வெள்ளி, 17 ஜூன், 2022

வெள்ளி வீடியோ : உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ

 அந்தக் காலத்தில் அதிகாலையில் வானொலியில் பக்தி மாலை என்றால் சூலமங்கலம் சகோதரிகள் பாடல் இல்லாமல் இருக்காது.  அவர் குரல் இடம்பெற்றால்தான் நிகழ்ச்சியே சிறக்கும்.  திராத, மென்மையான, இழையும் குரலில் சகோதரிகள் இருவரும் இசைக்கும் இன்னிசை பக்திமாலைப் பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்கும் புகழ்பெற்றவை.

குழந்தை வேலன் எழுதி இருக்கும் இந்தப் பாடலுக்கு  சூலமங்கலம் சகோதரிகளில் ஆர் ராஜலக்ஷ்மி இசை அமைத்து,  ஜெயலக்ஷ்மியுடன் இணைந்து உருகி இருக்கிறார்.

அவனைப் பாடச் சென்று அவன் அழகில் மயங்கி பாடுவதை மறந்து அவன் தரிசனத்திலேயே உறைந்து நின்றுவிட்டதாய் அழகாய்ப் பாடல் எழுதி இருக்கிறார் கவிஞர்.  முருகா...   உன்னைக் கண்டு உருகாதார் யார்?

உன்னைத்தான் பாடவந்தேன் ... வண்ணமயில் வேல்முருகா
உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ

உன்னைத்தான் பாடவந்தேன் ... வண்ணமயில் வேல்முருகா
உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ

பழமுதிரும் சோலை வந்தேன் ... மனமுருகி பாடி நின்றேன் (x2)
பழநிமலை ஓடி வந்தேன் ... அழகு தமிழ் பாடி நின்றேன் (x2)
திருத்தணிக்கு தேடி வந்தேன் ... திருக்காட்சி காணவந்தேன் (x2)

உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ

தினைப்புனத்தைக் காத்துநின்ற ... அனைவரையும் கேட்டுவந்தேன் (x2)
திருப்பபரங்குன்றூர் வந்தேன் ... தென்குமரி தேவைவந்தேன் (x2)
ஆறுபடை வீதியெல்லாம் ... நூறுமுறை சென்றுவந்தேன் (x2)

உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ

உன்னைத்தான் பாடவந்தேன் ... வண்ணமயில் வேல்முருகா
உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ


=======================================================================================================================

2002 ல் மலையாளத்தில் தான் எடுத்த 'ஊமைப்பெண்ணின்னு உரியாடப்பையன்' என்கிற படத்தை, அதே ஜெயசூர்யா, காவ்யா மாதவனை வைத்து, அதே 2002 ல் தமிழில் 'என் மன வானில்' என்று எடுத்தார் வினயன்,.

இரண்டு பாடல்களை மு மேத்தாவும், முத்துலிங்கமும் எழுத, மற்ற ஐந்து பாடல்களை பழனிபாரதி எழுதி இருக்கிறார். இன்று பகிரும் இந்தப் பாடலும் பழனிபாரதிதான்.

கவிஞர் பழனிபாரதி பற்றி கொஞ்சம்..... பழனிபாரதியின் தந்தையும் கவிஞர்தான். சாமி பழனியப்பன் என்ற பெயர் கொண்ட அவர் பாரதிதாசன் கவிதாமண்டலத்தைச் சேர்ந்தவர். தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடம் உதவியாளராக இருந்தவர். பின்னர் சென்னை வந்து 'தமிழரசு' பத்திரிகையில் இணைந்ததால் தந்தையோடு சென்னை வந்த பழனிபாரதியின் படிப்பும் சென்னையில் அமைந்தது. தாய் பத்திரிகை உள்ளிட்ட பத்திரிகைளி ல் பழனிபாரதி பணிபுரிந்திருக்கிறார். இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராய்ச் சேர்ந்து பின்னர் பெரும்புள்ளி படத்திலேயே முதல் பாடல் எழுதி இருக்கும் இவரை உவமைக் கவிஞர் சுரதா "இதோ ஒரு மகாகவி புறப்பட்டுவிட்டார்" என்று பாராட்டியுள்ளாராம்.

