பாக்யலக்ஷ்மி
துரை செல்வராஜூ
தீபாவளிப் பொழுதின் களேபரங்களும் வெடிச் சத்தங்களும் சற்றே ஓய்ந்திருந்தன..
முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்ட வரலக்ஷ்மி அறைக்குள் மெல்ல நுழைந்து , " என்னங்க!.." - என்றாள்..
காதருகில் மெல்லிய கிசுகிசுப்பை உணர்ந்ததும் சங்கர மூர்த்திக்கு விழிப்பு..
" தூங்கிட்டீங்களா... "
' அங்கே பிள்ளைகள்.. ' என்பதைப் போல் சங்கர மூர்த்தி - விழி காட்ட ,
" அவங்க ராத்திரி எல்லாம் ஆடிட்டு இப்போ நல்லா தூங்கறாங்க.. "
- கணவனின் கையைப் பற்றி கண்களில் ஒற்றியபடி மார்பில் சாய்ந்து கொண்டாள் வரலக்ஷ்மி..
" இந்த வருசம் தீபாவளி நல்லபடியா கொண்டாடியாச்சு..
பொழுதுக்கும் மளிகக் கடையில கூட்டுபுள்ளி போட்டு போட்டு நெஞ்சுக்கு மஞ்சளும் நெத்திக்கு குங்குமமும் கொடுக்கிற என் சாமி - நோய் நொடியில்லாம நீங்க நல்லாருக்கணும்.. உங்களால நாங்களும் நல்லாருக்கணும்!.. "
மெல்லிய புன்னகை இருவர் முகத்திலும்..
" இருபது வயசுல பார்த்த மாதிரியே இருக்கு!.. "
" இப்படிப் பேசிப் பேசியே எதிர்ப் பேச்சு இல்லாம பண்ணிடறீங்க.. "
" உள்ளதத் தானே சொல்றேன்.. "
" நானும் உள்ளத்தைத் தானே சொல்றேன்.. "
சங்கரமூர்த்தி வாய் விட்டுச் சிரிக்க - விரல் கொண்டு இதழ் மூடினாள் வரலக்ஷ்மி..
" சரி.. மத்யானத்துக்கு என்ன செய்றதா உத்தேசம்?.. "
" அது என்னமோ காய்கறி கலவை சாதமாமே.. பட்டை கிராம்பு முந்திரி மசாலா வதக்கி நெறய நெய்யும் தேங்காய்ப் பாலும் விட்டு சரிக்கு சரியா சோறாக்கறது... அன்னிக்கு ரேடியோவுல சொன்னாங்களாம்.. இன்னிக்கு அது செய்யப் போறேன்.. "
" உனக்கு யார் இதைச் சொன்னது?.. "
" மகேஸ் தான் கேட்டுட்டு சொன்னாள்... அவளுக்கு இதெல்லாம் ரொம்ப இஷ்டமா இருக்கு.. "
" புகுந்த இடத்த நல்லா பார்த்துக்குவாள்.. ன்னு சொல்றே!.."
" உங்க பொண்ணு இல்லையா.. அவகிட்ட அன்பும் அக்கறையும் பரிபூரணமா நெறஞ்சிருக்கு..."
" நல்லாத் தான் பேசறே லக்ஷ்மி.. "
" இப்போதைக்கு தவலை தண்ணி அடுப்புல வெச்சிருக்கேன்.. மறுபடியும் ரெண்டு சொம்பு ஊத்திக்கிட்டு சமைக்கணும்.. "
" அதெல்லாம் இன்னைக்கு கணக்கு இல்லை.. "
" அந்தக் கணக்கு புதுசா கல்யாணம் கட்டிக்கிட்டவங்களுக்குத் தான்!.. "
" நீ சொல்லிட்டா மீற முடியுமா!.. " நெற்றி முகட்டில் முத்து ஒன்று கிடைக்க - வரலக்ஷ்மியின் விரல்கள் மருதாணிச் சிவப்புடன் சங்கரனின் நெற்றியில் இழைந்து கொண்டிருந்தன..
