திங்கள், 15 ஜூலை, 2019

'திங்க'க்கிழமை : – மோர்க்கூழ் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி



மோர்க்கூழ்

தலைப்பைப் பார்த்து இது என்ன ‘ஆடி’ மாதம் வரவேண்டிய செய்முறை இப்போ வருதுன்னு நினைக்காதீங்க. என் பையனுக்கு இங்கு தினமும் இரவு ஏதாவது டிஃபன் பண்ணுவேன். சில நாட்கள் முன்பு, மோர்க்கூழ் பிடிக்கும் என்றான். அதுக்கு முக்கிய இன்கிரிடியண்ட் ‘மோர் மிளகாய்’. அது நேற்றைக்கு எனக்குக் கிடைத்தது.  அதனால் இன்று மோர்க்கூழ் செய்தேன்.

பசங்களுக்கும் அவங்க அம்மாவுக்கும் உள்ள உறவு தனித்தன்மை உள்ளது. அப்பாவுக்கு அந்த மாதிரி உறவு பெரும்பாலும் அமையாது. ‘அவன் நேற்று எக்ஸாமுக்காக முந்திய நாள் ரொம்ப நேரம் முழிச்சிட்டிருந்தான். இன்னைக்கு லேட்டாத்தான் எழுந்துப்பான் – ஹாஸ்டலில்’ அப்படீன்னு எங்கிட்ட சொல்லும்போது, ‘அப்படியா. இரவு சீக்கிரம் தூங்கிவிட்டு காலைல சீக்கிரம் எழுந்து படிக்கலாமே’ என்று சொல்லிவிட்டுக் கடந்துவிடுவேன். ஆனால் என் மனைவி, காலை 8:30க்கு அவனைக் கூப்பிட்டு, எழுந்துக்கோ, நேர காண்டீன்ல போய் சாப்பிடு, 9:10க்கு மூடிடுவாங்க என்றெல்லாம் சொல்லுவா. [ இந்தப் பழக்கம் எங்கள் வீட்டிலும் நிறைய உண்டு - ஸ்ரீராம் ] ரொம்ப உணர்வுபூர்வமான உறவு அம்மாவுக்கும் பசங்களுக்குமான உறவுன்னு எனக்குத் தோணும். என் அம்மாவும் இப்பவும் என்னை ‘குழந்தை’ மாதிரிதான் ட்ரீட் பண்ணுவாங்க. (ஆனா நமக்குத்தான் அருமை புரியாமல் அலட்சியமாகக் கடந்துவிடுவோம்…ஹாஹா).  எதுக்குச் சொல்றேன்னா, பையனுக்கு என்ன என்ன பிடிக்கும், பெண்ணுக்கு என்ன என்ன பிடிக்கும் என்பதெல்லாம் அவளுக்கு அத்துப்படி. எனக்கு அவ்வளவாகத் தெரியாது.  அடை இவனுக்குப் பிடிக்குமா அவளுக்கா, சேவை யாருக்குப் பிடிக்கும், கலந்த சாதத்தில் இவனுக்கு என்ன பிடிக்கும் (அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது) என்பதே எனக்குப் பிடிபடாது.

சரி… சொந்தக் கதையை நிறுத்திவிட்டு, மோர்க்கூழ் எப்படிச் செய்யறதுன்னு சொல்றேன்.

மோர்க்கூழுக்குத் தேவையானவை  (இருவருக்குப் போதுமானது)

மோர் மிளகாய் – 5 (நீளமாக இருந்தால். உருண்டைனா 7-8 கூட போடலாம், காரம் வேணும் என்றால்)
அரிசி மாவு – 1  கப்
மோர் அல்லது கூழான தயிர் – 1 ½  கப்
தண்ணீர் 3 ½ அல்லது 4 கப்
உப்பு தேவையான அளவு

திருவமாற

நல்லெண்ணெய் – 5 மேசைக்கரண்டி
கடுகு 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 சிட்டிகை
கருவேப்பிலை 3 ஆர்க்

செய்முறை

முதலில் அரிசி மாவு, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்துகொள்ளவும். அதில் தண்ணீர் விட்டு (சொன்ன அளவு) நன்றாகக் கரைத்துக்கொள்ளுங்கள்.



கடாயில் நல்லெண்ணெய் முழுவதும் (5 ஸ்பூன்) விட்டு, சுட்டவுடன், அதில் மோர் மிளகாய் கிள்ளிப்போட்டு வறுத்துக்கொள்ளவும். ஓரளவு வறுபடும்போது, அதில்  பெருங்காயம், கடுகு,  உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பிறகு கருவேப்பிலை சேர்க்கவும்.





இதனுடன் கரைத்துவைத்துள்ள அரிசிமாவு கலவையைச் சேர்க்கவும். அது ரொம்ப நீர்க்க இருக்கும்.



நல்லா கிளறணும். தீயை மிதமாக வைத்துக் கிளறினால், கொஞ்சம் கொஞ்சமாக அது கெட்டிப்படும்.



இடையில் கொஞ்சம் நல்லெண்ணெய் விடலாம். எண்ணெய் விட விட, மோர்க்கூழ் அருமையாக வரும்.



 சுலபமான டிஃபன். நீங்க செஞ்சு பாருங்க.  என் பையனுக்கு நான் செய்து கொடுத்தது ரொம்பப் பிடித்திருந்தது. கூடவே மேங்கோ மில்க் ஷேக்கும் பண்ணியிருந்தேன்.  [ நான் இதை செல்லமாக கார அல்வா என்று சொல்வேன்!  மிகவும் பிடித்த டிஃபன்.  நானும் இதை முன்னர் இங்கு பகிர்ந்திருக்கும் நினைவு.  என் அலுவலகத்தில் ஒரு தோழி இதை எனக்காக வாரம் ஒருமுறையாவது செய்து தனி டப்பாவில் கொண்டு வருவார்! இன்னமும் எண்ணெய் விட்டு வழுவழு என்று செய்வோம்.  வீட்டிலேயே தயார் செய்த மிளகாய் என்பதால் அதை வீண் செய்யமாட்டோம் - ஸ்ரீராம் ]

இங்க பெங்களூர்ல எங்க பார்த்தாலும் மாம்பழங்கள் விற்கறாங்க. நான் மல்கோவா, மல்லிகா (இது மாம்பழ வெரைட்டி), பாதாமி (அல்ஃபோன்சா) போன்ற வெரைட்டிகளை வாங்கினேன். மல்கோவா கிலோ 80 ரூ, அல்ஃபோன்சா 50 ரூபாய், பங்கனபல்லி போன்றவை 50 ரூபாய் என்று விற்கிறார்கள். எனக்கு அல்ஃபோன்சா மிகவும் பிடித்திருந்தது. சென்னைல பங்கனபல்லி மாம்பழம் நிறைய சாப்பிட்டு போரடித்துவிட்டது. உங்களுக்காக சில படங்கள்.


சென்ற வார இறுதியில் எம்.டி.ஆர்  (மாவல்லி டிஃபன் செண்டர், பெங்களூர்) உணவகத்துக்கு மதிய உணவுக்குச் சென்றிருந்தேன். அங்க கை கழுவுமிடத்தில் பெடஸ்டலோடு வச்சிருந்தாங்க. இல்லைனா, குழாயைத் திருகிவிட்டுட்டு, திரும்ப மூடாம போயிடுவாங்க என்பதால். காலால் அழுத்தினால், குழாயில் தண்ணீர் வரும். பெடஸ்டலிலிருந்து காலை எடுத்துவிட்டால் தண்ணீர் நின்றுவிடும். இது புதுமையாத் தெரிஞ்சதுனால படம் எடுத்தேன். (உங்களுக்காக காவி வந்தேன் – இது என்ன மொழியோ)



விரைவில் மீண்டும் ஒரு ரெசிப்பியோடு உங்களைச் சந்திக்கிறேன். அதற்குள் இந்த மோர்க்கூழ் செய்துபாருங்கள்.


அன்புடன்

நெல்லைத்தமிழன்

134 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஸ்ரீராம்... வெளியிட்டமைக்கும், உங்களது கருத்துகளுக்கும் நன்றி....

      பசங்க, அப்பாவை டென்ஷனாக்கிடுவாங்க. ஆனா அம்மா, அலட்டிக்கொள்ளவே மாட்டாள். இந்த குணாதிசய வித்தியாசம்தான், பசங்க அம்மாகிட்ட ரொம்ப ஒட்டிக்கக் காரணம். ஹா ஹா.

      எனக்கு ரொம்ப அபூர்வமாத்தான் இது பிடிக்கும். யாரேனும் செய்துதந்தால், ஸ்பூனால் சாப்பிட்டுக்கிட்டே தொலைக்காட்சி பார்க்கலாம், படிக்கலாம்..

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் எல்லோருக்கும்

    ஆஹா! மோர்க்கூழு நேற்று முன் தினம் செய்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    2. அனைவருக்கும் காலை வணக்கம்.

      கீதா ரங்கன் - மோர்க்கூழ் படம் நீங்க பகிரிந்துக்கலையே...

      நீக்கு
    3. அடுத்த முறை செய்யும் போது கண்டிப்பா பகிர்ந்துக்கறேன் நெல்லை. இந்த முறை கொஞ்சம் அவசர அவசரமாகச் செய்ய வேண்டியதானது. அதான் கைல மொபைல் இல்ல..அது சார்ஜ்ல இருந்துச்சு...அதான்

      கீதா

      நீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க.. வாங்க...

      நீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் உங்களுடன் இணைந்து வரவேற்கிறேன்.

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கும், வரவேற்கப் போகும் மற்ற நண்பர்களுக்கும், இனி வரப்போகும் நண்பர்களுக்கும் வந்திருக்கும் நண்பர்களுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

      நீக்கு
  5. மல்கோவா கிலோ 80 ரூ, அல்ஃபோன்சா 50 ரூபாய்,//

    இங்கும் அதே விலைதான் நெல்லை சந்தையில். மல்கோவா 60க்கும் வந்தது அது போல அல்ஃபோன்ஸா 40க்கும் வந்தது. அப்புறம் சமீபமாக வாங்கவில்லை..

    வாஷ்பேசின் நானும் பார்த்தேன்...படம் எடுக்கலை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். இப்போ பழம்லாம் கண்லயே படலை (பெங்களூர்ல). இன்றைக்கு நம்ம கிளிமூக்கு மாம்பழம் (ரொம்ப அழகா இருக்கு) கிலோ 100 ரூபாய்க்கு விற்பதைப் பார்த்தேன். வாங்க மனசில்லை. ஒரு பழத்துக்கு 50 ரூபாயா என்று தோன்றிவிட்டது.

      நீக்கு
    2. நெல்லை கிளிமூக்கு எப்பவுமே விலை கூடுதலாகத்தான் இருக்கிறது. இங்கு 80 என்று நினைவு.

