கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை
விட்டி கூஷ்மாண்டம்
(முட்டாள் சாம்பல் பூசணிக்காய்)
பண்டு காராட்டு நம்பூதிரியுடைய சிஷ்யனான, பிரசித்தி பெற்ற ஒரு விஷக்கடி வைத்தியர் கோழிக்கோட்டில் இருந்தார். அவர் பொதுவே விஷம் இறக்க வேண்டி எங்கும் செல்ல மாட்டார். விஷக்கடி ஏற்றவர்களை அவர் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து சிகிச்சை பெறுவதே வழக்கம். அவ்வாறு விஷம் இறங்கி குணமடைந்தவர்களிடம் சன்மாணம் ஒன்றும் கேட்க மாட்டார். ஆனால் அவர்களாகத் தருவதை மறுக்க மாட்டார். அப்படி இருந்தும் அவர் ஒரு தனவான் ஆகிவிட்டார். அவரிடம் வைத்தியம் படிக்க நிறைய சீடர்கள் வந்தனர். வந்தவர்க்கெல்லாம் விஷக்கடி வைத்தியம் மந்திரம் உபதேசித்து அருளினார்.
அவர் வீட்டிற்கு அடுத்து தெற்கு புறமாக உள்ள வீட்டில் கொச்சுராமன் (சின்ன ராமன்) என்று பெயருள்ள ஒரு சிறுவன் வசித்து வந்தான். அவனுடைய வீட்டில் உள்ளவர்களுக்கு தினப்படி ஒரு நேரம் ஆகாரம் கிடைப்பதே கஷ்டம். ஆகவே தரித்திரம் போக்கும் எண்ணத்தோடு கொச்சுராமனும் விஷக்கடி வைத்தியம் படிக்க ஆசைப்பட்டான். ஆனால் அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
ஆயினும் ஆர்வமிகுதியால் வைத்தியரின் சீடர்களிடம் சென்று எப்படி விஷக்கடி வைத்தியம் படிப்பது என்று விசாரித்தான். அவர்கள் “ஆர்வம் உள்ளவர் குருவிடம் சென்று நமஸ்கரித்து தக்க தட்சிணையும் வைத்து விஷக்கடி வைத்தியம் படிப்பிக்கக் கோர வேண்டும். குரு ஒரு மந்திரம் உபதேசிப்பார். அந்த மந்திரத்தை பக்தி சிரத்தையுடன் ஒரு அட்சரத்திற்கு ஒரு லக்ஷம் வீதம் (அட்சர லக்ஷம்) உருப்போடவேண்டும். பின்னர் அந்த மந்திரம் ஓதி தண்ணீர் தெளித்து விபூதி பூசினால் விஷம் இறங்கும். அதுதான் சாதாரண நடைமுறை” என்றனர்.
இதைக் கேட்ட கொச்சுராமனுக்கு இது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லையே என்று தோன்றியது. ஆனால் தட்சிணைக்குத்தான் கையில் ஒன்றும் இல்லை. அவன் வீட்டின் கூரையில் ஒரு சாம்பல் பூசணிக் கொடி படர்ந்து இருந்தது. அதில் கொஞ்சம் காய்களும் இருந்தன. தற்போதைக்குப் பூசணிக்காயை குருதட்சிணையாகக் கொடுக்கலாம் என்று தீர்மானித்தான்.
அவன் அன்றே பூசணிக்காயை பறித்து வைத்தான். அடுத்த நாள் சிஷ்யர்கள் மற்றும் ஆட்கள் வருமுன் செல்ல நினைத்து விடியற்காலையில் பூசணிக்காயும் கொண்டு வைத்தியரின் வீட்டிற்குச் சென்றான். வைத்தியர் வீட்டின் வெளியில் வந்தபோது பூசணிக்காய் காணிக்கையை அவர் காலடியில் சமர்ப்பித்து விழுந்து வணங்கினான். “அடியேனுக்கும் விஷக்கடி வைத்தியம் படிப்பிக்க வேண்டும்” என்றான். அவர் “விட்டி கூஷ்மாண்டம் எந்தினு
? (முட்டாள் பூசணிக்காய் எதற்கு ?)” எனக் கேட்டார்.
