வெள்ளி, 29 டிசம்பர், 2023

வெள்ளி வீடியோ : விடிந்து விட்ட பொழுதில் கூட… விண்மீனை பார்க்கிறேன்…

சிவமணி எழுதிய பாடலுக்கு இசை அமைத்து பாடி இருப்பவர் அய்யப்பன் புகழ் திரு கே வீரமணி.  மிகவும் புகழ்பெற்ற இந்தப் பாடல் சபரிமலை சீஸனில் ஒலிக்காத இடமே இருக்காது.  அனைவரும் கேட்டு மகிழ்ந்திருப்போம்.  இதோ..  இப்போது மீண்டும் கேட்டு மகிழ்வோம்.

இருமுடி தாங்கி ஒரு மனதாகி
குருவெனவே வந்தோம்
இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் 
திருவடியைக் காண வந்தோம்

பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்!

நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு
ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!

கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து

பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே

அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!

கங்கை நதிப் போல் புண்ணிய 
நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார்
சஞ்சலமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருட்
காவலனாய் இருப்பார்

தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா என்றால் அவரும்
தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும்
பாதத்தை தந்திடுவார்
நல்ல பாதையைக் காட்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!

சபரி பீடமே வந்திடுவார் சபரி
அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் 
சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரி மலைதனில் நெருங்கிடுவார்
பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதியென்று அவனை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனைத் துதிக்கையிலே
தன்னையே மறந்திடுவார்

பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
சரணம் சரணம் அய்யப்பா 
சுவாமி சரணம் அய்யப்பா

=======================================================================================

1982 ல் வெளியாகி 265 நாட்கள் ஓடிய சாதனைப் படம் ஒருதலை ராகம்.  

விவரம் தெரியாமல், எல்லோரும் பாராட்டுகிறாரக்ள் என்று சிபாரிசு செய்து,  இதை அப்பா அம்மாவுடன் பார்த்தது என் கஷ்டம்.  அப்பா திட்டு திட்டென்று திட்டினார்.  அதுவும் நாங்கள் மூவரும் சங்கராபரணம் பார்த்த கையோடு பார்த்த படம்.  திட்டுக்கு கேட்கவா வேண்டும்?  என் அப்பா ஒரு அர்ச்சனை ஸ்பெஷலிஸ்ட்!

முற்றிலும் புதுமுகங்கள் நடித்து, புதுமுக பாடலாசிரியர், இசை அமைப்பாளர், புது இயக்குனர் என்று இருந்தும் மாபெரும் வெற்றி பெற்ற படம்.  ஒரு தலைக் காதல் இளைஞர்களை மிகவும் பாதித்திருந்தது போலும்.  

டி ராஜேந்தரின் இசை படத்தின் மிகப்பெரிய பலம்.  பாடல்களையும் அவரே எழுதி இருந்தார்.பாடடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட்.  பின்னணி இசை ஏ ஏ ராஜ்.  பின்னாட்களில் படம் வெற்றியடைந்ததும் சிலபல வாக்குவாதங்கள்  எழுந்தன.  நான்தான் இயக்கினேன், நான்தான் இசை அமைத்தேன் என்று..

அப்புறம் ஏ ஏ ராஜ் இசை அமைத்து வெற்றி பெறவில்லை என்றாலும் ஒரு பாடல் ரசிக்கப்பட்ட பாடல்.  'அவளொரு மோகன ராகம்'

நாயகியும் நாயகனை  விரும்பினாலும் குடும்பச்சூழல் காரணமாகவோ இயல்பான தன் குணத்தின் காரணமாகவோ சொல்லாமல் இருப்பதால் துன்புறும் நாயகன் பற்றிய கதை.  படிக்கப் போனார்களா, காதலிக்கப் போனார்களா என்று கேட்கக் கூடாது.

சந்திரசேகர், ரவீந்தர், சங்கர், ரூபா போன்றோருக்கு முதல் படம்.  சங்கர், ரூபா பின்னாட்களில் சில பாடங்களில் நடித்திருந்தாலும் காணாமல் போனார்.  ரூபாவும் அப்படியே!

