புதன், 28 டிசம்பர், 2022

ரசிப்பது - வெந்நீர் குளியலா அல்லது பச்சைத் தண்ணீர் குளியலா ?


பானுமதி வெங்கடேஸ்வரன்: 

குளிர் காலத்தில் இதமான வெந்நீர் குளியல், கோடையில் ஜில்லென்று பச்சைத் தண்ணீரில் குளியல்.. எதை அதிகம் ரசிப்பீர்கள்?

# கோடையில் குளிர்ந்த நீரில் குளிக்கப் பிடிக்கும் என்றாலும் உடல் நிலை இடம் தராமல் போய் இருபது ஆண்டுகள் கடந்து விட்டன.

$ கோடையோ குளிர் காலமோ குளிக்கும் நேரம், நீர்  மாறுவதில்லை. 

& சென்னையில் இருக்கும்போது கோடையில் ஜில்லென்று பச்சைத் தண்ணீர் குளியல். குளிர் காலத்தில் வெந்நீர் குளியல். பெங்களூரில் எல்லா சீசனிலும் வெந்நீர் மட்டுமே. 

உங்களுக்கு நெருக்கமான உறவினர் அல்லது நண்பர் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை பார்க்க வருகிறார்.அவருக்கு வீட்டில் சாப்பாடு போட விரும்புவீர்களா? அல்லது ஏதாவது உணவகத்திற்கு அழைத்துச் செல்வீர்களா?

# வீட்டில் விசேஷமாக சமைத்து கூடி இருந்து உண்பதே மகிழ்ச்சி. "ஒப்புடன் முகமலர்ந்தே உபசரித்து உண்மை பேசி ..."
வீட்டில் சமைப்பதில் சிரமங்கள் இருக்கும் என்றாலும் அது சாத்தியமாக இருக்கும் வரை ஹோட்டல் உணவு  தவிர்க்கப் படும்.

$ வீட்டில் சமையல் உபசரிப்பு என்பது தான் எங்களுக்குப் பிடித்தது.

& அவருக்கு என்ன காய்கறிகள் + உணவு பிடிக்கும் என்று போனில் கேட்பேன். சொன்னார் என்றால், அதை சமைக்க முயற்சி செய்வேன். 'சாப்பாடு எல்லாம் வேண்டாம், எதுவும் சமைக்காதீர்கள் ' என்று அவர் சொன்னால், எனக்கு விருப்பமான உணவை அவரிடம் சொல்லி - அதை நீங்கள் செய்து எனக்கு கொஞ்சம் கொண்டு வந்து விடுங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுப்பேன். 

= = = = = =
வேறு கேள்விகள் எதுவும் யாரும் அனுப்பவில்லை என்பதால், சு நா மீ அடுத்த பகுதி இங்கே வெளியிடப்படுகிறது. 

முந்தைய பகுதி சுட்டி : சு நா மீ 04 

சு நா மீ 05 : சுப்பா ராவ் திட்டம் 

காந்தாமணி, தயாளன் இருவரும் தூக்க மாத்திரை காரணமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். 

சுப்பா ராவ் குழந்தைகளின் உடை, நகை, அவர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் எல்லாவற்றையும் ஒரு பெட்டியில் போட்டு எடுத்துக்கொண்டு, குழந்தைகளை அழைத்துக்கொண்டு கிளம்பினார். வீட்டு வாயில் கதவை ஜாக்கிரதையாக மூடியபடி வைத்துவிட்டு, குழந்தைகளிடம், "வாருங்கள் நாம் போவோம். தயா மாமா அப்புறம் நம்மோடு வந்து சேர்ந்துகொள்வார்" என்று சொல்லி கிளம்பினார். 

