வெள்ளி, 12 ஜூலை, 2019

வெள்ளி வீடியோ : மாதுளம்பழம் போல் கன்னம்.... கலை மன்மதன் வழங்கிடும் சின்னம்



வணக்கம் பலமுறை சொன்னேன் 
சபையினர் முன்னே தமிழ்மகள்  கண்ணே  
கொண்ட பண்பாடு மறவாத பெண்மை 
எங்கள் தென்னாட்டின் காக்கும் மென்மை 

மேலை நாடெங்கும் விஞ்ஞானக்  கலைகள் 
அங்கு விளையாடும் அலங்கார நிலைகள் 
அங்கு பெண்ணில்லை பேசும் கண்ணில்லை 
என்ன அலங்கோலமோ என்ன புதுமோகமோ 

வண்ணத்திலகங்கள் ஒளிவீசும் முகங்கள் 
எங்கள் திருநாட்டுக் குலமாதர் நலங்கள் 
அன்புத் தெய்வங்கள் இன்பச்செல்வங்கள் 
ஆடும் கலையாகுமோ பாடும் தமிழாகுமோ 

அன்னை தாய்ப் பாலைப் பிள்ளைக்குக் கொடுத்து 
அன்புத்தாலாட்டுப் பாட்டொன்று படித்து 
காணும் அழகென்ன தேடும் சுகமென்ன 
சொல்ல மொழியில்லையே பேச விலையில்லையே 


அவன் ஒரு சரித்திரம்.  1977 பொங்கலுக்கு வெளியான படம்.  சிவாஜி கணேசன், மஞ்சுளா, காஞ்சனா நடித்த திரைப்படம்.  



கண்ணதாசன் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை.  மாலையிட்டான் ஒரு மன்னன் என்று டி எம் எஸ் வாணி ஜெயராம் பாடலும், அம்மானை அழகுமிகும் பெண்மானை என்கிற டி எம் எஸ் சுசீலா பாடலும், ஆக இன்னும் இரண்டு நல்ல பாடல்கள் படத்தில் உண்டு. 



ஆபோகி ராகத்தில் அமைந்த பாடல்.  (சரிதானே கீதா ரெங்கன்?)  மேல்நாட்டிலிருந்து வரும் பெண் நவநாகரீகமாக இருப்பாள் என்று விருந்துக்கு வந்த அனைவரும் பப்பர பப்பரப் பாப்பா என்று ஆட,  தமிழ்ப்பெண்ணாய் புடைவை கட்டி வந்து வணக்கம் சொல்கிறார் காஞ்சனா!   ஆனாலும் இதில் சிவாஜிக்கு ஜோடி காஞ்சனா கிடையாது.  மஞ்சுளா!



இந்தப் பாடல் டி எம் எஸ்ஸும் வாணி ஜெயராமும் பாடிய பாடல்.  அதிகம் பேர் இந்தப் பாடலைக் கேட்டிருக்க மாட்டார்கள்!  இந்தப் பாடல் என்ன ராகம் என்று கீதாதான் சொல்ல வேண்டும்!!  மோகனமோ?!!









மாலையிட்டான் ஒரு மன்னன் அங்கு  
மயங்கி நின்றாள் ஒரு அன்னம் 
கெட்டிமேளங்கள் முழங்குது வானம் 
மழை மேகங்கள் பொழியுது கீதம் 

மாதுளம்பழம் போல் கன்னம் 
கலை மன்மதன் வழங்கிடும் சின்னம் 
இன்பத்தேன்மலர் தூவிய மஞ்சம் 
சுகம் தேடும் பாவையின் நெஞ்சம் 

மாணிக்கத் தாரகை நிலவினிலே 
எங்கும் மங்கலம் இசைத்திடும் தென்றலிலே 
தேரினில் தேவன் ஊர்வலமே 
அந்தத் தேவியின் வாழ்வினில் காவியமே 

ஆயிரம் கம்பனின் பாடல் 
அதில் ஆனந்தத் தோகையின் ஆடல் 
அந்தப் பாடலில் பிறந்தது ராகம் 
அவள் ஆடலில் வளர்ந்தது மோகம் 
ஊஞ்சலில் உள்ளங்கள் உறவாடும் 
வரும் ஊடலில் லீலைகள்  சதிராடும்
காதல் தருவது சொந்தம் 
இனி காலம் யாவும் உங்கள் சொந்தம் 



70 கருத்துகள்:

  1. இசையாய் தமிழாய் என்றும் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பலமுறை சொன்னேன்....!!!

