சைனீஸ் சில்லி பொட்டாட்டோ
தேவை:
முதல் ஸ்டெப்:
பெரிய சைஸ் உருளைக்கிழங்கு-3 அல்லது 4
கார்ன் ஃபிளவர்- அரை கப்
மிளகாய்த்தூள்-ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
உருளைக்கிழங்குகளைப்பொரிக்க தேவையான எண்ணெய்
செய்முறை:
உருளைக்கிழங்குகளை தோல் சீவி, நன்கு கழுவிய பின் துண்டால் நன்கு துடைத்து சுண்டு விரல் நீளத்துக்கு வெட்டவும். ஒரு துணியில் பரப்பி வைத்து ஈரம் முழுவதும் உலர வைக்கவும். கார்ன் பிளவர் மாவில் தூள்களைப்போட்டு உருளைக்கிழங்கு துண்டுகளின் இரண்டு பக்கமும் தடவி பிரட்டவும்.
சூடான எண்ணெயில் மீடியம் தீயில் அனைத்து உருளைக்கிழங்கு தூண்டுகளையும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். ஒரு நியூஸ்பேப்பரில் பரப்பி வைக்கவும். அதிகப்படியான எண்ணெயை இது எடுத்து விடும்.
முதல் ஸ்டெப்:
பெரிய சைஸ் உருளைக்கிழங்கு-3 அல்லது 4
கார்ன் ஃபிளவர்- அரை கப்
மிளகாய்த்தூள்-ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
உருளைக்கிழங்குகளைப்பொரிக்க தேவையான எண்ணெய்
செய்முறை:
உருளைக்கிழங்குகளை தோல் சீவி, நன்கு கழுவிய பின் துண்டால் நன்கு துடைத்து சுண்டு விரல் நீளத்துக்கு வெட்டவும். ஒரு துணியில் பரப்பி வைத்து ஈரம் முழுவதும் உலர வைக்கவும். கார்ன் பிளவர் மாவில் தூள்களைப்போட்டு உருளைக்கிழங்கு துண்டுகளின் இரண்டு பக்கமும் தடவி பிரட்டவும்.
சூடான எண்ணெயில் மீடியம் தீயில் அனைத்து உருளைக்கிழங்கு தூண்டுகளையும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். ஒரு நியூஸ்பேப்பரில் பரப்பி வைக்கவும். அதிகப்படியான எண்ணெயை இது எடுத்து விடும்.
இரண்டாவது ஸ்டெப்:
தேவை:
பொடியாக அரிந்த ஸ்ப்ரிங் ஆனியன் – 2 அப்
பொடியாக அரிந்த வெங்காயம்-1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய்-3
சோயா சாஸ்- 1 மேசைக்கரண்டி
சில்லி சாஸ்- 1 மேசைக்கரண்டி
பொடியாக அரிந்த பழுத்த தக்காளி-1
இஞ்சி பூண்டு விழுது- ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
தேவையான உப்பு
செய்முறை:
தேவை:
பொடியாக அரிந்த ஸ்ப்ரிங் ஆனியன் – 2 அப்
பொடியாக அரிந்த வெங்காயம்-1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய்-3
சோயா சாஸ்- 1 மேசைக்கரண்டி
சில்லி சாஸ்- 1 மேசைக்கரண்டி
பொடியாக அரிந்த பழுத்த தக்காளி-1
இஞ்சி பூண்டு விழுது- ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
தேவையான உப்பு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீடியம் தீயில் வெங்காயத்தையும் பாதியளவு ஸ்ப்ரிங் ஆனியனையும் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும். பின் தக்காளியைப்போட்டு குழையும் வரை சமைக்கவும். இப்போது சாஸ் வகைகள், மிளகாய்த்தூள் போட்டு நன்கு கலந்து 2 நிமிடம் சமைக்கவும். இப்போது வறுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு துண்டுகளைப்போட்டு சிறிது உப்பைத்தூவி கவனமாக சில நிமிடங்கள் கிளறவும்.
உப்பு கிழங்கில் சேர்ந்து வந்ததும் பாக்கியுள்ள ஸ்ப்ரிங் ஆனியன் துண்டுகளைத்தூவி இறக்கவும்.