" ஒன்னு சொல்ல மறந்துட்டேங்க... "
" என்னது!.. "
" அன்னிக்கு ஹெட்மாஸ்டர் பானுமதியம்மாவை மார்க்கெட்ல பார்த்தேன்.. "
" என்ன சேதியாம்?.. "
" எல்லாரையும் விசாரிச்சாங்க... மகேசை ஸ்கூலுக்கு அனுப்பலையே ன்னு ரொம்ப வருத்தம் அவங்களுக்கு.. "
" ம்.. "
" தலைக்கு தண்ணி ஊத்திட்டு ஸ்கூலுக்கு அனுப்பி இருக்கலாம்.. ரெண்டரை வருசம் ஆச்சி.. நல்லா படிக்கிற பொண்ணு.. இந்த மாதிரி பாதியில நிறுத்திட்டீங்களே.. ந்னு வருத்தப்பட்டாங்க... "
அமைதியாக இருந்தார் சங்கரன்..
".. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை.. பணம் கட்டி ஒரு பரிட்சை எழுதிட்டு மேல படிக்கலாம்.. எஸ்ஸெல்சி முடிக்கட்டும்.. ன்னு சொன்னாங்க.."
" அப்படியா!.. படிச்சுட்டு மேல என்ன செய்றதாம்?.. "
" அதான் படிச்ச பொண்களுக்கு எல்லாம் இப்போ சர்க்கார் ல வேலை தர்றாங்களாமே!.. " வரலக்ஷ்மியிடம் வியப்பு
" படிச்ச பொண்ணு சர்க்கார் வேலை பார்க்கிற பொண்ணு ந்னா அவளுக்கு பார்க்கிற மாப்பிள்ளையும் அந்த மாதிரியே இருக்கணும்.. வயக்காட்டு மாப்பிள்ளை சரிப்படுமா?.. "
" அவளுக்குன்னு ஒருத்தன் பொறந்து இருப்பான்.. பகவான் தான் எழுதி வெச்சிருப்பானே.. "
" சடங்கான பொண்ணைக் கட்டிக் காப்பாத்தி நல்லவனா ஒருத்தன் கையில ஒப்படைக்கிறது தான் லட்சணம்.. ன்னு சொல்லியிருக்காங்க!.. "
" லட்சணத்தோட லட்சணம் படிப்பும் ஒன்னு.. ன்னு நாம படிக்க வைப்போம்.. எனக்கு என்னமோ மகேசு மறுபடியும் படிக்கட்டும்ன்னு தோணுது.. "
" ஊரு உறவு.. என்ன சொல்லுமோன்னு இருக்கு லக்ஷ்மி.. "
" வாயில வந்ததெல்லாம் சொல்லுந்தான்.. அதுக்கெல்லாம் கவலப்பட்டா முடியுமா.. ரெண்டு நாள் ல அடங்கிடும்.. ஒன்னோட ஒன்னு ன்னு எல்லாம் கிளம்பிடும்.. "
" மகேஸ் மனசுல என்ன இருக்கோ?.. "
" மகேஸ் கற்பூரம் மாதிரி.. பானுமதியம்மா சொன்னது சரி ன்னு என் மனசுக்குப் படுது.. இருந்தாலும் எல்லாமே உங்க இஷ்டந்தான்.. "
சங்கர மூர்த்தியின் சிந்தனை நெற்றியில் தெரிந்தது..
" புள்ளைங்க எல்லாமே படிப்புல கெட்டி.. சரஸ் வெள்ளந்தியா இருந்தாலும் அவ போக்கு தனி.. நாலு வரிய ஒரு தரம் படிச்சிட்டா அப்படியே புடிச்சிக்கிறா... "
" நீ தானே பக்கத்துல இருந்து எல்லாம் பார்த்துக்கறே!.. "
" பெரியவனும் சின்னவனும் ஒருத்தனோட ஒருத்தன் போட்டி போட்டுக்கிட்டு கணக்கு போடுறானுங்க.. இந்த வீட்ல நான் ஒருத்தி தான் மக்கு.. மட சாம்பிராணி.."
" மட சாம்பிராணியா.. நீயா!.. " சங்கரமூர்த்தியிடம் வியப்பு..
