திங்கள், 22 ஜூலை, 2019

"திங்க"க்கிழமை : ரமலான் - மலபார் நோன்புக் கஞ்சி - கீதா ரெங்கன் ரெஸிப்பி


ரமலான் - மலபார் நோன்பு கஞ்சி


எபி கிச்சன் வாசக பார்வையாளர்களுக்கு எங்கள் குழுவின் அன்பார்ந்த வணக்கம்! இங்கு நாங்கள் இருக்கும் வீட்டின் மதிலை ஒட்டியே ஒரு மசூதி. பிரிப்பது தகரத் தடுப்பு மட்டுமே. அங்கு பேசினால் இங்கு தெளிவாகக் கேட்கும். அவ்வளவே இடைவெளி. அந்த அன்பர்கள் எங்கள் எல்லோருக்கும் கொடுத்த ரமலான் - இஃப்தார் அன்பளிப்பு இதோ இது.



இம்முறை பூஸாரும், தேவதையும் என் கூட இருக்காங்க. நட்புகள் நீங்கள் எல்லோரும் ரெடியா இருங்க. இன்று ரமலான் நோன்பு கஞ்சி பார்ட்டி! ரமலான் நோன்பு கஞ்சி ஒவ்வொரு பகுதியிலுமே ஒவ்வொரு வகைல செய்வாங்க. பகுதிக்குப் பகுதி அந்தப் பகுதியிலுமே கூட அவங்க செய்வது மாறுபடும். நாங்க இன்று செய்திருப்பது மலபார் ஸ்டைல். எப்படி செய்யணும்னு சொல்லி செஞ்சுட்டு சொல்றேன். எல்லாரும் வந்துருங்க.

நாங்க மூன்று பேரும் சேர்ந்து சமைத்த பிறகு, டெய்சி பிள்ளைக்கும், ஜெஸி பிள்ளைக்கும் ஒரு முக்கியமான வேலை கொடுத்திருக்கிறேன். அவங்க வேலையை முடிச்சு வந்ததும் எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்.

இடம் : எபி கிச்சன் பின்னால் பாருங்க கதவைத் திறந்தால் பச்சைப் பசேல்னு புல்வெளிஅங்குதான் இன்று நாம் எல்லோரும் குழுமி கும்மி அடித்து இஃப்தார் கஞ்சி சேர்ந்து சுவைக்கப் போறோம். பழங்களும் வைச்சுருக்கோம்.

இக் கஞ்சி நீங்கள் நினைப்பது போல் இதென்னது எப்படி இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். ப்ரிஞ்சி இலை போட்ட ஜீரா ரைஸை கொஞ்சம் சூப் ஸ்டைலில் சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் சுவை இருக்கும்.

எங்கள் வீட்டில், முன்பு கிறிஸ்துமஸ், ரமலான் நாட்களில் மகனின் நட்புகள், எங்கள் வீட்டு இளையவர்கள் எல்லோரும் கூடுவோம். அப்படி ரமலான் அன்று இந்தக் கஞ்சியை நான் செய்வதுண்டு. இங்கு நான் சொல்லியிருப்பது போலப் ப்ளெய்னாகவும் செய்யலாம். அல்லது பிரியாணிக்குப் போடும் காய்களைப் போட்டும் செய்யலாம். கஞ்சி மிக மிக டேஸ்டியாக இருக்கும்.

பூஸாரின் குழை சாதம் என்றும் சொல்லலாம்!!!!!! என்று நான் ஜொல்ல மாட்டேன்! ஹிஹிஹிஹிபாருங்க பூஸாரை வைத்துக் கொண்டே கலாய்க்கறேன். சரி வாங்க தேவதை அண்ட் பூசார். நாம கஞ்சிய ப்ரிப்பேர் பண்ணிட்டு ஃப்ரூட்ஸ் எல்லாம் கட் செய்து வைப்போம்.

தேவையானவை
சம்பா புழுங்கலரிசி/கேரளா சிகப்பு அரிசி/மட்ட அரிசி1 கப் 


படத்தில் உள்ளது போன்ற எம்டிஆர் பெருங்காயப் பொடி வாங்கினால் பெருங்காயம் தீர்ந்ததும் அந்த டப்பாவில் வறுத்த பொடிகளைப் போட்டு வைத்துக்கொண்டு விடுவேன். அதில் மேலே இரு மூடிகள் இருக்கும் இல்லையா… ஒன்றைத் திறந்தால் குட்டி குட்டி ஓட்டைகள். மற்றொரு பக்கம் மூடியைத் திறந்தால் ஒரு பெரிய ஓட்டை இருக்குமே. நமக்கு எது தேவையோ அதைத் திறந்து போட வசதியாக இருப்பதால் இதில் தான் போட்டு மேலே மார்க்கரால் எழுதி வைத்துக் கொண்டு விடுவேன்.

அரிசியோடு கலந்து குக்கரில் வைக்கத் தேவையானவை.

வறுத்த ஜீரகப் பொடி – ½ டீஸ்பூன்
வறுத்த வெந்தய பொடி – ½ டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கார்டன் க்ரெஸ் சீட்/ஹலிம் சீட்ஸ் – 1 டீஸ்பூன் 
மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்

அரைப்பதற்கு

தேங்காய் – 2/3 டேபிள் ஸ்பூன்
ஜீரகம் – ½ டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 6, 7 (சின்ன வெங்காயம் சின்னதாக இருந்ததால் இவ்வளவு. நல்ல பெரிதாக இருந்தால் 5 போதும்.)

தேங்காய்ப் பால் எடுக்க3/4 கப் தேங்காய் துருவல் நன்றாக அளந்து எடுத்துக் கொள்ளலாம். தேங்காய்ப்பால் இதற்குச் சுவையைக் கூட்டும்.

உப்புதேவையான அளவு.

பூஸார் தேங்காய்ப்பால் எடுக்கறாங்க. முதலில் தேங்காய்ப் பாலுக்குத் தேவையான முக்கால் கப் தேங்காயை தண்ணீர் விட்டு முதல் மற்றும் இரண்டாவது பால் எடுத்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். 3/4 கப் எடுக்கலாம். இதை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

மூன்றாவது பால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து அதை அளந்துவிட்டு மீதிக்குத் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். மொத்தம் 4 கப் ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். நான் அரிசியைக் கவனிக்கிறேன்

அரிசியை நன்றாகக் கழுவி மிக்ஸியில் ரெண்டு சுற்று சுற்றி பெரும் ரவையாக்கிக் கொள்ளுங்க. அரிசியில் எடுத்து வைத்துள்ள 4 கப் - மூன்றாவது பால் மற்றும் தண்ணீர் மிக்ஸ் செய்து வைத்திருப்பதுதண்ணீரைச் சேர்த்து, அதனுடன் மஞ்சள் பொடி, வறுத்த ஜீரகப் பொடி, வறுத்த வெந்தயப் பொடி, வெந்தயம், ஹாலிம் சீட்ஸ் எல்லாம் போட்டு கலந்து குக்கரில் வைத்துவிடுங்கள். நிறைய விசில் வரலாம். 7, 8, 9 வரை கூட விடலாம். நன்றாகக் குழைவாக வேக வேண்டும்.

ஏஞ்சல், சாதம் வேகும் சமையம் அரைப்பதற்குக் கொடுத்துள்ளவற்றை - தேங்காய், ஜீரகம், சின்ன வெங்காயம் - அரைத்துக் கொள்ளுங்கள். நான் ஃப்ரூட்ஸ் எல்லாம் கழுவி வைக்கிறேன். அப்புறம் நாம சேர்ந்து கட் செய்து வைப்போம்.


வெந்ததும் வெளியில் எடுத்து அதில் உப்பு (இடது பக்கப் படத்திலிருந்து வரிசையாக) சேர்த்து அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து, இன்னும் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து அடுப்பில் வைத்து தீயை சிம்மில் வைத்துக் கொதிக்க விடுங்கள். நன்றாகக் கொதித்ததும் எடுத்து வைத்துள்ள தேங்காய்ப் பாலை விட்டுக் கொஞ்சம் கொதித்த்தும் ஆஃப் செய்து விட வேண்டியதுதான். (கடைசி படம்) இது தண்ணியாக இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் கிட்டத்தட்ட க்ரேவி பதத்தில் இருக்கும்கஞ்சி ஆறும் போது கெட்டியாகி விடும். அப்போது செர்வ் செய்யும் போது கொஞ்சம் தேவையான சுடு தண்ணீர் கலந்து கொள்ளலாம்.

கீழ உக்கார முடியாதவங்களுக்கு டேபிள் சேர் எல்லாம் போட்டு வைச்சுடுவோம் ஓகேயா. ஏஞ்சல்பூஸார் உங்க வேலை நினைவிருக்குதானே!! சரி எல்லாரும் வரதுக்குள்ள நீங்களும் போய் வரதுக்குள்ள நான் எபி கிச்சன் கார்டன் புல்வெளில அரேஞ்ச் செய்யறேன்

பூஸாரும், ஏஞ்சலும் வந்தாச்சு! கூடவே ஜெசி, டெய்சி, சன்னியின் டூப்பு என்று. வாங்க வாங்க நட்பூக்களே! வருக வருக! புல்வெளில ஓப்பன் ஸ்பேஸ்ல BUFFET தயார் பண்ணியாச்சு. பாருங்க நல்ல காத்து! எல்லாரும் ப்ரேயர் செஞ்சுட்டு நோன்பு கஞ்சி எடுத்துக்கோங்கஃப்ரூட்ஸ் எல்லாம் எடுத்துக்கோங்க.



எல்லாரும் விருந்தை சுவைத்து எஞ்சாய் செய்திருப்பீங்கன்னு நினைக்கிறோம். எல்லோருக்கும் மிக்க நன்றி வந்து சிறப்பித்தமைக்கு! எங்களின் அடுத்த திங்கவோடு வருவது வரை உங்கள் எல்லோரிடமும் இருந்து விடை பெறுவது எபி கிச்சன் குழு! டாட்டா பை பை!

எபி கிச்சன் டைரக்டர் ஸ்ரீராம் மற்றும் எபி ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி! 

51 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

    ஓ இன்று இந்த ரெசிப்பியா மறந்தே போச்சு ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா... வாங்க.. வாங்க...

      ஆமாம்..உங்கள் ரெசிப்பிதான்!

      நீக்கு
    2. ஸ்ரீராம் இன்று கஞ்சி போணியாகலை போல!!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  2. ஸ்ரீராம் எபில கூட முன்னால இது போட்டுருக்கோம்னு சொன்னீங்களே அந்த லிங்கையும் இணைக்கலாமே ஸ்ரீராம்...எல்லாரும் பார்க்கலாமே நானும் தான்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா நலமா? எப்படி இருக்கீங்க இணையம் நலமா?!!!!!

      கீதா

      நீக்கு
    2. வழிமொழிந்து நான் வரவேற்கிறேன் உங்களையும்.

      நீக்கு
    3. வரவேற்ற துரைக்கும் மற்றவர்களுக்கும் நன்றி.

      நீக்கு
  4. இன்னிக்கு எல்லாரும் பச்சைப் புல் வெளில ஜாலியா உக்காந்து தின்னு அரட்டை அடிப்போம்...
    எல்லாரும் வாங்க வரவேற்பரைல யார் வேணாலும் நின்னு வரவேற்கலாம். கொஞ்சம் பார்த்துக்கோங்க!! ஹிஹிஹி

    கீதா..

    பதிலளிநீக்கு
  5. எடிட் செய்யாம அனுப்பிருக்கேன் என்று தெரிகிறது. சமயம் என்று வர வேண்டியது சமையம் என்று வந்திருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுனால பரவாயில்லை கீதா ரங்கன். முக்கியமான இன்கிரிடியன்டை மறந்துட்டேன் என்று சொல்லாம இருந்தா ஓகே.

      கஞ்சிக்கு தொட்டுக்க சுட்ட அப்பளாமா?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஒரு டிப்ஸ் விட்டுப் போச்சு. வல்லிம்மா சொல்லிருக்காங்க கீழ. அங்க பதில் தரேன் அதுக்கு..

      ஆமாம் நெல்லை இன்கிரீடியண்டை மறந்துவிட்டேன்னு சொன்னாலும் சொல்லுவேன் போல...ஹிஹிஹிஹிஹி அப்படிப் போகுது...நிறைய மறதி.

      கஞ்சிக்குத் தொட்டுக்க என்று பொதுவாக இல்லை என்று தோன்றுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்தப்ப கற்றுக் கொண்டு செய்யத் தொடங்கினது. அப்புறம் சென்னைல வீட்டின் கீழே இருப்பவர்கள் (எங்க ஃப்ளாட்டுல இருக்க 9 ல பாதிக்கும் மேல் கேரளத்தவர்கள்.) வயனாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்களிடமும் அறிந்தேன். நெல்லை

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
    3. நெல்லை சொல்ல விட்டுப் போனது...கஞ்சிக்குத் தொட்டுக் கொள்ள சுட்ட அப்ப்ளம் நன்றாக இருக்கும். பொருத்த அப்பளம், வற்றல் ...இல்லை என்றால் பயறு கறி

      பயறு இதில் போட்டும் செய்யலாம்...இதெல்லாம் பதிவில் விட்டுப் போச்சு. வர வர பதிவு எழுதுவதிலும் பல விட்டுப் போகிறது ஒழுங்காக எழுத முடியவில்லை. எல்லாமே ரொம்ப அவசர அவசரமாகத் தட்டி சேர்த்து இணையம், கரன்ட் படுத்தல்...இப்படியாக அனுப்பும் நிலை.

      மீண்டும் சுறு சுறுப்பாக்கிக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி நினைக்கிறேன்...ரொம்பவே ஸ்லோவாகிவிட்டேன்..

      கீதா

      நீக்கு
  6. கஞ்சிக்கும் எனக்கு ரொம்ப தூரம் அதனால எனக்கு பார்சல் அனுப்புங்கண்ணு சொல்லமாட்டேன் வூட்டுக்கு வந்தாலும் ஆசையாய் செஞ்சு பொடுங்கன்னு சொல்லமாட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவால்ல மதுரை வந்து அரட்டை அடிச்சுட்டுப் போங்க...சும்மா

      தேம்ஸ் வீராங்கனை ஏஞ்சல் கூட்டிட்டு வந்த சன்னிய டூப்புனு சொல்லி அமெரிக்காவுக்குப் பறந்ததாகக் கேள்வி! ட்ரம்ப் மாமாவோடு காஃபி எல்லாம் குடிச்சாங்களாம்..உங்க டூப்பைப் பார்த்திருப்பாங்கனு ?!!!!..ஏஞ்சல் காத்துவாக்குல ரகசியம் சொல்லிட்டுப் போயிருக்காங்க..!!!!!!!

      சரி சரி நான் இனி மதியம்தான் வர முடியும்...

      கீதா

      நீக்கு
    2. வந்திருக்கும் துரை, ஸ்ரீராம், கீதா ரங்கன் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      ஓஹோ நோம்புக்கஞ்சி கீதா செய்ததா.

      வெகு விவரமான படிப்படியாகக் குறிப்பு கொடுத்திருக்கிறீர்கள்.

      பார்க்கவே நன்றாக இருக்கிறது.
      இஞ்சியோ சுக்குப் பொடியோ போடுவார்கள் என்று சொல்லி நினைவு.
      நிறைய நேரம் பட்டினி கிடந்து பிறகு சாப்பிடுவதால்.
      சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
      மிக மிக நன்றியும் வாழ்த்துகளும் கீதா மா.
      ஏஞ்சலுக்கும் அதிராவுக்கும் ஹலோ சொல்லுங்கள்.

      நீக்கு
    3. வல்லிம்மா வாங்க...மிக்க நன்றிம்மா கருத்திற்கு

      சுக்குப் பொடி போட்டும் செய்வாங்க. நான் நம்ம வீட்டுல எல்லாருக்கும் விருப்பம் இல்லைன்றதுனால தனியா வைச்சுருவேன்....யாருக்கு வேண்டுமோ அவங்களுக்குப் போட்டு ஒரு கொதி விட்டுக் கொடுப்பதுனு..பதிவில் குறிப்புனு போட்டுச் சொல்ல விட்டுப் போச்சு...

      ரொம்பவே சுவையாக இருக்கும் வல்லிம்மா.

      மிக்க நன்றிமா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை வணக்கம். ரமதான் முடிந்து, பக்ரீத் வரப்போகிறது, இப்போது இஃப்தார் நோன்பு கஞ்சியா? எனிவே ஒரு சத்தான உணவு ரெசிபி கொடுத்துள்ளீர்கள். நன்றி. கிருஸ்துமஸ் கேக்கையாவது நேரத்தில் போடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்கு கிறிஸ்துமஸ் கேக் இன்று செய்து அடுத்த வாரம் அனுப்பினால் டிசம்பர் முதல் வாரம் வெளியாகும்னு நினைத்திருப்போம். ஶ்ரீராம் ரெசிப்பி கிடைச்ச உடனேயே வெளியிட்டாலும் வெளியிட்டுடுவார். அது நம்ம லக்கைப் பொறுத்தது

      நீக்கு
    2. பானுக்கா ஹா ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் நெல்லையின் கருத்தைப் பார்த்தும் சிரித்துவிட்டேன்!!

      ஓவர் டு பானுக்கா...கண்டிப்பா கிறிஸ்துமஸ் கேக் செஞ்சா முன்னாடியே அனுப்பி ஸ்ரீராமை கிறிஸ்துமஸ் ஈவ் கேக்கா திங்க அன்று போடச் சொல்லிடலாம் திங்க டிசம்பர் 23 வருது!!

      வீட்டுல கிறிஸ்துமஸ் ப்ளம் கேக் டிமான்ட் வருது. பார்ப்போம். அதுவும் ஏஞ்சலுக்கு க்ளூட்டன் ஆகாது எனவே எல்லோரும் சாப்பிடும்படி செய்து போட்டா போச்சு..

      மிக்க நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  8. திருச்சிகாரவுங்க கஞ்சி வரதப்பா என்று பாடிக்கொண்டே இருந்தாங்க...
    உண்மையிலேயே கஞ்சி வந்துடுச்சு.

    சுவையான கஞ்சிக்கும், வரதருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ கஞ்சிவரதப்பா பாடிட்டாங்களா...ஆஹா நான் மிஸ் பண்ணிவிட்டேன் போல...

      மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு

      கீதா

      நீக்கு
    2. ஹாஹா, இது ஆடி மாதம் கஞ்சி ஊத்துவாங்களே, ஆகவே தி/கீதா இதுக்கும் பொருத்தமாப் போட்டிருக்காங்க! நானும் ஆடிக் கூழ்/கஞ்சி பத்தி எழுதி இருக்கேன். தேடினேன். கிடைக்கலை!

      நீக்கு
  9. நோன்பு கஞ்சியா? நான் சுவைத்ததே இல்லை

    படங்கள் நல்லா வந்திருக்கு. செய்முறை சுலபம். தேங்காய் பால் என்று சொல்லி காம்பிளிகேட் பண்ணறீங்களோ?

    கார்டன் கர்ஷ் சீட்ஸ், ஹலீம் சீட்ஸ்னுலாம் சொல்றீங்க. இதைல்லாம் கேள்விப்பட்டதே இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை நோன்புக்கஞ்சி நல்லா இருக்கும்.

      செய்முறை சுலபம்தான். காம்ப்ளிக்கேட் பண்ணலை நெல்லை தேங்காய்ப்பால் மலபார் ரெசிப்பியில் சிலர் யூஸ் செய்யறாங்க...எனக்கு அது பிடித்ததால்.... நான் தேங்காயும் அரைச்சு விடுவேன். நிறைய தேங்காய் அரைப்பதற்குப்பதிலாக கொஞ்சம் அரைத்து மீதியை பால் எடுத்து விட்டேன்.

      கார்டன் க்ரஷ் சீட்ஸ் பெயர்தான் ஹலீம் சீட்ஸ். நம்மூரில் நன்றாகவே கிடைக்கிறாது நெல்லை. அதைச் சேர்க்கும் போது தனிச்சுவை கிடைக்கும்.

      மிக்க நன்றி நெல்லை கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. ஆடி மாதம் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல்( கூழ) வாரம் வாரம் கோவில்களில் நடைபெறுகிறது.

    ரமலான் இஃப்தார் நோன்பு கஞ்சி இன்று இடம் பெற்றது சிறப்பு.
    கஞ்சி வேலைகளில் தேவதையும் , பூஸாரும் சேர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.
    நோன்பு கஞ்சி எடுத்துக் கொண்டேன் கீதா, சுவையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா கஞ்சி எடுத்துக் கொண்டதற்கு.

      பூஸார் தேவதை இருவருமே பிஸி தேவதை எட்டிப்பார்த்தார் இரு நாள் முன் இன்றும் வந்தாலும் ஒரு வேளை இரவில் வரலாம்...பார்ப்போம்

      மிக்க நன்றி கோமதிக்கா கருத்திற்கு

      ஆடிக் கூழும் செஞ்சாச்சு வீட்டில்

      நாளையும் உண்டு. இரவே ராகி மாவைக் கொஞ்சம் அரிசி மாவுடன் கலந்து வைக்க வேண்டும். இங்கு புளிக்கவே புளிக்காது. இப்போது இங்கு செம ப்ளசென்ட் வெதர். நைட் நல்ல சில்...

      நன்றி கோமதிக்கா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  12. //எம்டிஆர் பெருங்காயப் பொடி வாங்கினால் பெருங்காயம் தீர்ந்ததும் அந்த டப்பாவில் வறுத்த பொடிகளைப் போட்டு வைத்துக்கொண்டு விடுவேன்//

    நல்ல யோசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா. அது வசதியாக இருக்கிறது..

      கீதா

      நீக்கு
  13. அன்பிற்கு தடுப்பும் கிடையாது... அன்பளிப்பு அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் டிடி! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!!!!!

      மிக்க நன்றி டிடி கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  14. நோன்பு கஞ்சி சுவைத்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மாதேவி கருத்திற்கும் சுவைத்தத்ற்கும்

      கீதா

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    நோன்பு கஞ்சி அதுவும் மலபார் பாணியில் மிக அருமையாக உள்ளது. இந்த முறையில் சிகப்பு அரிசி வைத்து செய்ததில்லை. வெறும் பச்சரிசி நொய்யில் பசும் பால் சேர்த்து வெந்தயம் கலந்து கஞ்சி வைத்து அருந்தியுள்ளோம். தங்கள் செய்முறை படங்களுடன் மிக நன்றாக உள்ளது. நானும் அருந்தினேன். நன்றாக உள்ளது. இனி இந்தமாதிரி செய்து பார்க்கிறேன். இதற்கு வெல்லமோ, சீனியோ சேர்க்க வேண்டாமா? பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    தங்கள் யோசனையும் (பொடிகளை வைத்துக் கொள்ளும் முறை) சிறப்பு.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலாக்கா...

      //வெறும் பச்சரிசி நொய்யில் பசும் பால் சேர்த்து வெந்தயம் கலந்து கஞ்சி வைத்து அருந்தியுள்ளோம்.//

      என் பாட்டியும் செய்திருக்கார். நானும். வயதானவர்களுக்கு நல்ல எளிதில் சீரணம் ஆகும் கஞ்சி. என் மாமியார் வயிறு சரியில்லை என்றால் பச்சரிசி நொய்யில் கஞ்சி செய்து மோர் விட்டு வெந்தயம் போட்டுச் செய்யச் சொல்லுவார். இல்லை என்றால் பால். நல்ல சுவையாக இருக்கும் இரண்டுமே.

      நீங்களும் இந்தக் கஞ்சியைச் சுவைத்துவிட்டீர்களா மிக்க நன்றி கமலாக்கா. செய்து பாருங்க ரொம்ப சுவையாக இருக்கும். உப்பு போட்டிருக்கிறேனே கமலாக்கா....வெல்லம், சீனி கிடையாது இதற்கு இது உப்புக்கஞ்சி.

      மிக்க நன்றி கமலாக்கா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  16. அப்படியே எடுத்துக் கொண்டேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! ஜோதிஜி! ஆச்சரியம்!

      அப்படியே எடுத்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி.

      கீதா

      நீக்கு
  17. இன்று ஏன் கச்சேரி களைகட்டவில்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெட் வ்ந்துவிட்டது...

      ஸ்ரீராம் பலருக்கும் பிடிக்கலையோ என்னவோ இந்த ரெசிப்பி. அல்லது பதிவு ரசிக்கவில்லையாக இருக்கலாம். ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  18. இந்தக் கஞ்சியைச் சிவப்பரிசி இல்லாமல் நாங்க காலை ஆகாரத்துக்குப் போட்டுச் சாப்பிட்டிருக்கோம். ஆனால் ரொம்பவே அதிகமாகத் தோன்றும். வயிறு கனமாக ஆகி விடும் என்பதால் விட்டு விட்டோம்.

    பதிலளிநீக்கு
  19. தமிழ் நாட்டில்ஆடிக்கூழ் போல கேரளத்தில் கர்க்கடக கஞ்சிபோல இதுவும் ரம்சான் நோன்பை முன்னிட்டு கஞ்சியா நாங்கள் 2015ல் பயணத்தில் இருந்தபோது எங்கள் காரை மறித்து சில இஸ்லாமிய நண்பர்கள்கஞ்சி கொடுத்தார்கள் நாங்களும் பாயசமென்று எண்ணி உண்டு மகிழ்ந்தோம் எழுதி இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  20. ரமலான் கஞ்சி - இஸ்லாமியத் தோழி வீட்டில் நெய்வேலியில் இருந்தவரை இந்த ரமலான் கஞ்சி எனக்கும் கிடைக்கும். ரமலான் அன்று விருந்துக்கும் அழைப்பார்கள் - இனிப்புகள் மட்டும் சுவைத்து வருவேன். நல்ல சுவை. தில்லி வந்த பிறகு சில நண்பர்கள் வீடுகளில் சுவைத்ததுண்டு.

    சுவையான பதிவு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!