வெள்ளி, 19 ஜூலை, 2019

வெள்ளி வீடியோ : நூறுகோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே

விஜய் - சிம்ரன் நடிப்பில், எழில் இயக்கத்தில் எஸ் ஏ ராஜ்குமார் இசையில் 1999 ம் வருடம் வெளிவந்த திரைப்படம் 'துள்ளாத மனமும் துள்ளும்'.

Image result for thullatha manamum thullum

அந்த இயக்குனருக்கு அது அறிமுகப்படமாம்.  ஆர் பி சௌத்திரியின் தயாரிப்பில் வெளியான திரைப்படம்.  நன்றாக ஓடியதாக நினைவு.

Image result for thullatha manamum thullum


இந்தத் திரைப்படத்தில் எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட்.  ஏனோ எனக்கு உன்னிகிருஷ்ணன் பாடும் திரைஇசைப் பாடல்கள் பிடிப்பதில்லை.  இதில் ஹரிஹரன் குரலில் இரண்டு பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.  ஒன்று 'தொட தொட எனவே' பாடல்.  

Image result for thullatha manamum thullum


இன்னொன்று இன்று பகிரப்படும் பாடல் "இருபதுகோடி நிலவுகள் சேர்ந்து" பாடல்.

Image result for thullatha manamum thullum

'பூவே உனக்காக', 'காதலுக்கு மரியாதை' போன்ற படங்களில் நடித்த பிறகு விஜயின் கிராஃப் ஏறிக்கொண்டே வந்த நேரத்தில் வெளியான திரைப்படம். அப்போதைய கனவுக்கன்னி சிம்ரன் கதாநாயகி.  விஜய் இப்போது நடிக்கும் படங்களில் ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டு விட்டார்.  சிம்ரன் இரண்டாவது ரௌண்ட் வரத் தொடங்கியிருக்கிறார் என்றாலும் கதாநாயகியாய் அல்ல!

Image result for S A Rajkumar

திரைக்கதையும் சற்றே சுவாரஸ்யமான ஒன்றாய் இருந்தது.  வைரமுத்து பாடல்.  ஹரிஹரன் ஒரு சுவாரஸ்யமான பாடகர்.  அவரின் குரலில் நிறைய நல்ல பாடல்கள் இருக்கின்றன.  முதல்முறை இங்கு ஒரு ஹரிஹரன் பாடல் பகிர்கிறேன் என்றுநினைக்கிறேன்!

Image result for hariharan

இந்தப் பாடலில் என் எதிரே வந்து 'புன்னகை செய்யக் கண்கூசுதோ' வரியில் 'செய்யக் கண் கூசுதோ' என்கின்ற இடத்தில் ஒரு ஸ்பெஷல் வளைவு கொடுப்பார்.

Image result for hariharan

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ  - என் 
எதிரே வந்து புன்னகை செய்யக் கண் கூசுதோ 
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ 
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ 

நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாரும் இல்லையே 
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே 
ஓஹோ...  ஓ...ஹோ...

தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன - வந்து 
உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ 
தேன்மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன 
ஒன்றை ஒன்று முத்தம் இட்டு இன்பம் கொள்ளவோ 
மானிடப் பிறவி என்னடி மதிப்பு 
உன் கால்விரல் நகமாய் இருப்பது சிறப்பு 
நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாரும் இல்லையே 
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே 
ஓஹோ...  ஓ...ஹோ...

ஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே 
தாஜ்மஹாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே 
மேனி கொண்ட கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே 
நிறமுள்ள மலர்கள் சோலைக்குப் பெருமை 
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை 

நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாரும் இல்லையே 
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே 
ஓஹோ...  ஓ...ஹோ...


105 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

    ஆஹா அதிசயமாக ஹரிஹரன் பாடல்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      //ஆஹா அதிசயமாக ஹரிஹரன் பாடல்!//

      ஹா..... ஹா.... ஹா....

      நீக்கு
    2. எஸ் ஏ ராஜ்குமாராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

      அப்ப சேம் ட்யுனாகத்தான் இருக்கும் பெரும்பாலும் ஹா ஹா ஹா ஹா பார்க்கிறேன்...படம் கேள்விப்பட்டிருக்கிறேன். பாட்டும் கேட்டிருப்பேன் ஆனால் வரிகள் தெரியாததால் என்ன பாட்டுனு தெரியலை இருங்க கேட்டு வரேன்

      கீதா

      நீக்கு
    3. கேளுங்க கீதா ... மிக இனிமையான பாடல் உண்மையிலேயே... வந்து ராகம் சொல்லுங்க!

      நீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க.. வாங்க...

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  4. இன்று ஆடி வெள்ளி..