      மல்கோவா நிறைய இருக்கு. நீலனும் நிறைய இருக்கு. 40 ரூ என்று

      கீதா

      நீக்கு
    3. என் பி.இன்.லா... எனக்கு வெயிட் போட்டதற்குக் காரணம் நான் பலாப்பழம், மாம்பழம் சாப்பிடறதுதான் என்று சொல்லிட்டான். அதுனால இந்தத் தடவை இனிப்பு சாப்பிடாம இன்று வெற்றிகரமான இரண்டாவது நாள். அதனால் நீலன் வாங்குவது சந்தேகம்.

      நீக்கு
  6. மோர்க்கூழ்...

    இப்படியும் ஒன்று இருக்கிறதோ!...

    செய்து விடலாம்.. ஆனால் -
    மோர் மிளகாய்க்கு எங்கே செல்வது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க... அந்த குடைமிளகாயே நம்ம ஊர் ஸ்பெஷல் ஆச்சே... தஞ்சாவூர்க் குடை மிளகாய்தானே அதன் பெயரே... நான் கூட படம்லாம் எடுத்து ரெஸிப்பி ( !!!! )தந்திருந்திருக்கிறேன்! தஞ்சாவூரில் அண்ணி கிட்ட சொல்லி போட்டு வைக்கச் சொல்லி ஊர் வரும்போது எடுத்துக் கொண்டு வரவேண்டியதுதான்! பிப்ரவரி மார்ச் மாதம்தான் அதன் சீசன்.

      நீக்கு
    2. சொல்வதெல்லாம் சரி...

      அங்கிருந்து கொண்டு வந்தது தீர்ந்து போனது..

      ஏதோ மோர் மிளகாய்க்கு தானே Full Authority என்பது போல
      கேரள கம்பெனி ஒன்று மோர் மிளகாய் விற்கிறான்.. கிட்ட நெருங்க முடியாது...
      ஒரு முறை அதை வாங்கி விட்டு நான் பட்ட அவஸ்தை சொல்லி முடியாது...

      ஆனால் அதையும் வாங்கி - தின்று தீர்த்து விடுகின்றார்கள்...

      நீக்கு
    3. மோர் மிளகாய் இல்லாவிட்டால் பச்சை மிளகாய் பயன்படுத்தலாம்.

      நீக்கு
    4. வாங்க துரை செல்வராஜு சார்.... கேரளா பிராண்ட் மோர் மிளகாய் எவ்வளவு நான் பார்த்திருக்கிறேன். தஞ்சை குடமிளகாயிலேயே மனசைப் பறிகொடுத்துக்கொண்டிருக்கலாமா?

      இப்போ சமையல் செய்ய உங்களுக்கு வாய்ப்பும் சவுகரியமும் இருக்கா?

      நீக்கு
    5. பச்சை மிளகாய் போட்டால் நல்லாருக்குமா பானுமதி வெங்கடேச்வரன் மேடம்? என் பையன், நான் போட்ட மோர் மிளகாய் பத்தவில்லை என்று வேற சொன்னான். அப்புறம் இன்னும் கொஞ்சம் வறுத்துப் போட்டேன்.(தட்டுல).

      நீக்கு
    6. நெல்லை என் மாமியார் பச்சை மிளகாய் போட்டுத்தான் பெரும்பாலும் செய்வாங்க. எனக்கு அது புதுசாக இருந்தது. பிறந்த வீட்டில் மோர்மிளகாய்தான் இதற்கும் சரி புளி உப்புமா செய்வதற்கும் சரி.

      கீதா

      நீக்கு
    7. பச்சை மிளகாய், இஞ்சி போட்டு மோர்க்கூழ் செய்வாங்க. என் அம்மா ரவையிலேயே புளிச்ச மோர் விட்டு மோர்க்கூழ் மாதிரிப் பண்ணுவாங்க! நல்லெண்ணெய் தான் அதுக்கு நல்லா இருக்கும்.

      நீக்கு
    8. இன்னைக்கு எல்லாரும் கேள்விப்படாத ஐட்டம்லாம் சொல்றீங்க. (பச்சை மிளகாய் போட்ட மோர்க்கூழ்)... ஞாபகத்தில் வச்சுக்கறேன். நன்றி.

      நீக்கு
  7. இன்னும் கொஞ்சம் எண்ணைய் சேர்ப்பதுண்டு. அப்பத்தான் அது வழுக் வழுக்குனு போகும் என்று...ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல்.

    ஆனால் இப்போது நானும் எண்ணெய் விடுவதைக் குறைத்துக் கொண்டுவிட்டேன். என்னதான் நல்லெண்ணை நல் எண்ணெயாக இருந்தாலும்....

    நல்லா செஞ்சுருக்கீங்க நெல்லை!!!! சூப்பர்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோர்மிளகாயை வேஸ்ட் செய்வதும் இல்லை. அதுதானே டேஸ்ட் அதில்.

      கீதா

      நீக்கு
    2. அன்பு துரை,ஸ்ரீராம்,கீதாமா, நெல்லைத் தமிழன் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

      இன்றைய மோர்க்கூழ் ரெசிபி பிரமாதம். முரளிமா

      நல்லெண்ணெய் விட்டு இத்தனை
      அற்புதமாகச் செய்ய நல்ல பொறுமை வேண்டும்.

      அளவுகளும் கச்சிதம். படங்களும் அருமை.
      இப்பவே சாப்பிட வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.

      மோர்மிளகாய் அங்கு வந்துதான் வாங்க வேண்டும்.
      நல்லதொரு பதிவு.

      நீக்கு
    3. நெல்லை இதைப்பற்றி சொல்ல இன்னும் இருக்கு...ராகியில் ராகி மோத்தே என்றும் செய்யலாம் என் பாட்டி தாத்தாவுக்கு ராகி மாவில் இப்படி செய்து கொடுப்பார்.நானும் செய்வதுண்டு...ராகியை ஊற வைத்து அரைத்து...என்று. அது போல அரிசி ஊற வைத்து அரைத்து...செய்வார்.
      கேக் போல துண்டு போட்டும் சேவார். நானும்...ரைஸ் கேக் னு மகன் வைத்த பெயர்...
      மில்லட் மாவிலும் செய்திருக்கேன். மோர் க்கூழ் சில சமயம் உதிராக உப்புமா போலும்...புளி உப்புமா செய்வது போலவும் செய்திருக்கேன்...

      உங்கள் பெரியம்மா செய்து நீங்க சாப்பிட்டிருக்கீங்களான்னு தெரில..ஆனா நான் சாப்பிடுருக்கேன். மதியம் வந்து சொல்றேன்..

      கீதா

      நீக்கு
    4. 'வழுக் வழுக்' என்று போனால், எப்படி செரிக்கும்? குடலும், இதனை எப்படி செரிக்கலாம் என்று யோசிப்பதற்குள் அது வழுக்கிக்கொண்டு போய்விடும். பொதுவா ரொம்ப எண்ணெய் சேர்த்தால் செரிமானம் பாதிக்கும்.

      கீதா ரங்கன் - உங்கள் 'பாராட்டும் குணத்தைப்' பாராட்டுகிறேன்.

      நீக்கு
    5. வாங்க வல்லிம்மா. உங்களுக்கும் காலை வணக்கம்.

      செய்முறையையும் படங்களையும் பாராட்டியதற்கு நன்றி. நிறையதடவை நினைத்துக்கொள்வேன் வல்லி சிம்ஹன் இருவரையும் பார்க்கும் வாய்ப்பு வரவில்லையே என்று.

      நீக்கு
    6. @கீதா ரங்கன் - நீங்க ராகி மொத்தே என்று எழுதியதைப் பார்த்ததும் எனக்கு நான் 7ம் வகுப்பில் படித்த ஞாபகம் வந்துவிட்டது. அப்போ தாளவாடி என்ற ஊரில் படித்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்து 1- 1 1/2 கிலோமீட்டர் தூரம்தான் தொட்ட காஜனூர் என்ற ஊர். அங்குதான் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்களுடைய பண்ணை வீடு மற்றும் தோட்டங்கள் இருக்கு. நான் ஒரு தடவை போயிருந்தப்போ, ராஜ்குமார் அவர்களுக்கு அவர் மனைவியார் பார்வதி, எண்ணெய் தேய்த்துவிட்டுக்கொண்டிருந்தார் (எண்ணெய்க் குளியலுக்கு). சமையலுக்கு ராகி மொத்தே தயார் ஆகிக்கொண்டிருந்தது. ரொம்ப எளிமையா, சாதாரண விவசாயி எப்படி இருப்பாரோ அப்படி இருந்தார் ராஜ்குமார் அவர்கள். எங்களை தோட்டத்தைப் பார்க்கலாம் அனுமதித்தார்.

      பெங்களூரில் சில ஹோட்டல்களில் மெனுவில் 'ராகி மொத்தே' என்பதைப் பார்திருக்கிறேன். ஒரு தடவை சாப்பிட்டுப் பார்க்கவேண்டும்.

      நீக்கு
    7. நெல்லை, ராகி மொத்தே இங்கு பெளெயினாக செய்யறாங்க. நானும் வீட்டில் அப்படிச் செய்து அதற்கு காய்கள் போட்ட குழம்பு அல்லது சாம்பார் செய்வதுண்டு. மகனுக்கு ரொம்பப் பிடிக்கும்.

      பாட்டி இதையே நாம் மோர்க்கூழ் செய்வது போல செய்வாங்க ராகி மோர்க்கூழ் என்று தாளித்து, இதே போன்று செய்து உருட்டி வைத்துவிடுவாங்க தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அல்லது குழம்பு.

      நானும் வீட்டில் தாளித்து மோர்க்கூழு போலச் செய்வதுண்டு செம டேஸ்டா இருக்கும்.

      கீதா

      நீக்கு
    8. ராகி மொத்தேயும் பாகற்காய் கொஜ்ஜுவும் பிரபலம். நம்ம ரஞ்சனி கூட இதை வைத்து ஓர் நகைச்சுவைக் கட்டுரை எழுதி இருக்கார். சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கும்.

      நீக்கு
    9. என்னாது... ராகி மொத்தேவும் பாகற்காய் கொத்சுவுமா? கேள்விப்படாததெல்லாம் எழுதறீங்களே கீசா மேடம்.

      அந்த கட்டுரையின் சுட்டி கொடுங்க பார்க்கலாம்.

      நீக்கு
    10. ராகிலாம் நமக்குச் சரிப்பட்டுவருமா கீதா ரங்கன். அது உடலுழைப்பு செய்பவர்களுக்குத்தானே உகந்தது?

      பார்க்கலாம் இதனைச் செய்துபார்க்கும் சந்தர்ப்பம் வருதா என்று.

      நன்றி கீதா ரங்கன். கடைசிவரைல, குடமிளகாய் ஸ்டஃப் பண்ணப்போறேன்னு உத்தரவாதமாச் சொல்லலை.

      நீக்கு
    11. பாகற்காய் கொத்சு இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கொஜ்ஜு! ரஞ்சனியோட வேர்ட் ப்ரஸ் பக்கத்திலேயே இருக்கும். தேடணும். எதுக்கும் வாட்சப்பிலே ரஞ்சனியைக் கேளுங்க! :) சமீபத்தில் ஃபேஸ்புக்கில் மத்யமர் குழுவிலே கூடப் போட்டிருந்தாங்க! எப்போவோ மங்கையர் மலரிலேயும் வந்திருக்கு!

