வெள்ளி, 27 அக்டோபர், 2023

வெள்ளி வீடியோ : வானத்தில் வெண் நிலவு ஒன்றல்லவா... மானத்தில் மங்கையர்கள் மானல்லவா கவரி மானல்லவா

 அய்யம்பட்டி ஆதிசேஷ அய்யர் எழுதிய பாடல். டி கே பட்டம்மாள் குரலில் ஒரு முருகன் பாடல்.  வேலன் வருவாரடி...  முருகன் பெருமைகள் ஒவ்வொன்றாய்ச் சொல்லிச் சொல்லிப் பாடி வேலன் வருவாரடி என்று பாடுவது அழகு...


வேலன் வருவாரடி வேலன் வருவாரடி வேலன் வருவாரடி 
வடிவேலன் வருவாரடி! 

வள்ளிமேல் மோகம் கொண்டு வேடனான வடி வேலன் வருவாரடி!

மானோடி வந்ததனால் நானோடி வந்தேனென்று வானோங்கும் தினையின் மன்மதனார் மலைத்த வேலன் வருவாரடி!

மங்கை மனதறிந்து எங்கும் தொடர்ந்தலைந்து வேங்கை மரமாகி ஓங்கி வளர்ந்த வடி வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி! 

பண்டாரமாய் சிவனை கொண்டாடியே அமுது உண்டோடி அமுது உண்டோடி என்றோடி மன்றாடி நின்றவடி வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி வேலன் வருவாரடி! வேலன் வருவாரடி 

தேனும் தினைமாவுண்டு தாங்காத விக்கல் கொண்டு கூனும் நிமிர்ந்து கொண்டு காவி உடுத்தவடி வேலன் வருவாரடி! 

வஞ்சியரின் கைபிடித்து குளக்கரையில் வஞ்சியரின் கைபிடித்து கெஞ்சிக் கரையேறி கொஞ்சுமொழி நங்கையுடன் இன்சொல் புரிந்த வேலன் வருவாரடி! 

அண்ணனருளால் குறப் பெண்ணை மணக்கவென்று எண்ணித்துதித்த திருக்கண்ணன் கொண்டாடும் வேலன் வருவாரடி! 

யானை மருட்டி வினை காலில் விரட்ட மடமானை மகிழ்ச்சியொடு மார்போடணைத்த வடி வேலன் வருவாரடி! 

நம்பியவர் துதிக்க நாரதர் ஆனந்திக்க தம்பிக்குகந்த மயிலாடப் பணியாற்றும் வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி வேலன் வருவாரடி!


===============================================================================================================

1964 ல் வெளிவந்த திரைப்படம் 'முரடன் முத்து'.  சிவாஜி கணேசனும், தேவிகாவும் ஜோடியாக நடித்த படம்.  இயக்குனர் பி ஆர் பந்துலுவும் சிவாஜியும் முதன் முதலாக இணைந்த படம்.  

தமிழிலும், கன்னடத்திலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம்.

கவியரசர் கண்ணதாசன் பாடல்களுக்கு இசை T G லிங்கப்பா.

இந்தப் படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் பிடிக்கும்,  ஒன்று 'தாமரைப்பூ குளத்திலே' பாடல்.  இன்னொன்று இன்று பகிரப்படும் 'பொன்னாசை கொண்டவர்க்கு'

முதல் பாடல் TMS -சுசீலா பாடிய டூயட். இது TMS மட்டும் தனித்துப் பாடியிருக்கும் பாடல்.  ஒரு மாதிரி கீழ் ஸ்தாயியில் அமைதியான பாடல்.  TMS இந்த சுருதியில் பாடும் பாடல்கள் குறைவு!

பொன்னாசை கொண்டோர்க்கு
உள்ளம் இல்லை
நல்ல உள்ளம் இல்லை
என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு
கண்ணும் இல்லை
இரு கண்ணும் இல்லை​ (பொன்னாசை​)


கொட்டி விட்ட கூந்தலுக்கு
பூ வேண்டுமா..
​கொட்டி விட்ட கூந்தலுக்கு
பூ வேண்டுமா
முல்லைப் பூ வேண்டுமா
கொல்ல வரும் வேங்கைக்கு
மான் வேண்டுமா
புள்ளி மான் வேண்டுமா
​குயிலுக்கு வான் பருந்து
இணையாகுமா
குயிலுக்கு வான் பருந்து
இணையாகுமா
நல்ல துணையாகுமா
சொல்லக் கூடாத ஆசை நெஞ்சில்
வரலாகுமா
அது முறையாகுமா  (பொன்னாசை) 