திருவாரூர் ரயில்வே ஸ்டேஷனில் வந்து, ரயிலுக்காக காத்திருக்கும்போது நாகராஜிடம், " குழந்தைகளா, நான் சொல்வதை நல்லா கேட்டுக்குங்க. உங்க காந்தா சித்தியும் தயா மாமாவும் சேர்ந்து பிள்ளை பிடிக்கும் கும்பல் ஒன்றுக்கு உங்களை விற்றுவிட நினைத்தார்கள். நான் உங்கள் இருவரையும் ஒரு இடத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு - உங்க அப்பா தஞ்சாவூரிலிருந்து திரும்பி வந்ததும் உங்களை திரும்ப அழைத்துப் போகிறேன். அதுவரை உங்கள் பெயர் ஊர் எல்லாம் யாரிடமும் சொல்லக்கூடாது. யாராவது கேட்டால், உன் பெயர் நாகேஸ்வரன் என்று சொல்லு. தங்கை பெயர் சுசீலா என்று சொல்லவேண்டும். திரும்பி அப்பாவிடம் வந்து சேரும் வரை உங்கள் பெயர்கள் நாகராஜ், சுந்தரி என்று சொல்லாதீர்கள். யாரிடமாவது அப்படிச் சொன்னீர்கள் என்றால், அவர்கள் உங்கள் இருவரையும் பிடித்து திரும்பக் கொண்டுபோய் காந்தா சித்தியிடம் விட்டுவிடுவார்கள். திரும்பவும் காந்தா சித்தியிடம் அடி, உதை, திட்டுகள் உங்களுக்கு கிடைக்கவேண்டாம். நான் சொல்வது புரிகிறதா? " என்று கேட்டார். 

நாகராஜ் எப்படியோ சித்தியிடமிருந்து தப்பித்தால் போதும் என்று சந்தோஷமாக சம்மதித்தான். 

அந்த நேரத்திலிருந்து அவர்கள் இருவரும் சுசீலா மற்றும் நாகேஸ்வரன் என்று மாறினார்கள். 

= = = = = =

ரயில் அன்று நாகூர் வரை செல்லவில்லை. நாகையிலேயே நின்றுவிட்டது. 
குழந்தைகளுடன் நாகை ஸ்டேஷனில் இறங்கிய சுப்பா ராவ், 'இதுவும் நல்லதுதான். காலையில் எழுதிருக்கும் காந்தாவும், தயாளனும், குழந்தைகளை காணோம், நகைகள் உடைகளையும் காணோம் என்றால், உடனடியாக அவர்களின் சந்தேகம் எண் மீது விழும். உடனே அவர்கள் தான் முன்னமேயே குறிப்பிட்டிருந்தபடி நாகூருக்கு ஆட்களை அனுப்பி தேடக்கூடும் - அப்போது தன்னுடன் குழந்தைகள் இருந்தால், எல்லோரையும் திரும்ப திருவாரூருக்கு அழைத்துச் சென்று, குழந்தைகளை மீண்டும் கொடுமைப்படுத்துவார்கள். எனவே, இந்தக் குழந்தைகளை இங்கே நாகையிலேயே எங்காவது பத்திரமான ஓர் இடத்தில் விட்டுவிட்டு, தான் மட்டும் நாகூர் செல்வோம்' என்று நினைத்தார். 

ஸ்டேஷன் அருகில் இருப்பவர்களிடம், " இங்கே அருகில் தங்குவதற்கு, சாப்பிட, இடம் ஏதாவது இருக்குதா" என்று விசாரித்தார். 

" எல்லாம் கிறிஸ்துமஸ் , நாகூர் சந்தனக்கூடு நேரம் - எல்லா லாட்ஜ்களும் இடமில்லை என்று போர்டு போட்டிருக்காங்க. ஒன்று செய்யுங்க - இந்த பீச் ரோடிலேயே போனீர்கள் என்றால், மீகாம் எக்ஸ்போர்ட் கம்பெனி வரும். அதைத் தாண்டி கொஞ்சதூரம் போனால் " மீனாக்ஷி மெஸ் " வரும். அவங்க கிட்டே கேட்டுப்பாருங்க" என்று சொன்னார். 

சுப்பா ராவ், நாகேஸ்வரனையும் சுசீலாவையும் அழைத்துக்கொண்டு " மீனாக்ஷி மெஸ் " வந்து சேர்ந்தார். 

மீனாக்ஷி மாமியிடம், " அம்மா, இந்தக் குழந்தைகள், நாகேஸ்வரன், சுசீலா இருவரும் பெரிய இடத்துக் குழந்தைகள். இவர்களை ஒரு கொடுமைக்கார சித்தியின் பிடியிலிருந்து விடுவித்து அழைத்துவந்துள்ளேன். இவர்களின் அப்பா தஞ்சாவூர் சென்றுள்ளார். அவர் ஒரு வாரத்தில் திரும்ப வந்துவிடுவார். அதுவரை இவர்கள் இருவரையும் பாதுகாப்பாக கொஞ்ச நாட்கள் யாராவது பார்த்துக்கொண்டால், புண்ணியமாகப் போகும்" என்றார். 

