வெள்ளி, 5 ஜூலை, 2019

வெள்ளி வீடியோ : தத்துப்பிள்ளை இவனைக் கண்டேன்.. தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்

1990 இல் வெளியான பிளாக்பஸ்டர்  படம் இணைந்த கைகள்.  அருண்பாண்டியன், ராம்கி,  நிரோஷா, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்த திரைப்படம்.


அருண்பாண்டியன் தன்னை அமிதாப் போலநினைத்துக் கொள்வாரோ என்று தோன்றும் வண்ணம் நடிப்பார்.  ஊமை விழிகள் படத்தில் ஷோலே அமிதாப்பை இமிடேட் செய்ய முயன்றிருப்பார்.  சிதம்பர ரகசியம் படத்திலும் அப்படியே.



இந்தப் படத்தில் அவர் நடிப்பு சொல்லிக்கொள்ளும் வண்ணம் இருக்கும்.  படம் ஒரு ஆங்கிலப்படத்துக்கு இணையாக எடுக்க முயற்சித்து ஓரளவு வெற்றியும் அடைந்த படம்.  படத்தின் தலைப்பை நியாயப்படுத்தும் காட்சி அந்த நேரத்தில் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.



இந்தப் படத்தில் தீபன் சக்கரவர்த்தி இரண்டு பாடல்கள் பாடி இருக்கிறார்!  கங்கை அமரன் ஒருபாடல்பாடி இருக்கிறார்.



பாடல்களை எழுதியவர் ஆபாவாணன்.  இசை கியான் வர்மா.

Image result for inaindha kaigal images

உங்களுக்கு நட்பு ராசி எப்படி?   நிறைய நட்புகள் உண்டா?  எனக்கு நட்பு ராசி கம்மி!



எதிரெதிர் துருவங்களாக அறிமுகமாகும் ராம்கியும் அருண்பாண்டியனும் ஒரு முக்கியமான கட்டத்தில் இணைகின்றனர்.  நட்பாகின்றனர்.  அப்போது வரும் பாடல்தான் இது.

ஆரம்ப இசை மிகக் கவர்ச்சி.  ரயில் சத்தத்தோடு வரும் பாடல்கள் என் பாடல் கேட்ட அனுபவத்தில் நன்றாகவே இருக்கும்.  ஹிந்தியில் தோஸ்த் பாடல் கேட்டிருக்கிறீர்களா?  ஆரம்ப இசையைத் தொடர்ந்து வரும் குழல் இசையும் பாடலும் இனிமை.  மிக இனிமை.

Image result for spb images

எஸ் பி பாலசுப்ரமணியமும் ஜெயச்சந்திரனும் இணைந்து பாடிய ஒரே பாடல் இதுதான் என்று நினைக்கிறேன்.  ரயில் பயணத்தில் ஏதோ ஒரு குழந்தை அழத்தொடங்க, அதற்குத் தாலாட்டு பாடுவது போல அமைந்திருக்கும் பாடல்.  தனியாகவே உணரும் அருண்பாண்டியன் வரிகளுக்கு ராம்கி ஆறுதல் வரிகள் பாடுவதுபோல பாடல். அருண்பாண்டியனின் காதலி அல்லது மனைவி கர்ப்பமாக இருப்பார்.  தனக்கு பிறக்கப்போகும் மகனை நினைத்துப் பாடுவதாக பாடல்.

Image result for p jayachandran images

பாடலிடை வரும் இசையும், இரண்டு பாடகர்களின் குரல் இனிமையும், டியூனும் எல்லாம் அழகாக அமைந்திருக்கும் பாடல்.

