வியாழன், 16 ஜூன், 2022

அந்தக் காலம் அது அது அது..

 சமீப காலங்களில் அலுவலகத்திலிருந்து ஓலா, ஊபரில் வீடு திரும்பும் சமயம் சாலைகளில் திரும்ப சில சைக்கிள் ஓட்டிகளை பார்க்கிறேன்.  

எப்போதுமே இருப்பார்களா, நான்தான் பார்க்கவில்லையா அல்லது பெட்ரோல் விலை உயர்வு காரணமாக சிலர் இப்போது புதிதாக மிதிவண்டிக்கு மாறி மிதித்துக் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.  அதில் சில இளநங்கைகளும் அடக்கம்.  நெரிசலான அந்தப் போக்குவரத்தில் பல்வேறு விதமான கர்ணகடூர ஹார்ன் சத்தங்களுக்கு நடுவே  இந்த மிதிவண்டிகளின் மெல்லிய கிணிங்கிணிங் சத்தம் யாரை எச்சரிக்கைப் படுத்துமோ அல்லது கவனத்தில் பதியுமோ என்கிற கவலையும் வரும்.  அவர்களானால் சாலையின் வலது ஓரத்திலும் நடுவிலும் சைக்கிளை மிதித்துச் செல்வதைப் பார்க்கும்போது லேசான பதைபதைப்பும் வருகிறது.  பெரும்பாலான சென்னைப் பேருந்து ஓட்டுநர்கள் பொல்லாதவர்கள்!  தாட்சண்யமே பார்க்க மாட்டார்கள்!

நானும் சைக்கிளில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வந்திருக்கிறேன்.  நடுத்தர வர்க்கத்தினரின் சற்றே ஆடம்பர வாகனம் அது - அப்போது!

மிதிவண்டிகள் சாலைகளில் கோலோச்சிய காலம் அது.  

அது சரி, அந்தக் காலம்தான் சூப்பர் என்பவரா நீங்கள்?

இதோ இந்தப் படத்தைப் பாருங்கள்...  இது நான் மேலே சொன்ன 'அந்தக் காலத்து'க்கும் சற்றே முற்பட்ட காலம்!



அப்போதெல்லாம் விளக்கு இல்லாவிட்டால் சைக்கிளைப் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.  அவர்களும் என்ன செய்வார்கள்?  மாதாந்திர கேஸ் டார்கெட் இருக்கிறதே...  

அப்போதெல்லாம் சைக்கிளின் முன்னால் ஒரு சிறு கூண்டில் சிம்னி விளக்கை ஏற்றிவைத்து மூடி ஓட்டிக் கொண்டு வருவார்கள்.  சைக்கிள்களில் விட ரிக்ஷாக்களில் பார்க்கலாம் இதை.  பேட்டரியில் லைட் டைனமோ வந்ததெல்லாம் பிற்காலத்தில்.

''எங்கேய்யா லைட் எரியலை என்றால் "காற்றில் அணைந்து விட்டது" என்பார்கள்.  நாணல் படத்தில் நாகேஷ் கூட சொல்வார் என்று நினைவு.  பிரேக் இல்லாத சைக்கிளை போலீஸ்காரர் நிறுத்தியதும், விளக்குக கம்பம் தேடி வளைத்து வளைத்து ஒட்டி, அது இல்லாததால் அவர் மேலேயே சாய்த்து அவர் நிறுத்துவது அழகு!


(நாகேஷ்  போலீஸ் கேஸ் சிபாரிசுக்கு இன்ஸ்பெக்டராக இருக்கும் நண்பரின் மகன் முத்துராமனிடம் வருவார்.  "சைக்கிளில் வந்து மாட்டுவதெல்லாம் ஒரு கேசா?" என்று அவர் கேட்டதும், நாகேஷ்................. என்ன சொல்வார் என்று நினைவிருக்கிறதா?!!)

இன்னொரு பழைய ஜோக் ஒன்று.   இதனை செந்தில் கூட முன்னர் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

போலீஸ்காரர் வந்து சைக்கிளை பிடிப்பார்.  "ஏய்...  விளக்கு எங்கே?"

"காத்துல அணைஞ்சு போச்சு ஸார்.."

"அதெல்லாம் நடக்காது...  நட ஸ்டேஷனுக்கு..." 

செந்தில் சொல்வார்.. "நானாவது விளக்கில்லாமல்தான் வருகிறேன்...  பின்னாடி ஒருவன் சைக்கிளே இல்லாமல் வருகிறான்..   போய்ப்பிடிங்க.."

யோசிக்காமல் போலீஸ்காரரும் "எங்கே..  எங்கே.." என்று பின்னால் ஓடுவார்!

 விளக்கில்லை என்றால் பிடிப்பது இரவில்தானே இது சாத்தியம்?    

பகலில்?

மணி இல்லாவிட்டாலும் குற்றம்தான்.  அதற்கும் அபராதம் உண்டு.  அதே போல டபுள்ஸ் வந்தாலும் குற்றம்.  கண்னதாசனின் வேண்டுகோளின் பேரில் இந்தக் கஷ்டங்களை எம் ஜி ஆர் அரசு விலக்கிக் கொண்ட பின் நாங்கள் கல்லூரியிலிருந்து சினிமா தியேட்டருக்கு சைக்கிளில் ட்ரிப்பிள்ஸ் எல்லாம் சென்றிருக்கிறோம்.  அது எப்பவுமே குற்றம்தான்.  எனினும் போலீஸைக் கண்டால் இறங்கி நடந்து தாண்டி பின்னர் ஏறிக்கொள்வோம்!