இந்தப் பாடல் ஒரு ஸ்பெஷல் பாடல்.  ஆக்சிமோரான் என்பார்களே அதுபோல வரிகள் அமைந்த பாடல்.  திறமையாக எழுதி இருக்கிறார் ராஜேந்தர்.  இந்தப் பாடலுக்கு 100 சதவிகித உயிர் கொடுத்திருப்பது SPB மற்றும் பாடலின் டியூன்.

எல்லோருக்கும் பிடித்த பாடல்.  எனக்கும்!  கொரோனாவில் காலமான என் விசு மாமாவின் மிகப்பெரிய ஃபேவரைட் பாடல்.

இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…
இது மேற்கில் தோன்றும் உதயம்…
இது நதியில்லாத ஓடம்…

இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…
இது மேற்கில் தோன்றும் உதயம்…
இது நதியில்லாத ஓடம்…
இது நதியில்லாத ஓடம்…

நடை மறந்த கால்கள் தன்னில்…
தடயத்தை பார்க்கிறேன்…
வடம் இழந்த தேரது ஒன்றை…
நாள்தோறும் இழுக்கிறேன்…
சிறகிழந்த பறவை ஒன்றை…
வானத்தில் பார்க்கிறேன்…
சிறகிழந்த பறவை ஒன்றை…
வானத்தில் பார்க்கிறேன்…
உறவுராத பெண்ணை எண்ணி…
நாளெல்லாம் வாழ்கிறேன்…

வெறும் நாரில் கரம் கொண்டு…
பூ மாலை தொடுக்கிறேன்…
வெறும் காற்றில் உளி கொண்டு…
சிலை ஒன்றை வடிக்கிறேன்…
விடிந்து விட்ட பொழுதில் கூட…
விண்மீனை பார்க்கிறேன்…
விடிந்து விட்ட பொழுதில் கூட…
விண்மீனை பார்க்கிறேன்…
விருப்பமில்லா பெண்ணை எண்ணி…
உலகை நான் வெறுக்கிறேன்…

உளமறிந்த பின்தானோ 
அவளை நான் நினைத்தது…
உறவுருவாள் எனதானோ 
மனதை நான் கொடுத்தது…
உயிரிழந்த கருவை கொண்டு…
கவிதை நான் வடிப்பது…
உயிரிழந்த கருவை கொண்டு…
கவிதை நான் வடிப்பது…
ஒரு தலையாய் காதலிலே 
எத்தனை நாள் வாழ்வது…

34 கருத்துகள்:

  1. டி.ஆரின் ஒரு தலை ராகம் படப்பாடல்கள் அத்தனையும் படம் வெளிவந்த காலத்தில் மிகவும் பிடிக்கும். காதலில் ஆண் மன வேதனைப் புழுக்கத்தை அற்புதமாய் பிரதிபலிக்கும் பாடல்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  கூடவே இந்தக் குறிப்பிட்ட பாடலின் வரிகள் அமைப்பு ஒரு ஸ்பெஷல்.

      நீக்கு
    2. ஆமாம். அது பற்றி யாரேனும் விவரமாக
      சொன்னால் ரசிக்கலாமே என்று தான் அரைகுறையாக என் பின்னூட்டம் அமைந்து விட்டது.

      நீக்கு
  2. ஒரு தலை ராகம் படம் நான் ஹாஸ்டலில் இருந்து படிக்கும்போது வெளியானது.

    அனைத்துப் பாடல்களையும் நிறைய தடவைகள் கேட்டு ரசித்திருக்கிறேன். ஓரளவு அனைத்துப் பாடல்களையும் நான் பாடிக்கொண்டிருப்பேன். அனைத்து ஜோனர்களிலும் பாடல்கள் போட்டிருப்பார் டி ராஜேந்தர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். கூடையில் கருவாடு குத்துப் பாடல்! அது மட்டும் கொஞ்சம் கேட்க பிடிக்காது!

      நீக்கு
    2. எனக்கு அந்தப் பாடலும் பிடிக்கும். திருநங்கைகள் பாடும் பாடல் என்பதால் சிலர் படத்தில் ரசிக்கத் தவறியிருக்கலாம்.