      நீக்கு
    12. ஹா ஹா ஹா கு மி ஸ்டஃப் செய்வேன். ஆனா சந்தைக்குப் போனாத்தான் நல்லா அழகா குமி கிடைக்கும் மீடியம் சைசில்.

      நெல்லை திருவனந்தபுரத்தில் இருந்தப்பா, உங்க பெரியம்மா என்னை மட்டும் உள்ளே அழைத்து மோர்க்கூழு கொடுப்பாங்க. சுட சுட. அவ்வளவு டேஸ்டியா இருக்கும். ஆனா ரொம்ப ரேராகத்தான் செய்வதுன்னும் சொல்லிருக்காங்க. பெரும்பாலும் சாதம் தான். இரவும்.

      அப்போது அரைத்துதான் செய்வாங்க அவங்களும். அரிசி மாவு வாங்க மாட்டாங்க. கூழ் செய்துவிட்டு அம்மிக்கல்லில் அதைப் பரத்தி அழகா ஸ்லைஸ் போட்டுத் தருவாங்க. அந்த அன்பிலேயே அது அத்தனை ருசியாக உள்ளே வழுக்கிக் கொண்டு செல்லும். பெருங்காயம் மணம் எல்லாம் பிரமாதமாக இருக்கும். கட்டி வாங்கி ஊறவைத்துத்தானே செய்வாங்க. அதை எல்லாம் மறக்கவே முடியாது.

      அதுவும் எனக்கு என்ன பிடிக்கும் என்று செய்து தரச் சொல்லி மாமாவும் மாமியிடம் சொல்லுவார். கோல்டன் டேய்ஸ். நான் அவர்களுக்குச் செல்லம் என்றும் சொல்லலாம்.

      கீதா

      நீக்கு
    13. கொஜ்ஜுவா? எனக்குத் தெரிந்ததெல்லாம் துளசி கோபால் அவர்களின் 'ரஜ்ஜு'தான்.

      //எதுக்கும் வாட்சப்பிலே ரஞ்சனியைக் கேளுங்க! :) // - நீங்க வேற...அவங்க ரொம்ப பிஸின்னு நினைக்கறேன். கன்னடம் எழுதப் படிக்க நல்ல புக் சொல்லுங்கன்னு கேட்டிருந்தேன். பதில் இன்னும் வரலை. கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கும்போது எழுதுவாங்கன்னு நினைக்கறேன். அதுக்குள்ள இதுவும் கேட்டால், 'இது என்ன..இந்தாளு கேள்விக்குப் பிறந்தவர் போலிருக்கு' என்று என் நம்பரையே எடுத்துடப்போறார் ரஞ்சனி நாராயணன் மேடம்.

      நீக்கு
    14. @ கீதா ரங்கன் - //உங்க பெரியம்மா என்னை மட்டும் உள்ளே அழைத்து மோர்க்கூழு கொடுப்பாங்க. சுட சுட// - நான் 9வது படித்துக்கொண்டிருந்தபோது அவங்களோடத்தான் இருந்தேன். என்னோட விருப்பம்லாம் வீட்டுல பண்ண மாட்டாங்க. அவங்க முழுக்க முழுக்க வைணவ தளிகைதான்..ஹா ஹா.

      இருந்தாலும் அவங்களும் பெரியப்பாவும் எங்க எல்லோர் மேலயும் அன்பு செலுத்தினவங்க. என் பெரியப்பா மீது எனக்கும் மிகுந்த அன்பு. ஆனா பாருங்க, "உவத்த நீர் போல என் உற்றவர்க்கு ஒன்றுமல்லேன்..அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகருளானே' (திருமாலை) என்று சொல்லும்படியாத்தான் என் வாழ்க்கை இருந்திருக்கு.

      அவங்கமேல் எனக்கு அவ்வளவு அன்பு இருந்தபோதும்... அதைச் செயலில் காண்பிக்கும் சந்தர்ப்பம் வந்ததே இல்லை. நினைத்தால் மிகுந்த வருத்தமாத்தான் இருக்கு. (நான் முழுக்க வெளிநாட்டில் இருந்தேன்).

      10 வருடங்களுக்கு முன்பு பெரியம்மாவை மட்டும் பார்த்தபோது உங்களை எனக்குத் தெரியாது. இல்லைனா நிச்சயம் அதைப்பற்றிப் பேசியிருப்போம். அந்த விஸிட்டில் என் பசங்க, மனைவியோட போய்ப் பார்த்து சில மணி நேரங்கள் செலவழித்தோம்.

      இந்த லிங்க்தான் எனக்கு உங்கள்மீதான அன்புக்கு ஒரு காரணம்.

      நீக்கு
    15. https://tinyurl.com/y6hqmql3 இந்த லிங்கில் போய்ப் படிங்க! ரஞ்சனியோட பதிவுகளில் இது 2012 அக்டோபரில் வந்திருக்கும்.

      நீக்கு
    16. படித்தேன். கருத்திட்டேன். ரொம்ப நல்லா எழுதியிருக்காங்க ரஞ்சனி நாராயணன் மேடம்... நல்ல கதையின் லிங்க் கொடுத்ததற்கு நன்றி.

      எப்படி இவ்வளவு ஞாபகசக்தி உங்களுக்கு?

      கொஞ்சம் பேச ஆரம்பித்தால், 1350ல், நீங்க, என்னை குருகுலத்துல பார்த்ததைக்கூடச் சொல்லிடுவீங்க போலிருக்கே.

      நீக்கு
    17. ஹாஹாஹா, வீட்டிலேயே அதான் தகராறே! போன ஜன்மத்து நினைவெல்லாம் வந்துடுது! குறைச்சுக்கோனு சொல்றார். இன்னிக்குக் கூட அப்படித் தான் ஒரு சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன வாக்குவாதம்! எனக்கு மூன்றாம் ஜென்மத்து நினைவெல்லாம் வர! ஒரே அமர்க்களம். :))))))))

      நீக்கு
    18. நீங்க குருகுலத்தில் கூடப் போட்டி போட்டுக்கொண்டு குருபத்தினியிடம் சாப்பாடு வாங்கிச் சாப்பிடுவதில் தான் குறியா இருந்தீங்கனு தெரியும்! :))))) அதான் அந்த வாசனை தான் இப்போவும்!

      நீக்கு
    19. //போன ஜன்மத்து நினைவெல்லாம் வந்துடுது! // - அதில் தவறில்லை கீசா மேடம்... ஆனா.. என்னிடம் உள்ள குறை என்னன்னா... நான் எனக்கு மற்றவர்கள் செய்த கெடுதல்களை மறக்கவே மாட்டேன்...மன்னிக்கவே மாட்டேன். இந்தக் குணம் மட்டும் எனக்கு போவதில்லை. ஆனா அதே மனம், அவங்க செய்த சில நல்லதுகளை நினைவுக்குக் கொண்டுவந்தால், சரி..போகட்டும் என்று விட்டுடுவேன்.

      கெடுதல்களை மறக்கும் மனமும், பிறர் செய்த நல்லனவற்றை மறக்கா மனமும்தான் வரம்.... அது எனக்கில்லை..ஹா ஹா.

      நீக்கு
    20. /சாப்பாடு வாங்கிச் சாப்பிடுவதில் தான் குறியா இருந்தீங்கனு தெரியும்!// - நீங்க வேற.. இப்படிச் சொல்வது சரியான அர்த்தம் தரலை... எனக்குப் பிடித்த உணவில்தான் எனக்கு ஆர்வம் ஆசை உண்டு. எல்லா உணவும் எனக்கு ஆசையைத் தூண்டுவதில்லை.

      எண்ணெய் வடிய ஏதேனும் இனிப்பு இருந்தாலோ, இல்லை டூ டூ மச் ஷுகர் இருந்தாலோ, இல்லை அதைவிட சூப்பரான உணவை இன்னொரு இடத்தில் சாப்பிட்டிருந்தாலோ எனக்கு அந்த உணவில் ஆர்வம் வராது. அது கோவில் பிரசாதமாக இருந்தாலும்கூட... எனக்கு திருப்பதி கோவிலில் தரும் கதம்ப சாதம் பிடிக்கலை. இரு முறை அதுவே எனக்கு வாய்த்தது. நல்லவேளை நான் தொடர்ந்து மூன்று நாட்கள் தரிசனம் செய்ததால், லட்டு போன்றவையும் கிடைத்தன. அதேபோல ஒப்பிலியப்பன் சன்னிதியில் கிடைத்த சர்க்கரைப் பொங்கலும், அப்பமும் (இரவு இறைவனைத் துயிலுக்கு அனுப்பியபின்னான பிரசாதம்) நாக்கிற்குப் பிடிக்கலை.

      இன்னொன்று, (தவறாகத் தெரிந்தாலும்), என் அந்தராத்மா சொன்னால்தான் ஒரு இடத்தில் நான் சாப்பிடுவேன். எல்லார் வீட்டிலும் சாப்பிடமாட்டேன். என் அந்தராத்மா சொல்லும், சரி சாப்பிடு என்று. அப்போ உணவைக் கேட்டுச் சாப்பிடுவதில் வெட்கம் இருக்காது. மற்றபடி பிறர் வீட்டில் உண்ண மாட்டேன், அது சத் சங்கமாக இருந்தாலும். ஹா ஹா.

      நீக்கு
  8. வ்ல்லிம்மா போன வாரத்து உங்களின் ரெசிப்பி குடைமிளகாய் கட்லெட் பார்த்தேன் நன்றாக இருந்தது. இது ஸ்டாஃப்ட் கேப்சிக்கம் என்று க்ரில் செய்திருக்கிறேன். அங்கு கருத்து போட்டும் போகவில்லை என்றே நினைக்கிறேன்.

    குறித்துக் கொண்டேன் உங்கள் ரெசிப்பியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா மா.எல்லோருக்கும் தெரிஞ்சது தான்.

      செய்து பாருங்கள் மா.

      நீக்கு
    2. @கீதா ரங்கன் - சும்மா செய்து பார்த்தேன் என்று சொன்னால் பத்தாது. படம் அனுப்புங்கள்.

      அப்புறம் நானும் இப்போ பெங்களூரில்தான் இருப்பதால், செய்தபோது கூப்பிட்டு சாப்பிடக் கொடுங்கள். பிறகு நான் வல்லிம்மாவுக்கு 'விட்னஸ்' ரிப்போர்ட் அனுப்பறேன்.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா செஞ்சுட்டா போச்சு நெல்லை!!

      ஆனால் குடைமிளகாயிலிருந்து காய்கள் கீழே விழுந்துவிடாமல் இருக்க வேண்டுமே என்று...அதுவும் அதை கார்ன்ஃப்ளோர்/மைதா கரைசலில் தோய்த்துச் செய்ய வேண்டுமே...நான் உருட்டி வட்டமாக நார்மல் கட்லெட் செய்வது போல் செய்வதுண்டு அதை காப்சிகம் கட்லெட் நு.