    ஏதாவது பக்திப் பாடலில் இறங்குவீர்கள் என்று நினைத்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹிஹி... யார் கிட்ட எதை எதிர்பார்க்கறீங்க துரை செல்வராஜூ ஸார்...!!

      நீக்கு
  5. விசய்க்கு அக்கா மாதிரின்னு
    பேசிக்கிட்டாங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா...

      பாட்டு.. பாட்டு... பாட்டைக்கேளுங்க!!

      நீக்கு
    2. மருந்து குடிக்கிறப்போ
      மந்தியை நெனைக்காதே..ன்னு
      சொல்லுவாங்க....

      நீக்கு
  6. காலை இளந்தென்றலாக பாட்டு இனிய பாட்டு தான்...

    பதிலளிநீக்கு
  7. வந்திருக்கும் நண்பர்களுக்கும் வரப்போகும் நண்பர்களுக்கும் இனிய வாழ்த்துகள், வணக்கம், நல்வரவு, பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...

      நல்வரவும், வணக்கமும்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  8. //நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாரும் இல்லையே//

    இதெல்லாம் ஓவர் புரூடா

    ஹரிஹரனிடம் எனக்கு பிடித்தது அவரது கூந்தல்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புருடா என்று இல்லை.... அது காதலின் உச்சம் என்று சொல்லலாம்!

      ஹரிஹரனின் கூந்தல்தான் பிடிக்குமா? குரல் பிடிக்காதா?

      ஹா... ஹா... ஹா...

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    2. இதெல்லாம் ஜி அவர்களுக்கு கூடி வரும்...

      கன்னியரைக் காணாத குருடா..
      ஓவராக விடாதேடா புருடா!...

      அந்தக் காலத்தில் மேடை நிகழ்வுகளில் TMS அவர்கள் கைகளை நீட்டி பாவனை செய்தபடி பாடினால் ஜனங்கள் கடுப்பாவார்கள்..

      பெரிய எம்ஜார்ன்னு நினைப்பு!?...

      ஆனா இந்த ஹரிகரன்
      ரொம்பவே ஆடுனாரு..

      இன்னிக்குத் தலமொறை
      ரொம்பவே புள்ளரிச்சுப் போச்சு..

      ( எழுத்துப் பிழைகள் வேண்டுமென்றே தான்!..)

      இவருக்குப் பிறகுதான் உச்சரிப்புப் பிழைகளோட பாடுறவங்களுக்கு பரிவட்டம் கட்டுனானுங்க..)

      நீக்கு
    3. ஹரிஹரன் அப்படி என்ன செய்தார் என்று எனக்குத் தெரியாது! நான் மேடை கச்சேரிகள் பார்த்ததில்லை.

      நீக்கு
  9. இந்தப் படம் பார்த்த நினைவு. பாடல்கள் எல்லாம் நினைவில் இல்லை. இன்னிக்குப் பிள்ளையார் வரார் நம் வீட்டுக்கு என்பதால் கொழுக்கட்டை செய்யப் போகணும். நாளை, நாளன்றைக்கு விருந்தினர் வருகை! இணையத்துக்கு வர முடிந்தால் அதிசயம். இப்போல்லாம் நானே அதிகம் வரதில்லை என்பதால் யாரும் தேட மாட்டீங்க! என்றாலும் சொல்லிடணும் இல்லையா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளையார் வர்றாரா வீட்டுக்கு? என்ன விசேஷம், என்ன விஷயம் கீதா அக்கா? நேற்றைய பதிவில் காலையிலேயே உங்களை எதிர்பார்த்து ஏமாந்தேன். எண்ணங்கள் தளத்தில் விளக்கு போடப்பட்டது பார்த்ததுமே இங்கு உங்களுக்கு தயாராய் வரவேற்பு எழுதி வைத்தேன்!!!

      நீக்கு
    2. ஆடி வெள்ளி, தை வெள்ளி முதல் வெள்ளிக்கிழமை எப்போவுமே பிள்ளையாருக்குத் தான்! :) அதான் இந்த வாரமும் முதல் வாரமே வந்துடறார். இப்போல்லாம் தினசரி வேலைகள் மாறிவிட்டதால் காலையிலே கணினியில் அமருவதில்லை. மத்தியானம் பூத்தொடுத்துட்டுப் படுத்துட்டேன். முடியலை! சாயந்திரமாத் தான் வந்தேன். காலை சும்ம்மாக் கொஞ்ச நேரம் இருந்தேன். அதிக நேரம் உட்காரலை!

      நீக்கு
    3. அன்பு கீதாமா, ஸ்ரீராம், கீதா ரங்கன், துரை செல்வராஜு,
      பானுமதிமா,அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஆடி முதல் வெள்ளி
      வாழ்த்துகள்.