​வானத்தில் வெண் நிலவு
ஒன்றல்லவா...
​வானத்தில் வெண் நிலவு
ஒன்றல்லவா
என்றும் ஒன்றல்லவா
மானத்தில் மங்கையர்கள் மானல்லவா
கவரி மானல்லவா
​பறவை பிரிந்த பின்னே இரை தேடுமா
பறவை பிரிந்த பின்னே இரை தேடுமா
பெண்மை உறவாடுமா
தட்டிப் பறித்தே சென்றாலும்
அது உயிர் வாழுமா
இன்பம் பயிராகுமா  (பொன்னாசை கொண்டோர்க்கு) 

56 கருத்துகள்:

  1. அய்யம்பட்டி ஆதிசேஷ அய்யர் -- நான் கேள்ளிப் பட்டிராத பாடலாசியர்.

    'அமுது உண்டோடி என்றோடி மன்றாடி நின்ற வடிவலேன் வருவாரடி..'
    வார்த்தைகள் தானே அங்கங்கே. வந்து உட்கார்ந்த மாதிரி எவ்வளவு அருமையாக பாடல் அமைந்து விட்டது?
    இறைவனின் மேல் அன்பும் அவன் கருணை அருளும் தான் இப்படிப் பாடல் உருக்கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். இந்த அருமையான பாடலைப் பகிர்ந்தமைக்கு நன்றி, ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அய்யம்பட்டி ஆதிசேஷ அய்யர் -- நான் கேள்ளிப் பட்டிராத பாடலாசியர். //

      நானும்!

      ரசித்ததற்கு நன்றி ஜீவி ஸார்!

      நீக்கு
  2. முதல் பாடல் கேட்ட ஞாபகம் இல்லை.

    இரண்டாவது பாடல் கேட்டு இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பாடல் கேட்டிருக்க வாய்ப்பில்லைதான்! நன்றி ஜி.

      நீக்கு
  3. இரண்டாவது பாடல் முரடன் முத்து கேரக்டருக்கு ஏற்றபடி எழுத கவியரசர் முயன்றிருக்கிறார் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. இரண்டு பாடல்களும் கேட்டு இருக்கிறேன், நல்ல பாடல்கள்.
    பகிர்வுக்கு நன்றி.
    கேட்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் தனிப்பாடல் அடிக்கடி கேட்டிருக்கிறேன். இரண்டாவது திரைப்பட பாடல் இதுவரை கேட்டதில்லை. இப்போது கேட்டேன். பாடல் வரிகள் நன்றாக உள்ளது.

    இரண்டு பாடல்களையும் இயற்றியவர், இசையமைத்தவர் என பதிவில் தெளிவாக சொன்னமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  9. வேலன் வருவாரடி..

    வரட்டும்..
    வரட்டும்..
    விரைவாக
    வரட்டும்!..

    இப்போது தான் இந்தப் பாடலைக் கேட்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  10. முரடன் முத்து திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இனிமையானவை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இரண்டு அல்லது மூன்று பாடல்கள்தான் இசைவானவை!

      நீக்கு
  11. செவ்வந்திப் பூ போலிருக்கும் கோழிக் குஞ்சு..

    சூலமங்கலம் ராஜலட்சுமி ..
    - இனிமையான பாடல்..

    பதிலளிநீக்கு
  12. கோட்டையிலே ஒரு ஆலமரம்..

    - சீர்காழியார் பாடிய பாடல்..

    இதிலே பொருள் குற்றம் என்றொரு பிரச்னை எழுந்ததே -

    என்னவென்று தெரியுமா!..

    பதிலளிநீக்கு
  13. அய்யம்பட்டி ஆதிசேஷய்யரை நினைவில் கொண்டு இங்கு இறக்கிவிட்டமைக்கு நன்றி. நானும் இப்போதுதான் இந்தப் பாடலாசிரியரைப்பற்றிக் கேள்விப்படுகிறேன்.