Image result for inaindha kaigal images

பாடலுக்கு இடையே வரும் எஸ் பி பி பாடும் ஆராரோ...  ஆரீராரீ ராராரோ கேட்பதற்கு இனிமை.  காட்சியோடும் ரசிக்கலாம். நெகிழ வைக்கும் காட்சி அமைப்பு.  ஆனால் காட்சி இல்லாமல் பாடலைக் கேட்கும்போது குரல்களின் இனிமையை இன்னும் முழுதாக ரசிக்கலாம்.  பாடல் முடியும்போதும் ரயிலின் ஓசையோடேயே முடியும்.

அந்தி நேரத்தென்றல் காற்று அள்ளித்தந்த தாலாட்டு 
தங்கமகன் வரவைக் கேட்டு தந்தையுள்ளம் பாடும் பாட்டு

உயிர் கொடுத்த தந்தை இங்கே உருக்கொடுத்த அன்னை அங்கே 
இன்பதுன்பம் எதுவந்தாலும் பங்குகொள்ளும் சொந்தம் எங்கே 
தாலாட்ட அன்னை உண்டு சீராட்ட தந்தையுண்டு 
இன்பதுன்பம் எதுவந்தாலும் பங்குகொள்ள நண்பன் உண்டு  
ஒருதாயின் பிள்ளைபோல உருவான சொந்தம் கொண்டு 
வருங்காலம் யாவும் வெல்ல இணைந்த கைகள் என்றும் உண்டு 

உன்மகனைத் தோளில்கொண்டு  உரிமையோடு பாடுவதென்று 
அந்நாளில் துணையாய் நின்று பங்குகொள்ள நானும் உண்டு 
தத்துப்பிள்ளை இவனைக் கண்டேன் தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்  
பத்துத் திங்கள் முடிந்தபின்னே முத்துப்பிள்ளை அவனைக் காண்பேன் 
உறங்காத கண்ணில் இன்று ஒளி வந்து சேரக் கண்டேன் 
பரிவான நண்பன் தந்த கனிவான தோள்கள் கண்டேன் 





==========================================================

நேயர் விருப்பம் :

சென்ற வாரம் பானு அக்கா நேயர் விருப்பப் பாடலாக பி பி ஸ்ரீனிவாஸ் பாடிய 'தோல்வி நிலையென நினைத்தால்' பாடலைக் கேட்டிருக்கிறார்கள்.  இன்று பிறந்தநாள் கொண்டாடும் பானு அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளுடன் அவர் விரும்பிக்கேட்ட பாடல்...!

Image result for tholvi nilayena ninaithaal images

இந்தப்பாடல் இடம்பெற்ற ஊமை விழிகள் படத்தில் பாடல்கள் அனைத்துமே பேசப்பட்டன.

1986இல் வெளியான இந்தப் படத்தில் விஜயகாந்த், ரவிச்சந்திரன், கார்த்திக், சந்திரசேகர் என்று மானாவாரியாக பெரிய நடிகர்கள் நடித்த படம்.

Image result for tholvi nilayena ninaithaal images

இந்தப் படத்தின் பாடல்களையும் ஆபாவாணனே எழுதி இருக்கவேண்டும்.  மனோஜ்கியானுடன் சேர்த்து அவரும் இசை அமைத்திருக்கிறாராம்.

தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்.  பாதியிலேயே கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பெற்று உணர்ச்சி, உணர்வூட்டும் பாடல்.

இந்தப்பாடல் சமீபத்தில் வந்த இஸ்பேட் ராஜா பாடலான "கண்ணம்மா என்னை" பாடலை லேசாயநினைவு படுத்துகிறதோ?  தோல்வி நிலையென பாடலிலிருந்து உருவப்பட்டதுதான் கண்ணம்மா பாடலோ!

Image result for tholvi nilayena ninaithaal images

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வைச் சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா?

உரிமை இழந்தோம் உடைமையை இழந்தோம் உணர்வை இழக்கலாமா?
உணர்வைக்கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா 

விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் ஈரம் இருந்தும் கண்ணிலின்னும் ஏன் ஈரம்?