      இந்தப் படம் நினைவில் இருக்கிறது. சிம்ரனுக்குக் கண் தெரியாமல் போய்விடும்
      இல்லையா.
      ஹரிஹரனின் குரல் என்றுமே இனிமை..
      இந்தப் பாடலும் அதே போல மகிழ வைக்கிறது.
      மிக மிக நன்றி ஸ்ரீராம்.


      நீக்கு
    4. ஓ! இன்று ஆடி முதல் வெள்ளியா? ஆஹா! கோலாப்பூர் மஹாலக்ஷ்மி தரிசனம் வாய்த்தது இறையருள் என்றுதான் கூற வேண்டும்.

      நீக்கு
    5. வாங்க வல்லிம்மா... வணக்கம். நானும் படம் பார்த்திருக்கிறேன். பரவாயில்லாமல் இருக்கும்.

      நீக்கு
    6. வாங்க பானுக்கா... கோலாப்பூர் மஹாலக்ஷ்மி தரிசனமா? கொடுத்து வைத்திருக்கிறீர்கள்.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  11. பாடல் இனிமை.
    பிடித்த பாடல்தான்.
    கேட்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  12. //இந்தப் பாடலில் என் எதிரே வந்து புண்ணாகி செய்யக்கண்கூசுதோ வரியில் செய்யக்கன் கூசுதோ என்கின்ற இடத்தில ஒரு ஸ்பெஷல் வளைவு கொடுப்பார்.// ஒவ்வொரு பாடலையும் எப்படி நுணுக்கமாக ரசிக்கிறீர்கள்..!! கூடவே உங்கள் ரசனையை எங்களுக்கும் கடத்துகிறீர்கள். நன்றி!
    ஹரிஹரன் குரலில் ஒரு மேஜிக் உண்டு.

    பதிலளிநீக்கு
  13. எஸ் ஏ ராஜ்குமார் இசை சுகமாக இருக்கிறது. ஹரிஹரன் குரலும் இதமான இணையே.

    லிரிக்ஸ்? 20 கோடி, 100 கோடி, 1,76,000 கோடி .. Ominous signs !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்... பணங்களில் கோடி, பாடல்களில் கோடி!

      நீக்கு
  14. பாட்டு ஓகேதான். இந்தப் படங்கள் வந்த சமயத்தில் திரை இசை பக்கம் வந்ததில்லை. படம்பார்த்தாலும் பாட்டை ஓட்டிவிடுவேன்.

    நூறுகோடிப்பெண்களில் ஒருவரா? எழுதுனவன்ஏட்டைக்கெடுத்தான், படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ நெல்லை Said..
      >>> நூறு கோடிப் பெண்களில் ஒருவரா? எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான், படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்...<<<

      அது தானே!..
      புருடா உடுறதுக்கும் ஒரு அளவு வேணாமா?...

      நீக்கு
    2. இந்த சப்ஜெக்டைப் பத்தி எழுதலாம். ஆனா வெள்ளி இடுகை வேற திசைல போயிடும்.

      இந்த மாதிரி பெண்களை வர்ணித்து அதீதமா எழுதறது எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம், பேத்தல் என்பது என் கருத்து. கம்பேர் பண்ணி உன்னை விரும்புகிறேன் என்று இவன் சொல்வான், அவள் பல்லிளிப்பாளா? ரொம்ப கேட்டோம்னா, சினிமாப் பாடல்களுக்கெல்லாம் கோனார் உரை போட்டுப் பார்க்காதீங்கன்னு சொல்லிடுவாங்க, வெட்டிப் பயலுக.

      நீக்கு
    3. இதோடு மட்டும் இல்லை. சிலர் மனைவியை வர்ணித்துப் பிறந்த நாள், திருமண நாள் ஆகிய தினங்களில் வாழ்த்து மழை பொழிகின்றனர். இத்தனைக்கும் பலர் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள். அறுபதைத் தாண்டினவர்களும் உண்டு. எனக்கென்னமோ அப்படி எல்லாம் வர்ணிப்பது அதுவும் ஒரு சமூக வலைத்தளத்தில் பலரும் படிக்கும்படி சொல்வது அதீதமாகத் தெரிகிறது. இயல்பாய்த் தெரியவில்லை. "நீயே என் ஒளி! நீ இல்லை என்றால் நான் இல்லை! உன்னால் தான் எனக்கு மூச்சே விட முடிகிறது! என் சுவாசம் நீ!" என்றெல்லாம் எழுதுகின்றனர். (இது சும்மா ஒரு உதாரணத்துக்குச் சொல்லி இருக்கேன். இன்னும் என்னென்னமோ சொல்வாங்க) எனக்கென்னமோ என் அந்தரங்கமே வெட்ட வெளிச்சம் ஆகிறாப்போல் தோன்றும்! :(

      நீக்கு
    4. ஹை கீதாக்கா சரியா சொன்னிங்க ..
      ஹாஹாஹா விழுந்து புரண்டு சிரிச்சேன் //நீயே என் ஒளி! நீ இல்லை என்றால்//

