நெல்லைத்தமிழன் :
ஒரு கம்யூனிட்டி வளாகத்தில் வசிக்க அவசியமான குணநலன்கள் என்ன என்ன?
# முக்கியமாக பொறுமை , நிர்வாக சிரமங்களைப் புரிந்து கொள்கிற பக்குவம், இயல்பான இன்சொல், முன்னின்று ஒத்துழைக்கிற ஆர்வம்.
& 1) கம்யூனிட்டி வளாகத்தில் உள்ள அனைவரும் (வீட்டு சொந்தக்காரர்கள் / வாடகைக்கு உள்ளவர்கள் ) எல்லோரும் ஒரு வாட்ஸ் ஆப் குழுமத்தில் சேர்ந்து ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களாக இருக்கவேண்டும்.
2) குறைந்த பட்சம் பக்கத்து வீட்டுக்காரர்கள், மேல் வீடு / கீழ் வீடுகளில் உள்ளவர்கள் பற்றி ஓரளவுக்காவது (பெயர் / எங்கு பணிபுரிகிறார் / குழந்தைகள் எங்கு என்ன வகுப்பு படிக்கிறார்கள் என்பது போன்ற விவரங்கள் ) தெரிந்து வைத்திருப்பது நல்லது.
3) அந்தந்த வீடுகளில் - தரை தளத்தில் வசிப்பவர்களின் - வசிப்பவர்களின் அனுமதி பெறாமல் அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பூக்கள் / மூலிகைகளைப் பறிக்காமல் இருக்கவேண்டும்.
4) செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளால் மற்ற குடியிருப்பினர்களுக்கு தொந்தரவு / அபாயம் / ஆரோக்கியப் பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது.
5) பொது உபயோக இடங்களை (club house / swimming pool / jogging path etc ) சுத்தமாகப் பராமரித்தல் மற்றும் அந்தந்த இடங்களுக்கு அந்தக் குடியிருப்பு நலச் சங்கம் விதித்துள்ள சட்ட திட்டங்களை மதித்து நடந்துகொள்வது.
(மேற்கண்டவை எல்லாமே என் அனுபவத்தில் சொல்லப்பட்டவை. என் குடியிருப்பு அனுபவங்கள் பற்றி தனியாக தொடராக எழுதலாம் என்று நினைக்கிறேன். )
கல்வைத்து பழுக்க வைக்கும் பழங்களால் என்ன மாதிரி பிரச்சனைகள் வரும்?
# வயிறு, ஜீரணம் தொடர்பான பிரச்னைகள். நாட்பட்டது எதுவும் கேள்விப் பட்டதில்லை.
கல் வைத்துப் பழுக்க வைத்த பழங்களை விற்கும் வியாபாரிகளின் பக்கம் உள்ள நியாயங்களை யோசித்திருக்கீங்களா?
# வியாபாரிகள் பக்கம் எதோ நியாயம் இருக்கலாம். கிடைத்ததை விற்கிறார்கள்.. ஆனால் கல் வைத்துப் பழுக்க வைப்பவரிடம் நியாயம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. Quick money syndrome.
& லாபம் ஒன்றே குறிக்கோள் என்று நினைக்கும் வியாபாரிகள் பக்கம் நியாயங்கள் அதிகம் இருக்க வாய்ப்பு இல்லை.
= = = =
எங்கள் கேள்விகள் :
1) பரீட்சைகள் முடிந்து பள்ளிகள் திறக்கப் போகின்றன. விடுமுறையில் எங்கு செல்வதாக இருந்து, எங்கு சென்றீர்கள்.?
2) அப்பப்பா என்ன வெயில், என்ன வெயில் என்று இவ்வாண்டும் புலம்பினீர்களா அல்லது வெயிலின் தாக்கத்தைக் குறைக்க ஏதேனும் முயற்சி எடுத்தீர்களா ?
3) பச்சை காய்கறி சாப்பிட டாக்டர் சொன்னால் நீங்கள் விரும்பி உண்பது எதை ?
4) உங்களைப் பற்றி வெளியே சொல்ல இயலாத செய்தி என்று ஏதேனும் இருக்கிறதா ? (ஆம் இல்லை என்று சொன்னால் போதும்.)
5) இருபது ஆண்டுகளுக்கு மேலாக நீங்கள் கட்டிக் காத்து வரும் "ரகசியம்" ஏதேனும் இருக்கிறதா ? (ஆம் / இல்லை )
= = = =
படம் பார்த்து கருத்து எழுதுங்க :
1)
2)
இரசித்தேன் பதில்களை...