      நீக்கு
  3. அந்த வருட ஹாஸ்டல் தின விழாவின் பாட்டுப் போட்டியில் வசந்த மாளிகை படத்தின் கலைமகள் கைப் பொருளே பாடலைப் பாடி இரண்டாம் பரிசு வாங்கினேன். முதல் பரிசு, வாசமல்லாமலரிது வசந்தத்தைத் தேடுது பாடலைப் பாடிய என் நண்பனுக்குக் கிடைத்தது (ஆச்சர்யம் என்னன்னா அவன் எந்தப் போட்டியிலும் கலந்துகொண்டதில்லை. அனேகமா முதலும் கடைசியுமாக இந்தப் போட்டி இருந்திருக்கலாம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் நல்ல பாடல்.  

      பி சுசீலா பாடலை ஒரு ஆண் பாடுவது எப்படி இருந்திருக்கும் அந்த காலகட்டத்தில்?  பொதுவாக ஒரு பார்வை உண்டு.  பெண் பாடிய பாடலை பெண்ணேயும், ஆண் பாடிய பாடலை ஆணும் பாடுவார்கள்!

      நீக்கு
    2. அப்போ மகரக்கட்டு வராத காலம். அதனால் சரியாகவே இருந்திருக்கலாம். இருந்தாலும் புதிய பாடலுக்கான மௌசே தனி. இதுபோல ஒன்பதாம் வகுப்பில் புதிய பாடலைப் பாடி (சட்னு நினைவுக்கு வரலை. எனக்கு மிகவும் பிடித்த பாடல்) ஒருவன் முதல் பரிசு வாங்கினான். இவனும் நல்ல பாடகனில் சேர்த்தியில்லை. கல்லூரிக் காலங்களில்தான் மிகத் திறமையான பாடகர்களைப் பார்த்தேன்.

      நீக்கு
    3. பாடக்கூடாது என்றில்லை.  அப்படி பாடி பரிசு பெறுவது பாராட்டத்தக்கதுதான்.

      நீக்கு
  4. இப்போ அந்தப் படத்தை, கான்சப்டை நினைத்தால் சிரிப்பு வரும். மனதுக்குள்ளே பூட்டி வைக்கும் எதுவுமே பிரயோசனமில்லை.

    கமலியைப் போன்று, ஒருவேளை நல்ல முடிவு அமைந்திருந்தால் இன்னும் பிச்சுக்கிட்டுப் போயிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்கும் காலத்தில் பொழைப்புக்கு வழி தேடாமல் என்ன காதல் வேண்டி கிடக்கிறது?  அதுவும் விருப்பமிருக்கிறது என்று சொல்லக்கூட முன்வராத பெண்ணை நினைத்து அப்பா அம்மா வளர்த்த உயிரையே அவர்களை மறந்து விடும் அளவு! :))

      நீக்கு
  5. ஆ! கமலியைப் போன்றா?.. என் தோழி அல்லவோ அவள்?..

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்கள்.

    இரண்டாவது சோகமான பாடல் என்றாலும் இனிமையான பாடல்.
    1980 ல் வந்த படம் ஸ்ரீராம். அப்போது நாங்கள் திருவெண்காட்டில் இருந்தோம், புதுபடம் பார்க்க மாயவரம் போய் பார்த்த படம்.
    அப்பா, அம்மாவுக்கு எல்லாம் பிடிக்காது. கதையை பற்றி தெரிந்து கொள்ளாமல் அழைத்து சென்று விட்டீர்கள் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தையை பற்றி தெரிந்து கொள்ளாமல் அழைத்து சென்று விட்டீர்கள் போலும். //

      விவரம் போதவில்லை! அதுவும் சங்கராபரணம் பார்த்த மறுநாள்!

      நீக்கு
  8. இருமுடி தாங்கி - நிச்சயமாகச் சொல்ல முடியும் இந்தப் பாடலை யாரும் கேட்காமல் கடந்திருக்க முடியாது என்று. இப்போதும் கூட எத்தனை ஐயப்பன் பாடல்கள் வந்தாலும் சீசனில் தவறாது ஒலிக்கும்.

