சென்ற வாரம் கருத்துகளைப் பகிர்ந்த எல்லோருக்கும் நன்றி. பேய் பதில்களும், PAC பகுப்பாய்வும், முக்கியமான இடங்களைப் பெற்றிருந்தன.
புதன் கிழமைகளில் எல்லோருமே ரிலாக்சுடு மூடில், சந்தோஷமாக கருத்துப்பரிமாற்றங்கள் செய்வது சிறப்பான ஒன்று. நன்றி!
கீதா சாம்பசிவம் :
பேயோபால் பல்பொடி கடைகளில் சுலபமாக்கிடைக்குதா?
நீங்க காலம்பர எழுந்ததும் காஃபி குடிக்கும் பழக்கம் உண்டா?
& காபியில் கால் இருக்கு. பேய்க்கு அது சரிப்படாது. டீ யில கொம்பு இருக்கு அது வேணா பேய்களுக்கு சரிப்படலாம்!
ஆண், பெண் பேய்கள் உண்டு தானே? உங்களுக்குள் வித்தியாசம் உண்டா?
💀 பூவுலகில் ஏற்கெனவே பேய் குணங்களோடு வாழ்ந்தவர்கள் இங்கே அப்படியே நேர் எதிர் ஆகிவிடுவார்கள். அங்கே பேய் குண பெண்கள் இங்கே சாது ஆண் பேய்.
அங்கே பேய் குண ஆண்கள் இங்கே சாது பெண் பேய்!
அதே போல் அங்கே சாது --> இங்கே மோது.
இல்லைனா அங்கேயும் பெண் பேய்கள் சமத்துவம் பேசும் பேய்களா?
💀 அதெல்லாம் இங்கே 'நடக்காது!'
உங்களுக்குள் தலைவர்கள், சங்கம் இதெல்லாம் உண்டா?
💀 ஓ ! உண்டே! அங்கே பிறந்தநாள் கொண்டாடுவது போல இங்கே (பூமியில் )இறந்தநாள் - பேய்களுக்கு பிறந்தநாள். அவரவர்கள் பூமியில் இறந்தநாளில் இங்கே அவர்கள்தான் அந்தந்த ஊர் தலைவர்கள். பூமியில் அவர்கள் இறந்த திதியில் படைக்கப்படும் உணவுகளை நாங்கள் எல்லோரும் அரூபமாக, கூட்டமாகப் போய் அந்த உணவின் சத்தை மட்டும் உறிஞ்சிக்கொண்டு வந்துவிடுவோம்.
தலைவர் சொல்வதைத் தான் கேட்கணும்னு கட்டுப்பாடு உண்டா? சுதந்திரமாக அலைந்து கொண்டு இஷ்டத்துக்கு எங்கே வேண்டுமானாலும் போய்க் கொண்டு இருப்பீங்களா?
💀 ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு தலைவர். எல்லாம் அந்தந்த ஊரில் உள்ள அடர்த்தியான மரத்தில்தான் தொங்கிக்கொண்டிருப்பார். மற்றப் பேய்களுக்கு அவருடைய இருப்பிடத்தைப் பற்றி MMS (மானசீக மெசேஜ் செர்விஸ் மூலம் ) செய்தி அனுப்பிவிடுவார்!
எங்கள் எல்லோருக்கும் PEI_FI வசதி இருப்பதால், ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் எப்போதும் நடந்துகொண்டே இருக்கும்!
உங்களை வைச்சு நெடுந்தொடர்கள் எடுக்கிறாங்களே அவங்களைப் பத்தி என்ன நினைக்கறீங்க?
💀 அவங்க இங்கே வந்தவுடன் அவர்களைப் பழி தீர்ப்போம். அவர்கள் எடுத்த கொடுந்தொடர்களை அவர்களே தொடர்ந்து பார்த்து, போர் அடிச்சுப் போய் 'பைத்தியம் பிடித்த' பேயாக ஆகும்வரை விடமாட்டோம்!
நெடுந்தொடர்ப் பேய்கள் எல்லாம் உங்களைப்போல் தான் இருக்கா?
நடவடிக்கைகள், உருவங்கள் போன்றவற்றிலும், பழி வாங்குதலிலும்!
அதென்ன பேயாய் ஆகித் தான் பழி வாங்கணும்னு இருக்கீங்க? இல்லைனா பழி வாங்கக் கூடாதுனு சட்டமா?
💀 மனிதர்களை விட பேய்கள் நல்லவை. பேயுலகில் போட்டி, பொறாமை, ஏமாற்றுதல், பழிவாங்குதல் எதுவும் கிடையாது. பேய்களை சாக்காக வைத்துக்கொண்டு மனிதர்கள்தான் எல்லா தீச்செயல்களையும் செய்கின்றனர்.
பழிவாங்காமல் நல்ல பேய்களாக இருக்கக் கூடாதா? நல்ல பேய்கள், சமர்த்துப் பேய்கள் இருக்கு தானே?
💀 எல்லா பேய்களும் சமத்துப் பேய்கள்தான். நாங்கள் யாரையும் பழிவாங்குவதில்லை. மனிதர்களின் மனசாட்சிதான் அவர்களை வாட்டுகின்ற பேய்.
நீங்க பேயாகறதுக்கு முந்தி ஆணா, பெண்ணா?
💀 பேயாவதற்குமுன்பு ஆத்மா. ஆத்மாவில் ஆண் ஆத்மா / பெண் ஆத்மா கிடையாது. உயிரினங்களில் உள்ளே உயிராய் இருக்கின்ற ஜீவ அணுவுக்கு, ஆண் பெண் பேதம் கிடையாது.
ஆணாக இருந்தால் உங்க மனைவியோ, பெண்ணாக இருந்தால் உங்க கணவரோ இப்போப் பேயாக இருக்காங்களா?
💀 தெரியவில்லை. ஒருவர் உயிர் பிரிந்ததும் விட்டது சனியன் என்று மற்றவர் நினைத்திருந்தால், அதோடு அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நிரந்தரப் பிரிவுதான்.
