புதன், 22 ஜூன், 2022

மதம், கடவுள் என்ற இரண்டும் மனித அறிவுக்கு எட்டாமல் இருந்திருந்தால் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமா ?

 

வாசகர்கள் யாரும் சென்ற வாரம் கேள்விகள் கேட்கவில்லை. எனவே எங்கள் கேள்விகளை இங்கே கேட்கிறோம். நீங்க பதில் சொல்லுங்க. 

1) சிறுவயது முதல் இன்று வரை நீங்கள் உற்சாகமாக எதிர்கொள்ளும் பண்டிகை எது ?

2) என் கனவு பலித்தது என்று நீங்கள் சந்தோஷப்பட்ட கனவு என்ன ?

3) மதம், கடவுள் என்ற இரண்டும் மனித அறிவுக்கு எட்டாமல் இருந்திருந்தால் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமா ?

4) மனிதன் எழுத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதற்கு ஆதி காரணம் என்னவாக இருக்கும் ?

5) இதுவரை சந்திக்கவில்லையே என்று நீங்கள் ஏங்கும் தற்போது உயிருடன் இருக்கும் நபர் யார் ?

= = = = =

சென்ற வாரம் நாங்கள் வெளியிட்ட இரண்டு படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை சில வாசகர்கள் எழுதியிருந்தார்கள். 

வாசகர்கள் எழுதியவை : 

குழந்தையின் சிகப்புத் தோடு.

அப்பாவின் கை விரல் மோதிரம்.

அலமாரியில் கைப்பிடி. 

வித்தியாசங்களை, கீழே உள்ள படத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறோம். 

பார்த்துக்கொள்ளவும் 



இனி, இந்த வார படங்கள் A & B - வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள். 

A )  

B)  

= = = = = =

88 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். வீட்டுக்கு நண்பர்கள்/உறவினர்கள்னு வந்து போய்க் கொண்டிருக்காங்க. 3 வருஷங்களாக அடைந்து இருந்தது இப்போ எல்லோருக்கும் கொஞ்சம் மூச்சு விடறாப்போல் இருக்குனு மனதில் எண்ணம். என்றாலும் தொற்றும் பரவிக் கொண்டிருக்கு என்பதை அனைவரும் மனதில் வைச்சுக்கணும். பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    சிறுவயதுகளில் வருடந்தோறும் எதிர்பார்த்த முதலாவது பண்டிகை தீபாவளிதான். அப்போதெல்லாம் தீபாவளிக்குத்தான் புது துணிகள் கிடைக்கும். அதை வாங்கி அணிந்து கொள்ளும் ஆசைகள், மற்றும் வெடி, மத்தாப்புக்கள், விதவிதமான பட்சணங்கள் என்ற சின்ன சின்ன ஆசைகளின் எதிர்பார்ப்புகள் என அந்த பண்டிகைக்கு மனது அடிமையாக இருந்தது தீபாவளி முடிந்ததுமே அடுத்த வருட தீபாவளியை மனது எதிர்பார்க்க துவங்கி விடும். . காலம் செல்லச் செல்ல எப்போதும் வேண்டுமானாலும் கிடைக்கும் இவைகளினால் அந்த ஆசைகள் குறைய தொடங்கி விட்டன. இரண்டாவது வளர்ந்த பின் நம் குழந்தைகளுக்கு இதையெல்லாம் செய்து காண்பித்து நம் பாரம்பரிய முறைகளை வலியுறுத்தும் ஆர்வங்கள். இப்போது அனைத்திலுமே இந்த ஆர்வம் குறைந்து விட்டதாகத் தோன்றுகிறது. வெடிகளின் சத்தமும் நரக வேதனையாக தோன்றுவது அந்த நரகாசுரனின் மனது வெறுத்த சாபமோ என்னவோ?