சைக்கிளுக்கு ஒரு நம்பர் இருக்கும் என்று சொல்வார்கள்.  சீட்டைத் தூக்கி விட்டுப் பார்த்தால் அதன் கீழே இருக்கும் கம்பியில் எழுதி இருக்கும் என்றெல்லாம் சொல்வார்கள்.  நான் பார்த்ததில்லை.  என் காலத்தில் நல்லவேளையாக அதெல்லாம் இல்லை.  

ஒரு நேரத்தில் சைக்கிளுக்கே லைசென்ஸ் வைத்துக் கொள்ளவேண்டி இருந்ததாமே..

வீட்டில் ரேடியோ பொட்டி வைத்திருந்தீர்கள் என்றால் அதற்கும் லைசன்ஸ் வைத்திருக்கவேண்டும்.  அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும்!  எங்கள் வீட்டில் பிலிப்ஸ் வால்வ் ரேடியோ இருந்தது.  நல்ல தரம்.

இந்தக் காலத்தில்?  நல்லவேளை, அதெல்லாம் இல்லைதானே?  இதிலாவது அந்தக் காலத்தைவிட இந்தக் காலம்தான் சிறந்தது என்று சொல்ல முடிகிறதே...

அது சரி..  அந்த காவல்காரர் சீருடையை கவனித்தீர்களா?  "முத்தமிழின் செல்வன் வாழ்க...  முக்குலத்தின் கண்மணி வாழ்க" என்று பாடலாம்!  நல்லவேளை வியர்க்காது!  இப்போது என்னடாவென்றால் உடம்பெல்லாம் மூடி, பிதுக்கிக் கொண்டு சீருடை!  தைத்துப் போடும்போது அளவாய், வடிவாய்த்தான் போட்டிருப்பார்கள்!  பின்னர் உடல் ஜிம் போகாமல் ஜிவ்வென்று ஏற ஏறதான் பிதுங்கத் தொடங்கும்.

அப்புறம் இன்னொரு விஷயம்..  மாட்டிக் கொண்டிருக்கும் அந்த சைக்கிள்காரர் முகத்தைப் பாருங்களேன்...  என்ன கெஞ்சல், என்ன நைச்சியம்...  ஏதாவது சொல்லி தப்பித்து விடலாம் என்று கூடவே நடக்கிறார்!    இன்னொன்று கவனியுங்கள்.  அந்தக் காலத்தில் வேஷ்டி அணிந்து சாலையில் நடமாடுபவர்கள் அதிகம்!  தன் செல்ல மிதிவண்டி போலீஸ்காரர் கையில் மாட்டிக்கொண்டு இழுபடுவதை வேதனை கலந்த சமாளிக்கும் புன்னகையுடன் கூட நடக்கிறார் அந்த நைச்சிய வாலிபர்(?).  சைக்கிளின் ஹேண்டில்பாரை ஒரு கையில் பிடித்து பேலன்ஸ் பண்ணி நடப்பதும் ஒரு ஸ்டைல் அப்போது.  நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடக்கும்போது ஒற்றிக் கையால் சைக்கிள் ஹேண்டில்பாரைப் பிடித்தபடி நடப்போம்!  இதோ இந்த போலீஸ்காரர் பிடித்திருப்பதைப் போல..   ஆனால் இது அதிகாரம்!

பாஸ்போர்ட் காரணங்கள் தவிர உங்களுக்கு போலீஸ் ஸ்டேஷன் சென்ற அனுபவம் உண்டா?  எனக்கு உண்டு.  அதில் ஒன்று சாதாரணம் என்றாலும் இரண்டாவது அனுபவம் சற்றே பெரிய, நீண்ட அந்த இரவு இப்போது நினைத்தால் புன்னகைக்க வைக்கும், அப்போது கொஞ்சம் பயம் ப்ளஸ் திகில்  கலந்த அனுபவம்.

ரௌடிகள் என்றால் நாய் சேகர், திருக்கைவால் முனியாண்டி, செயின் ஜெயபால் என்றுதான் இருக்கவே வேண்டுமா என்ன?  பிரகாஷ், ராஜகோபால் சந்திரசேகர் என்றெல்லாம் இருக்கக் கூடாதா?  இருந்தது.  நான் சந்தித்த ரௌடிகள் என்று பெயரெடுத்தவர்களில் இந்தப் பெயர் கொண்ட நபர்கள் இருந்தார்கள்.

