1) ".............. வர இயலாத குழந்தைகள், உடல்நிலை முடியாதவர்களுக்கு அவர்களின் கிராமத்திற்கு சென்று, வீட்டிலேயே பயிற்சி அளிக்கிறேன்.இந்த வேலையை சந்தோஷமாக, சமுதாய நோக்கத்திற்காகவும், மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலன்களுக்காகவும் செய்து வருகிறேன்.
கடந்த இரண்டு ஆண்டில், இப்பணிக்காக, மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் பாராட்டைப் பெற்றேன். குழந்தைகளுக்கான பிசியோதெரபியில், பி.எச்டி., முனைவர் படிப்பும் படித்து வருகிறேன். பொது அமைப்புகளிடமிருந்து விருது கள், பாராட்டும் பெற்றுள்ளேன்.........."
சிறந்த திருநங்கை, சிறந்த பிசியோதெரபி நிபுணர் மற்றும் சமூக சேவகி விருது உட்பட, 16 விருதுகளைப் பெற்றிருக்கும் சோலு.
2) எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு தருவதே சிறந்த கடமை என்ற உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் எனக்கு கவர்னர் கையால் கிடைத்த விருது நிறைய உற்சாகம் தந்துள்ளது, சென்னை தாம்பரத்ததை அடுத்துள்ள சேலையூரில் வசிக்கும் 91 வயதாகும் ரெங்கநாத சர்மாவைப் பார்க்கவும் பாராட்டவும் மக்கள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றனர். தளரா உற்சாகம்.
3) கற்றுக் கொள்வதில் ஆண் என்ன, பெண் என்ன... கெட்ட விஷயங்களைத்தான் யாரும் கற்றுக் கொள்ளக் கூடாது. என் கணவரை, எங்கள் ஊர் பாரதி என சொல்லலாம். அந்தளவு பெண்கள் முன்னேற்றத்தில் முற்போக்காக யோசிப்பார். ஊரார் பேச்சை காதில் வாங்காமல், எனக்கு ஒரு நல்ல குருவாக இருந்து சொல்லிக் கொடுத்தார். அவர், எனக்கு கிடைத்த வரம்.
டிராக்டர் ஓட்டும், கரூர் மாவட்டம், ராமாக்கவுண்டனுாரைச் சேர்ந்த, 79 வயது மூதாட்டி, அம்மையக்காள்.
டிராக்டர் ஓட்டும், கரூர் மாவட்டம், ராமாக்கவுண்டனுாரைச் சேர்ந்த, 79 வயது மூதாட்டி, அம்மையக்காள்.
29-06-2019 சனிக்கிழமை டு 05-07-2019 வெள்ளிக்கிழமை வரை
ஒரு மீள் நோக்குப் பார்வை
கீதா ரெங்கன்
கீதா ரெங்கன்
கீதாவை இரு வாரம் முன் விமர்சனம் எழுத இயலுமா என்று நம் ஸ்ரீராம் கேட்க கீதாவிற்கு அந்த வாரம் முக்கியமான கல்யாணத்திற்கான பயணம் என்பதால் ஸ்ரீராம் கேட்டும் எழுத இயலாமல் போனதே என்ற வருத்தம். அந்த வாரம் பானுக்காவின் வாரமாகியது. சரி கீதாவிற்கு விமர்சனம் எல்லாம் எழுத வருமோ??? சந்தேகம்தான்! எனவே எதுவா இருந்தாலும் நாம “போட்டு வாங்கிப்” பேசித் தீர்த்துக்குவோம். சரியா!? “கும்மி” அடிங்க… எனக்குப் பிடித்த விஷயம். ஹிஹிஹி.
எபி எனும் செல்லப் பெயருடன் திகழும் எங்கள் ப்ளாக் அறிமுகம் ஆனதே சனிக்கிழமை பதிவான பாசிட்டிவ் செய்திகள் மூலமாகத்தான். எதையோ தேடியபோது சிக்கியது! அது மனதைக் கவர, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்து கதைகளும், சமையற்குறிப்புகளும் வெளியாகி இன்று பெரியதொரு நட்பு வட்டம் என்றாகி ஒருவரை ஒருவர் கலாய்த்து ஜாலி, ஜல்லி அடிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு எபி ஆசிரியர்கள் நண்பர் ஸ்ரீராம்தான் காரணம். மிகப் பெரிய நன்றி எபி!
எனக்கு முன் எழுதியவர்கள் எல்லோருமே நான் நினைத்திருந்த கருத்துகள் மற்றும். எபிக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் சொல்லிவிட்ட்தால். அத்தனையையும் அப்படியே நானும் வழிமொழிகிறேன். இது நம்ம வீடு. நம்ம வீட்டை நாம் தானே பாதுகாக்க வேண்டும்! தட்டிக் கொடுத்துக் கொண்டு, தூசி விழாமல் சுத்தமாக வைத்துக் கொண்டு அன்பு ததும்பும் தளமாக அலங்கரிப்போம்.
நல்லதொரு குடும்பம். பல்கலைக்கழகம்!
ஏற்கனவே அந்தந்தப் பதிவுகளில் கருத்துகளைச் சொல்லிவிடுவதால் இங்கு விமர்சனம் என்பதற்காக ஒரு சில வரிகளைச் சொல்லிவிட்டு எதிர்மறைகள் என்பதைவிட பரிந்துரைகளாகச் சிலவற்றை முன்வைக்கிறேன். முடிந்தால் ஆசிரியர்கள் செயல்படுத்தலாம்!
எச்சரிக்கை! என்னைப் பாடச் சொல்லாதீங்க நான் கண்டபுடி பாடிப்புடுவேன்! யாரும் இல்லை என்றால் நான் பாட்டு பாடிக் கொண்டேதான் எல்லாம் செய்வேனாக்கும். என் பாட்டில் மயங்கி….ஆ! யாரது எல்லாரும் பொன்னாடை, பூச்செண்டு எல்லாம் எடுத்துட்டு வராங்க… ஸ்ரீராம் ப்ளீஸ் எல்லார்க்கிட்டயும் சொல்லுங்க எனக்கு பிடிக்காது என்று. ஒரே வெக்கமா இருக்கு! அப்புறம் எனக்கு எழுத ஒரு வார்த்தை கூட வராதே!!!!!!!!! என்னை விட்டுடுங்க நான் நேரா என் ஃப்ரென்ட் ஏழரைய பார்க்கப் போகிறேன். (ஹப்பா ஏழரைனதும் எல்லாரும் ஓடிப் போய்ட்டாங்க!!!!)
சனிக்கிழமை
சனியன்று வெளியாகும் பாசிட்டிவ் செய்திகள் மிகவும் கவர்ந்த விஷயம். நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை. கல்லூரிக் காலத்திலிருந்தே விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு. கிராமங்கள் ஒவ்வொன்றும் தன்னிறைவு பெற்ற கிராமமாக வளர்ந்துவிட்டால் அல்லது அடுத்தடுத்திருக்கும் கிராமங்கள் இணைந்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக ஆகிவிட்டால் இன்று சென்னை மற்றும் பல நகரங்கள் அனுபவித்து வரும் தண்ணீர்ப்பிரச்சனை, இடப் பிரச்சனை, பொருளாதாரப் பிரச்சனைகள் என்று பலவும் இல்லாதிருந்திருக்கும். (கீதாக்காவும் ஒரு பதிவு போட்டிருந்தாங்க.) என் மனதில் ஊறியிருந்த இந்த எண்ணத்தை மேலும் வலுவூட்டுவது சனிக்கிழமை வெளிவரும் பாசிட்டிவ் செய்திகளில் இடம் பெறும் கிராமங்கள். தங்கள் தேவைகளை அரசியல் வியாதிகளைச் சார்ந்திராமல் தாங்களே நிறைவேற்றத் தொடங்கியுள்ளது மகிழ்வான விஷயம்.
பல சாதனையாளர்கள், நேர்மையாளர்கள், வறுமையிலும் சமூகத்திற்கு உதவுபவர்கள், நல்ல எண்ணமும் உள்ளமும் உள்ளவர்கள் என்று பல்வேறுபட்ட மனிதர்களை அடையாளம் காட்டி நம்மை ஒரு துளியேனும் ஊக்கம் பெற வைத்துச் சிந்திக்க வைக்கும் செய்திகள். எனவே தொடர்ந்து பாசிட்டிவ் செய்திகள் வெளிவர வேண்டும், அன்று கருத்துகள் குறைவாக இருந்தாலும், என்பதே விருப்பம். சனி வாரம் ஸ்திர வாரம்!
நல்லது செய்யும் போது அல்லது பேசும் போது அதைக் கொஞ்சம் தேன் தடவிக் கொடுத்தால் கூடுதலாக ரீச் ஆகும் என்பதன்படி, சனிக்கிழமை அன்று கும்மி அடிக்க ஏற்ற வகையில் கூடுதலாக விமர்சனம் பகுதியும் இடம் பெறத் தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட எல்லோருமே சொல்லிவிட்டார்களோ? வேறு ஏதேனும் ஸ்வாரஸ்ய பகுதி தொடங்கலாமே என்பது என் தனிப்பட்டக் கருத்து. நானும் சொல்ல யோசித்தேன் இப்போது டக்கென்று மனதில் தோன்றவில்லை. பாசிட்டிவ் செய்திகளுக்கு ஒரு பூங்கொத்து!
சென்ற வார சனிக்கிழமை அன்று மனதை மிகவும் நெகிழச் செய்தவர் சுமித்திரா தேவி. அடுத்து புத்திராம் பட்டு கிராமம் அரசை சார்ந்திராமல் தங்கள் கிராமத்துத் தொடக்கப்பள்ளியைத் தாங்களே நடத்துவது. அடுத்து தன்னந்தனியாக ஒரு ஏக்கர் நிலத்தில் நடவு செய்த ராஜலட்சுமி மெய்சிலிர்க்க வைத்தார். கிராமங்களும், விவசாயமும் நம் நாட்டின் முதுகெலும்பு.. இவை நலிந்தால் நாட்டின் வளமும் குன்றும் என்பது திண்ணம். நாலுவழிச்சாலைகள் என்று போவதை விட நிலங்களையும், கிராமங்களையும் கொஞ்சம் பாதுகாக்க வேண்டும் என்பது நாம் அரசிற்கு வைக்கும் வேண்டுகோள்..