      காப்சிக்கம் தொக்கு சாப்பிட்டுருக்கீங்களா நெல்லை? செமையா இருக்கும். வித்தியாசமான ஒன்று நார்மல் கேப்சிக்கம் தொக்கு போலச் செய்வதில்லை இது...செஞ்சேன்னா படம் எடுத்துப் போடப் பார்க்கிறேன்.

      கீதா

      நீக்கு
    4. கீதா ரங்கன் - காய் விழுந்துவிடாம இருக்க பஜ்ஜி மாவுபோல கார்ன்ஃப்ளோர்ல தோய்த்துச் செய்யலாமே. இங்க அந்த உணவுத் தெருல பார்த்திருக்கேனே... எனக்கு கட்லெட்லாம் அவ்வளவாகப் பிடிக்காது, ஏன்னு தெரியலை.

      காப்சிகம் தொக்கா? செய்முறை அனுப்புங்க.

      நீக்கு
  9. நெல்லை வாணலியில் இருந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றும் போது ஒட்டாமல் வந்ததா? அதுதானே அதன் பதம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா ரங்கன். ஒட்டவே இல்லை. அப்போதான் மோர்க்கூழ் நன்றாக ஆகிவிட்டது என்று அர்த்தம். எனக்குன்னா நான் எண்ணெய்லாம் இன்னும் குறைவாகத்தான் சேர்ப்பேன். ஆனா பையன், எதைச் செய்தாலும் 'அம்மா எப்படிப் பண்ணினா' என்று யோசிப்பான். அதுனால நான் பொருட்கள்ல, செய்முறைல காம்ப்ரமைஸ் செய்துகொள்வதில்லை. ஹா ஹா.

      நீக்கு
    2. சூப்பர் நெல்லை...நீங்க செய்யறதைப் பார்த்ததுமே நல்லா செஞ்ச்ருக்கீங்கனு தெரியுது. ரொம்ப ஆர்வத்தோடும் செய்யறீங்க. கேட்க வேண்டுமா..நல்லாவே வரும்.

      பையர் இப்போ சின்ன வயசு தானே அதனால ஓகே.

      ஆனால் எண்ணெய் குறைவாக விட்டுத்தான் நானும் இப்பல்லாம் செய்யறேன். என்ன கூடக் கொஞ்சம் நேரம் கிளற வேண்டும்..

      கீதா

      நீக்கு
    3. //பையர் இப்போ சின்ன வயசு தானே// - இருக்கலாம் கீதா ரங்கன். ஆனா நான் அதிக எண்ணெய், இனிப்பு போன்றவையினால் என்ன எஃபெக்ட் வரும்னு அறிஞ்சவன். அதுனால ரொம்ப கவனமா அவங்க இருக்கணும்னு சொல்லுவேன். இருந்தாலும் என் விருப்பத்துக்கு மாறா... அவங்களுக்கு மைதால செஞ்ச க்ரோசண்ட்ஸ், கேக், பிட்சா இதெல்லாம் பிடிக்குது.. என்ன செய்ய?

      நீக்கு
  10. நெல்லை உங்க ஹஸ்பென்ட் போலத்தான் இங்கும் நானும் என் மகனிடம் சொல்வது ஹா ஹாஅ ஹா ஹா ஹா ஆனால் இங்கு அவன் அப்பாவும் அவனிடம் சொல்வதுண்டு. சாப்பாடு என்றில்லை படிப்பு மற்றும் சில விஷயங்கள்..

    அவன், அப்பா நான் ஒன்னும் எல்கேஜி பாப்பா இல்லைப்பா இப்ப என்று சொன்னதும் சமீபத்தில் சொல்லுவதில்லை. ஆனால் நானோ?!! ஹிஹிஹிஹிஹி...அவன் என்ன சொன்னாலும் என் பழக்கம் என்னை விடாது. வீட்டில் கூட என்னை எல்லோரும் ஏன் இப்படி இருக்க/இருக்கீங்க? அவன் என்ன சின்ன பையனா? என்று என்னைச் சொல்லுவார்கள்.

    என் மகனிடம் நான் கேட்டால் அவன் சொல்லுவான்..(சில சமயம் என்னிடம் அலுத்துக் கொண்டாலும்) அம்மா உனக்கு எத்தனை வயசானாலும் நான் உனக்கு பாப்பாதான் என்று!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன் - என் எண்ணம். பையன் எத்தனை வயசானாலும், அப்பா அவனை Guide செய்ய நிறைய விஷயங்கள் உண்டு என்பது. ஆனா பசங்க பாருங்க, 'நான் பார்த்துக்கறேன், எனக்குத் தெரியும், நான் என்ன பப்பாவா. I am adult" என்று சொல்வாங்க. ஆனா அவங்க இன்னும் 'பப்பா'தான் என்பதை நிறைய தடவை பார்க்கமுடியும்.

      But we must give them some space. அவங்களாகவே படிக்கறாங்க... என்ன செய்யணும்னு தெரியுது. அதுனால சின்னச் சின்னக் குறைகளை பெரிதுபடுத்தக்கூடாதுன்னு நினைத்துக்கொள்கிறேன்.

      இந்த டிசிப்ளிந்தான் (இத்தனை மணிக்கு தூங்கப் போயிடணும், இப்போ எழுந்துடணும், வேளைக்கு சாப்பிடணும், லைட்/ஃபேன்/Gகீசர் போன்றவற்றின் தேவை முடிந்ததும் அணைத்துவிடணும்....) அவங்களுக்கு-இந்தத் தலைமுறைக்கு சட்னு வசப்படமாட்டேங்குது. இது என்ன பெரிய விஷயம் என்று கடந்துபோயிடறாங்க.

      நீக்கு
    2. என் பையன் சீக்கிரம் தூங்கப் போய் சீக்கிரம் எழும் டைப் தான். ஆனால் இப்போ அப்படி இருக்க முடிவதில்லை அவன் வேலை அப்படியானது. அது போல வேளைக்குச் சாப்பிடவும் முடிவதில்லை. அதனால் நான் அவனுக்கு சில டிப்ஸ் கொடுப்பதுண்டு. டக்கென்று சாப்பிடும்படியாக..

      ஆமாம் அவர்களுக்கு ஸ்பேஸ் கொடுக்க வேண்டும் தான். ஆனாலும் நீங்கள் சொல்லியிருபப்துபடி கைடன்ஸ் இருக்க வேண்டும். எத்தனை வயசானாலும். நானும் அப்படி நினைப்பதுண்டு. நானும் அவனுக்குச் சொல்வதுண்டு அவனும் எனக்குச் சொல்வதுண்டு. ம்யூச்சுவலா போகும்.

      கீதா

      நீக்கு
    3. கீதா ரங்கன்... நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். நேற்றுகூட ஏதோ ஒரு காரணத்துக்கு என்னருகில் பையன் வந்து, நீங்க இதைச் செய்யணும்.. உங்கள் மீது அன்பு இருப்பவங்கதான் இதனைச் சொல்வாங்க. அதுனால இதைச் செய்யணும் (ஹெல்த் மானிட்டர் செய்யும் வாட்ச் வாங்குவதற்காக) என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

      என் பையனும், எக்சாம், அது இது என்று மிக நேரம் கழித்து தூங்கச் செல்பவன். (இவங்களுக்கு அட்வைஸ் பண்ணும் நான், என் படிப்பு காலத்தில், இரவு 8 மணிலேர்ந்து அதிகாலை 3-4 மணி வரைக்கும் படிப்பேன்...ஹாஹா)

      நீக்கு
  11. வெஜிட்டபிள் மோர்க்கூழு என்றும் செய்ததுண்டு. மகனுக்கு மோர்க்கூழு பிடிக்கும். (அவனுக்கு எதுதான் பிடிக்காது!!!!! எல்லாமே பிடிக்கும்) எனவே அதில் காய்கள் ஃப்ரைட் ரைசுக்குப் போடும் காய்கள் போட்டுச் செய்ததுண்டு. லஞ்ச் பாக்ஸிற்கு. ஸ்பூனால் எடுத்துச் சாப்பிட வசதி என்பதால். இப்போதும் அங்கு செய்து கொள்கிறான். காய், சாதம் என்று தனி தனியாகச் செய்ய நேரம் இல்லை என்பதால் என்னிடம் கேட்டுக் கொண்டு இப்படிச் செய்து கொள்கிறான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில பேருக்குத்தான் உணவில் பேதமில்லாமல், எதைச் செய்தாலும் ரசித்துச் சாப்பிடுவாங்க. ரொம்ப குறைலாம் சொல்ல மாட்டாங்க. பலர் 'வக்கணையா' சாப்பிடுவதைத்தான் நான் கண்டிருக்கிறேன். அதாவது சிறிய குறைகூட பெரிதாகத் தெரியும்.

      நான் என் பசங்கள்ட இந்த விஷயத்தில் ரொம்ப கேர்ஃபுல்லா இருப்பேன். சென்ற வாரம், என் பெண்ணிற்கு, சிறிய கிண்ணத்தில் வைத்திருந்த ஊறுகாயை தயிர் சாதத்திற்குப் போட்டேன். ஸ்பூன் எடுக்க அவகாசமில்லாமல் (அவள் சீக்கிரம் செல்லவேண்டுமே என்று) விரலால் ஊறுகாயை எடுத்துப் போட்டேன். உடனே அவள், ஏன் விரல் உபயோகப்படுத்தறீங்க, மீதி ஊறுகாய் இருக்கே.. அம்மா இதெல்லாம் அலவ் பண்ணமாட்டாளே என்றாள். அதுபோல காய்கறிலயும் பொருட்களிலும் எந்த காம்ப்ரமைஸ் செய்யவும் விடமாட்டாள். நான் பனீர் துண்டு கீழே கை தவறி விழுந்துட்டா, போய் அலம்பிவிட்டு சாப்பிட்டுடுவேன். அவள் அதெல்லாம் ஒத்துக்கமாட்டாள். (பையனும் அப்படித்தான்).

      நீக்கு
    2. ஊறுகாயைக் கையால் எடுத்தால் வீணாகிவிடும்! :(

      நீக்கு
    3. ஆமாம் கீசா மேடம்... அப்போ செஞ்சது தவறுனாலும், என் பெண் இதெல்லாம் கவனிப்பா. அப்புறம் காய் கட் பண்ணுவதற்கு முன்னால் நல்லா அலம்புறேனா, காயை கட் பண்ணி அதுல புழு பூச்சி இருக்கான்னு செக் பண்ணறேனா, பண்ணியபிறகு மூடி வைக்கிறேனா என்றெல்லாம் கவனிப்பா. அவளுக்கு நம்பிக்கை வரலைனா (அப்படித் தோணினாலே) சாப்பிடமாட்டா. சில சமயம், நான் தேங்காய் தொகையல் பண்ணும்போது, ஏதோ சரியில்லையே..என்னவோ ஒரு வாசனை வருதே..அளவுக்கு அதிகமா பெருங்காயம் போட்டீங்களா இப்படீல்லாம் சொல்லிடுவா....