      நீக்கு
    2. ஓ! ஸ்ரீராம் நீங்களும் பல முறை சொல்லிட்டீங்களா!! அதான் இங்க இன்னும் எதிரொலிச்சுக்கிட்டே இருக்கு!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இனி வர இருக்கும் நட்பு உறவுகளுக்கும் நல்வரவு துரை ஸார்.

      நீக்கு
    2. வந்திருப்போர் அனைவருக்கும், வரவேற்ற துரைக்கும் இனி வரப்போகும் நண்பர்களுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. வாங்க ..கீதாக்கா.... நல்வரவும் வணக்கமும்.

      நீக்கு
  4. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம். வணக்கம் வணக்கம் பல முறை சொல்கிறேன் இங்கு எல்லோருக்கும்!

    ஆஹா இன்று கீதாக்காவுக்கு மிகவும் பிடித்த ஜிவாஜி படப் பாடலா!!!!!!!!!!!!!!!!!!!!!!

    அருமையான பாடல் ஸ்ரீராம்...நிறைய கேட்டிருக்கிறேன்...

    என்ன அழகான ஆபோகியில் வணக்கம் வணக்கம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் பலமுறை சொன்னேன்..
    அழகிய இந்தப் பாடலை நேற்று கேட்டுக் கொண்டிருந்தேன்...

    கருத்தாழம் மிக்க வரிகள் கவியரசருடையது...

    அங்குப் பெண்ணில்லை..
    பேசும் கண்ணில்லை..

    என்று சொல்லியிருப்பார் கவியரசர்..

    கண் பேச வேண்டும் ..
    என்ன பேச வேண்டும்?..
    எதைப் பேச வேண்டும்?..
    எப்படிப் பேச வேண்டும்?..

    சுட்டும் விழிச்சுடர்.. என்கிறார் மகா கவி..

    கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல...
    என்கிறார் வள்ளுவர்...

    கவியசரின் பாடலுக்குள் இன்னும் மூழ்கலாம்..

    பதிலளிநீக்கு
  6. இரண்டாவது பாடலைக் கேட்கிறேன் ஸ்ரீராம்....மாலையிட்டான் மன்னன் கேட்ட நினைவு இருக்கு ஸ்ரீராம். எல்லாம் இலங்கை வானொலி உபயம் அப்போது...

    சொல்கிறேன் ஸ்ரீராம் ராகம் இனிதான் கேட்கணும்...

    கேட்டுவிட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலையிட்டான் ஒரு மன்னன் ராகமாலிகை ஸ்ரீராம். இருங்க ஒவ்வொன்றாகக் கேட்டுவிட்டு வருகிறேன். சொல்கிறேன்..

      கீதா

      நீக்கு
    2. வாங்க... மெதுவா வந்து சொல்லுங்க...!

      நீக்கு
  7. இந்தப் பாடலின் பாடல்கள் அத்தனையும்
    அத்துப்படி...

    அம்மானை அழகுமிகும் பெண்மானை..
    கவியரசருக்குக் கட்டியம் கூறும் பாடல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப்படத்தின் பாடல்கள் அத்தனையும்... சரியா?

      கொஞ்சம் டாகுமெண்டரி போல இருக்கும் படம்!

      நீக்கு
    2. ஆனாலும் படம் வெற்றி பெற்றது ..

      நீக்கு
  8. இந்தப் பாடலை, "வணக்கம், பலமுறை சொன்னேன்." பாடல் அதிகம் கேட்ட பாடல். ஆனால் ஜிவாஜி மஞ்சுளாவின் பேத்தியோடு நடிச்சிருப்பது தான் தெரியாது. படம் என்னனு தெரியாமலேயே பாடலை ரசிச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  9. மேளமும் நாயனமுமாக
    மெல்லிசை மன்னர் இசைவிருந்து படைத்த படம்.... ரசிகர்கள் திக்குமுக்காடிப் போனார்கள்...