ஞாயிறு
ஞாயிறு ஒளி(ப்பட)மழையில் நனையும் நாள்! படங்கள், அதற்கான தலைப்புகள் என்று களை கட்டும். என்ன படங்கள், எப்படியான படங்கள் வருகின்றன என்ற ஆர்வம் மேலிடும். சமீபகாலமாகச் சுற்றுலாப்படங்கள். நன்றாக இருக்கின்றன. பெரும்பாலானவர்கள் போகாத ஊர்.
பரிந்துரை: இன்னும் சற்று விவரங்களுடன் வரலாம். சுற்றுலாப் படங்களுடன் ஒரு சில ஸ்வாரஸ்யமான அனுபவங்கள், நினைவுகள் என்று எல்லாப் படங்களுக்கும் இல்லை என்றாலும் குறிப்பிட்ட சிலவற்றிற்கேனும் எழுதலாம். அப்படங்களுடன் ஸ்ரீராம் அல்லது கௌ அண்ணா உங்களுக்கான பசுமையான நினைவுகள் அல்லது ஸ்வாரஸியமான அனுபவங்கள் என்று நீங்கள் எடுத்த படங்கள் போட்டு எழுதலாம். (பானுக்காவும் இது போன்று சொல்லியிருந்தாங்க இல்லையாக்கா)
சென்ற ஞாயிறு அன்றைக்கான படங்கள் வித்தியாசமான படங்கள். கேப்ஷன்ஸும் நன்றாக இருந்தன. வீட்டு வடிவங்களும் முப்பரிமாணப் படமும் மிக அழகாக இருந்தன. நாகாலாந்து பழங்குடி மக்களின் வாழ்வியல் பற்றி அறியவும் முடிந்தது. மூங்கில் பொருட்கள் கவர்ந்தன. ஆஜ்டெக் மதம் Aztek மத சம்பிரதாயங்களும் சமூக வாழ்க்கையும் தான் உலக நாகரிகத்தின் முன்னோடி என்று சொல்லப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு பகுதியிலும் அப்பகுதியினர் தங்களின் இப்படியான பழைய சமூக வாழ்வியல்தான் நாகரிகத்தின் முன்னோடி என்று சொல்லிவருவது உண்டே. இதை கீதாக்காவும் குறிப்பிட்டிருந்தார்கள்.
ஒவ்வொரு நதிக்கரையிலும் அதைச் சார்ந்த பகுதிகளிலும்தான் மக்கள் சமூகம் தொடங்கியது. எனவே அந்தந்தப் பகுதிகளில் உருவான நாகரிகம் அந்தப் பகுதிக்கு முன்னோடியாக இருந்திருக்கலாம். முன்பு எல்லாக் கண்டங்களும் ஒட்டிக் கொண்டு இருந்தனதானே. அப்புறம்தானே மெதுவாக இயற்கையில் ஏற்படும் மாற்றங்களால் ட்ரிஃபிட்டிங்க் என்று ஆனது. மக்களும் இடம் பெயரத் தொடங்கினர். அதனால் எல்லா நாகரிகத்திலும் அடிப்படை ஒற்றுமைகள் இருக்கலாம். பதிவு நீண்டுவிடும் என்பதால் இங்கு இதற்கு முற்றுப் புள்ளி. ஆஜ்டெக் டக்கென்று புரியவில்லை ஆனால் அப்புறம் அதைப் பற்றி வாசித்தது நினைவுக்கு வந்தது.
படங்களின் தொகுப்பில் ஓரிரு படங்களைத் தவிர்த்திருக்கலாம்.
திங்கள்
என்ன சமையலோ எதிர்த்துக் கேட்க யாருமில்லை என்று எல்லோரும் இஷ்டம் போல விளையாடும் நாள். அப்படி விளையாட அனுமதியும் கொடுத்து, இப்படி நமக்கு ஒரு வாய்ப்பு தந்து நம் கைவண்ணத்தையும் வெளியிட்டுச் சிறப்பிக்கிறது எபி கிச்சன்! என்பதால் கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் இந்தக் கௌரவப் பிரசாதம் இதுவே எமக்குப் போதும்! என்று வெளுத்து வாங்குகிறோம். சந்தோஷமாக இருக்கிறது.
எல்லோருமே ஆவலுடன் எதிர்பார்க்கும் நாள். யாருடைய சமைல் குறிப்பு என்ன குறிப்பு என்பதும் எல்லோரும் இதில் ஆர்வமுடன் கலந்து கொள்வது என்பதும் பல சமயங்களில் கும்மியுமாகச் செல்வதும் எனக்கு மிகவும் பிடித்த நாள். அறிந்த குறிப்புகள் வந்தாலும் கூட அதில் சில சிறிய மாற்றங்கள் இருக்கும். அதை நான் குறித்துக் கொள்வதும் உண்டு. கோமதிக்காவின் வாழைக்காய் அப்பளம், அட நாம இதைச் செய்து சில வருடங்கள் ஆயிற்றே என்று நினைவூட்டியது.
யோசனை 1: எங்கள் குறிப்புகள் வெளியாகும் போது அதே போன்ற குறிப்பு (அதில் பயன்படுத்திய பொருட்கள், செய்முறையில் வித்தியாசம் இருக்கலாம் இல்லையா) எபி தளத்தில் முன்பு வெளியிட்டிருந்தால் அதன் சுட்டியையும் பதிவின் முதலிலோ, கடைசியிலோ தரலாமே.
யோசனை 2: கௌ அண்ணா நம்ம ஏரியாவில் கதைக்குக் கரு கொடுத்தது போல திங்க அன்று பதிவின் இறுதியில், ஏதேனும் பொருட்கள் கொடுத்து அல்லது வீட்டில் இவைதான் இருந்தன இதில் என்ன செய்யலாம் என்றோ அல்லது இது மீந்தது இதை வீணாக்காமல் என்ன செய்யலாம் என்றோ கொடுத்தால் நட்புகள் யாருக்கு முடிகிறதோ அவர்கள் அவரவருக்குத் தோன்றும் ரெசிப்பிக்களைச் செய்து, எத்தனை விதம் வேண்டுமானாலும் செய்யலாம், ஒவ்வொன்றையும் திங்கவுக்கு அனுப்பி இப்போது போன்று திங்க வில் பதிவிடலாம். போணியாச்சா என்றும் சொல்லலாம். கௌலாப்ஜாமூன் போல கற்பனையில் விரியும் புது புது குறிப்புகள் கிடைக்குமே! கௌ அண்ணா அல்லது ஸ்ரீராம் டேர்ன் எடுத்துக் கொண்டு கொடுக்கலாம். மீந்ததை உருமாற்றம் செய்வதை திங்க – தில்லு முல்லு என்று பெயர் சூட்டலாம். (பிறந்த குழந்தையான கீதாக்கா இதுல எக்ஸ்பெர்ட்டாக்கும்!!) கூடவே அந்த்த் தில்லு முல்லுக்கள் வீட்டில் என்ன விளைவுகளை!!!!!!!!! ஏற்படுத்தின என்றும் சொல்லலாம்.
இதுதான் தேங்காய் மைசூர்ப்பாக் என்று “அல்வா” கொடுக்காமல் அருமையான அக்மார்மார்க் தேங்காய் மைசூர்பாக் செய்து காட்டி அசத்தியிருந்தார் நெல்லை! அன்று எனக்கு கும்மி அடிக்க முடியாமல் போனதில் வருத்தம். அப்புறம் கமென்ட்ஸ் பார்த்த போது நெல்லையின் கலாய்த்தல்….வாங்க அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன் துரை. நிச்சயம் ரெசிப்பி போடுபவர்களின் வீட்டுக்குப் போனீங்கன்னா, படத்துல இருக்கற மாதிரிதான், அவங்க எழுதற மாதிரி சுவையா இருக்கான்னு செக் பண்ணிடலாம்” கர்ர்ர்ர்ர். நெல்லைதான் தே மைபா செய்தார் என்பதற்கான ஆதாரமாக, செய்த போது தன்னையும் சேர்த்து ஃபோட்டோ எடுத்து போடாததால் அவர் ஹஸ்பன்ட்தான் செய்திருப்பார் என்று தேம்ஸ் கரையில் ஆர்பாட்டம் செய்ய நினைத்தால் எனக்குக் கை கொடுக்க பூஸார் ஆப்சென்ட். நெல்லைதான் செய்தாரா என்று எப்படிச் செக் செய்வது? வேறு வழி தற்போதைக்கு இல்லாததால், அவர் வீட்டருகில் அழுதுவடிந்து கொண்டு ஓடும் அடையார் ஆற்றின் மீது சத்தியமாக நம்புகிறோம்!! அவர்தான் செய்தார் என்று ஹிஹிஹிஹிஹி!!! நெல்லைக்கு ஒரு பரிசு கொடுக்காமல் போனால் அவர் வீட்டு சாமி என்னிடம் “கா” விட்டுவிடுவார்! அவர்தானே சாட்சி!
இந்தாங்க நெல்லை சிரோட்டி மற்றும் நம்ம ஏஞ்சலின் ரெசிப்பி டெஸ்டட் புடலங்காய் தோசையும் எல்லோருக்கும் அப்படியே கொடுத்துடுங்க.
செவ்வாய்
கதை கதையாம் காரணமாம் நாள். மிக மிகப் பிடித்த நாள். இது ஒரு தனித்தன்மை வாய்ந்த நாள் என்றால் அது மிகையல்ல. பத்திரிகைகளில் நம் கதைகள் எதுவும் வெளிவர வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அப்படியே வந்தாலும் கருத்துகள், கலந்துரையாடல் என்று நம் கதை பற்றி எதுவும் அறியவும் வாய்ப்பில்லை. ஆனால் இங்கு வெளிவரும் போது அதைப் பற்றி கருத்துகள், கலந்துரையாடல் என்று நம் நட்புகள் அடித்து விளையாடுவது நமக்கு இன்னும் மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது. கதைகளுக்கான கரு கூடக் கிடைக்கவும் உதவுகிறது.
பத்திரிகைகளில் எழுதும், புத்தகங்கள் வெளியிடும் புகழ்பெற்ற நம் நட்பு எழுத்தாளர்கள், புகழ்வாய்ந்த எழுத்தாளர்களுக்கு நிகராக நம் நட்புகளின் நேர்த்தியான படைப்புகள் என்று கதைகள் பல வெளியிட்டு பெருமைப்படுத்தி, ஊக்குவித்து எழுத்தாளர்களை உருவாக்கும் எபிக்குப் பாராட்டுகள். வார்த்தைகள் இல்லை வேறு சொல்லிட.