    இரண்டாவது நவராத்திரி கொலு. ஒன்பது நாட்கள் வீடு கலகலப்பாக இருக்கும். பத்தாவது நாள் இரவு எல்லா கடவுள்களும் நம்மை விட்டு பிரிந்து சென்று விடுவார்கள் என்று நினைக்கும் குழந்தை பருவத்தை மறக்க முடியாத பண்டிகை நினைவுகள். ஆனால், வருடங்கள் செல்லச் செல்ல நாம் கொண்டாடிய இந்த பண்டிகைகளின் தாக்கத்தினாலேயே நம் மனது பக்குவம் அடைந்து விடுமா? இதையே அடுத்த புதனுக்கு முடிந்தால் கேள்வியாகவும் வைத்துக் கொள்ளலாம். கேள்விகள் கேட்பதற்கும், பதில்களை அலசுவதற்கும் இன்னமும் நான் முழு தகுதியுடன் கூடிய பக்குவம் அடையவில்லை என்ற எண்ணங்கள்தான் எப்போதும் என்னுள் எழுகிறது.
    நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. உங்கள் கேள்வியை இன்னும் கொஞ்சம் சிம்பிள் ஆக அமைக்க முடியுமா?

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      /சிம்பிள் ஆக அமைக்க முடியுமா?/

      இதை விட எப்படி சிம்பிளாக கேட்கவென்று தெரியவில்லையே.... ஒரு வேளை "தாக்கம்" என்ற வார்த்தைக்கா? வருடந்தோறும் ஒழுங்காக பண்டிகைகள் தவறாது நடைபெற்று உற்சாகமாக இருக்கும் சமயம் தீடிரென ஓரிரு முறைகள் துரதிர்ஷ்டவசமான சந்தர்ப்பங்களினால் தடைப்பட்டு போகும் போது ஏற்படும் வருத்தங்களைத்தான் நான் "தாக்கம்" என குறிப்பிட்டேன். இதனாலேயே மனது எதையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்து விடுமா? என கேட்டிருந்தேன். வேறு ஒன்றுமில்லை. எப்போதுமே நம் சகோதர சகோதரிகளின் கேள்விகள் அதற்கான தங்களின் பொருத்தமான பதில்களை ரசிக்கும் ஆட்களில் முன்னனியில் மட்டுந்தான் நான் இருப்பேன். அதையும் இன்று குறிப்பிட்டிருக்கிறேன்.:) ஹா.ஹா.ஹா. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  4. எனக்கும் கேள்விகள் இருந்தாலும் என்னமோ கேட்க முடியாமல் போகிறது. இந்த வாரமாவது முடியுதானு பார்க்கலாம்.
    1. எல்லாப் பண்டிகைகளுமே பிடிக்கும். என்றாலும் அன்றும்/இன்றும்/என்றும் தீபாவளிக்குத் தான் முக்கியத்துவம். நவராத்திரி அடுத்தது. அதிலும் ஜாம் நகரிலும் சென்னை/அம்பத்தூரிலும் கொண்டாடிய நவராத்திரிக்காலங்கள் இனி திரும்பி வராது. சிநேகிதிகள் அனைவருமாகச் சேர்ந்து ஒரே ஆட்டோவில் ஜாம்நகரில் பயணித்துச் சென்ற காலங்கள்! அந்தச் சமயங்களில் நடந்த சுண்டல் கலெக்‌ஷனை வைத்து எழுதினது தான் சில நாட்கள் முன்னர் இங்கே வந்த நவரத்தினக்குருமாப் பதிவு. காரணமில்லாமல் சிரிப்போம். ஒருவரை ஒருவர் கேலி செய்துப்போம். சுண்டல்களை ருசி பார்த்து விமரிசிப்போம்.

