' அங்கே போய்க்கிட்டு இருக்கறவன் வரதன் தானே!.. '
யோசித்த சுந்தரம் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துப் போட்டுக் கொண்டார்..
' ஏன்.. கண்டுக்காம ஒதுங்கிப் போறான்?.. '
கூடுதலாக கேள்வி ஒன்று மண்டைக்குள் குடைந்தது..
வரதன்.. இந்த ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் செல்லப் பிள்ளை..
செல்லப் பிள்ளை என்றால் ஊர் சொத்துக்கு வாரிசு என்றில்லை.. அங்கும் இங்குமாக ஓடி ஓடி சில்லறை வேலைகளை செய்து கொடுக்கின்ற ஓடும் பிள்ளை..
கோயில் திருவிழாவுக்கு நாள் குறித்து விட்டால் - தாலுக்கா ஆபீசுக்கு ஓடிப் போய் பிளிச்சிங் பவுடர் வாங்கி வந்து தெரு ஓரங்களில் வீசியடிப்பது..
நாலு ஆட்களை திரட்டிக் கொண்டு வந்து முத்துப் பல்லாக்கு ஜோடிப்பது.. பல்லாக்கு தாங்கிகளைத் தேடி எடுத்து ஒழுங்கு செய்து வைப்பது..
கற்றாழையை வெட்டி குட்டைத் தண்ணீரில் ஊறப் போட்டு வெயிலில் உலர்த்தி மட்டையடியாய் அடித்து கயிறாகத் திரித்து சப்பரம் கட்டுவதற்குக் கொடுப்பது..
கோயில் பிரகாரத்தில் பரவிக் கிடக்கும் நெருஞ்சியை செதுக்கி துப்புரவு செய்வது..
தலையில் பெட்ரோமாக்ஸ் விளக்கை வைத்துக் கொண்டு சாமி ஊர்வலத்துடன் நாலு தெருக்களையும் சுற்றி வருவது..
குளம் குட்டை - ஊர் பொதுப்பணி என்றால் முன்னே வந்து நிற்பது..
இப்படி பலவற்றை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதில் வரதனுக்கு ஈடு இணை இல்லை..
பெரிய வீட்டில் கலியாணம் காட்சி என்று இவனிடம் சில வேலைகளை ஒப்படைத்து விடுவார்கள்.. அந்த நேரத்தில் இருந்து பத்து நாட்களுக்கு அங்கேயே பழியாய்க் கிடப்பான்...
நல்ல மனசு படைத்த ஜனங்கள் ஊர் முழுக்க இருந்ததால் வயிற்றுப் பாட்டிற்கும் கைச் செலவுக்கும் வரதனுக்கு பிரச்னை ஏற்பட்டதே இல்லை..
" டே.. வரதா.. அடுப்புக்கு வெறகு தீர்ந்து போச்சுடா.. " - என்றபடி - சர்க்கரை தூக்கலாகப் போட்டு, ஒரு கிளாஸ் டீ கொடுத்தால் போதும்,
ராமையா டீக்கடை வாசல்ல அன்னைக்கு சாயங்காலமே வண்டி நிறைய விறகு வந்து நிற்கும்..
" நாலு வடை கட்டிக் கொடுங்க அண்ணே.. "
வைத்தி வீட்டு மாடுகளுக்கு அரை கிலோ கடலை புண்ணாக்கு வாங்கிக் கொடுத்து விட்டு கொள்ளிடக் கரைக்கு வண்டியக் கட்டிடுவான்..
ராமையா கட்டிக் கொடுத்த நாலு வடையும் கொள்ளிடக் கரை தலையாரி மாரிமுத்துவுக்கு..
மாரிமுத்து காஞ்சு போன கட்டை மரங்களை கை காட்டுவாரு..
அவ்வளவு தான்.. வேலை முடிஞ்சது..
வருசத்துக்கு எப்படியும் நாலு வேட்டி துண்டு கிடைத்து விடும்..