மீனாக்ஷி அவரிடம், " அதனால் என்ன - நான் பார்த்துக் கொள்கிறேன். என்னுடைய வீடு, கோவில் பக்கத்தில்தான் உள்ளது. குழந்தைகள் என்னுடன் இருக்கட்டும். நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இவர்களின் அப்பா வந்தவுடன் வந்து இவர்களை அழைத்துச் செல்லுங்கள்" என்று சொன்னார். 

சுப்பா ராவ், அன்று இரவு குழந்தைகளுடனேயே தங்கி, அவர்களுக்கு நிறைய புத்திமதிகள் கூறி, தான் திரும்பி வந்து அவர்களை அழைத்துச் செல்லும்வரை சமர்த்தாக மீனாக்ஷி பாட்டி சொல்வது போல கேட்டு நடந்துகொள்ள வேண்டும் என்று சொன்னார். 

= = = = = =

டிசம்பர் 25 - 2004. 

மீனாக்ஷி அம்மாளிடம் மறுநாள் காலையில், " அம்மா இந்தக் குழந்தைகளின் மாற்று உடை, அவர்களின் நகைகள், சில புகைப்படங்கள் எல்லாம் இந்தப் பெட்டியில் உள்ளன. இவர்கள் இங்கே தங்கி இருக்கும் நாட்களுக்கு என்ன செலவு ஆகிறதோ அதற்கு முன் பணமாக இதை வைத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லி அவரிடம் ஒரு கவரைக் கொடுத்தார். 

மீனாக்ஷி அம்மாள் அதை பிரித்துக் கூடப் பார்க்கவில்லை. " அதனால் என்ன - எல்லாம் நீங்கள் திரும்பி வரும்போது கொடுக்கலாமே" என்று சொன்னார். 

" இல்லை அம்மா - குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான் இதைக் கொடுக்கிறேன்" என்று சொல்லி கொடுத்தார். 

பிறகு, " அம்மா  நான் நாகூர் சென்று என்னுடைய பெரியப்பா பையனைப் பார்த்துப் பேசிவிட்டு நாளைக் காலையில் திரும்பி வருகின்றேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். 

குழந்தைகள் அவருக்கு 'டா டா' காட்டி அனுப்பினார்கள். 

குழந்தைகளோ அவரோ மீண்டும் ஒருவரை ஒருவர் சந்திக்கப் போவது இல்லை என்ற விவரம் அப்போது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. 

(தொடரும்)

= = = = = = = =

53 கருத்துகள்:

 1. அப்பாடி... ஒரு வழியாக டிராக்கிற்கு சுநாமீ வண்டி வந்து சேர்ந்தது. இனிமேல் நேர் பயணம் தான் என்பது நிச்சயமாயிற்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் பாவம். கிடைத்த gகேப்பில் பார்க் பண்ணலாம் என்றால், ஏற்கனவே துண்டைப் போட்டு வைத்திருப்பவர்கள் சண்டைக்கு வருகிறார்கள். இன்னும் தி பிவு மற்றும் ஞாயிறில்தான் கைவைக்கவில்லை.

   நீக்கு
 2. 2004 டிசம்பர் 25-ம் தேதி குழந்தைகளை மீனாஷி அம்மாளிடம் விட்டு விட்டு பெரியவர் சுப்பாராவ் கிளம்புகிறார். அடுத்த நாள் 26-ம் தேதி தமிழகத்தின் தெற்குக் கோடியை உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலை.
  நாகூருக்குப் போகும் சுப்பாராவ் என்னானார்?
  நாகையில் இருக்கும் குழ்ந்தைகளும் மீனாஷி அம்மாளும் என்னவாகப் போகிறார்கள்? கதை திகிலுடன் தான் தொடர் றது.

  பதிலளிநீக்கு
 3. ரசித,துக் குளிக்கவேண்டும் என்றால் வெயில் காலத்தில் ஆறு அல்லது குளத்தில் குளிப்பதுதான்.