==============================================================================================================


பூ.... உப்புதானே என்று நினைக்காதீர்கள்!
உப்பு தொடர்பாக கூறும், சிறுநீரக மருத்துவ நிபுணர், சேகர்:
"சோடியம், பொட்டாசியம் மற்றும் பல்வேறு தனிமங்கள் ஒன்றிணைந்ததே உப்பு. நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பில், 90 சதவீதத்துக்கும் மேல் சோடியம் உள்ளது.
ரத்தத்தில் உப்பு அளவு, 1 லிட்டருக்கு, 135 மி.லி., இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால், அது உப்புச்சத்து குறைபாடு நோய் - ஹைபோநெட்ரீமியா எனப்படுகிறது.
அதிக தண்ணீர் குடிப்பது, போதுமான அளவு உப்பை உணவில் சேர்க்காதது போன்ற காரணங்களால், இக்குறைபாடு ஏற்படுகிறது.
உப்புச்சத்து குறைபாட்டால் வயிற்றுப்போக்கு, பசி, மயக்கம், உடல் சோர்வு, வாந்தி, குறைந்த ரத்த அழுத்தம், சிறுநீரகம் மற்றும் குடல் பாதிப்புகள் ஏற்படும்.
ரத்தத்தில் உப்பின் அளவு தொடர்ந்து குறைந்தால், மூளை செல்களில் வீக்கம் ஏற்படும். இதனால், மூளையில் நீர் கோர்த்து வலிப்பு ஏற்படும்; கோமா நிலைகூட ஏற்பட வாய்ப்புண்டு; பல்வேறு உறுப்புகள் செயலிழக்கும் அபாயமும் உள்ளது.
ரத்தத்தில் உப்பின் அளவு, 145யை விட அதிகமானால், உப்பு மிகைப்பு நோய் - ஹைபர்நெட்ரீமியா ஏற்படும்.
உணவில் அதிக உப்பு சேர்ப்பது, உப்பில் பதப்படுத்திய உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்ற காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படும்.
இந்நோய் வந்தால், அதிக தாகம் எடுக்கும். உதட்டில் வெடிப்பு, சருமத்தில் வறட்சி, சிறுநீரகப் பாதிப்புகள், குடல் செயல்திறன் குறைவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
ரத்தத்தில் உப்பு அதிகம் சேர்ந்தால், அதை நீர்க்க செய்ய, ரத்தத்துடன் நீர் சேர்த்து கொள்ளும்.
இதனால் அணுக்களை சூழ்ந்திருக்கும் திரவமும், ரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.
ரத்தத்தின் அளவு அதிகரிப்பதால், ரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகரித்து, இதயத்தின் செயல்திறன் கூடும்.
இதனால், அதிக ரத்த அழுத்தம் உருவாகி பக்கவாதம், மாரடைப்பு ஏற்படும்.
உடலில் உப்பின் அளவு அதிகமானால் இதயம், பெருந்தமனி ஆகியவை ரத்த அழுத்தம் அதிகரிக்காமலே நேரடியாக பாதிப்புக்குள்ளாகும்.
50 வயதுக்கு மேற்பட்டோர், குறைந்த, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர், சர்க்கரை நோய், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு, 5 - 6 கிராம் உப்பு, உடலுக்கு தேவைப்படும். இது, கிட்டத்தட்ட ஒரு டீஸ்பூன் அளவு மட்டுமே.
அதிக உப்பு சேர்த்து, எண்ணெயில் வறுத்த காரமான உணவுகளை தினமும் உட்கொண்டால், புற்று நோய்க்கு வாய்ப்புண்டு.
நம் உடலுக்கு சோடியம் உப்பை விட, பொட்டாசியம் உப்பின் தேவை அதிகம். பொட்டாசியம் உப்பு, பழங்கள், பால், கீரை உணவு, பச்சைக் காய்கறிகள், பருப்பு மற்றும் உலர் பழங்களில் நிறைந்திருக்கிறது.

- 2015ம் வருடம் தினலரிலிருந்து பேஸ்புக்கில் பகிர்ந்தது -
==================================================================================

சென்ற வாரம் மருது சகோதரர்கள் பற்றி துணுக்கு வெளியிட்டிருந்தேன் அல்லவா... இது அதன் தொடர்ச்சி! அடுத்த வாரம் பேஸ்புக்கில் இதையும் பகிர்ந்திருக்கிறேன். அதை நானும் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்ததால் எனக்கும் போருக்கு இருந்ததால் நானும் இந்த மறுப்பையும் (எத்தனை 'உம்' விகுதி!) பேஸ்புக்கில் பகிர்ந்தேன். இங்கும் இப்போது!
மே 18, 2014 வாரமலர் இதழில், 'திண்ணை' பகுதியில், மறைந்த கவிஞர் சுரதா தொகுத்த, 'நெஞ்சில் நிறுத்துங்கள்' என்ற நூலிலிருந்து, மருது சகோதரர்கள் பற்றி, ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் மின்சார வாரியத்தில், வருவாய் மேற்பார்வையாளராக இருந்து, ஓய்வு பெற்றவரும், வரலாற்று மற்றும் சமூக ஆர்வலருமான கோ.மாரி சேர்வை என்பவர், மருது சகோதரர்கள், எந்தவிதமான மரண வாக்குமூலமும் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இது, ஆங்கில அரசால் முழுக்க முழுக்க பொய்யாக ஜோடிக்கப்பட்ட சாசனம். அப்படி ஏதேனும் கொடுத்திருந்தால், அதற்கான ஆதாரம் இருந்திருக்கும். பண்டைய ஆவண காப்பகத்தில் தேடியும் கிடைக்கவில்லை என்பதே உண்மை என்றும் எழுதியுள்ளார்.
அதற்கு ஆதாரமாக அப்போது சிவகங்கை மாவட்ட கர்னலாக இருந்த ஆக்னி துரை, ஆங்கில அரசுக்கு எழுதிய கடித நகல், மீ.மனோகரன் என்பவர் எழுதிய, 'மருது பாண்டிய மன்னர்கள்' என்ற நூலின் இரு பக்க நகல்கள் மற்றும் பேராசிரியர் ராக்கப்பன் கமிட்டி அளித்த அறிக்கையின் நகல் ஆகியவற்றை அனுப்பியுள்ளார்.
— பொறுப்பாசிரியர்.