கும்மோணம் பெரியதெரு ஜவுளிக் கடையில இருந்து துணி வாங்கிக்கிட்டு வந்து ரெண்டு சட்டை தைச்சுக் கொடுத்துடுவார் விட்டல் ராவ்.. அவருக்கு என்ன வேண்டுதலோ!..
அதுக்குமேல யாரும் வேட்டி துண்டு கொடுத்தால் - " காட்ல மேட்ல கிடக்கிறவனுக்கு எதுக்குண்ணே இத்தனை வேட்டி?.. " - என்பான்..
" இன்னும் எத்தனை நாளைக்குத் தான் காடும் மேடும் சோறு போடும்?.. ஒனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா!.. "
வாழ்க்கை என்றால் பெண்டாட்டி பிள்ளை என்று அர்த்தம்..
யாருமற்ற வரதனுக்கு - பஞ்சாயத்து போர்டு ஆபீசின் முன் கொட்டகை தான் வசந்தமாளிகை..
" நீங்க வேற அண்ணே!.. " என்றபடி நகர்ந்து விடுவான்..
ஆனாலும், சுந்தரம் வாத்தியாரின் வார்த்தைகள் அவன் மனதை கலக்கி விட்டன..
" எனக்கு யாருண்ணே பொண்ணு கொடுப்பாங்க?.. " என்பான் பரிதவிப்புடன்..
வரதன் சற்றே குள்ளம். கொஞ்சம் தடித்த உடல் வாகு.. அவ்வளவு தான்..
" நீ சரின்னு சொல்லு.. அது போதும்.. "
" உங்க மனசுக்கு நியாயம் ன்னு தெரிஞ்சா செய்ங்க.. எங்கையில ஒன்னும் இல்லை. சல்லிக் காசு கூட கிடையாது.. "
" கல்யாணத்துக்கு காசு வேணும்ன்னு யார்டா சொன்னது?.. "
சுந்தரம் வாத்தியார் சத்தமாகச் சிரித்தார்.. அப்படி அவர் சிரித்து நாலைந்து மாதங்கள் ஆகி விட்டன..
அதற்குப் பிறகு இன்று தான் வரதன் கண்ணில் தென்படுகின்றான்..
அவனுக்குப் பார்த்திருக்கின்ற பெண்ணைப் பற்றிச் சொல்லலாம் என்றால் இப்படி விலகி விலகிப் போகின்றானே.. என்று நினைத்துக் கொண்ட வாத்தியாருக்கு வியப்பு..
வரதன் அவனே வந்து கொண்டிருந்தான்..
" எனக்கு இஷ்டமில்லை.. என்னை விட்டு விட்டு வேறு வேலையப் பாருங்கண்ணே!.. " என்றான் பட்டென்று..
ஏன் இப்படி என்று வாத்தியார் கேட்பதற்குள் வரதன் தொடர்ந்தான்..
" ஏதோ நிர்பந்தத்தில இன்னிக்கு சரின்னு அந்தப் பொண்ணு சொல்லிட்டு நாளைக்கு என்னைய நேருக்கு நேரா பார்த்து மனசு வருத்தப்படக் கூடாது.."
தன்னிரக்கத்தில் வரதனின் கண்கள் கலங்கின..
" இதென்ன சின்னக் கொழந்தை மாதிரி.. " - வரதனைத் தேற்றிய சுந்தரம் தொடர்ந்தார்..
" அந்தப் புள்ளைக்குத்தான் உன்னையத் தெரியுமாமே.. " - என்று வெடிகுண்டினை வீசினார்..
" நான் எந்தத் தப்பும் பண்ணலே.. எனக்கு யாரையும் தெரியாதே.. " வரதன் பதறினான்..
" நீ சொல்றதும் சரிதான்.. அந்தப் பொண்ணு சொன்னதும் சரிதான்.. "
வரதனுக்கு குழப்பம் தான் மிஞ்சியது...