  நான் அதிகச் சூடான நீரில் குளிக்கிறேன் என்றும், பிற்காலத்தில் அது நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளில் கொண்டுவந்துவிடலாம் என மனைவி சொன்னதால், வெந்நீரைத் துறந்து கிட்டத்தட்ட 16 மாதங்களாகிவிட்டன. பெங்களூரில் குளிர் நீரில்தான் குளியல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசித,துக் குளிக்கவேண்டும் என்றால் வெயில் காலத்தில் ஆறு அல்லது குளத்தில் குளிப்பதுதான்.//

   யெஸ் யேஸ் நெல்லை.....எனக்கு ரொம்பப் பிடிக்கும் அருவியையும் சேர்த்துக்கோங்க....செமையா இருக்கும் நல்ல மசாஜ் உடலுக்கு. வாட்டர் தெரப்பி

   கீதா

   நீக்கு
  2. கருத்துரைகளுக்கு நன்றி.

   நீக்கு
 4. பேச,சலர்ஸ் என்றால் ஃபுட் ஜாயின்ட் களில் சந்திப்பது இயல்பு.

  வீட்டிற்கு வருபவர்க்கு வீட்டில் ஏதாவது அளிப்பதுதான் சரியா இருக்கும் (முடிந்தவரையில்). பாட்லக் முறை இன்னும் நெருக்கத்தை உண்டுபண்ணும்.

  நம் கீதா ரங்கன் எதையாவது செய்து எடுத்துக்கொண்டுவரும் வழக்கமுடையவர்னு நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் கீதா ரங்கன் எதையாவது செய்து எடுத்துக்கொண்டுவரும் வழக்கமுடையவர்னு நினைக்கிறேன்//

   ஹிஹிஹிஹி யெஸ்ஸு....

   கீதா

   நீக்கு
  2. வாங்க, வாங்க என் வீட்டுப் பக்கமும்!

   நீக்கு
  3. எங்க வீட்டுக்கு வந்தப்போ எதுவுமே கொண்டு வரலையாருமே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை தவிர்த்து! :))))))))))

   நீக்கு
 5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

  நலமே வாழ்க..

  பதிலளிநீக்கு
 6. கதையில்
  அன்று நடந்த சோகமான நிகழ்வுகளின் அதிர்வுகள் மீண்டும் தூண்டி விடப்பட இருக்கின்றன..

  பதிலளிநீக்கு
 7. ஆழிப் பேரலையின் நினைவுகள் மறக்கக் கூடியவையா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்றைக்குக் காலையில் கல்ஃப் ஏர் விமானத்தில் சென்னையிலிருந்து பஹ்ரைன் பயணம் செய்தேன் (காலை 7-8 மணி). தெரிந்திருந்தால் சன்னல் வழியாகப் பார்த்திருக்கலாமோ?

   நீக்கு
  2. நாங்க அப்போத்தான் யு.எஸ்ஸில் மெம்பிஸில் பெண் வீட்டில் இருந்தோம். தினசரியைப் பார்த்துட்டுப் பையர் ஹூஸ்டனில் இருந்து தொலைபேசிச் சொன்னார். சரினு பத்திரிகையைப் பார்த்தால் விரிவான செய்தி இல்லை. பெரிய உயரமான அலை ஒன்று சென்னைக் கடற்கரையில் மோதியதாக மட்டுமே இருந்தது. பின்னர் தான் முழுத்தகவல்களும் வெளியாகின.

   நீக்கு
 8. வீட்டிற்கு வருபவர்களுக்கு நம் வீட்டிலேட்யே சாப்பாடு தயாரித்துக் கொடுப்பதுதான் நல்ல விஷயம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். தவிர்க்க முடியாத காரணம் என்றால் மட்டுமே வெளியில் அழைத்துச் செல்வது என்பது. அதாவது வரும் நபர்கள் (வெளியூராக இருந்தால்) நமக்குச் சாப்பாடு தர ஆசைப்பட்டு வெளியில் அழைத்துச் செல்வது அலல்து ஒரே இடத்தில் நிறையப்பேரைச் சந்திக்க விரும்பினால் அவர்கள் இப்படிச் செய்வதுண்டு. நம் வீட்டில் வீட்டுச் சாப்பாடுதான்.....பாவம் வரவங்க!!!!!!!! சோதனை எலி/கள்!!!!!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்க வீட்டில் தான் உணவு தயாரித்துக் கொடுத்திருக்கோம். வெளியில் எல்லாம் அழைத்துப் போனதில்லை. விருந்தினரோடு சுற்றுலா சென்றால் அப்போக் காலை ஆகாரம், மதிய உணவு எனச் சென்றிருக்கும் இடத்தில் உள்ள ஓட்டல்களில் சாப்பிட்டது உண்டு.

