஜி கணேசனின் உச்சரிப்பால் கலைஞரின் வசனங்கள் சிறக்கிறதா' என்பது விடை சொல்ல முடியாத விஷயம் என்று மனோகரா திரைப்படத்திற்கு குமுதத்தில் வந்த விமரிசனக் குறிப்பு நினைவிருக்கிறது.

இப்படி நிறைய.  நீண்டு விடும்.  அதனால் இதுவே போதும்.
       
குமுதத்தின் ஆரம்ப கால எழுத்தாளர்கள் இன்னும் நினைவிலிருக்கிறார்கள்.  அதில் முக்கியமானவர் பி.எம். கண்ணன்.  இவர் குமுதத்தில் எழுதிய 'முள்வேலி' என்ற தொடர்கதையை எனது இளம் பருவத்திலேயே ஆர்வத்துடன் படித்திருக்கிறேன்.  'நிலவே நீ சொல்' என்ற அவரது இன்னொரு நாவலும் மறக்காமல் நினைவில் படிந்திருக்கிறது.  

இன்னொருவர் 'மாயாவி' என்ற பெயரில் எழுதியவர்.  பம்பாய் நகர சூழலில் இவர் எழுதிய தொடர் கதை ஒன்று வர்ணம் அவர்களின் சித்திரத்தோடு நினைவில் நிழலாடுகிறது.
 
ஹேமா ஆனந்த தீர்த்தனை குமுதம் எழுத்தாளர் என்றே சொல்லலாம்.    'தீப்பிடித்த  கப்பலில் அம்மணியும் நானும்' என்ற மலையாளத்திலிருந்து தமிழாக்கமாக குமுதத்தில் எழுதியது இவரை நினைத்தாலே என் நினைவுக்கு வரும்.

கோமதி சுவாமிநாதன் என்பரின் குடும்பப் பாங்கான நகைச்சுவை நாடகங்கள் அந்தக் காலத்தில் ரொம்ப பிரசித்தம்.  முதன் முதல் நாடக பாணிக் கதைகளை  வார இதழில் அச்சேற்றியது குமுதம் தான்.  

அதே மாதிரி குமுதத்தில் பிரசுரமான சித்திரத் தொடர்கள்.   சேற்றின் சிரிப்பு,  ஆறாவது விரல், தங்கச்சாவி  என்று தொடர்களின் பெயர்கள்  கூட நினைவில் தேங்கியிருக்கின்றன.  குமுதத்தில் பல விஷயங்கள் டீம் ஒர்க் தான்.  இவர் எழுதியது இது என்று பெயர் போடாத விஷயங்கள் அத்தனையையும் தயாரித்தது  எஸ்.ஏ.பி. அவர்களே.   போட்டோவைப் போட்டுக் கொள்ள வேண்டும், பெயரைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையே லவலேசமும் இல்லாத வினோத மனப்போக்கு.   ஒருவிதத்தில் இது கூட மற்ற பத்திரிகை ஆசிரியர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுத்தியது என்று சொல்லலாம்.

தங்கச்சாவி என்று பெயர் கொண்ட சித்திரத்தொடர் பற்றிச் சொல்ல வேண்டும்.  இந்தத் தங்கச்சாவி என்ற பெயர் ஒரு பாஸ்வேர்ட் போல.   கதையில் வரும்  தங்கத்துரை,  கச்சாலீஸ்வரன், விநாயகம்  என்ற மூன்று நபர்களின் பெயர்களின் ஆரம்ப எழுத்துக்களால் கோர்க்கப் பட்ட பாஸ்வேர்ட்.    தங்+கச்சா+வி =  தங்கச்சாவி.    இது தான் பிற்காலத்தில்  கேள்வி--பதில் பகுதி 'அரசு' க்கு  அச்சாரம் போலிருக்கு.   அ-- அண்ணாமலை,  ர-- ரங்கராஜன்,  சு - சுந்தரேசன் = அரசு.

அப்போ இன்னொரு  துணையாசிரியர் புனிதன்  கேள்வி--பதில் பகுதிக்கு சம்பந்தமே இல்லாமல் இருந்தாரா?; நிச்சயம் என் வாசிப்பு அனுபவத்தில் இல்லை என்றே எனக்குத் தெரிகிறது.  ஆனால் நம்ப இந்த சந்தேகங்களுக்கெல்லாம் பதில் சொல்ல விவரம் தெரிந்த யாரும் இப்போ இல்லை என்றே சொல்லலாம்.

குமுதத்தின் இந்த சித்திரத்தொடர்கள் பற்றிய செய்திகள் எல்லாமே இப்பொழுது  தான் எங்கள் பிளாக் மூலமாக முதன் முதலா இணையத்தில் பதிவாகிறது என்று கூடச் சொல்லலாம்.   அந்த அளவுக்கு இதையெல்லாம் விவரமாகச் சொல்ல குமுதம் சம்பந்தப்பட்ட  யாரும் இல்லாமலிருந்திருக்கிறார்கள் என்பது கூட வியப்பான ஓர் உண்மை தான்.

  
செய்திருந்தால்  ரா.கி.ர.  செய்திருக்க வேண்டும்.  குமுதமே அவராகிப் போனதில் பாவம் அவரிடம் தான் நாமும் எவ்வளவு தான் எதிர்பார்க்க முடியும்?.. 

சொல்லுங்கள்.


(வளரும்)  

==========================================================================================================

ஜீசஸ் படம் அப்புறம் தேடித் போடுகிறேன் நெல்லை.   இப்போது வேறொரு மாயத் தோற்றப் படம்!


213 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
    அனைவரும் மன அமைதியும் உடல் ஆரோக்கியமும்
    பெற இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. அசலான குடும்பக் காமெடி. பாஸ் ஸ்ரீராம் சம்பாஷணை. ஹாஹ்ஹ்ஹா.

    சம்சாரம் சுவையானது. வாழ்த்துகள் ஸ்ரீராம்.
    ஒன்று சொல்வேன்.
    பாஸ் உங்களை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்.
    எப்படி என்று கேட்கிறீர்களா. எல்லாம்
    பெண் மனசு பெண்ணுக்குத் தெரியும்.
    புதன் கேள்விகளுக்கெலாம் பதில் வருகிறது.
    இதென்ன சார் பிரமாதம்.:)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லிம்மா...  புதன் கேள்விகளுக்கு பதில் வருகிறதா...   பயங்கர தற்செயல்...!

      நீக்கு
    2. பயங்கர தற்செயல்!!!!!''

      அப்போது ஒன்று செய்யலாம். எல்லாக் கேள்விகளையும் படித்துப்
      பாருங்கள். அதிலிருக்கும் நகைச்சுவை தெரியும்.
      குடும்பத்தில் தான் பதில் சொல்ல முடியாது. நட்புகளுக்குச் சொல்வது
      சுலபம்.:)

      நீக்கு
    3. ஹா...  ஹா...  ஹா...    அப்படிச் சொல்ல வர்றீங்களா?

      நீக்கு
  3. The picture. yes Freaking is the word. Just saw a
    face .This girl's positive face,. Wow fantastic.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் தெரளிவானதும், மெல்லக் கிளம்பி மேலே போகிறது. இல்லை?!!!

      நீக்கு
    2. ஆமாம் மா. இது போலப் பார்த்ததே இல்லை.
      யாரோ மேலே இருந்து நம்மைப் பார்ப்பது
      கொஞ்சம் திகில் தான்:)Illusion!!!

      நீக்கு
    3. //தெரளிவானதும்//

      'தெளிவானதும்' என்று படிக்கவும்!

      நீக்கு
  4. மூச்சை மறை//மூக்கை மறை?
    நல்ல சிந்தனை. கடைப் பிடித்தால் நன்றாக இருக்கும்.
    பத்திரிக்கைகளில் வரும்படங்களில் யாருக்கும் எந்தக் கவையும் இருப்பதாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..    விடும் மூச்சை மற்றவர்கள் மேலே படாமல் மறைக்கவேண்டும்!  ஆனால் மூக்கை மறை என்றும் சொல்லலாம்.

      நீக்கு
    2. ஓஹோ...சரிதான். நல்ல எண்ணம்.
      மறுபடியும் யார் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள்:)

      நீக்கு
    3. இதோ..  இப்போதுதான் செய்தி படித்துக் கொண்டிருக்கிறேன்.  கொரோனா நோயாளிகள் பேசினால் பத்து மீட்டர் வரை நீர்த்திவலைகள் பறந்து செல்கிறதாம்..  அதன் மூலம் பரவுகிறதாம்.  ஆனாலும் தமிழகத்தில் படிப்படியாகக் குறையத் தொடங்கி இருக்கிறது.  பார்ப்போம்.

      நீக்கு
    4. ஆமாம், ஶ்ரீராம், இந்த விஷயத்தை நானும் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அப்படி இருந்தால் தொற்று மிக மோசமாக இருக்க வேண்டுமே!

      நீக்கு
    5. ஆனால் வழக்கம்போல  இழப்புகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதும் தொடர்கிறது.