      நல்லது மனைவி ஒளினா அப்போ எலெக்ரிஸிட்டி மிச்சம் விளக்கில்லாம வாழ சொல்லுங்க :))

      நீக்கு
    5. எப்பவோ கேட்ட பாடல் ஒன்று .///.உன்னை கண்டு ஓடிப்போகும் சென்னை நகரின் சிக்கன் குனியா //சாமீ எப்டிலாம் யோசிக்கிறாங்க :))
      அப்போ டாக்டர் மருந்தெல்லாம் வேண்டாமோ :))

      நீக்கு
    6. வாங்க ஏஞ்சல், புது வேலை எப்படி இருக்கு? பள்ளி விடுமுறை தானே? அடிக்கடி வர முடியாட்டியும் இப்படி எப்போவானும் வந்து எட்டிப் பாருங்க! :)))) இங்கே காத்தாடுது!

      நீக்கு
    7. ஆமாங்க்கா வரணும் ஆனா லேட் ஈவ்னிங் ஆகிடுது வேலைக்கு போயிட்டு திரும்ப.அதுக்குள்ள இங்கே எல்லாரும் முடிச்சிட்டு போய்டுவாங்க .இன்னிக்கு வேலை ஷிப்ட் இல்லை அதனால்தான் வரகிடைச்சது .
      நேரமிருக்கும்போது வரேன் .புது வேலையில் நிறைய அனுபவங்கள் அதையும் பகிரணும் பிளாக்கில்
      .சந்தோசம் துக்கம்னு கலவையான அனுபவங்கள் வித்யாசமான மனிதர்கள் .மனுஷங்களுக்குத்தான் எத்த்னை பிரச்சினைகள் எல்லாம் ஒரு mixed எக்ஸ்பீரியன்ஸ் ..நேரமிருக்கும்போது எழுதறேன் அனைத்தையும்

      நீக்கு
    8. ஏஞ்சல் நானும் நீங்கள் போவது போல இடத்திற்குப் போயிருக்கிறேன். பல அனுபவங்கள் உண்டு.

      எனக்கு எழுதவே முடிவதில்லை. அதற்கான ஒரு மனம் இப்போது இல்லை. சுணக்கம்.

      நீங்க எழுதுங்க வெயிட்டிங்க் ....

      கீதா

      நீக்கு
    9. கீதாக்கா ஹைஃபைவ்!!!! எனக்கும் அது அதீதமாகத்தான் தோன்றும் செயற்கையாகத் தோன்றும். நீங்கள் சொல்லியதை வாசித்து சிரித்துவிட்டேன் கீதாக்கா.

      இதுல என்ன தெரியுமா அப்படி எழுத வேண்டும் என்று சில மனைவிகள் விரும்புவதும் உண்டு. எழுதலைனா ஹிஹிஹிஹி...இதை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    10. ஏஞ்சலின் - உங்க டேவடை கிச்சனை இழுத்து மூடிட்டீங்க போலிருக்கு. ரெண்டு பேரோட தளமும், 'மன்னிக்கவும்..இதை இழுத்து மூடிவிட்டோ, வேறு உருப்படியான வேலைகள் இருப்பதால்' என்று சொல்கிறதே..

      நீக்கு
    11. அது நெல்லைத்தமிழன் பிளாக்கை பராமரிக்க டைம் இல்லை தற்சமயம் அதோட எக்கசக்க ஸ்பாம் கமெண்ட்ஸ் விளம்பரங்கள் மாதிரி ஒரே நேரம் 50 -60 பின்னூட்டங்கள் போடறாங்க எல்லாம் வேற லேங்க்வேஜ்ல் :))
      தேவதை கிச்சனுக்கு ரஷ்ய ரோமானிய ஹங்கேரிய மொழியில் எல்லாம் கமெண்ட்ஸ் வருதுன்னா பார்த்துக்கோங்க :)))அதான் டெம்பரரியா மூடி வச்சிருக்கேன் .

      நீக்கு
    12. மியாவ் பிளாகும் மூடியிருக்கா ஆஆ !! அதிசயம் ..அவங்க ஹொலிடேஸ் ல இருப்பதால் மூடியிருப்பாங்க :) மற்றபடி இன்டர்நெஷனல் வாசகர்கள் காகிதப்பூக்கள் மற்றும் தேவதைகிச்சனுக்கு மட்டுமே :)))
      பூனை இல்லாத நேரத்தில்தான் நம்ம பெருமையை பறைசாற்றிக்க முடியும் ஹாஹ்ஹ்ஹா

      நீக்கு
  15. அருமையான பகிர்வு.படத்தில் எல்லாப் பாடல்களுமே இனிமையானவை.