உரிமை இழந்தோம் உடைமையை இழந்தோம் உணர்வை இழக்கலாமா?
உணர்வைக்கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா 

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வைச் சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் ஈரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா 
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா 

 உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா 
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா 

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா






99 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் இரு பாடல்களுமே மிக மிகப் பிடித்த பாடல்கள்.

      எஸ்பிபி அண்ட் ஜெயசந்திரன் அருமையான பாடல். ஜெயசந்திரனின் வாய்ஸ் ரொம்ப நாள் கழித்துக் கேட்கிறேன்...

      இன்னும் வரேன்...

      கீதா
      கீதா

      நீக்கு
    3. வாங்க கீதா... மெதுவா வாங்க...

      நீக்கு
  2. இன்று பிறந்தநாள் காணும் பானு அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. எங்கள் அன்பு பானு அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    அவங்க விரும்பிக் கேட்ட பாடல் வாவ்! டெடிக்கேட்டட் டு பானு அக்காவா!!!!!!!!

    முன்பு இலங்கை வானொலியில் பிறந்தநாள் விருப்பங்கள் பாட்டு போடுவாங்க அது போன்று

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அந்தி நேரத் தென்றல் காற்று என்ன அழகான ராகம் ஸ்ரீராம் வாவ்! கரகரப்பிரியா!!!

    அழகான இசை...எஸ்பிபி வாய்ஸ் ஜெயச்சந்திரன் வாய்ஸ் இரண்டுமே கலக்கல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... அப்படியா? எனக்குப்பிடித்த ராகம்!

      பதிவில் இணைத்திருக்கும் படங்கள் தெரிகிறதோ கீதா? குறிப்பாக தோல்வி நிலையென நினைத்தால் பாடலுக்கு இணைத்திருக்கும் படங்கள்...

      நீக்கு
    2. தெரியுது ஸ்ரீராம் எல்லாப் படங்களும் தெரிகிறது.

      லிங்க் எல்லாமே வேலை செய்கிறது.

      கீதா

      கீதா

      நீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்திற்கும், விரும்பி கேட்ட பாடலை போட்டதற்கும் நன்றி ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. HAPPY BIRTHDAY Bhanu ma. always stay Blessed.Good Morning every one.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்,கீதா ரங்கன், பானு மா.
      இணைந்த கரங்கள் பாடல் எப்பவுமே மிகவும் பிடிக்கும்.
      அதுவும் ரயில் ஓசை கேட்பதால் இன்னும் நிறையவே பிடிக்கும்.

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம்.

      நீக்கு
    4. தோஸ்தி யா. தோஸ்த ஆ. அந்தப் பாடலையும் சொல்லுங்கள் ஸ்ரீராம்.
      நல்ல் இமோஷனல் பாட்டு.
      அப்போது கேட்டபோது இன்னும் வேகமாக ஒலித்ததோ.
      கேட்க மிக சுகம்.

      நீக்கு
    5. சாஹூங்கா மெய்ன் துஜே. ... சாஞ்சு சவேரே பாடலைச் சொல்கிறீர்களா அம்மா? Dosti பாடல். மொஹம்மது ரஃபி பாடுவது. எனக்கும் மிகவும் பிடிக்கும் அம்மா அந்தப் பாடல். நான் சொன்னது ரயில் சத்தத்துடன் வரும் 'தோஸ்த்' படப்பாடல் காடி புலா ரஹீ ஹை...

      https://www.youtube.com/watch?v=6akMO-ONvuE

      நீக்கு
    6. வாழ்த்துக்களுக்கு நன்றி வல்லி அக்கா.

      நீக்கு
  7. இரு படங்களுமே ஆபாவாணன் படங்களா...இசையும் மனோஜ் கியான். இந்த இருவரைப் பற்றி நீங்க ஒரு வெள்ளிப் பதிவில் சொன்னதிலிருந்துதான் தெரியும் அதுவரை அறிந்ததில்லை ஸ்ரீராம். ஆபாவாணனுக்கு இவர்தான் ஆஸ்தான இசையமைப்பாளர் போலத் தெரியுது...ஹிந்திக்காரர்கள் போலத் தெரியுது. இன்னும் கொஞ்சம் விவரம் தெரிய தேடினால்.....