    பதிலளிநீக்கு
  5. 2. பெரிசாக் கனவுனு இல்லாட்டியும் பெண் கல்யாணத்தை வெளியே கடனே வாங்காமல் எங்களுடைய சேமிப்புக்குள்ளே நடத்த முடிந்தது என்பது சந்தோஷம் கொடுத்த ஒரு விஷயம். இறை அருள் இன்றி இது நடக்க வாய்ப்பில்லை. அதை நிறைவேற்றித் தந்த இறைவனுக்கு நன்றி. பொதுவாகவே வாழ்க்கையின் முக்கிய சந்தர்ப்பங்களில் கண்ணுக்குத் தெரியாத சக்தி வழி நடத்துவதை உணர்ந்தே வந்திருக்கேன். இன்னமும் உணர்ந்து வருகிறேன். எல்லாம் வல்ல அந்தச் சக்தி இல்லாமல் நம்மால் எதுவும் செய்ய முடியாது.

    பதிலளிநீக்கு
  6. 3. முதலில் இந்த மதம், கடவுள் என்னும் கோட்பாடுகள் எப்போ ஆரம்பித்தன? பிரிவினைகள் எப்போ ஏற்பட்டன? என்றாலும் கட்டுப்பாடான சுதந்திரத்தை அனுபவிக்க இந்த மதம், கடவுள் என்பவை தேவை தான். ஆனால் தற்காலங்களில் சுயநலத்திற்குப் பயன்படுத்தப் படுகிறது.

    பதிலளிநீக்கு
  7. 4. எழுத்தின் மூலம் இல்லாமல் ஆதி காலங்களில் படங்கள், படங்களைப் போன்ற குறியீடுகள் என ஆரம்பித்திருக்குமோ? எழுத்து முதல் முதல் உலகில் எப்போ ஆரம்பித்தது? எந்த எழுத்து முதலில் பயன்படுத்தப் பட்டது? நம்ம தமிழர்களைக் கேட்டால் நாங்க தான் ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு என்பார்கள். இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
  8. 5. எனக்குத் தெரிந்து அப்படி யாரும் நினைவில் இல்லை. ஏக்கம் வருமளவுக்கு? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்?

    பதிலளிநீக்கு
  9. Geetha Sambasivam "மதம், கடவுள் என்ற இரண்டும் மனித அறிவுக்கு எட்டாமல் இருந்திருந்தால் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமா ?” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    5. எனக்குத் தெரிந்து அப்படி யாரும் நினைவில் இல்லை. ஏக்கம் வருமளவுக்கு? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்?

    பதிலளிநீக்கு
  10. ஐந்தாவது கேள்வியின் பதில் இங்கே தெரியலை. என்னோட மெயில் பாக்சுக்கு மட்டும் வந்திருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே மறைந்திருக்கின்றது என்று பார்த்து அங்கிருந்து விரட்டி இங்கே அனுப்புகின்றேன்.

      நீக்கு
  11. வலக்கையில் வெண்ணெயுடன் தவழ்ந்த கோலத்தில் இருந்தால் நவநீத கிருஷ்ணன் எனவும், வெண்ணைத்தாழி இடக்கையிலும் வலக்கையில் வெண்ணெயும் இருந்தால் வெண்ணெய்த்தாழிக் கிருஷ்ணன் எனவும் எங்க ஊர்ப்பக்கம் சொல்லுவாங்க. இருவருமே அழகுக் குழந்தைகள் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி, இப்போத் தான் கவனிக்கிறேன் துரையின் பதிவில் போட வேண்டியது, எப்படி இங்கே வந்தது? இஃகி,இஃகி,இஃகி! அங்கே வந்திருக்கோ வரலையோ! தெரியலை. வரேன் அப்புறமா!

      நீக்கு
  12. அவரவர் "உள்"ளுக்குள் உணர வேண்டியது கட"உள்" அதை ஏன் மற்றவனுக்கு அறிய வைக்க பிதற்ற வேண்டும்...? பிச்சை எடுக்கவும் வேண்டும்...?