   நீக்கு
 9. பார்க்க வருபவர்கள் உள்ளூர் என்றால் அவர்களும் ஏதேனும் செய்து கொண்டு வர விரும்பினால் பாட்லக்...அதிகம் பேர் சந்திக்கிறார்கள் என்றாலும் பாட்லக் அல்லது நானே சமைத்துவிடுவது....

  நான் யாரையேனும் பார்க்கச் சென்றால் கண்டிப்பாக ஏதேனும் என் கைவண்ணத்துடந்தான் செல்வது வழக்கம். நான் வேறு வீட்டில் தங்கியிருந்து அந்த ஊரில் யாரையேனும் சந்திக்கச் சென்றால் மட்டும் கைவண்ணம் இருக்காது...தப்பிச்சாங்க அவங்க!!!!!!!!!!!!!

  இல்லை என்றால் நான் கொண்டு செல்வது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். கொண்டு செல்லும் முன் அவர்களிடம் எல்லாம் கேட்டுக் கொண்டு விடுவேன்.

  நெல்லையைப் பார்க்கப் போறேன் என்றால் கண்டிப்பாக ஸ்வீட்....கொண்டு செல்ல விரும்புவேன்....ஒரு ட்யூ இருக்கு அவருக்குக் கொடுக்கறேன் என்று சொல்லி கொடுக்காமல்...

  பானுக்கா என்றால் ஸ்வீட் ப்ளஸ் அன்று சாப்பாட்டுக்குத் தோதாக அல்லது கேக் இப்படி...

  சென்னையில் இருந்தப்ப ஸ்ரீராம் வீட்டிற்குச் சென்றாலும் அப்படித்தான்...

  வெங்கட்ஜியையும் கினிபிக் ஆக்க்கியய்து உண்டு!!!!.. ஒரே ஒரு முறை.!!! ஹாஹாஹா

  ரஞ்சனி அக்கா வீட்டுக்குச் சென்ற போதும் அப்படித்தான்

  நல்ல காலம் கௌ அண்ணா இப்ப பக்கத்துல இருந்தும் இன்னும் என்னிடம் மாட்டிக் கொள்ளவில்லை. அனுப்ரேமும் மாட்டிக் கொள்ளவில்லை!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் ஸ்வீட் பிடிக்கும்.

   நீக்கு
  2. அதுக்காக குரியரில் அனுப்பவெல்லாம் முடியாது. என்றைக்காவது கீதா ரங்கன் வந்தால், (அவங்க உங்க வீட்டுப் பக்கத்துலதான் இருக்காங்கன்னு நினைக்கிறேன்), நானும் வரணும்.

   நீக்கு
 10. நான் சாதாரண தண்ணீரில்தால் குளிப்பது வழக்கம் இங்கும் கூட.

  பனி விழும் பிரதேசம் என்றால் ரொம்பவும் மிதமான அல்லது குளிராத ஆனால் சூடும் இல்லாத தண்ணீரில் குளிப்பது...

  கீதா

  பதிலளிநீக்கு
 11. பொதுவாக எனக்கு ஆறு, அருவி, வாய்க்கால் குளங்களில் குளிப்பது மிக மிக மிகப் பிடிக்கும். சோப் போடுவது கிடையாது. தண்ணீர் கெமிக்கல் கலந்து போகும் என்பதால்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த இயற்கை நீர்நிலைகளிலும் சோப் உபயோகப்படுத்துவதில்லை (அவர்களும் விடமாட்டார்கள்). ரிஷிகேஷில், கங்கையில் குளிக்கும்போது, வெளியில் படியில் ஏறும்போது என் மனைவி, உடையில் இருந்து வரும் நீரை அப்படியே பிழிந்ததற்கு அங்கிருந்த ஒருவர் சண்டைக்கு வந்துவிட்டார். கங்கை மிகப் புனிதமானது, அதில் உடையில் உள்ள நீரைப் பிழியலாமா என்று (டூ டூமச் என்று நான் நினைத்தேன்)

   நீக்கு
  2. கங்கையில் உடையோடுதானே குளிக்கிறோம் அப்புறம் ஏன் பிழியக் கூடாது என்று?

   கங்கை புனிதமான நதிதான் அப்படிப் பார்த்தால் எல்லா நதிகளும் நீர் நிலைகளும் புனிதமானவை. ஆனால் நாம் எந்த நீர் நிலையின் புனிதத்தையும் பாதுகாப்பது இல்லை கங்கை உட்பட. அதில் மலர்கள் தூவுவதில்லையா? திதி செய்வதில்லையா? அப்போது எல்லாம் அதில்தானே கலக்கறாங்க?