" கிருஷ்ணா ஹோட்டல் ல வேலை செய்ற கங்கையம்மாவைத் தெரியுமா உனக்கு.. "
" தெரியாதே.. "
" அவளோட பொண்ணு தான் உன்னக் கட்டிக்க சம்மதம் சொல்லியிருக்கிறா.. "
" அவளயும் எனக்குத் தெரியாதே.. "
" ஆனா.. அவளுக்கு உன்னயத் தெரியுமாம்.. "
" எப்படி?.. "
ரெண்டு மாசத்துக்கு முன்னால கிருஷ்ணா ஹோட்டல் சமையல் கட்டுக்கு அரிசி மூட்டை இறக்கப் போனாயா!.. "
" ஆமாம்.. "
" அப்போ ஐயர் கேட்டாரா - என்னடா அம்பீ .. எப்போ உனக்குக் கல்யாணம்.. ன்னு.. "
" ஆமா!.. "
"எனக்கு யார் பொண்ணு கொடுப்பாங்க ஐயரே..ந்னு நீ சொன்னியா?..
" ஆமா!.. "
" அப்போ அங்கேருந்த அந்தப் பொண்ணு இதை காதில் வாங்கியிருக்கிறா.. உன்னையும் பார்த்திருக்கிறா.. உம்மேல இரக்கமாயிடுச்சு.. "
வரதனுக்கு வியப்பு..
" இப்போ கங்கையம்மா கிட்ட உன்னப் பத்தி பேசுனதும் அந்தப் பொண்ணு ஒரே வரியா சொல்லிட்டா.. '
" என்னான்னு.. "
" நல்ல மனுசன் உழைப்பாளி.. ன்னு.. "
" கல்யாணம் ன்னே நிச்சயம் பண்ணிட்டீங்களா வாத்யாரே.. "
வரதனுக்கு வார்த்தைகள் தடுமாறின..
" நெலையா வேலை இல்லையே எனக்கு.. "
" அதான் உனக்கு ஹோட்டல் ல வேலை தர்றேன் னுட்டாரே ஐயர்.. "
" அந்தப் பொண்ணோட அப்பா என்ன சொல்றாரோ?.. "
" அம்மா மட்டும் தான்.. நாலஞ்சு வருசமா ஐயர் ஹோட்டல் ல தான் அம்மாவும் பொண்ணும் வேலை பார்க்கிறாங்க.. மூனு வேளையும் சாப்பாடு போட்டு ரெண்டு பேருக்குமா மூவாயிரம் சம்பளம் கொடுக்கறார் ஐயர்.. "
" இருந்தாலும் கல்யாண செலவுக்கு.. " - வரதனிடம் கவலை வெளிப்பட்டது..
" விருந்து செலவு என்னோடது ன்னுட்டார் ஐயர்.. அதுக்கப்புறம் தாலியும் கல்யாண ஜவுளியும் நான் ஏத்துக்க மாட்டேனா?.. "
" பவுன் விக்கிற விலைக்கு.. " வரதன் ஏறிட்டு நோக்கினான்..
" என்னடா பெரிய பவுனு?.. ஆயிரத்து நூறு ரூவாய் தானே.. அந்த ரூபாய் பெற மாட்டாயா நீ!.. "
சுந்தரம் புன்னகைத்தார்..
அன்றிரவு பஞ்சாயத்து ஆபீஸ் முன் கொட்டகையில் படுத்துக் கிடந்த வரதனை ஆனந்தக் கனவுகள் சூழ்ந்து கொண்டிருந்தன..
***
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று..
நீக்குவாழ்க தமிழ்..
வாங்க... வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் விஜய தசமி நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குவாழ்க வையகம்..
வாழ்க. விஜயதசமி வாழ்த்துகள்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம், நன்றி.
நீக்குகமலாக்கா இன்றுதான் போன திங்க பதிவுககன உங்கள் கருத்தைப் பார்த்தேன்....வேலைப் பளுவோடும் மறந்தும் போனது பார்க்க. அங்கு பதிலும் கொடுத்துவிட்டேன்.