      ரெண்டுபேரும், என்னதான் நான் செய்வதை 'ஓகே..நல்லாருக்கு' என்று அபூர்வமா சொன்னாலும், அவங்க அம்மா செய்தால் 'ஆஹா ஓஹோ'ம்பாங்க. என்னடா..இன்னைக்கு இது நல்லாயில்லையே..அது சரியா வரலையே என்றால், அதெல்லாம் சரியாத்தான் இருக்கும்பாங்க.

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்... வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்து மகிழ்ச்சியடைய வைக்கிறது.

      நீக்கு
  13. மோர்க்கூழ் நன்றாக இருக்கிறது. படங்கள் எல்லாம் மிக அருமை.

    தாய்,மகன் பாசம் பற்றி அழகாய் சொன்னீர்கள்.

    மோர் கூழ் இரண்டு மூன்று முறை செய்து இருப்பேன்.
    எங்கள் வீட்டில் விரும்பி சாப்பிட மாட்டேன் என்கிறார்கள். அதனால் செய்வது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம்... சாருக்கு மோர்க்கூழ் பிடிப்பதில்லையா?

      தாய்-மகன் பாசம் - உங்களுக்கும் அதில் உடன்பாடு இருப்பதறிந்து மகிழ்ச்சி

      நீக்கு
  14. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    மோர்க்கூழ் - எனக்கும் பிடிக்கும். இங்கே ஒரு மாமா [9B மாமா என்ற பெயரில் அவர் பற்றி பதிவு கூட எழுதி இருக்கிறேன்] வீட்டில் அடிக்கடிச் செய்வார்கள். அங்கே சாப்பிட்டது தான். சுலபமானது தான் என்றாலும் நான் செய்வதில்லை.

    மாம்பழம் - இங்கே வேறு வகைகள் - லங்டா, சஃபேதா, Chசோசா என்ற பெயர்களில் நிறைய வகைகள் கிடைக்கின்றன. அனைத்தும் உத்திரப் பிரதேசத்திலிருந்து வருபவை. பங்கனப் பள்ளி போன்றவை கிடைப்பதில்லை. ஆந்திரப் பிரதேசத்தின் அரசு அலுவலகம் [ஆந்திரா பவன்] இருக்குமிடத்தில் சில ஆந்திர வகைகள் கிடைப்பதுண்டு. ஆனால் விலை அதிகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட் நாகராஜ். ரொம்ப நீங்க பிஸியா இருப்பதாகத் தோணுது.

      எனக்கு இந்த மோர்க்கூழ் ரொம்ப செரிமானம் ஆவதில்லை என்று ஒரு நினைப்பு. அதனால் நானும் இதனை மிகவும் விரும்புவதில்லை. 9B மாமா பதிவைப்படித்த ஞாபகம் இல்லை.

      நீங்க சொல்ற மாம்பழ வெரைட்டி கேள்விப்பட்டதில்லை. ஆனால் மும்பையிலிருந்து பஹ்ரைன் மார்கெட்டுக்கு ராஜ்பூரி மாம்பழம் (ரொம்ப பெரியது..ரொம்ப வாசனை) வரும். எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

      நீக்கு

  16. மோர்க்கூழ் இதை என் மனைவிதான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் சாப்பிட்டு நீண்ட நாள் ஆகிவிட்டது நாளை அதாவது திங்கள் ஈவினிங்க் நீங்கள் சொன்ன முறைப்படி செய்துவிடலாம் என நினைக்கிறேன்....செய்முறை விளக்கம் மிக எளிமையாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன்.

      என்னவோ சொல்றீங்க மனைவிதான் அறிமுகப்படுத்தினாள் என்று... இன்று இரவு செய்துவிடலாம் என்று சொல்றீங்க. அவங்க முதல்ல சொல்லிக்கொடுக்கறதோடு அவங்க வேலை முடிஞ்சதா? அதுக்கு அப்புறம் நீங்கதான் செய்யணுமா?

      பாருங்க..ரொம்ப ஆர்வத்துல தேவை இல்லாத வேலைகள்லாம் இழுத்துப்போட்டுக்கிட்டு, கடைசில பூரிக்கட்டையால அடியும் கிடைக்குது.

      கருத்துக்கு நன்றி துரை.

      நீக்கு
  17. //என் அலுவலகத்தில் ஒரு தோழி இதை எனக்காக வாரம் ஒருமுறையாவது செய்து தனி டப்பாவில் கொண்டு வருவார்//

    நெல்லைத்தமிழன் மிக அதிர்ஷடகாரர் போல இருக்கே......நமக்கு இப்படிபட்ட தோழிங்க கிடைக்க மாட்டுறாங்களே ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மதுரைத் தமிழன், நெல்லைத் தமிழன், மதுரைத் தமிழச்சி (அட அது யார்டா?), இவங்களுக்கெல்லாம் அந்த அதிருஷ்டம் ஏது மதுரைத் தமிழன்?

      நீல நிற எழுத்து ஶ்ரீராமோடது. அவருக்குத்தான் அலுவலகத்திலும் நண்பர்கள் கொண்டு வருவாங்க, வீட்டிலும் அக்கம்பக்கத்தில் உள்ள அவர் பாஸின் நண்பிகள் கொண்டு வருவாங்க, பத்தாக்குறைக்கு நவராத்திரி அது இது என விசேஷ தினங்களில் பாஸை வீட்டுக்கு வரச் சொல்பவர்களின் வீட்டில், அவர் பாஸை கொண்டு விடுகிறேன் என்ற சாக்கில் போகும்போதும்்இரவு உணவுலாம் கிடைக்கும்.

      நம்ம இரண்டு பேருக்கும் அந்த அதிருஷ்டம் இல்லை

      நீக்கு
  18. மோர்க்குழம்பு வீட்டில் அடிக்கடி செய்வார்கள்.

    இதையும் செய்யச் சொல்லணும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி... இந்த மோர்க்கூழ் கொஞ்சம் ஈஷிக்கும் (பேஸ்ட் மாதிரி இருக்கும்). ரொம்ப உதிர் உதிரா (கொஞ்சமா) இருக்கணும்னா இன்னும் நிறைய எண்ணெய் சேர்க்கணும். ஆனா ருசியாத்தான் இருக்கும்.

      மோர்க்குழம்பு, பருப்புசிலி அல்லது உருளை ரோஸ்ட் - நினைக்கும்போதே இன்னும் பசிக்குது.

      நீக்கு
  19. மோர் கூழ்! சிறு வயதில் அம்மா அல்வா போல துண்டம் போட்டுத் தருவார்கள். ஆனால் எனக்கென்னவோ சுட சுட இலையில் போட்டுக்கொண்டு ஒரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிடத்தான் பிடிக்கும். ஆறி விட்டால் நன்றாக இருக்காது. மிதமான சூட்டில் சாப்பிட வேண்டும். என் மகனுக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. மகளுக்கும் கணவருக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்.... அப்போ இன்னும் கிளறி ஒரு பாத்திரத்தில் போட்டு, ஆறின பிறகு துண்டம் போடணுமோ?

      இருந்தாலும் ஸ்பூனால் சிறிது சிறிதாகச் சாப்பிட்டாலும் நன்றாகத்தான் இருக்கு.

      நீக்கு
  20. அரிசி மாவிற்கு பதிலாக ராகி மாவிலும் செய்யலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராகிமாவில் செய்தால் இன்னும் நல்லா இருக்கும், உடம்புக்கும் நல்லதுன்னு நினைக்கிறேன். அதுக்கு ஒரு வேளை வரட்டும். செய்து பார்க்கிறேன்.

      நீக்கு
  21. இன்னும் கொஞ்சம் எண்ணெய் விடலாம். கறிவேப்பிலையை காணவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவே அதிக எண்ணெய் என்று நினைத்துக்கொண்டேன் பா.வெ. மேடம்.. கருவேப்பிலை போட்டிருந்தேனே. கலக்கியதில் அடியில் மாட்டிவிட்டதோ?

      நீக்கு
  22. ராகி மாவு, வரகு மாவில் எல்லாம் மோர்க்கூழ் செய்தாச்சு. வரகில் எண்ணெய் அதிகம் பிடிக்கிறது. மோர்மிளகாய் இல்லாமல் மோர்க்கூழா? இதையே இன்னும் நன்கு கிளறி உப்புமா மாதிரியும் செய்வேன். அப்போதைக்கு என்ன தோன்றுமோ அப்படி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... உப்புமா மாதிரிச் செய்தால் இன்னும் அட்டஹாசமாக இருக்கும். எனக்குப் பொறுமையும் இல்லை..இன்னும் எண்ணெய் விடவும் மனசில்லை.

      மோர் மிளகாய் இல்லாமல் மோர்க்கூழ் நன்றாக இருக்காது. உண்மைதான்.

      நீக்கு
  23. சின்ன வயசிலே அம்மா இரும்பு மொட்டைச் சட்டியில் அவசரமாகக் கிளறித் துண்டம் போட்டுக் கொடுப்பார். அதைச் சுடச் சுட சாப்பிட்ட அனுபவம் இப்போது ஆற அமர நிதானமாகச் சாப்பிடுவதில் இல்லை. இதில் அரிசியை ஊற வைத்துப் புளிக்க வைத்து அதில் மோர் விட்டும் பண்ணுவோம். புளி உப்புமாவும் இப்படித் தான். முதல் நாளே அரிசியை ஊற வைத்து அரைத்து வைத்துவிட்டு மறுநாள் புளிப்பு வந்ததும், நீர்க்கப் புளி கரைத்து விட்டுப் பண்ணுவோம். ஆனால் புளி உப்புமாவில் வெங்காயம் சேர்த்தால் தான் எனக்குப் பிடிக்கும். வெறும் புளி உப்புமா அவ்வளவாகப் பிடிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதைச் சுடச் சுட சாப்பிட்ட அனுபவம் இப்போது ஆற அமர நிதானமாகச் சாப்பிடுவதில் // - கீசா மேடம்.. அப்போ இன்னொருவர் பண்ணித் தந்தார். இப்போ நாமே பண்ணிச் சாப்பிடும்போது, அதிலும் எல்லாரும் சாப்பிட்ட பிறகு சாப்பிடும்போது அந்த அனுபவம், சந்தோஷம் இல்லாமல் போய்விடுகிறதோ?

      புளி உப்புமாவில் வெங்காயமா? ஐயோ..இது என்ன ரசனை? (இருந்தாலும் ஒரு தடவை செய்துபார்க்கிறேன். மனைவியின் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஐப் பொறுத்துக்கணும். பெரிய வெங்காயம்தானே)

      நீக்கு
    2. http://geetha-sambasivam.blogspot.com/2010/04/blog-post.html இங்கே பார்க்கவும், வெங்காயம் போடாமல் புளி உப்புமாவானு நம்ம ரங்க்ஸ் கேட்கிறார். அவருக்குத் தனியாப் பண்ணிக் கொடுத்தாப் பிடிக்காது. திடீர்னு அவருக்கு இதெல்லாம் சாப்பிடணும்னு மசக்கை வரச்சே பண்ணுவேன், வெங்காயம் போட்டு! சி.வெ. போட்டு அம்மா பண்ணுவா! ஜூப்பரு!