=======================================================================================

படிக்க முடிகிறதா? சும்மா சாம்பிளுக்கு கொஞ்சம்...

============================================================================================

ஜோக்ஸ்..... ஜோக்ஸ்...

இணையத்திலிருந்து இரண்டு....ப்ளஸ் ஒன்று!

சென்னை வெய்யில் இப்படிதான் வேண்ட வைக்கிறது!


அது சரிப்பா... எனக்கும் உனக்கும் தெரியும்....


அட, சுதந்திரமா திட்டக் கூட விட மாட்டேங்கறீங்களே....!




அப்புறம் நம்ம மதன் ஜோக்ஸ் இரண்டு....


=======================================================================================================

சோகமாக, விரக்தியாக, அழுதுகொண்டுதானே கடந்தசில வாரங்களில் என்னை இங்கு பார்த்தீர்கள்?  இது மாறுதலுக்கு...   ஆனால் நாங்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருப்போம்!  அடுத்த வாரம் பார்ப்போமா...!


79 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா அக்கா.. வாங்க... பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. அந்தக்கால சைக்கிள் அனுபவங்கள் பற்றி அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
    ஆம். உண்மைதான். அந்த காலத்தில் சைக்கிள் வைத்திருப்பவர்களை கொஞ்சம் பணக்காரர்கள் என்றுதான் நினைப்பார்கள். பிறகு காலம் மாற மாற மற்ற வாகனங்களின் பயன்பாடுகளின் சொகுசுகள் வந்த பின், அந்த வண்டியின் உபயோகம் மக்களுக்கு இளக்காரமாக போய் விட்டது. .

    எங்கள் அண்ணாவும் முதலில் வேலைக்கு சேர்ந்த பின் சைக்களில்தான் பல வருடங்கள் அலுவலகத்திற்கு சென்று வந்தார். என் குழந்தைகளும் நாங்கள் திருமங்கலத்தில் இருந்த போது சைக்கிளில் பள்ளி சென்று வந்தனர்.

    இப்போது இங்கு நானும் சிலசமயம் சைக்கிளில் செல்வோரை பார்க்கிறேன். கால்களுக்கு நல்ல பயிற்சி என மறுபடியும் உபயோகிக்க தொடங்கி விட்டார்களோ ? ஆனாலும் இப்போது போக்குவரத்து மிகுந்த சாலைகளில் அதன் பயன்பாடு நீங்கள் சொல்வது போல் சற்று பயங்களை ஏற்படுத்துகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி. மீண்டும் வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.  முன்னர் சைக்கிள் நினைவுகள் என்றே ஒரு பதிவு எழுதிய நினைவு!

      நீக்கு
  3. சைக்கிள் ஸ்கூட்டர் ஒட்டி போலீஸிடம் மாட்டிய அனுபவம் உண்டு. சைக்கிளில் காற்று திறந்து விட்டபின் விடப்பட்டேன். ஒரு வார்னிங்குடன் ஸ்கூட்டர் கேசில் விடப்பட்டேன். சைக்கிளுக்கு லைஸென்ஸ் வில்லை முனிசிபாலிடியில் இருந்து ஒவ்வோர் வருடமும் வாங்கி சைக்கிளில் மாட்டவேண்டும்.

    ஆஞ்சனேயர் சூரியனை விழுங்கப் போனாரே தவிர விழுங்கவில்லை என்று தான் நான் படித்திருக்கிறேன். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூரியத் தொல்லை தாங்காமல் இப்போது விழுங்கி விடு என்று வேண்டுகிறான் சிறுவன்!!

      நீக்கு
    2. உங்கள் பதிலில் ஏதேனும் குறியீடு உள்ளதா?

      நீக்கு
    3. அம்பேரிக்காவில் இந்த வருடம் பத்து டிகிரி முதல் 30 டிகிரி வரை வெப்பம் அதிகரித்திருப்பதால் மக்களை வெளியே அதிகம் நடமாட வேண்டாம் என அரசு எச்சரிக்கை கொடுத்திருக்கு. ஹூஸ்டனில் எங்க பெண்ணுக்கு வெயில் தாங்காமல் (ராஷஸ்) தடிப்புக்களாக வந்துவிட்டது.

      நீக்கு
    4. //உங்கள் பதிலில் ஏதேனும் குறியீடு உள்ளதா?//

      ஹா..  ஹா...  ஹா...   இல்லை.  நீங்கள் சொன்னபின்தான் அப்படியும் அர்த்தம் வருகிறதோ என்று பார்க்கிறேன்!

      நீக்கு
    5. சென்னையில் வெய்யிலும் வெப்பமும் போடுபோடென்று போடுகிறது!