    எழுத்தைத் தந்தவனை எங்கே நினைத்துப்பார்க்கிறார்கள் நம்ம மக்கள்? புகழ்பெற்ற ஓரிரு கவிஞர்களைப் பிடித்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்துகொண்டு புகழ்வார்கள். அதுவுமொரு ஃபார்மாலிட்டி! வார்த்தைகளை ரசித்து, எழுதியவன் யாரோ எனத் தானாகத் தேடித் தெரிந்துகொள்ள ஆர்வமில்லை...அக்கறையில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ ஏகாந்தன்..

      // புகழ் பெற்ற ஓரிரு கவிஞர்களைப் பிடித்துக் கொண்டு.. //

      புகழ் (!) பெற்ற ஓரிரு கவிஞர்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக!..

      நீக்கு
    2. ​வாங்க ஏகாந்தன் ஸார்.. அபூர்வமாய் பாடலெழுதும் கவிஞர்களின் திறமை அதிகம் பேசப்படுவதில்லைதான். இவர் வேறென்ன பாடல்களை எழுதி இருக்கிறார் என்று தெரியவில்லை.

      நீக்கு
    3. அதற்குமேல் எதுவும் தெரிவதில்லை துரை செல்வராஜூ அண்ணா... கைதட்டும் கூட்டம்!

      நீக்கு
  14. இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன் .
    பக்தி பாடல் அருமை.

    பதிலளிநீக்கு
  15. ஸ்ரீராம் போன்றவர்களே கேள்விப்படலைனால் எனக்கு எங்கே ஐயம்பட்டி சேஷையர் பற்றித் தெரிய முடியும்? முரடன் முத்து படம் பார்த்த நினைவு. ஆனால் சீர்காழியின் பாடலைத் தவிர்த்து மற்றவை நினைவில் இல்லை. இரு பாடல்களும் நன்றாய் உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரனைத் தெரிந்த எனக்கு இவரைத் தெரியாதது தவறுதான்! முரடன் முத்து நான் பார்த்ததில்லை.

      நீக்கு
  16. வேலன் வருவாரடி பாடல் நிறைய கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். என் மாமாவின் கலெக்ஷனில். நான் அப்போது கற்ற பாடல். அப்போது இந்த ஏகலைவிக்குக் குருவாக டிகேஜெ, டிகேபி, ஏனென்றால் மாமாவின் கலெக்ஷன் இதுவும் எம் எல் வி, மதுரை மணி அய்யர், அவர் மருமகன், இப்படி அந்தக் கால கட்ட லெஜன்ட்ஸ் பாடல்கள். கச்சேரிப்பாடல்கள் என்று. அய்யம்பட்டி ஆதிசேஷ அய்யர் - கேசட்டில் வாசித்ததாகத் தெரியவில்லை. மாமா சில பாடல்களைப் பதிந்துகேசட்டில் வைத்திருபபர் லேபல் இருக்காது சும்மா யார் பாடல்கள் என்ற பெயர் இருக்கும் அவ்வளவே. இப்பதான் இப்பெயர் கேள்விப்படுகிறேன்.

    ராகமாலிகையில் அமைந்த பாடல். பேத்தியும் பாடிக் கேட்டிருக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேத்தி பாடி நான் கேட்டதில்லை. பாட்டி பாடி மட்டுமே கேட்டிருக்கிறேன். கம்பெனி கேசெட்டாக இருந்தால் விவரம் அச்சிட்டிருப்பார்கள். மற்றவற்றில் இருக்காது.

      நீக்கு
  17. பாட்டைக் கேட்டு ரசித்தேன் ஸ்ரீராம்.

    பேத்திக்குப் பாட்டியின் ஜாடை நிறைய இருக்கிறது!!! நீங்கள் பகிர்ந்திருக்கும் படம் டக்கென்று நித்யஸ்ரீயின் முகம் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. இரண்டாவது பாடலும் கேட்டதுண்டு. இலங்கை வானொலியில் பெருமாபாலும் மதியம் வரும் பாடல்களில் என்று நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. கோட்டையிலே ஒரு ஆலமரம்..
    அதில் கூடு கட்டும் மாடப்புறா.. - பாடலில் பொருள் குற்றம் என்ற பிரச்னை அப்போது கிளப்பி விடப்பட்டது..