      நீக்கு
    6. ஆமாம், அதில் என்ன சந்தேகம்! (

      நீக்கு
  5. ஜீவி சாரின் குமுதம் தொடர் அற்புதம்.
    நாலணா குமுதம் நினைவில் இருக்கிறது. குமுதம் ஆரம்பித்து ஒரு வருடம் கழித்து தான்
    நான் பிறந்தேன்.
    அப்போது 58 59 இல் குமுதம் படிக்க ஆரம்பித்திருக்கலாம்.
    பி.எம் .கண்ணன் பெயர் நினைவில்.
    மாயாவி கலைமகள் எழுத்தாளர் என்று நினைத்தேன்.
    சித்திரத் தொடர்கள் நினைவில் இல்லை.
    ஆனால் பலப் பல புதிய உத்திகளைக்
    கையாண்டிருக்கிறார்கள்.
    திரைப்பட விமரிசனங்கள்
    இதில் கல்கி எதையும் அப்ரூவ் செய்யாது. விகடன் பரவாயில்லை.
    குமுதம் நச்.
    மிக நன்றி ஜீவி சார்.எல்லாம் அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எப்போக் குமுதம் படிக்க ஆரம்பிச்சேன் என்பதெல்லாம் நினைவில் இல்லை. என் நினைவில் வால்கள் என ராஜேந்திர குமார் எழுதியதும், அப்புசாமி/சீதாப்பாட்டி கதைகளை பாக்கியம் ராமசாமி என்னும் பெயரில் ஜராசு எழுதியதும் நினைவில் இருக்கின்றன. ஒரு வாரம் வால்கள் வந்தால் இன்னொரு வாரம் அப்புசாமி வருவார்! குமுதம் கேள்வி/பதிலிலோ அல்லது வாசகர் கடிதத்திலோ கூட இதைப் பற்றிக் கேட்டிருந்த நினைவு. வால்களைக் கண்டால் அப்புசாமிக்குப் பயமா என!

      நீக்கு
    2. குமுதம் என்ன? அப்போது ஆ.வி., கல்கி எல்லாவற்றிலும் சித்திரத் தொடர்கள் வந்தன. டாக்டர் கீதா என்றொரு சித்திரத் தொடர் ஆ.வி.யில் வந்தது. அதன் பின்னரோ/முன்னரோ "தேவனின்" துப்பறியும் சாம்பு தொடர் சித்திரத் தொடராக வந்தது. நான் முதலில் சாம்புவைப் படித்தது சித்திரத் தொடரில் தான் கல்கியிலும் "வாண்டுமாமா" எழுதினவை வரும். குமுதத்தில் புதிருக்குப் பெயர் ரஞ்சனா என்னும் சித்திரத் தொடர் வந்தது. என்னிடம் அதன் பைன்டிங்க் இருந்தது. தொலைந்து விட்டது. ஆனந்த விகடனில், சேகர்/சந்தர், முனுசாமி/மாணிக்கம், சண்முகசுந்தரம்/மீனாக்ஷி அம்மாள் என்னும் பெயர்களில் திரைப்பட விமரிசனங்கள் வந்து கொண்டிருந்தன.

      நீக்கு
    3. பி.எம்.கண்ணன் குமுதத்தில் எழுதிய நாவல்களை பைன்டிங்காக நிறையப் படிச்சிருக்கேன். மாயாவி குமுதத்தில் எழுதிய நினைவு இல்லை. எனக்குத் தெரிந்து அவரும் எல்லார்வியும் கலைமகளில் தான் அதிகம் எழுதுவார்கள்.

      நீக்கு
    4. ஆமாம் கீதாமா.
      குமுதம் சித்திரத் தொடர்களை விட
      கல்கி தொடர்கள் நினைவில்.
      விகடன் திரை விமர்சன சம்பாஷணைகளும்
      நினைவில். சமூகப் படம் என்றால்
      இளைக்னர்கள் இருவர் வந்து ஆங்கில வார்த்தைகள்
      உபயோகித்து பேசுவார்கள் இல்லையா.

      நீக்கு
    5. ஆமாம், சமூகப்படங்களுக்கு சேகர்/சந்தர் என்னும் பெயரில் வருவார்கள். கிராமியப் படங்கள் எனில் முனுசாமி/மாணிக்கம், அல்லது சண்முக சுந்தரம்/மீனாக்ஷி அம்மாள்

      நீக்கு
    6. குமுதம் விகடன் கம்பாரிசனில் குமுதம் ஒரு அடியாவது முன்னாலேதான் நிற்கும் போல....

      நீக்கு
    7. அப்படித் தெரியலை. அல்லது அந்த அளவுக்கெல்லாம் நான் ஆழ்ந்து குமுதம் படித்ததில்லைனு வைச்சுக்கலாம். பெரிய அளவில் குமுதம் பற்றிக் கருத்தெல்லாம் இல்லை. ஆனால் அப்போவே பிடித்த பத்திரிகைகளில் கலைமகள், அமுதசுரபி முதல் இடத்திலும், மஞ்சரி, கல்கண்டு இரண்டாம் இடத்திலும் ஆனந்த விகடன், கல்கி, குமுதம் மூன்றாம் இடத்திலும் இருந்தன. கலைமகள் இப்போவும் அதே போல் வருதானு தெரியாது. மொத்தக் கலைமகளையும் விடாமல் படிப்பேன். எனக்குக்கொஞ்சமானும் தமிழ் அறிவு இருந்தால் அதற்கு இந்தப் புத்தகங்களே காரணம்.

      நீக்கு
    8. கலைமகள் அமுதசுரபியில் துணுக்குகள் / ஜோக்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி..  சிலசமயங்களில்  இருக்கவே இருக்காது!  அப்போது அதெல்லாம் இல்லாமல் ஒரே எழுத்துகளை, பாராக்களாய் இருந்தால் படிக்க ஓடாது.  ஆனாலும் அவை தரமான பத்திரிகைகள் என்பதில் சந்தேகம் இல்லை.

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கி மன நிம்மதி அதிகரிக்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  7. எங்க வீட்டிலும் ஶ்ரீராம் சொல்லி இருப்பது போல் தினமும் ரங்க்ஸைக் கேட்டுப்பேன். அவர் தான் சமையல் திட்டமே சொல்லுவார். அதை மாற்றவெல்லாம் முடியாது! இஃகி,இஃகி,இஃகி! என் மாமனார்/மாமியார் முதலில் எல்லாம் அவர் சொல்கிறார் என்பதை நம்பவே இல்லை. பின்னர் தான் அவங்களுக்கும் தெரிய வந்தது. ஏனெனில் என் மாமனார்/மைத்துனர்கள்/நாத்தனார்கள் எல்லோரும் அம்மா என்ன சமைக்கிறாங்களோ அதைச் சாப்பிடுபவர்கள். இவரும் அம்மாவிடம் எதையும் சொல்ல மாட்டார். என் ஓர்ப்படி இப்போவும் இவர் சமையல் விஷயத்தில் தலையிடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவார். ஆனால் நம்ம ரங்க்ஸ் துவையல்/வத்தக்குழம்பு/பொரிச்ச குழம்பு/மோர்க்குழம்பு/ கலந்த சாத வகைகள் எல்லாமும் சாப்பிடுவார். என் மைத்துனர்கள்/நாத்தனார்கள் இவங்கல்லாம் சாம்பாரைத் தவிர வேறே எதையும் தொடக் கூட மாட்டார்கள். அதிலும் ரசம் என்றால் நிஷித்தம்! அவங்க வீடுகளுக்கு நாங்க சாப்பிடப் போனால் தான் ரசமே வைப்பார்கள். எங்க வீட்டில் ரசம் தான் சாப்பாட்டிலும் ரசம். இரண்டு பேருமே அந்த விஷயத்தில் ஒற்றுமை. வெறும் ரசமும்/அப்பளமும் இருந்தாலும் போதும் இரண்டு பேருக்குமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் அம்மா சமைப்பதுதான் சமையல்.  கேள்வி கேட்க யாருக்கும் தோன்றியதில்லை.  அந்தக்காலம் அப்படி என்பது மட்டுமில்லை, சூழலும் காரணம்,.  இருப்பதைக் கொண்டு ஒப்பேற்றிய காலங்கள் என்று சொல்லலாம்.  குறைந்த வருவாயில் நிறைய ஜீவன்கள் பசியாறவேண்டும்!  கல்யாணத்துக்கு அப்புறம் சிலசமயம் இபப்டி சுதந்திரம் கிடைக்கிறது!  அடகு இந்தப் பக்கமா, அந்தஓப் பக்கமா என்பது அந்தந்த இடத்தைப் பொறுத்தது!

      நீக்கு
    2. என் மாமனார் குளிக்கப் போகையில் தான் என்ன சமையல் என்றே கேட்டுவிட்டுக் குளிக்கப் போவார். நம்ம ரங்க்ஸ் அப்படி இல்லை. தான் சொன்னதைத் தான் சமைத்திருக்கேனா என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு குளிக்கப் போவார். இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    3. ..வெறும் ரசமும்/அப்பளமும் இருந்தாலும் போதும் இரண்டு பேருக்குமே!//

      ஆஹா.. ரசமும் அப்பளமுமாக ரஸமான தாம்பத்ய வாழ்க்கை !

      நீக்கு
    4. ஆனால் நான் சமையலைப் பற்றி மட்டுமே சொல்ல வரவில்லை!