    அருமையான பாடல். மிகவும் ரசித்த பாடல். இப்பவும் ரசித்தேன் ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இரண்டாவது பாட்டும் ரொம்பப் பிடித்த பாடல் நீங்க சொல்லிருப்பது போல எஸ் பி பி குரல் ஸ்பெஷல் தூக்கி நிறுத்தியிருக்கிறது, ஸ்ரீராம். ஆமாம் இசை அமைப்பும்.

    இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே வெற்றி...படமே வெற்றி. அப்போதுஇளங்கலை இரண்டாம் வருடம் ....அதன் பின் இந்தப் படத்தை எங்கள் கல்லூரியில் வேறு போட்டாங்க!!! எனக்கு ஆச்சரியம். எனக்குப் படம் முதல் சீன்களே ஈர்க்கவில்லை எனவே படம் பார்க்கவில்லை. கல்லூரி நூலகம் சென்று விட்டேன். ஆனால் பாடல்கள் பிடித்தன. டி ஆரின் பாடல் வரிகள். அவர் தமிழ் இலக்கியம் முதுகலை.

    இந்தப் பாடல் முரண்பட்ட சொற்கள் அடுக்கு. நீங்கள் சொல்லிருப்பது போல் ஆக்சிமோரன்.

    அதாவது இப்படியான வார்த்தைகளின் அமைப்பு ஸ்பெஷல் கதாநாயகனின் சோகத்தை இப்படிச் சொல்லும் வரிகள். குழந்தை-தாலாட்டு, இரவு நேரம்பூபாளம், மேற்கில் உதயம்...இப்படி...தன் காதலின் சோகம் சொல்லும் பாடல்... டி ஆரும் உணர்ச்சிவசப்படுபவர்தானே!

    அப்போதே எங்கள் தமிழ் ஆசிரியை கேட்டு யோசித்து நான் டக்கென்று சொன்னவை! அப்போதுதான் இந்தச் சொல் ஆக்சிமோரன் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அப்போது ஆராய்ந்தது போல் இப்போதெல்லாம் ஆழ்ந்து எதையும் ஆராய முடியவில்லை. யோசிக்க கூட முடிவதில்லை, சமீபகாலமாக. கவனச் சிதறல்கள் நிறைய இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. படிக்கும் காலத்தில் பொழைப்புக்கு வழி தேடாமல் என்ன காதல் வேண்டி கிடக்கிறது? அதுவும் விருப்பமிருக்கிறது என்று சொல்லக்கூட முன்வராத பெண்ணை நினைத்து அப்பா அம்மா வளர்த்த உயிரையே அவர்களை மறந்து விடும் அளவு! :))//

    இது படிக்கும் காலம், வேலை தேடும் காலம்.. இப்பல்லாம் நாம வந்து தொந்தரவு செய்யக்கூடாது. வேலையெல்லாம் கிட்டி, பணமெல்லாம் ஆசையா சம்பாதிச்சு, வீடு, வாசல் எல்லாம் வசதியா அமைந்த பிறகு, மெல்ல அனுமதி கேட்டுட்டு, நிதானமா வந்து காலிங் பெல்ல, காலை சிற்றுண்டியெல்லாம் முடிந்த பிறகுதான் அழுத்தணும்கிறதெல்லாம் தெரியாது இந்தக் காதலுக்கு. வெவரம் தெரியாத மண்டு அது ! இப்படி ஒரு அசடாத்தான் காலத்த ஓட்டிகிட்டிருக்கு இன்னும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரிதான் ஏகாந்தன் ஸார்..  காதல் நேரம் பார்க்காமல் வரும்.  ஆனால் அதற்காக உயிரை விடுவதா?  காதலித்து விட்டாலும் பிற்கால வாழ்க்கையைப் பற்றி நினைக்க வேண்டாமா என்கிற ஆதங்கத்தில் எழுதினேன்!

      நீக்கு
    2. புரிகிறது. உயிரையெல்லாம் மாய்த்துக்கொள்ளாமல் காதலிலேயே வாழலாம்..

      நீக்கு
  14. கருத்துப் பெட்டி மூடிருக்கிறது தெரியாம காதல் மாதிரி அகாலத்துல வந்துட்டேன் போலருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அடுத்த பதிவு வந்த உடன் முதல் பதிவு மாடரேஷன் மொட்டுக்கு சென்று விடும்! வந்து கதவு திறந்து விட வேண்டும்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!