உப்பு கிழங்கில் சேர்ந்து வந்ததும் பாக்கியுள்ள ஸ்ப்ரிங் ஆனியன் துண்டுகளைத்தூவி இறக்கவும்.
வித்தியாசமான ரெசிப்பி. பசங்களுக்கு மிகவும் பிடிக்கும்னு தோணுது.
பதிலளிநீக்குநேற்றுத்தான் பேசிக்கொண்டிருந்தோம், உருளைக்கிழங்கு அனேகமா எல்லாருக்கும் பிடித்ததாக இருக்கிறது, வேறு எந்த காய்க்கும் இந்தப் பெருமை இல்லை என்று. செய்வதும் சுலபம். பிடிக்காதுன்னு சொல்றவங்க அபூர்வம்.
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி நெல்லத்தமிழன்!
நீக்கு//வேறு எந்த காய்க்கும் இந்தப் பெருமை இல்லை //
உண்மையை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!!
கற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
பெயர் கொஞ்சம் புதுமையாக வைத்திருக்கலாம். படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. தக்காளிக்கு பதில் தக்காளி சாஸ் உபயோகித்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குபாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகரன்!
நீக்குதக்காளி சாஸ் இனிப்பாக இருக்கும். அதனால் சுவையை கெடுத்து விடும். இப்போதெல்லாம் சில வகை உருளைக்கிழங்குகள் இனிப்பாகவே இருக்கின்றன. எங்கள் உணவகத்தில் இப்போது சமையல்காரகளிடம் இது தான் complaint ஆக உள்ளது.
என்னுடைய குறிப்பை இங்கே வெளியிட்டுள்ளதற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்! இப்போது இங்கே காலை ஆறு மணி. பிறகு வருகிறேன்!!
பதிலளிநீக்குஉருளைக் கிழங்கு அநேகமாக எல்லாருக்கும் பிடித்தமானது..
பதிலளிநீக்குகூடுமானவரை மிளகாய் காரத்தையும் இரசாயனக் கலப்புடைய சாஸ் வகைகளையும் குறைத்துக் கொள்வது நலம்..
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!
நீக்குமனோ அக்கா சூப்பரோ சூப்பர்! எங்கள் வீட்டில் இது ரொம்பப் பிடிக்கும். நீங்கள் சொல்லியிருப்பதையும் பார்த்துக் கொண்டேன்,
பதிலளிநீக்குஇது உருளைக்கிழங்கு மஞ்சூரியன் என்று சொல்லலாமோ!
நான் அப்படித்தான் சொல்லிச் செய்வது வழக்கம். கோபி மஜூரியன், பனீர் மஞ்சூரியன் உருளைக்கிழங்கு மஞ்சூரியன், மிக்ஸ்ட் வெஜிட்டபிள் மஞ்சூரியன், பேபிகார்ன் மஞ்சூரியன் என்று செய்வதுண்டு.
உருளைக்கிழங்கு எல்லோருக்கும் பிடித்தமான ஒரு காய்.
ரொம்ப நல்லாருக்கு மனோ அக்கா. மிக்க நன்றி உங்கள் முறையையும் சொன்னதற்கு.
கீதா
உற்சாகமான பாராட்டிற்கு அன்பு நன்றி கீதா!
நீக்குமஞ்சூரியன் என்று சொல்லும்போது கார்ன் ஃபிளவர் மாவு கலந்த நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். இதில் உருளைக்கிழங்கை ஏற்கனவே பொரித்திருப்பதால் இந்த முறையில் செய்யும்போது காய்கள் வதங்கிய பின் உருளைக்கிழங்கினை சேர்த்து கிளறும்போதே கவனமாக செய்ய வேண்டும். கார்ன் பிளவர் கரைசல் ஊற்றினால் உருளைக்கிழங்கு துண்டுகள் உடைந்து விடும்!!
சைனீஸ் உருளைக்கிழங்கு காரக்கறி நன்றாக இருக்கிறது, படங்களும், செய்முறை குறிப்பும் அருமை. எல்லோருக்கும் உருளை பிடிக்கும். உருளையில் இப்படி செய்து கொடுத்தால் மகிழ்வார்கள்.
பதிலளிநீக்குஇனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!
பதிலளிநீக்குரெசிபி நல்லா இருக்கு. முயற்சி செய்யப் போறேன்.
பதிலளிநீக்கு