சோமு எழுதிய பாடலுக்கு இசையமைத்து பாடிய பாடல்....
காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை
கன்னிமூல கணபதியே
பாத்து இரட்சிக்கணும் பரிவு காட்டணும்
கன்னிமூல கணபதியே
காத்து இரட்சிக்கணும் கருணை காட்டணும்
பொன்னு பகவதியே அம்மா பொன்னு பகவதியே
காத்து இரட்சிக்கணும் பரிவு காட்டணும்
பொன்னு பகவதியே அம்மா பொன்னு பகவதியே
மாளிகை புறத்து மஞ்சம்மா
மாணிக்க பாதம் தஞ்சம் அம்மா
நெய் மணக்குது மெய்யிருக்குது சபரிமலையிலே
அய்யனே உந்தன் அழகைக் கண்டால்
பக்தி பிறக்குது உள்ளத்திலே ஞான சக்தி பிறக்குது உள்ளத்திலே
நெய்யபிஷேகம் செய்யும்போது
மெய் சிலிர்க்குது மலையிலே
தையினிலே உந்தன் சந்நதிகாண
உள்ளத்தில் ஆவல் பொங்கிடுதே (காத்து ரட்சிக்கணும்)
சத்தியமான பொன்னு பதினெட்டு படி பகவானே
சுவாமி பொன்னு பகவானே அய்யா பொன்னு பகவானே
ஷண்முகன் தம்பியே உந்தன் தரிசனம் கிடைக்கவேணுமே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
என்று சொல்லி நாங்கள் வந்தோமே
சங்கர மோகினி பாலனே உந்தன்
தரிசனம் தனைக்காண தயை புரிவாய் தேவனே
தயை புரிவாய் தேவியே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஐயப்ப சரணம் ஐயப்பா
=================================================================================================
அக்னி நட்சத்திரம். மணிரத்னத்தின் பிரபல படங்களில் ஒன்று. பிரபு-கார்த்திக் இனைந்து நடித்திருந்த படம்.
மௌனராகத்தைத் தொடர்ந்து இந்தப் படம் எடுத்து விடவேண்டும் என்று மணிரத்னம் விரும்பியிருந்தாலும், நாயகன் குறுக்கிட, முக்தா சீனிவாசனுக்காக அந்தப் படத்தை முடித்து விட்டு மறுபடி இந்தப் படத்துக்கு வந்து 87 ல் தொடங்கி 88 ல் முடித்திருக்கிறார்.
இருநூறு நாட்களுக்குமேல் ஓடிய படம். இந்தப் படத்தின் லைட்டிங் எபெக்டுகள் பெரிதாக பேசப்பட்டன. அறிமுகமான படம். இந்தப் படத்தின் பாடல்களையும் கர்னாடக சங்கீதத்தின் அடிபப்டையில் நன்றாய் அமைத்திருந்தார் இளையராஜா. இன்று அமிர்தவர்ஷினி ராகத்தில் அமைந்த 'தூங்காத விழிகள் ரெண்டு' பாடல். இது ஒரு நேயர் விருப்பப் பாடலும் கூட.
பாடல்களை வாலி எழுதி இருந்தார்.
தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
மாமர இலை மேலே மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே பூமகள் மடி மீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல் ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம் சேரும் நேரம் தீரும் பாரம்
தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று.....
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல் காதலில் அரங்கேறும் கலை அல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட மானுடம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும் தேகம் யாவும் கீதம் பாடும்
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார் வணக்கம்.
நீக்குஅறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது..
பதிலளிநீக்குதமிழ் வாழ்க..
வாழ்க வாழ்க தமிழ்
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குசத்தியமான பொன்னு பதினெட்டு படி பகவானே
பதிலளிநீக்குசுவாமி பொன்னு பகவானே
ஐயா பொன்னு பகவானே
ஷண்முகன் தம்பியே உந்தன் தரிசனம் கிடைக்க வேணுமே..
எல்லாருக்கும் நல்ல
புத்தி வர வேணுமே!..
வரும்.. வரும்..!
நீக்குதூங்காத விழிகள் ரெண்டு
பதிலளிநீக்குஉன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று..
ஸ்வாமியே
சரணம்
ஐயப்பா!..
ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹரசுதானே சரணம் சரணம்
நீக்குஆலிலை சிவப்பாக
பதிலளிநீக்குஅங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும்
நிலை என்னவோ...
--- வாலியின் மோகவலை வீசும் பாடல். எந்த கலாநேச நேயர் இந்தப் பாடலில் மயக்கம் கொண்டிருந்திருப்பார் என்று யோசிக்கிறேன்.
வரிகளே சுடுது!
நீக்குஅதுவும் பக்தி
பதிலளிநீக்குஇதுவும் பக்தி..