    1989 ல் இருவரும் பிரிந்துவிட்டார்களாம். இணைந்த கைகளுக்கு க்யான் வர்மா மட்டுமே இசை என்று விக்கி சொல்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா... 'மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்' என்கிற உரிமை கீதம் படப்பாடலில் சொல்லியிருந்தேன்!

      நீக்கு
    2. யெஸ் நினைவு வந்துவிட்டது. ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
    உன் நெஞ்சம் முழுவதும் ஈரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானும்மாவுக்கு அளித்த பாடல் நினைவிருக்கிறது.
      ஜெய்சங்கருக்காகப் பார்த்த ,கேட்ட பாடல்.

      எழுச்சி கொடுக்கும் வார்த்தைகள். நல்ல சாய்ஸ்.

      நீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோல்வி நிலையென பாடல் செம பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். உத்வேகம் தரும் பாடல்.

      இரு பாடல்களின் வரிகளும் செம. அருமையான வரிகள் ஸ்ரீராம். இரு பாடல்களையும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்...இனி மதியம் மேல் வரேன்...

      மத்தியமாவதி நு சொல்லிருந்தேன்...அதான் டெலிட் செய்துட்டேன் ஸ்ரீராம்...இன்னும் கொஞ்சம் பாடிப் பார்த்துட்டு வரேன் ராகம் சொல்ல..

      நாளையிலிருந்து செவ்வாய் மாலை வரை மீ லீவு. அப்புறம்தான் பதிவுகளுக்கு வர இயலும்.

      எனவே வீட்டு வேலைகள், வேலைக்குப் போய்ட்டு வந்து மீண்டும் வீட்டுப் பணிகள்.

      கீதா

      நீக்கு
    2. /நாளையிலிருந்து செவ்வாய் மாலை வரை மீ லீவு.//

      வரவர ரொம்ப லீவு போடறீங்க கீதா...!!!!

      சும்மா சொன்னேன். உங்கள் வேலைகள்தான் முதல் முக்கியம். கவனிங்க.

      நீக்கு
  10. இந்தப்பாடல் சமீபத்தில் வந்த இஸ்பேட் ராஜா பாடலான "கண்ணம்மா என்னை" பாடலை லேசாயநினைவு படுத்துகிறதோ? தோல்வி நிலையென பாடலிலிருந்து உருவப்பட்டதுதான் கண்ணம்மா பாடலோ!//

    ஆமாம் ஸ்ரீராம் வருது....கண்ணம்மா உன்னை பாடலும் நல்லாருக்கு

    உங்க மகனுக்குப் பிடித்த அனிருத்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  12. பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பானுமதி! வந்திருக்கும் நண்பர்களுக்கும், இனி வரப்போகும் அனைவருக்கும் வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். துரைக்கு நெட் பாக் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இந்த விஷயத்தில் பிஎஸ் என் எல் நாம் முன்னாடியே ரீ சார்ஜ் பண்ணினாலும் அந்த நாட்கள், அதுக்கு உண்டான பணம் எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு கணக்குக் காட்டும். என்ன தான் இப்போ நான் தனியார் சேவைக்கு மாறினாலும் பிஎஸ் என் எல்லுக்கே என்னோட ஓட்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அந்தக் கட்சிதான் ரொம்பப் பிடிக்கும், ஆனால் இந்தக் கட்சிக்குதான் வாக்களித்தேன் என்று ஒவ்வொருவரும் சொன்னால் "அந்த"க் கட்சி எப்படி வாழும்?