      நீக்கு
    5. எல்லாமும் தான் ஶ்ரீராம். இருவரும் கலந்து ஆலோசித்து முடிவை மாமா எடுப்பார். நான் கையெழுத்துப் போட்டு ஆமோதிப்பேன். வெளியே சொல்லிக்கையில் என்னொட முடிவும் அதான் என்பது போல் சொல்லிப்பேனே! இஃகி,இஃகி,இஃகி! எங்க வீட்டில் நான் குடியரசுத்தலைவர் மாதிரி! கையெழுத்துப் போட மட்டும். மற்றபடி உள்/வெளி நாட்டு நிர்வாகம்/நிதித்துறை/பாதுகாப்பு/பிரதமர் எல்லாம் மாமாவே! போக்குவரத்து சில சமயங்களில் என் கைக்கு வரும். அதிசயமா!

      நீக்கு
    6. ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது...
      "எங்க வீட்டில பெரிய முடிவை எல்லாம் நான் எடுப்பேன்..  சில்லறை முடிவெல்லாம் என் மனைவி எடுப்பா.."
      "எப்படி?"
      "பிரதம மந்திரியின் வெளிநாட்டுப்பயணம் சரியா தவறா, அமெரிக்கா செய்தது தவறா என்று பெரிய முடிவெல்லாம் நான்தான் எடுப்பேன்.  இந்த வீட்டு செலவு, என் பஸ் செலவு என்று சில்லறை முடிவெல்லாம் என் மனைவி.."

      நீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  9. பகை வென்று பிணி வென்று
    பாரதம் எழுக இன்று..
    பாருலகு கேட்க்கும்படி சங்கொலி செய்திடு
    பண்பினில் வாழ்க நின்று..

    பதிலளிநீக்கு
  10. அறியாதன அறிந்தோம்.மிக்க நன்றி...வெட்கக் கேடு என்பது தாய் மகளுக்குக் கட்டிய தாலி என ஞாபகம்...வாழ்த்துகளுடன்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  12. என் மகன் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே,"உனக்கு லஞ்சுக்கு என்ன வேணும் இட்லியா? தோசையா?" என்று கேட்டால், அவன் இரண்டையும் விட்டு விட்டு மூன்றாவதாக பூரி என்பான். என் கணவர்,"அவனுக்கு சாய்ஸ் கொடுக்காதே, கொடுத்தால் அவன் கேட்பதை நீ செய்து கொடுக்க வேண்டும்" என்பார். ஆனால் நான் இன்று வரை சாய்ஸ் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவன் விருப்பத்திற்கேற்ப சமைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு சாய்ஸையும் விட்டு மூன்றாவது கேட்பதே சுவாரஸ்யம்!  கு ஒ க நினைவுக்கு வருகிறது!

      நீக்கு
    2. எங்க குழந்தைகளுக்குத் தயிர் சாதம் தவிர்த்து என்ன கொடுத்தாலும் கொண்டு போவார்கள். அநேகமாக சப்பாத்தி/சப்ஜி தான்! சில சமயங்கள் தக்காளி சாதம்/எலுமிச்சை சாதம்/வெஜிடபுள் சாதம் எனக் கொடுப்பேன். அன்னிக்குக் கொண்டு போனது பத்தலைனு சொல்லுவாங்க. விநியோகத்திற்குப் பின்னர் அவங்களுக்குக் கொஞ்சமாய்த் தான் கிடைக்குமாம்.

      நீக்கு
    3. நாங்களும் சரி, என் மகன்களும் சரி, பள்ளிக் காலங்களில் இதைக்கொடு, அதைக்கொடு என்று கேட்டதில்லை.  கொடுத்ததைக் கொண்டு போவார்கள்.  எலுமிச்சம்பழ சாதம் வைத்தால் மட்டும் முகம் சிணுங்குவார்கள்!

      நீக்கு
  13. அறிவுரை நான் சொன்னால் யார் கேட்பார்? என்றுதான் எனக்கும் தோன்றும். அறிவுரையாக இல்லாமல் பேச்சு வாக்கில் சொன்னதை எடுத்துக் கொண்டு,"நீ/நீங்கள் அன்னிக்கு சொன்னாயே/சொன்னீர்களே அதற்குப் பிறகுதான் இப்படி செய்கிறேன் என்பார்கள். அட! என்று நினைத்துக் கொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்றா...    அபப்டிக் கொடாஅ சொல்ல ஆள் இருக்கிறதே...   இங்கு நாம் சொல்லி நன்மை அடைந்திருந்தாலும், ஏதோ அவர்களே சொந்த முஅயற்சியில் செய்துகொண்டது போலதான் பேசுவார்கள்.

      நீக்கு
    2. நான் முன்னெல்லாம் வலியப் போய்ச் சொல்லுவேன். தப்பைத் தப்பு எனச் சுட்டிக்காட்டுவேன். வாங்கிக் கட்டிக் கொண்டாலும் விட்டதில்லை. அடடா! இது தப்பாச்சே என மனம் பதைக்கும். ஆனால் இப்போதெல்லாம் எதையுமே கண்டுக்கறதில்லை. கேட்டால் மட்டும் பதில்!

      நீக்கு
    3. ப்ராக்ரஸிவ் காம்ப்ரமைஸ்!

      நீக்கு
  14. குமுதத்தின் விமர்சனத்தை படித்துவிட்டு சினிமாவுக்கு சென்றவர்கள் நிறைய பேர் உண்டு. நான் விமர்சனம் எழுதும் பொழுது குமுதத்தின் விமர்சனத்தைைப் போல கடைசி வரியில் பஞ்ச் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.
    குமுதத்தின் தலையங்கம் படித்துவிட்டு தான் மற்ற பத்திரிகைகளிலும் தலையங்கம் படிக்க ஆரம்பித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...    நான் தலையங்கம் படிப்பதே இல்லை.   என் அப்பா தலையங்கம் மட்டுமே ஒரு தொகுப்பு எடுத்து வைத்திருந்தார்.  துக்ளக், குமுதம், விகடன் என...

      நீக்கு
  15. குமுதத்தின் சித்திர கதைகள் என்றால் எனக்கு நினைவுக்கு வருவது'க்வாக் சந்தரம்'தான்(நான் சின்னப் பொண்ணு)ஆ.வி.யில் சங்கரனும், கிங்கரனும்' இப்போது கிடைத்தால் கூட படிக்க ஆசை.


    பதிலளிநீக்கு
  16. // நம்ம யோசனையை எல்லாம் யார் கேட்கறா!?.. //

    அதானே!..

    பதிலளிநீக்கு
  17. ஜீவி அண்ணா அவர்களது குமுதம் பற்றிய நினைவலைகள் அருமை...

    பழையன ஏதேதோ நினைவுக்கு வருகின்றன..

    பதிலளிநீக்கு
  18. படத்தைப் பார்த்து விட்டு மேலே பார்த்தேன் எதுவும் தெரியவில்லை. என்ன தவறு?
    அனுஷ்கா வேண்டாம், குறைந்த பட்சம் ஒரு சமந்தா படமாவது போடலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானு அக்கா..   உங்கள் கண்களில் ஏதோ கோளாறு...    தெளிவாய்த் தெரிகிறது.

      நீக்கு
    2. எனக்கும் எதுவும் தெரியவில்லையே! போன தரமும் எதுவும் வரலை. இந்தத் தரமும் எதுவும் தெரியலை! என்ன காரணம்?

      நீக்கு
    3. நீங்கள் சரியாய்ப் பார்க்கவில்லை.  அதுதான் காரணம்!

      நீக்கு
    4. இப்போவும் பார்த்தேனே! :(

      நீக்கு
  19. குமுதம் பற்றிய தொடர் அருமை... யாராவது பழைய குமுதம் இதழ்களை ஆன்லைனில் ஏற்றினால் படிக்க சுவாரசியமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேடினால் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.  குமுதம் பக்கங்கள் எல்லாம் அநியாயத்துக்கு குட்டி எழுத்துகளாய் இருக்கும்!

      நீக்கு
  20. எங்க வீட்டில் சமையல் மெனு நான் சொல்வதுதான். இப்போ மாலை உணவு எனக்கு மட்டுமாவது நான் சொல்வதுதான்.

    எங்கம்மா, அப்பாவிடம் கேட்டுக் கேட்டு சமையல் செய்து சொந்தமா யோசிக்கவே வரலை என்பார்.

    நானே மெனு சொல்லும்போது எனக்குப் பிடித்தவைகள் மட்டும்தான் இடம்பெறுவது கொடுமை (என இப்போ நினைத்துக்கொள்கிறேன்).

    எனக்கு இருக்கும் கெட்ட வழக்கம், இது செய்யப்போகுறார் எனத் தெரிந்துவிட்டால் சொல்லிவிட்டால் அதை மாற்றக்கூடாது. சாப்பிட வந்தபிறகு மெனு மாறியிருந்தால், என்னதான் எனக்குப் பிடித்தது என்றாலும், பிடிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சாப்பிட வந்தபிறகு மெனு மாறியிருந்தால், என்னதான் எனக்குப் பிடித்தது என்றாலும், பிடிக்காது.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதில இருந்து என்ன தெரியுதெண்டால், சமையலுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பதுப்ooொஅ ஒரு விசிட்டர் போல எல்லோ இருக்கிறீங்க:)).. அப்ப அப்ப கிச்சினுக்குள் போகோணும் என்ன நடக்குதெனப் பார்க்கோணும்... உப்புப் புளி போதுமோ என ரேஸ்ட் பார்த்து யெல்ப் பண்ணோனும்:)).. அப்போ சமையல் மாறினாலும் தெரிஞ்சிடுமெல்லோ..:)

      நீக்கு
    2. அல்ல்ல்ல்ல்ல்லோ... நீங்க யாருன்னே எனக்கு நினைவில்லை.. பலவருடங்களுக்கு முன்னால பார்த்திருப்பேனோ.. பேசியிருப்பேனோ... விளம்பர நிர்வாகிக்கு காசு கொடுக்காமல் ஏமாற்றியதால், எதற்கும் இப்போது விளம்பரம் கொடுப்பதில்லை போலிருக்கு. கோபு சார் மாதிரி மொத்தமா காணாமல் போகாதீங்க. பதிவு எழுதுங்க.