    எளிய இனிய வார்த்தைகளில்
    தித்திக்கும் சந்தம்...

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் பலமுறை - பாடலில்
    நடன (!) மணிகள் கான்கிராஸ் கொடி பார்டர் போட்ட சேலை கட்டியிருப்பார்கள்..

    அப்போது வெகுவாகப் பேசப்பட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்சியை பிரபலப்படுத்தும் சிறுமுயற்சி போல! ஆனால் பாடல் நடனமணிகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக இருக்கும்!

      நீக்கு
    2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      நல்ல கானம். பார்க்காமலயே கேட்கலாம்.

      வணக்கம் பலமுறை சொன்னேன் பாடலையும், அம்மானை
      பாடலையும் நிறைய கேட்டிருக்கிறேன்.

      கீதாமா சொன்னது போல பேத்தி மஞ்சுளாவுடன் சிவாஜியை
      என்னால் அவ்வளவு ரசிக்க முடியாது.
      நாங்கள் தம்பி திருமணத்துக்கு உம்மிடி பங்காரு தி.நகர் கடைக்குப் போன
      போது, திருமங்கல்யம் தேர்ந்தெடுக்க நேரம் வந்துவிட்டது.
      இந்தம்மா, வந்ததும் எங்களை த்ராட்டில் விட்டு அவர் சென்று விட்டார்.
      இவர் வாங்குவதாக இருந்த வைரம் கிடைக்க நேரம் ஆனது.

      உடனே வெளியேறி வேறு கடைக்குப்
      போய்விட்டோம்.

      வாணி ஜயராம் , டி எம் எஸ் குரல்களை வெகுவாக ரசிக்கலாம்.
      நல்ல தமிழ். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. சாந்தி நிலையத்தில் சின்னப் பெண்ணாக சோடாபுட்டிக் கண்ணாடியுடன் மஞ்சு இதே காஞ்சனாவுடன்!...

      ரிக்‌ஷாக்காரனில்
      ஆனிப் பொன் தேர் கொண்டு
      மாணிக்கச் சிலையொன்று..
      என்று எம்ஜாருடன்!....

      திடீரென்று ஒருநாளைக்கு
      அழகிய தமிழ் மகள் இவள் -
      என்று அந்தப் பாடலை
      ஸ்ரீராம் டாக்கீஸ்..ல் போட்டு விட்டால் என்ன கதியாகும்!?..

      ஆள வுட்டுடுங்க சாமியோ!....

      நீக்கு
    4. //சாந்தி நிலையத்தில் சின்னப் பெண்ணாக சோடாபுட்டிக் கண்ணாடியுடன் மஞ்சு இதே காஞ்சனாவுடன்!// ஆமாம், "கடவுள் ஒரு நாள்" பாடலில் கூட வருவார். எம்ஜாரோடு இப்படஈஈஈஈஈஈஈஈப் பார்த்தது தான். படமெல்லாம் பார்க்கலை. ஜிவாஜியோடும் பார்க்கலை நல்லவேளையா!! கொடுமை!

      நீக்கு
  11. தலைப்பைப் படித்ததும்,

    அன்பு நடமாடும் கலைக் கூடமே ஆசை மழை மேகமே

    பாடல்தான் மனதில் ரீங்காரமிடுது. மாலையிட்டான் ஒரு மன்னன் பாடலும், அம்மானை பாடலும் நிறையதடவை காதில் விழுந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...

      அப்போ 'வணக்கம் பலமுறை சொன்னேன்' பாடல் காதில் விழுந்தது இல்லையா?

      நீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  13. மல்லிகை முல்லை பூப்பந்தல்..
    மரகத மாணிக்கப் பொன்னூஞ்சல்..

    என்று இன்னுமொரு பாடல்..
    அன்பே ஆருயிரே என்ற படம்..

    படத்தைத் தூக்கிப் போட்டு விடலாம்...
    கண்களை மூடிக் கொண்டு பாடலை ரசிக்கலாம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ... துரை ஸார்... லிஸ்ட்டில் அந்தப் பாடல் இருக்கிறது....

      நீக்கு
    2. இன்னொரு பாடலும் உங்களுக்கு...

      காதல் ராஜ்ஜியம் எனது.. அங்குக்
      காவல் ராஜ்ஜியம் உனது..