      நீக்கு
    2. நீங்க சொல்வது சரியே! ஆனால் ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் பிஎஸ் என் எல்லை விட நேர்ந்தது அரை மனதாக. இப்போக் கூட நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் பிஎஸ் என் எல் மாதிரி வராதுனு! ஆனால் என் விருப்பம் மட்டும் இங்கே இல்லையே!

      நீக்கு
    3. என்னையும் நினைவு கூர்ந்ததற்கு நன்றி கீதாக்கா...

      Net pack கிடைத்தும் இன்று வெள்ளிக் கிழமை ஆயிற்றே..

      ஆக்டோபஸ் மாதிரி ஒரே இழுவை..

      நீக்கு
  14. பானுமதி வெங்கடேச்வரன் மேடத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. அருண் பாண்டியன், அஜய் ரத்னம் ஆகியோர் பெரிய அளவில் வரவேற்பை எதிர்பார்த்துத் திரைப்படத்துறைக்குள் நுழைந்திருப்பார்கள் என எண்ணுகிறேன். ஆனால் இருவருமே சில குறிப்பிட்ட படங்கள் தவிர்த்து சோபிக்கவில்லை. சிதம்பர ரகசியம் படம் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. விறுவிறுப்புக் குறையாமல் இருந்தது. இங்கே சொல்லப்பட்ட "ஊமை விழிகள்" படமோ, "இணைந்த கைகள்" படமோ பார்க்கவில்லை. ஆனால் ராம்கி, நிரோஷா ஜோடி மட்டும் அப்போதிருந்து அதிகம் பேசப்பட்டதாக நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணவன் மனைவி அதிகம் பேசப்படாமல் இருந்திருப்பார்களா? பிறகு ஃபீல்ட் அவுட் ராம்கிக்கும் நிரோஷாவுக்கும் கருத்துவேற்றுமை இருந்தாலும் சேர்ந்தே வாழ்கிறார்கள்

      நீக்கு
    2. பலத்த எதிர்ப்புக்கிடையில் திருமணம் நிகழ்ந்தது என்பதும் நிரோஷா பிரித்து வைக்கப்பட்டார் என்பதும் அரைகுறையாய்த் தெரியும். இந்தக் கருவை வைச்சு ஒரு திரைப்படம் கூட வந்த நினைவு.

      நீக்கு
    3. ​பிரித்து வைக்கப்பட்டதாக எல்லாம் நான் கேள்விப்படவில்லை. சேர்த்து வாழ்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன்!

      நீக்கு
    4. இல்லை. உண்மை தான்! சேர்ந்து இப்போது வாழலாம். அது தெரியாது. ஆனால் ஆரம்பத்தில் நிரோஷாவும் ராம்கியும் கஷ்டப்பட்டார்கள். இது குறித்து வெளிப்படையாகவே செய்திகள் வந்த நினைவும் இருக்கு.

      நீக்கு
    5. கீசா மேடம் - அவர்கள் 'சேர்ந்து வாழ்கிறார்கள்'. திருமணம் நடைபெற்றதுபோல் நான் படித்ததில்லை.

      நீக்கு
    6. ஏற்ற இறக்கம் இல்லாத குரல், பாவம் இல்லாத முகம், உடல் மொழி ஸீரோ, இப்படி இருந்தால் எப்படி சோபிக்க முடியும்? அருண் பாண்டியனை விட அஜய் ரத்தினம் பரவாயில்லை.

      நீக்கு
  16. ஊமை விழிகள் படம் ரொம்ப நல்லா இருக்கும், கிளைமாக்ஸ் தவிர. இது எல்லா மர்ம, பேய்க் கதைகளுக்கும் பொருந்தும்.

    அந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமையாயிருக்கும்.