அவங்களை உங்களுக்கு அடையாளம் தெரிஞ்சுக்க முடியுமா? இப்போவும் அங்கே பேயுலகிலும் சேர்ந்து டூயட் பாடிட்டு இருக்கீங்களா? இல்லைனா மனைவி பேய் கணவன் பேயைக் கண்டும், கணவன் பேய் மனைவி பேயைக் கண்டும் ஒளிஞ்சுக்கறீங்களா?
💀 சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்! மண்ணுலகில் கணவன் மனைவியாக வாழ்ந்த பெரும்பாலான தம்பதிகள் பேயுலகுக்கு வந்தால், ஒருவரை ஒருவர் தேடுவதில்லை! அவரவர்கள் சுதந்திரமாக, சந்தோஷமாக மிதந்துகொண்டு இருக்கிறார்கள்.
பேயுலகிலும் வெள்ளைப்புடைவை கட்டிக்கொள்ளும் பெண் பேய்கள், கொலுசு போடும் பெண் பேய்கள் அவற்றை வாங்கித் தந்தேஆகணும்னு கணவன் பேய்களைத் தொந்திரவு செய்யுதுங்களா?
💀 ஹா ஹா ஹா! ஆசைகள் எல்லாம் மண்ணுலகில்தான். இங்கே யாரும் எதற்கும் ஆசைப்படுவதில்லை. விருப்பு, வெறுப்பு இல்லாத உலகம் பேயுலகம்.
கீதா ரெங்கன் :
பேயாரிடம் கேட்டுச் சொல்லுங்க அவர்கள் சொசைட்டிலயும் ஈவ் டீசிங்க் உண்டா?
💀 அதெல்லாம் செய்தால் இங்கே காலை உடைத்து விடுவார்கள்!
கோபம், பொறாமை எல்லாம் உண்டா ?
💀 ஊஹூம் ! துளிக்கூடக் கிடையாது.
அவர்களுக்குள்ளும் பங்காளிச் சண்டை உண்டா? இல்லைனா இங்குள்ள பங்காளிகளிடம் குடிகொண்டு பயமுறுத்துவாங்களா ?
💀 அதெல்லாம் மனிதர்கள் கட்டிவிட்டக் கதைகள். பேயுலகில் எல்லாமே அப்பிராணிகள். அவரவர்கள் பதவி உயர்வு பெற்றால், தேவ பதவி பெற்று சொர்க்கம் சென்றுவிடுவார்கள். இங்கேயே சுற்றிக்கொண்டு இருப்பவர்கள் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். மீண்டும் மனிதப் பிறவி எடுக்க ஆசைப்படும் ஆத்மாக்கள் மட்டும், சீனியாரிட்டி படி, அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட பிறவி எடுக்க அனுப்பப்படுவார்கள்.
(💀💀பேய்க்குறிப்பு:: மேலே கூறியுள்ள பதில்கள் யாவும் வெவ்வேறு பேய்கள் சொல்லியிருக்கும் பதில்கள். ஒன்றுக்கொன்று முரணாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. சில பேய்கள் பொய் சொல்வதில் வல்லமை கொண்டவை. எந்தப் பேய் எந்த பதிலை பொய்யாகச் சொல்லி இருக்கின்றதோ அது அதுக்குத்தான் வெளிச்சம் ..... சாரி இருட்டு!)
வாட்ஸ் அப் கேள்விகள் :
பானுமதி வெங்கடேஸ்வரன் :
டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா போல வித்தியாசமான நடிப்பை வழங்கும் நடிகர்களோ, செம்பை வைத்தியநாத பாகவதர், மதுரை மணி ஐயர், மதுரை சோமு இவர்களைப்போல புது பாணியில் பாடும் பாடகர்களோ இப்போது ஏன் இல்லை?
கச்சேரிகளில் ஹம் பண்ணக்கூடாது என்பது மரபு. ஆனால் ம.மணி ஐயர் ராக ஆலாபனைகளில் ஹம் பண்ணுவார். அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.
# ஹம் கூடாது என்ற வரைமுறையெல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
"மக்கள் ஏற்றுக்கொண்டு ரசிக்கும் எதுவும் சாஸ்திரோக்தமாக ஆகிவிடும்" என பரதமுனி நாட்ய சாஸ்திரத்தில் குறிப்பிடுவதாகச் சொல்வார்கள்.
மதுரை மணி ஸ்டைல் அவரது உடல் ஆரோக்கியத்தால் மாற்றம் அடைய வேண்டிய நிர்ப்பந்தம் முன்னிட்டதாகும். அதை ரஞ்சகமாகச் செய்தது அவரது மேதமை.
# சிறுபான்மையினர் தம் இருப்பை அழுத்தமாக வெளிப்படுத்திக் கொள்ளவேண்டிய நிலை இருக்கும்தான்.
முதலில் காபி குடிப்பது நல்லதல்ல என்றார்கள். பின்னர் காபி உடலில் இருக்கும் கட்டிகளை கரைக்கும். இதய நோயாளிகளுக்கு நல்லது என்கிறார்கள்.
முதலில் தேங்காய் எண்ணெய் கொலஸ்ட்ரால் என்றார்கள், இப்போது அது நல்ல கொலஸ்ட்ரால் என்கிறார்கள்.
ஒரு காலத்தில் அரிசியும், கோதுமையும் ஒன்று என்றார்கள், இப்போது உயிரைக்குடிக்கும் கோதுமை என்கிறார்கள். எதை நம்புவது? எதை விடுவது?
$ ஆஸ்பிரின் மருந்தாக சாப்பிட்டால் உடல் வலி போக்கும், ஜுரம் தணியும், ரத்த அழுத்தம் குறையும். இப்படி நன்மை தானே என்று தினம் கால் கிலோ சாப்பிட முடியுமா என்ன?
காபியும் அளவாகக் குடிக்கும் போது நன்மையும், அதிக அளவில் எடுத்துக்கொண்டால் தீமையும் பயக்கலாம்.
முதலில் கொலெஸ்டெரால் என்பதே தீங்கு என்றுதான் நினைத்தார்கள். பின்னர் ரத்தக்குழாய்களில் படிந்து அவற்றின் குறுக்களவைக் குறைக்கும் வகையைத் தீங்கு என்றனர் சரிதானே.