      என் வசம் கிச்சன் சில நாட்கள் வரும். இந்தத் தடவை ரவா தோச நல்லா இருந்ததுன்னு பசங்க சொன்னாங்க.

      எல்லா ஆண்களும் சமையல் வேலை கத்துக்கணும், கண்டிப்பா மாதம் 5 நாட்களாவது முழுமையா கிச்சன் வேலைகளையும் செய்யணும். அப்போதான் அது எவ்வளவு கடினமான வேலை என்று புரியும். பேச்சலரா இருந்து சமைப்பது வேறு, குடும்பத்துக்குச் சமைப்பது வேறு. பேச்சலர்னா, சரி..மோர்சாதம் போதும், இல்லை வெறும் சப்பாத்தி போதும்னு நினைக்கலாம். குடும்பத்துக்கு என்றால் ஏதேனும் பண்ணித்தான் ஆகணும். கிச்சனை நீட்டா வச்சுக்கணும். அதுனால் எனக்கு மனைவியின் கஷ்டம் புரியும். பல நாட்களில் நானே காலையில் கிச்சனில் நுழைந்து, ஏதேனும் கூட்டு குழம்பு பண்ணிட்டு மிகுதியை அவளைப் பண்ணச் சொல்வேன், இல்லைனா காய்கறிகளையாவது திருத்தித் தருவேன்.

      அது சரி..அதுக்கும் மெனுவில் ஸ்டிரிக்ட் ஆக இருப்பதற்கும் என்ன ஜம்பந்தம்?

      நீக்கு
    3. சுவாரஸ்யம்தான்.   ஆனால் நான் சமையல் பற்றி மட்டுமே சொல்ல வரவில்லை!

      நீக்கு
    4. ஊர்ப்பெயரை வச்சுக்கொண்டு ஊர்ப்பக்கமே போகாமல் இருப்பவரை நான் மறக்கவே இல்லை ஆக்கும்:)).. நேக்கு நியாஆஆஆபக ஜக்தி அதிகம் ஹா ஹா ஹா:)).

      சமைக்கச் சொல்லவில்லை நெல்லைத்தமிழன், நான் சொல்வது, மனைவி சமைக்கும்போது கிச்சினுக்குள் போங்கோ பேசிக்கொண்டிருங்கோ.. அப்படிச் சொல்கிறேன்.

      ஏனெனில் பல ஆண்கள் கிச்சினுக்குள் போவதில்லை.. சமைத்தால்தான் போகவேணுமெண்டில்லை... சமைப்பவரோடு பேசிக்கொண்டிருந்தாலே சமையல் அலுப்பு தெரியாதாக்கும்:)).. ஆனாலும் அறிஞ்சிருக்கிறேன், சில பெண்களுக்கு தாம் சமைக்கும்போது வேறு ஆரும் அங்கு வருவது பிடிப்பதில்லை என... ஒவ்வொருவர் ஒவ்வொரு விதம்.

      நீக்கு
    5. எங்கள் வீட்டைப் பொறுத்த வரை சமைக்கும் ஆளோடு பேச நான் ரெடி..   ஆனால் பாஸ் ரெடியாயில்லையே...  அவர் ஒரு கையில் எப்போதும் அலைபேசி இருக்கும்.  யாருடனாவது அளவளாவிக் கொண்டே இருப்பார்.  நான் பேச அப்பாயிண்ட்மெண்ட் வாங்கணும்!

      நீக்கு
    6. ஹாஹாஹா, என்னோட கடைசி நாத்தனார் இந்த மாதிரித் தான்! காலை ஏழு ஏழரைக்கு எழுந்து கொண்டு காஃபி குடிக்கத் தம்பளரோடு அலைபேசியும். கீழே வைக்கவே ஒரு மணி நேரம் ஆயிடும். சமைக்கையில் சுமார் ஒரு பத்து/இருபது நபர்களாவது கூப்பிட்டிருப்பார்கள். மத்தியானம் படுக்கையில் ம்யூட்டில் வைப்பார். இல்லைனா அந்நேரமும் வரும். இவரும் சளைக்காமல் எல்லோரையும் கூப்பிட்டுப் பேசுவார்.

      நீக்கு
    7. கடைசி நாத்தனார்னு பாஸைத்தான் சொல்கிறீர்களோ...    அப்படியே பொருந்துகிறது...   இதோ இப்போ கூட....!

      நீக்கு
    8. :))).. அப்போ கஸ்டம்தேன்:)).. பேசாமல் கொஞ்ச நாளைக்கு வேணுமெண்டே, வேலை செய்யாத ஒரு ஃபோனைக் கையில வச்சு, நீங்களும் பேசிக்கொண்டிருங்கோ:)) ஸ்ரீராம்.. அப்போ உடனே ஓடி வந்து உங்களோடு பேசத் தொடங்குவா:))) ஹா ஹா ஹா...

      நீக்கு
    9. இதோ இப்போ கூட....!//

      ஹா ஹா ஹா ஹா அப்ப அது நான் தான்னு நினைக்கிறேன்!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    10. ///வேலை செய்யாத ஒரு ஃபோனைக் கையில வச்சு, நீங்களும் பேசிக்கொண்டிருங்கோ:)) ஸ்ரீராம்.. //

      noo :) பூனை பேச்சை கேட்டு இப்படி  செய்ஞ்சீராதிங்க :) டோன்ட் டேக் ரிஸ்க் ஸ்ரீராம் :)

      நீக்கு
    11. விபரீதம் நடந்தே விட்டது...  ஒரு போனை கையில் வைத்து காதில் வைத்துக் கொண்டே இருந்தேன்.  திடீரென அது அடித்துத் தொலைக்க சக்கையாக மாட்டிக்கொண்டேன்.  இப்போது தஞ்சம் தேடி மொட்டை மாடியில் ஒளிந்து கொண்டிருக்கிறேன்!

      நீக்கு
    12. ///இப்போது தஞ்சம் தேடி மொட்டை மாடியில் ஒளிந்து கொண்டிருக்கிறேன்!

      ////

      ஹையோ ஆண்டவா:)).. காலையிலேயே மெகா ரிவியில அந்த கொண்டை வ்வச்ச அங்கிள் ஜொள்ளிட்டார்ர்:)).. பிள்ள உனக்கு வாயில கண்டம்:) எங்கும் போகாதே என.. நான் கேட்டனா.. கேட்டனாஆஆஆஆஆ:)))... இப்போ ஓடிப்போய் எங்கின ஒளிப்பேன் நான்:)).. இங்கின மொட்டை மாடியும் இல்லை முருங்கி மரமும் இல்லையே:)).. அஞ்சு வீட்டுக் கிச்சின் கபேர்ட் லதான் ஒளிக்கப்போறேன்ன்:))

      நீக்கு
  21. பெண்கள் நுண்ணுணர்வு மிக்கவர்கள். ஆனால் சந்தேகம் உடையவர்கள், இப்படிச் செய்யலாமா இல்லை அப்படியா என. அதுக்குத்தான் நம்மிடம் பேசி ஒபினியன் வாங்குவார்கள். நாம் நாட்டாமை என நினைத்துக்கொண்டு பதில் சொல்வதைவிட உனக்குச் சரி என்பதைத் செய் என்று சொல்லித் தப்பிக்கலாம்.

    அபூர்வமாத்தான் நிஜமாக நம்மிடம் யோசனை கேட்பார்கள். அவர்களுக்குத் தெரியும், சம்பாதிப்பதைவிட வேறு எதுவும் இந்த ஆளுக்குத் தெரியாது என்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெண்கள் நுண்ணுணர்வு மிக்கவர்கள். ஆனால் சந்தேகம் உடையவர்கள், இப்படிச் செய்யலாமா இல்லை அப்படியா என.///

      தெளிவாத்தான் ஆரம்பிக்கிறார் ஆனா டப்புதப்பா முடிக்கிறார் கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா அதுக்குப் பெயர் சந்தேகம் இல்லை.. நான் கவனிச்ச அளவில பெண்கள் வந்து வருங்காலத்தையும் சேர்த்தே சிந்திக்கிறோம், ஆனா ஆண்கள் இப்போதைய, இன்றைய நிலைமையை மட்டுமே சிந்திக்கின்றனர்.. அதனாலதான் பெண்களுக்கு டிசைட் பண்ணத் தெரிவதில்லை, கேட்டுக் கேட்டே செய்கிறோம் என நினைக்கிறேன்.

      ஆண்கள் அப்படி இல்லை, இப்போ பசிக்குதா, சாப்பிட்டால் போச்சு என நினைக்கின்றனர், நாங்க அப்படி இல்லை, சாப்பிட்டால் என்ன ஆகும்.. நாளைக்கு கோல்ட் ஆகிட்டால் இப்பூடி எல்லாம் ஜிந்திப்போமாக்கும்:)) ஹா ஹா ஹா...