அப்படியானவர்களுடன், என்னைப் போன்ற கத்துக்குட்டிகளின் கதைகளையும் வெளியிட்டு, ஊக்குவித்து, உற்சாகம் கொடுத்து, வளர்த்து வரும் எபிக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். மனதில் நெகிழ்ச்சியும் கூடவே. இதுவும் இப்படியே தொடர வேண்டும்.
அப்படியானவர்களுடன், என்னைப் போன்ற கத்துக்குட்டிகளின் கதைகளையும் வெளியிட்டு, ஊக்குவித்து, உற்சாகம் கொடுத்து, வளர்த்து வரும் எபிக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். மனதில் நெகிழ்ச்சியும் கூடவே. இதுவும் இப்படியே தொடர வேண்டும்.
நானும் பானு அக்காவும், துரை அண்ணா, பரிவை சே குமார் போன்றவர்கள் ப்ரொஃபஷனல் எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்கள் என்றும் குமாரின் கதைகள் ஆங்காங்கே வெளிவருகின்றன இன்னும் அவர் வெளியில் அறியப்பட வேண்டும் என்றும், அது போன்று துரை அண்ணாவும் ஊடகப் பத்திரிகைகளுக்கு எழுதலாம் என்றும் பேசிக் கொள்வதுண்டு. அண்ணாவும் கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டும். இவர்களோடு நான் சொல்லுவது பானுக்காவும் இப்படியான எழுத்திற்குச் சொந்தக்காரர் என்று.
எபிக்கும், நம் நட்புகள் அனைவருக்கும். இணையத்தில் வாசிக்கப் பலருக்கும் சிரமமாக இருக்கலாம். இந்தச் சுட்டி பலருக்கும் தெரிந்திருக்கலாம். இருந்தாலும் என்னால் இயன்ற ஒரு சிறிய பகிர்வு.
சிறிய யோசனை: தொடர் கதை என்றிருந்தால் நம்ம ஏரியாவையும் பயன்படுத்திக் கொள்ளலாமோ? அந்தச் சுட்டியை, கதையின் சில வரிகளுடன் இங்கு கொடுத்துவிட்டால் எல்லோரும் அங்கும் சென்று வாசிப்பார்கள் இல்லையா? அது வொர்க்கவுட் ஆகுமா என்றும் யோசிக்கலாம்.
கிராமத்துக் கதாபாத்திரங்கள், வாழ்வியல் எல்லாம் ஒரு திரைப்படம் போன்று, காட்சிகளை நுணுக்கமாக நம் கண் முன் காண்பது போன்று மனதில் விரிய வைக்கும் கதைகளுக்குச் சொந்தக்கார்ரான நம் துரை அண்ணாவின் கதை தாகம். தாக சாந்தி என்று கருத்துரையில் அனு சொல்ல அதை நெல்லையும் அட அது கூட நல்ல தலைப்பாக இருக்கிறதே என்று சொன்னது எனக்கும் அது நல்ல தலைப்பு என்று தோன்றியது. அருமையான கதை. ஒரு குடும்பத்தின் அன்பும் பாசமும் இழையோடியது. ஊர் கூடித் தேர் இழுப்பது போல எல்லோரையும் அரவணைத்துக் குடும்பத்தைக் காத்த பெரியப்பா ஆறுமுகம் இறைவனடி சேர்ந்ததும் நடக்கும் சம்பிரதாயச் சடங்குகள் வழி அவர் இன்னும் அந்த வீட்டில் அவர்களோடு அரூபமாக இருக்கிறார் என்று சொல்லிய கதை. அருமை.
புதன்
புதன் அருமையான கும்மி நாள்!. கௌ அண்ணாவின் ஆட்சி! நகைச்சுவை நாள் என்றும் சொல்லலாம் என்றாலும் கூடவே சிந்திக்கவும் வைக்கும் கருத்துகளும் இடம்பெறும். பல தலைப்புகளில் வந்த புதன், அப்புறம் கேள்வி பதில்கள் நாளாகி கேள்வியின் நாயகியின் நாளாக மிளிர்ந்து எல்லோரும் பிசியாகிவிட்டதாலோ என்னவோ கேள்விகள் குறைந்துவிட இப்போது கேள்விகள் சில வந்தாலும் கூடவே பகுத்தாய்வுக் கேள்விகள் கருத்துகள் என்று வருவது மிகவும் சிறப்பாக உள்ளது. கௌ அண்ணாவுக்குப் பாராட்டுகள்.
கலகலகல புதன் சமீபத்தில் லகலகலகலக என்றும் மாறி நட்பேயார் நம்முடன் உலாவி வருகிறார். ஜாலியான, ஹைடெக் பேயாரும் கூட!!! அவருக்கு ராரா!! (இது மலையாள வெர்ஷன் செம பாட்டு) அவ்வப்போதேனும் வந்து ஏதேனும் ஜோக், காமெடி செய்துவிட்டுப் போக வேண்டும் என்று அன்புக்கட்டளை எங்களிடமிருந்து!
சென்ற புதன் பேயாரிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு செம ஜாலி பதில்கள் பேயார். ஜிஞ்சு ஜிஞ்சு ஜமைக்கா! ட்ராஃபிக் ஜாமே கிடையாதாம். கொடுத்துவைத்தவர்!. அங்கும் கல்யாணம் எல்லாம் உண்டா எப்படி இருக்கும் என்று கேட்க நினைத்து மறந்துவிட்டேன்! அம்மாப் பெண்ணுக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு; இப்படித்தான் சிக்கனமானக் கல்யாணம்! என்று இருக்குமோ? வீடு கட்டற பிஸினஸ் எதுவும் இல்லை! வாட்சப் குழுமம் வேறு தொடங்குவாங்களாம்! ஹை! அவங்க மொழி என்னவா இருக்கும்னு ஆர்வம்!
கல்யாணச் செலவுகள் பற்றி கீதாக்கா ஒன்று சொல்லியிருந்தார். ஒரு பணக்கார நகைக்கடை வியாபாரி வீட்டுக் கல்யாணம் என்று வீடியோ ஒன்று வாட்சப்பில் வந்தது பற்றி. எனக்கும் வந்தது. பார்த்த போது வந்தவர்களுக்கு எல்லாம் தங்கச் சங்கிலி கொடுக்கிறாங்க என்றால் எனக்குப் பல சந்தேகங்களை எழுப்பியது. இவர் வரி கட்டுகிறாரா? வரி ஏய்ப்பு முடியாது என்றெல்லாம் சொல்லப்பட்டதே! இப்படி ஆடம்பர திருமணங்கள் நடத்தப்பட்டால் அங்கு உடனே வருமான வரி அதிகாரிகள் புகுந்துவிட வேண்டாமோ?!! என்னவோ போங்க!
PAC உரையாடல்கள் என்று கூர்ந்து கவனிக்கச் சொல்லிக் கொடுத்திருந்த உரையாடல்கள் மிக மிக அருமை. நல்ல சிந்திக்க வைக்கும் கருத்துகள். அடுத்த வாரம் வரப் போகும் உரையாடல்கள், கருத்துகளுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். ஐ ஆம் ஓகே யு ஆர் ஓகே புத்தகத்தை முன்பு வாசித்திருக்கிறேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பானுக்காவும் வாசிக்க இருப்பதாகச் சொல்லியிருந்தார். இது இணையத்திலும் இருக்கிறது. இதோ சுட்டி. வாசிக்க விரும்புபவர்கள் இதை க்ளிக் செய்து வாசிக்கலாம்.
வியாழன்
வியாழன் ஸ்ரீராமின் நாள். மணக்கும் கதம்பமாகப் பல தகவல்கள், அவர் கவிதைகள் என்று கலந்து கட்டி வரும். வாசித்த புத்தகங்களில் ரசித்த வரிகள், யார் எழுதிய புத்தகம் என்று அறிமுகங்களும் இருக்கும். செல்லங்கள் பற்றியும் படங்களுடன் ரசிக்கும் தலைப்புகள், விஷயங்கள், அனுபவங்கள் என்று மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கும்.
தன் கடைசி தருணங்களில் செண்பகம் ஸ்ரீராம் வீட்டு வாசலில் கிடந்து, அவர் கொடுத்த அரிசியையும், தண்ணீரையும் கூடத் தொடாமல் உயிர் நீத்ததைப் படங்களுடன் சொல்லியிருந்த போது தேதியைப் பார்த்தால் 12… சரியாக அவர் காசிக்குச் சென்று வந்து இரு மாதங்கள் ஆகியிருந்ததையும் இணைத்து எண்ண வைத்தது. அவள் சொல்ல வந்தது “திருப்தி! தாமதமாக நடந்தாலும் எல்லாம் நல்லதே நடக்கும்.” என்ற செய்தியாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.
தன் கடைசி தருணங்களில் செண்பகம் ஸ்ரீராம் வீட்டு வாசலில் கிடந்து, அவர் கொடுத்த அரிசியையும், தண்ணீரையும் கூடத் தொடாமல் உயிர் நீத்ததைப் படங்களுடன் சொல்லியிருந்த போது தேதியைப் பார்த்தால் 12… சரியாக அவர் காசிக்குச் சென்று வந்து இரு மாதங்கள் ஆகியிருந்ததையும் இணைத்து எண்ண வைத்தது. அவள் சொல்ல வந்தது “திருப்தி! தாமதமாக நடந்தாலும் எல்லாம் நல்லதே நடக்கும்.” என்ற செய்தியாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.
சமீபத்தில் காசிப்பயணச் செய்திகளும், கூடவே சுகிசிவம் கருத்துகள், இடையில் ஸ்ரீராமின் கவிதைகள் என்று அணிவகுக்கின்றன. ஸ்ரீராமின் கவிதைகள் அசத்தலாக இருக்கும். நான் பொறுக்கி வைத்துக் கொள்வது வழக்கம்.
நீங்கள் வாசித்த புத்தகங்களையும் முன்பு போல் அவ்வப்போது பகிருங்கள். முன்பு கூடவே செல்லங்களின் படங்கள் போட்டு அவர்களின் கமென்ட்ஸும் இருக்கும். அதையும் இடையிடையே தொடருங்கள்.
அனுஷ், தமனாக்கா படங்கள் இல்லாமல் வியாழன் வந்தாலும் கூட அவர்களின் பெயர்கள் கருத்துகளில் இடம் பெற்றுவிடும்! அதிகம் சொல்லவில்லை! கைக்கு செக் போட்டுவிட்டேன்! ஹிஹிஹி.
இந்த வாரம் வியாழனில் காசிப்பயணக் குறிப்புகளினூடே எனக்கு மிகவும் பிடித்த படங்கள் – நதி-சரயு, (அழகான பெயர் பிடித்த பெயர்) செல்லங்கள் என்று இடம் பிடித்திருந்தன. படங்கள் அம்சமாக இருந்தன. சரயு நதியில் சூரிய ஒளி பட்டு தகதகவென்று செம படம்!