ஆர்வ மிகுதியாலும், அவசரக்குடுக்கைத் தனத்தாலும் அவனுக்கு “விட்டி கூஷ்மாண்டம்” மட்டுமே மண்டையில் ஏறியது. அவன் அதுதான் மந்திரம் என்றும், அதோடு உபதேசம் தீர்ந்தது என்றும் கருதி வேறு பதில் ஒன்றும் சொல்லாமல் வீட்டிற்குத் திரும்பினான். வைத்தியர், ‘பாவம் இப்படி விடியற் காலையிலேயே அவனை முட்டாள் என்று சொல்லிவிட்டோம், அதனால்தான் அவன் மனம் வருந்திப் போகிறான்’ என்று நினைத்துக் கொண்டார். கொச்சுராமனுக்கோ ஒரு வருத்தமும் இல்லை. மந்திரோபதேசம் இவ்வளவு சீக்கிரம் முடிந்தது என்று மகிழ்ச்சியே இருந்தது.
வீட்டிற்குச் சென்றவுடன் குளித்து விளக்கேற்றி விளக்கின் முன் அமர்ந்து மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கினான். அப்படி அட்சர லக்ஷம் (மந்திரம் ஐந்து அட்சரமுள்ளதாகையால் ஐந்து லக்ஷம் தடவை) உருப்போட்டு முடித்தான். அவ்வாறு அவனுக்கு “நான் ஒரு விஷக்கடி வைத்தியன் ஆகிவிட்டேன்” என்ற நம்பிக்கை உண்டாகியது.
சாதாரணமாகச் சென்று கடிக்க மாட்டோம், சென்று விஷமிறக்க மாட்டோம் என்று பாம்புகளும் விஷமிறக்கும் வைத்தியர்களும் சத்தியம் செய்திருப்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? ஆனால் அதற்கு மாறாகக் கொச்சுராமன் எங்கே விஷக்கடி சிகிச்சைக்குக் கூப்பிட்டாலும் அங்கே செல்வதும் அங்கேயே மந்திரம் ஓதி தண்ணீர் தெளித்து விஷம் இறக்குவதும் செய்தான். தொடக்கத்தில் அவன் பெயர் பெற முடியவில்லை. சிகிச்சை பலன் அளிப்பது பரவப் பரவ அவனது புகழ் ஓங்கியது. நிறையப் பேர் வந்து அவனை சிகிச்சைக்காக விளித்துச் சென்றனர். விஷமிறக்கச் சன்மானம் எதுவும் கேட்டு வாங்கக்கூடாது என்பதை கொச்சுராமன் கடைப்பிடிக்கவில்லை. ஆகவே அவனுக்குத் தாராளமான வருமானம் கிடைத்தது. அவனுடைய, குடும்பத்தாருடைய தரித்திரம் நீங்கியது. பெரிய வீடு, வயல், தோட்டம், ஆபரணங்கள் என்று சொத்துக்கள் நிறைய சேர்ந்தன.
அப்படி இருக்கும்போது கோழிக்கோடு மகாராஜா சாமுதிரிப்பாடுக்கு பாம்புக்கடி ஏற்பட்டது. சாமுதிரி விஷத்தால் மயக்கம் அடைந்தார். நிறைய விஷக்கடி வைத்தியர்கள் வந்து வைத்தியம் பார்த்தும் பலன் இல்லை. விஷம் இறங்கவில்லை.
மூன்றாம் நாள் தம்புரானை (ராஜா) தரையில் இறக்கிவைத்து ஸம்ஸ்கார சடங்குகளுக்கு ஆயத்தம் செய்யத் தொடங்கினர். அப்போதுதான் அங்கிருந்த ஒரு ஆளுக்குக் கொச்சுராமன் வைத்தியன் பற்றிய ஞாபகம் வந்தது, கொச்சுராமனையும் கூப்பிட்டுப் பார்க்கலாம் என்று அபிப்பிராயம் சொன்னார். சிலர் “எல்லாம் தீர்ந்தாயிற்று. இனி யாரைக் கொண்டு வந்து என்ன பிரயோஜனம்” என்று மறுப்பும் சொன்னார்கள். எதாயாலும் சரி. கொச்சுராமனையும் கூப்பிட்டு வந்து பார்ப்போம் என்று தீர்மானம் ஆகியது.
முக்கியமான சிலர் பல்லக்கு எடுத்துக்கொண்டு போய் கொச்சுராமன் வைத்தியரிடம் சென்று விவரங்கள் அறிவித்து அவரையும் கூட்டிக் கொண்டு வந்தனர். வைத்தியர் தம்புரானை நாடி பிடித்துப் பார்த்தார். மடைப்பள்ளி சமையல்காரன் குட்டிபட்டரை (கேரளத்தில் தமிழ் பிராமணரை பட்டர் என்று சொல்லுவர்) விளித்து சீக்கிரம் கஞ்சி தயார் செய்யச் சொன்னார். அதைக் கேட்ட மற்ற வைத்தியர்கள் “கஞ்சி எதற்கு?” என்று கேட்டனர். “தம்புரான் அமிர்தேத்து (ஆகாரம்) உண்டு இரண்டு மூன்று தினங்கள் ஆகிவிட்டன. விஷம் இறங்கியவுடன் நல்ல பசி உண்டாகும். அப்போது குடிப்பதற்குக் கஞ்சி தர வேண்டும்.” என்று பதில் சொன்னார். இதைக் கேட்ட மற்ற வைத்தியர்கள் ஒரு கேலிச் சிரிப்பு சிரித்தனர். தம்புரானுடைய கதை முடிந்து விட்டது என்பதே அவர்களுடைய அநுமானம்.
