வெள்ளி, 22 டிசம்பர், 2023

வெள்ளி வீடியோ : கன்னி மனசையும் காதல் வயசையும் சேத்து வச்சி யாரு தைச்சது..

 சீர்காழி கோவிந்தராஜன் பாடியுள்ள இந்த ரஞ்சனி ராக பாடல்தான் இன்றைய தனிப்பாடல்.

நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த
நீ தான் எனக்கருள வேண்டும் முருகா!
நீலத் திருமாலின் சிந்தை மகிழ் மருகா
சேவற்கொடி அழகாய் தாங்கி
நிற்கும் சண்முகா!
வேலினைக் கையில் ஏந்தும் வேலவனே
எழில் வேழ முகம் படைத்தோன் சோதரனே!
வேல் விழி குறமாதின் மணாளனே என்
சிந்தைக்கு உகந்தவனே கந்தனே குகனே!
நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த
நீ தான் எனக்கருள வேண்டும் முருகா!


=======================================================================================

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் (39) வெளியான படம் ராஜாதி ரோஜாக்கிளி.  ராஜேஷ், சுலக்ஷனா, நளினி, சுரேஷ் நடித்த படம்.  கவுண்டமணி இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறாராம்.

பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதி இருக்கிறார்.  இசை சந்திரபோஸ்.

இந்தப் பாடல் கே ஜே யேசுதாஸ் - ஜானகி இணைந்து பாடியுள்ள மென்மையான மெலடி.  பின்னணி இசையும் பாடலும் மனதை மெல்ல வருடும் வகைப்பாடல். 

ஓடையின்னா நல்லோட
ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்க கொழுந்தனுக்கு
சாந்து பொட்டு வைக்க வேணும்
தன்னன்னா தானே தன்னன்னா

ஓடையின்னா நல்லோட
ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்கப் பசுங்கிளிக்கு
சாந்து பொட்டு வைக்க வேணும்
தன்னன்னா தானே தன்னன்னா
தன்னன்னா தானே தன்னன்னா
​ 
ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே
வாச மல்லி வச்சி விடவா..
பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே
பூவாலே பாலம் கட்டவா
பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே
பூவாலே பாலம் கட்டவா..   (ஓடையின்னா நல்லோடை)

கன்னி மனசையும் காதல் வயசையும்
சேத்து வச்சி யாரு தைச்சது..
கன்னி மனசையும் காதல் வயசையும்
சேத்து வச்சி யாரு தைச்சது..
சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும்
நீதானே சேத்து வச்சது..
சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும்
நீதானே சேத்து வச்சது..

தன்னன்னா தானே தன்னன்னா
தன்னன்னா தானே தன்னன்னா
ஓடையின்னா நல்லோட
ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்க கொழுந்தனுக்கு
சாந்து பொட்டு வைக்க வேணும்
தன்னன்னா தானே தன்னன்னா

37 கருத்துகள்:

  1. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த
    நீ தான் எனக்கருள வேண்டும் முருகா!..

    முருகா..
    முருகா..

    பதிலளிநீக்கு
  4. நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த
    நீ தான் எனக்கருள வேண்டும் முருகா!..

    என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல்...

    எல்லாருக்குமான பாடல்...

    இப்படியான பாடல்களை இப்போது யார் எழுதுகின்றார்கள்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத ஆளிருக்கும்.  வெளியிடதான்  ஆள் இருக்காது!

      நீக்கு
  5. வேல் விழி குறமாதின் மணாளனே
    என்
    சிந்தைக்கு உகந்தவனே கந்தனே குகனே!..

    அடடா... அற்புதமே!..

    பதிலளிநீக்கு
  6. ஓடையின்னா நல்லோட
    ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை...

    எத்தனையோ முறை கேட்டு மகிழ்ந்த பாடல்..

    பதிலளிநீக்கு
  7. ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே
    வாச மல்லி வச்சி விடவா..

    அதான் ஏற்கனவே ஏலம் மணக்குதே..
    அப்புறம் எதுக்கு வாசமல்லி?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏலம் மணக்குதுன்னு கவிஞர் எழுத எழுத்த்தான், பின்னும் கூந்தலில் முந்திரி திராட்சை சேர்ந்து சடை பின்னும் ஐடியா வந்திருக்கணுமோ? கல்யாணத்துக்கு சடையை என்னமாதிரியெல்லாம் அலங்கரிக்கறாங்க

      நீக்கு
    2. ஏலம்னு சொன்ன பிறகுதான் சவுரி முடி தயாரித்து ஏலம் போட்டு விற்கிறார்களோ...

      நீக்கு
  8. ஓடையிலே பாடல் எவ்வளவோ காலத்துக்குப் பிறகு கேட்கிறேன்.

    சுலக்ஷணா, ராஜேஷ்.... ராஜேஷின் பல காணொளிகள் கேட்பதுண்டு. நிறைய விவரங்கள் அறிந்தவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  ஆசிரியர் இல்லையா?

      ராஜேஷ் என்றால் சட்டென எனக்குநினைவுக்குவ அறுவது பட்டு வண்ண ரோசாவா மற்றும் கைவீசம்மா வீசு பாடல்!

      நீக்கு
  9. நீல மயில் மீது... எனக்கு மிகவும் பிடித்த மனதுக்கினிய முருகன் பாடல்.

    பதிலளிநீக்கு
  10. யாருக்கு சாந்துப் பொட்டு வைக்க ஆசை?...

    இந்தப் பாடலில் சொல்லப்படும்
    கொழுந்தன் என்றால்
    கணவனின் உடன் பிறந்தவன். (மைத்துனன்)

    கொழுநன் என்றால் கணவன்.

    கொழுந்தனா,
    கொழுநனா?

    பாடும் அந்தப் பெண்ணே தீர்மானித்துக் கொள்ளட்டும்.

    பதிலளிநீக்கு
  11. திருத்தம்: ராஜாத்தி என்பது ராஜாதி என்று
    தட்டச்சுப் பிழையாகியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. ஜேசுதாஸ் குரலா?
    ஐயமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயமின்றி சொல்கிறேன், அவரேதான்.

      நீக்கு
    2. சத்தியமா யேசுதாஸ்.  என்னால் அடையாளம் காண முடியும்.  ஜெயச்சந்திரனும் எனக்கு பிடித்த பாடகர்.  ஆனால் அவர் குரல் வேறு.

      நீக்கு
  14. நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த
    நீ தான் எனக்கருள வேண்டும் முருகா!//

    மிகவும் பிடித்த பாடல். அடுத்தபாடல் கேட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. இன்று கேட்டேன், இனிமையான பாடல்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. முதல் பாடல் நிறைய கேட்டிருக்கிறேன். மிகவும் பிடிச்ச பாட்டு. ஸ்ரீராம் நீங்க இங்க பகிரும் பக்திப்பாடல்கள் எல்லாமே எங்க ஊர் ல கோயில்ல போட்டுக் கேட்டவை ஒருசில திருவனந்தபுரம் வீட்டருகில் இருந்த கோயிலில் போட்டுக் கேட்டிருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதைய பிரபல பக்தி பாடல்கள் எல்லாம் பொது இடங்களிலும் ஒலிபரப்பப் படுபவைதானே கீதா?

      நீக்கு
  16. இரண்டாவது பாட்டு ரொம்ப ரசித்த பாடல். அதி மென்மையான பாடல். இசையும் பிடித்த இசை....ஆமாம் நீங்க சொல்றாப்ல மனதை வருடும் பாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. இரண்டு பாடலும் கேட்டு ரசித்து இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!