செல்லங்கள் செம க்யூட்! ஸ்ரீராமின் பயணக் குறிப்புகள் கோயில் பற்றியும் கூடவே பல ஸ்வாரஸ்யமான நிகழ்வுகள், திங்க படங்கள், செல்லங்கள், நதிகள், இடங்களின் படங்கள் அதற்கான கேப்ஷன்ஸ் என்று ஸ்வாரஸ்யமான ஜனரஞ்சகமான பதிவுகள். தகவல்களுடனும் அதே சமயம் கும்மி ஜல்லி என்று புகுந்து விளையாடியிருக்கலாம் என்றாலும் சமீபகாலமாக நானும் அதிகம் வர இயலவில்லை. தேம்ஸ் காரர்களும் பிஸி.
செல்லங்கள் செம க்யூட்! ஸ்ரீராமின் பயணக் குறிப்புகள் கோயில் பற்றியும் கூடவே பல ஸ்வாரஸ்யமான நிகழ்வுகள், திங்க படங்கள், செல்லங்கள், நதிகள், இடங்களின் படங்கள் அதற்கான கேப்ஷன்ஸ் என்று ஸ்வாரஸ்யமான ஜனரஞ்சகமான பதிவுகள். தகவல்களுடனும் அதே சமயம் கும்மி ஜல்லி என்று புகுந்து விளையாடியிருக்கலாம் என்றாலும் சமீபகாலமாக நானும் அதிகம் வர இயலவில்லை. தேம்ஸ் காரர்களும் பிஸி.
சுகி சிவம் அவர்களின் கருத்து மிகவும் அருமையான கருத்து. கவிதையும் மிகவும் ரசித்தேன். இந்த வியாழன் செம சில்!!! எல்லோருக்கும் புரிந்திருக்கும்!!!!!! ஹிஹிஹி. ஸ்ரீராமுக்கு ஒரு போனஸ்!
வெள்ளிக்கிழமை
என்னோடு பாட்டு கேளுங்கள் என்று எஸ்பிபி பிரியர் ஸ்ரீராம் டே! இனிய வெள்ளி. இசை கேட்டால் புவி அசந்தாடும்தானே! நான் ஆவலோடு எதிர்பார்ப்பேன். இன்று என்ன பாடலாக இருக்கும் என்று.
பல அறிந்திராத, கேட்டிராத பாடல்களை இங்குதான் ஸ்ரீராம் வாயிலாகத்தான் அறிகிறேன். சமீப காலமாகக் கொஞ்சம் கேட்டிருந்த பாடல்களும் வருகின்றன. எனக்குக் கொஞ்சம் வேலையும் வைக்கும் பாடல்களும் வரும். கூடவே படம், இசை, இசையமைப்பாளர் நடிகர்கள், காட்சிகள் என்று பல விவரங்களும் வரும். அதற்கு கருத்துகளில் செமையா பல தகவல்கள், கிசுகிசுக்கள் என்று வரும். நெல்லையும், பானுக்காவும் விரல் நுனியில் சிகே வைத்திருப்பாங்க போல! அள்ளித் தெளிப்பாங்க. துரை அண்ணாவும், டிடியும் பல பாடல்களைச் சொல்லுவாங்க. இப்படிக் களை கட்டும் நாள்.
பல அறிந்திராத, கேட்டிராத பாடல்களை இங்குதான் ஸ்ரீராம் வாயிலாகத்தான் அறிகிறேன். சமீப காலமாகக் கொஞ்சம் கேட்டிருந்த பாடல்களும் வருகின்றன. எனக்குக் கொஞ்சம் வேலையும் வைக்கும் பாடல்களும் வரும். கூடவே படம், இசை, இசையமைப்பாளர் நடிகர்கள், காட்சிகள் என்று பல விவரங்களும் வரும். அதற்கு கருத்துகளில் செமையா பல தகவல்கள், கிசுகிசுக்கள் என்று வரும். நெல்லையும், பானுக்காவும் விரல் நுனியில் சிகே வைத்திருப்பாங்க போல! அள்ளித் தெளிப்பாங்க. துரை அண்ணாவும், டிடியும் பல பாடல்களைச் சொல்லுவாங்க. இப்படிக் களை கட்டும் நாள்.
இன்றைய வெள்ளிக்கிழமைப் பாடல்கள் வாவ்! செம பாடல்கள். எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்கள். மனோஜ் கியான் நன்றாகவே இசையமைத்திருக்கிறார்கள். இவர்களைக் குறித்தும் ஸ்ரீராமின் பதிவின் மூலம்தான் அறிந்தேன். 'அந்தி நேரத் தென்றல் காற்று' இசையமைப்பும் சரி, 'தோல்வி நிலையென' பாடலின் இசையமைப்பும் சரி அருமை. பாடல்வரிகளும் மிக மிக அருமை. வரிகளையும் மிகவும் ரசித்தேன். இன்று பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேதான் வேலைகள் செய்தேன்.
இன்று பானுக்காவின் பிறந்த நாளுக்கு அவர் விருப்பமாகக் கேட்டிருந்த 'தோல்வி நிலையென' பாடலை பகிர்ந்தது மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது. முன்பு இலங்கையில் கூட இப்படி பிறந்தநாள் அன்று டெடிக்கேட் செய்யும் பாடல்கள் ஒலிபரப்பப்படும்.
அப்படி நேயர்விருப்பமாக வெள்ளி அன்று பாடல்கள் பகிரலாம் ஸ்ரீராம். நன்றாக இருக்கிறது. பிறந்தநாளும் சேர்ந்து கொண்டால் டெடிக்கேட் செய்துவிடலாம். இதைச் சொல்ல நினைத்திருந்தேன். நீங்களே தொடங்கிவிட்டீங்க.
பானுக்காவின் பிறந்த நாளுக்கு நம் சார்பில் இப் புத்தகங்கத்தின் சுட்டியை இங்குப் பகிர்கிறேன்.
எபியில் நம்மை ஊக்குவித்து நம்மிடம் இருந்து கேட்டுப் பெறும் பதிவுகளை ஸ்லாட் பார்த்து ப்ளாகரில் செட் செய்து என்று தன் வேலைப் பளு டென்ஷனுக்கிடையிலும் எப்படிச் செய்கிறார் ஸ்ரீராம் என்று வியக்க வைக்கும் அளவிற்கு எபியை நடத்திச் செல்லும் ஸ்ரீராமுக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! எனக்கும் விமர்சனம் எழுத வாய்ப்ளித்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீராம் அண்ட் கௌ அண்ணா! மற்றும் எபி ஆசிரியர்கள்.
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க!!!!
வெள்ளி அன்று விமர்சனம் முடிவதால் எல்லோருக்கும் ஒரு பாட்டும் பகிர்கிறேன். எனக்குப் பிடித்த பாடல். ஹிட் பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். கேட்டுவிட்டுச் சொல்லுங்க.
ஜோ மோண்டே சுவுசேஷங்கள் – நீலாக்ஷம் பாடல். சத்யன் அந்திக்காடு டைரக்ஷன். இசை வித்தியாசாகர். ஹிட் பாடல். ஆரம்ப இசை அருமை….அருமையான பாடலை வீடியோவுடன் தைரியமாகப் பார்க்கலாம்! அருமையான சீன்…மனம் கவரும் நம்மை ஏதேதோ நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும்
தில்லையகத்து கீதாவா? வந்திருக்கும் நண்பர்கள், இனி வரப்போகும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா. நல்வரவும், வணக்கமும்
நீக்குகீதாக்கா நான் இல்லாதப்ப நீங்க வரீங்க...அதான் தனியா இருக்கீங்க.. ஹிஹிஹி...ஸ்ரீராம் வந்துவிட்டாரே
நீக்குஸ்ரீராம் அந்த போனஸ் செல்லக்குட்டி உங்களுக்கு!!!!!
பூங்கொத்து எல்லாம் அன்புபரிசுகள்...!!!
கீதாக்கா அண்ட் எல்லோருக்கும்....நான் இப்ப ரயிலில்.... சென்னை சேர்ந்ததும் இரவுக்குள் எப்படியேனும் பதில் கொடுத்துவிடுகிறேன்...அங்கும் வேலை கள் இருக்கு. நாளை பெரிய கூட்டம் நாங்கள் கிளம்புவதால் காலை வீட்டில் டிபன் செய்யணும் எல்லோருக்கும்...எத்தனை பேர் என்று கணக்கு இன்னும் வரலை..
கீதா
கீதா... இனிய காலை வணக்கம். பிஸியான ஷெட்யூலிலும் வந்து முகமன் கூறிச் சென்றிருக்கிறீர்கள். நன்றி.
நீக்குபேசாம கீதா ரங்கன், அவர் கணவரை, இரயில்வேயில் வேலை பார்க்கச் சொல்லியிருக்கலாம். எவ்வளவு முறை பயணித்தாலும் இலவசம். அவ்வளவு தடவை பயணிக்கிறீங்க. நான் இங்க இருந்தால் நீங்க அங்க, நான் அங்க வந்தால் நீங்க இங்க..இப்படிப் போயிக்கிட்டிருக்கு
நீக்குதாம்பரத்திலிருந்து பீச் ஸ்டேஷன் சென்று வருவது போல பெங்களூருவுக்கும் சென்னைக்கும் சென்று வருகிறார்.
நீக்குஹாஹாஹாஹாஹா சிரித்து விட்டேன்..நெல்லை அண்ட் ஸ்ரீராம்....என்ன செய்ய நெருங்கிய உறவுகளில் கல்யாணம்....விட்டுக்கொடுக்க முடியாது...நான் தான் எல்லாத்துக்கும் அட்டெண்டன்ஸ்...அதான்..
நீக்குகீதா
முதல் செய்தி அரைகுறையாகப் படிச்சிருக்கேன். மற்றவை பார்க்கணும் விமரிசனம் படிக்கணும். துரைக்கு இன்னமும் நெட்பாக் கிடைக்கலையோ? காணோமே?
பதிலளிநீக்குஅதுதான் நானும் பார்க்கிறேன்.
நீக்குநான் வந்தால் அன்னிக்குனு யாரும் எட்டிக் கூடப்பார்க்கிறதில்லை. நம்ம "நட்பேய்" உட்பட! தனியா இருக்கணும் இல்ல! நட்பேயாரே, எங்கே போனீங்க? துணைக்கு யாரானும் வேணுமில்லையா?