    தோல்வி நிலையென நினைத்தால் - நல்ல எழுச்சிப்பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊமை விழிகள் தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனை படம். டெக்னிகள் சிறப்புக்காக பேசப்பட்ட படம். பிரும்மாண்ட தயாரிப்புக்கு முன்னோடி ஆபாவாணன்.(எஸ்.எஸ்.வாசனை எப்படி மறந்தீர்கள் என்று யாரோ கேட்கிறார்கள் போலிருக்கிறதே?)

      நீக்கு
    2. பிலிம் இன்ஸ்டிட்டிடியூட் மாணவர்கள் எடுத்த படம். சிறு விளக்காய் தோன்றி பிரம்மாண்டமாய் கார்கள் அணிவகுப்பு என்றெல்லாம் பேசிய ஞாபகம். சந்திரலேகா வேற லெவல்!

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    தேர்ந்தெடுத்த பாடல்கள் அருமை.இந்த பாடல்கள் அவ்வளவாக கேட்டதில்லை. இன்று கேட்டேன்.மிகவும் நன்றாக உள்ளது. இணைந்த கைகள் படம் கேள்விபட்டுள்ளேன் தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருந்த பாடல் நன்றாக உள்ளது. மேலும் பாடல் படம் பற்றிய விபரங்களுக்கு மிக்க நன்றி.

    சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். என்றும் எல்லா நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..

      உடல் நலம் தேவலாமா? நேற்றைய பதிவு நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

      இரண்டு பாடல்களுமே இப்போதுதான் கேட்கிறீர்களா?

      நீக்கு
    2. கமலா, உடல் நலம் இல்லையா? இப்போத் தேவலையா? கவனமாக இருக்கவும்.

      நீக்கு
    3. நன்றி கமலா. உடல் நலம் எப்படி இருக்கிறது?

      நீக்கு
    4. அனைவருக்கும் வணக்கம்.

      உடல்நலம் இப்போது பரவாயில்லை. அன்புடன் அக்கறையாக அனைவரும் விசாரித்தமைக்கு மிக்க நன்றிகள்.

      ஆம் பாடல்கள் சரியாக இப்போதுதான் கேட்கிறேன். கேட்டேன். 2வது பாடல் சற்று கேட்ட மாதிரி இருந்தது. ஆனால் அவ்வளவாக நினைவில்லை. அப்போது இந்த படங்கள் எவையுமே பார்த்ததில்லை. தியேட்டருக்கு போய் படம் பார்த்ததென்பது நிறைய கம்மி. தொலைக்காட்சியில்தான் படங்கள் ஒரளவு பார்த்துள்ளேன். இப்போது வரும் படங்கள் அதுவுமில்லாமல் போய் விட்டது. முதல் படம் மட்டும் கேள்வி பட்டிருக்கிறேன். சினேகா,(சித்ரா) பாடும் "ஒவ்வொரு பூக்களுமே" என்ற தன்னம்பிக்கை பாடல் அடிக்கடி கேட்டு மனப்பாடம்.

      காலையிலேயே நேற்றைய பதிவும் படித்து விட்டேன்.அதற்கும் கருத்து கூறுவதற்குள் கொஞ்சம் சமையல் வேலைகள் வந்து விட்டது. மிகவும் நன்றாகவும், வெகு சுவாரஸ்யமாகவும் இருந்தது. அயோத்தி பயணம் பற்றி, சரயு நதியின் படங்கள் என மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதியிருக்கிறீர்கள். படங்களை பார்க்கும் போது அவ்விடங்களுக்கு சென்றுவர ஆசை வருகிறது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  18. அந்தி நேர பாடலும், பானு கேட்ட தோல்வி நிலையென நினைத்தால் பாட்டும் பிடித்த பாடல்கள் தான், கேட்டு மகிழ்ந்தேன்.
    நன்றி.

    ஊமைவிழிகள், இணைந்த கைகள் படமும் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
    இணைந்த கைகள் படம் மறந்து விட்டது. ஊமைவிழிகள் இரண்டு வாரங்களுக்கு முன் பார்த்தேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் தொலைக்காட்சியில் எப்போதோ பார்த்ததுதான். தியேட்டரில் எல்லாம் பார்த்ததில்லை.