அரிசி எவ்வகையதாயினும் சுமார் 70 % கார்போஹைட்ரேட் ஆகும் கோதுமையும் ஏறத்தாழ அதே அளவிலிருந்தாலும் அரிசியில் இல்லாத களுட்டோன் தீமை பயக்கும் என்கின்றனர். இது தவிர மைதா செய்யும்போது உபயோகப்படும் கெமிக்கல்களை சரியாகப் பிரித்தெடுக்காவிடில் கேன்சர் வரலாம் என்கிறார்கள்.
=============================================
P A C
=====
குழந்தை பிறக்கிறது.
அது பிறந்த நேரத்திலிருந்து உலகை ஐம்புலன்களினாலும் உணர்ந்துகொள்கிறது.
பசி என்றால் அழுகை. ஏதேனும் அசௌகரியம் உணர்ந்தாலும் அழுகை. சந்தோஷமாக, மனது நிறைந்திருந்தால் சிரிப்பு, விளையாட்டு.
வீட்டிற்குள் வளரும் நாட்களில் எல்லாம் பெற்றோர்தான் அதன் உலகம். பெற்றோர் என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், ஒவ்வொரு நிலையிலும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை கண்ணும், காதும் வீடியோ எடுத்து அதனுடைய ஆழ் மனதுக்கு அனுப்பிவிடுகின்றன.
பிறந்ததிலிருந்து, வீட்டிற்குள் வளர்கின்ற இந்த நாட்களில் அந்தக் குழந்தையின் ஆழ் மனதில் பதியப்படும் நிகழ்வுகள் எல்லாமே அந்தக் குழந்தையின் 'பெற்றோர் மனநிலை' பதிவுகள்.
பிற்காலத்தில், அந்தக் குழந்தை ஒரு தந்தையாகவோ அல்லது தாயாகவோ நடந்துகொள்ளப்போகும் நடத்தைக்கு இந்தப் பதிவு மிக முக்கியமான சமாச்சாரம்.
பல விஷயங்களை அப்படியே தன் பெற்றோர் கண்ணோட்டத்திலேயே, கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டு அதையே தானும் பின்பற்றி, தன்னுடைய குழந்தைகளுக்கும் அறிவுறுத்தக்கூடும். 'மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும்', 'பெரியவர்கள் சொன்னால் கேட்டு அதன்படி நடந்துகொள்ளவேண்டும்', போன்றவைகளை உதாரணத்திற்குச் சொல்லலாம்.
சில பதிவுகள், அந்தக் குழந்தை வீட்டிற்கு வெளியே, பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் நாட்களிலும், நண்பர்களின் அல்லது மற்ற உறவினர்களின் இல்லங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளிலுமிருந்து தன் பதிவுகளை மாற்றிக்கொள்ளும் அல்லது புதுப்பித்துக்கொள்ளும் நிலை ஏற்படலாம்.
அந்தக் குழந்தையின் ஆழ்மனதில் உள்ள 'பெற்றோர் மனநிலை' என்ன என்பதை ஓரளவு தெரிந்துகொள்ள இயலும். ஆனால், அதை மாற்றுவதற்கு முயற்சிகள் எதுவும் செய்யாதீர்கள். சும்மா தெரிந்துகொள்ளுங்கள். எதிர்காலத்தில் அவர்களே தன்னுடைய பதிவுகளை அவர்களின் முனைப்போடு மாற்றிக்கொள்வார்கள். நீங்கள் மாற்ற முற்பட்டால், அவர்களின் உள்மனதில் பதிந்திருக்கும் 'பெற்றோர் மனநிலை' குழப்ப நிலை அடையக்கூடும். contaminated parent and adult என்ற நிலையை அடையக்கூடும்.
பத்து வருடங்களுக்கு முன்பு நான் இப்போது இருக்கும் அபார்ட்மெண்ட் பகுதியில் ஒரு மூன்று வயது சிறுவனைப் பார்த்திருக்கிறேன். கையை, (இல்லாத செல் ஃபோனை) காதுக்கு அருகில் வைத்துக்கொண்டு - ஆக்ரோஷமாக கையை ஆட்டிக்கொண்டு முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு, நோ நோ என்று கத்திப் பேசிக்கொண்டு இருந்தான்.
அவனுடைய தந்தை (நான் பார்த்ததில்லை) இதே போன்று ஃபோனில் பேசுபவராக இருப்பார் என்று என் அனுமானம்.
இப்போவும் வெளியே அந்தப் பையன் கிரிக்கட் ஆடுகிறான். அதே போன்று உரத்த குரல், imposing attitude ! நான் பால்கனிக்குச் சென்று அவனை கவனித்தால், நாம் கவனிப்பது தெரிந்தால் உடனே புன்னகையோடு மென்மையான குரலில் மற்றவர்களிடம் பேசுகிறான்!
அவனுடைய ஆழ் மனதில் பெற்றோர் / பெரியவர்கள் என்றால் arrogant ஆக இருக்கவேண்டும் என்று பதிவாகியுள்ளதோ என்னவோ!
பதிவு மிக நீளமாகிவிட்டது.
அடுத்த வாரம் தொடர்வோம்!
=============================================
இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, நட்பேயார் (கீதாக்கா அழகா பெயர் சூட்டியிருக்காங்க!!) ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்.
பதிலளிநீக்குநட்பேயாரின் படங்களோ...பார்க்க வருகிறேன்....நேற்றுத்தானே பங்களூர் வந்தேன் எனவே வீட்டுப் பணிகள்...அப்புறம் புதிதாகச் சேர்ந்திருக்கும் பணி எல்லாம் போய் வந்த பின் வருகிறேன்.
கீதா
காலை வணக்கம் கீதா ரெங்கன். வாங்க.. வாங்க...
நீக்குமீண்டும் வருக!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.. வாங்க.. வாங்க...
நீக்குகாலை வணக்கம்.
நீக்குவந்திருக்கும் பேயாருக்கும் , அன்பு ஸ்ரீராம் ,கீதா எஸ்,கீதா ஆர், கௌதமன் ஜி
நீக்குஎல்லொருக்கும் இனிய காலை வணக்கம்.
மிக ரசிக்கும்படியான கேள்விகள் பதில்கள். வெகு சுவாரஸ்யம்.
அடுத்த வாரம் பேயாரின் படங்களைப் போடுங்கள்.