      நீக்கு
    3. http://geetha-sambasivam.blogspot.com/2010/04/blog-post_21.html

      நீக்கு
    4. இந்த புளி உப்புமா நல்லா இருக்கும் போலிருக்கு. நான் புளி உப்புமான்னா, அரிசி மாவை உபயோகப்படுத்தித்தான் செய்வேன். அந்தச் செய்முறையும் எபில விரைவில் வரும்.

      ஆமாம்..இதில் பெருங்காயம் போடச் சொல்லலையே.. மறந்துட்டீங்களா?

      நீக்கு
    5. //பச்சரிசி ஆழாக்கு(சுமார் 250 கி) அல்லது ஒரு கப், மி.வத்தல் 4 அல்லது 6 அவங்க காரத் தேவைக்கு ஏற்ப, புளி ஒரு நெல்லிக்காய் அளவு, உப்பு, பெருங்காயம், // க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நீங்க ஒழுங்காவே படிக்கிறதில்லை. அரைக்கத் தேவையான பொருட்களிலேயே பெருங்காயமும் கொடுத்திருக்கேன்.

      நீக்கு
    6. சென்னை போன உடனே இதனை, வெங்காயம் போட்டுப் பண்ணறேன் (உங்க மெதட்ல அரிசி புளி அரைத்து). இங்க பண்ண முடியாது. (வெங்காயம் வீட்டிற்குள் வராது. அங்க மனைவி அசந்த சமயத்துல கொண்டுவந்துடலாம்). அந்தப் புளி உப்புமா எப்படி இருந்ததுன்னும் எழுதறேன்.

      நீங்க அதையே எபிக்கு செஞ்சு அனுப்பியிருக்கலாமே படங்களுடன் (அதையேன் கேட்கறீங்க நெல்லைத் தமிழரே.. தட்டச்சு செய்யும்போது தவறு வந்தாலும் சரி செய்துடலாம். ஆனால் இப்போல்லாம் கேமராவை ஆன் பண்ணினாலே கை நடுங்குது..யாரோ பின்னாலேர்ந்து 'இங்கெல்லாம் கேமரால படம் எடுக்கக்கூடாது. வெளில போர்டுல போட்டிருக்கோமே பார்க்கலை' என்று கர்ஜிக்கற மாதிரியே இருக்கு)

      நீக்கு
    7. //அரைக்கத் தேவையான பொருட்களிலேயே பெருங்காயமும் கொடுத்திருக்கேன்// - அட..ஆமாம்... நான் இத்தனைக்கும் ரெண்டு தடவை படித்தேனே... ஒருவேளை இந்த 'நக்கீரன்' பார்வை இருக்கும்போது எழுதியிருந்தாலும் சரியா கண்ணுல படாதா? சரி..Sorry சொல்லிக்கறேன் கீசா மேடம் (இப்போ போய் திருத்தியிருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்..ஹா ஹா ஹா)

      நீக்கு
    8. பாட்டியும் புளி உப்புமாவுக்கு அரைத்துச் செய்வார். என் அம்மா அரிசி மாவிலேயேயும் செய்வார். நான் இரண்டும். அன்றைய மூடைப் பொறுத்து!!

      கீதாக்கா மாமாவுக்கு என் மகன் சார்பில் ஒரு ஹைஃபைவ்.

      மகனும் வெங்காயம் போட்டும் செய்யச் சொல்லுவான். நான் அவனுக்காகச் செய்வது. ஆனால் நம் வீட்டில் புளி உப்புமா வெங்காயம் இல்லாமல்தான் செய்வாங்க. உதிர் உதிரா பருப்பு உசிலி போலச் செய்வதுண்டு. நல்லாருக்கும்..

      கீதாக்கா உங்க சுட்டியும் பார்க்கிறேன்.

      கீதா

      நீக்கு
    9. //ஆனால் நம் வீட்டில் புளி உப்புமா வெங்காயம் இல்லாமல்தான் செய்வாங்க.// - ஆமாம். நான் இன்றைக்குத்தான் வெங்காயம் போட்டுச் செய்யும் புளி உப்புமா பற்றிக் கேள்விப்படறேன்.

      நீக்கு
    10. //(இப்போ போய் திருத்தியிருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்..ஹா ஹா ஹா)/// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லையோ!

      நீக்கு
    11. நான் இப்படி எழுதாம இருந்தால்தான் அது உங்களுக்குச் செய்யும் அநியாயம் கீதா சாம்பசிவம் மேடம்...

      உண்மையா, எப்படி அந்தப் பெருங்காயம் என் கண்ணிலேர்ந்து தப்பித்தது என்று தெரியலை.

      இதைச் சாக்கிட்டு என் அனுபவம் ஒன்றை எழுதறேன். எல்லாரும் நம்ப மாட்டாங்க.

      காலைல துபாய் போகணும், முந்தைய இரவு பாஸ்போர்ட் காணோம். ஆஃபீஸ்ல (ஹெச்.ஆர்ல) இல்லை. என் அலுவலக அறைக்குப் போய்ப் பார்த்தா அங்கயும் இல்லை. உடனே வெங்கடாசலபதிக்கு வேண்டிக்கொண்டேன். என் லேப்டாப் பேகில் உள் அறையில் இருந்தது. முதல்ல தேடினபோது நான் பாஸ்போர்ட் அதில் பார்க்கலை. இது 2014ல் நடந்தது.

      இன்னொன்று, எங்க ஊரை விட்டு, சென்னைக்கு பெட்டியோட வந்தேன். திநகர் ஹோட்டலுக்கு வந்தப்பறம், என் பெட்டியின் சாவி என்னிடம் இல்லை என்பதைக் கண்டுபிடித்தேன். பாக்கெட், பேக் எதுலயும் இல்லை. ஊர்லபோய் சாவியை எடுக்க முடியாது. வீட்டைப் பூட்டிக்கொண்டு என் பெற்றோர் ஊருக்கு மாலையில்தான் கிளம்பினார்கள். என்ன செய்வதென்றே தெரியலை. மணி இரவு 9. உடனே சத்ய சாய்பாவின் துணை வேண்டினேன். நம்பவே முடியாமல் என் பாக்கெட்டில் சாவி இருந்தது. இது 2002ல் நடந்தது.

      இந்த இரண்டு சம்பவங்களிலும் நான் சரியா தேடாமல் நடந்தவை இல்லை.

      நீக்கு
    12. அன்பு முரளி மா,
      ஐப்பசி மாதம் வரும்போது முடிந்தால் சந்திக்கலாம்.
      பாட்டி செய்யும் மோர்க்கூழ் வாழப்பூ இதழில் வைத்துக் கொடுப்பார்கள்.
      இன்று காலை ,சென்னையில் மழை,அதாவது உங்கள் இரவு என்று பார்த்ததும், உடனே பகவானைத்தான் வேண்டிக்கொண்டேன்.
      இன்று திருவள்ளூருக்கு ஸ்ரீமத் அழகிய சிங்கர் சாதுர் மாஸ்யத்துக்குப்
      போய்க் கொண்டிருக்கிறான்.
      அவனுக்கு அங்கிருந்தே வரதரைத் தரிசிக்கச் செல்ல ஆசை.
      பகவான் இஷ்டம் என்று நினைத்துக் கொண்டேன்.
      அதே போல் இன்று முழு மெடிக்கல் செக் அப்.
      புது பிரச்சினை எதுவும் சொல்லாமல் இருக்கணுமேன்னும் வேண்டிக்கொண்டு போனேன்.
      அதுபோலவே வைத்தியரும் ஓகே சொல்லிவிட்டார்.
      ரத்தப் பரிசோதனையும் சரியாக வரணும்.
      ஒவ்வொரு இக்கட்டான தருணத்திலும்
      ஒவ்வொரு இறை சக்தி துணைக்கு வருவதை நம்புகிறேன்.

      நீக்கு
    13. வாழைப்பூ மடலில் நாங்கள் பழைய சாதம் எல்லாம் சாப்பிடுவோம். அ)துவும் மருதாணி இட்டுக்கொண்ட கைகளால் உள்ளங்கையில் சாதத்தை(பழையது) சாப்பிட ரொம்பப் பிடிக்கும். பழைய சாதத்தின் மேல் வத்தக்குழம்பை விட்டுக் கொண்டு சாப்பிட்டால் அந்த மணத்துக்கே அதிகம் சாப்பிடச் சொல்லும்.

      நீக்கு
    14. வாங்க வல்லிம்மா.... ப்ராப்தம் இருந்தால் சந்திப்போம்.

      ஒவ்வொரு இக்கட்டான தருணத்திலும் இறை சக்தியைத் தவிர வேறு எது நமக்குத் துணையிருக்கும்?

      எல்லோரும் இருந்தாலும், எல்லாமும் இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் 'திக்கற்றவர்கள்தாம்'. திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை அல்லவா?

      நீக்கு
    15. //வாழைப்பூ மடலில் நாங்கள் பழைய சாதம்// - நாங்கள் என் பெரியப்பாவின் வீட்டில் விடுமுறையைக் கழிக்கச் செல்லும்போது, அங்கு மிக எளிய ஆனால் ரசிக்கும்படியான வாழ்க்கை. வாழை மடலில்தான் எங்களுக்கு சாப்பாடு.(பெரியவங்களுக்கு தையல் இலை.. யார் இருப்பதிலேயே மிகச் சிறியவனோ/ளோ அவருக்கு கிண்ணத்தில் சாப்பாடு).

      வாழை மடல் வாசனை, அதில் எந்த சாதம் சாப்பிட்டாலும் ஒரு தனி மணத்தோடு இருக்கும்.

      மாலையில் என் பெரியப்பா, பெரிய தூக்கில் மோர் சாதம், சிறிய டப்பாவில் காலையில் செய்த குழம்பு. இதோட நாங்க தாமிரவருணி ஆற்றுக்குப் போவோம். நாங்க மணலின் ரொம்ப நேரம் விளையாடுவோம். பெரியவங்க பேசிக்கொண்டு, பிறகு நித்ய கர்மாக்களை முடித்த பிறகு, எங்களுக்கு ஆற்றின் நடுவில் உள்ள பாறையில் உட்கார்த்தி கையில் சாதம் குழம்பு தருவார்கள். பிறகு கோவிலுக்குச் சென்றுவிட்டு எல்லோரும் வீடு திரும்புவோம் (கோவிலுக்கும் வீட்டுக்கும் 30 அடி தூரம்தான்).

      இந்த வாழ்க்கையை இப்போ நினைத்துத்தான் பார்த்து மகிழ முடியும்.