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குநவின்றேன் நன்றியை!
நீக்குகல்வைத்து பழுக்க வைப்பது.... நிறம் கவர்ச்சியாக இருக்கும். நாட்பட வைத்து விற்கலாம். வாங்குபவர்கள் பழத்தை ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டுவிட்டுத் துடைத்து உண்ணலாம் என்பது வியாபாரி என்னிடம் சொன்னது. இயற்கையாகப் பழுக்கவைக்க நேரமோ இல்லை வாங்குபவர்களுக்கு அதில் ஆர்வமோ இல்லை என்றார் அவர்.
பதிலளிநீக்குவாட்டர்மிலன் போன்ற பழங்கள், கோஸ், காலிஃப்ளவர் போன்ற பலவும் ஊசி போடுகிறார்கள், அல்லது கெமிக்கலில் மூழ்கவிடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏன்.. முழு வேர்க்கடலை மூட்டையில் ஃபெஸ்டிசைடு போட்டு மூடையைக் குலுக்கி வைக்கிறார்கள் என்பதும், பச்சை வேர்க்கடலையை சில நாட்கள் வைத்திருந்தால் அதில் உரம் ஏறிக்கிடப்பதும் தெரியுமா? எலியோ பூச்சிகளோ வரக்கூடாது என்பதற்காக வியாபாரிகள் இதனைச் செய்கிறார்கள்.
இதையெல்லாம் படித்தால் பயம்தான் ஏற்படுகிறது. இந்தக் காலத்தி(லும்)ல் ஹார்லிக்ஸ் தவிர எதையும் நம்ப முடியாது போலிருக்கு!
நீக்குநாங்க கூடியவரை பப்பாளிப் பழத்திலிருந்து இயற்கையான பழங்களாகவே வாங்குவோம். இந்த விஷயத்தில் நம்ம ரங்க்ஸ் உடனே கண்டு பிடிச்சுடுவார். பப்பாளி வாங்கினால் உள்ளே கருநிற விதைகள் நிறையவே இருக்கணும். இருந்தால் நாட்டுப் பழம். இல்லை எனில் அது ஹைப்ரிட். சுவையும் மாறுபடும்.
நீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குஇங்கு இரண்டு மாதங்கள் வெயிலின் தாக்கம் உண்டு, ஆனால் சென்னையைப்போல்ல்ல
பதிலளிநீக்குசென்னை வேக்காடு!
நீக்குசென்னையில் 365 நாட்களும் வெயில், வெயில், வெயில் தானே! :(
நீக்குகடற்கரை நகரம் என்பார்கள். ஆனாலும் குஜராத்தில் ஜாம்நகரும் கடற்கரை நகரம் தான். அங்கே அடிக்கும் காற்று. அதிலும் மாலை வேளையில் வீட்டு வாசலில் நாற்காலிகள்/கட்டில்கள் போட்டுப் படுத்தால் ஏழு மணியிலிருந்து (வெளிச்சம் என்னமோ பளீரென இருக்கும்.) ஒன்பது மணிக்குள்ளாக உடலும், மனமும் குளிர்ந்துவிடும். இரவில் வெளியே படுத்தால் பனிரண்டு மணிக்கு மேல் போர்த்திக்கிறாப்போல் இருக்கும். அங்கெல்லாம் ஏப்ரல் 20 தேதிக்கு மேல் மே மாதம் வரை மட்டுமே வெயிலின் தாக்கம் தெரியும். ஜூன் மாதத்தில் பருவ மழை தொடங்கி விடுவதால் குளிர்ந்துவிடும். வெயில் இருந்தாலும் தாக்கம் தெரிந்தது இல்லை.
நீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குகிழக்கே கல்கத்தாவிலும் மத்தியானம் 3 மணி வரை கொஞ்சம் புழுக்கம் தெரிந்தாலும் நான்கு மணிக்கெல்லாம் குளிர்ந்து விடுகிறது என்பதோடு நன்கு இருட்டியும் விடுகிறது. மாலை ஆறு மணி என்பது நம்ம ஊர்ப்பக்கம் இரவு எட்டு மணி போல் இருக்கும். ஆனாலும் தெருக்கள் கலகலப்பாகவே இருந்தன. ஒடிஷாவில் ஆரம்பிச்சா வட கிழக்கு நாடுகள் வரை சீக்கிரமா இருட்டிடும். அல்லது அங்கே ஏற்படும் சூர்யோதயத்துக்கு ஏற்ப நேரத்தை அமைக்கணும். :)
நீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குஇமேஜை காலி பண்ணும் தவறு இல்ஙாத மனிதர்கள் குறைவு. ஒவ்வொருவரிடமும் ரகசியம் இருக்கும்.