" பெரியவன் விரல் விட்டு எண்றதுக்குள்ள சின்னவன் கூட்டுப் புள்ளிய சொல்லிடறான்.. அப்பாவுக்கு தப்பாத பிள்ளை.. விதை ஒன்னு போட சுரை ஒன்னா முளைக்கும்!?.. "
நாக்கைக் கடித்துக் கொண்ட வரலக்ஷ்மியின் கண்களில் புன்னகை ததும்பியது..
" என்ன ஒன்னு.. ஏதோ பயந்த கோளாறு மாதிரி நாலு நாளா சின்னவன் தூக்கத்துல உளர்றான்.. "
" சொல்லவேயில்ல நீ.. "
நானும் சாதாரணமாத் தான் நெனச்சேன்.. ஸ்கூல் பக்கத்துல புளியந் தோப்பு சரியில்ல ன்னு பேசிக்கிட்டாங்க.. ஏதோ பயந்திருப்பான் போல இருக்கு.. முனீஸ்வரன் கோயிலுக்குப் போய் முடிகயிறு மந்திரிச்சுப்
போட்டுட்டு வரணும்.. "
" அங்க தான் தை மாசம் பஞ்சாயத்து யூனியன்ல வாசக சாலை கட்டப் போறாங்களே.. சேட்டை மூட்டை எல்லாம் ஓடிப் போய்டும்.. "
" சேட்டை மூட்டை எல்லாம் எப்படியாவது போய்த் தொலையட்டும்!.. "
" சரி.. ஒரு நல்ல நாள்ல பானுமதியம்மாவைப் பார்த்து என்ன ஏதுன்னு நல்லா விசாரிச்சுட்டு வா... பணம் கட்டிடுவோம்.. எதுக்கும் மகேஸ் கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்க லக்ஷ்மி.. "
" மகேசைக் கேட்கிறதா!.. மறுபடியும் படிக்கிறியா.. ன்னு கேட்டதும் அவளுக்கு றெக்கையே முளைச்சிடும்!.. "
மகேஸ் மீண்டும் படிக்க இருப்பதில் வரலக்ஷ்மிக்குச் சிறகுகள் முளைத்தே விட்டன..
வரலக்ஷ்மியின் கண்களில் பரவசம்.. சங்கரனின் கன்னங்கள் ஈரமாகின..
கூந்தலில் இருந்த செவ்வந்திப் பூக்கள் சிரித்துக் கொண்டன..
***
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது..
பதிலளிநீக்குதமிழ் வாழ்க..
வாழ்க.
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வேண்டுவோம்.
நீக்குஇன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வரவு..
பதிலளிநீக்குவரவேற்கிறோம்.
நீக்குஇன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் கண் கவரும் ஓவியத்துடன் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகதை நன்று, துரை அண்ணா. உரையாடலை வாசித்து வரும் போது எங்கேனும் மகேஸின் கல்வி தடைபட்டுவிடுமோ என்று தோன்றியது. நல்லகாலம் தொடரப் போகிறது.
பதிலளிநீக்குபெண் கல்வி மிக மிக முக்கியம்.
//" ஊரு உறவு.. என்ன சொல்லுமோன்னு இருக்கு லக்ஷ்மி.. "//
இப்போதும் கூட பெண் கல்விக்கு ஊரில் எதிர்ப்பு இருக்கிறதா என்று யோசிக்க வைக்கிறது. அது போல சர்க்கார் வேலை என்பதும் யோசிக்க வைக்கிறது.
கீதா
இது சென்ற மாதத்தில் வெளியான (வரலக்ஷ்மி) கதையின் தொடர்ச்சி.. நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய களம்..
நீக்குபுரிந்தது துரை அண்ணா. வாசித்து முடித்து கருத்து போட்டதும் ஓ இது அந்தக் கதையின் தொடர்ச்சியோ என்றும் தோன்றியது.
நீக்குகீதா
கௌ அண்ணா, மகேஸ் படம் (பாஸ்போர்ட் சைஸ்!!!!!!!!) நல்லா வந்திருக்கு!
பதிலளிநீக்குகைகளின் கோணத்தைப் பார்த்ததும். கீழே இரு கைகளையும் கோர்த்துக் கொண்டு சினிமாவில் எல்லாம் நாணத்தில் பெண்கள் கையைப் பிசைவாங்களே??!!! - இந்தச் சொல் சரியா? தெரியலை - அப்படி இருக்குமோ....அப்படியான படத்தின் பாஸ்போர்ட் சைஸோ என்று ஹிஹிஹிஹி!!!!