மணி ஐயர் எப்படிப் பாடினாலும் ரசிக்கலாம்னாத தனு மனிசம் அவரை மாதிரி யார் பாடமுடியும்.
உண்மைதான். நாம் விதைக்கும் விதை மகன் மகள் என்னும் விருக்ஷமாகிறது.
நாம் ஒழுங்காக இருந்தால் அவர்களும் இருக்கு சான்ஸ் உண்டு.
நன்றி, வல்லிசிம்ஹன் !
நீக்கு//மணி ஐயர் எப்படிப் பாடினாலும் ரசிக்கலாம்னாத தனு மனிசம் அவரை மாதிரி யார் பாடமுடியும். //
நீக்குநாத தனுமனிசம் மட்டுமா? 'எப்போ வருவாரோ..' தாயே யசோதா எல்லாமே அவருடைய மாஸ்டர் பீஸ்கள் இல்லையா? எனக்கு கர்னாடக சங்கீதத்தில் ஆர்வம் வந்ததே அவருடைய பாடல்களை கேட்டுத்தான். லைவாக அவருடைய கச்சேரியை கேட்டதில்லையே என்று ரொம்ப வருத்தம்.
// எனக்கு கர்னாடக சங்கீதத்தில் ஆர்வம் வந்ததே அவருடைய பாடல்களை கேட்டுத்தான். லைவாக அவருடைய கச்சேரியை கேட்டதில்லையே என்று ரொம்ப வருத்தம்.// ஆம், எனக்கும் ஏழாம் கிளாஸ் படித்த சமயத்தில், மதுரை மணி ஐயரின் பாடல்களைக் கேட்டு, கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் வந்தது. ராகம் கண்டுபிடிக்க, அவருடைய பாடல்களை மட்டுமே டெம்ப்ளேட் ஆக வைத்து, முதலில் கற்றுக்கொண்டேன். கானடா (சுகி எவ்வரோ ராம ) , தோடி (தாயே யசோதா ), காம்போதி (காணக் கண் கோடி) , மோகனம் (கபாலி)
நீக்குஆகிய ராகங்கள்தான் நான் முதலில் கண்டுபிடிக்கத் தெரிந்துகொண்ட ராகங்கள். எனக்கும் அவருடைய கச்சேரியை நேரில் கேட்டு அனுபவிக்க இயலவில்லையே என்கிற வருத்தம் உண்டு. 8.6.68 அன்று அவர் மறைந்த செய்தியை ரேடியோவில் கேட்டு கண்ணீர் விட்டேன்.
அவருடைய பாடல்களிலே என்னுடைய ஆல்டைம் பேவரைட் கௌடமல்லாரி. இன்று காலை கூட ஐந்தரை மணிக்கு அந்தப்பாடலுடன்தான் இணைய பக்கத்தை ஆரம்பித்தேன்.
நீக்குகீதாக்காவின் முதல் இரு கேள்விகளுக்கான பதில்கள் செம செம செம...மிகவும் ரசித்தேன் ஹையோ!! அசாத்தியமான பதில் அதுவும் கால் கொம்பு என்று என்ன அழகான பதில்!! நட்பேயார் கூட செம திங்கிங்க் போல!! புத்திசாலிப் பேயார்!!!
பதிலளிநீக்குஇந்த பதில்கள் பேயார் படத்துடன் கண்ணில் பட்டுவிட்டதால் பதில் கொடுக்காமல் போக முடியலை...அப்புறம் வருகிறேன்...
கீதா
சுக்ரியா, சுக்ரியா!
நீக்குசுக்கு டீ யா?
நீக்குஎங்களைக் கிண்டல் செய்தால், உங்க கனவுல வந்து, வெள்ளைக்கொடி ஆர்பாட்டம் செய்வோம். ஜாக்கிரதை, கபர்தார், monitum, אזהרה, etc !!
நீக்குஅடப்பாவிப் பேயே! இலத்தீன், ஹிப்ரூ மொழியில் எல்லாமா எச்சரிக்கை செய்வாய்? ரொம்பக் கஷ்டப்பட்டு, அதெல்லாம் என்ன பாஷை என்று கண்டுபிடித்தேன், பன்மொழிப்பேயே !
நீக்குஹாஹாஹாஹா! நான் திருச்சினு தெரிஞ்சு வைச்சிருக்குமோ? பன்மொழிப் புலவர் இருந்த ஊராச்சேனு அதுவும் பல மொழியில் சொல்லி இருக்கு! திட்டாதீங்க! புத்திசாலிப் பேய்!
நீக்குஆனாலும் பேய்க்கு நீங்க ரொம்பத்தான் இடம் கொடுக்குறீங்க!
நீக்குஹா ஹா ஹா ஹா ஹா ஹா...
நீக்குசுக்ரான் ஜஸ்ஜீலான்!!!!!! பேயாரே!
கௌ அண்ணா இந்தப் பேயாருக்கு ப் பல மொழிகள் தெரியுது போல!!!! அப்ப இங்க நல்லாவெ உலாவட்டும். நாமளும் அதுங்கிட்ட மொழி எல்லாம் கத்துக்கலாம்..!! (ஃபீஸ் எதுவும் கொடுக்க மாட்டோம். எங்களுக்கு ஸ்பான்ஸர் பண்ற சாமியார் லீவ எஞ்சாய் செஞ்சுட்டுருக்கார். அவர் வந்ததும் அவரிடம் வாங்கிக்கோங்க!!)
கீதா
இன்றைய பதிவிலிருந்து பல நல்ல தகவல்களை அறிய முடிந்தது. நன்றி...!!
பதிலளிநீக்குவாங்க பாரதி... நன்றி.
நீக்குபா(ரா)ட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா!
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குவணக்கம், வாழ்க வளமுடன்!
நீக்குகேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//மனிதர்களின் மனசாட்சிதான் அவர்களை வாட்டுகின்ற பேய். //
அருமையான பதில்.