அவர் எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு இசை இளையராஜா. ஹரிஹரன்-சாதனா சர்கம் இணைந்து பாடியுள்ள மிக இனிமையான பாடல். ஹரிஹரனின் குரலும் சொர்க்கம், சாதனாவின் குரலும் இழைந்து...... சொர்க்கம்.

என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ

என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ
வண்ணம் தரும் தூரிகையே எண்ணங்களை சொல்லிடாதோ
என் ஓவியமே 
என்ன சொல்லி பாடுவதோ

என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ
வண்ணம் தரும் தூரிகையே எண்ணங்களை சொல்லிடாதோ
என் ஓவியமே
என்ன சொல்லி பாடுவதோ

கோடி குயில் கூவி எந்தன் நெஞ்சில் கூடி
மௌனம் ஏனோ என்று கேட்குதே ஹேஹேய்

ராகம் தொடும் நேரம் வானம் தொடும் மேகம்
என்னில் உந்தன் எண்ணம் மீட்டுதே

நெஞ்சுக்குள் காதல் சுழல் ஓஓ மூச்சுக்குள் புல்லாங்குழல்
நெஞ்சுக்குள் காதல் சுழல் ஓஓ மூச்சுக்குள் புல்லாங்குழல்

வெறும் காற்று இசையாக மாறுகின்ற மாயங்களை
என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ

அந்திப்பிறை வந்து மஞ்சள் வானில் நின்று
உன்னழகின் வண்ணம் சொல்லுதே ஓஓஹோ.

பூவின் மடி தூங்கி தென்றல் மொழி வாங்கி
பூவை நெஞ்சின் ஓசை சொல்லுதே..

தீராத தேடல் ஒன்று ஓஓ தேடட்டும் நெஞ்சம் ரெண்டு
தீராத தேடல் ஒன்று ஓஓ தேடட்டும் நெஞ்சம் ரெண்டு

சொல்லாமல் நில்லாமல் மனம் கொல்லும்
இன்ப துன்பம் தானே

என்ன சொல்லி பாடுவதோ 

46 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்களில் தனிப்பாடலாக வந்திருக்கும் சூலமங்கலம் சகோதரிகள் பாடும் இந்தப்பாடலை நிறைய தடவை கேட்டு ரசித்துள்ளேன். அப்போதெல்லாம் மனப்பாடமாக மனதுக்குள் உறைந்து நின்ற வரிகள். முருகனை கண்ணாற கண்ட பாக்கியம் வாய்த்ததும் வார்த்தைகள் மேலும் வந்து விடுமா என்ன? பாடலின் வரிகள் அழகான கற்பனை...பாடலை கேட்கும் போதெல்லாம் சகோதரிகள் இருவரின் குரலிலும் தொணிக்கும் பக்தியின் பரவசம் அக்கணமே நம்முள்ளும் தொற்றிக் கொள்ளும். வெள்ளியன்று காலை எழுந்தவுடன் அழகான முருகன் பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  மனதுக்குள் இனிமையாகப் பரவும் குரல்கள்.  நன்றி அக்கா.

      நீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  4. சில பக்திப் பாடல்கள் கடவுளின் நினைவில் நம்மை ஆழ்த்தக்கூடிய வல்லமை வாய்ந்தது. அதில் வண்ணமயில் வேல்முருகனைப் பாடிய இப்பாடலும் ஒன்று. நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. சூலமங்கலம் சகோதரிகளின் எல்லாப் பாடல்களுமே இனிமையானவை. அதற்கு காரணம் அவர்களின் குரல் இனிமை.

      நீக்கு
  5. முதல் பாடல் மிகவும் பிடித்த பாடல். எங்கள் வீட்டு சேமிப்பில் இந்த பாடல் உண்டு. கேட்டு மகிழ்ந்தேன்.
    அடுத்த பாடல் கேட்டு இருக்கிறேன் இனிமையான பாடல்.
    இரண்டு பாடல்களிலும் என்ன சொல்லி பாடுவதோ என்ற வார்த்தைகள் ஒற்றுமையாக வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அப்படி ஒற்றுமையுடன் அமைக்க முருகன் அருளும் ஐடியாவும் கொடுத்தார்!