கௌ அண்ணாவை ஓட்டி ரொம்ப நாளாச்சு!!!!
கீதா
:))) வரலக்ஷ்மி கதையில் வந்த அதே மகேஸ்வரி தான். வேறு உடை அணிந்து வந்துள்ளார் .
நீக்குஇது தீபாவளிக்கு எடுத்த வேறொன்று!..
நீக்கு:)))
நீக்குஅதே மகேஸ்வரின்னு தெரிந்துவிட்டது! ஹாஹாஹா வேறு உடை - அப்ப பிள்ளைக்கு தீபாவளிக்கு ரெண்டு மூணு ட்ரெஸ் வாங்கிருப்பாங்க போல!
நீக்குதுரை அண்ணா பிள்ளை ஒவ்வொரு உடையா போட்டு ஃபோட்டோ எடுத்துக்குது நம்ம கௌ அண்ணாகிட்ட!!!
கீதா
அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்..
நீக்குகதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//மகேஸ் மீண்டும் படிக்க இருப்பதில் வரலக்ஷ்மிக்குச் சிறகுகள் முளைத்தே விட்டன..//
மகேஸ்க்கு சிறகுகள் முளைக்கும் முன் வரலக்ஷ்மிக்கு சிறகு முளைத்து விட்டன் மகளிடம் சொல்ல போக வேண்டுமே!
அம்மா சொன்னதை கேட்டு மகேஸ்க்கும் சிறகுகள் முளைத்து பறந்து போய் தன் தோழிகளிடம் சொல்லி மகிழ்வார் என்று நினைக்கிறேன்.
தன் தாய் தந்தையருக்கு நன்றி சொன்ன பின் தான் தோழிகளை பார்க்க போவார்.
/// மகேஸ்க்கு சிறகுகள் முளைக்கும் முன் வரலக்ஷ்மிக்கு சிறகு முளைத்து விட்டன் மகளிடம் சொல்ல போக வேண்டுமே!.. ///
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..
மகேஸ் ப்டம் நன்றாக இருக்கிறது கெளதமன் சார். பள்ளி செல்ல தயார் ஆகி விட்டார் மகேஸ்.
பதிலளிநீக்குஇதுக்குள்ள ஏதும் ரகசியம் இருக்குமோ,!..
நீக்கு:)))
நீக்குபடிப்பு அவசியம் கதையின் உரையாடல் நன்று.
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கில்லர்ஜி .
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி..
அன்பின் கில்லர்ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ...
நீக்குகாலையிலேயே இந்தக் கதையை வாசித்தேன். நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஆனால் இதே பின்னணியில் கிட்டத்தட்ட இதே மாதிரி கதையை நான் படித்திருக்கிறேன் (துரை செல்வராஜு சார் எழுதி).
இருந்தாலும் கதை நன்று.
அதனால்தானோ என்னவோ முன்பே பகிர்ந்த ஓவியத்தை, நிறம் மாற்றி கௌதமன் சார் பகிர்ந்திருக்கிறாரோ?
நீக்குநெல்லை அவர்களது வருகையும் அன்பின்
கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..
கதை தொடருமோ என்றொரு கருத்தின் அடிப்படையில் உருவானது..
பதிலளிநீக்குஇந்தக் கருத்து வந்திருக்கலாம்.. பின்னணி புதிது..
மகிழ்ச்சி.. நன்றி..
பதிலளிநீக்கு@ அன்பின் நெல்லை..
/// இதே பின்னணியில் கிட்டத்தட்ட இதே மாதிரி கதையை நான் படித்திருக்கிறேன் (துரை செல்வராஜு .... எழுதி).///
நல்லவேளை வேறு யாருடையதாகவும் இல்லை...
பெண் கல்வியின் அவசியத்தை மிக இதமாக கூறியிருக்கும் கதை. கதை போல தோன்றவில்லை, நிஜமாக நிகழ்ந்த ஒரு நிகழ்வை பார்ப்பது போல கண் முன் விரியும் காட்சிகள்.
பதிலளிநீக்குஎளிய கருத்து சரளமான நடை. படிக்கப் பிடித்தது.
பதிலளிநீக்கு