//சில பதிவுகள், அந்தக் குழந்தை வீட்டிற்கு வெளியே, பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் நாட்களிலும், நண்பர்களின் அல்லது மற்ற உறவினர்களின் இல்லங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளிலுமிருந்து தன் பதிவுகளை மாற்றிக்கொள்ளும் அல்லது புதுப்பித்துக்கொள்ளும் நிலை ஏற்படலாம்.//
எப்படி அதிக கவனம் செலுத்தி வளர்த்தாலும் வெளி உலகமும் சில மாற்றங்கள் தரும் என்பது உண்மை.
ஆம். adult நிலைதான் பெரும்பாலானவர்களுக்கு போதி மரம். வீட்டுக்கு வெளியே கற்பவைகள்தான் நிராந்தரமான வழிகாட்டி. கருத்துரைக்கு நன்றி.
நீக்குவந்திருக்கும் நண்பர்களுக்கும் இனி வரப்போகும் நண்பர்களுக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். பேயாருக்குச் சிறப்பு வரவேற்பு!
பதிலளிநீக்குவணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள், நன்றி!
நீக்குநாம பாட்டுக்கு விளையாடிட்டு இருக்கோம், பேயார், நட்பேயார்னு! நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவே வந்துட்டா என்ன செய்வோம்?
பதிலளிநீக்குகௌதமன் சார், அடுத்த வாரம் கூட பதில் கொடுக்கலாம். :)
பதில் நான் கொடுப்பவை அல்ல! பேயார் சங்கப் பிரதிநிதிகள் கொடுப்பவை!
நீக்குOK! OK :)))))
நீக்குI'm OK, You are OK! Pei NOT OK!
நீக்குபேயார் பத்தின கேள்விகளுக்கு பதில் சொன்ன அனைத்துப் பேயார்களுக்கும் மனமார்ந்த நன்றி. காஃபி குடிக்காத பேயார் இருப்பது மனசுக்கு வருத்தமா இருக்கு! :)
பதிலளிநீக்குஹ ஹ ஹ ! பொய் சொல்லும் பேய் சொன்ன பதிலாகவும் இருக்கலாம்! ஆவி பறக்கும் காபியைப் பார்த்தால் ஆவிகள் பறந்து வந்து சுவைக்கும் என்றுதான் நானும் நினைக்கிறேன்.
நீக்குபேயார் பொய்யெல்லாம் சொல்லுவாரா என்ன?
நீக்கு// பேய்க்குறிப்பு:: மேலே கூறியுள்ள பதில்கள் யாவும் வெவ்வேறு பேய்கள் சொல்லியிருக்கும் பதில்கள். ஒன்றுக்கொன்று முரணாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. சில பேய்கள் பொய் சொல்வதில் வல்லமை கொண்டவை. எந்தப் பேய் எந்த பதிலை பொய்யாகச் சொல்லி இருக்கின்றதோ அது அதுக்குத்தான் வெளிச்சம் ..... சாரி இருட்டு!)
நீக்கு//
வலப்பக்கம் கீழே கையைக் கட்டிக்கொண்டு இருக்கும் பேயார் கோபத்தில் இருக்காரா? வருத்தமா இருக்காரா? எல்லோரும் ஒண்ணு போல இருப்பதால் எப்படி அடையாளம் வைச்சுக்கறது? குழப்பமா இருக்கே! :)
பதிலளிநீக்குஅவர் பல் கொட்டிப் பேய் போலிருக்கு! பல்லு இல்லாததால் பல்பொடி பற்றிய கேள்விக்கு முறைக்கிறார்!
நீக்குபல்கொட்டிப் பேய் பயங்கரமா வேலைகள் செய்வாரே! அவரைப் போகச் சொல்லிடுங்க! பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும்! எங்கே அப்பாதுரை? பல்கொட்டியைக் கூப்பிடுங்கப்பா! :P
நீக்குMMS உபயோகப்படுத்தும் அளவுக்கு நவீன தொழில் நுட்பம் தெரிந்த பேயார் இருப்பது சந்தோஷமாயும், ஆச்சரியமாயும் இருக்கு. இதை உபயோகப்படுத்திக் கொண்டு எனக்கும் ஒரு எஸ்.எம்.எஸ். கொடுக்கணும் பேயாரே!
பதிலளிநீக்குஅந்தப் பேயார் சொல்லியிருப்பாது பேய்ஃபை வழியில் மானசீகமாக அனுப்பப்படும் செய்தி. அபிவாதயே மந்திரத்தில் எப்படி முப்பாட்டனார் தொடங்கி குலம் கோத்திரம், எல்லாம் சொல்லப்பட்டு பெயர் குறிக்கப்படுகின்றதோ அது போல, அந்தந்தப் பேய்க்கு ஒரு மானசீக மௌனபேசி எண் இருக்கும்போலிருக்கு! நமக்கு இதெல்லாம் புரியாது.
நீக்குhaiyaa! jolly! peyfi kuda irukka?
நீக்கு/எனக்கும் ஒரு எஸ்.எம்.எஸ். கொடுக்கணும் // - இப்போ எனக்குப் புரிந்துவிட்டது. அப்படி எஸ்.எம்.எஸ் கொடுக்க உங்களுடைய நம்பரை அது கேட்கும்போதுதான் நீங்க பயந்து ராத்திரி கத்தறீங்க போலிருக்கு. இனிமே கையில் ஒரு பேப்பரில் நம்பரை எழுதிவச்சுக்கிட்டு அதை நீட்டிக்கொண்டே தூங்குங்க.
நீக்குஹா ஹா ஹா இது நல்ல ஐடியா !
நீக்குஅருமையான பேய் நடமாட்டம்.
பதிலளிநீக்குநன்றி! ஜாலியான பேய்கள் ஆட்டம் போடுகின்றன!
நீக்கு//அவங்க இங்கே வந்தவுடன் அவர்களைப் பழி தீர்ப்போம். அவர்கள் எடுத்த கொடுந்தொடர்களை அவர்களே தொடர்ந்து பார்த்து, போர் அடிச்சுப் போய் 'பைத்தியம் பிடித்த' பேயாக ஆகும்வரை விடமாட்டோம்//
பதிலளிநீக்குஇந்த திட்டம் என்னிடமும் இருக்கிறது ஜி நான் மேலே போய் ஏற்பாடு செய்வேன்.
பே மு க சார்பில் நன்றி ஐயா!
நீக்குகேள்வி பதில் ரசிக்கும்படி இருந்தது (பேய்க் கேள்வி பதில்கள் தவிர).