    பதிலளிநீக்கு
  16. பாடல் கேட்டிருக்கிறேன். படமும் பார்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. பாடலை முதன்முதலாய்க்கேட்கிறேன் ராகம் சொல்ல யாரும் வர வில்லைபோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராகம் சொல்லி விட்டார்களே ஜி எம் பி ஸார்... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  18. இங்கே கருத்துப் பகிர்ந்த சிலர் உணர்வுகள் போற்றுதற்குரியவை.
    ஆனால் காசு பார்க்கிற தொழிலில் எதையுமே யாரும் இலட்சியம் பண்ணாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதே உண்மை.
    அந்த புரிதல் நமக்கிருந்தால் சினிமாப் பாட்டு வரிகளில் நயம் காண முயற்சிக்க மாட்டோம். அவற்றின் இசையமைப்பிலேயே பெரும் பாலும் சினிமாப் பாட்டுகள் நம்மைக் கவர்கின்றன என்பது என் அபிப்ராயம். எல்லாவற்றிற்கும் விதி விலக்கு போல கண்ணதாசன் ஒருவரே இதற்கும் ஒரு விதிவிலக்கு.

    பதிலளிநீக்கு
  19. எல்லாருக்கும் வெள்ளிக்கிழமை வணக்கம் ..எல்லாரும் நல்லா இருக்கீங்களா :)))
    வேலை பிசியால் தொடர்ந்து வர முடியலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      நலமா? தங்களை பார்ப்பதே அரிதாகி விட்டதே.! வேலை பிஸியால் தொடர்ந்து வர இயலவில்லை என அறிந்தேன். எப்படியிருக்கிறீர்கள்? தங்கள் கருத்துரைகளை தேடும் ஒவ்வொரு நாட்களோடும்,நாங்களும் நகர்கிறோம்.
      அதிரா சகோதரி எப்படியுள்ளார்கள்? அவர்களையும் கேட்டதாக கூறவும். இருவரும் முன் போல் தொடர்ந்து வரும் நாட்களை அன்புடன் எதிர்பார்க்கிறோம்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. ஆமாம் கமலா அக்கா .. அது வார்டில் வேலை செய்வதால் .அதிகம் அங்குள்ளோரை கவனிச்சிட்டே இருக்கணும் .உட்காரகூட முடியாதது .அந்த டயர்டில் வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுத்து தூங்கிடுவேன் .நான் கருத்துரை சொல்ல வரும் நேரம் அநேகமா அடுத்த பதிவு வெளி வரும் நேரமாகிடும் :) விரைவில் சரியாகவும் எனது ஷிஃப்ட் முறையாக வரும்போதுனு நினைக்கின்றேன் .
      மிக்க நன்றி எங்கள் இருவரையும் தேடியதர்க்கு .அதிரா விடுமுறை பயணத்தில் இருக்காங்க .விரைவில் வருவார்

      நீக்கு
    3. அக்டொபரில் நாங்கள் பழைய நிலைக்கு திரும்புவோம் ..

      நீக்கு
    4. ஏஞ்சல் உங்க ரெண்டு பேரையும் நாங்க சொல்லிக் கொண்டேதான் இருக்கிறோம் அப்பப்ப....தெரியும் நீங்க பழைய படி வர இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் என்று

      கீதா

      நீக்கு
    5. வாங்க ஏஞ்சல்... நலமா? நீங்களும் அதிராவும் இல்லாமல் வெறிச் என்று இருக்கிறது...உங்கள் அலர்ஜி தொந்தரவுகள் தேவலாமா? அப்பப்ப வாங்க... அதிராவிடமும் சொல்லுங்கள்!

      நீக்கு
    6. இல்லை ஸ்ரீராம் இன்னும் அந்த அலர்ஜி rhinitis சரியாகலை .இன்னும் மருந்து ஹோமியோ மருந்து சாப்பிடறேன் .மூச்சடைப்பு வரலை அதனால் பரவாயில்லை .இங்கே சம்மர் ஆகஸ்ட் இறுதி வரை தான் என்பதால் வெயில் குறைந்து மழை கொட்டும்போது அலர்ஜியும் போய்விடும் .

      நீக்கு
    7. அதிரா வெள்ளைமாளிகையில் அதிபருடன் காபி அருந்தும் படம் ஒன்று அனுப்பியிருந்தார் :) ஆகையால் அது உங்களை நோக்கி விரைவில் படங்களாய் வரக்கூடும் எல்லாரும் எதிர்பாருங்கள்

      நீக்கு
    8. என்னாது! அவங்க பாஸோடையா??!!!! யு மீன் ட்ரம்ப் அங்கிள்!! ஆஹா அப்ப அவ்வளவுதான் ஒரே ஆர்பாட்டமா இருக்குமே பூஸார்!!! ஹா ஹா ஹாஹ்ஹா..