கொச்சுராமன் அவருடைய மந்திரம் “விட்டி கூஷ்மாண்டம்” என்பதை 108 முறை ஜபித்து தம்புரானுடைய முகத்தில் தண்ணீர் தெளித்தார். தம்புரான் கண் விழித்தார். இரண்டாம் முறையும் மந்திரம் ஓதி தண்ணீர் தெளித்தார். தம்புரான் கையும் காலும் அசைத்தார். மூன்றாவதாக மீண்டும் மந்திரம் ஓதி தண்ணீர் தெளித்தவுடன் தம்புரான் எழுந்து உட்கார்ந்தார். “கஞ்சி வேண்டும்” என்று கூறினார். கஞ்சி கொண்டு வரப்பட்டது. தம்புரான் வயிறு நிறையக் குடித்தார். சற்று நேரம் கழிந்தது. அசதி எல்லாம் மாறியவுடன் தம்புரான் “விஷம் இறக்கியது யார்” எனக் கேட்டார். “இதோ நிற்கும் கொச்சுராமன் வைத்தியர்” என்று சேவகரில் ஒரு ஆள் சொன்னார். தம்புரான் சந்தோஷப்பட்டார்.
கொச்சுராமன் வைத்தியருக்கு மகாராஜா இரண்டு கைகளிலும் வீர சிருங்கல அணிவித்தார். பத்தாயிரம் பவுன், பத்து குத்து (மூட்டை?) பட்டு சன்மானம் தந்து வைத்தியரை வாத்திய கோஷங்களுடன் அவருடைய வீட்டில் கொண்டு விட ஆணையிட்டார். இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மற்ற வைத்தியர்களுக்கு ஆச்சர்யம் வந்தது. அவர்களில் ஒருவராக நம்முடைய கொச்சுராமனின் குருவும் அங்கிருந்தார். முட்டாள் என்று கூறியதால் இவன் வேறு எங்கேயோ போய் நல்ல மந்திரம் படித்துக் கெட்டிக்காரன் ஆகி விட்டான் என்று அவர் நம்பினார். கொச்சுராமன், அங்கிருக்கும் கூட்டத்தில் அவர் உள்ளதைப் பார்க்கவில்லை.
அரசர் ஆணையிட்டபடி கொச்சுராமன் வைத்தியரை பல்லக்கில் வைத்து வீரர் அணிவகுப்பு, வாத்யகோஷம், மற்ற வைத்தியர்கள், பொது ஜனங்கள் என்று ஊர்வலமாகப் புறப்பட்டனர். கொச்சுராமன் அப்போது தன்னுடைய குரு ஊர்வலத்தில் நடந்து வருவதைக் கண்டார். பல்லக்கை இறக்கப் பணித்தார். பல்லக்கில் இருந்து இறங்கி தனக்குக் கிடைத்த பரிசுகளையும் கொண்டு போய் குருவின் காலடியில் சமர்ப்பித்துத் தொழுதார்.
குரு : “இது எல்லாம் என்ன, ஏன்?”
கொச்சுராமன் : “இதெல்லாம் தங்களுடைய உபதேசமும் அனுக்கிரகமும் கொண்டு கிடைத்தவை. இது வரையிலும் நான் தாங்களுக்கு எதுவும் தர சாதிக்கவில்லை. இப்போது தான் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னை மன்னித்து இவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
குரு : “ நான் தங்களுக்கு ஒன்றும் உபதேசிக்கவில்லையே! மரித்தவரை உயிர்ப்பிக்கும் இந்த வித்யயை தாங்கள் எனக்கு உபதேசித்து அருளவேண்டும் என வேண்டுகிறேன்.”
கொச்சுராமன்: “ எனக்கு நீங்கள் உபதேசிச்ச மந்திரம் அல்லாது வேறு ஒன்றும் அறியேன். எந்த வித்யையும் இல்லை அவ்வளவுதான் .”
குரு : “என்ன மந்திரம்?”