பதிலளிநீக்கு//அரிசியும், கோதுமையும் ஒன்று என்றார்கள், // - அரிசி கோதுமையைவிட கார்ப் அதிகம், சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று சொல்லக் காரணம் - 50+ வயசுக்கு மேல, 2 சப்பாத்தியே சாப்பிட மாட்டாங்க ஒரு வேளைல. அதிகமாப் போனா 3. கடிச்சு, மெதுவா சாப்பிடணும். ஆனா அரிசி சாதம்னா, அவுக் அவுக்னு முழுங்கறதுனால, அளவுக்கு அதிகமா சாப்பிடுவாங்க, கார்ப் அதிகமாயிடும்.
இந்த 'ஆட்டா மாவு' பிராண்டெல்லாம் கண்ட கண்டதைக் கலக்குவதால், நல்லதில்லை என்பது என் அபிப்ராயம். ஒரு சில கடைகளில் நல்ல கோதுமையை அரைத்துத் தருகிறார்கள்.
// கேள்வி பதில் ரசிக்கும்படி இருந்தது (பேய்க் கேள்வி பதில்கள் தவிர).// நாங்கள் உங்கள் கனவில் வந்து வெள்ளைக்கொடி ஆர்பாட்டம் செய்வோம்! எங்க உலகில், வெள்ளைக்கொடி = எதிர்ப்பு, கருப்புக்கொடி = சமாதானம்.
நீக்கு//உங்கள் கனவில் வந்து வெள்ளைக்கொடி ஆர்பாட்டம் செய்வோம்!// - இதுல என்ன பிரயோசனம்? நாந்தான் கண்ணாடி அணிந்து தூங்குவதில்லையே. நீங்க வந்தாலே எனக்கு கண்ணுக்குத் தெரியாது. கண்ணாடி போட்டால்தான் தெரியும். இதுல கொடியாம், வெள்ளையாம், கருப்பாம்...ஆஹா ஹா.
நீக்குரசனையே இல்லை நெல்லையாருக்கு! விடுங்க பேயாரே! நாம ஜாலியாப் பேசிப்போம். எம் எம் எஸ் கொடுங்க. பதில் கொடுக்கிறேன்.
நீக்கு//வெள்ளைக்கொடி ஆர்பாட்டம் செய்வோம்!// இருட்டு கறுப்பா இருக்கிறச்சே வெள்ளை எப்படித் தெரியாமல் போகும்?
நீக்கு//வெள்ளை எப்படித் தெரியாமல் போகும்?// - என்னத்த பேயைப் பார்த்தீர்களோ கீசா மேடம். பேய் எப்போதும் வெள்ளை நிற டிரஸ் அணியும், கால் இருக்காது, மிதந்துவரும் என்ற பேசிக் விஷயம்கூடத் தெரியலையே உங்களுக்கு. அப்போ வெள்ளைக்கொடி காண்பித்தால் உங்களுக்கு எப்படித் தெரியும். ஐயோ ஹையோ...
நீக்குபேய் வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு கையிலும் வெள்ளை நிறக்கொடியைத் தூக்கிக் கொண்டு வருவது எனக்குத் தெரிஞ்சுடும்! மிதந்து வந்தால் என்ன?பறந்து வந்தால் என்ன? அந்த முழி, கோரைப்பற்கள், கீழே பறக்கும் வெண்ணிற ஆடை! மேலே பறக்கும் வெண்ணிறக் கொடி! ஆஹா! என்ன அழகான பேயார்!
நீக்குசும்மா சொல்லக்கூடாது பேய்கள் செம தெளிவு. எந்த பந்தை போட்டாலும் அடிக்கின்றனவே..!🤗🤗
பதிலளிநீக்குநன்றி! பேய்கள் ஆடவந்தால் ..... பந்தடிக்கும் சாமர்த்தியங்கள்!
நீக்குமனுசனா இருக்குற வரைக்கும் மயக்கம் தான்..
நீக்குபேயாய் போய் விட்டால் இல்லையொரு தொல்லை..
தெளிவோ தெளிவு தான்...
அதனால் தானே ஆடையும் (!) வெள்ளையோ வெள்ளை..
அட! நல்ல கற்பனை!
நீக்குI am OK, you are OK போன்ற உளவியல் சம்பந்தப்பட்ட கொஞ்சம் ட்ரையான விஷயத்தை இவ்வளவு எளிமையாகவும், ஸ்வாரஸ்யமாகவும் விளக்கியிருப்பது யாராக இருந்தாலும் அவர் ஒரு சிறந்த ஆசிரியர் ஆவதற்கான எல்லா தகுதிகளும் நிரம்பியவர். மனமார்ந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்குசம்பந்தப்பட்ட ஆசிரியர் கவனிக்க வேண்டுகிறேன்! அவர் சார்பில் என் நன்றி!
நீக்குஹா....ஹா....ரசனை.
பதிலளிநீக்குநன்றி!
நீக்குநான் கேட்ட கேள்விக்கு முழுவதுமாக பதில் அளிக்கவில்லை. மணி ஐயரை பற்றி மட்டும் கூறி டபாய்த்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குபதில் அளித்த ஆசிரியர், மதுரை மணி ஐயரின் ரசிகர். அவர்தான் எனக்குள் சிறிய வயதில் கர்நாடக சங்கீத ரசனையை விதைத்தவர். மதுரை மணி ஐயர் பற்றிய கேள்வியைப் படித்தவுடன் கேள்வியின் மற்றப் பகுதிகளை விட்டுவிட்டார்!
நீக்குஅடுத்த வாரத்திற்கான கேள்வி: பெர்ஃபெக்ஷனிஸ்ட்களிடம் அல்லது அப்படி நினைத்துக் கொள்கிறவர்களிடம் மாட்டிக்கொண்டு முழித்திருக்கிறீர்களா?
பதிலளிநீக்குபதில் அளிக்கிறோம்.
நீக்குபுங்க மரத்தில் தொ(த)ங்கியிருந்ததில் பொழுது போனதே தெரியவில்லை..
பதிலளிநீக்குஏன் என்ன ஆச்சுதாம்?..