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை/மதியம் வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்க வேண்டும். மறுபடியும் கரோனா ஸ்டிக்கர் ஒட்டப் போவதாக அரசு அறிவித்திருக்கிறது. அனைவரும் இந்தத் தொல்லையிலிருந்து விடுபடப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் வரும் நோயில் மாட்டாமல் மீண்டு வருவோம். வாங்க கீதா அக்கா.. பிரார்த்திப்போம்.

      நீக்கு
  5. சின்ன வயசில் சைகிளெல்லாம் என் மாமாக்கள் ஓட்டித்தான் பார்த்திருக்கேன். லைசென்ஸ், மணி, விளக்கு எல்லாமும் இருக்கும். ஒரு முறை ரொம்பச் சின்ன வயசு எனக்கு (நாலு வயசு இருக்குமோ?) என் அப்பா மாமாவில் ஒருத்தரின் சைகிளை எடுத்துக்கொண்டு வெளியே செல்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்னு சொன்னால் மிகையில்லை. ஏனெனில் அப்பாவுக்கு அதெல்லாம் தெரியாதுனு நினைச்சுட்டு இருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அப்பாவுக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாது.  ஆனால் என்னை டிரைவராகக் கொண்டு சைக்கிளின் பின்புறம் அமர்ந்து நிறைய வலம் வந்திருக்கிறார்.

      நீக்கு
  6. அண்ணா/தம்பிக்கு சைகிள் ஓட்டத் தடை விதித்திருந்தார் அப்பா. எங்கானும் விழுந்து அடிபடும் என்பதால். இந்த அழகில் நானெல்லாம் எங்கே சைகிள் கத்துக்கறது? அப்படியும் ஓசிபிஎம் பள்ளியில் படிச்சதால் அங்கே பள்ளிக்கு வெளியே இருந்த தெருவில் இருந்த சிநேகிதியின் சைகிளை ஓட்டிப் பார்த்திருக்கேன். கீழே விழுந்து அடிபட்டதில் விஷயம் அப்பாவரை போய் வழக்கமான மிரட்டல்! பள்ளியிலிருந்து நிறுத்திடுவேன். என்று. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என் அப்பாவுக்கு சொல்லாமல் திருட்டுத் தனமாக சைக்கிள் கற்றுக்கொண்டேன்.  என் முழங்கால் உயரம் இருக்கும் சிறு சைக்கிளில்தான் முதலில் பழகினேன்!

      நீக்கு
  7. அண்ணா பயந்து கொண்டு சைகிளே ஓட்டவில்லை. இன்று வரை தெரியாது. தம்பி மட்டும் தைரியமாக அப்பாவுக்குத் தெரியாமல் விழுந்து எழுந்து சைகிள் ஓட்டக் கற்றுக் கொண்டார். என்றாலும் பின்னாட்களில் அதே இரு சக்கர வாகனம் என்றால் பயம். தனியாகவானும் போயிடுவார், பின்னால் யாரும் உட்காரக் கூடாது. பிள்ளைகள் இருவரும் பெரிய வண்டிகள் ஓட்டுகிறார்கள். எங்க குழந்தைகளுக்குப் பத்து வயதுக்குள்ளாக சைகிள் சொல்லிக் கொடுத்துவிட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைக்கிளின் அல்லது இரு சக்கர வாகனம் எதுவாயினும் பின்னால் உட்காருவதும் ஒரு கலை.  ஆட்டாமல் பேலன்ஸ்டு ஆக அமர்ன்ஹால்தான் ஓட்டுபவர் பேலன்ஸும் சரியாய் இருக்கும்!  அது என் அப்பாவிடம் கிடையாது!!

      நீக்கு
    2. கல்யாணம் ஆன புதுசிலே அம்பத்தூர்க்குடித்தனம் வந்தப்போ அங்கெல்லாம் சைகிளில் டபுள்ஸ் அனுமதி உண்டு. டவுன்ஷிப்பாகத் தானே இருந்தது. ஊரே சுத்தமாக இருக்கும். தெருக்களில் சைகிளில் டபுள்ஸ் செல்வது ஓர் அனுபவம். எனக்கு அலுவலகத்துக்கு ரயிலைப் பிடிக்க நேரமானால் மாமா சைகிளில் ரயில் நிலையம் கொண்டு விடுவார். சாதாரணமாக நான் அப்போல்லாம் ஒன்பது மணி திருப்பதியைப் பிடிச்சு பேசின் பிரிட்ஜிலே இறங்கி அங்கிருந்து வெளியே செல்லும் குறுக்கு வழியில் வால்டாக்ஸ் ரோடு போய் அங்கிருந்து தண்டையார்ப்பேட்டை காவல் நிலையம் செல்லும் பேருந்தைப் பிடிப்பேன். மாமாவுக்கு எதிர்ப்புறம் ஆவடி என்பதால் மெதுவாகவே கிளம்புவார். அதோடு அலுவலக நேரமும் மாறுபடும்.

      நீக்கு
    3. மாமாவின் உயரத்துக்கு சைக்கிள் பேலன்ஸ் சுலபமாக வரும்!