கொச்சுராமன் : “ காதைக் காட்டுங்கள்” காதில் ரகசியமாக “விட்டி கூஷ்மாண்டம்”
இதைக் கேட்டு குரு ஆச்சர்யப் பட்டார். ஆழ்ந்த குரு பக்தியும் குரு நம்பிக்கையும் உண்டேல் எதையும் சாதிக்க முடியும் என்ற ஞானம் அவருக்குப் பிறந்தது.
அடிக்குறிப்பு (என்னுடையது)
[[ஒரு கதை: இக்கரையில் உள்ள குரு அவசரமாக அக்கரையில் இருந்த சீடனைக் கூப்பிட, சீடன் “குருவே நம:” என்று ஆற்றின் மேல் தண்ணீரில் நடந்து கரை சேர்ந்த்தைப் பார்த்த குரு, தானும் அவ்வாறு செய்ய எண்ணி அவ்வாறே ஆற்றில் இறங்க, ஆற்றில் விழுந்த கதை ஞாபகம்
வருகிறதா?]]
ஊசிக்குறிப்பு.
நவராத்திரியின் நான்காம் நாள் துர்கை அம்மனின் குஷ்மந்தா வடிவம் போற்றப்படுகிறது. துர்கை அம்மனை குஷ்மந்தா வடிவத்தில் பக்தர்கள் வணங்குவார்கள்.
ஒரு வேளை இந்த குஷ்மந்தாதான் கூஷ்மாண்டம் என்ற மந்திரம் ஆகியதா?
கூகிள், ஒன்று கேட்கின், வேறு ஒன்றும் சேர்த்து கொடுத்தார். அதுதான் குஷ்மந்தா. பொருந்துவதால் இணைத்தேன். இன்றைய “நீயா நானா”வுக்கு ஒரு விஷயம்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
பதிலளிநீக்குகுறள் நெறி வாழ்க..
வாழ்க..
நீக்குவாழ்க வையகம்..
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்..
வாழ்க.. வாழ்க..
நீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம் நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். தொற்று மேலும் பரவாமல் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.. ... வணக்கம்.பிரார்த்திப்போம்.
நீக்குஇந்தக் கதையைச் சின்ன வயசில் எங்களுடன் குடியிருந்த கடையத்தைச் சேர்ந்த மாமியும்/மாமாவும் வாய்மொழியாகச் சொல்லிக் கேலி செய்வார்கள்.கேட்டிருக்கேன். ஆனால் இத்தனை விபரங்கள் தெரியாது.
பதிலளிநீக்குகுரு/சிஷ்யர் சம்பாஷணையில் முதல் மூன்றும் இடம் மாறி வந்துள்ளனவோ என சந்தேகிக்கிறேன். கொஞ்சம் முன்னுக்குப் பின் முரணாக இருக்கோ?
பதிலளிநீக்குகொஞ்சம் சரி செய்திருக்கிறேன்.
நீக்குமொழிபெயர்ப்பு கதை நன்று. குரு பக்தி குறித்த கதை கேட்டு இருக்கிறேன். நல்லதொரு பகிர்வு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குகதையின் கடைசி பகுதியில் சில தவறுகள் உள்ளன. கடைசி பகுதி கீழே உள்ளவாறு இருக்கவேண்டும்.
பதிலளிநீக்கு//தன்னுடைய குரு ஊர்வலத்தில் நடந்து வருவதைக் கண்டார். பல்லக்கை இறக்கப் பணித்தார். பல்லக்கில் இருந்து இறங்கி தனக்கு கிடைத்த பரிசுகளையும் கொண்டு போய் குருவின் காலடியில் சமர்ப்பித்துத் தொழுதார்.
குரு : “இது எல்லாம் என்ன, ஏன்?”
கொச்சுராமன் : “இதெல்லாம் தங்களுடைய உபதேசமும் அனுக்கிரகமும் கொண்டு கிடைத்தவை. இது வரையிலும் நான் தாங்களுக்கு எதுவும் தர சாதிக்கவில்லை. இப்போது தான் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னை மன்னித்து இவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
குரு : “ நான் தங்களுக்கு ஒன்றும் உபதேசிக்கவில்லையே! மரித்தவரை உயிர்ப்பிக்கும் இந்த வித்யயை தாங்கள் எனக்கு உபதேசித்து அருளவேண்டும் என வேண்டுகிறேன்.”
கொச்சுராமன்: “ எனக்கு நீங்கள் உபதேசிச்ச மந்திரம் அல்லாது வேறு ஒன்றும் அறியேன். எந்த வித்யையும் இல்லை அவ்வளவுதான் .”
குரு : “என்ன மந்திரம்?”