பதிலளிநீக்குநானிருப்பதை நீங்கள் அறியவில்லையா?!!
நீக்குஸ்ரீராம் இருக்குமிடத்தில் பேய் வராது போலிருக்கு. ஜெய் ஸ்ரீராம்!
நீக்கு//ஜெய் ஸ்ரீராம்!// - ஜெய் காளி... இதுதான் இப்போ லேடஸ்ட் டிரெண்டு...ஹாஹா.
நீக்கு@கீதா சாம்பசிவம் மேடம் - சனிக்கிழமை நான் வர தாமதமாகும். இன்னும் உங்க இடுகைகளுக்கே நீங்க மறுமொழி கொடுக்கலை. இதோ இப்போ காணாமல் போனால் திரும்ப 4 மணிக்குத்தான் வருவீங்க. அப்புறம் 1 மணி நேரத்துல காணாமப் போய் மாலை 7 மணிக்கு வரலாம் இல்லை வராமலும் போகலாம்.
காலை வேளையில் இப்போல்லாம் கணினியில் உட்காருவதே பெரிய விஷயம். பதில் எல்லாம் கொடுத்தேன்னா ரொம்ப நேரமாகும். தினசரி நடவடிக்கைகளில் பெருத்த அளவில் மாற்றம் என்பதால் காலை அதிக நேரம் உட்காருவதில்லை. மத்தியானத்தோடு சரி!
நீக்கு//ஸ்ரீராம் இருக்குமிடத்தில் பேய் வராது போலிருக்கு. ஜெய் ஸ்ரீராம்!//
நீக்குபேய் மிராக்கிள் லீவில் ச்சே... மெடிக்கல் லீவில் சென்றுள்ளது போல! ஆளைக்காணோம்!
ஒருவேளை காசு சோபனா புதுசா ஓர் ஆ"சிரி"யர் இந்தக் குழுவில் சேரப் போறதாச் சொன்னாங்களே! அது நம்ம நட்பேய் தானோ? நம்ம நட்பேய் அதற்காக ஏற்பாடுகள் செய்துக்கப் போயிருக்காரோ?
நீக்குநானும் பேயாரை ரொம்ப மிஸ் பன்றேன்...ஹஹாஹா
நீக்குகீதா
கீதாக்கா ஹாஹாஹா ஒரு வேளை பிளாக் தொடங்கப் போறாரோ என்னமோ...அதுக்கு தெக்கு நிக்கி கத்துக்கணும் னு போயிருக்கார்.. போல..
நீக்குகீதா
அப்பாடா, ஶ்ரீராம் வந்திருக்கார்.
பதிலளிநீக்குஅதானே பார்த்தேன்!
நீக்குசம்ஸ்கிருதத்தாத்தா தான் புதியவர். மற்றபடி முதலும் கடைசியும் படிச்சது. டிராக்டர் ஓட்டும் பெண் முகநூலில் கூட வந்திருந்தார்.
பதிலளிநீக்குஅன்பு ஸ்ரீராம், கீதா மா,இன்னும் வரப்போகிறவர்களுக்கு இனிய காலை வணக்கம்.
நீக்குஸோலு, அன்பு திரு நங்கையின் ஸெவை மிகவும் போற்றத்தக்கது. இனிமேல் துன்பங்கள் எதுவும் எதிர்கொள்ளாமல்
வாழ்வு செல்லட்டும்.
தாம்பரம் ஸ்ரீ ரங்கனாத சர்மா அவர்களுக்கும் சிரம் தாழ்த்தி நமஸ்காரங்கள் செய்கிறேன். உத்தமமான ஆத்மா.பார்க்கவே ஏதோ முனிவர் போல இருக்கிறார்.
அடுத்தது tractor ஓட்டும் அம்மையம்மாள். அதுவும் 79 வயதில் என்ன ஒரு அதிசயம். எத்தனை உழைப்பு. எப்படித்தான் தேடி எடுத்தீர்களோ.
கண்ணெரிச்சல் இருப்பதால் நிறையப் படிக்க முடிவதில்லை.
மிக மிக நன்றி ஸ்ரீராம்.
வாங்க வல்லிம்மா...
நீக்குஇனிய காலை வணக்கம்.
கண்ணெரிச்சலா? என்ன ஆச்சு?
விடாமல் ஓடும் ஏ ஸீ தான் காரணம். உடலில் நீர்ப்பற்றாக்குறை.
நீக்குஅது வெவேறு வடிவங்களில் படுத்தும் ஸ்ரீராம். நன்றி மா.
வல்லிம்மா..இப்படி பகிர்ந்துகொள்வது மிகவும் உபயோகமா இருக்கு. நான் சமீபத்தில் பெங்களூர் 3 வாரங்கள் இருந்த போது, என் தின அளவான 3 லிட்டர் தண்ணீருக்குப் பதில் 1 லிட்டர் அல்லது அதற்கும் குறைவான தண்ணீரே அருந்தினேன். அங்க மொபைல் பார்க்கும்போது பயங்கர கண் எரிச்சல். கண்ணில் நீர் வழியும். காரணம் தெரியாமல் இருந்தேன். இங்கு வந்த பிறகு 3 லிட்டர் என்பதை வழக்கப்படுத்திக்கொண்டேன். கண் எரிச்சல் மாயம். இனி கவனமாக இருப்பேன்.
நீக்குதண்ணீர் குறைந்தால் கண் எரிச்சல், யூஉரின் போகும் போது எரிச்சல் எல்லாம் வரும்...
நீக்குஏசியில் இருந்தாலும் தண்ணீர் நிறைய குடிக்கணும்...பெங்களூர் வேதர் சில்லுன்னு இருக்கு...இன்று கூட குப்பம் வரும் வரை செம சில்... ரயிலில் எல்லோரும் மின்விசிரியை ஆப் செய்தார்கள். அது ஓடிக்கொணபிருந்த இடத்தில் இருந்தவங்க போர்திக் கொண்டிருந்தார்கள்...நான் மட்டும் விதிவிலக்கு ஹிஹிஹி..சில் ரொம்ப பிடிக்கும்..உடம்பும் ஒத்த்துக்கொள்ளும்....
வல்லிம்மா டேக் கேர் அம்மா
கீதா
விமரிசனம் கொஞ்சம் நீளம் என்றாலும் சுவையான நீளம். வாழ்த்துகள் தி/கீதா. ஆனால் பதில் சொல்ல இன்னிக்கு வர மாட்டார் என நினைக்கிறேன். :(
பதிலளிநீக்குசுருக்கமாக எழுத அவருக்கு வருமா
நீக்குஎல்லோருக்கும் சுருக்கி எழுத வராதே ஜிஎம்பி ஐயா! நானும் கீதா ரங்கனைப் போல் நீளமாக எழுதும் ஆள் தான். இங்கே விமரிசனம் சுவையாக இருக்கிறது அலுப்புத் தட்டாமல் அதைத் தான் சொல்லி இருக்கேன்.
நீக்குசிலர் சுருக்கமா எழுதினா நல்லாயிருக்காது! சிலர் நீளமா எழுதினா நல்லாயிருக்காது!!
நீக்கு@ஸ்ரீராம் - என்ன எதோ வசனத்தைக் காப்பி அடிச்சு எழுதினமாதிரி இருக்கு? ரஜினி, நான் குண்டானா நல்லா இருக்காது, பிரபு இளைத்தால் நல்லா இருக்காதுன்னு ஒரு படத்துல சொல்வாரே..
நீக்குமனதில் இருந்திருக்க வேண்டும்! எழுதும்போது நினைவில் இல்லை. படிக்கும்போது நினைவுக்கு வருகிறது!
நீக்குஜி எம்பி சார் உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
நீக்குகீதாக்கா, ஸ்ரீராம் உங்களுக்கும் மிக்க நன்றி....
கீதா
கீதாக்கா மிக்க நன்றி உங்க கருத்திற்கு...
நீக்குகீதா
அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம். வாங்க.. வாங்க...
நீக்குவணக்கம் அன்பு துரை.
நீக்குவணக்கம் அம்மா...
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஎந்த ஆசிரியரால் அகற்றப்பட்டது? நாங்கள் ஒன்றும் செய்யவில்லை!!!!
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நானும் ஆசிரியர் தான்! என்னோட பதிவுப் பக்கத்தில்! அதான் சொல்லி இருக்கு "உங்க" ப்ளாக்! :))) ஒரே கருத்து இருமுறை வந்ததால் எடுத்தேன். ஜிஎம்பி சாருக்குச் சொன்னது இரு முறை போட்டுட்டேன். :)
நீக்குஹிஹிஹிஹி...
நீக்குஅன்பு கீதா ரங்கனின் விமர்சனம் பிரமாதம். ஆழ் நோக்குப் பார்வையில் பிரமாதமாகத் தொகுத்திருக்கிறார்.
பதிலளிநீக்குஒவ்வொரு நாளுக்கும் அறிமுகம் கொடுத்து
தன் கருத்தையும் நேர்மறை எண்ணங்களையும் பதிந்திருக்கிறார்.
அவர் சொல்வது போல ஞாயிறு பயணப் படங்களும் கருத்துக் கட்டுரையும் வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.
வெல்டன் கீதா.
என்னால் இவ்வளவு பக்குவமாக எழுத முடியாது.
அருமையாக எண்ணங்களைப் பதிந்திருக்கிறீர்கள்.அன்பு வாழ்த்துகள்.
வல்லிம்மா மிக்க நன்றி அம்மா கருத்திற்கு.... அம்மா ரொம்ப புகழ்ந்திருக்கீங்க...நான் அந்த அளவிற்கு...எல்லாம் இல்லம்மா நீங்க ரொம்ப அழகா எழுத்துவீங்கம்மா...உங்கள் எழுத்து அன்பில் நிறைந்திருக்கும்..
நீக்குமிக்க நன்றி அம்மா
கீதா
மிக அழகாக அருமையாக கீதாவின் விமர்சனம்...
பதிலளிநீக்குஇதற்கும் மேலாக அன்புடன் யோசனைகள்..
பாராட்டும் வாழ்த்துகளும்....
மிக்க நன்றி துரை அண்ணா உங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்..
நீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா. வாங்க.. வாங்க...
நீக்குஇவ்வாரத்தில் வெளியான எனது கதைக்கு
பதிலளிநீக்குஇணைய பிரச்னையால் அங்கே இன்னும் பதில் கூறவில்லை...
தாகம் எனும் கதையை அவழகுடன் விமர்சனம் செய்த கீதாவுக்கு நன்றி...