நீக்குசரி நேற்று நன்றாக உறிய புளியோதரை ....இன்று நல்லாருக்கும் பார்த்து சுவைத்துவிட்டுச் சொல்லுங்க!!!!! ஹிஹிஹிஹிஹி...நீங்க ரொம்ப பிசினு தெரிகிறது....எப்ப ஃப்ரீ ஆகறீங்களோ அப்ப பார்த்துக்கோங்க...
கீதா
நல்ல நாளும் அதுவுமா பழைய புளியோதரையைத் தர்றீங்களே கீதா ரங்கன்...நியாயமா? அவங்க ஆயுத பூஜை என்பதால் அவருடைய மொபைலையும் பூஜைக்கு வைத்ததனால் பார்க்கலையோ என்னவோ
நீக்குஇன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் கண் கவரும் படங்களுடன் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
பதிலளிநீக்குநன்றி, நன்றி!
நீக்குஇன்று செவ்வாய் கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நல்வரவு..
பதிலளிநீக்குஇணைந்து வரவேற்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள். முப்பெரும் தேவிகளாகிய அன்னை சரஸ்வதி, லக்ஷ்மி, துர்கா பரமேஸ்வரி அனைவரும் சகல கலைகளையும், நல்ல ஆரோக்கியத்தையும் நமக்கருள செய்ய பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நேற்று என் நேரமின்மையால் பதிவுகளுக்கு வர இயலவில்லை. பிறகு நேற்றைய பதிவுகளுக்கும், இன்றைய பதிவுகளுக்குமாக சேர்த்து வருகிறேன். அனைவரும் பொறுத்துக் கொள்ளவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
ஊருக்கு வச்சனையில்லாமல் உழைத்த வரதன்களும், அவனைப்போன்றவர்களைப் பயன்படுத்திக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அவனையும் ஊரின் சக மனுசனாக எண்ணி அவனுடைய வாழ்க்கையையும் குறைவில்லாமல் பார்த்துக்கொண்ட ஊர்ப்பெரியவர்கள் இருந்த காலம், நன்றாக்க் கொண்டுவந்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குசமீப காலங்களில் கிராமத்துக் எஓவில்களுக்குச் செல்லும் நான் (அந்த அந்தக் கிராமங்களில் சில நாட்கள் தங்கிவதால்) இத்தகைய பரோபகாரிகளைக் கண்டிருக்கிறேன். செய்யும் வேலைக்கு, உழைப்புக்குக் கூலி கிடைத்தாலும், அதனை மஞ்சிய பொறுப்பெடுத்துச் செய்யும் உள்ளம் கொண்டவர்கள் அவர்கள்.
// இத்தகைய பரோபகாரிகளைக் கண்டிருக்கிறேன்.. //
நீக்குஇன்றும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கின்றார்கள்..
தங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..
நல்ல மனிதர்களைப் பற்றிய சம்பவங்கள் கொண்ட கதை எப்போதும் மனதுக்கு மகிழ்ச்சிதான். பாராட்டுகள் துரை செல்வராஜு சார்.
பதிலளிநீக்குஅன்பின் நெல்லை அவர்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
கதைக்கான ஓவியம் நல்லா வந்திருக்கு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவரதன் இன்னும் கொஞ்சம் குள்ளம்.. அவ்வளவு தான்..
நீக்குநல்லபடியாய்க் கல்யாணம் ஆகி வரதன் குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாய் வாழ்க்கை நடத்தட்டும். கௌதமன் அவர்கள் வரைந்திருக்கும் படம் நன்றாய் இருக்கு. ஆனாலும் வேட்டிக்கும் சட்டைக்கும் பொருந்தலை. வேட்டிக்கரையின் நிறத்தில் தானே சட்டை வரணூம்? ;)))))))
பதிலளிநீக்குவரதனுக்கு எல்லாமே ஓ சி யில் கிடைக்கும் உடைகள். அதில் அவர் மேட்சிங் எல்லாம் பார்த்தால் -- எங்கே நடக்கும்? மேலும் அவர் ஊருக்கு உழைப்பவர், உடை பற்றிக் கவலைப் படாதவர்.