பதிலளிநீக்குநிச்சயம்!
நீக்கு:)))
நீக்குஎங்க குடியிருப்பு வளாகத்துக்கு என மூன்று வாட்சப் குழு இருக்கு. அதில் ஒன்று பொதுவானது. குடியிருப்போருக்கும் சேர்ந்து. இன்னொன்று அசோசியேஷன் உறுப்பினருக்கு மட்டுமானது. இன்னொன்று குடியிருப்புக்களின் சொந்தக்காரர்கள் மட்டுமே கலந்து கொள்வது.
பதிலளிநீக்குஎன் குடியிருப்பு வளாகத்தில் 2 குழுக்கள்.
நீக்கு1) owners
2) residents
எங்க வளாகத்தில் கீழ்த்தளம் முழுக்க முழுக்கக் கார்பார்க்கிங்க் மட்டுமே என்பதால் செடிகளோ/கொடிகளோ கீழ்த்தளத்தில் இல்லை. இங்கே அம்பேரிக்க முறையில் முதல் மாடியைத் தான் கீழ்த்தளம் என்பார்கள். அப்படிப் பார்த்தால் நாங்க இருப்பது மூன்றாம் தளம். :) ஒருவருக்கொருவர் தெரிந்தாலும் அப்படி ஒண்ணும் சென்னையைப் போல் இங்கே யாரும் நெருங்கிப் பழகுவது இல்லை. அநேகமாகப் பண்டிகை நாட்களிலோ மற்ற நாட்களிலோ ஏதேனும் பண்ணினால் விநியோகம் செய்வது நானாக மட்டுமே இருக்கும். வாங்கிக்கும்போதும் ஓர் அசிரத்தையுடன் கொடுக்கிறாங்களே என்னும் எண்ணத்துடனே வாங்குவார்கள் என்றே தோன்றும். யாரும் யாருடனும் நெருங்கிப் பழகுவது என்பது குறைவு. இந்த வளாகம் கட்டிய புதிசில் வந்த சிலர் மட்டும் ஒருத்தருக்கொருத்தர் நெருக்கமாக இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஉண்மைதான். மாறி வரும் வாழ்க்கை முறையில் அருகருகே வசிப்போரும் மனதளவில் ஐந்து மைலுக்கு அப்பால் வசிக்கிறார்கள்.
நீக்குஇங்கே செல்லப் பிராணிகளுக்கு அனுமதி இல்லை. மொட்டை மாடியில் இருந்து கீழே கார்பார்க்கிங் வரை தினமும் (ஞாயிறு தவிர்த்து) சுத்தம் செய்துவிடுவார்கள். நன்றாகப் பராமரிப்புக் கொடுக்கப்படும் ஒரு சிலவற்றில் எங்கள் வளாகம் முதல் இடத்தில் இருக்கிறது. அதே போல் சிசிடிவி, செக்யூரிடி மூன்று பேர் என உண்டு. முன்னே நேரடியாக செக்யூரிடி நியமனம் செய்து வந்தார்கள். அதன் பின்னர் இங்கே உள்ள ஒரு செக்யூரிடி நிறுவனத்தில் அவங்களை இணைத்துவிட்டு அவங்க மூலம் அதே நபர்கள் மாற்றி மாற்றிப் பாதுகாப்புக்கு வருவார்கள். சம்பளம் அதிகம் கிடைப்பதோடு தீபாவளி போனஸ், முன் பணம் போன்ற சலுகைகள் இதில் அவங்களுக்குக் கிடைக்கும்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குமூணாவது படத்தின் குரங்கார் இதோடு லட்சத்துப் பத்தாயிரம் முறை வந்திருக்கார் இல்லையோ? மற்ற இரு படங்களும் ஃபோட்டோஷாப்?
பதிலளிநீக்கு1) இல்லை.
நீக்கு2) இல்லை.
என்னைப் பொறுத்தவரை அநேகமாக ரகசியம்னு எதுவும் இல்லை. உடல்நிலையை உடனடியாகச் சொல்ல மாட்டேன். முடிஞ்சவரைக்கும் வேலை செய்து கொண்டிருப்பேன். என்றாலும் நானே அறியாத ரகசியம் ஏதேனும் இருக்கானு யோசிக்கணும்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி!