      நீக்கு
    2. இங்கு யோசனை யோசனையாக கேட்பார்கள்.  அதைப் பினபற்றவும் செய்வார்கள்.  ஆனால்..   ஆனால்...

      நீக்கு
    3. பொதுவாகப் பெண்களுக்கு ஓர் உள்ளுணர்வு அவ்வப்போது எச்சரிக்கைக் குரல் கொடுக்கும். அதைப் புரிந்து கொண்டு நடந்தாலே போதும். ஆனாலும் சில/பல சமயங்களில் நம்ம ரங்க்ஸ் அதை எல்லாம் நம்புவதே இல்லை. பின்னால் நடக்கும்போது அ.வ.சி. தான்!

      நீக்கு
    4. உண்மை.  எனக்கு அனுபவம் உண்டு.  பாஸ் சொல்லும் சிலவற்றை உடனே கேட்டு விடுவேன்.

      நீக்கு
    5. ரங்க்ஸ் நான் சொல்லும்போது சிரிப்பார் கிண்டலாக! :( பின்னால் நம்புவார்னு நினைக்கறீங்க? அதெல்லாம் இல்லை, தலையை ஆட்டிவிட்டுப் பேசாமல் இருந்துடுவார். அப்போவும் ஒரு சிரிப்பு. அதான் அ.வ.சி.னு வைச்சுப்பேன்.

      நீக்கு
    6. ஹா ஹா ஹா கீசாக்காவும் மாமாவும் எப்பவும் ரொம் அண்ட் ஜெரி தான் போலும்:).. எங்கட வீட்டிலும் இது உண்டு, எனக்குப் பிடிக்காமல் அல்லது, எனக்குப் பிடிக்கவில்லை இருப்பினும் நீங்கள் ஓவரா ஆசைப்படுறீங்களே என்பதற்காக பெமிசன் தாறேன் எனச் சொல்லி ஒரு அலுவல் நடக்க விட்டால்.. அது சரியாவே வராது:))..

      நீங்க சொன்னது சரிதான்.. என என்னிடமே வந்து சொல்வார்கள்:))).. பிள்ளைகளும்..

      நீக்கு
    7. அதே அதே பெண்களுக்கு உள்ளுணர்வு உண்டு ஆனால் ஸ்ரீராமின் பதிவின் முதல் வரியைத்தான் நான் இங்கே சொல்லிக்கணும்!!!!!!!!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    8. மஹாராணி செஃப் அவர்களே என்ன உங்கள் யுட்யூப் புதுசு போடலையா? இல்லை எனக்குத்தான் அப்டேட் ஆகலையோ...பாகற்காய் பார்த்ததோடு சரி..ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து

      கீதா

      நீக்கு
    9. @கீதா இப்போ அம்பரல்லாங்காய் ல இருக்கு .நானேதான் பதிவும் போடாமா யூ டியூப் அப்டேட்டும் கொடுக்காம விட்டுட்டேன் 

      நீக்கு
    10. ஆனால் ஏஞ்சல்..    நான் அதிஸ் பேலஸ் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.  மீன், மட்டன், கருவாடு என்று கனஜோராக சென்று கொண்டிருக்கிறது!  நடுவில் கத்தரிக்காய் பீஸா வேறு...

      நீக்கு
    11. கூப்பிடுங்கோ அஞ்சுவை:)) அஞ்சூஊஊஊஊஊஊ நான் எப்போ கருவாடு போட்டேன்ன்ன்ன்ன்ன்ன்?:)).. ஒரு மாதம் முன்பே செய்து வச்சிருக்கிறேன் போடவென:) அது மணத்துவிட்டுதோ ஸ்ரீராமுக்கு:)).. எதுகை மோனையா அடிச்சு விட்டிருக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    12. ஸ்ரீராம், நானும் இப்போதான் ஊரியூப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அறிஞ்சு வாறேன்ன்..
      அதில என்னடாண்டா.. சப்ஸ்கிரைப் பண்ணி, பின்பு பெல் பட்டினைத் தட்டி விடோணும்.. அதில கூட, பெல்லைக் கிளிக் பண்ணி all என இருப்பதையும் தட்டினால்தான் எல்லா வீடியோக்களும் ஒழுங்கா நோட்டிபிகேசன் வருது ஹையோ ஹையோ:))...

      நீக்கு
    13. //Thulasidharan V Thillaiakathu27 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 5:17
      மஹாராணி செஃப் அவர்களே என்ன உங்கள் யுட்யூப் புதுசு போடலையா?///

      நேக்கு ஒரே வெய்க்கம் வெய்க்கமா வருதே:)) கீதா:)))...

      பெல் பட்டினைத் தட்டுங்கொ கீதா:))) சே சே முந்தி ஒருகாலம் தமிழ்மணத்தில வோட் போடுங்கோ என எல்லோரையும் மிரட்டிக் கொண்டு திரிஞ்சேன்:)).. இப்போ என்னடாண்ணா.. சப்ஸ்கிரைப் பண்ணுங்கோ எனக் கூவ வச்சிட்டாரே அந்தத் திருச்செந்தூர் கிழக்கு வைரவர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அவருக்கு ஒரு வடைமாலை விரைவில போடோணும்:))

      நீக்கு
    14. அதெல்லாம் முதல் தடவையே செய்தாச்சு அதிரா...    நான் சில வருடங்களாகவே பல சேனல்களுக்கு சப்ஸ்க்ரைப் செய்து வைத்திருக்கிறேன்.  இப்போ உங்கள் சேனலுக்கே பாருங்க..   ஏஞ்சல் சொல்லாமல் நானேதான் வந்தேன் இல்லையா?

      நீக்கு
  22. இங்கும் எங்கும் - எதையும் தாங்கும் இதயத்தை உருவாக்குபவர்களும் அவர்கள் அல்லவா...? இவ்வகை உரையாடல்கள், அலுவலகம் உட்பட பல இடங்களில் நம்மை மேம்படுத் / தலாம் / தும் / த வேண்டும்...!

    தங்கச்சாவி - பாஸ்வேர்ட் - வியப்பு...!

    நரக வாழ்க்கை ஜூன் 18 முடிவுக்கு வரும் என நற்செய்தி வந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நன்மை கொடுக்கிறது DD.  நாம் எப்படி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்கிற பாடத்தைக் கற்றுத் தந்து நன்மை கொடுக்கிறது!

      நீக்கு
  23. அண்ணாமலை+ரங்கராஜன்+சுந்தரேசன்=அரசு என்றுதான் பெரும்பான்மையோர் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.ஜீ.வி.சாருமா? அப்படி கிடையாது, எஸ்.ஏ.பி. மட்டுமே அரசு பதில்களை எழுதினார் என்பது பின்னால்தான் தெரிந்தது. அவருக்குப் பிறகு வேறு யார் யாரோ அரசு பதில்கள் என்ற பெயரில் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, மூவருமே இணைந்துதான் அரசு உருவானார் என்று நானும் படித்திருக்கிறேன்.

      நீக்கு
  24. திண்டுக்கல்லாரை வழி மொழிகின்றேன்

    பதிலளிநீக்கு
  25. தலையை தலையை ஆட்டுவதோடு சரி! //

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ சிரிச்சு முடில ஸ்ரீராம் (என் கதை உங்களுக்குச் சிரிப்பா போச்சா கீதா ன்னு உங்க மைன் வாய்ஸ்!!!)

    ஸ்ரீராம் இப்படி நீங்க தஞ்சாவூர்னு (மதுரை அப்புறம்தானே..) அப்பட்டமா சொல்லலாமோ!!!( தஞ்சாவூரு பொம்மை தலையை ஆட்டும் பொம்மை!ஹா ஹா ஹா)

    உரையாடல்களை ரொம்ப ரொம்ப ரசித்தேன். ஸ்ரீராம். இது பெரும்பாலும் வீடுகளில் வீட்டுக்கு வீடு வாசப்படி!!

    கீதா

    பதிலளிநீக்கு
  26. "நம்ம யோசனையை எல்லாம் யார் கேட்கறாங்க... "//

    ஹாஹாஹா அதானே! ஸ்ரீராம் இனிமேல் ஒரு சாச்சுட்டரி வார்னிங்க் கொடுத்துட்டு, பசங்களை சாட்சியா வைச்சுக்கிட்டு பதில் சொல்லுங்க!!!! ஹிஹிஹி..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாமும் நடக்கும்.  அப்புறமும் நடக்கும்!

      நீக்கு
  27. கவிதை நல்லாருக்கு. வேதனையுடனான கவிதை வரிகள் ஸ்ரீராம். ஆம் நரகமான வாழ்க்கை.
    மூச்சை மறைத்துக் கொண்டு, பேச்சைக் குறைத்துக் கொண்டு, முகத்தை மூடிக் கொண்டு, 364.7 கி மீ தூரம் தள்ளி நின்று என்றாலும், அந்த மாயாவி ஒட்டிக் கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணராமலேயே/உணர்ந்தும் வாசிக்கிறேன்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  28. மதுரையா?.. சிதம்பரமா?..

    ஏன்.. திருச்செங்கோடா இருக்கக் கூடாதா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன்..அம்பேரிக்காவாக இருக்கக்கூடாதா?