கதையில் வரும் ஆறுமுகம் அவர்கள் எனது சித்தப்பா....
அவரைப் பற்றி வேறொரு சமயம் இன்னும் கூறுகிறேன்...
பெரிய கார்த்திகை அன்று அவர் வீட்டுக்குள் சாம்பிராணி வாசமாக வந்தார் என்பது கதையில்..
ஆனால் நிஜத்தில் கார்த்திகை அன்று சாம்பிராணி வாசமாக வந்தவர் -
எனது தந்தை...
நன்றி ஸார். நேரம் கிடைக்கும்போதுபதில் சொல்லுங்கள்.
நீக்குதுரை அண்ணா அன்றே எனக்குத் தோன்றியது ஆறுமுகம் பெரியப்பா உங்கள் நெருங்கிய சொந்தமாகத்தான் இருக்கும் னு....
நீக்குகீதா
மூன்று செய்திகளும் நல்ல செய்திகள்
பதிலளிநீக்குசமூக சேவகி கடந்து வந்த பாதைகள் அவரைகளை பாராட்டி வணங்க வேண்டும்.
வாழ்த்துக்கள் சோலு.
இத்தனை வயதில் கம்பீரமாய் ஆசனத்தில் அமர்ந்து கற்பிக்கிறார். அவருக்கு வணக்கங்கள்.
கொண்டவன் துணையால் அனைத்தும் கற்று அவருக்கு தோள் கொடுத்து உதவி வருவது மகிழ்ச்சி.
முதுதண்டு பிரச்சனை ஏற்பட்ட போதும் டிராக்டர் ஓட்டி விவசாயத்தை பார்த்து வருபவரை வணங்கி மகிழ்கிறேன்.
நல்ல செய்திகளை தேடி கொடுத்த ஸ்ரீராமுக்கு நன்றி.
நன்றி அக்கா.
நீக்குகீதா ரங்கன் விமர்சனம் மிக அருமை.
பதிலளிநீக்குபாடல்கள், புத்தக சுட்டி, யோசனைகள் என்று நிறைய கொடுத்து அசத்தி விட்டார்.
மலையாள பாடல் மட்டும் கேட்டேன். காட்சி கானம் எல்லாம் அருமை.
மற்றவைகளுக்கு பிறகு வருகிறேன்.
கீதாவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி கோமதிக்கா...
நீக்குகீதா
அனைவருக்கும் காலை வணக்கம். கீதாவின் விமர்சனம்.. வந்து கொண்டே இருக்கிறேன்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குபானுமதி, வாட்சப் செய்தியைப் பாருங்க!
நீக்குகொத்தமங்கலம் சுப்பு அவர்களது ஆக்கம் தான் பந்தநல்லூர் பாமா...
பதிலளிநீக்குஇங்கே இணைப்பில் பந்தலூர் பாமா என்று இருக்கிறதே என்று உள்ளே போனால் -
அங்கேயே
பந்தலூர் பாமா என்றிருக்கிறது...
பந்தநல்லூர் எப்படிப்பட்ட ஊர் தெரியுமா!..
நான் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தது பந்தநல்லூரில் தான்..
அப்போ அது வேற கதையோ..! பந்தலூர் என்று ஊட்டி பக்கத்தில் ஒரு ஊர் இருக்கிறது!
நீக்குபந்தலூர் என்று அருப்புகோட்டைக்கு அருகிலும் ஒரு ஊர் உள்ளது...
நீக்குபந்தநல்லூர் பாமா தான் கொத்தமங்கலம் சுப்பு அவர்களால் எழுதப்பட்டது. மனதை உருக்கும்! ஆனந்த விகடன் ஒரு நல்ல வாராந்தரியாக இருந்த தருணங்களில் வெளி வந்த நாவல்.
நீக்குஆகா.. அக்கா வந்தாச்சு..
நீக்குவிகடன் வாராந்தரியா? வாராந்திரனா?!!!!
நீக்குவாராந்தரி என்பது பொதுவான வழக்கு. அது விகடனாலும், குமுதமானாலும், கல்கியானாலும்! :)))))
நீக்குஸ்ரீராம், துரை அண்ணாவும் கீதா அக்காவும் சொல்லியிருக்கும் கதை தான்.அது அங்கு டஒப்போ எரேர்கதை ரொம்ப மனதை உருக்கிடும்...முழுவதும் வாசிக்க வில்லை இன்னும்....அங்கு கொத்தமங்கலம் சுப்பு என்று பார்த்ததும்...அதை க்ளிக்கினேன். அவர் தானே தில்லாநா மோகனாம்பாள் படக் கதை அவருடையது...அக்கா சொல்லியிருப்பது பொல் விகடனில் வந்ததுதான்...
நீக்குஸ்ரீராம் வாராந்தரி மாதாந்தரி னு சொல்வதுன்டே.. என் பாட்டி அப்படித்தான் சொல்லில்க் கேட்டிருக்கேன்...
கீதா
நீக்குகீதாக்கா, கீதா
//ஸ்ரீராம் வாராந்தரி மாதாந்தரி னு சொல்வதுன்டே.. என் பாட்டி அப்படித்தான் சொல்லில்க் கேட்டிருக்கேன்...//
நான் ஜோக் அடிக்க முயன்றேன்! வெற்றிபெறவில்லை என்று தெரிகிறது!
ஹா... ஹா... ஹா...
// கௌ அண்ணா நம்ம ஏரியாவில் கதைக்குக் கரு கொடுத்தது போல திங்க அன்று பதிவின் இறுதியில், ஏதேனும் பொருட்கள் கொடுத்து அல்லது வீட்டில் இவைதான் இருந்தன இதில் என்ன செய்யலாம் என்றோ அல்லது இது மீந்தது இதை வீணாக்காமல் என்ன செய்யலாம் என்றோ கொடுத்தால் நட்புகள் யாருக்கு முடிகிறதோ அவர்கள் அவரவருக்குத் தோன்றும் ரெசிப்பிக்களைச் செய்து, எத்தனை விதம் வேண்டுமானாலும் செய்யலாம், ஒவ்வொன்றையும் திங்கவுக்கு அனுப்பி இப்போது போன்று திங்க வில் பதிவிடலாம். போணியாச்சா என்றும் சொல்லலாம். கௌலாப்ஜாமூன் போல கற்பனையில் விரியும் புது புது குறிப்புகள் கிடைக்குமே! கௌ அண்ணா அல்லது ஸ்ரீராம் டேர்ன் எடுத்துக் கொண்டு கொடுக்கலாம். மீந்ததை உருமாற்றம் செய்வதை திங்க – தில்லு முல்லு என்று பெயர் சூட்டலாம். (பிறந்த குழந்தையான கீதாக்கா இதுல எக்ஸ்பெர்ட்டாக்கும்!!) கூடவே அந்த்த் தில்லு முல்லுக்கள் வீட்டில் என்ன விளைவுகளை!!!!!!!!! ஏற்படுத்தின என்றும் சொல்லலாம். //
பதிலளிநீக்குநல்ல யோசனை. யோசிக்கிறோம்.
தி.பதிவை இதுபோல் மாற்றாதீர்கள். இதில் ப்ராக்டிகல் சிக்கல்கள் உண்டு.
நீக்கு1. செய்முறை படங்களோடு அனுப்பணும். உதாரணமா, கீரை என்று சொன்னால், அதனை வைத்து ஒரு ரெசிப்பி செய்து படங்களோட அனுப்பணும்.
2. யார் என்ன செய்யப்போறாங்க என்பதை முதலிலேயே பதிந்துவச்சுக்கணும்.
3. கீசா மேடம் போன்ற அனுபவஸ்தர்களைக் கட்டுப்படுத்தி வைக்கணும். அதாவது, முதல் ரெசிப்பி கீதா ரங்கன் 'கீரைச் சுண்டல்' என்று அனுப்பினாங்கன்னா, கீசா மேடம், அவங்க இயல்புப்படி, முதல் இடுகை பின்னூட்டங்கள் நிறைய போட்டு, 'கீரை மசியல்', 'கீரைக் குழம்பு', 'கீரை தேங்காய் பர்பி"," கீரை சாதம்" என்று அனேகமா எல்லாத்துக்கும் ரெசிப்பி எழுதிடுவாங்க.
4. நெல்லைத்தமிழன் போன்றவர்கள், 'கீதா ரங்கன் 'எழுதிய கீரைச் சுண்டலைப் படித்துவிட்டு, பிறகு, 'நெல்லை கீரைச் சுண்டல்' என்று போட்டு, அதில், மிளகை சிறிது பொடி பண்ணி நெய்யில் வறுத்துச் சேர்க்கணும் என்று எக்ஸ்டிராவாக எழுதி, அதை ஒரு புது ரெசிப்பிபோல் அனுப்பிவிடுவார்கள். அதையும் கண்காணிக்கணும்
5. தொடர்ந்து நிறையபேர் பங்குபெறணும். இப்போவே ஸ்ரீராம் நினைவுபடுத்துகிறார்.
மாதம் ஒரு வாரம் என்று இதனை வைத்துக்கொண்டாலும், இரண்டு வாரங்கள் ஆயிடுச்சுன்னா, 'சீதை ராமனை மன்னித்தாள்" என்பதுபோல, ஓ இன்னைக்கு இதுதானா என்று தோன்றிவிடும்.
நீங்கள் சொல்லியிருப்பதும் சரிதான்!
நீக்குநான் வரலை இந்த விளையாட்டுக்கு! போங்கு ஆட்டம்! :)))))
நீக்குநீங்கள் சொல்லியிருப்பதும் சரிதான்!
நீக்குநெல்லை என் இடத்திலிருந்து யோசித்திருக்கிறார்.
நீக்குவாழ்க...
கௌ அங்கிள்.. நான் சொல்லியிருப்பதும் சரிதானே?!!
கௌதமன் சார், ஶ்ரீராம் சொல்லி இருக்கிறது சரி இல்லை தானே! :))))))
நீக்குநெல்லையார் சொல்லியிருப்பது 100% சரி. திப்பிசமோ,
நீக்குதில்லு முல்லோ அவரவர் சொந்த தளத்தில் வெளியிட்டுக்கொள்ளட்டும். என்ன நான் சொல்றது?
ரைட்டோ ரைட்டு!
நீக்குகௌதமன் சார், பானுமதி சொல்லி இருக்கிறது சரியா, இல்லையா?
கௌ அண்ணா மிக்க நன்றி..
நீக்குஆஹா இங்கிட்டு பஞ்சாயத்து வேறயா....ஹாஹாஹாஹா..