புளிய மரம் எத்தனை?.. முருங்க மரம் எத்தனை?...ன்னு கணக்கெடுக்க வேணுமில்லா!...
என்ன பத்து நாளு கழிச்சா?...
போன மாசம் தூங்கப் போன பேய் இப்பதான் வந்துருக்கு..
விடிஞ்சதும் கல்யாணம் .. புடிடா பாக்கு வெத்தலை..ன்னு ஒரே களேபரம்..
ஒண்ணுமே புரியல ஒலகத்துல! என்னவோ நடக்குது, மர்மமா இருக்குது! ஸ்ரீராம் help மீ!
நீக்குஇந்தக் கேள்வியை நான் சாய்ஸில் விடுகிறேன்!!!
நீக்குஅட ராமா!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி (பேயார் பற்றிய) பதில்கள் அருமை. வரவர நம்மிடையே பேயார் பற்றிய பயம் போய் நகைச்சுவை உணர்வுகள் நிறைய வந்து விட்டன. வார வாரம் பேயாருக்குதான் பயங்கள் அதிகமாகும் போலிருக்கிறது. "நம்மைப் பற்றி இன்னும் எப்படியெல்லாம் விவரிப்பார்களோ" என அடுத்த வார கவலை கொண்டு இருக்கும்.
பல நல்ல அறிவார்ந்த விஷயங்களும் அறிந்து கொண்டேன் இன்றைய பதிவு ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி! கருத்துக்கு நன்றி, பாராட்டுக்கு நன்றி!
நீக்குஅதே போல் அங்கே சாது --> இங்கே மோது.//
பதிலளிநீக்குஇந்த் பதிலைப் படித்த்தும் சிரித்து முடியலை நட்பேயாரே!!!
அது சரி நீங்கல்லாம் சிரிச்சா எப்படி இருக்கும்னு நினைச்சுப் பார்க்கிறேன்....அடுத்த முறை ஒரு படம் போடுங்களேன் உங்கள் கூட்டம் எப்படிச் சிரிக்குதுனு!! அதான் பேய்கள் கொட்டம்னு நீங்களே தலைப்பு வைச்சுட்டீங்க...கொட்டம் அடிக்கட்டும் ஜாலியாத்தான் இருக்கு
கீதா
உங்களுக்குப் பிடிக்குது. ஆனால் நெல்லைத்தமிழன் பல்லை நற நற என்று கடித்து, கிர்ர்ர்ர்ர் என்கிறாரே! அடுத்த வாரம் பௌர்ணமி நேரம். பேய்கள் எல்லாம் வெளியில் வர பயந்து பதுங்கி இருக்கும். அதனால் பேய்கள் ஆட்டம் போட வராது.
நீக்குஅதெல்லாம் இங்கே 'நடக்காது!' //
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா அதானே அப்படியே பஞ்சு பறப்பது போல பறந்துக்கிட்டே இருப்பீங்கதானே இல்லையா நட்பேயாரே!!?
கீதா
ஓ ! உண்டே! அங்கே பிறந்தநாள் கொண்டாடுவது போல இங்கே (பூமியில் )இறந்தநாள் - பேய்களுக்கு பிறந்தநாள். அவரவர்கள் பூமியில் இறந்தநாளில் இங்கே அவர்கள்தான் அந்தந்த ஊர் தலைவர்கள். பூமியில் அவர்கள் இறந்த திதியில் படைக்கப்படும் உணவுகளை நாங்கள் எல்லோரும் அரூபமாக, கூட்டமாகப் போய் அந்த உணவின் சத்தை மட்டும் உறிஞ்சிக்கொண்டு வந்துவிடுவோம்.//
பதிலளிநீக்குஹா ஹா ஹா செம பதில் ரொம்பவும் ரசித்தேன்....இங்கு இறந்த நாள் அங்கு பிறந்த நாள் அட!! அட அட!! பின்றீங்க பேயாரே!!!
//(மானசீக மெசேஜ் செர்விஸ் மூலம் ) செய்தி அனுப்பிவிடுவார்!
எங்கள் எல்லோருக்கும் PEI_FI வசதி இருப்பதால், ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் எப்போதும் நடந்துகொண்டே இருக்கும்!//
கற்பனை அபாரம். ச்சே அப்ப இந்த உலகை விட அந்த உலகம் செமையா இருக்கும் போல!!!!!! ஒரு அடர்த்தியான மரம் ஒன்னு ஃபிக்ஸ் பண்ணி வைச்சுட வேண்டியதுதான். பேயாரே ரொம்பப காஸ்ட்லியோ?!!!! ரியல் மர்ரேட் எப்படி அங்கு?
அது சரி மரம் எல்லாம் பூமியிலதானே? அங்கு எப்படி மரம் எல்லாம்???!!
கீதா
அவங்க இங்கே வந்தவுடன் அவர்களைப் பழி தீர்ப்போம். அவர்கள் எடுத்த கொடுந்தொடர்களை அவர்களே தொடர்ந்து பார்த்து, போர் அடிச்சுப் போய் 'பைத்தியம் பிடித்த' பேயாக ஆகும்வரை விடமாட்டோம்!//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹ் ஆ ஹையோ சிரிச்சு முடிலப்பா...முடியல ஜாமீயீயீயீயீய்...ஹோ ஜாமி னு சொல்லிட்டா பேயார் வரமாட்டாரோ?!!!!!!!!!!!!!
பேயாரே உங்களுக்கும் சாமி எல்லாம் உண்டா?! உங்க சாமி பெயர் என்னவோ? இங்கு மாதிரி எக்கச்சக்க சாமிகள் எல்லாம் உண்டா?
கீதா
மனிதர்களை விட பேய்கள் நல்லவை. பேயுலகில் போட்டி, பொறாமை, ஏமாற்றுதல், பழிவாங்குதல் எதுவும் கிடையாது. பேய்களை சாக்காக வைத்துக்கொண்டு மனிதர்கள்தான் எல்லா தீச்செயல்களையும் செய்கின்றனர். //
பதிலளிநீக்குஅட்டகாசமான பதில்!!!! செமை! கரீக்டு..