      நீக்கு
    2. அம்பேரிக்காவில் ஆளுக்குப் பாதி... ன்னு இருக்கா!?..

      நீக்கு
    3. வொய் நாட் கிணத்துக்கடவு?  ஏன்னா, தஞ்சாவூர்ன்னா தலையாட்டி பொம்மைன்னு சொல்லலாம்.  மதுரைன்னா மீனாட்சி ஆட்சின்னு சொல்லலாம்.  சிதம்பரம்னா ஆட்டமா ஆடறார் நடராச ஐயான்னு சொல்லலாம்.  மற்றவற்றை என்ன சொல்ல!

      நீக்கு
    4. ஏன் திருநெல்வேலியா இருக்கப்பிடாதோ?:)))))

      நீக்கு
    5. நான் பலரிடமும் நாங்க திருச்செங்கோடு என்றே சொல்கிறேன்.

      நீக்கு
    6. ஊத்துக்குளியாய்க் கூட இருக்கலாம்...   தப்பில்லே!!!

      நீக்கு
    7. ஊத்துக்குளின்னா வெண்ணெயா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    8. அட, ஜோக்குக்குச் சொன்னேன்.. 

      நீக்கு
    9. எல்லாரும் ஊர் பேரை எதுக்கு சொல்றாங்கன்னு புரியலை எதுக்கும் நானும் பொதுவா லண்டனு சொல்லிவைக்கிறேன் :) 

      நீக்கு
    10. ஹா...  ஹா...  ஹா...    நெசம்மா புரியலையா ஏஞ்சல்?

      நீக்கு
  29. நம் வீட்டில் நான் சாய்ஸ் கேட்டுத்தான் சமைப்பது. மகன் என்றால், எது வேணா செய்மா என்பான் ரொம்ப அரிதாக இது சாப்பிட்டு ரொம்ப நாளா ஆயிடுச்சு ஸோ அதைச் செய்யேன் என்பான். 99% வீட்டுத் தலைவர் சொல்வதுதான் செய்யப்படும்.

    இதனால் எனக்கு நேரும் நேர்ந்த அவஸ்தை, சென்னையில் இருந்தப்ப மாமியார் வீட்டில் சமைக்கறப்ப என் மைத்துனரிடம் என்ன சமைக்கட்டும் மெனு சொல்லிடுங்க என்றால், "இந்த பாருங்க எங்கிட்ட கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது...உங்களுக்கு என்ன தோணுதோ செய்ங்க" என்பார்.

    நான் அப்புறம் அவரிடம் கெஞ்சி...ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க எனக்கு கேட்டுச் செய்துதான் பழக்கமாகிடுச்சு..மெனு நீங்களே சொல்லிடுங்க என்று வீட்டிற்குள் நுழையும் போதே சொல்லிவிடுவதுண்டு!! ஹா ஹா...இது யார் வீட்டுக்குப் போய் கிச்சனுள் நுழைந்தாலும் சரி...

    அது போல ஃபேன் போட்டுக்கவா என்றால் மைத்துனர் பதிலே சொல்ல மாட்டார். கோபப்படுவார். சின்ன சின்ன விஷயத்துக்கும் ஏன் கேள்வி..எனக்குக் கேள்வி கேட்பது பிடிக்காது என்பார்.உங்களுக்கு வேணும்னா போட்டுக்கோங்க என்பார். ஆனால் எனக்கு அவர்களுக்குக் கரன்ட் செலவு ஆகுமோ அல்லது அவர்களுக்கு ஃபேன் வேண்டாமோ இடைஞ்சலா இருக்கக் கூடாதே என்று தோன்றுமா அதனால் அனுமதி கேட்பதுண்டு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கு அவர்களுக்குக் கரன்ட் செலவு ஆகுமோ அல்லது // - நான் அடுத்தவர் வீட்டுக்குச் சென்றால் இதையெல்லாம் யோசிப்பேன். அதனால் கம்ஃபர்ட் இல்லாமலேயே இருந்துவிடுவேன்.

      என் வீட்டிலேயே ஃபேனைப் போட்டால் உடனே ஆஃப் பண்ணு, லைட்டை தேவையில்லாமல் போடாதே என்றெல்லாம் சொல்லுவேன். நான் இவற்றை ஸ்டிரிக்டாகக் கடைபிடிப்பேன்.

      நீக்கு
    2. கீதா..   எனக்கும் பேன் போட்டுக்கவா, லைட் போட்டுக்கவா என்றெல்லாம் கேட்டுகேட்டுச் செய்தால் பிடிக்காது. இதிலென்ன கேள்வி என்றுதான் தோன்றும்!

      நீக்கு
    3. எல்லோருமே ஶ்ரீராம் சொல்றாப்போல் நினைப்பாங்களா என்ன? சிலருக்கு வந்த இடத்திலும் அவ இஷ்டத்துக்கு இருக்கா பாருனு தோணும். ஆகவே நானெல்லாம் அவங்களையே போடச் சொல்லிடுவேன். ரொம்ப வேர்க்குது! ஃபான் போட முடியுமானு கேட்பேன்.

      நீக்கு
    4. சரி..    நானும் உஷாராயிருக்கேன்!

      நீக்கு
    5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    6. அட, நெசமாத்தான் சொல்றேன்.  கிண்டல் எல்லாம் இல்லை.

      நீக்கு
    7. ஸ்ரீராம் நம் வீட்டில்னா ஓகே மற்ற வீட்டிற்குப் போறப்ப...

      ஆனா நாங்க யாராவது கேட்ட இதென்ன கேள்வி ஃப்ரீயா இருங்க...உங்க வீடுதான் என்று சொல்வது ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    8. ஓகே கீதா...   ஒத்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  30. அவ்விடத்தில மருதையா.. சேம்பரமா?..

    தஞ்சாவூரு!..

    நல்லாயிருப்பீங்க!

    பதிலளிநீக்கு
  31. ஜீவி அண்ணா வின் குமுதம் தகவல்கள் செம. ரசித்தேன். வீட்டில் கல்கி, அமுதசுரபி, கலைம்களேனும் எப்பவாச்சும் வீட்டிற்கு வரும் உறவினர்கள் யாரேனும் கொண்டுவந்தால் உண்டு இல்லை என்றால் அதுவும் இல்லை குமுதம் எல்லாம் கள்ளத்தனமாகப் பார்த்ததுதான். அப்படி எப்போதேனும் பார்த்ததில் அறிந்தவை அப்புச்சாமி, சீதாப்பாட்டி கதைகள் - பாக்கியம் ராமசாமி/ஜராசு

    ஹேமா ஆனந்ததீர்த்தன், சாண்டில்யன், கோமதி சுவாமிநாதன், கோமல் சுவாமிநாதன், ராகிர பற்றி சிறிய அறிமுகம், படைப்புகள் என்று அதிகம் படித்ததில்லை என்றாலும் பலரின் பெயர்கள் அறிய முடிந்தது.

    எனக்குக் குமுதம் பிடித்திருந்தது. ஜனரஞ்சகம், சுவாரசியம் என்பதாலோ என்னவோ. அரசு பதில்கள் ரொம்பப் பிடிக்கும் அது போல சினிமா விமர்சனம். ஆனால் தொடர்ந்து வாசிக்க எல்லாம் கிடைத்ததில்லை. வீட்டைப் பொறுத்தவரை குமுதம் ஒரு குப்பை, தேர்ட் க்ரேட் மேகசின்...என்றெல்லாம் சொல்லி தடா போட்டுருவாங்க!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டில் குமுதமும் கற்கண்டும் தொடர்ந்து வாங்கினார் அப்பா.  நாங்களே அந்தக் கிழமை வந்ததும் ரோடு கடைக்குச் சென்று வாங்கி வந்து விடுவோம்.  வாங்கிக்கொண்டு சாலையில் நடந்து வரவே பொறுமை இருக்காது.  வீட்டுக்கு ஓடி புத்தகத்தைப் பிரிக்கும் ஆர்வம்!  கூடவே அவ்வப்போது அம்பது காசு கொடுத்து முத்து காமிக்ஸும் வாங்குக!  அவற்றை நாங்கள் படிப்பது பற்றி அப்பா ஒன்றும் சொன்னதில்லை.

      நீக்கு
    2. ஹேமா ஆனந்ததீர்த்தன் அதிகம் படித்ததில்லை. மஞ்சள் பத்திரிகை எழுத்தாளர் என்பார்கள். சாண்டில்யன் நாவல்களை எல்லாம் நான் கல்யாணம் ஆனப்புறமாத் தான் படிக்கவே ஆரம்பித்தேன். அந்தப் பக்கங்கள் எல்லாம் கிழிச்சிருப்பாங்க வீட்டில்/பைன்டிங் காரணம் ஒன்று/நான் படிக்கக் கூடாது என்பது இன்னொன்று!

      நீக்கு
    3. ஹேமா ஆனந்ததீர்த்தன் - துர்வாசர் சண்டை ஒன்று இருக்கிறது.  யார் யார் படித்திருக்கிறீர்கள்?

      நீக்கு
    4. அதைப் பற்றி துக்ளக்கில் படித்த நினைவு இருக்கு.

      நீக்கு
    5. அதேதான்.   அதைப் பகிரும் எண்ணம் ஒரு வருடமாய் என்னிடம் இருக்கிறது.   பொறுமையும், நேரமும் கிடைக்கவில்லை!