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

    கடவுள் என்ற சிந்தனை வரும்போது மதம் எப்படி உள்ளே வரும்...? அப்படி வந்தால் ? மனிதன் அல்ல, ஐயன் சொன்ன "கீழ்"

    என்னது இரண்டையும் எட்டுவதற்கு அறிவா...? அதற்கு மூன்று சீர்கள் போதுமே :-

    நன்றின்பால் உய்ப்பது அறிவு

    பதிலளிநீக்கு
  13. 1) சிறு வயதில் தீபாவளி பண்டிகை திருமணத்திற்கு பின் எதுவுமே இல்லை.

    2). எனது நூலை வெளியிட்டது, ஆயினும் நான் எழுத்தாளராக வர முடியவில்லையே வருத்தம் உண்டு.

    3) நிச்சயமாக தொண்ணூறு சதவீதம் பிரச்சனைகள் குறைந்து இருக்கும்.

    4) சைகையில் பேசியவர்களுக்கு வரலாறை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இருக்கலாம்.

    5) திரைப்படக் கூத்தாடி ரஜினியின் சகோதரர் திரு.சத்திய நாராயணா அவர்கள்.

    -கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  14. 4) முதலில் எண், அடுத்து தான் எழுத்து... ஆமாம் கேள்வியில் "அவா" வந்த காரணத்தை அறிய அவா...!

    பதிலளிநீக்கு
  15. ////1) சிறுவயது முதல் இன்று வரை நீங்கள் உற்சாகமாக எதிர்கொள்ளும் பண்டிகை எது ?///



    அப்படி ஏதுமில்லை


    ////2) என் கனவு பலித்தது என்று நீங்கள் சந்தோஷப்பட்ட கனவு என்ன ?///

    இந்தியாவின் இன்றையநிலை

    //3) மதம், கடவுள் என்ற இரண்டும் மனித அறிவுக்கு எட்டாமல் இருந்திருந்தால் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமா ?///

    அறிவுள்ள மனிதனுக்கு மதமும் கடவுளும் பிரச்சனை இல்லை அறிவில்லாதவகளால்தான் இவை இரண்டும் பிரச்சனைக்குள்ளாகின்றன

    /4) மனிதன் எழுத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதற்கு ஆதி காரணம் என்னவாக இருக்கும் ?

    தொலை தூரத்திற்கு செய்திகள் அனுப்ப எழுத்து அவசியம் என்பதால் இருக்கும். ஒவியம் மூலம் முழு கருத்தையும் சொல்லிவிட முடியாது நாம் வாய் மூலம் சொல்லும் கருத்தை கேட்பவர்கள் கேட்டு அதை திரித்து சொல்லிவிட முடியும் ஆனால் எழுதி வைத்த எழுத்து அப்படியே இருக்கும் என்பதால்தான்

    5) இதுவரை சந்திக்கவில்லையே என்று நீங்கள் ஏங்கும் தற்போது உயிருடன் இருக்கும் நபர் யார் ?

    சாய் பல்லவி அமலாபால்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. கொஞ்ச நாட்களாக/மாதங்களாக இந்த "சாய் பல்லவி" பெயரை அடிக்கடி கேள்விப் படுகிறேன். இவர் நடிச்சுப் பிரபலம் ஆன படம் எது? ஹிஹிஹி, புதன் கிழமை கேள்வியிலேயே பதில் சொல்லலாம். :)))))

      நீக்கு
    3. முயற்சி செய்கிறோம்!!

      நீக்கு
  16. வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்..

    நலமே நிறைக எங்கும்..