மனுஷங்க நீங்க செஞ்சுட்டு எங்க மேல பழி போடுறீங்கனு உங்க கோர்ட்ல கேஸ் கூடப் போட்டுருக்கீங்களாமே? உங்க கோர்ட் எல்லாம் எப்பூடி..இங்கு போல நீதி வழங்க டைம் எடுக்குமா இல்லை அரசன் அன்றே கொல்வான் போலவா?
கீதா
மனசாட்சிதான் வாட்டும் பேய்//
பதிலளிநீக்குயெஸ்ஸு யெஸ்ஸு....அட்டகாசமான பதில்!!
// ஜீவ அணுவுக்கு, ஆண் பெண் பேதம் கிடையாது. //
ஜூஊஊஊஊப்பர்!!!
ருவர் உயிர் பிரிந்ததும் விட்டது சனியன் என்று மற்றவர் நினைத்திருந்தால், அதோடு அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நிரந்தரப் பிரிவுதான். //
ஒருவரை ஒருவர் தேடுவதில்லை! அவரவர்கள் சுதந்திரமாக, சந்தோஷமாக மிதந்துகொண்டு இருக்கிறார்கள். //
//விருப்பு, வெறுப்பு இல்லாத உலகம் பேயுலகம். //
சூப்பரோ சூப்ப்பர்!! பூவுலகை விட பேயுலகு செம ஜாலி போல!!!!!!!!!!!!!!
கீதா
இங்கே காலை உடைத்து விடுவார்கள்! //
பதிலளிநீக்குஹலோ காலே இல்லைனு சொல்லிட்டு அதென்ன காலை உடைத்துவிடுவார்கள்!!?? நு பதில் பேயாரே திடீரென்று போன ஜென்ம நினைவு வந்துருச்சா...ஈவ் டீசிங்ல கால் உடைஞ்ச கதை உண்டோ?!!ஹா ஹா ஹாஹ்
நம்ம கேள்விக்குப் பதில் உரைத்த பேயாரே ரொம்ப தேங்கஸ்...
கீதா
பங்காளிச் சண்டை க்கான பதில் செம!! சூப்பர்!..நல்ல கற்பனை...பேயாரே உங்க கூட்டத்துல சொல்லி பேசாம ஒரு ப்ளாக் தொடங்கிடுங்க! என்ன சொல்றீங்க!! ரைட்டுதானே இம்புட்டு அழகான கற்பனை.
பதிலளிநீக்குகீதா
ஒன்றுக்கொன்று முரணாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. சில பேய்கள் பொய் சொல்வதில் வல்லமை கொண்டவை. எந்தப் பேய் எந்த பதிலை பொய்யாகச் சொல்லி இருக்கின்றதோ அது அதுக்குத்தான் வெளிச்சம் ..... சாரி இருட்டு!)//
பதிலளிநீக்குஹையொ ஹையோ பேயாரே இப்பத்தானே உங்க உலகத்துல சூதுவாது கிடையாது அப்பாவி நு சொல்லிட்டு இப்படிச் சொல்லிருக்கீங்க. அப்பப்ப உங்களுக்கு உங்க போன ஜென்மத்து நினைவு வந்துருது போல...!!!!!!!!!!!!!!!!!!
கீதா
பேயார் காஃபி குடிக்க மாட்டாரா உடான்ஸு! நான் தினமும் காபி குடிக்கும் போது பேயார் காபியிலிருந்து வெளியேறுவதைப் பார்க்கிறேனே!! ஹிஹிஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
மதுரை மணி ஸ்டைல் அவரது உடல் ஆரோக்கியத்தால் மாற்றம் அடைய வேண்டிய நிர்ப்பந்தம் முன்னிட்டதாகும். அதை ரஞ்சகமாகச் செய்தது அவரது மேதமை.//
பதிலளிநீக்குபுதிய தகவல் இது.
கீதா
மிகவும் பிடித்த பாடகர்கள் மூவருமே...
நீக்குகீதா
அவனுடைய ஆழ் மனதில் பெற்றோர் / பெரியவர்கள் என்றால் arrogant ஆக இருக்கவேண்டும் என்று பதிவாகியுள்ளதோ என்னவோ! //
பதிலளிநீக்குகண்டிப்பாகக் குழந்தைகளுக்குப் பெற்றோரின் செயல்பாடுகள், பேச்சுகள் மனதில் பதிவதுண்டு. அதில் சிலர் சிந்திக்கும் பருவம் வரும் போது தங்கள் பெற்றோர் செய்வது சரியில்லை என்று தெரிந்தால் அவர்களிடமே சொல்லுவதுண்டு அல்லது தாங்கள் அதைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்று தங்களைப் பக்குவப்படுத்தியும் கொள்கிறார்கள். தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து கற்கும் பாடம் எது செய்யக் கூடாது என்பது எது செய்ய வேண்டும் என்பதும்.
அதற்குத்ததானே பெற்றோர் அட்வைஸ் செய்வதை விட நல்ல உதாரணமாக இருத்தல் நல்லது என்று சொல்லப்படுவது.
யெஸ் கண்டிப்பாக அண்ணா. இப்படி உள் மனதில் பதிந்த ஒன்று அப்புறம் வெளியுலகில் மற்றவர்களுக்காக அந்த சமயம் மட்டும் மாற்றிக் கொள்வது என்பது ஒரு சிலருக்கு கான்ஃபிளிக்ட் மைன்ட் என்று உருவாகும் வாய்ப்பு உண்டு. ஒரு சில குழந்தைகள் பெற்றோரின் துணையுடனோ அல்லது வெளி அனுபவந்த்தினாலோ அல்லது சுயமாகவோ தங்களைத் தானே சுய பரிசோதனை செய்து கொண்டு பக்குவமடைகிறார்கள். தங்கள் சிந்தனைகளில் தெளிவாக இருக்கிறார்கள்.
கான்ஃபிளிக்ட் மைன்ட் பற்றிப் பேச நிறையவே இருக்கிறது. அது எப்படி ஒருவரது பெர்சனாலிட்டியைப் பாதிக்கும் என்று....ஆனால் அது கொஞ்சம் இங்கிருந்து டிவியேட் ஆகிவிடுமோ என்பதால் சொல்லவில்லை...
அருமையான PAC பதிவு கௌ அண்ணா.
கீதா
நன்றி கீதா ரெங்கன்.
நீக்கு