      நீக்கு
    6. ஹேமா ஆனந்ததீர்த்தன்-துர்வாசர் சண்டை நினைவில் இல்லை, ஹேமா ஆனந்ததீர்த்தன் கோவி.மணிசேகரன் சண்டை நினைவில் இருக்கிறது. குமுதத்தில் சந்திக்கிறார்கள் என்னும் தலைப்பில் பிரபலங்களை சந்திக்க வைத்து, அதைப் பற்றி பால்யூ கட்டுரை எழுதுவார். அதில் கோவியும், ஹேமா.ஆ.வும் சந்தித்தப் பொழுது கோவி, ஹே.ஆ.வை செக்ஸ் எழுத்தாளர் என்று சாட, அதை ஏற்றுக் கொண்டார்.

      நீக்கு
    7. ஹேஆ செக்ஸ் எழுத்தாளரா! இப்படியெல்லாம் குற்றச்சாட்டா?

      நீக்கு
    8. ஏகாந்தன், உங்களுக்குத் தெரியாதது ஆச்சரியமே! மோசமான எழுத்தாளர் என்று சொல்லுவார். துக்ளக்கில் அவரைக் குறித்து வெளுத்து வாங்கி இருந்தாங்க. அவரும் பதில் சொன்னதாக நினைவு. மிக மட்டமான எழுத்து என்றும் கேள்வி.

      நீக்கு
    9. ஹே ஆ ஆமாம் கீதாக்கா சொல்லிருப்பது போல் அவரை அப்படித்தான் சொல்லுவதுண்டு. அதனாலேயே நம் வீட்டில் தடைகள் பல. எந்த இதழும் வீட்டிற்குள் வராது. வந்ததில்லை.

      கீதா

      நீக்கு
    10. ஹே ஆ கதை எதுவும் நான் படித்ததில்லை.  சமீபத்தில் புத்தகங்கள் அடுக்கிக் கொண்டிருக்கும்போது இந்தச் சண்டை மட்டும் மேலோட்டமாகப் பார்த்தேன்!

      நீக்கு
  32. அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு மேலே பார்த்ததும் ஆ! அழகான பெண் முகம் இந்தப் பெண்ணேதான் நல்ல முழுமையாக. தெரிந்த முகமாக இருந்தாலும் சொல்லத் தெரியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிந்த முகமா?   யாராக்கும் அது!

      நீக்கு
    2. எனக்கு எதுவுமே தெரியலை!

      நீக்கு
    3. அந்தப் படத்தின் மூக்கில் இருக்கும் மூன்று புள்ளிகளை இருபது முப்பது நொடிகள் உற்றுப் பார்த்து பின்னர் நீங்கள் எதிரே சுவரைப் பார்க்கும் இடம் கொஞ்சமாவது இருட்டாய் இருக்கட்டும் கீதா அக்கா.  மறுபடி முஅயற்சித்துப் பாருங்க!

      நீக்கு
    4. இருட்டாய் இருக்கணுமா? இங்கே ஒரே வெளிச்சம்! அதானோ என்னமோ தெரியலை.

      நீக்கு
  33. அந்தப் பெண்ணின் படம் முழுமையாகத் தெரிந்ததும் அப்படியே மேலே செல்கிறது. க்ளியரா தெரியுது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், படம் தெளிவானதும் ஒரு நொடி நின்று அப்புறம் மேலே ஓடி மறைந்து விடுகிறது!!!  பாவம் பானு அக்காவுக்கு மட்டும் தெரியவில்லையாம்!

      நீக்கு
    2. கீதாக்கா நாம் மட்டும் தான் அந்த //The Emperor's New Clothes// கதையில் வர்ற குட்டி பிள்ளை ஹாஹாஹா :) எனக்கும் ஒண்ணுமே தெரில எங்க வீட்டு கூரை மட்டுமே டிஸைனா தெரியுது 
      //

      நீக்கு
  34. ஹா ஹா ஹா சம்பாசனை அழகு ஸ்ரீராம்... கேட்டுக் கேட்டுச் செய்தாலும் தப்பு என்பீங்க:)) கேளாமல் செய்தாலும் சொல்லுவீங்க.. “நான் ஒரு ஆம்பிஅளை எண்டு எதற்கு வீட்டில இருக்கிறேன்:) என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமெல்லோ” இப்படியும் பதில் சொல்லுவீங்க:)) ஹையோ ஹையோ:))... அனைத்தையும் ரசித்தபடி போய்க்கொண்டே இருந்திட்டால் வாழ்க்கை ஒரு மகிழ்ச்சிப் பூங்காதான்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...   நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு திடீர் விசிட்!   நான் அப்படியெல்லாம் என்னைக் கேட்டுதான் செய்யவேண்டும் என்று சொல்ல மாட்டேன் அதிரா...   தொந்தரவு செய்யாமலிருந்தால் போதும்!!!

      நீக்கு
    2. யூ ட்யூப் செஃப் இங்கே எங்கே வந்தாங்க? ஆனாலும் அவங்க சொல்லுவது சரிதானே!

      நீக்கு
    3. அதிரா என்னிக்கி தப்பா சொல்லி இருக்காங்க கீதா அக்கா?!

      நீக்கு
    4. ///அதிரா என்னிக்கி தப்பா சொல்லி இருக்காங்க கீதா அக்கா?!///

      ஹா ஹா ஹா இந்த வசனத்தை நான் எங்கட வீட்டிலும் அடிக்கடி கேட்டதுண்டு:))...

      அது தொந்தரவு என ஏன் நினைக்கிறீங்க ஸ்ரீராம்:)) இப்போ எனக்குப் புரிஞ்சு போச்சு அண்ணி ஏன் எந்நேரமும் ஃபோனுடன் இருக்கிறா என:))).. ஏனெண்டால் உங்களிடம் ஏதும் கேட்டால், தொந்தரவு என நினைக்கிறீங்க:)) அப்போ பேசாமல் போனிலேயே இருந்திடுவோம் என நினைக்கிறா:)))..

      ஹா ஹா ஹா இண்டைக்கு ஸ்ரீராமுக்கு நாள் சரியில்லைப்போலும்:)) எப்பூடிப் பேசினாலும் இடி விழுகுதெல்லோ:)) ஹா ஹா ஹா.. அதிரா இங்கின இல்லாததால பலரைத் தட்டிக் கேட்க ஆளில்லாமல் போச்சூஊஊஊஊஊஊஉ ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:))))

      நீக்கு
    5. ஸ்கூல் லீவு அதுதான் எப்படியும் வரோணும் இந்தப் பக்கம் என வந்திட்டேன்:))

      நீக்கு
    6. //ஸ்கூல் லீவு அதுதான் எப்படியும் வரோணும் இந்தப் பக்கம் என வந்திட்டேன்:))//

      எனக்கு இப்போ உண்மை தெரிஞ்சாகணும் அந்த படத்து illusion உங்களுக்கும் தெரியல்லைதானே :) அதெப்படி என் கண்ணுக்கு படாதது உங்களுக்கு மட்டும் தெரியும்னு நினைச்சேன் பூனை சத்தமில்லாம எஸ்கிப் ஆனதில் கண்டுபுடிச்சிட்டேனே :)

      நீக்கு
    7. அட, இதென்ன கலாட்டா...    சிம்பிளா படம் எல்லோருக்கும் தெரியும்போது மூவருக்கு மட்டும் தெரியவில்லை என்கிறீர்களே...!

      நீக்கு
    8. 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

      நீக்கு
    9. உங்களுக்குமா?  அட தேம்ஸ் மலை தேவா...

      நீக்கு
    10. இல்ல இல்ல படமெல்லாம் தெரியுது... சவூதித்தலைவர் போல இருக்கு:))

      நீக்கு
    11. தேம்ஸ்ல புலாலியூர்ப் பூஸானந்தா தான் இருக்கிறார்:))

      நீக்கு
  35. //உங்களிடம் ஏராளமான அல்லது அப்போதைய பிரச்னைக்குத் தீர்வு இருக்கிறது. ஒரு யோசனை சொல்ல முடியும். ஆனால் சம்பந்தபப்ட்டவர் உங்களிடம் அதைக் கேட்பதில்லை. சரிதானே?//

    ஹா ஹா ஹா அப்படி இல்லை, இது செல்ஃப் ரெஸ்பெட்:)).. அதாவது நம் யோசனையை நீங்க எடுத்துக் கொள்ளோணும் எண்டில்லை, என்னையும் மதிச்சு யோசனை கேட்கிறார்களே என ஒரு திமிர் வரும் அவ்ளோதேன்ன்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புறம் அந்தத் திமிரில் தப்புத்தப்பாய் யோசனையாய்க் கொட்டும்!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கேட்பதோடு நிறுத்திடுங்கோ:)).. முடிவு உங்களுடையதாக இருக்கட்டும்:))

      நீக்கு
  36. //தனி மனிதத் தீவுகள்
    நரகமான வாழ்க்கை//
    நிம்மதி நிம்மதி உங்கள் சொய்ஸ்..
    இன்பமும் துன்பமும் உங்கள் சொய்ஸ்:)


    குமுதம் பற்றிய அழகிய தொடர் படிச்சேன்.. நன்றாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைக்கு எதுவும் எங்கள் சாய்ஸில் இல்லை!