      கீதா

      நீக்கு
    9. காஃபி வித் ட்ரம்ப் அங்கிள்னு வந்துரும்னு சொல்லுங்க
      கீதா

      நீக்கு
  20. எனக்கு வரிகளைவிட இசைதான் பெரும்பாலான பாடல்களில் கவர்ந்துவிடும் சில நேரம் அந்த ஹீரோ ஹீரோயினும் :)
    சமீபத்தில் ஒரு கேரள நர்ஸாக்காவால் சித் ஸ்ரீராம் ஈர்க்கிறார் :) அந்திமாலைநேரம் அடிக்கடி பார்த்து/ கேட்டு ரசிக்கும் பாடல் நிலா வந்ததோ உலா வந்ததோ அப்புறம் என்னடி மாயாவி நீ செமை இசை அன்ட் சித் ஸ்ரீராமின் குரல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சித் ஸ்ரீராம் பாடல்கள் சில எனக்கும் பிடிக்கும்.

      நீக்கு
    2. ஹையோ ஏஞ்சல் நேற்று இந்தக் கமென்ட் கண்ணில் படாமல் போச்சே...சித் ஸ்ரீராம் பத்தி இங்க முன்னரேயே சொல்லிருக்கோமே ஸ்ரீராமும் நானும் ...

      செமையா பாடுகிறார். எனக்கும் ரொம்பப் பிடிக்கும் அவர் குரல்...

      என்னடி மாயாவி நான் இன்னும் ஃபுல் கேட்கலை.

      கீதா

      நீக்கு
  21. ////இந்தப் பாடலில் என் எதிரே வந்து புண்ணாகி செய்யக்கண்கூசுதோ வரியில் செய்யக்கன் கூசுதோ என்கின்ற இடத்தில ஒரு ஸ்பெஷல் வளைவு கொடுப்பார்.//

    ஹாஹா அந்த வளைவு அவரின் பெரும்பாலான பாடல்களில் இருக்கும் .சமீபத்து பாடல் ஒன்றில் கூட இருந்தது
    //நீதானே பெண்ஜாதி நானேதான் உன் சரி பாதி //

    பாட்டு கேக்காத என்னையும் பாட்டு கேக்க வச்சிப்புட்டார் இந்த ஸ்ரீராம்
    வேலைக்கு போற நேரம் பிரேக் டைமெல்லாம் இசைதான் இப்போதைய துணை எனக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாட்டு கேக்காத என்னையும் பாட்டு கேக்க வச்சிப்புட்டார் இந்த ஸ்ரீராம் /

      ஹா... ஹா... ஹா...

      அதற்குமுன்னால் அவ்வளவு பாடல்கள் கேட்பதில்லையா நீங்கள்?

      நீக்கு
    2. அதெல்லாம் தியேட்டர் போய் பார்த்திருந்தா பாடல் நினைவில் இருக்கும் .அதுவும் நான் படம் பார்ப்பதே குறைவு அப்படி பார்த்தாலும் பாடல் சீன்ஸை ffwd செஞ்சிடுவேன் :)
      அந்தி மாலை நேரத்தை கேரளா நர்ஸ் காலர் ஐடியா வச்சிருந்தாங்க அப்படி அறிஞ்சிக்கிட்டேன் :))
      அதுவும் நல்ல பாட்டு

      நீக்கு
  22. //விஜய் இப்போது நடிக்கும் படங்களில் ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டு விட்டார்//
    அர்ஹெ அதே :)
    காதலு க்கு மரியாதை இதோ இந்த துள்ளாத மனமும் எல்லாம் நானா சிடியில் பார்த்த படங்கள் .அந்த விஜய் மிகவும் பிடிக்கும் .
    துப்பாக்கியை கால்வாசிதான் பார்த்தேன் வேற எந்த படமும பார்க்கலை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துப்பாக்கி, கில்லி போன்ற படங்கள் கொஞ்சம் ரசிக்கலாம். சமீப காலப் படங்கள் திராபை.

      நீக்கு
  23. இந்த படத்தில் ஒரு செல்லமும் நடிக்கும் அதுதான் அவர் ஜெயிலில் இருந்து திரும்பி வந்ததும் அவரை நினைவுகொண்டு கிட்டே செல்லும் அப்புறம்ன் தான் மற்றவர்கள் அவரை கண்டுபிடிப்பார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல்! நீங்க பாட்டுக் கச்சேரிக்கு வந்தது சந்தோஷம்.. அந்த ஸ்கொட்டிஷ் லேடியக் காணமே!