      நீக்கு
  6. முதல் பாடலில் என்ன சொல்லிப் பாடுவதோ என்ற வார்த்தைகள் மனதில் உட்கார்ந்து கொள்ளும்.

    அதே வார்த்தைகளை ஆரம்பத்தில் கொண்ட இரண்டாவது பாடலை முதன்முதலில் கேட்கிறேன். நன்றாக இருக்கிறது.

    இருந்தாலும், ஒப்புமை இல்லாவிடினும், பஞ்சாம்ருதமும், கடலைமிட்டாயும்போல் இருந்தன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதற்கு ஒப்புமை? இரண்டு பாடல்களிலும் அந்த வார்த்தை பொது. இரண்டும் இனிமை. ஒன்று பக்தி, மற்றொன்று பொழுதுபோக்கு. இரண்டும் வெவ்வேறு ரகம்!

      நீக்கு
    2. // பஞ்சாம்ருதமும், கடலைமிட்டாயும்போல் //

      ஹா..  ஹா..  ஹா...   பஞ்சாம்ருதமும் பால்கோவாவும்?  கடலைமிட்டாய் அளவு குறைந்த மதிப்பு இல்லை இரண்டாவது பாடல் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் மனதிலும் தொற்று பற்றிய நினைவுகள் வந்து கவனமுடன் இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  8. சூலமங்கலம் சகோதரிகள், அடுத்து ராதா ஜயலக்ஷ்மி இருவரின் குரல்களில் வந்த பக்திப்பாடல்கள் அனைத்துமே இனிமை. இந்தப் பாடலும் நன்றாகப் பொருள் பொதிந்த பாடல். பாடலாசிரியர் பற்றிக் கேள்விப் பட்டதில்லை. இரண்டாவதுபாடல் கேட்டதில்லை, படம் வந்ததும் தெரியாது! 2002 ஆம் ஆண்டில் தான் பையர் அம்பேரிக்கா சென்றார். நான் அந்த வேலைகளில் ரொம்பவே மும்முரமாக ஈடுபட்டிருந்தேன். 99/2000 ஆண்டுகளில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் கணினிப் பயிற்சி நிலையத்தில் கணினி கற்றுக் கொண்டிருந்தேன். அம்பத்தூரிலேயே! மாமா ஊட்டியில் இருந்தார். நான் போவதும் வருவதுமாய் இருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராதா ஜெயலக்ஷ்மியும் நிறைய பாடி இருக்கிறார்கள் என்றாலும் சூலமங்கலம் சகோதரிகள் அளவு அவர்கள் பிரபலம் அடையவில்லை என்றே சொல்ல வேண்டும்!

      இரண்டாவது பாடல் ஹரிஹரன் சாதனாவுடன் பாடலை இழைத்திருக்கிறார்!

      நீக்கு
  9. முதலாவது பக்தி சூழல்...
    இரண்டாவது காதல் சுழல்...

    முப்பாலுக்கு பொருட்பால் (ஒரு பாடல்) குறைவு...(!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்திக்கும் காதலுக்கும் இடையே பொருள் (!) ஒரு தடையே இல்லை..

      நீக்கு
    2. அது அன்றைக்கு.. இன்றைய சூழ்நிலை வேறு..

      நீக்கு
    3. நன்றி DD.  நன்றி துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
  10. உன்னைக் கண்டு மறந்து விட்டேன் என்ன சொல்லிப் பாடுவதோ!..

    முருகா.. முருகா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மயக்க நிலை. தன்னை மறந்த நிலை. பக்திப் புலம்பல்.

      நீக்கு
  11. அன்பின் முருகனுக்கு வணக்கம்..

    அழகின்
    முதல்வனுக்கு
    வணக்கம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வணக்கம் வணக்கம் அண்ணன் எல்லோருக்கும் வணக்கம்!

      நீக்கு
  12. இரண்டு பாடலுமே இனிமை! ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தவை!