      நீக்கு
  37. //நரகமான வாழ்க்கை// நகரத்தில் மட்டும் தான் இந்த நரகமான வாழ்க்கை.

    குமுதம் பற்றிய ஜீ வி சாரின் கட்டுரை ஆச்சர்யம் ஊட்டுகிறது. எத்தனை விவரங்கள். நான் குமுதத்துடன் பரிச்சயப்பட்டது பா மு க (பாட்டிகள் முன்னேற்ற கழகம்) ஆரம்பித்தபோது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் குமுதம் வாங்குவதை நிறுத்தினேன்.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை JC சார்...   இந்த முறை கிராமங்களை நோக்கிப் படை எடுத்திருக்கிறது.  

      நீக்கு
  38. ’பாஸ்’ அனுமதி கேட்பது உங்களை உங்களது சிந்தனையிலிருந்து டைவர்ட் பண்ணுவதற்காக இருக்கும்!

    குமுதம் கட்டுரை நன்றாகச் செல்கிறது. அந்தக் காலக் குமுதம் பளபளவென்று வாசனையாக இருக்கும்! படிப்பதற்கும் கொஞ்சம் விஷயம் இருக்கும். மேலே கயிற்றில் தொங்குவதைத் தொட்டாலே கடைக்காரர்: ‘வாங்கப்போறீயா?’

    தொட்டுகிட்டு கசங்கிடக் கூடாதுல்ல..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..   ஆனால் கட்டுக்கட்டாய் இருக்கும் குமுதம் கொஞ்ச நேரத்தில் காணாமல் போகும்!

      நீக்கு
  39. இங்கு வீட்டில் எல்லாமே மனைவி முடிவு செய்து அக்காவும் மனைவியுமாக என்பதால் என் வரை வராது. மெனுவும் எதுவும் புதிதாக எதுவும் செய்யும் பழக்கம் இல்லை எப்போதுமே கேரளத்து வழக்கமான சமையல்தான்.

    ஸ்ரீராம் உங்கள் கவிதை எப்போதும் போல் நன்று, நாம் நம்மைக் கூடியவரை தற்காத்துக் கொண்டு செல்வதுதான். கூடிய விரைவில் இந்தச் சூழல் மாறும் என்று நம்புவோம்.

    படத்தைப் பார்த்துவிட்டு மேலே பார்த்தால் உருவம் நன்றாகத் தெரிந்து நகர்கிறது.

    குமுதம் பற்றிய ஜீவி சாரின் தகவல்கள் அறிந்தேன். நல்ல சுவாரசியமான தகவல்கள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமையல் பற்றி மட்டும் சொல்லவில்லை துளஸிஜி...   பொதுவாகவே எல்லாவற்றையும் சொல்ல வந்தேன்.

      நீக்கு
  40. ஹாஆஅஹா :) உங்களுக்கும் பாஸுக்கும் இடையிலான சம்பாஷணை பலர் வீடுகளிலில் நடப்பதுதான் :)

    //என்னென்னமோ எழுதறீங்க..  நான் கேட்டா பதில் சொல்ல மாட்டீங்களா?"//
    அதுதானே அதுவும் அவ்ளோ பெரியவர் என்கிறீங்க பதில் சொல்லலாம்தானே :)
    //தலையை தலையை ஆட்டுவதோடு சரி!  //ஹாயையோ அந்த தலையும் ஆட்டும்போது எதுக்காக  ஆட்டறீங்கன்னு யோசிச்சுதான் செய்யணும் .பிக்கோஸ் குடும்பத்தலைவிகள் கிராஸ் questions கேட்பதில் கில்லாடிகள்னு கேள்வி :)அந்தக் குட்டி கவிதை இப்போதைக்கு பொருந்துது .


    குமுதம் தொடர் நன்கு செல்கிறது .//'47-லே எனக்கு நாலு வயசு// அப்போ எங்கப்பாவுக்கும்  உங்களுக்கும் ஒரே   வயசு சார் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் என்ன கேள்வி என்றே தெரியாமல் தலையை ஆட்டி விட்டு, திடீரென இரவில் ஒரு தட்டில் தயிர் சாதம் நீட்டபப்ட்டதும் விழிப்பேன். 

      "டிபன்தானே சாப்பிடுவேன்?"  

      "நீங்கள்தானே நான் கேட்டதுக்கு தலையை இப்பிடி இப்பிடி ஆட்டினீங்க..."

      நீக்கு
    2. ஆஆஆஆஆ என் செக்கும் லாண்டட்:) அதீஸ் பலஸ் பேஸ்மெண்ட்டோட ஆடும்போதே நினைச்சேன் 100 கிலோவில ஆரோ லாண்டிங் என:)

      நீக்கு
    3. ///குமுதம் தொடர் நன்கு செல்கிறது .//'47-லே எனக்கு நாலு வயசு//////
      இது ஆருக்கு ஶ்ரீராமுக்கோ? அஞ்சுவுக்கோ:)... ஹையோ ஆண்டவா என்னைத் தேம்ஸ்ல குதிக்க விடுங்கோ:)

      நீக்கு
    4. ஹையோ...   நானும் கூவத்துல குதிக்கலாம்னா அதில் தண்ணீர் வேறு இல்லை!

      நீக்கு
    5. ஹா ஹா ஹா அப்போ கீசாக்கா வீட்டுக் காவேரிக்கு ஓடுங்கோ ஸ்ரீராம்:))))

      நீக்கு
    6. ஈ பாஸ் கேட்பாங்க அதிரா...    அது இருந்தாலும் பிடித்து காராக்ரகத்தில் போட்டு விடுவார்கள்!

      நீக்கு
    7. இல்ல ஸ்ரீராம் இல்ல:)).. கீசாக்காவின் ஒரு போட்டோவைக் கொண்டுபோய்க் காட்டினால் விட்டிடுவினம்:)).. கீசாக்காட பெயரைச் சொன்ன பிறகும் கொசுப்பாஸ் கேட்பினமோ?:)))) ஹா ஹா ஹா..

      நீக்கு
    8. குமுதம் தொடர் நன்கு செல்கிறது .//'47-லே எனக்கு நாலு வயசு//////

      கர்ர்ர்ர்ர் //// இந்த சிம்பலுக்குள்ள போட்டா என்ன மீனிங்னா எடுத்து மேற்கோள் காட்டியிருக்கோம்னு அர்த்தம் .
      அது ஜீவி சாரின் வயது என்று அவரே சொல்றார் எப்பவும்போல பாதியை பார்த்து பாதி எழுதிஹையோ ஹாயையோ 

      நீக்கு
    9. ஹா ஹா ஹா ஸ்ரீராம் ஓடி வாங்கோ:)) இப்போ தெரியுதோ, என் செக்கை இங்கு அழைக்கும் வழி.. நேக்கு மட்டும்தேன் தெரியுமாக்கும்:)) ஹா ஹா ஹா:))

      நீக்கு
  41. குடும்பம் ஒரு கதம்பம்... பல வீடுகளில் பதில் சொன்னாலும் பிரச்சனை... சொல்லா விட்டாலும் பிரச்சனை தான்! :)))) சரி சரி

    மற்ற பகுதிகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லவும் முடியாது; சொல்லாமலிருக்கவும் முடியாது! 

      நன்றி வெங்கட்.

      நீக்கு
    2. நேற்றுத்தான் கோபிநாத் அவர்களின் ஒரு ஸ்பீச் கேட்டேன்:)).. ரைம் கிடைச்சால் கேளுங்கோ.. இப்போஸ்ட்டுக்கும் கொமெண்ட்ஸ்க்கும் நன்கு பொருந்துது:))...

      நெல்லைத்தமிழனையும் கேய்க்க வைக்கோணும்:))) மீ ஓடிடுறேன்:))

      https://www.youtube.com/watch?v=d9fLHTiE23E&t=4s

      நீக்கு
  42. பாஸ், ஸ்ரீராம் உரையாடல் ரசித்தேன்.
    இந்த கதைதான் எல்லா வீடுகளிலும் நடக்கும் போல!

    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  43. ஜீவி சாரின் குமுதம் பற்றிய தொடர் அருமை.
    நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
  44. நேற்று மருமகளுக்கு பிறந்தநாள் அதனால் உறவினர்கள் வாழ்த்துக்கள் சொல்லி பேசினார்கள் ஊரிலிருந்து ,அப்புறம் கோவில் போய் வந்தோம். அதனால் இந்த பக்கம் வர முடியவில்லை.

    பின்னூட்டங்கள் நன்றாக இருக்கிறது. அதிரா, ஏஞ்சல் வந்து இருப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மருமகளுக்கு எங்கள் வாழ்த்துகளையும் சொல்லுங்கள் அக்கா.  ஆம், நீண்ட நாட்களுக்குப் பின் அதிரடி அன்புச் சகோதரிகள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.

      நீக்கு
    2. எங்கள் வாழ்த்தும் உங்கள் மருமகளுக்கு கோமதி அக்கா...

      நீக்கு
  45. உங்கள் வாழ்த்துக்களை சொல்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  46. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ மீதான்ன்ன்ன்ன் 199

    பதிலளிநீக்கு
  47. அவ்வ்வ்வ்வ்வ் அதிராதான் 200.. அதீஸ்தேன் 200 ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ அஞ்சு இல்லையாக்கும்:)) ஓ லலலாஆஆஆஆஆஆஆஆஆஆ:))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!