திப்புசம் இல்லைனா அது வேண்டாம்ம் ஒகே .சும்மா மத்தது யோசிக்கலாமல்லோ....எல்லாரும் செய்யணும்னு இல்ல...யாருக்கு எப்ப முடியுதோ.. அப்ப..சும்மா ஒரு முயற்சிதேன்....ஹிஹிஹிஹி....
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
சமூகநல நோக்கோடு தனக்கு வந்த பல இடையூறுகளையும் தாண்டி, பிஸியோதெரபியில் முனைவர் பட்டமும் கற்று. மேலும் பல விருதுகளும் பெற்று மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சேவை செய்து வரும் சோலு அவர்களை மனமாற பாராட்டுவோம்.
இத்தனை வயதிலும், தேவபாஷையான சமஸ்கிருதத்தை தானும் நிறைய கற்றபடி அனைவருக்கும் கற்று கொடுத்து வரும் பெரியவரை வணங்குகிறேன்.
கடின உழைப்புக்களை லாவகமாக கற்றபடி விவசாயம் செய்து தன் கணவருடன் சேர்ந்து டிராக்டர்ரும் ஓட்டக் கற்று கொண்டு உடல்நல குறைவுக்கு பின்னும் விவசாயத்தில் ஆர்வமாக உழைக்கும் தாய் அம்மையக்காளுக்கு வாழ்த்துக்கள். உழைப்புக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவரையும் வணங்குகிறேன்.
இத்தகைய அரிய செய்திகளை சேகரித்து தரும் உங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குதங்களின் பயண கட்டுரையாகிய சென்ற வியாழன் பதிவை படித்தேன்.நீங்களும் பதிவை படித்து விட்டீர்களா என கேட்டிருந்தீர்கள். பதிவில் அயோத்தி பற்றி மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள். நேற்று காலை முதல் இங்கு மின்சார பிரச்சனையில் அதற்கு உடன் பதில் தர இயலவில்லை. இரவுக்குள் மின்சாரம் நல்லபடியாக சரியாகி வந்ததும் மீண்டும் படித்து ரசித்து கருத்து தந்துள்ளேன். பயணக்கட்டுரைகள் படிக்கும் போது நாமும் அந்த ஊருக்கு சென்று வந்த திருப்தி எனக்கு எழுவதுண்டு. எப்போது இந்த இடங்களை பார்க்க போகிறோமோ என நினைத்துக் கொள்வேன்.தங்கள் பதிவின் மூலம் நானும் காசியை, பல புண்ணிய ஸ்தலங்களை தரிசித்து சந்தோஷம் அடைந்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா... அங்கேயும் படித்தேன்.
நீக்குவிமர்சன அலசல் ரசிக்க வைத்தது.
பதிலளிநீக்குகடைசி காணொளி பாடல் ரசித்தேன்.
79 வயதில் டிராக்டர் ஓட்டும் அப்பத்தா மிரட்டுகிறார்.
நன்றி ஜி.
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு. ரசித்தமைக்கு...
நீக்குகீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வார விமர்சனம் செய்துள்ள சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் மிகச்சிறந்த முறையில் வார நாட்களை அலசியுள்ளார். நிறைய மாற்றங்கள் அமைத்தால் மிகவும் நன்றாக இருக்குமென சுட்டிகளையும் தந்து பரிந்துரைத்து கூறியுள்ளார். அவரின் யோசனைகள் வரவேற்கப்பட கூடியவையாக இருக்கின்றன. அது போக இடையிடையே அழகான மலர்களின் படங்கள், பாடல்கள் சுட்டிகள் என விமர்சனத்தை மனதுக்கினிய விருந்தாக்கியுள்ளார்.சகோதரியின் விமர்சனத்தை படித்து மிகவும் ரசித்தேன். அவர் தந்திருக்கும் பாடல்கள் இனிதான் கேட்க வேண்டும். சுட்டிகளையும் பயன்படுத்தி படித்துப் பார்க்க வேண்டும். பொறுமையாக அவர் பாணியில் அலசிய இன்றைய விமர்சனம் நன்றாக உள்ளது. சகோதரி கீதாரெங்கனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும்,பாராட்டுகளும்.நன்றிகளும்.பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி கமலாக்கா விரிவான கருத்துரைக்கு.
நீக்குஅப்புறம் சுட்டிகளைப் பாருங்க
பாட்டும் கேளுங்க அக்கா..நன்றாக இருக்கும்...
கீதாஸ்
இன்றைய மூன்று செய்திகளும் மிக நன்று. அதிலும் மனைவிக்கு டிராக்டர் ஓட்டக் கற்றுத் தந்தவர் மனதில் நிற்கிறார்.
பதிலளிநீக்குகீதா ரங்கன் அவர்களின் விமர்சனமும் மிக நன்றாக இருந்தது. கீதா ரங்கன், பாசிடிவ் எண்ணங்களுக்குச் சொந்தக்காரர். வேலைப்பளுக்கு இடையிலும் எழுதிய விமர்சனம் கவர்ந்தது.
கீதா ரங்கன் - தோசை, சிரோட்டி படங்கள் மிக அருமை. எந்தத் தளத்திலிருந்து சுட்டீர்கள்? கிரெடிட் கொடுக்காமல் இப்படி மற்றவர்கள் செய்தவற்றை படமாக வெளியிடுவது தவறல்லவா? (ஆமாம் சிரோட்டின்னா என்ன?)
நான் சிரோட்டி என்றால் தோசைக்குள் மசாலாவோ அல்லது இன்னபிற ஐட்டங்களோ வைத்து சுருட்டி செய்தால் சிரோட்டி என்று நினைக்கிறேன்!
நீக்கு@கௌதமன் சார், "பெண்"களூரில் இருந்து கொண்டு சிரோட்டி தெரியாதுனு சொன்னா ஆச்சரியமா இருக்கே!:)))))) சிரோட்டி சாப்பிட்டு இருப்பீங்கனு நம்பறேன்.
நீக்குநெல்லைத் தமிழரே, நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவே தெரியாதா? கிட்டத்தட்ட சுருள் பூரினு தமிழிலே சொல்லலாம்.சர்க்கரைப் பாகிலே முக்கி எடுப்பாங்க, இல்லைனா பொடித்த சர்க்கரையை மேலே தூவி, பாதம், பிஸ்தா எல்லாமும் போட்டுக் கொடுப்பாங்க.
நீக்குபெயர் சிரோட்டி என்பது தெரியாது. லவங்க லதிகா மாதிரி இருக்குமா? பாவம்...கஷ்டப்படாதீங்க.. நீங்க எழுதி, சுட்டி தந்து, அதெல்லாம் வேலைக்காகாது. மீண்டும் தெம்பா இருக்கீங்கன்னா, சொல்லுங்க, அடுத்த இரயில் பிடித்து ஸ்ரீரங்கம் வந்துடறேன்.
நீக்குஓ... அதன் பெயர் சிரோட்டியா?
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நெல்லைத் தமிழரே, லவங்க லதிகா வேறே! சிரோட்டி வேறே! http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6058 இந்தச் சுட்டியில் சிரோட்டி செய்முறை பாருங்க. இதைச் சர்க்கரைப் பாகிலும் போடலாம். கிட்டத்தட்ட ஜீரா போளி மாதிரி. ஆனால் அதைவிடக் கரகர! லவங்க லதிகா மாவாவும் தேவையானால் தேங்காய், சர்க்கரை அல்லது பாதாம், முந்திரி, பிஸ்தா+சர்க்கரை வைச்சுச் செய்வாங்க! மாவில் பூரணத்தை வைத்து மூடிவிட்டு நடுவில் ஒரு கிராம்பை வைப்பார்கள். அதனால் லவங்க லதிகானு பெயர்.
நீக்குஇதே மாவாவில் செய்த பூரணத்தில் அரை வட்டமாகச் செய்து விளிம்பில் அலங்கரித்தால் சந்திரகலா! முழுவட்டமாகச் செய்து விளிம்பில் அலங்கரித்தால் சூர்யகலா! தஞ்சைப் பக்கம் சூர்யகலா, சந்திரகலா பிரபலம். ஆனால் ஒரிஜினல் சாப்பிடணும்னா மஹாராஷ்ட்ரா தான்! சிரோட்டின்னா கர்நாடகா தான்!
நீக்குஅருஞ்சொற்பொருள்= மாவா- சர்க்கரை போடாத கோவா
ஓ...இதுதான் சிரோட்டியா? பார்த்தே, படித்தேன்...பிடிக்கலை. நன்றி பகிர்ந்துகொண்டதற்கு
நீக்குசூர்யகலா, சந்திரகலா - எனக்கும் பிடிக்கும்.
ஆனால் கடைசிவரை, நீங்க பண்ணப்போறீங்கன்னு சொல்லாம டபாய்ச்சுட்டீங்களே கீசா மேடம்
நான் இப்போ இனிப்புக்கள் பண்ணும்படியான உடல்நிலையில் இல்லை. பண்ணிச் சாப்பிட ஆசைதான். மருத்துவர் விழிச்சுப் பார்க்கிறார். :)))) அன்றாட வேலைகளே செய்யத் தடை!
நீக்குநெல்லை கற்றற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற் நீங்களா சிரோட்டினா என்னனு கேட்கறது!!? நான் செஞ்ச இந்தப்படம் உங்களுக்கு அனுப்பினேன்..ஸ்ரீராம் க்கும் அனுப்பினேன். அப்ப நீங்க எனக்கு சிரோட்டி போட்டோ நெட்லருந்து அனுப்பிநீங்க....கற்றற்ற்ற்ற்ற்றற்றற்றமறந்துட்டீங்க
நீக்குஇது நல்லாருக்கும் நெல்லை...
கீதா
சந்திரகலா..சூரிய கலா எல்லாம் அக்கா சொல்லிட்டாங்க..
நீக்குகர்நாடகாவ்ல் சிரோட்டில நிறைய இனிப்பு போடுறாங்க..வீட்டுல செய்யறப்ப நான் திட்டமாதான் போடுவேன்..சிரோட்டி ரவை இங்கு நல்லா க்8டைக்குது....க்ரிஸ்பா லேயர் லேயரா..வரும்...நெல்லை நீங்க டெஸ்ட் பாக்காம சொல்லக்கூடாதாக்கும்...ஹாஹாஹா
கீதா
மிக்க நன்றி நெல்லை கருத்திற்கு...
நீக்குமொபிஸில் அடிப்பதால் பிழைகள் இருக்கும் மன்னிச்சுக்கோங்க....