      நீக்கு
    2. நன்றி ஏகாந்தன் ஸார் :) எனக்கு அடிக்கடி வர ஆசைதான் .நேரப்பற்றாக்குறை ..அது ஸ்கொட்டிஷ் காரர்களுக்கு எங்களுக்கு முன்னாடியே ஸ்கூல் விடுமுறை ஸ்டார்ட் ஆகிடும் .ஆனா சீக்கிரம் ஸ்கூல் ஆரம்பிக்கும் .எங்களுக்கு இன்னிக்குதான் லாஸ்ட் ஸ்கூல் வொர்கிங் டே .செப்டம்பர்தான் ஸ்கூல்ஸ் திறக்கும் .
      அதிரா மியாவ் விடுமுறைபயணத்தில் இருக்காங்க :) நானா இப்போதான் வேலை சேர்ந்ததன் காரணமா ஹொலிடேஸ் எடுக்க முடியாதது .விரைவில் வருவார் மியாவ் பயணம் முடிந்து

      நீக்கு
    3. ஏஞ்சல் மீ டூ கொஞ்சம் நேரப் பற்றாக்குறையாத்தான் இருக்குது...நானும் இப்ப பார்ட்டைம் வேலைக்குப் போறேன் ஸோ நானும் தளம் மேயறது கொஞ்சம் குறைஞ்சுருக்கு...

      வாங்க சீக்கிரம் பூஸார் வாலை இழுத்து ரொம்ப நாளாச்சு...

      நேற்று கூட நினைத்துக் கொண்டேன். ஸ்ரீராம் போட்டிருந்த ஒரு படத்துக்கு கமென்ட் பண்ணும் போது

      கீதா

      நீக்கு
    4. //இந்த படத்தில் ஒரு செல்லமும் நடிக்கும்//

      ஆமாம்... ஆமாம் நினைவிருக்கிறது.

      நீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடலில் இந்த பாடலை கேட்டுள்ளேன். இப்போதும் கேட்டு ரசித்தேன். இந்த படமும் தொலைக் காட்சியில் பார்த்துள்ளேன். நன்றாக இருக்கும். இதில் எல்லா பாட்டும் நன்றாக இருக்கும். பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. ஸ்ரீராம் சாரி காலைல சொல்ல முடியாம போச்சு

    பாட்டு ஹம்சத்வனி ராகம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... ஹம்சத்வனி...

      "குரல்வழி பிறந்தது ஹம்சத்வனி...."

      நீக்கு
  26. ஏஞ்சல் வாங்க...ரொம்ப நாளாச்சு...எப்படி இருக்கீங்க..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா அண்ட் துளசி அண்ணா நலம்தானே .
      கீதாவும் வேலை பிசியா .ஓகே .
      கீதா உங்களுக்கு இந்த ஹாஸ்பிடல் செட்டிங் தெரிந்திருக்கும் ..எனக்கும் சுணக்கம் டயர்ட் எல்லாம்தான் ..இதுக்கு அதான் இந்த சோம்பேறித்தனத்துக்கு ஒரு எண்ட் கார்ட் போட்டு வரணும் விரைவில் நாமெல்லாம் :) செப்டம்பர் இறுதிவரை பிசி பிறகு தொடர்வேன் வலைப்பூவை

      நீக்கு
    2. வெல்கம் ஏஞ்சல்... உங்கள் வருகை நிஜமாக மகிழ்ச்சி அளிக்கிறது.

      நீக்கு
  27. ஸ்ரீராம் இந்தப் பாட்டு செம பாட்டு. மிகவும் பிடித்த பாட்டு எஸ் ஏ எஸ் ரொம்ப அழகா போட்டிருக்கிறார்

    முதல்ல வரும் இன்ஸ்ற்றுமென்ட் ஹம்ஸத்வனியில் வந்து கொஞ்சம் நளினகாந்தியை நளினமாகக் கொஞ்சம் அப்படி டக்கென்று தொட்டுவிட்டு வருவது போல இருக்கு. ஆனால் ஹம்ஸத்வனிதான்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நளினகாந்தியை நளினமாகக் கொஞ்சம் // - எனக்குத் தெரிந்ததெல்லாம் சோனியா காந்திதான்.

      இந்த மஹாராஜபுரம் பாடும் 'நளினகாந்தீமதிம்' பாடல் அந்த ராகமா?

      நீக்கு
    2. ஆமாம் நெல்லை... சினிமா பாடல்களில் கலைஞன் படத்தில் வரும் 'எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா?' பாடல். அப்புறம் நேருக்கு நேர் படத்தில் வரும் 'மனம் விரும்புதே உன்னை' பாடல்.

      நீக்கு
  28. ஹரிஹரன் குரல் காந்தம் போல் இழுக்கக் கூடிய குரல் மிகவும் பிடிக்கும்.

    //என் எதிரே வந்து 'புன்னகை செய்யக் கண்கூசுதோ' வரியில் 'செய்யக் கண் கூசுதோ' என்கின்ற இடத்தில் ஒரு ஸ்பெஷல் வளைவு கொடுப்பார்.//

    யெஸ் யெஸ் ஸ்ரீராம் செம.