      நீக்கு
  24. எங்க மாமியார் வீட்டு வழக்கமோ என்னமோ தெரியாது. எங்க குழந்தைகளுக்கு எல்லாம் இப்படி எதுவும் சொன்னால் பிடிக்கவே பிடிக்காது. நாங்க என்ன சின்னக் குழந்தையா என்பார்கள். ஆகவே அவங்க போக்கில் விட்டுவிடுவோம். :))))
    அதே என் பிறந்த வீட்டில் ஒவ்வொன்றும் சொல்லிக் கொடுப்பாங்க! சமைக்கும்போது கூட நான் கல்யாணம் ஆகிப் போனப்புறமாக் கூட அப்பா வீட்டுக்கு வந்தால் சமையல் பண்ணுவதற்கு ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுப்பார். இங்கே எல்லோரும் சிரிப்பாங்க! :)


    அல்ஃபோன்ஸா மாம்பழம் கிலோ 40 ரூபாயா? மும்பை பிரபலம் ரத்தினகிரி அல்ஃபோன்ஸாவா கிலோ 40 ரூபாய்? நம்பமுடியவில்லை! ம்ப முடியவில்லை! பமுடியவில்லை! முடியவில்லை! டியவில்லை! யவில்லை! வில்லை! இல்லை! லை! ஐ! ஈஈஈஈ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீசா மேடம்..50 ரூபாய்னு நான் வாங்கினேன் (ஏகப்பட்ட கிலோ..அதாவது இரு கிலோ ஒரு முறை வீதம்). பஹ்ரைன்ல மார்க்கெட்டில் கிடைத்ததைவிட பெரியது.

      இங்க வித்யார்த்திபவன் பக்கத்துல நிறைய பழக்கடைகள் உண்டு. அங்க, பெரிய பங்கனப்பள்ளி சைஸ்ல அல்ஃபோன்ஸா பார்த்தேன். கிலோ 140ன்னு சொல்லி எனக்கு 100 ரூபாய்க்குத் தருகிறேன் என்றார்கள். வாங்கியிருக்கலாம்...ஆனா மனசு ஆகலை. இந்த அல்ஃபோன்ஸா அவ்வளவு சுவையா இருந்தது. என் வீட்டுக்கு அருகிலேயே நிறைய மாம்பழங்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள்...

      பசங்க சொல்லத்தான் செய்யும்..நாங்க என்ன சின்னக் குழந்தையா என்று... இருந்தாலும் சொல்லாமல் எப்படி இருக்க முடியும்? என்ன இருந்தாலும் அவங்களுக்கு அனுபவம் கிடையாதில்லையா?

      நீக்கு
    2. அதேதான் கீதாக்கா...அதே தே ஏஏஏஏஏஏஏஏஏஏ

      கீதா

      நீக்கு
  25. மோர்க்கூழ் குறிப்பு மிக அருமையாக இருக்கிறது. செய்து பார்க்கிறேன்.

    அன்னையரின் பெருமையை சொன்னதற்கு இனிய நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ சாமினாதன். நான் மேல் ஷாவனிஸ்ட்(ஆகத்தான் இருந்தேன்). கடந்த 7-8 வருடங்களாகத்தான் நான் மாறியிருக்கிறேன். அதுக்கு முக்கியக் காரணம் நான் சமையலறையில் புகுந்து உணவு தயார் செய்துகொள்வது, என் துணிகளை ரெகுலராக வாஷிங் மெஷினில் தோய்ப்பது, இடத்தைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்ய ஆரம்பித்த பிறகுதான். இப்பவும் அப்போ அப்போ மேல் ஷாவனிஷம் தலை தூக்கும். பசங்க, பெண்கள் பல வருடங்களாகச் செய்துவருபனவற்றைச் செய்யப் பழக்கணும். அப்போதான் அவங்களோட கஷ்டமும் தெரியும். இது நான் அனுபவித்து அறிந்துகொண்டது.

      அன்னையரின் பெருமை - இதுல புதுசா சொல்றதுக்கு என்ன இருக்கு. சின்ன வயசுல (அல்லது திருமணம் ஆன பிறகும்) அப்பா மட்டும் வீட்டுல இருந்தாங்கன்னா கொஞ்சம் அன்கம்ஃபர்டபிளா இருக்கும். அதே சமயம் அம்மா மட்டும் வீட்டில் இருந்து, அப்பா வெளியில் சென்றால், கூடுதல் சுதந்திர உணர்வு கிடைக்கும். அதையே என் பசங்கள்டயும் நான் பார்க்கிறேன் (அதே உணர்வு..). இது ஒன்று போதும் 'அன்னையரின் பெருமை' சொல்ல.

      நீக்கு
    2. //நான் மேல் ஷாவனிஸ்ட்(ஆகத்தான் இருந்தேன்).// even now! :))))))))

      நீக்கு
    3. //even now! :// - அது சும்மா கலாட்டா பண்ணுவதற்காக.

      கீசா மேடம்... பெண்ணைப் பெற்றவர்கள், மேல் ஷாவனிஸ்டாக இருக்க முடியாது. அப்படி இருந்தால், நல்ல தந்தையாக பரிமளிக்க முடியாது.

      நீக்கு
  26. மோர் கூழ் அருமை. ஆடி முதலுக்கு இங்கு பனங்கட்டிக் கூழ் செய்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி.... நான் பனங்கட்டி கூழ் கேள்விப்பட்டதே இல்லை. அரிசி மாவு, பனை வெல்லம், ஏலக்காய், முந்திரி போட்டுச் செய்வீங்களோ?

      நீக்கு
    2. நெல்லை அரிசி மாவு, பயறு, பனங்கட்டி தேங்காய்ப்பால், தேங்காய் கீறியது என்று செய்வது. இலங்கையில் செய்வாங்க. அப்போது எங்கள் வீட்டிற்கு வரும் யாழ்ப்பாணத்து ஆண்டியிடம் அறிந்து கொண்டார்கள் என் அத்தைகளும் அம்மாவும். வீட்டிலும் செய்வாங்க. இந்தக் கூழை ஆடியில் யாழில் அங்கு செய்வாங்க. அதே போல ஒடியல் கூழ் பனங்கிழங்கு மாவு, கொஞ்சம் அரிசி, அதுல அவங்க அசைவம் சேர்ப்பாங்க. நாம் அதில் பலாக்கொட்டை, கீரை பயறு (காராமணி, ப பயறு ) என்று போட்டுக் காரமாகச் செய்வது. புளியும் உண்டு.

      அந்த ஆண்டி பனை ஓலையில் செய்த பெரிய தொன்னை கொண்டு வந்து தருவாங்க. அதுலதான் செர்வ் பண்ணுவாங்க.

      கீதா

      கீதா

      நீக்கு
    3. நன்றி கீதா ரங்கன். எனக்கு இது பிடிக்கும்னு தோணலை.

      பனைவெல்லத்தில் செய்யும் எதுவும் என்னைப் பொருத்தவரையில் ருசியாக இல்லை. வெல்லம் ஓகே.

      ஒடியல் கூழ் என்று சொல்லி, அதிரடி அதிராவை நினைவுபடுத்திட்டீங்க. இரண்டு பேரும், அவங்க அவங்க தளத்தை முழுவதுமாகப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

      நீக்கு
  27. மோர்க்கூழ் - நல்ல பதார்த்தம் ....

    ஒரு முறை செய்து பார்த்தேன் எங்க வீட்டில் யாருக்கும் இறங்கலை ....


    ஆனால் ராகி மொத்தே எல்லாருக்கும் பிடிக்கும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனுராதா ப்ரேம்குமார்....

      ராகி மொத்தே பிடிக்கும், மோர்க்கூழ் இறங்காதா?

      இது என்ன ஆச்சர்யமா இருக்கு. எனக்கு இப்போவும் பெங்களூர் உணவங்களில் உணவு பிடிப்பதில்லை. நம்ம ஊர் சாதா தோசைபோல், சாம்பார்போல் வருமா என்று நினைத்துக்கொள்வேன்.

      நீக்கு
  28. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  29. கோதுமை மாவில் சற்று தள தள என்று உப்புமா மாதிரி செய்தால் மோர்க்கூழ் போலிருக்கும் பெங்களூரில் பலருக்கும் ராகி மொத்தே ஒரு ஸ்டேப்பிள் ஃபூட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி.எம்.பி சார்.

      கோதுமை மாவில் உப்புமாவா? இல்லை கோதுமை ரவையில் உப்புமாவா?

      நான் இதுவரை ராகி மொத்தே சாப்பிட்டுப்பார்த்ததில்லை.

      நீக்கு
  30. அழகான படங்களுடன் மோர்க்கூழ் செய்முறை அருமை...

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    மோர்க்கூழ் அழகான படங்களுடன், செய்முறையும் மிக அழகாக கூறி செய்து காண்பித்திருக்கிறீர்கள்.தங்கள் மகனுக்கு மிகவும் பாசமாக, விருப்பமாக செய்து கொடுத்திருக்கிறீர்கள். இப்பேர்ப்பட்ட தந்தை கிடைக்க அவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    நானும் இப்படித்தான் மோர் மிளகாய் போட்டு செய்வேன். ஆனால் இது எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சுமாராகத்தான் பிடிக்கும். இதையே நன்கு உதிர்த்து உப்புமாவாக்கி கொடுத்தால் அதைத்தான் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். எங்கள் அம்மா வீட்டில் இருக்கும் போது எங்கள் பாட்டி அடிக்கடி இதை( மோர்க்கூழ்) செய்து கொடுத்து நான் மிக விருப்பமாக சாப்பிட்டிருக்கிறேன்.

    புளி கரைத்து விட்டு மோர் மிளகாய் போட்டும் அரிசிமாவு உப்புமா எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிக விருப்பம்.

    தாயைப்பற்றி நீங்கள் கூறியதை ரசித்தேன். அனைவருமே சமையலில் முதலிடம் தாய்க்குத்தான் தருகிறார்கள் போலும். படிப்பு சம்பந்த பட்ட கருத்துகளுக்கு மட்டும் தந்தையின் ஆலோசனைக்கு செவி சாய்க்கிறார்கள்.

    மாம்பழம் முன்பெல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்போது சமயத்தில் நான்கைந்து துண்டுகளுக்கு மேலாக எடுத்துக் கொண்டால், ஏதோ பிரச்சனை தருகிறது.

    அந்த மாடல் குழாய் இங்கு (மையா) எம். டி. ஆர்.ல் வேறு சில இடங்களிலும் பார்த்துள்ளேன். வேறு கை நீட்டினால் தேவையான வரை தண்ணீர் விழுந்து கையை எடுத்தவுடன் தண்ணீர் மாயமாகும் குழாய்களை கண்டும்,(ஒரியன் மால்,மந்திரி மால் போன்ற பெரிய மால்களில்) அதிசயத்திருக்கிறேன். தாமதமாக கருத்திட்டதற்கு மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.

      //இப்பேர்ப்பட்ட தந்தை கிடைக்க // ஹா ஹா ஹா... இதைப் பசங்க படிச்சாங்கன்னா, நீங்க அவ்ளோதான். நான் ரொம்ப (அளவுக்கு மீறியோ?) கண்டிப்பு. அதுனால எதை எங்கிட்ட சொல்லணும், எதை அம்மாட்ட சொல்லணும் என்பதில் அவங்க ரொம்பத் தெளிவு.

      இதை எப்படி உதிர்ப்பீர்கள்? ரொம்ப எண்ணெய்விட்டா தானாகவே புளி உப்புமா மாதிரி உதிர்ந்துடுமா?