      நீக்கு
  8. மருது சகோதரர்கள் பற்றி நானே மறுப்பு வெளியிட்டுவிட்டு அவர்களைக் குறித்துச் சொல்லலாமா என நினைச்சேன். :) நல்லவேளையாக எனக்கு ரத்தத்தில் உப்பு இல்லை. யூரிக் ஆசிட் இருக்கு. புளி சேர்க்கக் கூடாதுனு மருத்துவர் சொல்றார். நானோ குழம்போ/ரசமோ இப்போல்லாம் சாப்பிடுவதே இல்லை. அரைக்கரண்டி விட்டுக் கொண்டால் அதிகம். முன்னெல்லாம் ரசம் வேண்டும். இப்போ அதையும் விலக்கிட்டேன். கொஞ்சமாக ரசம் விட்டுப்பேன். ஒரு கைப்பிடி சாதம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மூத்த சகோதரனுக்கு சிறு வயதிலேயே உப்பு அதிகமாகி சில பிரச்னைகள் எழுந்தன.  பின்னர் அதைச் சரி செய்தார்கள்.

      நீக்கு
  9. இந்த எழுத்தாளர்களின் பேட்டியை எதிலோ படிச்சிருக்கேன். நினைவில் வரலை. போகட்டும். நீங்க பார்த்த/அதிசயித்த ரௌடியின் பேட்டிக்குக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விகடனில் வந்தது.  நான் சந்தித்த ரௌடி பற்றி முன்னரும் சொல்லி இருக்கிறேன்.  சொல்வதற்கு இரு நீண்ட கதைகள் உண்டு!

      நீக்கு
  10. ஜோக்குகள் எல்லாம் வழக்கம் போல் ரசித்தவை.

    பதிலளிநீக்கு
  11. சைக்கிளுக்கு லைசென்ஸ் இருந்தது, அதற்கென்று ஒரு "எண்"ணும் இருந்தது... அப்பாவின் சைக்கிள் திருடு போன போது தெரியும்...!

    அன்றைக்கு இவறல் தலைமை இல்லாததால் வரி இல்லை என்பதில் மகிழ்ச்சி... ஆனாலும் சைக்கிள் பயணம் இன்றைக்கு அதிகமானால்....? அதே ? அதே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில்தான் சைக்கிளுக்கு எண் இருந்தது எனக்கும் தெரியும்!

      நீக்கு
  12. இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும்போல் சூப்பர் - கும்பகோணத்திலிருந்து

    பதிலளிநீக்கு
  13. // ஐடா மாட்டேங்கறீங்களே....! //

    புரியவில்லை...

    பதிலளிநீக்கு
  14. சைக்கிள் ஓட்டிய காலம் அது ஒரு சுகமான அனுபவம்தான் ஜி

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் இனிய நல்ல நாள் வணக்கம்.
    ஆரோக்கியம் நிறை வாழ்வு இறைவன் அருளால்
    என்றும் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா.. வாங்க. பிரார்த்திப்போம்.

      நீக்கு
  16. சிரிக்கும் மனிதக் குரங்கார் மிக அருமை. மனதுக்கு உற்சாகம்.

    பதிலளிநீக்கு
  17. சைக்கிள்கள் வாழ்வின் முக்கிய பகுதி.
    உடலுக்கு நன்மை. .
    இங்கே கொட்டும் மழையோ உறைக்கும் வெய்யிலோ
    அனைவரும் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
    சாலைவிதிகளும்,சாலைகளும் சாதகம்.
    பேருந்து செல்லும் வீதிகள் தனி. மற்றபடி டிராம்தான்.
    சைக்கிள்களையும் ஏற்றிக் கொண்டு டிராம்கள் செல்லும்.
    விரும்பும் இடத்தில்
    அவர்கள் இறங்கிக் கொள்ளலாம்.

    பருத்த மேனியர் யாரும் இல்லை.:)
    நம்மூர் விவரம் வேறு,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  நம்மூர்க் கதையே வேறுதான்!  இங்கு இன்று சைக்கிள்கள் அபூர்வம்! நானே வீட்டின் வாசலில் ஊபர் ஏறி, ஆபீஸ் வாசலில் இறங்குகிறேன். நடையே கிடையாது!

      நீக்கு
    2. பையர் அவங்க கம்பெனித் தலைமை அலுவலகம் இருக்கும் நெதர்லாண்ட்ஸ் போனப்போ அங்கே காரின் உபயோகமே இல்லை என்றார். எல்லோருமே போக்குவரத்துக்கு சைகிள் தான். காற்றில் மாசு இல்லாமல் இருந்தது எனவும் ஊரே அமைதியாக இருக்கு எனவும் சொன்னார்.

      நீக்கு
    3. நம்மூரில்தான் இப்படி இருக்கிறோம்!

      நீக்கு
  18. மிதிவண்டி ஓட்டி மகிழ்ந்த காலம் நினைவில் வலம் வருகிறது. நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  19. '' பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா''
    மாதிரி மனைவி இல்லாத வீட்டின் சுதந்திரம் கண்ட மனிதர்:))

    மதன் ஜோக்குகள் வெகு இக்காலம்.

    பதிலளிநீக்கு
  20. படிக்க முடிகிறதா? சும்மா சாம்பிளுக்கு கொஞ்சம்...''

    இரண்டு பாரா படிக்க முடிந்தது.
    பாலகுமாரன் ,சிவசங்கரி.
    பட்டுக் கோட்டை பிரபாகர் எல்லோருமே
    இளமையாக இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அவரவர்கள் பெருமையை அவரவர்கள் சொல்லிக்கொண்ட கலந்துரையாடல்!