கொச்சுராமன் : “ காதைக் காட்டுங்கள்” காதில் ரகசியமாக “விட்டி கூஷ்மாண்டம்”
இதைக் கேட்டு குரு ஆச்சர்யப் பட்டார். ஆழ்ந்த குரு பக்தியும் குரு நம்பிக்கையும் உண்டேல் எதையும் சாதிக்க முடியும் என்ற ஞானம் அவருக்கு பிறந்தது. //
Jayakumar
சரி செய்திருக்கிறேன்.
நீக்குநன்றி. இப்படித்தான் வந்திருக்கணும் என நானும் யூகம் செய்திருந்தேன். ஶ்ரீராமும் மாற்றி விட்டார்.
நீக்குகதையாகப் படிக்க நன்றாக இருந்தது. நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஇதுபோன்று, தேனீக்களை விரட்ட ஸ்வாமி ராமாவுக்கு உபதேசமாக, தேனீக்களே என்னைக் கொட்டாதீர்கள் என்ற பொருளில் மந்திரம் கொடுத்ததாக எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.
மந்திரத்தைவிட நம்பிக்கையே பெரிது.
ஓகோ...! கதை தானே, சரி...
பதிலளிநீக்குhttp://sivamgss.blogspot.com/2009/09/7.html கூஷ்மாண்டா பற்றி இங்கே தமிழில் பார்க்கலாம்.
பதிலளிநீக்குசுட்டிக்குச் சென்று படித்தேன். நவராத்திரி அன்னையைப் பற்றி நல்ல விரிவாக விளக்கமாக எழுதியுள்ளீர்கள். நவராத்திரியில் அந்த நாளுக்குரிய நிவேதனம், நவரத்தனமாலை பதிவும், பாடலும் அதில் இடம் பெற்றதற்கு மகிழ்ச்சி. பதிவை படிக்க இங்கு சுட்டி தந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்கு_/\_ @Kamala.
நீக்குஇந்தக் கதை வாசித்தது இல்லை ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன். முட்டாள் பூஷனிக்காய் கதையும், இதே போன்ற வடிவத்தில் வேறொருகதையும் - பெயர் மறந்துவிட்டது - அதாவது மந்திரம் நம்பிக்கை என்ற அடிப்படையில் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஇதன் உள்ளார்த்தம் குருபக்தி.
கீதா
தன்னை அறியாத ஒரு பக்தியும் நம்பிக்கை உண்மையில் நடக்குமா தெரியாது தன்னம்பிக்கை கதை என்ற அளவில் மிகவும் நன்றாக இருக்கிறது அன்புடன்
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
இன்றைய கதை மொழி பெயர்ப்பு என்ற விதத்தை தாண்டி மிகவும் எளிதான கருத்துடன் பரிமளிக்கிறது. குரு பக்தியுடன் ஏற்பட்ட அபார நம்பிக்கை வாழ்வில் எப்படி நம்மிடையே பல வெற்றிகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டிய கதை. இக்கதையை போலுள்ள பல குரு சிஷ்யன் கதைகளை படித்திருந்தாலும் இக்கதையை இப்போதுதான் படித்தேன். கதையை அற்புதமாக மொழி பெயர்ப்பு செய்து இங்கு பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். மனம் நிறைந்த நன்றிகளும். பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எங்கள் பிளாக்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகுரு பக்தியும் நம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை எடுத்துக் கூறும் கதை.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குகதை மிக நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குகதையில் குருபக்தியும், நம்பிக்கையும் தான் முக்கியம் என்று தெரிகிறது.
குரு சொன்ன வாக்கியத்தை தவறாக உபதேசம் என்று நினைத்து கொண்டலும், அதை நம்பிக்கையுடன் பயபக்தியுடன் சொல்லி நோய்களை குணமாக்கி இருக்கிறார்.
குரு பக்தியும் செய்யும் தொழிலில் ஏமாற்றாமல் உண்மையுடன் இருந்ததற்கு அவருக்கு உயர்வு கிடைத்து இருக்கிறது.
எங்கள் பிளாக்குக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகதையைப் பாராட்டியவர் யாவருக்கும் நன்றி
பதிலளிநீக்குஎங்கள் பிளாக் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் வளர்க எங்கள் பிளாக் எல்லோரும் விரும்பும் எங்கள் பிளாக் வாழ்க வாழ்கவே மேலும் வாழ்கவே
நீக்குஎங்கள் ப்ளாக் பிறந்தநாள் வாழ்த்துகள் பல்லாண்டு .வாழ்க !.
பதிலளிநீக்குமொழிபெயர்ப்புக் கதை அருமை
பதிலளிநீக்குஎங்கள் பிளாக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு