ஏப்ரல் பத்தாம் தேதி. அயோத்தி வந்து விட்டது என்று சொன்னார்களே தவிர, தங்குமிடம் அவ்வளவு எளிதாக வரவில்லை. என்ன காரணமோ... குறுகலான தெருக்களோ, இரவு நேரம் தொந்தரவு இருக்கக்கூடாது என்கிற காரணமோ.. எங்கள் பஸ் ரிவர்ஸிலேயே மெ......து.....வா....ய் தெருத் தெருவாய் நகர்ந்து பொறுமையை சோதித்த வண்ணம் தங்குமிடம் அடைந்த பொழுது இரவு ஒரு மணி ஆனாலும், அறையை அடைந்த பொழுது ஒன்றே முக்கால். பஸ்ஸிலேயே நீண்ட நேரம் அமர்ந்து காத்திருந்தோம், எங்கள் அறையை அறிவதற்கு! ராமனின் பொறுமை தேவைப்பட்டது!
நாங்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து வெளியே காட்சி...
கோமதியில் நனைந்த ஆடைகளை உலர்த்த நேரமும் இடமும் இல்லாத காரணத்தால் பிளாஸ்டிக் பையில் மடங்கிக்கிடந்த உள்ளுடைகளை, வேட்டியை எடுத்து அலசி, உலர்த்தி, பின்னரே படுக்கப்போனோம்.
இன்னொருபுறம்....
ஆயினும் காலை நான்கே முக்காலுக்கு எழுத்து விட்டேன். எழுந்து அலைபேசிக் கடமைகளை முடித்துக் காத்திருந்தேன். ஆறு மணிக்கு காஃபி குடித்து சரயுவில் நீராடக் கிளம்பினோம். சரயுவில் நீராட என்பதால் அலைபேசியுடன் சென்றோம்.
சரயு நதியில் நீராட இறங்கிய இடம்....
சரயு... என்ன அழகான பெயர்..
இரவில் வந்ததால் நகரைப் பார்க்க முடியாதிருந்தது. வெளிச்சத்தில் பார்த்தபோது மனதுக்குள் பரபரப்பு. ராமன், சீதை நடந்த இடம். அவர்கள் புழங்கிய இடம்.
வழக்கம்போல அவரவர்கள் குழுக்குழுவாய்ப் பிரிந்து ஷேர் ஆட்டோ பிடித்தோம். மிகக் குறுகலான தெருக்கள் வழியே சரயுவை அடைந்தோம்.
சரயு - பெயரைப்போலவே மிக் அழகான நதி. இந்தப் பக்கம் எல்லாமே ஜீவ நதிகளாய் இருக்கின்றன. இந்தக்கோடையிலும் அடர்த்தியாய்த் தண்ணீர் காணக் கிடைப்பது ஒரு உல்லாச உற்சாகம். மறுபடியும் ஒரு சுகமான நீராடல். சரயுவில் நீராடி, அங்கே செல்ஃபி, மற்றும் புகைப்படக் கடமைகளை முடித்து அறைக்குத் திரும்பினோம்.
சரயு நதிக்கரை செல்லம்..
என்னைப் பார்க்காமல் இங்கும் அங்கும் மட்டும் பார்த்துக்கொண்டு!
அறைக்குத் திரும்பியதும் வெஜிடபிள் சேவை, தேங்காய்ச் சட்னி, சர்க்கரை!
இந்தப் புகைப்படங்கள் மட்டுமே எங்கள் அயோத்தி நினைவாய் இருக்கும். ஏனென்றால் அயோத்தியில் கோவில்களுக்குக் கிளம்பும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி கீதா அக்கா முதலிலேயே பதிவிலும் மெயிலிலும் சொல்லியிருந்தார். எங்கள் குழுத் தலைவரும் சொல்லியிருந்தார்.
சரயு நதிக்கரையில்... பாவம் அந்த ஜீவன்.. எஜமானுக்காக...
'படம் எடுத்து சம்பாதித்து'க் கொடுக்கிறது...
சரயு.. நான் வரயு....?
உண்மையில் அவர் பஸ்ஸில் உரையாற்றியபோது இந்தக் கண்டிஷன்கள் பற்றி சொல்ல மறக்க, அருகிலிருந்த நான் நினைவுபடுத்தினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! அதாவது -
தேவையான பணம் தவிர வேறு எதுவுமே கையில் எடுத்துச் செல்லக்கூடாது. அறைச் சாவி எடுத்துச் செல்லலாம் என்று சிலரும், அதுவும் கூடாது என்று சிலரும் குழப்பிக் கொண்டிருந்தனர். பெல்ட் கட்டியிருக்கக் கூடாது, வாட்ச் அணிந்திருக்கக்கூடாது, சீப்பு, மெமரி கார்ட், பென் டிரைவ் என்று எதுவும் கைவசம் இருக்கக்கூடாது.....
இப்படி!
இப்படி!
நல்லவேளை வேஷ்டிதான் அணியவேண்டும் என்று சொல்லவில்லை. என்னைப்போன்ற ஆசாமிகளுக்கு கஷ்டம்.
ஆங்காங்கே கண்ணில் பட்ட விஷமக்காரர்கள்!
தாவறியே... பிடிமானமே இல்லையே...
திரும்பும் வழியில்... என்ன அது?
அடப் பாவமே... நம்ம உடும்பு!
சாப்பிட்டு முடித்த உடன் வழக்கம்போல எங்களுக்கு ஏற்படுத்திக்கொண்ட ஷேர் ஆட்டோவில் கிளம்பினோம். முதலில் சென்றது "தயார்க்கோவில்"!! ராமர் கோவில் கட்டவேண்டி இந்தியாவெங்கிலிருந்தும் செங்கற்கள் கேட்டு எல்லோரும் அனுப்பியிருந்தார்கள் இல்லையா, அந்த இடம். அதற்குள் செங்கற்கள் மட்டுமல்ல, மார்பிள்கள், சிவப்பு நிறக் கற்கள், விதானங்கள், தூண்கள், என்று எல்லாம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.
சுப்ரீம் கோர்ட் சீக்கிரமே, இப்போது அமைக்கப்பட்டிருக்கும் குழுவினர் பரிந்துரையில், கோவில் கட்ட ஆணை வழங்கிவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி ஆணை கிடைக்கும் பட்சத்தில் மூன்றிலிருந்து நான்கு ஐந்து மாதங்களில் முழுக்கோவில் தயாராகி விடுமாம். இங்கிருக்கும் பொருட்களை பாலிஷ் செய்து அப்படியே அங்கு மாற்றி இறுதிப் பணிகளை முடித்து விடவேண்டியதுதான். தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த கற்களும் அங்கிருந்தன. ஸ்ரீராம ஜெயம் என்று எழுதப்பட்ட கற்கள்.
இவர்தான் (கீழே படத்தில் இருப்பவர்)அயோத்தியில் எங்களுக்கு விவரம் சொல்ல அமர்த்தப்பட்டவர். உணர்ச்சிகரமாகப் பேசினார். தமிழ்நாட்டு திராவிடக் கட்சிகளை லேசாய் சாடினார்.
அயோத்தியிலிலிருந்து கிளம்பும் நேரம் அவர் வந்து பஸ்ஸில் ஏறி, பணம் கலெக்ட் செய்து கொள்கிறார். அவரவர் விருப்பப்பட்ட அளவு.. கட்டாயமில்லை!
அடிக்கடி ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் இடப்பட்டன. அவ்வப்போது சில தமிழ் வார்த்தைகளும் பேசினார்.
அதைப் பார்த்து வெளியில் வந்து வண்டியேறி ஸ்ரீராமபட்டாபிஷேகம் நடைபெற்ற இடத்துக்குச் சென்றோம். ராமருக்கு வசிஷ்ட மாமுனிவர் பட்டாபிஷேகம் செய்து வைத்த இடம். அதைத் தரிசனம் செய்தபின் இன்னும் உள்ளே சென்றோம். சீதா தேவி புழங்கிய சமையலறை அங்கிருந்தது. நீண்ட ஹால் போன்ற அமைப்பு. உள்ளே வலதுபுறம் சமையல் செய்யும் இடம். இடதுபுறம் ஒரு அறை வழியாக உள்ளே சென்றால் ஒரு சிறு ஹால். அங்கு ஒரு சாமியார் அமர்ந்திருந்தார். பல வருடங்களாய் பால் மட்டும் அருந்தி வருகிறாராம். அன்னம் எடுப்பதில்லை. கோவில் ஏற்பட்ட பிறகே உண்பாராம். தினசரி இங்கு சுமார் 1000 பேர்களுக்கு அன்னதானம் நடை பெறுகிறதாம். அதற்கு நன்கொடை வசூலித்தார்கள். விருப்பப்பட்டவர்கள் கொடுக்கலாம். சமையலறையில் இருந்தவர் தன் முன்னால் சில பத்து ரூபாய், ஐம்பது ரூபாய் நோட்டுகளை இறைத்திருந்தார்! வருபவர்கள் பணம் போடவேண்டுமாம்!
அங்கிருந்து கிளம்பி ஆஞ்சநேயர் கோவில் வந்தோம். ஆஞ்சநேயரை தரிசனம் செய்தபின் அருகே பத்து ரூபாய்க்கு ஒருகண்காட்சி நடத்திக் கொண்டிருந்தனர். பத்து ரூபாய்தானே என்று வாங்கி உள்ளே புகுந்து வெளியே வந்தோம். ராமாயணக் காட்சிகள் படங்களாகவும், சிறு சிறு அசையும் சிற்பங்களாகவும் வைத்திருந்தார்கள்.
இதன்பின்தான் கடும் காவல் ஏற்பாடுகளுடன் இருக்கும் ராம்ஜென்மபூமி, ராமர் கோவில் நோக்கி நடந்தோம். கடும் போலீஸ் காவல். இரண்டு மூன்று முறை சோதித்தார்கள். என் பேண்ட் பையிலிருந்து சீப்பை எடுக்கச் சொல்லி அங்கிருந்த கூடையில் போடச் சொன்னார் போலீஸ்காரர். உடம்பு முழுவதும் ரஜினி சொல்வதுபோல கிச்சுகிச்சு மூட்டாத குறையாக சோதனை செய்தே அனுப்பினார்கள். சோதனை செய்யுமிடத்தில் ஆண்களுக்கு தனி வரிசை, பெண்களுக்கு தனி வரிசை.
பின்னர் இரு பக்கமும் மாபெரும் சுவர்களால் சூழப்பட்ட இடத்தின் வழியே நடந்தோம். தொடர்ந்து காவல் காத்து நின்றிருந்தார்கள். முதலில் சீதா மந்திர் பார்த்தோம். பின் அங்கிருந்து ராம் மந்திர். ஏறியும், இறங்கியும் நீண்ட நடைபயணம். உறவுகளுக்காக சற்று காத்து நின்றால் கூட பார்(கா)த்திருக்கும் காவல்காரர்கள் அருகே வந்து 'என்ன விஷயம்?' என்பது போலப் பார்க்கிறார்கள்.
பிரசாதமாக இனிப்புப் பொரி. என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் தூரத்தே ஒரு சிறுமண்டபத்தைக் காட்டி அனுப்பி விட்டார்கள். அதுதான் ராமர் கோவிலாம். வெளியே வந்து மற்றவர்களுக்காகக் காத்திருந்து சற்றே ஓய்வெடுத்துத் திரும்பினோம். வெளியே வந்தோம்.
திரும்பும் வழியில் ஏகப்பட்ட கடைகள். பரிசுப்பொருட்கள், நானும் கொஞ்சம் வாங்கி கொண்டேன். "ஃபிளைட்டில் திரும்புபவர்கள் நிதானமாக வாங்குங்கள். எடுத்துச் செல்ல முடியாமல்போகலாம். உணர்ச்சி வசப்படாதீர்கள்.." என்று சொல்லிக்கொண்டிருந்தார் பாலாஜி.
பொதுவாக நாங்கள் பார்த்த அயோத்தியின் இந்தப்பகுதிகள் சற்றே அழுக்கான, பழைமையை இன்னும் காக்கும் ஊராக இருந்தது. நிறைய குரங்குகள் கண்ணில்பட்டன. ஏகப்பட்ட சடாமுடிச் சாமியார்கள் கண்ணில் பட்டார்கள்.
தங்கியிருக்கும் இடம் திரும்பினோம். பிற்பகல் ஒரு மணி போல தங்கியிருந்த இடத்தின் கீழ் தளத்தில் பின்னால் செல்ல விட்டு அங்கிருந்த பெரிய ஹாலில் அமரவைத்து மதிய சாப்பாடு பரிமாறினார்கள். கடந்த இருநாட்களாய் சமையல் க்ரூப்பில் இருந்த பரிமாறும் இரு கடுகடு முகங்களுக்கும், பயணிகள் சிலருக்கும் சிறு சலசலப்பு இருந்து வந்தது. இங்கும் அது சற்றே எதிரொலித்தது.
பீட்ரூட் பொரியல், கோஸ் கூட்டு, கேசரி, வடை, சாம்பார், ரசம், மோர்சாதம், ஊறுகாய் என்று மெனு. சாப்பிட்டு முடித்து சற்றே ஒய்வு எடுத்து இரண்டே முக்கால் மணிபோல புறப்பட்டோம். அதிலும் ஒரு செலவு. பஸ் நிற்குமிடம் அந்த "தயார்க்கோவில்" அருகே. பெட்டியுடன் நாம் அங்கு ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டும்! மறுபடியும் கையை விட்டு காசு!
அங்கு சென்று பஸ் கிளம்பக் காத்திருந்த நேரத்தில் அனல் தாங்காமல் அருகே உள்ள கடை சென்று குளிர்பானம் வாங்கி அருந்தினோம். பிஸ்கட் பாக்கெட் வாங்கி வைத்திருந்தோம்.
ஒரு செல்லம் வந்து கையைப் பார்க்க, அதற்கு பிஸ்கட் போட்ட மறுகணம் அங்கே தோன்றிய ஒரு ரௌடிக் குரங்கார் அந்த பிஸ்கட்டைத் தட்டிச் சென்றார். இன்னொரு குரங்கும் இணைய, செல்லத்துக்கு ஒரு பிஸ்கட்டாவது சேர்ப்பதே பெரும்பாடாகிப் போனது.
அதோ சுவரில் அழகிய ஓவியங்கள் தெரிகிறதே..
அதுதான் அந்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் கற்கள், தூண்கள் இருக்கும் கோவில். மேலாக கொஞ்சம் தெரிகிறது பாருங்கள்.
பஸ்ஸை ஸ்டார்ட் செய்து ஏஸி ஆன் செய்ததும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம். இல்லாவிட்டால் உள்ளே உட்காரமுடியாது. இரண்டே முக்காலுக்கு மேல் பஸ் புறப்பட்டது. நந்திகிராம் சென்று விட்டு அங்கிருந்து காசி செல்லவேண்டும். ஒரு பஸ் சரியாக நந்திக்ராம் செல்லும் வழியில் திரும்பிவிட, எங்கள் பஸ் சற்றே தாண்டி வந்து விட்டது. பாலாஜிக்கு, டிரைவருக்கும் சிறு வாக்குவாதம். பின்னர் பஸ் திரும்பி நந்திக்ராம் செல்லும் பாதையில் திரும்பியது.
===================================================================================================
வசந்தமாளிகை படம் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன். அது ரிலீஸானபோது பார்த்திருக்கிறேன். அப்போதிருந்த அதே அளவு உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் மக்கள் இப்போதும் அரங்கை நிறைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
ஆம், இப்போது மீண்டும் வசந்தமாளிகை டிஜிட்டல் தரத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.
என் அலுவலகத்தில் உடன்பணிபுரியும் பெண்மணி மிகவும் சிலாகித்துச் சொன்னார். அவரும், அவர் கணவரும் சிவாஜி ரசிகர்கள். இப்போது ஒருமுறை டிக்கெட் கிடைக்காமல், பின்னர் பாலசோவில் முன்பதிவு செய்து படம் மீண்டும் பார்த்து வந்திருக்கிறார். ஒரே பாராட்டுமழை. எனக்கும்கூட மீண்டும் தியேட்டரில் பார்க்க ஆசைதான். ...
தமிழ் ஹிந்துவில் செய்தி கவரேஜ்....
============================================================================================================
"லதா... ஏன் அப்படி செஞ்சே?"
வசந்தமாளிகை படம் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன். அது ரிலீஸானபோது பார்த்திருக்கிறேன். அப்போதிருந்த அதே அளவு உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் மக்கள் இப்போதும் அரங்கை நிறைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
ஆம், இப்போது மீண்டும் வசந்தமாளிகை டிஜிட்டல் தரத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.
என் அலுவலகத்தில் உடன்பணிபுரியும் பெண்மணி மிகவும் சிலாகித்துச் சொன்னார். அவரும், அவர் கணவரும் சிவாஜி ரசிகர்கள். இப்போது ஒருமுறை டிக்கெட் கிடைக்காமல், பின்னர் பாலசோவில் முன்பதிவு செய்து படம் மீண்டும் பார்த்து வந்திருக்கிறார். ஒரே பாராட்டுமழை. எனக்கும்கூட மீண்டும் தியேட்டரில் பார்க்க ஆசைதான். ...
தமிழ் ஹிந்துவில் செய்தி கவரேஜ்....
============================================================================================================
சுகி சிவம் கேள்வி பதில்... பாவம் செய்தவர்கள் பரிகாரம் செய்து மன்னிப்பைப் பெறமுடியுமா? பாவத்தின் அளவைக் குறைத்துக் கொள்ள முடியுமா? பரிகாரங்கள் என்பது நம் மன ஆறுதலுக்கு என்று நினைக்கிறேன். தப்பு செய்தால் செய்ததுதான் என்று எனக்குத் தோன்றும்.
====================================================================================================
===============================================================================================
இப்போதைய நிலையும் இதுதான்! மழையை விட வெயிலே அதிகம்!
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் அண்ட் தொடரும் அனைவருக்கும்
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குஆஹா இன்று களை கட்டும்! காணாமல் போயிருந்த அனுஷ் வந்தாச்சு!!!!!மெலிந்துவிட்டார் போல!!!
பதிலளிநீக்குகீதா
ஹிஹிஹி. பழசு!
நீக்குஇப்போ மெலிந்துவிட்டார். ப்ரீத்திக்கு இல்லை இல்லை மெல்லிய அனுஷ்காவுக்கு நான் கேரண்டி
நீக்குசென்னை வெயிலுக்கு ஒரு ஜில்!!! ஃபோட்டோவாவதுபோட்டு சில்லுனு ஆக்குவோம்னா ஸ்ரீராம்!!
பதிலளிநீக்குஅப்ப தமனாக்கா ஜில் கிடையாதானு நெல்லை கண்டனம்!!
கீதா
தாமானாவா? யார் அது கீதா?
நீக்குகீதா ரங்கன்... டப்பு டப்பு.. இப்போதான் இருமுறை அத்திவரதர் தரிசனம் முடித்தேன்
நீக்குபாருங்க செல்லங்கள் கூட லேட்டாத்தான் கண்ணுல பட்டுருக்கு!!!! அந்த ஜில் கண்ணை ஜில்லிட்டுப் போக வைத்து!!!!!
பதிலளிநீக்குஅட செல்லங்கள் ஏதோ சொல்லுதே...பைரவர் குரங்காரை விரட்டலா....வரேன் பார்க்கிறேன்
கீதா
அட... ஜொள்ளுன்னு ஒரு படம்!
நீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குவசந்த மாளிகை ஸ்டில்..!!?? இன்று கச்சேரி களை கட்டும்.
பதிலளிநீக்குகீதா பார்வையில் அனுஷ். உங்கள் பார்வையில் வசந்தமாளிகை!
நீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம்,கீதா,பானு மா.இன்னும் வருபவர்களுக்கும் வணக்கங்கள்.
நீக்குபிரமாதமாக வந்திருக்கிறது
பயணக்கட்டுரை ஸ்ரீராம். சரயுவின் படங்கள் மனதை சிலிர்க்க வைக்கின்றன.
ராமனையும் அயோத்தி மக்களையும் ஏற்றுக்கொண்ட தாய் அல்லவா அவள்.
கோவிலுக்குத் தயாராக கற்கள் காத்திருக்க ராமன் அங்கு குடிவரும் நாள் என்னாளோ.
ஒரே வானர சாம்ராஜ்யமோ.
கோலாஹலம் தான்.
வெளிச்சுவர் ஓவியங்கள் மிக அழகு.
வாங்க.. வாங்க வல்லிம்மா...
நீக்குஇனிய காலை வணக்கம்.
அன்பா(லா)ன பாராட்டுதலுக்கு நன்றி.
ரசித்ததற்கு நன்றி அம்மா.
கீதா பார்வையில் அனுஷ். உங்கள் பார்வையில் வசந்தமாளிகை!//
நீக்குஹிஹிஹிஹி
கீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. .வாங்க... வாங்க...
நீக்குசரயு
பதிலளிநீக்குபடங்களும் பகிர்வும் அருமை
நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
நீக்குவசந்த மாளிகை என்றும் சக்கைப்போடு போடும். மயக்கமென்ன பாடலை டிஜிட்டலில் போட்டார்கள்.
நீக்குவேறு யாரோ பாடி இருந்தார்களே நன்றாகவே இல்லை.
படம் பார்த்தவர்கள் சொன்னால் தேவலை.
வெய்யில் மழை கவிதை என்றும் இருக்கும் யதார்த்தத்தை சொல்கிறது வாழ்த்துகள் மா.
ஜெயராஜின் ஓவியம் மிக தத்ரூபம். நல்ல ஆர்டிஸ்ட்.
சுகிசிவம் சொல்வதே சரி. பாவம் செய்தால் தண்டனை உண்டுதான்.
நீக்குபரிகாரம் செய்து புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.
செய்த பாவத்துக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்..
இல்லை அம்மா... வேறு யாரோ எல்லாம் பாடவில்லை. படம் மாறாம அப்படியேதான் இருக்கிறது என்று படத்தைப் பார்த்த அந்த நண்பி சொன்னார். நானும் இந்தக்கேள்வியை அவரிடம் கேட்டேன்.
நீக்குஅது மனித மன ஆறுதலுக்கு அம்மா! முற்பகல் செய்யின் பிற்பகல் கட்டாயம் விளையும் என்றே எனக்குத் தோன்றும்!!
நீக்குஒப்புடன் முகம் மலர்ந்து பாடலே நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குமுகம் சுளித்தபடி உணவிடும் பரிசாரர்களைச் சகித்துக் கொள்வது கடினமே.
நந்திக்ராம் வந்து விட்டீர்கள் பரத நாமம் வாழ்க. பாதுகையே நாட்டை ஆளும்
பாடலே நினைவுக்கு வருகிறது.
நன்றியும் வாழ்த்துகளும் ஸ்ரீராம்.
ஒப்புடன் முகம லர்ந்தே உபசரித் துண்மை பேசி
நீக்குஉப்பிலாக் கூழிட் டாலு முண்பதே யமிர்த மாகும்
முப்பழ மொடுபா லன்னம் முகங்கடுத் திடுவ ராயின்
கப்பிய பசியி னோடு கடும்பசி யாகுந் தானே.
நீங்கள் சொல்லியுள்ள பாடல் என்ன என்று தேடி எடுத்து விட்டேன் அம்மா.
'ஒப்புடன் முகமலர்ந்தே..’ - எழுதியது யாரெனத் தெரியவில்லையே..
நீக்குஆம் ஏகாந்தன் ஸார்.. எழுதியவர் யாரெனத் தெரியாத சீவக சிந்தாமணிப்பாடல்.
நீக்குசரயு....பார்க்க ஆவலை எழுப்பிய பதிவு. சூழல் மிகவும் அருமையாக உள்ளது.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.
நீக்குசரயு நதிக்கரை படங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குராமர் இறங்கிய நதி. சரயு நதிக்கரையில் பாம்பை வைத்து பிழைப்பு நடத்தும் சிறுவன் , உடும்பு வைத்துக் கொண்டு பிழைக்கும் சிறுவன் வருத்தபட் வைக்கிறார்கள். அந்தக்காலத்தில் காசு போட்டார்கள் இப்போது போடுகிறார்களா?
குரங்கார், செல்லம் படங்கள் நன்றாக இருக்கிறது. பிஸ்கட் செல்லத்துக்கு இல்லாமல் குரங்கார் சாப்பிட்டது வருத்தம் தான், செல்லம் கோபத்தை காட்டவில்லையே ! நல்ல செல்லம்தான் போலும்.
எலும்புகள் தெரியும் மாடு சரியான உணவு இல்லை போலும். சுவர் சித்திரங்களில் இராமாயண காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
வசந்தமாளிகை விவரம் படித்தேன், இப்போதும் நிறைய தியேட்டர்களில் ஓடுவது மகிழ்ச்சி. மக்கள் தியேட்டர் போய் பார்ப்பது மகிழ்ச்சியான செய்திதான்.
சுகி செல்வம் படித்தேன். இறைவனை வணங்க்கினால் நாம், பாவம், தொல்வினை தீரும் என்று தான் சொல்வார்கள்.
பாவங்களை செய்வதை விடுத்து மனபூர்வமாக வருந்தி பிராயசித்தம் செய்தால் பலன் உண்டு.
தப்புகளை செய்து கொண்டே இறைவனுக்கு நன்கொடை வழங்கினால் பலன் இல்லைதான்.
//அந்தக்காலத்தில் காசு போட்டார்கள் இப்போது போடுகிறார்களா?//
நீக்குநானே பத்து ரூபாய் போட்டேன் அக்கா. படமெடுக்கும் பாம்பை படம் எடுக்கிறோம்.. காசு கொடுக்கணுமில்லே??ஆனால் உடும்புக்குக் காசு கொடுக்கவில்லை...
செல்லத்துக்கு குரங்காரிடம் தன்கோபம் செல்லாது என்று தெரியும் போலும்!
//பாவங்களை செய்வதை விடுத்து மனபூர்வமாக வருந்தி பிராயசித்தம் செய்தால் பலன் உண்டு.
தப்புகளை செய்து கொண்டே இறைவனுக்கு நன்கொடை வழங்கினால் பலன் இல்லைதான்.//
உண்மைதான் அக்கா.
//.. ஆனால் உடும்புக்குக் காசு கொடுக்கவில்லை...//
நீக்குபாம்பு சிவனின் கழுத்தை அலங்கரிப்பது. பணம்போட்டு புண்ணியம் சேர்ப்போம்.. இந்த உறுப்படாத உடும்பு யார் கழுத்தில் தொங்குகிறது? இதற்கெல்லாமா காசு கொடுப்பது?
- என்கிற தார்மீக சிந்தனைதான் காரணமா!
*உருப்படாத
நீக்குஅப்படி எல்லாம் இல்லை. அவர் உடும்பை அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்த காரணத்தால் நான் படம்பிடித்ததைக் கவனிக்கவில்லை என்கிற திருட்டுத்தனம் காரணம்! மேலும் அது நமக்கு வித்தை எதுவும் காட்டவில்லையே!!!! எனவே அதார்மீக சிந்தனை!
நீக்குஓவியர் ஜெயராஜ் அவர்கள் தன் முழுபெயர் போட்ட கதை பேரு, பத்திரிக்கை பேரு எல்லாம் குறிப்பிடலாம் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குமழை கவிதை நன்றாக இருக்கிறது.
சாரல் மழையை ரசித்த அனுவா?
ஜெயராஜ் படம் வந்த பத்திரிகை குமுதமாயிருக்கும் அக்கா. எங்கள் பைண்டிங் கலெக்ஷனிலிருந்து எடுத்தது!
நீக்குஇரண்டு கவிதைகளையும் ரசித்ததற்கு நன்றி அக்கா.
ராமனின் பொறுமை தேவைப்பட்டது!//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா "ஸ்ரீராமுக்கே"!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கீதா
எனக்கு பொறுமை கொஞ்சம் கம்மிதான் கீதா!
நீக்குஅயோத்தி அழகாக இருக்கிறது ஸ்ரீராம்.
பதிலளிநீக்குசரயு என்ன அழகு. பீச் போல மணல் எல்லாம் இருக்கு போல...வண்டல் மண் இல்லையா? கோதுமை விளைச்சலுக்கு வண்டலும், கரிசலும் ஏற்ற மண்.. வண்டல் நெல்லுக்கும் ஏற்றது. கரிசல் சோளம், கேழ்வரகு, கரும்பு எல்லாம் நல்லா வரும்...
கீதா
ஆம்,
நீக்குஅயோத்தி, சரயுஎல்லாமே அழகாய்த்தான் இருந்தன.
எழுந்து அலைபேசிக் கடமைகளை முடித்துக் காத்திருந்தேன். //
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா அதானே!!! அதான் இங்கு ஒவ்வொன்றாக வருதே! இல்லைனா நாங்க சண்டை போட்டிருப்போம் உங்க கூட....
சரயுவில் நீராட இறங்கிய இடத்தில் ஆஞ்சு....பெரிய ஆஞ்சு! அவருக்கு மேக்கப் போட்டது போல ஏன் இப்படி?!!!
கீதா
ஆஞ்சு மட்டுமா?..
நீக்குசிவபெருமான் தோற்ரத்தீக் கூட ஏதோ பீமபுஷ்டி ஹல்வா தின்ன மாதிரி சப்பையும் கப்பையுமா செஞ்சிருப்பானுங்க இந்த வடநாட்டுக் கொத்தனுங்க...
இன்னும் பற்பல சுதை சிற்பங்கள் கோரமாகவே இருக்கின்றன...
தமிழ் நாட்டிலேயும் இந்த மாதிரி கிளம்பிட்டானுங்க...
அறக்கட்டளை.. ந்ற பேர்ல மூலை மூலைக்கு எதையாவது செஞ்சி வெச்சி கல்லா கட்டிக்கிட்டு இருக்கிறானுங்க.....
தோற்றத்தைக் கூட..என்று வாசித்துக் கொள்க...
நீக்குஅங்கிருந்தே பிளாக் கடமைகளையும் முடித்து கொண்டிருந்தேன்- முடிந்தவரை! சில படங்களை பேஸ்புக்கிலும், வாட்ஸாப்பிலும் பகிர்ந்து கொண்டும் இருந்தேன்!
நீக்குஆமாம் துரை செல்வராஜூ ஸார்... ஆனால் கே நேரம் அவர்கள் நாம் சிவபெருமானுக்கு வைத்திருக்கும் தோற்றத்தை இதே மாதிரி கமெண்ட் டிக்கவும் கூடும் இல்லையா?!!
நீக்குசரயு... என்ன அழகான பெயர்..//
பதிலளிநீக்குஅதே அதே!!!!! ...அழகான பெயர் ஸ்ரீராம்
என் கஸின் ஒருவரின் பெயரும் சரயுதான்.
சரயு மனதைக் கவர்கிறாள் ஸ்ரீராம்!!! என்ன அழகு! பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறாள். சரயு வருவாள்!!!
கீதா
நன்றி கீதா.
நீக்குசரயுவில் நீராடி, அங்கே செல்ஃபி, மற்றும் புகைப்படக் கடமைகளை முடித்து அறைக்குத் திரும்பினோம்.//
பதிலளிநீக்குஇவை மட்டும் இங்கு தணிக்கை செய்யப்பட்டுள்ளன!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கீதா
ஆமாம். சந்தேகம் இல்லாமல்! பின்னே? நீராடும் படத்தை எல்லாம் வெளியிடுவார்களா என்ன!
நீக்குசரயு நதிக்கரை செல்லம் சரயுவைப் போலவே அத்தனை அழகு!
பதிலளிநீக்குஉங்களை நேரா பார்த்தா போட்டோ புடுச்சுடுவீங்களே!!!!நாங்க எம்புட்டு அழகு!
நீங்க சும்மா ஒரு குரல் கொடுத்துவிட்டு (ஹிந்தில சொல்லணுமோ!!!!!!!!!) டக்குனு எடுத்திருந்தா நேரே பார்க்கும் முகமும் வந்திருக்குமோ...
சரி டைம் ஓவர் எனக்கு இப்போது இனி மதியத்திற்குப் பிறகு....மேட்டர் நிறைய இருக்குதே!!
கீதா
என் தங்கையின் பேத்தி செல்லை எடுத்தாலே போஸ் கொடுக்க ஆரம்பித்து விடுகிறாள். செல்லங்களும் தங்களை பூஜிப்படம் எடுப்பவர்களை அறியும் போல... நல்லவேளை, புகைப்படம் எடுத்ததும் முன் கையை நீட்டவில்லை - பத்து ரூபாய்க்கொடு என்று!
நீக்கு....//.என் தங்கையின் பேத்தி செல்லை எடுத்தாலே போஸ் கொடுக்க ஆரம்பித்து விடுகிறாள். ..// நல்லவேளை, புகைப்படம் எடுத்ததும் முன் கையை நீட்டவில்லை - பத்து ரூபாய்க்கொடு என்று!//
நீக்குஹா ஹா ஹா ஹா ஹா ஹா...
ஸ்ரீராம் அதான் செல்லங்கள்!!! ஆனால் அதைப் பிடித்துக் காட்சிப் பொருளாக்குபவர்கள் கேட்கறதை என்னத்த சொல்லறது
படம் எடுப்பவரையே படம் எடுத்ததுக்கு ரூபாய் கேட்கலையோ!!?! அந்த ஷோ காட்டிப் பையன்?
கீதா
அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார். வாங்க... வாங்க...
நீக்குவிட்டு விட்டு வருவதனால்
பதிலளிநீக்குநெட்டுக்கு வைக்கலாமோ
விட் என்று பேர்?...
பட்டென்று சொல்ல முடியாத விஷயம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஇணையத் தொந்திரவு உலகம் முழுவதும் இருக்கும் ஒரு விஷயம் என நினைக்கிறேன்.குஞ்சுலுவை ஸ்கைபில் பார்க்கும்போது அங்கே பையருக்கும் அடிக்கடி இணையம் போகும்! இங்கே எங்களுக்கும் போகும்!
நீக்குபிறப்பதற்கு முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டது?... - என்று பட்டினத்தடிகள் உருகுகின்றார்...
பதிலளிநீக்குநமது தர்மத்தில் விட்டு விட்டுத் தேடுவதே கிடையாது...
தவறு செய்த தேவர்களையும் வெளுத்து எடுக்கவில்லையா!...
தீதும் நன்றும் பிறர் தர வாரா.. - என்பது
தமிழ்....
உண்மை. நெட்பேக் போட்டாச்சா?
நீக்குபிறருக்கு நாம் செய்யும் கெடுதல் வேறு ரூபத்தில் இன்னமும் அதிக வேகத்துடன் நம்மீது பாயும்.பாய்கிறது, பாய்ந்துள்ளது.
நீக்குஎனக்கும் அந்த பயம், உணர்வு உண்டு கீதா அக்கா.
நீக்கு// Net pack போட்டாச்சா!?...//
நீக்கு@ ஸ்ரீராம்....
இன்னும் இல்லை.. 5/7 ல் தான் சர்வ நிச்சயமாக முடிய வேண்டும்.. ஆனால் இடையில் கோளாறு செய்கிறது...
தேதி முன்னதாக போடப்படும் பணம் அந்தத் தேதியுடன் சேர்ந்து காணாமல் போய் விடும்....
காத்திருக்கிறேன்...
//தேதி முன்னதாக போடப்படும் பணம் அந்தத் தேதியுடன் சேர்ந்து காணாமல் போய் விடும்..//
நீக்குஅப்படியில்லை என்று நினைக்கிறேன். முன்னர் நானும் அந்த மாதிரி எண்ணியதுண்டு. அல்லது அப்போது அப்படி இருந்ததுண்டு. இப்போதெல்லாம் போட்ட நாளிலிருந்து புதுக்கணக்கு என்றுதான் நினைக்கிறேன்.
பிறருக்கு நாம் செய்யும் கெடுதல் வேறு ரூபத்தில் இன்னமும் அதிக வேகத்துடன் நம்மீது பாயும்.பாய்கிறது, பாய்ந்துள்ளது.//
நீக்குஆமாம் கீதாக்கா அண்ட் ஸ்ரீராம். ஸ்ரீராம் எனக்கும் அந்த பயம் நிறையவே உண்டு.
கீதா
கண் நிறைந்த படங்கள்..
பதிலளிநீக்குசரயு தரிசனம்..
சர்வ பாப விநாசனம்..
மகிழ்ச்சி.. நன்றி..
சரயு நதிக்கரையில் வசிப்போர்க்கு பாபமேகிடையாதா
நீக்குநல்ல சூழ்நிலையில் வளர்ந்து வாழ்கின்றவர் நெஞ்சில் பாவ எண்ணங்கள் தோன்றுவது அரிது..
நீக்குநல்ல தாயின் கையால் உண்பதற்கும் ஓட்டல்காரனிடம் சாப்பிடுவதற்கும் வித்தியாசம் உண்டு...
நன்றி துரை செல்வராஜூ ஸார்.
நீக்குவாங்க ஜி எம் பி ஸார்.. துரை ஸார் உங்க கேள்விக்கு பதில் சொல்லி விட்டார்.
நீக்கு//..துரை ஸார் உங்க கேள்விக்கு பதில் சொல்லி விட்டார்.//
நீக்குசரியாக, தெளிவாக, வேகமாகச் சொல்லியிருக்கிறார்.
ஜி எம்பி சார்... நீங்க ஏன்தான் குயுக்தியா யோசிக்கிறீங்களோ. உங்க வீட்டு அருகில் உள்ள ஐயப்பன் ஆலய தரிசனம் செய்யறீங்களே. எல்லாருக்கும் இறைவனின் அருள் சம்மாக்க் கிட்டுமா? பக்தியில்லாது கோவிலுக்கு ஆஜர் போடப் போவது, ந்தியில் நீராடப் போவது ஓட்டைப் பாத்திரம் கொண்டு தண்ணீர் மொண்டு வரச் செல்வதற்குச் சம்ம். தேங்காய் இருக்கவேண்டியவரிடம் இருந்தால் சட்னியாகும் உணவுக்கு உபயோகப்படும். அவ்ளோதான்
நீக்குசரயு தகவல்கள் அருமை...
பதிலளிநீக்குவசந்த மாளிகை - அனுஷ்
OK OK...!
இரண்டு மனம் வேண்டும்...
இறைவனிடம் கேட்டேன்...
நினைத்து வாட ஒன்று...
மறந்து வாழ ஒன்று...
வாங்க DD... அனுஷை மறக்கச் சொல்லி பாடுகிறீர்களா?!!!!
நீக்குகண்கள் தீண்டும் காதல் என்பது -
நீக்குஅது கண்ணில் நீரை வரவழைப்பது...
பெண்கள் காட்டும் அன்பு என்பது -
நம்மை பித்தனாக்கி அலையவைப்பது...!
எழுதுங்கள் என் கல்லறையில்...
அனுஷ் இரக்கம் இல்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரன் என்று...!
யாருக்காக...? இது யாருக்காக...?
இந்த மாளிகை - வசந்த மாளிகை...
காதல் ஓவியம் கலைந்த மாளிகை...
யாருக்காக...? இது யாருக்காக...?
ஹா.. ஹா... ஹா...
நீக்குஅனுஷுக்கு இல்லாத இரக்கமா? அந்தப் பாவம் நமக்கெதற்கு DD? ஆனாலும் ரசித்தேன் உங்கள் உல்டா பாட்டை. வ மா படம் பார்த்திருக்கிறீர்களா?
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்கு/ சீதா தேவி புழங்கிய சமையலறை அங்கிருந்தது/அரசகுமாரி சமஒயல் கூட செய்வார்களாமா .
பதிலளிநீக்குஆய கலைகள் 64...
நீக்குஇதில் சமையல் கலையும் ஒன்று..
அந்தக் காலத்தில் அரசிளங்குமரிகள் எல்லாக் கலைகளிலும் தேர்ந்திருந்தனர்...
64 கலைகளையும் காமக்கலைகள் என்று சொல்லி ஊரைக் கெடுத்தவன் சினிமாக்காரன்...
வாங்க ஜி எம் பி ஸார்... நல்லவேளை துரை சார் மறுபடி துணைக்கு வந்து விட்டார்.
நீக்குசரயு...
பதிலளிநீக்குபடங்களும் பகிர்வும் அருமை... அழகு.
நன்றி குமார்.
நீக்குசரயு என்றாலே----
பதிலளிநீக்குதுள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்...
அதுசரி, தமிழகத்தில் சரயு என்ற பெயரைப் பெண்களுக்கு வைப்பதில்லை?..
சரசுக்களே இங்கு அதிகம்.
வாங்க ஜீவி ஸார்...
நீக்குஉண்மை. எனக்குத்தெரிந்த நண்பர்கள் யார் வீட்டிலும் சரயு என்கிற பெயர் இல்லைதான்.
கங்கா, யமுனா பழகிப்போனவை. பிரும்மபுத்திராவும் மற்றவைகளும் சரி. ஆனால் சரயு? பெயரே ஒரு சூட்சுமம் கலந்த அழகு. அது வேறு உலகத்தைச் சார்ந்ததாகவே இருக்கவேண்டும்..
நீக்குவடக்கே பூராவும் கிராமம் மாதிரி இருக்கிற நகரங்களே.. ஆத்மாவை இழக்காமல் இறுகப் பற்றிக் கொண்டு, பவுடர் பூச்சாய் மேல் பூச்சுக்கு நகரம் மாதிரியான தோற்றம்!..
பதிலளிநீக்குஇருக்கலாம் ஜீவி ஸார். நீங்கள் சொன்ன பிறகு எனக்கும் அப்படித்தோன்றுகிறது. அதேபோல அங்கே ஆன்மீக உணர்வும் அதிகம்.
நீக்குசரயு, கட்ட இருக்கும் ராமர் கோயில் கண்டுகொண்டோம்.
பதிலளிநீக்குநன்றி சகோதரி மாதேவி.
நீக்குஅயோத்தி விவரங்கள் சற்று விலாவாரியாக இருக்கின்றன. சரயுவின் அழகிய தோற்றம் மயக்குகிறது.
பதிலளிநீக்கு//எழுந்து அலைபேசிக் கடமைகளை முடித்துக் காத்திருந்தேன்.//
//சரயுவில் நீராடி, அங்கே செல்ஃபி, மற்றும் புகைப்படக் கடமைகளை முடித்து அறைக்குத் திரும்பினோம்.//
ஹாஹா, ரசித்தேன். உங்கள் கடமை உணர்ச்சிக்கு பாராட்டும், நன்றியும்.
அயோத்தியில் ராம ஜென்ம பூமிக்கு செல்லும் பொழுது கடை பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை விளக்கமாக சொன்னதற்கு நன்றி. விரைவில் செல்லலாம் என்றிருக்கிறோம். ராமன் அருளில் நடக்க வேண்டும்.
சென்று வாருங்கள் பானு அக்கா. நாங்கள் பார்க்காமல் விட்ட இடங்களையும் பார்த்து வாருங்கள்.
நீக்குகடவுளின் அவதாரங்களையே கர்ம வினை விடுவதில்லை என்னும் பொழுது, மற்றவர்கள் பரிகாரம் செய்து தப்பிக்க முடியுமா என்ன?
பதிலளிநீக்குமுடியாது... முடியாது...
நீக்குசுகி சிவம் கேள்வி பதில்...
பதிலளிநீக்கு//செய்கிற பாவங்களையெல்லாம்...//
என்னவோ இவர் தான் இந்து மத தத்துவங்களுக்கு அத்தாரிட்டி போல..
பாவமும், புண்ணியமும் இரட்டைத் தண்டவாள இரு கோடுகளா, என்ன?
இவர் சொல்கிறது ஏதாவது ஏற்றுக் கொள்கிற மாதிரி இருக்கா, என்ன?
உதாரணத்திற்கு ஒரு உரையாடல்:
"ஏ! யாரங்கே! இவன் செய்த அந்த பாவத்திற்கு இவன் கழுத்தை சீவு!"
"அப்படியே, ஐயா!"
"இவன் செய்த புண்ணியத்திற்கு மாலை மரியாதாயுடன் அரச கீரிடம் சூட்டு..."
"அவன் கதையைத் தான் முடித்தாயிற்றே, மன்னா?"
"மீண்டும் எழுப்பு.. மஞ்சள் நீராட்டு.. புத்தாடை புனை.. கிரீடம் கொண்டுவா.."
"அடுத்தது பாவமா, புண்ணியமா-- இப்பவே சொல்லிடுங்க.. அதுக்கேத்த மாதிரி இதை வைச்சிக்கிறேன்..."
பாவமும் புண்னியமும் செத்த பின் இல்லை.. பலன்கள் நிகழ் வாழ்க்கையிலேயே!
இரவும்--பகலும் போல், சூரியனும்--சந்திரனும் போல்...
மாறி மாறி வருவது! இன்று செயத பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் அடுத்த வேளையே, அல்லது அடுத்த நாளே பலன்! டிஜிட்டல் உலகம் அல்லவோ?..
ஹா... ஹா.. ஹா...
நீக்குபொருத்தமான உங்கள் கற்பனை உரையாடல் ரசிக்க வைத்தது ஜீவி ஸார்.
ஜீவி சார்.. அனுமானம் தவறு. நாளை எழுதறேன். பரிகாரம் என்பது சரியான அளவில் இருக்கணும். அவன் கையை வெட்டினேன். அனுமார் கோவிலை 22 முறை சுற்றினேன் என்பது பரிகாரமில்லை. கதவைத் தட்டின கையை வெட்டிக்கொட்டானே பாண்டியன்.. அது பரிகாரம்.
நீக்குஅது என்ன பரிகாரம்? செய்யறதை செய்துட்டு..
நீக்குஇவன் கையை வெட்டிக் கொண்டால், அவனுக்கென்ன நன்மை?
பரிகாரம் என்று ஒன்று இருப்பதாக இடைச்செருகாய் சொருகியது தவறு செய்தவனுக்கு மனக்கிலேசம் இருக்கக் கூடாது என்பதற்கா?..
இப்படி பரிகார யோசனைகள் தலைவிரித்து ஆடுவதால் தான் மன்னர்கள் கட்டிய கும்பகோண பிர்மாண்ட பிரதான கோயில்கள்
ஆள் அரவமற்று வெறிச்சோடிக் கிடக்க, பக்கத்து நவகிரக பரிகார ஸ்தலங்களில் கூட்டமான கூட்டம் அம்முகிறது.
பாவமோ, புண்ணியமோ இறைவனுக்குத் தெரியும். உதவிக்கு சித்ரகுப்தன் இருக்கிறான்.. அவன் பார்த்துக் கொள்வான்.
அவர்களுக்கு தெரியாத calculation-களா? பாவம் செய்தால் தண்டனை உண்டு; அதிலிருந்து தப்ப முடியாது என்ற பயம் மட்டும் இருந்தால் போதும்! அதுவே அரணாய் இருந்து காப்பாற்றும்!..
சுகி சிவம் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். உங்களின் புரிதலில் ஏதோ தவறு இருக்கிறது ஜி.வி. சார். எல்லோருக்கும் வாழ்க்கையில் இன்பம் மட்டும், அல்லது துன்பம் மட்டும் வருவது இல்லையே. செய்த நன்மைகளுக்கு இன்பமும், தீமைகளுக்கு துன்பமும் வருகிறது. குருவின் அருள் இருந்தால்தான் பரிகாரங்கள் பலிக்கும். இது மிகப் பெரிய சப்ஜெக்ட்.
நீக்கு/இவன் கையை வெட்டிக் கொண்டால், அவனுக்கென்ன நன்மை? // - ஜீவி சார்....எப்படி பொற்கைப் பாண்டியன் கதையை மறந்தீர்கள்?
நீக்குசெய்த வினை செய்ததுதான். அதன் தாக்கத்தைக் குறைக்கமுடியும். உங்களைத் திட்டினால், உங்களுக்கு உடனே கோபம் வரும், இவன் என் எதிரி என்று மனசில் பதியும், பிறகு வந்து வருத்தம் தெரிவித்தால், மனசு சாந்தப்படும். மற்றவர்கள் இருக்கும்போது வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டால், மனசு முழுவதுமாக ஆறி அதனை மறக்கும்.
மற்றபடி, பாவம் யாருக்குச் செய்தோமோ அவன் மன்னிக்கும்படியான பரிகாரம் செய்யாமல் வேறு பரிகாரங்கள் உதவிக்கு வராது என்பது என் கருத்து.
நம்ம எல்லோருக்கும் எல்லாப் பாவங்களும் உடனே தொலைந்து, நன்மைகள்லாம் நிறைய வரணும்னு ஆசை. அந்தப் பேராசையால்தான் பரிகாரம், அதற்குத் தகுந்த கோவில் விசிட் என்று வைத்துக்கொண்டுள்ளோம். அதனால்தான் திருநள்ளாறில் மூலவரை தரிசிக்காமல் சனீஸ்வரனை மட்டும் தரிசித்துவிட்டு உடனடியாக இடத்தைக் காலி செய்கிறோம். இதனால்தான் ஒவ்வொரு கோவில்களிலும் பக்தர்களை ஈர்க்கும்படியான 'புதுச் சக்திகளை' விளம்பரப்படுத்துகிறார்கள்.
இந்த சப்ஜெக்ட் நிறைய எழுதக்கூடிய சப்ஜெக்ட். நிறைய உதாரணங்களும் உண்டு. (கொல்கொண்டா கோட்டையில் 12 வருடங்கள் சிறை வைக்கப்பட்டார் பக்த ராமதாசர். இறைவன் அவரை கடைசியில் சிறையிலிருந்து வெளியே கொண்டுவருகிறான். நல்லதே செய்தும் ஏன் இந்தத் தண்டனை என்று கேட்டதற்கு, சென்ற பிறவியில் கிளியை கூண்டில் அடைத்துவைத்ததைக் காரணமாகக் காட்டுகிறார்கள்)
இதைத் தான் நானும் சொல்லத்தெரியாமல் சொல்லி இருக்கேன். நல்லவற்றிற்காக நன்மை கிடைக்கும் அதே நேரத்தில் செய்த தீங்கிற்கான எதிர்வினையையும் அனுபவிக்க வேண்டும். போன பிறவிப் பயனாக ராமதாசர் இந்தப் பிறவியில் ராமனை நினைத்து நினைத்துப் பாடல்கள் பல பாடும் ஆற்றல் பெறுகிறார். நல்ல வழியில் அவர் செயல்கள் செல்கின்றன. அதே சமயம் செய்யாத தவறுக்குக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைபடுகிறார். ஆனால் அவர் நல்வினையால் அங்கேயும் அவர் ராமனை மறக்கவில்லை. இதைத் தான் நான் சொன்ன விதத்தில் முரணாக ஶ்ரீராமுக்குத் தெரிந்திருக்கிறது.
நீக்குநெல்லை, தெளிவாகச் சொல்லி இருக்கீங்க. எனக்குச் சொல்லத் தெரியவில்லை. நன்றி.
கீசா மேடம்...நீங்க ஆன்மீக டிக்ஷனரி. ஆனால் இந்த 'பாவம் புண்ணியம்' என்பது மிகச் சிக்கலானது, 'தர்மம் அதர்மம்' போன்றே. இதை வைத்து ஒரு கதை எழுத ஆரம்பித்தேன் (திருப்பதி பயணத்தின்போது உதித்த கரு). இன்னும் முழுவதுமாக எழுதலை.
நீக்குஅமெரிக்காவில் இருந்த இந்திய பக்தை (கொஞ்சம் வயதானவர்), சத்ய சாய் பாபாவிடம், 'எனக்கு காலில் இந்தப் பிரச்சனை இருக்கு. இதைத் தீர்க்கக்கூடாதா பாபா' என்று கேட்டாராம். அதற்கு சாய்பாபா, 'இது கர்ம வினை. இதை நான் இப்போது தீர்க்கமுடியும். ஆனால் அடுத்த ஜென்மத்தில் அனுபவித்துத்தான் கழிக்கணும். இப்போ இந்தப் பிறவியில் உங்களைப் பார்த்துக்கொள்ள உங்கள் சுற்றம் இருக்கு. அடுத்த பிறவியில் எப்படி அமையுமோ தெரியாது. யோசித்து சொல்லுங்கள்' என்று சொன்னதற்கு, அந்த அம்மையார் இந்தப் பிறவியிலேயே கர்ம வினையைக் கழித்து விடுகிறேன் என்றாராம்.
ஷரியாச் சட்டங்களில் (இஸ்லாமிய சட்டங்கள்) ஒரு இண்டெரெஸ்டிங் விஷயம் உண்டு. 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்பதுதான் அது. அதாவது ஒருவன் இன்னொருவனைக் கொலை செய்துவிடுகிறான் (தெரிந்தோ தெரியாமலோ, அதுவல்ல பிரச்சனை). அவனை மன்னிக்கும் அதிகாரம் நீதித்துறைக்குக் கிடையாது. அவனை மன்னிக்கும் அதிகாரம், அந்தக் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் உண்டு. சில சமயம் கார் ஏற்றி தவறுதலா ஒருவன் இறந்துவிட்டால், அவன் குடும்பத்தார், ஏற்றிக்கொன்றவனை மன்னிக்கும் வரை யார் ஆக்சிடண்ட் செய்தாரோ அவர் சிறையில்தான் இருக்கணும். ஒருவேளை செத்தவனின் குடும்பத்தார், 20 லட்ச ரூபாய் இரத்தப் பணம் என்ற வகையில் கொடுத்தால் உனக்கு விடுதலைக்குச் சொல்கிறேன் என்று சொல்லி, ஆக்சிடண்ட் பண்ணினவன் கொடுத்தால், இவர்கள் மன்னித்து, சிறையிலிருந்து வெளியே வர வழிசெய்யலாம். எனக்கு இத்தகைய சட்டங்கள் சரியானவை என்று தோன்றும்.
செளதி அரேபியாவில், பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த இந்தியன், அங்கே பெட்ரோல் போட வந்த அரபிக்கும் அவனுக்கும் இடையே வாக்குவாதம் வந்து கோபத்தில் முகத்தில் குத்திவிட்டான். இந்தியனுக்கு நேரம் சரியில்லை. அந்த அரபிக்கு கண் போய்விட்டது. அவ்வளவுதான்...இந்த இந்தியனை சிறையில் வைத்துவிட்டார்கள். அந்த அரபி (செளதி குடிமகன்), எந்த விதமான பேரத்துக்கும் மசியவில்லை. உனக்கும் கண்ணை எடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டான். அப்புறம் இது ஒரு கேஸாக வெளியில் எல்லாம் தெரிந்து.... செளதி அரேபிய மன்னர் இந்திய விஜயத்துக்கு வருவதற்கு முன்னால், அந்த அரபியை தன்னைப் பார்க்க வரச்சொன்னார். மன்னர், அவனிடம், காம்பன்சேஷன் வாங்கிக்கொண்டு அவனை மன்னித்துவிடு என்று கேட்டுக்கொண்டார். அதற்கு அந்த அரபி, நான் உங்களை (மன்னரை) பார்த்ததே போதும். எனக்கு எதுவும் தேவையில்லை, அவனை மன்னித்துவிட்டேன் என்று சொல்லி பிறகு, இந்திய விஜயத்தின் ஒரு பகுதியாக அவனை சிறையிலிருந்து விடுவித்து நாட்டை விட்டு வெளியேற்றினார். இஸ்லாமிய சட்டங்கள் அவ்வளவு ஸ்டிரிக்ட் ஆனவை.
நம்ம ஊர்ல, கொலை செய்தவர்களை, அதற்குத் துணை போனவர்களை சரியானபடி தண்டிக்கும் சட்டங்கள் இல்லை, சம்பந்தப்படாதவர்கள் இரக்கம் காட்ட முயல்கிறார்கள். இல்லைனா, அரசியல்வாதிகள் ஜாமீன்ல வெளிவந்து, மந்திரியாக ஆகக்கூட முயல்கிறார்கள்.
ஹையோ, ஆன்மிக டிக்ஷனரியா? தமிழில் அகராதி தானே? அந்த வகையில் நான் ஒரு அகராதி பிடிச்சவள் தான்! :)))))
நீக்குஅயோத்தியிலும் ஒரு பகல் தானா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்த இடம் போகலையா? அங்கே பாயசம் பிரசாதம். மேலும் விரும்பினால் நாம் பணம் கட்டினால் நம் பேரில் ஒரு நாள் பாயச அன்னதானம் உண்டு. நாங்க 500 ரூ கட்டினோம். சீதா தேவி கா ரசோயி நல்ல பெரிசா இருக்குமே! அந்தச் சாமியார் நாங்க போறச்சேயும் இருந்தார்.
பதிலளிநீக்குஆ... கீதா அக்கா... இன்னும் என்னென்ன இடங்கள் மிஸ் செய்திருக்கிறேன் என்று சொல்லவும். ஒரு பகல்தான் அயோத்தியில். சுற்றியது அதற்கும் குறைவே!
நீக்குவெறுப்பேத்த விரும்பலை. இரவு எழுதறேன். உங்க டிராவல்ஸ் என்னளவில் சுத்த வேஸ்ட். அவங்களுக்கும் இரயில் புக்கிங்கிற்கும் வித்தியாசம் லேது
நீக்குபோகட்டும் போங்க! நான் எப்படியும் கொஞ்சம் பார்க்காத இடங்கள் பார்த்து விட்டு வந்திருக்கிறேன்.
நீக்கு'ஜெ' படத்தில்--
பதிலளிநீக்குஅந்தக் காலத்தில் சவரம் செய்து கொள்வது, இந்த மாதிரியான கத்தியால் தான்! கழுத்தைச் சீவுவது என்றால் பெண்களுக்கு பழக்கப்பட்ட வஸ்து அரிவாள் மணை தான்!..
ஹா... ஹா... ஹா...
நீக்கு'ஜெ..' என்று இருக்க வேண்டும். அவர் அப்படித்தான் கையெழுத்திடுவார். அந்த இரு புள்ளிகளும் தன் தாய், தந்தையை குறிப்பதாக ஜெயராஜ் சொல்லியிருக்கிறார்.
நீக்குநாங்க போனது 2013 ஆம் ஆண்டில் என்பதால் நீங்க பார்த்த கோயில் கட்டுமானங்கள் அருகே செல்லவும் முடியலை. படங்களும் எடுக்க முடியலை. ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், காமிரா,செல்ஃபோன் போன்றவற்றை வாங்கி வைச்சுக்கறாங்க. டோக்கன் கொடுப்பாங்க. ஆனால் பணத்தை மட்டும் வாங்க மாட்டாங்க. கைப்பையைக்காலி செய்து கொடுத்துடணும். அப்போத் தான் நாங்க திரும்பிச் செல்லும் டிக்கெட் உட்பட, க்ரெடிட், டெபிட் கார்டுகள், இன்னும் முக்கியமான ஆதார் ஒரிஜினல் அட்டைகள்னு எல்லாமும் வைச்சிருந்தோம். அப்படியே அவரோட மேல் துண்டை எடுத்து அதில் கட்டிக் கொடுத்துவிட்டார் அங்கிருந்த ஒரு காவல் அதிகாரி! மாத்தி மாத்தித் தூக்கிண்டு போனோம். இதிலே நம்ம ஆஞ்சியாரின் தோழர்களின் அன்பான தொந்திரவு. அவங்க கிட்டே இருந்து காப்பாற்றுவதற்குள் போதும் போதும்னு ஆயிடுத்து. நல்லவேளையாத் தின்பண்டம் ஏதும் வைச்சுக்கலை.
பதிலளிநீக்குஇப்பவும் அந்தக் கோவிலுக்குள் செல்லும் நேரமெல்லாம் கேமிரா உட்பட எதற்கும் அனுமதி இல்லை. யதேச்சையாக அந்த ஊரிலிருந்து கிளம்பும் நேரம் எங்கள் பஸ் அந்த காம்பௌண்ட் அருகே நின்றதால் (நைஸாய்) இப்படிப் புகைப்படம் எடுக்க முடிந்தது!
நீக்குஅதானே பார்த்தேன்! அப்பாடா! மனசுக்கு இப்போத் தான் சந்தோஷமா இருக்கு! இஃகி,இஃகி,இஃகி! :)))))
நீக்குஎப்படி விடுவார்கள்? எப்பவும் நிற்கும் அந்த கண்டிஷன்!
நீக்குஸ்ரீராம் கவிதைகளுக்கே ஒரு சுவாரஸ்யம் இருக்கத் தான் செய்கிறது!..
பதிலளிநீக்கு/தேர்தல் முடிந்ததும்
தொகுதியிலிருந்து காணாமல் போகும்
வேட்பாளரைப் போல...''
வாக்கிட்ட சாட்சியான
விரல் மை அழியுமுன்
கட்சி மாறும்
வேட்பாளர்களைப் போல!..
ஆஹா...
நீக்குதன்யனானேன். நன்றி ஜீவி ஸார். நீங்கள் சொல்லியிருப்பதும் ரசிக்க வைத்தாலும் அந்த உதாரணம் சமீபத்தில் எங்காவது நடந்ததா?
என் விரல் மை இன்னும் அழியவில்லை, ஸ்ரீராம்!..
நீக்குஎன் விரலிலும்! அது சரி... உதாரணம்?
நீக்குதிருமா 2006ல் ஜெ கூட்டணியில் இருந்து வெற்றிபெற்று, கருணாநிதி முதல்வராக ஆதரவு தந்தாரே (ரிசல்ட் வந்த உடன்)
நீக்குபழையகதை தெரியும். இப்போது ஏதும் உண்டா என்று கேட்டேன்.
நீக்கு//அது சரி.. உதாரணம்?..//
நீக்குசென்ற காலத்தில் பாண்டிச்சேரி தேர்தல்களில் நிறைய உதாரணம் உண்டு. அந்த பிரதேசத்தின் விசித்திரம் ஒரு எம்.எல்.ஏ. வித்தியாசத்தில் ஆட்சி அமைப்பார்கள். அதுவும் இரண்டு மூன்று சுயேட்சைகள் வென்றிருப்பார்கள். அவர்களில் ஒருவர் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்குப் போனால் போதும், ஆட்சி கவிழ்ந்து விடும்!
கட்சி தாவல் தடை சட்டத்திற்கு முன்பு இது மாதிரி ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு, ஸ்ரீராம்.
சரயு நதியில் நம்ம ரங்க்ஸ் துலாமாசத் தர்ப்பணம் செய்தார். அதோடு அங்கே கோ பூஜை செய்வது விசேஷம்னு சொல்லவே திடீரென ஏற்பாடுகள் செய்யப்பட்டு எங்கிருந்தோ ஓர் மாட்டை ஓட்டி வந்து ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு மாட்டைக் காட்டிவிட்டுப் போனார்கள். ஆனால் சங்கல்பம், தான மந்திரங்கள் எல்லாம் சுத்தபத்தமாக மனப்பூர்வமாகச் செய்து வைத்தார்கள். சாமவேதம்னு சொன்னதும் தனி மரியாதையே கிடைச்சது!
பதிலளிநீக்குஎங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை கீதா அக்கா.
நீக்குகாலை வேளையில் இதற்கென்றே பண்டிட்கள் இருப்பார்கள். ஆனால் ஒன்று காசி, பிரயாகை, கயா போல் அடித்துப் பிடித்து வாங்குவதில்லை. முதலிலேயே என்னென்ன பண்ணணும், உங்க வழக்கம் என்னனு கேட்டுட்டு அதற்குத் தகுந்தாற்போல் தொகை!
நீக்குகயாவில் மட்டுமே நான் நல்ல ஸ்ராத்தம் பார்த்தேன். என் (எங்கள்) அனுபவம்!
நீக்கு/நான் நல்ல ஸ்ராத்தம் பார்த்தேன். // - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பண்ணலையா?
நீக்குமழை மேகமானும் திரும்ப வரும்! தொகுதியிலிருந்து காணாமல் போகும் வேட்பாளர்? தேடினாலும் கிடைக்க மாட்டாரே! செல்லம்ஸுக்கு ஏதும் கொடுக்க முடியாது அங்கெல்லாம். ஆஞ்சியின் சிநேகிதர்கள் விட மாட்டாங்க. ஒரு இடத்தில் நாங்க தேநீர்க்கடையில் தேநீருக்கு உட்கார்ந்தப்போப் பக்கத்திலே அவங்களும் வந்து உட்கார்ந்தாங்க! எழுதி இருப்பேன். :)
பதிலளிநீக்குஅங்கிருக்கும் வால் உம்மாச்சி செல்லங்களுக்கு தில்லு ஜாஸ்திதான் கீதா அக்கா.
நீக்குபாவம் செய்தால் மனப்பூர்வமாகப் பாவம் என்பதை உணர்ந்து திருந்தினால் பிராயச்சித்தம் செய்தால் மன்னிப்புக் கிடைக்கக் கூடும். ஆனால் நாம் இப்பிறவியில் அனுபவிப்பதே போன பிறவியின் தொடர்வினை! ஆகவே இப்போதைய பாவங்களும் கணக்கிட்டு அடுத்த பிறவிக்குத்தொடரலாம். :))))
பதிலளிநீக்குமுதல் வரிக்கும், அடுத்த வரிக்கும் முரண்படுகிறதே கீதா அக்கா!
நீக்குஇல்லையே, கிடைக்கலாம் என்று சந்தேகமாகத் தானே சொல்றேன். அதுவும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் எனக்குஅதில் உடன்பாடில்லை. நம் கர்மவினை ஏழேழு பிறவிகளுக்கும் தொடரும் ஒன்று என்றே தோன்றுகிறது.
நீக்குஅதே... அதே....
நீக்குஜெயராஜ் படத்துக்குக் கதை எழுதினவர் ரா.கி.ர.வோ?
பதிலளிநீக்குவெஜிடபுள் சேவையில் வெஜிடபுளைத் தேடணும் போல! சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா உள உளாக்கட்டிக்குத் தேங்காய்ச் சேவையில் ஏதோ ஒரு காயை மட்டும் போட்டுட்டு வெஜிடபுள் சேவைனு பெயர் வைச்சிருக்காங்க போல! அது சரி, கன்கார்ட் சேவை பாக்கெட் இப்போக் கிடைக்கிறதா? அதை ஏதோ தடை செய்து வைச்சிருக்கிறதாக் கேள்வி. நான் சேவைனா புழுங்கலரிசிச் சேவை தான். ஒரு மணி நேரத்தில் தயாராகிடும்.
கதை யாரோடது என்று நினைவில்லை. இது எப்பவோ எடுத்த புகைப்படம் கீதா அக்கா.
நீக்குடூர் போன இடத்தில் இந்த வசதி எல்லாம் எது? ரெடிமேட்தான்!
//நான் சேவைனா புழுங்கலரிசிச் சேவை தான். ஒரு மணி நேரத்தில் தயாராகிடும்.// - மிக்க நன்றி. குறித்துவைத்துக்கொண்டேன். சாப்பிட வருவதற்கு 2 மணி நேரம் முன்பு சொல்லிடறேன். ஹா ஹா (உடனே, மாவு தயார் செய்ய 8 மணி நேரம் ஆகும்னு சொல்லிடாதீங்க)
நீக்குபரிமாறுபவர்களும் ஆள் பார்த்துச் சிலரிடம் தான் முறைத்துக் கொள்வார்கள். சிலருக்கு தாராளமாக அள்ளிப் போடுவார்கள். குழுவாகச் செல்வதிலே இதை அடிக்கடி பார்க்கலாம். சிலர் நல்லாச் சாப்பிடணும் என்பதற்காகவே பரிமாறுபவர்களைச் சிநேகிதம் பிடித்தும் வைப்பார்கள்.
பதிலளிநீக்குசிலர் சிடுமூஞ்சிகளாகவே இருந்தார்கள். இவர்கள் எங்களுக்கு "நல்லாச் சாப்பிடணும்" என்கிற எண்ணம் வராமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள்!
நீக்குஅடக் கஷ்டகாலமே! நாங்க அம்பத்தூரில் இருந்த வாசுதேவன் என்னும் ஒருங்கிணைப்பாளரோடு நவ பிருந்தாவன் போனப்போ இப்படித் தான் சாப்பாட்டில் கஞ்சத்தனமாக இருந்தார். ஒரு சாப்பாடுக்கு சுமார் 100 ரூ என வாங்கிட்டு ஆங்காங்கே மடங்களில் அன்னதானம் போடும் சமயம் போய் எங்களை உட்கார்த்தி வைத்துச் சாப்பிட வைத்தார். சுமார் 30 பேர் போனோம்.நவ பிருந்தாவனத்திலும் துங்கபத்ராவில் முதலை மடுவில் எங்கள் ஸ்டீமர் மாட்டிக்கொண்டு கிளம்ப மாட்டேன்னு அடம் பண்ணிப் பின்னர் பரிசல்காரர்களிடம் கயிறை வாங்கி ஸ்டீமரில் கட்டிப் பரிசல்காரர்களை இழுக்கச் சொல்லிக் கரைக்குக் கொண்டு சேர்த்தார்கள்.
நீக்குஇங்கும் ரேஷன் எல்லாம் இல்லை. வேண்டுமானால் நீங்கள் மேலும் கேட்டு சாப்பிடலாம். உங்களுக்கு இன்னும் வேண்டும் என்று சாப்பிடும் எண்ணம் வராமல் வைத்துக் கொண்டிருந்தார்கள்!!
நீக்குஅது சரி. கொட்டுக்குழம்பு சாப்பிட வரலையே! ரொம்ப பிசி?
நீக்குபிசியில்லை. கவனிக்கவில்லை. இப்போது வந்து படித்துப் பின்னூட்டம் இட்டு விட்டேன்.
நீக்குலா.ச.ரா. கதை ஏதோ ஒன்றில் (சிறுகதை?) சரயூ என்னும் கதாபாத்திரம் படிச்சிருக்கேன். அரைகுறை நினைவு! இப்போச் சில மாதங்களாகப் படிப்பது குறைந்துவிட்டது. ஆனாலும் சுஜாதாவின் நாவல்கள், சிறுகதைகள், சொல்வனத்தில் வருபவைனு படிக்கிறேன். என்றாலும் கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிப்பது என்பது இப்போது இல்லை. இணையத்தில் அதுவும் தமிழ் தேசியத்தில்!
பதிலளிநீக்குஅது தெரியவில்லை. என் ஒன்று விட்ட தங்கை சரயு என்றொரு புத்தகம் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு நானும் அதற்கு ஒரு விமர்சனம் மாதிரி இப்னு எழுதியிருந்த நினைவு! அதற்கும் சரயு என்றே தலைப்பிட்டிருந்தேனோ என்று இப்போது சந்தேகம் வருகிறது!
நீக்கு// பாவம் செய்தால் மனப்பூர்வமாகப் பாவம் என்பதை உணர்ந்து திருந்தினால் பிராயச்சித்தம் செய்தால் மன்னிப்புக் கிடைக்கக் கூடும். ஆனால் நாம் இப்பிறவியில் அனுபவிப்பதே போன பிறவியின் தொடர்வினை! ஆகவே இப்போதைய பாவங்களும் கணக்கிட்டு அடுத்த பிறவிக்குத்தொடரலாம். :)))) //
பதிலளிநீக்கு// இல்லையே, கிடைக்கலாம் என்று சந்தேகமாகத் தானே சொல்றேன். அதுவும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் எனக்குஅதில் உடன்பாடில்லை. நம் கர்மவினை ஏழேழு பிறவிகளுக்கும் தொடரும் ஒன்று என்றே தோன்றுகிறது. //
கீதா சாம்பசிவம் அம்மா அவர்களுக்கு :
இதற்கு (1) பிராயச்சித்தம் செய்தால் மன்னிப்பு கிடைக்குமா...? (2) அடுத்த பிறவி என்பது உண்டா...? (3) இதெற்கெல்லாம் ஏதேனும் விளக்கம் உண்டா...? (4) இதெற்கெல்லாம் தீர்வு தான் என்ன...?
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு
மேற்படி விளக்கம் - கீழே உள்ள பதிவில் அறியலாம்... தெரியலாம்... புரியலாம்... நன்றி...
இங்கே சொடுக்கவும்... (07 வாசிக்கவும்...) நன்றி...
// வ மா படம் பார்த்திருக்கிறீர்களா? //
பதிலளிநீக்குஎன்ன இப்படி கேட்டு விட்டர்கள்...? ம்... இங்கு இன்னும் சக்கை போடு போடுகிறது...! படத்தின் அனைத்து பாடல்களின் வரிகளும் அத்துப்படி... + சில வசனங்களும்...!
// லதா... ஏன் அப்படி செஞ்சே? //
இந்த வசனம் (சந்தேகம்) தான் படத்தில் முக்கியமான திருப்புமுனை...! அதன் பின்... ஞாபகம் வந்து சிலவற்றை இங்கே சொல்கிறேன் :-
(1) அக்கா வரலையா...? அவ வர மாட்டா... அவளுக்கு அகம்பாவம் ஜாஸ்தி... ஆனா எனக்கு அவள்கிட்டே பிடிச்சதே அந்த அகம்பாவம் தான்...!
(2) பைத்தியக்காரி, நீ வேண்ணான விட்டுறதுக்கும் குடின்னா குடிக்கிறத்தும், நானென்ன அவ்வளவு பலகீனமானவனா...?
இதற்கும் குறள் உண்டு... ஆனா... இப்போதைக்கு அதே படத்தில் வரும் முதல் பாடலில் சில வரிகள் என்றாலும், சிந்திக்க வேண்டிய வரிகள் :-
உலகத்தின் வயதுகள் பலகோடி...
அதில் உருண்டவர் - புரண்டவர் பலகோடி...
உங்களின் இருப்பிடமோ ஒரு கோடி...
உயிர் ஓடிவிட்டால் பின்னர் வருமோடி...? வருமோடி…?
ஆ!...
நீக்குவருமோடி?..
ஒருமோடி..
திருமோடி..
தருமோடி..
குருமோடி..
இதுல ஏதோ சதி இருக்கு!...
எனக்கும் வசனங்கள் மனப்பாடம்! தாயைப்பற்றி சிவாஜி சொல்லும் வசனங்களும்!
நீக்குகரெக்ட் ஸ்ரீராம். நானும் அதைத்தான் சொல்ல நினைத்தேன். "அம்மாவை பார்க்க வேண்டுமென்றாலும் கூட அனுமதி வாங்கி கொண்டுதான் செல்ல வேண்டும். இதுதான் எங்க ஜமீன் கௌரவம், இல்ல கர்வம்!" அதுதானே?
நீக்குஆமாம் பானு அக்கா.
நீக்குவரு"மோடி"
நீக்குமோடி அரசியலுக்கு வருவது அன்றே அறிந்து இருக்கிறதே...
'படம் எடுத்து சம்பாதித்து'க் கொடுக்கிறது...//
பதிலளிநீக்குஹ்ஹா ஹா ஹா ஹா ஹா....உங்களை படம் எடுத்ததா!!!?!!!!!!
கீதா
// படம் எடுத்து..///
நீக்குசரி.. எடுத்த படம் எங்கே?..
அந்தப் படந்தாங்க இந்தப் படம்..ந்னு சொல்லக்கூடாது!..
பாவம் பாம்பு...
நீக்குபடம் முகத்திலேயே உறைந்திருக்கிறது!
உண்மையில் அவர் பஸ்ஸில் உரையாற்றியபோது இந்தக் கண்டிஷன்கள் பற்றி சொல்ல மறக்க, அருகிலிருந்த நான் நினைவுபடுத்தினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! //
பதிலளிநீக்குசூப்பர் ஸ்ரீராம். அவர் தான் இப்படி ட்ராவல்ஸில் அழைத்துச் செல்பவர் அவர் சொல்லிருக்கணும் இல்லையா..நீங்க நினைவு படுத்தலைனா பாவம் தெரியாதவங்க அவஸ்தைப்பட்டிருப்பாங்க...இல்லையா..
நம்மவர்கள் நிறைய இருப்பாங்க போல!!! உடும்பும் காட்சிப் பொருளா!! ம்ம்ம் பாவம்...
கீதா
//நீங்க நினைவு படுத்தலைனா பாவம் தெரியாதவங்க அவஸ்தைப்பட்டிருப்பாங்க...இல்லையா..//
நீக்குஅப்படி எல்லாம் இல்லை! மறுநாள் காலை கிளம்பும்போது அவசியம் அவர் சொல்லியிருப்பார்!!
விவரம் சொல்ல அமர்த்தப்பட்டவர் தமிழ் பேசினாரா (னீங்க கொடுத்த க்ளூதான்!!) என்று கேட்க நினைத்தேன் பின்னாடியே வந்துருச்சு அவ்வப்போது சில தமிழ் வார்த்தைகளும் பேசினார் என்று..
பதிலளிநீக்குநிபந்தனைகள் நீங்க நினைவுபடுத்தியும் கடைசில சீப்பு பேக்கட்டுக்குள்ள!!! ஹா ஹா ஹா ஹா ஹா
ஓ பாவம் செல்லம். குரங்காருடன் அதுவும் ரௌடிக் குரங்காருடன் மோத முடியுமா? பிஸ்கட் சண்டை வராமல் இருந்ததே அதுவே பெரிய விஷயம்.
நம்ம கண்ணழகி குரங்காரைப் பார்த்தால் குரைத்து அருகில் சென்று விரட்டுவாள். குரங்காரோ பல்லைக் காட்டி உறுமுவார்....இவள் மேல் பாய எத்தனிப்பார். ரொம்ப தைரியாசாலினு நினைப்பு. பில்டிங்க் ஸ்ட்ராங்க் பேஸ்மென்ட் வீக்கு கேஸு!!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா
கீதா
குரங்கார் பல்லைக் காட்டுவதே பீதியான காட்சி!
நீக்குமாடு செல்லம் ஏன் எலும்பும் தோலுமா இருக்கு. வயிறு மட்டும் பெரிதாக இருக்கிறதே.
பதிலளிநீக்குஓவியங்கள் அழகாக இருக்கின்றன.
நாங்களும் நந்திகிராம் ரோட்டுல திரும்பியாச்சு!
கீதா
ஓவியங்கள் அழகுதான். அவை போஸ்டராயிருந்தால் மாடுகள் அதைப் பிய்த்தாவது தின்றிருக்கும் - நம்மூர் போல!
நீக்குவசந்த மாளிகை படம் பார்த்ததில்லை ஸ்ரீராம். நம்ம ஜிவாஜி ரசிகைக் குழந்தை என்ன சொல்லிருக்காங்கனு பார்க்கணும். இனிதான் மற்ற கமென்ட்ஸ் பார்க்கணும்.
பதிலளிநீக்குபரிகாரங்கள் என்பது நம் மன ஆறுதலுக்கு என்று நினைக்கிறேன். தப்பு செய்தால் செய்ததுதான் என்று எனக்குத் தோன்றும்.//
ஹைஃபைவ்! ஸ்ரீராம். வினைப்பயனைக் கடக்க பாசிட்டிவ்னெஸ் நம்பிக்கை மனதிற்குத் தெம்பு தரும்...மற்றபடி செய்தது செய்ததே...அதுக்குத்தான் மனதை பாசிட்டிவாகத் தெம்பாக வைத்துக் கொள்ளச் சொல்லபப்டுவது என்று தோன்றும்.
கீதா
வசந்த மாளிகை பார்க்கலாம் கீதா.
நீக்குமனதைப் பாசிட்டிவாக வைத்துக் கொள்ளலாம்தான். சமயங்களில் அதை அசைத்துப் பார்க்கும் சந்தர்ப்பங்களும் வருகின்றன.
உங்கள் கவிதை வரிகள் இங்கும் பொருந்துகிறது. மேகம் கட்டி வருகிறது. நல்ல சில்.கொஞ்ச நேரத்தில் மழை மேகம் கடந்து போய்விடும். இன்றும் கூடக் கண்டிப்பாக மழை பெய்யும் என்று நினைத்தால் அதுவும் கரு கரு மேகம் சூழ்ந்து குளிராகக் காற்று வீசி...காற்று மேகத்தை இழுந்த்துக் கொண்டு சென்றுவிட்டது. வெயில் வந்துவிட்டது...என்ன ஒன்றே ஒன்று இங்கு வெயில் அதிகம் இல்லை.
பதிலளிநீக்குவரிகளை ரசித்தேன் ஸ்ரீராம்...அனுஷ் வேறு + !!!
கீதா
ஓ... அங்கும் மேகங்கள் ஏமாற்றுகின்றனவா? அங்கு மழை வந்தால்தான் எங்களுக்கு காவிரியில் கொஞ்சமாவது தண்ணீர்!
நீக்குஇந்த வருடம் இங்கும் மழை குறைவுதான்.
நீக்குஅதான் கவலையா இருக்கு! இந்த வருஷம் காவிரிக்குச் சீர் கொடுக்க நம்பெருமாள் வருவாரா? புரியலை/தெரியலை! கர்நாடகாவில் மழை பெய்தால் எங்களுக்குக் காற்று சேதி சொல்லும். இந்த வருஷம் காற்றே இல்லையே! :(
நீக்குஅச்சச்சோ... அங்கும் மழை குறைவா? என்ன ஆகுமோ!
நீக்குஸ்ரீராம் - பெங்களூரில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. புதிது புதிதாக வந்துகொண்டிருக்கின்றன. எல்லாத்துக்கும் காவிரி நீர்தான். எங்க வளாகத்துக்கும் காவிரி நீர் கனெக்ஷனாம்.
நீக்குஇனி காவிரி ஆணையம் இத்தனை டி.எம்.சி என்று சொல்லிக்கொண்டே இருக்கும். கர்நாடகம் தண்ணி இல்லை என்று பஞ்சப்பாட்டுப் பாடும். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியையும் மத்திய அரசையும் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். கடும் மழை வந்தால், தேக்கிவைக்க முடியாத நீர் காவிரியில் விடப்படும். இதுதான் கதையாக இருக்கும்னு நினைக்கறேன்.
தமிழர்கள் அனைவரும் நைஸாய் பெங்களுருவில் குடியேறி விட வேண்டியதுதான்... காவிரி இங்கு வராவிட்டால் என்ன, அவள் இருக்குமிடம் நாம் சென்று விடலாம்!!!
நீக்குநான் அறிந்தவரை எல்லோரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் "ஹவுஸ் ஓனர்" படம் பற்றியே விமரிசனம் எழுதுகின்றனர். வசந்த மாளிகை டிஜிடலில் வந்திருப்பது அரைகுறையாய்த் தெரியும். ஆனால் அது பார்த்ததாக யாரும் எழுதலை. நான் ஹிந்தியில் (ஹிஹிஹி, தமிழ்த் துரோகி!) ப்ரேம் நகர் பார்த்ததால் தமிழில் வசந்த மாளிகை பார்க்கலை; சென்னைத் தொலைக்காட்சியில் போட்டப்போக் கூடப் பார்க்கப் பிடிக்கலை! :)
பதிலளிநீக்குஹிந்தியில் ராஜேஷ் கண்ணா, ஹேமா மாலினி நடித்தார்களோ?
நீக்குஹேமா மாலினி கதாநாயகியாக நடித்த சீதா அவுர் கீதா தமிழில் எடுக்கப்பட்ட பொழுது அதில் வாணிஸ்ரீ கதாநாயகியாக நடித்தார். வாணிஸ்ரீ கதாநாயகியாக நடித்த வசந்த மாளிகை ஹிந்தியில் படமாக்கப்பட்டபொழுது அதில் ஹேமா கதாநாயகி. இரண்டு மொழி மாற்றங்களும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டன என்று நினைக்கிறேன்.
தெலுங்கிலும் ஹிந்தியிலும் பிரேம்நகர் என்றுதான் படத்தின் பெயர். தெலுங்கில் நாகேஸ்வரராவ்.நான் தமிழ் மட்டுமே பார்த்தேன். லரா படம் கேள்விப்பட்டதில்லை.
நீக்கு//லரா படம் கேள்விப்பட்டதில்லை.// வித்யா சுப்ரமணியம் கூட விமரிசனம் எழுதி இருந்தாங்களே! !!!!!!!!!!
நீக்குவசந்த மாளிகை படத்தில் வாணிஸ்ரீ அணிந்து கொண்டிருப்பது போல் முழங்கை தாண்டி வரும் சட்டை தைத்துக் கொண்டோம். சீ! சீ! இது முழங்கை மடிப்பில் அதிகம் அழுக்காகிறது என்று விட்டு விட்டோம்.
பதிலளிநீக்குசிவாஜிக்கு நடிப்பில் ஈடு கொடுத்த கடைசி கதாநாயகி வாணிஸ்ரீ.
அந்த படத்தில்தான் முதன் முதலாக ஸ்லோ மோஷன் டெக்னிக் பயன்படுத்தப்பட்டது என்று நினைக்கிறேன்.(கடவுளே! பா.வெ.மேடம், அதற்கு முன்பே ....... படத்தில் ஸ்லோ மோஷன் டெக்னிக் பயன்படுத்தப்பட்டு விட்டது என்று நெ.த. வராமல் இருக்க வேண்டுமே, காப்பாற்று).
இந்தப் படத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக வருவார்.
பானுமதி, நெல்லையார் சுமார் ஒன்றரை மணி அளவில் அத்தி வரதரை இரண்டாம் முறையாகத் தரிசிக்க வரிசையில் நின்றார். பார்த்துட்டு வந்தாச்சா என்னனு தெரியலை! ஆகவே நீங்க அவர் வரதுக்குள்ளே தைரியமா எல்லாத்தையும் சொல்லிடுங்க!
நீக்குஇரு முறை தரிசனம் முடிச்சுட்டு வம்புக்கு வந்தாச்சாம்! இனி உங்க பாடு, அவர் பாடு! :))))))
நீக்குஆஹா இரண்டு தடவை தரிசனமா. வரதா ஆஆஆ.
நீக்குஅதற்கு முன்னாலேயே ஏதோ படத்தில் பானுமதி அதுபோல முழங்கை வரை சட்டை போடவில்லையோ?
நீக்குஸ்ரீராம் பானுமதி அம்மா போட்டால் அது போர்த்தினால் போல இருக்கும்.
நீக்குவாணி ஸ்ரீ சட்டை எல்லாம் ஷர்மிளா டாகோர் ஸ்டைல்.
பானுமதி முழங்கை தாண்டி சட்டை அணிந்து கொண்டிருக்கலாம். ஆனால், பேஷன் என்பதை நடிகைகளை பார்த்து செய்து காபி அடிக்க வேண்டுமென்றால் அப்போது பிரபலமாக இருக்கும் நடிகைகளைத்தான் பின்பற்றுவார்கள், அம்மா நடிகை, பாட்டி நடிகை அணிந்து கொள்வதெல்லாம் பேஷன் ஆகாது. இது கூட தெரியவில்லை, ஹையோ ஹையோ!
நீக்குநான் பின்பற்றும் ஸ்டைலுக்காகச் சொல்லவில்லை.பொதுவாகச் சொன்னேன்.
நீக்குபயண அனுபவமும் படங்களும் நன்று. பாம்பினைப் போல உடும்பையும் வைத்து வேடிக்கைக் காட்டுகிறார்களா? செல்லத்தை உச் உச் எனக் குரல் கொடுத்திருந்தால் திரும்பி அழகாய் போஸ் கொடுத்திருக்குமே. பூனைகள், நாய்களை இப்படி அழைத்து போஸ் கொடுக்க வைத்திருக்கிறேன்:). சுகி சிவம் சொல்லியிருக்கும் பதில் சிறப்பு. வசந்த மாளிகை படம் சிறுவயதில் தியேட்டரில் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு.
அப்படி குரல் கொடுத்தும் அது பார்க்க மறுத்தது. ஒருவேளை அது அப்படி போஸ் கொடுத்ததோ என்னவோ...! நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஅடியம்மா.. ராசாத்தி..
பதிலளிநீக்குசங்கதி என்ன!.. நீ
அங்கேயே நின்னுக்கிட்டா
எங்கதி என்ன?..
அடேங்கப்பா.. ராசப்பா..
சங்கதி என்ன!.. நீ
ஆடையோட அணைச்சுக்கிட்டா
எங்கதி என்ன?..
இப்படியாக ஒரு டமுக்கான் பாட்டு -
வசந்த மாளிகையில்..
ஏனோ படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது....
தஞ்சாவூர் ஜூபிடரில் நூறாவது நாள் விழாவுக்கு நடிகர் திலகம், வாணிஸ்ரீ, நாகேஷ் எல்லாரும் வந்திருந்தார்கள்..
ஆனாலும் படம் பார்த்தது அதற்கு அப்புறம் ஒரு வருடம் கழித்து தான்...
தண்ணீர் இல்லாத் தலைநகர் மாதிரி
நகைச்சுவை வறண்டு கிடக்கும்...
ஆமாம் துரை ஸார்.. அப்படி ஒரு பாட்டுஇருந்தது. ஜுபிடரா? நான் ராஜா காலை அரங்கத்தில் பார்த்ததாக நினைவு?!
நீக்குஇரண்டாவது படம் வித்தியாசமான நிறத்தில் இருக்கிறதே ஜி
பதிலளிநீக்குஅது அந்த காலை நேரத்தின் குறைந்த வெளிச்சத்தால் இருக்கலாம் ஜி.
நீக்கு180 கருத்துக்கள் ...அருமை ..
பதிலளிநீக்குசரயு... என்ன அழகான பெயர்....எனக்கும் பிடிக்கும் இதுபோல அலக்நந்தா வும் ரொம்ப இஷ்டம் ...
சரயு நதியில் எடுத்த காட்சிகள் மிக அழகு ...
ராமரை தரிசித்துவிட்டீர்கள் மிக மகிழ்ச்சி ...
இந்த முறை மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே செல்லும் போது காவலர் சோதனையில் எனது பையில் இருந்த நூல் கண்டை கூட அனுமதிக்கவில்லை ..தூக்கி வீசிவிட்டார்கள் ..கடுமையான சோதனையாம்
நன்றி அனுபிரேம். அலக்நந்தாவும் அழகிய பெயர்.மீனாக்ஷி அம்மன் கோவிலில் இதுமாதிரி சோதனைகள் பலவருடங்களாய் நடக்கின்றன. முன்னர் மாதிரி விஸ்ராந்தியாய் உள்ளே ஸ்வாமியைத் தரிசிக்க முடியாது.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅழகான ஊர் பெயர். நதியின் பெயரும் மிக அழகு. ராமரும் சீதையும் நடமாடி புழங்கிய இடங்களை தரிசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். எல்லோருக்கும் கிடைக்காது இந்த பாக்கியம். தங்களுக்கு கிடைத்திருக்கிறது வாழ்த்துகள்.
மிக அழகான படங்கள்.மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை மனதை கவர்கிறது. ராமர் கோவில் கட்டுமான பொருட்கள் பற்றி தெரிந்து கொண்டேன். கோவில் விரைவில் முழுமை பெற ஸ்ரீ ராமபிரான் அனுகிரஹிக்க வேண்டும்.
சரயு நதியின் படங்களும் மிக அருமையாக உள்ளன. நதிக் கரையோரத்து செல்லத்தின் புகைப்படங்களும் அருமை. தங்களை திரும்பி பார்க்காததின் நோக்கம் என்னவோ? குரங்காரின் பிஸ்கட் தட்டிப்பறிப்பால் மனம் வாடியிருக்கிறதோ.! இது வேறு.. அது வேறோ.! சுவர்களை ஓவியங்கள் அலங்கரித்த படங்கள் மிகவும் அழகாக உள்ளது.
கண்டிப்பாக பரிகாரங்கள் நம் மன ஆறுதல்களுக்குத்தான்.நாம் செய்த பாவங்களின் பலனைத்தான் அனுபவிக்கும் போது நொந்து போகிறோம். எல்லாமே கிடைப்பதும் நடப்பதும் விதியின் செயல்தான். பிராயசித்தங்கள், பரிகாரங்கள் செய்திருந்தால் இவ்விதமெல்லாம் நடக்காமல் தவிர்த்திருக்கலாமோ என எண்ணுவது உசித்தமல்ல.. அப்படி செய்து நடக்காமல இருக்கவும் நம் விதி அந்த சமயம் அந்த மாதிரி ஒத்துழைக்க வேண்டும்.அந்த நேரம் நம் மூளையும் பாபங்களின் கடிவாளங்களில் சிக்கி எதையும் யோசிக்க இயலாமல் இயங்காது போகும்.
தங்களின் மழைக்கவிதை அருமை. மிகவும் ரசித்தேன்.
இங்கேயும் மழை மேகங்கள் அவ்விதந்தான் ஏமாற்றிக் செல்கின்றன.
நீண்ட நாள் கழித்து அனுஷ்கா கதம்பத்தை அழகு செய்திருக்கிறார். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா...
நீக்குசெம விரிவா பதில் எழுதி அசத்திட்டீங்க...
நன்றி.