      நீக்கு
    2. நான் படிச்சேன் பெரிது பண்ணி. படிக்க முடிந்தது. ஒண்ணும் புதுசாக இல்லை.

      நீக்கு
  21. 22 வயசுப்பையனும்,
    கடி நாயும் அபார சிரிப்பு.

    பதிலளிநீக்கு
  22. மீண்டும் மிதி வண்டிக்கு வருகிறேன்.
    வீட்டில் அப்பா சைக்கிள் வைத்திருந்தார்.
    பிறகு சகோதரர்கள். சின்னவனுக்கு அதுதான் பிரதானம். தண்ணீர் கொண்டு வர,
    அக்கா பசங்களுக்கு ரைடு கொடுக்க,
    அப்பாவுக்கு வைத்தியரை அழைத்து வர,
    வெகு பிரதானமாக இருந்த குடும்ப நண்பன்.
    நான் ஓட்டிப் பழகி விழுந்து
    அடிபட்டு,அதன் பின் ஓட்டவே இல்லை.

    சைக்கிள் ஜோக்ஸ் அப்போது மிகப் பிரபலம். பாலச் சந்தர் படங்களில் அதுவும் நடிக்கும்.

    பல திரைப் படங்களில் அது மெயின் பாத்திரம்.
    வாடிக்கை மறந்தது ஏனோ.............
    சிலபடங்களில் க்ளைமாக்சில் கூட உழைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீர் கொண்டு வரும் வேலையில் எனக்கும் - எங்களுக்கும் சைக்கிள் நிறைய நிறைய உதவி இருக்கிறது.  தாம்புக்கயிறு வைத்துக் கட்டிய இரண்டு அல்லது நான்கு குடங்கள் பின்புறம்.  சீட்டின் மேல் ஒரு குடம்...

      நீக்கு
    2. எங்களுக்கும் ஒரு குடமல்ல.. இப்படி நான்கு குடங்களை திருமங்கலத்தில் இருக்கும் போது அடிக்கடி வந்த தண்ணீர் கஷ்டத்தில் ஒரு சேர என் மகனுடன் சென்று கொண்டு வர இந்த சைக்கிள் உதவியுள்ளது.

      நீக்கு
    3. எனக்கு மதுரையில் கொஞ்சமும், சென்னையில் நிறையவும் இந்த வகையில் உதவியது!

      நீக்கு
    4. எத்தனையோ ஊர்களில் இருந்தும், சொல்லப் போனால் ராஜஸ்தான், குஜராத் போன்ற பாலைவனங்களின் ஊர்களில் இருந்தும் (ஜாம்நகர் தண்ணீர்க் கஷ்டத்துக்குப் பெயர் பெற்றது. ஆனாலும் நகர் முழுவதும் தண்ணீர் எளிதாகக் கிடைக்கும். எங்கேயும் குழாயடிச் சண்டை எல்லாம் பார்க்க முடியாது.) நாங்கள் இருந்த இடங்களில் எல்லாம் பெரிய பெரிய வீடுகள், தோட்டம், துரவு, தண்ணீர், பால் வசதி போன்றவற்றுக்குக் குறையே கொடுக்கலை இறைவன். இது அவன் அருளே அன்றி வேறில்லை.

      நீக்கு
  23. பாஸ்போர்ட் காரணங்கள் தவிர உங்களுக்கு போலீஸ் ஸ்டேஷன் சென்ற அனுபவம் உண்டா? எனக்கு உண்டு. அதில் ஒன்று சாதாரணம் என்றாலும் இரண்டாவது அனுபவம் சற்றே பெரிய, நீண்ட அந்த இரவு இப்போது நினைத்தால் புன்னகைக்க வைக்கும், அப்போது கொஞ்சம் பயம் ப்ளஸ் திகில் கலந்த அனுபவம்.''

    வீட்டில் மன்னார்குடி சொம்பு தொலைந்த நேரம் காவல் நிலையம் சென்ற அனுபவம்.

    பிறகு எது தொலைந்தாலும் கம்ப்ளெயின் சொல்ல தைரியம்
    வரவில்லை:)

    பதிலளிநீக்கு
  24. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  25. கதம்பம் அருமை.
    நானும் சைக்கிள் கற்றுக் கொண்டு ஓட்டினேன். வாங்கி தருவதாக ஆசை காட்டி சைக்கிள் பழக வைத்து விட்டு . சைக்கிள் வாங்கி தரவில்லை அப்பா. அம்மா பேச்சை கேட்டுக் கொண்டு." எங்காவது விழுந்து கை காலை ஒடித்து கொண்டால் என்ன செய்வது பெண்பிள்ளை" என்று அம்மா சொன்னதால் வாங்கி தரவில்லை.

    தோழிகள் சைக்கிளை பள்ளி விளையாட்டு திடலில் ஓட்டி இருக்கிறேன். என் குழந்தைகளுக்கு கணவரிடம்சைக்கிள் வாங்கி தர சொல்லி வாங்கி கொடுத்து மகிழ்ந்து இருக்கிறேன்.

