வெள்ளி, 13 அக்டோபர், 2023

வெள்ளி வீடியோ : எண்ணிரு ஆண்டுகள் எழுதிய பாட்டு என்னை உன் இடை என்னும் சிறையினில் பூட்டு.

 இன்று சிலநாட்களுக்குப் பின் மீண்டும் சூலமங்கலம் சகோதரிகள் பாடல்.

கூவைக்கூத்தன் பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்க, சூலமங்கலம் சகோதரிகள் பாடி இருக்கும் 'காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே' பாடல் 

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே
கண்டு எந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

பால் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே
கண்டு எந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

சேவடியைக் காணவென்றே ஓடிவருவார் - அவர்
சிந்தையிலே உந்தனையே பாடிவருவார்
முருகா பாடிவருவார்  [ மச்சக் காவடிகள் ஆடிவரும் ]

மாறாத மலையினிலே ஏறிவருவார்
ஏறுமயில் வாகனனை காண வருவார்
உள்ளவனும் இல்லார் என்ற பேதமில்லை - அருள்
வள்ளல் உந்தன் அன்புக்கோர் 
எல்லை இல்லை [ பன்னீர் காவடிகள் ஆடிவரும்]
 
தேரோடும் வீதியெங்கும் கூடியிருப்பார் - வள்ளி
தெய்வயானை அம்மையுடன் கண்டு களிப்பார்
முருகா கண்டு களிப்பார் [ பூங்காவடிகள் ஆடிவரும்]  



===================================================================================================

ஆகாய கங்கை இன்று மண்ணில் 

1976 ல் வெளியான படம் மழைமேகம்.  ஊர்வசி சாரதா, முத்துராமன், ஸ்ரீகாந்த் நடித்த படம்.  இதில் ஒரே ஒரு பாடல் அருமையான பாடல்.  ஆலங்குடி சோமு, புலமைப்பித்தன், வாலி மூவரில் யார் எழுதிய பாடல் என்று தெரியவில்லை.  வாலியாக இருக்க வாய்ப்பு அதிகம்!  இசை கே வி மகாதேவன். படத்தை இயக்கி இருந்தவர் ஏ எஸ் பிரகாசம்.  கருப்பு சாரதா, சிவப்பு சாரதா என இரட்டை வேடம் சாரதாவுக்கு.

எஸ் பி பி சுசீலா குரலில் இன்றைய பாடல்.


ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்த தீர்த்தம் என்னை ஆட சொன்னது
உள்ளம் இரண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும் ..ஆ ஆஹா

ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்த தீர்த்தம் என்னை ஆட சொன்னது
உள்ளம் இரண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும் ..ஆ ஆஹா

மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து
மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்து
மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து
மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்து
வானத்து மீன்களில் மல்லிகை தெளித்து
மன்மத மந்திரம் மயங்கிட படித்து
வானத்து மீன்களில் மல்லிகை தெளித்து
மன்மத மந்திரம் மயங்கிட படித்து
பாடம் சொல்லக் கூடாதோ ..
பார்வை ஒன்று போதாதோ …..(ஆகாய கங்கை)

எண்ணிரு ஆண்டுகள் எழுதிய பாட்டு
என்னை உன் இடை எனும் சிறையினில் பூட்டு
எண்ணிரு ஆண்டுகள் எழுதிய பாட்டு
என்னை உன் இடை எனும் சிறையினில் பூட்டு
மங்கல இசை தரும் வீணையை மீட்டு
மாந்தளிர் மேனியில்
குங்குமம் தீட்டு
மங்கல இசை தரும் வீணையை மீட்டு
மாந்தளிர் மேனியில்
குங்குமம் தீட்டு
மாலை தென்றல் தீயாக
காணும் இன்பம் நீராக ..(ஆகாய கங்கை) ..

36 கருத்துகள்:

  1. மங்கலம் அருள்வாள் மதுரைக்கு அரசி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி..   கொஞ்ச நாளைக்கு முன்னால் பகிர்ந்தாச்சே...!

      நீக்கு
    2. நல்லது.  என்றுமே நம் பிரார்த்தனை அதுவாக இருக்கட்டும்.

      நீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருளைப் பெறுவோம். வாங்க துரை செல்வராஜூ அண்ணா.. வணக்கம்.

      நீக்கு
  3. சூல மங்கலம் சகோதரிகள் பாடியளித்த இனிய பாடலுடன் இன்றைய இளங்காலைப் பொழுது..

    முருகா..
    முருகா..

    பதிலளிநீக்கு
  4. பூவை செங்குட்டுவன்!..
    என்று நினைக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  5. இரண்டு பாடல்களும் கேட்டு ரசித்ததே ஜி

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. ஆகாய கங்கை --
    புலமைப்பித்தன் பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதை வைத்து சொல்கிறீர்கள்?

      நீக்கு
    2. நீங்கள் தான் நான் சொல்வது சரியா என்று சொல்ல வேண்டும். :))

      நீக்கு
  8. உள்ளவனும் இல்லார் என்ற பேதமில்லை..... மிக அருமையான பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணக்காரன் சிலர். ஏழைகள் பலர். நல்லா எழுதியிருக்கார்

      நீக்கு
    2. கேட்க நல்லாத்தான் இருக்கு! நிதர்சனம்?

      நீக்கு
  9. இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் தனிப்பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். சூலமங்கலம் சகோதரிகளின் இனிமையான பல பாடல்களில் இதுவும் ஒன்று. நல்லதான வரிகள் பக்தியுடன் மனதுக்குள் பதிந்த பாடல். இரண்டாவது பாடல் கேட்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. பாடல் வரிகள், ஆகாய கங்கை தானாக வந்து விடும் போல...!

    பதிலளிநீக்கு
  12. பக்திப்பாடல் மிகவும் அருமையான பாடல் கோவில் திருவிழாக்களில் ஒலிக்கும்.

    இரண்டாவதும் கேட்டிருக்கிறேன்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வழக்கம்போல் இரண்டாவது படம், பாடல் தெரியாது எனினும் முதல் பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேனோ! மிக அருமையான பாடல். ரசித்த, ரசிக்கும் பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது பாடல் நன்றாய் இருக்கும் கீதா அக்கா.

      நீக்கு
  14. முதல் பாடல் அடிக்கடி கேட்கும் பாடல், பிடித்த பாடல்.
    இரண்டாவது பாடல் வானொலியில் கேட்டு இருப்பேன் என்று நினைக்கிறேன், நினைவு இல்லை. படமும் பார்த்தது இல்லை.
    இப்போது கேட்டேன். இனிமையாக இருக்கிறது பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​நன்றி கோமதி அக்கா. இரண்டாவது பாடல் கேட்டதில்லை என்பது வியப்பு!

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இரண்டாவது பாடலும் இப்போது கேட்டேன். முன்பு ரேடியோவில் கேட்ட நினைவு வந்தது. இந்த படம் பெயரும், பாடல் விபரங்களும் இன்றுதான் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. முதல் பாடல் இரண்டாவது பாடல் இரண்டுமே ரசித்த பாடல்கள் ஸ்ரீராம்.

    இரண்டாவது பாடல் எஸ்பிபி இளமை!!! ஆனால் வயசானாலும் இளமையாதான் பாடிட்டிருந்தார்! என்பது வேறு விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!