நீக்கு//நானே அறியாத ரகசியம்// - அட...இது நல்லாருக்கே
நீக்கு//அநேகமாக ரகசியம்னு எதுவும் இல்லை// - பெண்களிடம் ரகசியம் எதுவும் தங்காது என்பது உலகறிந்த விஷயமாச்சே...கேஜிஜி சார், ஆண்களிடம் மட்டும் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்...ஹிஹிஹி
நீக்கு:)))
நீக்குபச்சைக்காய்கறிகளில் குட்டிக்குஞ்சுலுவின் விரலைப் போன்று சின்னச் சின்னதாகக் கிடைக்கும் வெள்ளரிப் பிஞ்சுகள். நேற்றுக் கூடச் சாப்பிட்டேன்.. இந்த வெயிலுக்குத் தொண்டை உலர்வில்லாமல் தாகம் அதிகம் எடுக்காமல் இருக்கும்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குவிடுமுறை என்ன விடுமுறை? தினம் விடுமுறை தானே! இப்போல்லாம் திடீர்ப் பயணங்கள் ஏற்படுகின்றன. அப்படித்தான் போன மாசம் திருவாரூர்ப் பயணம். போன வாரம் சென்னைப் பயணம். இரண்டுமே எதிர்பாராதது. முதல் நாள் போயிட்டு மறு நாள் திரும்பியது.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்கு//தினம் விடுமுறை தானே!// - பாவம் சாம்பசிவம் சார்.... வாரத்துக்கு ஒரு நாளாவது அவருக்கு விடுமுறை கொடுங்க ப்ளீஸ் (ஹா ஹா ஹா)
நீக்குசரி, சரி, நானே குத்தகைக்கு எடுத்திருக்கேனானு யாரும் கேட்கும் முன்னர் கிளம்பறேன். முடிஞ்சால் மத்தியானம்.
பதிலளிநீக்குநன்றி, மீண்டும் வருக!
நீக்குஎங்கு வசித்தாலும் வாசிப்பு# அவசியம் :-
பதிலளிநீக்கு# செயலில் - 999 :-
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு1) ஆண்டுதோறும் குற்றாலம்...
பதிலளிநீக்கு2) என்னது தாக்கத்தைக் குறைக்க முயற்சியா...?
முடியல - கேள்வியையும்...(!)
3) பாகற்காய் - அப்படியே சாப்பிட்டதுண்டு...! சுவையான கசப்புடன் கூடிய சாம்பார், ஆகா...!
4) // (ஆம் இல்லை என்று சொன்னால் போதும்.) //
ஆம் இல்லை...!
5) 8+8=7 (30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கலாம்)
கருத்துரைக்கு நன்றி.
நீக்குவணக்கம். உங்கள் கேள்விகளுக்கு என் பதில்:
பதிலளிநீக்கு1. இங்கு இன்னும் விடுமுறை தொடங்கவில்லை. விடுமுறைஇ தொடங்கும் பொழுது நான் இந்தியா வந்து விடுவேன். நடுவில் கிடைத்த ஒரு குட்டி லீவில் நாங்கள் சென்ற இடங்களை பற்றி என் பிளாகில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். :))
2. ஆவ் இங்கே வெய்யில் வராதா என்றிருக்கிறது.
3. கேரட், வெள்ளரிக்காய், தக்காளி இவற்றோடு கேப்ஸிகம், வெங்காயம் சேர்த்து சாலடாக சாப்பிடுவேன்.
4. & 5. இல்லை,இல்லை. நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.
படத்திற்கான கருத்து:
1. தோள் கண்டேன் தோளே கண்டேன், தோளில் ஒரு பூனை கண்டேன்.
2. இந்த மான் இந்த மானுக்குத்தான் சொந்தம்
3. இதுவல்லவோ தியானம்!
நன்றி, நன்றி!!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்!
நீக்குகேள்விகளுக்கு பதில் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகுடியிருப்பு கேள்விக்கு இரண்டாவது பதிலை நானும் ஆமோதிக்கிறேன்.
எங்களுக்கு எங்கள் தளத்தில் இருப்பவர்கள் பேர், போன் நம்பர், வேலை இவற்றை குறித்த கையேடு கொடுத்து இருக்கிறார்கள்.
குழந்தைகள் குழந்தைகள் இருக்கும் வீட்டுக்குதான் போகபிரியபடுகிறார்கள். விடுமுறைக்கு வந்த என் பேரனுடன் விளையாடி குழந்தைகள் அண்ணன் விடுமுறைக்கு வரவில்லையா என்று கேட்டு சென்றார்கள்.