    மகளின் சைக்கிள் வீட்டு வாசலில் வைத்தது காணவில்லை என்று புகார் கொடுக்க என் கணவரும் பக்கத்து வீட்டுக்காரருடன் காவல் நிலையம் போய் வந்து இருக்கிறார்கள். சைக்கிள் கிடைக்கவில்லை, வேறு சைக்கிள் வாங்கி தந்தோம். முன்பு போட்ட சைக்கிள் பதிவில் சொல்லி இருக்கிறேன்.
    மற்ற செய்திகளும் நகைச்சுவைகளும் அருமை.

    இங்கு நேற்று நல்லமழை!பல மணி நேரம் கொட்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சைக்கிள் ஓட்டுவீர்கள் என்கிற தகவல்  ஆச்சர்யமான மகிழ்ச்சி.  சைக்கிள் தொலைந்து காவல் நிலையம் சென்றதும் ஒன்றுக்கொன்று தொடர்பாய் அமைந்து விட்டது போல...   நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
    2. இங்கேயும் நல்ல மழை, இடி, மின்னல் இல்லாமல் விண்ணிலிருந்து அருவி கொட்டியது.

      நீக்கு
    3. ஹாஹாஹா! நேற்றும் ஒரு மணி நேரம்! :)

      நீக்கு
  26. டிவி-க்கு கூட லைசென்ஸ் இருந்தது. தபால் நிலையத்தில் வருடாந்திர லைசென்ஸ் தொகையை கட்டவேண்டும். அதற்கென தனி தபால் வில்லைகள் உண்டு. அதில் BL Fee (Broadcast Licence Fee) என அச்சிடப்பட்டிருக்கும். அதை பாஸ் புக் போன்று இருக்கும் அந்த லைசென்ஸ்-ல் ஒட்டி அதன் மேல் தபால் நிலைய முத்திரை பதிந்து தருவார்கள். எண்பதுகளின் மத்தியில் நாங்கள் டிவி வாங்கியபோது ஓரிரு வருடங்கள் அந்த லைசென்ஸ் தொகையை கட்டினோம். அதன்பிறகு டிவிக்கு லைசென்ஸ் முறை நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், எங்க ரேடியோ, தொலைக்காட்சிப் பெட்டி இரண்டுக்கும் நான் தான் தபால் அலுவலகம் போய்ப் பணம் கட்டிட்டு வருவேன்.

      நீக்கு
    2. நல்லவேளை எங்களுக்கு அந்த சிரமங்கள் இல்லை!

      நீக்கு
    3. ராஜீவ் பிரதமரான பிறகுதான் ரேடியோ லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது

      நீக்கு
  27. 'அந்தக் கால சைக்கிள் ' என்று சொல்லக் கூடாது ஆபத்துக்கு உதவும் நண்பன் என்றே சொல்லவேண்டும் .

    போர் காலத்தில் பெற்றோல் கரோசின் இல்லாதபோது எமக்கு 'கை கொடுத்தவள்ளல் 'முதலில் சைக்கிள் ஓடத் தெரியாத நான் அப்பொழுதுதான் பழகி ஓடித் திரிந்திருக்கிறேன். நீங்கள் கூறியதுபோல இப்போது மீண்டும் இங்கும் பலருக்கும் உதவுகிறான்.

    ஜோக்ஸ் அனைத்தும் ரசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...   ஆமாம்.  உங்கள் ஊரில் அது உங்களுக்கெல்லாம் உற்ற நண்பன்தான்.

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பத்தின் மற்ற பகுதிகளும், நன்றாக உள்ளது.

    உப்பை பற்றிய விபரமும், எழுத்தாளர்களின் பேட்டியும் படித்தேன். ஜோக்ஸ் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. மனைவி ஊருக்குப் போன பிறகுதான் அந்த கணவருக்கு தைரியமே வந்துள்ளது போலும்..:) அனைத்தும் நன்றாக இருக்கின்றன பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  29. பயணத்தினால் நிறைய எழுதவில்லை. ம்ம்.. அடுத்த வியாழன் தான் கச்சேரி

    பதிலளிநீக்கு
  30. உங்க சைக்கிள் அனுபவங்கள் சூப்பர். எங்க ஊரிலும் இப்படித்தான் பின்னாடி ரெண்டு பேரை வைத்துக் கொண்டு கையை இருப்பக்கமும் விரித்துக் கொண்டு சர்க்கஸ் வித்தை எல்லாம் காட்டுவாங்க பசங்க...

    என்னதான் சொல்லுங்க ஸ்ரீராம், சைக்கிள் ஆபத்பாந்தவன். செலவு கம்மி. சர்க்கரை வியாதி இருக்கறவங்க சைக்கிள் ஓட்டினால் நல்லதுன்னு சொல்லுவாங்க...நடைப்பயிற்சிக்குப் பதில் அதுவும் செய்யலாம்னு. நான் ஓட்டியதுண்டு. மகனும் இப்பவும் சைக்கிள் ஓட்டுகிறான்...

    எனக்கு ரொம்பப் பிடித்த வாகனம்

    உப்பு குறையவும் வேண்டாம் கூடவும் வேனாம் அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நலல்தில்லைதானே மிதமா இருந்தால் நல்லது. தகவல்கள் நல்ல தகவல்கள்.

    ஜோக்ஸ் ரசித்தேன் குறிப்பாக மதன் ஜோக்ஸ், 22 வயசு பையனும் நாயும்..

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!