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    2. இந்த இரண்டாவது கேள்விக்கான என் பதில். பதின்ம வயதிலிருந்தே எழுத்தாளராக வர வேண்டுமென்ற ஆசை (கனவு) இருந்தது. அந்தக் கனவு இன்று இப்படி இணையத்தில் ஏதோ கிறுக்கி நிறைவடைவது கண்டு ஒரளவு திருப்தியளிக்கிறது. கனவுகள் அனைத்தும் அப்படியே பலித்து விடுவதில்லையே... ஆட்டுக்கும் வாலை இறைவன் அளந்துதானே வைத்துள்ளான். என்று நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொள்ளும் போதும் எழுத்தாளர் கனவு இப்படி பலிக்காமல் போகிறதே என்ற தாக்கம் (மறுபடியும் தாக்கம்:))) வரத்தான் செய்கிறது. என்ன செய்வது? நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  19. சிறு வயது பண்டிகை எதிர்ப்பார்ப்பு இப்போது இல்லை.
    குழந்தையாகவே இருந்து இருந்தால் எல்லா பண்டிகைகளை எதிர்ப்பார்த்து மகிழ்ந்து இருப்போம். இப்போது பண்டிகை நாள்
    உறவுகளுடன் சேர்ந்து இருக்கும் போதுதான்.

    எந்த கனவும் இல்லை.

    வள்ளலார் சொல்வது போல மதமான பேய் பிடியாது இருக்கவேண்டும்.

    கடவுள் நம்பிக்கை எல்லோருக்கும் வேண்டும் தான், மனிதன் மனிதனாக நடந்து கொள்ள "அறிவேதான் தெய்வம்"என்றார் தாயுமானவர்.

    பதிலளிநீக்கு
  20. மனிதன் காடுகளில் குகைகளில் வாழ்ந்த போது பேச முடியாத போது
    படங்கள் வரைந்து , ஒலியை வைத்து எல்லாம் கோடுகள் உருவாக்கி என்று அறிவு வளர்ச்சி ஏற்பட்டபின் தான் பேச ஆரம்பித்து இருக்கிறான்.

    தான் நினைத்ததை அடுத்தவர்களிடம் சொல்லவேண்டும் அதை அவர்களும் உணர வேண்டும் என்று நினைத்த அறிவு அவனை பேச எழுத வைத்து இருக்கும். தனக்கு தெரிந்த தான் செய்தவைகளை காலம் கடந்து இருக்க கல்வெட்டில் பொறிக்க ஆரம்பித்து இருப்பான்.
    அப்புறம் ஒலைகளில், அச்சு எந்திரம் என்று மனித அறிவு வளர வளர
    வளர்ச்சி பெற்றுக் கொண்டு போய் இருக்கிறது. இப்போது நம் எண்ணங்களை சொல்ல பல சாதனங்கள் வளர்ச்சி பெற்று இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  21. வேறு படம் கிடைக்கவில்லையா ஆறு வித்தியாசம் பார்க்க?
    வளையல் , காதில் தொங்கட்டான் கலர், புடவை புட்டாக்கள் மாற்றம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வேறு படம் கிடைக்கவில்லையா ஆறு வித்தியாசம் பார்க்க?// ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

      நீக்கு
  22. மேலே கேட்ட கேள்விகள் தவிர்த்து இன்னமும் சில. மொழி/எழுத்து ஆகியவற்றில் இது தமிழ், இது ஆங்கிலம், இது சம்ஸ்கிருதம் என்னும் வேறுபாடுகளை முதலில் ஏற்படுத்தியவர் யார்?
    மேல் நாட்டு மொழிகளின் அடிப்படை சம்ஸ்கிருதம் தான் எனச் சொல்லுவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?
    ரஷிய மொழியில்/திபேத்திய மொழியில் அதிகம் சம்ஸ்கிருதம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அது சரியா?

    பதிலளிநீக்கு
  23. மொழிகளுக்குள்ளே உயர்வு, தாழ்வு எனத் தோன்றியது எப்போது?
    இந்தியா முழுவதும் பேசிய மொழி வடமொழியாக இருந்ததாலேயே ஆதி சங்கரரும், ஶ்ரீராமானுஜரும் இந்தியா முழுவதும் விஜயம் செய்து தங்கள் கொள்கைகளைப் பரப்ப முடிந்தது. அப்படி இருக்கையில் இப்போதைய சம்ஸ்கிருத வெறுப்புக்குக் காரணம் என்ன?
    எப்போதில் இருந்து சமஸ்கிருதம் அந்நிய/வட மொழி ஆனது?
    உண்மையில் வடமொழி என்பதன் அர்த்தமே வேறே. ஆனால் இங்கே வடக்கே இருந்து வந்த மொழி என்னும் அர்த்தத்திலேயே பார்ப்பது ஏன்?