    ஹரிஹரன் பல பாட்டுக்ள் ல செம கிமிக்ஸ் கட்டுவார். செமையா இருக்கும் எனக்குப் பாட்டு சொல்லத் தெரியலை...

    அருமையான பாடல் இசை, ஹரிஹரன் வாய்ஸ் எல்லாம் கலந்து கட்டிய ஒன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  29. நிறமுள்ள மலர்கள் சோலைக்குப் பெருமை
    நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை
    /

    இந்த இடத்திலும் கூட அழகான அசைவுகளுடன் அவர் பாடுவது செமையா இருக்கு ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  30. ரசிக்கக்கூடிய இனிமையான பாடலகளில் ஒன்று.

    பதிலளிநீக்கு
  31. //இந்த சப்ஜெக்டைப் பத்தி எழுதலாம். ஆனா வெள்ளி இடுகை வேற திசைல போயிடும்...//

    நெ.த. ஐயா... எனக்கும் தங்களின் கோபத்திற்கு சரியான பதில் சொல்ல நேரம் வாய்க்கவில்லை... இருந்தாலும் :-

    பாடல் வரிகளா...?
    பாடல் ஆசிரியரா...?

    நடித்தவர்களா...?
    நடிக்க வைத்தவரா...?

    தங்களின் கோபத்திற்கு - இப்படி பல கேள்விகள் உண்டு...

    முடிவாக ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்... வர்ணனைக்கு ஐயனை மீறி யாருமில்லை... நன்றி... நல்லதொரு திசையில் மீண்டும் விவாதிப்போம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன்...இப்போதுதான் இந்தப் பின்னூட்டத்தை கவனித்தேன்.

      இயக்குநரோ இல்லை இசையமைப்பாளரோ காட்சியைச் சொல்லி, டியூன் கொடுத்தால் பாடலாசிரியர் வரிகள் எழுதுவார். இதனை இசையமைப்பாளர், இயக்குநர் குழு, தயாரிப்பாளர் வரை ஓகே செய்யணும். பாடலாசிரியர் பாட்டில், 'மரத்தில் தொங்கும் மாங்காய்கள் உன் கன்னம் போன்றதே' என்று எழுதினா, அதுக்கு இயக்குநர், மரத்துடன் மாங்காய்களைக் காட்டணும், அந்த சீனை நவம்பர்ல காட்சிப்படுத்தப்போறார்னா, மாங்காய்க்கு எங்க போறது? அங்கதான் தயாரிப்பாளர் வருகிறார். அதுனால, பாடல் வெளிவந்தால், இவங்க எல்லோருமே பொறுப்பாளிகள்தாம்.

      //வர்ணனைக்கு திருவள்ளுவரை மீறி// - இதைப் படிப்பவங்க, பாடப்புத்தகம் வாயிலாக எதைப் படிக்கணுமோ அதைத்தான் படிப்பாங்க. காமத்துப்பால், கற்றறிந்தவர்களுக்குத்தான். அவங்களுக்கு மெச்சூரிட்டி இருக்கும் அதைப் புரிந்துகொள்ள (அவங்களுக்கே பலதும் புரியாது, அனுபவம் இருக்காது என்பது வேறு விஷயம்)

      ஆனா திரையிசைப்பாடல்களை எல்லோரும் பாடுவாங்க. அதுனால அதை எழுதும்போது ரொம்ப கவனமா இருக்கணும் என்பது என் கருத்து.

      நீக்கு
  32. எங்கே சென்றார்கள் அந்த தேம்ஸ் நதி தீரத்தினர்? என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். வெல்கம் பேக் ஏஞ்சல்! கேள்வி கேட்க நீங்கள் இல்லை. நானும், நெல்லையும் ஒப்பேற்றுகிறோம். பேயார் தயவில் கொஞ்சம் ஓடியது. அதிராவுக்கு என்ன லாங் லீவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் பானுக்கா :)

      ஆமாம் தேம்ஸ் பூஸாருக்கு ஏற்கனவே holidays ஆரம்பிச்சு இப்போ பயணத்தில் இருக்காங்க :) she will be back soon
      கொஞ்சம்Allergic rhinitis சிக் அது சரியாகிட்டு வருது எனக்கு வேலை பிஸி ..என் போனில் நெட்ஒர்க் கட் ஆகிடும் ஹாஸ்பிடல் இல் இருப்பதால் அதனாலேயே பிளாக் பக்கம் பார்க்க நேரம் நைட் டைம் ஆகிடும் .இன்னிக்குதான் டைம் இருந்தது அதான் எல்லாருடனும் பேச வந்தேன் :)

      நீக்கு
  33. 101... :)

    எனக்கும் இந்தப் பாடல் பிடிக்கும் ஸ்ரீராம். நல்ல பாடல்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!