   குளிக்க அனுமதிக்கக் கூடாது எந்த கலப்பும் இருக்கக் கூடாது. புண்ணியம் என்று நினைத்தால் ஒரு டம்ப்ளரில் தண்ணீர் எடுத்து தலையில் தெளித்துக் கொள்ளலாமே அப்படிச் செய்வதுண்டுதானே மக்கள் சில இடங்களில் அப்படி...

   கீதா

   நீக்கு
 12. வெந்நீர் குளியல் பழக்கமாகி விட்டால், விட முடியாது...

  பதிலளிநீக்கு
 13. கோடையில் குளிர் நீர் குளியலும் மாரியில் மெல்லிய சூட்டு தண்ணீர் குளியலும் பிடிக்கும்.

  கதை தொடர்கிறேன் சுனாமி வந்து பலரின் வாழ்வை திசைதிருப்பியது போல ஆகா! இங்கும் திசை திருப்புகிறது .

  பதிலளிநீக்கு
 14. கௌ அண்ணா, கதையில் மீனாட்சி பாட்டி எப்படி டக்கென்று முன்ன பின்ன தெரியாத ஒருவர் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி ஏற்கிறார்?!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 15. விருந்தில் வீட்டு உபசரிப்புதானே நமது பண்பாடு.

  பதிலளிநீக்கு
 16. எனக்கு ஒரு டவுட் இருந்தது, நாகராஜ் தான் நாகேஸ்வரன், சுந்தரிதான் சுசீலா வாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இருவரும் சகோதர சகோதரி என்று ஆகும் என்றும்....முதல் பகுதியில் சொல்லியிருந்தேனோ? என்று தோன்றுகிறது.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாகேஸ்வரன் என்ற பெயர் இப்போதானே வந்திருக்கிறது! உங்களுக்கு டவுட் முன்பே எப்படி வந்தது!

   நீக்கு
 17. நான் எல்லா காலங்களிலும் வெந்நீர் குளியல்தான்.
  என் அம்மா, என் கணவர் இருவரும் எல்லா காலங்களிலும் பச்சைதண்ணீர்தான்.

  வெந்நீர் மிதமான சூடு நல்லது என்கிறார்கள். ஆனால் நல்ல சூடாய்தான் குளிப்பேன்.

  உறவினர்கள் , நட்புகள் என்று எத்தனை பேர் வந்தாலும் வீட்டில்தான் உணவு செய்து கொடுத்தேன். இப்போது நிறைய பேர் வந்தால் வீட்டு சமையல் செய்து கொடுப்பவரிடம் சொல்லி விடுகிறேன். அவர் செய்து கொடுத்து விடுவார். வீட்டு சாப்பாடு என்பதால் யாருக்கும் வயிற்று தொந்திரவு கொடுத்தது இல்லை.

  முன் கதை படித்துவிட்டேன், இந்த வாரக் கதை அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை தருகிறது.

  பதிலளிநீக்கு
 18. நாகேஸ்வரன் என்னும் புதிய காரக்டர், அல்லது பெயர்? ம்ம்ம்ம், மீனாக்ஷி பாட்டியும் சு.நா.மீயில் மாட்டிக் கொண்டு விடுவார்களோ? சரியா மறுநாள் டிசம்பர் 26 2004 ஆம் தேதியன்று சு.நா.மீ. அடுத்து என்ன? அறிய ஆவலுடன். இண்டு இடுக்குக்கிடைச்சால் கூடப் போட்டுடறாங்களே இந்தக் கதை எழுதுபவர்! இஃகி,இஃகி, இஃகி

  பதிலளிநீக்கு
 19. கேள்வி கேட்கறவங்களே இல்லாமல் போச்சு பாருங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 20. வெந்நீர் என்றால் அது நல்ல சூடாக இருக்கணும். பச்சைத்தண்ணீரெல்லாம் இப்போதைய சீதோஷ்ணத்தில் குளிக்க முடியலை. கால் வலி அதிகம் ஆகிவிடுகிறது. இரவில் கூடக் கால்களில் குளிர்காற்றுப் படாமல் பார்த்துக்க வேண்டி இருக்கு. கடுங்கோடை எனில் பச்சைத்தண்ணீர் தான்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!