      //நான்கைந்து துண்டுகளுக்கு மேலாக // - நான்லாம் பழங்கள் ரொம்ப அளவுக்கு அதிகமாக சாப்பிடுவேன். பழங்கள் மட்டுமே சாப்பிட்டும் காலத்தை ஓட்டுவேன். (அதுல வாழைப்பழம், பப்பாளிலாம் கிடையாது. ஆரஞ்சு, ஆப்பிள், பைனாப்பிள், லிச்சி, மாம்பழம், கொய்யா, மெலன் போன்று)

      'கையை நீட்டினால் தண்ணீர் விழும்' - இந்த சென்சார்களில் நான் பிரச்சனைகளைப் பார்த்திருக்கிறேன். சும்மா 10 டிராப் தண்ணீர்தான் வேணும்னா, அதுபாட்டுக்கு சில விநாடிகள் தண்ணீர் வந்துகொண்டே இருக்கும். கொஞ்சத்துக்குக் கொஞ்சம் பரவாயில்லை. (இந்த சப்ஜெக்ட் எடுத்ததனால் இதனை எழுதறேன். நான் 93ல் முதல் முதலில் துபாய் வேலைக்குச் சென்றபோது, எங்கள் பில்டிங்கில் ஒவ்வொரு ஃப்ளொரிலும் இருந்த ரெஸ்ட் ரூம்கள்தாம். ரொம்ப ஹை கிளாசா ரொம்ப சுத்தமா இருக்கும். அதைக்கூட நான் போட்டோ எடுத்து வைத்திருக்கிறேன்)

      நான் எழுதும் இடுகைகளில் எவ்வளவு தாமதமாக பின்னூட்டம் இடப்பட்டிருந்தாலும் மறுமொழி எழுதுவேன். அதனால் தாமதம் ஒரு விஷயமே இல்லை. நன்றி.

      நீக்கு
    2. நெல்லைத்தமிழனால் மதுரைத்தமிழனுக்கு ஏற்படவிருந்த ஆபத்து https://avargal-unmaigal.blogspot.com/2019/07/mor-kali-koozhu-ayyaar-kitchen.html

      நீக்கு
    3. என்ன மதுரைத்தமிழன்...இப்படி சப்புனு முடிஞ்சுடுச்சு. முழுசையும் உங்க மனைவி பாத்திருந்தாங்கன்னா, ஒரு மாற்றத்துக்கு, பூரிக்கட்டை இல்லாம, மோர்க்கூழையே மூஞ்சீல அடிச்சுட்டாங்களோன்னு கவலைல (ஆவலோட ஹா ஹா) வந்துபார்த்தா, எப்போதும்போல் பாதித் தவறை கேரேஜ்ல மறைச்சுட்டீங்க. அதை எடுத்துப்போடவாவது மறந்துடாதீங்க.

      செய்து பார்த்ததற்கு மிக்க நன்றி. ஆனா நீங்க சாப்பிடாம, மனைவியை சோதனை எலியா உபயோகப்படுத்தினதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

      நீக்கு
  32. //ரொம்ப உணர்வுபூர்வமான உறவு அம்மாவுக்கும் பசங்களுக்குமான உறவுன்னு எனக்குத் தோணும்.//
    அது உண்மைதான் ..இன்னிக்கும் எங்க மகள் சொல்வது அவள் அப்பாகிட்ட //அப்பா அம்மாக்கு தெரியும் எனக்கு என்ன வேணும்னு :)
    என் பொண்ணுக்கு இனிப்பு பிடிக்காது என்னை மாதிரி அதில் கணவருக்கு செம பொறாமை :) அவளுக்கு வெஜ் பிரைட் ரைஸ் பிடிக்கும் நான் நல்லா எண்ணெய் விட்டு காய்களை வதக்கி kallo ஆர்கானிக் வெஜ் கியூப்ஸை நீரில் கலக்கி சேர்ப்பேன் அதெல்லாம் அவருக்கு தெரியாதது அப்படியே சேர்த்து அது உப்பு க்ரிஸ்டலா நிக்கும் சாதத்தில் .இப்படி நிறைய சொல்லலாம் :)
    இதெல்லாம் படிக்கும்போது எல்லார் குடும்பத்திலும் அம்மாங்களுக்கும் பிள்ளைங்களுக்கு தனி பந்தம் இருக்குனு தெளிவா தெரியுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எல்லார் குடும்பத்திலும் அம்மாங்களுக்கும் பிள்ளைங்களுக்கு தனி பந்தம் // - ஆமாம் ஏஞ்சலின். எந்த சப்ஜெக்ட் வந்தாலும் என் பையன் கடைசில, 'அம்மாவுக்குத் தெரியும்பா' என்று சொல்லிடுவான். தாய்க்கு மட்டும்தான் தன் குழந்தைகளில் யாருக்கு என்ன பிடிக்கும், எந்த மாதிரிப் பிடிக்கும் என்று கவனித்து அதன்படி செய்பவள்.

      உளுத்தமா பச்சிடி செய்தால், அவன், இது ஏன் ரெண்டு கருவேப்பிலை போட்டீங்க, ஒன்லி கொத்தமல்லிதான் போடணும்பான். ஏண்டா..பச்சிடிக்கு கருவேப்பிலையும் போடலாமே என்றால், எனக்குப் பிடிக்காது, அம்மாக்குத் தெரியும்பான். இப்படி ஒவ்வொன்றிலும் எனக்கு தாய், தந்தைக்குள்ள வித்தியாசம் புரியும்.

      இன்னொன்று, அப்பா கிட்ட உரிமையோடு சண்டை பிடிக்க முடியாது (மனசுல, அப்பா என்ற கொஞ்ச பயம் இருக்கும்). ஆனா அம்மா கிட்ட சண்டை போடுவாங்க, அடுத்த நிமிடமே யாராவது ஒருவர் பணிந்து போய் சேர்ந்துக்குவாங்க. அது தனி ரிலேஷன்ஷிப்தான்.

      நீக்கு
  33. அஆவ் மல்கோவா மாம்பழம் !! எங்கப்பா கிருஷ்ணகிரி சேலத்தில் இருந்து கொண்டாருவார் .தோல் தடிமனா இருக்கும் அதை சீவி வெட்டி தருவார் எங்களுக்கு .எதோ முன் ஜென்ம நினைவு :)) இதெல்லாம் கண்ணால் பார்த்தே யுகமாகுது .நீங்களாகும் என்ஜாய் பண்ணுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வாழ்க்கைல முதல் முறையா மல்கோவா மாங்காய்களை மார்க்கெட்டில் பார்த்தேன் (எங்க வீட்டில் மல்கோவா மரம் இருந்தது). அவங்க கிலோ 60 ரூபாய்க்கு வாங்கிக்கிங்க, வைக்கோல் அல்லது பேப்பர் சுற்றி வச்சால் மூணு நாள்ல பழுத்துரும் ரொம்ப நல்லா இருக்கும்னு சொன்னாங்க. நான் பழம் மட்டுமே வாங்கினேன்.

      என் ஒபினியன், மல்கோவாவைவிட, பதாமி (அல்ஃபோன்ஸா) சூப்பர்.

      ஏஞ்சலின்... சென்னை வந்தபோது ஃப்ரெஷ் காய்கள்லாம் பார்த்து எனக்கு அவ்வளவு சந்தோஷம். நான் பஹ்ரைன்ல இருக்கும்போது, ஃப்ளைட்லதான் எல்லாக் காய்களும் வரும் (உள்ளூர் கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, கீரை போன்றவை தவிர)

      நீக்கு
  34. மோர்க்கூழ் ரெசிப்பி நல்லா இருக்கு .நான் சும்மாவே வரகு குதிரைவாலியில் வேகவைத்து மோர் சேர்த்து சாப்பிடுவேன் .அரிசி மாவில் செய்ததில்லை .செஞ்சுடுவோம் ..மோர் மிளகாயோ இங்கே கிடைத்தாலும் அது வெறும் உப்பு கரிக்கும் அதனால் தவிர்த்துவிடுவேன் .வீட்டில் தயாரித்து வைக்கணும் . ஆனா இதே ரெசிப்பி திருமதி சேஷன் ஒரு முறை அவள் விகடனில் பகிர்ந்தார் அதில் மோர் இல்லாம செய்து மோர் களி என்று சொன்னார் கூடவே பொரித்த தாமரை கிழங்கு வற்றலும் இருந்தது .நீங்க அந்த தாமரை கிழங்கு வற்றல் சாப்பிட்டிருக்கீங்களா எப்படி இருக்கும்னு சொல்லுங்க ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொரித்த தாமரைக் கிழங்கா? நான் 86லிருந்து சரவண பவன் ஹோட்டலில் சாப்பிடுபவன். அங்கதான் தாமரைக் கிழங்கு போட்ட வற்றல் குழம்பு போடுவாங்க (சில நாள்ல) என்று நினைவு.

      மோர் மிளகாய் உப்பும் காரமும்தான் அதன் ஸ்பெஷாலிட்டி. அதனால் தனியா உப்பு போடும்போது பார்த்துப் போடணும். நீங்க மோர் மிளகாய் வறுத்து தயிர்சாதம் சாப்பிட்டுப் பாருங்கன்னு சொல்லலாம்னு பார்க்கிறேன். கார்ப் அது இது என்று சொல்லிடுவீங்களே

      நீக்கு
  35. ///(உங்களுக்காக காவி வந்தேன் – இது என்ன மொழியோ)/////

    ஆஆவ் எங்க தலைவி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நேரத்தில் அவங்க ட்ரேட்மார்க் சொல்லை சுட்டு விட்டீர்கள் :))
    காவிக்கொண்டு என்பது மியாவ் மொழி :) அநேகமா இலங்கைத்தமிழில் நாம் எடுத்துக்கொண்டு என்பதை காவிக்கொண்டு என்று சொல்கிறாரகளோ .ஹீ ஹீ நானா ஆரம்ப காலத்தில் பூனை கவ்விக்கொண்டு என்கிறதை காவிக்கொண்டுன்னு எழுதுறாங்கன்னு நினைச்சேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியும் ஏஞ்சலின். அவங்க நினைவுக்காகத்தான் அந்த வரியை எழுதினேன். கவர்ந்துகொண்டு என்பதுதான் மருவி காவிக்கொண்டு என்று ஆகியிருக்கிறது.

      நமக்காக கனடாவிலிருந்து என்ன என்ன காவிக்கொண்டு வரப்போகிறார்களோ.

      அனேகமா, வீட்டுலயே முடங்கிக் கிடந்துவிட்டு, நம்மிடம், டிரம்ப் அங்கிளைப் பார்த்தேன், வாஷிங்டனில் சுற்றுலா போனேன் என்று ஏகப்பட்ட படங்களைப் போட்டு, படம் காண்பிக்கப் போகிறார். நாமும் அப்பாவி மாதிரி, ஆஹா ஓஹோன்னு பாராட்டப் போறோம். நம் விதி அப்படி... ஹா ஹா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!