கீதா
கௌ அண்ணா நெஜம்மாவே சிரோட்டினா தெரியாதா.. பெங்களூரில் இருக்கீங்களே...என்ன வைச்சு காமெடி கீமடி பண்ணலியே.. ஹாஹாஹாஸ்
நீக்குகீதா
நெல்லை கரற்றற்றரர் எங்கியும் சுடலை. நான் வீட்டுல 'சுட்ட' தோசை...ஏஞ்சலின் ரெசிப்பி புடலங்காய் தோசை...செஞ்சு பார்த்தேன்.நல்லா வந்துச்சு...
நீக்குஹிஹி
கீதா
பாசிட்டிவ் செய்திகளுக்கு ஒரு பூங்கொத்து!
பதிலளிநீக்குநல்லதை தேடி தருவதற்கு பூங்கொத்து கொடுக்கலாம் கீதா.
ஞாயிறு பரிந்துறை நன்றாக இருக்கிறது.
திங்கள் யோசனையும் நன்றாக இருக்கிறது.
உப்பு, காரம், குறைந்து, கூடி விட்டால் எத்தனை விதமாக அதை சரிசெய்கிறோம்.
காலை இடலி உப்புமா இப்போது இட்லி பீஸ் மசாலா வாக உரு மாற்றுவது.
மீந்து போன சப்பாத்தியை கிள்ளி போட்டு அதில் வித விதமான் சுவை கூட்டி இப்படி எத்தனையோ வகையில் செய்வதை கீதா போல் சுவையாக சொல்லலாம்.
கதைக்கு சிறிய யோசனையும் நன்றாக இருக்கிறது.
உரையாடல் நன்றாக இருந்தால் எல்லாம் நலமே அதற்கு வாசிக்க சொன்ன புத்தகம் நல்லதே!
ஸ்ரீராம் எத்தனையோ எழுதினாலும்
//எல்லோருக்கும் புரிந்திருக்கும்!!!!!! ஹிஹிஹி. ஸ்ரீராமுக்கு ஒரு போனஸ்! //
கீதா!
பிறந்த நாளுக்கு புத்தக பரிசு அருமை. நானும் அப்படித்தேன் கொடுப்பேன்.
புத்தகம் வாசிக்க சுட்டி அருமை. பாராட்டுக்கள்.
எல்லோருக்கும் பிடித்த பாடல் பகிர்வு அற்புதம்.
வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி கோமதிக்கா விரிவான கருத்திற்கும் பாராட்டிற்கும்...
நீக்குகோமதிக்கா புக் செல்ப் சுட்டியில் புத்தகங்கள் இருக்கு....செவ்வாயில் கொடுத்திருக்கேனே...அந்த சுட்டி...
கோமதிக்கா அந்த போனஸ் நான் கொடுத்த பப்பி போட்டோ...அதைக் குறிப்பிடாமல் நான் எடிட் செய்ததில் குறிப்புட்டது கட் ஆகியிருப்பது இப்பத்தான் பார்த்தேன்...அதான் எல்லாரும் அனுஷ் னு நினைச்சிட்டீங்களோ....ஹாஹாஹா
பப்பி நான் போனஸ் பரிசு ..வியாழனுக்கு...அன்று ஸ்ரீராம் நிறைய செல்லன்கள் போட்டோ போட்டுருந்தாரலியா..அதுக்கு....
அது போல தூர அண்ணாவுக்கு செவ்வாய்க் கதைக்கு....புதன் கௌ அண்ணாவுக்குன்னு...ஞாயிறு பாடல், வெள்ளிக்கும் பாடல் என்று....
கீதா
மூன்று செய்திகளும் அருமை... முதல் செய்தி இன்று தான் அறிந்தேன்... அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்..
பதிலளிநீக்குவிமர்சனம் அருமை... யோசனைகளும் அருமை...
Joy full Singapore...
நீக்குஇந்தப் பாடலைப் பற்றி...
படம் - வருவான் வடிவேலன்..
பாடல் - கவியரசர்..
இசை - மெல்லிசை மன்னர்..
பாடியவர்கள் - SPB/ P.சுசீலா..
ஆடியவர்கள் - விஜயகுமார்/படாப்ட் ஜெயலக்ஷ்மி...
நன்றி DD.
நீக்குநன்றி துரை செல்வராஜூ ஸார்.
துரை செல்வராஜூ ஐயா... வெள்ளி அன்று பாட்டுக்கு பாட்டு வைத்துக் கொள்வோமா...?
நீக்குஓ!..
நீக்குகரும்பு தின்னக் கசக்குதா!...
ஹாஹாஹாஹா...துரை அண்ணா அண்ட் டிடி....அப்படிப் போடுங்க ரெண்டு பேரும்...
நீக்குகீதா
மிக்க நன்றி டிடி கருத்திற்கு
நீக்குகீதா
திருநங்கையின் சாதனைகளும், தொண்டும் பாராட்டுக்குரியவை. முதிய வயதில் அதுவும் முதுகெலும்பு முறிந்து சரியான நிலையிலும் அசராமல் ட்ராக்டர் ஓட்டும் அம்மையக்காள் அசத்துகிறார். சமஸ்க்ருத பண்டிதருக்கு வணக்கங்கள்.
பதிலளிநீக்குதனக்கே உரிய பாணியில் விமர்சனம் செய்திருக்கிறார் கீதா. பாடல்கள் இனிமேல்தான் கேட்க வேண்டும். பிறந்த நாள் பரிசுக்கு நன்றி. புத்தகத்தை டவுன்லோட் செய்து படிக்க முடியுமா?
பதிலளிநீக்குமிக்க நன்றி பானுக்கா...பாட்டு கேட்டீங்களா...நல்லாருக்கும் பாட்டு...
நீக்குபுத்தகம் ஷேர் ஆப்ஷன் உள்ளது அக்கா. உங்களுக்கு அனுப்ப பார்க்கிறேன். மற்றபடி ஆன்லைன் வாசிப்பு என்று நினைக்கிறேன்....
கீதா
மொத்தத்தில் இந்த விமரிசன வேலை கொஞ்சம் என்ன நிறையவே கஷடம் தான். ஒவ்வொரு நாளாக மறுவாசிப்பு செய்து ஒவ்வொன்றுக்கும் நாலு வரி குறிப்பு எழுதித் தயாரித்துக் கொண்டு இடையில் நம் பார்வையைம் குறிப்பிட்டு கிடைக்கிற இடுக்கில் பாராட்ட வேண்டியவர்களைப் பாராட்ட மிஸ் பண்னாமல் பார்த்துக் கொண்டு... ஹப்பா! இந்த மாதிரி பணிகளிலிருந்து கழண்டு விடுதல் ஈஸி.. இருந்தாலும் செய்கிறார்களே! அதைச் சொல்ல வேண்டும். அந்த விதத்தில் சகோதரி கீதா ரெங்கனுக்குப் பாராட்டுகள்!..
பதிலளிநீக்குநீங்கள் எழுதும் பாணியைப் பொறுத்தது கஷ்டமும் வசதியும் ஜீவி ஸார். அன்றன்றைய பட்ஜய்வுகளுக்கு வாசித்துமுடித்ததும் சில கருத்துகளை உடனே எழுதி வைத்துக்கொண்டால் சுலபம்! கடைசி நாள் தேவைப்பட்டால் லேஸாய் டிங்கரிங் செய்துகொள்ளலாம்!
நீக்குஜீவி அண்ணா மிக்க நன்றி கருத்திற்கு.
நீக்குஸ்ரீராம் சொல்லியிருப்பதை அப்படியே டிட்டோ செயகிறேன். நான் சொல்ல நினைப்பதும் அதுவே..கஷ்டமில்லை அண்ணா...
கீதா
நேற்று என் பிறந்த நாளுக்காக எனக்கு பிடித்த பாடலை ஸ்ரீராம் பகிர்ந்திருந்தார். இன்று கீதா புத்தகத்தை பரிசளித்திருக்கிறார். எல்லோரும் வாழ்த்து கூறி அந்த நாளை இனிய நாளக்கினீர்கள். மிக்க நன்றி என்பது மிகவும் உபசாரமான வார்த்தை. வேறு வார்த்தை தெரியவில்லை. ரொம்ப சந்தோஷம்.
பதிலளிநீக்குசீனியர் சிட்டிசன் ஈனும் தகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். வயது முதிர்வது வேறு, முதிர்ச்சி அடைவது வேறு. எனக்கு முதிர்ச்சியை அளிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
எனக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ளுங்கள் அக்கா. எனக்கும் அந்தப் பிரார்த்தனை உண்டு. பேசுவதற்கு மூன்று வயதில் கற்றுக்கொள்கிறோம், எப்படிப் பேசவேண்டும் என்று எப்போதும் கற்றுக்கொள்வதில்லை என்று முன்னர் ஒரு எஸ் எம் எஸ் நிலைத்தகவல் வரும். அது நினைவுக்கு வருகிறது!
நீக்குபானுக்கா அண்ட் ஸ்ரீராம் நானும் இன்னும் மனப்பக்குவம் பெற வேண்டும் என்றே வேண்டிக்கொள்வேன்.
நீக்குஅக்கா சீனியர் சிட்டிசன் எல்லாம் குழந்தைகளாக்கும்...ஹாஹாஹா
கீதா
ஸ்ரீராம் உங்களுக்கு எங்கள் எல்லோரது பிரார்த்தனைகளும் உண்டு...
நீக்குகீதா
அனைவருமேபோற்றத்தக்கவர்கள். டிராக்டர் ஓட்டும் மூதாட்டியைக் கண்டு வியந்தேன்.
பதிலளிநீக்குசோலு வுக்குப் பாராட்டுகள். இப்படி திருநங்கைகள் ஒவ்வொருவரும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொண்டால் மிகவும் நல்லது.
பதிலளிநீக்குசம்ஸ்க்ருத தாத்தாவுக்கு வாழ்த்துகள். பணி சிறக்கட்டும்.
இந்த வயதிலும் டிராக்டர் ஓட்டும் அம்மா அதுவும் முதுகெலும்பு பிரச்சினை யுடன்.... வாவ் போட வைத்து ஆச்சரியமூட்டுகிறார்...
அனைத்து ச் செய்திகளும் சூப்பர்...
கீதா
மிக அருமையான விமரிசனம் கீதா .போன வாரம் பதிவுகள் பக்கமே வரல்ல .இன்னும் அலர்ஜி தாக்கம் சரியாகல்லை .அதோட வேலையும் அதிகம் .
பதிலளிநீக்குவரும் மாதங்களில் சரியாகும்னு நினைகிறேன்
புடலங்காய் தோசை சூப்பரா வந்திருக்கே :)