நீக்கு@ கீதா அக்கா..
நீக்கு// வேட்டிக் கரையின் நிறத்தில் தானே சட்டை வரணும்? ;)).. //
இந்த நடைமுறை எல்லாம் இப்போதைய டமுக்கு டப்பா விளம்பரக் காரனுங்களால் உண்டாக்கப்பட்டது..
70 களில் சட்டை வேட்டி பொருத்தம் பார்த்துக் கட்டியதில்லை..
அன்பின் கருத்திற்கு நன்றி அக்கா..
வீட்டு வேலைகள் அழைக்கின்றன. பின்னர் வரேன்.
பதிலளிநீக்குநன்றி; மீண்டும் வருக !
நீக்குமீண்டும்
நீக்குமீண்டும் வருக !..
அருமை
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஐயா..
பவுனு ஆயிரத்து நூறு ரூவாய்தானே..
பதிலளிநீக்குஅடடே இந்த கையோட முகவரி சொல்லுங்க ஜி ?
சாம்பசிவம் -
ஏலே... இதுக்கு நீ எழுபது வருசம் முந்தி பொறக்கணும்லே...
1975ல் நடக்கும் கதை. துரை செல்வராஜு சார் தப்பித் தவறி போன வருஷம்னு சொல்லிட்டார்னா, அவருக்கு 10,000 அனுப்பி, 9 பவுன்ல இரட்டை வட நகை வாங்கி வைக்கச் சொல்லிட மாட்டோமா?
நீக்கு@ கில்லர்ஜி..
நீக்கு1980 களில் ஒரு பவுன் ஆயிரத்து முன்னூறு தான்...
கம்மாளர் தெருவில் வீட்டுத் திண்ணைகளில் வைத்து பொன்னை உருக்கி தட்டி எடுத்து நகாசு வேலை செய்து கொடுப்பார்கள்..
தொழில் சுத்தமும் நேர்மையும் வெகுவாக இருந்த காலம் அது..
இதெல்லாம் இனிமேல் வாய்ப்பதற்கு வழியே இல்லை..
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி..
@ கில்லர் ஜி
நீக்கு///பவுனு ஆயிரத்து நூறு ரூவாய்தானே..///
1980 களில் ஒரு பவுன் விலை ஆயிரத்து நூறு ரூபாய் தான்..
கம்மாளர் தெருவில் வீட்டுத் திண்ணையில் வைத்து பொன்னை உருக்கி தட்டி எடுத்து நகாசு வேலைகள் செய்து தருவார்கள்..
அப்படியான காலம் திரும்பவும் வருவதற்கு இனிமேல் வாய்ப்பே இல்லை..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
@ நெல்லை..
நீக்கு// அவருக்கு 10,000 அனுப்பி, .. //
தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..
அதனால்தான் எழுபது வருடம் முன்பு என்று குறிப்பிட்டேன்...
நீக்குகதை நன்றாக இருக்கிறது, துரை அண்ணா.
பதிலளிநீக்குவரதன் மாதிரி ஆட்கள் பல கிராமங்களில் உண்டு. ஆனால் பார்த்தால் அவர்களுக்கு யாரும் இருக்க மாட்டார்கள். ஊரே அவர்களுக்கு உறவாக இவர்களும் அங்கு எல்லா குடும்பங்களிலும் ஒருவராக என்று.
இவர்களும் அவர்களை உறவுமுறை சொல்லி அழைப்பதும் உண்டு.
வரதனின் கனவு நனவாகட்டும்.
கீதா
// ஊரே அவர்களுக்கு உறவாக இருக்கும்.. //
நீக்குஉண்மை தான்..
இப்படி வரதனைப் போன்றவர்களும் நல்ல மனிதர்ளும் சமுதாயத்தில் இருந்திருக்கின்றனர்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி சகோ..
அதுசரி, துரை அண்ணா தங்கம் விலை இம்புட்டுத்தானா? ஒரு வேளை அந்தக்காலத்துக் கதையோ...