    பதிலளிநீக்கு
  24. தீபாவளி பண்டிகைதான் சிறுவயதில் இருந்து பிடித்தது.

    5) வலை உலகின் நண்பர்கள் பலரையும் பார்க்க ஆவல் உண்டு முடியுமா என்பது சந்தேகமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட ஆலிருந்து மறையோதும் எங்கள் பரமன் - ஞானசம்பந்தர் அருள் வாக்கு..

      ஆலிருந்து என்றால் ஆல மரத்தின் நிழலில் இருந்து..

      நீக்கு
    2. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  25. வட ஆலிருந்து மறையோதும் எங்கள் பரமன் - ஞானசம்பந்தர் அருள் வாக்கு..

    ஆலிருந்து என்றால் ஆல மரத்தின் நிழலில் இருந்து..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. ஆமாம், வட ஆலிருந்து அருள் புரியும் விநாயகரைத் தேடிக் கொண்டிருக்கோம் 2, 3 மாதமாகக் கிடைக்கலை. வீட்டிலேயே பிள்ளையாரை வடக்குப் பார்த்து உட்கார்த்தி வைச்சிருக்கோம். அங்கே இங்கே எனக் கேட்டு ஆலிலையால்/புஷ்பத்தால் அர்ச்சனைகள். விரைவில் வட ஆலிருந்து அருள் பாலிக்கும் விநாயகர் கண்களில் படவேண்டும்.

      நீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    3.4.5.அனைத்தையும் இணைத்த பதிலாக..என்னுள் தோன்றுபவை.
    இறைவனை நம்முள் உணர்ந்து விட்டோம் என்ற "பெருமிதம்" வந்தால் தவறில்லை. உணராமல் வெறும் "மதம்" மட்டும் கொண்டு இருப்பவர்களை "இறைவனும்" அறிவான். ஏனென்றால் அவன்தான் அனைத்து மனித அறிவுக்கும் காரணமானவன். மேலும் நம் அனைவருக்கும் பாரபட்சமின்றி இறைவன்தான் "எழுத்தறிவித்தவன்". அதனால்தான் நாம் சந்திக்க ஏங்கும் நபர் கடவுளாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவன் உலகில் உள்ள அனைவருள்ளும் உள்கடந்து என்றும் உயிரோட்டமாகி கலந்து நிற்பவன். சாட்சாத் அந்த பரமாத்மாவை அனைவரும் தேடி வணங்கி போற்றுவோம். ஓம் நமோ நாராயணாய..... 🙏. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. கமலா உங்கள் பதில் அருமையாக இருக்கிறது. என்றாலும் கடவுள் என்பவரை நாம் உணரத்தான் முடியும் என்பது என் தாழ்மையான கருத்து. மனதினுள் இருப்பவரை அங்கேயே நம் ஞானக்கண்ணால் தரிசிக்க இயலும் அதற்கான தகுதிகள் இருந்தால். எழுத்தறிவித்தவன் என்பதைப் படிக்கையில் திங்களன்று விஜயம் செய்த பச்சைத்தண்ணீர் கூடக் குடிக்காத ஶ்ரீவைஷ்ணவ நண்பர் இன்னம்பூர் எழுத்தறிவித்த நாதர் கோயிலுக்குப் போனதையும் அதைக் குறித்தும் உங்கள் பதிவில் எழுதிய திருமலை வெங்கடேசப் பெருமாள் பற்றியும் நினைவில் வந்தது.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்கு மிகவும் நன்றி.