    பதிலளிநீக்கு
  20. ஆதிசேஷ ஐயர் பற்றி மேலும்:

    சி.என். ஆதிசேஷ ஐயரின் ஊர் அனயம்பட்டி. முற்றிய முருக பக்தர் எனத் தெரியவருகிறது. நாமக்கலுக்கருகே உள்ள வேங்கரி என்கிற குக்கிராமத்தில் 1896ல் பிறந்தவர். பெற்றோரிடமிருந்தே புராண, இதிகாசங்களைக் கற்று வெகுவாக மனம் ஈடுபட்டவர். மதுரை ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் சென்று திருப்புகழ் கற்றுக்கொண்டார்.

    அனயம்பட்டி ஜலதரங்கம் சுப்பைய்யரோடு சேர்ந்து முருகனுக்கு 1922-ல் சேலத்துக்கருகிலுள்ள அனையம்பட்டியில் ஒரு சிறு கோவில் கட்டியிருக்கிறார். முருகன் மீது நிறைய பாடல்களை இயற்றியிருக்கிறார். தன் கடைசிகாலத்தில் சந்நியாசம் மேற்கொண்டதாகத் தெரிகிறது. சந்நியாச வாழ்க்கையில் குஹனந்தா என அறியப்பட்டவர் ஆதி சேஷய்யர். அவரது சிஷ்யர்கள் திருப்புகழ் பஜன் மண்டலி ஆரம்பித்து, திருப்புகழோடு ஆதிசேஷ ஐயர் இயற்றிய பாடல்களைப் பாடி பஜன் செய்வததோடு, நாமசங்கீர்த்தனம், அன்னதானம் செய்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தார்களாம்.

    ஆதிசேஷ ஐயர் இயற்றி, மதுரை சோமு பாடி பிரபலமாக்கிய பாடலொன்று:

    என்னகவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை
    இன்னும் என்ன சோதனையோ முருகா

    அன்னையும் அறியவில்லை
    தந்தையோ நினைப்பதில்லை - உன்
    மாமியும் பார்ப்பதில்லை
    மாமனோ கேட்பதில்லை..

    என்னகவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை
    இன்னும் என்ன சோதனையோ முருகா

    அட்சர லக்ஷம் தந்த அண்ணல் போஜராஜன் இல்லை - என்னை
    பட்சமுடனே அழைத்துப் பரிசளிக்க யாருமில்லை
    ஈஜகத்தில் நீ நினைத்தால் எனக்கோர் குறைவில்லை
    அலட்சியமோ உனக்கு.. உன்னை நான் விடுவதில்லை..
    அலட்சியமோ உனக்கு.. உன்னை நான் விடுவதில்லை..

    என்னகவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை
    இன்னும் என்ன சோதனையோ முருகா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை.  நானே கூகிளிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  எதிர்பாராத சில அலுவலகப் பிரச்னைகள்..  

      என்ன கவி பாடினாலும் பாடல் இவர் எழுதியதா?  அட...  நீலமணி ராக பாடல்.  மிக  உருக்கமான பாடல்.

      நீக்கு
    2. உடனே சென்று மதுரை சோமுவின் 'என்ன கவி பாடினாலும்' கேட்டு விட்டு, அப்படியே தாகத்துடன் சுடச்சுட கிஷோரின் 'மேரே நைனா சாவன் பாதோ' கேட்டு உருகி விட்டு வந்து விட்டேன்.

      நீக்கு
  21. * இக்க்ஷணத்தில் நீ நினைத்தால் எனக்கோர் குறையுமில்லை
    அலக்ஷியமோ உனக்கு .. உன்னை நான் விடுவதில்லை

    பதிலளிநீக்கு
  22. ஆதிசேஷ ஐயர் பற்றி விரிவான
    தகவல்கள்..

    முருகா..
    முருகா..

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  23. / இயக்குனர் பி ஆர் பந்துலுவும் சிவாஜியும் முதன் முதலாக இணைந்த படம்/
    விக்கி சொல்கிறது "கர்ணன் 1964 ஜனவரி ரிலீஸ்" என்று. முரடன் முத்து வந்ததோ 1964 நவம்பர். 1957ல் வந்த தங்கமலை ரகசியத்திலேயே சிவாஜியும் பந்துலுவும் கூட்டணி போட்டிருக்கிறார்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் விக்கி பார்த்துதான் இந்தத் தகவலைக் கொடுத்தேன்.  ஒருவேளை தொடங்கப்பட்டதில் இதுதான் முதன்மையோ என்னவோ..  அவை வெளியானதில் முதன்மை இருந்திருக்கலாம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!