இரண்டு பென் குழந்தைகள் நான் நடைபயிற்சி செய்யும் போது நட்புடன் பழகுகிறார்கள். காலை வணக்கம் சொல்லும் அந்த குழந்தைகள்.
பெரியவர்கள் ஒருவர் மட்டும் வணக்கம் சொல்வார் நான் சொன்னதிலிருந்து. மற்றவர்கள் முகத்தை இருக்கமாக வைத்து கொண்டு நடந்து , நம்மை பார்க்காமல் கடந்து செல்வார்கள்.
ஆத்மார்த்தமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇங்கேயும் அப்படித்தான். நாம் சாதாரணமாக வாசல் பக்கம் போனால் கூட வெளியே நின்னுட்டிருந்தா சட்டுனு உள்ளே போய்க் கதவைச் சார்த்திப்பாங்க. போன வருஷ நவராத்திரியில் வெற்றிலை/பாக்கு வாங்க தினம் வரச்சொன்னேன் என்பதற்காக இரண்டு, மூன்று பேர் என்னை ஒரு நாள் கூடக் கூப்பிடவில்லை! :) வேடிக்கையாக இருந்தது.
நீக்கு:((
நீக்குநமக்கு எப்போதும் விடுமுறைதான். தங்கை வீட்டுக்கு விடுமுறைக்கு வந்த குழந்தைகளுடன் காலை முதல் மாலை வரை உரையாடி மகிழ்ந்து வந்தேன்.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டுக்கும் அவர்கள் வந்தார்கள்.
வெயில் அதிகமாக இருக்கிறது மழை பெய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து கொண்டேன். முந்தின நாள் நல்ல மழை இரவு முழுவது கொட்டி வெட்பம் குறைந்து விட்டது.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு1."மாஸ்க் எடு" அப்போதான் உன் அழகு முகம், அன்பு முகத்தை பார்க்கமுடியும் என்று சொல்கிறது பூனைக்குட்டி.
பதிலளிநீக்கு2. மகன் ஊரில் நங்களும் இப்படி மானுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தோம் .
3. கண்மூடி தவம் செய்தால் மரத்தில் உள்ள மாம்பழம் மடியில் விழும் என்று குருநாதர் சொன்னார்.
ஹா ஹா ! கருத்துரைக்கு நன்றி.
நீக்கு1) எரிபொருள் பிரச்சனையால் செல்ல முடியவில்லை.
பதிலளிநீக்கு2) நாளுக்கு 5-6 மணித்தியால பவர் கட் தாங்கிக் கொண்டு உஸ்... உஸ்... சொல்லாமல்தானே வாழ்கிறோம் இதற்கு பரிசு தருவீர்கள்தானே.
3)கரட்,வெள்ளரிக்காய்.
4) இல்லை.
5)இல்லை.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குபயனுள்ள தகவல்கள்...வாழ்த்துகள்..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வார கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. அதிலும் முதல் கேள்விக்கு தாங்கள் அளித்த ஐந்து பதில்களும் உண்மை. ரசித்தேன்.
இந்த இரண்டு வருடங்களில் விடுமுறை என்ற ஒன்றிருந்ததா? அப்படியே இருந்தாலும், வெளியில் நடமாடவே பயந்துதானே கிடந்தோம். என்னவோ நல்லபடியாக இப்போது சிறு குழந்தைகளுக்கு முதற்கொண்டு பள்ளி திறந்துள்ளது.இங்கும் எங்கள் வீட்டு சிறு குழந்தைகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறந்தாகி விட்டது. அதனால்தான் நானும் பதிவு பள்ளிகளுக்கு வரத்தாமதம்.
படங்கள் அனைத்தும் அருமை.
தனக்குப் பிடித்தமானவரின் தோளில் செல்லமாக அமர்ந்த பூனையிடமும், வளப்பவர் அன்போடு தரும் உணவைப் பெறும் மானினிடமும் இல்லாத ஏதோ ஒன்று தனிமையில் அமர்ந்து தியானம் செய்யும் என்னிடம் இருப்பதாக அனைவரும் சொல்கிறார்கள். உண்மைதானா? என பார்த்துச் சொல்லுங்கள். என்று கேட்கிறார் நம் கடைசி செல்லம்.
அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மூன்று படங்களையும் இணைத்த கருத்துரைக்கு நன்றி.
நீக்கு