      /மனதினுள் இருப்பவரை அங்கேயே நம் ஞானக்கண்ணால் தரிசிக்க இயலும் அதற்கான தகுதிகள் இருந்தால்/

      உண்மை... அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ளத்தான் நானும் முயற்சித்து கொண்டேதான் உள்ளேன் என்பதையும் தாழ்மையுடன் நானும் கூறிக் கொள்கிறேன். ஆனால் இப்படி முயற்சிக்கும் எண்ணங்களுக்கும் அவன் அருள் கண்டிப்பாக வேண்டும். அது இல்லையென்றால், நாம் என்ன நினைத்தாலும் அது நடக்காது என்பதும் என் ஆணித்தரமான நினைப்பு என்பதையும் பணிவுடன் கூறிக் கொள்கிறேன்.இந்த பிறவி இல்லையெனினும், அடுத்ததிலாவது "அவனை" மனதுக்குள் கண்டறியும் சக்தியை அவன் தர வேண்டுமென அவனை பிரார்த்தித்துக் கொண்டேயுள்ளேன். ஏனெனில். இப்புவியில் மானிடர்களுக்கு பிறவி ஒரு பெருங்கடல்தானே...

      ஆம். நீங்கள் என் பதிவில் வந்து இன்னம்பூர் கோவில் பற்றி கூறியதும் உங்கள் தயவில் நானும் யூடியூப் சென்று கோவிலைப்பார்த்தேன். அந்த ஊரிலேயே எழுத்தறிவித்தநாதர் சிவன் கோவில் பதிவையும் பார்த்தும், கேட்டும் ரசித்தேன். உங்கள் வீட்டுக்கு வந்த அந்த வைஷ்ணவ நண்பர் உங்கள் வீட்டில் பச்சைத் தண்ணீர்கூட பருகவில்லை என்று நீங்கள் கருத்தில் சொன்னதை கேட்டும் மிக வியப்படைந்தேன். இந்த காலத்திலும், அவரின் வைராக்கியம் வியப்பைத் தருகிறது. இன்னம்பூர் கோவில்களை தரிசிக்கும் வாய்ப்பை எனக்குத் தந்த உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. https://aanmiga-payanam.blogspot.com/2010/02/4.html நாங்க இன்னம்பூர் போயிட்டு வந்து எழுதினதை இங்கே பார்க்கலாம் கமலா. இதிலும் பட்டாசாரியார் மூலவர் திருமலையிலிருந்து வந்ததாகவே சொல்லி இருக்கார் என்பதைக் குறிப்பிட்டிருக்கேன்.

      நீக்கு
    5. மீள் வருகை தந்து தாங்கள் தந்த அன்பான பதில் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். தாங்கள் தந்த சுட்டிக்கும் சென்று படிக்கிறேன். மிக்க நன்றி சகோதரி.

      நீக்கு
  27. வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்
    ஆனவன் காண்(6/87) அப்பர் ஸ்வாமிகள்..

    பதிலளிநீக்கு
  28. எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி!..
    என் சிந்தை நீங்கா இறைவா போற்றி!.. ( கயிலை திருத்தாண்டகம்) அப்பர் ஸ்வாமிகள்..

    பதிலளிநீக்கு
  29. ஶ்ரீராம் பதவி உயர்வு வேலையில் சேர்ந்துட்டாரா? இப்போதெல்லாம் வியாழன், வெள்ளி தவிர்த்த நாட்களில் அவரைப் பார்க்க முடிவதில்லை. :(

    பதிலளிநீக்கு
  30. வித்தியாசங்கள் - பெண்ணின் காது தொங்கட்டான், சன் ஷேடின் மேல்..கதவில் ஒட்டப்பட்டிருக்கும் பேப்பர், நாற்காலியின் உட்காரும் பகுதியில், பெண்ணின் கை வளையல், துப்பட்டா டிசைன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  31. பிடித்த பண்டிகை நவராத்திரி /கொலு பொம்மைகள், கிறிஸ்துமஸ்/புதுவருடம் அலங்காரங்கள் ...

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!