    பதிலளிநீக்கு
  13. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இறை அருள் எங்கும் பரவி நிலைத்து ஆரோக்கியம் பெருக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. இரண்டு பாடல்களும் மிக மிக இனிமை. செவிப்புலன் கொடுத்த
    படைத்தவனுக்கு நன்றி.
    முருகனை நினைத்து உருகும் குரல்கள் சகோதரிகளின் குரல்கள்.
    சொற்களின் வழியே இணைய வைக்கின்றன.

    கந்தன் கருணை கசியும் இசையும் பக்தியும்
    கலக்கும்போது
    சூலமங்கலம் சகோதரிகளுக்கு வந்தனம் சொல்கிறேன்.
    அபூர்வ இசைக்கும் பாடலுக்கும் நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  15. இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராய்ச் சேர்ந்து பின்னர் பெரும்புள்ளி படத்திலேயே முதல் பாடல் எழுதி இருக்கும் இவரை உவமைக் கவிஞர் சுரதா "இதோ ஒரு மகாகவி புறப்பட்டுவிட்டார்" என்று பாராட்டியுள்ளாராம்.''

    பழனி பாரதியின் கவிதை எப்பொழுதும் அசர வைக்கும்.

    தமிழ் தான் எப்படி விளையாடுகிறது அவரிடம்.
    அவர் விரல்களிலும் சிந்தனையிலும் விளையும்
    சொற்களில் மென்மையும் வலிமையும் காதலும்
    சிலம்பம் விளையாடுகின்றன.

    பதிலளிநீக்கு
  16. முதல் பாடலுக்கு முருகன் ஆதாரம் என்றால்
    இரண்டாம் பாடலுக்கு அவன் ஆதரித்த காதல்
    அடியெடுத்துக் கொடுக்கிறது.

    பக்திக்கும் வார்த்தைகள் லட்சக் கணக்கில்
    வந்து விழும்.
    காதலர்களுக்கும் அதே.


    ''உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
    என்ன சொல்லிப் பாடுவதோ

    தினைப்புனத்தைக் காத்துநின்ற ... அனைவரையும் கேட்டுவந்தேன் (x2)
    திருப்பபரங்குன்றூர் வந்தேன் ... தென்குமரி தேவைவந்தேன் (x2)
    ஆறுபடை வீதியெல்லாம் ... நூறுமுறை சென்றுவந்தேன்''


    இதுவே ஒரு காதலனோ காதலியோ கூட சொல்லலாம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். காதலும் கலந்த பக்தி இலக்கியம். பக்தி கலந்த காதல் இலக்கியம்.

      நீக்கு
  17. முதல்பாடல் என்றும் இனிமை,
    காதல் பாடலும் அதே வரிகளோடு இணைந்து வருகிறதே...

    பதிலளிநீக்கு
  18. நெஞ்சுக்குள் காதல் சுழல் ஓஓ மூச்சுக்குள் புல்லாங்குழல்
    நெஞ்சுக்குள் காதல் சுழல் ஓஓ மூச்சுக்குள் புல்லாங்குழல்

    வெறும் காற்று இசையாக மாறுகின்ற மாயங்களை
    என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ

    அந்திப்பிறை வந்து மஞ்சள் வானில் நின்று
    உன்னழகின் வண்ணம் சொல்லுதே ஓஓஹோ.''


    முருகா முருகா முருகா.
    புல்லாங்குழல் மாயம், மஞ்சள் வானில் நீல மயில்
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா..   இரண்டு பாடல்களின் வரிகளையும் அலசி ஆராய்ந்து ரசித்து விட்டர்கள்.

      நீக்கு
  19. மிக நல்ல பாடல்களைத் தந்ததுக்கு மிக நன்றி.அன்பின் ஸ்ரீராமுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    முதல் பக்திப் பாடலுக்கு தொடர்புடைய வரிகள் அமைந்த இரண்டாவது திரைப்பட பாடலையும் இப்போது கேட்டேன். மிக இனிமையாக இருக்கிறது. இது வரை நான் இந்தப்பாடலை கேட்டதில்லை. பாடலின் படமும் கேள்விபடாதது. இதில் நடித்தவர்களும் புது முகங்கள் போலும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. முதல் பாடல் பல தடவை கேட்டபாடல். இரண்டாவது ஓரிரு தடவைதான்.கேட்டிருக்கிறேன் இரண்டுமே இனிமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!