      நீக்கு
  19. பானுமதி அம்மா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

    இரண்டு பாடல்களும் மிகவும் பிடிக்கும்...

    பதிலளிநீக்கு
  20. பானுமதி மேடத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    இரண்டும் அருமையான பாடல் இரண்டாவது பாடல் அனைவருக்கும் பிடிக்கும்.

    //அருண்பாண்டியனின் காதலி (அல்லது மனைவி) கர்ப்பமாக இருப்பார்.//

    இது இடிக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி....அவங்க பக்கத்துல நிக்காதீங்க. கர்ப்பமா இருக்கார் இல்லையா? அதுனாலத்தான் உங்களுக்கு இடிக்கிறது.

      நீக்கு
    2. கில்லர்ஜி... அவங்க லிவிங் டுகெதர் என்றுதான் ஞாபகம். அல்லது திருமணம் செய்தார்களோ என்னவோ... எப்படியும் அது அவர்கள் சொந்த விஷயம்.

      நீக்கு
    3. நெல்லை.... இதை அலுவலகத்தில் வைத்துப் படித்தேன். சட்டென சத்தமாகச் சிரித்து விட்டேன்.

      நீக்கு
  21. //இந்தப்பாடல் சமீபத்தில் வந்த இஸ்பேட் ராஜா பாடலான "கண்ணம்மா என்னை" பாடலை லேசாயநினைவு படுத்துகிறதோ?//

    வார்த்தை அமைப்பை மாற்றிப் போட்டு விட்டீர்கள்! அதற்கு இதுவே தவிர இதற்கு அதுவல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜீவி ஸார்... மாற்ற வேண்டாம் என்று விட்டு விட்டேன். படிப்பவர்களுக்கு எது முதலில், எது பின்னால் என்றுபுரியும் என்பதால் புரிந்து கொள்வார்கள் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்.

      நீக்கு
  22. 'தோல்வி நிலையென நினைத்தால்..' பாடல் முதலில் மெட்டை தேர்வு செய்து கொண்டு அதற்கேற்பவான வார்த்தைகளை இட்டு நிரப்பிய பாடல் என்று நன்றாகத் தெரிகிறது.

    //உரிமை இழந்தோம் உடைமையை இழந்தோம் உணர்வை இழக்கலாமா?
    உணர்வைக்கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா.. //

    அந்தப் பாட்டின் ஜீவனே இந்த இரண்டு வரிகள் தான். வரிகளுக்கு உயிரைக் கொடுத்தது கம்போஸிங். அதில் கோட்டை விட்டிருந்தால்
    ஜீவனே கொலாப்ஸ் ஆகியிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெட்டுக்குப்பாட்டா? பாட்டுக்கு மெட்டா என்பது இசை அமைப்பாளர்- பாடலாசிரியர் இடையே வரும் கேள்வி என்று கண்ணதாசன்- எம் எஸ் வி உரையாடலொன்றில் சொல்லியிருப்பார்கள். கண்ணதாசன் இன்னொன்றும் கேட்பாராம்... பாடல் எழுதச் சொன்னதும் சிலசமயம் கண்ணதாசன் கேட்பாராம்..."மெட்டுக்கா? துட்டுக்கா?"!!!

      நீக்கு
    2. இது புதுசா இருக்கே ஸ்ரீராம்! மெட்டுக்காக எழுதினாலும் அதுவும் துட்டுக்குத்தானே! எம்மெஸ்வி கண்ணதாசன் இருவருக்கிடையில் எப்போதும் துவந்தம், திருப்தியடைகிறவரை விச்சு விடமாட்டார் என்பதற்காக ஒன்றுக்கு நாலாகப் பாட்டெழுதி எதுவேண்டுமோ எடுத்துக்கொள் என்கிற கண்ணதாசன்!