பதிலளிநீக்குகீதா
கதையின் காலம் 1980..
நீக்குஅப்போது ஒரு கிளாஸ் நல்ல தேநீர் பத்து காசு மட்டுமே..
ஏதோ கனா கண்டதைப் போல இருக்கின்றது..
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவிஜயதசமி வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்..
நீக்குவிஜயதசமி வாழ்த்துகள்..
வாழ்க வளமுடன்..
நீக்குவிஜயதசமி வாழ்த்துகள்..
வாழ்க வளமுடன்..
நீக்குவிஜயதசமி வாழ்த்துகள்..
கதை நன்றாக இருக்கிறது. கதைக்கு பொருத்தமான படம் வரைந்து இருக்கிறார் கெளதமன் சார்.
பதிலளிநீக்குகதைக்கு பொருத்தமான படம்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
// கதைக்கு பொருத்தமான படம்.. //
நீக்குகௌதமன் அவர்களது கை வண்ணம்..
அழகு.. அருமை..
கதைக்கு பொருத்தமான படம்..
நீக்குஅழகு..
நன்றி.
நீக்கு" இன்னும் எத்தனை நாளைக்குத் தான் காடும் மேடும் சோறு போடும்?.. ஒனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா!.. "//
பதிலளிநீக்குவாழ்க்கை அமைத்து கொடுத்து விட்டார்கள் வரதனுக்கு. நல்ல மனிதர்கள் .
" விருந்து செலவு என்னோடது ன்னுட்டார் ஐயர்.. அதுக்கப்புறம் தாலியும் கல்யாண ஜவுளியும் நான் ஏத்துக்க மாட்டேனா?.. "
" பவுன் விக்கிற விலைக்கு.. " வரதன் ஏறிட்டு நோக்கினான்..
" என்னடா பெரிய பவுனு?.. ஆயிரத்து நூறு ரூவாய் தானே.. அந்த ரூபாய் பெற மாட்டாயா நீ!.. "//
அன்பு உள்ளங்கள் நிறைந்து இருந்த காலம். கதை சொல்லிய விதம் அருமை. ஊருக்கு உழைக்கும் பிள்ளைக்கு எல்லோரும் சேர்ந்து நல்லது செய்ய காத்து இருந்த தகுந்த நேரம் திருமணம் என்று உதவி செய்கிறார்கள்.
/// அன்பு உள்ளங்கள் நிறைந்து இருந்த காலம்.. ///
நீக்குஇது கதையல்ல..
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இப்படியான நிகழ்வுகள் தஞ்சை மாவட்டத்தின் கிராமங்களில் சர்வ சாதாரணமானவை..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..
கௌ அண்ணா வரதன் படம் மிக நன்றாக வந்திருக்கிறது.
பதிலளிநீக்குகீதா
ஆம்.. சித்திரச் செல்வரின் ஓவியம் அழகு..
நீக்குஆம்.. சித்திரச் செல்வரின் ஓவியம் அழகு..
நீக்குநன்றி.
நீக்குஐப்பசி வளர்பிறை தசமி எனது தந்தையின் திதி.. திரு ஐயாற்றில் தர்ப்பணம் கொடுத்து விட்டு இப்போது தான் திரும்பினேன்..
பதிலளிநீக்குஅனைவருக்கும் நன்றி..
__/\__
நீக்குகதை அருமை...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதை அருமையாக உள்ளது. இறைவன் அனைத்து ஜீவன்களுக்கும் இப்படி நல்ல விதமாக ஏதாவது உபகாரத்திற்கு வழி வகுத்து விடுவார். இனி வரதன் நல்லபடியாக அவனுக்கென்று ஒரு வாழ்க்கையோடு வாழட்டும். கதை ஆரம்பமும், முடிவும் மனதை தொடுகின்றன. சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
கதைக்கேற்றபடி ஓவியம் வரைந்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி..
பதிலளிநீக்குநன்றி..