அதுவும் இதுவும்
நீக்குஎதுவாயிருந்தால் என்ன?..
மனம் மயக்கும் இந்தப் பாடல் வரிகளும் அதற்கு இசைந்து வரும் இசையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
வேகமாக வந்து திரை போட்டு விட்டீர்களோ!
நீக்குநீங்கள் போட்ட மூடுதிரையைத் தான் நான் மூடியும் மூடாமலுமான நிலையில் வைத்தேன். :))
நீக்கு//ஆலிலை சிவப்பாக...//
பதிலளிநீக்குதிருவிழாவுக்குப் போன ரெண்டு பேர் கதை தெரியுமா!..
தெரியாதே... எந்த ரெண்டு பேர்? எங்க? எப்போ?
நீக்குரொம்ப காலத்துக்கு முன்னால...
நீக்குஇரண்டாவது பாடல் எனக்கு பிடிக்கும், முதலாவது பாடல் வழக்கம் போலவே... சிறப்பான பாடல் ஜி.
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குகண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
பதிலளிநீக்குஒண்டொடி கண்ணே உள
காரணம்:
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ ?!
நீக்குஉள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
நீக்குகள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு...!
நன்றி.. நன்றி DD.
நீக்குஇரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்குமுதல் அடிக்கடி கேட்ட பாடல். கார்த்திகை, மார்கழி மாதம் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் ஒலிக்கும் இந்த பாடல்.
பதிலளிநீக்குவனொலியில் அடிக்கடி காலை கேட்ட பாடல்.
ஐயப்பா பாடலை விருப்ப வைத்தவர் வீரமணி அவர்கள்.
இரண்டாவது பாடலும் கேட்டு இருக்கிறேன். இனிமையான பாடல்.
// ஐயப்பா பாடலை விருப்ப வைத்தவர் வீரமணி அவர்கள். //
நீக்குஉண்மை. கூடவே பெங்களூர் ரமணி அம்மாளும்.
நன்றி கோமதி அக்கா.
ஆரபி ராகமோ முதல் பாடல் ஆரம்பம். திருவனந்தபுரத்தில் இருந்தப்ப கேட்டிருக்கிறேன்...அருமையான பாடல்.
பதிலளிநீக்குகீதா
ராகமாலிகை? எப்படியோ பாடல் நன்றாய் இருக்கும்!
நீக்குஇரண்டாவது பாட்டு மிகவும் பிடித்த பாட்டு என்ன அழகான ராகம்! நல்ல இசைஅமைப்பு. ரசித்துக் கேட்டதுண்டு இப்பவும் கேட்டேன் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குகீதா
ராகத்துல அழகில்லாத மோசமான ராகம்லாம் உண்டா என்ன?
நீக்குஅழகான ராகம்.... எஸ்.. ரொம்பவே அழகான ராகம் கீதா!
நீக்கு// ராகத்துல அழகில்லாத மோசமான ராகம்லாம் உண்டா என்ன? //
நீக்குசில ராகங்கள் நம் மனதுக்கு பிடித்துப் போகும். சில ராகங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். சில ராகங்கள் அதுபாட்டுக்கு போகும். முடிந்த உடன் அடுத்த ராகம் மனதுக்கு உற்சாகம் தரலாம்.. நம் மனதில் அமர்ந்த ராகங்கள், அல்லாத ராகங்கள்.. அப்படிதானே கீதா?!!
அதே அதே ஸ்ரீராம். ஹைஃபைவ் உற்சாகம் தரும் ராங்கள்...மனதை இதப்படுத்தும் ராகங்கள். அப்படி எல்லாம் இருக்கிறது. நம் மனசுல பசக்னு ஒட்டும் ராகங்கள் அதில் இதுவும் ஒன்று....இதம் சுகம் ராகமும் கூட.
நீக்குகீதா
இரண்டாவது பாடல் சூப்பர். இசையமைப்பு பாடல் வரிகள் (வாலியின் குறும்பு) படமாக்கப்பட்ட விதம் எல்லாமே அருமை. நேற்றுப் பார்த்த ஜோ படத்தில் இந்தமாதிரி பாடல்கள் இருந்திருந்தால் படம் பிச்சுக்கிட்டுப் போயிருக்கும்
பதிலளிநீக்குமணிரத்னத்தின் ஜனரஞ்சகமான படங்களில் ஒன்று. நடிப்பை விஜயகுமாரை அமெரிக்காவிலிருந்து அழைத்து வந்து நடிக்க வைத்தார்களாம்!
நீக்குஅக்னிநட்சத்திரம்.. மணிரத்னத்தின் அருமையான ஜனரஞ்சகப் படம். அப்போது ரசித்தது நினைவில். கார்த்திக் அபாரம்.
பதிலளிநீக்குஹிஹிஹி.. அமலாவை வுட்டுட்டீங்களே!
நீக்கு