      மன்னவன் வந்தானடி - படப்பாடல்..

      நீக்கு
    3. ஹையோ... ஹையோ... இதுவும் நீண்ட நாளாய் லிஸ்ட்டிலிருப்பதுதான். அதே படத்தில் சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்...

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  15. பலமுறை கேட்டு ரசித்த பாடல்கள் ஜி

    பதிலளிநீக்கு
  16. பாடல்கள் இரண்டும் நன்றாக இருக்கிறது. கேட்டு மகிழ்ந்தேன்.
    வணக்கம் பலமுறை சொன்னேன் பாடல் அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.
    அடுத்த பாடல் கேட்டு பல வருடம் ஆச்சு.
    மீண்டும் நினைவு படுத்தி கொண்டேன் கேட்டு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா. மாலையிட்டான் ஒரு மன்னன் பாடல் பெரும்பாலும் எதிலும் வருவதில்லை. வாணி ஜயராம் குரல் நன்றாயிருக்கும்.

      நீக்கு
  17. இரண்டு பாடல்களையும் பலமுறை கேட்டுள்ளேன்... நல்ல பாடல்கள்...

    பதிலளிநீக்கு
  18. 'வணக்கம் பலமுறை சொன்னேன்...' பாடல் பலமுறை கேட்டிருக்கிறேன். 'மாலையிட்டான் ஒரு மன்னன்...' பாடல் இப்போதுதான் கேட்டேன். என்னை அவ்வளவாக கவரவில்லை.

    பதிலளிநீக்கு
  19. நமக்கும் பாட்டுக்கும் வெகுதூரம். இரண்டுபாடல்களும் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் அருமை. இரு பாடல்கள் சேர்ந்தாற்போல ஒரே நாளில் வ(த)ருவது நன்றாகத்தான் இருக்கிறது. ஒன்றை கேட்டிராவிட்டாலும் மற்றொன்று கேட்டு ரசித்திருப்பதாக சொல்ல வாய்ப்பு தருவதற்கு நன்றி.

    இந்தப்படம் கேள்விபட்டுள்ளேன். பார்த்த நினைவு இல்லை. எல்லா பாட்டுக்களும் சிலோன் ஒலிபரப்பி அடிக்கடி கேட்டுள்ளேன் இதில் மஞ்சுளா, சிவாஜி பாடும் பாடல் நினைவுக்கு வரவில்லை. இப்போதுதான் முழுமையாக கேட்டேன்.மஞ்சுளா பெரிய மூக்கு கண்ணாடி அணிந்து சிவாஜியுடன் ஒரு பாடல் வரும். இது அதுவென்று நினைத்து விட்டேன். அது எந்த படமோ?

    முதல் பாட்டு பொதிகையிலும் (ஒளியும், ஒலியும்) அடிக்கடி கேட்டுள்ளேன். "வணக்கம் பலமுறை சொன்னேன்." பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது.இனிமையான குரல் வளம். காஞ்சனாவின் அழகு என மிகவும் ரசித்து கேட்டு முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல். (அந்த தாக்கத்தினால்தான் இன்னமும் "வணக்கம்" என்னிடம் அழுத்தமாக அமர்ந்து விட்டதோ என்னவோ...ஹா ஹா ஹா. ) இனிய பாட்டுக்களை ரசித்து, ரசிக்க தந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... எப்போதும் இரண்டு பாடல்கள் ​போடுவதில்லை. எப்போதாவது இப்படி.

      இந்தப் படம் நான் தஞ்சையில் பார்த்தேன். பெரிய சுவாரஸ்யமில்லை. அதாவது அப்போது சிவாஜி ரசிகர்களான நாங்கள் எதிர்பார்த்த சரக்கு அதில் இல்லை.

      மூக்குக்கண்ணாடியுடன் மஞ்சுளா வரும் படம்தான் அன்பே ஆருயிரே.. மல்லிகை முல்லை பாடலும், பட்டணத்து மாப்பிள்ளைக்கு பாடலும் அதில்... அந்தக் காலத்தில் A முத்திரை வாங்கிய படம்.