      அருமையான நினைவுகள்

      நீக்கு
    3. //மெட்டுக்கா? துட்டுக்கா?"!!!//- இல்லை ஸ்ரீராம். கண்ணதாசன் கேட்பது, 'மீட்டருக்கா இல்லை மேட்டருக்கா'. மீட்டருக்கா என்றால், போட்ட மெட்டுக்கேற்ற பாட்டு வேணும். 'மேட்டருக்கா' என்றால், சிச்சுவேஷன் மட்டும் விளக்கி, அதற்கு கண்ணதாசன் பாடல் எழுத, அதற்கேற்றா மெட்டை எம்.எஸ்.வி (அல்லது இசையமைப்பாளர்) போடணும். அப்படி பாடல் எழுதும்போதோ இல்லை மெட்டுப்போடும்போதோ, ஏதேனும் மாற்றவேணும் என்றால் இருந்து மாற்றிக்கொடுப்பார்.

      நீக்கு
    4. வாங்க கிருஷ் ஸார்... துவந்த யுத்தம் நடந்தாலும் ஆரோக்கியமான நட்பு அவர்களிருவருக்கும் இடையே... இல்லையா?

      சரி ஸார்... பாட்டு(கள்) எப்படி? கேட்டிருக்கிறீர்களா? இப்போது கேட்டீர்களா?!!!

      நீக்கு
    5. ஆமாம் நெல்லை. நீங்கள் சொல்வது சரிதான். மீட்டருக்கா, மேட்டருக்காதான்.

      நீக்கு
    6. //'தோல்வி நிலையென நினைத்தால்..' பாடல் முதலில் மெட்டை தேர்வு செய்து கொண்டு அதற்கேற்பவான வார்த்தைகளை இட்டு நிரப்பிய பாடல் என்று நன்றாகத் தெரிகிறது.//
      சினிமாப் பாடல்கள் பெரும்பாலும் மெட்டுக்கு எழுதப்படுபவைதான். சமீபத்தில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் பாரதிதாசனின் 'அவளும் நானும்..' பாடலுக்கு மிக அழகாக இசையமைத்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

      நீக்கு
    7. ஓஹோ... கேட்டிருக்கிறேன். என்னை அந்தப் பாடல் கவரவில்லை!

      நீக்கு
  23. இன்றைய பாடலைக் கேட்டதாக நினைவு இல்லை...

    ஆனாலும் இனிமை.. நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை ஸார்... இன்னும் காணோமேன்னு கேட்க நினைத்தேன். அதற்குள் ஒரு அவசர வேலை. முடித்து வருவதற்குள் வந்து விட்டீர்கள். நீங்கள் வந்தால் இன்னும் சில சுவாரஸ்யமான மேலதிகத் தகவல்கள் கிடைக்குமேயென்று...

      நீக்கு
  24. இன்று பிறந்தநாள் காணும்
    ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு அன்பின் இனிய நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  25. இனிய வாழ்துகள் பானுமதி வெங்கடேஸ்வரன்.

    பதிலளிநீக்கு
  26. அருண் பாண்டியன் படமென்றதும் நினைவுக்கு வருவது தோல்வி நிலையென நினைத்தால் என்னும் பாடல்தான் சிசுவெஷன் பாட்டு எல்லாம் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  27. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  28. இரண்டு படங்களும் பாடல்களும் மிகவும் பிடித்தவை ..

    இரண்டும் மிக சிறிய வயதில் பார்த்தது ..மேலும் ஊமை விழிகள் படம் பயந்து பயந்து கண்ணை மூடி பார்த்த படம் ...

    பானுக்காவிற்கு எனது வாழ்த்துக்களும்...

    பதிலளிநீக்கு
  29. ஸ்ரீராம் தோல்வி நிலையென பாடல் மத்தியமாவதி பேஸ் தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
  30. பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!