      நன்றி அக்கா.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      ஆகா.. அந்த பாடலையும் அழகாக நினைவு படுத்தியமைக்கு நன்றி. அந்தபடமும் பார்த்ததில்லை. அப்போதெல்லாம் பொதுவாக நிறைய படங்கள் பார்த்ததில்லை. "மல்லிகை முல்லை" என்ற அந்த பாடல் அவ்வப்போது கேட்டுள்ளேன். ஓ.அது ஏ முத்திரை பெற்ற படமா? இந்த காலத்து படங்கள் முத்திரை இடாமலே, முத்திரை வாங்கும் படங்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  21. ஸ்ரீராம் மாலையிட்டான் ஒரு மன்னன் பாடல் இப்பத்தான் நல்லா நிதானமாகக் கேட்டேன். காலைல முடியலை. ஹரிகாம்போஜி ராகம் ஆரம்ப வரிகள்..... சரணத்தில் தன் தன் மகள்களாகிய சஹானா மற்றும் த்வஜாவந்தியை கொஞ்சம் தழுவித் தட்டிச் செல்கிறது!!!!!!!! கொஞ்சம் ...

    சரணத்தில் ஆண் பாடுவதில் கடைசி இருவரிகளிலும் பெண் பாடும் தேரினில் தேவன் ஊர்வலமே அந்த இரு வரிகளிலும் த்வஜாவந்தி தழுவல்...

    அதுவும் ஆரம்ப இசையில் கொஞ்சம் த்வஜாவந்தி லேசாக எட்டிப் பார்ப்பதால் எனக்குக் குழப்பமாக இருந்தது. இப்பத்தான் ஆராம்சே கேட்டு இதோ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது யாரு?..
      ஆராம்சே சேட்டு!?..

      நீக்கு
    2. மதுவந்தி எட்டிப்பார்க்கலையா? என்னவோ சொல்றீங்க..ஹரிகாம்போஜி, சஹானா, ரஹானா என்று... அடுத்த சுதா ரகுநாதன் நீங்கதான்.

      நீக்கு
    3. // அடுத்த சுதா ரகுநாதன் நீங்கதான்//

      சதா சர்ச்சை ரகுநாதன் இங்கே எதற்கு!

      நீக்கு
    4. //சதா சர்ச்சை ரகுநாதன் இங்கே எதற்கு!// - நீங்க எங்கேயோ போறீங்க ஏகாந்தன் சார்... வேற டக்குனு யாரும் நினைவுக்கு வரலை. மத்தவங்களைச் சொன்னால் (எம்.எல்.வி...போன்ற மூவரி) தவறாயிடுமோன்னு நினைத்தேன்.

      பாவம் சுதா ரகுநாதன். அவருடைய கர்நாடக இசையை மட்டும் ரசிப்போம். மற்றபடி 'சர்ச்சை'களை நினைக்கவேண்டாம். அது நமக்குச் சம்பந்தமில்லாதது.

      நீக்கு
    5. ஓஹோ... ஹரிகாம்போதியா? சரி சரி... நெல்லை மதுவந்தி ராகம் என்றால் நந்தா என் நிலா என் நினைவுக்கு வரும்!

      நீக்கு
    6. ஸ்ரீராம்... நான் மதுவந்தி என்று சொன்னபோது ராகம் நினைவுக்கு வரலை. ஒய்.ஜி. மகேந்திரன் பெண் பெயர் மதுவந்தி என்று படித்த ஞாபகம். என் இசைப் புலமை அவ்ளோதான்.

      நீக்கு
  22. ஆஹா. ஒரு சொல்லானாலும் திருச்சொல்.
    பாடல்கள் அத்தனையும் ரசிக்கலாம் ஒன்றையும் பார்க்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் அம்மா... பார்க்கலாமே... அவ்வளவு மோசம் இல்லை!!

      நீக்கு
  23. ..வண்ணத்திலகங்கள் ஒளிவீசும் முகங்கள்
    எங்கள் திருநாட்டுக் குலமாதர் நலங்கள் ..

    கனவுக்காட்சிபோல் இன்று தோன்றுகிறதே கண்ணதாசா...




    பதிலளிநீக்கு
  24. இனிய காலை வணக்கம்.

    பாடல் கேட்டதுண்டு. படம் பார்த்ததில்லை ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!